வெள்ளி, 13 நவம்பர், 2020

வெள்ளி வீடியோ : எனது நிலையை எடுத்துச் சொல்ல தூது போ என் கண்ணே

ரங்கராட்டினம்.  1971 இல் வெளிவந்த படம்.  சௌகார் ஜானகி தயாரித்து நடித்து தோல்வியடைந்த படம்.  படம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று அப்போது சொன்னாராம் சௌகார்.  அஸ் யூஷுவல் நான் படம் பார்க்கவில்லை.

அதே சமயம் இப்படத்தின் பாடல்களைத் தவற விடவும் இல்லை!



வி. குமாரின் இசையில் மூன்று நல்ல பாடல்களைக் கொண்ட படம்.  சௌகாருடன் ஜெமினி, ரவிச்சந்திரன் முதலானோரும் நடித்திருந்த படம்.

இம்மட்டுமே இந்தப் படம் பற்றிய விவரங்கள் அறியக் கிடைக்கின்றன.  

இந்தப் படத்தின் பாடல்களை வாலி எழுதி இருக்கக் கூடும்!

  முதல் பாடல் முத்தாரமே..   உன் ஊடல் என்னவோ.  ஏ  எம் ராஜாவும் எல் ஆர் ஈஸ்வரியும் பாடி இருக்கும் இந்தப் பாடல் அப்போது மிகப்பிரபலம்.  சிலோன் ரேடியோவில் மிக அடிக்கடி ஒலிபரப்பான பாடல்களில் ஒன்று.





அடுத்து வரும் இரு பாடல்களும் எஸ் பி பி பாடல்கள்.  முதலாவதாக "ஒரு மல்லிகை மொட்டு"

இந்தப் பாடல் குமார் ஒரு ஹிந்திப் பாடலிலிருந்து (ஆரம்ப இசை உட்பட) உருவி இருக்கிறார் என்று தோன்றும் எனக்கு.  கட்டிபதங் படப்பாடலான யே ஜோ மொஹப்பத் ஹை பாடல் அப்படியே நினைவுக்கு வரும்.  நீங்களும் இங்கு தொட்டு கேட்டுப்பார்க்கலாம்.  எனக்கு மிகவும் பிடித்த கிஷோர்-ஆர் டி பர்மன் பாடல்களில் ஒன்று அது. 

அதேபோல இந்தப் பாடல் கேட்கும்போதெல்லாம் அலலது இந்தப் படப்பாடல்கள் கேட்கும்போதெல்லாம் தஞ்சை ராஜேந்திரா தியேட்டர் நினைவுகள் வந்துவிடும் எனக்கு! 

ஒரு மல்லிகை மொட்டு மழைத்துளி பட்டு 
சில்லென பூத்தது இதழ் விட்டு 
சில்லென பூத்தது இதழ் விட்டு 
அதன் புன்னகை பட்டு தன் மனம் கெட்டு 
கொஞ்சிட வந்தது குளிர் காற்று 
கொஞ்சிட வந்தது குளிர் காற்று

கோடை மழையில் வாடைக்காற்றில் 
குளிரெடுக்கிற மாது 
ஆடை கொஞ்சம் விலகி நின்று 
அழகைக் காட்டும் போது 
தளிர் போன்ற இளமேனி தொடும் ஆசை கொண்டு 
குளிராமல் கொதிக்கின்ற மனம் ஒன்று உண்டு

ஊரறிந்த திருடன் என்று பேர் எடுத்ததுண்டு 
பொருளுக்காக பொன்னுக்காக திருடப் போனதுண்டு 
உடலோடு உருவான பசியொன்று உண்டு 
விருந்தாக நீ உன்னை பரிமாறு இன்று



இதுதான் இன்று நான் பகிர நினைத்த பாடல்.  இதைப் பகிரும் இதே படத்தில் இருக்கும் இன்னும் இரண்டு நல்ல பாடல்களையும் விடுவானேன் என்று மேலே உள்ளஇரண்டு பாடல்களையும் பகிர்ந்து விட்டேன்.  பாடலின் Bhaaவம் முழுக்க எஸ் பி பியின் குரலில் வெளிப்படும்.

தங்கத்தொட்டில் பட்டு மெத்தை 
தாய் வீட்டிலே 
பாசம் மட்டும் உண்டு எந்தன் 
தாலாட்டிலே 

தன்னைத்தானே மறந்திருந்தாள் 
உன்னை ஈன்ற அன்னை 
திரும்பி வந்த நினைவிருந்தும் 
மறந்ததென்ன என்னை 
இமையை விழிதான் மறப்பதுண்டோ 
காட்சி வந்த பின்னே 
எனது நிலையை எடுத்துச் சொல்ல 
தூது போ என் கண்ணே 

கண்ணன் வந்தான் நண்பனுக்குத் 
தேரோட்ட அன்று 
தந்தை வந்தான் பிள்ளைக்காக 
காரோட்ட இன்று 
வானில் உள்ளே தேவன் இந்த 
விந்தை கண்டு சிரிப்பான் 
வாழ்ந்து பார்க்க வேளை வந்தால் 
நம்மை ஒன்று சேர்ப்பான் 


69 கருத்துகள்:

  1. காலை வணக்கம்.

    மல்லிகை மொட்டு சூப்பர் பாடல். மற்றதைப் பிறகு கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவும் வாழ்த்துகள், பிரார்த்தனைகள். நாளை தீபாவளி கொண்டாடப் போகும் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள். தொடரும் தொற்று அகலப் பிரார்த்திக்கிறோம். இனி வரும் நாட்கள் மங்கலம் பொங்கியவையாக அமையவும் வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதன் கேள்வி - ப்ரார்த்தனை பண்ணறோம்..நிறைய தடவை..ஆனால் எதுவும் நடப்பதில்லை. அது நடக்கும்போதுதான் நடக்கும். அப்போ ப்ரார்த்தனையால் என்ன பயன்?

      நீக்கு
    2. மனோதைரியம் கிடைக்கும் பிரார்த்தனையால்!

      நீக்கு
    3. வாங்க கீதா அக்கா... வணக்கம்.  நெல்லை கேட்ட அதே கேள்வியை நான் நான்கைந்து நாட்களுக்கு முன்தான் பாஸிடம் கேட்டேன்.  அவரின் சமீபத்தைய பிரார்த்தனைகள் எதுவும் நடக்கவில்லை என்று...!

      நீக்கு
    4. விதி போட்ட முடிச்சு நாம் அறியாத ஒன்று. அதற்கும் பிரார்த்தனைகள் பலிக்கவில்லை என்பதற்கும் சம்பந்தம் ஏதும் இல்லை. என்றாலும் பேரிழப்பைத்தாங்குவது கஷ்டம் தான்!:( மனசு ஆறாது. :(

      நீக்கு
  3. 3 பாடல்களுமே கேட்டாப்போலயும் இருக்கு, இல்லை போலவும் இருக்கு. ரங்கராட்டினம் என்றொரு நாவல் வந்திருக்கோ? அல்லது குடை ராட்டினம்? படம் வந்தது நினைவில் இல்லை. ஆனால் பாடல்களை எப்போவோ கேட்டிருக்கேன் போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் காலத்தில் விவித பாரதி வர்த்தக ஒலிபரப்பு விளம்பரங்களில் கேட்டிருப்பீர்கள்.

      நீக்கு
    2. கீசா மேடம் பின்னூட்டம் படித்தால் எனக்கு வடிவேலு ஒரு படத்தில் 'கண்ணதாசனா காளிதாசனா' என்றெல்லாம் குழப்பிச் சொல்கின்ற ஜோக்குகள் நினைவுக்கு வருகின்றன.

      ரொம்ப குழந்தையாவே நம்மை நினைத்துக்கொள்வதால் ஒருவேளை பூர்வ ஜென்ம நினைவுகள் வருதோ என்னவோ

      நீக்கு
    3. நெல்லையாரே, கீழே ஏகாந்தனின் பதிலையும், மனோ சாமிநாதனின்பதிலையும் படியுங்கள்.

      நீக்கு
    4. கீதா அக்கா சொல்வது போல ஏதோ தலைப்பு நானும் கேள்விப்பட்ட மாதிரி இருந்தது..  பாடல்கள் அடிக்கடி கேட்கப்பட்டிருக்கும் - இலங்கை வானொலி உபயம்.

      நீக்கு
    5. //கல்கியில் வெளியான எஸ்.ரங்கநாயகியின் 'குடை ராட்டினம்'.// குடை ராட்டினம் தான் எஸ்.ரங்கநாயகி எழுதி இருக்கார். இதே தலைப்பில் தேவிபாலாவும் எழுதி இருப்பதாய்த் தெரிகிறது. ரங்க ராட்டினம் காலச்சக்கரம் நரசிம்மா எழுதினது.

      நீக்கு
  4. அன்பு ஶ்ரீராம்.இனிய காலை வணக்கம். நல்ல படம். ரங்க ராட்டினம் . கோவையில் பார்த்தோம். இதே மூவரும் காவியத் தலைவியிலும் வந்தார்கள். எனக்குக் கதை நினைவில்லை் சௌகார் அம்னீசியா நிலையில். தாயாவார் அப்புறம் என்ன என்று மறந்து விட்டது. பாட்டுகள் நினைவில். மிக நல்ல பாடல்கள். அதுவும் நம் எஸ் பி பி. குரல். என்ன இனிமை. தத்தி ஓடும.பட்டுக்குயில் போல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சௌகாருக்கு மட்டுமா அம்னீசியா !!

      நீக்கு
    2. வாங்க வல்லிம்மா...   வணக்கம்.  நான் படம் பார்க்கவில்லை!

      நீக்கு
    3. கௌதமன் ஜி. எனக்கும் தான்.
      அம்னீஷியாவா பைத்தியமா தெரியவில்லை:))))))))))))

      நீக்கு
    4. நன்றி ஸ்ரீராம்.
      என்றும் நலமுடன் இருக்கணும்.

      நீக்கு
  5. முத்தாரமே. ராஜாவின் முத்தான பாடல். அதே போல ரவிச்சந்திரன் தன் குழந்தைய்யிடம் பாடுவது போல தங்கத் தொட்டில்........மிக ரசித்தேன் மா.

    பதிலளிநீக்கு
  6. அமெரிக்காவில் வெள்ளிக் கிழமை தீபாவளி கொண்டாடுபவர்களுக்கும், சனிக்கிழமை. இந்தியாவில் கொண்டாடுபவர்களுக்கும்ம். மனம் நிறை வாழ்த்துகள். என்றும் ஒளி நிறைந்திருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    நலம் வாழ்க என்றென்றும்..

    பதிலளிநீக்கு
  9. எதிர் வரும் நாட்கள் எல்லாம்
    நல்லபடியாக அமைய எல்லாம் வல்ல
    இறைவன் இன்னருள் புரிய வேண்டுவோம்!..

    பதிலளிநீக்கு
  10. Not impressed by the songs, lyrics.. sorry.

    ரங்கராட்டினம் என்றொரு படம் அப்போது உலவியது நினைவில் இருக்கிறது. தியேட்டர்போய் படம்பார்ப்பதை விடவும், திரைப்பாடல்களில்தான் ஒரு கவர்ச்சி இருந்தது. அப்போதைய பசியை வீட்டிலிருந்த Bush Radio தீர்த்துவைத்தது.
    சௌகார் ஜானகி! விஜயகுமாரிக்கப்புறம் தமிழ்த் திரைக்கு வந்த பேரழுகை, புலம்பல்! சொந்தப் படமா? சனி திசை நடந்துகொண்டிருந்ததோ!

    ரங்கராட்டினம் - காலச்சக்கரம் நரசிம்மாவின் நாவல். கீதாஜியின் அனுமானம் சரிதான்.
    படம் பார்க்கவில்லை, நாவல் படித்ததில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏகாந்தன், ரங்கராட்டினம் நரசிம்மாவின் நாவல் படிச்சிருக்கேன்.ஆனால் நான் சொன்னது அல்லது சொல்லநினைத்தது கீழே மனோ சாமிநாதன் சொன்னது.

      நீக்கு
    2. வாங்க ஏகாந்தன் ஸார்...   பாடல்கள் ரசிக்கவில்லையா...  சரி!

      நீக்கு
    3. மல்ல்ல்லிகை மொட்டு இனிமை.
      சில வார்த்தைகள் பிடிக்காது தான்.

      SPB kkaaka கேட்கலாம். வாலியின் வரிகள்.
      என்ன செய்யலாம்!!!!!:(

      நீக்கு
    4. யே ஜோ மொஹபத் ஹை.....ஆஹா. என்ன ஒரு பாடல். ஆமாம் நீங்கள்
      சொன்ன பிறகு இசை ஒத்துப் போவதை ரசிக்க முடிகிறது.!!!!!

      நீக்கு
  11. அமெரிக்கவாழ் இந்தியப் பெருமக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துகள்.
    பட்டாஸ் இல்லையெனினும், வீட்டில் கொஞ்சமாகவாவது ஸ்வீட் பண்ணி சாப்பிடவும். அதிகாலை கங்கா ஸ்நானத்துக்கு இதயம் நல்லெண்ணெய் கிடைக்கும்தானே!
    புதுத்துணிகள் உடுத்திக்கொள்ள கொரோனா தடை ஏதும் போடவில்லையே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக மிக நன்றி ஏகாந்தன் ஜி.
      சாயந்திரமா புதுசு போட்டுக்கலாம்.
      குளிர்.... மத்தாப்பு கூட வாங்க முடியவில்லை:)
      பட்சணம் எல்லாம் தயார் ஆகிண்டு இருக்கு. லேகியம்
      ரெடி. மனங்கொம்பு,அதிரசம் வந்து கொண்டிருக்கு.
      இந்தையாவில் எல்லோருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.

      நீக்கு
  12. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!
    அனைவருக்கும் முன்னதாகவே இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. முத்தாரமே பாடல் மிக இனிமையானது. மற்ற இரண்டு பாடல்களும் கேட்டதாக நினைவில்லை.
    ஐம்பது வருடங்களுக்கு முன் ரங்கநாயகி என்ற எழுத்தாளர் கல்கியில் ரங்கராட்டினம் என்ற நாவல் எழுதியிருப்பதாக நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா! தகவலுக்கு நன்றி.

      நீக்கு
    2. ஆமாம், "பொன்னியின் செல்வன்" இரண்டாம் முறையாக வெளியானப்போ எஸ்.ரங்கநாயகி எழுதி வந்தது. "குடை ராட்டினம்(?)" என என் நினைவு. எதுக்கும் பார்க்கிறேன்.

      நீக்கு
    3. நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
    4. குடை ராட்டினம், எஸ்.ரங்கநாயகி பின்னர் தேவிபாலா!

      நீக்கு
  14. மல்லிகை மொட்டு அடிக்கடி கேட்ட பாடல் ஜி

    பதிலளிநீக்கு
  15. 'ஒரு மல்லிகை மொட்டு...' எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

    பதிலளிநீக்கு
  16. மூன்றுமே அடிக்கடி கேட்ட பாடல்கள், இனிமையான பாடல்கள் குறிப்பாக முதலிரண்டும். நீங்கள் ஏற்கனவே ஒரு முறை ரங்கராட்டினம் படப்பாடலை பகிர்நதிருக்கிறீர்கள் என்று நினைவு. அவ்வளவு பிடிக்குமா?

    பதிலளிநீக்கு
  17. //சௌகார் ஜானகி! விஜயகுமாரிக்கப்புறம் தமிழ்த் திரைக்கு வந்த பேரழுகை, புலம்பல்// நான் கூட சிறு வயதில் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் மிக நல்ல நடிகை என்பது பிறகுதான் புரிந்தது. கனமான,ஆழமான நடிப்பு!சிவாஜியின் பல படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அவர்கள் இருவரின் நடிப்பும் complementry to each other ஆக இருக்கும். பாமா விஜயம், எதிர் நீச்சல், தில்லுமுல்லு போன்ற படங்களில் நகைச்சுவையில் பின்னி பெடலெடுத்திருப்பார். புதிய பறவை, உயர்ந்த மனிதன் போன்ற படங்களில் மிகவும் வித்தியாசமான நடிப்பு!உயர்ந்த மனிதன் படத்தில் இவர் நடிப்பை மிகவும் ரசித்தேன். ஒரு திறமையான நடிகையை ஒரு சட்டத்திற்குள் அடைத்தது திரையுலகம். சுஜாதாவிற்கும் அதையே செய்தது.

    பதிலளிநீக்கு
  18. முன்பு மூன்று பாடல்களும் கேட்டு இருக்கிறேன் அடிக்கடி.
    அருமையான பாடல்கள்.

    பதிலளிநீக்கு
  19. முத்தாரமே பாடல் கேட்டிருக்கிறேன் (எந்தக் காலத்திலேயோ... நிச்சயமாக 40+ வருடங்களுக்கு முன்பு - போன ஜென்மமோ?). மூன்றாவது பாடல் இன்றுதான் கேட்கிறேன்.

    அந்தக் காலத்திலெல்லாம் ரேடியோவில் பாட்டு போட்டால்தான் அது பிரபலமாகும். ரேடியோவில் போடணும்னா படம் வெற்றி பெற்றிருக்கணும் இல்லை பாட்டு வெற்றி பெற்றிருக்கணும்.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாடல்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. இந்தப்படம் கேள்விட்டுள்ளேன். பார்த்ததில்லை. முதலில் பாடல்களை படித்துப் பார்த்ததும் கேட்காத பாடல்கள் மாதிரி இருந்தது. ஆனால் எல்லாப் பாடல்களையும் கேட்டதும், அந்தக் கால சிலோன் ரேடியோவில் அனைத்தையும் கேட்டு ரசித்த நினைவுகள் வந்து விட்டது. அப்போது ள்ள் காலம் வானம்பாடி பறவை. இப்போது கடமை + வேலைகளில் மூழ்கி இதோ.. இப்போதுதான் கேட்க முடிந்தது. அருமையான பாடல் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  21. இனிமையான பாடல்கள்...

    SPB அவர்களின் குரல் சொல்கிறது மனதின் உருக்கத்தை...

    பதிலளிநீக்கு
  22. அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
    வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  23. எங்கள் ப்ளாக் அட்மின்கள் ,வருகை தரும் அனைத்து பதிவர்கள், வாசகர்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினர் மற்றும் உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
    "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
    இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
    எல்லாம் கைகூடி வந்து
    என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
    தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!