Wednesday, July 5, 2017

புதன்..... புதிர் புதன்... பானுமதி வெங்கடேஸ்வரன்
செய்தித் துளிகள்...


=========================================================================================


இன்று பிறந்த நாள் காணும் திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
இனி கேள்விகள்...
================================================================================================


1)  ஓரே பாடலை ஆண் குரல், பெண் குரல் இரண்டிலும் பாடிய பாடகர் யார்?=================================================================================================
2)  ஹிந்தி திரைப்படங்களில் அதிக முறைகள் இறந்து போன நடிகர் யார்?
==============================================================================================
3)  எழுத்தாளர், பதிப்பாளர், திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர்,எம்.பியாகவும் இருந்திருக்கிறார். யார் இந்த பிரமுகர்?
=============================================================================================4)  ஆணும் பெண்ணுமான குடும்பத்தில் இருக்கும் சகோதரர்கள் ஒவ்வொருவருக்கும் எத்தனை சகோதரர்களோ அத்தனை  சகோதரிகள். ஆனால் ஒவ்வொரு சகோதரிக்கும் சகோதரியைப் போல இரு மடங்கு சகோதரர்கள் என்றால் அந்த குடும்பத்தில் மொத்தம் எத்தனை சகோதர, சகோதரிகள்? =======================================================================================படங்கள்  :  நன்றி இணையம்.--------------------------------------------------------------------------------------------------------------------------------


மொபைலில் பார்ப்பவரா நீங்கள்?  இங்கு க்ளிக் செய்து தமிழ்மணம் வாக்களிக்கலாம்!!========================================================================

36 comments:

நெல்லைத் தமிழன் said...

த ம +1. அப்புறம் வருகிறேன்.

Anandaraja Vijayaraghavan said...

TMS காலத்து கேள்வியே கேட்டா எப்படி சார். கற்கால பாடகர்கள் பற்றிய கேள்வி கேளுங்க

bandhu said...

1. tms 2. அசோக் குமார்? 3.சோ 4. 4 சகோதரர்கள் 3 சகோதரிகள்

கரந்தை ஜெயக்குமார் said...

தம +1

Geetha Sambasivam said...

மத்தியானமா வந்து பார்த்துக்கறேன். யாராவது பதில் சொல்லி இருப்பாங்க! :))))

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பானுமதி வெங்கடேஸ்வரன்!

middleclassmadhavi said...

Happy birthday Smt Banumathy Venkateswaran!

வெங்கட் நாகராஜ் said...

திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

Thulasidharan V Thillaiakathu said...

அட்டெண்டென்ஸ்....வைச்சாச்சு அதான் தம ஓட்டு போட்டாச்சு...

சகோதரி பானு/பானுக்கா அவர்களுக்கு எங்கள் இருவரின் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

கீதா: அக்கா புதிர் கொஞ்சம் யோசிக்க வைக்குதே!!ஹிஹிஹி சரி சரி வருகிறேன்....பின்னர்...

Thulasidharan V Thillaiakathu said...

TMS காலத்து கேள்வியே கேட்டா எப்படி சார். கற்கால பாடகர்கள் பற்றிய கேள்வி கேளுங்க// ஹஹஹஹ் அது சரி ஆவி!கற்காலமா இல்லை தற்காலமா??!!!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

நெல்லை: களக்காடு தலையணையில் குளிக்கத் தடை// இதை வாசித்ததும் அட நம்ம நெல்லை சொல்லியிருக்காறாக்கும்னு நினைச்சுட்டேன்...ஹஹஹஹஹ்....

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஆவி! முதல் கேள்விக்கான விடையைச் சொல்லும் விதமாகக் கேள்வியாகக் கேட்டுட்டீங்களோ!!! சூப்பர்!..

கீதா

KILLERGEE Devakottai said...

திருமதி. பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

KILLERGEE Devakottai said...

இரண்டாவது விடை சத்ருகன் ஸின்கா

திண்டுக்கல் தனபாலன் said...

திருமதி. பானுமதி வெங்கடேஷ்வரன் அம்மா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

ராஜி said...

இன்றைய பதிவு சூப்பர். ஒரே பாடலில் ஆண் மற்றும் பெண்ணின் குரலில் பாடியவர் ஜானகியம்மான்னு நினைக்குறேன். அவங்கதான் மழலை, ஆண், பெண்ன்னு நாலு விதமான குரலில் பாடுவாங்கன்னு படிச்சிருக்கேன்.

Asokan Kuppusamy said...

செய்திகள் பகிர்வுக்கு மகிழ்ச்சி

விஜய் said...

இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
தமிழ் செய்திகள்

புலவர் இராமாநுசம் said...

பிறந்த நாள் வாழ்த்து!

G.M Balasubramaniam said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சீனியர் சிடிசன் ஆயாச்சா

Bhanumathy Venkateswaran said...

நன்றி!என்ன ஜகா வாங்கறீங்க?

Bhanumathy Venkateswaran said...

Thank you. I thought you will answer third question.

Bhanumathy Venkateswaran said...

நன்றி! பிறந்த நாள் பற்றிய உங்கள் பதிவினை சற்று முன் தான் படித்தேன்.

Bhanumathy Venkateswaran said...

நன்றி துளசிதரன் & கீதா.

கீதா இந்த ஈசி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?

Bhanumathy Venkateswaran said...

நன்றி சகோ!

Bhanumathy Venkateswaran said...

நன்றி!

Bhanumathy Venkateswaran said...

நன்றி ஐயா!

Bhanumathy Venkateswaran said...

//சீனியர் சிடிசன் ஆயாச்சா// ஆமாம், இல்லை. ரயில் டிக்கெட்டில் கன்செஷன் கிடைக்கும் வயதை எட்டி விட்டேன். நிஜமான சீ.சி ஆக இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கிறது. வாழ்த்துக்களுக்கு நன்றி!

Thulasidharan V Thillaiakathu said...

ஹஹஹ் பானுக்கா இது கொஞ்சம் ஈசிதான் ஆனா எனக்குத்தான் ஃபில்ம் நாலெட்ஜ் இல்லை..கூகுள் தேவதை.3வது கேள்விக்கு விடை பாபுராவ் பட்டெல் என்கிறாள். இது சரியா என்று தெரியய்விலை....நீங்க கூகுள் தேவதையின் உதவியை நாடக் கூடாது என்று கண்டிஷன் போடாததால்...ஹஹஹஹ...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

//சீனியர் சிடிசன் ஆயாச்சா// ஆமாம், இல்லை. ரயில் டிக்கெட்டில் கன்செஷன் கிடைக்கும் வயதை எட்டி விட்டேன். நிஜமான சீ.சி ஆக இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கிறது. வாழ்த்துக்களுக்கு நன்றி!// அஹஹ பானு அக்கா இந்த மாதிரி ரகசியத்தை எல்லாம் வெளிய போட்டு உடைப்பாங்களா !!!

கீதா

கோமதி அரசு said...

திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

Thulasidharan V Thillaiakathu said...

bhandhu சொல்லியிருப்பதுதான் சரி போல..சோ? அவர் இயக்கியிருக்கிறார்...நடிகர், பத்திரிகை எல்லம் சரி தயாரிப்பாளருமோ??!! ஹும் பாருங்க கூகுள் தேவதை வடஇந்தியரைத்தான் சொல்லுது தேடினா...சோவின் பெயர் வரவில்லை..!!! ஒரு வேளை சௌத் இந்தியர் என்று போட்டிருந்தால் வந்திருக்குமோ...

கீதா

Angelin said...

Happy birthday Bhanumathy akka 😃

Bhanumathy Venkateswaran said...

வாழ்த்து தெரிவித்திருக்கும் திருமதி.கோமதி அரசுவுக்கும், ஏஞ்சலினுக்கும் நன்றி.
செல் போனிலிருந்து ஒவ்வொருவருக்கும் அவரவர் கமெண்டிற்கு கீழே பதில் அளித்திருந்தேன்.கணினியை திறந்து பார்த்தால் மொத்தமாக பதில்கள் வந்திருக்கின்றன.
சரி இப்போது விடைகளுக்கு வருவோம்.

ஒரே பாடலில் ஆண் குரல், பெண் குரல் இரண்டிலும் பாடியிருக்கும் பாடகர் கிஷோர் குமார். பாடல் நினைவில் இல்லை. ஹிந்தி பாடல்களில் வித்தகர்கள் சொல்லலாம்.

ஹிந்தி திரைப் படங்களில் அதிக முறை இறந்து போன ஹீரோ ஷாருக் கான்

மூன்றாவது கேள்விக்கு சோ என்பது நல்ல முயற்சி, ஆனால் சரியான விடை கிடையாது. சோ தயாரிப்பாளர் கிடையாது. Answer is the one only S.S.VASAN

நான்காவது கேள்விக்கு நான்கு சகோதரர்கள்,மூன்று சகோதரிகள் என்று சரியான விடை கூறிய பந்துவிற்கு பாராட்டுக்கள்.

குறைவாக இருந்தாலும் கலந்து கொண்டவர்களுக்கு பாராட்டுகளும், நன்றியும்.

என்னையும் குவிஸ் மாஸ்டராக்கிய எங்கள் ப்ளாகிற்கு மனப்பூர்வமான நன்றி!

Rajeevan Ramalingam said...

திருமதி பானுமதி அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Rajeevan Ramalingam said...

கேள்விகளுக்கான விடைகள் கண்டுபுடிக்கணும்.... பட் நேரம்தான் இல்லை...

Bhanumathy Venkateswaran said...

நன்றி ராரா!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!