Saturday, July 22, 2017

வாட்சாப்பினால் வந்த வாட்டர்! குற்றச்செயல்களுக்குத் தடா.






1)  நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்ததால், அரசை எதிர்நோக்காமல், கோவை சின்னதடாகம் அருகே கிராம இளைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து புதிய குளத்தை வெட்டியுள்ளனர்.









2)  நமக்கு நாமே....  அரசாங்கத்துக்காக காத்திருந்தால் எப்போது செய்யுமோ!  பள்ளிக்கரணை ஏரியும் தாம்பரம் ஏரியும் இன்னமும் அதிகாரிகளின் கருணைப்பார்வைக்குக் காத்திருப்பதாய் சொல்கிறது செய்தித்தாள் செய்தி






3)   சமூகத்தில், நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களில், போட்டி, பொறாமை, ஆசை, வஞ்சகம் என, எத்தனை, எத்தனை முகங்களை பார்க்கிறோம். ஆனால், யாரோ சிலர் தான், சமூகத்திற்கு தங்களை அர்ப்பணித்து வாழ்வாங்கு வாழ்கின்றனர்.  அவர்களில் ஒருவர் தான், சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அடுத்த, ராஜாபாளையத்தைச் சேர்ந்த, உள்ளாட்சி நிதி தணிக்கை துறை, இணை இயக்குனராக இருந்து ஓய்வு பெற்ற பாஸ்கர், 60. இவர், நாள்தோறும், 71 குழந்தைகளுக்கு இலவசமாக, நாட்டு மாட்டின் பால் வழங்கி, சேவையாற்றி வருகிறார்.






4)  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கானுாரில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு அரசை எதிர்பாராமல் 'வாட்ஸ் ஆப்' குழு மூலம் இளைஞர்கள் தீர்வு கண்டனர்.  .









5) மாணவர்கள் நலனில் அக்கறைகொள்ளும் இப்படிப்பட்ட ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.  (நன்றி ராமலக்ஷ்மி)















6)  காசு கொடுத்து ப்ராஜெக்ட் முடிக்காமல் படித்த்தனால் ஆனா பயனென் கொல்? என்று சமூகத்துக்கு உதவியாய் ஒரு செயலியை உருவாக்கியிருக்கும் மாணவி.  (நன்றி ராமலக்ஷ்மி) 









இங்கே தொட்டால் தமிழ்மணத்தில் வாக்களிக்கலாம். 

15 comments:

Ramani S said...

அறியாத ஆனால் அறிந்திருக்க வேண்டிய
அருமையான செய்திகள்
மனம் கொஞ்சம் நம்பிக்கை கொள்கிறது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Ramani S said...

த.ம இணைப்புக் கிடைக்கவில்லை
மீண்டும் வருகிறேன்

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்கு உரியவர்கள்
தம+1

KILLERGEE Devakottai said...

திருப்புவனம் இளைஞர்களின் செயல் பாராட்டுக்குறியது.

நெல்லைத் தமிழன் said...

நல்ல செய்திகளைத் தொகுத்துப் பகிர்ந்துகொள்வதற்கு நன்றி. த ம +1

பி.பிரசாத் said...

அரசை நம்பாமல், நாமே இணைந்து செயல்பட்டால் சாதிக்கலாம் என்ற கருத்தை சொல்லும் செய்திகள்....உண்மைதான்...!

கோமதி அரசு said...

உன்னால் முடியும் தம்பி என்பதை உறுதி படுத்திய கோவை இளைஞ்ர்கள், நமக்கு நாமே என்பதை செயல்படுத்திய செயல் வீரார்கள்,
திருப்புவனம் இளைஞ்ர்கள் அனைவரும் வணக்கத்திற்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள்.
மற்ற செய்திகள் முன்பே படித்த செய்திகள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

புலவர் இராமாநுசம் said...

பல தகவல்கள அறிந்தேன்!நன்றி!

விஜய் said...

நல்ல தகவல் தொடரட்டும் உங்கள் பணி
தமிழ் செய்திகள்

ஏகாந்தன் Aekaanthan ! said...

மனிதநேயம் காகிதத்தில் மட்டுமல்லாது ஆங்காங்கே கண்கூடாகத் தெரிகிறது; சாதாரணர்களுக்குப் பயனளிக்கிறது என்பதில் மனம் அமைதி கொள்கிறது. திரு பாஸ்கரின் சேவை சிறப்பு வாய்ந்தது. புட்டிப்பாலையும், கடைப்பாலையும் குடித்தும், குடிக்காமலேயே கூட வாழும் ஏழைக் குழந்தைகளை மனதில் நிறுத்தி நாட்டுப்பசுவின் பால் வழங்குகிறாரே, என்ன ஒரு சிந்தனை, என்ன ஒரு செயலாக்கம் அது..

Bagawanjee KA said...

வாட்ஸ் அப் ஐ இப்படியும் ஆக்கபூர்வமாய் பயன் படுத்தும் வாலிபர்களுக்கு வாழ்த்துக்கள் :)

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே சிறப்பான செய்திகள். அனைவருக்கும் பாராட்டுகள்.

Thulasidharan V Thillaiakathu said...

செய்திகள் சிறப்பு வழக்கம் போல்..அரசை எதிர்பாராமல் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும். இளைஞர்கள் வாழ்க.. விரிவாகா அடிக்க முடியல....மொபைலில் இருந்து அடி ப்பதால்
கீதா

Geetha Sambasivam said...

எல்லாமுமே புதிய செய்திகள். அந்த இரண்டாம் படம் பார்த்ததுமே மனது கனத்துப் போனது! ஆங்காங்கே ஒரு சில நல்லவர்களாவது இருக்கிறார்களே என சந்தோஷப்பட வைக்கும் பதிவு.

Geetha Sambasivam said...

காலம்பரலேருந்து இரண்டு முறை வந்தும் கருத்துச் சொல்ல முடியலை! இப்போப் போயிருக்கு! :)

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!