செவ்வாய், 31 அக்டோபர், 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை : இதன் பெயர் என்ன - காமாட்சி மகாலிங்கம் - சீதை 25



     இந்த வார சீதை ராமனை மன்னிக்கும் கதைக் கற்பனையில் காமாட்சி அம்மா படைப்பு இடம் பெறுகிறது.  



====================================================================


இதன் பெயர் என்ன

காமாட்சி மகாலிங்கம்


என்னையே குற்றம் சொல்கிறார்களே!

நான் ஒரு அசடாம். எனக்கு நியாயமாகப் பட்ட மாதிரி நான் இருக்கிறேன்.. அது ஒரு தப்பா?

ஒண்ணும் பெரிய காரியம் நடந்து விடவில்லை. இல்லை இந்த நாள் பெண்ணா நான்?

அப்போ நடந்தது. அக்கா காலமாவதற்கு முன் என்றோ ஒருஸமயம் அவள் மனம் திறந்து

ஒண்ணும் பிரமாதமா நடக்கலை. எனக்கு அறியாத வயது. உலகம் அவ்வளவா தெரியாது.

புருஷன் மனம் கோணாது நடந்துக்கணும்,கட்டின புருஷன் மேல் குறை சொல்லக்கூடாது,மனம் கோணாம நடந்துக்கணும், அப்படி,இப்படி என்று பத்து வயது முதலே கதை சொல்லி வளர்த்து, காலா காலத்துலே கல்யாணத்தையும் பண்ணி அனுப்பிச்சா அந்த பொண்ணு எப்படி இருப்பா?

நல்ல பொண்ணாதான் இருப்பா! வார்த்தைகளெல்லாம் ஞாபகம் வரது.

அக்கா போய்ட்டா. போனவாளுக்கும் எல்லாம் செஞ்சுதானே அனுப்புவா.

எல்லாம் மாத்தி பூவும்,பொட்டுமா அலங்காரம். வாத்தியார் அவா கையிலே விளக்கைக் கொடுப்பது மாதிரி வைத்து நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள். அத்திம்பேரைப் பார்த்துச் சொல்லுகிறார்.

நாளை மற்றும் எல்லா நல்ல கெட்ட காரியங்களானாலும், அக்கினி மனைவியிடம் இருப்பதால், அதைத் திரும்ப வாங்கிக் கொள்வதாக ஒரு ஐதீகம்.

வாத்தியார் சொன்னபடி நடக்கிறது. அவர் குலுங்கக் குலுங்க அழுகிறார். எல்லோரும் அர்த்தம் பொதிய ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். எண்ணங்கள் மனதில் படமாக விரிகிறது.

அப்போ எனக்கு இருபத்திரண்டு வயஸு இருக்கும்.  அதுக்குள்ளே மூணுபெத்து, ஒரு வயது ஆண்குழந்தையைப் பறிகொடுத்து விட்டேன்.  செல்லப்பொண்ணாக பிறந்தாத்திலே வளர்ந்த பொண்ணு. .  அப்பா ,அம்மா வந்திருந்தா.  துக்கப்பட்ட பொண்ணு, இரண்டுமாஸமாவது கொண்டு வைச்சிண்டு தேத்தி அனுப்பணும். வெகுளிப் பொண்ணு. பெரிய ஸம்ஸாரக் கூட்டுக் குடும்பத்திலே துக்க ஸமயத்தில் இன்னும் இரண்டு குழந்தையுடன் கஷ்டப்படக்கூடாது,அப்படி, இப்படிச் சொல்லி ஊருக்கு அழைச்சுண்டு வந்துட்டா.

நம்ம புருஷனுக்கும் கஷ்டம் தானே என்று தோன்றவில்லை.  அதான் அசடு, வெகுளி எல்லாம் பட்டப் பேரு.

அவரும் மறுத்துச் சொல்லலை.  அதெல்லாம் வழக்கம் கிடையாது.  மத்த ஓர்ப்படிகளெல்லாம் உறவு.  பெரியஓர்படி மாமா பொண்ணு.  அவளுக்கும் நிறைய பசங்கள். பிரஸவ நேரம் அவளுக்கு. அவளக்கா ஒரு புருஷனால் கைவிடப்பட்டவள். அவ்வளவு கெட்டிக்காரி,காரியத்திலே கப்பல்.

புருஷன் ஒருமாதிரி மனநிலை ஸரியில்லாத வியக்தி.  தெரியாத இடம்.  வீட்டுக்குத் திரும்ப வந்துவிட்டாள்.  அவள் ஒத்தாசைக்கு வந்திருந்தாள்.

மீனா மீனா என்று என்னிடமும் அவ்வளவு ஆசையாக இருப்பாள்.

என்னோட கடைசி ஓர்படி நாகு நம்மஊர்தானே.  அவ ஏதோ விசேஷத்திற்காக நம் ஊருக்கு வந்திருந்தாள்.

அவளோட நானும் புறப்பட்டு விட்டேன்.   அப்பா முன்னாடியே கடிதம் போட்டு விட்டார்.

போய் இறங்கினோம்.  பெங்களூருதான்.   காலங்காத்தாலே குளிரு நடுங்க ஆரம்பிச்சுடும்.

அப்பல்லாம் ஸ்டேஷனிலிருந்து ஆத்தக்குப் போக ஜட்கா வண்டிதான். உங்கத்திம்பேர் வந்திருந்தா.  பெண்களிரண்டும் அப்பான்னு ஓடிக் காலைக் கண்டிண்டதுகள். இரண்டையும் அரவணைத்தபடி  என்னிடம் ஒரு வார்த்தையாவது பேச வேண்டுமே  ஊஹூம்.  ஸரி மனிதருக்குக் கோவம் அப்படின்னு நினைச்சுண்டேன்.

மாமியார்தான் 'என்ன ஒருவழியா இரண்டு மாஸம் நின்னூட்டே.   நான் போகணும்னு சொல்லி சீக்கிரமா வரமாட்டியோ ஒரு பொண்ணு .... போ.  குளிச்சுட்டுக் காரியத்தைப் பாரு'ன்னார்.

என்னவோ ஒரு வெறுமை மனஸிலே.  அந்தக் குழந்தை இருந்த இடம்.  இப்படிதான் இருக்கும்.

இவரும் பேசலே.  நாம போயிருக்க வேண்டாம்.

ஸரி  நிதானமா கேப்போம்.  அவர் ஆபீஸ் போயாச்சு.

'ஏம்மா இவர் என்னவோ போல இருக்கார்?' 

அம்மாவிடம் கேட்டால் 'அவனுக்கும் துக்கம் இருக்கும். நீவேற போயிட்டே...'


'நீங்கதானே அனுப்பிச்சிங்க' கேட்க முடியுமா?  எல்லாமே துளி வித்தியாஸமாப் பட்டது.

'அவனை நன்னா கவனிச்சுக்கோ.   அவ்வளவுதான் நான் சொல்லுவேன்.   இங்கே என்ன நடக்குறதுன்னே தெரியலே.  அவனை சுத்தி சுத்தி இந்தப்பொண்ணு. நான் கண்டிச்சேன். என்ன நானும் முயற்சி செய்து உண்மையைக் கண்டு பிடித்தேன். இப்பதான் உனக்குப் புரியும் படி சொல்றேன்.'  அதுக்குள்ளே யாரோ வாசலில் கூப்பிட அவள் போகிறாள்.

என்னதை நம்மிடம் சொல்லப்போகிராள்?   ஊருக்கே தெரியும் இவ எப்படி இருக்கான்னு, இருந்தான்னு.

யார் என்ன சொன்னாலும் காதில் வாங்காமல், வேலைக்காரி மாதிரி உழைத்துக் கொண்டு.

அவாத்துக்குப் போய்ட்டு வந்தவா சொல்லுவா!  இப்படி ஒரு பெண்ணை எங்கும் பார்த்த்தில்லை.

எவ்வளவு கபடத்த பொண்ணுனு கொண்டாடினாளோ,  அவாளே பிரதி ஒண்ணுக்கும் அவளை ஏதோ சொல்லி, மட்டம் தட்டறதே தொழிலா போச்சு.

பால் குமுட்டி பக்கத்திலே இருந்தா.  பால்லே ஒருடம்ளர் ஜலத்தை கொட்டிவிட்டாளோ  என்னவோ,  நம்ளைக்கண்டா அவளுக்குப் பிடிக்குமா?

நான் பார்க்கலே.  அவ பால் பொங்கி வரதுன்னு துளி ஜலத்தை தெளித்திருப்போ. மாமியார் சொல்லுவா.

எதுக்கும் வாயைத் திறக்காமல் இப்படி இவ இருக்கா,  நாம் என்ன செய்ய முடியும்?

எந்தக் காரியம் செய்தாலும் குறை. வேணும்னு சொல்லறா.  விசாரமில்லாம அறுத்தா அம்பது பலகை அறுக்கலாம்.  உடம்பைப் பாரு.  ஒரு விசாரமில்லை.

வரிஞ்சு வரிஞ்சு கடுதாசு எழுதறா.  என்ன எழுதராளோ?

இதெல்லாம்தானே நீ கேள்விப் பட்டிருப்பே...

என்ன நம் மனதில் ஓடியதை அப்படியே கேட்கிறாள் திரும்பி வந்து.

ஊரில் இல்லைநான் . அவருக்கு உடம்பு ஸரியில்லே.  குழந்தை ஞாபகம் வந்து கதறி  இருக்கிறார்.  அம்மாவும் இல்லை.  இவபோயி ஆறுதல் சொல்லி இருக்காள். என்னவோ ஏதோ அவரிடம் அக்கறை காட்டி எந்த விதமோ தொடர்பு  ஏற்பட்டு விட்டது.

நான் ஒருத்தி வந்தும் கூட அவ எல்லாத்துக்கும் முந்திக்கிறாள்.  பாவம் மீனா. நீ பாரு அந்தக்காரியத்தை.   நான் எல்லாம் செய்யறேன்.   இப்படி . என்ன பண்ணறது? அவ எல்லாருக்கும் எல்லாம் செய்யற மாதிரி செய்யறா?  ஏதாவது சொன்னால் வீட்டில் ரகளை ஆகி விடும்.   கூட்டுக் குடும்பம்.   எல்லாம் நிதானமாகத்தானே எனக்கும் புரிந்தது.

எவ்வளவு நல்ல மனிதர்?   அவர் பேசாது, ஒதுங்கிப் போவது எல்லாம் கோவத்தாலேன்னு நினைச்சது தப்பாப் போச்சு.

எனக்கும் அஸாத்திய கோபமும்,வருத்தமும்.  வாயைக்கொட்டிச் சண்டை போடக்கூடாது.  ரஸாபாஸம் கூடாது.  நாமும் ஒதுங்கி விட்டு, குடும்ப கௌரவம் காத்துப்,பெண்களுக்கு நல்ல அம்மாவாக இருக்க வேண்டும்.  நம்முடைய அக்கினி ஸம்பந்த உறவு நீடித்தால் போதும்.  பிறந்த வீட்டிற்குபோய் நின்று அவர்கள் மனக் கஷ்டப் படக் கூடாது.

நான் நன்றாகவே இருக்கிறேன். யார் சொல்வதையும் நம்பாதீர்கள் என்று தான் அப்பாவிற்கு எழுதுவேன்.

எல்லா காரியங்களிலும் நான்தான் தர்மபத்னி. அறுபது , எண்பது எல்லா வைபவங்களும் நான்தான்  உடன்.

பெண்களைல்லாம் கன்னிகாதானம் செய்து கொடுத்து என்ன குறைவு எனக்கு. அவருக்கும் மனதளவில் கஷ்டம் இருந்திருக்கும்.  ஒதுங்கி வாழப் பழகிவிட்டோம்.

நல்லபடி நான் போய்ச்சேர கடவுள் அருள் புரிந்து அவர் எனக்குச் செய்தால்போதும்.

இந்த வார்த்தைகள் ஞாபகம் வந்தது.  அக்கினி ஸம்பந்தத்தையும் திரும்பக் கொடுத்தாகிறது.

கண்களைத் துடைத்துக் கொண்டேன்

சீதை ராமனை மன்னித்தாள்!!




தமிழ்மணம்.

65 கருத்துகள்:

  1. சிந்தனைக்கு விருந்தாகும் செவ்வாய்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  2. நடப்பவற்றை பக்கத்தில் இருந்து பார்ப்பது போன்றதொரு உணர்வு..

    மனம் ஆழ்ந்து விடுகின்றது.. கதையாக எண்ண முடியவில்லை..

    பதிலளிநீக்கு
  3. மன்னிக்கப் பெரிய மனம் வேண்டும். அது இருந்திருக்கு! என்றாலும் எனக்கு வேதனை ஆறவில்லை. :(

    பதிலளிநீக்கு
  4. உணர்வுகளின் வெளிப்பாடு மனச்சுமையைக் கூட்டிவிட்டது.

    பதிலளிநீக்கு
  5. ஆம் சிந்தனைக்குமட்டும் இல்லை.எப்படி எப்படி கதைகள் போகிறது இல்லையா. முதல் கமென்ட். நன்றி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  6. கற்பனைகளுடன் உண்மையும் கலந்திருந்தால் கண்முன் நடக்கிரது போலதான் உணர்ச்சிகள் இருக்கும்.அந்த நாட்கள்,அதாவது இன்னும் சற்று முன் போய் கூட்டுக்குடும்பங்களின் கதைகள் சில கேட்டவையும் கலந்து விடுகிறது. அவ்வளவுதான் துரைராஜ் ஸார். பக்கத்திலிருந்து பார்ப்பதுபோல் இருக்கா. கதைதான். அன்புடன்

    பதிலளிநீக்கு
  7. கீதா அந்தப்பெண் வெகுளிதானா அல்லது மசையா. என் கேள்விக்குறி வேலை செய்வதில்லை. குடும்பகௌரவம்,குழந்தைகளின் எதிர்காலம் என்று நீண்ட காலம்,அசடாகவே ஆக்கி விட்டிருக்கும். கோர்ட்,தெரியாது.கௌரவமாக இருந்தபெண். காலம் அப்படிதான் இருந்திருக்கும். வேதனை இதுவும் ஒருகதையின் அங்கம்தான். விசாரம் வேண்டாம். அன்புடன்

    பதிலளிநீக்கு
  8. வசனங்களை குறைத்து நிகழ்வுகளை கொண்டு சென்ற நடையழகு.

    முடிவு ஏற்கனவே அறிந்தாலும் மனம் கனத்தது உண்மையே... நன்றி அம்மா.
    -கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  9. மன்னிக்க வேண்டும். கோர்ட்,கச்சேரி என்று போகாமல், பத்தினிப் பெண்கள் வரிசையில். இப்படியும் நடக்குமா. என் கற்பனையில் ஒரு வேதனைக்கதை. வேறு விதங்களில் இப்பவும் நடக்காமலில்லை. அப்பாவிப் பெண்களாயிருந்தால் இப்படி நடக்க வாய்ப்பு எங்கோ ஒருவருக்கு.மனச்சுமையைக் குறையுங்கள். கதை என்று நினைத்துக் கொள்ளுங்கள் ஜம்புலிங்கம்ஸார். அன்புடன்

    பதிலளிநீக்கு
  10. சம்பந்தப்பட்ட காலகட்டத்தையும், இதைப்போல நடக்குப் வீட்டுச் சூழலும் கண்முன் வந்தது. எத்தனை எத்தனை பெண்கள், "தட்டிக் கேட்கக்கூடாது, குடும்ப நலனே முக்கியம்" என்பதற்காக குடத்திலிட்ட விளக்குபோல் வாழ்ந்திருப்பார்கள்...... வீட்டின் பெரியவரிடம் உட்கார்ந்து கதை கேட்பதுபோல் இருந்தது.

    பிரச்சனை என்று வரும்போது கணவனின் தாயாரோ, பெற்றோரோ எப்படி ஒதுங்கிவிடுகிறார்கள்.

    சில சம்பவங்களை உணர்வதுபோல் எழுதியமைக்குப் பாராட்டுக்கள் காமாட்சியம்மா

    பதிலளிநீக்கு
  11. கில்லர்ஜீ இந்தக் கதையைப் படியுங்கள் என்றுதான் ஸ்ரீராமிற்கு அனுப்பினேன். நான் எழுதியபோது இதே பிராமண சூழ்நிலையில் வேறுகதைகள் இருந்ததால் வேண்டாம் எழுதவே வேண்டாம் என்று தோன்றியது ஆனால் பதிவுக்கு தேர்ந்திருப்பதாக ஸ்ரீராம் எழுதினார். எங்கள் பிளாகிற்கு நன்றி. உங்கள் பாராட்டிற்கும் ஸந்தோஷம். மனதை லேசாக்கிக் கொள்ளுங்கள். அன்புடன்

    பதிலளிநீக்கு
  12. கொடுக்க முடியாதமன்னிப்பாக இருந்தாலும் கொடுக்கப்பட்டுவிட்டது குடும்ப நலனை பிள்ளைகளின் நலனை முன்னிறுத்தி எப்போதும் சீதைகள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் மனசுமையுடன் .....கணம் பொருந்திய கதைம்மா

    பதிலளிநீக்கு
  13. நெல்லைத் தமிழன் இந்தகாலத்தில் நான் இருந்தாலும் பழைய காலக் கதைகள்தான், அதன் நிகழ்வுகளே என் கற்பனையில் கலந்து விடுகிறது. அதுதான் உண்மை.
    பிரச்னைகள் வரும்போது அவர்கள் உண்டாக்கினதாக பிரச்சினை இருந்தால்தான் அவர்களைக் குறைகூற முடியும். கட்டுப்பாட்டிற்குள் பிள்ளைகள் இருக்கும் வயதில்லை அது. மேலும் பெற்றோர்கள் பிள்ளைகளின் நிழல்களை வேண்டுவோர். மௌனியாக்கி விடுகிறது அவர்களை.
    இப்போதுகூட சில பெண்கள் வசதியற்று கேட்கமுடியாமல், படிப்புக் குறைவால் தியாகிகளாக மாறும் ஸம்பவமும் இருக்கிறது. இக்கதை வெகுளிப்பெண் கேட்டகிரி இல்லையா. பாராட்டுதல்களுக்கு மிகவும் ஸந்தோஷம். இன்னும் நிறைய கதைகள் சொல்ல வேண்டும். அன்புடன்

    பதிலளிநீக்கு
  14. பூவிழி வாம்மா. கொடுக்க முடியாததையும் சில ஸமயம் தட்டிப் பறித்து விடுகிரார்கள். வயதுக்குப் பொருத்தமில்லாத விரக்தி. ஸகிப்புத்தன்மை. இதெல்லாம் இந்தக்கதையில் வர்ணிக்கப்படாதது. மொத்தத்தில் கௌரவம் ஸம்பந்தப்பட்ட யாவருக்குமாக என்று நினைத்திருக்கும் அந்த வெகுளிப்பெண். வாழ்ந்தும் காட்டியிருக்கிறதே! மனச்சுமையை கதை கொடுத்து விட்டது. இப்படியும் ஒரு கதை. மன்னிப்பு இப்படியும் உண்டுஎன்று நான் நினைத்தேன். நன்றி.அன்புடன்

    பதிலளிநீக்கு
  15. துளசிதரன் : காமாட்சி அம்மா தாங்கள் இந்த வயதிலும் க்ரியேட்டிவாகக் கதை எழுதுவதை நினைத்து நாங்கள் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்பதை அறிய முடிகிறது. அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். கதையின் முடிவு வியக்கத்தான் வைக்கிறது. செல்லமாக வளர்ந்த பெண் இதையும் தாங்கிக் கொண்டு இருந்திருக்கிறாளே என்று. இக்காலத்துப் பெண்ணாக இருந்திருந்தால் கண்டிப்பாக வெளியே நடந்திருப்பாள். மனம் வேதனைப்பட்டதென்னவோ உண்மை.

    கீதா: துளசியின் கருத்துடன், காமாட்சியம்மா கதை அருமையா எழுதியிருக்கீங்க. ஒரு வேளை மீனா துக்கமான சமயத்தில் அதுவும் தன் குழந்தை இறந்த சமயத்தில் அவள் கணவனுடன் இல்லாமல் போனது தவறு என்று அவள் மனதிலும் தோன்றியிருக்கும் இல்லையா. மிக முக்கியமான தருணம். தன் கணவனுடன் இருந்திருக்க வேண்டிய தருணம். அவனும் அக்குழந்தையின் தந்தையல்லவா... தன் தவறினால் விளைந்தது என்ற எண்ணம் கூட புகுந்தவீட்டை விட்டு வராமல் தடுத்திருக்கலாமோ. என்றாலும் மனது வேதனையுற்றதுதான்.இப்போதும் கூட செல்லமாக வளரும் பெண்கள் சிறு துன்பம் என்றாலும் கூட முணுக்கென்று பிறந்தகம் சென்றுவிடுகிறார்கள். என்றாலும் காமாட்சியம்மா கதையின் முடிவு வேதனைதான்...

    பதிலளிநீக்கு
  16. அருமையான கதை அம்மா...
    இப்படியான மன்னிப்புக்கள் கொடுப்பதும் பெறுவதும் சாதாரணமல்ல... அதிக சாத்தியமும் இல்லை... இதுபோல் வரங்கொடுத்த சிலரை பார்த்திருக்கிறேன்.

    வாழ்த்துக்கள் அம்மா.

    பதிலளிநீக்கு
  17. துளசிதரன், கீதா-மனதில் இருக்கும். அவள் இந்தஸமயம் கணவனை விட்டுப்போனது தப்பென்று. அந்தக் காலங்களில் இம்மாதிரி ஸமயம் பெண்களைப் பிறந்த வீட்டிற்கு அழைத்துப் போவதென்பது நடை முறையில் இருந்தது. எல்லா இடத்திலுமா தவறு நேருகிரது. இப்படி ஏதாவதொன்றுதான்
    கதைக்கருவாகிறது. இந்தக் கதையைப் படிப்பதற்கே கஷ்டமாக இருக்கிறது. அந்தக்காலத்தில் அசடோ,சமத்தோ எடுத்த முடிவில் உறுதியாக இருந்து, அவள் கௌரவம் எவ்வளவு உயர்ந்து விட்டது. லீகல் மனைவிக்கு எவ்வளவு கௌரவம்.
    என்மேலுள்ள அன்பினால் நீங்கள் புகழ்ந்துள்ளீர்கள். எண்ணங்களை கதையாக வடித்தால் எவ்வளவோ எழுதலாம். என்னால் முடிவதில்லை. வயதான காலங்களில் சிந்தனைதான் மனமுழுதும். மளமளவென்று இரண்டு கைகளாலும் டைப் செய்து பழகவில்லை. ஏதோ ஆள்காட்டி விரலினால் தானாகவே டைப் செய்து எழுதுகிறேன். ஒரு விரல் ஆதிக்கம். என் ஸுய புராணம் இது.
    இந்தக்காலப் பெண்களாக இருந்தாலும்,படிப்பு,வசதி இல்லாதபெண்களாக இருந்தால், இந்தக்காரணம் இல்லாவிட்டாலும் வேறு விதமாகத் துன்புறுகிரார்கள். வேலை பெண்களுக்கு அவசியம். வேதனை கதை. எல்லோரிடமும் மன்னிப்புதான் கேட்க வேண்டும். காமாட்சியம்மாள் கதை இப்படியா எழுதுவீர்கள். ஸந்தோஷமா முடிவு கொடுங்கள் என்று சொல்லாமல் சொல்லுகிறீர்கள் எல்லோருமே. நன்றி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  18. பரிவைசேகுமார் நீங்களாவது இதுபோல் வரங்கொடுத்த சிலரைப் பார்த்திருக்கிறீர்கள். இம்மாதிரியே இல்லா விட்டாலும், கணவரின் இஷ்டத்து அரசியுடன் சேர்ந்து எவ்வளவோ பெண்கள் வாழுகிரார்கள்.
    கொடுப்பதும்,பெறுவதும் கஷ்டம்தான்.கொடுக்காமலே கொடுத்து விட்டாற்போல வாழ்வது கூட இருக்கிறதே. ஏதோ ஒரு காரணம் பலமாக அவர்கள் மனதில் இருக்கும்.வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  19. வாங்கோD-D. ஸரியாகச் சொன்னீர்கள். தெய்வமனம்தான். இப்படியும் ஒரு கற்பனை. அன்புடன்

    பதிலளிநீக்கு
  20. மிக அருமையான எழுத்துநடை காமாட்ஷி அம்மா.... ஒவ்வொரு வசனமும் சம்பவத்தை நேரில் பார்ப்பதுபோல இருக்கு... மன்னிப்பை பற்றி எதுவும் சொல்லத் தெரிய இல்லை... சீதை எனில் ராமனை மன்னிக்கத்தானே வேணும் ஹா ஹா ஹா:)...

    பதிலளிநீக்கு
  21. கதையின் நடையே மனம் கவர்ந்தது.. கதாநாயகி மட்டும் வெகுளியல்ல, அவர் குடும்பமே வெகுளியோ? ஒரு வயதுக் குழந்தை இறந்து விட்ட துக்கம் தீர அழைத்துப் போய் என்ற இடத்தில் தான் கொஞ்சம் இப்படித் தோன்றியது... கைக்குழந்தை என்றால் சரி, அழைத்துப் போவது தான் நியாயம் என்று தோன்றியது......ஆனால் என் கருத்திற்கு பதில் //அந்தக் காலங்களில் இம்மாதிரி ஸமயம் பெண்களைப் பிறந்த வீட்டிற்கு அழைத்துப் போவதென்பது நடை முறையில் இருந்தது// கிடைத்து விட்டது!!
    அக்னியை வைத்திருந்த தர்ம பத்தினி!!

    பதிலளிநீக்கு
  22. யதார்த்தமான கதை பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  23. அதிரா என்ன பாராட்டிவிட்டு விட்டு விட்டீர்கள். ஸரி. ஸீதை என்றால் ராமனை மன்னிக்கணும் கதை பொருந்தவில்லையா. ஸீதைஸரி. ராமன் இப்படி இல்லை. ஏதோ ஒரு குறை ராமனுக்கும். அப்படி யோசித்துப் பாருங்கள். எங்கே ராமன்களெல்லாம் சண்டைக்கு வந்து விடப்போகிரார்கள் என்று உள்ளூர பயம்தான். கற்பனைக் கதைதானே. சற்று முன்னே பின்னே இருக்கும் இல்லையா. அன்புடன்

    பதிலளிநீக்கு
  24. @ காமாட்சி :

    உங்களது கதை பலவருடங்களுக்கு முன்னிருந்த ஒரு கூட்டுக்குடும்பத்தின் ஹாலில் கொண்டுபோய் வாசகனை உட்கார்த்திவைத்து பாரப்பா என்று காட்சிகளை விடுவிடுவென்று நகர்த்திவிட்டது. சில குடும்பங்களில் ஒரு சொல்லமுடியா மர்மம், சோகம் எப்படியோ காலப்போக்கில் கவிந்துவிடுகிறது. வகையாக மாட்டிக்கொள்வது ஒரு அப்பாவிப்பெண்தான். வாயைத் திறந்தால் ரஸாபாஸம். வாய்மூடி வாழ்ந்தால் மன அடுப்பில் நித்தியமாய்க் கொதிக்கும் துக்க ரஸம். என்ன செய்வது, நன்றாக வளர்க்கப்பட்ட குடும்பப்பெண்ணிற்கு தன் கௌரவம், குடும்ப கௌரவம் முக்கியம். அவர்களின் நிம்மதிதான் இங்கே பலிகடா. அத்தகைய அசாதாரண பொறுத்துப்போதல், அனுசரித்துப்போதல்தான் அவர்களையும் அவர்களது குழந்தைகளையும் கௌரவமான சமுக சூழலில் வாழவைத்துப் பாதுகாத்திருக்கிறது. துக்கம் என்பது ஒருவருக்குள் மட்டுமே அழுந்தி மறைந்து, மற்றவருக்குப் பரவாமல் நிறுத்தப்பட்டது. ‘குடும்பம்’ என்கிற மரியாதைக்குரிய சமூகக் கட்டமைப்புக்கு நல்ல பெண்களின் மறக்கமுடியாப் பெரும்பங்களிப்பு இது. தகதகக்கும் அக்னியை மனதில் கொண்டு, எல்லாம் சரியாக இருப்பதுபோல் நகர்த்தும் திடமனுஷிகள். புண்யாத்மாக்கள். இத்தகைய அம்மாக்களுக்குப் பிறந்த பிள்ளைகளும் நல்ல, திடமான மனிதர்களாக, அம்மா, அப்பாக்களாகவே உருவாகிறார்கள். துக்கமும், பெருமிதமும் கலந்த விசித்திரக் கலவையாக சில காலகட்டங்களில் வாழ்க்கை.

    மையப்பாத்திரமான இந்த அப்பாவிப் பெண்ணையே கதைசொல்லியாக்கி, சீராக கதைநடத்தி வாசகனைக் கட்டிப்போட்டுவிட்டீர்கள். நீட்டாமல், முழக்காமல் கச்சிதமாக முடித்ததற்குப் பாராட்டுக்கள் காமாக்ஷிம்மா.


    பதிலளிநீக்கு
  25. மிடில்க்ளாஸ் மாதவி வினாவும்,விடையுமாக நீங்களே எழுதிவிட்டீர்கள். கூட்டுக் குடும்பத்தில் பெண் துக்கத்துடன் உட்கார்ந்திருக்க முடியுமா, பெற்றவர்களுக்கு கண்மூடித்தனமான பாசம்தான் காரணம். ஏதோ காரணம். பெண்ணை அழைத்துப் போக. அப்படி எடுத்துக் கொள்ளுங்கள். அக்னியை வைத்திருந்த தர்மபத்னி. நெருப்புக்கணையை வீசாத தர்மபத்னிதான். என்கதை நாயகிக்கு நான்தானே ஸபோர்ட் செய்ய வேண்டும். ஸரியா. அன்புடன்

    பதிலளிநீக்கு
  26. அசோகன் குப்புஸ்வாமி நீங்கள் என்னை யதார்த்தவாதியாக்கிவிட்டீர்கள். கதை ஓரளவு மனதில் பட்டது எனக்கு. அன்புடன்

    பதிலளிநீக்கு
  27. காமாட்சி அம்மா அழகான தெளிவான இயல்பான நடையில் எழுதியிருக்கீங்க ..இதில் என்னனா யாருடைய நிஜ சம்பவத்தை கேட்ட்டதுபோல எனக்கு அந்த சந்தர்ப்பவாதி ராமன் மேலே கோபம் வருது ...இந்த ஹீரோ மட்டும் நிஜத்தில் இருந்து எங்க ஏரியா பக்கம் நடந்து போகட்டுமே ஒளிஞ்சிருந்து கல்லால் அடிப்பேன் .
    ஹ்ம்ம் என்னால் இந்த சீதை இந்த சந்தர்ப்பவாதி ராமனை மன்னித்ததை ஏற்றுக்கொள்ளவே முடியலை ..

    இது போன்ற சம்பவங்கள் நிறைய இடத்தில நடந்திருக்கு ..நிறைய சீதைகள் வாழ்க்கை தொலைத்திருக்காங்க .சில சீதைகள் போராடி மீட்டிருக்காங்க இன்னும் சிலர் மீனா மாதிரி பொறுத்து //எல்லா காரியங்களிலும் நான்தான் தர்மபத்னி. அறுபது , எண்பது எல்லா வைபவங்களும் நான்தான் //என்று தங்கள் மனதை தாங்களே ஆறுதல்படுத்தி கொண்டு வாழ்க்கையை நடத்தியிருக்காங்க ..முக்கியமா பெண்கள் வேலைக்கு செல்லாத சுயமாய் தன் கால்களில் நிற்காத காலகட்டத்தில் இவை ஆங்காங்கே நடந்திருக்கு ..நியாயப்படி மனக்கவலைன்னா தன மனைவி ஊருக்கு போய் அவரை சந்தித்து கவலையை பகிரணும் ஆறுதல் படுத்தியிருக்கணும் ..


    ஆனா அநேகமா இந்த கதை ராமனும் அந்த பெண்ணும் உலக மகா சந்தர்ப்பவாதிகள் :( சந்தர்ப்பத்தை யூஸ் செஞ்சிக்கிட்டாங்க மற்றொருவர் மனதை உடைத்ததை பற்றி துளியும் கவலைப்படாம ..
    மன்னிப்பதற்கு தெய்வ குணம் இருக்கணும் அது சீதைக்கிட்டே இருக்கு

    பதிலளிநீக்கு
  28. ஏகாந்தன் நீங்கள் எனக்குக் கதையை விவரித்து கண்ணில் தண்ணீரை வரவழித்துவிட்டீர்கள். உங்களின் ஒரு கதையை விவரித்ததுபோல உணர்ந்தேன். ஸொந்த மனுஷி அவள் கதையைச் சொல்வது போலிருந்தால் படிப்பவர்களுக்கு நம்பிக்கையும், அநுதாபமும் ஏற்படும் என்ற ஒரு எண்ணம் தோன்றியது. ராமனும் ஏதோ தப்பு செய்தாகணும். பல வருஷங்களுக்கு முன் ஆன கூட்டுக் குடும்பமானாலும் அறுபது,எண்பது எல்லா சாந்திகளிலும் கணவருடன் இருந்தவளுக்கு இது ஒரு வரப்ரஸாதம் அல்லவா. இப்படி மனது எழுதும்போது தோன்றிய திசைகளில் பயணித்தது. என் கதையைக்காட்டிலும் உங்களின் மதிப்புரை நன்று. கதைகள் எழுதும்போது சற்று உண்மை ஸம்பவங்களையும் சேர்த்து எழுதினால் எதுவோ ஒரு ரஸம் வரும் அதில். இக்கதையை படிக்கமட்டும் ஸ்ரீராம் அவர்களுக்கு அனுப்பினேன். ஜனவரிமாதம் என்னுடைய கதை ஒன்று பிரசுரமாகும் அன்று ஜெனிவா ஆஸ்ப்பத்திரி ஒன்றில் அட்மிட் ஆகி அந்த கதைக்கு பின்னூட்டம் எதுவுமே எழுதாத நிலையில் இருந்தேன். அந்தக்குறைதீர எங்கள் பிளாகில் இன்று என் கதை. எங்கள் பிளாக் ஸ்ரீராமிற்கு மிகவும் நன்றி. மற்ற ஆசிரியர்கட்கும். நான் அதிகம் மற்ற பிளாகிற்குப் போய் பின்னூட்டமிட முடிவதில்லை. எனக்குப் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் மிகவும் நன்றி. உங்களின் பாராட்டுகள் மன நெகிழ்ச்சியைத் தந்தது. தர்ம பத்னிக்கு இதையாவது அளிப்போம் என்ற எண்ணம் தான் கதையின் ஓட்டம். அன்புடன்

    பதிலளிநீக்கு
  29. அஞ்ஜு நீ சொல்வதெல்லாம் கரெக்ட். அந்தப் பெண்ணும் ஓல்ட் மாடல். தன் காலில் பெண்கள் நிற்க முடியாத ஒரு கால கட்டத்தில்தான் கதை ஆரம்பமாகி, காரணமில்லாமலே கணவனை கோர்ட்டிற்கு இழுக்கும் பெண்களின் கதைகளையும் படிக்கிறோம். ஒரு பாட்டி கதை எழுதினால் பழையகாலம் பளிச்சிடும். அவ்வளவுதான். அந்த மனிதருக்கும் வயதாகி இருக்கும். குளிர் பிரதேசம். உங்கள் ஊருக்கெல்லாம் வரமாட்டார். கல் பொருக்க வேண்டாம். மீனாவும் ரொம்ப யோசிக்கவில்லை. எனக்காக கதை என்று தள்ளிவிட்டுப்போ. கிருஷ்ணருக்கு குழந்தையாக இருந்தபோது யசோதை தாலாட்டுப் பாட்டு பாடும்போது ராமரின் கதை பாடினாளாம். ராவணன் சீதையை அபகரித்தான் என்று பாடியபோது குழந்தை, லக்ஷ்மணா எடு வில்லை என்றதாம் ராமனுடன் போர்புரிய . அம்மாதிரி நீயும் உணர்ச்சி வசப்படுகிறாய். இப்போது யாவரும் படித்த பெண்கள்தான். இம்மாதிரி கதை யாருக்கும் எழுத சான்ஸே இல்லை. தற்சமயம் இவ்வளவுதான். அன்புடன்

    பதிலளிநீக்கு
  30. / யசோதை தாலாட்டுப் பாட்டு பாடும்போது ராமரின் கதை பாடினாளாம். ராவணன் சீதையை அபகரித்தான் என்று பாடியபோது குழந்தை, லக்ஷ்மணா எடு வில்லை என்றதாம் ராமனுடன் போர்புரிய .//

    இதுவரை கேள்விப்படவேயில்லை இதை .நான்அறியா சம்பவம் :)
    பரவாயில்லை :) நான் கல் எடுக்க நினைச்சது சொன்னதும் நல்ல ஒரு சம்பவம் அறிய கிடைத்தது ஹாஹாஆ :)
    நன்றி காமாட்சி அம்மா :)

    ஆனா அக்கால பெண்கள் மன்னித்தும் கணவரை மனமுடைந்து போக வச்சிருப்பாங்க இதுபோல .

    பதிலளிநீக்கு
  31. @ Angelin :

    இந்தக் கதை ஒரு குறிப்பிட்ட காலத்தின், கட்டுப்பட்டியான சமூகச்சூழலில் நிகழ்கிறது என்பதை முதலில் உள்வாங்கிக் கொள்ளவேண்டும். பின் கதைக்குள் புகுந்தால், அந்த ஆம்பிளைக்காகக் கல் தேடவேண்டிய அவசியம் லண்டனில் நிகழாது!

    இங்கே அந்த ஆணின் செய்கை அபாரம் என வக்காலத்து வாங்கவில்லை. சரி தப்பையெல்லாம் தாண்டி வாழ்க்கை நம்மை நடத்துகிறது சில சமயங்களில் எனச் சொல்லவந்தேன்.


    பதிலளிநீக்கு
  32. அஞ்ஜு கிருஷ்ணர் கதையில் ராமர். இதை என்அப்பா ஸ்லோகத்துடன் அர்த்தம் நாங்கள் சிறியவர்களாக இருந்தபோது சொல்லியது. அன்புடன்

    பதிலளிநீக்கு
  33. @ஏகாந்தன் ஸார் :) புரிந்தது :)

    கல்லை திருப்பி பக்கத்து வீட்டு தோட்டத்தில் மெதுவா போட்டுட்டேன் :)

    பதிலளிநீக்கு
  34. ஏகாந்தன் ஸரியான வாக்கியம் உங்களுடையது. தப்பை எல்லாம் தாண்டி வாழ்க்கை நம்மை சிலசமயம் நடத்துகிறது. அன்புடன்

    பதிலளிநீக்கு
  35. நன்றி காமாட்சிம்மா !! அப்படியே கண் மூடி நினைத்துப்பார்த்தேன் குட்டி கண்ணன் //எடு வில்லைன்னு சொல்ற மாதிரி // soooo ஸ்வீட்

    நினைவுகளை பகிர்ந்ததற்கு நன்றிம்மா

    பதிலளிநீக்கு
  36. ராமன் வாலியை மறைந்து நின்று கொண்டானாம்.அது போல அஞ்சு ராமனை ஒளிந்து நின்று கல்லால் அடிக்க நினைக்கிறார்!

    தவறு செய்யாத ராமன் யார்? இப்படி அஞ்சுவை நினைக்க வைத்ததுதான் கதையின் வெற்றி.

    //யசோதை தாலாட்டுப் பாட்டு பாடும்போது ராமரின் கதை பாடினாளாம். ராவணன் சீதையை அபகரித்தான் என்று பாடியபோது குழந்தை, லக்ஷ்மணா எடு வில்லை என்றதாம் ராமனுடன் போர்புரிய .////

    நானும் இதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்!

    பதிலளிநீக்கு
  37. *கொண்டானாம் அல்ல, கொன்றானாம்..

    அறுபத்திலும், எண்பதிலும் உடன் நிற்கப்போவது நான்தான் என்று தன்னைத் தேற்றிக்கொள்ளும் பெண்ணின் பலவீனம்... அனுதாபத்தையும் கோபத்தையும் தூண்டி விடும் நல்ல இடம்.

    பதிலளிநீக்கு
  38. ஹாஆஹா :) இப்போதான் ஸ்ரீராம் பற்றி நினைச்சேன் :) அடுத்த செகண்ட் பின்னூட்டம் வருதே :)

    //நானும் இதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்!//

    நான் கல்லெடுத்ததால்தான் இந்த சம்பவம் அறிய கிடைச்சுது

    பதிலளிநீக்கு
  39. ஸ்ரீராம் உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. படித்துப்பாருங்கள் என்ற கதையை பிரசுரித்து அன்பு காட்டி விட்டீர்கள். உங்கள் ஆசிரியர் குழுமத்திற்கே நன்றி. உங்களில் யாரும் அபிப்ராயம் சொல்லவில்லை. எனக்கு ஸரிவர பதில் எழுதும் வகை போதவில்லை.அதை முதலில் கற்க வேண்டும்.
    யாவருக்கும் நன்றி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  40. காமாட்சி அம்மா.. உங்களுக்கா பதில் சொல்லத் தெரியவில்லை? அழகாய், அருமையாய், பொறுமையாய் ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லி இருக்கிறீர்கள். ஒவ்வொரு வரியிலும் உங்கள் அனுபவ முதிர்ச்சி பளிச்சிடுகிறது.

    பதிலளிநீக்கு
  41. ஸ்ரீராம் உங்களுக்கு நன்றி கூறி எழுதின பிறகு உங்கள் கமென்ட் பார்த்தேன். என்ன கிருஷ்ணர்கதை உங்களுக்கும் புதிதா. ராமர்னு ஒருராஜா இருந்தார். அவர் மனைவி சீதை. யசோதை கதையாக பாட்டுப்பாட உம் கொட்டுகிறதாம் குழந்தை கிருஷ்ணா. அப்பா வார்த்தைங்கிணங்க ராமர் வனத்தில் பஞ்சவடியில் தங்கி இருக்கிரார். அந்நேரத்தில் ராவணன் சீதையை கடத்துகிறான் .தூக்கத்திற்காக கதை சொல்லும் யசோதையை மீறி.உம் கொட்டுவதை நிறுத்திவிட்டு குழந்தை லக்ஷ்மணா வில் எங்கே எடு எடு என்றதாம். இப்படியாக கதையை முடித்து அர்த்தம் சொல்லுவார் என் அப்பா! எவ்வளவு மலரும் நினைவுகள் பாருங்கள். அன்புடன்

    பதிலளிநீக்கு
  42. @ காமாட்சி:

    அஞ்சு கல்லெடுக்க, உங்களுக்கு ’எடு வில்லை!’ என்று தூக்கம் கலைந்த குஞ்சுக் கண்ணனும், அந்த ஸ்லோகமும், அதை ரஸிக்கும்படிச் சொன்ன உங்கள் அப்பாவும் வரிசையாக நினைவுக்கு வந்தார்கள். எங்களுக்கு இன்னுமொரு கதை இலவச இணைப்பாகக் கிடைத்தது.

    எல்லாப் க்ரெடிட்டும் அஞ்சுவிற்கே !

    பதிலளிநீக்கு
  43. ஏகாந்தன் ஸார் .மிக்க நன்றி :)
    புராண இதிகாச சம்பவங்கள் சொல்லும்போது இப்படி சொன்னா நல்லா மனசில் பதிஞ்சிடும் .
    அவங்க எழுதினது அவ்ளோ இண்ட்ரஸ்டிங்கா இருந்தது வாசிக்க


    பதிலளிநீக்கு
  44. காமாட்சியம்மா.... ஒற்றை விரலால் டைப் செய்து இவ்வளவு பேருக்கும் பதிலளித்திருக்கிறீர்களே... வாவ்... பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  45. எனக்கு என்னவோ இம்மாதிரி நடக்க வாய்ப்பே இல்லை என்றே தோன்றுகிறது இருந்தாலும் அதை நன் யார் சொல்ல. கதையும்கற்பனையும் நம்பும்மாதிரி இல்லை. மன்னிக்க வேண்டும் மாறுபட்ட கருத்துக்கு

    பதிலளிநீக்கு
  46. கதையின் சுமை படித்த பின் கூடுவது கருத்துக்கும் எழுத்துக்கும் வெற்றி. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  47. ஏகாந்தன் அஞ்சு கல்எடுக்க டக்கொன்று ராமோநாம பபூவ, ஹும் என்று அந்தத் தாலாட்டுஸ்லோகம் மனதில் வந்தது. எடு வில்லை என்றது எவ்வளவு அழகாக ஒத்துப்போகிறது. கிரெடிட் அஞ்ஜுவிற்கும்,உங்களுக்கும் பங்கு உள்ளது. அன்புடன்

    பதிலளிநீக்கு
  48. டக்கென்று வாசிக்கவும். அன்புடன்

    பதிலளிநீக்கு
  49. அஞ்சு எடு வில்லை கல்லை பக்கத்து வீட்டில் போட்டுவிட்டு ரஸித்திருக்கிராய். அன்புடன்

    பதிலளிநீக்கு
  50. நான் இப்படிதான் எப்பவுமே. இதுவே வழக்கமாகி விட்டது நெல்லைத்தமிழன். அன்புடன்

    பதிலளிநீக்கு
  51. G.M பாலசுப்ரமண்யம். நீங்கள் பழைய கதைகள் கேட்பதுண்டா. நடக்காத விவரம் இல்லை இது. ஸம்பவங்கள் சிலது முன்னர்,பின்னர் இருக்கலாம்.
    அபூர்வமாகவும் இருக்கலாம். என்மாதிரி வயதானவர்களுக்கு இம்மாதிரி கேட்ட கதைகள் உண்டு. நம்புவது,நம்பாதது ஸொந்த அபிப்ராயம். பலபேருக்கு இம்மாதிரி அபிப்ராயம் ஏற்படும். கரெக்ட். கேள்வியேபடாத ஒரு விஷயமாகக்கூட இருக்கலாம். நீங்கள் யார் என்றெல்லாம் நான் கேட்கமாட்டேன். உங்கள் கருத்தையும் வரவேற்கிறேன். அன்புடன்

    பதிலளிநீக்கு
  52. அப்பாதுரை, கதையின் கனம் கூடுகிறது. உண்மைதான். பாராட்டுகளுக்கு மிகவும் நன்றி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  53. காமாட்சி அம்மா...மனம் கனக்கும் கதை..

    நேற்று முதலில் போனில் படித்தேன் ஒன்னும் புரியவில்லை..தூக்க கலக்கத்தில் படித்து இருப்பேன் போல...

    இன்று அதான் திரும்ப படித்தேன்...உண்மையில் மனம் கனக்கிறது..எவ்வளவு எளிதாக அவள் வாழ்வின் முறையை மாற்றி விட்டார்..அந்த கணவர்....

    கதைதான் என்னினும் கற்பனையில் விரியும் போது ...கஷ்டமாகவே இருக்கிறது..

    பதிலளிநீக்கு
  54. அனுராதா ப்ரேம்குமார்...இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று யோசித்திருப்பீர்கள். கதைதான். சற்று ஏறத்தாழ நடந்தும் இருக்கலாம். கதையாகவும் இருக்கலாம் என்று நினைத்துக் கொள்ளுங்கள். இந்தக்கதையின் ஓட்டமே கனக்க வைத்து விட்டது. அவ்வளவுதான். மறந்து விடுங்கள். அன்புடன்

    பதிலளிநீக்கு
  55. கடைசியில் அக்கினியையும் கொடுத்துவிட்டாள். .///////////வாயைத் திறந்தால் ரஸாபாஸம். வாய்மூடி வாழ்ந்தால் மன அடுப்பில் நித்தியமாய்க் கொதிக்கும் துக்க ரஸம். என்ன செய்வது, நன்றாக வளர்க்கப்பட்ட குடும்பப்பெண்ணிற்கு தன் கௌரவம், குடும்ப கௌரவம் முக்கியம். அவர்களின் நிம்மதிதான் இங்கே பலிகடா. அத்தகைய அசாதாரண பொறுத்துப்போதல், அனுசரித்துப்போதல்தான் அவர்களையும் அவர்களது குழந்தைகளையும் கௌரவமான சமுக சூழலில் வாழவைத்துப் பாதுகாத்திருக்கிறது////////@ ஏகாந்தன்.நன்றி.

    இது அன்றைய நடைமுறை என்று சொல்லி முடிக்க விரும்பவில்லை. இன்றும் எங்கயோ நடந்து கொண்டுதான் இருக்கிறது. அன்பு காமாக்ஷிமா, அந்த உள்ளம் எப்படி நொந்திருக்கும். கணவன் அருகாமை கிடைக்காமல், வெந்த உடல் மீண்டும் எரிதணலில் போகப் போகிறது அவ்வளவுதான்.

    இன்று இந்த நிலைமையில் வெளிவரும் பெண்கள் 10 சதவிகிதம் இருப்பார்கள்.
    மற்றவர்கள் குழந்தைகளுக்காகக் கௌரவத்துக்காகச் சகித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

    எத்தனையோ தியாகிகள்.மனைவி மட்டும் இல்லை. கணவனும் தியாகம் செய்த நிகழ்வு எனக்குத் தெரியும். மூழ்கிவிட்டேன் உங்கள் கதையில். இனியாவது அவள் சுகம் பெறட்டும்.

    பதிலளிநீக்கு
  56. கதைகள் அதிகம் படிக்காத நானே இக் கதையில் ஒன்றிப் போனேன்!எழுதிய சாகோதரிக்கும் உங்களுக்கும்
    நன்றி!

    பதிலளிநீக்கு
  57. வல்லிம்மா, அன்றையகாலட்டத்தில் இப்படியெல்லாம் கூட நடந்தது. மன்னிப்பதற்கு இவையெல்லாம் கூட இருந்தது. இன்றைய காலகட்டத்தில் நிகழ்ச்சிகள் மாறுபட்டதாக இருக்கிறதே தவிர மன்னிப்புகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. உங்கள் அபிப்ராயம் முற்றிலும் ஸரி. உங்கள் பின்னூட்டத்தை நான் எதிர்பார்த்தேன். எவ்வளவு அலசமுடியுமோ அவ்வளவு அலசல்கள் இக்கதைக்கு. மன்னிக்கும் ராமன்களும் உண்டு. உண்மைதான். அன்புடன்

    பதிலளிநீக்கு
  58. புலவரய்யா கதையை வெளியிட்ட ஸ்ரீராமிற்கு, அவர்கள் குழுவிற்குதான் நன்றியை நான் சொல்லவேண்டும். உங்களுக்கும் என்நன்றி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  59. அருமையான உண்மைகதையை சொல்வது போல் இருந்தது.உங்கள் தொட்டில் குழந்தையை மிகவும் படித்தேன்.

    அதில் எவ்வளவு உண்மை சம்பவங்கள் கேட்டது, பார்த்தது எல்லாம். அது போல் தான் இந்த கதையும் என்று நினைக்கிறேன்.
    என் கணவரின் அத்தை இது போன்ற கதைகளை எங்களுக்கு சொல்லி இருக்கிறார்கள்.

    //அவர் குலுங்கக் குலுங்க அழுகிறார். எல்லோரும் அர்த்தம் பொதிய ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். எண்ணங்கள் மனதில் படமாக விரிகிறது.//

    கதை முடிவை படித்தவுடன். எனக்கும் எண்ணங்கள் மனதில் படமாய் விரிந்தது. அழகான அருமையான எழுத்து.

    பதிலளிநீக்கு
  60. என்னுடைய பிளாக் சொல்லுகிறேனில் எழுதிய தொட்டில்க்கதைகளையும்,படித்ததை ஞாபகப்படுத்திக் கொண்டு, அதுபோல்தான் இதுவும் என்று நினைப்தாக எழுதியுள்ளீர்கள். இது கைச்சரக்கு,கற்பனை,உண்மை எல்லாம் சேர்ந்ததுதான். வல்லிம்மா,நீங்கள் யாவரும் இம்மாதிரி சாயலில் கேள்விப்பட்டிருப்பீர்கள். முடிவு வேண்டுமானால் நாம் இஷ்டப்பட்ட மாதிரியே கிடைக்கும் என்று சொல்ல முடியாதே தவிர கற்பனையில் எது வேண்டுமானாலும் கிடைக்கலாமே! உங்கள் பாராட்டிற்கு மிகவும்நன்றி.அன்புடன்

    பதிலளிநீக்கு
  61. எதையும் சகித்துக் கொண்டு வாழ்ந்த பெண்களின் வரிசையில்.. முடிவில்லாமல் தொடரும் கதைகள். அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  62. ராமலக்ஷ்மி உங்களை யூத் விகடனில் ஆரம்பித்து பின்னும் பார்த்து வருகிறேன். அருமையாகஎழுதுபவர் நீங்களும். என்கதையில் நடுவில் நடப்பது வெவ்வேறு மாதிரியாகக் கூட நடந்திருக்கலாமல்லவா. பிறந்த குடும்பம்,தன்குழந்தைகள், யாவரின் கௌரவமும் காக்க வேண்டும் என்ற துறவர நிலை கடினமான ஒன்றுதான். ஸகஜமாக ஏற்றுக்கொண்டு, கதையை எல்லோர் மனதிலும் ஏற்றிவிட்ட கதாநாயகி. இன்னும் எவ்வளவோ நிலைகளை ஸந்தித்திருப்பாள் இந்தக் கதாநாயகி. உங்கள் பாராட்டுதலுக்கு மிகவும் நன்றி.அன்புடன்.

    பதிலளிநீக்கு
  63. கோமதி அரசு அவர்களுக்கு எழுதிய பின்னூட்டத்தில் வல்லிம்மா என்று அழைத்திருக்கிறேன். ஓ இன்று இந்தப் பிழை தெரிந்தது. கோமதி அரசு அவர்களுக்கு மிகவும் நன்றி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  64. ராமலக்ஷ்மிக்கு எழுதிய பின்னூட்டம் ஒன்று இதற்குமுன் இருக்குமே.அன்புடன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!