புதன், 20 நவம்பர், 2019

புதன் 191120 :: காயம்பட்ட மாயம் !

    

சென்ற வார புதன் பதிவின் கருத்துரைப் பகுதியில், நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள், சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.  
             
' வெளியிட்ட பதிவிற்கு சம்பந்தமே இல்லாத கருத்துரைகள் தேவையில்லை' என்று கருத்து கூறியுள்ளார். 



அவருடைய எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டதற்கு நாங்கள் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 

எங்கள் ஆசிரியர் குழு இதுபற்றி அடிக்கடி விவாதித்துள்ளோம். 

எங்கள் பார்வையில், வலைப்பூ பல வகைப்படும். 

சில வலைப்பூக்கள், அதன் ஆசிரியரின் மேடைப் பேச்சு போன்று, தங்கு தடையில்லாமல், அருவியாக பாய்ந்திருக்கும். கருத்து கூறுபவர்களுக்கு அதைப் பற்றி கருத்து கூற ஓர் இடைவெளி கூடக் கிடைக்காது. பதிவாசிரியரும் கருத்து எதையும் எதிர்பார்த்திருக்க மாட்டார். 

சில வலைப்பூ ஆசிரியர்கள், எதிர் கருத்துகளை லட்சியம் செய்யமாட்டார்கள்; அல்லது வெளியிடமாட்டார்கள். 

சில வலைப்பூ knowledge sharing என்ற அடிப்படையில் வகுப்பறை போன்று இருக்கும். இங்கே வாசகர்கள், சந்தேகம் ஏதேனும் இருந்தால், கேட்டு நிவர்த்தி செய்துகொள்வார்கள். 

சில ஆன்மீக வலைப்பூ. ஆன்மிகவாதிகளின் ஆதரவு என்றும் உண்டு. 

இந்தியாவின் சுற்றுலாத்தலங்களை விவரமாக தெரிந்துகொள்ள சில நண்பர்களின் வலைப்பூ உதவுகின்றது. 

சமையல் வலைப்பூக்கள் என்றுமே சுவையானவை. 

Blogs can be one or more of these types: Informative, educative, entertaining and knowledge sharing. We have all these combined in Engal blog. We have additional points known as,  communicative + creative. 

What is the difference between information and communication? 
In simple terms, information is giving out and communication is getting through. The process of communication is incomplete if we do moderation for the comments. 

We want our readers, to come to our blog everyday and on Wednesdays and Thursdays they can comment about anything under the Sun. There are no restrictions. It can be even exchange of pleasantries - since that is the first step in any communication process. 

எங்கள் ப்ளாக் வலைப்பூ பல்சுவை பதிவாக இருக்கவேண்டும் என்பது எங்கள் லட்சியம். 

எங்கள் பதிவாசிரியர்கள் = Suppliers; வாசகர்கள் ஆகிய நீங்கள் = Customers. 

Customer satisfaction, customer happiness, போன்ற சில அடிப்படை விஷயங்களுக்காக, நாங்கள் பதிவு வெளியான ஆறு நாட்களுக்குள், யார், என்ன கருத்து உரைத்தாலும் அதை மட்டுறுத்தல் இல்லாமல் அப்படியே வெளியிடும் வகையில் அமைத்துள்ளோம். 

எங்கள் புதன், வியாழன், வெள்ளி (சனி ஞாயிறு கூட அப்பப்போ சேரும்!) 
பதிவுகளில், வாசகர்கள் என்ன கருத்துரை இட்டாலும், அதை நாங்கள் வரவேற்கிறோம். 

முக்கியமாக, புதன் வியாழன் பதிவுகள் அரட்டை அரங்கம் போல்தான். வாசகர்களும், பதிவாசிரியரும், கலந்துரையாடல் செய்வோம். இதை நிறுத்துவதாக இல்லை. 
          
எங்கள் எதிர்பார்ப்பு, உங்கள் பங்கேற்பு. அது காலை வணக்கமாக இருந்தாலும் சரி, கொஞ்சம் இருங்க பதிவைப் படித்துவிட்டு வருகிறேன் என்பதாக இருந்தாலும் சரி, உங்கள் கைக்காரியங்களைப் பற்றிய பகிர்வாக இருந்தாலும் சரி. இது ஒரு அரட்டைக் கச்சேரி மேடை. நீங்க இங்கே வந்து என்ன கருத்து பதிவு செய்தாலும், வணங்கி வரவேற்கிறோம். பதிவை விடப்  பின்னூட்டங்கள் அல்லது அதை வைத்து செய்யப்படும் பகடிகள் எல்லாம் இன்னும் சுவாரஸ்யமாக அமைவது உண்டு. 

எனவே, வாசகர்களே! வாங்க, பேசலாம்! வானமே எல்லை! 


===========================


பானுமதி வெங்கடேஸ்வரன்: 

சிறு வயதில் பெற்றோர்களோ, அல்லது வீட்டில் இருந்த பெரியவர்களோ சொல்லிக் கொடுத்த பழக்கம், நினைவு தெரிந்து அதற்கு அறிவு பூர்வமாக விளக்கம் கிடையாது என்று தெரிந்தும் விடாமல் தொடரும் பழக்கங்கள் ஏதாவது..? (உ-ம்) பிள்ளையார் சுழி போடுவது.

 # பிரதட்சிணமாகச் செல்வது வலப்பக்கத்துக்கு முதலிடம் தருவது "நாராயணா" அல்லது "முருகா" எனச்சொல்லி மன அமைதி வருவித்துக் கொள்வது . . .

& பெற்றோர்களோ அல்லது பெரியவர்களோ சொன்னது எதையும் நான் கேட்டதில்லை. அப்பாவைப் பார்த்து சில பழக்கங்கள் தொற்றிக்கொண்டன. காலையில் குளித்து வந்ததும் விபூதி இட்டுக்கொள்வது, சிறிது நேரம் சுலோகம் சொல்லி கடவுளை வழிபடுவது என்று சில. 
                    
ஒரு பக்கம் ஐ.டி. கம்பெனிகள் ஆள் குறைப்பு செய்கின்றன. இன்னொரு புறம் பி.எஸ்.என்.எல்லில் 1,50,000 பேர்கள் வீ.ஆர்.எஸ்ஸுக்கு மனு போட்டிருக்கிறார்களாம். இது ஒரு நகை முரணாக தோன்றவில்லையா?

# ஐ.டி கம்பெனி போல ஜஸ்ட் லைக் தட் பிஎஸ்என்எல் ஆட்களை "நாளை முதல் வர வேண்டாம்" எனச் சொல்ல முடியாததால் வி ஆர் எஸ் தந்து ஊக்குவிக்கிறார்கள்.  இரண்டுமே ஆட்குறைப்புதானே, முரண் எங்கே வந்தது ?


இப்போது இருக்கும் இளைஞர்கள் அரசு வேலையை விரும்புவதில்லையே ஏன்?

# அப்படி ஒட்டு மொத்தமாக சொல்ல முடியாது. அரசு பியூன் கம்பெனி ஊழியரை விட அதிக சம்பளம் பெறுவதாகச் சொல்லப் படுகிறதே கவனிக்க வில்லையா ? சில கெட்டிக்காரர்கள் மட்டும் தான் நல்ல வேலை பெற முடிகிறது. எல்லாரும் அல்ல.

குப்பை கூட்டும் பணிக்கு எம்.ஏ, பி.எச்.டி க்கள் மனுச் செய்ததாக செய்தி வந்ததே..

மறந்து போய் பொருள்களை தேடுவது இருக்கட்டும். சிறு வயதில் நீங்கள் தொலைந்து போய் உங்களை தேடியிருக்கிறார்களா?

# நான் தொலைந்துபோயிருந்தால் தேடியிருக்க மாட்டார்கள்.

& தொலைந்து போக ஆசைப்பட்டு - எல்லோரும் எவ்வளவு பதட்டமாக என்னைத் தேடுகிறார்கள் என்று பார்க்க, சிறு வயதில் நாங்கள் வசித்த மூன்று குடித்தன வீட்டில், எல்லோருக்கும் பொதுவான மாடிப்படிக்கட்டுகளுக்குக் கீழே போய் ஒளிந்துகொண்டேன். ஒருமணி நேரம் ஆகியும் யாரும் என்னைத் தேடவில்லை. அந்த நேரத்தில்தான் அரிசிக்கு அரை நெல்லிக்காய் விற்கும் மூதாட்டி, அரிசிக்கு நாகப்பழம் விற்கும் அம்மணி என்று வரிசையாக வந்து, உடன் பிறந்த மூத்தவர்கள் அரிசிக்கு வாங்கிய அ.நெ, நா ப - எல்லாவற்றையும் பங்கு போட்டுத் தின்று தீர்த்திருந்தனர். என்னைப் பார்த்தபின், ஒன்றுமே நடக்காதது போல எல்லோரும் இருந்தார்கள். 

அதற்கப்புறம் நான் காணாமல் போவதைப் பற்றிக்  கனவு கூட கண்டதில்லை! 

அம்சவல்லி அதிரா:): 
               
1. யாரையும் காயப்படுத்திடக்கூடாது என நினைப்போர்தான் அதிகம் காயப்படுகிறார்களே அது ஏன்?



#  நான் இப்படி அதனால் எனக்கு இதுதான் வரவேண்டும் என நினைப்பது மனித இயல்பு. இதன் நான், எனக்கு எனும் இரண்டு பகுதிகளிலும் அளவீடுகளில் தவறு இருக்கக் கூடும். 
கீதை வழியில் பலன் கருதாது செயல்படுதல் தவிர வேறு தீர்வு ஏது ? 
எதிர்பார்ப்பு இன்றேல் ஏமாற்றமில்லை.

& யாரையும் காயப்படுத்திவிடக்கூடாது என்று நினைப்பவர்கள், ஜாக்கிரதையாக ஓரமாக ஒதுங்கி, ஒடுங்கி நடப்பார்கள். முன்னேறத் துடிப்பவர்கள் இந்த ஏமாளிகளின் மீது இடித்துத் துவைத்து முன்னேறிச் செல்வார்கள். இந்த உதாரணத்தை, சென்னை லோக்கல் ரயில்வே ஸ்டேஷன்களில், நாள்தோறும் காண முடியும். ரயில் வந்து நின்றவுடன், அடித்துப் பிடித்து, எல்லோரையும் பின்னுக்குத் தள்ளி, காயப்படுத்த நினையாதோரை காயப்படுத்தி வண்டியில் ஏறுபவர்களைக் காண முடியும். 

2. சுற்றமும் நட்பும் நிறைய வேண்டும் என விரும்புவோர் அதிகம் தனிமைப்படுத்தப்படுகிறார்களே அது ஏன்?


# ௸  ௸

& சேச்சே ! அப்படி எல்லாம் எதுவும் இல்லை. சுற்றமும் நட்பும் நிறைய வேண்டும் என விரும்புவோர் யாரும் தனிமைப்படுத்தப்பட்டதாக நான் கண்டதில்லை. 

சுற்றமும் நட்பும் நிறைய வேண்டும் என்று நினைப்பவர்கள், எதற்காக அல்லது எந்த நோக்கத்திற்கு அப்படி நினைக்கிறார்கள் என்பதைப் பொருத்தது. 

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர், எனக்கு இன்னும் அதிக நண்பர்கள் இருந்தால் மகிழ்ச்சி அடைவேன் என்றார். 

" ஏன்? "  என்று அவரிடம் கேட்டேன். 
    
"இருக்கின்ற எல்லா நண்பர்களிடமும் ஏற்கெனவே நிறைய கடன் வாங்கிவிட்டேன், திருப்பித்தரவில்லை " என்றார். இவரை எல்லோரும் தனிமைப்படுத்துவார்களா அல்லது நட்புப் பாராட்டுவார்களா! 
       
   3. வாக்கைக் கொடுத்துப்போட்டுப் பின்னர் அதைக் காப்பாற்றாமல் விடுபவர்களை என்ன பண்ணலாம்? வாக்குக் குடுத்திட்டால் அதைக் காப்பாற்றினால்தானே அழகு?


# ஒன்றும் பண்ண இயலாது. நறுக்குனு நாலு வார்த்தை சொல்லி வாங்கிக் கட்டிக்கலாம். அழகில்லை அசிங்கம்னு கோபுரமேறிக் கூவலாம். 

& வாக்கைக் கொடுத்தால், அதைக் காப்பாற்றுவதுதான் அழகு. (ஆனால், வாக்குக் கொடுக்காமல் நழுவிவிடுவதே புத்திசாலித்தனம்!) 

4. தான் மட்டுமே புத்திசாலி எனவும், ஏனையோர் எல்லாம் தன்னைவிட அறிவு குறைந்தோர் என எண்ணுவோருக்கு உங்களின் அட்வைஸ் என்ன?



# "கேள்விக்கு  பதில் சொல்ல வராதீங்க" என்பதுதான்.

& எப்பொழுதும் எல்லோருக்கும் என்னுடைய அட்வைஸ் : " எப்பொழுதும் யாருக்கும் அட்வைஸ் பண்ணி நேரத்தை வீணாக்காதீர்கள்! " 

5. தேவைப்படும்போதெல்லாம் இன்சொல்லில் பேசி, கடன் வாங்கிவிட்டு,பின்பு கடன் தந்தவர்களையே தூற்றிக்கொண்டு திரிவோரைபற்றி என்ன சொல்வது?



# அவரைப் பற்றி அல்ல நம்மைப்பற்றி தான் சொல்லிக் கொள்ள வேண்டும்.. "இங்கே ஒரு இளிச்சவாயன் அழுமூஞ்சி ஆகிறான்"

& இன்சொல் பேசினால் கடன் கொடுப்பார்கள்; வன்சொல் சொல்லித் தூற்றினால், கொடுத்த கடனைத் திரும்பக் கேட்கமாட்டார்கள். ரொம்பப் பேருங்க இந்த தெக்னிக்கைத்தான் பின்பற்றுகிறார்கள். நேரம் கிடைத்தால் இந்த தலைப்பில் என்னுடைய அலுவலக அனுபவங்களை விவரமான பதிவாக எழுதுகிறேன். 

6. இளகிய மனதுடன் பிறருக்கு உதவுவோர், அதிகமாக ஏமாற்றப்படுவது ஏன்?


# இளகிய மனமா ஏமாறும் சோணகிரியா?

& ஏமாற்றப் படுகிறோம் என்பதை  உணர்ந்துவிட்டால், இளகிய மனதை உள்ளே போட்டுப் பூட்டி வைத்துவிடுவது உத்தமம். 

ஆறு கேள்விகளில் அதிகபட்சம், 'ஏன்' என்ற கேள்வியை அம்சவல்லி கேட்டதால், எங்கள் ஆசிரியர் ஒருவர் எழுதிய கமெண்ட் : 


சாக்ரடீஸ் நல்லாத்தான் சொல்லி இருக்கார்
 " *எதையும் ஏன் எதற்கு என்று கேள்* "
அவர் 'ஏன்' அப்படிச் சொன்னார் ?
         

7. எங்கு பார்த்தாலும், மனைவிதான் பதிபத்தினியாக இருக்க வேண்டும் என்கிறார்களே தவிர, ஆண்கள் பத்தினர்களாக இருக்கோணும் என எங்கும் சொல்லப் படவில்லை.. அது ஏன்? கற்பு என்பது இருபாலாருக்கும் பொதுவானதுதானே? அப்போ ஏன் ஆண்களுக்கு அதைப்பற்றிப் பேசாமல், பெண்களில் அழகு, அறிவு, அன்பு, பாசம் இப்படி எவ்வளவோ இருப்பதைப் பற்றியும் பேசாமல், கற்பை மட்டும் பெண்களுக்குப் பேசுவது தப்பு இல்லையோ?..


# யார் இயல்பாகவே யோக்கியமாக இருக்கும் சாத்தியக்கூறுகள் அதிகமோ அவருக்குதான் ஆலோசனை வழங்கப்படும். 

நாம் ஒப்புக் கொள்கிறோமோ இல்லையோ, பெண்களை ஒரு "பொருளாக" மதிப்பது ஆயிரங்காலத்துப் பழக்கம். வென்ற மாமன்னர்களுக்கு பரிசாக "அளிக்கப்" பட்ட போகப் பொருள். 
கத்தரிக்காய் எப்படி இருக்கவேண்டும் என்று விரும்புவது போல ஒரு நபர் எப்படி இருக்க வேண்டும் என விரும்புவதும் மனித குணம்தான். 
பெண்களும் தம் கணவர் சீலமாக இருக்க வேண்டும் என விரும்பாமல் இல்லை. ஆனால் அதை கற்பு என்று உயர்த்திச் சொல்லி தக்க வைத்துக் கொள்ளும் தந்திரத்தை அவர்கள் சுவீகரிக்கவில்லை. 
மேலும் பெண்களுக்கு அந்த அளவு சுதந்திரம் இல்லாமல் யுகங்கள் கழிந்தன என்பதே உண்மை.

& கற்பு என்பது இருபாலருக்கும் பொதுவானது என்பதே என்னுடைய தீர்ப்பும். 
             
=============================================

காடராக்ட் - 6.

பிறகு வேலைகள் எல்லாம் துரிதமாக நடந்தன. ஒருவர் வந்து ஆபரேஷன் செய்யப்படவேண்டிய கண்ணைச் சுற்றி ஏதோ ஒரு மருந்தைத் தடவிச் சென்றார். 

பிறகு, சக்கரக் கட்டிலில் படுக்கச் சொன்னார்கள். வெள்ளைத் துணியால் காலிலிருந்து மார்பு வரை போர்த்தினார்கள். அப்புறம் ஒரு பாலித்தீன் கவர் போன்ற ஒன்றால் தலை முதல் மார்பு வரை போர்த்திவிட்டார்கள். ஆப்பரேஷன் செய்யப்படவேண்டிய கண்ணுக்கும் மூக்குக்கும் மட்டும் அதில் துளைகள் இருந்தன. வலது கை ஆட்காட்டி விரலில் ஏதோ ஒரு கிளிப் மாட்டினார்கள். அது மாட்டப்பட்ட நேரத்திலிருந்து, 'டும் ..டும்.. டும் ...டும் என்று தொடர்ந்து சத்தம் காதில் கேட்டது. அது என்னுடைய இதயத் துடிப்பு என்று தெரிந்துகொண்டேன். 

சிகிச்சை பெறுகின்ற கண் வழியே, ஒரு வட்ட வடிவ ஒளியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். 

கண்ணின் மீது குளிர் நீர் போன்று ஒன்று விழுந்துகொண்டிருந்தது. 

சமையலறை 'சிங்கு'ல ஓட்டை வழியாக ஓடி ஒளிந்துகொண்ட கரப்பாம்பூச்சி, 'ஆபத்து விலகிவிட்டதா, வெளியே வரலாமா ' என்று மீண்டும் வெளியே வர யத்தனிக்கும்போது சமையலறைக் குழாயை மெதுவே திறந்தால், அதன் கண்களின் மீது விழுகின்ற தண்ணீரை அது எப்படி உணருமோ அப்படி உணர்ந்தேன். 

நடு நடுவே பார்வையை ஒளிவட்டத்தை நோக்கித் திருப்புவதற்கு டாக்டர் சொன்ன அறிவுரை (instructions) கேட்டு அதன்படி செய்து முடித்தேன். 

இந்த எல்லா விஷயங்களும் நடக்கும்போது நான் காதுக்கு hearing aid அணிந்திருந்தேன். சில அறிவுரைகள் சரியாகக் கேட்காமலே உத்தேசமாக நடந்துகொண்டேன். 

எப்படியோ - ஆப்பரேஷன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது!

மாலை நாலரைமணி சுமாருக்கு முடிந்த ஆபரேஷனுக்குப் பிறகு, கண்ணை மூடி, மேலே பஞ்சு வைத்து, அதற்கும் மேலே பிளாஸ்திரி ஒட்டி அனுப்பினார்கள். 

இரவு எட்டரை மணி சுமாருக்கு மீண்டும் டாக்டரைப் போய்ப் பார்த்து, அவர் கண்ணின் மீது இருந்த பஞ்சு & பிளாஸ்திரி அகற்றி, கண்களுக்கு ஒரு ப்ளைன் கண்ணாடியை மாட்டிவிட்டார். 

சொட்டு மருந்துகள், மாத்திரைகள் கொடுத்து, ஐந்து வார காலம் அதை எப்படி எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கூறி அனுப்பினார். 

===========================================

இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு. அடுத்த வாரம் முடித்துவிடலாம்!

===========================================

156 கருத்துகள்:

  1. செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம்..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ..... செல்வத்துள் எல்லாந் தலை.

      வாழ்க நலம்.

      நீக்கு
    2. காலை வணக்கம். தினமொரு குறளா? நடத்துங்க

      நீக்கு
    3. தினமும் திருக்குறள் சொற்றொடர்..

      இதுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு..

      தூண்டி விட்டவர் தமக்கு
      நெஞ்சார்ந்த நன்றி..

      நீக்கு
  2. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா..    வணக்கம்,  நல்வரவு,  நன்றி.

      நீக்கு
    2. //
      கௌதமன்20 நவம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 6:39
      🙏///
      ஆஆஆ மீ லாண்டட்ட்ட்:)).. இப்பூடி ஒற்றைக் கருத்துரைகள் இங்கு நிராகரிக்கப்படும் ஜொள்ளிட்டேன்ன்:)) குறைந்தது ரெண்டு சொல்லிலாவது பின்னூட்டம் இருக்கோணுமாக்கும்:)).. இது சமுத்திரக்கனி.. ஹையோ டங்கு ஸ்லிப்பாகுதே அம்சவல்லி அதிரா போட்டிருக்கும் ஜட்டம்:))..

      ஹையோ வழி விடுங்கோ.. வழிவிடுங்கோ... “ஆடே போய் மேசையில ஏறி நிண்டு கொண்டு என்னை வெட்டு வெட்டு எண்டதாமே”.. அக்கதையா இருக்கப்போகுதே என் கதை:)).. மீ ரொம்ப நல்ல பொண்ணு என்னை ஆரும் தேடிடாதீங்கோ:)) ஹா ஹா ஹா...

      நீக்கு
    3. இலக்கிய செம்மலே இன்னும் கீழே ரொம்பப் பின்னூட்டங்கள் கம்மல், தும்மல் எல்லாம் இருக்கு, பார்த்துப் படிங்க!

      நீக்கு
  3. கவனிச்சுட்டே இருக்கும்போது திடீர்னு பதிவு வந்திருக்கு. டாஷ் போர்டில் தெரியலையா, ஏமாந்துட்டேன். படிச்சுட்டு வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதன் பதிவு அரைமணி நேரம் முன்னாலேயே வெளியாகி விடுமே.... பார்த்திருப்பீர்கள்.

      நீக்கு
    2. அதை ஏன் கேட்கறீங்க ஸ்ரீராம், போனவாரம் அரை மணி காத்திருந்துவிட்டுக் கணினியை மூடிட்டுப் போனதும் பதிவு வந்தது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இந்த வாரம் கொஞ்சம் கவனம் இல்லாமல் இருந்தப்போ வந்திருக்கு. :)))))

      நீக்கு
    3. புதன் என்றால் சும்மாவா !

      நீக்கு
    4. அதானே புதன் கிழமை விசாளக்கிழமையை விட ஸ்பீட்டூஊஊஊஊஊ ஹா ஹா ஹா...

      நீக்கு
  4. அருமையான கேள்விகளும்
    அழகான பதில்களும்.....

    பதிலளிநீக்கு
  5. /// பெண்களுக்கு அந்த அளவுக்கு சுதந்திரம் இல்லாமல் யுகங்கள் கழிந்தன என்பதே உண்மை...///

    நெஞ்சை அழுத்துகிற உண்மை....

    பதிலளிநீக்கு
  6. உங்க காடராக்ட் அறுவை சிகிச்சை பெரிய அளவில் ஏற்பாடுகளுடன் நடந்திருக்கிறதே! இங்கே அப்படி எல்லாம் ஏற்பாடுகள் இல்லை என்பதால் பணமும் குறைவு. இங்கே அதாவது ஸ்ரீரங்கத்தில் எங்க தெருவில் இருக்கும் கண் மருத்துவமன,மற்றும் அரசு கண் மருத்துவமனை, அர்விந்த் மருத்துவமனையில் எல்லாம் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிச்சதும். முதல்நாளைக்குக் கண்ணுக்கு விட வேண்டிய சொட்டு மருந்துகளை விட்டுக்கொண்டே இருக்கச் சொல்றாங்க. அறுவை சிகிச்சை அன்று காலை ஐந்து மணி அளவில் மருத்துவமனை சென்றால் நம் வரிசைப்படி நம்மைக் கூப்பிட்டு அரைமணிக்குள் சிகிச்சை முடிந்து கண்ணில் லேசர் லென்ஸ் வைச்சாச்சு என்பற்கான அறிகுறியாக அதைப் பிரித்த கவரை வெளியே காத்திருக்கும் நோயாளியின் உறவினரிடம் கொடுக்கிறார்கள். பின்னர் ஐந்தே நிமிஷத்துக்கெல்லாம் கண்ணில் கட்டோடு நம்ம ஆள் வந்துடுவார். அவருக்குக் காஃபி, அல்லது கஞ்சி ஏதானும் கொடுத்தால் மருத்துவரிடம் சொல்லிட்டு வீட்டுக்கு டாட்டாக் கிளம்ப வேண்டியது தான். கட்டு மட்டும் பிரிக்க மறுநாள் வரச் சொல்லுவாங்க. கண்ணாடி எல்லாம் ஒரு வாரத்துக்கு அப்புறம். கட்டுப் பிரிச்சதும் ஒரு பவுச் நிறையப் பல்வேறு சொட்டு மருந்துகளைக் கொடுத்துப் பல்வேறு நேரத்தில் பல்வேறு நிமிட இடைவெளியில் விடச் சொல்கிறார்கள். பின்னர் நாள் ஆக ஆக அதில் ஒவ்வொன்றாக அளவையும் நேரத்தையும் குறைத்துக்கொண்டே வருகிறார்கள். அதன் பின்னர் ஒரு மாசம்! மறு ஆய்வு செய்ததும் தேவை எனில் கண்ணாடி தருகின்றனர். இல்லைனா அப்படியே படிக்கலாம். நம்மவர் படிக்க மட்டும் கண்ணாடி. மற்றபடி கண்ணாடி இல்லை. ரொம்ப ஜிம்பிள்.2013 /2014 ஆம் ஆண்டில் வலக்கண்ணுக்கும் 2015/16 ஆம் ஆண்டில் இடக்கண்ணுக்கும் சிகிச்சை நடந்தது. யாரும் ஜெல்ப்பெல்லாம் பண்ண வரலை. மருந்து ஊற்றிக் கண்களைப் பாதுகாக்கும் வேலை மட்டும் எனக்கு. மற்றபடி அறுவை சிகிச்சை நடந்த அன்றே தொலைக்காட்சி பார்ப்பேன் என்று பிடிவாதம்! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் மாமா-கேஜிஜியின் அண்ணன் - சென்னையில் வசித்தாலும், மதுரை சென்று அங்கு அர்விந்த் கண் மருத்துவமனையில்தான் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.  நன்றாகவே செய்தார்கள் என்றும் சொல்வார்.

      நீக்கு
    2. ஆமாம், எனக்குத் தெரிந்து சென்னைக்கு முன்னால் கோவை, திருச்சி, மதுரையில் தான் லேசர் சிகிச்சை முறை கண்களுக்கு வந்தது. என் அப்பா தொண்ணூறுகளிலேயே சென்னையிலிருந்து திருச்சிக்குத் தம்பி வீடு வந்து தான் கண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். என் பெரியப்பா பேத்திக்கும் தொண்ணூறுகளில் மாறுகண்ணுக்கனா லேசர் சிகிச்சை கோவையில் நடந்தது. பணமும் குறைவு. சென்னையில் வாசன் மருத்துவமனை போன்ற பெரிய மருத்துவமனைகளுக்குச் சென்றால் கவுன்சலிங், கவுன்சலிங் என்றே நாட்களையும் பணத்தையும் கடத்துகிறார்கள்.

      நீக்கு
    3. 2005 ஆம் வருஷம் என் உறவுப் பெண் ஒருவர் 7,000 ரூபாய்க்குள் அம்பத்தூர் தனியார் கண் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை செய்து கொண்டார். என்னைக் கேட்டால் சென்னை, எழும்பூர் அரசு கண் மருத்துவமனை தனியார் மருத்துவமனைகளை எல்லாம் விட நவீனமான சிகிச்சை முறையில் கண் அறுவை சிகிச்சை செய்கிறார்கள் பல வருடங்களாக! அங்கே போனால் இன்னமும் குறைவான பணத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். சென்னையில் இருந்தால் நாங்க அங்கே தான் போகிறதா இருந்தோம். அந்த மருத்துவமனை கண் மருத்துவர் அம்பத்தூருக்கு வாரம் 2 முறை வருவார். அவர் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் ஸ்ரீரங்கம் போனதால் அங்கேயே பண்ணிக் கொண்டாச்சு. அதுக்கும் சென்னைக்காரங்க ஒரே கேலி! அதெல்லாம் ஒரு மருத்துவமனையா? அதெல்லாம் ஒரு சிகிச்சையா என்று! :))))) திருச்சியிலெல்லாம் கண் மருத்துவருக்கு என்ன தகுதி இருக்கும் என மெத்தப்படித்த ஒரு மேதாவி கேட்டார். நான் ஆமாம், படிக்கையிலேயே நீ திருச்சிக்குப் போய்த் தொழில் செய்யப் போகிறாய் என்பதால் உனக்கு ஏதும் சொல்லிக் கொடுக்க மாட்டோம்னு சொல்லிட்டாங்க என்றேன். :)))))

      நீக்கு
    4. விவரமான கருத்துரைகளுக்கு நன்றி!

      நீக்கு
    5. காடராக்ட் ஆபரேஷனுக்கும் அதற்காக அவர்கள் தீர்மானித்திருக்கும் கட்டணத்திற்கும் சம்பந்தம் உண்டு.

      1. அனுபவம் உள்ள மருத்துவர்கள், அல்லது அவர்கள் மேற்பார்வையில் செய்யப்படும் சிகித்சைகள். வெளிநாடுகளில் நடக்கும் செமினார்களில் கலந்து கொள்ளும் கண் சிகித்சையில் துறை போகிய மருத்துவர்கள். அவர்களால் கண்காணிக்கப்படும்
      சிகித்சைகள். அறுவை சிகித்சைக்குப் பின்னால் ஒரு வாரம் கழித்து வரச்சொல்லி முழுமையான செக்-அப்.

      2. பொருத்தப்படும் விழி லென்ஸ் தரத்திற்கேற்ப கட்டணம்.
      அதை நம்மிடம் கேட்டே நம் விருப்பப்படி பொருத்துக்கிறார்கள்.
      இந்த லென்ஸூகள் 30000- த்திலிருந்து 70000 வரை இருக்கின்றன.

      3. எல்லா வசதிகளும் (எக்ஸ்-ரே, ப்ளட் டெஸ்ட், ஈஸிஜி, அங்கேயே மெடிகல் ஷாப்) போன்ற வசதிகளைக் கொண்ட மருத்துவ மனைகள். எந்த டெஸ்ட்டுக்கும் வெளியே போக வேண்டாம். சொட்டு மருந்துகளுக்கு வெளியே அலைய வேண்டாம்.

      4. அறுவை சிகித்சைக்குப் பின் ரெடினா டாக்டரின் கறாரான சோதனைகள்.

      5. அறுவை சிகித்சைக்கு முன்னால் தனி அறை ஒதுக்கல்.
      அங்கு காலை டிபன் (இட்லி, பொங்கல், வடை இத்யாதி) அங்கு பொருத்தப்பட்டிருக்கும் டிவியில் நோயாளியுடன் உதவிக்கு வந்திருப்பவர் நோயாளிக்கு செய்யப்படும் ஆபரேஷனை பார்க்கலாம்.

      அறுவை சிகித்சைக்கு பின்னால் அதே அறையில் நோயாளியைக் கொண்டு வந்து விட்டு அரை மணி நேர ஒய்வு, கவனிப்பு என்று ஆபரேஷனுக்குப் பின்னாலான திருப்திக்குப் பிறகு அனுப்புகிறார்கள்.

      இப்படியாக வசதியும் தரமும் கூடக்கூட அதற்கேற்ப கட்டனங்களும் கூடுகின்றன.

      (பி,கு.) ஆபரேஷனுக்குப் பிறகு கட்டு கிடையாது. கருப்பு - வெள்ளை என்று இரண்டு கூலிங் கிளாஸ் தருகிறார்கள். வெளியில் செல்லும் பொழுது கருப்பு. வீட்டில் வெள்ளை.



      நீக்கு
    6. ஸ்ரீராம்.. அந்த மதுரை அரவிந்த் மருத்துவமனை சென்னையிலேயே பூந்தமல்லி ஹைரோடில் பிர்மாண்டமான மருத்துவமனையைத் துவங்கி விட்டார்கள். இதற்காக இனி மதுரைக்குப் போக வேண்டாம்.

      நீக்கு
    7. விவரமான கருத்துரை அளித்ததற்கு நன்றி, ஜீவி சார்!

      நீக்கு
    8. //நான் ஆமாம், படிக்கையிலேயே நீ திருச்சிக்குப் போய்த் தொழில் செய்யப் போகிறாய் என்பதால் உனக்கு ஏதும் சொல்லிக் கொடுக்க மாட்டோம்னு சொல்லிட்டாங்க என்றேன். :)))))//நான் ஆமாம், படிக்கையிலேயே நீ திருச்சிக்குப் போய்த் தொழில் செய்யப் போகிறாய் என்பதால் உனக்கு ஏதும் சொல்லிக் கொடுக்க மாட்டோம்னு சொல்லிட்டாங்க என்றேன். :))))) அதென்னவோ தெரியவில்லை, சென்னைக்காரர்களுக்கு திருச்சி என்றால் இளப்பம்தான். கோவையை கொண்டாடுவார்கள், மதுரையை விட்டு விடுவார்கள், பாண்டியைக் கூட எதுவும் சொல்ல மாட்டார்கள், திருச்சி என்றால் கொஞ்சம் மட்டமாகத்தான் பேசுவார்கள்.

      நீக்கு
    9. சென்னைக்காரர்கள், திருச்சியை நிஷித்தம் செய்வார்கள் என்னும் செய்தி எனக்கு வியப்பு அளிக்கிறது. எனக்குத் தெரிந்து அப்படி எந்த நிலையும் இருப்பதாகக் கண்டது இல்லை. மேலும் ஒருவர் திருச்சியைச் சேர்ந்தவரா, வேறு ஊரைச் சேர்ந்தவரா என்றெல்லாம் எங்கே தகவல்கள் கிடைக்கும்?

      நீக்கு
    10. எந்த விதத்திலும் நோய் நொடி வாராதிருக்க முயற்சிப்போம்...

      பிரார்த்திப்போம்!...

      நீக்கு
    11. சென்னைக்காரங்க எனப் பொதுவாகச் சொன்னதால் கேஜிஜி குழம்புகிறார் போல! எங்கள் உறவினர்களே தான் கேலி செய்தது/செய்வது எல்லாம். அவங்களுக்கு நாங்க அம்பத்தூரில் இருந்தப்போக் கூடக் கேலி தான். அங்கெல்லாம் பள்ளிகள் என்ன நல்லாவா இருக்கும்? ஆசிரியர்கள் திறமை வாய்ந்தவர்களாக இருக்கமாட்டாங்க. இங்கே எல்லாம் படிச்சு எப்படி முன்னுக்கு வரது என்பார்கள்! அதே போல் அம்பத்தூரிலேயே உள்ள ஓர் மருத்துவமனைக்கு வாராவாரம் நோயாளிகளைக் கவனித்துச் சிகிச்சை அளிக்க வரும் ஓர் பிரபல இதய நோய் நிபுணருக்கு எதுவுமே தெரியாது என்பார்கள். அம்பத்தூரில் எல்லாம் வந்து சிகிச்சை அளிப்பதில் இருந்தே அவர் என்ன மருத்துவர்னு தெரியலையா, அவருக்கெல்லாம் என்ன தெரியும் என்பார்கள். அவங்களுக்கெல்லாம் கார்ப்போரேட் மருத்துவமனைகள் தான் பிடிக்கும். அங்கே கொடுப்பது தான் உயர்தர மருத்துவ சிகிச்சை என்னும் எண்ணமும் உண்டு. வயது காராணமாக வரும் சாதாரணமான ஜீரணக்கோளாறு என் மாமியாருக்கு 93 வயதில். அதற்குப் பெரிய மருத்துவமனையில் அவங்களைச் சேர்த்து எல்லாவிதமான சோதனைகள், ஸ்கான் எனச் செய்து, தொண்டையில் துளை போட்டு, டயாலிசிஸ் செய்து, ஸ்டென்ட் வைத்து! தேவையே இல்லாத சிகிச்சைகள். சுமார் ஆறிலிருந்து எட்டு லக்ஷம் வரை செலவு! நாங்க மருத்துவர்களிடம் எதற்கு இந்தச் சிகிச்சை எல்லாம்? சோதனை முடிவுகள் எல்லாம் சரியா இருக்கேனு கேட்டோம் என்பதற்காக எங்களைப் பின்னர் மருத்துவமனைக்கே அனுப்பலை.

      நீக்கு
    12. கீதா அக்கா சொல்லியிருப்பது போல சென்னையில் வசித்த உறவினர்கள் திருச்சியை மட்டமாகத்தான் பேசுவார்கள். பெங்களூரில் வசித்தவர்கள் என்றால் கேட்க வேண்டாம்,"ஐயோ! சூடு! சூடு! என்பதோடு எப்படித்தான் இந்த ஊரில் இருக்கிறீர்களோ?" என்று வேறு கேட்பார்கள். இப்படி கேட்டவர்களில் நண்பர்களும் உண்டு. ஏன் திருச்சியிலிருந்து மஸ்கட் வந்த சிலர் கூட, இந்தியாவிற்கு வந்தால் எங்கே செட்டிலாவது என்று பேச்சு வந்தால், திருச்சியில் போய் என்ன செய்ய முடியும்? பொட்டி கடை வேண்டுமானால் வைக்கலாம். ரொம்ப சூடு! என்று (இவர்கள் ஏதோ சிம்லாவில் பிறந்து, சுவிட்சர்லாந்தில் வளர்ந்தது போல) என்று அலட்டுவார்கள்  

      நீக்கு
    13. திருச்சி, ஸ்ரீரங்கம் அவங்களைப் பொறுத்தவரை கிராமம். உங்க அம்மா, அப்பா கிராமத்திலே போய் உட்கார்ந்திருக்காங்க, அங்கே என்ன வசதி இருக்குனு போயிருக்காங்க இந்த வயசில் எனக் குழந்தைகளிடம் கேட்பார்கள். ஐபாகோ ஐஸ்க்ரீம் ஆகட்டும், ஒயாலோ பிட்சா ஆகட்டும், ஸ்விகி, ஜொமோட்டோ உணவு ஆகட்டும் திருச்சியில் நான்கு வருஷங்களுக்கும் மேல் இருக்கு. ஸ்ரீரங்கத்திலும், திருச்சியிலும் உள்ள பல உணவகங்கள் ஸ்விகி, ஜொமோட்டோவுடன் இணைப்பு. உடைகளில் மிக நவீனமானபான்டலூன் மற்றும் ட்ரென்டீஸ் கூட ஸ்ரீரங்கத்துக்கு வந்துச் சில வருஷங்கள் ஆகின்றன.

      நீக்கு
  7. கேள்வி, பதில்கள் எல்லாம் அருமை. அதிலும் # அவர்கள் நல்ல பதிலாகக் கொடுத்திருக்கார். அவர் சொல்லுவது அனைத்தும் அனுபவத்தில் விளைந்தவை!கௌதமன் அவர் பாணியில் சொல்லி இருக்கும் பதில்கள் எல்லாமும் சிரிப்பையும், சிந்தனையையும் ஒரு சேர வரவைத்தன. அதிலும் "ஏன்" என்பதற்குச் சாக்ரடீஸைச் சுட்டி இருப்பது மிகப் பொருத்தம். இலக்கியவாதி என்ன சொல்லப் போறாங்கனு பார்க்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இலக்கியச் செம்மலா!..
      இலக்கியக் கம்மலா?...

      நீக்கு
    2. கமறல் இல்லாமலிருந்தால் சரி! :))

      நீக்கு
    3. என்ன ஆச்சரியம்! இங்கே எனக்குக் கொஞ்ச நேரமாய்க் கமறிக் கொண்டிருக்கிறது.

      நீக்கு
    4. அடுப்பை சிம்மில் வைத்து தாளிக்கச்சொல்லுங்க....!

      நீக்கு
    5. ஹாஹா இன்னிக்கு ராத்திரிக்கு எதுவும் பண்ணலை. காலம்பர சமைத்ததே! எனக்குத் தொண்டையில் தொற்று/அழற்சி அடிக்கடி வரும். டான்சில்ஸ் இருக்கே!

      நீக்கு
    6. இலக்கியச் செம்மல்..
      இலக்கியக் கம்மல்..

      இலக்கியத் தும்மல்!..

      நமக்கு 'இலக்கிய விம்மல்'
      வராமல் இருந்தால் சரி..

      நீக்கு
    7. செம்மல், கம்மல், தும்மல், விம்மல், செம்ம எள்ளல்!

      நீக்கு
    8. என்ன நடக்குது இங்கின:) உண்மையில் இங்கு முதல் கொமெண்ட் போடும்போது என் பெயர் என்ன என்பதை மறந்து அம்சவல்லியாக்கும் என நினைச்சுட்டென் ஹா ஹா ஹா:)).. ஓவராப் பட்டம் கிடைச்சால் இப்பூடித்தானே ஆகும் ஹா ஹா ஹா இதில உங்கள் ஆரும்க்கும் பொறாமை இருக்கோ?:) இல்லைத்தானே?:) ஹா ஹா ஹா மீ ஜிம் க்கு ஓடிடுறேன்ன்:))

      நீக்கு
    9. ஜிம் முக்கா அல்லது தேம்ஸுக்கா?

      நீக்கு
    10. ஹலோ இலக்கியம் :) அடுத்த பட்டபெயருக்காக உலகமே வெயிட்டிங் :) நாங்கல்லாம் எப்படி உங்க பட்டத்தை பட்டமாக்கி விடறதுன்னு இல்லல்ல பப்படமாக்கி உடைக்கறதுன்னு  //ரூம் போட்டு யோசிச்சிட்டிருக்கோம் :))))))))))))

      நீக்கு
  8. //எதிர்பார்ப்பு இன்றேல் ஏமாற்றமில்லை.// true.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதிர்பார்ப்பு இலை எனில் ஏமாற்றமில்லை என்பது பழைய பலல்வி.. எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ முடியுமோ?:) இது வாழ்வியலுக்கு சாத்தியமோ?:).. ஒரு போஸ்ட் போட்டாஅலே கொமெண்ட் எதுவும் வரவில்லை எனில், நான் எதிர்பார்க்கவில்லை எனச் சொல்வோர் யார்???.. அப்படி எனில் ஞானி ஆக இருந்தால் மட்டுமே முடியுமாக்கும் அதிராவைப்போல:)) ஹா ஹா ஹா கீசாக்காவுக்கு ஹோட்டலுக்குப் போனால் தயிர்ச்சாதம் புளிப்பில்லாமல் இருக்கோணும் என எதிர்பார்ப்பு கர்ர்ர்:))

      நீக்கு
    2. எதிர்பார்ப்பு என்பது ஆழமான அர்த்தம் கொண்ட வார்த்தை அடுத்த நிமிடம் நடக்கப்போவது அல்லது ஆர்டர் செய்த தயிர்சாதம் பற்றி எல்லாம் வைக்கப்படும் அனுமானங்கள் எதிர்பார்ப்பு என்ற தலைப்புக்குப் பொருந்தாது.

      நீக்கு
    3. நோஓஓ அதெப்பூடி? நான் இதை ஒத்துக்கொள்ள மாட்டேனாக்கும்.. சின்னனோ பெரிசோ எதிர்பார்ப்பது எல்லாம் எதிர்பார்ப்புத்தேன்:))..

      நீக்கு
    4. எதிர்பார்ப்பு என்பதை நான் சரியான கோணத்தில் தான் புரிந்து கொண்டேன் கேஜிஜி சார். நம்ம இலக்கியச் செம்மலுக்கு எப்போதும் குழை ஜாதம், தயிர் சாதம் பத்தியே நினைப்பு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    5. //எதிர்பார்ப்பு இலை எனில் ஏமாற்றமில்லை என்பது பழைய பலல்வி.. எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ முடியுமோ?:) இது வாழ்வியலுக்கு சாத்தியமோ?:)..//

      'அத்தனைக்கும் ஆசைப்படு' என்றார் ஜக்கி வாசுதேவ்!

      நீக்கு
    6. //ஆசைகள் அறுமின்! ஆசைகள் அறுமின்! ஈசனோடாயினும் ஆசைகள் அறுமின்!// திருமூலர்

      நீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்நாள் இனிமை நிறைந்த பொன்னாளாக பிரகாசிக்கவும் ஆண்டவனை மனப்பூர்வமாக பிரார்த்திக்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...    காலை வணக்கம்.  இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
    2. காலை வணக்கம். இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  10. பிள்ளையார் சுழி எனப்படும் ' உ '
    உலகம் சிவமயம் எனும் சொற்றொடரின்
    ஓரெழுத்துக் குறிப்பு என்று கவியரசர் சொல்லியிருக்கிறார்...

    உலகம் என்பதைக் குறிக்கும் எழுத்தை முதலாகக் கொண்டே அன்றைக்கு எழுதத் தொடங்கினர் அல்லது முதல் செய்யுளில் உலகம் எனும் வார்த்தை இருக்கும்படிக்கு அமைத்தனர் என்றும் சொல்வார்...

    முதல் குறட்பா உலகு எனும் சொல்லுடன் இலங்குகிறது...

    கம்பராமாயணம் உலகம் யாவையும் என்று தொடங்குகின்றது..

    சேக்கிழாருக்கு இறைவன் எடுத்துக் கொடுத்த முதல் வார்த்தை - உலகெலாம்....

    அந்தக் காலத்தில்
    பனையோலையில் எழுதும் முன் அது
    பதமாகி விட்டதா என்பதை அறிவதற்கு
    எழுத்தாணியால் சுழித்துப் பார்த்ததே
    பின்னாளில் பிள்ளையார் சுழி என்றாயிற்று என்று எங்கள் தமிழாசிரியர் சொல்லியிருக்கிறார்....

    இன்றைக்கு கணினி யுகத்தில்
    சொற்கள் குறியீடு வழியாகக் கொண்டாடப் படுவதைப் போல அன்றைக்கு 'உ' என்னும் குறியால் உலகம் சிவமயம் என்று கொண்டாடியிருக்கிறார்கள்...

    நல்லதொரு விஷயத்தைச் சிந்திக்கச் செய்த கேள்வி...

    ஸ்ரீமதி பானுமதிவெங்கடேஸ்வரன் அவர்களுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! அடுத்துக் கொடுக்க இருந்தது துரை சொன்னது தான். அவரே இங்கே சொல்லிட்டார். நன்றி துரை.

      நீக்கு
    2. ஆம். நாம் அனைவரும் படித்திருக்கிறோம். ஆனால் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது!  நன்றி.

      நீக்கு
    3. பானுமதி தயவில் எனக்கும் நினைவுகளைப் புதுப்பித்துக்கொள்ள முடிந்தது. நன்றி பானுமதி!

      நீக்கு
    4. நல்லதொரு விஷயத்தைச் சிந்திக்கச் செய்த கேள்வி...

      ஸ்ரீமதி பானுமதிவெங்கடேஸ்வரன் அவர்களுக்கு நன்றி...

      கருத்துரைத்தவர்களுக்கும் எங்கள் நன்றி!

      நீக்கு
    5. தங்கள் பதிலில் என்னை குறிப்பிட்ட கௌதமன் சாருக்கும், துரை சாருக்கும், கீதா அக்காவுக்கும் நன்றி! நன்றி! நன்றி! 

      நீக்கு
  11. //ஓமில் ஸ்ருஷ்டி பீஜமான ‘அ’ முதல் எழுத்தாயிருக்க, ‘உமா’விலோ ஸ்திதி [பரிபாலன] பீஜமான ‘உ’என்பது முதல் எழுத்தாயிருப்பதால்தான், அன்போடு ரக்ஷித்து, காத்து, பரிபாலனம் பண்ணும் அம்பாளின் ப்ரணவம் ‘உ’வில்தான் ஆரம்பிக்க வேண்டுமென்று காரணம் சொல்லி, இதனாலேயே ‘உமா’ என்பதை அம்பாளுடைய ப்ரணவமாகக் கூறுகிறார்கள். பிள்ளையார் சுழியில் கொம்பு தான் ரொடேஷன்; கோடு அதிலிருந்து சக்தி உத்பவம். இந்த இரண்டையும் சிவ-சக்தி ஸ்வரூபமான நாத-பிந்துக்களாகக்கூடச் சொல்லிக்கொண்டு போகலாம். அதெல்லாம் ஸுக்ஷ்மமான விஷயம்.//

    பானுமதி "பிள்ளையார் சுழி" பற்றிக் கேட்டிருப்பதைப் படித்ததும், "தெய்வத்தின் குரல்" மூன்றாம் பகுதியில் பரமாசாரியார் சொன்னதை ரா.கணபதி அவர்கள் எழுதி இருந்தது நினைவில் வந்தது. அதில் இருந்து சில முக்கியமான பகுதிகளை இங்கே(மேலே உள்ளவை) கொடுத்தேன். தேவைப்படுபவர்கள் படித்துப் பயனுறலாம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறப்பான செய்திகள். அருமையாக விளக்கம் அளித்துள்ளீர்கள். நன்றி சகோதரி.

      நீக்கு
    2. வாங்க கமலா, விளக்கம் கொடுத்தது பரமாசாரியார். அதைப் பலமுறை படித்திருப்பதால் நினைவு வந்து தேடி எடுத்துப் பகிர்ந்தது மட்டும் தான் என் வேலை.

      நீக்கு
    3. கீதாக்கா சொல்லியிருப்பதை நானும் வாசித்திருக்கிறேன்...

      நினைவுக்கு வந்ததை இங்கே சொல்லி விட்டேன்...

      அக்கா அவர்களது விரிவான விளக்கத்துக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
    4. உன்னதமான கருத்துகள். எல்லோருக்கும் நன்றி!

      நீக்கு
    5. தெய்வத்தின் குரலில் பிள்ளையார் சுழி பற்றி மகா பெரியவர் கூறியிருப்பிவைகளை நானும் படித்து, புரிந்து கொண்டிருக்கிறேன். அதெல்லாம் பின்னாட்களில், எலிமெண்டரி ஸ்கூல் காலத்திலேயே பிள்ளையார் சுழி போடாமல் எழுதக்கூடாது என்று அம்மா சொல்லிக்கொடுத்ததை இன்றுவரை கடைபிடித்து வருகிறேன். ஒரு துண்டுச் சீட்டில் ஏதாவது குறித்துக் கொள்ள வேண்டும் என்றால் கூட பிள்ளையார் சுழி போடுவது என் பழக்கம். 
      போர்ட் எக்ஸாமிலும், யூனிவர்சிட்டி பரிட்சையிலும் பிள்ளையார் சுழி போடக்கூடாது என்று அறிவுறுத்தப் பட்டபொழுது கூட அதை பொருட்படுத்தியதில்லை.  

      நீக்கு
    6. பரீட்சைப் பேப்பரில், பிள்ளையார் சுழி, ஓம் முருகா என்றெல்லாம் எழுதும் பழக்கம், எனக்கு எட்டாம் வகுப்பு வரையில் இருந்தது என்று ஞாபகம். தொழில் நுட்பப் பள்ளியில் சேர்ந்த பிறகு, அந்தப் பழக்கத்தைக் கைவிட்டேன். என்னுடைய அலுவலகத்தில் பணிபுரிந்த ஒரு மேலாளர், வருகைப் பதிவேடு, சாலரி ஸ்லிப் என்று எல்லாவற்றிலுமே பிள்ளையார் சுழி மேலே போட்டு, அப்புறம்தான் கையெழுத்து இடுவார்!

      நீக்கு
    7. எங்கே போனாலும், வங்கிக்குப் போனாலும் செக்கில் கையெழுத்துப் போட வேண்டி இருந்தாலும் சின்னதாக ஒரு பேப்பர் துண்டு கையில் இருக்கும். அதில் பிள்ளையார் சுழியைப் போட்ட பின்னரே கையெழுத்தெல்லாம் போடுவோம்.

      நீக்கு
    8. புதிய பேனா எடுக்கும்போதும் சரி, நாளின் முதல்முறை பேனா உபயோகிக்க நேரும்போதும் சரி,  வருகைப்பதிவில் கையெழுத்திடும்போதும் சரி...  'ஓம்' என்று எழுதிவிட்டுத் தொடர்வது என் வழக்கம்.

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை. ஏன் என்ற கேள்விகள் பல கேட்கப்படும் போதுதான், பதில்களும் பிரகாசமாக வருகின்றன. அதற்கு சாக்ரடீஸ் உவமானம் நன்று.. கேள்விகளையும், பதில்களையும் மிகவும் ரசித்தேன்.

    கண் புரை பற்றிய கட்டுரை நன்றாக உள்ளது. அதற்கு கரப்பான் பூச்சியின் மனநிலையை உணர்ந்து எழுதியது தங்கள் மனிதாபிமானத்தை உணர்த்தியது. "தன்னைப்போல பிறரை எண்ணும் உள்ளம் வேண்டுமே" பாடல் நினைவுக்கு வந்தது.
    சிரிப்புடன் நல்ல சிந்தனை மிகுந்த வார்த்தைகளை ரசித்தேன். நல்லபடியாக அறுவை சிகிச்சை நடந்தது குறித்து மகிழ்ச்சி. தாங்கள் இயல்பாக விவரித்தாலும், அந்த கொஞ்ச நேரத்தின் படபடப்புக்கள் தங்களுக்கு எப்படி இருந்திருக்குமெனவும் என்னால் உணர முடிகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  14. அனைத்து கேள்விகளும், பதில்களும் அருமை.
    பதில்கள் சொல்லியவிதம் மிக அருமை.

    கண் ஆபரேஷன் செய்யும் போது நமக்கு எப்படி செய்யபடுகிறது என்பதை இன்னொரு கண்ணால் எதிரே இருக்கும் திரையில் நேரடி காட்சியாக பார்க்கலாம் பாருங்கள் என்றார்கள் நான் பயத்தில் மற்றொரு கண்ணை இறுக்க மூடிகொண்டு விட்டேன்.( மனதுகுள் இறைவனை வேண்டி கொண்டு இருந்தேன்)
    மருத்துவர் கண்களை திறங்கள் ஆப்ரேஷன் முடித்து விட்டது என்ற பிறகுதான் கண்ணை திறந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா. உண்மைதான். அந்த நேரத்தில், எதையும் பார்க்காமல் இருப்பது பதட்டத்தைத் தணிக்கும்.

      நீக்கு
  15. கற்பு என்பது இருபாலருக்கும் பொதுவானதே...
    ஆனால் உலக அளவில் என்று சொல்வதைவிட இந்தியாவில் மட்டும் பெண்களுக்கானது என்று திணிக்கப்பட்டது ஆணாதிக்கத்தால்தானே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படித்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    2. ஆணாதிக்கத்தினால் அல்ல. பெண்களின் உடல், உள்ள நலனுக்காக.. சந்தேகம் இருந்தால் விளக்குகிறேன்.

      நீக்கு
    3. இல்லை ஜீவி சார். கற்பு என்பது இருபாலாருக்கும் பொது.

      நீ மாட்டிக்கொள்வாய், அதனால் திருடாதே. நான் மாட்டிக்கொள்ளாமல் திருடுவேன் என்பது நன்னெறியில் வராதல்லவா?

      ஆணாதிக்கத்தைப் பற்றி என் மனதில் தோன்றுவதை பிறகு எழுதுகிறேன். நம் சமூகப் பழக்க வழக்கங்கள் பெண்களை அடிமைப் படுத்துவதாகவும், முன்னேற விடாமல் கட்டி இழுப்பதாகவும்தான் உள்ளது. இப்போ சிறிது மாறி வருகிறது.

      ஆணுக்குப் பெண் இங்கு இளைப்பில்லை காண்

      நீக்கு
    4. /// ஆணுக்குப் பெண் இங்கு இளைப்பில்லை காண்/// அப்படீன்னா இன்னா? எல்லோருமே குண்டாக இருக்காங்க என்று அர்த்தமா? (நான் தமிழில் 40/100 only!)

      நீக்கு
    5. இதென்ன இது புதுக்கதையாக் கிடக்கு.. உடல் நலனுக்காக செய்யவென எத்தனையோ விசயங்கள் இருக்கும்போது கற்பை எதுக்கு அங்கு திணிக்கோணும், அப்போ ஆண்களுக்கு அதனால் ஏதும் வியாதி வராதோ?.. சரி உடல் நலனுக்காக சொல்லப்பட்டதெனில், கற்புத்தவறும் பெண்களை மட்டுமேன் இழிவாகப் பேச வேண்டும்... அங்கு ஏன் ஒழுக்கம் கொண்டுவரப்படவேண்டும்.. ஒழுக்கம் என்பது இருபாலாருக்கும் சமமானதே.. தெரிஞ்சு தவறினாலும் தெரியாமல் தவறினாலும்.

      நீக்கு
    6. 'கற்பு நிலை என்று சொல்ல வந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்'  என்று பாரதியார் சொன்னார்.

      நீக்கு
    7. //கற்பை// - அதிரா -- இதனை சரியான இலக்கிய அர்த்தத்தில்தான் நீங்க புரிந்துகொள்ளணும்.

      'பிறன் மனை நோக்காப் பேராண்மை' - அ, த, பா ரசிகர்கள் இதுல தேறமாட்டாங்க (By the by சில நாட்கள் முன்பு பெட்ரோமாக்ஸ் என்ற படம் பார்த்தேன். காலம்தான் எவ்வளவு விரைவாக நம் கனவுக் கன்னிகளைச் சிதைத்துவிடுகிறது. அந்தம்மா முகத்துல போட்ட பெயிண்டைச் சுரண்டினால் இரண்டு வீடுகளுக்கு பெயிண்ட் அடித்துவிடலாம்... ம்ம்ம்)

      கற்பு என்பதற்கு ஒழுக்க நெறி என்பதுதான் சரியான அர்த்தம். எது எது சமூகத்தின் ஒழுங்கு என்று இரு பாலாருக்கும் சொல்லப்பட்டிருக்கிறதோ அதை ஒழுகி நடந்தால், 'கற்புடையவள், கற்புடையவன்' என்று சொல்லிக்கொள்ளலாம்.

      நீக்கு
    8. எனக்கு ஒண்ணுமே புரியலை ஆனாலும் நான் இலக்கியச்செம்மல் பின்னாடிதான் நிப்பேன் :) ஒண்ணுமில்லை விழுந்தா புடிச்சிக்கிறதுக்குத்தான் :) ..இலக்கியத்துக்கு ஒரு அடியும் படக்கூடா :)))))))))

      நீக்கு
    9. //நான் இலக்கியச்செம்மல் பின்னாடிதான் நிப்பேன் :) ஒண்ணுமில்லை விழுந்தா புடிச்சிக்கிறதுக்குத்தான் :) ..இலக்கியத்துக்கு ஒரு அடியும் படக்கூடா :))//
      வாய் விட்டுச் சிரித்துவிட்டேன்!

      நீக்கு
  16. கற்பு எனும் திண்மை உண்டாகப் பெறின்...
    என்று வள்ளுவப் பெருமான் அருள்வதும் சிந்திக்கத் தக்கது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. து செ சார்! விளக்கவுரையையும் நீங்கள் கொடுத்து அருளவேண்டுகிறேன். நான் தமிழ்ப் பாடத்தில் நூற்றுக்கு நாற்பது மார்க் மட்டும் வாங்கி, பாஸ் செய்தவன்.

      நீக்கு
    2. நாற்பது மதிப்பெண்கள்...

      ஆகா... அது போதுமே....

      டில்லி வரைக்கும் சொல்லி அடிக்கலாமே!..

      நீக்கு
  17. //# ஐ.டி கம்பெனி போல ஜஸ்ட் லைக் தட் பிஎஸ்என்எல் ஆட்களை "நாளை முதல் வர வேண்டாம்" எனச் சொல்ல முடியாததால் வி ஆர் எஸ் தந்து ஊக்குவிக்கிறார்கள்.  இரண்டுமே ஆட்குறைப்புதானே, முரண் எங்கே வந்தது ? // 
    பி.எஸ்.என்.எல். நிறுவனம் வி.ஆர்.எஸ். திட்டம் கொண்டு வந்த பொழுது 70000 பேர்கள் அதற்கு விண்ணப்பிப்பார்கள் என்று நினைத்ததாம், ஆனால், 1,50,000 பேர்கள் விண்ணப்பித்திருப்பதால் அதன் ஊழியர்கள் எண்ணிக்கை 50% குறைந்து விட்டதாம். அதை எப்படி ஈடு கட்டுவது என்று இப்போது யோசிக்கிறதாம். நான் இப்படி விவரமாக கேட்டிருக்க வேண்டுமோ? ஒரு பக்கம் வெளியே தள்ளப்படுகிறார்கள், இன்னொரு பக்கம் வெளியே செல்ல துடிக்கிறார்கள். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மொபைல் ஃபோன், வாட்ஸ் அப் எல்லாம் தலை எடுத்து, களைகட்டத் தொடங்கியவுடன், முதல் பலி பி எஸ் என் எல் லாண்ட் லைன் இணைப்புகள். இரண்டாவது பலி போஸ்டல் / கடித, தந்தி இலாக்கா. மூன்றாவது பலி எஸ் டி டி 'பூத்'கள்.

      நீக்கு
    2. 1. இன்றும் தபால் இலாகாவின் ரிஜிஸ்டர்டு தபால்கள் தான் ஒரு ஆவணத்தை அனுப்பி பெற்றுக் கொண்டதற்கு அத்தாட்சியாக கருதப் படுகின்றன.
      (உ.ம்) கோர்ட் நோட்டீஸ்கள் போன்றவை.

      2. தேசத்தின் எல்லைப் பிரதேசங்களில், இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களில், மலைகள்-- காடுகள் சூழ்ந்த பிரதேசங்களில், அணுகுவதற்கு சிரமமான சாலை வசதிகள் அற்ற இடங்களில், சிலரே வசிக்கும் எல்லையோர கிராமங்களில் பி.எஸ்.என்.எல். தொடர்பு சேவைகளே தொடர்கின்றன. இராணுவ கட்டுப்பாடு பிரதேசங்களில் அரசு சார்ந்த தொலைத்தொடர்பு வசதி இருப்பது முக்கியமானது.

      இருந்தும்.....

      நீக்கு
    3. "இருந்தும் ...." அங்கேதான் இருக்கு எல்லாம்!

      நீக்கு
    4. தபால் சேவை இப்போதும் திருப்தி அளிப்பதாகவும் செம்மையாகவும் இருந்து வருகிறது. நாங்க குட்டிக்குஞ்சுலுவின் முதல் பிறந்த நாளைக்குப் பட்டுப்பாவாடை வாங்கித் தபாலில் தான் அனுப்பினோம். எங்க பையருக்கு மருந்துகள் வாங்கித் தபாலில் தான் அனுப்புகிறோம். இதைப் பற்றிப் பதிவு கூடப் போட்டிருக்கேன். பிஎஸ் என் எல்லை எம்டி என் எல்லோடு சேர்க்கப் போவதாய் ஒரு பேச்சு அடிபடுகிறது. அதோடு இப்போ விருப்ப ஓய்வு கேட்டிருப்பவர்களுக்குப் பொருளாதார ரீதியில் நல்ல தொகை கிடைக்கும் என்பதாலும் பலரும் விருப்ப ஓய்வு கேட்டிருக்கலாம். மற்றபடி ஐடி துறையில் எப்போதுமே ஏற்ற இறக்கங்கள் இருக்கும். மாறி வரும் தொழில் நுட்பத்திற்கு ஏற்பத் தங்களையும் புதுப்பித்துக் கொள்ளுபவர்கள் நிலைத்து இருக்கிறார்கள். மற்றவர்களுக்குக் கொஞ்சம் கஷ்டம் தான் என எண்ணுகிறேன். ஆனால் அதில் திடீர் என உத்வேகம் கிளம்பும். கிளம்பலாம்.

      நீக்கு
  18. இன்று கேள்வி பதில்கள் அனைத்தும் என்னை சமாதானப்படுத்தி விட்டது:)).. இல்லை எனில் சுனாமியாகியிருப்பேனாக்கும்:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  19. புளொக்ஸ் உம் கொமெண்ட்ஸ் உம் பற்றி எழுதியிருக்கிறீங்க கெள அண்ணன், எனக்கும் இது புரியவில்லை, றூல்ஸ் இருப்பின் அதைப் பின்பற்றத்தான் வேண்டும், ஆனா புளொக்ஸ் எழுத றூல்ஸ் எதுவும் இருப்பதாக இதுவரை நான் அறிஞ்சதில்லை. பொதுவான கருத்து அடுத்தவர்களின் ஆக்கங்களைக் கொப்பி பண்ணி, உங்கள் சொந்த ஆக்கமாகப் போடக்கூடாது என்பது கூட றூல் இல்லை, ஒரு மனிதாபிமான அடிப்படைதான்.[அதனாலதான் எந்தப் பூனை எலியையும் நான் இங்கிருந்து களவெடுக்கவில்லையாக்கும்:))]

    முன்பு ஜலீலாக்காதான் அடிக்கடி அழுவா, தன் சமையல் குறிப்பை அப்படியே கொப்பி பண்ணி தம்முடையது போல போட்டிருக்கினம் என.. அது தப்புத்தானே.

    மற்றும்படி, நம் புளொக், நம் விருப்பம் தானே, இப்போ உங்களுக்கு[புளொக் ஓனருக்கு] அரட்டை பண்ணுவது பிடிக்கவில்லை எனில் ஆரும் பண்ணப்போவதில்லை.. மற்றும்படி இதிலென்ன இருக்கு.

    என் பக்கத்தைப் பார்த்தால் ஆரம்பகாலமெல்லாம் 400 கொமெண்ட்ஸ் கூட வந்ததாக நினைவு, அத்தனையும் கும்மியே தவிர, என் போஸ்ட்டுக்கானது அல்ல.. ஆனா அதிலிருக்கும் என் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை:))..

    ஒரு பொழுதுபோக்கிற்காகவும் மகிழ்ச்சிக்காகவும்தானே புளொக் எழுதுகிறோம், யாரையும் திருத்தவோ, என் அறிவைப்பரப்பவோ இல்லை[அதற்கு முதலில் நான் திருந்தோணும் ஹா ஹா ஹா]..

    முக்கியமாக என்னையும் அஞ்சுவையும் எடுத்துக் கொண்டால், நாமிருவரும் எங்களின்[நம்மிருவரின்] போஸ்ட்டுகளுக்குப் போய், பதிவுக்கு சம்பந்தமில்லாமல்தான் அதிகம் பேசி விட்டு வருவோம்:).. போஸ்ட்டைப்பற்றிப் ஒரு வசனம் கூடப் பேச மறந்த தருணங்களும் உண்டு.. ஆனா நமக்கு கோபமில்லை, எது உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறதோ அதைச் செய்யுங்கோ என்பதே என் எண்ணமும்.. இதிலென்ன இருக்கு.

    இன்னொன்றையும் சொல்ல விருப்பம் ஆனா பயமாகவும் இருக்கு, இன்றுவரை வெளியிடமுடியாத அல்லது திட்டி என எந்தக் கொமெண்ட்ஸ் உம் எனக்கு வந்ததில்லை[முன்பு பேஸ்புக்கில் கூட சட்டிங்கில் வந்து யாரும் ஒரு சொல்லுக்கூட தப்பாக பேசியதில்லை, இதனால எனக்கு மக்கள் மேல் அன்பும் நம்பிக்கையுமே வளர்ந்திருக்குது],... இனியும் வந்திடக்கூடாது வைரவா ஹா ஹா ஹா.

    ஓரிடத்துக்குப் போய் கொமெண்ட் போடுவதற்கு சுகந்திரமில்லை, இப்படித்தான் போட வேண்டும் என இருப்பின் எனக்கு அந்த போஸ்ட் படிக்கவே மனமிருக்காது.

    அதேபோல என் கொமெண்ட்ஸ் க்குப் பதில் கிடைக்காது எனத் தெரியும் இடங்களில் ஒரீரு வார்த்தைகளுக்கு மேல் பேச மனம் வருவதில்லை எனக்கு.. உண்மையில் பார்க்கப்போனால் அப்படி இடங்களுக்கு கடனே எனப் போய் சைன் வைத்துவிட்டு வருவதைப்போலத்தான் ஃபீல் பண்ணுகிறேன். என் கொமெண்ட்ஸ் க்குப் பதில் கிடைச்சால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் அதைப்பார்க்க.. அது என்னைத்திட்டியிருந்தால்கூட ஹா ஹா ஹா.

    இதனாலதானே கெள அண்ணன் உங்களோடும் முன்பு சண்டைப்பிடிச்சேன் , நமக்கு பதில் தருவதில்லை நீங்கள் என:)). உங்களோடு சண்டைபோட்டு பதில் வாங்கினேன், ஆனா எல்லோரோடும் சண்டைபோட முடியாதெல்லோ.. அப்படியான இடங்களில் மெதுவா ஒதுங்கி விடுவேன்:))..

    நான் எழுதியதில் ஏதும் தப்பிருப்பின்... என்னைக் கலைச்சுப் பிடிச்சு தேம்ஸ்ல தள்ளுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)) நான் யூஸ்[குடிப்பதல்ல காலுக்குப் போடுவது:)] எல்லாம் போட்டு ரெடியாகிட்டேன் ஓட.. முடிஞ்சால் பிடிச்சுப் பார்க்கவும்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா ! பேஷ் பேஷ். சூப்பராக சொல்லியிருக்கீங்க. வெல் டன். வெரி குட்.

      நீக்கு
    2. அதிரா... இதோ என் சமையல் குறிப்பு.. எப்படி சாதம் செய்வது என. இனி யாராவது என்னிடம் பெர்மிஷன் வாங்காமல் சாதம் சமைத்தால்... பச்சைக்கல் அட்டிகை.... வேண்டாம்.. நவரத்ன மோதிரம் தந்தால் போதும்

      நீக்கு
    3. ஆங் ..... எனக்கு ஒன்றும் கிடையாதா!

      நீக்கு
    4. //இனி யாராவது என்னிடம் பெர்மிஷன் வாங்காமல் சாதம் சமைத்தால்.//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. அப்போ நான் நேற்றுச் செய்த உங்கட மாங்காய்த்தொக்கை இப்போ போடட்டோ வாணாமோ?:)..

      //பச்சைக்கல் அட்டிகை.... வேண்டாம்.. நவரத்ன மோதிரம் தந்தால் போதும்//
      ஆஆஆஆஆஆஆ எனக்கான டயமன் மோதிரம் இப்போ தயாராகிக்கொண்டிருக்கும் விபரம் உங்களுக்கு எப்ப்பூடித்தெரிஞ்சது?:)) நிஜமாத்தான்...

      நீக்கு
    5. //
      கௌதமன்20 நவம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 2:48
      ஆங் ..... எனக்கு ஒன்றும் கிடையாதா!//

      https://gloimg.gbtcdn.com/gb/pdm-provider-img/straight-product-img/20171122/T001610/T0016100021/goods-img/1511579838560698745.jpg

      நீக்கு
    6. /இன்றுவரை வெளியிடமுடியாத அல்லது திட்டி என எந்தக் கொமெண்ட்ஸ் உம் எனக்கு வந்ததில்லை// - நான் பர்ஸ்ட்டூ என்று எல்லா இடங்களிலும் முதலில் பின்னூட்டம் போட்டுடறீங்க இல்லையா? உங்களைத் திட்டி முதல் பின்னூட்டம் என்னிடமிருந்து வந்தது என்ற பெருமையை நான் விரைவில் பெறணும்... ஹா ஹா

      //அதேபோல என் கொமெண்ட்ஸ் க்குப் பதில் கிடைக்காது எனத் தெரியும் இடங்களில் ஒரீரு வார்த்தைகளுக்கு மேல் பேச மனம் வருவதில்லை எனக்கு.// - நான் அந்த இடங்களில் வெகு அபூர்வமாகத்தான் பின்னூட்டம் இடுவேன். சில நேரங்களில் எ.பியிலும் மறுமொழி கொடுக்க அவங்களுக்கு நேரம் இருப்பதில்லை (எனக்குத் தெரியும், தவிர்க்கமுடியாமல் பிஸியாக இருக்காங்கன்னு). எந்த எந்தத் தளங்களில் பின்னூட்டத்துக்கு மறுமொழி கொடுக்கறாங்களோ அங்கு நான் பின்னூட்டம் இட்டிருக்கிறேன் (இடுகையைப் படித்தால் ஹா ஹா)

      //போஸ்ட்டைப்பற்றிப் ஒரு வசனம் கூடப் பேச மறந்த தருணங்களும் உண்டு// - நானும் சில இடுகைகளில் (தளங்களைக் குறிப்பிட்டால், சிலவற்றை மறதியில் விட்டுவிடுவேன்), பின்னூட்டங்களுக்கு மறு பின்னூட்டம் என்றுதான் கருத்திட ஆரம்பித்திருக்கிறேன்.

      //அரட்டை பண்ணுவது பிடிக்கவில்லை எனில் ஆரும் பண்ணப்போவதில்லை.. மற்றும்படி இதிலென்ன இருக்கு.//

      உங்க கருத்துகளெல்லாம் மிகச் சரியா இருக்கு (அதிசயமா என்று சொல்லமாட்டேன். சீரியஸாக நீங்கள் எழுதினால் அது சரியாக அமைந்துவிடுகிறது)

      நீக்கு
    7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    8. கொடி தாங்கியே வருக :) வாழ்க 

      நீக்கு
    9. ///Angel21 நவம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 12:07
      இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.///

      நோஓஓஓஓஓஓஓஓஓஓஒ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஏன் அகற்றப்பட்டது என்னை ஏதும் சொல்லித்திட்டிட்டு அழிச்சிட்டாபோலும் கெள அண்ணன் விடாதீங்கோ அஞ்சுவைக் கேளுங்கோ அதிராவைத்திட்டினனீங்களோ என....:))

      நீக்கு
    10. @நெ.த
      ///உங்க கருத்துகளெல்லாம் மிகச் சரியா இருக்கு (அதிசயமா என்று சொல்லமாட்டேன். சீரியஸாக நீங்கள் எழுதினால் அது சரியாக அமைந்துவிடுகிறது)///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
  20. பதில்கள் சொல்லிய விதம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  21. ’பகவத் கீதையை தமிழில் எழுதி இருந்தேன் அதில்/கீதை வழியில் பலன் கருதாது செயல்படுதல் தவிர வேறு தீர்வு ஏது ?
    எதிர்பார்ப்பு இன்றேல் ஏமாற்றமில்லை.\அதில் இம்மாதிரி ஏதும் இருக்கவில்லைஆனால் / கடமையைச் செய் பலனை என்னிடம் விட்டுவிடு என்றும் கீதையில் இல்லை. பலனை எதிர்பாராமல் செய் என்னும் கிட்டத்தட்ட பொருளில் அத்தியாயம் 2-ல் சுலோகம் 47 சொல்கிறது” வினையாற்றக் கடமைப் பட்டுள்ளாய்,வினைப்பயனில் ஒரு பொழுதும் உரிமை பாராட்டாதே. வினைப்பயன் விளைவிப்பவன் ஆய்விடாதே, வெறுமனே இருப்பதில் விருப்பு கொள்ளாதே”என்றுவரும்

    பதிலளிநீக்கு
  22. வெகு சுவாரஸ்யமான கருத்து பரிமாற்றங்கள்.வெகு
    வெகு நாட்களுக்குப் பிறகு நல்ல விருந்து உண்ட நிறைவு. நன்றி.

    பதிலளிநீக்கு
  23. ஆஆஆ ஒபரேஷன் முடிஞ்சுதோ.. இப்போ உத்துப் பாருங்கோ ஸ்ரீராமை:), அவரின் தாடி தெரியுதோ கெள அண்ணன்? அது என்ன கலராத் தெரியுது?:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஸ்ரீராமைப் பார்த்து பல மாதங்கள் ஆகிவிட்டன.

      நீக்கு
    2. //இப்போ உத்துப் பாருங்கோ ஸ்ரீராமை:), அவரின் தாடி தெரியுதோ கெள அண்ணன்? அது என்ன கலராத் தெரியுது?:))//

      இதில் என்ன சந்தேகம்?  கருகருவென அடர்முடி, தாடி மீசையோடு நல்லா ஜம்முனு இருக்கேன்! ஆமாம்,  தாடி மஸ்ட்டா?

      நீக்கு
    3. ம்ஹூம்ம்... அது, கெள அண்ணன் வந்து, அந்த ஒபரேட் பண்ணிய கண்ணால பார்த்துச் சொன்னால் மட்டுமே நம்புவோமாக்கும்:))

      நீக்கு
  24. //முக்கியமாக, புதன் வியாழன் பதிவுகள் அரட்டை அரங்கம் போல்தான். வாசகர்களும், பதிவாசிரியரும், கலந்துரையாடல் செய்வோம். இதை நிறுத்துவதாக இல்லை. // - ஏன் திங்கள், செவ்வாயை விட்டுவிட்டீர்கள். சில சமயங்களில் சனிக் கிழமை இடுகையையும் சேர்த்துக்கொள்ளலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திங்கள் & செவ்வாய் பதிவுகள் நம் உள்ளம் கவர் வாசகர்கள் பதிவுகளாக இருப்பதால் அந்தப் பதிவுகளின் பின்னூட்டங்களுக்கு பெரும்பாலும் அந்தப் பதிவாளரே மறுமொழி இட்டால் சரியாக இருக்கும் என்று நினைத்து நாங்கள் கொஞ்சம் அடக்கி வாசிப்போம். மற்ற நாள் பதிவுகளில் படிப்பவர்கள் என்ன கருத்து பதிவு செய்தாலும் படித்து பதில் அளிக்க வேண்டிய இடத்தில் பதில் response or reaction அளிப்போம்.

      நீக்கு
    2. நீங்க நல்லாத்தான் சொல்றீங்க. பாருங்க... கேஜிஒய் அவர்களுக்கு காசி அல்வா செய்துகொடுத்து அவர் நல்லாருக்குன்னு (முகதாட்சண்யத்துக்காக இருக்குமோ?) சொல்லி, அப்புறம் எ.பிக்கு அனுப்பி வெளிவந்தால், அதில் அவர் பின்னூட்டம் இல்லை. இது அநியாயமில்லையோ?

      நீக்கு
    3. அதுதான் நேரிலேயே சொல்லிட்டோமே என்று நினைத்திருப்பார்.

      நீக்கு
  25. //எங்கள் எதிர்பார்ப்பு, உங்கள் பங்கேற்பு. அது காலை வணக்கமாக இருந்தாலும் சரி, கொஞ்சம் இருங்க பதிவைப் படித்துவிட்டு வருகிறேன் என்பதாக இருந்தாலும் சரி, உங்கள் கைக்காரியங்களைப் பற்றிய பகிர்வாக இருந்தாலும் சரி. இது ஒரு அரட்டைக் கச்சேரி மேடை. நீங்க இங்கே வந்து என்ன கருத்து பதிவு செய்தாலும், வணங்கி வரவேற்கிறோம். பதிவை விடப் பின்னூட்டங்கள் அல்லது அதை வைத்து செய்யப்படும் பகடிகள் எல்லாம் இன்னும் சுவாரஸ்யமாக அமைவது உண்டு. //

    1. கணையாழி (என்று தங்களை நினைத்துக்கொள்பவர்கள், அதாவது தாங்கள்தாம் இலக்கியத்தரம் என்று எண்ணிக்கொள்பவர்கள்), குமுதத்தின் மீது அசூயை கொள்வது போன்றுதான், இங்கு வரும் பின்னூட்டங்களைப் பற்றி எண்ணுகிறார்கள் என்று சொல்லத் தோன்றுகிறது. ஏன் இங்கு அல்லது இதனைப்போன்ற சில பிளாக்குகளில் அதிகமான பின்னூட்டங்கள் (அதிலும் யார் மனத்தையும் புண்படுத்தாமல், ஜாலியான பின்னூட்டங்கள்) வருகின்றன என்று யோசிக்கணும். இங்கு மாத்திரம் ஏன், 'காலை வணக்கம்', 'ப்ரார்த்தனைகள்' போன்ற பின்னூட்டம் வருகின்றன? எ.பிக்கு வருபவர்கள் நெருங்கிய நண்பர்கள் என்ற நினைப்புதான் எல்லோரையும் வரவைக்கிறது என்று நினைக்கிறேன். அந்த 'நட்பு' இருக்கவேண்டும் என்று ஆசிரியர்கள் நினைப்பதால்தான், 'அரசியல்' பதிவுகளோ இல்லை 'ரிலீஜியஸ்' பதிவுகளோ இங்கு எழுதுவதில்லை, இடம்கொடுப்பதில்லை. இதன் காரணம், 'யார் மனதும் புண்படக்கூடாது, இது ஒரு ஜாலியான இடமாக இருக்கணும்' என்ற காரணம்தான்.

    2. ஏன் 'பிளாக் நடத்துபவர்கள்', இங்கும் தங்களது contributionஐ அனுப்புகிறார்கள் என்றும் யோசித்துப் பார்க்கணும். 'நட்பு', 'யாரையும், தான் மிகப் பெரிய அறிவாளி என்று நினைத்துக்கொண்டு புண்படுத்தாத தன்மை', 'Encouragement' இவைதான் முக்கியக் காரணம். இங்கும் விமர்சனம் 'ஜால்ராவாக' இருக்கணும் என்று எதிர்பார்ப்பதில்லை. விமர்சனம், யார் மனத்தையும் புண்படுத்தக்கூடாது என்று மட்டும்தான் நினைக்கிறார்கள்.

    3. முதல்ல பிளாக்கில் இடுகை வெளிவந்தாச்சுன்னா, அது யார் வேணும்னாலும் படிக்கலாம் என்று சொல்வது போல்தான். பிடித்திருந்தால் பின்னூட்டம் போடுவாங்க, இல்லைனா போடமாட்டாங்க. என்னைப் பொறுத்த வரையில் பிளாக் பிடித்திருந்து, கருத்திட்டால், அதற்கு மறு மொழி எதிர்பார்ப்பேன். தொடர்ந்து மறுமொழி வராத இடங்களில் நான் பின்னூட்டம் இடுவதில்லை என்று கொள்கை வைத்திருக்கிறேன். இதனைத்தான் பெரும்பாலானோர் செய்கிறார்கள் என்றும் தோன்றுகிறது.

    4. பிளாக் எழுத்து என்பது, சும்மா ஜாலியான அல்லது ரசனையான எழுத்துக்களை எழுதி மற்றவர்களை ஆர்வத்துடன் படிக்கத் தூண்டுவதுதான். அதுக்கு வரும் பின்னூட்டம் இப்படித்தான் இருக்கணும் என்று சொல்வது கடினம். சிலசமயங்களில், எங்கள் பிளாக்கிலேயே, பின்னூட்டங்களின் தொடர்ச்சி (பின்னூட்டம், மறுமொழி, பிறரின் அனுபவம் என்றெல்லாம்) இடுகையைவிட இன்னும் ரசனையாக இருந்துவிடும். இந்த இடுகையிலேயே அதற்கான உதாரணங்கள் உண்டு.

    நான், எங்கள் பிளாக்கில் லிஸ்ட் பண்ணப்பட்டிருக்கும் தளங்களுக்கு மட்டும்தான் பெரும்பாலும் சென்று பார்க்கிறேன். காரணம் வேறு எதுவுமில்லை. இந்த பிளாக்கைத்தான் வாரத்தின் பெரும்பாலான நாட்களில் படிக்கிறேன்.(எல்லாப் பின்னூட்டங்கள் உட்பட்). சில சமயம் இடுகையைப் படிப்பதற்கு முன்பு, பின்னூட்டங்களைப் படித்து அதற்கு மறுமொழி/கலாய்ப்பு/அரட்டை என்று எழுதுவேன். பிறகு நேரம் கிடைக்கும்போது இடுகையைப் படித்துக் கருத்திடுவேன்.

    கேஜிஜி சாரின் கருத்து ஏற்கத்தக்கது. நீங்க உங்க வழியிலேயே தொடருங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். பாயிண்ட் பை பாயிண்ட் பிரமாதம். நன்றி.

      நீக்கு
    2. ஆஆ நெல்லைத்தமிழன் பதில் எங்கும் நான் எப்பவும் போடத்தவறினாலும் நோட்டிபிகேசன் வச்சுப் படிச்சிடுவேன், உண்மை அழகாக சொல்லிட்டீங்க..

      நீக்கு
  26. யாரோ என் பேரை இங்கே சொன்னமாதிரி இருந்தே !!! நம்ம நிலைமை full டைம் வேலைக்கு போக துவங்கினத்தில இருந்து அடிவாங்கிய வடிவேலு நிலைமையா போச்சு :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓஹோ ! இப்படி ஒரு நிலையா! வாழ்க்கையில் இதுவும் ஒரு stage என்று ரசியுங்கள்.

      நீக்கு
  27. //முக்கியமாக என்னையும் அஞ்சுவையும் எடுத்துக் கொண்டால், நாமிருவரும் எங்களின்[நம்மிருவரின்] போஸ்ட்டுகளுக்குப் போய், பதிவுக்கு சம்பந்தமில்லாமல்தான் அதிகம் பேசி விட்டு வருவோம்:).. போஸ்ட்டைப்பற்றிப் ஒரு வசனம் கூடப் பேச மறந்த தருணங்களும் உண்டு.. //

    எங்களுக்கு எப்போ யார் காலை யார் வாரி விடறதுன்னுதானே குறியா கருத்தா இருப்போம் :))))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல விளையாட்டாக இருக்கு. சந்தோஷமா இருந்தா சரிதான்!

      நீக்கு
    2. //எங்களுக்கு எப்போ யார் காலை யார் வாரி விடறதுன்னுதானே குறியா கருத்தா இருப்போம் :))))))))))//

      அல்லோ மிஸ்டர் அஞ்சு:) சொல்றதைதெளிவா சொல்லோணும்.. நம்மிருவரின் காலை என:)) கெள அண்ணன் பயந்திடப்போறார் தன் காலையோ எண்டு ஹா ஹா ஹா:)

      நீக்கு
  28. @கௌதமன் சார் ..எனக்கு எப்பவும் ஹாப்பியா இருப்பதே பிடிக்கும் .ஒரு நாளின் துவக்கத்தை வாழ்த்துக்களோடு பெரியவங்க அன்போடு ஆசியோடு துவக்குவது மிகவும் சிறந்தது .பக்கத்துக்கு வீட்டில் இருப்பவர் பெயர் கூட தெரியாத நாட்டில்தான் நாங்கள் வாழ்கிறோம் .இங்கே மட்டுமில்லை உலகெங்கும் அன்பு தேவைப்படுகிறது அதை கொடுப்பதில் தவறில்லை .அந்த பார்க்கும்போது  நம்மை மட்டுமில்லை இங்கே பதிவுகளை வாசிக்கும் சைலன்ட் வியூவர்ஸையும் சந்தோஷப்படுத்தும்நாங்க எங்கள் பிளாகை எங்க பிளாகா நினைக்கரத்தால்தான் இவ்ளோ கும்மியடிக்கிறோம் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் சரி. எங்களுக்கு வாசகர்களும் அவர்களுடைய கருத்துகளும் முக்கியம். கும்மிகள் எல்லாவற்றையுமே நாங்கள் ரசிக்கிறோம். சிரிக்கிறோம்.

      நீக்கு
  29. /2. சுற்றமும் நட்பும் நிறைய வேண்டும் என விரும்புவோர் அதிகம் தனிமைப்படுத்தப்படுகிறார்களே அது ஏன்?//
    யார் இந்த மாதிரி இவ்வளவு அறிவுபூர்வமான கேள்வியை கேட்டிருக்காங்கன்னு மேலே பார்த்தா ..இலக்கியசெல்வி சம்சவல்லியா :)) 
    மீ அப்டியே ஷாக் ஆகிட்டேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா அம்சவல்லி அதிரடி, இலக்கியச் செம்மல் என்ன உரைக்கின்றாரோ பார்ப்போம்!

      நீக்கு
  30. கௌதமன் சார் நீங்க ரொம்ப மென் மனத்துடையவர் :) கரப்ப்பான் பூச்சி எப்படி யோசிக்கும்னுலாம் உணர்ந்து எழுதியிருக்கின்கீங்க :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா - சிறிய வயதில், தமிழ்ப் பாடத்தில் ஒரு பாடம், 'அஞ்சலட்டை' பேசுவதைப்போல் எழுதப்பட்டிருக்கும். அதே போல உங்களைப் 'பஞ்சுப் பொதி' என்று நினைத்து, கட்டுரை எழுதுங்கள் என்று ஆசிரியர், தேர்வில் கேள்வி கேட்பது உண்டு. இங்கே நான் கரப்பாம்பூச்சியாக இருந்து கொஞ்சம் எழுதிப் பார்த்தேன்!

      நீக்கு
    2. ///Angel21 நவம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 1:14
      கௌதமன் சார் நீங்க ரொம்ப மென் மனத்துடையவர் :)//
      எதுக்கு இவ்ளோ ஐஸூ வைக்கிறா:))

      நீக்கு
  31. இம்முறை போட்ட அரட்டையில் கிளவியைக் கூட்டி வர மறந்திட்டேன்:)..

    என் முதல் கொஸ்ஸ்ஸ்:)
    1. கொன்றால் பாவம் தின்றால் போச்சு.. என்பதன் சரியான அர்த்தம் என்ன?
    சில பாடல்களில் இவ்வரி வருகிறது[பழைய பாட்டுக்களில்].. இன்றும் ஒரு பாட்டில் வந்துது இவ்வரி.

    பதிலளிநீக்கு
  32. 2.குடும்பத்தை நல்லபடி நடத்தத் தெரிந்தவர்கள் ஆண்களா? பெண்களா?

    3.தன் பிள்ளையைக் எங்காவது கூட்டிச் செல்லும்போது, கண்ணின் மணிபோலவும், அடுட்த்ஹவர்[நண்பர்கள்] பிள்ளையைக் கூட்டிச் செல்லும்போது ஏனோதானே எனப் பொறுப்பில்லாமலும் பலர் இக்காலத்தில் இருக்கிறார்கள், அவர்கள் பற்றி என்ன நினைக்கிறீங்க?

    4.கண்ணன் என்றாலே பெண்கள் கூட்டத்துள் இருப்பவர் எனும் கருத்து ஏன் வந்தது?..

    5. பல ஆண்களுக்குப் பாசத்தை வெளிக்காட்டத் தெரியாது எனப் பொதுவான கருத்து நிலவுதே அது உண்மையோ?:) இல்ல தப்புவதற்காகச் சொல்லப்படும் சாட்டோ?:).

    6. எப்படியும் வாழலாம்.. பொழுதைக் கழிச்சால் சரி, எனும் மனநிலையோடு இருப்போர் எப்படிப் பட்டவர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //4.கண்ணன் என்றாலே பெண்கள் கூட்டத்துள் இருப்பவர் எனும் கருத்து ஏன் வந்தது?..// இந்த உலகில் கண்ணன் ஒருவனே ஆண்! மற்ற அனைவரும் பெண்கள் என்னும் கோட்பாடில் தான் எப்போதும் கண்ணன் பெண்கள் புடைசூழ இருப்பதாக வரும்! ஆனால் இதைப் புரிந்து கொள்வது கஷ்டம்! ராசலீலை எனப்படும் நீர் விளையாட்டுக் கூடக் கண்ணன் கோபியரோடு விளையாடி அவர்களுக்கு ஞானத்தைப் புகட்டியது என்பார்கள். பக்த மீராபாய் மதுராவில் ப்ருந்தாவனம் சென்ற போது ஸ்வாமி ஹரிதாஸைச் சந்திக்க விரும்பினாராம். ஹரிதாசோ பெண்களை எல்லாம் துறவியாகிய நாம் சந்திக்க மாட்டோம் எனப் பதில் சொல்ல, "கண்ணனின் சந்நிதியில் அனைவரும் பெண்களே! இங்கே ஆண் கண்ணன் ஒருத்தனே!" என்று பதில் சொல்ல ஹரிதாஸுக்குத் தன் தவறு புரிந்தது என்பார்கள்.

      நீக்கு
    2. எங்கள் பதில் அடுத்த வாரம்.

      நீக்கு
  33. 1,குழந்தையை தூளியிலோ அல்லது கால்களிலோ தோளிலோ போட்டு ஆராரோ பாடி கஷ்டப்பட்டு தூங்க வைப்போம் ..அப்பாடான்னு அரை டு ஒரு மணிநேர போராட்டத்தின் பின் பெருமூச்சு விடும்போது கண்ணை சிமிட்டி சிரிக்கும் நண்டு சிண்டுகளின் ஏமாற்று வேலைகளை ரசித்ததுண்டா ?அனுபவித்திருக்கிறீர்களா ??
    2, டெய்லி காலை 8 மணி வேலைக்கு அலாரம் வச்சி எழும்பறோம் ஆனா அலார்ம் வைக்காத நாளிலும் அதே டைமுக்கு முழிப்பு வருதே ??? அந்த அனுபவங்கள் எல்லாருக்கும் இருக்கா ?
    3, ஒருவர் நல்லது செய்யும்போது எதையும் ஆராயாமல் பாராட்டி  ஏற்கும் உலகம் அதே அவர்  ஒரு தவறு சின்னதா செஞ்சாலும் உடனே அவரின்  ஹிஸ்டரி ஜியோகிராஃபி anthropology என கிளறுவதேன் ??
    மூணு கேள்விகள்தான் இப்போதைக்கு :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //1,குழந்தையை தூளியிலோ அல்லது கால்களிலோ தோளிலோ போட்டு ஆராரோ பாடி கஷ்டப்பட்டு தூங்க வைப்போம் ..அப்பாடான்னு அரை டு ஒரு மணிநேர போராட்டத்தின் பின் பெருமூச்சு விடும்போது கண்ணை சிமிட்டி சிரிக்கும் நண்டு சிண்டுகளின் ஏமாற்று வேலைகளை ரசித்ததுண்டா ?அனுபவித்திருக்கிறீர்களா ??// பலமுறை, பல குழந்தைகளிடம் கண்டிருக்கேன். இப்போ நம்ம குட்டிக்குஞ்சுலு! :))) சொர்க்கமே அதான்!

      நீக்கு
    2. எங்கள் பதில் நவம்பர் 27.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!