எங்க
வீடுகள்ல, திருவாதிரைக் களி செய்யும் வழக்கம் கிடையாது. எனக்குத்தான் எது
இனிப்பாக இருந்தாலும் பிடிக்குமே. அதனால்தான் இதனை எப்பவாவது என் ஹஸ்பண்டை
செய்யச் சொல்லுவேன்.
மற்றவர்கள் செய்கிற மாதிரி, ஏழு கறிக்கூட்டு அல்லது காய்கறிக்
கூட்டெல்லாம் நான் செய்யச் சொல்லமாட்டேன். என்னைப் பொருத்த வரையில், ரொம்ப
இனிப்பில்லாத இந்த திருவாதிரைக் களி, வெறும்ன சாப்பிடுவதற்கே ரொம்பப்
பிடிக்கும். இது பாரம்பர்யமா பண்ணற ரெசிப்பி இல்லை. (இது
கீதா சாம்பசிவம் மேடம், மிடில் கிளாஸ் மாதவி இவங்களுக்குச் சொன்னது. உங்க ரெசிப்பியை பின்னூட்டத்தில் சொல்லுங்க)
நான்
இப்போதான் முதன் முதலா திருவாதிரைக் களி செய்துபார்க்கிறேன். ஒரு
வருடத்துக்கு முன்பு, தி.நகர் வெங்கட் நாராயணா தெருவில், கோவிலுக்கு
அருகில் இருக்கும் கடையில்
திருவாதிரை மிக்ஸ் வாங்கினேன் (பாக்கெட்லயே
எல்லாம் இருக்கும். தேவையான தண்ணீரைக் கொதிக்க வைத்து மிக்ஸை கடாயில் போட்டுக் கிளற வேண்டியதுதான்). நானே ஒரு methodல செஞ்சு பார்ப்போமே என்று நினைத்துப் பண்ணினேன்.
எனக்குப் பிடித்திருந்தது. நீங்களும் செய்துபார்த்துட்டு சொல்லுங்க.. உங்களுக்குப் பிடித்திருந்ததா என்று. (எனக்கென்னவோ எல்லோருக்கும் திருவாதிரைக்களி பிடிக்கும் என்று தோன்றவில்லை)
1 கப் பச்சரிசி,
1/8 கப் துவரம் பருப்பு எடுத்துக்கோங்க. இதை வாணலியில் நன்றாக வறுக்கவும். நல்லா வாசனை வரணும், ஆனால் ரொம்ப சிவந்திடக்கூடாது.
இதை, மிக்சில 2-3 சுத்து சுத்திக்கோங்க. ரவை பதத்துல இருக்கணும் (அரிசி உப்புமா செய்யற பதத்துல).
மாவாயிடக்கூடாது.
ஏலத்தைப் பொடி பண்ணிக்கோங்க. நான் ஏல விதைகளை மட்டும் எடுத்து கொஞ்சம் நசுக்கிக்கொண்டேன்.
தேவைனா, முந்திரிப் பருப்பு, திராட்சையை நெய்யில் வறுத்து வச்சுக்கோங்க.
நான் இதனை கடைசியில் சேர்த்தேன். ஆனால் தேவையில்லை என்றுதான் தோன்றியது.
முந்திரி மட்டும் வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளலாம்.
¾
கப் வெல்லத்தை 2 ¼ கப் தண்ணீரில் அடுப்புல கொஞ்சம் கொதிக்க வைங்க. வெல்லம்
நல்ல வெல்லம் என்பதால், நேரடியாக தண்ணீரில் கொதிக்கவைங்க என்று சொல்றேன்.
இல்லைனா, தனியா,
வெல்லத்தைக் கொதிக்கவைத்து (கொஞ்சமா, பாகு பதம்லாம் இல்லை) கசடுகளை
எடுத்துடுங்க. அதோட தேவையான தண்ணீரைச் சேர்த்து கடாயில் கொதிக்க வைங்க. 1
கப்புக்கு 2 ¼ அல்லது 2 ½ தண்ணீர் கணக்கு. வெல்லத் தண்ணீர் கொதிக்கும்போதே 4
ஸ்பூன் தேங்காய்த் துருவலைச் சேர்த்துவிடலாம்.
தண்ணீர்
கொதித்தவுடன், ரவையாக்கிய அரிசி+பருப்பைச் சேர்க்கவும். அதோட ஏலக்காயையும்
சேர்க்கலாம். நல்ல கிளறி, தண்ணீர் எல்லாம் வற்றியபின், அதனை ஒரு
பாத்திரத்தில் இட்டு,
குக்கரில் ஒரு விசில் விடவும். பழைய காலத்துல உருளில கிளறுவாங்க, அரிசி/பருப்பு நன்றாக
வேகும்படி. அதுக்கெல்லாம் இப்போ எங்க பொறுமையும் நேரமும் இருக்கு?.
பின் குறிப்பு:
பலர்
பயத்தம் பருப்பு உபயோகப்படுத்துவார்கள் (கூடவே கடலைப் பருப்பும்). நான் துவரம்பருப்பு மாத்திரமே
உபயோகப்படுத்தினேன்.
தேங்காய் துருவல் கூட கொஞ்சம் சேர்த்துக்கொண்டால் ரொம்ப சுவையா இருக்கும்.
இதுக்கு நிஜமாவே, முந்திரி, திராட்சைலாம் வேண்டாம். ஏன்னா, இது ஸ்வீட்டிலயும் சேர்த்தியில்லை, அரிசி உப்புமாவிலயும் சேர்த்தி இல்லை.
செய்து பாருங்கள்.
அன்புடன்,
[ நாங்களும் வாய்ப்பு இருந்தால் வருடத்துக்கு ஒருமுறை செய்து சாப்பிடுவதுண்டு! - ஸ்ரீராம் ]
தமிழ்மணத்தில் வாக்களிக்க க்ளிக் செய்யுங்க இங்கே...
உழுத்தம் களி அறிந்தேன்
பதிலளிநீக்குதிருவாதிரைக் களி அறியேன்
சிறந்த வழிகாட்டல்
எப்பவுமே
பதிலளிநீக்கு//என் ஹஸ்பண்டை செய்யச் சொல்லுவேன்//
இந்த வார்த்தை எனக்கு குழப்புதே... நண்பரே.
நெல்லைத் தமிழச்சி ரெஸிபி இது :)
நீக்குநெல்லைத் தமிழன் எனக்கும் ரொம்ப பிடிக்கும். சுவீட்டும் குறைவு தானே...என் பாட்டிகள் செய்ததில்லை. ஆனால் அம்மா எங்களுக்கு நாங்கள் டிமாண்ட் செய்ததால் செய்து கொடுத்திருக்கிறார்கள். நான் இப்போது அவ்வப்போது செய்வதுண்டு....குறிப்பாக மார்கழியில்..துவரம்பருப்பு சேர்த்து செய்ததில்லை..பின்குறிப்பில் சொன்னது போல்.பயத்தம்பருப்புதான்..உங்கள் ரெசிப்பி..செய்து பார்த்துவிடுகிறேன்.....
பதிலளிநீக்குகீதா
சரி நெல்லை எப்போ புளியோதரை/புளிகாய்ச்சல் செய்யப் போறீங்க...உங்க மெத்தட் தெரிஞ்சுக்கணுமே....சீக்கிரம் போடுங்க..
பதிலளிநீக்குகீதா
திருவாதிரைக்களி எனக்கு மிகவும் பிடித்தமானது. நினைவுபடுத்திவிட்டீர்கள். செய்துவிடுகிறேன். நன்றி.
பதிலளிநீக்குதிருவாதிரைக் களி என்றாலே பச்சரிசியும் பாசிப் பருப்பும் தான்!..
பதிலளிநீக்குஆயினும் அன்புடன் வழங்கப்பட்ட பிரசாதம்.. இரு கைகளாலும் பெற்றுக் கொண்டேன்..
வாழ்க நலம்..
ம்ம்ம்ம் திருவாதிரைக்களி, திருப்பிக் கேட்டால் செருப்பால் அடி! என்பார்கள்! அந்த அளவுக்கு அது காலையிலேயே தீர்ந்து போயிடும். :) கொஞ்சமாப் பண்ணுவாங்களோ! தெரியலை! ஆனால் என் மாமியார் மறுநாள் வரும்படி நிறையப் பண்ணுவார். :) மறுநாள் கூட மாமனார் சாப்பிடுவார். குழம்போடு சேர்த்தால் கொஞ்சம் சாப்பிடுவேன். நம்ம ரங்க்ஸுக்கும் அவ்வளவாப் பிடிக்காது. அதுக்காக எதையும் ஒதுக்கறதில்லை.
பதிலளிநீக்குஅரிசியை மட்டும் நன்கு களைந்து நீரை வடிகட்டிச் சிவக்க வறுத்துப் பொடித்து நாங்க களி செய்வோம். அதுக்குத் துவரம்பருப்பைக் கிள்ளுப் பதத்தில் வேக வைத்துச் சேர்ப்போம். அரிசியோடு சேர்த்துப் பொடித்ததில்லை. பாசிப்பருப்புப் போட்டால் இரவு வரை கூட இருக்காது என்பதால் சேர்ப்பதில்லை. கடலைப்பருப்பின் பயன்பாடு எப்போவுமே குறைவு.
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குதம +1
எனக்கு கேழ்வரகு களிதான் தெரியும்
பதிலளிநீக்கு'சிவனே' என்றிருந்த என்னைப் பெயரைப் போட்டு கூப்பிட்டு விட்டீர்கள்! நான் சமையலில் கத்துக்குட்டி தான்! என் பிறந்த வீட்டில் திருவாதிரை சமயம் என் பாட்டி திவசம் 99% வந்து விடும் - அதனால் களி அபூர்வம் தான்! சில பல சமையல் குறிப்புகள் பார்த்து நான் ஈசி முறையில் செய்வது - உடைத்த அரிசி, ஊற வைத்த சிறிதளவு கடலைப்பருப்பை குக்கரில் வேக வைத்து, வெல்லத்தை நீர் விட்டு காய்ச்சி, அதில் வேக வைத்த காம்போவை இட்டு கிளறி, ஏலக்காய்த் தூள் இட்டு, நெய் விட்டு வறுத்த முந்திரித் துண்டுகளை (தேவையானால்) சேர்க்கணும்! எங்களுடைய வீட்டில் இனிப்புச் சுவை அதிகம் வேண்டும்! தேங்காய்த்துருவலையும் சேர்க்கலாம்! நீங்கள் செய்திருப்பதில் சிறிதளவு உல்டா!!
பதிலளிநீக்குஎனக்கு பிடிச்ச களி. பக்கத்து வீட்டுல கொடுப்பாங்க. நல்லா திம்பேன். ஆனா, செய்ய தெரியாது. இனி நானே செய்வேன். பக்குவம் சொன்னதுக்கு நன்றிங்க சகோ
பதிலளிநீக்குhttp://geetha-sambasivam.blogspot.in/2012/01/blog-post_10.html
பதிலளிநீக்குசெய்து பார்த்து, ருசித்து விட்டு சொல்கிறேன்.. நன்றி..
பதிலளிநீக்குமிகவும் நன்கு
பதிலளிநீக்குபோன வருஷம் தான் முதல் முதலா friend கொடுத்து சாப்பிட்டு பார்த்தேன்..ரொம்ப பிடிச்சு இருந்துச்சு..ஆன அவங்க சொன்ன முறை கொஞ்சம் கஷ்டம்.. சோ...முயற்சி செய்யல...
பதிலளிநீக்குஆன இது ஈசியா இருக்கே....
செஞ்சு பார்த்து சொல்றேன்..
நாங்கள் திருவாதிரைக்கு செய்வோம். மாயவரம் ஊர் மக்கள் ஆடி பூரத்திற்கு அம்மனுக்கு செய்து கொண்டு வருவார்கள்.
பதிலளிநீக்குபாசிபருப்பை வறுத்து மொட்டு மொட்டாய் வேக வைத்துக் கொண்டு வறுத்து பொடிசெய்த பச்சரிசி ரவை. வெல்லம், வறுத்த தேங்காய் பூ , நெய்
அவ்வளவும் சேர்ந்து திருவாதிரை களி ருசியாக இருக்கும்.
//தண்ணீர் கொதித்தவுடன், ரவையாக்கிய அரிசி+பருப்பைச் சேர்க்கவும். அதோட ஏலக்காயையும் சேர்க்கலாம். நல்ல கிளறி, தண்ணீர் எல்லாம் வற்றியபின், அதனை ஒரு பாத்திரத்தில் இட்டு, குக்கரில் ஒரு விசில் விடவும்.//
நானும் உங்களை போல் செய்வேன். வெண்கல உருளி இருக்கிறது, ஆனால் கொஞ்சமாய் செய்வதால் குக்கரில் செய்து விடுகிறேன்.
செய்முறை விளக்கம், படங்கள் எல்லாம் அருமை.
மார்கழி மாதம் திருவாதைரை நாள் சிவனுக்கு உகந்த நிவேதனம் என்கிறார்கள் என் பாட்டி வீட்டில் காவத்துக் கிழங்குக் கூட்டும் சேர்த்து செய்வார்கள் இன்று என் மனைவியிடம் செய்யச் சொல்லி இருக்கிறேன் பார்க்கலாம்
பதிலளிநீக்கு//இது ஸ்வீட்டிலயும் சேர்த்தியில்லை, அரிசி உப்புமாவிலயும் சேர்த்தி இல்லை
பதிலளிநீக்குஆ!
//ம்ம்ம்ம் திருவாதிரைக்களி, திருப்பிக் கேட்டால் செருப்பால் அடி! என்பார்கள்
பதிலளிநீக்குஅட அயயய்யோ!
வெளியிட்டமைக்கு எங்கள் பிளாக் ஸ்ரீராமுக்கு நன்றி. அப்புறம் வருகிறேன்.
பதிலளிநீக்கு//எனக்கு பிடிச்ச களி. பக்கத்து வீட்டுல கொடுப்பாங்க. நல்லா திம்பேன்
பதிலளிநீக்குபலே, நம்ம கட்சி.
பகவான்ஜி.. வருகைக்கு நன்றி. ஜெண்டர் மாத்த டாக்டருக்குப் படிக்கவேண்டாம் போலிருக்கு. ஒரு பின்னூட்டத்தின் மூலமாக நெல்லைத்தமிழனை, தமிழச்சினு மாத்திட்டீங்களே! பெரும்பாலும் ரெசிப்பி கண்டுபிடிச்சவங்க தமிழச்சிகள்தான் (அதாவது பெண்கள்)
பதிலளிநீக்குவாங்க ஜீவலிங்கம். தெரியாத ஒரு களி இன்னைக்குத் தெரிஞ்சிக்கிட்டீங்க. ஆனாலும் இது களி மாதிரி குழைந்து இருக்காது.
பதிலளிநீக்குவாங்க கில்லர்ஜி. ரொம்ப நாள் பழக்கம். நீங்க குழம்பலாமா? எங்கள் வீடு-அம்மா அப்பா வீடு. என ஹஸ்பண்ட்- அவ இங்க இருந்தபோது அவளை செய்யச்சொல்லுவேன். நான் கொஞ்சம் ஆணாதிக்க குணம் உள்ளவன். அதை மாற்றுவது என் ஹஸ்பண்டும் பெண்ணும்தான்.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி தில்லையகத்து கீதா ரங்கன். பாசிப்பருப்பைவிட துவரம்பருப்பில் செய்தால் கெட்டுப்போகாது, கூட கொஞ்சம் நேரம் தாங்கும். செய்துபாருங்கள்.
பதிலளிநீக்குவாங்க கீதமஞ்சரி கீதா மதிவாணன். முதல்தடவையா வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன். உங்க தளத்துவ "ஒண்டவந்த பிடாரிகள்" தொடரை ரசித்துப படித்தேன். பறவைகளைப் பற்றி நீங்க எழுதறதும் எனக்கு மிகவும் பிடித்தமானது. இயற்கையை நேசிப்பவர்கள் சக மனிதனையும் நேசிக்கிறார்கள். வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்குவாங்க துரை செல்வராஜ். என்ன இப்படிச் சொல்லிட்டீங்க? பச்சரிசியும் பாசிப்பருப்பும் வெல்லமும் சேர்த்து கட்டியாக பண்ணுனா சர்க்கரைப் பொங்கலாகவும், ரொம்ப நெகிழப் பண்ணினா பாயசமாகவும் ஆகிவிடாதோ?
பதிலளிநீக்குகீதா சாம்பசிவம் மேடம் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. 20-30 வருடங்களுக்கு முன்னால் அந்த அந்த விசேஷ நாட்களில்தான் அந்த தினத்துக்கு உரியதைச் செய்வார்கள். வெளியே சாப்பிடும் வாய்ப்பே அனேகமாக இல்லை. அதனால் டிமான்டும் அதிகம். இப்போல்லாம் அப்படியா?
பதிலளிநீக்குஇன்னோண்ணு. வீட்டுல ஆர்வமாக அது பண்ணு, இது பண்ணு என்று கேட்டு ஆர்வமா சாப்பிடலைனா நிறைய வெரைடியே செய்ய வாய்ப்பில்லாது போகும். உங்கள் மெதட்லயும் முயற்சிக்கிறேன்.
வாங்க கரந்தை ஜெயக்குமார் சார். இப்போதைக்கு கோவில், வரலாற்று இடங்கள்லாம் சுற்றுலா போகலையா? அது சம்பந்தமா பதிவு ஒண்ணும் காணோம்?
பதிலளிநீக்குவாங்க புலவர் ஐயா. தமிழ்நாட்டுல கேழ்வரகு களி பண்றாங்களா? கன்னடியர்கள்தான் ராகி மொத்தை என்று கேப்பைக் களி சாப்பிடுவார்கள். பெங்களூரில் உணவகங்களிலும் கிடைக்கும். வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்குவாங்க மி.கி.மாதவி. "சிவனே" என்று இருப்பவர்கள்தான் திருவாதிரையை மனதில் வைத்திருப்பார்கள். திருவாதிரை என்றாலே களி ஞாபகம் வராதோ?
பதிலளிநீக்குஎனக்கு அரிசி, க.பருப்பு பாயசம்தான் ரொம்பப் பிடிக்கும். நிறைய பாயசங்கள் அடிக்கடி செய்வேன். நீங்க சொல்லியிருக்கற மாதிரி கடலைப்பருப்பு உபயோகித்துச் செய்துபார்க்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நன்றி ராஜி. அந்த அந்த டிஷ், எப்போதும் செய்கிற எக்ஸ்பர்ட் கொடுத்தால் நன்றாகத்தான் இருக்கும்.
பதிலளிநீக்குமீள்வருகைக்கு நன்றி கீதா மேடம். உங்கள் செய்முறையைப் படித்தேன்.
பதிலளிநீக்குவாங்க தி.தனபாலன். இதுல இனிப்பு குறைவுதான். பார்த்து சாப்பிடுங்க.
பதிலளிநீக்குவாங்க அசோகன் குப்புசாமி
பதிலளிநீக்குவாங்க அனுராதா ப்ரேம்குமார். ரொம்ப சுலபம். செய்துபாருங்கள்.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி விஜய்
பதிலளிநீக்குவாங்க கோமதி அரசு மேடம். உங்கள் செய்முறையைக் குறித்துக்கொண்டேன். இதுல கொட்டைத்தேங்காயை சிறிது சிறிதாக கட் செய்து வறுத்துவிட்டு சேர்த்தால் நல்ல வாசனையாக இருக்கும். கருத்துக்கு நன்றி.
பதிலளிநீக்குவாங்க ஜி.எம்.பி சார். நீங்களே செய்து மனைவியை அசத்தப்போகிறீர்கள் என்று பார்த்தால் அவங்களைப் பண்ணச் சொல்லிட்டீங்களா? எப்படி இருந்ததுன்னு சாப்பிட்டுப் பார்த்துச் சொல்லுங்கள்
பதிலளிநீக்குவாங்க துரை சார். (அப்பாத்துரை சாரா?) வருகைக்கு நன்றி
பதிலளிநீக்குதிருவாதிரை ஒருவாய்க்களி தின்னாதவா நரகக்குழி வீட்டில் பண்டிகை இல்லாவிட்டால்கூட யாராவது கொடுத்து விடுவார்கள். வருஷத்தில் மார்கழிமாதம் திருவாதிரை அன்றே களியும், ஏழு தான் குழம்பும் செய்து நிவேதனம் செய்வது வழக்கம்.களியும்,அம்மாதிரி குழம்பும் பிறகு செய்ய நேர்வதே இல்லை என்பதுதான் உண்மை. அன்று அதற்கு தனி ருசி என்று தோன்றும். ஸீஸன் அப்படி. நீங்கள் ரெடிமேட் உடைத்தது வாங்கிச் செய்திருக்கிறீர்கள். உங்கள் ருசிக்கேற்ப ரஸனைாகச் செய்திருக்கிறீர்கள்.இனிப்பு குறைவாக இருப்பதால் சாப்பிடவும் முடியும். நாங்கள் செய்வது அரிசியைக் களைந்துலர்த்தி வறுத்து ரவையாக உடைத்துக் கொண்டு,அதனுடன் து.பருப்பு,பய.பருப்பும் சிறிது வறுத்து உடைத்துக்கொண்டு நன்றாக வேகவைத்துக் கொண்டு, அதில் வெல்லப்பாகைச் சேர்த்துக் கிளறி,நெய்,ஏலக்காய்,முந்திரி சேர்த்துத் தயாரிப்போம். இப்படிச் செய்தால் மறுநாள் வரை கெடாது. கூடவே ஏழுதான் குழம்பு ருசியாக இருக்கும். தண்ணீரில் வெல்லத்தைச் சேர்த்துக் கொதிக்கவிட்டு,அதில் உடைத்த ரவையைக் கொட்டிக்கிளறி உபஸாமான்களைச் சேர்ப்பதுமுண்டு. இம்முறை மறுநாள் வரை
பதிலளிநீக்குகளி கெடாது இருக்காது என்று ஒரு ஸந்தேகம். தேங்காய்த் துருவல்கூட வறுத்துப் போட்டால் நல்லது. களியும்,காவத்தனும் என்று பாலக்காட்டு முறையில் ஒரு கிழங்கு செய்வார்கள், அது கூட சாப்பிட்டு இருக்கிறேன். உங்கள் முறையில் செய்து பார்க்கிறேன். இவ்வளவு அக்கரையாகப் பதம் சொல்வது ஸந்தோஷம். அன்புடன்
//திருவாதிரை ஒருவாய்க்களி தின்னாதவா நரகக்குழி
பதிலளிநீக்குஅவங்க செருப்பாலடின்றாங்க இவங்க நரகக்குழின்றாங்க... களி வன்முறையா இருக்கும் போலிருக்கே?..
>>> திருவாதிரைக் களி தின்னாதவா நரகக்குழி..
பதிலளிநீக்குஅங்கே அதா..ல அடி.. இங்கே இதா..ல அடி..<<<
ஏட்டிக்குப் போட்டியான சொல்லாடல்களை எல்லாம் பழமொழி என்று நம்புகின்றார்கள்..
திருவாதிரை நாள் சிவனடியார்களுக்கு உகந்த நாள்..
அன்றைய நாளுக்கான எளிய உணவு தான் திருவாதிரைக் களி..
திருவாதிரைக் களி பரோபகாரத்தின் வெளிப்பாடு!..
அப்பாத்துரை சார்.. மீள் வருகைக்கு நன்றி. திருவாதிரைக் களி, இறைவன் பிரசாதமாக எண்ணப்படுவது. அதனால் குட்டிப் பசங்களை பயமுறுத்தும்விதமாகச் சொல்வார்களாயிருக்கும் (பெருமாள் கண்ணைக் குத்திடுவார் என்று சொல்வதைப்போல). நம் பாரம்பர்யத்தில் ஒவ்வொரு விசேஷத்துக்கும், ஒவ்வொரு உணவுக்கும் ஒரு தனிப்பட்ட காரணம் இருக்குமல்லவா?
பதிலளிநீக்குதுரை செல்வராஜு-உங்கள் மீள் வருகைக்கும் நன்றி. நல்ல விளக்கம்.
காமாட்சியம்மா. உங்கள் வருகைக்கும் நீண்ட பின்னூட்டத்துக்கும் நன்றி. எப்போதும்போல் நீங்கள் எழுதியுள்ளதை ரசித்தேன்.
பதிலளிநீக்குஏழு தான் குழம்பு - இது வெறும் சொல்லுக்காகவா அல்லது குறிப்பிட்ட ஏழு காய்கறிகளா? பூசனி, மத்தன்-பரங்கி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்று?
"காவத்தனும் " - இதை தில்லையகத்து கீதா ரங்கனோ வேறு யாரோ விளக்கவேண்டும்.
பூசணி,பறங்கி,அவரைக்காய்,வெள்ளிக்கிழங்கு,சேனை,கத்தரி,கொத்தவரை இப்படி ஏழுகாய்களுக்குமேலே கூட போகும்.அரைத்து ,கரைத்து காரஸாரமாய் கூட்டு. நெய்மணத்துடன் களி அந்தத் திருவாதிரைக்களி ருசி மற்ற நாட்களில் வராது. காவத்தன் என்பது ஒரு கிழங்கு. கேரள நாட்டு விளைவு. இப்போது எங்கும் கிடைக்கிறதோ என்னவோ. அதை வேகவைத்து தேங்காயும்,பச்சை மிளகாயும் அரைத்துப் பிசறி கறிமாதிரி செய்து களியுடன் கொடுப்பார்கள். கேரளஸ்பெஷல் திருவாதிரை. சினேகிதர்கள் வீட்டில் எவ்வளவோ வருஷங்களுக்கு முன் சாப்பிட்டது. அரிசியை உடைப்பது முதலானது ரஸித்திருக்கலாம். களி நல்ல கலரான வெல்லமாக இருந்தால் அவ்வளவு நன்றாக வரும். ஏதோ பழைய நினைவுகள். அவ்வளவுதான். அன்புடன்
பதிலளிநீக்குநன்றி காமாட்சியம்மா. நீங்க விரைவில் இன்னொரு எளிய இனிய செய்முறை உங்க தளத்துல எழுதுங்க, பாசிப்பருப்பு ரொட்டி மாதிரி. உங்கள் வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி.
பதிலளிநீக்குநெல்லைத் தமிழன் உங்கள் திருவாதிரைக் களி ரெசிப்பி தூள்!!! துவரம்பருப்பு போட்டு நேற்று செய்துவிட்டேன்!!! நல்ல உதிர உதிர வந்திருந்தது. அதாவது களி போன்று ரொம்ப மொத்தையாகச் செய்யாமல். வீட்டில் மச்சினருக்கு எல்லாம் கொஞ்சம் பொல பொல என்று இருந்தால் பிடிக்கும். மாமியாருக்குத்தான் கொஞ்சம் மென்னை அடைக்கிறது என்றார் அதனால் அவருக்கு வீட்டில்செய்த கூட்டினைக் கொடுத்து ஒப்பேற்றிவிட்டேன். ஆனால் டேஸ்ட் நன்றாக இருக்கு என்றார். மாமியார் செய்வது இல்லை. நான் செய்து கொடுத்தால்தான் உண்டு... துவரம் பருப்பு போட்டுச் செய்வதும் நன்றாகத்தான் இருக்கு என்று அப்பா சொன்னார்..... நன்றி நன்றி நன்றி!!!
பதிலளிநீக்குகீதா
நன்றி தில்லையகத்து கீதா ரங்கன். எனக்குமே என் ஹஸ்பண்ட், துவரம்பருப்பு போடுங்கோ என்று சொன்னதும், 'என்னடி நெட்ல எல்லா இடத்திலும் பாசிப்பருப்புன்னு போட்டிருக்கே, என்னைக் கவுத்துவிடறயா'ன்னு கேட்டேன். ஆனால் செய்யும்போதே (வறுக்கும்போதே) திருவாதிரைக்களிக்குரிய வாசனை வந்துவிட்டது. செய்துபார்த்துச் சொன்னதுக்கு நன்றி.
பதிலளிநீக்குஅன்பின் நெல்லைத் தமிழன் அவர்களுக்கு..
பதிலளிநீக்குஎனது தளத்தில் அக்காவும் தங்கையும் திருவாதிரைக் களியைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார்கள்..
அவசியம் வருகை தரவும்..
வருகிறேன் துரை செல்வராஜு சார். எல்லாத் தளங்களிலும் ஃபாலோயராக இணைவதில்லை. அதனால் இடுகையைப் பற்றி விவரம் தெரிந்தாலோ அல்லது எப்பவாவது ஒரே மூச்சில் விட்டுப்போனவைகளைப் படித்துவிடுவேன். தகவலுக்கு நன்றி.
பதிலளிநீக்குதிருவாதரையன்று ஜோராக மிகவும் ருசியாக சூடாக சுவையாக களி + கூட்டு செய்து தருவார்கள். அவற்றை சாப்பிடுவதோடு சரி. வீட்டிலுள்ள அவர்களுக்கே
பதிலளிநீக்குஇதுபோன்ற அபூர்வமாகச் செய்யும் சமையலில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் இதோ இங்கு போய் http://arusuvaikkalanjiyam.blogspot.com - நம்ம எக்ஸ்பர்ட் என்ன சொல்லியுள்ளார்கள் என என்னைவிட்டே தேடிப்பார்த்து கண்டு பிடித்து ஒரு பேப்பரில் எழுதித்தரச் சொல்லுவார்கள்.
தாங்கள் ஏதேதோ சமையல் குறிப்புகளை படங்களுடன் எழுதி அசத்தியுள்ளீர்கள்.
//இது ஸ்வீட்டிலயும் சேர்த்தியில்லை, அரிசி உப்புமாவிலயும் சேர்த்தி இல்லை// என்றதைப் படித்ததும் பலக்கச் சிரித்துவிட்டேன். வாஸ்தவம்தான்.
பகிர்வுக்கு பாராட்டுகள் + நன்றிகள், ஸ்வாமீ.
நன்றி கோபு சார்.. உங்கள் வருகைக்கு. கணிணியில் ஏதேனும் பிரச்சனையா? வலைதளத்தில் உங்களை சில நாட்களாகக் காணோமே?
பதிலளிநீக்குவீட்டில் உள்ளவர்களுக்கு சமையலில் சந்தேகம் வர, அதுவும் பாரம்பரிய சமையலில் சந்தேகம் வர வாய்ப்பே இல்லை. அவர்களுக்கும் உங்கள்மீது ரொம்பவும்தான் நம்பிக்கை. தளத்தைப் பார்த்து எழுதித் தரும்போது தவறு ஏற்பட வாய்ப்பில்லை என்று.
பரவாயில்லை சார். உங்களுக்கும் பெருமாள் மாதிரி, சிவனே என்று இருந்த இடத்தில் பிரசாதங்கள் வருகிறது. வாழ்த்துக்கள், இது எப்போதும் தொடருவதற்கு. கருத்துக்கு நன்றி.