சனி, 28 நவம்பர், 2020

இந்த வார நே ம செ

 


சோலார் இஸ்திரி வண்டி ! 

மாணவிக்கு கிடைத்த ஸ்வீடன் நாட்டு விருது: 

==== 

ஏழை மாணவியின் டாக்டர் கனவு நனவாக்கிய நடிகர் சிவகார்த்திகேயன்:

தஞ்சாவூர் : தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்து, ப்ளஸ் 2 தேர்வில், தேர்ச்சி பெற்ற மாணவி, 'நீட்' தேர்வுக்கு உதவிய நடிகர் சிவகார்த்திகேயனுக்கும், இட ஒதுக்கீட்டால் டாக்டராக்கிய அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அடுத்த பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்; மனைவி சித்ரா. கூலித் தொழிலாளிகளான இவர்களது மகள் சஹானா, 18; பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், உயிரி கணிதவியல் பாடப் பிரிவில் படித்தார்.இவர், வீட்டில் மின்சார வசதி இல்லாததால், தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்து, ப்ளஸ் 2 பொதுத்தேர்வில், 600க்கு, 524 மதிப்பெண் பெற்றார். 'கஜா' புயலால் வீடு சேதமடைந்த நிலையிலும், ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த இவர், நீட் தேர்வு எழுதி டாக்டராக வேண்டும் என்ற கனவுடன் இருந்தார். இது குறித்து, 2019 ஏப்ரல், 25ல், 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.

அதைத் தொடர்ந்து, அப்போதைய தஞ்சாவூர் கலெக்டர் அண்ணாதுரை, சஹானாவின் வீட்டிற்கு தன் சொந்த செலவில், இரண்டு சோலார் விளக்கு அமைத்துக் கொடுத்து, 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளித்தார். தகவல் அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன், தஞ்சையில் உள்ள தனியார் நீட் மையத்தில் பயிற்சி பெற, சஹானாவுக்கு தேவையான உதவிகள் செய்தார். தற்போது முடிந்த நீட் தேர்வில், 273 மதிப்பெண் எடுத்து, திருச்சி அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்து உள்ளார். 

சஹானா கூறியதாவது: "என் டாக்டர் கனவிற்கு பலரும் உயிர் கொடுத்தனர். நடிகர் சிவகார்த்தியேகன் உதவியால், டாக்டர் கனவு நனவானது. என் மருத்துவப் படிப்பு செலவு முழுதையும் ஏற்றுக்கொள்வதாக, அவர் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு என முதல்வர் அறிவித்ததாலும், டாக்டர் கனவு முழுமையாக நிறைவேறியது. அதற்காக, முதல்வருக்கும் நன்றி" இவ்வாறு, அவர் கூறினார்.

==== 
மழையில் தவித்த முதியவரை பத்திரமாக மீட்ட போலீசார்! 

சென்னை: சென்னையில் மழைநீரில் சிக்கி தவித்த முதியவரை பத்திரமாக மீட்ட போலீசார், நிவாரண முகாமில் சேர்த்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலானது. போலீசாருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
வங்கக்கடலில் உருவாகியுள்ள 'நிவர்' புயல் இன்றிரவு (நவ.,25) புதுச்சேரி - மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கிறது. தற்போது புயலானது கடலூரில் இருந்து 90 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் நேற்று(நவ.,24) முதலே கனமழை பெய்து வருவதால், சாமானிய மக்கள் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பாதுகாப்பாக மீட்டு நிவாரண முகாமில் சேர்க்கும் பணியில் மீட்புபடையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் மழைநீரில் சிக்கிய முதியவரை போலீசார் பத்திரமாக மீட்டுச்சென்று நிவாரண முகாமில் தங்க வைத்த நிகழ்வு பலருடைய பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், மக்களை மீட்கும் பணியினை களத்தில் நின்று செயலாற்றி வரும் காவலர்களை சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் பாராட்டியுள்ளார். அவரது டுவிட்டர் பதிவில், 'அவசரக் காலக்கட்டங்களில் களத்தில் நின்று பணிபுரிபுவர்களின் கடமைக்கு ஒரு சல்யூட் செலுத்துங்கள். அணியை நினைத்து பெருமை கொள்கிறேன்.' என பதிவிட்டுள்ளார்.

==== 
இளைஞர்களின் சமூக சேவை. 

திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் பெய்யும் மழை நீர் அங்குள்ள ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் திருக்குளத்திற்கு செல்லும் வகையில் வடிகால் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. காலடிப்பேட்டை மார்க்கெட் பகுதி, சன்னதி தெரு, செட்டி தெரு ஆகிய தெருக்களில் கால்வாய்களில் குப்பைகள் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டதால் மழை நீர் வடிந்து செல்ல வழியில்லாமல் சாலையில் தேங்கி நின்றது. இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், மாநகராட்சி ஊழியர்கள் வரும் வரை காத்திருக்காமல் தாங்களே அடைப்புகளை சரி செய்தனர். இதையடுத்து, தெருக்களில் தேங்கி நின்ற மழைநீர் கோவில் குளத்தை தடையின்றி சென்றடைந்தது. குளத்தின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.


===== சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு. 

                                 

மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லுாரி இயற்பியல் துறை மாணவர் தனுஷ்குமார் சோலார் மூலம் இயங்கும் சைக்கிளை வடிவமைத்துள்ளார்.மணிக்கு 30 கி.மீ., செல்லும் இச்சைக்கிள் 24 வோல்ட் மற்றும் 26 ஆம்பியர் பேட்டரி மூலம் இயங்க கூடியது. ரீசார்ஜ் வசதி உள்ளது. இதில் பயன்படுத்தக்கூடிய சூரிய தகடு 24 வோல்ட் மற்றும் 12 ஆம்பியர் கொள்ளளவு கொண்டதால் சூரிய தகடு மூலம் 50 கி.மீ., வரை இயக்க முடியும். 

மாணவரை கல்லுாரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.தனுஷ்குமார் கூறியதாவது: வடிவமைக்க 3 மாதங்கள் ஆகின. முதலில் பேட்டரி மூலம் இயக்கி பின் சோலாரில் இயங்குவதாக மாற்றப்பட்டது. சூரிய சக்தியும் குறையும் போது சாதாரண சைக்கிளாகவும் பயன் படுத்தலாம். தயாரிப்பு செலவு ரூ.25 ஆயிரம் ஆகிறது. பெட்ரோல் விலை அதிகரிப்பிற்கு இதை ஒரு மாற்றாக பயன்படுத்தலாம்.தயாரிப்பு செலவை குறைக்க முயற்சிப்பேன். ஸ்பீடுக்கு தகுந்து தயாரிப்பு செலவு அதிகரிக்கும், என்றார்.

==== 

பழத்தை பாதுகாக்கும் அயனிகள்!

விரைவில் அழுகிவிடும் பழங்களின் ஆயுளை நீட்டிக்க, அவற்றை உலரச் செய்வர். பழங்களிலுள்ள ஈரப் பதத்தை நீக்கினால், அவற்றின் சத்துக்கள் கெடாமல் நெடுநாட்கள் இருக்கும். மிகப் பழைய இந்த தொழில்நுட்பத்திற்கு மாற்றாக, வந்திருக்கிறது ஒரு ஹைடெக் யுக்தி. அதுதான் 'அயனிக் காற்று' மூலம் பழங்களை உலர்த்துவது.தற்போது, வெப்பமில்லா காற்றை தொடர்ந்து செலுத்தி, பழங்களை உலர்த்து கின்றனர்.

இதற்கு அதிக மின்சாரம் செலவாகும். அதற்கு பதில், பழங்களை கலனில் இட்டு, ஒரு உயர் மின்னழுத்தக் கம்பியில் நேர்மறை மின் துாண்டலை ஏற்படுத்தினால், காற்றில் உள்ள வாயுக்களின் அணுக்களின் எலக்ட்ரான்கள், அந்த மின் முனையை நோக்கி ஈர்க்கப்படும்.

அதே வேளையில், புரோட்டான்கள் பிரிந்து வேகமாக விலகும். இந்த வினையால் கலனின் அடியில் உள்ள சேமிப்பானை நோக்கி புரோட்டான்கள் பயணிப்பதை, 'அயனிக் காற்று' என்பர்.இந்த தொழில்நுட்பம் பழையது தான். என்றாலும், இதை பழங்களை உலர்த்துவதற்காக, சுவிட்சர்லாந்தின் 'எம்ப்பா' ஆய்வு மையம் மற்றும் கனடாவின் டல்ஹவுசி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் முதல் முறையாக பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர்.

அயனிக் காற்றினால், கலனில் உள்ள பழங்கள் ஒரே நேரத்தில், இரட்டிப்பு வேகத்தில் உலர்கின்றன என்பது இனிக்கும் செய்தி தான். விரைவில் இந்த நுட்பம் புழக்கத்திற்கு வந்தால், பழங்கள் விரையமாவது தவிர்க்கப்படும்.

==== 

அதிக திறன் கொண்ட தாது! அதிக ஆற்றல் மின்கலன் -- 

மின் வாகனங்களின் யுகம் பிறந்துவிட்டது. எனவே, அவற்றின் உந்து சக்தியாக இருக்கும் மின்கலன்களின் தொழில்நுட்பத்திலும் புதுமைகள் வரத் தொடங்கிவிட்டன. ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒரு ஆராய்ச்சிக் குழுவினர், நீல நிற தாது ஒன்றை அண்மையில் கண்டறிந்துள்ளனர்.

கடந்த, 2013ல் டோல்பாசிக் எரிமலை வெடித்தபோது கிடைத்த அரிய தாது இது. சோடியம் சல்பர், தாமிரம் மற்றும் மிக விநோத மூலக்கூறு அமைப்பைக் கொண்ட ஆக்சிஜன் ஆகியவை கலந்த கலவை இந்த தாது.

இதை பயன்படுத்தினால், சோடியம் அயனி மின்கலன்களில் உள்ள சிக்கலை எளிதில் தீர்க்கும் திறன் கொண்டது என்று ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 'பெட்ரோவைட்' என்ற இந்த தாதுவினால் செய்யப்பட்ட மின்கலன்களால், அதிக மின் ஆற்றலை, அதிக நேரத்திற்கு சேமித்து வைக்க முடியும்.

==== 26 கருத்துகள்:

 1. இந்தவார நேர்மறைச் செய்திகள் நன்று

  பழங்களை உலர்த்துவது என்பது உலர் திராட்சை மாதிரியான டெக்னிக் என நினைக்கிறேன். (அத்திப்பழம் போன்று). வேறு எந்தப் பழங்களை இப்படிச் செய்கிறார்கள், அதன் உபயோகம் என்னன்னு தெரியலை

  பதிலளிநீக்கு
 2. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் அமைதி நிலவி அச்சம் அகன்று நிம்மதியான வாழ்க்கை வாழப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 3. அனைத்துச் செய்திகளும் அருமை! அறியாத புதிய செய்திகள். மாணவிக்கு உதவிய நல்லுள்ளங்களுக்கு வாழ்த்துகள். புதிய கண்டுபிடிப்புக்கு மாணவன் தனுஷுக்கு வாழ்த்துகள். பொதுச் சேவையில் ஈடுபடும் மாணவர்களின் ஆர்வம் பாராட்டத்தக்கது. மேன்மேலும் சேவைகளில் மூழ்கிப் பல்வேறு சாதனைகளைப் படைக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 5. அனைத்துச் செய்திகளும் அருமை! அறியாத புதிய செய்திகள். மாணவிக்கு உதவிய நல்லுள்ளங்களுக்கு வாழ்த்துகள். புதிய கண்டுபிடிப்புக்கு மாணவன் தனுஷுக்கு வாழ்த்துகள். பொதுச் சேவையில் ஈடுபடும் மாணவர்களின் ஆர்வம் பாராட்டத்தக்கது. மேன்மேலும் சேவைகளில் மூழ்கிப் பல்வேறு சாதனைகளைப் படைக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் ரஜினி மாதிரி கிடையாது. வேணும்னா ஜூனியர்மோஸ்ட் ரஜினின்னு வச்சுக்கலாம்.

   நான் ஒரு தடவை சொன்னா மூணு தடவை சொன்ன மாதிரி. ஹாஹா

   நீக்கு
 6. காவல் துறையின் சேவை பாராட்டத்தக்கது.

  பதிலளிநீக்கு
 7. இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.
  இன்னாள் நன்ன்னாளாக இறை அருளட்டும்.
  இந்த வார நற்செய்திகள் அனைத்துமே
  சிறப்பு.
  சோலார் சக்தி அயர்ன் வண்டியைக் கொண்டு வந்திருக்கும் மாணவிக்கும்,
  அதே போல சைக்கிள்
  சூரிய ஒளியினால் இணைத்திருக்கும் மாணவருக்கும் நன்றி.

  மனதைத் தொட்டது,
  தஞ்சாவூர் சஹானா இறை அருளால் நல்ல மருத்துவராகி
  வளம் பெற வேண்டும்.

  கால்வாயைச் சுத்தம் செய்த இளைஞர்களின் திறனுக்கு
  மன்ம் நிறை பாராட்டுகள்.
  முதியவர்கள் இருவரையும் காப்பாற்றிக் கரை சேர்த்த
  காவல் துறையினருக்கு நல் வாழ்த்துகள்.
  மிக மிக நன்றி கௌதமன் ஜி.

  பதிலளிநீக்கு
 8. அனைவருக்கும் அன்பின் வணக்கம்..

  நலம் வாழ்க...

  பதிலளிநீக்கு
 9. சில நாட்களாக எதிலும் மனம் செல்ல வில்லை... இயந்திர கதியாய் இருக்கிறது..

  பதிலளிநீக்கு
 10. இந்த வாரத்தின் நேர் மறைச் செய்திகள் அனைத்தும் நன்று. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 11. இந்தவார நேர்மறை செய்திகள் அனைத்தும் நம்பிக்கை ஊட்டுபவை

  பதிலளிநீக்கு
 12. போற்றுதலுக்கு உரியவர்கள்
  போற்றுவோம்

  பதிலளிநீக்கு
 13. மருத்துவ மாணவிக்கு வாழ்த்துகள்.
  சேவை செய்யும் அனைத்து உள்ளங்களுக்கும் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!