வியாழன், 19 நவம்பர், 2020

பரிமாறினால் பசியாறுவேன்...

வெள்ளை சட்டைக்கும்  எனக்கும் எப்போதும் ராசியே இருக்காது.  

சின்ன வயதில் சீருடை வெளிர் நீல கால்சராயும், வெள்ளைச் சட்டையும்.  எல்லோர் கதையும் போல எனக்கும் சமயங்களில் தீபாவளிக்கு சீருடையாய் எடுத்து விட்டால் சௌகர்யமாய் இருக்குமே என்று எடுத்திருக்கிறார்கள்.

வகுப்பில் கிட்டத்தட்ட அனைவரும் வழுவழு என்று டிராயர் போட்டு வருவார்கள் சகாக்கள்.  அவர்கள் போட்டிருக்கும் வெள்ளைச் சட்டை பளீரென இருக்கும்.

என் சீருடை டிராயர் கொரகொரப்பாக, கெட்டியாக இருக்கும்.  சட்டை மழை சேறில் விழுந்த சட்டையை நன்றாய்த் துவைத்தால் எப்படி லேசான ரோஸ் நிறத்தில் இருக்குமோ அப்படி இருக்கும்!  ஏனென்று தெரியாது.  இதைக் குறையாகச் சொல்லவில்லை.  அப்போதிருந்த நிலையையும், எங்கள் விருப்பத்தையும் சொல்கிறேன்.

என்னை விட கிழிசல் டிராயர் போட்டு வந்த மாணவர்கள் எல்லாம் இருந்தார்கள்.  மாலைச் சந்தையில் காய்கறி கடை வைத்திருந்த ஜான் கென்னடி அதில் ஒருவன்.  ஆறு மணிக்குமேல் கடைத்தெரு சென்றால் நல்ல பசுபுசுவென கீரைகள், பச்சையாய் புடலை, அழகான தஞ்சாவூர்க் கத்திரிக்காய் எல்லாம் அவன் கடையில் இருக்கும்.  ஒருமுறை மதிய உணவு இடைவேளையில் அவன் வீடு சென்றபோது இவை எல்லாம் அவன் வீட்டுத் தோட்டத்திலேயே விளைவிப்பது என்று தெரிந்தது.  பூக்காரத் தெருவில் இருந்தது அவன் வீடு!  வகுப்பறையில் அவன் டிராயர் ஓட்டைக்குள் பென்சிலை வைத்து அவனை வெறுப்பேற்றி விளையாடுவார்கள் சில மாணவர்கள்.

தூய வெண்மை நிறத்தினதாய் ஒரு சட்டை ஆங்கே எனக்கு வாங்கித் தரல் வேண்டும் என்று கோரிக்கை வைத்ததும் ஒருமுறை கதரில் வாங்கித் தரப்பட்டது.  அது கொஞ்சம் பளிச்சென இருந்தது.  ஆனால் துவைத்ததும் சல்லடை போலத் தெரியும்!

எங்களுக்கென்று - எனக்கும் என் அண்ணனுக்கும் - தஞ்சையில் ஒரு தையல்காரரைப் பிடித்து வைத்திருந்தார் அப்பா.  ஏழுமலை என்று பெயர்.  வயதானவர்.  தெற்கு வீதியில் கடை வைத்திருந்தார்.  அளவெடுக்கவே தேவை இல்லை.  எங்களை ஒருமுறை நேரில் பார்த்துக் கொள்வார்.  அவ்வளவுதான்.

நீதி படம் பார்த்திருக்கிறீர்களா?  அதில் சந்திரபாபு போட்டுக்கொண்டு வருவார் தெரியுமா?  அது மாதிரி இருக்கும்.   இரண்டு பேர் புகுந்து கொள்ளலாம் அந்த டிராயரில்!


முழங்காலைத் தாண்டாமல் தொடையுடன் ஒட்டியபடி கொஞ்சமாவது இறுக்கமாக டிராயர் தைத்துக் கொள்ள எங்களுக்கு ஆசை.  அப்பா அனுமதிக்கவே இல்லை!  அதே போல அப்போது சில மாணவர்கள் புத்தகங்களை ஒரு அலுமினியம் பெட்டியில் வைத்து ஸ்டைலாக எடுத்து வருவார்கள்.  ஆனால் அதைப் பார்த்து ஆச்சர்யப்படுவோமே தவிர அதற்கு ஆசைப்பட்டதில்லை.

காய்கறிப் பை போல ஒரு யானைக்கலர் பையில்தான் புத்தகங்கள் எடுத்துச் செல்வேன்.  பையில் அழகான ரோஸ் படம் வரைந்து அதில் 'மலர்ந்த முகமே வாழ்க்கையின் இன்பம்' என்று எழுதி இருக்கும்.  அவ்வப்போது டிபன் பாக்ஸ் திறந்துகொண்டு மோர்சாதம் உள்ளே கொட்டி, பையைத் திறந்தாலே ஒருவித வாடை வரும்.  சனி ஞாயிறுகளில் துவைத்து வைத்துக்கொள்ள வேண்டும்!

எஸ் எஸ் எல் சி வந்தபோது தையல்காரரை மாற்றும் சந்தர்ப்பம் வந்தது.  அப்போதைய தீபாவளிக்கு நாகரீக சட்டைத்துணி, பாண்ட் க்ளாத் எடுத்ததும் அப்பாவிடம் கோரிக்கை வைத்து ரயில்வே ஸ்டேஷனைத் தாண்டிச் சென்றால் புதாறு பாலத்துக்கு முன் இருந்த பாரத் டெய்லரிடம் எல்லோரும் போடும்படி தைத்துக் கொண்டோம்.  டெய்லரே பெல்ஸ் அணிந்து, இளவயதினராய், லேசான வளைந்த மீசையுடன் மாடர்னாக இருந்தார்.  

அளவெடுக்கும் மீட்டர் ஸ்ட்ரிப்பை கழுத்தில் மாலையாக எப்போதும் மாட்டியிருந்தார்.  நாங்கள் துணியைக் கொடுத்ததும் எங்களை நிறுத்தி இன்ச் இஞ்ச்சாக அளவெடுத்துக் கொண்டார்.  பெல்ஸ் இவ்வளவு வைத்தால் போதுமா, இன்னும் வைக்கவா, சைட் பாக்கெட்டா என்றெல்லாம் எங்களை அவர் கேட்டுக் கேட்டுக் குறித்துக் கொண்டதே ஏதோ நாங்கள் வேறு உலகத்துக்கு வந்து விட்ட மாதிரி இருந்தது!

சட்டையில் ஒரு பக்கம் மட்டும் பாக்கெட் வைத்துத் தைத்துத் தந்தார்.  காலரைக் கொஞ்சம் நீட்டி அட்டை வைத்தது போல கெட்டியாக ஸ்டைலாக தைத்திருந்தார்.  அதுவரை ஏழுமலை இரண்டு பக்கங்களிலும் பாக்கெட் வைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்!  காலரில் ஒரு விசேஷமும் இருக்காது.

கொஞ்ச நாட்களுக்கு அந்த ஒரு ட்ரெஸ் கொஞ்சம் நாகரீகமாகவும், மற்றவை சந்திரபாபு நீதி ட்ரெஸ்ஸாகவும் இருந்தது.  பிறகு மெல்ல மெல்ல மாறியது.  சீருடையில் வழுவழு வெள்ளை சட்டை பள்ளி இறுதி நாட்கள் வரை போடவே இல்லை!

வெள்ளை சட்டை மீதான ஆர்வம், ஆசை இருந்துகொண்டே இருந்தது.  

வேலைக்குச் சென்ற பிறகு அவ்வப்போது வெள்ளைச் சட்டை வாங்கி கொண்டே இருக்கிறேன்.  அது ஒன்று சலவைக்குப் போன இடத்தில் காணாமல் போய்விடும்.  அல்லது அதில் ஏதாவது கறை பட்டு விடும்.  உபயோகிக்க முடியாமல் போகும்.  இதுநாள் வரையிலும் வாங்கி இரண்டு மூன்று முறைகள் மட்டுமே போடமுடிகிறது வெள்ளைச் சட்டைகளை!

அதே போல கருப்புச்சட்டை.  

கருப்புச்சட்டை போடவும் ஆசை உண்டு.  முன்னால் அம்மா, இப்போது பாஸ் அதற்குத் தடைக்கல்!  ஒரு சட்டை வாங்கி தைத்து வைத்திருக்கிறேன்.  எப்போதாவதுதான் போடமுடிகிறது!  ஓரிருமுறை அதை அணிந்த அன்று ஏதோ ஒரு துக்கச் செய்தி காதில் பட, செண்டிமெண்ட் வேறு தாக்கத் தொடங்கியது.  எனவே அதை எடுத்து அணிய மனதில் ஒரு தயக்கம் நமக்கே வந்து விடும்.  திருமணம் போன்ற விழாக்களுக்கு அதை அணிந்து செல்வதும் உசிதம் கிடையாது.  

ஒருமுறை தலைமை அலுவலக மீட்டிங்கில் என் எதிர்ப்பைக் காட்டவேண்டி கருப்புச் சட்டை அணிந்து சென்றிருந்தேன்.  நான் எதிர்ப்பு காட்டதான் அதை அணிந்திருக்கிறேன் என்று கடைசிவரை எனக்கு மட்டுமே தெரிந்திருந்தது!

=========================================================================================

அக்டோபர் என்று போட்டிருந்தாலும்,  இப்போதல்ல.   கொஞ்சம் பழைய செய்தி!


==================================================================================================

மனிதன் போதும் என்று சொல்லும் ஒரே பொருள் உணவுதான்.  


பசியாய் இருந்தால் சரி...   வெளியில் நண்பர் வீட்டிலோ எங்கோ வயிறு புடைக்கச் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வருகிறீர்கள்.  இந்த விஷயம் தெரியாமல் உங்கள் வீட்டிலும் நிறைய ஐட்டங்கள் செய்து வைத்துக்கொண்டு உங்களுக்காக சாப்பிடாமல் காத்திருக்கிறார்கள்.  இலையை போட்டு உட்கார வைக்கிறார்கள்...   எப்படி இருக்கும்!  ===============================================================

இவ்வளவு நுணுக்கி நுணுக்கி கஷ்டப்பட்டு எழுதி என்ன பிரயோஜனம்?  எனக்கு ஒன்றும் புரியவில்லை!  தமிழ்தான்.  அந்தந்த ஊர்க் கோவில்களில் இருக்கும் இதுபோன்ற கல்வெட்டுகளில் எழுதி இருக்கும் விஷயங்களை இப்போது உள்ளவர்களுக்குப் புரியும் வகையில் எழுதி வைத்தால் எல்லோருக்கும் புரியுமே...
 
 

==================================================================================

பேஸ்புக்கிலிருந்து..

பல வருடங்களுக்குப் பிறகு குலதெய்வம் கோவில் சென்றோம்.  அப்போதே இனி வருடா வருடம் சென்று தரிசித்து வரவேண்டும் என்று முடிவு செய்து கொண்டோம்.  இறைவன் மனதில் என்னவோ...   இந்த வருடம் இதுவரை நகர முடியவில்லை.  சென்றமுறை குலதெய்வம் கோவில் போனபோது அங்கு சுற்று வட்டாரத்திலிருந்த கோவில்களும் சென்று வந்தோம்.  அதில் ஒன்று இது!
=================================================================================================

 

186 கருத்துகள்:

 1. அன்பு ஸ்ரீராம் இனிய காலை வணக்கம்.
  எல்லோர் துன்பங்களும், நோயும் ஒழிந்து நல்ல காலம் சீக்கிரமே
  பிறக்கட்டும். இறை அருள் முன்னிற்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா...   இனிய காலை வணக்கம்.  பிரார்த்தனைகள் பலிக்க பிரார்த்தனைகள்.

   நீக்கு
 2. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா...   காலை வணக்கம்.  பிரார்த்தனைகள் பலிக்கட்டும்.

   நீக்கு
 3. தங்கள் வெள்ளை சட்டை மஹாத்மியம் சுவை.

  நீதி சந்த்ரபாபு...... ஹாஹா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஞாபகமிருக்கா?!  ஹா...  ஹா..  ஹா...  முத்தமிழின் செல்வன் வாழ்க...  முக்குலத்தின் கண்மணி வாழ்க...  

   நீக்கு
  2. நானும் என் தம்பியும் இந்தவகை டிராயரை கிருஷ்ணம்மா மாவுமில் டிராயர் என்று சொல்வோம். நாகை
   கிருஷ்ணம்மா மாவு மில்லில் மாவு அரைப்பவர், அணியும் காக்கி டிராயர் அந்த சைஸ்தான்!

   நீக்கு
  3. நான் கூட மாவுமில்லில் மெஷினிலிருந்து மாவு விழும் இடத்தில் கட்டி இருப்பார்களே..  அந்தத் துணி வகையைக் குறிக்கிறதோ என்று நினைத்தேன்!!!

   நீக்கு
 4. சென்னைப் புலி பாவம். அது போகும்போது காப்பாளர்களையும் அனுப்பி இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட்லீஸ்ட் அந்தப் புலி, 'இந்தி தெரியாது போடா' டீ ஷர்ட் போட்டுகிட்டுப் போயிருக்கணும்!

   நீக்கு
  2. அட்லீஸ்ட் அந்தப் புலி, 'இந்தி தெரியாது போடா' டீ ஷர்ட் போட்டுகிட்டுப் போயிருக்கணும்!// ஹாஹா ஹா

   நீக்கு
 5. கோவில் அழகாக இருக்கிறது. இருட்டில் இருந்தால் தான் நமக்கு வெளிச்சம் கிடைக்கும்.
  அந்த எழுத்துகளைப் படித்துச் சொல்ல்த்தான் நம் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா
  இருக்கிறார்களே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருட்டில் இருபப்வர்களுக்குதான் வெளிச்சத்தின் அருமை தெரிகிறது!

   நீக்கு
 6. ஒருமுறை தலைமை அலுவலக மீட்டிங்கில் என் எதிர்ப்பைக் காட்டவேண்டி கருப்புச் சட்டை அணிந்து சென்றிருந்தேன். நான் எதிர்ப்பு காட்டதான் அதை அணிந்திருக்கிறேன் என்று கடைசிவரை எனக்கு மட்டுமே தெரிந்திருந்தது!////////// Sad pa.

  பதிலளிநீக்கு
 7. பச்சை வாழை இலைப் படம் வெகு ஜோர்.

  என்ன பரிமாறப் போகிறார்களோ.
  பசிக்கும் போது கிடைத்தால் மட்டுமே உணவை ரசிக்க முடியும்.

  பதிலளிநீக்கு
 8. அனைவருக்கும்காலை/மாலை வணக்கம்,நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் தொற்று குறித்த அச்சம் நீங்கி சாதாரணமான வாழ்க்கை வாழப் பிரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு
 9. வெள்ளைச் சட்டைப் புராணம் நன்றாக இருந்தது. அது என்ன கறுப்புச் சட்டை? எங்க வீட்டில் முக்கியமான பண்டிகை நாட்கள்/வெள்ளி/செவ்வாய்க் கிழமைகளில் கறுப்பு அணியக் கூடாது. முதல் முறை கருவுற்றிருக்கும் பெண்களுக்கு "மசக்கைக்கறுப்பு" என்று கறுப்பு நிறத்தில் புடைவை வாங்கிக் கொடுப்பார்கள் பிறந்த வீட்டில். அதே போல் வளைகாப்புக்கும் கறுப்புப் பட்டுப் புடைவை வாங்கிக் கொடுப்பார்கள் பிறந்த வீட்டில் மற்ற நேரங்களில் கறுப்புக்கு நோ! இப்போது தமிழ்நாட்டில் கறுப்பு நிறத்தின் பொருளே மாறி விட்டது.

  பதிலளிநீக்கு
 10. சனிக்கிழமைகளில் கறுப்பு வஸ்திரம் அணியலாம் என்பார்கள். தீபாவளிக்கு எனக்கும் ஒரு முறை கதர்ப்பட்டு வாங்கிக் கொடுத்திருக்கார் அப்பா. அதை அஹிம்சா பட்டு என்பார்கள். அப்போதெல்லாம் அப்பா தீவிர காங்கிரஸ்/காந்தியின் பக்தர்/சீடர். பின்னர் அறுபதுகளின் முடிவில் எல்லாம் மாறிவிட்டது! :)))) தீபாவளிக்கு அண்ணாவுக்கும், தம்பிக்கும் தான் நீங்க சொன்னாப்போல் உடை கிடைக்கும். ஆனால் அப்பாவிடம் மறுத்தெல்லாம் பேச முடியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் அப்பா  துணிக்கடைக்குள் போனதும் சொல்வார்...   "என்ன டிரஸ் வேண்டுமானாலும் எடுத்துக்கோ...  "

   கொஞ்சம் இடைவெளி விட்டு,

   " நூறு ரூபாய்க்குள்..."  (எவ்வளவு என்பது அப்போதைய அளவில் ஏதோ ரூபாய்.  நான் சும்மா உதாரணத்துக்குச் சொல்கிறேன்!)

   என்ன வேண்டுமானாலும் எடுத்துக்கோ என்றதும் வரும் உற்சாகம் அடுத்த வரியில் புஸ்ஸென்று அடங்கி விடும்!

   நீக்கு
 11. சந்திரபாபு காமெடியே அலாதி தான். சர்வசாதாரணமாகப் பேசுவார். ஆனால் சிரிப்புப் பொத்துக்கொண்டு வரும். தங்கவேலு, நாகேஷ்! ம்ம்ம்ம்ம், இவங்க காமெடியை மிஞ்சி நடிக்கவும் வசனம் பேசவும் இனி ஒரு ஆள் பிறந்து தான் வரணும்.

  பதிலளிநீக்கு
 12. புலி மட்டும் இல்லைங்க, குதிரைகள் கூடத்தான். நாங்க கயிலை யாத்திரையின்போது பயணம் செய்த குதிரைகளுக்கு ஹிந்தியும் புரியலை,ஆங்கிலமும் புரியலை. திபெத்திய மொழி தான்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது கூடப்பேச்சு வார்த்தை வைச்சுக்க ரொம்பக்கஷ்டப்பட்டோம். :)))) நான் பயணம் செய்தது என்னைக் கீழேயும் தள்ளி விட்டது. :)))))

  பதிலளிநீக்கு
 13. தலைப்பைப் பார்த்துட்டு ஏதோ திங்கற விஷயம்னு ஆவலோடு ஓடோடி வந்த என்னை ஏமாற்றலாமா வெறும் இலையைப் போட்டு!

  கல்வெட்டுக்களை ஆராய்ச்சி செய்யப் பலர் இருக்காங்க. அவங்க கிட்டே கேட்டுத் தெரிஞ்சுக்க வேண்டியது தான். இரு கோயில்ப் படங்களும் பார்த்தாப்போல் இருக்கு. நினைவுக்குக் கொண்டு வரணும். பார்க்கிறேன். இப்போதைக்கு டாட்டா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெறும் இலைதான் இருக்கு! திங்க என்ன இருக்கு? ஒண்ணும் இல்லை. :))))

   நீக்கு
  2. அதுதான் தலைப்பிலேயே சொல்லி இருக்கிறேனே...   பரிமாறினால்.....  என்று!

   நீக்கு
 14. வணக்கம் சகோதரரே

  தங்கள் மலரும் நினைவுகள் அருமை. எந்த ஒரு விஷயத்தையும் அழகாக எங்கள் மனதில் பதிவாகும் வண்ணம்.., இல்லை, ஏற்கனவே பதிந்து பழசாகி இருப்பதை எடுத்து பளபளப்பாக்கி ரசித்து பார்க்கும் வண்ணம் எழுதும் உங்களது அருமையான எழுத்துக்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

  கறுப்பு, வெள்ளை விஷேட நாள்களில், (அப்போதுதான் அந்த காலத்தில் புது துணிகளே நம் கண்ணில் காட்டபபடும் சூழ்நிலைகள்..) எடுக்க கூடாத ஒரு கலராக போய் விடும் போது அதன் மேல் ஒரு ஈர்ப்பு வருவது உண்மைதான்.

  அந்த காலத்தில், வெள்ளைக்கும். கறுப்புக்கும் ஏதோ ஒரு தடை (வீட்டிலோ, வெளியிலோ) நம்மையறியாமேலே சுற்றி படர்ந்திருந்திருந்ததை நானும் உணர்ந்திருக்கிறேன். "வெள்ளை என்றால், பள்ளிச் சீருடை, கறுப்பு என்றால், துக்கத்திற்கு நெருக்கமானது" என்ற எண்ணத்தில் இந்த இரண்டு வண்ணங்களும் புறக்கணிக்கப்படும். ஒரு வேளை பிற வண்ணங்களும் அன்று நம் எண்ணங்களுக்கு உறுதுணையாக நின்று சந்தோஷித்து இருக்குமோ என்னவோ.. என நானும் நினைத்துக் கொள்வேன்..!

  /ஒருமுறை தலைமை அலுவலக மீட்டிங்கில் என் எதிர்ப்பைக் காட்டவேண்டி கருப்புச் சட்டை அணிந்து சென்றிருந்தேன். நான் எதிர்ப்பு காட்டதான் அதை அணிந்திருக்கிறேன் என்று கடைசிவரை எனக்கு மட்டுமே தெரிந்திருந்தது!/

  ஹா. ஹா. ஹா. இந்த வரிகளை நன்றாக எழுதியிருக்கிறீர்கள். ரசித்தேன். அப்படி அந்த உணர்வோடு நாம் ஒன்றி வளர்ந்து விட்டோம். இன்று பெரிய பெரிய செல்வந்தர்கள் கறுப்புக் கலருக்கு,அதுவும் விழாக்களுக்கென்றே முக்கியத்துவம் தந்து அணிந்து வருவதை பார்த்து ஆச்சரியமடைந்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்கி கமலா அக்கா...   நீங்கள் எப்போதுமே பாராட்டுவதில் கஞ்சத்தனமே செய்வதில்லை!  வெள்ளை அழுக்காகி விடும்.  கருப்பு சகுனம்!
   //இந்த வரிகளை நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.//

   இதற்கு அதிகாரி / அடிமை மனோபாவமும் காரணம்!

   நீக்கு
 15. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...
  என்றென்றும் நலம் வாழ்க...

  பதிலளிநீக்கு
 16. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், கௌ அண்ணா மற்றும் எல்லோருக்கும்.

  சீருடை வெளிர் நீல கால்சராயும், வெள்ளைச் சட்டையும். எல்லோர் கதையும் போல எனக்கும் சமயங்களில் தீபாவளிக்கு சீருடையாய் எடுத்து//

  ஹா ஹா ஹா அதே அதே ஸ்ரீராம் என் சிறு வயதில் நம்ம வீட்டிலும் அதே கதைதான்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா...   வீட்டுக்கு வீடு சீருடை புராணம்!

   நீக்கு
  2. எங்க பள்ளியில் பச்சை நிறம் ஸ்கர்ட், வெள்ளை நிறம் மேல் சட்டை. ஆண்கள் போட்டுக்கும் ஷர்ட் போல்தான் இருக்கும். ஆனால் அதைப் போட்டுக்கொண்டு தெருவில் அப்போல்லாம் வருவதற்கு யோசிப்பாங்க என்பதால் சீருடையைப் பள்ளியிலேயே அவங்க அவங்களுக்குக் கொடுத்திருக்கும் மேஜை ட்ராயரில் வைத்துப் பூட்டிக் கொள்வோம். தினம் காலை சாதாரணப் பாவாடை, சட்டையில் பள்ளிக்குப் போய் அங்கே சீருடையை மாற்றிக் கொள்வோம். பள்ளி வாசலில் உள்ள பெரிய கதைப் பூட்டி விடுவாங்க! ஸ்போர்ட்ஸ் போன்ற சமயங்களில் விளையாடும் பெண்களுக்கு எனப் பைஜாமா தனியாய்க் கொடுப்பார்கள். இப்போது போடும் சல்வாரோ, சூடிதாரோ இல்லை அது! ஆண்கள் போடும் பைஜாமா. வேடிக்கையாக இருக்கும். அதோட சீருடைக்குத் துணி வாங்கி நாம் தைக்க முடியாது. பள்ளியிலேயே அவங்களே கொடுப்பாங்க. அளவு தான் சரியா வராது. எப்படியோ சமாளிச்சுப்போம். பணம் வருஷ ஆரம்பத்திலே கட்டணும்.

   நீக்கு
  3. ஓசிபிஎம் தானே?  என் பாஸும் அதே ஸ்கூல்தான்!

   நீக்கு
  4. அட? சொல்லாமலே கண்டு பிடிச்சுட்டீங்க! பாஸ் ஓசிபிஎம்மா? அட? அப்போ அவங்க எங்கே இருந்தாங்க மதுரையிலே?

   நீக்கு
  5. அவங்க குழந்தையாய் இருந்திருப்பாங்க...   அல்லது பிறந்தே இருந்திருக்க மாட்டாங்க!  ஹிஹிஹி...   என் தங்கையும் ஓசிபிஎம்தான்.  அந்தப் பள்ளியில் என் தங்கைக்கு அட்மிஷன் வாங்கிய கதையை மிகச் சமீபத்தில் ஒரு பதிவில் சொல்லியிருந்தேனே...

   நீக்கு
  6. உங்க தங்கைக்கு அட்மிஷன் வாங்கின பதிவைப் படிச்ச நினைவு இருக்கு. பாஸ் எங்கே இருந்தாங்கனு சொல்றதுக்கு இம்புட்டு வெட்கமா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   நீக்கு
  7. பாஸ் கொஞ்ச நாள் சொக்கிக்குளத்தில் வடமலையான் ஆஸ்பத்திரி அருகிலும், பின்னர் ரேஸ்கோர்ஸ் காலனியிலும் இருந்தார்.

   நீக்கு
 17. இன்றைய பதிவுக்கு கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 18. என் சீருடை டிராயர் கொரகொரப்பாக, கெட்டியாக இருக்கும். சட்டை மழை சேறில் விழுந்த சட்டையை நன்றாய்த் துவைத்தால் எப்படி லேசான ரோஸ் நிறத்தில் இருக்குமோ அப்படி இருக்கும்!//

  டிட்டோ டிட்டோ! ஸ்ரீராம்....வீட்டில் அப்போ பாட்டி ராட்டை வைத்து நூல் நூற்பார்கள் நாங்களூம் நூற்க வேண்டும் அப்படியான நூலை காதியில் (இதற்கென்று கடைகள் அப்போது உண்டு) கொண்டு கொடுத்து எங்கள் சீருடை வாங்குவோம். அதுவும் எங்கள் பாவாடை பச்சைக்கலர் மேல் சட்டை வெள்ளை! ஹா ஹா பாவாடையின் நிறம் வெள்ளைச் சட்டையில் தோய்ந்துவிடும்...இது முதலில் வாங்கிய போது அப்புறம் கவனமாகத் துவைத்தாலும் வியர்வை காரணமாக சாயம் ஏறியதும் உண்டு. பள்ளியில் கேம்ஸ் ஆசிரியரிடம் இதற்காக அதுவும் அசெம்பிளியில் நிற்கறப்ப திட்டு வாங்கியதும் உண்டு. கல் மணலில் முட்டி போட்டதும் உண்டு.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுவாரஸ்யமான கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
  2. அனுபவங்கள் சற்றே வேறுபட்டு, பொதுவாய் ஒன்றாய்...!!

   நன்றி கீதா.

   நீக்கு
  3. என் அம்மா கைராட்டையில் பல வருஷங்கள் நூல் நூற்றிருக்கிறார். அந்தச் சிட்டங்களைக் கொடுத்துத் தான் அப்பா காதியில் தனக்கு வேஷ்டி, துண்டு வாங்கிப்பார். இதெல்லாம் அறுபதுகளின் கடைசி வரை! பின்னர் ராட்டையை விலைக்குக் கொடுத்துவிட்டார். அம்மா ஒரே அழுகை! ஆனால் பின்னாட்களில் அப்பா கதர் வேஷ்டி கட்டவும் இல்லை. :(

   நீக்கு
  4. அடடே...   எல்லார் வீட்டிலும் இருந்திருக்கிறதா இந்த கைராட்டை?

   நீக்கு
  5. அப்போல்லாம் நூல் நூற்பது ஒரு கட்டாயம். நாங்கல்லாம் பள்ளியில் தக்ளியில் நூல் நூற்றிருக்கோம். அதுக்குனு தனி வகுப்பு உண்டு. தக்ளினு கேள்விப்பட்டது உண்டா?

   நீக்கு
  6. தக்ளி கேள்விப்பட்டிருக்கேன்.  ஆனால் என் பள்ளியில் எல்லாம் அது இருந்தது இல்லை.  நான் தஞ்சையில் கான்வென்ட்டிலும், அப்புறம் தூய அந்தோணியார் பள்ளியிலும் படித்தேன்!

   நீக்கு
  7. நான் ஆரம்பப்பள்ளிப் படிப்பு ஐந்து வகுப்பு வரை வடக்காவணி மூலவீதி பொன்னு ஐயங்கார் பள்ளி. அதன் பின்னர் மிஷனரிகளால் நடத்தப்பட்ட பள்ளி தான்,

   நீக்கு
 19. ஆமாம் கிழிந்த பாவாடை, சட்டை போட்டுவந்த பெண்களும் எங்கள் வகுப்பில் இருந்தாங்க.

  எங்கள் வகுப்பில் கொஞ்சம் நல்ல பணக்கார மாணவிகள் இதை எல்லாம் கேலி பேசியதுண்டு என்னையும் சேர்த்துத்தான். ஆனால் ஏனோ தெரியவில்லை முதல் முறை மட்டும் எனக்கு வருத்தம் வந்தது....ஆனால் அதன் பின் மனம் பக்குவப்பட்டுவிட்டது. கல்லூரிக்கே கூட நல்ல ட்ரெஸ் இருந்ததில்லை. கேலி செய்வார்கள். அதை நான் வைராக்கியமாக எடுத்துக் கொண்டு என்னால் கலந்து கொள்ள முடிந்த போட்டிகளில் கலந்து கொண்டு பேச்சுப் போட்டியில் கூட பயம் இருந்தாலும் அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு பரிசுகள் வாங்கியதும் பள்ளியிலும் சரி கல்லூரியிலும் சரி நிறைய நட்புகள் கிடைக்கத் தொடங்கியது. அது எனக்கொரு பாடமாகவும் அமைந்தது. அனுபவங்கள் தான் எத்தனை பாடங்களைக் கற்றுக் கொடுக்கிறது!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பள்ளிக்கூட / கல்லூரி நாட்களில் எல்லாம் சகஜமான அனுபவங்கள்தான். ஆனால் அவை, பின் வரும் நாட்களில், நம்முடைய குழந்தைகளை வழி நடத்த பெரிதும் உதவியாக இருக்கும்.

   நீக்கு
  2. நான் வைராக்கியம் எல்லாம் பார்த்ததில்லை, போட்டியிலும் கலந்து கொண்டதில்லை.  பெரிய அளவு கிண்டலுக்கும் ஆளானதில்லை!

   நீக்கு
  3. நானெல்லாம் கிண்டலுக்கு ஆளாகி இருக்கேன். போட்டிகளிலும் கலந்து கொண்டும் இருக்கேன். ஆனால் வைராக்கியம்னு இருந்ததில்லை. ஏனெனில் உடைகள் விஷயத்தில் எனக்குப் பஞ்சமே இல்லை. அப்போவே நான் கட்டிக்கும் தாவணியைப் பார்த்துப் பள்ளி ஆசிரியைகள் இந்த மாதிரிப் புடைவை கிடைக்குமானு கேட்பார்கள். புடைவையிலிருந்து தான் கிழிச்சு வாங்கினோம் என்பேன். வேறு வகையில் கிண்டல்கள்/கேலிகள் செய்வார்கள். எல்லாவற்றையும் நான் வாங்கின மதிப்பெண்களின் தரவரிசைகளில் மூன்றுக்குள் எப்போதும் இருப்பது மூலம் முறியடித்தேன். மனப்பாடம் செய்தெல்லாம் மதிப்பெண்கள் பெற முடியாது. அக்கவுன்டன்சி, காமர்ஸ், பொருளாதாரம், வர்த்தகத்தைச் சார்ந்த பூகோளம், அதைச் சார்ந்தவணிகம்னு படிப்பு நிறையவே இருக்கும். தமிழில் இரண்டாம் பாடம் இல்லை. அதே போல் தமிழ் இலக்கணப்படிப்பும் கிடையாது. கணக்கில் அல்ஜிப்ரா, ஜியோமிதி கிடையாது. இது இன்றளவும் எனக்குக் குறை தான்.

   நீக்கு
  4. டீச்சராயிருந்தாலும் இந்த ஆசைகள் இருந்திருக்கிறியாது பாருங்கள்!

   நீக்கு
  5. டீச்சர்/ஆசிரியைகளும் மனிதர்கள் தானே! நான் சாப்பாடெல்லாம் எடுத்துக் கொண்டு கொடுத்திருக்கேன். தீபாவளி பக்ஷணங்கள் கொடுத்திருக்கேன். அதே போல் எங்க பெண், பையர் ஆசிரியப் பெருமக்களுக்கும் செய்து கொடுத்தது உண்டு.

   நீக்கு
  6. அப்படி இல்லை...   ஒரு மாணவியிடம் இதையெல்லாம் கேட்கவும், பெறவும் தயங்கி இருந்திருக்க வேண்டும் இல்லையா!

   நீக்கு
  7. எங்க பள்ளியில் ஒரு ஆசிரியையிடம் இன்னொரு ஆசிரியை பற்றிக் கூறுகையில் பெயர் சொல்லித் தான் குறிப்பிடுவோம். அதாவது தமிழாசிரியை மிஸ் நல்லையா பற்றி ஆங்கில ஆசிரியை மிஸ் ஜேகபிடம் சொல்லும்போது "மிஸ் நல்லையா சொன்னாங்க!" என்போம். அதே போல் பள்ளியின் கடைசி நாளன்று எல்லா ஆசிரியைகளும் சேர்ந்து எங்களுக்கு விருந்து அளிப்பார்கள்.2 ஸ்வீட், 2 காரம், காஃபி, ஐஸ்க்ரீம்னு இருக்கும். க்ரான்டாக நடக்கும். அன்றைய தினம் பெரும்பாலான மாணவிகளுக்குப் புடைவை அணிந்து வர அனுமதி உண்டு. உங்க பாஸ்/உங்க தங்கை படிச்சப்போ அப்படி இருந்ததானு தெரியலை.

   நீக்கு
  8. எல்லாப் பள்ளிகளிலுமே இந்த நடைமுறைகள் உண்டு. பாஸ் பள்ளிக்கால ஆசிரியர்களை மறந்து விட்டார்!  ஆனால் பாத்திமா கல்லூரியில் அவருக்கு தமிழ் எடுத்தவர் புகழ் பெற்ற திருமதி எம் ஏ சுசீலா அவர்கள்.

   நீக்கு
  9. இருக்கலாம். ஆனால் அந்தக் காலகட்டத்தில் எங்கள் பள்ளியில் மட்டுமே இருந்தது. பின்னர் மற்றப் பள்ளிகளும் ஆரம்பித்திருக்கலாம். அப்போதெல்லாம் தெற்கு வாசல் கான்வென்டை விட்டால் (காதல் படத்து ஹீரோயின் படிப்பதாய்க் காட்டும் பள்ளி) எங்கள் பள்ளியும் சௌராஷ்ட்ரா மகளிர் பள்ளியும் தளவாய் அக்ரஹாரம் முனிசிபல் பள்ளியும் தான் பெண்களுக்கான பள்ளிகளில் பிரபலம். பின்னர் நிறைய வந்திருக்கின்றன. கேப்ரன் ஹால் ஒதுக்குப் புறமாய் இருப்பதாலோ என்னமோ அங்கே தெரிஞ்சவங்க யாரும் படிச்சதாய் நினைவில் இல்லை. ஆனால் எங்க பள்ளியின் நிர்வாகத்துக்குக் கீழே தான் அந்தப் பள்ளி. ஸ்போர்ட்ஸ் சில சமயம் எங்கள் பள்ளிக்கும் சேர்த்து அங்கே நடக்கும். எங்க பள்ளியின் பேருந்து கேப்ரன் ஹால் பள்ளி மாணவிகளையும் ஏற்றிச் செல்லும்.

   நீக்கு
  10. கேப்ரன் ஹாலுக்கு முன்னால் ரயில்வே லைனை ஒட்டி வரும் சாலையில் இருந்த சரஸ்வதி உயர்நிலைப்பள்ளி தான் தூத்துக்குடி விரைவு வண்டியின் வேகம் தாங்காமல் இடிந்து விழுந்தது. அப்போது நான் 9 ஆம் வகுப்புப் படிச்சேனோனு நினைக்கிறேன். எங்க பள்ளி எல்லாம் விடுமுறை விட்டுட்டாங்க அன்னிக்கு.

   நீக்கு
  11. ஹிஹிஹி, யாரேனும் கம்பைத் தூக்கிண்டு வரதுக்குள்ளே ஓடிடறேன். விடு! ஜூட்! :)))))

   நீக்கு
 20. //இவை எல்லாம் அவன் வீட்டுத் தோட்டத்திலேயே விளைவிப்பது என்று தெரிந்தது. //

  ஆஹா என்ன செழுமையான காய்கள் அப்போது!!!

  ஒருமுறை கதரில் வாங்கித் தரப்பட்டது. அது கொஞ்சம் பளிச்சென இருந்தது. ஆனால் துவைத்ததும் சல்லடை போலத் தெரியும்!//

  ஹா ஹா ஹா இதைத்தான் மற்ற கருத்தில் சொல்லியிருப்பது!!!

  அதில் சந்திரபாபு போட்டுக்கொண்டு வருவார் தெரியுமா? அது மாதிரி இருக்கும். இரண்டு பேர் புகுந்து கொள்ளலாம் அந்த டிராயரில்!//

  எங்கள் பாவாடை சட்டையை அடுத்த வருடமும் அதையே வைத்துக் கொள்ள வேண்டும் என்று பெரிதாகத் தைப்பாங்க அடுத்த வருடம் சில சமயம் போட முடியாமல் ஆகும் அப்போ பாவாடையை டக் வைத்திருப்பதைப் பிரித்து தைப்பாங்க கொஞ்சம் நீளம் கூடும். இடுப்பு முந்தைய வருட்ம லூஸா இருந்து பின் போட்டுக் கொண்டு போனது இப்ப பக்கிள் சேரும் படி இருக்கும் ஹா ஹா ஹா.

  சட்டையைப் பிரித்து விடுவாங்க. அதுதான் ஏற்கனவே தையல் எல்லாம் அதற்கும் இடம் வைத்துதானே தைச்சிருப்பாங்க!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. :))) எங்கள் வீட்டில் அண்ணன் சட்டைகள் சில வருடங்களுக்குப் பிறகு தம்பிகளுக்கு வந்து சேரும்!

   நீக்கு
  2. ஆமாம்...   மடித்து வைத்துத் தைத்து, பின்னர் பிரித்து என்று பார்த்திருக்கிறேன்.   எங்களுக்கும் அந்த அனுபவம் உண்டு!


   //ஆஹா என்ன செழுமையான காய்கள் அப்போது!!!//


   தஞ்சாவூர் சாயங்கால மார்க்கெட்டைப் பார்க்கணுமே...

   நீக்கு
  3. தஞ்சாவூர் Evening Market ரொம்பவே பிரசித்தம்...

   அதைப் பார்த்து வுட்டு பல ஊர்களிலும் கடீ போட்டார்கள்... தஞ்சைக்கு நிகராக அமையவில்லை...

   மயிலாடுதுறையில் அந்தப் பேருந்து நிலையத்துக்கும் இந்தப் பேருந்து நிலையத்துக்கும் இடையில் உள்ள வழிநடை காய்கறிக் கடைக்டைகளில் ஒரு முறை வாங்கிப் பாருங்கள்....

   தஞ்சாவூர் கும்பகோணம் இடையே மாலை நேர பாசஞ்சர்களில் காய்கள் விற்பார்கள் பாருங்கள்!... அடடா!...

   நீக்கு
  4. ஆமாம்...  தஞ்சையில் ரயிலடியிலிருந்து ஹெட் போஸ்ட் ஆபீஸ் தாண்டிப் போனால் வரிசை கட்டி கடைகள் இருக்கும்.  பசுபசுவென காய்கறிகளும் கீரைகளும் கண்ணைப்பறிக்கும்.

   நீக்கு
 21. அவ்வப்போது டிபன் பாக்ஸ் திறந்துகொண்டு மோர்சாதம் உள்ளே கொட்டி, பையைத் திறந்தாலே ஒருவித வாடை வரும். //

  ஆஹா அப்படியே எல்லார் பழைய நினைவுகளையும் கிளப்பி விட்டுட்டீங்க ஸ்ரீராம்.

  எங்கள் பள்ளியில் இதனாலேயே நான் மதியம் சாப்பாட்டு நேரத்தில் ஒதுக்கப்பட்டேன். நம் வீட்டில் பழைய சாதம்தான் அதில் மோர் கலந்து அதிலும் கூட்டை விட்டு வைச்சுருவாங்க அலுமினியத் தூக்கில். அது பஸ்ஸில் கூட்டத்தில் சிக்கித் திறந்து கொண்டு. அப்படி ஒதுக்கியவர்கள் என்னுடன் அன்புடன் பழகினாலும் சாப்பாட்டு நேரத்தில் மட்டும் ஒதுக்கிவிடுவாங்க அவங்க பாடி லேங்குவேஜிலேயே காட்டி நான் ஒதுங்கிவிடுவேன். பதிவு எழுதத் தூண்டுது ஆனால் நேரம் இடிக்குது. பார்ப்போம்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பள்ளிக்கூட அனுபவங்கள் என்றுமே நினைவில் இருக்கும்!

   நீக்கு
  2. நாங்கள் இணைந்தே சாப்பிடுவோம்.  அப்போது நடந்த ஒரு கூத்து தனி!

   நீக்கு
  3. நாங்களும் ஓர் மகிழ மரத்தடியில் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு மகிழம்பூக்களைப் பொறுக்கி மாலை தொடுத்துப் பள்ளிப் பையில் போட்டுப்போம். வாசனை மறையவே மறையாது.

   நீக்கு
  4. பள்ளிக்கு எடுத்துச் செல்லும் பைகள் மட்டும் நான் ஐந்தாம் வகுப்பு வரையிலும் மஞ்சள் பைதான். தோளில் சுமந்து கொண்டு போவேன். அதன் பின்னர் அப்பா சென்னை சென்றபோது எங்களுக்காகத் தோல் பைகள் (ரெக்சின் என நினைக்கிறேன்.) அங்கிருந்து வாங்கி வந்தார். அந்தப் பையைப் பல ஆண்டுகள் வைத்திருந்தேன். பத்தாம் வகுப்பிலோ என்னமோ பிடி அறுந்து பின்னர் பை அப்பா வாங்க மாட்டேன் என்றதால் முக்கியமான புத்தகம், நோட்டுப் புத்தகங்கள் மட்டும் வீட்டுக்குக் கையில் எடுத்து வருவேன். அந்தப் பைகளை முதல் முதல் வாங்கியப்போத் தான் சென்னையிலிருந்து ஓர் ஸ்டவ் அடுப்பும் வாங்கி வந்தார் அப்பா. அது வரை விறகு அடுப்பு, குமட்டி என்றே பார்த்திருந்த எங்களுக்கு ஸ்டவ் அடுப்பு வீட்டுக்கு வந்ததும் நாமும் பணக்காரர் ஆகிவிட்டோம் என்னும் ப்ப்பீலிங்க்ஸ் ஆப் இந்தியா! :))))

   நீக்கு
  5. எனக்கு என் அம்மா டிபன் பாக்ஸ் கொடுத்தனுப்பும் காலம், கல்லூரி படிக்கும் சமயம் வாய்த்தது. நாங்கள் கேட்பதை டிபன் பாக்ஸில் தருவார். நானும் எப்போடா லஞ்ச் டயம் வரும் அப்போ சாப்பிடலாம் என்று இருப்பேன். அழகிய ஊத்தாப்பம் மிளகாய்ப்பொடி தடவினது ஒரு 5, அதன் மேல் ஆடைத் தயிர் என்று ஒருநாள் தந்தார். கல்லூரி என் வகுப்புத் தோழன், எனக்குத் தெரியாமல் அதைச் சாப்பிட்டுவிட்டான். எனக்கு லஞ்ச் டயத்தில் வந்ததே கோபம். என்னடா இது, ஒரு டிபன் சாப்பிட்டதற்கு இப்படி கோபப்படுகிறான் என்று அவனை நினைக்க வைத்துவிட்டேன். இப்போது நினைத்துப் பார்த்துச் சிரித்துக்கொள்கிறேன். என் ஹாஸ்டல் அனுபவங்களும் நிறைய சம்பவங்களுடன் கூடியது.

   நீக்கு
  6. சுவாரஸ்யமான தகவல்கள். ரசித்தேன்.

   நீக்கு
  7. தெரியாமல் எடுத்துச் சாப்பிடும் பழக்கம் என் நண்பர்களிடம் இருந்தது இல்லை.  மதியம் சேர்ந்து சாப்பிடுவோம்.  ஆனால் பெரும்பாலும் மோர் சாதம்தான்!

   நீக்கு
 22. கருப்புச்சட்டை போடவும் ஆசை உண்டு. முன்னால் அம்மா, இப்போது பாஸ் அதற்குத் தடைக்கல்! //

  ஹா ஹா ஹா நம்ம வீட்டிலும் அதே! என்றாலும் கறுப்பு கலந்த ட்ரெஸ் இருக்குதான்.

  கீதா

  பதிலளிநீக்கு
 23. நான் எதிர்ப்பு காட்டதான் அதை அணிந்திருக்கிறேன் என்று கடைசிவரை எனக்கு மட்டுமே தெரிந்திருந்தது!//

  ஹா ஹா ஹா ஹா ஹா சிரித்துவிட்டேன் ஸ்ரீராம். அதுக்கும் ராசி வேண்டுமாக்கும்!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன செய்ய..    அவர் அதிகாரி...  இந்த அடிமை என்ன செய்கிறான், நினைக்கிறான் என்று அவர் கவலைப்பட்டிருக்க மாட்டார்!

   நீக்கு
 24. புலி விஷயம் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா..

  மிகவும் சரிதான்....என்னவென்றால் மொழி உச்சரிப்பு ஒலி. மொழி புரியாது ஆனால் ஒலி வைத்துத்தானே அவங்க புரிஞ்சுக்கறாங்க.

  எங்களுக்குள் அல்லது ஃபோனில் நான் யாரிடமும் போலாமா என்று பேசினாலும் உடனே கண்ணழகி ரெடியாகிவிடுவாள்!!! ஹா ஹா ஹா ஹா ஹா

  வரலாமா என்றாலும் ரெடியாகிவிடுவாள். அந்த ஒலி...இப்படிச் சில வார்த்தைகள். அதை மாற்றிப் பேசினால் புரிந்து கொள்ளச் சிரமப்படுவாள்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாய்கள் நாம் எபெசுவதை நடனராகப் புரிந்து கொள்கின்றன.  எனக்கும் அனுபவம் உண்டே...

   நீக்கு
 25. பள்ளிக்காலத்தில் தொளதொள டவுசர் போட்டுக்கொண்டு இவ்வாறு கிண்டல்களைப் பெற்றதுண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்மூர் பக்கம் இல்லையா!  அதுதான்!   நன்றி முனைவர் ஸார்.

   நீக்கு
 26. ஹை இன்று வியாழன் ஸ்ரீ யின் எழுத்து கருத்து எழுத பிறகு வருகிறேன்

  பதிலளிநீக்கு
 27. அப்போதெல்லாம் பெரும்பாலும் பையன்களுக்கு தொள,தொள டிராயர்தான். தலையையும் அடிக்கடி சலூன் போக வேண்டாம் என்று சம்மர் கிராப் அடித்து விட்டு விடுவார்கள். பாவம்!

  பதிலளிநீக்கு
 28. இப்பொழுதெல்லாம் திருமணங்களில் கூட மாலை நேரத்தில் கருப்பு புடவைகளை அணிந்து கொள்கிறார்கள். கருப்பு நிற டிசைனர் புடவைகள் அழகாக இருக்குமே. என் மாமா பேரன் திருமணத்தில் மணமகன்,மணமகள் இருவருமே ரிசப்ஷனில் கருப்பு நிற ஆடையைத்தான் அணிந்திருந்தனர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா?  நான் அதிகம் கவனித்ததில்லை.

   நீக்கு
  2. ஆமாம், நானும் கவனித்திருக்கிறேன். ஆனால் சொல்ல முடியாது!

   நீக்கு
  3. அது சரி...   சொன்னால் வம்புதான் வரும்!

   நீக்கு
 29. தலைவாழை இலை போட்டு!!! ஆசை வந்திடுச்சே...

  கல்வெட்டு உங்கள் பரிந்துரையை டிட்டோ செய்கிறேன் ஸ்ரீராம்..

  கோயில் தூண்கள் கலைநயம் என்ன அழகு!! அதற்கான உங்கள் வரி அருமை! அதே அதே! உள்ளே இருக்கும் ஒன்றை வெளியில் தேடினால்?!! மகிழ்ச்சியையும் சேர்த்துச் சொல்லலாமோ!

  அடுத்த படமும் அழகா எடுத்துருக்கீங்க ஸ்ரீராம். நல்லாருக்கு. அதற்கான உங்கள் கருத்தும் அருமை. முதல்படத்திற்கான கருத்தையும் இதையும் இணைத்தால் நல்லதொரு தத்துவம்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தலை வாழை இலை - விருந்துச் சாப்பாடு சாப்பிடும் ஆசை வந்துவிட்டது.

   எப்போ ஸ்ரீராம் அழைக்கப் போகிறாரோ.

   நீக்கு
  2. நேரம் வரட்டும்...   அழைச்சுடுவோம்!

   நீக்கு
  3. நாங்க தினமும் வாழை இலையில் தான் சாப்பாடு சாப்பிடுகிறோம். அம்பத்தூர் வீட்டில் வாழை மரங்கள் இருந்தாலும் இலைகளை தினம் நறுக்கி எடுத்துக்கத் தடா! 144 தடை உத்தரவு. அதிலும் மாமனார் இருந்தால் தொடவே முடியாது. இங்கே வந்ததில் இருந்து விலைக்கு வாங்கி தினம் தினம் வாழை இலைதான் சாப்பாட்டுக்கு. அதில் சாப்பிட ஆரம்பித்ததில் இருந்து எனக்கு முகத்தில் இருந்த தேமல் போன்ற தழும்பெல்லாம் மறைந்து விட்டன. சென்னையில் தோல் சிகிச்சை நிபுணரிடம் காட்டிச் சில ஆயிரம் ரூபாய்கள் செலவு செய்தும் சரியாகலை. பின்னர் குப்பை மேனி+வேப்பிலையில் கொஞ்சம் குறைந்தது. இப்போப் பரவாயில்லை.

   நீக்கு
  4. அதுனால, கீதா சாம்பசிவம் மேடம் என்ன சொல்றாங்கன்னா, ஸ்ரீராம் அழைக்கும்போது அழைக்கட்டும். ஆனா ஸ்ரீரங்கம் வந்தால் நேர எங்க வீட்டுக்கு மதிய சாப்பாட்டுக்கு வந்துடுங்க. வாழையிலையில் சாப்பாடு போடறேன் என்கிறார். (மெனு அப்புறம் கேட்டுக்கலாம்)

   நீக்கு
  5. ஓகே ஓகே...   நாம் எல்லோரும் ஸ்ரீரங்கமே சென்று விடுவோம்!

   நீக்கு
  6. வாங்க, வாங்க, யாருமே வராமல்/எங்கேயுமே போகாமல் ரொம்பவே நாட்களைச் சிரமத்துடன் கடத்துகிறோம். :(

   நீக்கு
  7. அடடா..   சீக்கிரமே வரணும்னு தோணுது...

   நீக்கு
 30. //வெளியே தேடாதீர்கள், உள்ளே இருக்கிறான் கடவுள்// வாசகம் அருமை!
  நவ திருப்பதி கோவில்களை நினைவூட்டியது கோவில் சிற்பங்கள்.

  பதிலளிநீக்கு
 31. நல்ல பதிவு...

  தள புள டிராயர் கிழிந்த சட்டை இதெல்லாம் அணிந்ததில்லை... அப்படி அணிந்து வரும் மாணவர்களை ஏளனம் செய்ததும் இல்லை..

  ஆனாலும் பதிவு மனதை கனக்கச் செய்கிறது... என்னுடன் இருந்த ஏழை மாணவர்களது நினைவு வந்து விட்டது..

  பதிலளிநீக்கு
 32. பழைய சோறு + தயிர் + வெங்காயம்/ பச்சை மிளகாய்..

  கடையாத வீட்டுத் தயிர்.. அதன் வாசமே தனி... இனிமேலெல்லாம் அந்த நாட்கள் மாதிரி வராது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போவும் கோடை நாட்களில் பழைய சாதத்தில் தயிர் விட்டுப் பிசைந்து (வெங்காயம்)சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் உப்புச் சேர்த்துச் சாப்பிடுவது உண்டு.

   நீக்கு
  2. அம்மா அப்போது வடித்த சாதத்தில் வடித்த கஞ்சியும் மோரும் கலந்து அதில் சின்ன வெங்காயம் நறுக்கிச் சேர்த்து கொடுத்தனுப்புவார்கள்.  சுவை!

   நீக்கு
  3. அது கர்ப்பிணியாய் இருக்கையில் கொடுத்திருக்காங்க. வெந்தயம் ஊற வைச்சுச் சேர்த்துச் சின்ன வெங்காயம், உப்புப் போட்டூ மோர் விட்டுக் கொடுப்பாங்க.

   நீக்கு
  4. எனக்கு மதியம் லன்ச்சுக்கு கொடுத்திருக்காங்க..   அந்த பாணியில் என் மகன்களுக்கு நானும் அப்படி ஓரிருமுறை கட்டிக்கொடுத்திருக்கிறேன்.  ரசிப்பார்கள்.

   நீக்கு
 33. வியாழன் பதிவு மனதை எங்கோ கொண்டு சென்று விட்டது. அப்பாக்களின் டிசைன் ஒரே மாதிரி இருப்பது அதிசயம்தான்.

  நான் வேலைக்குச் சென்றதும் வித வித (ரொம்ப எக்ஸ்பன்சிவ்வா வாங்க மாட்டேன்) துணிகளை வாங்கிக் குவித்திருக்கிறேன். ஷர்ட் 100, டி ஷர்ட் 150. பேன்ட் 50, டை 100, நார்மல் ஷர்ட் 100, டிராயர்கள் 20, என்ன என்னவோ டிரஸ்கள், உள்ளாடைகள் திரும்ப ஒன்றைப் போட்டுக்கொள்ள இரண்டு மாதங்களாவது ஆகும் என்பதுபோல். வீட்ல மனைவி கேட்கும்போது.... இதெல்லாம் பழைய ஏக்கம், தலையிடாதே என்று சொல்லிடுவேன். ஊரிலிருந்து கிளம்பும்போது, பிரிக்காத ஷர்ட்டுகள், டி ஷர்ட்டுகள் என்று ஒரு குவியல். 50%ஐ, அங்கிருந்து கிளம்பும்போது நீட்டா அயர்ன் செய்து சேரிட்டி பாக்சில் போட்டுவிட்டு வந்தேன்.

  இருபது வருடங்கள் சாப்பிடாத்தை, அடுத்த இருபது வருடங்கள் சாப்பிட்டு ஏக்கத்தைப் போக்கிக்கொள்ள முடியுமோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நெல்லை.  ரசித்தது கண்டு மகிழ்ச்சி.  நான் இப்போதும் நான்கைந்து ட்ரெஸ்களே போடுகிறேன்.  அதில் பெரிய ஆசை எல்லாம் கிடையாது.


   //இருபது வருடங்கள் சாப்பிடாத்தை, அடுத்த இருபது வருடங்கள் சாப்பிட்டு ஏக்கத்தைப் போக்கிக்கொள்ள முடியுமோ?//


   அதானே!

   நீக்கு
  2. //நான் வேலைக்குச் சென்றதும் வித வித (ரொம்ப எக்ஸ்பன்சிவ்வா வாங்க மாட்டேன்) துணிகளை வாங்கிக் குவித்திருக்கிறேன்// என் கணவரும் இப்படி செய்ததாக சொல்லியிருக்கிறார். அவர் ரிஸ்ட் வாட்சும் சீக்கோ, காசியோ, டைட்டன் என்று விதம் விதமாக நிறைய வாங்குவார். ஒவ்வொரு முறை விடுமுறைக்கு வரும் பொழுதும் அவைகளை யாரிடமாவது கொடுத்து விட்டு மஸ்கட் சென்றதும் புதிதாக வேறு வாங்கிக் கொள்வார்.

   நீக்கு
  3. நான் துணிகளோ, சாப்பிடும் ஐட்டங்களோ வாங்கியதில்லை.  டேப்ரெக்கார்டர், சிடி பிளேயர் என்று வாங்கித் தள்ளி இருக்கிறேன்.  அப்புறம் சம்பளம் வாங்கியதும் கட்டாயம் இரண்டு பாலகுமாரன் புத்தகங்கள்.

   நீக்கு
 34. என் பையனுக்கு டிரெஸ் வாங்கும்போதும் (6வது வரை) அடுத்த சைஸ்தான் வாங்குவேன். மனைவி எடுத்தாங்கன்னா அல்லது கூட வந்தால் கிட்டத்தட்ட சைஸ் வாங்கவேண்டிவரும். இப்போ பழைய போட்டோக்கள் பார்த்தால் அவைகள் தெரிகிறது. அந்த வயசுக்கு அப்புறம் பசங்க என்னைக் கழட்டி விட்டுட்டாங்க, அவங்க இரசனையில் நான் தலையிடுவது இல்லை. (பெண்தான் உங்க கலர் செலெக்‌ஷன் சரியா வராது என எட்டாம் வகுப்பின்போது தைரியமாகச் சொன்னாள். என்னென்னவோ நினைவுகளுக்கு என்னை இழுத்துச் செல்கிறது.

  கீதா ரங்கன் பின்னூட்டங்களும் படித்தேன். எல்லாம் மிடில் கிளாஸ் பிராமின் மென்டாலிட்டி ஒத்து இருப்பதைக் காண்பிக்கின்றன

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்குத் திருமணமானபின் நான் துணி எடுக்கச் செல்வதே இல்லை.  பாஸ்தான் எல்லாம்!   எது வாங்கினாலும் சரி!

   நீக்கு
  2. எங்க வீட்டில் எனக்குப் புடைவை எடுக்கையில் அவரும், அவருக்குத் துணி எடுக்கையில் நானும் கூடப் போவேன்.வேஷ்டி எடுத்தால் கூடக் கூடப்போயிடுவேன். பான்டெல்லாம் இப்போ எடுப்பதில்லை. பையர் வாங்கி விடுகிறார்.

   நீக்கு
  3. குழந்தைகளுக்கு எப்போவும் நான் தான் துணி எடுப்பேன். ஆனால் இப்போல்லாம் அவங்களுக்கே குழந்தைகள் பெரியவங்களா ஆனப்புறமா நாம் எடுப்பது பிடிக்கிறதில்லை.

   நீக்கு
  4. ஊஹூம்...   நான் இதில் எல்லாம் மாட்டிக்கறதே இல்லை.  என் பஸ் சட்டென செலெக்ட் செய்து விடுவார்.  என் இளைய சகோதரி துணிகள் செலெக்ட் செய்வது தனி பொறுமை வேண்டும்!

   நீக்கு
  5. நாங்களும் அரைமணி/முக்கால் மணியில் மொத்தக் குடும்பத்துக்கும் எடுத்திருக்கோம்.

   நீக்கு
  6. நானும் சீக்கிரம் எடுத்து விடுவேன்.  பாஸைக் காட்டிலும் ஸ்பீடாக்கும் நான்!   முந்தைய கமெண்ட்டில் பாஸ் என்பது பஸ் என்று வந்திருக்கிறது.  மன்னிக்கவும்!!!

   நீக்கு
  7. //பாஸ் என்பது பஸ் என்று வந்திருக்கிறது. // பழகிப் போச்சு! :)))))

   நீக்கு
 35. டிராயருக்குள் இரண்டு பேர் நுழையலாம்.

  இதற்கு தையல்காரர் ஒருமுறை பார்த்தால் போதுமா ? இரண்டு முறை பார்க்க வேண்டாமா ?

  பதிலளிநீக்கு
 36. வெள்ளை சட்டை கதையை படிக்கும்போது சுஜாதாவின் மஞ்சள் சட்டை கதை ஞாபகம் வந்தது. வெவ்வேறு சாதியைச் சேர்ந்த ஒரு காதல் ஜோடிக்கு கடிதப் பரிமாற்றம் செய்து உதவிய சிறு பையன் மஞ்சள் சட்டை அணிந்திருந்தான் என்ற ஒரே சாட்சியத்தை வைத்து ஸ்ரீரங்கத்தில் உள்ள எல்லா மஞ்சள் சட்டை போட்ட பையன்களும் அடி வாங்கும் கதை. 
   ஞாயிறுக்கு போட்டியாக நீங்களும் படம் சொல்லும் க(வி)தை ஆரம்பித்து விட்டீர்கள் போல!
  கடைசியா அது என்ன டாடா? உபுண்டு icon போல? 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்...   சுஜாதா எழுதியது ஸ்ரீரங்கத்து தேவதைகள் தொடரில் வருமோ...   சரியாய் நினைவில்லை.

   படம் அடிக்கடி பகிர்க்கிறேனே ஜெயக்குமார் ஸார்?

   நீக்கு
  2. நன்றி ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்.

   நீக்கு
  3. நன்றி ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்...  வாசித்து விட்டேன்.  இப்போதுதான் முதல்முறை வாசிக்கிறேன்.

   நீக்கு
  4. இப்போத் தான் நானும் அங்கே போய்ப் படிச்சேன். நன்றி.

   நீக்கு
 37. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்!

  பதிலளிநீக்கு
 38. /தூய வெண்மை நிறத்தினதாய் ஒரு சட்டை ஆங்கே எனக்கு வாங்கித் தரல் வேண்டும் என்று கோரிக்கை வைத்ததும் //

  பாரதி கவிதை போல் கோரிக்கை வைத்துவிட்டீர்களே!
  சிறு வயது ஆசைகள் நன்றாக இருக்கிறது.

  எங்கள் வீட்டில் எல்லோரும் அளவாக தைப்பார்கள். ஏனென்றால் பெரியவன் (அண்ணன்) சட்டையை போட்டுக்க இன்னொரு , அவன் சட்டையை போட்டுக் கொள்ள அடுத்த தம்பி இருந்தான், வளருகிற பையன் பத்தாமல் போய் விடும் அப்புறம் அடுத்த வருஷம் வேஸ்ட் என்ற பேச்சு இல்லை.

  பெண் குழந்தைகளுக்கும் அளவான கவுன் அழகாய் எடுப்பார்கள் அப்பா, அடுத்து அடுத்து போட தங்கைகள் இருந்தார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பரவாயில்லை.  இந்த அனுபவங்கள் உங்களுக்கு இல்லை!   ரசித்திருப்பதற்கு நன்றி கோமதி அக்கா.

   நீக்கு
 39. கோவில் கல்வெட்டுகள் - அதில் தவறெதுவும் இல்லை. இருக்கும் இடத்தில் நிறைய எழுதவேண்டியிருக்குமே.

  தஞ்சை கோவிலில்தான் கல்வெட்டுகள் மிக அழகாக எழுதப்பட்டுள்ளன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான்,  நானும் தவறு என்று சொல்லவில்லை!  வழக்கொழிந்து போன எழுத்துகளால் என்ன எழுதி இருக்கிறியாது என்பதை நம்மால் படிக்க முடியவில்லை!   அதுதான்!

   நீக்கு
  2. தஞ்சைக்கோயில் தவிர்த்து வேறே கோயில்களில் பார்த்ததில்லையா? இங்கே ஶ்ரீரங்கம், திருவானைக்காக் கோயில்களில் பார்க்கலாம். கும்பகோணத்தில் பல கோயில்களில் பார்க்கலாம். மதுரையிலும் ஆங்காங்கே சில இடங்களில் இருக்கும்.

   நீக்கு
  3. ஆம்.  கும்பகோணம் கோயில் நகரம்தானே?

   நீக்கு
 40. /இரண்டு பேர் புகுந்து கொள்ளலாம் அந்த டிராயரில்!// - இதுதான் தமிழக கான்ஸ்டபிள்களின் உடையாக இருந்தது. முன்பு எஸ்.பி. லெவலில் மட்டும்தான் பேண்ட் அணியமுடியும். மத்தவங்களுக்கெல்லாம் முரட்டு அயர்ன் செய்த, 3 கால்களை நுழைக்கும்படியாக ஒவ்வொரு கால்பகுதி இருக்கும்படியான டிரெஸ்கள்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்.  கஞ்சி போட்டு மொடமொடவென இருக்கும் அந்த டிராயர்கள்!

   நீக்கு
 41. கோவில் படங்கள், கும்பகோணம் பகுதி கோவில்களை நினைவுபடுத்துகின்றன. சில கோவில்கள்லாம், பிராகாரம் பிராகாரமா நடந்து (மனசுல ஏதோ 1 கிலோமீட்டர் நடந்ததுபோல இருக்கும்) கருவறை முன்பு அடையணும். எப்படித்தால் அவ்வளவு பெரிய கோவில் கட்டினாங்களோ, எப்படிப் பாதுகாத்தாங்களோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை.  கும்பகோணம் பக்கம் எடுத்த புகைப்படங்கள்தான் அவை!

   நீக்கு
 42. அப்பாக்கள் தங்கள் பசங்களுக்கு தீபாவளி நேரத்தில் யூனிஃபார்ம் தைத்துக்கொடுத்த காலம். தொளதொள சட்டை டிராயரைப் போட்டுக்கொண்டு, சட்டையின் மேல்பட்டன் வரை சரியாகப் போட்டுக்கொண்டு, பட்டன் விழுந்துவிட்டிருந்தால் ஊக்கு போட்டுக்கொண்டு, தலையில் எண்ணெய் தடவி அழுந்த வாரிக்கொண்டு, நெற்றியில் ஏதாவது இட்டுக்கொண்டு, பெரும்பாலும் வெறுங்காலோடு, பணிவாகப் பிள்ளைகள் பள்ளி சென்ற காலம். கூடப் படித்த பொடியன்கள், காடு சுற்றி, கிரிக்கெட் விளையாடி திட்டி வாங்கிய பள்ளி மாணவர்கள் என ஒவ்வொருவராக கிராமத்துப் பிள்ளைகளை நினைவுக்குக் கொண்டுவரும் கட்டுரை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்.  அந்தக் காலமே தனி.  தனியார் பள்ளிகள் (அதிகம்) இல்லாத காலம்!  

   நீக்கு
 43. // நான் எதிர்ப்பு காட்டதான் அதை அணிந்திருக்கிறேன் என்று கடைசிவரை எனக்கு மட்டுமே தெரிந்திருந்தது! //

  ஹா... ஹா...

  கல்வெட்டு எழுத்துக்கள் படிப்பதெற்கென்ற ஓர் படிப்பு படிக்க வேண்டும்...

  பதிலளிநீக்கு
 44. பின்னூட்டம் எழுதுகையில் டெல்லியிலிருந்து தம்பியின் ஃபோன். மற்றதை நிறுத்தி அவனில் கிராமத்தை மீட்டேன்.
  கோலிக்குண்டு நிபுணர்களான ராமலிங்கம், மூர்த்தி,தெக்கித்தெரு கனகராஜ், மாணிக்கவாசகம், விக்கெட் கீப்பர் அஜய் கோஷ்(!), வடக்குத் தெருவின் வேகப்பந்துவீச்சாளன் அசோக், லாயருக்கு படித்துக்கொண்டு அதிகம் பேசாதிருந்த ரத்தினம், ஒழுங்காகப் படித்து அரசு வேலைக்குப்போன தபால்காரரின் மகன், தண்ணி அடித்து வம்புதும்புகளில் திளைத்திருந்த இரண்டு காலாடிகள், காங்கிரஸில் சேர்ந்து, அப்பன் சேர்த்த காசைக் கரியாக்கி அரசாள ஆசைப்பட்ட தறுதலைகள் என விஜாரித்தேன் அவனிடம். சிலரைப்பற்றி ஏதோ சொன்னான். பலரைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை.
  கிராமத்துப்பக்கம் போய்விட்டு வந்தால் தேவலை எனத் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா...   அடடா...   ஸூப்பர்...   உடனே போன் வந்ததும், விசாரிக்க முடிந்ததும் பொருத்தம்தான் ஏகாந்தன் ஸார்...

   நீக்கு
  2. சில சமயங்களில் இப்படி நடக்கிறது!

   நீக்கு
 45. என்னிடம் இரண்டு மூன்று உடைகள் கருப்பு கலரில் இருக்கிறது.
  நாளும், கிழமையில் கட்டினால் திட்டு விழும். சின்ன வயதில் எடுத்த போது அம்மாவிடம் இப்போது அக்கம் பக்கம் வீடுகளில் சொல்வார்கள் கருப்பு கட்டக்கூடாது என்று.
  சாரிடம் கருப்பு கலரில் சட்டை இருந்தது ஆசையாக வாங்கினார்கள் அந்த உடை போட்டால் காய்ச்சல் வந்து விடும். அப்புறம் அதை போடுவதே இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், நானும் ஓரிருமுறை கருப்புஸ் அட்டை போட்டபோது அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கிறது.  பலசமயம் நடந்ததில்லை.  ஆனாலும் அதை அணிய முற்பட்டால் வீட்டில் எதிர்ப்புதான்!  என் பாஸ் எடுக்கும் துணிகளில் ஓரத்தில் கொஞ்சூண்டு கருப்பு தென்பட்டால் கூட எடுக்க மாட்டார்!

   நீக்கு
 46. //உங்களுக்காக சாப்பிடாமல் காத்திருக்கிறார்கள். இலையை போட்டு உட்கார வைக்கிறார்கள்... எப்படி இருக்கும்! //


  இவ்வளவு நேரம் காத்து இருந்தவர்களுக்காக ஆசையாக வைக்கும் உணவை சாப்பிடவும் முடியாது, வேண்டாம் என்றால் அவர்கள் மனம் வாடும்!
  தர்மசங்கடம்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்று இந்த நிலையை அனுபவித்தேன்!  காலை பணியில் கஞ்சி சாப்பிட்டேன்.  சற்று நேரத்தில் மாமாவின் சுபத்தில் சாப்பிடவேண்டிய கட்டாயம்.  கஷ்டப்பட்டு போனேன்.

   நீக்கு
 47. கோவில் கதைகளும் , படங்களும் மிக நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 48. கோவில் படங்களும், கவிதைகளும் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 49. படங்கள் பழங்கோவில்களை நாடிச் செல்லத் தூண்டுகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்.  சில சமயம் அப்படி மனதில் ஆர்வம் வந்து விடும்.  பளபளா கோவில்களை என் மனம் நாடுவதில்லை.  பழமை மிளிரும் கோவில்கள் செல்லவே விருப்பம்.

   நீக்கு
 50. பெரும்பாலும் சிறிய வயதில் இழப்புகள் என்று தோன்றாதவை வளர்ந்தபின் இழப்புகளாக தோன்றும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாற்றியும் சொல்லலாம் ஜி எம் பி ஸார்...   "சிறிய வயதில் இதையா பெரிதாக எதையோ இழந்தது போல நினைத்தோம்?" என்றும் தோன்றும்!

   நீக்கு
 51. வெள்ளை,கறுப்பு புராணங்கள் ரசனை.

  நமது பள்ளி சீருடை வெள்ளை கவுன்.அதை வெள்ளையாக வைத்திருக்க பல பாடுகள்தான் நீலம் போட்டு துவைப்போம். இடையிடையே லான்றியில் கொடுத்து எடுப்போம்.

  கறுப்பு உடைகள் அணிந்து கொள்வோம் திருமணத்துக்கு மட்டும் அணியமாட்டோம்.

  பதிலளிநீக்கு
 52. ஸ்ரீராம் ஜி எனது பள்ளிக்கால நினைவுகளை நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டது உங்களின் இந்தப் பதிவு. வளர்ந்ததும் நான் தனியாக ஒரு சிறு வீட்டில் தங்கி சமைத்து சாப்பிட்டுக் கொண்டு படித்த நினைவுகளும் வந்துவிட்டன.

  கோயில் படங்கள் மிக அழகாக இருக்கின்றன. கல்வெட்டு எழுத்துகள் தெளிவாக இருந்தால் நான் வாசித்து அறிய முனைவதுண்டு. சில புரியும் சில புரியாது. இதில் பல எழுத்துகளும் அழிந்து வருவது போல் இருக்கிறது.

  அனைத்தும் ரசித்தேன்

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் நினைவுகளையும் கிளறி விட்டதா?   நன்றி துளஸிஜி..

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!