புதன், 4 நவம்பர், 2020

வெளியூரில், போக வழி தெரியாமல் விழித்ததுண்டா ?

 

கீதா சாம்பசிவம் : 

அட? நான் கேள்விகள் கேட்டிருந்தேனா?

& அப்போ அது நீங்க கேட்கவில்லையா!  இந்த கேள்விக்கும் அப்புறம் அதே போல கமெண்ட் செய்வீர்களோ?  

மின் நிலாவில் வர மாதிரி என்ன கேள்வி கேட்கலாம்? இதையே ஒரு கேள்வியா வைச்சுக்கலாமா?

# வைச்சுக்கலாம். (இதையே பதிலாகவும் வெச்சுக்கலாம்.)

& ஹி ஹி  / இஃகி, இஃகி, இஃகி !

ஒருத்தர் திரும்பத் திரும்பத்தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தால் அவங்களை மன்னிக்க முடியுமா?

# அந்த மாதிரி நபர்களைத் தான் மன்னிக்க வேண்டி வரும். ஒன் டைம் நோ அஃபன்ஸ். 

& முதல் முறை, கவனித்திருக்கமாட்டோம் அல்லது 'என்னவோ - தெரியாமல் செய்துவிட்டார் போலிருக்கு ' என்று நினைப்போம். அடுத்த முறை - ' என்னடா மனிதர் இவர்? தெரிந்து செய்கிறாரா அல்லது தெரியாமல் செய்கிறாரா என்று சிந்திப்போம். மூன்றாவது முறை - 'இதென்ன ஒரே தொந்தரவா இருக்கு இந்த ஆளுடன்! ' என்று நினைப்போம். அதற்குப் பிறகுதான் தொல்லை என்று நினைக்க ஆரம்பிப்போம். தொல்லை தருகிறார் என்று தெரிந்துவிட்டால், ஒன்று அவரை புறந்தள்ளிவிட்டு (ignore) கடந்து செல்லலாம். இல்லையேல், அவர் வழி முறையில் (அவர் மொழியிலேயே) அவருக்குத் தக்க பாடம் கற்பிக்கலாம். ஆனால், தொல்லை தருபவர் முட்டாளாக இருந்தால் - எதிர்வினை எதுவும் செய்யாமல் கடந்து போவதே நமக்கு நிம்மதி.  

கூட்டத்தில் காணாமல் போன அனுபவம் உண்டா?

# இல்லை.

& சென்னை வந்த புதிதில், தம்பியையும் தங்கையையும் அழைத்துக்கொண்டு,  எக்மோர் மியூசியம் சென்றேன். பெரிய திமிங்கில (?) எலும்புக்கூடு உள்ள அறைக்கு கூட்டத்தோடு சென்றோம். முதல் முறை என்பதால் - ஆவலோடு எல்லாவற்றையும் பார்த்தவண்ணம் சுற்றி வந்தோம். இந்த வாசல் - இந்த வழி என்று தோன்றிய வழிகள் எல்லாவற்றிலும் புகுந்து புறப்பட்டதில், திரும்பத் திரும்ப அதே ராட்சத எலும்புக்கூடு அறைக்கே வந்துகொண்டிருந்தோம். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அப்புறம் பெரிய கூட்டம் ஒன்று வந்தபோது, அவர்கள் பின்னாலேயே ஒட்டிக்கொண்டு - ஒரு வழியாக வெளியே வந்தோம். 

இதே அனுபவம், வண்டலூர் உயிரியல் பூங்காவில், மனைவி மற்றும் குழந்தைகளோடு கரடிப்பாதையில் சுற்றிச் சுற்றி வந்தபோதும் ஏற்பட்டது. உயிரியல் பூங்கா காவலர் ஒருவரின் உதவி பெற்று, வழி தெரிந்துகொண்டேன்! 

வெளியூர் போய்ச் செல்ல வேண்டிய இடத்துக்குப் போக வழி தெரியாமல் விழித்ததுண்டா? (இப்போல்லாம் கூகிள் படம்/வழிகாட்டினு இருக்கு. நான் கேட்பது பழைய அனுபவம்) எனக்கு உண்டு. பதிவா எழுதி இருக்கேன்.

# இதுவும் இல்லை. ஆனால் முதல் முறையாக தூரதேசம் சென்றபோது வழி சரிதானா என ஐயுற்றவாறு சென்றதுண்டு.

& வெளியூர் செல்லவேண்டும் என்றால், கூகிள் இல்லாத நாட்களில், பெரும்பாலும் அந்த ஊர் map - அட்லாஸ் - அல்லது சுந்தரம் க்ளேடன் டயரி மூலமாகத் தெரிந்துகொண்டு, உத்தேசமாக போய்ச் சேர்ந்துவிடுவேன். தமிழநாட்டுக்குள் என்றால் மொழிப் பிரச்சனை இல்லை. ஆனால் வட மாநிலங்கள் என்றால், ஆங்கிலம் தெரியாதவர்களிடம் விசாரித்து செல்வது படா பேஜார். கூகிள் உதவி எல்லாம் உள்ள இந்தக் காலத்திலேயே மதுரையில் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி, கூடலழகர் கோவில் பக்கம் எது என்று தெரியாமல் (அதற்குப் பக்கத்தில்தான் நாங்கள் தங்குவதற்கு ஹோட்டல் புக் செய்திருந்தோம்!) மனைவியோடு சேர்ந்து மதுரை ஜங்ஷன் முழுவதும் ஒரு சுற்றுச் சுற்றி வந்தோம்! 
(அந்த அனுபவங்களை  ஏழு வருடங்களுக்கு முன்  பதிந்திருந்தேன்!) 

ஆற்றில் படகில் செல்கையில் நடுவழியில் படகு கிளம்பாமல் மாட்டிக் கொண்டு தவித்திருக்கிறீர்களா? உங்க படகு மாட்டிக் கொண்டிருக்கும் இடம் ஓர் முதலை மடுவாக இருக்கலாம்/இருந்தது. அப்போ என்ன செய்வீங்க?

# தவித்ததுண்டு. கேரளாவில் "உள்ளல்" ஏரியில் படகுப் பயணம். ஆனால் வெகு விரைவில் ரிலீஃப் படகு வந்தது. முதலை தரிசனம் செய்து பார்க்க வேண்டியதுதான். (படகு கவிழாதவரை பயமில்லை?)

& படகு பயணம் செய்து முதலைகளை அருகே கண்டதுண்டு. நல்லவேளை படகு நடுவழியில் நிற்கவில்லை! 

பயணங்கள் பிடிக்குமா? வீட்டில் இருக்கப் பிடிக்குமா?

 # பயணங்கள் பிடிக்கும்.

& பயணங்கள் எப்பொழுதுமே பிடிக்கும். குழுவாக உல்லாசப் பயணம் செல்வது எப்பொழுதுமே பிடிக்கும். 

ஊரெல்லாம் சுற்றிவிட்டுக் கடைசியில் வீட்டுக்கு வந்து நம்ம படுக்கையில் "அப்பாடா"னு படுக்கும் அனுபவத்தை அனுபவிச்சிருக்கீங்களா?

# அதை அனுபவிக்காதாரும் உண்டா ?

& உண்டு. நிறைய. 

பேருந்து, ரயில் பயணங்களில் வெள்ளம், ரயில் நிறுத்தம் போன்றவற்றால் அவதிப் பட்டிருக்கீங்களா?

# ஆவடி காங்கிரஸ் 1952? முடிந்து சென்னை சென்ட்ரல் வர ரயில் ஏறி வழியில் ஐந்து மணி நேரம் அகாரணமாக ரயில் நின்றதால் அவதிப் பட்டதுண்டு. அன்றைய ஜனாதிபதி முதலில் போக வழி விட்டு நின்றது ரயில் !!

& அலுவலகம் சென்று வந்த மழை நாட்கள், எதிர்பாராத தலைவர்கள் மரணம், எல்லா சமயங்களிலும் - இதுவரை பத்துப் பன்னிரெண்டு தடவைகளாவது அந்த அவதிப்பட்டது உண்டு. 

உண்மையான மதச் சார்பின்மை என்றால் என்ன? அது இந்தியாவில் கடைப்பிடிக்கப்படுகிறதா?

# உண்மையான மதச்சார்பின்மை என ஒன்று எங்கேயும்  இருப்பதாகத் தெரியவில்லை.

கோயில்களுக்கு தினம் போகிறவர்கள்தான் பக்தி உள்ளவர்கள் என்னும் கூற்று சரியானதா?

# தான் என்பது இல்லாவிட்டால் சரிதானோ ?

& இல்லை. 

நமக்கு ஒருத்தர் செய்த கெடுதல் அவர்களை நாம் மனதார மன்னிப்பதால் மறந்துவிடும் எனச் சிலர் சொல்வது உண்மையா? உங்களுக்கு அந்த அனுபவம் உண்டா? (நான் அப்புறம் அவர்களோடு தொடர்பே வைச்சுக்காமல் விலகிடுவேன்.) மன்னிச்சேன்னு சொல்ல முடியாது. அவ்வளவு உயர்ந்த உள்ளம் இல்லையோ? தெரியலை! ஆனால் பின்னர் திரும்பிக் கூடப்பார்க்க மாட்டேன்.

# பிறர் குற்றங்களை மறத்தல் மன்னித்தல் தானே நிகழ்ந்தால் உண்டு.  செய்ய வேண்டும் என்றெண்ணிச் செய்ய இயலாது.

& சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சிலர் செயல்களால் வருத்தம் ஏற்பட்டிருந்தபோதிலும், காலப்போக்கில் மறந்துவிடுவேன். 


நெல்லைத்தமிழன்: 

ஒரு துறவி தனக்கு ஒரு மகனை வைத்துக்கொண்டு (அல்லது சிஷ்யர்கள்) அவர்களுக்கு வித்தை எல்லாம் சொல்லிக்கொடுக்கிறார். அப்போது அவர்களது நல்லது கெட்டதுகளுக்கும் அவரே காப்பாளராகிறார். அந்தப் பற்று இருக்கும்போது அவர் எப்படி முற்றும் துறந்தவராவார்?

# வாரிசுகளைத் தயார் செய்பவர்கள் துறவியர் அல்லர். மடாதிபதிகள் சந்யாசிகள் இல்லை என காஞ்சி சுவாமிகள் சொல்லியிருக்கிறார்.


அடுத்த கேள்வி, எல்லா ஆண் துறவிகளுக்கும் சிஷ்யர்கள் உண்டு. சிஷ்யர்கள் உள்ள பெண் துறவி யாரையாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

# மா ஆனந்த மயி?

இப்போ நீங்களே சொல்லுங்கள், துறவிகளில் சிறந்தவர் ஆண் துறவியா இல்லை பெண் துறவியா?

# உண்மையான துறவி ஆனால் ஆண் - பெண் / உயர்வு -தாழ்வு கிடையாது.

'பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு, தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழ்தெழுவாள்.....' என்றெல்லாம் வள்ளுவர் பாடியிருக்கிறாரே... அது பெண்ணடிமையைப் போற்றும் செயல்களல்லவா? அதனால்தான் திருக்குறளை உலகப் பொதுமறை என்று போற்றுகின்றார்களா?
தையல் சொல் கேளேல் என்று ஔவையாரும், மனைவிழைவார் மாண்பயன் எய்தார் என்று வள்ளுவரும், ஏன் பெண் சொல்வதைக் கேட்காதீர்கள், உருப்பட மாட்டீர்கள் என்று சொல்கிறார்கள்?

# ஒரு பெண் நினைத்தால் எளிதாக யாரையும் திசை திருப்ப முடியும் என்பதால் அம்மாதிரி ஆசைகள் அற்ற 'அடக்க ஒடுக்க'மான பெண்களே சிறந்தவர்கள் என்ற மனப்பான்மை அண்மைக்காலம் வரை தீவிரமாக மேற்கொள்ளப் பட்டது.

நிறைய உணவு செய்முறை காணொளி யூடியூபில் பல வருடங்களாக இருக்கிறதே.  அதில் நிறைய வருமானம் வருகிறதா இல்லை ஆத்ம திருப்திக்காக சேனல்ல நிறைய உணவு வகை செய்முறைகளை வெளியிடறாங்களா?

# அதிகம் பார்க்கப் படும் சானல்களில் விளம்பரங்களைப் போடுவதால் வருமானம் இருக்கும் என்று நினைக்கிறேன்.
அது போக, "என் சானலை 183 பேர் பார்த்திருக்கிறார்கள்.  65 லைக் வந்தது" என்று மகிழ்ந்து போகிறவர்களும், நாம் ஏதோ மகத்தான சாதனை செய்து விட்டோம் என்று பெருமிதம் கொள்வோரும் யூ ட்யூபில் மட்டுமல்ல பிளாக், ஃபேஸ்புக் இத்யாதி எல்லா இடத்திலும் உண்டு.

சமீபத்தில் நம் ஜி எம் பி சார், சுப்ரபாதம் தமிழில் என்ற இடுகை (http://gmbat1649.blogspot.com/2020/10/blog-post_31.html?m=0) வெளியிட்டிருந்தார். நாம் பக்தியோடு கேட்ட ஒரு ஸ்லோகத்தை தமிழில் கேட்கும்போது, மொழிமாற்றம் செய்யும்போது அதே sanctity இருக்கிறதா?

#   கேள்வி கேட்கத் தோன்றுவதே அந்த 'தெய்வீகம்' இல்லை என்பதால்தான்.
ஆனால் அந்த தெய்வீக உணர்வு ஏன் / எப்படி ஏற்படுகிறது என்பது முற்றிலும் சிக்கலான கேள்வி.

வல்லிசிம்ஹன் :


அரசியல்வாதிகள் சொல்வதை நிறைவேற்றுகிறார்களா. இங்கே நடக்கும் தேர்தல் களத்தை மனதில் வைத்து கேட்கிறேன்.?

# சொன்னதை நிறைவேற்றிவிட்டதாக மக்களை நம்ப  வைக்கிறார்கள்..

கொள்கைப் பிடிப்பும் நேர்மையானவர்கள் மட்டுமே அரசியலுக்கு வரவேண்டும் என்று எதிர்காலத்தில் நம்பலாமா?

# நம்புவதற்கு என்ன தடை ?  தாராளமாக நம்பலாம்.  நடக்குமா என்று கேட்டால் கதையே வேறு.

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

தப்பு தண்டா"என்கிறார்களே, தப்பு தெரியும் அது என்ன தண்டா?

# தவறென்று தெரிந்தும் செய்யப் படுவது தப்பு.  தெரியாமல் ஆனாலும் செய்யப் பட்டது தண்டா. டண்டா என்றால் இந்தியில் தடிக்கம்பு. அதால் அடிவாங்கத் தக்க செயல் அறியாமல் செய்யினும்...
(ஒரு சமாளிப்புதான்.  பரவாயில்லை!) 

 ======

மேலே வாசகர்கள் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு, மற்ற வாசகர்களும், இந்தப் பதிவின் பின்னூட்டங்களில் பதில்கள் எழுதலாம். எல்லாவற்றையும் தொகுத்து, மின்நிலா தீபாவளி சிறப்பிதழில் வெளியிடுகிறோம். 

=======

மின்நிலா 025 தீபாவளி சிறப்பிதழ், தயாராகி வருகின்றது. நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக சிறப்பாக அமையும் என்பது உறுதியாகிவிட்டது. 

மின்நிலா தீபாவளி சிறப்பிதழுக்காக தங்கள் படைப்புகளை அனுப்பியுள்ள 

மாலா மாதவன், 
வல்லி சிம்ஹன்,
ரஞ்சனி நாராயணன், 
ஜீவி ,
அப்பாதுரை,
துரை செல்வராஜூ, 
ஜி எம் பி ,
நெல்லைத்தமிழன், 
KGY Raman ,
K G விசுவேஸ்வரன், 
எங்கள் blog  whatsapp  குழு உறுப்பினர்கள்,
facebook  நண்பர்கள் 
எல்லோருக்கும் எங்கள் நன்றி. 

(சில surprise  விஷயங்களும் / ஆட்களும் லிஸ்ட் ல இருக்கு. தீ ம சி பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்!) 
=====
109 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம்.
  திரும்பிப் பார்ப்பதற்குள் புதன் வந்துவிட்டது.
  கேள்விகளும் பதில்களும் சுவாரஸ்யம். மின் நிலா
  தீபாவளி மலர் தயாராகி விட்டது பற்றி
  அறிய மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா...   வணக்கம்.   ஆமாம், நாட்கள் வேகமாக ஓடுகின்றன!

   நீக்கு
  2. அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து
   நினைப்பது நம் நிம்மதியைக் கெடுக்கும்.

   நீக்கு
  3. மி நி தீ ம தயாராகி வருகிறது. அடுத்த ஒரு வாரம் நான் முழுவதும் பிஸியாக இருப்பேன்.

   நீக்கு
 2. இங்கு தேர்தல் விவராங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
  இதோ வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 3. என் கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளீர்கள்.
  மிக நன்றி.

  மனம் நொந்துதான் போகிறது.
  அரசியலுக்கும் நேர்மைக்கும் சம்பந்தம் இல்லையோ
  என்று தோன்றுகிறது.தடி எடுத்தவன் தண்டல்காரன் என்று போகிறது.

  பதிலளிநீக்கு
 4. இன்றைய சில கேள்விகள் யோசிக்க வைக்குது.

  புதிதா ஒரு நாட்டை அடையும்போது முதலில் கொஞ்சம் திகைப்பிருக்கும். சிலபல முறை லண்டன் சென்றிருப்பதால், ஒரு முறை ஹோட்டல் இருக்கும் வழிப்பாதையை பிரின்ட் செய்து எடுத்துக்கொண்டு 7 மணிக்கு ஹீத்ரூவை அடைந்தேன். ட்யூபில் ஏறி நான் தங்கவேண்டிய ஹோட்டல் அருகில் உள்ள ஸ்டேஷனில் இறங்கினால் எந்தப் பக்கம் exit செய்வது எனக் குழப்பம். வெளியே வந்து ரோட்டில் நடந்தால் 8 1/2 மணிக்கு ஊரே அடங்கிவிட்டது, வெளிச்சம் குறைவு, மேப்பைப் பார்க்க முடியலை, எந்தக் கடைகளும் திறந்திருக்கவில்லை.

  எனக்கு எப்போதும் உதவும் இறை சக்தியால் நான் நடந்த பாதையின் எதிரே திறந்திருந்த ஒரு ஹோட்டலில் போய் உதவி கேட்கலாம் என நினைத்தால், அதுவே நான் தங்கும் ஹோட்டல் என்பதை அறிந்துகொண்டேன். அன்று தெய்வாதீனமாக ஹோட்டலைக் கண்டுபிடித்தேன். (அங்கல்லாம் டாக்சியில் ஏறினால் பர்ஸ் பழுத்துரும், சும்மா 600 மீட்டர்தானே நடக்கணும் என்ற தைரியம். பத்து மணி வரை ஜெகஜோதியா இருக்கும்னு நினைத்துவிட்டேன்)

  பதிலளிநீக்கு
 5. கோயில்களுக்கு தினம் போகிறவர்கள் - அட்டென்டன்ஸ் போடத்தான் பலரும் (நான் உட்பட) செல்கிறார்கள் என்பது என் எண்ணம். வேஷங்களைத் தாண்டி, பக்தியோடு இருக்கும் எளியவர்கள் என்னை ரொம்பவே நெகிழ்ச்சியுறச் செய்திருக்கிறார்கள்.

  எனக்கு மனதில் ஒரு கேள்வி வரும். திருப்பதில ஜரிகண்டி சொல்றாங்க, ஒரு சில விநாடிகள்தான் தரிசனம் கிடைக்குது என அனேகமாக எல்லோரும் சொல்கிறோம். நமக்கு அரை மணி நேரம் ஒதுக்கி கருவறைக்கு முன் மண்டபத்தில் நிறுத்தினால் என்ன செய்வோம், நம் மனம் எங்கு இருக்கும், என்ன யோசிக்கும் என நினைப்பேன்.

  பதிலளிநீக்கு
 6. மன்னித்தல் தானே நிகழணும். - அருமையான பதில்

  பதிலளிநீக்கு
 7. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 8. உங்கள் மனைவி மதுரையா கௌதமன் ஜி.
  நானும் இரண்டு தடவை சென்ற போது
  இப்படித் தேடி அலைந்தேன்.
  சென்ற வருடம் சென்றபோது
  எல்லா இடங்களும் அடியோடு மாறி இருந்தது.
  வருத்தம்தான்.

  ரஞ்சனி கூட சொல்லி இருக்கிறாரே
  அவர் கணவர் தேடும் இடங்களை நானும் தேடி இருக்கிறேன்.:)

  கீதாமா ஒருவருக்குத் தான் மதுரை விவரமாகத் தெரிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க வேறே வல்லி! இப்போதுள்ள மதுரை என்னோட மதுரையே அல்ல! என்னவோ போங்க! எல்லாமும் மாறி விட்டது.

   நீக்கு
  2. எல்லாமே மாறிவிட்டன என்று என் மனைவி சொன்னார்.

   நீக்கு
  3. 44 வருடங்களுக்குப் பிறகு நான் படித்த பள்ளிக்கு, வாழ்ந்த ஊருக்குச் சென்றேன். என்னால் நாங்கள் இருந்த வீட்டைக் கண்டுபிடிக்க முடியலை. காட்டாற்றின் பாலம் ரொம்ப சின்னதாகத் தெரிந்தது. ஆனால் நான் படித்த பள்ளி மட்டும் அப்படியே இருந்தது. (கொரோனா...பள்ளியில் யாருமே இல்லை. ஞாயிறு. நான் உள்ளே சென்று பார்த்தேன். மிகப் பெரிய இடம்). ராஜ்குமார் அவர்களின் பண்ணை வீட்டையே என்னால் கண்டுபிடிக்க முடியலை. ஆனால் அந்த விஸிட் கொடுத்த உணர்வு மறக்க இயலாது.

   முன்பு வாழ்ந்த இடங்களுக்கு இப்போது சென்றால் கொஞ்சம் வெறுமையாக இருக்கும்.

   நீக்கு
  4. மறுபடியும் அந்த நான்மாடக் கூடல் பதிவுக்குப் போய் மதுரை நினைவுகளைப் புதுப்பித்துக் கொண்டு வந்தேன். ஆனால் உங்க மனைவியைக் கிருஷ்ணாராயர் தெப்பக்குளத்தெருவில் பார்த்ததாக நினைவில் இல்லை! :))))))

   நீக்கு
  5. அது எப்பவோ - (அவர் பள்ளிக்கூடம் படித்த நாட்களில்.) மனைவியின் மாமா கல்லூரிப் பேராசிரியர்.

   நீக்கு
  6. for me also all mamas were there! Patti, thatha, kollu patti, kollu thathaa! everybody

   நீக்கு
 9. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவும், வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும். வரப்போகும் தீபாவளிப் பண்டிகை அனைவர் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியையும் மனத் தெளிவையும் கொடுக்கும்படிப் பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 10. நான் தொலைந்து போவதெல்லாம் வலைப் பதிவிலேயே
  எழுதிவிட்டேன். ஒன்றா இரனா எடுத்துச் சொல்ல:)

  பதிலளிநீக்கு
 11. தவறு செய்பவர்களை மன்னிப்பது சிரமம் தான். மறந்து வேண்டுமானால்
  போகலாம்.
  கனவில் கண்டபடி திட்டித் தீர்த்துக் கொள்ளலாம்.
  கதையாக வலைப் பதிவில் எழுதிவிடலாம்.

  பதிலளிநீக்கு
 12. அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து
  நினைப்பது நம் நிம்மதியைக் கெடுக்கும்.

  பதிலளிநீக்கு
 13. மூணு மணிக்கு விழிப்பு வந்ததா? அப்புறமா ரொம்ப நேரமாத்தூங்கவே இல்லை. பின்னர் அசந்து போய்க் காலை எழுந்துக்கும்போது ஐந்தரை மணி! அதான் எல்லாத்திலேயும் இன்னிக்குத் தாமதம்! என் கேள்விகளுக்குப் பதில் கொடுத்தமைக்கு நன்றி. பெண் துறவிகள் பற்றிய கேள்விக்குப் போன வாரமே மாதா அமிர்தானந்த மயி, சக்கரத்தம்மாள், ஆவுடையக்காள் ஆகியோரைக் குறிப்பிட்டிருந்தேனோ? போய்ப் பார்க்கணும். இதிலே அமிர்தானந்த மயிக்கு நிறையவே ஆண் சீடர்கள் உண்டு. சக்கரத்தம்மாளுக்கும் குறிப்பிட்ட அளவில் உண்டு. அவருக்கு சமாதி அடைய இடம் கொடுத்தவர் அவர் சீடரான பல் மருத்துவர் நஞ்சுண்ட ராவ் என்பார்கள். ஆவுடையக்காள் பற்றி அவ்வளவாத் தெரியலை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு எந்தத் துறவிகளையும் பற்றி அதிகமாகத் தெரியாது.

   நீக்கு
  2. எனக்கும் தெரியாது. எல்லாம் படிச்சுக் கேட்டுத் தெரிந்து கொண்டவை தான்!

   நீக்கு
  3. http://geethasmbsvm6.blogspot.com/2011/02/blog-post.html நஞ்சுண்டராவ் பல் மருத்துவர் இல்லைனு பதிவில் சொல்லி இருக்கேன். பத்து வருஷம் ஆச்சா! மறந்திருக்கேன். :(

   நீக்கு
 14. வணக்கம் சகோதரரே

  இரு தினங்களாக வலைப்பக்கம் வர இயலவில்லை. இன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை. ரசித்தேன். அருமையான கேள்விகளையும், அதற்கேற்ற பதில்களையும் தந்தவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 15. சுப்ரபாதம், சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம் போன்றவற்றின் தமிழ் மொழி பெயர்ப்பு சாந்நித்தியத்தோடு அமையவில்லை என்கிறோம். ஆனால் அதே மனம் கந்த சஷ்டி கவசம், அபிராமி அந்தாதி, பிரபந்தங்கள், தேவாரப் பாசுரங்கள், திருப்புகழ் போன்றவற்றை ஏற்கின்றதே!அது ஏன்? என்ன காரணம்? மெதுவா அடுத்த வாரம் பதில் சொல்லுங்க. அவசரமே இல்லை. :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீசா மேடம்.... நீங்க இதனை சரியா புரிஞ்சிக்கலை என்று நினைக்கிறேன்.

   Whoever Prays, will get rid of their horrible past deeds..... என்று ஆங்கிலத்தில் (சரியாக..நான் எழுதினது மாதிரி இல்லை) கந்தசஷ்டி கவசத்தை மொழி பெயர்த்து, கந்த சஷ்டி பாடுவதற்குப் பதிலா அதனைப் பாடினால், உங்களுக்கு அதே உணர்வு வருமா? இதுதான் கேள்வி. நாம கேட்டு மனதில் இருத்தியதை வேறொரு மொழில கேட்டால் (தாய்மொழியாவே இருந்தாலும்) மனதுக்கு நெருக்கமாக இருக்காது.

   தர்ப்பண மந்திரங்களை தமிழில் மொழிபெயர்த்து, தமிழில் மந்திரத்தைச் சொல்லி தர்ப்பணம் செய்யுங்கள் என்று சொல்லும்போது மனதுக்கு நெருக்கமாக இருக்குமா? யோசிக்கவேண்டியதுதான்.

   நீக்கு
  2. பின்னர் விரிவான பதில் தரலாம் என நினைக்கிறேன்.

   நீக்கு
 16. எல்லாப் பதில்களும் நன்றாக இருக்கின்றன. அதிலும் ரேவதி கேட்டிருக்கும் அரசியலில் கொள்கைப்பிடிப்பும்,நேர்மையும் கொண்டவர்கள் மட்டுமே வரவேண்டும் என்னும் எதிர்பார்ப்பு நம் அனைவரிடமும் உண்டு. ஆனால் நடக்காதது. அதற்கான பதில் யதார்த்தத்தைச் சொல்கிறது.

  பதிலளிநீக்கு
 17. நாங்க நவ பிருந்தாவன் பார்த்துட்டுத் திரும்பும்போது ஸ்டீமரில் எண்ணெய் அடைத்துக் கொண்டு கிளம்பவே இல்லை. படகு நின்று விட்டது. படகில் சுமார் 25 பயணிகள் இருந்தோம். அனைவரும் ஒரே குழுத்தான். ஆனாலும் படகு நின்ற இடம் முதலை மடு. கையைத் தொங்கப் போடாதீங்க எனப் படகு ஓட்டுநர்களும், கூட வந்த ஒருங்கிணைப்பாளர்களும் எச்சரிக்க, எச்சரிக்க வெயிலும் அதிகம் ஆகிப் பின்னால் வந்த படகுகள் எல்லாம் முன்னே செல்லத் தவித்துக் கொண்டிருந்தோம். படகின் பிரச்னையைச் சரிசெய்யவே முடியலை. கரைக்குப் போய்த்க் தான் பார்க்கணும் என்றார்கள். பின்னர் பரிசல்காரர்களைப் பிடித்து எங்கள் படகில் நாலைந்து இடங்களில் கயிற்றால் கட்டிப் பரிசல்காரர்கள் கரை வரை இழுத்து வந்து கொண்டு விட்டார்கள். கரையில் கால் வைத்ததும் "அப்பாடா!"

  பதிலளிநீக்கு
 18. சரி, நேரம் ஆகிவிட்டது. மத்தியானமா வரேன்.

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் சகோதரரே

  மின்நிலா தீபாவளி சிறப்பிதழ் மிகச் சிறப்பாக தயாராகி வருவதற்கு மிக்க மகிழ்ச்சி. படிக்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 20. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 21. வணக்கம் சகோதரரே

  தங்கள் மதுரை பயண கால் நடை அனுபவங்கள் படிக்க நன்றாக நகைச்சுவையுடன் இருந்தது. நான் திருமங்கலத்தில் இருந்தும் கூட இந்த மாதிரி அனுபவங்களைப் பெற/பெற்றுத்தர கொடுத்து வைக்கவில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 22. வணக்கம் வந்தனம் எல்லாருக்கும்!!!

  & ஹி ஹி / இஃகி, இஃகி, இஃகி !//

  தமிழிலான தெய்வீகச் சிரிப்பை!!!!!! நீங்களும் சொல்ல உரிமை கிடைச்சிருச்சா!!!! இஃகி இஃகி இஃகி!!!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதெல்லாம் இல்லையாக்கும். ராயல்டி கொடுக்கணுமே! அவர் பாட்டுக்கு விபரம் தெரியாமச் சிரிச்சு வைச்சிருக்கார். :))))

   நீக்கு
 23. கீதாக்காவின் மூன்றாவது கேள்விக்கான & பதில் நன்று. ஹைஃபைவ்.

  கீதா

  பதிலளிநீக்கு
 24. கீதாக்காவின் 4 வது கேள்விக்கான & ன் பதில் 5 வது கேள்வியின் இரண்டாவது பகுதிக்கு அதாவது வழி தெரியாமல் தவித்ததுக்கு ஆப்ட்டா இருக்குமோ என்று தோன்றியது. 4 வது கேள்வி நீங்க கூட்டத்துல தொலைந்து போன அனுபவம்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பக்கத்து பக்கத்து கேள்வி பதில்கள்தானே - அட்ஜஸ்ட் செய்து படித்துக்கொள்ளுங்கள் !

   நீக்கு
  2. ஹா ஹா ஹா ஹா

   அதெப்படி அதெப்படின்னு கேட்கிறேன். கீதாக்காதான் மார்க் போடனூம்..கூப்பிட்டு இந்தப் பதிலுக்கு மார்க் கம்மியா போடச் சொல்லணும்!! ஆசிரியரே இப்படி பதில் சொல்லலாமோ?!!!!!! ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  3. கீதா ரங்கன்..உங்கள் மூன்றாவது பின்னூட்டத்தின் இரண்டாம் வரியும், முதலாம் பின்னூட்டத்தின் மூன்றாம் வரியும் நன்றாக அமைந்திருந்தன..ஹி ஹி ஹி

   நீக்கு
 25. 5 வது கேள்விக்கு...இப்பவும் கூட நான் கூகுள் மேப் பயன்படுத்துவது அபூர்வம். பொதுவாகவே கிளம்பும் முன் போகும் இடத்தின் தூரம் எவ்வளவு எதன் அருகில் இருக்கிறது பஸ் ரூட் எல்லாமே குறித்துக் கொண்டுவிடுவது வழக்கம்.

  கீதாக்கா கேட்டிருக்கும் முந்தைய காலம் என்றால் இடம் பற்றி உத்தேசமாகவேனும் தெரிந்து கொண்டு நடந்துவிடுவதுண்டு 5 கி மீட்டருக்குள் என்றால். (எங்க கிராமத்துலருந்து டவுனுக்கு நடந்து பழக்கமாச்சே!!!)

  வாயுள்ள பிள்ளை பிழைக்கும்னு கேட்டிருப்பீங்களே அதேதான் நான் கேட்டு கேட்டுப் போய்விடுவது வழக்கம். டூவீலர் ஓட்டிய காலத்திலும். ஆனால் காரில் எல்லாம் போனால் நிறுத்தி நிறுத்திக் கேட்பது சிரமம். ஏனென்றால் நிறுத்தவே இடம் பார்த்துதானே நிறுத்த முடியும்...அப்படிச் சுற்றியதுண்டு. யாரும் சரியாகச் சொல்லாமல்.

  இப்பல்லாம் கூகுள் மேப் வைத்திருக்கும் ஓட்டுநர்களே கூட வழி சரியாகத் தெரியாமல் கூகுளும் சில சமயம் ஏமாற்றி விடுவதால் சுற்றுகிறார்கள்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //கூகுளும் சில சமயம் ஏமாற்றி விடுவதால் // - இது சரியான ஸ்டேட்மெண்ட். சமீபத்தில் தாளவாடி என்ற என் ஊருக்குச் சென்றபோது, கூகுள் மேப் இல்லாத ரோடையெல்லாம் காட்டி திணறடித்துவிட்டது (எனக்கில்லை..வண்டியை ஓட்டிய மச்சினனுக்கு). மேப்பை நம்பினோர் திணறவேண்டியதுதான் போலிருக்கு.

   இந்த கூகுள் மேப் இருப்பதால், 'நான் அடுத்த பில்டிங்தான், வா, என்று சொன்னால், கொஞ்சம் லொகோஷனை ஷேர் பண்ணுங்களேன்' என்று எல்லோரும் சொல்லும் காலமாகிவிட்டது.

   நீக்கு
  2. நாங்க தொலைஞ்சு போனதை எல்லாம் கதையா எழுதலாம். நல்லவேளையா வெளிநாட்டில் தொலைஞ்செல்லாம் போகலை. இந்தியாவிலேயே தான்! அதுவும் பாஷை தெரிஞ்சதால் ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டு வந்திருக்கோம்.

   நீக்கு
 26. பயணங்கள் பிடிக்குமா? வீட்டில் இருக்கப் பிடிக்குமா?//

  பயணம் ரொம்ப ரொம்ப ரொம்பவே பிடிக்கும். பயணத்தின் காதலி நான். ஆனால் இப்போது வாய்ப்பு குறைந்துவிட்டது. அதுவும் இந்தத் தொற்று வந்தாலும் வந்தது வீட்டிற்குள்தான்.

  கீதா

  பதிலளிநீக்கு
 27. வினாக்கள் எல்லாம் ரசம்..
  விடைகள் அனைத்தும் அதிரசம்..

  பதிலளிநீக்கு
 28. பேருந்து, ரயில் பயணங்களில் வெள்ளம், ரயில் நிறுத்தம் போன்றவற்றால் அவதிப் பட்டிருக்கீங்களா?//

  நிறைய. எங்கள் ஊரில் வெள்ளம் வந்த போது, அப்புறம் திடீரென்று ஸ்டைரைக் என்பார்கள் அப்போது பள்ளி/கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வர பேருந்து இருக்காது...நடராஜாதான். 5.5 மைல்...கல்லூரிக்கு இன்னும் அதிகம். அதிகம் மழை பெய்தாலே எங்கள் ஊரில் எல்லாம் உடைப்பெடுத்துவிடும் அபாயம் நிறைய உண்டு. சுற்றிலும் வாய்க்கால்கள்.

  கீதா

  பதிலளிநீக்கு
 29. எல்லாமே நல்லாருக்கு ரசித்தேன்

  நெல்லை எப்ப சாமியார் ஆனார்?!!! இல்லை சாமியார் ஆகப் போகிறாரோ?!!! ஒரே சாமியார் கேள்விகளா இருக்குதே!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதா ரங்கன்... சும்மா சில வாரங்கள் (பல மாதங்களுக்கு முன்பு) தமன்னா போட்டோக்களை ரசித்ததால், நான் நிச்சயம் சாமியாராகப் போகிறேன் என்று அனுமானித்துவிட்டீர்கள் போலிருக்கு (அப்போ வாரா வாரம் அனுஷ்கா படம் போட்டவங்க்ள்லாம் ராஜரிஷி ஆயிடுவாங்களோ?)

   நீக்கு
  2. ஸ்ரீராம் எங்கிருந்தாலும் மேடைக்கு அழைக்கப்படுகிறார்.

   நீக்கு
  3. நான் சோம்பேறி ரிஷி ஆகிவிட்டேன்!

   நீக்கு
  4. நெல்லைஅண்ட் ஸ்ரீராம் ஹையோ சிரிச்சு முடில...

   கீதா

   நீக்கு
 30. மொழிமாற்றம் செய்யும்போது அதே sanctity இருக்கிறதா?//

  எப்படி இசைக்கு மொழி தேவையில்லையோ அது போலவே தெயத்திடம் ஏற்படும் உணர்விற்கும். இறைவனை நினைக்கும் போது அங்கு மொழி எதற்கு? அதுவுமல்ல இந்த மொழிதான் தெய்வீக மொழி என்பதும் இல்லையே. இது நம் மனதைப் பொருத்ததே. ஸோ அந்த ஸ்லோகத்துக்கு இருக்கும் அந்த sanctity எந்த மொழியானாலும் இருக்கத்தான் செய்யும். இதை எல்லாம் நம் மனதுதானே க்ரியேட் செய்கிறது. ஒரு சிலருக்கு இதுவே கூட அர்த்தம் புரிந்து இன்னும் இறைவனை ஆழ்ந்து நினைக்கவும் உதவும் இல்லையா.. இசைக்கு மொழி இல்லைதான் ஆனால் பாடல் அல்லது ஸ்லோகம் சொல்லும் போது அர்த்தம் புரிந்து சொல்லும் போது அது தனிதான். அதே போன்று அவரவர் தாய்மொழி அல்லாத பிற மொழிக் கிருதிகள் பாடும் போது அதன் அர்த்தம் தெரிந்தால் இன்னும் உணர்வு பூர்வமாகப் பாட இயலும். அதைப் போலத்தான் என்பது என் தனிப்பட்டக் கருத்து.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அதன் அர்த்தம் தெரிந்தால் இன்னும் உணர்வு பூர்வமாகப்// - இது உண்மைதான். நான் 'ஆநிரை மேய்க்க நீ போதி', 'மாணிக்கம் கட்டி', 'மன்னுபுகழ் கெளசலை தன்' போன்ற ப்ரபந்தங்களை தாலாட்டுக்கு உபயோகிக்கும்போது அர்த்தம் தெரிந்து சொல்வதால் இன்னமுமே உணர்வு பூர்வமாக ரசித்தல் முடியும். ஆனா 'சமஸ்கிருத மந்திரங்களை' தமிழ்ப்படுத்தும்போது உடனே மனது அதனை ஏற்றுக்கொள்ளாது (இதுபோல தமிழ் பக்திப் பாடல்களையும்தான்) சரிதானே கீதை அரங்கராசன்?

   நீக்கு
  2. யாகத்தில் சொல்லப்படும் மந்திரங்கள், கல்யாண மந்திரங்கள், கோயிலில் சொல்லப்படும் அர்ச்சனை மந்திரங்கள் எனப் பலவும் தற்காலத்தில் தமிழில் சொல்லப்பட்டு வருவதைக் காண முடிகிறது. ஆனால் மதுரை மீனாக்ஷிக்கு நான் சின்னப் பெண்ணாக இருக்கும்போதே கோடி அர்ச்சனை தமிழில் தான்! அப்பாவெல்லாம் கோடி அர்ச்சனைக் கமிட்டியின் உறுப்பினராக இருந்தார். தினம் காலை போய்விடுவார். எங்க வீட்டில் (மேலாவணி மூலவீதி) மாடியில் நின்றால் காதில் விழும். நாங்க மாடியில் ஒரு போர்ஷன் அறையில் இருந்ததால் தினம் கேட்டிருக்கோம்.

   நீக்கு
  3. கீதை அரங்கராசன்?//

   ஹை ஹை இது நல்லாருக்கே!! ரொம்பப் பிடித்தது நெல்லை....என்னை என் வீட்டில் அதாவது என் கசின்ஸ் கீதை என்றுதான் கூப்பிடுவாங்க...இல்லேன்னா மலையாள ஸ்டைலில் கீதே!!! (ஹையோ சென்னைத் தமிழாகிடுதே!!!)

   நேற்று வர முடியலை நெல்லை சாரி கொஞ்சம் பிசியாகிட்டேன். இப்பத்தான் பாக்க முடிந்தது. இப்பவும் ஓட்டம் தான். வேலைகள் இருக்கு வலைத்தளம் எல்லாம் அப்புறமா பார்க்க வருவேன்.

   நெல்லை உங்கள் கருத்தை மறுக்கவில்லை.....தமிழ்ப்படுத்தினால் எனக்குத் தனிப்பட்ட முறையில் இன்னும் நெருக்கமாக உணர்வது போன்ற ஃபீலிங்க்....நீங்க பார்த்தீங்கனா நான் மற்ற மொழிக் கிருதிகள் கற்பதை விட தமிழ்க்கிருதிகள் கற்பதை மிகவும் விரும்புவேன். சங்கீதத்தில் நம் வித்தையைக் காட்டினாலும் வரிகளை உணர்வு பூர்வமாகப் பாடுவது என்பது தனிதான் அது இன்னும் ரீச் ஆகும். மற்ற கிருதிகள் கற்க நேரும் போது உச்சரிப்பு ப்ளஸ் அதன் பொருளைக் கேட்டு கற்பது வழக்கம். அதற்காகவே நான் தெலுங்கு கன்னடம், மராட்டி (அபங்) எல்லாம் கற்காமல் போய்விட்டேனே என்றும் ஃபீல் செய்வதுண்டு இப்ப அத்தனை ஸ்பீடாகக் கற்றுக் கொள்ள இயலவில்லை. கொஞ்சம் லேட் தான்...என்றாலும் இம்மொழிகளில் உள்ள அந்த இசை ராகம், பாடுபவரின் வித்தை அதை அனுபவிப்பதுண்டு.

   நீங்கள் கீதாக்காவுக்குச் சொல்லியிருக்கும் கருத்தை அதாவது முன்னோர்களுக்குச் செய்யும் போது சொல்லும் மந்திரங்களை நம் மொழியில் பொருள்படுத்தித் தெரிந்து கொண்டு சொல்லும் போது அது இன்னும் நெருக்கம் அதிகரிக்கும். இப்போதெல்லாம் மந்திரம் சொல்பவர்கள் தமிழிலும் அதை விளக்குகிறார்கள் சிலர்.

   கீதா

   நீக்கு
 31. மின் நிலா தீபாவளி மலருக்கு வாழ்த்துகள்.
  கேள்வி பதில்கள் நன்று.
  பயணம் செய்வது எனக்கு மிகவும் பிடித்தமானது.
  நெல்லை தமிழனும் ஸ்ரீராமும் சாமியாராகி விட்டால் எங்கள் ப்ளாக என்னாவது? அனுஸ்கா தமன்னா குழப்புகிறார்கள் :))

  பதிலளிநீக்கு
 32. 01. இவை கேள்விகள் அல்ல... சிந்திக்க வேண்டியவை...!

  // # வாரிசுகளைத் தயார் செய்பவர்கள் துறவியர் அல்லர். மடாதிபதிகள் சந்யாசிகள் இல்லை என காஞ்சி சுவாமிகள் சொல்லியிருக்கிறார். //

  // வாரிசுகளைத் தயார் செய்பவர்கள் துறவியர் அல்லர் //
  வாரிசுகளைத் "தாயார்" செய்ய வாய்ப்புண்டதால், அதை தவிர்க்க வேண்டி துறவியர் அல்லர் ஆனாரோ...?
  // மடாதிபதிகள் சந்யாசிகள் இல்லை //
  அப்போது சந்யாசிகள் யார்...?
  // என காஞ்சி சுவாமிகள் சொல்லியிருக்கிறார். //
  சுவாமிகளா...? அப்படியென்றா//ல்...?இவை கேள்விகள் அல்ல... சிந்திக்க வேண்டியவை...!

  பதிலளிநீக்கு
 33. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 34. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 35. // உருப்பட மாட்டீர்கள் என்று சொல்கிறார்கள்? //

  இதில் இரு சீர்கள் சரி...!

  நன்றி...

  பதிலளிநீக்கு
 36. கேள்விகளும் பதில்களும் சுவாரஸ்யம்

  பதிலளிநீக்கு
 37. //கூட்டத்தில் காணாமல் போன அனுபவம் உண்டா?//

  உண்டு, சிறு வயதில் ( 4, அல்லது 5 வயது இருக்கும்)நாகர்கோவிலில் இருந்த போது சுசீந்தரம் கோவில் திருவிழாவில் தொலைந்து போய் கிடைத்த கதை முன்பே சொல்லி இருக்கிறேன்.

  கேள்விகளும் பதில்களும் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 38. ஸ்லோகங்கள், பாசுரங்கள், பாடல்கள்  எந்த மொழியில்  இயற்றப்பட்டாலும் மகான்கள், பக்தர்கள் அனுபவித்து, உருகி எழுதப் பட்டிருப்பதால் அந்த மொழியிலேயே படிக்கும் பொழுது கிடைக்கும்  அனுபவம், மொழி பெயர்க்கப் படும்பொழுது மிஸ் ஆகும். 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே..' பாடலை வேறு மொழியில்  மொழி பெயர்த்துப் பாருங்கள்..

  பதிலளிநீக்கு
 39. மின்நிலா 025 தீபாவளி சிறப்பிதழுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 40. எனக்கு அப்போது எட்டு வயது இருக்கலாம். கும்பகோணத்தில் இருந்த என் மாமா வீட்டுக்குச் சென்றிருந்தேன். எங்கள் மாமா வீட்டுக்கு பக்கத்துக்கு வீட்டில் இருந்த கோமா(Goma) என்னும் பெண் என்னை பக்கத்தில் இருந்த பிள்ளையார் கோவிலுக்கு அழைத்துச் சென்றாள். கோவிலில் இருந்து வெளியே வந்ததும் அங்கு விளையாடிக் கொண்டிருந்த அவளுடைய தோழிகள் விளையாட அழைத்ததால்,என்னிடம்,"நீ தனியாக ஆத்துக்கு போய் விடுகிறாயா? நான் விளையாடி விட்டு வருகிறேன்" என்று வீட்டிற்கு அடையாளமும் சொல்லி அனுப்பினாள். நான் சரி என்று சொல்லி விட்டு கிளம்பினேன், நடந்து கொண்டே இருக்கிறேன், மாமா வீட்டை கண்டுபிடிக்க முடியவில்லை. பயந்து போய் அழ ஆரம்பித்து விட்டேன். அழுது  கொண்டே கோவிலுக்குத் திரும்பினேன், Goma அங்கு இருக்க வேண்டுமே என்று வேறு பயம். நல்லவேளை அவள் விளையாடி முடிக்கவில்லை.  நான் அழுது கொண்டே திரும்புவதைப் பார்த்ததும் அவள் தோழிகளிடம் விடை பெற்றுக் கொண்டு வந்தாள்.   

  பதிலளிநீக்கு
 41. இணையம் அறிமுகம் ஆனதில் இருந்து தமிழ் நாட்டில் எழுத்தாளர்களும் அதிகம் ஆகி விட்டார்கள். உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார்? ஏன்?

  எழுத்தாளரை தெய்வமாகப் பார்க்கும் வழக்கம் உண்டா? அவரும் நம்மைப் போல் தான் என நினைப்பீர்களா?

  ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ரசனை உண்டு. இல்லையா? ஆகையால் ஒருவரின் எழுத்தில் நீங்கள் ரசிப்பதையே நானும் ரசிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது சரியா?

  ஹிஹி, இங்கே கே.வா.போ.க. பகுதியில் எழுதுபவர்களில் உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார்? ஹையா, மாட்டி விட்டேனே! மாட்டிக் கொண்டாரே!

  நீங்கள் எழுதும் ஒரு சம்பவம் மூலம் அதன் தொடர்பாக என் அனுபவம் அல்லது மற்ற வாசகர்களுக்கும் அவர்கள் அனுபவங்கள் நினைவுக்கு வருவது சரியா? தப்பா?

  இப்போ சீரியசாக ஒரு கேள்வி. தமிழில் உங்களைக் கவர்ந்த/பிடித்த எழுத்தாளர் யார்? வெகுஜன எழுத்தாளர் என்பதற்கான வரைமுறை ஏதானும் உண்டா?

  பதிலளிநீக்கு
 42. நீங்கள் ரசித்துப் படித்த தமிழ் நாவல்/சிறுகதை எது? யார் எழுதினது? ஏன் பிடிக்கும்?

  ஒரு பக்கம் பொன்னியின் செல்வன் பிரமாதமாகப் பேசப்பட்டாலும் இன்னொரு பக்கம் கல்கியையும் அவர் எழுத்தையும் விமரிசிப்பவர்கள் உண்டு. அதைப் பற்றி நீங்கள் சொல்வது என்ன?

  சரித்திரக் கதை எழுத்தாளர்களில் சிறந்தவர் யார்?

  பதிலளிநீக்கு
 43. நேற்று சுவாரஸ்யமான பின் ஊட்டங்கள் பல வந்திருக்கிறதே..
  Biden வந்திருவான்போலருக்கே, சீனாவுக்குக் கொண்டாட்டம்தான் என்கிற சிந்தனையில், அதிகம் இங்கே நுழையாமல் இருந்துவிட்டேன்!

  மின்நிலா தீபாவளி மலருக்கான படைப்பாளிகளின் லிஸ்ட்டைப் பார்த்து பிரமிக்கிறேன். ஏதோ Booker, Pulitzer-க்கான நாமினேஷன் லிஸ்ட் போல நீள்கிறதே.. கல்கி, விகடன் மலர்களெல்லாம் காலி!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!