புதன், 18 நவம்பர், 2020

அதிகம் கோபப்படுவது ஆண்களா? அல்லது பெண்களா?



ஏஞ்சல் : 
1, உறங்கும் புலி உறங்காப்புலி இரண்டுக்கும் என்ன வித்தியாசம் ?
இதில் நாம் எதுவாயிருப்பது நல்லது ?

# அது நாம் என்னவாக இருக்கிறோம் என்பதை வைத்துத் தீர்மானிக்க வேண்டும். உறக்கமோ இல்லையோ, புலியாக இல்லாமல் கன்றாக இருக்க முடியுமானால்..

& உறங்கும் புலி = இடறிவிட்டால் ஆபத்து. 
உறங்காப்புலி = எப்பொழுதும் ஆபத்து. 
இரண்டில் உறங்கும் புலியே பரவாயில்லை. 
நான் எப்பொழுதுமே பூசார் ! 

2, ஸ்பெஷல் மிக்ஸருக்கும் சாதா மிக்ஸருக்கும் என்ன வித்யாசம் ?
நாம் சாப்பிடும்போது //மிக்ஸர் சாப்பிடறாங்க // என்று தானே சொல்ல போறோம் :)))

# ஸ்பெஷல் ரகம் இரண்டு மு.ப கூட,  கொஞ்சமாக அவல் , சுட்ட எண்ணெய் தவிர்ப்பு ?

& நாம் சாப்பிடும்போது 'மிக்ஸர் சாப்பிடறாங்க' என்றுதானே சொல்லுவாங்க - இந்த அவமானத்தை தவிர்ப்பதற்காகவே நான் ஸ்பெஷல் மிக்ஸர் குவியலிலிருந்து முதலில் முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு துகள்களை கபளீகரம் செய்துவிடுவேன். அப்புறம் யாராவது பார்த்து, 'மிக்ஸர் சாப்பிடுகிறேன்' என்று சொன்னாலும் கவலைப்படமாட்டேன்! 

3, அதிகம் கோபப்படுவது ஆண்களா ? அல்லது பெண்களா ?

# என்னைக் கேட்டால் ஆண்கள்.

& என்னைக் கேட்டால் பெண்கள். (இன்றைய பின்னூட்டங்களில் இருக்கு எனக்கு கச்சேரி!) 

4, எதை எங்கே சொல்கிறோம் என்பது முக்கியமா ? அல்லது எதை எப்போது சொல்கிறோம் என்பது முக்கியமா ??

# எதை எப்போதும் எங்கேயும் 'சொல்லாமல்' இருக்கிறோம் என்பதே முக்கியம்.

& இரண்டில், எதை எப்போது சொல்கிறோம் என்பதே முக்கியம். 

5,  போன வருஷம் தாம்பரம் பகுதியில் குடியிருந்த ஒருவர் இந்த வருஷம் அண்ணாநகரில் குடி பெயர்ந்து பிறகு அடுத்த வருஷம் மைலாப்பூர் வீட்டுக்கு இடம்பெயர்வார் .இப்படி இடம் குடிபெயரும்போது இப்போதிருக்கும் இடம் பற்றி உயர்த்தியும் முன்னிருந்த இடங்கள பற்றி வாய்க்குவந்தபடி இழிவாய் பேசுவது முறையா ?

# அப்படி இழிவாகப் பேசுகிறார்களா என்ன ? பேசினால் தவறுதான்.  வேண்டுமானால் இப்போதைய இடத்தைப் புகழ்ந்து பேசிக்கொள்ளட்டும். 
 நான் பார்த்தவரை முன்பு இருந்த இடமே சொர்க்கம் எனப் பேசுவோரே அதிகம்.

& இருக்குமிடம் சுவர்க்கம் என்று நினைப்பதில் தவறு இல்லை. ஆனால் இருந்த இடம் நரகம் என்று சொல்வது சரியான நிலைப்பாடு அல்ல. 

நெல்லைத் தமிழன் : 

ப்ரார்த்தனை பண்ணறோம்..நிறைய தடவை..ஆனால் எதுவும் நடப்பதில்லை. அது நடக்கும்போதுதான் நடக்கும். அப்போ ப்ரார்த்தனையால் என்ன பயன்?

# கடவள் கையில் பிரச்சினைகளை ஒப்படைத்து விட்டு அதன் பின் "எல்லாம் அவன் செயல்" என்ற பக்குவம் இருப்பவர்கள் தம் பிரார்த்தனை பலித்தாலும் அல்லாது போனாலும் அதனால் கலங்க மாட்டார்கள்.  அப்படியானவர்களுக்கே பிரார்த்தனை ஒரு பெரிய பலமாக இருக்கும்.  பிரார்த்தனை செய்வது பலனை வேண்டி அல்ல (மனப்)பக்குவத்தை வேண்டி என்ற நோக்கில் பாருங்கள்.

& ப்ரார்த்தனை செய்வது 'Urgent' சமாச்சாரங்களுக்காக அல்ல. காலம் கனியவேண்டும், அப்படிக் கனியும்போது எல்லாம் நன்றாக நடக்கவேண்டும் என்று நினைத்துதான். பிரார்த்தனை என்பது 'முதல் உதவி' அல்ல. முதல் உதவி செய்து முடித்துவிட்டு குணமடைவதற்காக பத்தியம் இருப்பதைப் போன்றது. 

===== 

மின்நிலா தீபாவளி சிறப்பிதழ் படித்தவர்கள் அது குறித்த குறை நிறைகளை எங்களுக்கு எழுதவும். 

1) Through email : engalblog@gmail.com
2) Through whatsapp messenger : 9902281582 ( No voice calls please) 
3) எங்கள் blog புதன் கிழமை பதிவுகளின் பின்னூட்டங்கள் மூலமாக 

அடுத்து, 

ஜனவரி 11 - 2021 இதழ் பொங்கல் சிறப்பிதழாகவும் 
ஜூன் 28 - 2021 இதழ் ஆண்டு மலராகவும் தயார் செய்யலாம் என்று நினைக்கிறேன். இது குறித்து உங்கள் கருத்து என்ன?

ஒரு சோதனை முயற்சியாக, மின்நிலா தீபாவளி சிறப்பிதழை amazon kindle தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளேன். கீழே அதனுடைய இணைப்புகள் கொடுத்துள்ளேன். 




INDIA :  https://www.amazon.in/dp/B08NGRY76W

USA : https://www.amazon.com/dp/B08NGRY76W

UK : https://www.amazon.co.uk/dp/B08NGRY76W

இலவச பிரதியாக வெளியிடவேண்டும் என்பதுதான் என் ஆசை. ஆனால் amazon kindle தளத்தில் இந்த அளவு உள்ள புத்தகத்திற்கு இந்த நூறு ரூபாய் விலைதான்  குறைந்தபட்சம் நிர்ணயிக்கவேண்டும் என்று அடித்துச் சொல்லப்பட்டதால் வேறு வழி இல்லை. 

நூறு ரூபாய்கள் செலவழிக்கத் தயங்காத நண்பர்கள் உங்களுக்கு இருந்தால் அவர்களை இந்த தீபாவளி மலரை amazon மூலம் வாங்கச் சொல்லுங்கள். இந்த தீபாவளி இதழ் விற்பனை மூலமாகக் கிடைக்கும் ராயல்டி தொகையை, சிவானந்தா ஆதரவற்றோர் இல்லத்திற்கு (Sivananda Saraswathy Sevashram)  நன்கொடையாக கொடுக்க எண்ணியுள்ளேன். 

நன்றி. மீண்டும் சந்திப்போம். 

==== 




 

163 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம். அனைவருக்கும் இறை அருள்
    என்றும் உடன் இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  2. கேள்விகள் பதில்கள் சுவாரஸ்யம்.
    ஏஞ்சலுக்கும், நெல்லைத்தமிழனுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  3. இருந்த இடம் தாய் வீடு. இருக்குமிடம்
    தற்காலிகம்.
    இரண்டையுமே போற்றினால் வாழ்க்கை சுலபம்.

    தாயைப் பழிப்பது வேதனை.
    மைலாப்பூரோ, அண்ணா நகரோ
    நமக்கு வாழ்வு கொடுத்த இடத்தை தவறாக சொல்வது கேவலம்.

    மிக்சர் புராணம் சூப்பர்.
    உறங்காப்புலி ,எனக்கு நெல்லையின் வைணவத்தலமான
    குருகூர் என்ற ஊரை நினைவுக்குக் கொண்டு வந்தது.
    அது உறங்காப்புளி. புளிய மரம்.
    ஆழ்வாரைத் தன்னுள் வைத்திருந்த தாய்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உறங்காப்பளி என்றால் எனக்கும் ஆழ்வாரின் அவதாரஸ்தலம் மட்டும்தான் நினைவுக்கு வரும். வைணவத்தின் தோற்றுவாயில்களில் ஒன்றல்லவா அது

      நீக்கு
    2. எனக்கும் உறங்காப்புளியே நினைவில் வந்தது. அதை எழுத நினைக்கையில் வல்லியும் அதையே சொல்லி இருப்பதைப் பார்த்தேன்.

      நீக்கு
    3. ஆச்சரியம் - எனக்கும் உறங்காப்புளி தலம்தான் கேள்வியைப் படித்தவுடன் ஞாபகம் வந்தது!

      நீக்கு
    4. எனக்கும் உறங்காப்புலி என்பது உறங்காப்புளியைத்தான் நினைவூட்டியது.

      நீக்கு
    5. ஆஆச்சர்யம் உறங்காப்புளி என்று ஒரு ஊர் பெயர் இப்போதான் கேள்விப்படறேன் .

      நீக்கு
    6. ஆச்சர்யம்ன்னு சொன்னது ஒட்டுமொத்தமா 5 பேருக்கும் ஒரே நினைவு வந்திருக்கே 

      நீக்கு
    7. உறங்காப்புளி புளிய மரத்தின் பெயர். ஊர்ப் பெயர் அல்ல. ஊர்ப் பெயர் திருக்குருகூர். நம்ம வல்லிக்குப் பிடித்தமான ஊர். திருக்குருகூர்ச் சடகோபனை அறியாதோரும் உண்டோ?

      நீக்கு
    8. ஓ அப்படியா !! பெயர் காரணம் என்ன ? கோமதிக்கா சொல்லிருக்காங்க அந்த மர இலை மூடாதாம் !
       ஏன் ?

      நீக்கு
  4. அதிகம் கோப்ப்படுவது - பொதுவா ஆண்களுக்குத்தான் கோபம் மிக அதிகம். அவங்க எப்போதுமே அதிகாரத்துல, முடிவு எடுக்கவேண்டிய, குடும்பத்தை கடைசிவரை ஒழுங்காக நடத்திச்செல்ல வேண்டிய, தன் வீடு மற்றும் மனைவியின் வீட்டு உறவை ஓரளவு பேணவேண்டிய கட்டாயத்தில் இருப்பதால். சமூகத்தில் இந்த ரெஸ்பான்சிபிலிட்டி வெளிப்படையா மனைவிக்குக் கிடையாது. குடும்பத்தில் எந்தக் குறை என்றாலும் வெளி ஆட்கள், சமூகம், ஆண் தன் கடமையைச் செய்யவில்லை என்றுதான் சொல்லும். விதிவிலக்குகளை விட்டுவிடுவோம்.

    எப்போ மனைவி கோப்ப்படுவாங்கன்னா, அவளுடைய உறவினர்கள் முன் அவளை கௌரவமாக, வளர்ந்தபின் பசங்க முன் மரியாதையாக நடத்தலைனா, அவள் குழந்தைகளுக்கு வேண்டியதைச் செய்யலைனா. அவள் கோபத்தில் பெரும்பாலும் அர்த்தம் இருக்கும். ஆணின் கோபத்தில் வெறும் உணர்ச்சிதான் இருக்கும்.

    கேஜிஜி சார் பதில் (&) ஏற்றுக்கொள்ள இயலாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜிங்க் சக்க ஜிங்க் சக்க ஜிங்க் சக்க ஜிங்க்

      நீக்கு
    2. இதோட, "அவ்வப்போது மனைவியிடம், இங்க நான்தான் BOSS" என்று காண்பித்துக்கொள்வதற்கும், என்பதையும் சேர்த்துக்கிடுங்க. அதனாலத்தான் மனைவி புடலங்காய் வாங்கச் சொன்னால் கத்தரிக்காய் வாங்கிவருவது, இன்று வத்தக்குழம்பும் பருப்பசிலியும் என்று சொன்னால், வேண்டாம், மோர்க்குழம்பும் கத்தரி கூட்டும் என்று மெனுவை மாற்றுவது. ஹா ஹா

      நீக்கு
    3. ஹலோ! கேள்வியை நன்றாகப் படிங்க. " அதிகம் கோபப்படுவது ஆண்களா ? அல்லது பெண்களா ?" இதுதான் கேள்வி. அதிகம் கோபப்படுவது கணவனா அல்லது மனைவியா என்று ஏஞ்சல் கேட்கவில்லை.

      நீக்கு
    4. ஒவ்வொரு நிலையிலும், அது கணவன் ஆனாலும் சரி, ஆபீஸில் வேலை பார்ப்பவர் ஆனாலும் சரி, எந்த பொசிஷனில் இருந்தாலும் பெரும்பாலும் ஆண்கள்தான் 'லொள் லொள்'னு எரிஞ்சு விழுவாங்க. ஹாஹா

      நீக்கு
    5. ///அதிகம் கோபப்படுவது கணவனா அல்லது மனைவியா என்று ஏஞ்சல் கேட்கவில்லை.//

      ஹாஆஹாஆ அதிலெல்லாம் எனக்கு டவுட் வராது :))))))))

      நீக்கு
    6. பெண்களே அதிகம் கோபப்படுகிறார்கள்.

      நீக்கு
  5. பிரார்த்தனை மன பலம் கொடுக்கும்.
    எத்தனையோ பிரார்த்தனைகள் நிறைவேறி இருக்கின்றன.

    இடைவிடாமல் நல்லதையே நினைத்துக் கொண்டிருந்தால்
    நன்மை கிடைக்க வழியுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// இடைவிடாமல் ந்ல்லதையே இனைத்துக் கொண்டிருந்தால்..///

      கெரகம்.. நல்லதை நெனைக்க விட்டாத் தானே!..

      நீக்கு
    2. //கெரகம்.. நல்லதை நெனைக்க விட்டாத் தானே!..// 100%

      நீக்கு
    3. சமீபத்தில் ஆஸ்டின் அருகே ஒரு தென்னிந்திய உணவகத்தில் சாப்பிட நேர்ந்தது. பொங்கல், மசாலா டீ கேட்டிருந்தேன். பிள்ளையாரப்பா.. பொங்கல்ல முந்திரிபருப்பு தந்தருள வேண்டுமென்று பிரார்த்தித்துக் கொண்டேன்.. பொங்கல் முந்திரி பருப்பு மிதக்க அட்டகாசமாக இருந்தது. பிரார்த்தனைகள் பலிக்கும்.

      நீக்கு
    4. ஆஆவ் !!! பொங்கலெல்லாம் அங்கே ஹோட்டலில் கிடைக்குதா !!! அதுவும் முந்திரிப்பருப்போடு !!!!ஹ்ம்ம் இங்கே லண்டனில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு puke பண்ணாத குறைதான் ..இங்கே எதுவும் பிரெஷ் கிடையாது .சென்னை தோசான்னு திறந்தாங்க எங்க பக்கம் யூஸ்லெஸ் ஒரு மசாலாடோசைக்கு ஆசைப்பட்டு ஒரு வாரம் அவதிப்பட்டேன் .
      சரி சரி என்ஜோய் 

      நீக்கு
  6. //எதை எப்போதும் எங்கேயும் சொல்லாமல்//- அட்டஹாசமான பதில்.

    ஆப்ரஹாம் லிங்கன், ஒருவர் செய்வது பிடிக்கவில்லை, அவர் மீது கோபம் வருகிறது என்றால், தனியாக அமர்ந்து ஒரு பேப்பரில் அவரைத் திட்ட வேண்டியதெல்லாம் கடிதமாக எழுதித் தன் தனிப்கட்ட ஃபைலில் வைத்துக்கொள்வாராம். தன் மன உணர்ச்சிக்கு வடிகால் செய்தாயிற்று. கோபத்தை வெளிப்படுத்தி பிறரை புண்படுத்தாமல் இருந்தாயிற்று.

    எத்தகைய மேன் மேனேஜ்மென்ட் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா! ஆங்கர் வென்ற லிங்கன் வாழ்க.

      நீக்கு
    2. ஒருவர்மீது கோபம் உச்சத்தில் இருக்கையில், ஒருவன் தனியான இடம் தேடி, பேப்பர் பேனாவைத் தேடி எடுத்துக் கன்னத்தில் கைவைத்து, ஓசித்து ஓசித்து எழுதுவானாக்கும். பெரிசப்பத்தி எவனோ விட்ட உடான்ஸ்! மற்றபடி ஆப்ரஹாம் ஒரு அசடு என்பதையும்..

      நீக்கு
    3. ஏகாந்தன் சார்... லிங்கன் இங்கதான் உசந்து நிற்கிறார் என்பது என் எண்ணம். அவர் மீது கோபம் கொண்டவங்க, அவர் எடுத்த முடிவுகளைப் பிடிக்காதவங்க. (அடிமைத்தனம்). ஆனால் பெர்சனலா அவர் மீது கோபமே இருந்திருக்க முடியாது, லிங்கனின் ஆட்டிடியூட்டால்.

      ஆங்கர் மேனேஜ்மெண்டே என்ன சொல்லுது, கோபம் வரும்போது, 1, 2, 3, 4... என்று எண்ணு, கோபம் இருக்கும்போது எந்த முடிவும் எடுக்காதே, கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டாதே என்றெல்லாம் சொல்லுது. ஆனால் நம்மைப்போல - என்னைப் போல சாதாரணர்களுக்கெல்லாம் இது வேலைக்காகாது. ஹாஹா

      நீக்கு
    4. ’ஆங்கர் மேனேஜ்மெண்ட்’.. சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருகிறது, நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ!

      ஒரு வேளை இது hanger management - ஆக இருக்கலாம். Wardrobe-ல், hanger-கள் விழாமல், ஒன்றோடொன்று பின்னிக்கொள்ளாமல் அல்லது திடீரெனக் காணாமல்போகாமல் பார்த்துக்கொள்வது எப்படி என்பதற்கான PG Course-ஆக இருக்கக்கூடும். இப்போதுதான் எதற்கெடுத்தாலும் ஒரு மேனேஜ்மெண்ட் கோர்ஸ் இருக்கிறதே!

      நீக்கு
  7. அன்பு முரளியின் வார்த்தைகளை
    ஆமோதிக்கிறேன்.

    பெண்ணைப் பலர் முன்னிலையில்
    கணவன் விட்டுக் கொடுத்துவிட்டால் வரும் அவமானம் கடுங்கோபத்தை உண்டு பண்ணும்.

    அதே போல் ஆண்களுக்கும் சினம் வர நிறையக் காரணங்கள் இருக்கும்.
    இந்த இடத்தில் நம் கோபம் செல்லும் என்று
    தெரிந்தால் ஆட்டம் போடும்.
    செல்லாது என்று நினைத்தால் அடங்கிப் போவார்கள்
    ஆண்கள்.:)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆண்கள் வேற என்னதான் பண்ணறது வல்லிம்மா? தோற்றுவிடுவோம் என்ற போரில் எவனாவது இறங்குவானா? செல்லுபடியாகாத இடத்தில் கோப்ப்பட்டால், உள்ளதும் போச்சு நொள்ளைக் கண்ணா என்ற கதையாகிவிடாதோ?

      நீக்கு
    2. ஊஹூம் ! வாதங்களில் காரம் இல்லை. பா வெ மேடம் இந்தப்பக்கம் வந்தால் விவாதம் சூடு பிடிக்கும்.

      நீக்கு
    3. Haaaahaaaaaaaaa.கோபித்து லாபம் ஏதும் இல்லை என்றால் என்ன செய்யலாம் கௌதமன் ஜி:(

      நீக்கு
    4. //எப்போ மனைவி கோப்ப்படுவாங்கன்னா, அவளுடைய உறவினர்கள் முன் அவளை கௌரவமாக, வளர்ந்தபின் பசங்க முன் மரியாதையாக நடத்தலைனா, அவள் குழந்தைகளுக்கு வேண்டியதைச் செய்யலைனா. அவள் கோபத்தில் பெரும்பாலும் அர்த்தம் இருக்கும்.//

      //பெண்ணைப் பலர் முன்னிலையில்
      கணவன் விட்டுக் கொடுத்துவிட்டால் வரும் அவமானம் கடுங்கோபத்தை உண்டு பண்ணும்.//


      நானும் நெல்லைத்தமிழன் , வல்லி அக்கா கருத்தை ஆமோதிக்கிறேன்.

      நீக்கு
  8. ஸ்பெஷல் மிக்சர், சாதா மிக்சர் - என்னல்லாம் சந்தேகம் வருது. முந்திரி போன்ற காஸ்ட்லி சமாச்சாரங்கள் சேர்ந்திருந்தால் அது ஸ்பெஷல் மிக்சர். ஏழைகளின் முந்திரியான நிலக்கடலை மட்டும் இருந்தால் சாதா மிக்சர். திருநெவேலி லாலா கடைகளினூடே வாழ்ந்தவனிடம் கேட்கவேண்டிய கேள்வியை, தஞ்சைக்கார்ர்களிடம் கேட்கலாமோ?

    சமீபத்தில் சாந்தி ஸ்வீட்ஸ் (ஒரிஜனல், நெல்லை ஜங்ஷன்) போன் நம்பர் தேடிக்கொண்டிருந்த போது, நெல்லை லக்ஷ்மிவிலாஸ் கடை போட்டோக்கள் தென்பட்டன. அதில் சாதா அல்வா கிலோ 200 ரூ, ஸ்பெஷல் அல்வா 300 ரூ என்று போட்ட கடை விலைப்பட்டியல் பார்த்தேன் (இப்போ 250, 400 என்று மாறியிருக்கலாம்). ஒன்று வனஸ்பதியில் செய்தது, இன்னொன்று நெய்யும் கூடச் சேர்த்தது என்று புரிந்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவர் : " ஏம்பா கடையில் சாதா டீ பத்து ரூபாய், ஸ்பெஷல் டீ பதினைந்து ரூபாய் என்று போட்டிருக்கிறாயே, இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?"
      கடைக்காரர் : " ஸ்பெஷல் டீ என்றால் கிளாஸை கழுவிய பின் டீ ஊத்துவோம் சார்."
      கேட்டவர் : " சாதா டீ ?"
      கடைக்காரர் : " கழுவி ஊற்றியதில் கொஞ்சமா டீ கலந்து கொடுப்போம் சார்"
      கடைக்காரப் பையன் : " ஸ்பெஷல் டீ என்றால், டீ கிளாஸ் கொண்டு வந்து கொடுக்கும்போது அதில் விரல் வைக்காமல் கொடுப்பேன் சார் "

      நீக்கு
    2. காலங்கார்த்தால என்ன மாதிரிலாம் பழைய ஜோக் கேஜிஜி சாருக்கு நினைவுக்கு வருது.

      உங்க ஆஸ்பத்திரில சாதா ட்ரீட்மெண்டுக்கும் ஸ்பெஷல் ட்ரீட்மெண்டுக்கும் என்ன வித்தியாசம்?

      சாதா ட்ரீட்மெண்ட்னா, பேஷண்டோட வந்திருக்கும் உதவியாளர்கள் உறவினர்களுக்கு கேண்டீன் சாப்பாடுதான். பேஷண்ட் பிழைக்கறது இறைவனின் எண்ணத்தைப் பொறுத்து இருக்கு.

      ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்னா, ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்லேர்ந்து அவங்களுக்கு உண்வு வாங்கிக் கொடுப்போம், பேஷண்ட் கணக்குல எழுதுவோம். ஆஸ்பத்திரில இருக்கிற உபயோகிக்காத எல்லா மெஷினையும் வைத்து, எக்மோ முதல்கொண்டு, ட்ரீட்மெண்ட் கொடுத்து, ஆளை அனுப்புவோம்.

      நீக்கு
  9. மின் நிலாவை முழுவதும் படித்துப் பின்னூட்டம்
    இட்டிருந்தேன்.
    அற்புதமான வடிவமைப்பு,
    படங்கள் ,கவிதைகள் கதைகள் எல்லாமே நயமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொடரும் நாட்கள் எவ்விதமான இல்லலும் இன்றி அமைதியாகவும் மன மகிழ்ச்சியுடனும் கழியட்டும். பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  11. பதில்கள்
    1. வல்லிம்மா... ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, அல்வா கிலோ 220 ரூபாய்தான். கார வகைகள் 200 ரூபாய். இருட்டுக்கடை, சாந்தி ஸ்வீட்ஸ் மற்றும் பிற லாலா கடைகளில். அவ்ளோதான். (நம்ம நெல்லைக்காரங்க, கஸ்டமர்களிடம் பணத்தைச் சுருட்ட மாட்டாங்க ஹா ஹா). இலவசமா தொன்னைல சர்க்கரைப் பொங்கல் கொடுத்துட்டு, இனிப்பு விலையை கிலோ 650-750 ரூபாய்னு ஏத்த அவங்களுக்குத் தெரியாது.

      நீக்கு
    2. வல்லி, இந்த தீபாவளிக்கு இங்கே உள்ள காடரிங்க் காரங்க கொடுத்திருந்த பட்டியல்படி காரங்கள் எல்லாம் 4400/450, தித்திப்பு வகைகள் எல்லாம் 500/550. இதுவே சென்னையில் காரம் 250, தித்திப்பு 300 குறிப்பிட்ட சில 350/400.

      நீக்கு
    3. ஹாஹாஹா, 400 என்பது 4400னு வந்திருக்கு! இஃகி,இஃகி,இஃகி!

      நீக்கு
  12. இருக்கும் இடம் குறித்த/இருந்த இடம் குறித்த கேள்விகளுக்குப் பதிலாக நான் நினைப்பதைச் சொல்ல யோசனையாய் இருக்கிறது. அதனால் பின்னர் வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் நீங்க, 'எங்க ராஜஸ்தான் பங்களால', 'எங்க அம்பத்தூர் வீட்ல', "எங்க மதுரை வீட்டுல' என்று எழுதினீங்கன்னா, இன்னைக்கு கலாய்க்கலாமா, எனக்கு சந்திராஷ்டமமா என்று ஒரே யோசனையாய் இருக்கு. ஹாஹா

      நீக்கு
    2. இன்றைக்கு கிருத்திகை & ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்குத்தான் சந்திராஷ்டமம். எனக்கோ, உங்களுக்கோ கிடையாது.

      நீக்கு
    3. நெல்லை ரோகிணி நக்ஷத்திரம் தான்னு நினைக்கிறேன். சரியா?

      நீக்கு
    4. சூர்யாஷ்டமம் -ன்னு ஒன்னும் இல்லியே.. எதுக்கும் பாத்துடுங்கோ! சார்வரிக் கதையே ஒரு மாதிரியாத்தான் இருக்கு..

      நீக்கு
    5. //எனக்கும் நீங்க, 'எங்க ராஜஸ்தான் பங்களால', 'எங்க அம்பத்தூர் வீட்ல', "எங்க மதுரை வீட்டுல' என்று எழுதினீங்கன்னா, இன்னைக்கு கலாய்க்கலாமா,// கோவிச்சுண்டு ஒண்ணும் சொல்லாமப் போறேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    6. கோபம் கொள்ள லாகுமோ? அக்காவின் கோபம்
      அப்பாவியை என்ன பண்ணுமோ...

      சரி..சரி..கோச்சுக்காம சொல்லுங்க. நாங்க படிக்கிறோம்.

      நீக்கு
  13. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை. முதலில் கண்களில் பட்டது சகோதரர் நெல்லைத் தமிழரின் கேள்வியும், அதற்கேற்ற பதில்களும். மிகவும் நன்றாக இருந்தது. ஆழமான கேள்விக்கும். அதற்கு தகுந்தாற்போன்ற பதில்களுக்கும் பாராட்டுக்கள். ரசித்தேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    நலம் வாழ்க என்றென்றும்...

    பதிலளிநீக்கு
  16. ஆண்-பெண் என்று தலைப்பைப்போட்டால், ஏதோ சர்ச்சைபோலிருக்கிறதே என்று அள்ளிக்கொண்டு வருகிறதே பின்னூட்டம்..!

    பதிலளிநீக்கு
  17. மின்நிலா தன் பெயரில் உள்ள ’மின்’ என்கிற வார்த்தையை சீரியஸாக எடுத்துக்கொண்டு ஒரே பாய்ச்சலாகப் பாய்கிறதே. அமேஸானும் அதிர்கிறதா! வாழ்த்துகள்.

    மலர் முயற்சிகள் நன்று. உள்ளடக்கத்தில் அதிக கவனம் தேவைப்படும். இணையத்தில் ஏற்றப்படுபவை ’நிரந்தரமாக’ இருக்கும் ஆதலால், ‘தரம்’ விஷயத்தில் சமரசம் சரிப்படாது என்பது அடியேனின் கருத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்துகளை நிச்சயம் கவனத்தில் கொள்கிறேன். நன்றி.

      நீக்கு
  18. காலையிலேயே மிக்ஸர், டீ - அபாரம்...

    இங்கே குளிர் ஆரம்பமாகி விட்டது...
    5 மணி பேருந்துக்காக எழுந்திருக்கும் நேரம் 3:45.. இருப்பிடத்தில் டீ போட்டுக் கொள்வதில்லை.. பணியிடத்துக்குச் சென்ற பின் தான் தேநீர் அல்லது காஃபி..

    காஃபி என்னுடையது... தீபாவளிக்காக வாங்கிய ஹல்திராம் மிக்ஸர் தின்று தீர்த்தாகி விட்டது... மறுபடி வாங்க வேண்டும்...

    வாழ்க மிக்ஸர்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Haldiram's, Nagpur- ஒரு சூப்பர் ப்ராடக்ட்! கொஞ்சம் காரமாக வேண்டுமென்றால் ஹல்திராம் 'Plain Bhujia'.. அப்படியெல்லாம் வேண்டாம் என அசடுவழிய வேண்டுமென்றால் ஹல்திராம் தரும் ‘Aloo Bhujia'!
      பலதரப்பட்ட சுவை சேர்ந்தா பரவாயில்லையேன்னு கேட்டா, Haldiram's Navrattan or Panchrattan !--நிலக்கடலை, நல்ல சைஸ்-முந்திரி இன்னும் ஏதேதோ சங்கதிகளை வண்ணமாக வறுத்துப்போட்டிருப்பான்.
      மேலும் குஜராத்தி, பஞ்சாபி என நாக்கு நீண்டால் Ratlami, Punjabi, Bombay mix என்றெல்லாமும் விக்கறான். குறிப்பாக வெளிநாடு வாழ் இந்தியர்களை குஷிப்படுத்தி வச்சிருக்கான். நல்ல பொருள நாட்டுலயும், வெளிலேயும் வித்து நாலு காசு சம்பாதிக்கும் நாக்பூர் கம்பெனி!

      நீக்கு
    2. ஏகாந்தன் சார்... ஹால்திராம்ல, நான் கட்டா-மீட்டா மட்டும்தான் வாங்குவேன். இல்லைனா, உப்பு போட்ட நிலக்கடலை. வேற எதுவுமே எனக்குப் பிடிப்பதில்லை - from quality point of view. ஆனா, தில்லில ஹால்திராம் கடைல, நான் சாப்பிட்ட சோளே பட்டூரா மிக்க சுவையாக இருந்தது.

      நீக்கு
    3. அன்பின் ஏகாந்தன் & நெல்லை..

      தாங்கள் சொல்வது உண்மை... இங்கே சொல்லப்பட்டிருக்கும் வகைகளைச் சுவைத்திருக்கிறேன். அருமை.. அருமை..

      கொஞ்சம் அழுத்தமான கடலை வகைகள் தவிர்த்து மிருதுவானவைகளையே வாங்குவேன்... எனக்கென்னவோ இது நியாயமாகப்படுகிறது...

      தீபாவளியன்று ஹல்தி ராமின் சோன்பஃடி பாக்கெட்டுகளை வாங்கித் தான் சக பணியாளர்களுக்கு வழங்கி மகிழ்ந்தேன்...

      நீக்கு
    4. ஹல்திராமை எல்லாம் விடுங்க! நாக்பூர் லக்ஷ்மிநாராயண் (ச்ச்)சூடா சாப்பிட்டிருக்கீங்களா? கோலாப்பூர்? அதுக்கெல்லாம் அப்புறம் தான் ஹல்தியும், ராமும்!

      நீக்கு
    5. நாக்பூர் லக்ஷ்மிநாராயண்..ம்ஹ்ம்..
      உங்களுக்கு க்வாலியரின் கோபால்க்ருஷ்ணன்பற்றித் தெரியுமா!

      நீக்கு
    6. @நெல்லை, @துரை செல்வராஜு:

      ஆம், ஹல்திராமின் ஸோன்பப்டி சுவையானது. அவர்களது க்ளோப்ஜாமுன், ரஸகுல்லாவும் அபாரம்தான்.

      கட்டா-மீட்டாவுக்கு நான் டாட்டா! எனக்கு நாக்கில் சுறுசுறுவென இல்லையென்றால் அது நம்கீன் இல்லை!

      டெல்லியின் ஹல்திராம் ரெஸ்ட்டாரண்டுகளில் நல்ல டிஃபன் ஐட்டம்கள் கிடைக்கும். சோலே பட்டூரே டெல்லி ஸ்பெஷல் - மத்தியான லஞ்ச் டைமில் தூள்கிளப்பும். குல்ச்சா, வெஜ் பிரியாணி, பேட்டீஸ்களும் alright. ஹல்திராம் (சரோஜினி நகர்)-இன் பாதாம்பால் படு சுகம். அவர்களது நார்த் இண்டியன் ஜிலேபியும் (கோணல்மாணல் சுருள்களாகப் பளபளக்கும்) - குளிர்காலத்தில் ஹாட்டாக உள்ளே தள்ள வசதியானது!

      இந்தக் கொரோனாப் பிசாசு வந்ததிலிருந்து, டெல்லி பக்கம் தலைகாட்டமுடியவே இல்லை.

      நீக்கு
    7. தெரியாது. ஆனால் ஆலு புஜியா ராஜஸ்தானில் நல்லா இருக்கும். அதே போல் மில்க் சாக்லேட், நசிராபாத் கா கசோடா! ஆஹா, ஓஹோ! பேஷ், பேஷ்!

      நீக்கு
    8. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... நான் டயட்டில் இருக்கேன் (இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கேன்).

      ஜிலேபி....ஆஹா.... மத்தபடி எனக்கு மில்க் based sweets அவ்வளவாகப் பிடிப்பதில்லை. சோன்பப்டி - பயங்கர ஜீனி. விலை குறைவான சோன்பப்டில பாமாலின் ஆயில் உபயோகிக்கறாங்க. பின் விளைவுகள் கேரண்டி. என்னைப் பொருத்த வரையில், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸில் விற்கும் நார்மல், சாக்லேட் சோன்பப்டி ரொம்ப அருமையா இருக்கும் (சென்னை ஏர்போர்ட்டிற்குச் செல்லும்போதெல்லாம் வாங்கியிருக்கிறேன்). நெய் என்பதால் விலையும் அதிகம்தான்.

      நீக்கு
    9. ஹல்டி ராம்ஸ்க்கு இத்தனை ரசிகர்களா !!!!!!!!!!!!அதில் போடும் பெருங்காயம் வாசனையா இல்லனா கடுகு எண்ணெய் மசாலா தாளிப்பா எதோ ஒன்னு என்னை ஓடிஏ வைக்கும் :) எனக்கு நம்மூர் பொட்டல மிக்ஸர் சுவைதான் பிடித்தம் :)

      நீக்கு
    10. //பொட்டல மிக்ஸர் // - இந்த வார்த்தையைப் படித்த உடனே மனது திருநெவேலி ஜங்ஷனில் இருந்த சிறு பிராயத்துக்கு ஓடிவிட்டது. அங்கதான் 10 பைசா கொடுத்தால் தினசரியில் மிக்சரோ, காராசேவோ பொட்டலமாகக் கட்டிக் கொடுப்பார்கள். (75களில்?) நெல்லையில்தான், அல்வா 1 ரூபாய்க்கு வாழை இலையில் அல்வா தருவாங்க. கூடவே சிறிது மிக்சரும் தருவாங்க. ஒரு வருடத்துக்கு முன்பு சென்றிருந்தபோது 10 ரூபாய்க்கு 50 கிராம் அல்வா, வாழை இலையில் தந்தாங்க. கூடவே அதே வாழை இலையில் சிறிது மிக்சரும் போட்டாங்க. மனது நெல்லை ஜங்ஷனிலேயே சஞ்சரிக்கிறது.

      நீக்கு
    11. ஆஅவ் !!! 5 பைசாவா !!!!நாங்க வாங்கினது 84 /85 இல் 25 பைசா பொட்டலம் நூல் சுத்தி தருவாங்க ஹ்ஹஹ்ம்ம்னு ஏன்னா வாசனையா இருக்கும் அது மந்தாரை இலையா ?
      அதுலாம் 90 இல் காணாமப்போச்சு அப்போவே பிளாஸ்டிக் பேக்கேஜ் வர ஆரம்பிச்சு .
      வாழை இலை கேசரி அல்வா வும் சாப்ட்ருக்கேன் அப்போ ரத்னா கஃபே வில் 

      நீக்கு
    12. பொட்டல மிக்சர், காராசேவு, இனிப்பு சேவு, காராபூந்தி, ஓமப்பொடி எல்லாம் மதுரையோடு போய்விட்டன. அதிலே இருக்கும் நூலை எல்லாம் அப்பா சேமித்து வைப்பார். இப்போது சாமான் வரும் பொட்டலங்களின் நூலை அதே போல் நான் சேமிக்கிறேன். நாங்க நெல்லை சென்றபோது வாழை இலையில் தான் இருட்டுக்கடை அல்வா வாங்கிச் சாப்பிட்டோம்.

      நீக்கு
    13. அல்வா பற்றிய இனிய அனுபவங்கள் பகிர்ந்த எல்லோருக்கும் நன்றி. நானும், திருமதியும் பதினைந்து வருடங்களுக்கு முன்பு திருநெல்வேலி சென்றதும், உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியதும், அந்த உறவினர் மூன்று கிலோ அல்வா வாங்கி எங்களிடம் கொடுத்து, சென்னை அனுப்பியதும் ஞாபகம் வருகின்றது.

      நீக்கு
  19. பிரார்த்தனை குறித்த பதில்கள் சிறப்பு. சில விஷயங்கள் நடக்கவில்லையே என்று நாம் நம்முடைய சிற்றறிவைக் கொண்டு ஆதங்கப்படுவோம். ஆனால் அது நடக்காததே நன்று என்று பின்னால் தெரிய வரலாம். எல்லாவற்றையும் இயக்கும் பேரறிவுக்குத்தான் யாருக்கு,எதை, எவ்வளவு, எப்படித் தரவேண்டும் என்பது தெரியும். "You will get only what you deserve, not what you desire" என்பது மகான்களின் வாக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், சரியாக சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.

      நீக்கு
    2. //"You will get only what you deserve, not what you desire"// - இருந்தாலும், தருவதில், மறுப்பதில் ஒரு நியாய தர்மம் வேண்டாமா? ஒரு சமயத்துல 'கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்'னு சொல்றது, இன்னொரு சமயத்துல, 'நீ கேட்பதை கொடுக்க முடியாதுப்பா. அதுக்கு நீ deserve பண்ணலப்பா'ன்னு சொல்றது. நாங்க என்ன, தமிழ்நாடு சீஃப் மினிஸ்டர் போஸ்டா கேட்டோம்?

      நீக்கு
    3. இந்த தகுதி எல்லாம் ஜென்மாந்திர தொடர்பு கொண்டவை. யாரோ எழுதி கொடுப்பதை கூட தவறில்லாமல் வாசிக்கும் தகுதி இல்லாதவர்கள் பல டி.வி.சேனல்களுக்கு சொந்தகாரர்களாக, பல கலைஞர்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள். என்ன சொல்ல முடியும்? என் குருநாதரிடம், "நான் ஆசைப்படுவதை அடையும் தகுதியை எனக்கு அளியுங்கள்" என்று வேண்டுவேன். அதுவும் அடுத்த ஜென்மத்தில் கிடைக்குமோ என்னவோ..?

      நீக்கு
    4. //"நான் ஆசைப்படுவதை அடையும் தகுதியை எனக்கு அளியுங்கள்" // - இது என்ன புதுவித வேண்டுதலாக இருக்கிறது?

      எனக்கு ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கணும் என்று வேண்டுவதற்கும், நீட் தேர்வில் தமிழ்நாட்டில் முதல் 3 இடங்களுக்குள் மார்க் வரணும் என்று வேண்டுவதற்கும் வித்தியாசம் இருக்கா?

      நாம, இதுதான் எனக்கு வேண்டும் என்று இறைவனிடம் கேட்டால், அதை அடையும் தகுதியை அவனே நமக்குத் தரமாட்டானா (இந்த ஜென்மத்தில் இல்லாவிடினும் அடுத்த அல்லது அதற்கடுத்த... ஜென்மங்களிலாவது?) நாம எதுக்கு அவனுக்கு ஃபார்முலா சொல்லிக்கொடுக்கணும்?

      நீக்கு
    5. //எனக்கு ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கணும் என்று வேண்டுவதற்கும், நீட் தேர்வில் தமிழ்நாட்டில் முதல் 3 இடங்களுக்குள் மார்க் வரணும் என்று வேண்டுவதற்கும் வித்தியாசம் இருக்கா?//கண்டிப்பாக இருக்கிறது. நீட் தேர்வில் முதல் மூன்று இடங்களுள் ஒன்றைப் பெற்று ரைட் ராயலாக ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் நுழைவது எப்படி? சிபாரிசிலும், பணம் கொடுத்து நுழைவது எப்படி?
      //இந்த ஜென்மத்தில் இல்லாவிடினும் அடுத்த அல்லது அதற்கடுத்த... ஜென்மங்களிலாவது?) நாம எதுக்கு அவனுக்கு ஃபார்முலா சொல்லிக்கொடுக்கணும்?// நான் அவனுக்கு ஃபார்முலா சொல்லிக் கொடுக்கவில்லை. நான் இப்போது வேண்டிக் கொண்டால்,அவன் அடுத்த ஜென்மத்தில் அதை அருளுவானோ? அதற்கு அடுத்த ஜென்மத்தில் அருளுவானோ?

      நீக்கு
  20. வீட்டிற்கு வெளியே ஆண்களும், வீட்டிற்குள் பெண்களும் அதிகம் கோபப்படுவார்கள் எனலாம்.மஹாராஜன் உலகை ஆண்டாலும் அந்த மஹாராணி அவனை ஆள்வது காரணமாக இருக்கலாம். இதை எழுதும் பொழுது,"நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்?நெருப்பாய் எரிகிறது?" பாடல் ஒலிப்பது ஒரு coincidence.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானுக்கா வெளியில் நல்ல பேர் எடுத்து வீட்டிற்குள் கோபப்படும் ஆண்களும் இருக்காங்க..வெளியில் காட்ட முடியாத கோபத்தை வீட்டில் வெளிப்படுத்தல்..வைஸ் வெர்சா...அதாவது வெளியில் கோபப்படும் பெண்களும் இருக்காங்க அதுவும் எல்லார் எதிரிலும்...வீட்டில் காட்ட முடியாமல் போகும் சமயம்!!!!

      கீதா

      நீக்கு
  21. /// மஹாராணியிடம் பிச்சையெடுக்கும் நிலையில் மஹாராஜா!..///

    இதுக்கு மேல என்ன வேண்டிக் கெடக்கு!?..

    பதிலளிநீக்கு
  22. அதிகம் கோபப்படுவது ஆண்களா ? அல்லது பெண்களா ?//

    ஆண்களா பெண்களா என்பதற்கும் மேல் இதில் யார் கோபப்பட்டாலும் அது உறவையே முறிக்கும் லெவலுக்கு போனா கஷ்டமாச்சே!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோபத்துல உறவு முறியாது. வார்த்தைலதான் முறிய சான்ஸ் உண்டு. நெருங்கிய இரத்த சம்பந்தமான உறவில், கோபம் வந்தாலும், அது நீரடித்து நீர் விலகாது என்ற கதையாகிடும்.

      இனி கீதா ரங்கனுடன் பேசும்போது வாய்க்கு பிளாஸ்திரி போட்டுக்கிட்டுத்தான் பேசணும் போலிருக்கு.

      நீக்கு
    2. எனக்கு ஒரு டவுட்டு . வாய்க்கு பிளாஸ்திரி போட்டுக்கிட்டு பேச முடியுமா?

      நீக்கு
    3. 😂😂😂 naanga kannai moodiyirunthaalum ellam theriyum.
      So plaster pottaalum pesa mudiyum.☺️☺️☺️☺️☺️☺️

      நீக்கு
  23. ஆண் பெண் என்பதை விட இந்த இடத்தில் கோபம் தானே முக்கியத்துவம் பெறுகிறது.

    இக்கோபம் பற்றி நிறைய அலசலாம்..ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி கோபம் வருவதற்குப் பல காரணங்கள் உண்டுதான். ஒரு சில இயல்பிலேயே இருக்கும் ஒன்று சில சூழ்நிலை காரணமாக...சில மருத்துவ ரீதி, முதுமை இயலமை காரணமாக...என்று பல. அக்கோபத்தைக் கையாளத் தெரிந்துவிட்டால் புரிதல் இருந்துவிட்டால் எளிதாகக் கடந்து செல்லலாம்...இதைப் பற்றி நிறைய அலசலாம்...ஆனால் மீக்கு இப்ப நேரப் பற்றாக்குறையா இருக்கே!!..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி என்ன நேரப்பற்றாக்குறை... அஞ்சு நிமிஷம் செலவழித்து விரிவா எழுதினா என்னவாம் என்று கேட்டால், ஒருவேளை கீதா ரங்கனுக்கு கோபம் ஜாஸ்தி வந்துடுமோ? இருக்கும் இருக்கும்.

      நீக்கு
  24. கோபம் எப்பாலாருக்கும் அவரது சுய மரியாதையைப் பாதிக்கும் என்றால் அங்கு கோபம் பிரவாகமெடுக்கும்தான். அது எந்த அளவு என்பதைப் பொருத்து புரிதல், சமரசம், பொறுமை இதை எல்லாம் பொறுத்து அது எரிமலையானால் அம்புட்டுத்தான்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கோபம் எப்பாலாருக்கும் அவரது சுய மரியாதையைப் பாதிக்கும் என்றால் அங்கு கோபம் பிரவாகமெடுக்கும்தான்// உண்மை கீதா, அதனால்தான் egoistic ஆக இருப்பவர்களுக்கு அதிகம் கோபம் வரும். நெல்லைக்கு கோபம் வருமோ?

      நீக்கு
  25. எதை எங்கே சொல்கிறோம் என்பது முக்கியமா ? அல்லது எதை எப்போது சொல்கிறோம் என்பது முக்கியமா ??//

    இரண்டுமே முக்கியம் கூடவே யாரிடம் சொல்கிறோம் என்பதும் மிக முக்கியம்

    கீதா

    பதிலளிநீக்கு
  26. போன வருஷம் தாம்பரம் பகுதியில் குடியிருந்த ஒருவர் இந்த வருஷம் அண்ணாநகரில் குடி பெயர்ந்து பிறகு அடுத்த வருஷம் மைலாப்பூர் வீட்டுக்கு இடம்பெயர்வார் .இப்படி இடம் குடிபெயரும்போது இப்போதிருக்கும் இடம் பற்றி உயர்த்தியும் முன்னிருந்த இடங்கள பற்றி வாய்க்குவந்தபடி இழிவாய் பேசுவது முறையா ?//

    மிகவும் தவறு. இதற்கான பதில்கள் டிட்டோ செய்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  27. ப்ரார்த்தனை பண்ணறோம்..நிறைய தடவை..ஆனால் எதுவும் நடப்பதில்லை. அது நடக்கும்போதுதான் நடக்கும். அப்போ ப்ரார்த்தனையால் என்ன பயன்?//

    நம்பிக்கை! நம்பிக்கைதானே நம் வாழ்க்கைக் கஷ்டங்களை எளிதாகக் கடக்க உதவுகிறது. அந்த நம்பிக்கை பொடிபடும் போதுதான் விரக்தி எல்லாம் வருகிறது அது வராமல் இருக்க பிரார்த்தனை உதவும் தான் என்றாலும் அதன் பின்னும் பரிபூரண நம்பிக்கை மிக மிக அவசியம். பிரார்த்தனை, கடவுள் என்ற நம்பிக்கை இல்லாதவர்கள் கூட கடினமான நேரங்களைக் கடக்க நம்பிக்கையுடன் முயற்சி செய்யத்தான் வேண்டும். எனவே பிரார்த்தனை என்பது நம்பிக்கை என்ற அடிப்படையில் அது நம்மை சமாதானப்படுத்தி மனதை அமைதிப்படுத்தி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க உதவும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எது நடக்க வேண்டுமோ அதுதான் நடக்கும். எனவே எது நடக்கிறதோ அதை ஏற்றுக் கொண்டு பயணிப்பதே நல்லது. பிரார்த்தனை/நம்பிக்கை அதைக் கடக்க உதவுகிறது.

      கீதா

      நீக்கு
    2. ஏதோ கவர்ன்மெண்ட் வேலை மாதிரி சொல்றீங்களே... வேலை பண்ணறயோ இல்லையோ, சம்பளம் டாண்ணு வந்துடும்கறமாதிரி, பிரார்த்திக்கறயோ, கோவிலுக்குப் போறயோ இல்லையோ... உனக்கு உள்ளது உனக்குத்தான் வரும், நல்லதோ கெட்டதோ அப்படீன்னு கடவுள் சொல்றது மாதிரி சொல்றீங்களே.. நியாயமா?

      நீக்கு
    3. நியாயந்தானே!...

      கோயிலுக்கே போகாத ஆட்கள் கோடீஸ்வரன் ஆகியிருப்பது எப்படி?..

      கோயில் பணி செய்து கிடப்பவர் அடுத்த வேளைக்கு யோசிப்பது எதனால்?..

      நல்லவனோ கெட்டவனோ - எல்லாம் பூர்வ ஜென்ம வினை தானே!..

      நீக்கு
  28. கௌ அண்ணா மின் நிலா தீபாவளி மலரில் கதைகள், கவிதைகள் வாசித்துவிட்டேன். மீதியும் முடித்துவிட்டுக் கருத்து அனுப்புகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  29. கேள்வி - பதில்கள் சுவாரஸ்யம்.

    //இந்த தீபாவளி இதழ் விற்பனை மூலமாகக் கிடைக்கும் ராயல்டி தொகையை, சிவானந்தா ஆதரவற்றோர் இல்லத்திற்கு (Sivananda Saraswathy Sevashram) நன்கொடையாக கொடுக்க எண்ணியுள்ளேன்//

    ஸூப்பர் வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
  30. மின் நிலா தீபாவளி சிறப்பிதழில் இன்னும் இரண்டு கதைகள் படிக்க வேண்டும். முடித்ததும் கருத்திடுகிறேன். நீங்கள் பகி்ர்ந்திருந்த சுட்டியால் சிவானந்த சரஸ்வதி சேவாஸ்ரமத்திற்கு நன்கொடை அளிக்க முடிந்தது. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  31. பொங்கல்,மற்றும் ஆண்டு மலர் சிறப்பிதழ்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். கதைகளுக்கு யாரையாவது படம் வரையச் சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
  32. 1. தீபாவளிப் பட்டாசு வெடிப்பதில் ஆர்வம் உண்டா?
    2.இப்போதெல்லாம் பட்டாசு வெடிக்கத் தடை போடுகிறார்களே! அது சரியா?
    3. தடையை மீறிப் பட்டாசு வெடிப்பவர்கள் பற்றி?
    4. பட்டாசு வெடிக்கக் கூடாது என்பதால் சிலரின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறதே! அதற்கு என்ன செய்யலாம்?
    5. தீபாவளி அன்னிக்குப் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் கெடுகிறதா?
    6. பொதுவாகவே எந்தக் கொண்டாட்டமாக இருந்தாலும் பட்டாசு வெடிக்கிறார்கள். தலைவர் வரவு, நண்பர்கள் திருமணம், பிறந்தநாள், கிரிக்கெட்டில் ஜெயித்தால், ஆங்கிலப் புத்தாண்டு இப்படினு எல்லாத்துக்கும் பட்டாசு வெடிப்பது உண்டு. தீபாவளி அன்று மட்டும் வேண்டாம்னு சொல்லுவது ஏன்?

    பதிலளிநீக்கு
  33. 7.தீபாவளி பக்ஷணம், பட்டாசு, புத்தாடைகள் இவற்றில் உங்களைக் கவர்ந்தது எது? ஏன்? இப்போது எது கவர்கிறது?
    8. கூடப் பிறந்தவர்களுடன் சேர்ந்து பட்டாசு வெடித்த அனுபவம் இருக்கும். அதில் யார் சிறப்பாக தைரியமாகப் பட்டாசு வெடிப்பார்கள்? உங்கள் மூத்த சகோதரர்களும் உங்களோடு சேர்ந்து பட்டாசு வெடித்திருக்கிறார்களா?
    9.தீபாவளி பக்ஷணம் செய்ய அம்மாவுக்கு உதவியது உண்டா? மனைவிக்கு?
    10. உங்களால் மறக்க முடியாத தீபாவளி எது? ஏன்?

    பதிலளிநீக்கு
  34. 1) இன்றைய தீநுண்மி போல, தீபாவளி எனும் சொல் முதற்கொண்டு, தமிழர்களிடம் தொற்றின காலம் எப்போது...?

    2) அடுத்த வாரம்...

    பதிலளிநீக்கு
  35. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  36. கேள்விகளும் பதில்களும் நன்றாக இருக்கிறது.
    உறங்காபுலி என்றதும் நம் நினைவுக்கு வருவது உறங்காபுளிமரம் தான் ஆழவார் திருநகரியில் உள்ள "ஆதி நாத பெருமாள் கோவிலில் உள்ள மரம்."

    பதிலளிநீக்கு
  37. அங்குள்ள புளியமரத்தின் இலைகள் மூடி கொள்வது இல்லை இரவில்.

    பதிலளிநீக்கு
  38. //இந்த தீபாவளி இதழ் விற்பனை மூலமாகக் கிடைக்கும் ராயல்டி தொகையை, சிவானந்தா ஆதரவற்றோர் இல்லத்திற்கு (Sivananda Saraswathy Sevashram) நன்கொடையாக கொடுக்க எண்ணியுள்ளேன்.//

    நல்லமுடிவு. வாழ்த்துக்கள். சேவை தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  39. ///# கடவள் கையில் பிரச்சினைகளை ஒப்படைத்து விட்டு அதன் பின் "எல்லாம் அவன் செயல்" என்ற பக்குவம் இருப்பவர்கள் தம் பிரார்த்தனை பலித்தாலும் அல்லாது போனாலும் அதனால் கலங்க மாட்டார்கள். அப்படியானவர்களுக்கே பிரார்த்தனை ஒரு பெரிய பலமாக இருக்கும். பிரார்த்தனை செய்வது பலனை வேண்டி அல்ல (மனப்)பக்குவத்தை வேண்டி என்ற நோக்கில் பாருங்கள்.///
    ##


    awesome !!!!

    இந்த பதிலில் கொஞ்சம் அங்கிள் கமல் ஸ்டைல் தெரிகிறது :))))))
    யாரங்கே அந்த பொற்காசு மூட்டையை அப்படியே # அவர்களுக்கு அளிக்கவும் :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. # சொல்கிறார் : " கமல் ஸ்டைல் என்றால் புரியவில்லை என்று ஆகும். விளக்கமாகச் சொல்லத் தெரியாதது என் தவறுதான்! "

      நீக்கு
    2. ஹையோ ஹாயையோ :) நான் பாராட்டினேன் பாராட்டினேன்  கமல் அங்கிள் பேச்ச்சு ஸ்டைல் எனக்கு பிடிக்கும் .அவர் பேசும்போதுதான் கண் மூக்கு வாய் எல்லாம் பேசும் ..சரி சரி அதெல்லாம் தனியா வச்சிப்போம் ..இல்லை ஆனா இருக்கு அப்படின்னு சொல்லாம சொல்வார் அதைத்தான் சொன்னேன் .பதில் தெளிவாவே இருக்கு .இங்கே அந்த ஸ்டைலை குறிப்பிட்டேன் :) 

      நீக்கு
  40. 1, பொய் சொல்லாமல் , பொய்யே சொல்லாமல் வாழ்தல் சாத்தியமா ?
    2,கடினமான கரடுமுரடான அனுபவங்கள்  ஒருவரின் வாழ்க்கையை செம்மைப்படுத்துமா அல்லது தவறான வழியை தேர்ந்தெடுக்க வைக்குமா ?
    3, கடவுளை கடவுளின் அன்பை  உணர்ந்த அதாவது அனுபவபூர்வமா உணர்ந்த தருணம் உண்டா ?
        எனக்கு அப்படி ஒரு சம்பவம் முந்தின நாள் ஏற்பட்டது அதை நெக்ஸ்டவீக் சொல்கிறேன் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 4, எதோ ஒரு விஷயம் உதாரணத்துக்கு பட்டாம்பூச்சியோ /மரம் இலை இப்படி வந்தவுடன் அதன் காரணம் என்னவாயிருக்கும்னு   கூகிளில் ஆராய்ச்சி செய்யும் வழக்கமுண்டா ???இந்த ஆராய்ச்சி பழக்கம் நல்லதா ? கெட்டதா ?

      இன்னிக்கு மிக்ஸர் விரும்பிகள் நிறையபேர் இருப்பதுகண்டு இன்னொரு கேள்வி 
      5, கார மிக்சருடன் லேசா சர்க்கரை ஐ மீன் வெள்ளை சர்க்கரை தூவி சாப்பிட்டிருக்கீங்களா ?

      நீக்கு
    2. ஏஞ்சல், எங்க மாமியார் சர்க்கரை தூவுவாங்க. அவங்கல்லாம் வெல்லத்திலேயே இனிப்பு இல்லைனு சொல்லும் ரகம். காஃபிக்கு எல்லாம் கரண்டியில் தான் சர்க்கரை! கடைசிவரை சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் எதுவும் இல்லை.

      நீக்கு
    3. ஆமாம்க்கா உண்மைதான் எங்க பாட்டி காலைல கருப்பு காப்பி  சர்க்கரை போட்டு குடிப்பாங்க 93 வயசு வரைக்கும் அந்த பழக்கம் எந் சர்க்கரை நோயும் bp yum அவங்களை தீண்டலா :) 

      நீக்கு
    4. எங்கள் பதில்கள் அடுத்த வாரம். நன்றி.

      நீக்கு
    5. //எதோ ஒரு விஷயம் kanavil
      // in dreams உதாரணத்துக்கு பட்டாம்பூச்சியோ /மரம் இலை இப்படி வந்தவுடன் அதன் காரணம்

      நீக்கு
  41. //எனக்கு அப்படி ஒரு சம்பவம் முந்தின நாள் ஏற்பட்டது அதை நெக்ஸ்டவீக் சொல்கிறேன்// எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. அவற்றில் ஒன்றிரண்டைப் பகிர்ந்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கா எங்கே ? இப்போவா பதிவிலா ?

      நீக்கு
    2. சில வருடங்கள் முன்னர். பின்னர் அதை மீள் பதிவாகவும் போட்டேன் நண்பர்களின் வேண்டுகோள் பேரில். ஆனால் என் மனதில் கலக்கம் ஏற்பட்டால் உடனே கந்த சஷ்டி கவசமும், ஶ்ரீராமஜயமும் ஜபிக்க ஆரம்பிப்பேன். மனது தெளிவடையும்.

      நீக்கு
  42. மலர்களில் கவனம் செலுத்துகின்ற முயற்சி பாராட்டத்தக்கது.

    பதிலளிநீக்கு
  43. புலி கேள்வியும் பதிலும் ஞானக் கண் திறந்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எத்தனை தேடியும் வேலை கிடைக்காத பிஇ பட்டதாரி ஒரு சர்க்கஸ் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தானாம். தினம் புலி வேஷம் போட்டு அசல் புலி போல சர்க்கஸ் வேலைகள் செய்ய வேண்டும். ரிங் மாஸ்டருக்கு ஒரு நாள் மார் வலி வந்து காட்சியின் இடையில் ஒதுங்கிக் கொள்ள, புலி வேஷம் அறியாத புதிதாக வந்த ரிங் மாஸ்டர் தன் முத்திரை பதிக்க எண்ணி "புலிக்கும் புலிக்கும் சண்டை' என்று அறிவித்து எல்லா புலிக் கூண்டுகளையும் திறந்து விட்டார். பாய்ந்து வந்த புலியைப் பார்த்த நம்ம பட்டதாரி குலைநடுங்கி ஆஞ்சநேயர் சுலோகம் சொல்லத் தொடங்கி பதறினார்.. பாய்ந்து வந்து புலி நம்மாள் மேலே விழுந்து.. "யோவ்.. ஏதானும் செஞ்சு திரும்ப சண்டை போடுயா.. இல்லினா எனக்கு வேலை போயிடும்.. எம்இ படிச்ச பெரிய குடும்பஸ்தன்பா" என்றது.

      நீக்கு
    2. ஹஹ்ஹா :) புலிகள் அதுவும் மாஸ்டர்ஸ் பேச்சிலர்ஸ் புலிகள் கருத்து   ரசித்தேன் 

      நீக்கு
  44. நோட்டிபிகேஷன்ல /பெண்களே அதிகம் கோபப்படுவார்னு // வந்ததே அந்த பின்னூட்டம் எங்கே ???

    பதிலளிநீக்கு
  45. //கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள் தீபாவளிப் பண்டிகை பதின்மூன்றாம் நூற்றாண்டிலேயே கொண்டாடப்பட்டதற்கும், கோயில்களில் தீபாவளி கொண்டாடப்பட்டதற்கும் ஆதாரம் கல்வெட்டுக்களில் இருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்,. பத்துப் பதினைந்து நாட்கள் முன்னர் தினமலரில் வந்திருந்தது அவருடைய பேட்டி.//திருச்சிப் பதிப்பில் வந்திருந்தது. அதைத் தேடி எடுக்கணும். இதைக் குறித்து உங்கள் கருத்து என்ன?

    பதிலளிநீக்கு
  46. இங்கே ஸ்ரீரங்கத்தில் பெருமாள் வருடா வருடம் தீபாவளி கொண்டாடுவதோடு அனைத்து சந்நிதி தெய்வங்களுக்கும் தீபாவளிப் பரிசு, புத்தாடைகள், எண்ணெய், சீயக்காய், பெண் தெய்வங்களின் சந்நிதிகளுக்கு மஞ்சள் பொடி உட்படப் பெருமாள் சார்பில் அளிக்கப்படுகிறது. இதைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? வேறே எந்தக்கோயிலில் இப்படி உண்டா? சிதம்பரம் நடராஜர் கோயிலில் உண்டுனு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  47. திரும்ப ஏதேனும் சந்தேகம் வந்தால் வந்தாலும் வருவேன். எதுக்கும் இப்போவே பயமுறுத்தி வைச்சுடறேன்.

    பதிலளிநீக்கு
  48. ஓ ! இதெல்லாம் புதன் கேள்விகளா !! :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!