வெள்ளி, 23 நவம்பர், 2018

வெள்ளி வீடியோ : தீபங்கள் பேசும் .... இது கார்த்திகை மாசம்...


இன்று திருக்கார்த்திகை.  அதற்குப் பொருத்தமாக ஒருபாடல்.

பாடல் காட்சியில் மூன்றாவது நிமிடம் வரும் ஒரு திகில் காட்சியால் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் சிலருக்கு வரலாம்.


தேவதை என்கிற படத்தில் இடம்பெற்ற பாடல்.  படம் நாசர் டைரகஷனில் வெளிவந்த படம்.  


41 கருத்துகள்:

  1. இன்றைய வெள்ளிக்கிழமை வீடியோவுக்கான பாட்டுத் தான் நேற்று வாட்சப்பில் பகிரப்பட்டதோ என நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கீதா அக்கா.. இல்லை.. இரண்டுநாட்களாக ஹிந்திப் பாடல்களில் மூழ்கிக் கிடக்கிறேன்... ரபி, கிஷோர் என்று.. அதை எல்லாம் இங்கு பகிர முடியாதே.. நிறையபேர் கேட்க மாட்டார்கள்... இப்ப மட்டும்? என்கிற கேள்வி வருகிறதா?!!

      நீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  3. கார்த்திகை அதுவுமாக அவல் பொரி, சர்க்கரை கிடைக்கும் என்று பார்த்தால்!?..

    பதிலளிநீக்கு
  4. நேற்று இரவு 9:30 ல் இருந்து மிதமான மழை பெய்து கொண்டிருக்கிற்து....

    இப்போது 3:35... போய் டீ குடிக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
  5. என்னமோ வீடியோவில திகில் காட்சியாமே!....

    அதான் ஒருத்தரையும் காணோமா!?...

    நானும் அந்தப் பக்கமே போகலை!...
    காத்து கருப்பு அடிச்சிட்டா!...

    பதிலளிநீக்கு
  6. சந்தோஷமான மன நிலையில் பாடும் மணமகளை இடையில் புகுந்து திடீர் திகில் கொடுக்கும் திலீப் யாரோ ?

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்.
    இனிய திருக்கார்த்திகை நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. இன்று திருக்கார்த்திகை. அதற்குப் பொருத்தமாக ஒருபாடல்.//
    பாடல் கேட்டேன்.

    முன்பு வானொலியில் திருக்கார்த்திகை என்றால் வைக்கும் சினிமா பாடல் "கார்த்திகை விளக்கு திருக்கார்த்திகை விளக்கு கந்தவேலன் கடம்பனுக்கு கார்த்திகை விளக்கு" பாட்டு வைப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  9. கார்த்திகைக் களிப்பு அனைவர் மனதிலும் பரவுமாக!

    பதிலளிநீக்கு
  10. பாடல் பரவாயில்லை. திருக்கார்த்திகைக்கு ஏற்ற பாடல்தான்....

    திரைப்பாடல் நடனத்தின்போது, கதாநாயகியைத் தவிர துணை நடிகைகள் ஆடுவதைக் கவனித்தது உண்டோ? அவர்களில் எத்தனைபேர் கதாநாயகி கனவைத் தொலைத்தவர்களோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா...

      அழகாக முகபாவம் காட்டி மிக நளினமாக ஆடும் வசீகரமான இளம் பெண்களை -

      கதாநாயகிக்குப் பின்னால் பார்த்திருக்கிறேன்...

      பாவப்பட்டவர்கள்..
      இறைவன் நல்வாழ்வு கொடுக்கட்டும்...

      நீக்கு
    2. தமிழரே இந்தப்பாடல் மட்டுமில்லை எந்தப்பாடலாக இருந்தாலும் நான் அவர்களை மட்டுமே பார்த்து, அவர்களின் கனவு நசுக்கப்பட்டு விட்டதை நினைத்து வருந்துவேன்.

      காரணம் அவர்களில் பெரும்பாலானோர் தமிழச்சிகள்.

      நாயகிகளை நான் பார்ப்பதே கிடையாது அது உங்கள் கனவுக்க(ன்)னி அனுஷ்க்காவாக இருந்தாலும்கூட...

      காரணம் இவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தில் சுலபமாக சம்பாரித்து விடலாம் என்று கணக்குப் போட்டு காலை வைத்தவர்கள்.

      நீக்கு
    3. என்னது..
      கனவுக் கனியா!...

      இது நல்லாயிருக்கே!...

      நீக்கு
    4. துரை சார்... கனவுக்கன்னினா அதுக்கு காலாவதி கிடையாது. கனவுக்கனி என்றால் காலாவதி நாள் (Expiry Date) உண்டு. அதை வைத்து கில்லர்ஜி சொல்றாரோ என்னவோ...

      கில்லர்ஜி... என்னை அனுஷ்கா மத்த்துக்கு மாற்ற முயலாதீர்கள். நான் "தமன்னா" மத்த்தைச் சார்ந்தவன் (இப்போ வரை)

      நீக்கு
    5. 'உள்'அர்த்தத்தை சரியாக புரிந்து கொண்டீர்கள். ஹா.. ஹா.. ஹா..

      நீக்கு
    6. //கதாநாயகியைத் தவிர துணை நடிகைகள் ஆடுவதைக் கவனித்தது உண்டோ? //

      நிறைய.

      நாயகி என்றில்லை. டூயட் பாடல்களில் கூட முக்கிய நடிகர்கள் ஆடுவதை விட்டு மற்றவர்கள் எப்படிச் செய்கிறார்கள் என்றும், இரண்டு பேர் பாடும் காட்சிகளில் வாயசைக்கும் ஒருவரைத்தவிர இன்னொருவர் என்ன பாவம் காட்டுகிறார் என்றும் பார்ப்பதுண்டு.

      நீக்கு
    7. நானும் அந்த லல்லா லுல்லூஊஊஊஊ பாடி தேவதைகளைப் போல வரும் பின் அணியினரைத்தான் நிறைய கவனிப்பேன்....இந்த வீடியோவில் கூட ஒரு பெண் க்ளோஸப்பில் வருவார் கொஞ்சம் புஷ்டியாக இருந்தாலும் நன்றாக இடுப்பை வளைத்து ஆடுகிறார்...அதே போல சில குத்துப் பாடல்களில் வரும் இப்படியான பெண்களில் ஒருவர் குறிப்பாக பிரபு தேவா வரும் பாடல்களில் ஒரு பெண் செமையா ஆடுவார்...

      அது போல ஹீரோயினின் தோழிகளாக வருபவர்கள், ஹீரோக்களின் தங்கைகள் என்று வ்ருபவர்கள்கூட நல்ல லட்சணமாக நடிப்பவர்களும் கூட...ஆனால் பாவம் இவர்கள் எல்லோருமே..

      ஸ்ரீராம் சொல்லிருப்பது போலும் கவனிப்பேன்.....

      கீதா

      நீக்கு
  11. இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.
    இந்தப் படத்தில் வரும் நாசர், அந்தப் பெண்ணைத்தூக்கிப் போக வருவார். போன ஜன்ம இந்த ஜன்மத் தொடர்.

    எனக்கு கார்த்திகை நாளேன்று ஏற்றூக தீபம் பாட்டுக் கேட்கப் பிடிக்கும்.

    ஆமாம் இந்திப் பாடல்கள் பதிவு செய்தால் யாரும் எட்டிக்கூடப் பார்க்க மாட்டார்கள் ஸ்ரீராம்.

    நான் பதிவதில்லை என்று தீர்மானம் செய்திருக்கிறேன். எல்லோர் சுவையும் ஒன்றில்லை அல்லவா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வல்லிம்மா. ஆமாம்.. தமிழ் பாடல்களே ஆயினும் நிறையபேர் கேட்க மாட்டார்கள்.

      நீக்கு
  12. நல்ல பாடல்... திரைப்படமும் நன்றாக இருக்கும்...

    பதிலளிநீக்கு
  13. எனது பள்ளிக்கால பாடல் இது ...அப்பொழுது பள்ளியில் நடக்கும் விழாக்களில் இந்த பாடலுக்கு தான் நடனம் ஆடுவார்கள் தோழிகள் ...


    எனக்கும் பிடிக்கும்...

    பதிலளிநீக்கு
  14. படம்பார்க்கும் ஆவல் வரவில்லை

    பதிலளிநீக்கு
  15. இனிய பாடல். முன்பே கேட்டிருக்கிறேன் என்றாலும் மீண்டும் முழுவதும் கேட்டேன்.

    தீபத்திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  16. இனிய பாடல் கேட்டேன் ரசித்தேன் நன்று

    பதிலளிநீக்கு
  17. இந்தப் பாட்டு கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம்....நல்ல பாட்டு இதே போல மெட்டுல வேற பாட்டு நினைவுக்கு வந்துச்சு...வழக்கம்ப்போல பாட்டு தெரியலை ஹிஹிஹிஹி...

    ஒரு பேய் வருது...இந்தப் படம் பார்த்ததில்லை ஆனா போர்னு கேள்விப்பட்டேன்...

    இந்தப் பாட்டு கேட்டதும் விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம் பாட்டு நினைவுக்கு வந்துச்சு...

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!