திங்கள், 9 நவம்பர், 2020

"திங்க"க்கிழமை :  அடைகுடைமிளகாய்!  (ஸ்டஃப்ட் கேப்ஸிகம்)

லாக்டவுன் காலங்களில் ஒருநாள் செய்த ஒரு பக்கப்பண்டம்!  அதுதாங்க ஸைட் டிஷ்!  

அடை குடைமிளகாய் என்று தமிழ்ப் 'படுத்தி'யிருப்பது போலதான் இதுவும்!  இது எல்லோரும் விதம் விதமாக நிறைய செய்கிறார்கள் என்று கேட்டு, பார்த்து, நானும் ஒருமுறை செய்து பார்க்க (சாப்பிட) ஆசை கொண்டேன்! 

கீதா ரெங்கனிடமும் டிப்ஸ் கேட்டுக்கொண்டு, என் மாமாவின் மருமகளிடமும் டிப்ஸ் கேட்டுக்கொண்டு ஒருநாள் முயற்சித்தது இது.

உள்ளே என்ன அடைப்பது என்பதில் நிறைய விருப்பங்கள், ஆப்ஷன்ஸ் இருந்தாலும் வீட்டில் எது இருக்கோ அதை வைத்தும், எது கொஞ்சம் சுலபமோ அதை வைத்தும் செய்தது!

உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்து சிறுதுண்டங்களாக்கிக் கொண்டு வெங்காயம் நறுக்கிக்கொண்டு, பூண்டு பத்தைகளை முந்திரிப்பருப்பு போல சைஸ் செய்து கொண்டு, கேரட் துருவிக் கொண்டு, அப்புறம் என்ன இருக்கு என்று பார்த்து பீன்ஸ் கண்ணில் படவும் அதையும் நறுக்கிச் சேர்த்துக் கொண்டு....


புதினா இருக்கிறதா என்று பார்த்து, அது இல்லாமல், கறிவேப்பிலை, கொத்துமல்லி எடுத்து வைத்துக் கொண்டு...


பிரெட் துண்டங்களை வறுத்து எடுத்துக்கொண்டு...


பிரெட் தவிர எல்லாவற்றையும் வதக்கி, தனியாக வைத்து....


குடைமிளகாயை எடுத்து மேலே நறுக்கி, உள்ளிருப்பதைக் காலி செய்து கப் ரெடி செய்துகொண்டு...

அதை 'அவனி'ல் (அவனுக்கு தமிழ் என்ன?!!) வைத்து, கொஞ்சம் வதக்கிக்கொண்டு...

வெளியே எடுத்து, அதில் அந்த கலவையை நிரப்பி...


நறுக்கி வைத்திருந்த மூடிகளை அதன் மீது வைத்து ஜாக்கிரதையாய் மூடி..


ப்ரெஷர் பானில் வைத்து அவ்வப்போது திருப்பி, நன்றாய் வதங்கவைத்து, 


வெளியில் எடுத்து, மேலே பிரெட் துண்டுகளை வைத்து (முன்பே உள்ளேயும் ஒரு லேயர் வைத்திருக்கிறேன்)

சாப்பிடத் தயாரானோம்.  அதனுடன் சாதத்தில் கலந்து சாப்பிட வெங்காய வெந்தயக்குழம்பு.

நாங்கள் சாப்பிட்டு விட்டு கண்டுபிடித்ததை, என் மாமாவின் மருமகள் படம் பார்த்தே கண்டுபிடித்தார்.  

"மிளகாய் இன்னும் கூட கொஞ்சம் வெந்திருக்கவேண்டும் அண்ணா.."

ஆனாலும் மோசமில்லை!  நன்றாகவே இருந்தது.

=======

மின்நிலா தீபாவளி சிறப்பிதழ், எதிர்பாராத காரணங்களால் சற்று தாமதமாகிறது. 

புதன்கிழமை வெளியாகும். 

======

115 கருத்துகள்:

 1. சாப்பிடும்படியாக வந்துவிட்டாலேற் சக்ஸஸ்தான்

  பதிலளிநீக்கு
 2. இதில் உங்களுக்கு பிடித்த சீஸ் ம் சேர்த்து கொள்ளலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்.  சொன்னார்கள்.  ஆனால் எங்கள் வீட்டில் அது அன்று கைவசம் இல்லை.

   நீக்கு
 3. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.
  எல்லோரும் ஆரோக்கியமும் நிம்மதியும் பெற வேண்டும்.
  குடமிளகாய் நன்றாகவே வந்திருக்கிறது.

  நான் குடமிளகாய் ஸ்டஃப்ட் கட்லெட்
  செய்திருக்கிறேன்.

  மிக அழகாகப் படங்களுடன் விவரங்கள்.
  அவனுக்கு அடுப்பகம் என்று பெயர் வைக்கலாமோ.

  பார்க்க மிகப் பிரமாதம்.

  இந்த முழுக் குடைமிளகாயில் உ.கி மற்ற பொருட்களை வைத்து

  கடலை மாவில் முக்கிஎடுத்து வாணலியில்
  டோஸ்ட் செய்யலாம். நன்றாகவே வேகும்.

  நல்ல முயற்சி. மனம் நிறைந்த பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லிம்மா...   வாங்க..

   கட்லெட்டா?  டோஸ்ட்டா?  அதெல்லாமும் ஒருமுறை செய்துடுவோம்.  இப்போதுதான் குடைமிளகாய் கறி, சாம்பாரை விட்டு வெளிவர ஆரம்பித்திருக்கிறோம்!

   நீக்கு
  2. வல்லிம்மா.... அவனுக்கு அடுப்பகம்னு பேர் வச்சா, அடுப்புக்கு என்ன பேர் வைப்பது? அவனகம் என்றா?

   அடுப்பகம் நல்லாத்தான் இருக்கு.

   நீக்கு
  3. "அவன் இவன் என்று ஏகவசனம் வேண்டாம்..   புலவர்களே.. சற்று சாந்தமாக உரையாடுங்கள்..."

   நீக்கு
  4. நுண்ணலை அடுப்பு. இன்னும் யாரோ கூடச் சொல்லி இருக்காங்க.கீழே பார்க்கணும்.

   நீக்கு
 4. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் துன்பங்கள் நீங்கி இனிமையான வாழ்க்கைக்குப் பிரார்த்திக்கிறோம். இனி நடப்பன எல்லாம் நல்லதாகவே இருக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 5. வற்றல் குழம்பு வெகு ஜோர்.
  ஒரு நாள் வரேன் உங்க வீட்டுக்கு:)

  பதிலளிநீக்கு
 6. இத்தனை காய்கள் எல்லாம் வைச்சுக் குடைமிளகாய் ஸ்டஃப் செய்தது இல்லை. சில வார்த்தைகள் தமிழ்ப்படுத்த முடியலைனால் அப்படியே பயன்படுத்திக்க வேண்டியது தான். அடை குடைமிளகாய் என்றதும் நான் அடையில் நறுக்கிச் சேர்த்திருப்பீங்கனு நினைச்சுட்டேன்.

  பதிலளிநீக்கு
 7. மிளகாயைக் குறுக்கே நறுக்கி மேல் பாகத்தை எடுத்து வைச்சு உள்ளே சுத்தம் செய்ததும் இரண்டு பாகங்களிலும் உப்பு, மஞ்சள் பொடி நன்கு தடவி வைத்துவிட்டால் மிளகாயில் உப்புப் பிடித்துக் கொள்ளும். ஸ்டஃப் செய்து மூடியதையும் இட்லித் தட்டில் 5 நிமிஷங்கள் வைத்து எடுத்துப் பின்னர் எண்ணெயில் வதக்கலாம். அப்போது மிளகாய் வெந்திருக்கும். அல்லது ரேவதி சொன்னாப்போல் கடலைமாவில் முக்கி எடுத்தும் போடலாம். மிளகாய் வெந்துவிடும். இதுக்கு நாங்க ப்ரெடெல்லாம் வைச்சுப் பண்ணியதில்லை. புதிய முயற்சிக்கு வாழ்த்துகள். சாப்பாட்டுக்குத் தொட்டுக்க எனில் பருப்பு உசிலிக்கு அரைப்பதை நல்ல நைசாக அரைத்துவிட்டு அதைக் கூட உள்ளே வைத்து ஸ்டஃப் செய்து பின் மேலே சொன்னாப்போல் இட்லித்தட்டில் வைத்து எடுத்துப் பின்னர் வதக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா...   மனதில் வைத்துக் கொள்கிறேன்.

   நீக்கு
  2. நானும் பருப்புசிலிக்கு அரைத்ததை வைத்து ஸ்டப் செய்து செய்வதுண்டு. நன்றாக இருக்கிறது.. இதுவும் தனிருசி. அன்புடன்

   நீக்கு
  3. காமாட்சி அம்மா... அதுக்கு பேசாம குடமிளகாய் பருப்புசிலி செய்துடலாமே. அதுவும் சூப்பரா இருக்குமே.. ஆனா குடமிளகாய் ரொம்பவே வெந்துடக் கூடாது.

   நீக்கு
  4. எனக்கு வாழைப்பூ பருப்புசிலி தவிர வேறெதுவும் பிடிப்பதில்லை. வாங்க காமாட்சி அம்மா...    மகிழ்ச்சி.

   நீக்கு
 8. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

  என்றென்றும் நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 9. குடை அடை மிளகாய் நன்றாகத் தானே வந்திருக்கிறது!...

  பதிலளிநீக்கு
 10. 'அவனுக்கு' நுண்ணலை அடுப்பு என்று சொல்லிக் கொள்ளலாம்...

  சரியில்லை எனில் அவன் அவனாகவே இருக்கட்டும்..

  பதிலளிநீக்கு
 11. இன்றைய புதுவித ஸ்டஃப்ட் குடைமிளகாய் மிகவும் அருமை. இதை சாத்த்துக்குத் தொட்டுக்கொண்டீர்களா?

  இல்லைனா இந்த டிஷ்ஷுக்கு வெங்காய வற்றல் குழம்பு தேவையில்லையே

  இதை ஒரு நாள் செய்துபார்க்கிறேன். நல்ல ரெசிப்பிக்கு பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நெல்லை...   வத்தக்குழம்பு சாதத்துக்குதான் தொட்டுக்கொண்டோம்!

   நீக்கு
 12. பெயரைப் பார்த்ததும் கீதா ரங்கன் ரெசிப்பியோ, ஏன் தலைப்பில் பெயர் போடவில்லை, ஒருவேளை காபிரைட் பிரச்சனையோன்னு நினைத்தேன்.

  இங்க உணவுத் தெருவில் கிட்டத்தட்ட இதுபோன்று, ஆனால் கோஸையும் உள் வைத்து பண்ணித்தருவாங்க (அது ஒரு காலம். இப்போதான் 8 மாதங்களில் மூன்று முறை வெளியில் சாப்பிட்டிருந்தாலே அதிகம்.. அதிலும் மக்கள் கூடுமிடங்களுக்குப் போவதே இல்லை). அதுல ருசிக்குக் காரணம் அஜினமோட்டோ சேர்க்கிறாங்களோ என எனக்குச் சந்தேகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் அஜினமோட்டோ எல்லாம் சேர்க்கவில்லை!!!!  பெயர் போடாமல் இருந்தால் சொந்த சாஹித்யம் என்று அர்த்தம்.

   நீக்கு
  2. பூண்டு அனுமதி உணடா உங்கள் வீட்டில்? அன்புடன்

   நீக்கு
  3. எங்க வீட்டில் வெங்காயம், பூண்டு, முருங்கை- இலை முதற்கொண்டு, கோஸ்... என பல காய்கள் சேர்க்கக்கூடாது. ஆனா சப்பாத்தி சைட் டிஷ் மற்றும் சிலவற்றிர்க்கு வெங்காயம் உபயோகிக்கிறோம் (தனிப் பாத்திரம், இவைகள் யுடிலிட்டி ரூமில்தான் வைத்திருப்போம், சாதாரண காய்கறிகளோடு சேராது.. அது வேற ஜாதி என்பதால் ஹாஹா)

   நீக்கு
  4. பூண்டுக்கு எல்லாம் அனுமதி மறுத்தால் போராட்டம் வெடிக்கும் காமாட்சி அம்மா!  அவர்கள் சாப்பிட மாட்டார்கள் அவ்வளவுதான்.  நான் சாப்பிடுவேன்.  மகன்களும் சாப்பிடுவார்கள்.  குறிப்பாக இந்த வெந்தயக்குழப்பில் முழுசு முழுசாகப் போடாமல் நறுக்கிப் போட்டிருந்த பூண்டுகளை அவர்கள் மிகவும் ரசித்தார்கள்!

   நீக்கு
  5. எங்க வீட்டிலேயும் வெங்காயத்தையும் உ.கியையும் தனியான ஓரிடத்தில் தான் வைப்போம். உ.கி.வெங்காயம் சேர்த்து வைத்தால் உ.கி.யும் வீணாகிவிடும் என்பதால் இரண்டையும் தனித்தனியாக ஓர் ஷெல்ஃபில் வைக்கிறேன். ஆனால் வெங்காயம் அவ்வப்போது பயன்படுத்துவது உண்டு. முருங்கைக்கீரையும்! தினம் தினம் மாமாவுக்கு சூப் வைத்துக் கொடுக்கிறேன். சர்க்கரை கட்டுப்பாட்டில் இருப்பதற்காக. அவ்வப்போது பீர்க்கை, புடலை, பூஷணி போன்ற சில பச்சைக்காய்கறிகளின் சாற்றையும் குடிக்கக் கொடுப்பேன். அப்படியே நானும் குடிச்சுப்பேன். :)))))

   நீக்கு
  6. நாங்களும் தனித்தனியாகத்தான் வைக்கிறோம்.  ஆனாலும் வெங்காயம் ஈரம் படாமலேயே கூட வாங்கி வைத்த ஒரு கிலோவும் அழுகி இருந்தது.  பத்து நாட்களுக்குள் அப்படி ஆனது.

   முருங்கைக்கீரை சூப் செய்து சாப்பிடவேண்டும் என்று எனக்கும் ஆசைதான்...

   நீக்கு
  7. வெங்காயத்தைக் குளிப்பாட்டினீர்களா? இப்போக் கொரோனா காலம் என்பதால்? அப்போக் கட்டாயம் அழுகிவிடும். வெங்காயத்தை அப்படியே ஒரு தட்டில் கொட்டிப் பரவலாக வைத்துவிட்டு நறுக்கும்போது எடுத்து நன்கு அலம்பிவிட்டு நறுக்கினால் கண்ணீரும் விடவேண்டாம். மேலே உள்ள வாடை எல்லாமும் போய்விடும்.

   நீக்கு
  8. ஒரு முறை அந்தத்தப்பு செய்தபிறகு இப்போதெல்லாம் குளிப்பாட்டுவதில்லை.  வெயிலில் வைத்து எடுப்போம்.

   நீக்கு
 13. கிச்சன் என் வசம் வந்துள்ளதால், நேற்று, வெங்காய வத்தக் குழம்பு நாளை செய்யவா என்றேன் (மனைவிதான் தடுக்க முடியாதே). பெண், அம்மா ரெசிப்பி இல்லாம எதையும் பண்ணக்கூடாது, அதிலும் வெங்காயம்லாம் குழம்புல போட்டு என்று சொல்லிவிட்டாள்.

  இங்க வெங்காயம் 100ரூ தாண்டிவிட்டது. சென்னையில் சென்ற ஜனவரில 180-200 ரூபாய் கிலோவுக்கு. இப்போது என்ன விலை?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கிச்சன் உங்கள் வசமா?  ஜமாயுங்கள்.  என்ன..  வெங்காயம் சேர்க்கக்கூடாதா?  ஏன்?

   சென்னையில் வெங்காயம் இரண்டு நாட்களுக்குமுன் கிலோ 90 ரூபாய்.  

   நீக்கு
  2. என் பசங்க அம்மா ஜால்ரா..ஹாஹா. அம்மா பண்ணி அவங்களுக்குப் பிடிக்கும் எந்த ஐட்டத்தையும், வேற வேரியேஷன்ஸ்ல சாப்பிட பெண்ணுக்குப் பிடிக்காது. பையனுக்கு நம்ம சாப்பாட்டுல தேவையில்லாததுல வெங்காயம் போட்டா அறவே பிடிக்காது (பூரிமசால்ல வெங்காயம் ஓகே.. அது என்ன வாழைக்காய் பொடிமாஸ்ல வெங்காயம் போடறேன்னு சொல்றது ம்பான்)

   நீக்கு
  3. வாழைக்காய் பொடிமாஸ்ல வெங்காயம் சேர்ப்பதுண்டே...  என்ன கீதாக்கா...

   நீக்கு
  4. ஆஆஆ நேக்குப் பிரிஞ்சுபோச்ச்ச்ச்ச்:), நெல்லைத்தமிழனின் அண்ணி, அம்மா வீட்டுக்குப் போயிருக்கிறாக:)).. இல்லை எனில் கிச்சின் எப்பூடிக் கிடைக்குமாக்கும்...:)) அப்போ இனிக் கொஞ்ச நாளைக்கு “ஓல்ட்” ரெசிப்பியாக வரப்போகுதூஊஊஊ ஹா ஹா ஹா:))... ஐ மீன்ன்ன்ன்ன்ன்ன்ன் இது வேற மீன்... ஆதிகால ரெசிப்பிகளாக வரும் எனச் சொன்னேன்:))..

   நீக்கு
  5. அதிரா சொல்லிட்டாங்க என்பதற்காக இனி புதிது புதிதாக செய்து எபிக்கு எழுதப் போகிறேன்.

   அடுத்து அனுப்பப்போவது, பருப்புத் தேங்காய். விரைவில் எதிர்பாருங்கள்.

   பாயச வகைகள் என்று ஒரு தொடர் எழுதலாமா என்று நினைத்தேன் (இப்போல்லாம் செவ்வாய் கேட்டு வாங்கிப் போடும் கதை, சிறுகதையாக இல்லாமல் ஒரே தொடர்களாக இருப்பது போல, திங்களையும் அப்படி ஆக்கிவிடலாமா என்று நினைத்தேன். ஆனால், எந்தப் பாயசம் எழுதினாலும், "இதான் எனக்குத் தெரியுமே" என்று அதிரா போன்றவர்கள் சொல்லிவிட்டால் என்னாவது என்று ஓசிக்கிறேன். ஹாஹா

   அது சரி.. இடுகை எப்படி எழுதுவது என்று சொல்லித்தரவா? ரொம்ப இடைவெளி விட்டுட்டீங்களே. மறந்திருக்காது?

   நீக்கு
  6. // (இப்போல்லாம் செவ்வாய் கேட்டு வாங்கிப் போடும் கதை, சிறுகதையாக இல்லாமல் ஒரே தொடர்களாக இருப்பது போல, ... //

   :-)

   //(திங்களையும் அப்படி ஆக்கிவிடலாமா//

   எப்படி?  அடுப்பைப் பற்றவைத்துப் பாத்திரத்தை அதில் வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி அது கொதித்துக் கொண்டிருக்கும்போது...   -தொடரும் - என்றா?!!!  சும்மா ஜோக்தான்!  நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று புரிகிறது!

   நீக்கு
  7. வாழைக்காய்ப் பொடிமாஸ் என்ன? எந்தப் பொடிமாஸிலேயும் வெங்காயமே சேர்க்க மாட்டேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வெங்காயம் சேர்த்தால் அதுக்குப் பேர் பொடிமாஸே இல்லை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   நீக்கு
  8. நாங்கள் சேர்ப்போம் என்றுதான் எனக்கு ஞாபகம்.

   நீக்கு
  9. @ஸ்ரீராம், தப்பு, தவளை, தஞ்சாவூரு மாப்பிள்ளை! :))))

   நீக்கு
  10. சரி, விடுங்க...   என்ன இப்போ! :)))

   நீக்கு
 14. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 15. மழைகாலத்தி்ற்கு ஏற்ற உணவு(குடை மிளகாய்... ஹிஹி). அனைவருக்கும் காலை வணக்கம். ஸ்டஃபட் காப்ஸிகம் என்று புரிகிறார் போல சொல்லியிருக்கலாம்.உங்கள் மாமாவின் மருமகளுக்குத் தோன்றியதுதான் எனக்கும் தோன்றியது. நானும் இதே முறையில்தான் செய்வேன்.  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // மழைகாலத்தி்ற்கு ஏற்ற உணவு(குடை மிளகாய்... ஹிஹி). //


   :-)

   //ஸ்டஃபட் காப்ஸிகம் என்று புரிகிறார் போல சொல்லியிருக்கலாம்.//

   சொல்லி இருக்கிறேனே...   பார்க்கவில்லையா?

   நீக்கு
 16. வணக்கம் சகோதரரே

  அனைத்தும் நலமாக நடக்க வேண்டும்.
  இன்றைய திங்கள் பதிவில், உங்களது குடை மிளகாய் ரெசிபி அழகான படங்களுடன், சிறப்பான செய்முறை விளக்கங்களுடன் மிகவும் அருமையாக உள்ளது. நிறுத்தி நிதானமாக நீங்கள் செய்முறையை சொல்லிய அழகே குடைமிளகாய் பதத்தை விட சுவைபட உள்ளது. இதுபோல் நானும் இதுவரை செய்ததில்லை. இனி ஒரு நாள் செய்ய முயற்சிக்கிறேன். அருமை. பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இதுபோல் நானும் இதுவரை செய்ததில்லை.//

   அடடே....

   //நிறுத்தி நிதானமாக நீங்கள் செய்முறையை சொல்லிய அழகே குடைமிளகாய் பதத்தை விட சுவைபட உள்ளது.//

   நன்றி கமலா அக்கா.

   நீக்கு
 17. அடை குடைமிளகாய் மிக அருமை.
  படங்களுடன் செய்முறை விளக்கம் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 18. வரிசையாக படங்களோடு சொல்லியது ஸூப்பர்.

  //அவனுக்கு தமிழ் என்ன?!!//

  அவள் ???

  பதிலளிநீக்கு
 19. இந்த திங்க கிழமை ஐட்டெம் வித்தியாசமாய் இருக்கிற்து செய்தவரும் ரெகுலராய் செய்ப்வரல்ல தெரிகிறது

  பதிலளிநீக்கு
 20. வித்தியாசமாய் இருக்கிறது என்று சொன்னதற்கு நன்றி ஜி எம் பி ஸார்.  ரெகுலராகச் செய்பவர்தான்.  ஆனால் திங்கள் பதிவு ரெகுலராகப் போடுபவரல்ல!

  பதிலளிநீக்கு
 21. stuffed குடைமிளகாய் நல்லா இருக்கு .துருக்கி மற்றும் மிடில் ஈஸ்டர்ன் நாடுகளில் இது பிரபலம் //அதை 'அவனி'ல் (அவனுக்கு தமிழ் என்ன?!!) வைத்து, கொஞ்சம் வதக்கிக்கொண்டு//
  இதெல்லாம் விளக்க தமிழில் d அடுத்தவரை அழைக்கவும் :))))))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ஸ்ஸ்ஸ் ரொம்ப நாளாச்சு கமெண்ட்ஸ் போட்டு ஸ்பெல்லிங் மிஸ்டேக் 
   தமிழில் D  அதான் டீ குடித்தவரை அழைத்து  விளக்கச்சொல்லவும் 

   நீக்கு
  2. //Angel9 நவம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 9:26
   ஸ்ஸ்ஸ்ஸ் ரொம்ப நாளாச்சு கமெண்ட்ஸ் போட்டு ஸ்பெல்லிங் மிஸ்டேக் //

   ம்ம்ஹூம்ம்.. ஏதோ முன்பெல்லாம் மிசுரேக்கூஊஊஊஉ விடாதவ போலவும்.. இப்போதான் விடுறாவாம் என என்னா ஒரு பில்டப்பூஊஊஊஊஉ:)).. நல்லவேளை அதிரா இங்கின இன்று வந்தது...
   கீழே பதில் ஜொள்ளிட்டனே:))

   நீக்கு
  3. எங்கேயோ கேட்ட குரல் !!! எங்கேயோ பார்த்த முகம் !! எப்போதோ படித்த வரிகள்  ..எல்லாம் தெரிஞ்ச மாதிரியும் இருக்கு தெரியாத மாதிரியும் இருக்கு  .எச்சூஸ்மீ நீங்க யாரு ?? நாம் முன்னேபின்னே எங்காச்சும் மீட் செய்து யிருக்கோமா ??

   நீக்கு
  4. அல்லோ மிஸ்டர் அஞ்சு .. இப்போ நாங்க பூமியில இல்ல சொர்க்கத்தில இருக்கிறோமாக்கும்:)).. குனிஞ்சு பாருங்கோ கால் இல்லை இருவருக்கும் ஹா ஹா ஹா ஆனால் ஸ்ரீராமின் கால் மட்டும் தெரியுதே ஹா ஹா ஹா:))

   நீக்கு
  5. ஆமா ஆமா ரெண்டு ஜோடி இறக்கை தெரியுதே :) நாம் ஏஞ்செல்ஸ் இல்லையோ அதான் தலையில் க்ரவுண் கூட தெரியுது நீங்க பிங்க் மேக்சி நான் லெமன் யெல்லோ மேக்சி :))  

   நீக்கு
  6. ///நீங்க பிங்க் மேக்சி நான் லெமன் யெல்லோ மேக்சி :)) //

   காலே இல்லையாம்:) இதில கலர்கலரா மக்ஸி கேய்க்குதாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா:))

   நீக்கு
  7. 🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♀️

   நீக்கு
  8. வாங்க ஏஞ்சல்...   நெடுநாளைக்குப்பின் வருகை.  தோழியையும் அழைத்து வந்து விட்டீர்கள்.  மகிழ்ச்சி.

   நீக்கு
  9. //ரீராமின் கால் மட்டும் தெரியுதே ஹா ஹா ஹா:))//


   அது என் கால் இல்லையாக்கும்.  படம் அடுத்தவரின் கால்!

   நீக்கு
 22. முதலில் அந்த குடைகளை வதக்கினீங்களே அப்போ எவ்ளோ நேரம் வதக்கினீங்க ?15 நிமிஷம் வதக்கனும் அப்போதான் சரியா வரும் .இந்த குடைக்குள் QUINOA கிச்சடி இல்லன்னா FRIED ரைஸ் stuffing வைச்சும் செய்யலாம்  .இத்தாலியன் ஸ்டைலில் குடைக்குள் தக்காளி மொசரெல்லா சீஸ் வைத்தும் செய்யலாம் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐடியாலாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா இதைச் செய்து இடுகை போட்டால் நம்பலாம். காப்சிகமை 15 நிமிஷம் வதக்கினால் அதுக்கும் கீரைக்கும் வித்யாசம் இருக்காதே. க்ரஞ்சியாக இருந்தால்தான் வாசனை, ருசி

   நீக்கு
  2. குடைகளை முதலில் ஒன்பது நிமிடங்களும், அப்புறம் மறுபடியும் மூன்று நிமிடங்களும் வைத்து எடுத்தேன்! FRIED ரைஸ் stuffing சொன்னார்கள்தான்.   பொறுமை இல்லாததால் செய்யவில்லை.

   நீக்கு
 23. இன்னொரு சந்தேகம் நீங்க அவன்னு சொன்னது எவன் ???மைக்ரோவேவ் or ட்ரெடிஷனல் oven ? 
   நீங்க மைக்ரோவேவில் செஞ்சிருக்கீங்கன்னு நினைக்கிறேன் நாங்க ட்ரெடிஷனல் oven இல் க்ரில் மோடில் சுட்டுட்டு செய்வோம் 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மைக்குரோவேவ் போலத்தான் படத்தில தெரியுது அஞ்சு.... ஆனால் மைக்குரோவேவில் கிரில்ட் மோட் உம் இருக்குது அப்படி எனில் ஓகே.

   நீக்கு
  2. //மைக்ரோவேவ் or ட்ரெடிஷனல் oven ? //

   மைக்ரோவேவ் அவன்தான்.  நாங்கள் பெரும்பாலும் அதில் சூடு பண்ணுவதைத்தவிர வேறெதுவும் செய்வதில்லை!!!  முதலில் க்ரில் இருக்கும் சற்றே பெரிய அவன் வைத்திருந்தோம்.  அப்புறம் தங்கையின் பெண் கேட்டாள் என்று அதைக்கொடுத்து விட்டோம்.  இது புது வீட்டுக்குப் பரிசாகக் கிடைத்த சற்றே சிறிய சைஸ்.

   நீக்கு
 24. ஆஹா இந்த ருவென்ரி ருவென்ரி[நெல்லைத்தமிழன் வந்து சொல்லுவார் அது ரு அல்ல டு என:)).. உங்களுக்குப் புரியுதெல்லோ ஸ்ரீராம்?:)] 2020 “கொரோனா” வருடத்திலே.. புது வீட்டிலே.. ஸ்ரீராம் வெற்றிகரமாகச் செய்த ரெண்டாவது ரெசிப்பி இது.. வாழ்த்துக்கள் ஸ்ரீராம் வாழ்த்துக்கள்.. நிறைய மினக்கெட்டு நல்ல பொறுமையாக அழகாக சுவையாகச் செய்து அசத்திட்டீங்க... அதை அப்படியே உருட்டி போண்டா போல ஆக்கியும் விடலாம்... ஹா ஹா ஹா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹையோ ஹாயோ ஈஸியா அது  ட்வென்ட்டி ட்வென்ட்டி  :) இப்போ வந்து ட் முதலில்வராதுன்னு சொன்னா அவ்ளோதான் செகண்ட் லாக்டவுன்ல வந்து கட்டி புடிச்சிடுவேன் :))

   நீக்கு
  2. /// அதை அப்படியே உருட்டி போண்டா போல ஆக்கியும் விடலாம்... ஹா ஹா ஹா...//
   https://media.tenor.com/images/5a5ef01f09aded02317ca20daa021db8/tenor.gif

   நீக்கு
  3. //. அதை அப்படியே உருட்டி போண்டா போல ஆக்கியும் விடலாம்... // - ஏன் அதோட நிறுத்திட்டீங்க? கொஞ்சம் தட்டி தவலடையாக ஆக்கிவிடலாம், ரொம்பவே தட்டி அடையாக ஆக்கிடலாம், மிக்சில அரைச்சு கொஞ்சம் வெந்நீரில் கலந்து சூப் மாதிரி குடிக்கலாம் என்றெல்லாம் சொல்லி ஶ்ரீராமை நொந்துபோக வைக்கலாமே.

   நீக்கு
  4. வாங்க அ ரா அதிரா...   நல்வரவு...   யோசனைகளுக்கு நன்றி.  


   //வெற்றிகரமாகச் செய்த ரெண்டாவது ரெசிப்பி//

   சொன்னதை விட சொல்லாதது உண்டே!!

   //நல்ல பொறுமையாக அழகாக சுவையாகச் செய்து அசத்திட்டீங்க...//

   ஆஹா...    அப்படியா சொல்றீங்க?  நன்றி!


   நீக்கு
  5. //மிக்சில அரைச்சு கொஞ்சம் வெந்நீரில் கலந்து சூப் மாதிரி குடிக்கலாம் என்றெல்லாம் சொல்லி//

   நெல்லை...  அப்படியே மிக்சியில் அரைத்து தோசைமாவில் கலந்து வார்த்துவிடலாம்.

   நீக்கு
 25. //அதை 'அவனி'ல் (அவனுக்கு தமிழ் என்ன?!!) //

  வெதுப்பி.. என வருமாக்கும்.. அதிராவுக்கு டமில்ல டி எல்லோ.. இங்கின ஆருக்கும் இச்சொல் தெரியவே இல்லைப்பாருங்கோ.. இன்குளூடிங் டமில்ப்புரொபிஸர் நெ தமிழன்:)) ஹா ஹா ஹா மீக்கு ஜந்தோசம் பொயிங்குதே ஜந்தோசம் பொயிங்குதே...:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழில் டீ குடிச்சவங்க ஜ பயன்படுத்த தடா :))))))))))))))))

   நீக்கு
  2. வெதுப்பி -Bake க்கான தமிழ். நுண்ணலை என்பதுதான் சரியான வார்த்தை.

   துரை செல்வராஜு சாருக்கு தமிழ்ல "டி". அதிராவுக்கு.. அதிராவுக்கு "Z" இருக்கா?

   நீக்கு
  3. துரை செல்வராஜூ ஸார் சொன்னது சரி என்று தோன்றுகிறது.

   நீக்கு
  4. //
   நெல்லைத்தமிழன்10 நவம்பர், 2020 ’அன்று’ முற்பகல் 4:56
   வெதுப்பி -Bake க்கான தமிழ். நுண்ணலை என்பதுதான் சரியான வார்த்தை.

   துரை செல்வராஜு சாருக்கு தமிழ்ல "டி". அதிராவுக்கு.. அதிராவுக்கு "Z" இருக்கா?///

   நெல்லைத்தமிழன் அண்ணாஆஆஆஆஆ வெளில வாங்கோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. உங்களை அதிராட சிமியோன் ரீச்சர் தேடிக்கொண்டிருக்கிறா:)) கனவில வந்து மிரட்ட.... அண்ணி இல்லாத சமயம்.. பயந்து கத்திடப்போறீங்கள், எதுக்கும் திருநீறை அள்ளிப்பூசிக்கொண்டே படுங்கோ:)..

   தெளிவாகச் சொல்ல, ஒரு போஸ்ட் போடோணும் ஆனால் அதுக்கெல்லாம் இப்போ நேரமில்லை எனக்கு.... . microwave எனில்தான் நுண் கதிர்கள் மூலம் உணவைச் சூடுபடுத்துவது, இது உணவைச் சூடுபடுத்த மட்டுமே பாவிக்கும் ஒன்று, ஆனால் நாம்தான் எதிலும் முன்னேறியவர்களாச்சே:)), அதனால புட்டுக்கூட அவிக்கிறோம்.. இந்த மைக்குரோவேவ் என்பது உடலுக்கு நல்லதல்ல.. அதற்குத்தமிழ் துரை அண்ணன் சொன்னது பொருந்தக்கூடும்..

   ஆனா நான் சொன்னது அவணுக்கான பதில்[அதைத்தானே ஸ்ரீராம் கேட்டிருக்கிறார் தமிழ் என்ன என கர்:))]... oven என்பது நேரடியாக அங்கு வெப்பம் உருவாகி உணவைச் சமைக்கவோ சூடுபண்ணவோ வைக்கும்... இதில ஹாஸ் உம் உண்டு எலக்ரிக் உம் உண்டு.. எங்களிடம் இருக்கும் அவண்.. நெருப்பு எரியும்... பேக்கரிப் “போரணை” அடுப்புப்ப்போல இருக்கும்... இதில்தான் பேக்கிங் எல்லாம் செய்வது... அப்போ அது வெதுப்பி என அழைக்கலாமொன்னோ?:))...

   அதிராவுக்குத் தமிழ்ல டி ஆக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கொஞ்ச நாள் எட்டிப்பார்க்காமல் விட்டால் போதும் சரித்திரத்தையே மாத்திடுறார்:))))))))

   நீக்கு
 26. படமெடுக்கும்போது காலையும் சேர்த்து எடுத்திட்டீங்க ஸ்ரீராம் ஹா ஹா ஹா அதிரா கண்ணுக்கு அனைத்தும் தெரியுமாக்கும்...:).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், பின்னர் கவனித்தேன்.  ஓரளவுக்குமேல் கிராப் செய்யவும் முடியவில்லை.

   நீக்கு
 27. அது அவன் அல்ல:)).. அவண் என வரவேண்டுமாக்கும்:))..

  பதிலளிநீக்கு
 28. இப்படியான உணவுகளுக்கு சோஸ் வகைகள்தான் தொட்டுக்கொள்ளச் சிறந்தது.. பிரவுண் சோச், கெச்சப், சில்லி சோஸ், பெரிபெரி சோஸ்.. இப்படி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் செக்:) க்கு இன்று முதல், மாத சம்பளம் வன் பவுண்டால் கூட்டப்படுகிறது:))

   நீக்கு
  2. சம்பளமே வரல 10 வருஷமா :) இதில் one பவுண்ட் வேறாம் :)))))))))))))))))))

   நீக்கு
  3. //பிரவுண் சோச், கெச்சப், சில்லி சோஸ், பெரிபெரி சோஸ்..//

   எங்கள் வீட்டில் அவைகக்ள் எல்லாம் ஸ்டாக்கே இருக்காது!  அதனால்தான் இப்படி!

   நீக்கு
  4. //சம்பளமே வரல 10 வருஷமா :) இதில் one பவுண்ட் வேறாம் ://

   கமலா ஹாரிஸ் கிட்ட கம்ப்ளெயிண்ட் பண்ணுங்க ஏஞ்சல்...

   நீக்கு
  5. ஹாரிஸ் மாமி!!! ன்னு சொல்லுங்க ஸ்ரீராம் அப்பத்தான் அல்லிராணிக்குப் புரியும்!!! டரம்ப் அங்கிள் இல்லை இப்ப அல்லிக்கு செக் வேலை போயிடுச்சோ?!!!!!!!! இல்லை பிடன் அங்கிள் ??? இடம் செக் நு சொல்லிக்கத் தொடங்கிடுவாங்க பாருங்க்

   கீதா

   நீக்கு
  6. அல்லி ராணி ராஜ்ஜியம் தொடங்கிருச்சு போல!!!!!

   கீதா

   நீக்கு
  7. ட்ரம்ப் அங்கிள் என்றால் கமலா ஆண்ட்டி!

   நீக்கு
  8. கரெக்ட்.. கமலா ஆன்ரியேதான்:))... செய்தி அறிஞ்சதும் எங்கட கமலா ஹரிகரன் அக்காவோ என ப் பதறிப்போயிட்டேன்:)).. என்னா பெயர்ப் பொருத்தம் பாருங்கோ:)..

   நீக்கு
 29. ஸ்ரீராம் நல்லா வந்திருக்கு. ஹிஹிஹி எங்கிட்ட டிப்ஸ் கேட்டதைச் சொன்னதுக்கு நன்றி நன்றி...

  இது அதிகமா வெந்துருச்சுன்னா ரொம்ப கலர் மாறி soggy ஆகிடும். இப்படி நிற்காது. வத்திப் போன உடம்பு போல ஆகிடும் அது க்ரில்ட் கேப்சிக்கம் தனி.
  நீங்க செஞ்சுருக்கறது நல்லா வந்திருக்கு ஸ்ரீராம். இன்னும் கொஞ்சமே கொஞ்சம் வதங்கியிருக்கலாம்னு சொன்னாலும் இந்த டேஸ்ட் மிக நன்றாகவே இருக்கும். crunchy ஆக. குடைமிளகாய் வெந்தும் வேகாதது போல இருந்தால் அதன் சுவை நன்றாக எடுபடும்...நல்லா வந்திருக்கு ஸ்ரீராம்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கீதா...  நல்லா வந்திருக்கு என்று உற்சாகப்படுத்தி இருப்பதற்கு நன்றி கீதா.

   நீக்கு
 30. அடை குடை மிளகாய்ன்னு பார்த்ததும் அடையில் போட்டு செஞ்சுருக்கீங்க போல ந்னு நினைத்தேன் ஸ்ரீராம்...ஹிஹிஹி அப்பூறம் தமிழ்ப்படுத்தியது புரிந்தது!!!

  இப்படி ஸ்டஃப் செய்ததை க்ரேவியாகச் செய்யலாம்...நான் செய்தது ஃபோட்டே எல்லாம் எடுத்து வைச்சிருக்கேன் ஆனா ரெசிப்பி எழுதலை!!

  கீதா

  பதிலளிநீக்கு
 31. தாமதமான கொமெண்ட்டுக்கு மன்னிக்கவும் ஸ்ரீராம், கெள அண்ணன்..
  எப்பொழுது மனமும் நேரமும் உடன்படுகிறதோ, அப்பொழுதே புளொக்கை எட்டிப் பார்த்து,.. அப்பொழுது வந்திருக்கும் போஸ்ட்டுக்குக் கொமெண்ட்ஸ் போட்டுவிட்டு ஓடுவதுதான் இப்போதைய என் “கெட்ட”:) பழக்கமாக இருக்கிறது.. அதனால பழைய போஸ்ட் எதையும் பார்க்காமையால எந்தச் செய்தியும் தெரியாமல்.. இதில் அன்று பேசிவிட்டு ஓடிவிட்டோம்ம் மன்னிக்கவும்...

  பின்புதான் என் செக் ஆகிய ஆராட்சி அம்புஜம் கண்டுபிடித்துத் தகவல் சொன்னா....

  எத்தனை வயதானாலும் இழப்புக்கள் என்றும் ஈடுசெய்யமுடியாதவைதானே.., தகவல் கேட்டதும் மனம் கஸ்டமாகிவிட்டது.., அவரின் ஆத்ம சாந்திக்காக நானும் பிரார்த்திக்கிறேன்... உங்கள் குடும்பத்தார் அனைவரின் மனமும் அமைதிபெறவும் எங்கள் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!