சென்ற வாரம் வெளியிட்டிருந்த படங்களில் கடைசி படத்தை zoom செய்து பார்த்திருந்தால், ' அப்புறம் என்ன ஆயிற்று' என்ற கேள்விக்கு விடை கிடைத்திருக்கும்!
அவர், பின்னாலேயே வந்துகொண்டிருந்தார்.
பறவைக் கூட்டமும், படகு சவாரியும் மேலும் ஒரு முதலையும்!
தூங்கறாரோ ?
பல்லு பயங்கரமா இருக்கு !
சிரிக்கிறாரோ ?
தாயும் சேயும் நீளம் !
படகில் செல்பவர்கள் பயமின்றி பயணிக்கின்றனர்
பறவைகளுக்கும் பயம் இல்லை
இவருக்குக் கூட பயம் இல்லை!
========
காலை வணக்கம். இன்றைய படங்கள் நன்று
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், என்ன சொல்வதுனு புரியலை. என்றாலும் விடாமல் பதிவு வெளி வந்ததுக்குப் பாராட்டுகள். உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். இனி வரும் நாட்கள் நல்லபடியாகக் கழியப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குஎன்ன செய்வது? விதி. எங்கள் சோகங்களை இங்கே பகிர்ந்து வாசகர்களை வருத்தத்தில் ஆழ்த்தவேண்டாம் என்பதால் ஏற்கெனவே வரிசைப்படுத்தியபடி பதிவுகள் வெளியாகின்றன.
நீக்குவணக்கம் சகோதரி
நீக்குஎன்னவாயிற்று? விபரம் புரியாமல் மனது கலக்கமாக உள்ளது. இப்போதுதான் இங்கு வருகிறேன். ஒன்றும் புரியவில்லையே..!
@கமலா, திரு கௌதமனுக்கு நேர் மூத்த அண்ணனும், நம் ஸ்ரீராமின் அக்கா கணவருமான திரு விஸ்வேஸ்வரன் கொரோனாவுக்குச் சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று மாலை காலம் ஆனார். ஶ்ரீராமின் அக்காவும் அதே மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். எனக்கு ஶ்ரீராமின் அக்கா கணவர்,(ஶ்ரீராமின் தாய்மாமா) பல வருடங்களாக முகநூல் நண்பர். அவர் மூலம் பல அரிய நட்புகளும் கிடைக்கப் பெற்றிருக்கிறேன். நல்ல மனிதர்! மனசு ஆறவே இல்லை. :(
நீக்குவணக்கம் சகோதரி
நீக்குஅடாடா.. தாங்கள் அளித்த விபரம் இப்போது அறிந்து பின் மிகவும் வருத்தமாக உள்ளது. காலையில் எனக்கு ஏதும் விபரங்கள் தெரியாதாகையால், இங்கு வழக்கமாக எப்போதும் போல் வந்ததும் எல்லோரின் கருத்துகளும் மிகவும் மனச்சஞ்சலங்களை தந்தது. அதனால்தான் உங்களிடம் விபரம் கேட்டேன்.தெரிவித்தமைக்கும் நன்றி.
அன்னாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவர் பிரிவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் அவரது இழப்பை தாங்கும் மனவலிமையை இறைவன் தந்தருள வேண்டும். காலம் அவர்களது துயரங்களை குறைக்க வழி வகுக்க வேண்டும். பிராத்தனைகள் செய்வோம்.
அனைவருக்கும் அன்பின் வணக்கம்...
பதிலளிநீக்குவணக்கம்.
நீக்குகாலம் காயங்களை ஆற்றும்...
பதிலளிநீக்குசோகங்களைக் கடந்து செல்ல இறைவன் அருள் புரிவானாக...
ஆறுதல் கூறியதற்கு நன்றி.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குவிபரம் ஏதும் தெரியவில்லை.. வந்த கருத்துக்கள் கலக்கமளிக்கின்றன. அனைவரும் நலமே வாழ பிரார்த்திக்கிறேன்.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குஇறையருள் துணையுடன் பயணம் தொடர வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇனிவரும் நாட்கள் நல்ல நாட்களாக இருக்கட்டும் கௌதமன் ஜி.
பதிலளிநீக்குதயக்கத்துடனேயே வந்தேன். உங்கள்
நல்ல தீர்மானமாகப் பதிவும் வெளிவந்தது.
அருமையான படங்கள்.
தங்கள் சேவை தொடரட்டும்.
எனது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன் ஜி
பதிலளிநீக்குஆழ்ந்த இரங்கல்கள்...
பதிலளிநீக்குஆழ்ந்த அனுதாபம்.
பதிலளிநீக்குஅனைவரின் நலனையும் வேண்டுகிறோம்.
ஸ்ரீராமுக்கு தாய் மாமா என்று மட்டும் தெரியும் , அக்கா கணவர் என்று நீங்கள் சொல்லி தான் தெரியும்.
பதிலளிநீக்குகெளதமன் சார் முகநூலில் பகிர்ந்து இருந்தார்கள், நீங்கள் பகிர்ந்து இருந்தீர்கள் வருத்தம் தெரிவித்தேன்.
குடும்பத்தினர் அனைவருக்கும் இறைவன் ஆறுதலையும், தேறுதலையும் தரவேண்டும். ஸ்ரீராமின் அக்கா விரைவில் உடல் நலம்பெற்று வர வேண்டும்.
எல்லோருமே பழக்கமானவர்கள் தானே!இன்னொரு மாமா கேஜிஎஸ்ஸின் மைசூர்ப் பயணம் தான் பாதியில் படங்கள் போடுவது நின்றிருக்கிறது. அது வேறே கவலை! எங்கேனு கேட்டதுக்கு வருவார்னு கேஜிஜி பதில் அளித்திருந்தார். :(
நீக்குசில நாட்களுக்கு முன்பு தான் இச்சூழலைப் பற்றி ஸ்ரீராம் அவர்களும் நானும் பேசிக் கொண்டிருந்தோம்..
நீக்குமிகுந்த வேதனைக்கிடையில் நோயின் பிடியிலிருந்து மீண்டு வருவார் என்றொரு நம்பிக்கை இருந்தது.. ஆனால்
காலம் வென்று விட்டது...
நேற்றுதான் பின்னூட்டம் மூலம் அறிந்தேன் இந்த சோதனையான காலகட்டத்தில் இறைவன் உங்கள் குடும்பத்தாருடன் துணை இருக்க வழிநடத்த பிரார்த்திக்கின்றேன் .
பதிலளிநீக்குஆழ்ந்த இரங்கல்கள்
பதிலளிநீக்கு