சனி, 2 மார்ச், 2019

லட்சியம் உயர்வாய் இருந்தால் மேலே மேலே உயரலாம்....


1)  லட்சியம் உயர்வாய் இருந்தால் மேலே மேலே உயரலாம்.  படிப்படியாய் உயர்ந்த சப்-கலெக்டர் கவுசல்யா.  



2)  திருப்பூர் மாநகராட்சி பள்ளி மாணவியின், 'காயின் வெண்டிங் மிஷின்' கண்டுபிடிப்புக்கு, 'கூகுள்' நிறுவனம், சிறப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

எட்டாம் வகுப்பு மாணவி தர்ஷினி.






3)  வீரம் என்பது....





34 கருத்துகள்:

  1. இனிய மகிழ்வான காலை வணக்கம்! எல்லாருக்கும்! ..
    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹை இன்று இளைஞிகளின் படமாக இருக்கே மார்ச் 8 வெள்ளியாகிப் போனதால் இன்றோ!!!!


      கீதா

      நீக்கு
    2. இனிய மகிழ்வான காலை வணக்கம் கீதா ரெங்கன்.

      நீக்கு
  2. ஸ்ரீராம் திருப்பூர் செய்தி ரொம்பவே வருத்திவிட்டது. தமிழ்நாடு மோசமாகிக் கொண்டே போவது போல் தெரிகிறது. அப்பெண்ணிற்குப் பாராட்டுகள். யாரேனும் ஒருவர் இப்படி முன்வந்தாலாவது உணர் வேண்டியவர்கள் உணர்வார்களோ?

    கீதா

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். கலெக்டர் கௌசல்யாவுக்கும், சயண்டிஸ்ட் தர்ஷினிக்கும், பெண் போராளி கவிதாவுக்கும் அனேக வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. மார்ச் மாதம் என்பதால் பெண்கள் பற்றிய செய்திகளுக்கு முன்னுரிமையா?
    கௌசல்யா பற்றி முன்பே படித்திருக்கிறேன். மற்ற செய்திகள் புதிது. திருப்பூர் பெண் திகைக்க வைக்கிறார்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    இன்றைய பாசிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை. மூன்றுமே ஒரே ஊரான திருப்பூரின் நல்ல செய்திகள் இன்றைய இளம் பெண்களின் தன்னம்பிக்கையை காட்டுகிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. மூன்று பேருக்கும் வாழ்த்துக்கள்.
    உண்மையில் போலீஸ் தன்னுடைய கடமையை ஒழுங்காக செய்திருந்தால், இப்படி ஒரு குடும்பப்பெண் நடுத்தெருவுக்கு வந்து போராட வேண்டியிருக்காது.

    பதிலளிநீக்கு
  7. தர்ஷினிக்கு வாழ்த்துகள்!

    சில்லறை வெண்டிங்க் மெஷின் ஏற்கனவே இருக்கிறது அல்லவா? அப்படித்தான் நினைக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. முத்தான மூவரையும் வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  9. கௌசல்யா ஒரே இரவில் சாதனை என்றில்லாமல் படிப்படியாக ஒவ்வொரு படியாக உழைத்து ஏறி வெற்றி கண்டமைக்கு வாழ்த்துகள்!! இந்த வெற்றி அவரை வாழ்வில் இன்னும் உயர்த்தும். நான் அறிந்த வரையில் படிப்படியான உழைப்பு வெற்றி என்பது நிரந்தரமானது என்பது...மீண்டும் கௌசல்யாவிற்கு வாழ்த்துகள்!

    இன்று அனைத்துச் செய்திகளும் திருப்பூர்!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. இதழ்களில் படித்தேன். தற்போது ஒட்டுமொத்தமாக பார்க்கும் வாய்ப்பு. நன்றி.

    பதிலளிநீக்கு
  11. இத்தளத்திற்கு வரும் நண்பர்கள் அல்லது தள ஆசிரியர்கள் யாரேனும் quora.com அல்லது ta.quora.com தளத்தில் கேள்விகளுக்கு விடை கூறுபவர்களாக இருக்கிறீர்களா? இருந்தால் தொடரலாம் என்ற ஆவல் தான்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  12. என்றைக்கு கட்சியினருக்கும் அரசு ஊழியர்களுக்கும் வேறுபாடு இன்றிப் போனதோ அன்றிலிருந்தே சீர்கேடுகள் மலிந்து போயின...

    கவிதா வேண்டுமானால் அவரது கணவனைத் தான் கண்டித்துத் தடுக்க வேண்டும்.... மற்றவர்களை அல்ல..

    ஏனெனில் மக்கள் குடிக்க வேண்டும்... அதனால் அரசு கஜானா நிறைய வேண்டும்.... அதற்காகத் தான் அரசு ஊழியர்கள்...

    முன்பெல்லாம் தவறு ஒன்றை ஆராயும் போது அவன் படித்தவனா இல்லையா என்று ஆராய்வார்கள்....

    கற்றறிவில்லாத மூடன் என்ற அளவில் தண்டனை இருக்கும்...

    இன்றைக்கு அப்படி ஏதாவது கேள்விப்பட்டிருக்கிறோமா?..

    கவிதா நடுத்தெருவில் உட்கார்ந்திருப்பது கொடுமை....

    ஏனைய பெண்கள் ஏன் துணைக்கு வரவில்லை?..

    கணவன் வீட்டுப் பெண்கள் கூட கண்டிக்க முன் வரவில்லையா?...

    இதற்கு முன் மதுவை எதிர்த்துப் போராடிய பெண்களை போலீஸ் தாக்கியதை யாரும் மறக்க வில்லை..

    நமக்குக் காது கிழியும்..
    அவர்களுக்கு விருது கிடைக்கும்...

    கவிதா இந்த அளவில் தப்பியது புண்ணியம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை செல்வராஜு சார்.... போன எலெக்‌ஷனில், 'மதுவை ஒழிப்போம்' என்று சொன்ன கட்சிக்கெல்லாம் மக்கள் வாக்கு கிடைக்கலையாமே...

      ஏன் அரசைக் குறை சொல்லணும்? எல்லாக் கடைகளிலும் பாலிடால் விக்கறான். இவங்க அதை வாங்கிக் குடிக்கவேண்டியதுதானே.... அரசு, அவங்களுக்கு எது நல்லதோ அதைச் செய்யும். (எந்த அரசு வந்தாலும்). மக்கள் மதுக்கடை ஓனர்களுக்கும் அந்தக் கட்சிகளுக்கும்தான் வாக்களிப்பேன் என்று சொல்லும்போது, கவிதா போன்றவர்களெல்லாம் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதுதான் நல்லது.

      நீக்கு
    2. எனது கருத்தின் சாரமும் இது தான்...

      ஆனாலும் அரசைக் குறை சொல்லாமல் வேறு யாரைச் சொல்வது?...

      மந்தையின் ஆடுகள் அப்படியும் இப்படியும் ஓடத்தான் செய்யும்...

      மேய்ப்பவனின் வேலை என்ன?..

      ஆடுகளை ஒழுங்கு செய்வது தானே...

      நீக்கு
  13. அனைத்து நல்ல உள்ளங்களையும் பாராட்டுவோம்.

    பதிலளிநீக்கு
  14. தமிழ்நாடு முழுவதும் பல கவிதாக்கள் திரண்டாலும்... ம்ஹிம்... கேடு கேட்ட அரசு இருக்கும் வரை என்ன செய்வது...?

    தர்ஷினி அவர்களின் ஆர்வத்திற்கும், கவுசல்யா அவர்களின் விடாமுயற்சிக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  15. நேற்று நம் இந்திய ராணுவவீரர் அபிநந்தன் வந்ததில் மிகவும் மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
  16. போற்றப்பட வேண்டியவர்கள் பதிவின் தலைப்பு ஏனோ என்னை இவ்வாறாக நினைக்க வைத்தது உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா

    பதிலளிநீக்கு
  17. " மகளிர் தினம் " இப்படிப்பட்ட பெண்மணிகளால்தான் பெருமையடைகிறது! கவிதா, தர்ஷிணி, கவுசல்யாவிற்கு வாழ்த்துக்களும் பூங்கொத்துக்களும்!!

    பதிலளிநீக்கு
  18. ஒரே ஊரிலிருந்து மூன்று பெண்களின் சாதனைகள். கௌசல்யா பற்றி ஏற்கெனவே படிச்ச்சேன். காசு வென்டின் மிஷின் ஏற்கெனவே உண்டு போல! கவிதா பற்றி இப்போத் தான் படிச்சேன். அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  19. பெண்கள் தினம் நெருங்குகிறது என்பதால் பெண்கள் பற்றிய பாசிட்டிவ் செய்திகளோ?

    மூன்று திருப்பூர் பெண்களுமே பாராட்டிற்குரியவர்கள். சொந்த உழைப்பின் படிகளில் ஏறும் கௌசல்யாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தன்னந்தனியே தைரியமாகப் போராடிய வீரப்பெண் கவிதாவின் - கவிதாவைப் போன்ற பல பெண்மணிகளின் வாய்ஸ் தானே அவர்? அவரது வார்த்தைகளும் வேதனைகளும் கண்டுகொள்ளப்பட்டு டாஸ்மாக் ஒழிக்கப்படுமா? அதில் சொல்லப்பட்டிருக்கும் மாமூல் அதிகாரிகளை நினைக்கும் போது அப்பெண் - மற்றும் அவரைப் போன்ற பெண்கள் - பாவம் என்றே தோன்றுகிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  20. எங்கள் ப்ளாக் ஆசிரியர்கள் மாலை 6.45-க்குள் சாப்பிட்டுவிட்டு, இரவு ஏழு மணிக்கு முன்பே தூங்கிவிடுபவர்கள் என்பதாய்த் தெரியவருகிறது. ராத்திரி நேரத்தில் கேள்விகள், கமெண்ட்டுகள் எழுதினால் அதனை நாமே அந்த இரவிலேயோ அல்லது அடுத்த நாளிலோ திரும்பிவந்து படித்து மகிழவேண்டியதுதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் நினைத்துக் கொண்டிருப்பதை நீங்கள் சொல்லி விட்டார்கள்....

      இருந்தாலும், நம்மைப் போல ராக்கோழிகளா என்ன?..

      நீக்கு
    2. நன்றி திருமிகு ஏகாந்தன் ஐயா...

      // லட்சியம் உயர்வாய் இருந்தால் மேலே மேலே உயரலாம்.... // இந்த தலைப்பிற்கு அபிநந்தன் பற்றிய செய்தி அல்லவா முதலில் இருக்க வேண்டும்...?!

      நீக்கு
    3. நீங்கள் சொல்வது உண்மை. அபிநந்தன் வெறும் இந்தியப் பெயரல்ல. வீரர்களின் பட்டியலில் தென்படும் பெயர்களில் ஒன்றல்ல. அவரொரு சகாப்தம். அதிநவீன F-16 Falcon-ஐ விரட்டிவிட்டு கடமையைச் செய்தோம் எனத் திரும்பாமல், இன்னும் ஒருபடி மேலே சிந்தித்துத் துரத்திப்போய்ப் போட்டுத்தள்ளி அசரவைத்த முதல் இந்தியப் போர் விமானி. பாகிஸ்தானுக்கு வயத்துப்போக்கு வந்ததோடு மட்டுமல்லாமல் அமெரிக்காவுக்கும் (F-16 அவர்களது prestigious war plane) பெரிய அவமானமாகிவிட்டது இந்த நிகழ்வு! மாறாக ரஷ்யாவின் அதிபர் புதின் ஒரே குஷி - ஏனெனில் அபிநந்தன் செலுத்திய போர்விமானம் MIG 21 Bison ரஷியர்களின் அடிப்படைத் தயாரிப்பு- (இந்தியர்களால் வெகுவாக மேம்படுத்தப்பட்டது)
      இன்றுகூட, இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா பல்கேரியாவில் நடந்த சர்வதேசப் போட்டியில் தங்கம் வென்றபின், இந்தியாவின் ஹீரோ அபிநந்தனுக்கு என் மெடலை சமர்ப்பிக்கிறேன் என்று (ஹிந்தியில்) ட்வீட்டியிருக்கிறார். அபிநந்தனின் வீராவேசத்தினால் தான் வெகுவாக உத்வேகம் பெற்றதாகவும். அதனால்தான் இந்தத் தங்க மெடல் என்றும் கூறிய அவர், விங் கமாண்டரை ஒருமுறை சந்திக்க நேர்ந்தால் மகிழ்வேன் என்றும் மேலும் சொல்லியிருக்கிறார். இப்படி இன்னும் பல ஹீரோக்கள், ஹீரோயின்கள் தங்கள் வெற்றிக்கு வித்தாக நம் தமிழ் இந்தியனை, விங் கமாண்டரைப் பார்ப்பார்கள், நினைப்பார்கள்.. இப்படியெல்லாம் வளர்ந்துவருவதுதான் நம் தேசத்தின் உண்மைக் கதை.

      நீக்கு
    4. திருமிகு ஏகாந்தன் ஐயா...

      சிறப்பு...

      நன்றி...

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!