வெள்ளி, 20 நவம்பர், 2020

வெள்ளி வீடியோ : உலகத்தை மறந்து வந்து உறவு சொல்லி விளையாடு

1976 ஆம் ஆண்டு வெளிவந்த படம்.  விஜயகுமார் -  ராஜ்கோகிலா நடித்த படம்.  இசை எம் எல் ஸ்ரீகாந்த்.  இந்த விவரங்கள் தவிர வேறு விவரங்கள் கிடைக்காத ஒரு படம் 'நினைப்பது நிறைவேறும்' 

எம் எல் ஸ்ரீகாந்தும் வாணி ஜெயராமும் பாடி இருக்கும் இந்தப் பாடல் வெகு இனிமை, வெகு பிரபலம் அப்போது.

எம் எல் ஸ்ரீகாந்த் 'உத்தரவின்றி உள்ளே வா' படத்தின் "காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ" பாடலிலும் ஹம்மிங் செய்திருப்பார்.  அவர் பற்றிய விவரங்கள் தேடக் கிடைக்கவில்லை.  ஆனாலும் இனிமையான குரல்.  உடன் பாடும் வாணி ஜெயராம் பற்றிச் சொல்லவே வேண்டாம்.  பாடலுக்கான காட்சியும் கிடைக்காததால் சும்மா இயற்கைக் காட்சிகளை வைத்து பாடலை என் போன்றவர்களுக்காக இணையத்தில் ஏற்றியிருக்கிறார்கள்!

பாடல் எழுதி இருப்பவர் பெயர் மணியாம்.  தயாரிப்பாளரே பாடல் எழுதி இருப்பாரோ என்னவோ...

பாடலின் ஆரம்பத்தில் மிக இனிமையான இசையைத் தொடர்ந்து மிக அழகான ஹம்மிங்.  தொடரும் பாடல் டியூனும் குரலும்...   இருங்கள் மறுபடி மறுபடி அதையே சொல்லிக் கொண்டிருக்கிறேன்...   கேளுங்களேன்..  

சரணங்களில் முதல் வரி முடித்ததும் ஒரு டிங்க்டிங்க்டிங் இசை...  அப்புறம் சரணத்தை முடிக்கும் வரிகள் BHAAவத்தோடு பாடப்பட்டிருக்கும்.

நினைப்பது நிறைவேறும்  நீ இருந்தால் என்னோடு 
நடப்பது நலமாகும்  நான் இருந்தால் உன்னோடு  
நினைப்பது நிறைவேறும்  நீ இருந்தால் என்னோடு 
நடப்பது நலமாகும்  நான் இருந்தால் உன்னோடு  

இருவரும் சேர்ந்திருந்தால்  அன்போடு 
இன்றுபோல் வாழ்ந்திடலாம்  பண்போடு   

ஒருவரின் இதயத்தில்  ஒருவர் குடியிருந்தால் 
ஒருவரில் இருவரையும்  ஓருடலாய் கண்டிடலாம்  
ஒருவரின் இதயத்தில்  ஒருவர் குடியிருந்தால் 
ஒருவரில் இருவரையும்  ஓருடலாய் கண்டிடலாம்  

தனிமை உனக்கேது.... தாங்கும் இதயம் எனக்கேது 
தனிமை உனக்கேது.... தாங்கும் இதயம் எனக்கேது  
உலகத்தை மறந்து வந்து  உறவு சொல்லி விளையாடு 
உலகத்தை மறந்து வந்து  உறவு சொல்லி விளையாடு 

தேன்சுவைத் தமிழ் பேசி  தெம்மாங்கு இசைபாடி 
இருவரும் பெருமையுடன் இன்பமெல்லாம் கண்டிடலாம்  
தேன்சுவைத் தமிழ் பேசி  தெம்மாங்கு இசைபாடி 
இருவரும் பெருமையுடன் இன்பமெல்லாம் கண்டிடலாம்  

காதல் கவிபாடு... காலமெல்லாம் உறவாடு 
காதல் கவிபாடு... காலமெல்லாம் உறவாடு  
மனதை பறிகொடுத்தேன்  மறந்து வாழ முடியாது 
மனதை பறிகொடுத்தேன்  மறந்து வாழ முடியாது  

76 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் அண்ட் கௌ அண்ணா மற்றும் எல்லோருக்கும்...

    உத்தரவின்றி உள்ளே வா ன்னு பார்த்ததும் அந்தப் பாடலோ என்று நினைத்தேன்...கேட்டுவிட்டு வருகிறேன் வரிகள் பார்த்து ஒரு சில பாடல்கள் மட்டுமே சட்டென்று நினைவுக்கு வரும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா...   வாங்க...   இந்தப் பாடல் கேட்டிருக்கிறீர்களா என்று சொல்லுங்கள்...  எப்படி இருந்தது என்றும்!

      நீக்கு
    2. வணக்கம்! வாங்க!! ஆச்சரியமா இருக்கே முதல் ஆளாக வந்திருக்கீங்க!

      நீக்கு
    3. கௌ அண்ணா ஹா ஹா ஹா இப்பல்லாம் எப்பவாச்சும் வரேன்..

      புதன் மற்றும் நேற்றைய பதிவுக்கு பின்னூட்டக் கருத்துகளுக்கு மீண்டும் வந்து கொடுக்க விரும்பினாலும் நேரம் இடித்தது. கருத்துகளை எல்லாம் அடுத்த நாள் வாசிக்க நேர்ந்தால் அப்போது கொடுத்தால் ஆறிவிடுமே என்று

      இரு நாட்களும் சுவாரசியமான பல கருத்துகள்...

      கீதா

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. இனிய காலை வணக்கம், அன்பு ஸ்ரீராம், கீதா ரங்கன்,சகோதரி கமலா.
    எல்லோரும் நலமாக இருக்கப் பிரார்த்தனைகள்.

    இந்தப் பாடல் நல்ல பிரபலம் அப்போது. வெரி பாசிட்டிவ்.
    திரு ஸ்ரீகாந்த் வேறெதோ பாடல் கூடப்
    பாடி இருக்கிறார்.

    ''தனிமை உனக்கேது
    தாங்கும் இதயம் எனக்கேது'' வரிகள் மிகப்
    பிடிக்கும் .வாணி ஜயராமுக்கு அமைந்த அத்தனை

    பாடல்களுமே மிக சுவை. இந்தப் பாடலும் அந்த வகை.

    எனக்குப் பிடித்த பாடல் இன்னொன்று.
    ''நானா...பாடுவது நானா.'' சுஜாதா நடித்த படமோ.
    நினைவில்லை. முடிந்த போது பதிவிடுங்கள்:)
    முரளி என்ற பெயர் கொண்டவர் கழுகு படத்தில்
    ஒரு பாடல் பாடி இருப்பார்.
    அந்தக் காலத்தில் மிக விரும்பிக் கேட்டது.
    இது போல இரு பாடல் பாடி மறைந்து
    போனவர்கள் எத்தனையோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூகிள் தேடலில் ML Srikanth என்று தேடினால் நான்கு பாடல்கள் கண்ணில் படுகின்றன. காதல் காதல் என்று பேச, நினைப்பது நிறைவேறும் , வள்ளுவன் குரலில் சொல் எடுத்தேன் , பூங்கொடியே - பூங்கொடியே (ஆனால் இந்தப் பாடல் SPB பாடியது - கூகிள் தவறாகக் காட்டுகிறது) அவ்வளவுதான். எம் எல் ஸ்ரீகாந்த் மலையாளத் திரைப்படங்களில் சிலவற்றுக்கு இசை அமைத்துள்ளார் என்றும் சில தகவல்கள் காணக்கிடைக்கிறது.

      நீக்கு
    2. அப்புறம் ஒருமுறை நீங்கள் சொல்லி இருக்கும் பாடலை பகிர்ந்து விடலாம் வல்லிம்மா.  கண்கள் கவனம்.

      நீக்கு
    3. என்ன ஆச்சு கண்களுக்கு? எனக்கும் வலக்கண் இமையில் கட்டி வர ஆரம்பிச்சிருக்கு! :(

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாடல் நன்றாக இருக்கும், இன்று பகிர்ந்த "நினைப்பது நிறைவேறும்" என்ற முதல் வரியை படித்ததும் ஏற்கனவே கேட்ட ராகத்துடன் மனதில் தானாகவே பாடல் ஓடியது. அதுவேதான் என பாடல் கேட்டதும் புரிந்தது. ஆமாம்.. இந்தப் பாடல் அப்போது ரேடியோவில் அடிக்கடி கேட்டு ரசித்துள்ளேன். அதில் வாணி ஜெயராம் குரல் மட்டுந்தான் பரிச்சயம். எம் எல் ஸ்ரீ காந்த் என சொல்லும் போது எத்தனையோ பாடகர்கள் என நினைப்புடன் கேட்டிருப்பேன். ஆனால் இவ்வளவு தூரம் படம் பற்றியோ, பாடியவர்களின் விபரமோ தெரியாது. "உத்தரவின்றி உள்ளே வா" படப்பாடல்களும் அடிக்கடி கேட்டிருக்கிறேன். இப்போது நீங்கள் சொன்னவுடன் அந்தப்பாடலும் நினைவுக்கு வருகிறது. இப்படி தேடித்தேடி நீங்கள் தருவதால் பல பாடல்களை நினைவுக்குள் கொண்டு வர முடிகிறது. பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எம் எல் ஸ்ரீகாந்த் இசை அமைப்பாளரும் கூட என்றும் தெரியும்.,  ஆனால் பெரிய விவரம் எதுவும் தெரியவில்லை.  மலையாளக்கரையோரம் இருப்பவர்கள் விவரம் சொன்னால் தெரிந்து கொள்ளலாம்!

      நீக்கு
    2. "உத்தரவின்றி உள்ளே வா" படத்தைப் பல முறை பார்த்திருக்கேன். பாடலையும் கேட்டிருக்கேன். ஆனால் இப்படி ஒருத்தர் இருந்தது தெரியலை.

      நீக்கு
    3. காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ என்கிற பாடலில் வரும் ஆண்குரல் ஹம்மிங் மட்டும் செய்யும்.  அது இவர்தான்.

      நீக்கு
  5. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    நலமே வாழ்க என்றென்றும்...

    பதிலளிநீக்கு
  6. காலை எட்டரை மணியளவில் பழைய சோற்றுடன் தயரைச் சேர்த்து பிசைந்து சின்ன வெங்காயத்துடன் சாப்பிட்டு விட்டு அப்படியே தென்னந்தோப்புப் பக்கம் பசு மாட்டை ஓட்டிக் கொண்டு போகும் போது

    உடன் படித்த பத்மா - அந்தப் பக்கம் கடலைக் கொல்லையில் களை எடுத்துக் கொண்டிருந்தால் எப்படியிருக்கும்!..

    அப்படியிருக்கிற்து இந்தப் பாடல்!..

    பதிலளிநீக்கு
  7. இந்தப் பாட்டைக் கேட்டு பல வருடங்கள் ஆயிற்று...

    பதிலளிநீக்கு
  8. கேட்க ரசனையாக உள்ள பாடல். ரசித்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  9. ..மனதை பறிகொடுத்தேன் மறந்து வாழ முடியாது //

    ஆண்களின் பெருஞ்சிக்கல்
    மறக்கவும் முடியாது-மனதைவிட்டு
    இறக்கவும் முடியாது
    வாழவும் முடியாது
    சாகவும் முடியாது
    சதா பாட்டு கேட்டுக்கொண்டு
    திரியவேண்டியதுதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// சதா பாட்டு கேட்டுக் கொண்டே திரிய வேண்டியது தான்...///

      அருமை.. அருமை..

      நீக்கு
    2. சதா அழகான நடிகை (ஆனால் பாட்டுப் பாடுவாரா?) அண்டங்காக்கா கொண்டைக்காரி ------ ரண்டக -- ரண்டக --ரண்டக!! :)))

      நீக்கு
    3. அட்க் கெர்கமே!..

      சர்வ சதா காலமும்...ங்கற
      அர்த்தத்தில சதா. ன்னு கருத்து போட்டா

      அர்த்தம் அனர்த்தமாகி விட்டதெட்.

      சதா பாட்டும் கேக்கலாம் தான்.. ஆனா
      அதெல்லாம் சாதா பாட்டு தான்!..

      நீக்கு
    4. சதா இதைக் கேட்டால் கையை தலைக்குமேல் உயர்த்தி தலையைக் குனிந்து "போய்யா...   போ...." என்பாரோ!

      நீக்கு
    5. ஆனால் ஏகாந்தன் ஸார்...   பாடலில் மனதைப் பறிகொடுத்தேன் மறந்து வாழ முடியாது என்கிற வரிகள் பெண் குரலில் அல்லவா வருகின்றன!

      நீக்கு
    6. ’சதா பக்தர்’-ஐக் கண்டுகொண்டேன்..கண்டுகொண்டேன்! ‘சகா அழகான நடிகை’.. ஜொள்ளு..!

      நீக்கு
    7. ..வரிகள் பெண் குரலில் அல்லவா வருகின்றன!//

      வரட்டுமே! அதனால் ஆண் என்பவன் கணக்கில் வரமாட்டானா? அவன் காவியமாயிற்றே!

      நீக்கு
  10. அழகான பாடல், நகைச்சுவை மிளிரும் பின்னூட்டங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  11. அழகான பாடல், நிறைய கேட்டிருக்கிறேன். பாடியிருப்பது எஸ்.பி.பி. என்று நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மைகாட்!  எஸ் பி பி குரல் போலவா இருந்தது?  அது தனிங்க...

      நீக்கு
  12. ஆ ஸ்ரீராம் இந்தப் பாட்டு நிறைய கேட்டிருக்கிறேனே!!! மிகவும் ரசிக்கும் பாடல்...அப்பவும். இப்போதும் ரசித்தேன்.

    ஆனால் படம் பெயர் ஆண் பாடகர் எம் எல் ஸ்ரீகாந்த் கேட்டதே இல்லை. நல்லாவே பாடுறார். எங்கே போனார்? அவருக்கு அப்புறம் சான்ஸ் கிடைக்கவில்லையோ?

    நல்ல பாடல் ஸ்ரீராம் பல வருஷங்கள் கழித்து இப்போதுதான் கேட்கிறேன். என் மைத்துனர் கலெக்ஷனில் கூட இது இல்லை என்றே நினைக்கிறேன். இல்லைனா கேட்டிருப்பேனே...

    கீதா

    பதிலளிநீக்கு
  13. எம்.எல்.ஶ்ரீகாந்த்? ஶ்ரீராமுக்கு எங்கே இருந்து தான் பாடகர்கள் கிடைக்கிறாங்களோ? பாடகரையும் கேட்டதில்லை. பாட்டையும் கேட்டதில்லை. ஆனால் ராகம், பாவம், பாடலின் வரிகள் அருமை. ஆரம்பம் ரொம்பவே அருமை. மனதைக் கொள்ளை கொண்டது. ராஜ்கோகிலா யாருனே தெரியாது. விஜயகுமாரையும் வாணி ஜெயராமையும் தவிர இந்தப் படத்தில் தெரிஞ்சவங்க யாரும் இல்லைனு நினைக்கிறேன். என்றாலும் நல்லதொரு பாடலைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்குல்லாம் பாட்டுன்னா உசுருங்க...   நல்ல பாட்டு யார் பாடினா என்ன?  ராஜகோகிலா ஜம்பு போன்ற கர்ணனின் படங்களில் நடித்திருக்கிறார்.  நடிக்க மீனாவின் சித்தியோ, பெரியம்மாவோ!

      நீக்கு
    2. ஓ, அந்த ராஜ் கோகிலாவா? அவர் மீனாவின் அம்மா என்று கேள்விப் பட்டிருக்கேன். அப்போப் படிச்சப்போ நினைவில் வரலை. இப்போ நீங்க மீனானு சொன்னதும் நினைவுக்கு வருது.

      நீக்கு
  14. தி/கீதாவே கேட்டதில்லையாமே! அப்புறம் நானெல்லாம் எங்கே?
    இன்னிக்குக் காலம்பர ஆறுமணிக்கே மின்வெட்டு ஆரம்பித்து எட்டு மணி வரை நீடித்தது. குளிக்க வெந்நீர் காஸ் ஸ்டவில் போடும்படி ஆயிற்று. வெந்நீரை எடுத்துக் கொண்டு குளிக்கப் போனதும் மின்சாரம் வந்தது. :))))) இந்நாள் பொன்னாள்!

    பதிலளிநீக்கு
  15. இதற்கு முன்கேட்டதில்லை இரண்டு முறை அநேகமாக எல்லா வரிகளூம் ரிபீட் ஆவதே ஸ்பெஷாலிடி போலும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது சில பாடல்களின் ஸ்பெஷல்!  நன்றி ஜி எம் பி ஸார்...

      நீக்கு
  16. ஸ்ரீராம் இப்படத்தின் இசையமைப்பாளரும் எம் எல் ஸ்ரீகாந்த் தானாம் அப்படித்தான் https://spicyonion.com/tamil/musicdirector/m-l-srikanth-movies-list/ இந்தத் தளத்தில் இந்தத் தகவல் இருக்கிறது. நினைப்பது நிறைவேறும் ( Tamil )
    இயக்குனர் : எஸ்.டி.தண்டபாணி
    இசையமைப்பாளர் : எம்.எல்.ஸ்ரீகாந்த்
    வெளியிடப்பட்ட ஆண்டு: 1976

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், தெரியும் கீதா.  நானும் பார்த்தேன்.  ஸ்ரீகாந்த் பற்றி தனிப்பட்ட விவரங்கள் வேறெதுவும் தெரியவில்லை.

      நீக்கு
  17. இந்தப் பாடால் மற்றொரு வீடியோ பார்த்தப்ப அதில் விஜயகாந்த்? கதாநாயகன் என்று தெரிகிறது ஆனால் அந்தக் கதாநாயகி யார் என்று தெரியவில்லை.

    https://www.youtube.com/watch?v=fgKiDvs2vnI

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹிஹி ஸ்ரீராம் இந்த சுட்டி வீடியோவில் வரும் படம் தூரத்து இடிமுழக்கம் வீடியோ வாம் பாடல் மட்டும்தான் நினைப்பது நிறைவேறும் பாடல்!! ஹிஹிஹி இப்படி எல்லாம் போட்டா என்னைப் போல C K இல்லாதவங்க அப்படியே நம்பிடுவோம்!!!!!

      கீதா

      நீக்கு
    2. அட...   இப்படிக் கூட ஏமாறுவீங்களா?    அந்தப் பாடல் உள்ளம் எல்லாம் தள்ளாடுதே என்கிற தூ இ மு பாடல்!  யேசுதாஸ் பாடியது.

      நீக்கு
    3. பிரபலமான பாடல். எனக்கும் பிடிக்கும்.

      நீக்கு
  18. ..ராஜ்கோகிலா யாருனே தெரியாது.//

    இதைச் சொல்லத்தான் வந்தேன். கூடவே அந்த வரியைப் பார்த்து ஏதோ எழுதப்போக, அதைப் படித்து, ஏதோ நினைவில் கௌதமன் சார் சதா பின்னாலேயே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜ்கோகிலா, நாஜ்மல்லிகா... ன்னு ஓரளவுக்கு பெயர் பெற்ற இருவரும் புகழ் மிகப் பெற்ற இன்னொரு நடிகைக்கு நெருங்கிய உற்வுகள் என்று அப்போதைய ஊர்க்குருவி சொல்லிய செய்தி..

      எல்லாருக்கும் தெரிஞ்ச ரகசிய்ம்!..

      ( அப்பா.. விட்டது தலைவலி!..)

      நீக்கு
    2. மீனா என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  19. அருமையான பாடல்...

    ஆனால்...

    கணக்கியல் சரியில்லை...!

    பதிலளிநீக்கு
  20. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  21. பாட்டு அடிக்கடி முன்பு கேட்டு இருக்கிறேன்.
    நல்ல பாடல்.
    இந்த பாடல்களை பழைய பாடல் ஓளி, ஒலி பரப்பும் தொலைக்காட்சிகள் வைக்கலாம். வைத்த பாடலை திரும்ப திரும்ப வைக்கிறார்கள்.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  22. இந்தப் பாட்டு கேட்ட நினைவு இருக்கிறது. ஆனால் ரெம்ப அதிகம் நினைவில்லை. படம் வெளியில் வந்ததா என்று தெரியவில்லை. படம் பெயரே இப்போதுதான் தெரிகிறது. பாடல் நல்ல இனிமையாக இருக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!