மாய நோட்டு 3/4
ஜீவி
[ 3 ]
பொழுது விடிந்து சோம பானம் உள்ளே சென்ற பிறகு எக்னாமிக் டைம்ஸ் அரை மணி நேரத்திற்கு என்னை படாத பாடு படுத்தி விடும். ஷேர் மார்க்கெட் நிலவரம் என்றாலே பொடி எழுத்துக்கள் தான். இதற்காகவே ஒரு பூதக்கண்ணாடி வைத்திருக்கிறேன்.. பெரும்பாலும் NSE-யில் தான் என் இன்வெஸ்ட்மெண்ட் எல்லாம்.
ஷேர் மார்க்கெட் துவங்குவதற்கான ஆரம்ப பெல் இசைக்கும் போதே டிவி முன்னாலே பேப்பர் பேடும் பேனாவுமாய் உட்கார்ந்தாச்சு. அசோக் லேலாண்ட் 15 ரூபா என்று 1000 ஷேர் வாங்கிப் போட்டிருந்தேன். இந்துஜா க்ரூப்பின் மேல் ஒரு நம்பிக்கை இருந்தாலும் 20-யைத் தாண்டாத அதன் அழிசாட்டியத்திற்கு அளவே இல்லாமல் இருந்தது. நேத்திக்கு 25 ரூபா இருந்த போது ஒழிச்சுக் கட்டிடலாம்ன்னு தோணித்து.. நல்ல வேளை, விக்கலே.
இன்னிக்கு பார்த்தா 45 ரூபா. நம்பவே முடியலே. அசோக் லேலாண்டின் சரித்திரத்தில் உட்சபட்ச ஏற்றம். விற்று விட வேண்டுமென்ற தீர்மானம் உருப்பெற்று ஃபோனை எடுத்து பாண்டி பஜார் ப்ரோக்கர் ஆபிஸைக் கூப்பிட முயன்றால் நம்பர் எங்கேஜ்டாக இருந்தது.. இன்னும் இரண்டு எண்கள் உண்டு. இன்னொரு எண்ணுக்கும் அதே நிலை. மூன்றாவது எண்ணுக்கு ரிங்கே போகவில்லை. ச்சை! பதட்டம் கூடியது.
45 ரூபா 43-க்கு இறங்கிய பொழுது எரிச்சலாக வந்தது. ஷேருக்கு இரண்டு ரூபான்னா ஆயிரம் ஷேருக்கு 2000 ரூபா. இரண்டே நிமிஷங்களில் இரண்டாயிரத்தை விட்டுக் கொடுப்பதா என்ற பதட்டத்தின் ஊடே, 43 ரூபா 40-க்குப் போன போது தொய்ந்து போனேன். சரி, வந்த வரைக்கும் லாபம் என்று ப்ரோக்கர் ஆபிஸைக் கூப்பிட்ட பொழுது தொலைபேசியில் ரிங் போய்க் கொண்டே இருந்தது.
'சீக்கிரம் எடுத்துத் தொலைங்கய்யா..' என்று மனம் அரற்றியது.. எஸ். ப்ரோக்கர் ஆபிஸில் ஃபோனை எடுத்து விட்டார்கள். தொடர்பு கிடைத்த சந்தோஷத்தில், "ஜீவி பேசறேன்.. அசோக் லேலாண்ட் 1000 ஷேர் செல்லிங்.." என்று சொல்லிக் கொண்டே இருக்கையில் தொலைக்காட்சித் திரையில் அசோக் லாண்ட் விலை 50 என்று பளிச்சிட்டு அம்புஜா சிமிண்ட்.. அப்பல்லோ என்ற சுற்றலுக்கு நடுவே... "ஜீவி சார்.. உங்க நம்பர் வி--56 தானே.. அசோக் லேலாண்ட் 52-லே இருக்கு. 1000 ஷேர் தானே, வித்துடலாமா?" என்று குமரன் குரல் கேட்டது. "எஸ். குமரன்.. கொடுத்துடுங்க.." என்று நான் சொல்லி முடிக்கும் போது, "52.50--க்கு கொடுத்தாச்சு ஸார்.." என்றார் குமரன். "தேங்க்யூ.. குமரன்.." என்று முகம் மலர ஃபோனை வைத்தேன்.
'இரண்டு வாரத்திற்கு முன் 15-க்கு வாங்கினதை 52.50-க்கு வித்தாச்சு. ப்ரோக்கரேஜூக்கு 2-50 போனாலும் ஷேருக்கு 35 ரூபா தேறியிருக்கு. இரண்டே வார இடைவெளியில் 35000 ரூபா லாபம்' என்று மனம் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கையில் கண்கள் தொலைக்காட்சி சேனலில் ஷேர் விலைகளின் ஓட்டத்தில் நிலைக்குத்தியிருந்தன. எல் அண்ட் டி என்றுமில்லாத குறைச்சல் விலையில் ரூ.700-ல் இருந்தது. டாடா ஸ்டீல் ரூ.80/- டி.ஸி.எஸ். 800/- என்று எல்லாமே இறக்க விலையில். 'என்ன ஆயிற்று இன்றைக்கு?.. வழக்கமா ஜானகி முகத்திலே தானே முழிப்போம்?' என்ற சந்தோஷத்தினூடே உற்சாகமானேன்.
வந்த லாபம் முப்பஞ்சாயிரத்தை எல் அண்ட் டி-க்கும் டிஸிஎஸ்ஸூக்கும் பகிர்ந்தேன். அந்த வியாபாரத்தை முடித்து விட்டு, "ஜீவி ஸார்.. டாக்டர் ரெட்டி லாப் வேணுமா? இறங்கு முகத்தில் தான் இருக்கு.. லோயஸ்ட்டு ரேட் இன் தி லாஸ்ட் 24 வீக்ஸ்.." என்றார் ராவ்.
"கொஞ்ச நேரம் பாத்துட்டு சொல்றேன், ராவ்ஜி.." என்றேன். ராவ் இன்னொரு ஊழியர். பல நேரங்களில் சரியான ஆலோசனைகள் சொல்லி வழி காட்டியிருக்கிறார்.
ஒரு பிடி கிடைக்கவில்லை. ஏறுவதும் இறங்குவதுமாக மார்க்கெட் இருந்தது. 'இன்னிக்கு இது போதுமோ?' என்ற நினைப்புக்கு எதிர் குரலே உள்ளுக்குள் இல்லாமல் இருந்தது.
"போச்சு.. டிவி முன்னாடி உக்காந்தாச்சா?.. கூப்பிட்டா கூட காதுலே விழாதே?.. தட்டு போடட்டுமா?" என்று கேட்டுக் கொண்டே ஜானு என் ரூமுக்குள் வந்தாள்.
"ஜானு இன்னிக்கு 35000 லாபம்.. எவன் தருவான், சொல்லு., டிவி முன்னாடி உக்காந்தாச்சான்னு சலிச்சுக்கிறியே?" என்றேன்.
"இன்னிக்கு லாபம் சரி.. நேத்திக்கு 20000 நஷ்டம்ன்னீங்களே. இந்த முப்பஞ்சாயிரத்திலே அந்த 20000த்தை கழிச்சிக்க வேண்டாமா?" என்றாள் ஜானு.
"பங்குச் சந்தையே அப்படித்தான் ஜானு. லாபம் வரும் பொழுது சந்தோஷிக்கறதும், நஷ்டம் வரும் பொழுது அதை ஈடுகட்ட இன்னும் இன்வெஸ்ட்மெண்ட் பண்றதும்.. 'ஷேர் விலை குறைஞ்சா வாங்கு; கூடினா வித்துடு'ங்கற சுலபமான தாத்பரியம் தான். கூடினா இன்னும் கூடுமோன்னு எதிர்பார்க்கிறோம். இறங்கினா மட்டும் இன்னும் இறங்கிடுமோன்னு பயந்திண்டு வித்திடறோம். இரண்டையும் சமமா பாவிக்கிறத்துக்கு மனசு ரெடியாச்சுனா ஜெயித்துக் கொண்டே இருக்கலாம்.." என்றேன்.
"எதைச் சொல்லு.. அதுக்கு ஒரு தத்துவ விளக்கம்.. என்னிக்குத் தான் இந்த குணம் உங்களை விட்டுப் போகப் போறதோ தெரிலே.." என்று ஜானு தோளில் முகத்தாடையை இடித்துக் கொண்டு நழுவினாள். சரியான கில்லாடி.. அப்படி நழுவலேனா அந்த 35000 லாப சந்தோஷத்தில் தலை கால் புரியாமல் தான் நான் ரீஆக்ட் பண்ணுவேன்னு அவளுக்கு தெரிஞ்சுதான் இருக்கு.
"தட்டுப் போட்டாச்சு.." என்று ஜானுவின் அறிவிப்பு இங்கு கேட்டது. எழுந்திருந்தேன்.
மாலையில் ப்ரோக்கர் ஆபிஸிலிருந்து முத்து கூப்பிட்டார். எல் அண்ட் டி, டிஸிஎஸ் வாங்கிய கணக்கில் எவ்வளவு பணம் நான் செலுத்த வேண்டும் என்று சொன்னார். குறித்துக் கொண்டு உடனே அதற்கான தொகையை ஆன்-லைன் டிரான்ஸ்வரில் ப்ரோக்கர் ஆபிஸூக்கு அனுப்பி வைத்தேன்.
அடுத்த நாள். இன்னிக்கு எப்படியும் 'அந்த' நோட்டை செலாவணியாக்கி விடவேண்டும் என்ற உத்வேகம் காலை பல் தேய்க்கும் பொழுதே மனசில் உருக்கொண்டது.
அதனால் சோமபானம் அருந்தியதும் பீரோவைத் திறந்து பிளாஸ்டிக் டப்பாவுக்குள் நோட்டோடு நோட்டாக வைத்திருந்த 'அந்த' நோட்டை பர்ஸுக்கு மாற்றினேன். அந்த நோட்டுக்குத் துணையாக இன்னும் நான்கு ஐநூறு நோட்டுகளை எடுத்து வைத்துக் கொண்டேன். பீரோவிலிருந்து பர்ஸூக்கு பணத்தை மாற்றி விட்டேன் என்றால் அந்தப் பணம் வெளிச்செலாவணிக்கானது என்பது என்னைப் பொருத்த மட்டில் தீர்மானமான ஒன்று. வெளியே கிளம்பும் பொழுது ஞாபக மறதியில் காலி பர்ஸூடன் கிளம்பி விடாமலிருக்க இந்த முன் ஏற்பாட்டை செய்து விடுவது என் வழக்கம்.
டிவியில் மார்க்கெட் சுறுசுறுப்பாக ஆரம்பித்து விட்டது. கொஞ்ச நேரத்திலேயே அதல பாதாளத்திற்கு ஷேர்களின் விலை இறங்கிய பொழுது நேற்று வாங்கிய எல் அண்ட் டி-யை நல்ல விலை வந்தால் இன்று விற்று விடலாம் என்ற கணக்குக் கோட்டை தகர்ந்தது. டிஸிஎஸ்ஸும் சேர்ந்து இறங்கிய பொழுது சமாளிக்க முடியாத நஷ்டம் கணக்கு போட்டுப் பார்த்த பொழுது தெரிந்தது. இதை சமாளிக்க வேண்டுமானால் இந்த இரண்டிலும் இன்னும் கொஞ்சம் வாங்கிப் போட வேண்டும்.
ஷேர் ஆபிஸைக் கூப்பிட்ட பொழுது முத்து தான் லயனில் வந்தார். விஷயத்தைச் சொன்னேன். அடுத்த ஐந்து நிமிடங்களில் எல் அண்ட் டி, டிஸிஎஸ் இரண்டிலும் தலைக்கு 50 வாங்கியாச்சு. நேற்று வாங்கிய விலையில் பாதிக்கும் குறைந்த விலையில் இன்று வேலை முடிந்தது. கைவசம் இருக்கும் மொத்த ஷேர்களின் விலை மதிப்பை அன்றைய தேதி விலையில் கணக்கிட்டேன். கிட்டத்தட்ட மூன்று இலட்ச ரூபாய் மதிப்பில் இருந்தது. இந்த அளவே போதும் இதற்கு மேல் இன்வெஸ்ட் பண்ண வேண்டாம் என்று தீர்மானித்தேன்.
மாலையில் ப்ரோக்கர் ஆபிஸுக்கு பணத்தை ஆன்லைனில் அனுப்பி விட்டு ப்ரோவைத் திறந்த பொழுது தான் தோன்றியது. இன்றைக்குத் தான் வெளியே போகவில்லையே என்று பர்ஸிலிருந்த ஐந்நூறுகளை பிளாஸ்டிக் டப்பாக்குள்ளேயே வைத்தேன்.
அடுத்த நாள் நடந்தது தான் அதிசயம். என்ன மாயம் நடந்ததோ தெரியவில்லை, ஷேர்களின் விலை கிடுகிடுவென்று ஏற ஆரம்பித்தன. நாள் பூராவும் இறக்கமில்லை. மதியம் இரண்டரை மணி வாக்கில் உச்சத்தைத் தொட்டன. எனக்கு ஏற்பட்ட குஷியில் குமாருடன் தொடர்பு கொண்டு கைவசம் இருந்த அத்தனை ஷேர்களையும் விற்று விட்டேன். நல்ல லாபம். 'நகரத்தில் எங்கே நரி முகம், விழிக்க?' என்று ஆச்சரியமான ஆச்சரியம்.
அந்த நோட்டு என்னிடம் வந்த தருணத்திலிருந்து நடந்தவைகளை யோசித்துப் பார்த்தேன். வங்கியில் கொடுத்த நோட்டுகளோடு நோட்டாகத் தான் அந்த நோட்டும் என்னிடம் வந்தது. நெருப்பு சுட்ட நோட்டு என்றதும் முரளி லாலா கடையில் அதை கைகழுவப் பார்த்தேன். என் திட்டம் பலிக்கவில்லை.. என்னிடமே தான் திரும்பி வந்தது. அடுத்து அந்த பிச்சைக்காரனுக்கு பத்து ரூபா கொடுக்க பர்ஸைத் திறக்கும் பொழுது இந்த நோட்டு அவன் தரையில் விரித்திருந்த துணியில் விழுந்து.... விழுந்து?...
நடந்ததை நினைவில் புரட்டிப் பார்க்க விஷயம் புரிபட்டுப் போனது.. 'தர்மம் என்றால் பத்து ரூபாயே அதிகம்.. இதை நீங்களே வைச்சிக்கங்க..' என்று துணியில் விழுந்ததை தன் கையால் எடுத்து என்னிடமே தந்தானே..' என்று நினைவு ஓடியது... அப்படியானால்... அப்படியானால்... 'அந்த' நோட்டில் அவன் கைபதிந்த அதிர்ஷ்ட்டம் தானா இது? நிறைய ரூபாய் நோட்டுகளுடன் இது சேர்ந்து இருக்கும் பொழுது நான் வாங்கிய ஷேர்களின் விலைகள் மட்டும் ஏறி கங்கை வெள்ளம் போல நோட்டு வெள்ளமாய் பெருகுகிறது... அந்த நோட்டுக் கத்தையிலிருந்து இந்த நோட்டை பிரித்தெடுத்து வேறு இடத்திற்கு மாற்றி விட்டால் ஷேர்களின் விலைகள் குறைந்து நஷ்டம் ஏற்படுகிறது.. 'அந்த' நோட்டை இப்படி மாற்றி மாற்றி வைப்பதின் மூலம் என்னைப் பொறுத்த மட்டில் என்னிடம் இருக்கும் ஷேர்களின் விலைகளை ஏற்றலாம்; குறைந்த விலைக்கு வாங்கவும் செய்யலாம் என்று புரிபட்டுப் போனது. இரகசியத்தை கண்டு பிடித்த ஜோரில் 'யுரேகா!..' என்று என்னை அறியாமல் கத்தி விட்டேன்.
"ஏதோ சப்தம் கேட்ட மாதிரி இல்லை?' என்ற ஜானு இங்கேயும் அங்கேயும் பார்த்தபடி உள்ளே நுழைந்தாள்.. என்னைப் பார்த்து, "நீங்களா கூவினது?" என்று ஒரு மாதிரி என்னைப் பார்த்தாள்.
ஜானுவின் நெருக்கத்தில் கை பரபரத்தது.. "என்ன சொன்னே? கூவினதா?.. இந்த பாஷைலாம் எங்கேயிருந்து கத்துக்கறே?" என்று அவள் கை பற்றினேன்.
"வயசு ஏற ஏற முரட்டுத்தனமும் கூடற மாதிரித்தான் இருக்கு..." என்று நெளிந்தாள். "அந்த ரெண்டு டப்பாவையும் ஒளிச்சு வைச்சிட்டா எல்லாம் சரியாயிடும்.." என்று நழுவப் பார்த்தாள்.
"எந்த ரெண்டு டப்பாவை?" என்று கைப்பிடியை விட்டேன்.
"அதான்.. அந்த ஜாதிக்காய் டப்பாவையும், பாதாம் பருப்பையும்... "
"நீ வைச்சிக்கிற ஜாதி மல்லிகையை விட்டுட்டையே?" என்றேன்.
"பாத்தேளா.. பூன்னதும் தான் ஞாபகம் வர்றது.. பூக்காரிக்கு காசு கொடுக்கணும்.. ஒரு இருநூறு ரூபா கொடுங்கோ,," என்றாள். ஜானுவுக்கு பணத்தை எடுத்துக் கொடுக்கும் பொழுதே ஞாபகமாக அந்த நெருப்பு சுட்ட நோட்டை யாருக்கும் கொடுத்து விடக்கூடாது என்று பிளாஸ்டிக் டப்பாவிலேயே நோட்டோடு நோட்டாக பத்திரப்படுத்தினேன்.
முகம் அலம்பித் துடைத்து என்னை அலங்கரித்துக் கொள்ளும் போதே, "எங்கே வெளிலே கிளம்பறேளா?" என்றாள் ஜானகி.
"ஆமாம். உனக்கு என்னமானும் வேணுமா?"
"அந்த முரளி கடைப்பக்கம் போனா ஏதாவது ஸ்வீட் வாங்கிண்டு வாங்கோ.." என்று பட்டும் படாதது மாதிரி சொன்னாள்.
"நான் வாங்கிண்டு வர்றது இருக்கட்டும்; உனக்கு என்ன வேணும், அதைச் சொல்லு." என்றேன்.
"சொல்றேன்.. ஆனா அதை வைச்சு வேறே ஏதானும் ப்ளான் போடக் கூடாது.. தெரிஞ்சதா?" என்று எனக்கும் அவளுக்கும் தெரிஞ்ச விஷயத்திற்கே கொக்கி போட்டாள்.
"சரி.. நீ சொல்லு.." என்று புன்முறுவலுடன் சொன்னேன்.
"காஜூலே கொஞ்சம் வாங்கிக்கோங்க.. அப்புறம் திரட்டிப்பால் கொஞ்சம்.. அப்புறம்?.."
"அப்புறம்?.."
"உங்களுக்கு எதெல்லாம் பிடிக்குமோ அதெல்லாம். நம்ம ரெண்டு பேருக்கும் பிடிச்சதெல்லாம் கலந்து இருக்கட்டும்.. என்ன?" என்று குழைவாகச் சொன்னாள்.
"நீ கேட்டு நான் வாங்கிண்டு வராம இருந்திருக்கேனா?.. சொல்லு.." என்று இணக்கமான ஒரு அஸ்திரத்தைப் பிரயோகித்து விட்டு, உடைமாற்றி, ஞாபகமாக பர்ஸை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.
[ தொடரும் ]
அன்பு ஸ்ரீராம் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குகதை பணம், ஷேர் மார்க்கெட் ரொமான்ஸ்னு
போகிறதோ:)
வாங்க வல்லிம்மா... வணக்கம்.
நீக்குவாங்க, வல்லிம்மா.
நீக்குகதை, பணம், ஷேர் மார்க்கெட் எல்லாம் இந்தக் கதையைப் பொறுத்த மட்டில் சரி தான். கட்டக் க்டசியாக சொல்லியிருக்கிறீர்களே, அந்த ரொமான்ஸ் அது மட்டும் புதுசில்லை. எப்பொழுதும் என் கதைகளில் ஊடும் பாவுமாய் கலந்திருப்பது தான். இந்தக் கதையைப் பொறூத்தமட்டில் அந்த வயதான தம்பதிகளின் நெருக்கமான அன்புக்கு ரொமான்ஸ் என்று பெயரிடுவது சரியோ, தெரியவில்லை.
ஆமாம். சரிதான்.ஜீவி சார்.
நீக்குசரி தான் என்றால் எந்த நோக்கத்தில் அந்த தம்பதிகள் என் மனசில் உருவானார்க்ள் என்பதனையும் சொல்ல வேண்டும். ஓஷோவின் சிந்தனைகளில் வயதான தம்பதிகளின் இந்த மாதிரியான நெருக்கங்களின் அவசியத்தை வலியுறுத்தி நிறையவே சொல்கிறார். இந்த மாதிரியான அனுதின attitude-கள் வயதான தம்பதியரின் உடல், மன ஆரோக்கியத்திற்கு ஒரு மருந்தாக செயல்படும் என்று ஓஷோ பரிந்துரைக்கிறார். விவரமாக தனி கட்டுரை எழுதுமளவுக்கு இது பற்றி என்னிடம் விவரங்கள் உண்டு. இருந்தும் இந்த அளவில் லேசாக கோடி காட்டி முடித்துக் கொள்கிறேன். இதற்கு ரொமான்ஸ் என்று பெயரிடலாமா என்றால் தாராளமாகச் செய்யலாம். வரவேற்கிறேன்.
நீக்குஇறைவன் அருள் என்றும் செழித்திருக்கட்டும்.
பதிலளிநீக்குநாடுகளில் நிலவும் அரக்கத்தன நோய் விலகி
சுபம் பரவட்டும்.
நல்ல தலைமையை நம்பி நாடிருக்கும் நிலமை.
நன்மை நிலைக்கட்டும்.
ட்டும்... ட்டும்....
நீக்குஷேர் மார்க்கெட் இத்தனை சுவாரஸ்யமாக இப்போதுதான் படிக்கிறேன்.
பதிலளிநீக்குசார், ஓய்வு பெற்றவரா...வேலைக்குப் போகிறவரா.
சந்தேகம்.
//எழுபத்து ஐந்து வயதுக்கு மேலாகி விட்டதல்லவா, இந்த தேசத்தில் எந்த மருத்துவ காப்பீடு திட்டங்களுக்கும் லாயக்கற்ற வயது. அல்லது அவர்கள் சீந்தாத வயசு. //
நீக்குஜி. விஸ்வநாதன் பற்றி முதல் அத்தியாயத்தில் இந்தத் தகவல் சொல்லப் பட்டிருக்கிறது. விஸ்வம், விச்சு என்றெல்லாம் நண்பர்கள் வட்டாரத்தில்
பிரபலமான விஸ்வநாதன் பணி ஓய்வு பெற்றவர் தான்.
//ஷேர் மார்க்கெட் இத்தனை சுவாரஸ்யமாக இப்போதுதான் படிக்கிறேன்.//
நீக்குவல்லிம்மா, எனக்கு ஷேர் மார்க்கெட்டுடன் இருந்த இருபது வருடத்திற்கு மேலான நட்பு (சகவாச தோஷம்?) இந்த சுவாரஸ்யத்தைக் கொடுக்க உதவியிருக்கிறது.
அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொடரும் நோய்த்தொற்றினால் மீண்டும் கதவடைப்பு நிகழாமல் கடந்து போக இறைவனைப் பிரார்த்திப்போம். பின்னர்/நாளை (?) வரேன்.
பதிலளிநீக்குசெளகரியப்பட்ட பொழுது வாருங்கள், கீதாம்மா.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குநலமே வாழ்க....
அன்பு உள்ளத்திற்கு வணக்கம்.
நீக்குநலமே வாழ்க, நீடூழி வாழக என்று நானும் பிரார்த்திக்கிறேன்.
ஷேர் மார்க்கெட் இப்பொழுதுதான் தகவல்களை அறிகிறேன்
பதிலளிநீக்குநன்றி
பங்குச் சந்தை நாட்டின், உலக பொருளாதார எழுச்சி வீழ்ச்சிகளோடு சம்பந்தப்பட்டது. மாஸ்கோவில் மழை பெய்தால் கம்யூனிஸ்ட்கள் மெட்ராஸில் குடை பிடிப்பார்கள் என்பது அண்ணாவின் வாக்கு.
நீக்குஇது பொதுவுடமைவாதிகளுக்குப் பொருந்துமோ இல்லையோ, பங்குச் சந்தைகளுக்கு மிகவும் நெருக்கமான வாசகம். உலகத்தின் எந்த மூலையிலோ நடக்கும் சிறு அசம்பாவிதம், இல்லை மேம்பாடு உலக பங்கு சந்தைகள் அத்தனையிலும் பிரதிபலிக்கும். அதனால் தான் பொருளாதார ஏற்ற தாழ்வுகளின் வரைபடமாக பங்குச் சந்தைகள் திகழ்கின்றன.
ஏனோ நம்மவர்களில் பலர் அதனை சூதாட்டக் கேந்திரமாகமாகவே கருதி வருகின்றனர். அது பற்றியதான பாடமோ, புரிதலோ மக்கள் மத்தியில் இல்லை என்பது வெளிப்படையான உண்மை.
நம் இந்தியாவைப் பொறுத்தமட்டில், பங்குச் சந்தைக்கு திலகமிட்ட இடம் போலத் திகழ்வது மும்பாய். அங்கு சிறு பெட்டிக்கடை அளவில் கூட பங்குச் சந்தையோடு உறவு பூண்டவர்களாய் திகழ்கிறார்கள்.
ஷேர் மார்க்கெட் -- அது ஒரு சுவாஸ்யமான வேற்றுலகம்!
கதை மூன்று பகுதிகளும் வாசித்துவிட்டேன். ஷேர் லாபம் கிட்டியதால் மாய நோட்டானதோ? இல்லை முடிவுப் பகுதியில் வேறு ஏதோ சொல்லப் போவது போல் தோன்றுகிறது.
பதிலளிநீக்குகீதா
கதைக் கடைகளை இழுத்து மூடுவதே முடிவுப் பகுதியில் தான். எல்லாக் கதைகளுக்கும் முடிவுப் பகுதிகளுக்கு அந்தளவுக்கு முக்கியத்துவம் உண்டு.
நீக்குஆனால் கடைசி வரை அந்த முடிவுப் பகுதி இன்னவாக இருக்கும் என்று வாசகர்கள் அறிந்து விடாதவாறு போக்குக் காட்டுவதிலேயே கதைகள் சிறப்பு பெறுகின்றன. துப்பறியும் கதைகளுக்கு மட்டுமல்ல வாசகர்களை சுவாரஸ்யத்தில் ஆழ்த்துவதர்கு சமூகக் கதைகளுக்கும் இந்த மாதிரி 'இரகசியம் காப்பது' தேவையாகத் தான் இருக்கிறது. இல்லையா, சகோ?..
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
பதிலளிநீக்குதூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று
இதற்கு மேல் என்னவென்று சொல்வது...?(~)
வழக்கமாக (கல்லாமை) நல்மக்களுக்கு உதவாத புராண இதிகாசக் கதைகள் போல், ஈயம் பூசின மாதிரியும் பூசாத மாதிரியும் இல்லாமல் இருக்கிறதா என்பதை :
இதற்கு மேல் அடுத்த பகுதி...(~)
வாசித்து விட்டு...(!)
கதை பங்கு சந்தை கள்பற்றி அதன் ஆனா இனா பற்றி ஏதும் தெரியாதவனுக்கு சிலவிஷயங்களை சொல்கிற்து இதெல்லாம் பொழுதுபோகாதுபணத்தை எப்படி பெருக்குவதென்று சொல்வதுபோல் இருக்கிற்து
பதிலளிநீக்குஜி.எம்.பி. ஐயா,
நீக்குஇந்தக் கதை மாய நோட்டைப் பற்றி.
கதைத் தலைப்பைப் பார்க்கவில்லை?
ஆனால் இந்தப்பதிவில் விளக்கி இருப்பது பங்கு சந்தைபற்றித்தானே
நீக்குஇது பதிவல்ல. ஒரு தொடர் சிறுகதையின்
நீக்குஒரு பகுதி. 3-வது பகுதி. ஒவ்வொரு பகுதியும் அந்த மாய நோட்டுடன் தொடர்பு கொண்டதாய் இருக்கிறது.
இந்தப் பகுதியை வாசித்தவர்களுக்கு அடுத்த பகுதியை வாசிக்காமல் இருக்க முடியாது. முடிந்தால் நீங்களே முயற்சித்துப் பாருங்கள், டி.டி.
பதிலளிநீக்குஎரிந்த நோட்டு பத்திரமாக பெட்டியில் உறங்குகிறது.ஒரு ஐநூறு ரூபாவின் பயணத்தால் பங்கு சந்தை லாபமும் மகிழ்ச்சியும் இனிப்புகளும் என மகிழ்ச்சியாக செல்கிறது வாழ்க்கை .
பதிலளிநீக்குபொறுப்போம் அடுத்த பயணம் ...
அடுத்த திருப்பத்தில் கதைத் தேர், நிலையை அடைந்து விடும், மாதேவி.
நீக்குஆனால் அடுத்து வருவது குறுகலான தெரு. அந்தத் தெருவை தேர் எப்படி கடக்கிறது என்று பார்க்கலாம். எப்படியிருப்பினும் தேர் எப்படிக் கடந்தது என்பது பற்றி பெரும்பாலோர் சொல்லப் போவதில்லை. சொல்லப் போனால் தேர் கடந்ததையே அவர்கள் கவனித்தார்களா, தெரியாது. வடம் பிடிக்க ஏன் ஆட்கள் இப்பொழுதெல்லாம் அதிகம் சேரமாட்டேன் என்கிறார்கள் என்று வேறு விஷயங்களில் அவர்கள் கவனம் போவது தான் வாடிக்கை.
ஏதோ மாயச் சக்கரம் சுழல்வது போல இருக்கிறது...
பதிலளிநீக்குகதையின் போக்கோடு பங்குச் சந்தை பற்ரிச் சொல்லியிருக்கின்றீர்கள்... ஆனால்
எனக்குத் தான் ஒன்றும் பிடிபடவில்லை...
அந்த நோட்டு எப்படி யதா ஸ்தானத்தை அடைகிறது என்று அடுத்த வாரம் பார்ப்போம்..
நலமே வாழ்க..
வாங்க தம்பி. அந்த நெருப்புச் சுட்ட நோட்டை எங்கேயாவது தள்ளி விட வேண்டுமென்று விஸ்வம் ஆனான பாடு பட்டார். இப்பொழுது தான் தெரிந்தது
நீக்குதன்னிடம் இருக்கும் அந்த நோட்டு அதிர்ஷ்ட்ட தேவதையாய் பணத்தை வாரிக் கொட்டுகிறது என்று. அதிர்ஷ்ட தேவதையின் அருட் கடாட்சம் பங்கு சந்தையின்
மூலம் அவருக்கு அருள் பாலிக்கிறது என்று தெரிந்ததும் எந்த நோட்டை எங்கேயாவது கழித்துக் கட்ட வேண்டுமென்று நினைத்தாரோ அதையே தவறிப் போய் கூட யாரிடமாவது இழந்து போய் விடக்கூடாது என்று பதுக்கி வைக்கிறார்.
விஸ்வத்திற்குப் புரிந்தது வாசகர்களுக்குப் புரிய வேண்டாமா?.. செல்வம்
பண மழையாய் பொழிந்தது என்று சாதாரணமாகச் சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா?.. அதற்குத் தான் அவ்வளவு பாடுபட்டு அந்தப் பங்கு சந்தை விவரிப்பு. பங்கு சந்தை அறிமுகமானவர்கள் இந்த நேரடி காட்சி வர்ணனையை பிரமாதமாய் ரசித்திருப்பார்கள் என்பது நிச்சயம். நமது எபி தளத்தில் பங்கு சந்தை அறிமுகம் கொண்டவர்கள் யாருமில்லை போலும்.
அசோக் லேலாண்ட் நிறுவன பங்குகள் பற்றி விவரிக்க ஆரம்பித்து தான் பங்குச் சந்தை விவரிப்பே தொடங்கியது. அதற்கும் காரணம் இருக்கிறது. தெரிந்தால்
நீங்களும் புன்முறுவல் பூப்பீர்கள்!! :))
நன்றி அண்ணா...
நீக்குஅசோக் லேலாண்ட் கெள. அண்ணனின்
நீக்குதிறமைகளை வளர்த்த இடம்.
ஷேர் மார்க்கெட் விவரம் தெரியாத ஒன்று.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரி
நீக்குநலமா? நீண்ட நாட்கள் கழித்து, உங்களை சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் பதிவில் முதலாக கண்டவுடன் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். தொடரும் தங்கள் கருத்துகள் மகிழ்வளிக்கின்றன. தொடர்ந்து வலைத்தளம் வாருங்கள்.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
காமாட்சி அம்மாவை மீண்டும் எங்கள் ப்ளாகில் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. நல்வரவு அம்மா. _/\_
நீக்குஅப்படியா காமாட்சி அம்மா! தாங்கள் இந்தக் கதையைத் தொடர்ந்து வாசிப்பதற்கு நன்றி. பின்னூட்டம் மூலமாக அதைச் சொன்னதற்கும் நன்றி.
நீக்குவணக்கம் ஜீவி சகோதரரே
பதிலளிநீக்குகதை நன்றாக பயணிக்கிறது. ஷேர் மார்கெட் விபரம் நன்றாக அறிந்து கொண்டேன். இதை நல்ல அனுபவப்பூர்வமாக ரசித்து எழுதியுள்ளீர்கள். நன்றி.
கடைசியில் அந்தச் செல்லாத ரூபாய் நோட்டு ராசியான அம்சத்தில் பத்திரபடுத்தி வைக்கப்பட்டது மனித இயல்பு. (அதற்கு நம்முடன் இருக்கும் மனது இருக்கும் வரை.. நான் கூறும் அதன் மனது, அதன் வேளை. நேரம்.. வரை அதுவும் நம்முடன் பத்திரமாக இருக்கும். ) அந்த இயல்புடன் தன்னை ஒன்றிணைந்து கொண்ட ஸ்வாரஸ்யத்துடன் அந்த ஐநூறு ரூபாய் நோட்டும் தங்கள் அருமையான எழுத்துடன் இனிமையாக பயணம் செய்கிறது./ செய்திருக்கிறது. அடுத்த வாரம் கதையின் முடிவை தெரிந்து கொள்ளும் ஆவலில் நானும் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
இரண்டு நாட்களாக கொஞ்சம் உடல் நலமில்லாததால், வலைத்தளங்களுக்கு வர இயலவில்லை. அதனால் தாமதம்...நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உடல் நலனை கவனமாகக் கவனித்துக் கொள்ளவும், சகோதரி! அதான் முக்கியம்.
நீக்கு'ஷேர் மார்க்கெட் விபரம் நன்றாக அறிந்து கொண்டேன்' என்று முதன் முதலாக ஒரு பின்னூட்டத்தைப் பார்த்து எனக்கோ ஏகப்பட்ட சந்தோஷம்.
ரசித்ததைப் பகிர்ந்து கொள்பவர்கள் தான் ரசனையாளர்கள். எந்தக் கலைப்படைப்புக்கும் ரசிப்பவர்கள் அதிகமாக இருப்பினும் அதை வெளிப்படப் பகிர்ந்து கொள்பவர்கள் குறைச்சலே. ரசனையின் பயன் அதைப் பகிர்ந்து கொள்வதே. அதனால் எத்தனையோ குறைபாடுகள் இருப்பினும் ஒவ்வொருவாரும் தன் சுய ஆக்கங்களை வெளிப்படுத்தத் துடிக்கும் இந்த மாதிரி இணைய தள எழுத்துக்கள் சோபிக்கின்றன.
மனித இயல்பை நேர்மறையாக ஏற்றுக் கொள்வதற்கும் ஒரு பக்குவம் தேவையாக இருக்கிறது. அந்தப் பக்குவம் உங்களுக்கு கைவரப் பெற்றிருப்பது இறைவனின் கொடையாகத் தான் நினைக்கத் தோன்றுகிறது.
நம்மிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொன்றிற்கும் நீங்கள் சொல்லியிருக்கிற மாதிரி நமக்கு அவ்வளவு லேசில் புலப்படாத அல்லது புரிபடாத ஏதோ காரணம் இருக்கத் தான் செய்கிறது என்பது உண்மை தான். அடுத்த வாரம் கதையின் நிறைவுப் பகுதி என்பதினால் அதற்கே உரித்தான நிறைவு அம்சமும் நிறைவாகத் தான் இருக்கப் போகிறது. இந்த தொடருக்கான முழுத் தோற்றமும் முழுமையாகத் தென்படப் போகிறது.
கொஞ்சம் ஹெவியாக சப்ஜெக்ட்டுகள் எடுத்தவுடனே பரவலான அறிமுகத்திற்குப் போய்ச் சேராது தான். இருந்தாலும் இந்தத் தொடரும் எபியின் கடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்த பகுதிக்குப் போய் சேர்வது அதற்கான இயல்புடன் நடக்கும்.
மன நிறைவான பின்னூட்டத்தை அளித்ததற்கு மிக்க நன்றி, சகோதரி!
கொஞ்சம் ஹெவியான சப்ஜெக்ட்டுகள் -- என்று திருத்தி வாசித்துக் கொள்ள வேண்டுகிறேன்.
நீக்கு//'அந்த' நோட்டில் அவன் கைபதிந்த அதிர்ஷ்ட்டம் தானா இது? //
பதிலளிநீக்குபேராசை இல்லாத நல்லமனிதன் கொடுத்த காசு கை ராசிதான்.
கடந்த இரு வார வாசிப்பிலும் அந்த நல்ல மனிதரைச் சுற்றியே உங்கள் நினைவுகள் குவிந்திருப்பதை என்னாலும் ஆழ்ந்து உணர முடிகிறது, கோமதிம்மா.
நீக்குஅடுத்த வார கதை நிறைவு அதற்கு மகுடமாக இருந்து மேலும் மேலும் உங்களில் எண்ண அலைகளைப் புரளச் செய்யும் என்பதை இப்போதே நானும் உணர்கிறேன். தங்களின் தொடர்ந்து வாசிப்புக்கும் உணர்ந்த பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி, கோமதிம்மா.