பறவைகள் பலவிதம் !
வெள்ளைப்புள்ளிகளாய் பல பறவைகள்!
தூரப் பார்வை முடித்து, அருகே சென்று விஜாரிக்கலாமா?
அதோ அங்கே செல்வோம் !
சண்டையா , சமாதானப் பேச்சா?
மத்தியஸ்தம் செய்து வைக்க வேறு ஒரு சமாதான தூதுவர் லாண்டிங் !
சண்டை முடிந்தது சமாதானம்!
எல்லோரும் சாப்பிடக் கிளம்பிப் போயிட்டாங்க ! இவர் வீட்டைப் பார்த்துக் கொள்கிறாரோ?
அப்படித்தான் இருக்கும் !
பறவைகளையே பார்த்துக்கொண்டு வந்ததால், பக்கத்தில் வந்தவருக்குக் கோபம்!
'என் வழி, தனீ வழி' என்று கிளம்பிவிட்டார் !
எங்கே போனார்?
அப்புறம் என்ன ஆயிற்று ?
பிறகு சொல்கிறேன்!
=====
இனிய காலை வணக்கம் கௌதமன் ஜி.
பதிலளிநீக்குபறவைகள் சரணாலயத்தில் பஞ்சாயத்து பார்க்கப் போய்
சம்சாரத்தில் தொல்லை வந்துவிட்டதோ.
படங்கள் அருமை. எபி ஆரம்பிக்கும் முன் எடுத்த படம்!!!!
காலை வணக்கம்! நன்றி!
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். எல்லோரும் எல்லா நலனும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குபிராரத்திப்போம். ஓம் !
நீக்குகௌதமன் சார், என்ன ஆச்சு கேஜிஎஸ்ஸின் படங்களுக்கு? முடிஞ்சு போச்சா? அல்லது மைசூர் அரண்மனையிலேயே குடித்தனம் செய்ய ஆரம்பிச்சுட்டாரா? :)))))))))
பதிலளிநீக்குபிறகு வருவார்.
நீக்குஅதன் தொடர்ச்சியாக இந்தப் படங்களை வெளியிட்டிருக்கீங்க போல. கிட்டத்தட்ட 2009-- 2009 ஆம் வருடங்களில் தான் நாங்களும் மைசூர் சென்று தங்கிஅங்கே ஒரு வீடு பார்த்தோம். அப்போதே 50 லட்சம் சொன்னார்கள். ஆதலால் மேற்கொண்டு முயற்சிக்கலை. :)))))
பதிலளிநீக்குஓ !! அப்படியா! நாங்கள் சென்று தங்கியிருந்த வீடு, என் மருமகளின் பெரியம்மா வீடு.
நீக்குபடங்களும் அதற்கேற்ற கற்பனா சக்தி வாய்ந்த விளக்கங்களும் அருமை. இதே போல் வேடந்தாங்கல் பறவைகளை வைத்து நானும் ஓர் கற்பனைக்கட்டுரையை எழுதி மின் தமிழில் இருக்கையில் மரபு விக்கிக்காகச் சேர்த்திருந்தேன். அது நினைவில் வந்துவிட்டது! (தப்போ?) இந்தப் பறவைகளை எல்லாம் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. அதிலே பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய்ச் செங்கால் நாரைகளும் இருக்கும்.
பதிலளிநீக்குகவிதைக் கருத்துரைக்கு நன்றி.
நீக்குகவிதை வரிகள் இரவல். "பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக்கூர்வாய்ச் செங்காய் நாராய்" சத்திமுற்றப் புலவரின் வர்ணனை. நம்மளோடது இல்லை. அவ்வளவெல்லாம் எங்கே! :(
நீக்குதெரியும்!!
நீக்குகோவிச்சுண்டு போன (?) மனைவிக்கு இந்த நாரைகளைத் தூது விட்டிருக்கலாமோ? வரேன் அப்புறமா!
பதிலளிநீக்குநல்ல யோசனை!
நீக்குஇந்த மூங்கில்களைப் பார்க்கையில் எங்க அம்பத்தூர் வீடும், கருவிலியில் மாமனாரின் மூங்கில்க் கொத்துக்களும் நினைவில் வருகின்றன! யாராவது அடிக்க வரும் முன்னர் ஓட்டமா ஓடிடறேன். விடு, ஜூட்!
பதிலளிநீக்குபுதன், வியாழன், வெள்ளி, ஞாயிறு பதிவுகளில், எல்லோருக்கும் ஃப்ரீ லைசென்ஸ் - யார் வேண்டுமானாலும் இறங்கி பகடி செய்யலாம். பதிவாசிரியர்கள் எல்லாவற்றையும் ஸ்போர்டிவ் ஆக எடுத்துக்கொள்வார்கள்!
நீக்குwhat about Saturday?
நீக்குSaturday posts are just extracts from the news media. So, not much scope for discussions about the post content.
நீக்குஹாஹா..அருமை, படங்களும் உங்கள் வரிகளும்!
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குவாங்க, வணக்கம்.
நீக்குவாழ்க நலம் என்றென்றும்...
பதிலளிநீக்குவாழ்க, வாழ்க!
நீக்குகொக்குகளும் நாரைகளும் மடையான்களும் பார்க்கப் பார்க்க மகிழ்வூட்டுபவை...
பதிலளிநீக்குபடங்களும் வர்ணனைகளும் அழகு.. அருமை...
நன்றி, நன்றி!
நீக்குகொக்கைப் பற்றி எவ்வளவோ சொல்லலாம்..
பதிலளிநீக்குபுராணத்தில் இலக்கியத்தில்!...
அவற்றின் இயல்பான வாழ்வைக் கெடுத்தது மனித சமுதாயமே...
என்ன செய்வது!
நீக்குமனிதன் கெடுக்காத விஷயம் ஏதாவது இருக்கிறதா இந்த பிரபஞ்சத்தில்?
நீக்கு:((
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிரார்த்தனைகளுக்கு நன்றி.
நீக்குபறவைகள் அழகு.
பதிலளிநீக்குஅப்புறம் என்ன ஆயிற்று?
அடுத்த வாரம் விடை தெரியுமோ? பார்ப்போம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇந்த பறவைகளின் கண்காட்சி மைசூரிலா? அரண்மனை பதிவுகள் முடிந்து இது ஆரம்பித்துள்ளதா? எப்படியோ, இயற்கை வனப்பும், பறவைகளின் அணிவகுப்பும் நன்றாக உள்ளது. சண்டை போடும் பறவைகளுக்கு அதற்கேற்ற வார்த்தை வர்ணிப்புகள் அதனையும் கண்டிப்பாக மகிழ்வித்திருக்கும்.
அது சரி..! ஒன்றாக சேர்ந்து பறவைகளின் சமாதானம் வரை கண்டு களித்து வரும் போதே ஏன் பிணக்கு? சஸ்பென்ஸுக்கு பதில் அடுத்த வாரமா? சேரும் இந்த ஜோடியின் மகிழ்வை காணவும் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி. பார்ப்போம்!!
நீக்குநீர் பரப்பின் காட்சியைக் கண்டால் என் மனதிற்குள் ஒரு அமைதி படரும். எனக்கு மட்டுமா? எல்லோருக்குமா? அந்த வகையில் இந்த ஞாயிறு படங்களை மிகவும் ரசித்தேன். அப்புறம் என்ன ஆச்சு? என்று தெரிந்து கொள்ள ஆவல்.
பதிலளிநீக்குஇரசிப்புக்கு நன்றி. அப்புறம் என்ன ஆச்சு? அடுத்த வாரம் சொல்கிறாரா என்று பார்ப்போம்.
நீக்குபறவைகள் படம் அழகு...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபடங்கள் அழகு
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅனைத்து படங்களும் அழகு.
பதிலளிநீக்குபறவைகள், நீர்நிலைகள் , நீலவானம் பார்க்க பார்க்க பரவசம்தான்.
நன்றி.
நீக்குஇயற்கை எப்பவும் அழகுதான்... படங்கள் அழகு. 2008 இல் எடுத்தது .. இப்போதான் போய் வந்ததைப்போல இருக்குமே.. முதல் மூன்று படங்களும் காணாமல் போய் விட்டனவே....
பதிலளிநீக்குஅப்படியா! இந்தியாவில் எல்லோருக்கும் தெரிகின்றனவே!! தேம்ஸ்ல கொஞ்சம் செக் பண்ணுங்கோ !!
நீக்குஇயற்கை கொடுத்த கொடை. நமது நாட்டின் சில இடங்களையும் நினைவில் கொண்டு வந்தது.
பதிலளிநீக்குபடங்களும் வர்ணனைகளும் அழகு.
மைசூர் செல்லும் வழியில் இருக்கும் ரங்கணத்திட்டு சரணாலயம்! படங்களுடன் வாசகங்களும் சுவாரஸ்யம்.
பதிலளிநீக்கு