பானுமதி வெங்கடேஸ்வரன்:
இப்போதய இளம் தலைமுறையினர் சிலர் குழந்தைகளை பெற்று வளர்ப்பதெல்லாம் தேவையில்லாத பெரும் சுமை எனவே குழந்தை பெற்றுக் கொள்வதை தவிர்க்கிறார்களே? கொடி காயை பாரமாக நினைக்கத் தொடங்கி விட்டதா? இவ்வளவு சுயநலமாகி விட்டோமா?
# அப்படியெல்லாம் பரவலாக குழந்தை வேண்டாம் என நினைப்போர் இருக்க வாய்ப்பில்லை.
எக்காலத்திலும் எல்லா மாதிரியும் சிலர் இருக்கலாம். அது பொது விதியாகக் கொள்ள இடமில்லை.
&
தன்னை ஒரு இந்தியனாக கருதாத, பாகிஸ்தான் ஆதரவாளரான, இந்திய எதிர்ப்பாளரான கமலா ஹாரிஸ் வெற்றியை கொண்டாட நமக்கு என்ன இருக்கிறது?
# ஏதும் இல்லை தான். அவர் தாய் வழி இந்தியா என்பதில் கொண்டாட ஒன்றுமில்லை.
& ஏதோ ஊடகங்களுக்கு மெல்லுவதற்கு கொஞ்சம் அவல். அம்புட்டுதான்.
சுந்தரமூர்த்தி நாயனார் இரண்டு பெண்களை மணந்து கொண்டாலும் அவருடைய முதல் திருமணம் நடைபெறாமல் சிவபெருமானால் தடுக்கப் பட்டது. அந்தப்பெண் என்னவானார்?
# சிவபெருமானே தடுத்தாட்கொண்டதால் அந்தப் பெண் வேறு நல்ல இடத்தில் வாழ்க்கைப் பட்டு சௌக்கியமாக இருந்தார் என்றெண்ணி மகிழ்வோம் !
& திருமணத்தினை தடுத்து, சுந்தரரை அழைத்துவந்த சிவபெருமானே, சுந்தரருக்கு பரவையார், சங்கிலியார் என்ற பெண்களைத் திருமணம் செய்துவைத்தார். ஆக - ஒற்றைத் தலைவலி வேண்டாம்; இரட்டைத் தலைவலியால் அவதிப்படு என்று சுந்தரருக்கு சாபம் போலிருக்கு!
கீதா சாம்பசிவம் :
சுப்ரபாதம், சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம் போன்றவற்றின் தமிழ் மொழி பெயர்ப்பு சாந்நித்தியத்தோடு அமையவில்லை என்கிறோம். ஆனால் அதே மனம் கந்த சஷ்டி கவசம், அபிராமி அந்தாதி, பிரபந்தங்கள், தேவாரப் பாசுரங்கள், திருப்புகழ் போன்றவற்றை ஏற்கின்றதே!அது ஏன்? என்ன காரணம்?
# எந்த ஸ்தோத்திரம் ஆனாலும் அது இயற்றப்பட்ட மொழியில் மேன்மை பெற்று விளங்கும். பெயர்ப்பில் நீர்த்துப் போகும். மொழி இரண்டும் அறியாதோருக்கு மட்டும் இரண்டும் ஒன்றாகத் தோன்றும்.
இது தவிர, மொழிக்கான நாத காம்பீர்யம் சில மொழிகளில் நம் சூழலைப் பொருத்து சிறப்பாகத் தோன்றும்.
இணையம் அறிமுகம் ஆனதில் இருந்து தமிழ் நாட்டில் எழுத்தாளர்களும் அதிகம் ஆகி விட்டார்கள். உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார்? ஏன்?
# பிடித்த எழுத்தாளர்கள் சற்று நீண்ட பட்டியல்.
லா.ச.ரா ஜானகிராமன் கல்கி வண்ணநிலவன் நாஞ்சில் நாடன் ரகுநாதன் சுஜாதா ..
ஏன் என்று கேட்டால் எழுதியது நம் நெஞ்சை வருட வேண்டும். அட வாஸ்தவம் தான் என எண்ணி வியக்கச் செய்யவேண்டும் . வாய் விட்டு சிரிக்க வைக்க வேண்டும்...
& எனக்குப் பிடித்த எழுத்தாளர் என்று பார்த்தால் சென்ற நூற்றாண்டில் சுஜாதா. இந்த நூற்றாண்டில் வெங்கட் நாகராஜ், என் சொக்கன்.
எழுத்தாளரை தெய்வமாகப் பார்க்கும் வழக்கம் உண்டா? அவரும் நம்மைப் போல் தான் என நினைப்பீர்களா?
# எழுத்தாளர் ரசனைக்குரியவர் ஆராதனைக்கல்ல.
& தெய்வமாக எல்லாம் பார்ப்பது சரியல்ல. ஒவ்வொருவரிடமும் + மற்றும் - qualities இருக்கும்.
ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ரசனை உண்டு. இல்லையா? ஆகையால் ஒருவரின் எழுத்தில் நீங்கள் ரசிப்பதையே நானும் ரசிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது சரியா?
# ரசனை திணிக்க இயலாதது.
& நிச்சயமாக சரியில்லை.
ஹிஹி, இங்கே கே.வா.போ.க. பகுதியில் எழுதுபவர்களில் உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார்? ஹையா, மாட்டி விட்டேனே! மாட்டிக் கொண்டாரே!
# எங்கள் எழுத்தாளர் கள் எல்லாரும் ஏதோ ஒரு வகையில் பிடித்தவர்கள்தாம்.
& குரோம்பேட்டை குறும்பன் ( இஃகி - இஃகி - நானாவது மாட்டுவதாவது! )
நீங்கள் எழுதும் ஒரு சம்பவம் மூலம் அதன் தொடர்பாக என் அனுபவம் அல்லது மற்ற வாசகர்களுக்கும் அவர்கள் அனுபவங்கள் நினைவுக்கு வருவது சரியா? தப்பா?
# சரி.
& தப்பே இல்லை.
இப்போ சீரியசாக ஒரு கேள்வி. தமிழில் உங்களைக் கவர்ந்த/பிடித்த எழுத்தாளர் யார்? வெகுஜன எழுத்தாளர் என்பதற்கான வரைமுறை ஏதானும் உண்டா?
& சுஜாதா. வரைமுறைகள் எல்லாம் வகுத்துக்கொள்ளாமல் புதுமைப் படைப்புகள் படைக்கும் ஆற்றல் சிலருக்கு மட்டுமே உள்ளது.
நீங்கள் ரசித்துப் படித்த தமிழ் நாவல்/சிறுகதை எது? யார் எழுதினது? ஏன் பிடிக்கும்?
# ரசித்துப் படித்தது நீண்ட பட்டியலாகிவிடும்.
ஏன் பிடிக்கிறது என்பதற்கு பதில் மேலே இருக்கிறது.
& சின்ன வயதில் படித்த வாஷிங்டனில் திருமணம். சாவி. அப்புறம் தேவன் எழுதிய சில கதைகள். உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன், மூவிரண்டு ஏழு - ரா கி ரங்கராஜன் - எல்லாம் உடனே ஞாபகம் வருகின்றன.
ஒரு பக்கம் பொன்னியின் செல்வன் பிரமாதமாகப் பேசப்பட்டாலும் இன்னொரு பக்கம் கல்கியையும் அவர் எழுத்தையும் விமரிசிப்பவர்கள் உண்டு. அதைப் பற்றி நீங்கள் சொல்வது என்ன?
சரித்திரக் கதை எழுத்தாளர்களில் சிறந்தவர் யார்?
# சரித்திரக்கதை என்றால் கல்கிதான். நிச்சயம் சாண்டில்யன் பாலகுமாரன் அகிலன் அல்ல.
நெல்லைத்தமிழன் :
கொரோனா தடுப்பூசி 90 சதவிகிதம் வெற்றி என்று ஒரு மருந்து நிறுவனம் சொல்லியிருக்கிறதே. 90 சதவிகிதம் வெற்றின்னா என்ன? ஊசி உடம்புல போகுது, மருந்தை உள்ளே செலுத்த முடியுது, ஊசியை திரும்ப வெளில எடுக்க முடியுது என்பதா?
# தடுப்பு ஊசி தயார் செய்வது எளிதல்ல. பற்பல சோதனைகளுக்குப் பின்தான் வெளியிட வேண்டும். சோதனைகள் 90 % சரியாக இருந்தன என்று கொள்ளலாம்.
===============
மின்நிலா 025 தீபாவளி சிறப்பிதழ் :
மொத்தம் : 155 பக்கங்கள்.
>>>>>>>>>>>>>>>>> சுட்டி <<<<<<<<<<<<<<<<<
மின்நிலா தீபாவளி சிறப்பிதழ் PDF மெயிலில் பெற விரும்புவோர், engalblog@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு ஒரு மெயில் அனுப்பவும். நன்றி.
அனைவருக்கும் புதன் காலை வணக்கம் .
பதிலளிநீக்குநன்றி. வணக்கம்.
நீக்குஎல்லாரும் நல்லா இருக்கணும் எல்லா ஜீவராசி களும் நல்லா இருக்கணும் எல்லாருக்கும் தேவைக்கு பணமும் அளவில்லாமல் நிறைய ஆரோக்கியமும் கிடைக்கணும்னு பிரார்த்திப்போம் .
பதிலளிநீக்குஆமென்.
நீக்குஎன்னவோ பின்னூட்டம் போட்டிருக்கீங்க. எல்லா ஜீவராசிகளும் எப்படி நல்லா இருக்க முடியும்? ஆடு மாடு கோழி நல்லா இருக்கணும்னா, அதிரா பட்டினி இருக்கணும் (சம்பளம் கொடுக்கலை என்பதற்காக அவங்க மேல ஏன் இந்தக் கொலைவெறி?) . மான், எருது, காட்டுப்பன்றி நல்லா இருக்கணும்னா புலி, சிங்கம் போன்றவை பட்டினி இருக்கணும். 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று சொல்வதுபோல பயிர்கள் நல்லா இருக்கணும்னா, மனுசன் பட்டினியா இருக்கணும்.
நீக்குபணத்தை மட்டும் வச்சிக்கிட்டு என்ன செய்யறது ஏஞ்சலின்?
🏃♀️🏃♀️🏃♀️🏃♀️🏃♀️🏃♀️🏃♀️🏃♀️🏃♀️🏃♀️🙊🙊🙊🙊🙊🙊🙊🙊
நீக்கு:))
நீக்குஇனிய காலை வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதுன்பங்கள் நோய்கள் நீங்கி
நம் வாழ்க்கை ஒளி பெற பிரார்த்தனைகள்.
நன்றி.
நீக்குHi Angel Thank you dear.
பதிலளிநீக்குyes .
நீக்குகேள்விகளும் பதில்களும் நல்ல சுவை.
பதிலளிநீக்குகுறிப்பாக எழுத்தாளர் பற்றிய கேள்வி.
நமக்குப் பிடித்த எழுத்தை ரசிக்கலாம். கோவில் கட்டி
ஆராதிக்க முடியாது.
ஆம், அதே, அதே.
நீக்குகுழந்தைகள் பெறுவதைத் தள்ளிப் போடுகிறார்கள். தடுப்பதில்லை என்றுதான் தோன்றுகிறது.
பதிலளிநீக்குஒரு குழந்தையோடும் நிறுத்திக் கொள்கிறார்கள்.
காலம் மாறுகிறது. காட்சிகளும் --
நீக்குசரித்திரக் கதைகளில் சென்சேஷன் பார்க்காமல்
பதிலளிநீக்குஅழகாகச் சொல்லிச் சென்ற முறையில்
கல்கி அவர்களுக்குத்தான் முதலிடம்.
ஆம்.
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவரின் உடல், மனம் பூரண நலம் பெற்று ஆரோக்கியமாய்த் திகழவும் வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இனி வரும் நாட்கள் தொற்றுக் குறைந்து ஆரோக்கியமாக அனைவரும் கவலையின்றி வாழவும் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குஆம், அவ்வாறே வேண்டுவோம்.
நீக்குஎன்னோட ப்ரார்த்தனை, உங்களுக்கு சரியான கேடரர் கிடைக்கணும், உணவு கொஞ்சம் முன்னப் பின்ன இருந்தாலும், ரிலையபிளா, சுத்தமா செய்யும் ஆள் கிடைக்கணும்னு வேண்டிக்கிறேன்.
நீக்குவாங்க நெல்லை, எனக்கு நல்லது செய்யறதா/சொல்லறதா நினைச்சுண்டு உணவு முன்னப் பின்ன இருந்தாலும்னு சொல்றீங்களே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உணவு சரியில்லை என்பதால் தானே நிறுத்தறோம். ரிலையபிள், சுத்தம்னு வீட்டுக்குள்ளே போயெல்லாம் பார்க்க முடியாது. இப்போதைக்கு "நோ" சொல்லிட்டேன். இன்னிக்கு என் சமையல் தான். முருங்கைக்காய்க் குழம்பு, மிளகு ரசம், பூஷணிக்காய் மோர்க்கூட்டு! நான் கிட்டத்தட்ட அவியல் மாதிரிப் பண்ணுவேன். அதிலே கடலைப்பருப்பை எல்லாம் போட்டு மாவெல்லாம் விட்டுத் தேங்காயோ, நல்ல மோரோ கண்ணிலே காட்டாமல்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இத்தனை நாட்கள் சாப்பிட்டாச்சு! இன்னிக்கு நிறையத் தேங்காய் போட்டு நல்ல மோர் விட்டுப் பண்ணிச் சாப்பிட்டோம். மனதுக்கு நிறைவாக இருந்தது. ஆனால் வயிறு சரியாக மட்டும் இன்னும் 2,3 நாட்கள் ஆகும் போல! :(
நீக்குகேள்விகள், பதில்கள் சுவையாகவும் ரசிக்கும்படியும் இருக்கின்றன. ஆனாலும் பின்னர் வருகிறேன். இப்போ அதிக நேரம் இணையத்தில் உட்கார முடியாது.
பதிலளிநீக்குகாலையிலேயே வந்து வாழ்த்திய தேவதைக்கும் நன்றி.
நன்றி. மீண்டும் வருக.
நீக்குதேவதைனு "ஏஞ்சல்"ஐத் தான் சொல்லி இருக்கேன். யாருமே கண்டுக்கலை! க்ர்ர்ர்ர்ர்ர்!
நீக்குமின்நிலா இனித் தான் பார்க்கணும். தீபாவளி மலருக்கு அனுப்பணும்னு நினைவே வரலை! :( தீபாவளி நினைவுகள் நிறைய இருக்கின்றன. ஏதேனும் அனுப்பி இருக்கலாம். தோணலை! :(
ரெண்டு கமெண்ட் போட்டுட்டு தூங்கபோய்ட்டேன்க்கா :) நன்றி நன்றி
நீக்குமின் நிலா கண்டேன். என் படங்களையும் பதித்ததற்கு மிக நன்றி.
பதிலளிநீக்குமாலா மாதவனின் கதை அப்படியே உள்ளம் கவர்ந்துவிட்டது.
ஆண்டாள் அழகு அவள் கதை அழகு,.
துளசிங்கம் மங்கை பக்தி அழகு.
மொத்தமும் அழகு. அன்பு மாலா என்ன ஒரு தெய்வீகக் கற்பனை.
வரமும் கொடுத்துப் போனாளே என் தாய்.
மிக மிக நன்றி மா.
சென்ற வருடம் இந்த நேரம் அவள் சன்னிதியில்
இருந்தோம்.
மீண்டும் அருளுவாள் அன்னை.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குமின் நிலா கண்டேன். என் படங்களையும் பதித்ததற்கு மிக நன்றி.
பதிலளிநீக்குமாலா மாதவனின் கதை அப்படியே உள்ளம் கவர்ந்துவிட்டது.
ஆண்டாள் அழகு அவள் கதை அழகு,.
துளசிங்கம் மங்கை பக்தி அழகு.
மொத்தமும் அழகு. அன்பு மாலா என்ன ஒரு தெய்வீகக் கற்பனை.
வரமும் கொடுத்துப் போனாளே என் தாய்.
மிக மிக நன்றி மா.
சென்ற வருடம் இந்த நேரம் அவள் சன்னிதியில்
இருந்தோம்.
மீண்டும் அருளுவாள் அன்னை.
மீண்டும் நன்றி.
நீக்குமிக அமைப்பாக வந்திருக்கிறது திரு கௌதமன் ஜி.
பதிலளிநீக்குமனம் நிறை வாழ்த்துகள்.
மற்ற பதிவுகளையும் படித்து விட்டு சொல்கிறேன்.
நன்றி, மீண்டும் வருக.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குவணக்கம் சார்.
நீக்குநலம் வாழ்க என்றென்றும்...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅன்பு துரையின் கவிதை மகள்
பதிலளிநீக்குபடித்திருக்கிறேன். வெகு அழகு.
அருமையான தமிழ் அவர் வசம்
அன்பாக அமைந்திருக்கிறது.
மனம் நிறை வாழ்த்துகள்.
வாழ்க.
நீக்குஎனது கவிதைகளையும் பாராட்டியதற்கு மகிழ்ச்சி.. நன்றியம்மா..
நீக்குதீபாவளி மலர் சிறப்பாக மலர்ந்திருக்கிறது..
பதிலளிநீக்குஎனது பங்களிப்புகளையும் கண்டதில்
மகிழ்ச்சி.. நன்றி..
பங்களிப்புக்கு எங்கள் நன்றி.
நீக்குகருத்துரைப் பகுதியில் சொல்லியிருந சிறு கவிதையையும் தீபாவளி மலரில் வெளியிட்டு சிறப்பு செய்திருக்கின்றீர்கள்...
பதிலளிநீக்குதீபாவளி மலருக்கென்றே எழுதியது -
மண் கொண்ட மாண்பு..
நலம் வாழ்க!...
நன்றி சார்.
நீக்குஅடுத்துவரும்
பதிலளிநீக்குஜீவி சாரின் கவிதை நடை சரளமாகச் செல்கிறது.
எத்தனை மலர்கள், வண்ணங்கள், கதிரவன், தென்றல்,
சந்திரன் என்று பல காதலர்களுக்குக்
காத்திருக்கும் அழகு மனம் நிறைகிறது.கவிதை மகிழ்ச்சிகளுக்கு மிக நன்றி ஜீவி சார். அற்புதம்.
அவர் சார்பில் எங்கள் நன்றி. அவரும் சொல்வார்.
நீக்குமேனியெங்கும் சூரியனின் சுடல் படர மல்லாந்து சாய்ந்திருக்கும் விதவித மலர்க் கன்னிகளின் தோற்ற அழகு, குமுதம் என்ற ஒரே ஒரு மலராள் தன் காதலன் சந்திரனின் வரவுக்காக தவமாய் தவமிருந்து தடாகத்தில் காத்திருக்கும் அழகு-- இந்த நிகழ் உண்மையில் சந்திரனை ஸ்திரிலோலன் என்று சாத்திரங்கள் பகரும் பொறுந்தா புனைவுகள், இவ்வளவையும் தாண்டி சூரியன் -- சந்திரன் இந்த இருவரும் ஒருவரே என்ற கற்பனை வீச்சு... இதானே அந்த நீள் கவிதை!..
நீக்குகவிதையின் சரள நடையை ரசித்தமைக்கு நன்றி, வல்லிம்மா.
திரு விஸ்வேஸ்வரனின் பெயரைக் கண்டதும் மனம் அதிர்ந்தது.
பதிலளிநீக்குஎத்தனை விவரங்கள் படங்கள்.சரித்திரங்கள்.!!!!!!!
இனிமேல் சாரின் க்ராஸ் என்றால் உங்கள் அண்ணா தான் நினைவுக்கு வருவார்,.
மீண்டும் மீண்டும் படிக்கிறேன்.
இப்படி ஒரு க்ஷணத்தில் மறைந்து விட்டாரே.
அழிக்க முடியாத வார்த்தைகளை விட்டு விட்டுப் போயிருக்கிறார்,.
ஆம், உண்மை.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிரார்த்தனைகளுக்கு நன்றி.
நீக்குவேதனை மிகுந்த நெருக்கடியான சூழலிலும்
பதிலளிநீக்குதீபாவளி மலரை சிறப்பாகப் பதிவு செய்திருக்கின்றீர்கள்..
எல்லாவற்றையும் படித்து முடிப்பதற்கு சில நாட்கள் ஆகலாம்...
பிறகு வருகிறேன்... வாழ்க நலம்..
நன்றி, மீண்டும் வருக.
நீக்குகேள்வி - பதில் ரசனையாக இருக்கிறது.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபுதன் கேள்வி - இப்போ உள்ள ஜெனெரேஷன்லாம் மேற்கத்தைய நாடுகளின் நாகரீகம், கலாச்சாரம், உணவு, எல்லாவற்றிலும் சுதந்திரம் வேணும் என்ற நினைப்புல்லாம் வச்சிக்கறாங்க. அதே சமயம், நம்ம ஊர்ல இருப்பதுபோல திருமணம் வரை சோம்பேறித்தனம், எல்லாத்துக்கும் பெற்றோரை எதிர்பார்ப்பது, சொந்தக் காலில் நிற்பதற்கு அவ்வளவாக ஆசைப்படாதது, பிறகும் பெற்றோரையே எதிர்பார்ப்பது என்று இந்த விஷயங்களில் மட்டும் நம்ம ஊர் கலாச்சாரத்தைப் பின்பற்ற நினைப்பது சரியா?
பதிலளிநீக்குபதில் அளிப்போம்.
நீக்குகேள்வி பதில்கள் ரசித்தேன்.
பதிலளிநீக்குதீபாவளி இதழை, கவிதைகளைத் தவிர்த்துவிட்டு, புகைப்படங்களை ஓட்டிவிட்டுப் படித்தேன். ரொம்ப effort போட்டிருக்கீங்க. பாராட்டுகள்.
கேஜிவி கட்டுரை பார்த்து, அதிலும் இறப்பதற்கு சில நாட்கள் முன்பு அனுப்பியதைப் பார்த்து, மனதுக்கு வருத்தம் வந்ததென்னவோ நிஜம். கண் மூடிக் கண் திறப்பதற்குள் காலம் எப்படி புரட்டிப் போட்டுவிடுகிறது.
ஆம், உண்மை.
நீக்குசமீபத்தில் என் அம்மா மறைந்தபிறகு, குரோம்பேட் மின் மயானம் சென்றிருந்தேன். அம்மா கார்யங்கள் முடிந்தபிறகு (எரியூட்டி, சாம்பல்/எலும்புகள் பெற்றுக்கொண்டு, அங்கேயே சில கிரியைகள் செய்து), ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. அதில் கோவிட் இறப்பு. உடனே அங்கு வேலை பார்ப்பவர்கள் ஸ்பேஸ் சூட் மாதிரி போட்டுக்கொண்டு, அவரை மின் மயானத்தில் கிடத்தி, உறவினர் யாவரும் அருகில் போக முடியாது, 30 அடிகள் தொலைவில் விளக்கினால் ஆரத்தி மாதிரி காட்ட மட்டும் அனுமதிக்கிறார்கள், ஒரு சிலர் மட்டும்தான் வர முடியும். இதனை தூரத்தில் இருந்து பார்த்தேன். மனதை ரொம்பவே பாதித்தது. தன்னுடன் பயணித்தவருக்கு சரியான முறையில் விடை கொடுக்கக்கூட இந்த வைரஸ் பிரச்சனை அனுமதிப்பதில்லையே என வருத்தமும் வந்தது. கோவிட், நம் எல்லோர் வாழ்க்கையிலும், வாழ்வு முறையிலும் கடந்த 8 மாதங்களாக irrevocable பாதிப்புகளை ஏற்படுத்திவருவது என்னவோ நிஜம். (தாது வருஷ பஞ்சம் பற்றி நமக்கு எந்தவித அனுபவமும் இல்லை என்பதுபோல, அடுத்த ஜெனெரேஷனுக்கு கோவிட் பிரச்சனையால் கோடிக்கணக்கானவர் பாதிக்கப்பட்ட விதம் கூட தெரியாது என்பதுதான் சோகம்)
நீக்குசுடும் உண்மைகள்.
நீக்கு//சமீபத்தில் என் அம்மா மறைந்தபிறகு//
நீக்குநெல்லைத் தமிழன், உங்கள் அம்மா மறைந்த செய்தியே எனக்கு தெரியவில்லை, மன்னிக்கவும்.
உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்களா?
அவர்களுக்கு எங்கள் அஞ்சலிகள்.
வலைத்தளம் சரியாக வரமுடியவில்லை அதனால் செய்தி தெரியவில்லை.
அம்மா என்றும் நினைவுகளில் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். உங்கள் எல்லோருக்கும் ஆசிகளை வழங்குவார்கள்.
//கொடி காயை பாரமாக நினைக்கத் தொடங்கி விட்டதா? இவ்வளவு சுயநலமாகி விட்டோமா?// - பா.வெ. மேடம்..... முன் ஏர் எந்த வழி, பின் ஏர் அதே வழி.
பதிலளிநீக்குஉங்க ஜெனெரேஷன்ல நீங்க மாறினதைப் பார்த்து அடுத்த ஜெனெரேஷன் இன்னும் மாறுகிறது.
குழந்தை பெற்றுக்கொள்வதை நிறுத்தாதது இரண்டு ஜெனெரேஷன்களுக்கு முன்பு. அதற்குப் பிறகு எல்லோரும் ஏதோ வெற்றுக் காரணங்கள் சொல்லி சுயநலவாதிகளாக ஆகிவிட்டனர் என்றும் சொல்லலாம். இரண்டு ஜெனெரேஷனுக்கு முன்பு 10 குழந்தைகள்னா, அடுத்த ஜெனெரேஷன்ல 3 உடன் நிறுத்திக்கிட்டாங்க, அப்புறம் 2, இப்போ 1. சொத்து இல்லைனா அடுத்த ஜெனெரேஷன்ல அதைக்கூட பெத்துக்க மாட்டாங்க. அதுனால சுயநலம் என்றால் கடந்த 2-3 ஜெனெரேஷனையும் சொல்லணும்.
வாங்க பா வெ மேடம். நீங்க சொல்லுங்க.
நீக்கு//உங்க ஜெனெரேஷன்ல நீங்க மாறினதைப் பார்த்து அடுத்த ஜெனெரேஷன் இன்னும் மாறுகிறது.// இதெல்லாம் ரொம்ப ஓவர். நம்ப ஜெனரேஷன் என்று சொல்லாமல் அதென்ன உங்க ஜெனரேஷன்? நீங்கள் மட்டும் பத்து குழந்தைகளா பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள்? ஆனால் நீங்கள் சொல்லியிருக்கும் கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான்.
நீக்கு//பாகிஸ்தான் ஆதரவாளரான, இந்திய எதிர்ப்பாளரான கமலா ஹாரிஸ்// - நமக்கு வாழ்க்கையில் எதையோ காரணமாக வைத்து உற்சாகத்தை வரவழைத்துக்கொள்ள வேண்டியிருக்கு. அனுஷ்கா படம் வெற்றி என்று கொண்டாடுவதைப் போல, கோஹ்லி இத்தனை செஞ்சுரி போட்டான், பீகாரில் 4வது முறையும் நிதிஷ் முதலமைச்சராக ஆயிட்டாரே என்பதைப் போல. அவ்ளோதான். அதற்கு மேல் இதில் அர்த்தமே இல்லை.
பதிலளிநீக்குஹா ஹா ! நிதர்சனமான உண்மை.
நீக்கு//அந்தப்பெண் என்னவானார்?// - அதைப்பற்றி சுந்தரமூர்த்தி நாயனாரே கவலைப்பட்ட மாதிரி நான் படிக்கலை. ஹாஹா
பதிலளிநீக்குஅதை நாம சொன்னா - அவங்க சண்டைக்கு வருவாங்க ---
நீக்குநான் பொதுவா அடுத்தவங்க வாழ்க்கை, அவங்க விட்டுவிட்ட மனைவி இவர்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. கவலைப்பட நமக்கே எத்தனையோ விஷங்கள் இருக்கே. என்ன சொல்றீங்க பா.வெ மேடம் (ஹாஹா..எல்லாம் வம்புதான்)
நீக்குபொறுத்தது போதும் பொ எ - பா வெ ---
நீக்குநிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் நின்று போவது சகஜமாகிக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் கூட, திருமணம் நின்று போவது மனதிற்கு துயரத்தை தராமல் இல்லை. திருமணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையின் மிகப் பெரிய விஷயமாக கருதப்பட்ட அந்த காலத்தில் திருமண மேடை வரை வந்து நடக்காமல் போகிறது என்றால் அது அந்தப் பெண்ணிற்கு எத்தனை பாதிப்பை உண்டு பண்ணியிருக்கும்? அதன் பிறகு அவள் என்னவானாள்? இது ஒரு சிறுகதைக்குரிய விஷயமாக இருக்கிறதே? என்று தோன்றியதால் ஏற்பட்ட வினா. கீதா அக்காவோ, துரை செல்வராஜூ சாரோ இதற்கு பதில் தருவார்கள் என்று எதிர்பார்த்தேன்.
நீக்கு//அது இயற்றப்பட்ட மொழியில் மேன்மை பெற்று விளங்கும். பெயர்ப்பில் நீர்த்துப் போகும்// - சரியான, ரசித்த பதில். இதை இன்னும் புரிஞ்சுக்கணும்னா, டப் பண்ணி வெளிவரும் படங்கள் பெரும்பாலும் ரசிக்கப்படுவதில்லை. காரணம் அதில் நேட்டிவிட்டி இருக்காது.
பதிலளிநீக்கு100 % சரி.
நீக்கு//சரித்திரக்கதை என்றால் கல்கிதான்.// - இது கொஞ்சம் biased மாதிரித் தெரியுது. ரியாலிட்டி வேறாக இருந்தாலும் சுவையாக எழுதியிருந்தார் கல்கி. அதில் சந்தேகமே இல்லை. இருந்தாலும் நிறைய சரித்திரக்கதை ஆசிரியர்களும் இருக்கிறார்கள், அவர்களது உழைப்பு பாராட்டப்பட வேண்டியது. நான் எபிக்கு ஒரு சிறுகதை எழுதலாம் (சரித்திரம் சம்பந்தப்பட்டது) என உட்கார்ந்தேன். பிறகுதான் தெரிந்தது, அதற்கு factsலாம் சரியாக இருக்கும்படி எழுதணும், சும்மா விமலாதித்தன், கமலாதித்தன்னு கதை விட்டுவிட முடியாது என்று.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வதும் உண்மை. பதில் சொன்ன ஆசிரியர் அவருடைய எண்ணத்தைச் சொல்லியிருக்கிறார். அதுதான் சரி என்பது என் எண்ணமும் கூட.
நீக்குஅடுத்த பொங்கல், தீபாவளிச் சிறப்பிதழ்களுக்கு, எபி.வார இடுகைகளைப் போடாதீங்க. அதுக்கு நான் ஐடியாக்கள் அனுப்பறேன். (ராயல்டி கேட்கமாட்டேன் ஹாஹா)
பதிலளிநீக்குவரவேற்கிறோம்.
நீக்குநீங்கள் சொல்வதும் உண்மை. ஆசிரியர் சொன்னதும் உண்மை. நான் சொல்வதும் உண்மை. பின்னாடி வருகிறாரே அவர் சொல்லப்போவதும் உண்மை. எதற்கு வம்பு?
பதிலளிநீக்குஸத்யமேவ ஜெயதே. ஸத்யம் ’ஏவ’ ஜெயதே - உண்மை’யே’ ஜெயிக்கும்!
இன்னும் ’மின்னிலா ஸ்பெஷல்’ பார்க்கவில்லை. மெல்ல வருகிறேன். அதற்குள் ’கருத்து வெள்ளம்’ இங்கு பிரவாகமெடுத்து ஓடிக்கொண்டிருக்கும்!
ஹா ஹா நீங்க சொல்வதும் உண்மைதான்!
நீக்குதீபாவளி மலர் தொகுப்பில் திரவியத்தைக் காணவில்லை...
பதிலளிநீக்கு???
நீக்குஆச்சர்யம் தான்!..
நீக்குபரவாயில்லை..
பிறகு பார்த்துக் கொள்ளலாம்...
திரவியம் என்றாலே தேடுதலும் அதிகம்..
சார். எதையாவது நான் தவறுதலாக இணைக்க மறந்திருந்தால் என்னை மன்னிக்கவும்.
நீக்குஆம். மிகப் பெரிய தவறு செய்துள்ளேன். நவம்பர் ஒன்றாம் தேதி நீங்க அனுப்பியிருந்த கதையை சேர்க்க மறந்துவிட்டேன். என்னை மன்னிக்கவும். எப்படி அது விட்டுப் போயிற்று என்று தெரியவில்லை. சகோதரர்கள் உடல்நிலை குறித்து கவலையில் இருந்த கால கட்டத்தில் கொஞ்சம் கவனக் குறைவு - இந்தக் கதை படங்கள் சேர்ப்பதற்காக தனியாக ஒரு கோப்பில் சேர்த்து வைத்து பிறகு மறந்துவிட்டேன். ஆயிரம் முறை மன்னிப்பு கேட்கிறேன்.
நீக்குஇதற்காகத் தான் நான் காலையில் இருந்து வாயை திறக்காதிருந்தேன்...
நீக்குஉங்கள் வார்த்தைகளைக் கண்டு கண்களில் நீர் வருகிறது.. இதெல்லாம் சாதாரணம்... நமக்குள் பெரிய வார்த்தைகள் எதுவும் வேண்டாம்..
நாமெல்லாம் ஒரே குடும்பம்...
இன்றில்லாவிட்டால் நாளை..
நான் அதைச் சொன்னது தவறு..
எது எது எந்த எந்த நேரத்திற்கு என்பது தாங்கள் அறியாததா!...
இத்தனை வேதனையிலும் சிறப்பாக மலரை வெளியிட்டதே மாண்பு...
இந்த சிறு குறையை பெரிதுபடுத்த வேண்டாம்...
எனது பிழையைப் பொறுத்தருள்க...
நன்றி சார்.
நீக்குகேள்வி பதில்கள் ரசனை.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குதனிப்பட்ட, குடும்பசோகச் சூழலுக்கிடையே, மனம் தளராது, மலரைத் தயாரித்து, நேர கிரமப்படி வெளியிட்டிருக்கிறீர்கள் என்பது ஆச்சரியம் தருகிறது. உழைப்பு, முனைப்புக்கு கேஜிஜி-சார்/குழுவினருக்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்குமின்னிலா மேன்மேலும் வளர்ந்து செழிக்கட்டும்.
நன்றி சார்.
நீக்கு1, உறங்கும் புலி உறங்காப்புலி இரண்டுக்கும் என்ன வித்தியாசம் ?
இதில் நாம் எதுவாயிருப்பது நல்லது ?
2, ஸ்பெஷல் மிக்ஸருக்கும் சாதா மிக்ஸருக்கும் என்ன வித்யாசம் ?
நாம் சாப்பிடும்போது //மிக்ஸர் சாப்பிடறாங்க // என்று தானே சொல்ல போறோம் :)))
3,அதிகம் கோபப்படுவது ஆண்களா ? அல்லது பெண்களா ?
4, எதை எங்கே சொல்கிறோம் என்பது முக்கியமா ? அல்லது எதை எப்போது சொல்கிறோம் என்பது முக்கியமா ??
5, ,போன வருஷம் தாம்பரம் பகுதியில் குடியிருந்த ஒருவர் இந்த வருஷம் அண்ணாநகரில் குடி பெயர்ந்து பிறகு அடுத்த வருஷம் மைலாப்பூர் வீட்டுக்கு இடம்பெயர்வார் .இப்படி இடம் குடிபெயரும்போது இப்போதிருக்கும் இடம் பற்றி உயர்த்தியும் முன்னிருந்த இடங்கள பற்றி வாய்க்குவந்தபடி இழிவாய் பேசுவது முறையா ?
சுவாரஸ்யமான கேள்விகள். நன்றி. பதில் அளிப்போம்.
நீக்குமுதல் கேள்வி... நேற்று தேவர் மகன் படம் பார்த்தாரோ ஏஞ்சலின்? (எங்கிட்ட தூங்கிக்கிட்டிருக்கிற மிருகம் உங்கிட்ட முழிச்சுக்கிட்டிருக்கு - உலக்கை வாய்ஸ்)
நீக்கு5.வது கேள்வி - கீசா மேடம் தான் இருந்த இடங்கள், வீடுகள் எல்லாத்தையும் 'எங்க வீட்டுல' என்றுதான் எழுதுவார். அடுத்தவர் வாங்கி அது அவங்க இடம் ஆனாலும் இப்போதும் அவருக்கு 'அம்பத்தூர்ல எங்க வீட்டுல', 'ராஜஸ்தான்ல எங்க குடியிருப்புல' என்றுதான் எழுதுவார். இன்னொருவர், நைஜீரியாவிலிருந்து நியூசிலாந்து வரைக்கும் உள்ள ஊரை, தன்னோட ஊர்னுதான் எழுதுவார். நீங்ககூட படிச்சிருப்பீங்களே (ஜாஃப்னால என்னோட பாட்டி, நாரோயில்ல நாங்க , திருநெவேலில, எங்க திருவனந்தபுரத்துல, எங்க பெங்களூர்ல... ஹாஹா)
அஆவ்வ்வ்வ்வ் :) ஹாஹ்ஹா கீதாக்காவை வம்பிழுக்கலைன்னா உங்களுக்கு தூக்கம் வராதுன்னு தெரியுமே :) கீதாக்காவும் சரி கீதாவும் சரி எப்பவும் அவங்க இருந் வாழ்ந்த இடங்களை பத்தி அழகான பிடிச்ச இடங்கள்னுதான் சொல்வாங்க ,,இது கேள்வி என்னுது நல்லா யோசிச்சிங்கன்னா நானா யாரை சொல்றேன்னு கண்டுபிடிச்சிடுவீங்க :)))))))))
நீக்குதேவர்மகனா :))) ஹ்ஹஹ்ஹா இல்லை படமெல்லாம் பார்க்க டைமில்லை . என்னோட டேப்லட்டில் 5 வருஷமுன்னே செஸ்டர் zoo போனப்போ புலி ஒன்னு தூங்கற படமெடுத்தேன் அதை மீண்டும் பார்த்தப்போ பல கேள்வி தோணுச்சு அதில் ஒண்ணுதான் அது ..
நீக்குமின் நிலா தீபாவளிச் சிறப்பிதழ் அமோகமாக வந்திருக்கிறது. மாலாமாதவன் வழக்கம்போல் கலக்கி இருக்கார். 3 கவிதைகளும் அருமை. கே.ஜி.விஸ்வேஸ்வரன் ஊட்டி பற்றி எழுதியிருப்பதைப் படித்ததும் மனம் கலங்கி விட்டது! :( ஊட்டி சேரிங் க்ராஸோடு எங்களுக்கும் அனுபவங்கள் உண்டு.ரஞ்சனியின் கதையும் அருமை. மருமகள் திடீர்னு கோவித்துக் கொண்டதன் காரணம் உண்மையில் ஆச்சரியமாய்த் தான் இருந்தது. இதுக்கெல்லாம் கோவிப்பாங்களானு! வல்லியின் படங்கள் பகிர்வும் போனவார எங்கள் ப்ளாக் பதிவுகளும் அதற்கென வந்த ஒரு சில விமரிசனங்களும் முகநூலிலும் எங்கள் ப்ளாகிலும் நீங்கள் கேட்ட கேள்விகளும் வந்த பதில்களும் எல்லாமும் மீண்டும் படித்து ரசித்தேன். நன்றி, வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஐயோ ஏஞ்சல்! ஆயுசு நூறு உங்களுக்கு! நேற்றுதான் நினைத்துக் கொண்டேன், ஏஞ்சல் என்று ஒரு பெண் கேள்விக் கணைகளை தொடுப்பாரே,, கொஞ்ச நாட்களாக ஆளையே காணவில்லையே? 'காணவில்லை, கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஒரு கமர்கட் நெல்லைத் தமிழன் வாங்கித்தருவார்' என்று அறிவிப்புத் தரலாமா என்று யோசித்தேன். வந்து விட்டீர்கள். ஆனால் கேள்விகள் ஸோ ஸோ தான்.
பதிலளிநீக்குஹ்ஹாஹ்ஹா :) பானுக்கா நானா நினைச்ச எனக்கு தோணின கேள்வியெல்லாம் தற்சமயம்கேட்க முடியாது ..ஏகப்பட்டடவுட்ஸ் :) அவவளவும் வில்லங்கமான கேள்விகளா தோணுது உதிக்குது அதனால் கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு இதை மட்டும் கேட்டேன் :)
நீக்கு// 'காணவில்லை, கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஒரு கமர்கட் நெல்லைத் தமிழன் வாங்கித்தருவார்'// கடைக் கமர்க்கட்டை எடுத்து ஃபாரீன் ஏஞ்சலுக்கு அனுப்புவது என்பது இதுதானா!
நீக்குஹாஹாஹா அதானே நேட்டிவ் ஸ்பெஷலில் தீபாவளி பட்ஷனம் அனுப்ப சொல்லுங்க :)
நீக்குன்னதான் வெளிநாட்டில் சாக்லேட்டா குமிஞ்சிருந்தாலும் நம்மூர் அதிரசம் போல் ஒரு அதிசயம் வருமா ???செப்டம்பர் மாசம் நேட்டிவ் ஸ்பெஷலில் ஒரு குட்டி பாக்கெட் கருப்பட்டி மைசூர் பா நாரோல் நேந்திரம் சிப்ஸ் திருநெல்வேலி அல்வா ,,பால்கோவா கபசுர மிக்ஸ் முருங்கைஇலைப்பொடி ரசமிக்ஸ் இவ்ளோ வாங்கினேன் 50 பவுண்ட்ஸ் வந்துச்சி !!!!
நீக்கு//கடைக் கமர்க்கட்டை எடுத்து ஃபாரீன் ஏஞ்சலுக்கு அனுப்புவது என்பது இதுதானா!// - என்ன இப்படிச் சொல்லிட்டீங்க கேஜிஜி சார்... தம்பி என்ற உரிமையில் பானுமதி வெங்கடேச்வரன் அக்கா சொல்றாங்க.
நீக்குகமர்கட் சாப்பிட்ட பிறகுதான் என் பல் கெட்டுப்போச்சு. (அப்போ எனக்குத் தெரியாது, அதைச் சாப்பிட்ட பிறகு பல் துலக்கணும் என்று. அந்த பாகுதான் என் பல்லை முதல் முதலா கெடுத்தது).
ஒருத்தர் நல்லா ஸ்வீட், காரம் பண்ணத் தெரியும் என்பதை இரண்டே விஷயத்தில் கண்டுபிடிக்கலாம். உப்புச் சீடை வெடிக்காமல் பண்ணத் தெரியணும். நல்லா அதிரசம் பண்ணத் தெரியணும். இது இரண்டும்தான் சொதப்பும். (அதிசயமா மனோகரம் பண்ணும்போது நான் பெரிய குழலை உபயோகித்தேன். அது வெடித்தது)
அப்படியா !!
நீக்குமின் நிலா தீபாவளி சிறப்பிதழ் ஒரு க்ளான்ஸ் பார்த்தேன். படிக்கவில்லை. நிறைய மெனக்கெட்டிருக்கிறீர்கள். சொந்த சோகத்தை புறம் தள்ளி விட்டு தீபாவளி சிறப்பிதழை வெளிக் கொண்டு வந்ததற்கு மனமார்ந்த பாராட்டுகள். காலம்சென்ற உங்கள் சகோதரரின் பெயரை பார்த்ததும் மனம் கலங்கியது.
பதிலளிநீக்குவித்தியாசமான சிறப்பிதழாக வந்திருக்கிறது. நான் இன்னும் முழுமையாக படிக்கவில்லை. மாலா மாதவன், ரஞ்சனி நாராயணன் துரை செல்வராஜூ சார், ஜீ.வி. சார் போன்ற தேர்ந்த எழுதாளர்களின் படைப்புகளை நிதானமாகத்தானே படிக்க வேண்டும். படித்து விட்டு வருகிறேன்.
நன்றி மேடம்.
நீக்கு90% சதவிகிதம் வெற்றி என்றால் பரிசோதனைக்காக இந்த ஊசி செலுத்தப்பட்ட பத்து பேரில் ஒன்பது பேருக்கு இந்த தடுப்பூசி பலன் தந்திருக்கிறது என்று பொருள் என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன? சாதாரணமாக இப்படிப்பட்ட தடுப்பூசிகள் 70% வெற்றி அளித்தால் கூட போதும் என்றுதான் முடிவு செய்வார்களாம்.
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி.
நீக்குஎன்னவொரு அருமையான பாடல்... மீண்டும் ரசித்தேன்...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குமின்னிலா மிகவும் அருமை.மலரைத்தான் சொல்லுகிறேன்.பாராட்டுகள் அன்புடன்
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு//சுந்தரருக்கு சாபம் போலிருக்கு!// நிஜமாகவே சுந்தரருக்கு இது சாபம்தான். அந்தக் கதை தெரியாத உங்களுக்கு? கைலாசத்தில் சிவ பெருமானின் தொண்டரான ஆலால சுந்தரர் சிவ பெருமானின் பூஜைக்காக பூ கொண்டு வரும் பொழுது பார்வதியின் இரண்டு சேடிப் பெண்கள் விளையாடிக் கொண்டிருப்பார்கள் . ஆலால சுந்தரரின் கவனம் அந்தப் பெண்களின் மேல் சென்று விடும். உயர்ந்த இடத்தில் இருந்த பொழுதும், பூஜைக்கு செல்லும் நேரத்திலும் பெண்களின் பால் அவர் கவனம் சென்றதால் அவர் பூலோகத்தில் இருந்து அந்த இரு பெண்களையும் மணந்து கொண்டு வாழ்ந்து விட்டு வர வேண்டும் என்ரூ சிவ பெருமான் அவரை பூமிக்கு அனுப்பி வைத்ததாக புராணம். அந்த இரு பெண்களைத் தாண்டி மூன்றாவதாக ஒரு பெண்ணை அவர் திருமணம் செய்து கொள்ள சென்ற பொழுதுதான் சிவ பெருமான் அவரை தடுத்தாக்கொண்டார்.
பதிலளிநீக்கு// அந்த இரு பெண்களைத் தாண்டி மூன்றாவதாக ஒரு பெண்ணை அவர்
நீக்கு(சுந்தரர்) திருமணம் செய்து சென்ற பொழுது தான்...//
சுந்தரர் தடுத்தாட்கொள்ளப்பபட்டது முதல் திருமணத்தில் தான்..
இது பெற்றோர் பெரியோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்.. மணமகள் பெயர் சுகுணவதி அல்லது ஞானப் பூங்கோதை. திருவெண்ணெய் நல்லூரை அடுத்துள்ள புத்தூர் சடங்கவி சிவாச்சாரியார் என்பவரது மகள்..
திருமணம் நின்றபிறகு இவர் இறை நினைவில் ஒன்றி சிவகதி அடைந்தார் என்பர் ...
திருக்கயிலையில் அம்பிகையின் பரிவாரப் பெண்கள் - கமலினி, அநிந்திதை...
இவர்களைக் கால் நொடிப் பொழுது கண்டதற்காகவே பூமியில் அவர்களோடு வாழ்ந்து மகிழ்வதற்காகப் பிறந்தார் சுந்தரர்.. இத்தனைக்கும் ஈசனின் அணுக்கத் தொண்டர்..
கமலினி ஆரூரில் பரவை நாச்சியாராகவும் அநிந்திதை திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாராகவும் அவதரித்தனர்..
அனைத்தும் திருவருளின் நாட்டப்படியே நடந்தது...
உலகியலில் ஆழ்ந்து விடாதபடி தடுத்தாட் கொள்ள வேண்டும் என்பது சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளின் கோரிக்கை..
இதில் பாவ புண்ணியம் கணக்கிட நமக்கு இடமில்லை..
கால் நொடி உற்று நோக்கியதற்காகவும்
திருவொற்றியூரில் வாக்கு மாறியதற்காகவும் சுந்தரரின் பார்வை பறி போயிற்று...
கயிலாய வாசியான அவருக்கே அந்தத் துன்பம் என்றால் பூலோக வாசிகளுக்கு என்னவெல்லாம் காத்திருக்கின்றனவோ!..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
/// அந்த இரு பெண்களைத் தாண்டி மூன்றாவதாக ஒரு பெண்ணை அவர்(சுந்தரர்) திருமணம் செய்து சென்ற பொழுது தான்...// இதில் நான் சொல்லியிருப்பது சுந்தரருக்கு என்று விதிக்கப்பட்டது இரண்டு பெண்கள்தான், அதை மீறி அவர் மூன்றாவதாக ஒரு பெண்ணை மணந்து கொள்ள முற்பட்ட பொழுது என்பதைத்தான். இரண்டு பெண்களை மணந்து கொண்டு மூன்றாவதாக ஒருத்தியை என்றல்ல.
நீக்கு//கயிலாய வாசியான அவருக்கே அந்தத் துன்பம் என்றால் பூலோக வாசிகளுக்கு என்னவெல்லாம் காத்திருக்கின்றனவோ!..// அப்படி இல்லை ஐயா. ஐந்தாம் வகுப்பு தேர்வை விட பத்தாம் வகுப்பு தேர்வு கடினம். அதைவிட கடினம் போஸ்ட் கிராஜுவேஷன். அதை விட கடினம் சி.ஏ. , எம்.பி.ஏ. போன்ற படிப்புகள். அதைப்போலத்தான் ஆன்மீக நிலையிலும் நாம் உயர உயர நமக்கான தகுதிகள் உயர்ந்து கொண்டே செல்லும். அங்கு சிறிய தவறுகளுக்கும் கடுமையான தண்டனைகள் இருக்கும் என்பது என் கருத்து.
நீக்குநல்ல கருத்துப்பாரிமாற்றங்களுக்கு நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஎப்போதும் போல் இன்றைய கேள்வி பதில்கள் அருமை. எழுத்தாளர்கள் பற்றிய கேள்விகளும், பதில்களும் மிக அருமையாக உள்ளது.
மின்நிலா தீபாவளி சிறப்பிதழ் அருமையாக வந்துள்ளது. ஒவ்வொன்றையும் நிதானமாக படிக்கிறேன். உங்கள் அண்ணாவைப்பற்றிய விபரம் அறிந்த அன்றே என் மனதிற்கு வருத்தமாக இருந்தது. அந்த கஸ்டமான மனநிலையிலும் சோர்ந்து விடாமல், நீங்கள் எங்களுக்காக மின்நிலாவை சிறப்பாக தொகுத்து தந்தமைக்கு நன்றிகள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பாராட்டுகளுக்கு நன்றி.
நீக்குஅன்பு துரை செல்வராஜு வின் தீப ஒளித் திருனாள் கவிதை.
பதிலளிநீக்குஅனைத்து தெய்வங்களையும் அழைத்து அருள் பொங்கச் செய்து விட்டார்.
அரங்கன்,அன்னை, முரகன், ராமன் என்று அனைத்துக் காக்கும் தெய்வங்களும் நம்மை என்றும் காத்திருக்கும். நன்றி அன்பு துரை.
MURUGAN.
நீக்குதங்கள் அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றியம்மா...
நீக்குதிரு ஏகாந்தன் ஜி கதை நீண்டது. மெதுவாகப் படிக்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி ஜி.
படிங்க. நன்றி.
நீக்குதிருமதிகள் ரஞ்சனி நாராயணன், மாலா மாதவன் - மின்நிலா புதுமுகங்கள் - தங்கள் படைப்புகளால் மலரில் புதுமணம் தெளித்திருக்கிறார்கள்.
பதிலளிநீக்குஉங்கள் சகோதரரின் ஊட்டி கட்டுரை நன்றாகச் செல்கிறது. அவர் சென்றுவிட்டாரே என்பது மனதில் அழுத்தும் சோகம்.
மின்நிலா தீபாவளி மலர் என்றதும், வழக்கமான இதழ் அமைப்பிலிருந்து விலகி, முழுக்க முழுக்க புதிய படைப்புகள், துணுக்குகள், செய்திகள், வேறு பகுதிகள் எனக் காட்சியளிக்கும் என நினைத்திருந்தேன். போனவார சங்கதிகளும் இதற்குள் நுழைந்துவிட்டனவே..
Chalega ! அடுத்த ஸ்பெஷலில் -அது பொங்கலில் வருமோ, புத்தாண்டில் தலைகாட்டுமோ -வித்தியாசமாக, புதுமையாகச் சிந்தியுங்கள். வடிவமையுங்கள். வாழ்த்துகள். நன்றி மீண்டும்.
செய்வோம். உங்கள் ஆதரவு கொண்டு. நன்றி.
நீக்குஅன்பு சுபஸ்ரீ ஸ்ரீராமின் தங்கக் கதை
பதிலளிநீக்குமிகப் பிரமாதம்.
நல்ல இயற்கையாக அமைந்திருந்தது.
கதையில்லை அனுபவம் என்று தோன்றியது.
துபாய்க் கட்டிடங்கள் , செக்யூரிடி,
லிஃப்ட்ஸ்.
கணவரின் சரியான சிந்தனை எல்லாமே
என்னை மீண்டும் துபாய்க்கே அழைத்துச் சென்று விட்டன.
மனம் நிறை வாழ்த்துகள் சுபஸ்ரீ.
இனிய தீவளை வாழ்த்துகள்.
அவர் சார்பில் எங்கள் நன்றி.
நீக்குரஞ்சனி நாராயணன் அவர்களது சிறுகதை - அனுபவமா, சிறுகதையா என்பதில் குழப்பம். ஆனால் நல்ல ஒரு பாயிண்டை எடுத்துக்கொண்டுள்ளார். என்னைக் கவர்ந்தது, 'என் பையனுக்கு இரண்டு இடங்கள் இருக்கும்' என்பதுதான்.
பதிலளிநீக்குகதையை, கவிதையோ என்று குழம்பும்படி இப்படி பிரசுரித்துள்ளீர்களே.
அவர் அனுப்பிய format அது. மாற்றுவதற்கு என்ன முயற்சி செய்தாலும் அது மாறவில்லை - அல்லது எழுத்துகள் எங்கெங்கோ align ஆகி என்னைப் பார்த்து சவால் விட்டன. அதனால் அவற்றை அப்படியே விட்டுவிட்டேன்
நீக்கு//மனதளவில் உங்களைப் போன்ற உறவினர்களின் பக்கத்தை நல்ல விதமாக தெளிவு கிடைத்தது - Sampathkumar // - இது சொல்ல வருவது என்ன?
பதிலளிநீக்குஅவர் - எனக்கு தூரத்து உறவினர் என்பதை பேஸ்புக் மூலம் தெரிந்துகொண்டோம். அதைத்தான் அங்கே அவர் சொல்லியிருக்கிறார்.
நீக்குகேள்விகளும், பதில்களும், அருமை.
பதிலளிநீக்குபகிர்ந்த பாடல் மிக நன்றாக இருக்கிறது.
தீபாவளி சிறப்பிதழ் மிக அருமை.
கதைகள், கவிதைகள், பயணக்கட்டுரைகள், படக்கவிதைகள் என்று மிக அருமையாக இருக்கிறது.
பங்கு பெற்ற அனைவருடைய படைப்புகளும் மிக நன்றாக இருக்கிறது.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.