ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

கார்களே நில்லுங்கள், கண்களே பாருங்கள் !!


இப்படி ஒரு கார் கண்காட்சி நம் ஊரில் என்று நினைக்கும்போதே ஒரு தூசிப்படலம் நம் கண்ணில் .....



குட்டி மஸ்தான் உண்மையில் பெரிய்ய்ய ஆள்தான் 



இங்கு நாங்கள் பார்த்த எல்லா கார்களையும் பார்க்க நீங்கள் கொடுத்துவைக்கவில்லை !






மாப்பிள்ளை அழைப்பு என்றால்.... மோட்டார் சுந்தரம்பிள்ளை கார் வருமோ? 



இந்த சிவப்புக் காரில் என்ஜின் எங்கே இருக்கும் என்று யோசித்திராதவர் உண்டோ?



வாசகார்களில்  இது நிறைய இருக்கலாம். 



பதினாறுக்கு அப்புறம் பத்தொன்பதா! 



kg யின் இரண்டாவது கார்!



எஞ்ஜின்ல எவ்வளவு சிலிண்டர்கள் இருக்கும்? 






4 WD என்றாலே jeep தான் முன்னெல்லாம் ! 






பளப் பளா  ..  ஜிலு ஜிலு ! 

1950..60 களில்  இந்தக் கார்,  நடிகர்களின் status symbol ! 



இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்ட்டர் ஆ ? அப்படீன்னா?




kg யின் முதல் கார் ...MSZ 53








லீபுவின் கைவரிசையோ?



இது நிறைய பார்த்திருப்போம்! 



மீண்டும் ஒரு மோ சு பிள்ளை? 




45 கருத்துகள்:

  1. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்...

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. இனிய காலை வணக்கம் கௌதமன் ஜி, அன்பு. துரை.. இந்த நாள் இனிய நாளாகட்டும்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல கார்கள் கலெக்ஷன். 1939 லிருந்து இருக்கே. ஷெவி, Ford, Rolls Royce, Austin, Morris Minor எல்லாமே இருக்கிறது. எங்க ஃபியட் கூட இருக்கு. மில்லிசென்ட்? இதை வாங்கப் போகிற புண்ணியவான்கள் யாரோ. நிறைய விலை இருக்கும். நல்ல மெயிண்டெனென்ஸ.

    பதிலளிநீக்கு
  4. ஜெமினி, ஃபியட் தான் கமல்கூட. ஏழாம் நம்பர் கார் ஃபியட் வைத்திருந்தார் பின்னர் கான்டெஸ்ஸா வாங்கினார் நம்பர் 3456. எங்களுக்கு எதிர்வீட்டில் இருந்ததால் தெரியும்.:)

    பதிலளிநீக்கு
  5. கன்வெர்டடபிள் கார்களும் இருக்கின்றன.சூப்பர் ஷோ!

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொற்று குறையவும் பிரார்த்திப்போம். கொரோனா பாதிப்பிலிருந்து அனைவரும் விடுபட்டு மகிழ்ச்சியாக நவராத்திரியைக் கொண்டாட வேண்டும் என்று பிரார்த்திப்போம். அக்டோபரில் நவராத்திரி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். அடுத்து வர இருக்கும் முக்கியமான பண்டிகை நவராத்திரி. நமக்கெல்லாம் அது ஒரு கொண்டாட்டம் மட்டுமல்ல மனதிலும் தெய்வீகத் தன்மையையும் அதிகரிக்கும் ஒரு ஆன்மீகமான வழிபாட்டு பண்டிகை. அதை நாம் எந்த பயமும் தயக்கமும் இல்லாமல் கொண்டாடுவதற்கு அந்தக் கடவுள்தான் தான் மணம் வைக்க வேண்டும். வாழ்க்கை இயல்பாக நடந்தாலும் மனதில் சஞ்சலங்களும் பயங்களும் அகல வேண்டும். விடியலை எண்ணி காத்திருப்போம்.

      நீக்கு
  7. கார்களின் அமர்க்களமான கச்சேரி. விதம் விதமான கார்கள். மாப்பிள்ளை அழைப்புக் கார் சரி, மோ.சு.பி. கார் சரி. காதலிக்க நேரமில்லை காரைக் காணோமே? அதுவும் ரொம்பவே பிரபலம் ஆச்சே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதலிக்க நேரமில்லை கார் ? முத்துராமனுடையதா, ரவிச்சந்திரன் ஆரம்பத்தில்
      ஓட்டி வருவதா, காஞ்சனா / ராஜஸ்ரீ ஓட்டி வருவதா? (உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா .. பாடல் காட்சியில் இடம் பெறும் கார்.)

      நீக்கு
    2. காதலிக்க நேரமில்லை காஞ்சனாவும் ராஜஸ்ரீ யும் ஓட்டிய கார் அது.

      நீக்கு
    3. நான் சொல்வது ரவிச்சந்திரன் ஓட்டும் டப்பாக் கார்! :)

      நீக்கு
    4. காஞ்சனா,ராஜ ஸ்ரீ ஹெரால்ட் .
      ரவிச்சந்திரன் Jalopy
      முத்துராமன் என்ன பார்வைக்கு Chevy Convertable.
      for estate,,, Plymouth.

      நீக்கு
    5. அட! எவ்வளவு விவரங்கள் நோட் செய்திருக்கிறீர்கள்!

      நீக்கு
  8. வீட்டில் கார் வாங்கி இருந்தால் ஒரே காரில் தான் போக முடியும். நாங்க ட்ராவல்ஸ் மூலம் பதிவு செய்து கார் எடுத்துப் போவதால் விதம் விதமான கார்கள் வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதையாவது போட்டோ எடுத்து மின்நிலாவிற்கு அனுப்பியிருக்கலாமே!

      நீக்கு
    2. இப்போ எங்கேயுமே போகலையே? காருக்கு எங்கே போவேன்?

      நீக்கு
  9. எனக்கு பழமையான கார்கள் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  10. தலைப்பு அருமை.
    கார்கள் படம் நன்றாக இருக்கிறது.
    அமெரிக்காவில் பழமையான கார்க்ளின் அணி வகுப்பைப்பார்த்தோம், பழைய கார்கள் கண்காட்சிக்கும் சென்று வந்தோம்.

    பதிலளிநீக்கு
  11. பழைய கார்களில் மோரிஸ் மைனர் ஆஸ்டின் கார்கள் தெரியும் காரைப் பார்த்தே இன்ன மேக் இன்ன கார் என் று சொல்பவர்கள் உண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னுடைய மூன்று வயது பேரனுக்கு அந்தத் திறமை இருந்தது. அவனுக்கு ஆங்கிலம் ஒரு எழுத்து கூட படிக்காத தெரியாத அந்த நாட்களில் அவன் கார்களின் வடிவத்தைப் பார்த்தே அந்த சிறிய வயதில் பத்துப் பதினைந்து வகை கார்களை அடையாளம் சொல்வான். முதல் முறை எந்தக் காரைப் பார்த்தாலும் அதன் மாடல் பெயரைக் கேட்டு வைத்துக்கொள்வான். அப்புறம் அந்த வடிவம் கொண்ட எந்த காரைக் கண்டாலும் உடனடியாக அந்த மாடல் பெயரைச் சொல்வான். எனக்கு மிகவும் ஆச்சரியத்தைக் கொடுத்த விஷயம் இது!

      நீக்கு
  12. நான் பேட்டரி கார் வாங்குவதற்காக காத்திருக்கிறேன். இப்போதைக்கு அந்த பாக்யம் கிட்டாது போலத் தான் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதைக்கு ஆறுததலுக்காக பேட்டரி காருக்கு பதிலாக கார் பேட்டரி வாங்கலாம்.

      நீக்கு
    2. கார் பேட்டரி ஃபாக்டரியும் (Factory)யும் வைக்கலாம்.
      உள்ளத்தில் உள்ளல் உயர்வுள்ளல்.

      நீக்கு
  13. கார் அணிவகுப்பு நன்று. அஹமதாபாத்திலும், ஜோத்பூரிலும் இது போன்ற பெரிய சேமிப்பு பார்த்திருக்கிறேன். எனது பதிவிலும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

    அழகான அணிவகுப்பு. படங்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. மகிழ்வுந்துகளின் அணிவகுப்பு கண்டு மகிழ்ந்தேன்

    பதிலளிநீக்கு
  15. ஆஆஆ சுற்றுலாப் பதிவு முடிஞ்சுபோச்சோ.. ஆஆஆஆஆஆஆ:)).. தலைப்பைப் பார்த்து சுற்றுலா இன்னும் முடியவில்லை என நினைச்சு, பேசாமல் போக நினைச்சும்.. இல்லை திறந்து பார்ப்போமே எனத் திறந்தேன்.. பார்த்தால் சைன் வைப்பேன் எல்லோ:))..

    மிக அழகிய கார்கள்... அந்தக் காலத்திலும் என்ன அலங்காரங்கள்.. சீட் எல்லாம் அழகிய வேலைப்பாடு.

    இங்கு ஸ்கொட்லாந்தில் இப்பவும் திருமணங்களுக்கு இக்கார்கள்தான், வாடகைக்கு கிடைக்கும் .. இங்கு பொம்பிளை மாப்பிளை ஊர்வலம் இக்காரிலதான் போவார்கள்...

    அழகிய கார்கள்.. அருமை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!