திங்கள், 16 நவம்பர், 2020

"திங்க"க்கிழமை  :  மசூர் தால் மேத்தி அடை  - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி 

 

 மசூர் தால் மேத்தி அடை 



தேவையான பொருள்கள்:




மசூர் தால்   ---    1 1/2 ஆழாக்கு 
கெட்டி அவல் ---  3/4 ஆழாக்கு 
சாமை, அல்லது திணை 
அல்லது குதிரைவாலி அரிசி -- 1/2 ஆழாக்கு 
வெந்தயக்கீரை  ---  ஒரு கட்டு 
மிளகாய் வற்றல் ---- 9
பெருங்காயம் --சிறிதளவு 
உப்பு ---    தேவையான அளவு 

செய்முறை:




முதலில் மசூர் தால், சாமை அல்லது தினை அரிசி, மிளகாய் வற்றல் இவைகளை கழுவி ஊற வைக்கவும்.  இரண்டு மணி நேரம் ஊறினால் போதும். 

அரைப்பதற்கு பத்து நிமிடம் முன்பு  அவலை கழுவி ஊற வைக்கவும். பின்னர் எல்லாவற்றையும் மிக்சியில் சற்று கொர கொரப்பாக அரைத்து, அந்த மாவில்,  ஆய்ந்து சுத்தம் செய்யப்பட்ட வெந்தய  கீரையை  பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு கலந்து சாதாரண அடை வார்ப்பது போலவே வார்த்து எடுக்கவும். 

சுவையான, சத்தான, மிருதுவான அடையை அவரவர் விருப்பம் போல வெண்ணை, மிளகாய்ப்பொடி, வெல்லம் என்று எதோடு வேண்டுமானாலும் சாப்பிடலாம். நான் சுண்டா என்னும் இனிப்பு மாங்காய் ஊறுகாயோடு சாப்பிட்டேன். 

இதற்கு கறிவேப்பிலை போட தேவையில்லை. 

ரேவாஸ் கிச்சன் என்னும் யூ டியூப் சேனலில் பார்த்தேன். என்ஜாய் மாடி!

 

==========


==========

54 கருத்துகள்:

  1. மசூர் தாலில் செய்த வெந்தயக்கீரை அடை நல்லா வந்திருக்கு. எளிய செய்முறைதான்.

    ஒரே செய்முறையில் அவல், சிறுதான்யம், வெந்தயக்கீரை, மசூர் தால் எல்லாம் சேர்த்து என்ன பேர் வைப்பது என்ற குழப்பம்தான்.

    மொறுமொறுப்பாக இருந்ததா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் வேண்டுமானால், 'அசிவெமதாபா' அடை என்று பெயர் வைத்துவிடுவோம்!

      நீக்கு
    2. மொறு மொறுப்பாக இருக்காது, சாஃ்ப்டாகத்தான் இருக்கும். மொறு மொறுப்பான அடை சற்று நேரமானால் வடெக்கென்று ஆகி விடாதா?

      நீக்கு
    3. அரிசியை அதிலும் பச்சரிசியை நிறையப் போட்டுப் பருப்புக்களைக் குறைவாகப் போட்டுப் பண்ணும் ஏகாதசி அடை கொஞ்ச நேரத்திலேயே வெடக்கென்று ஆகும் பானுமதி. அரிசி+பருப்பு வகைகள் சமமாக ஆனால் துவரம்பருப்புக் கொஞ்சம் அதிகம் அதில் பாதி கடலைப்பருப்பு அதில் பாதி உளுத்தம்பருப்பு என்று போட்டு எல்லாப் பருப்புக்களுமாகச் சேர்ந்து அரிசியின் சம அளவுக்குப் போட்டு அடை பண்ணிப் பாருங்கள். ஆறினாலும் மொறுமொறுப்புக் குறையாமல் நன்றாகவே இருக்கும்.

      நீக்கு
  2. சென்றவாரம் நான் சிவப்பு புழுங்கல் அரிசி, உளுத்தம்பருப்பு, சிறிது துவரம்பருப்பு (3-3/4-1/4... பருப்பு சிறிது அதிகமாகப் போட்டேன்). 4-5 மணி நேரம் ஊறிடுத்து. சிவப்பரிசி அரைத்தபோதே சரியில்லையே என்று தோன்றியது. அடை சரியாவே வரலை. அம்மா சொல்லியிருந்தபடி சிவப்பு பச்சரிசி போட்டிருந்தால் சரியா வந்திருக்குமோ, புழுங்கரிசினால நல்லால்லையோ எனத் தோன்றியது. மனைவி, பருப்பு அதிகமாக்கணும் என்றாள். முதன் முறையாக சொதப்பியது அந்த அடை.

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் இனிய திங்கள் கிழமைக்
    காலை வணக்கம்.
    எல்லோரும் இறைவன் அருளால் நலமுடன்
    இருக்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  4. அன்பு பானுமாவின்
    அடை செய்முறை மிக அருமை.

    வெறும் அடை மாவில் வெந்தயக் கீரை
    சேர்த்து செய்திருக்கிறேன்.
    இந்த முறையில் அவலும் சேர்த்திருப்பதால்
    வேறு சுவையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    பார்க்க மிக அருமை. நன்றி மா.

    பதிலளிநீக்கு
  5. அன்பு முரளிமா,
    சிகப்பரிசி சரியாக வரவில்லை. மருமகள் செய்து
    பார்த்துச் சொன்னாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்க அம்மா, சிவப்பு பச்சரிசி 3 கரண்டி, 3/4 கரண்டி உளுந்து, 1/4 கரண்டி துவரம்பருப்பு என்று ஒரு ரெசிப்பி ரொம்ப முன்னால சொன்னா. எங்க அம்மா அடை போல நான் சாப்பிட்டதில்லை. அதில் பருப்பு ரொம்ப அதிகம் இருக்காது, ஆனால் முறுகலா வரும். இன்று நான் 'சிவப்பு பச்சரிசி' தேடுதல் வேட்டையை ஆரம்பித்து, கொஞ்சமா அடை பண்ணி, 'அடை மேல உள்ள ஆசையே போச்சு' என்று சொன்ன (அந்த சிவப்பு புழுங்கலரிசில பண்ணின அடை) பசங்களோட அபிப்ராயத்தை மாத்தணும். ஆனால் எங்கம்மா, கறுப்பு உளுந்து-தொலி உளுந்துன்னு சொல்லியிருக்கா.

      நீக்கு
    2. பச்சை அரிசி தெரியும்; சிவப்பு அரிசி தெரியும். சிவப்பு பச்சை அரிசி?

      நீக்கு
    3. //சிவப்பு பச்சை அரிசி?// Yes, yes yessoo yessu

      நீக்கு
    4. வந்துட்டாங்கையா...வந்துட்டாங்க... நான் என்ன குடியரசு தினத்துக்கா அடை பண்ணுகிறேன்?

      இன்னைக்கு கடைல செம்பா பச்சரிசியும், தொலி உளுந்தையும் வாங்கிக்கொண்டு வந்து, அடைக்கு ஊறவைத்து அரைத்து, இப்போதான் சாப்பிட்டுவிட்டு வருகிறேன். சூப்பர். எங்க அம்மா பண்ணுவது போலவே இருந்தது.

      நீக்கு
    5. கடைசிலே (ஆரம்பத்திலேருந்தே) சம்பா அரிசியைத் தான் சிவப்புப் பச்சரிசினு சொல்லிட்டு இருந்திருக்கீங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ஆனால் சிவப்பு அரிசி உண்டு.

      நீக்கு
    6. சிவப்பு அரிசியில் (இதுதான் சம்பா புழுங்கலரி/சம்பா பச்சை அரி) பச்சை அரிசியும் உண்டு புழுங்கலரிசியும் உண்டு. கோயிலில் பாயாசம் எல்லாம் இந்தச் சிவப்பு பச்சரிசியில்தான் செய்வாங்க...

      வேறு வகை சிவப்பு அரிசியும் உண்டு. செட்டி நாட்டு அரிசியும் உண்டு அதுவும் அடர் சிவப்பு அரிசிதான் நீளமா இருக்கும். வேறு வகையும் சிவப்பு அரிசியில் உண்டு. கறுப்பு அரிசியும் உண்டு...மூங்கில் அரிசி என்றும் உண்டு.

      கீதாக்கா சொல்லிருக்காங்க பாருங்க.

      நெல்லை நீங்க சொல்லிருக்கறது சம்பா அரிசி.

      இங்கு பச்சையும் கிடைக்கிறது, புழுங்கல் அரிசியும் கிடைக்கிறது.

      அடை இந்தச் சிவப்புப் புழுங்கலரிசியில் செய்தால் நன்றாகவே வருமே..தொலி உளுந்து போட்டுச் செய்வதுண்டு நம் வீட்டில்..

      கீதா

      நீக்கு
  6. மசூர் தால் மேத்தி அடை - சுவையான குறிப்பு...

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி மேலோங்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  8. மசூர் தால் முன்னெல்லாம் அடிக்கடி சமைப்பேன். அதிலும் நாங்க ராணுவத்தில் ரேஷன் வாங்கினப்போ இதுவும் முழுக் கறுப்பு உளுந்தும் கட்டாயமாய்க் கொடுப்பாங்க. அதன் பின்னர் குறைந்து போய்விட்டது. இப்போ அம்பேரிக்கா போனால் மருமகள் சாதாரண அடைக்கே மசூர் தால், கொள்ளு எல்லாம் சேர்ப்பாள். நான் இப்போ வாங்குவது இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மசூர்தால் நல்லதா? உடல் பிரச்சனை வராதா? நம்ம ஊர் துவரம்பருப்புக்குப் பதிலா, விலை குறைவான மசூர் தால் உபயோகிக்கிறார்கள் என்று பல வருடங்களுக்கு முன்பு நம்ம ஊர் ஹோட்டல்கள் மீது புகார் வந்த நினைவு.

      நீக்கு
    2. நானும் அந்த மசூர் டால் விஷயம் படித்திருக்கிறேன்.

      நீக்கு
    3. மசூர் பருப்பு தான் கேசரி பருப்பு... ன்னு
      நாமகரணம் ஆனது..

      அரசு சத்துணவு பருப்பு இது தான்.. பசங்களுக்குக் கொடுக்குறது தாராளமா வெளியே கிடைக்குது... ன்னும் பேசிக்குறாங்க..

      நீக்கு
    4. ஆனால் மசூர்ப்பருப்பில் புரதம் அதிகம் என்று படித்த நினைவு!

      நீக்கு
    5. ஒரு காலத்தில் மசூர் தால் அதிகம் சாப்பிட்டால் பக்கவாதம் வரும் என்றார்கள்,இப்போது உடலுக்கு நல்லது என்கிறிர்கள்.

      நீக்கு
  9. சிறு தானிய அடை நிறையப் பண்ணி இருக்கேன். வரகு, தினை, சாமை, குதிரைவாலி, சோளம், மக்காச் சோளம், கேழ்வரகு எல்லாமும் போட்டு அவல் சேர்க்காமல் பண்ணி இருக்கேன். அவல் சேர்த்திருப்பதால் பானுமதிக்கு அடை கொஞ்சம் மிருதுவாக வந்திருக்கலாம். எனினும் சாப்பிடச் சுவையாகத் தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  10. அடை செய்முறை மிக எளிமையாகவும் சுருக்கமாகவும் கொடுத்திருக்காங்க. சாப்பிடவும் நன்றாகவே இருந்திருக்கும். வாழ்த்துகள் பானுமதி.

    பதிலளிநீக்கு
  11. சிவப்பு அரிசியில் தான் நான் கஞ்சி போடுகிறேன். மருமகள் சிவப்பு அரிசி தான் சமைத்துச் சாப்பிடுகிறாள். அதிலேயே இட்லி, தோசையும் பண்ணுவாள். ஆனால் பாஸ்மதியில் சிவப்பு அரிசினு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. நானும் வெந்தயக்கீரை அடை, சப்பாத்தி, பருப்பு உசிலி, பகோடா எனப் பண்ணி இருக்கேன். மசூர் தாலில் அடையே செய்யாததால் அதில் போடவில்லை. :) மசூர் தால் சப்பாத்திக்கு தாலாகப் பண்ணினாலும் சுவையாக இருக்கும். முன்னெல்லாம் இந்தப் பருப்பை அரைத்துத் தான் மைசூர்ப்பாகு பண்ணுவார்கள் என மைசூர்ப்பாகின் சரித்திரத்தில் படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ!..
      செம்பருப்பை அரைத்துத் தான் மைசூர் பா செய்வார்களா!!..

      இன்றைக்கு தஞ்சாவூர் அசோகாவை மரிக்கன் மாவுக்கு மாற்றிய மாதிரி அதையும் கடலை மாவுக்கு மாற்றி விட்டார்கள் போலும்!...

      அசோகாவில் உள்ளீடு பருப்பு வகைகள் கிடையாது..

      வெந்து குழைந்த பயற்றம் பருப்பு தான் எக சக்ராதிபதி!..

      இன்றைக்கு அதில் கடுகு கறிவேப்பிலை தாளித்துக் கொட்டலாம் என்று சொல்லாதது தான் பாக்கி!..

      நீக்கு
    2. மரிக்கன் மாவா? கேள்விப்பட்டதே இல்லை. இலங்கையில் ராகி/கேப்பை மாவை குரக்கன் மாவு என்பார்கள்.

      அசோகா அல்வாவுக்கு பயத்தம்பருப்பு மட்டும்தான். நல்லா நெய், ஜீனி சேர்த்துச் செய்து, நல்லாவே சாப்பிட்டால் ருசி மற்றும் டயபடீஸ் கேரண்டி..ஹாஹா

      நீக்கு
    3. ஆ!..
      மரிக்கன் மாவு எது என்று தெரியாதா!..

      விளக்கம் கொடுக்க கீதா அக்கா அவர்கள் மேடைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்!..

      நீக்கு
    4. /அவர்கள் மேடைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்!..// - அரசியல் தலைவர்கள், இதோ வருகிறார்கள், வந்துகொண்டிருக்கிறார்கள்...வந்துவிட்டார் போன்ற அறிவிப்பு போன்றதுதான் இதுவும்.

      அவங்க சாவகாசமா சாப்பிட்டு முடித்துவிட்டு, 1 1/2-2 மணிக்கு வரலாம், அதை விட்டுவிட்டால் மாலை 4 1/2 மணிக்கு மேலதான்.

      துரை செல்வராஜு சார்... காலைல 8 1/2 மணிக்கே இதோ வந்துகொண்டிருக்கிறார்னு அறிவிப்பு செய்ய ஆரம்பிச்சாச்சு

      நீக்கு
    5. haahaahaahaa, maida mavu than marikkan mavu! hehehehehe Before independence it was called American Mavu/marican mavu.

      நீக்கு
    6. அதே போல ஜாவாவிலிருந்து வந்ததால் ஜாவா அரிசி என அழைக்கப்பட்டது ஜவ்வரிசியானது. பனஞ்சாறோடு மைதாவைக் கலந்து ஜவ்வரிசி என்னும் பெயரில் தயாரிப்பதாகவும் செய்திகள் சொல்கின்றன.சாகு எனப்படும் ஒரு வகைப்பனைமரச்சாறின் காய வைத்த மாவையே ஜாவா அரிசி எனப்படும் ஜவ்வரிசி என்பார்கள். இப்போதெல்லாம் மரவள்ளிக்கிழங்கு மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. முதலில் மைதா மாவு கிடைக்காத காரணத்தால் இரண்டாம் உலகப்போர் சமயம் மைதாவுக்கு மாற்றாகப் பயன்பட்ட மரவள்ளிக்கிழங்கு மாவு பின்னர் ஜவ்வரிசியாகத் தயாரிக்கப்பட்டு வியாபாரத்தில் சக்கைப் போடு போட்டது/போடுகிறது. யுனானி மருத்துவத்தில் ஜவ்வரிசிக் கஞ்சி முக்கியப் பங்கு வகிக்கிறது.

      நீக்கு
    7. யப்பா!...
      சொன்னவை யாவும் தகவல் பொக்கிஷம்!.

      மரவள்ளிக் கிழங்குக்குப் பதிலாக
      வேறு ஏதோ காட்டுக் கிழங்கும் மாவு ஆக்கப்படுவதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன்..

      கடைசியில்,
      நாம் தான் இளித்த வாயர்கள் / புன்னகை மன்னர்கள்...

      பசைக்கு ஆகும் மாவில் எல்லாம் பலகாரம் செய்பவர்கள் ஆயிற்றே நாம்!..

      நீக்கு
  13. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    வாழ்க நலம் என்றென்றும்..

    பதிலளிநீக்கு
  14. செம்பருப்பு அடை ..
    வாய்ப்பு கிடைக்கும் போது செய்து பார்க்கிறேன்...

    பதிலளிநீக்கு
  15. "மசூர் தால் மேத்தி அடை" மிக அருமையாக இருக்கிறது.

    செய்முறை படங்களுடன் நன்றாக இருக்கிறது, செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. https://tinyurl.com/on8q38d இந்தச் சுட்டியில் போய்ப் பார்க்கலாம். மைசூர்ப்பாகின் மூலம் எதுவென்று. பதிவும் எழுதி இருக்கேன். அந்தச் சுட்டியை இப்போது தேட முடியலை. :))))

    பதிலளிநீக்கு
  17. இன்றைக்கு என் கை பக்குவமா? பயணத்தில் இருப்பதால் இப்போதுதான் பார்த்தேன். ரசித்து,கருத்து கூறிய அனைவருக்கும் நன்றி. தாமதத்திற்கு மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  18. பானுக்கா சூப்பர் ரெசிப்பி. நேற்று இரவு வாசித்தேன் அதான் இப்போதுதான் கருத்து போட முடிந்தது. நல்லா வந்திருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!