வெள்ளி, 22 நவம்பர், 2019

வெள்ளி வீடியோ : வீடுகள் தோறும் ஒளியே வருக இருளே வர வேண்டாம்



முதலில் நேயர் விருப்பம்!  துரை செல்வராஜூ ஸார் கேட்டிருந்த "பூமாலையில்... " பாடல்.



1967இல் வெளிவந்த ஊட்டி வரை உறவு.  ஸ்ரீதர் இயக்கத்தில் வந்த நகைச்சுவைத் திரைப்படம்.  டி எஸ் பாலையா, சிவாஜி கணேசன், கே ஆர் விஜயா, முத்துராமன் நடித்து 1967இல் வந்த இந்த திரைப்படத்தை 1983 இல் நாகேஸ்வரராவும் ஸ்ரீதேவியும் நடிக்க தெலுங்கில் வேறு எடுக்கப்பட்டு வெற்றி அடைந்தது தெரியுமோ?  விக்கி சொல்கிறது! இந்தப்படத்தில் நடித்தபின் எல் விஜயலக்ஷ்மி திருமணம் செய்து கொண்டு படவுலகுக்கு முழுக்குப் போட்டு விட்டார் என்றும் தகவல் சொல்கிறது விக்கி!



கண்ணதாசன் பாடல்களுக்கு எம் எஸ் விஸ்வநாதன் இசை.  இந்தப்படமும் கோபு ஸார் வசனத்தில் நகைச்சுவையில் மிளிர்ந்த படங்களில் ஒன்று.

புது நாடகத்தில் ஒரு நாயகி, தேடினேன் வந்தது, ஹேப்பி இன்று முதல் ஹாப்பி.., அங்கே மாலை மயக்கம் யாருக்காக, ராஜராஜஸ்ரீ, யாரோடும் பேசக்கூடாது என்று  இதில் அனைத்துப் பாடல்களும் ஹிட்தான். 

இந்தப் பாடல் டி எம் எஸ் அவர்களும், சுசீலாம்மாவும் பாடியிருக்கிறார்கள். இன்று இரண்டு பாடல்களிலும் சுசீலாம்மா குரல் இருக்கிறது.  

பூமாலையில் ஓர் மல்லிகை 
இங்கு நான் தான் தேன் என்றது 
உந்தன் வீடு தேடி வந்தது 
இன்னும் வேண்டுமா என்றது 

சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம் 
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்  
சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம் 
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும் 
கரும்போ கனியோ கவிதைச் சுவையோ 
கரும்போ கனியோ கவிதைச் சுவையோ 
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில் 
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்  

மஞ்சம் மலர்களைத் தூவிய கோலம் 
மங்கல தீபத்தின் பொன்னொளி சாரம் 
இளமை அழகின் இயற்கை வடிவம் 
இளமை அழகின் இயற்கை வடிவம் 
இரவைப் பகலாய் அறியும் பருவம் 
இரவைப் பகலாய் அறியும் பருவம்  
பூமாலையில் ஓர் மல்லிகை 
இங்கு நான் தான் தேன் என்றது 
உந்தன் வீடு தேடி வந்தது 
ன்னும் வேண்டுமா என்றது 
இன்னும் வேண்டுமா என்றது





அடுத்து வருவது என் பகிர்வு.


  
வெளி வந்த ஆண்டு 1966.  

ரஷ்யக் கதையை உரிமை வாங்கி எடுக்கப்பட்ட படம்.  கதையும் பாடல்களும் கண்ணதாசன்.  வசனம் ஏ எல் நாராயணன். 



சிவாஜி, எஸ் எஸ் ஆர், முத்துராமன், நாகேஷ், பத்மினி, விஜயகுமாரி, தேவிகா, ஜெயலலிதா, சாந்தகுமாரி எல்லோரும் 'கௌரவ நடிகர்கள்'!

சிவகுமார் உள்ளிட்ட மற்றவர்கள் கௌரவமில்லாத நடிகர்கள் என்று நினைக்க வேண்டாம்!!!   அவர்கள்தான் முக்கிய நடிகர்கள்!



இசை கே வி மகாதேவன்.  படத்தில் ஒரே ஆண்குரல் சீர்காழி கோவிந்தராஜன் (கருநீல மலைமேலே)

ஆர் எம் கண்ணப்பன் தயாரிப்பு, பி. புல்லையா இயக்கம்.

சமீபத்தில் பி சுசீலாம்மா தனது 85 வது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடினார்.  அதைப்பற்றி இங்கு படிக்கலாம்.  இங்கும்.

சென்னை: இசை அரசி என்று எல்லாராலும் பெருமையாக அழைக்கப்படும், பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா தன், 85 வது பிறந்த நாளை, நேற்று முன்தினம், ரசிகர்களுடன், 'கேக்' வெட்டி கொண்டாடினார்.

சென்னையில் நடந்த இந்த விழாவை, 'தினமலர்' நாளிதழ் முன்னெடுத்து, அவரது ரசிகர்களுடன் கொண்டாடியது. விழாவில், மதுரை, 'தினமலர்' வெளியீட்டாளர் எல்.ராமசுப்பு, கோவை, 'தின மலர்' வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம் ஆகியோர், பி.சுசீலாவிற்கு பரிசு கொடுத்து, பாராட்டி கவுரவித்தனர்.

இவர்களைத் தொடர்ந்து சுசீலாவின் ரசிகர்கள், அவருக்கு மலர் கொத்து கொடுத்து மகிழ்ந்தனர். கூடவே தங்களுக்கு சுசீலாவின் பாடல்கள் ஏற்படுத்திய தாக்கங்களை குறித்து, உணர்வு பூர்வமாக பேசினர்.விழாவில், ஆடிட்டர் ருத்ரகுமார், கண்ணதாசன் பதிப்பகம் காந்தி கண்ணதாசன், மதுரா டிராவல்ஸ் பாலன், நடிகை சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். லஷ்மன் சுருதி அமைப்பாளர் லஷ்மன், தொகுத்து வழங்கினார்.நிகழ்ச்சியை முன்னிட்டு சுசீலா பற்றிய குறும் படம் திரையிடப்பட்டது; புகைப்பட கண்காட்சியும் நடத்தப்பட்டது.




இந்தப் பாடலை கேட்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ரசிக்காதவர்களும் இருக்க முடியாது.  என்ன ஒருஅமைதியான பாடல்.  என்ன ஒரு குரல்...   என்ன வரிகள்...  என்ன இசை...

கே வி எம் பற்றி எஸ் பி பி சொன்ன ஒரு சம்பவம்...  அதாவது எஸ் பி பி யிடம் திரு புகழேந்தி சொன்னதாக எஸ்பி பி சொன்ன சம்பவம்.



கேவிஎம்மின் உதவியாளர் புகழேந்தி அவர்கள்.  உதவியாளர் என்றில்லாமல் ஒரு உறவினர் போல அவர்தான் கேவிஎம்முக்கு எல்லாமுமாய் இருந்திருக்கிறார்.    அவர்தான் கேவிஎம்மை ஸ்டுடியோவுக்கு காரில் அழைத்துத்துச்சென்று - காரை ஒட்டிக்கொண்டு- வருபவர்.   ஒரு நாள் ஸ்டுடியோவில் டி எம் எஸ் பாடவேண்டிய பாடல் ஒன்றின் ரிஹர்சல். அது முடிந்து  'டேக் போகலாம்' என்றதும் டி எம் எஸ் பாடினாராம்.  மாமாவைப் பொறுத்தவரை ஓரளவு திருப்தியாய் வந்து விட்டால் ஓகே சொல்லி விடுவாராம்.  முதல் முறை பாடும்போது வரும் உணர்ச்சி, பாவம்தான் உண்மையாக இருக்கும் என்று நம்புபவர் அவர்.  அவர் ஓகே சொல்லி விடப்போகிறாரே என்று அவசரமாக திரு புகழேந்தி  மைக்ரோபோனில் ''சௌந்தர்ராஜன்ஜி... கடைசி சரணத்தில் முடிவில் அந்த சங்கதி...." என்று ஞாபகப்படுத்தவும் "ஓ...   அதை மறந்து விட்டேனா?  நிறைய ரிஹர்சல் பார்த்தோம் இல்லை?" என்று கேட்டுவிட்டு டி எம் எஸ் 'ஒன்மோர் டேக்' போனாராம்.  இதுமாதிரி மூன்று நான்கு முறை நடந்ததாம்.  நான்காவது முறை புகழேந்தி பேசும் முன் மாமா ஓகே சொல்லி விட்டாராம்.   அதற்கு டி எம் ஸிடம் அவர் சொன்ன காரணம் 'நாங்கள் சொல்லிக் கொடுத்த முறை தவறாக இருக்கலாம்' என்றாராம்.  புகழேந்தி, மாமாவை வீட்டில் விட்டுவிட்டு கிளம்பும் முன் மாமா அவரிடம் "கோபமா?" என்று கேட்டாராம்.  புகழேந்தி அவர்கள் எப்போதும் அவர் கண்ணைப் பார்த்தே பேசமாட்டாராம்.  இப்போதும் அப்படியே தரையைப்பார்த்து "ஆமாம்.  அவர் பற்றி ஒன்றும் சொல்லவில்லை என்பது சரி...   ஆனால் நான் சொல்லிக் கொடுத்ததில் தவறு இருக்கும் என்று சொல்லி விட்டீர்களே"  என்றாராம்.  "அப்படி இல்லை...   எப்போது நான்குமுறை பாடியும் அவருக்கு அந்த சங்கதி வரவில்லையோ, அப்போது இதுதான் சரி என்று இருக்கவேண்டும்.  அல்லது அவரால் அது பாடமுடியவில்லை என்று கொள்ளவேண்டும்.  மறுபடி மறுபடி டேக் போனால் அவருக்கும் சங்கடம்.  அவர் நாளை வருகிறேன் என்று சொல்லி விட்டாரானால் தயாரிப்பாளருக்கும் நஷ்டம், கஷ்டம்.  அதுதான் அப்படிச் சொன்னேன்" என்றாராம்.  யாருக்கும் கஷ்டம் கொடுக்காதவர் அவர்.  இதை மறைந்த கேவிஎம் உடல் அருகே நின்று திரு புகழேந்தி எஸ் பி பி இடம் சொல்லி இருக்கிறார்.  

சரி...  இனி இன்றைய பாடல்.

அமைதிப்புறாவே அமைதிப்புறாவே அழைக்கின்றேன் உன்னை 
நிம்மதியே நிம்மதியே நான் நேசிக்கின்றேன் உன்னை 

காலங்களாலே தென்றல் வருக புயலே வரவேண்டாம் 
மேகங்களாலே மழையே வருக வெள்ளம் வரவேண்டாம் 
வீடுகள்தோறும் ஒளியே வருக இருளே வரவேண்டாம் 
நாடுகள்தோறும் உறவே வருக பகையே வரவேண்டாம் 

சமாதானமே சமாதானமே தழுவுகின்றேன் உன்னை 
தர்மதேவனே தர்மதேவனே சரணடைந்தேன் உன்னை 

புத்தன் வழியில் அசோகன் சேவை புரிந்தது எதற்காக 
புன்னகை முகமே தேவனின் வீடெனச் சொன்னது எதற்காக 
சத்திய நெறியைத் தாரணி எங்கும் தந்தது எதற்காக 


சமாதானமாம் சமாதானமாம் தாயே உனக்காக 







"அமைதிப்புறாவே அமைதிப்புறாவே என்று பாட்டு கேட்டு விட்டோம்.  புறா சம்பந்தமாக சில சுவாரஸ்யமான தகவல்கள் தினமலர் 'சொல்கிறார்கள்' பகுதியில் படித்தேன்.  அதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.   பறக்க விடப்படும் அமைதிப்புறா பற்றியும் செய்தியில் இருக்கிறது...




புறாக்களின் காதல் அலாதியானது!

பந்தயப் புறாக்களை வளர்க்கும், வேலுார் மாவட்டம், குடியாத்தம், காட்பாடி ரோடு, முனிசிபல் லைன், 'அலைகள்' பெண்கள் குழுவின் தலைவர் ரூபாவதி: 

"புறாக்களில் பல வகை உண்டு. கோவில் புறா, மாடப்புறா, ரோமர் புறா, மணிப்புறா என, பல வகை உள்ளன. இவற்றில், ரோமர் புறா தான், பந்தயப் புறாக்கள். இந்தப் புறாக்கள், பிற புறாக்களை விட, உருவத்தில் கம்பீரமாக இருக்கும். 

இந்த வகை ஆண் புறா, ஒரு பெண் புறா மீது மட்டும் தான் காதல் கொள்ளும்; இறுதி வரை அந்தப் புறாவுடன் தான் காதல் கொண்டிருக்கும்; பிற பெண் புறாக்களை நாடாது. இவற்றிற்கு காதல் வந்து விட்டால், பிற புறாக்களிடம் இருந்து தனியாக பிரித்து, தனிக் கூட்டில், இரண்டையும் விட்டு விடுவோம். அவற்றின் காதல், அலாதியானது. பெண் புறாக்கள் இரண்டு முட்டையிடும்; அடை காத்து, குஞ்சு பொரிக்கும். முட்டையை, பெண் புறா மட்டுமின்றி, ஆண் புறாவும் அடை காக்கும்.

அடை காக்கும் பெண் புறாவின் வாயில், ஆண் புறா உணவு ஊட்டும். அவ்வளவு காதல், 
அந்த பறவைகளுக்கு!

முக்கிய நிகழ்ச்சிகளின் போது, அமைதி புறாக்களை பறக்க விடுவது வழக்கம். அந்தப் புறாக்கள், அங்குள்ள பிற புறாக்களுடன் கலந்து விடும் என, நினைப்போம்; அது தவறு.  எங்கிருந்து வாங்கி வந்தனரோ,அந்த ஊருக்கு அவை பறந்து சென்று விடும்.

பந்தயப் புறாக்களை பறக்க விடுவதற்கு என, வேலுார் ஆம்பூர், திருச்சி, சேலம், கோவை போன்ற நகரங்களில், 'கிளப்'கள் உள்ளன. பந்தயப் புறாக்களை வளர்க்கும் விபரத்தை, அந்த கிளப் உறுப்பினர்களுக்கு தெரிவித்தால், அவர்களே எடுத்துச் சென்று, பயிற்சி அளித்து, பந்தயத்தில் பங்கேற்க செய்வர்.

பயிற்சியின் போது, முதலில், 50 கி.மீ.,க்கு எடுத்துச் சென்று, புறாவை பறக்க விடுவர். வானத்திற்கு பறந்து செல்லும் புறா, தன் இருப்பிடம் சென்று சேர்ந்து விடும். இப்படியே, 100, 200, 500 என, துாரத்தை அதிகரிப்பர். பந்தயம் என்பது, புறாவை விடும் இடத்திலிருந்து, அந்த நொடியிலிருந்து துவங்கும். வெயில், மழை போன்ற அனைத்தையும் சமாளித்து, பருந்துகளின் பிடியிலிருந்து தப்பி, நம் இருப்பிடம் வந்து சேர்ந்து விடும்.

இப்படி வரும் புறாக்களுக்கு, சில ஆயிரங்கள் முதல், 1 லட்ச ரூபாய் வரை விலை கிடைக்கும். பந்தய வளர்ப்பு புறாக்களின் கால்களில் வளையம் இருக்கும். அதில், புறா வளர்ப்பவர் பெயர், மொபைல் எண், கிளப் பெயர் போன்ற விபரங்கள் இருக்கும். எப்போதாவது வழி தவறி சென்று விடும் புறாக்கள், அடிபடும் புறாக்களை மீட்போர், அதன் காலில் உள்ள வளையத்தில் இருக்கும் விபரத்தை பார்த்து, உரிமையாளருக்கு தகவல் தெரிவிப்பர்!

132 கருத்துகள்:

  1. அனைவருக்கும் நல்வரவு, காலை/மாலை வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. அச்சச்சோ....    என்ன இப்படிச் சொல்லி விட்டீர்கள்...  நீளாமாக இருந்தாலும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்புகிறேன்!

      நீக்கு
    2. ஆஹா...    நன்றி.   சுவாரஸ்யத்துக்குக் குறைச்சல் இல்லாமல் இருந்தால் சந்தோஷம்!

      நீக்கு
  3. இரண்டு படமும் பார்த்திருக்கேன். ஊட்டி வரை உறவு முதல் முதல் பார்த்தது எண்பதுகளில் தொலைக்காட்சி தயவில். தாயே உனக்காக, மதுரை சென்ட்ரல் தியேட்டரில் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நான் இரண்டு படங்களும் பார்க்கவில்லை.  ஊட்டி வரை உறவு சிலபல காட்சிகள் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன்.  முழுசாகப் பார்த்ததில்லை!

      நீக்கு
  4. புறாக்கள் பற்றிய தகவல்கள் அறிந்தவை. அநேகமாக எல்லாப் புறாக்களுமே ஒரே ஒரு புறாவிடம் தான் காதல் கொள்கிறது என்பதையும் கவனித்திருக்கிறேன். பி.சுசீலா பற்றி வாட்சப், முகநூல் எனச் செய்திகள் வந்தன கேவிஎம் பற்றிய தகவல் புதியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாடி...    ஒரு தெரியாத தகவலாவது தேறியதே....!  ஹா..  ஹா..  ஹா...    நன்றி அக்கா!

      நீக்கு
    2. அட ராமா... கீசா மேடம்... பறவைகளின் பெட்ரூமில் எட்டிப் பார்ப்பது தப்பல்லோ!!!

      நீக்கு
  5. என்ன, இன்னும் துரை ஸாரைக் காணோம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதோ வந்துட்டேன்...

      மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
    2. வாங்க...    நீங்க வந்த நேரம் நான் காணாமல் போய்விட்டேன்!

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்களுடன் இந்தநாள் அனைவருக்கும் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...    வணக்கம்.  இனிய  பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  7. அகனமர்ந்து செய்யாள் உறைய..

    வாழ்க நலம்....

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

    இதோ வந்துட்டேன்!...

    பதிலளிநீக்கு
  9. பூமாலையில் ஓர் மல்லிகையோடு...

    இனிய பாடலை வழங்கிய
    கவியரசர், மெல்லிசை மன்னர்,
    TMS, சுசீலா அம்மா மற்றும் நடிக திலகம், புன்னகை அரசி...

    - என எல்லோருக்கும் நன்றி...

    இன்புறும் இவர்க்கென்று
    அன்புடன் வழங்கிய
    ஸ்ரீராம் அவர்தமக்கும் நன்றி..
    மகிழ்ச்சி...


    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    நேயர் விருப்ப பாடல் என்றுமே எல்லா நேயர்களின் விருப்பமான இனிய பாடல்தான். கேட்க கேட்க திகட்டுவதில்லை. இப்போதுள்ள தலைமுறைகளுக்கு பிடிக்கிறதோ என்னவோ தெரியவில்லை.!

    தெலுங்கிலும் இப்படம் வந்து வெளியாகி வெற்றி பெற்றிருப்பது எனக்கு புது செய்தி. படம் பெயர் தெரிந்தால் பார்க்கலாம்..மேலும் இந்தப் பதிவில் நிறைய தகவல்கள் தந்துள்ளீர்கள். நிதானமாக படிக்க வேண்டும்.

    சுசீலாம்மாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்.

    தாங்கள் தந்துள்ள இரண்டாவது பாடலும் அடிக்கடி கேட்ட இனிமையான பாடல்தான். இப்போதும் கேட்டு விட்டு புறாக்கள் பற்றி விலாவாரியாக படித்து விட்டு வருகிறேன்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...    தெலுங்கில் ஸ்ரீ ரங்க நீத்துலு என்கிற பெயரில் வெளியாகி இருந்ததாம்.

      நன்றி அக்கா, ரசித்ததற்கு.

      நீக்கு
  11. ஏன் வாத்யாரே... இதுக்கு முந்தி இந்தப் பாட்டைக் கேட்டதே இல்லையா?....

    கேட்டிருக்கேனே.... ஆயிரந் தடவைக்கும் மேலே!... நான் மட்டுமா.. இங்கே எல்லாரும் தான் கேட்டிருக்கோம்....

    அப்புறம் என்ன?...

    ஆயிரம் ஆயிரம் பாட்டுக்கு நடுவுல இப்படியான பாடல்கள் ஒரு சில தான்...

    அப்படி என்ன அதிசயம்?...

    ஒவ்வொரு தடவை கேக்கிறப்பவும்
    அப்படியொரு உற்சாகம்.. சந்தோஷம்...

    உற்சாகமா!?..

    சொன்னா உனக்குப் புரியாது...
    போய் ஒரு ஓரமா விளையாடு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு பண்டத்தைத் தனியாய் சாப்பிடுவதற்கும்,  நாலுபேரோடு சேர்ந்து சாப்பிடுவதற்கும்,

      பாடலைத் தனியாய்க் கேட்பதற்கும், நாலுபேரோடு கலந்து பேசி சிரித்து கேட்டு மகிழ்வதற்கும்..

      சுவைதான்!

      நீக்கு
  12. சுசீலா அம்மா அவர்கள் பல்லாண்டு நலமுடன் வாழ இறைவன் நல்லருள் புரிவானாக...

    பதிலளிநீக்கு
  13. எல்.விஜயலக்ஷ்மி, பி.சுசீலா, கே.வி. மாகாதேவனோடு புறாவும் ! வெள்ளியின் காலை நன்றாக ஆரம்பித்திருக்கிறது. பிங்க் பால் கவலையோடு மாலை காத்திருக்கிறது.

    ..இரவைப் பகலாய் அறியும் பருவம் //

    இப்போது, எதையுமே ‘அறியாப் பருவ’த்துக்கு வந்துவிட்டோமோ ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏகாந்தன் ஸார்...

      காலைக்கும் மாலைக்கும் வேறுபாடு! மாலைப்பொழுதின் மயக்கத்திலே...!

      பிங்க் பாலில் அவ்வளவு கவலையா?  பாவம் சஞ்சு சாம்சன்!

      நீக்கு
  14. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    பூமாலையில் பாட்டைக் கேட்பதே ஒரு சுகானுபவம்.
    இரண்டு மூன்று தடவை பார்த்த்ருக்கிறேன். பாலையா
    காமெடி வெகு சுவாரஸ்யம்.நட்புகளுடன் இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த நினைவு.

    அமைதிப் புறாவே மிக அருமையான இனிமையான பாடல். எத்தனை அழகு. மழையே வா.வெள்ளம் வேண்டாம் நம் சென்னைக்குப் பொருந்தும்.

    புறாக்கள் செய்தி ரசிக்கும்படி இருந்தது. காதலுக்கு எடுத்துக்காட்டாக புறாக்களைச் சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. HAPPY BIRTHDAY SUSEELA MAA. YOU HAVE GIVEN US PEACE ALL THRU YOUR LIFE.
      GOD BLESS AND THANK YOU.

      நீக்கு
    2. வாங்க வல்லிம்மா...

      ஆமாம் அந்தப்பாடலில் எதுவும் அளவுக்கு அதிகமாய் வேண்டாம்.  அளவோடு கொடு என்று வேண்டுவதுபோல அருமையான வரிகள்.

      நீக்கு
  15. உதகை வரை உறவு அற்புதமான பாடல்.

    சுசிலா அம்மாவுக்கும், ஜானகியம்மாவுக்கும் வேறுபாடு

    ஜா.... ஒப்பனையை நிறுத்தி பல மாமாங்கம் ஆகி விட்டது.

    சு..... இன்று வரை ஒப்பனை இல்லாமல் வெளியே செல்ல மாட்டார் இரவு நேரத்தில் இலவு வீட்டுக்கு போகும்போதுகூட...

    ஜா.... அழகாக தமிழ் பேசுவார் மலையாளி எழுத்து தெலுகு

    சு.... இன்றுவரை தமிழ் சரியாக பேசவராது தெலுகு
    இதே "ஊட்டி வரை உறவு" என்ற வார்த்தையை சரியாக சொல்ல வரவில்லை மூன்று நிமிடம் போராடி மற்றவர் சொல்லிக் கொடுத்தனர்.

    இருவருமே தமிழகத்தில் கோலோச்சி சாதனை படைத்தனர் தமிழச்சி வாணி ஜெயராமை ஓரம் கட்டினர் தமிழர்கள்.

    "தமிள் வால்க"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலவருடங்களுக்கு முன் ஜெயல்லிதா தலைமையேற்ற ஒரு விழாவில் வாணி ஜெயராம் அந்த முதிர்ந்த வயதில் பாடிய பாட்டு என்னைப் புல்லரிக்க வைத்துவிட்டது. அந்தப் பகுதியை நேயர் விருப்பமாக பதியலாம். (ஏழு ஸ்வரங்களுக்குள்)

      மூவருமே திறமை மிக்கவர்தாம்.

      நீக்கு
    2. உதகை வரை ரிலேஷன் பற்றி நீங்கள் குறிப்பிட்டிருப்பது சரி!

      சுசீலாம்மா அலங்காரப்ரியை போல...   தமிழை தவறாக உச்சரிக்கிறார் என்கிறீர்களா?  எனக்கு அப்படித் தோன்றவில்லைஜி.

      நன்றி.

      நீக்கு
    3. நீங்கள் சொல்லியிருக்கும் பாடலுக்கு ஈடு இணை உண்டா நெல்லை?

      நீக்கு
    4. கில்லர்ஜி சொன்ன “அலங்காரம்” எனக்கு ஏற்புடையதல்ல. வாணி ஜெயராமன் அவர்களும் பெயின்ட் அடித்துக்கொள்வார்.

      அது பெரிய விஷயமல்ல. It is their right to project themselves as they want to be.

      நமக்கு சில சமயம் “ப்ப்பே” என்றிருக்கும், பத்மினி, சரோஜா, அனுராதா ரமணன் போல

      நீக்கு
  16. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  17. நேயர் விருப்ப பாடல் இனிமை. பிடித்த பாடல்.
    அமைதி புறாவே பாடல் மிகவும் பிடிக்கும். ஏகாந்தன் சாருக்கு வேண்டி தனி பதிவில் அந்த பாடலை போட்டேன்.
    இரண்டு படங்களும் மிகவும் பிடித்த படம். தொலைகாட்சியில் ஒலிபரப்பும் போது எல்லாம் பார்த்து விடுவேன்.
    தாயே உனக்காக படத்தில் வரும் அனைத்து பாடல்களும் மிக அருமையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. https://mathysblog.blogspot.com/2018/05/blog-post_29.html

      அமைதி புறாவே அமைதி புறாவே அழைக்கின்றேன் உன்னை

      நீக்கு
    2. ஆமாம் கோமதி அக்கா.   நானும் இந்தப்பதிவில் பதிலளித்திருக்கிறேன்.  பார்த்தேன்.

      நீக்கு
  18. வாணி ஜெயராமின் சில ஹிந்திப்படப் பாடல்கள் வெற்றி பெற்றபோது, எங்கே, இங்கேயே தங்கி நமது இடத்துக்கு ஆபத்து விளைவிப்பாரோ என்கிற பயத்தில், பொறாமையில், வடக்கிலும் அவரை ஓரங்கட்டி விரட்டிவிட்டது - லதாஜியின் அடிமைக்கூட்டம் ! ஏகப்பட்ட டர்ட்டி பாலிடிக்ஸ் பாலிவுட்டில். இதையெல்லாம் தாண்டித்தான் ரசிகர்கள் மதிக்கிறார்கள், கலைஞர்கள் என சிலரை.

    தமிழ்நாட்டில் வாணியை ஏன் மேலே வர விடவில்லை, நமது திரை மேதாவிகள் !?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏகாந்தன் ஸார்...  ஹிந்தித் திரையுலகத்துக்கு இது கைவந்த கலை போல...     எஸ் பி பி க்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறது.   கமலுக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. 

      நீக்கு
  19. //எப்போது நான்குமுறை பாடியும் அவருக்கு அந்த சங்கதி வரவில்லையோ, அப்போது இதுதான் சரி என்று இருக்கவேண்டும். அல்லது அவரால் அது பாடமுடியவில்லை என்று கொள்ளவேண்டும். மறுபடி மறுபடி டேக் போனால் அவருக்கும் சங்கடம். அவர் நாளை வருகிறேன் என்று சொல்லி விட்டாரானால் தயாரிப்பாளருக்கும் நஷ்டம், கஷ்டம். அதுதான் அப்படிச் சொன்னேன்" என்றாராம். யாருக்கும் கஷ்டம் கொடுக்காதவர் அவர். இதை மறைந்த கேவிஎம் உடல் அருகே நின்று திரு புகழேந்தி எஸ் பி பி இடம் சொல்லி இருக்கிறார். //


    மாமாவின் நல்ல குணம் தெரிகிறது. இசை உலகில் எல்லோருக்கும் மாமாதான் அவர்.

    புறாக்கள் பற்றிய செய்தி படித்து இருக்கிறேன்.இங்கு புறாக்களை பார்த்து கொண்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கே வி எம் பற்றி படிக்கும் செய்திகள் மனதில் தங்கி விடும்.  திறமையானவர், இனிமையானவர், நேமையானவர்.

      நீக்கு
  20. ஸ்வாரஸ்யமான பதிவு. ஊ.வ.உ.வில் எல்லா பாடல்களும் அருமை. காமெடி அருமையோ அருமை!டி.வி.யில் போடும் பொழுதெல்லாம் பார்ப்பேன்.
    எல்.விஜயலட்சுமி திருமணமாகி மலேஷியா சென்று அங்கு சீ.ஏ. முடித்து சார்டர்ட் அக்கொளண்டெண்ட் ஆகி விட்டார். அவரைப்பற்றி ஹிந்துவில் கட்டுரை வந்திருந்தது.

    பதிலளிநீக்கு
  21. கே.வி.மஹாதேவன் பற்றிய தகவல் புதிது. என்னவொரு புரிதல்!தயாரிப்பாளர் மீது என்னவொரு,கரிசனம்!

    பதிலளிநீக்கு
  22. இன்றைய பாடல் - படங்கள் இரண்டில்

    தாயே உனக்காக பார்த்ததில்லை...

    இந்தப் படம் தானே சிவக்குமாருக்கு முதல் படம்!...

    பதிலளிநீக்கு
  23. இரண்டாவது பாடலைக் கேட்ட நினைவே இல்லையே.

    பாடல்களைவிட தகவல்களுக்கு மெனக்கெடுவதால் முன்பைவி இப் பகுதி ரசனைக்குரியதாக மாறிவருகிறது. நேயர் விருப்பம் அருமை.

    இவ்வளவு முயற்சி எடுத்து தொடர்ந்து உங்களால் சுவைபடச் சொல்ல நேரம் கிடைக்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இரண்டாவது பாடலைக் கேட்ட நினைவே இல்லையே.//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெல்லைத்தமிழன் கேட்டிருப்பீங்க, மறந்திட்டீங்க.... இப்பாடலைக் கேட்காமல் ஆரும் இருப்பினமோ.. நீங்கள் ரேடியோக் கேட்பதில்லை அல்லது கேட்கும் வாய்ப்புக்கள் குறைவென நினைக்கிறேன்....

      நீக்கு
    2. //இவ்வளவு முயற்சி எடுத்து தொடர்ந்து உங்களால் சுவைபடச் சொல்ல நேரம் கிடைக்குமா?//

      சில வருடங்களுக்கு முன்வெறும் பாடல் மட்டும் பகிர்ந்து கொண்டிருந்தேன்.   அப்புறம் சிறு விவரங்களுடன் பகிர்ந்து வந்தேன்.  முடிந்த வரை முயற்சிக்க வேண்டியதுதான்.

      நீக்கு
    3. //இப்பாடலைக் கேட்காமல் ஆரும் இருப்பினமோ.. //

      அதுதானே?  ஆச்சர்யமா இருக்கே!

      நீக்கு
    4. அமைதிப் புறாவே பாடல் இன்றுதான் முதல்முறை கேட்கிறேன்.

      9ம் வகுப்பிலிருந்து ஹாஸ்டலில் இருந்தபோது நிறைய பாடல்கள் திடமும் போடுவார்கள். பெரும்பாலும் அப்போ பிரபலமா இருக்கும் அல்லது புதிய பாடல்கள்.

      வீட்டில் ரேடியோ இருந்தது. அதில் சினிமாப் பாடல்களா? மூச். மூன்றாம் பிறை படத்தை ரெகமென்ட் பண்ணி என் அண்ணன், பெற்றோரை பார்க்கச் சொன்னான். அதைப் பார்த்துவிட்டு, மோசமான படங்கள்லாம் - சிலுக்கு போர்ஷன்- நம்ம பசங்க பார்த்து நம்மையும் பார்க்கச் சொல்றாங்களே என்று எங்க அப்பா கடிதம் எழுதியது நினைவுக்கு வருது. ஹா ஹா

      நீக்கு
    5. ஹா.... ஹா.... ஹா.... நான் இதே போன்றதொரு கமெண்ட்டை ஒரு தலை ராகம் படத்துக்காக என் அப்பாவிடம் வாங்கினேன்.

      நீக்கு
  24. அன்று ஊமைப் பெண்ணல்லோ பாடல், மணிப்புறா மாடப்புறா படித்தவுடன் தோன்றியது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'சின்னப்புறா ஒன்று எண்ணக்கலாவினில்' பாடல் நினைவுக்கு வரவில்லையா?!!

      நீக்கு
    2. அதைவிட அன்று ஊமைப்பெண்ணல்லோ மனதுக்கு இனிமை இல்லையா ஶ்ரீராம்?

      நீக்கு
    3. எனக்குப் புறாக்களைப்பார்த்தால் எப்பவும் வருவது மணிப்புறாவும் மாடப்புறாவும் பாடல்தான்...

      நீக்கு
    4. கீழே நான் இன்னொரு பாடல் பரிந்துரைத்திருக்கிறேன்.   உலக்கை நாயகர் அடப்பாடல்!

      நீக்கு
  25. ஆஆ இன்று இரு பாடல்களுமே நிறைய விசயங்களோடு பிரசவித்திருக்கிறதே.. ஆனாலும் துரை அண்ணன் ஸ்ரீராமை விட ஒரு வயசு இளமை:)) ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வயதை பொறுத்துதான் பாடல் கேட்கிறோமா என்ன?

      நீக்கு
    2. இதுல சந்தேகா ஶ்ரீராம்? பாருங்க நாம ரெண்டு பேரும் சுஜாதா நாவல்களைப் படிக்கிறோம், துரை செல்வராஜு சார் ரமணி சந்திரன் நாவல்கள் படிக்கிறார்.

      நம்ம இடிஅமீன்.. ஐயையோ இடிதாங்கி அதிரா மகாபாரதம், ராமாயணம் படிக்கிறாங்க.

      வயசுபோல்தானே ரசனை அமையும். அதிரா சொன்னது சரிதான்

      நீக்கு
    3. //வயசுபோல்தானே ரசனை அமையும்.//
      நான் கூட ஒன்லி tom அண்ட் ஜெர்ரி கார்ட்டூன்ஸ் டெலிட்டப்பிஸ் இதுமட்டுமே பார்க்கிறேன் .ஹான்ஸ் கிறிஸ்டியன் அனடர்சன் ஸ்டோரீஸ் மட்டுமே படிக்கிறேன் 

      நீக்கு
    4. @ இலக்கியச் செம்மலின் இன்றைய கண்டுபிடிப்பு!..

      >>> ஆனாலும் துரை அண்ணன் ஸ்ரீராமை விட ஒரு வயசு இளமை:)) ஹா ஹா ஹா.. <<<

      அதுசரி...

      FB ல் ஸ்ரீராம் பகிர்ந்த மாயாவின் ஓவியத்துக்கு ஒரு பாடல் எழுதி வைத்திருக்கிறேன்...

      அதைப் படித்து விட்டு அன்றைய இலக்கியச் செம்மல் என்ன சொல்வார்களோ?..

      ஒன்றும் ஜொல்ல மாட்டார்கள்.. ஒன்றுமே ஜொல்ல மாட்டார்கள் -
      இப்போதெல்லாம் ...

      நீக்கு
    5. ///வயசுபோல்தானே ரசனை அமையும். அதிரா சொன்னது சரிதான்//

      ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன்.. கையைக் குடுங்கோ சே..சே அது முடியாதெல்லோ.. அதனால நீங்க உங்கட மாங்காய்த்தொக்கை தொடுங்கோ நான் செய்ததை மீ தொடுறேன்ன் சியேர்ஸ்ஸ்ஸ்:))..

      //ஸ்ரீராம்.22 நவம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 1:25
      வயதை பொறுத்துதான் பாடல் கேட்கிறோமா என்ன?//

      துரை அண்ணன் கேட்ட பாடல் 1967, நீங்க பகிர்ந்திருப்பது 1966:)) ஹா ஹா ஹா அதை வச்சுச் சொன்னேன்:)).. ஒரு வயசு குறைவு என:)).. மற்றும்படி பாடலுக்கும் வயசுக்கும் என்ன ஜம்பந்தம்..

      அப்பூடிப் பார்த்தால்..அஞ்சு எல்லாம் விஜய்சேதுபதியின் புதுப்பாட்டுக் கேட்டதை மட்டுமே வெளியில ஜொள்ளுவா:) ஆனா அவவுக்கு 70 நெருங்குது:) அப்போ எப்பூடி இந்த தத்துவம் பொருந்தும் ஹா ஹா ஹா ஆள் இப்போ வேர்க்குக்குப் போயிருப்பா:))

      நீக்கு
    6. துரை அண்ணனின் பாடல் வெளியீட்டால அவர் ஓரிடத்தில இருக்கிறார் இல்லை இன்று ஹா ஹா ஹா.. ஒரே கொமெண்ட்டை இரு இடத்தில போட்டிருக்கிறார்:) ஆனா நான் கீழே பதில் ஜொள்ளிட்டேன்ன்:))

      நீக்கு
    7. ஹலோ பொடி  வாங்கி :) இன்னும் afternoon வேலை இன்னும் புறப்படல 

      நீக்கு
    8. ///Angel22 நவம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 4:44
      ஹலோ பொடி வாங்கி :) இன்னும் afternoon வேலை இன்னும் புறப்படல //

      ஓ மை கடவுளே.. ஆனந்தன் வைரவரே என்னைக் காப்பாத்துங்கோ:)).. கள்ள ரைம் ரேபிள் அனுப்பிட்ட எனக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஒழுங்கா புது வேர்க் ரைம் ரேபிள் வரோணும் எனக்கு ஜொள்ளிட்டேன்ன்:)) ஹா ஹா ஹா

      நீக்கு
    9. ஹலோ மியாவ் நீங்க மட்டும் அப்பில் வைச்சு என்னை உளவு பார்க்கலாம் ?? நான் அடிக்கடி டைம் டேபிளை மாற்றுவேன் உங்களை கலாய்க்கவே :))

      நீக்கு
    10. //ஆனந்தன் //

      ஆமா யார் இவர் ??? 

      நீக்கு
    11. ///
      Angel22 நவம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 4:53
      //ஆனந்தன் //

      ஆமா யார் இவர் ??? //

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
      புளியடி வைரவர்
      ஆனந்தன் வைரவர்
      ஞான வைரவர்
      இப்படிப் பலர் இருக்கினமாக்கும்:))

      நீக்கு
    12. ///நம்ம இடிஅமீன்.. ஐயையோ இடிதாங்கி அதிரா மகாபாரதம், ராமாயணம் படிக்கிறாங்க.///

      இருங்கோ அடுத்த பட்டம் பூலாந்தேவியாகிட வேண்டியதுதேன்ன்:)) ஹா ஹா ஹா...

      நீக்கு
  26. நான் புளொக்ஸ் ஐ ஓபின் பண்ணியும் லேட்டா கொமெண்ட்ஸ் போடுவதற்குக் காரணம் ஸ்ரீராம்தான்:)..

    போஸ்ட் இல் லிங்க் குடுத்திருக்கிறீங்க.. அதைப்பிடிச்சு டெய்லிப்பூ:) பக்கம் போனேனா.. அங்கு நயனை:) எல்லாம் பார்த்து, புளொக்கையே மறந்து.. நின்றுவிட்டேன்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதென்ன அநியாயம்?    காரியத்தில் கண்ணாய் இருக்க வேண்டாமோ...!    லிங்க் வேலை முடிந்த உடன் இங்கு ஓடிவந்து விட வேண்டும் அதிரா....!

      நீக்கு
    2. ஹா ஹா ஹா அதை நீங்க போஸ்டில சொல்லியிருக்கோணும் ஸ்ரீராம்:))

      நீக்கு
    3. இப்போ சொல்லி விடுகிறேன்.    இங்கு ஓடி வந்து கடமையை முடித்து விடுங்கள் முதலில்!!!

      நீக்கு
  27. இருபாடல்களும் நல்ல பாடல்களே, ஆனா என் பேவரிட் எனச் சொல்லும் இடத்தில் இல்லை.

    புறாபற்றிய தகவல் சுவாரஷ்யம்... என் டவுட்டுக்கு இன்று விடை கிடைச்சது.. புறாப்பந்தயம் எனில் என்ன என இன்றுவரை தெரியாதெனக்கு, ஆரையும் கேட்கவும் நினைக்கவில்லை.. இன்று கேளாமலேயே விடை கிடைச்சது நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படியோ ஒரு சுவாரஸ்யம், ஒரு புது விஷயம் இருந்தால் சரிதான்!  இல்லையா?   அதைதான் நான் கீதா அக்காவுக்கும் சொன்னேன்!

      நீக்கு
  28. அது ரோமர் இல்லை ஹோமர் .
    புறாக்கள் எங்க வீட்ல நிறைய இருந்துச்சி ஒருமுறை ஒரு பிரபலம் ஒரு பெட் ஷோவில் எங்கள் புறாக்களை அவரது மகளுக்கு அழைத்து வந்து காட்டினார் :)மகள் வித்யா ராம் அப்பா பிரபலம் ஹிந்து பத்திரிகையாசிரியர் :)இதுக்கு மேலே பகிர்ந்த பிளாஷ்பேக் போகும் மனது இங்கேயே முற்றுப்புள்ளி வச்சிடறேன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...    அப்படியா ஏஞ்சல்?  நான் அப்படியே காப்பிபேஸ்ட் தான் பண்ணினேன்!

      நீக்கு
  29. 'பூமாலையில் ஒரு மல்லிகை.. இங்கு நான் தான் தேன் என்றது'...

    அப்படீன்னா, அர்த்தம் என்ன?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்கள் பூமாலையில் உள்ள வித்தியாசமான வித வித மலர்களைப் போல அழகும் கவர்ச்சியும் சிறப்பும் இனிமையும் நிரம்பப் பெற்றவை. அதில் ஒரு மல்லிகைப் பூ, நான்தான் மிக இனிமையானவள், மனதை மயக்குபவள் எனச் சொல்லவேண்டியதில்லை, தேன் போன்றவள் என்று சொன்னது.

      ஜீவி சார் என்னை கோனார் நோட்ஸ் போட வச்சுட்டாரே

      நீக்கு
    2. //ஜீவி சார் என்னை கோனார் நோட்ஸ் போட வச்சுட்டாரே//

      அவர் என்ன தெரியாமலோ கேட்கிறார்ர்:)), சில விசயங்கள் நமக்குத் தெரிஞ்சிருந்தாலும், இன்னொருவர் வாயால கேட்கும்போது இன்னும் இனிமை ஹா ஹா ஹா:))

      நீக்கு
    3. நண்பர்களே...   இப்போது ஜீவி ஸார் வந்து அந்த வரியின் அர்த்தம் பற்றி  ஐந்து நிமிடம் பேசுவார்...!   ஸார்...   மேடைக்கு வாங்க!

      நீக்கு
  30. //சத்திய நெறியைத் தாரணி எங்கும் தந்தது எதற்காக //

    தாரணி என்றால்?.. ஒலி சமன்பாட்டிற்காக தரணி, தாரணி ஆயிற்றா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாரணியும் சரிதான்.

      தருச்சந்தப் பொழில் தழுவு தாரணியின் துயர் தீர

      என்பது திருச்சந்த விருத்தம் பிரபந்தத்தின் தனியன்

      நீக்கு
    2. தரணி என்றால் உலகம்:) தாரணி என்றால் என் ஒரு நண்பி:))

      நீக்கு
    3. நான் அங்கு வேலைபார்த்தபோது, தாரிணி என்றொரு இலங்கைத் தமிழ்ப்பெண் (வடிவானவள்) வேலைபார்த்துவந்தார். ஆனா பாருங்க, அவருக்கு அப்போ கல்யாணம் ஆகியிருந்தது. தமிழ்நாட்டுல தாரிணி என்ற பெயர் பார்த்ததில்லை (என்னைப்பொறுத்தவரை). ஆனா அது வடமொழிச் சொல்லுனு நினைக்கிறேன்.

      நீக்கு
    4. தாரிணி என்று என் உறவில் இரண்டு பெண்களுண்டு!

      நீக்கு
    5. //நெல்லைத்தமிழன்22 நவம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 8:58
      நான் அங்கு வேலைபார்த்தபோது, தாரிணி என்றொரு இலங்கைத் தமிழ்ப்பெண் (வடிவானவள்)//

      அஞ்சூஊஊஊஊஊஊஊ உங்களிடம் நெல்லைத்தமிழனின் அண்ணியின் வட்சப் நம்பர் இருக்குதெல்லோ கொஞ்சம் எனக்கு பேஸ்புக் மெசெஞ்சரில:)) அனுப்பி விடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)).. அண்ணி , அம்மா வீட்டுக்குப் போயிருக்கிறாபோல தெரியுது:)) ஹா ஹா ஹா

      நீக்கு
    6. எங்களுக்கு ஊரில் பல தாரணி, தாரிணி எனப் பெயர்கள் உண்டு, உறவிலும் நட்பிலும்.. பொதுவா அங்கு தாரணியை.. தாரா எனச் செல்லமாக அழைப்பார்கள்.. பெயருக்கேற்ப அழகாகவும் இருப்பார்கள் நான் பார்த்த தாரணிகளும்:))... என் நண்பியின் பெயர் பவதாரணி..

      நீக்கு
    7. பரமஹம்சர் வழிபட்ட தெய்வம் அல்லவா பவதாரிணி. தக்ஷிணேஸ்வரம் காளிக்கு பவதாரிணி எனப் பெயர். சாக்தர்களின் தசமஹாவித்யையில் ஒருத்தி காளி என்னும் பவதாரிணி!

      நீக்கு
  31. ஊட்டி வரை உறவு படம் பார்த்ததில்லை மற்றதும் பார்த்ததில்லை ..அமைதிப்புறா பாடலும் வரிகளும் சூப்பர்ப் .ரசித்து கேட்டேன் ஊட்டி வரை உறவு படத்தில் விஜி ஆன்டி ஒரு பட்டுப்புடவை கட்டி வருவாங்கன்னும் அதை எல்லாரும் அதே டிசைனில் அப்போ பேமஸ் ஆச்சுனும் பெரியாம்மா ஒருவர் சொன்னாங்க .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏஞ்சல்...   ஒரு பழைய ஜோக் உண்டு...  ஆடு வளர்ப்பவனிடம் பேட்டி காண்பவர் "ஆடுகளுக்கு என்ன கொடுக்கிறீர்கள்?"என்று கேட்பார்.  நினைவிருக்கிறதா?

      நீக்கு
    2. ஜோக் கேள்விப்பட்டதுபோலவே இருக்கு ஆனாலும் நினைவுக்கு வரவில்லை எனக்கு .. சொலியிருக்கலாமே அதென்ன பாதியில நிறுத்தும் பழக்கம் கர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
  32. @ இலக்கியச் செம்மலின் இன்றைய கண்டுபிடிப்பு!..

    >>> ஆனாலும் துரை அண்ணன் ஸ்ரீராமை விட ஒரு வயசு இளமை:)) ஹா ஹா ஹா.. <<<

    அதுசரி...

    FB ல் ஸ்ரீராம் பகிர்ந்த மாயாவின் ஓவியத்துக்கு ஒரு பாடல் எழுதி வைத்திருக்கிறேன்...

    அதைப் படித்து விட்டு அன்றைய இலக்கியச் செம்மல் என்ன சொல்வார்களோ?..

    ஒன்றும் ஜொல்ல மாட்டார்கள்.. ஒன்றுமே ஜொல்ல மாட்டார்கள் -
    இப்போதெல்லாம் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///ஒன்றும் ஜொல்ல மாட்டார்கள்.. ஒன்றுமே ஜொல்ல மாட்டார்கள் -
      இப்போதெல்லாம் ///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) துரை அண்ணன், மீ அரட்டை பண்ணும் நாட்கள் எனில் விடவே மாட்டேனே:)).. திங்கள் செவ்வாய்களில்தான் முடியுதில்ல....

      //FB ல் ஸ்ரீராம் பகிர்ந்த மாயாவின் ஓவியத்துக்கு ஒரு பாடல் எழுதி வைத்திருக்கிறேன்...
      //
      விசாளக்கிலமை:)) ல போடச் சொல்லுங்கோ துரை அண்ணன் ஸ்ரீராமிடம்...

      நீக்கு
    2. அனுப்பவே இல்லையே துரை ஸார்...!

      அனுப்பினால் ஒரு வியாழனில் கட்டாயம் இடம்பெறும் அதிரா...   பக்கம் நிரம்பணுமல்லோ!

      நீக்கு
  33. துரை சார் ஆரம்பித்த குறளைத் தொடர ஸ்ரீராம் மறந்து விட்டார், தமிழில் டி. வாங்கிய இலக்கியச் செம்மலும்... எனவே நான் முயல்கிறேன். ........  முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல். கரெக்டா?
    (அகனமர்ந்து செய்யாள் உறையும்,முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல்.) 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///துரை சார் ஆரம்பித்த குறளைத் தொடர ஸ்ரீராம் மறந்து விட்டார், தமிழில் டி. வாங்கிய இலக்கியச் செம்மலும்... எனவே நான் முயல்கிறேன்///

      இதென்ன புது வம்பாக் கிடக்கூஉ..

      “துப்பார்க்கித் துப்பார்க்குத்........ துப்பாய தூவும் மழை”.. ஆஆஆவ் எங்கும் பார்க்காமல் மீயும் ஜொள்ளிட்டெனாக்கும் பூஸோ கொக்கோ:))..

      இடையில கொஞ்சம் பக்கத்தைக் காணமோ?:) அஞ்சூஊஊஊஊஊ பிளீஸ்ஸ் பில் இன் தெ பிளாங்:))

      நீக்கு
    2. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
      துப்பாய தூஉம் மழை

      நீக்கு
    3. ஆஆஆஆஆஆஅ என் செக் இன்னுமா வேர்க்குக்குப் போகல்ல கர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
    4. //துரை சார் ஆரம்பித்த குறளைத் தொடர ஸ்ரீராம் மறந்து விட்டார்,///

      தெரிந்த குறளாயிருந்தால் சட்டென சொல்லியிருப்பேன்.   பழகாததாயிருக்கவும் ஒளிந்துகொண்டு விட்டேன்!

      நீக்கு
  34. அமைதிப் புறா பாடல் கேட்டதில்லை புறா பற்றிய செய்திகள் அறிந்தேன் தெரியாதது

    பதிலளிநீக்கு
  35. எல்லாரும் சொல்லியிருக்கிறார்கள்..

    ஆகவே நானும் ஒரு புறாப்பாட்டு சொல்கிறேன்...

    கோட்டையிலே ஒரு ஆலமரம்...
    அதில் கூடு கட்டும் ஒரு மாடப் புறா!...

    இப்படித் தொடங்கும் பாடல் முரடன் முத்து (சிவாஜி - தேவிகா)..
    சீர்காழியார் பாடியிருப்பார்..

    கவியரசரின் இந்தப் பாடல் குறித்து ஒரு சர்ச்சை...

    மாடப்புறா எப்படி ஆலமரத்தில் கூடு கட்டும்?..
    மாடங்களில் மட்டுமே வாழும் அதற்கு கூடு கட்டத் தெரியாதே!.. - என்று...

    பெரிய இடத்தில் மாடத்தில் வாழ்ந்த ஜீவன் ஒன்று தன் இருப்பிடத்தை இழந்த நிலையில்
    வாழ்தல் வேண்டி தட்டுத் தடுமாறி பழக்கமில்லாத ஆலமரத்தில் கூட்டைக் கட்டி வசிக்கப் பழகிக் கொள்கிறது.. - என்று விளக்கம் கொடுத்தார்களாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞர், கலைஞர் எல்லோரும் கலந்து கொண்ட ஒரு விழாவில், பேசிய ஒருவர்,மேற்படி பாடலை குறிப்பிட்டு "மாடப்புறா எப்படி ஆலமரத்தில் கூடு கட்டும்?..மாடங்களில் மட்டுமே வாழும் அதற்கு கூடு கட்டத் தெரியாதே!.." என்று கவிஞரை நோக்கி  கேள்வி எழுப்பினாராம். உடனே கலைஞர், "செல்வந்தனாக வாழ வேண்டிய தன் கணவன் விதி வசத்தால் ஏழ்மை நிலையில் வாழ்வதைத்தான் கவிஞர் இப்படி எழுதியிருக்கிறார்" என்று விளக்கமளித்த கலைஞர்,"என்ன கவிஞரே அப்படித்தானே?" என்று கேட்க, "நானும் ஆமாம், ஆமாம்" என்று கூறி விட்டேன். என்று கவிஞர் கூறியிருந்தார். 

      நீக்கு
    2. என்ன ஒரு சமாளிப்பு கவிஞருக்கு!

      நீக்கு
    3. //ஆகவே நானும் ஒரு புறாப்பாட்டு சொல்கிறேன்...//

      எஸ் பி பி லிஸ்ட்டிலிருந்து நான் இன்னொரு புறா பாட்டு சொல்லவா?  காதல்பரிசு படத்தில் "புறாக்களே...  புறாக்களே..."

      நீக்கு
    4. மீயும் மீயும் இன்னொரு பாட்டுச் சொல்லிட்டுப் போகட்டோ?:))..

      ஒரு பெண்...புறாஆஆஆ..... [அண்ணாமலை சோங்:)]

      நீக்கு
    5. ஆஆ துரை அண்ணன், பானுமதி அக்காவுக்கு நன்றி... கண்ணதாசன் அங்கிளின் கதை சொன்னமைக்கு.. அருமை.. கேட்க சந்தோசமாக இருக்கு.

      நீக்கு
    6. // மீயும் மீயும் இன்னொரு பாட்டுச் சொல்லிட்டுப் போகட்டோ? //

      "ஓ... பக் பக் பக் பக் பக் பக்கும் பக்கும் மாடப்புறா..்்"

      நீக்கு
  36. @ இடிதாங்கி இன்முகம்
    >>> துரை அண்ணனின் பாடல் வெளியீட்டால அவர் ஓரிடத்தில இருக்கிறார் இல்லை இன்று ஹா ஹா ஹா.. ஒரே கொமெண்ட்டை இரு இடத்தில போட்டிருக்கிறார்:) <<<

    சமயத்தில் மாமாங்கக் கூட்டம் மாதிரி கருத்துரை(கும்மிகளின்)நெரிசல்..

    முக்கியமா சொல்லியிருக்கிறோம்.. ந்னு நானே சந்தோஷப் பட்டுக்கிறது...

    கடைசிப்பந்தி மாதிரி கடைசியா ஒருதரம் போட்டு விட்டால்
    ஸ்ரீராம் ஜாமியாவது கண்டுக்கிடுமே...

    (இந்த யோஜனை இன்னைக்குத் தான் வந்தது..)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவும் சரிதான்.   பதில் கொடுக்க நான் கூடஅந்த இடத்தைத்  தேடிக்கொண்டு அலைவேன்!

      நீக்கு
    2. //சமயத்தில் மாமாங்கக் கூட்டம் மாதிரி கருத்துரை(கும்மிகளின்)நெரிசல்..//

      ஹா ஹா ஹா துரை அண்ணனுக்கு ஆராவது நித்திரைக் குளிசை குடுங்கோ கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுப்பாருக்கும்:)) ..

      //கடைசிப்பந்தி மாதிரி கடைசியா ஒருதரம் போட்டு விட்டால்
      ஸ்ரீராம் ஜாமியாவது கண்டுக்கிடுமே...//
      ஹா ஹா ஹா ஸ்ரீராம் சிலசமயம் கண்டாலும் காக்கா போயிடுவார் களைப்பில் இருந்தால்:))... ஆனா அதிரா கண்ணில பட்டுதோ ரெண்டு நாள் ஆனாலும் விடமாட்டேனாக்கும்:)) அப்பூடி எண்டில்லை எனச் சொல்ல வந்தேன்ன்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
    3. குளிசை இல்லாமலேயே நான் நித்திரை கொள்ளும் நேரம் வந்து விட்டது!!!

      நீக்கு
    4. நான் இன்னும் கொஞ்ச நேரம் இங்கிருந்து நெல்லைத்தமிழனின் அண்ணிக்கு ஒரு வட்சப் மெசேஜ் போட்டுவிட்டுத்தான்:) கம்பியை விட்டு இறங்குவேன்ன்:)) இது அந்த துரை அண்ணன் எழுதி வச்சிருக்கும் பாட்டின், கடசி வரியின் முதற் சொல்லின்மேல் ஜத்தியம் ஹா ஹா ஹா:)).

      நீக்கு
  37. ஆஆஆஆஆ ஸ்ரீராம் நெல்லைத்தமிழன் எல்லோரும் கம்பி மேல:)) ஹா ஹா ஹா மீயும் ரீ ஊத்தியதைப் பாதியில விட்டிட்டு ஓடிவந்து ஏறிட்டனே:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரீ ஆறி விடப் போகிறது. அல்லது டெய்சிப்பிள்ளை நாக்கைச் சுட்டுக் கொள்ளப் போகிறாள்...

      நீக்கு
    2. ஆஆஆ என் சத்தம் கேட்டதும் ஸ்ரீராம் கம்பியை விட்டு இறங்கி ஓடிட்டார் என நினைச்சேன்ன் ஹா ஹா ஹா.. ..

      ரீ யைத்தூக்கிக் கொண்டு படியேறி மேலேறி வந்திட்டனே. டெய்சி எப்பவும் வீரவாகு தேவர்போல என் பின்னாலேயே சுத்துவா.. பாத்ரூம் போனால்கூட டக்கென உள்ளே வந்து இருப்பா அப்படி ஒரு பிரியை அம்மாப்பிரியை:))

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!