வெள்ளி, 6 நவம்பர், 2020

வெள்ளி வீடியோ : கனவினில் வந்தது கவிதைகள் தந்தது...

ஏகப்பட்ட விருதுகளை வாங்கி குவித்த மரியான் திரைப்படத்திலிருந்து பானு அக்கா ஒரு பாடலை நேயர் விருப்பமாகக் கேட்டிருக்கிறார்.  ஏ ஆர்  ரெஹ்மான் இசையில், விஜய் பிரகாஷ்,  ஸ்வேதா மோகன்  பாடிய பாடல்.  எழுதி இருப்பவர்கள் கபிலனும் ரஹ்மானும்.

==============================================================================================1985 இல் தேவராஜன் இயக்கத்தில் ராஜேஷ், சுரேஷ், நளினி, சுலக்ஷணா நடிப்பில் வெளியான படம் ராஜாத்தி ரோஜாக்கிளி.

இத்திரைப் படத்திலிருந்து ஏற்கெனவே ஒரு யேசுதாஸ் பாடல் பகிர்ந்திருந்தேன்.  "ஓடையின்னா நல்லோடை" பாடல் 

இப்போது இந்தப் பாடல்.  பாடல் கவிஞர் முத்துலிங்கம்.  இசை சந்திரபோஸ்.

காதலி நளினி விஸ்வரூபம் எடுத்து நிற்க, தத்தித்தடுமாறி அந்த விஸ்வரூப உருவத்தின் மேல் நின்று சுரேஷ் பாடுவது போல அமைந்த காட்சி அமைப்பு.  

எஸ் பி பி குரலும் தொடக்கம் முதல் வரும் தாளமும் ப்ளஸ் இந்தப் பாடலுக்கு.  எஸ் பி பி யின் இனிமையான பாடல்களில் ஒன்று,   சந்திரபோஸின் இனிமையான இசையில் ஒன்று இந்தப் பாடல்.

யாரோ 
மன்மதன் கோயிலின் மணித் தேரோ 
மானோ 
பொன்மணி நகையிலாச் சிலைதானோ 
கனவினில் வந்தது கவிதைகள் தந்தது 
ஆனந்தப் பூவில் வந்த தேனோ 

தாழம்பூ போல் செவியிலே 
தவழ்ந்து ஆடும் வகையிலே 
வானில் மின்னும் வெள்ளிமீன் போல் 
வைரத்தோடு பதிக்கிறேன் 
பாவை வண்ணக்கோவை -இதழ் 
பவளம் மெல்லத் திறக்குமோ  

நீலமேகக் குழலிலே 
பூவைச்சூடும் பொழுதிலே 
வெள்ளைத்திரை போல் நெற்றிமீது 
வண்ணத்திலகம் இடுகிறேன் 
பார்வை இசைக்கோர்வை - புதுப் 
பாடல் ஒன்று படிக்குமோ 

68 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

  மிக மிக அருமையான பாடல்.
  இப்போதுதான் கேட்கிறேன்.
  பானுமாவுக்கு நல்ல ரசனை.
  அழகான கதா நாயகி.
  இசையும் தனுஷின் நடிப்பும் அருமை.

  மிகவும் ரசித்தேன் மா. பானுவுக்கும் ,உங்களுக்கும்
  மனம் நிறை நன்றி.

  பதிலளிநீக்கு
 2. பொன்மணி நகையிலாச் சிலைதானோ ......

  உங்கள் விருப்பமாக வந்திருக்கும் பாடலும்
  எனக்குப் புதிதுதான்.
  நல்ல கற்பனை.

  எஸ்பி பியின் குரல் அமோகம்.
  மென்மையாக ஏறி இறங்குகிறது.
  கவிஞர் முத்துலிங்கத்தின் கவிதை என்றால்
  சொல்லவே வேண்டாம்.
  நளினி பெரிய உருவத்தைப் பார்த்தால் தான் சிரிப்பு வருகிறது:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் அம்மா. பாடலின் வெற்றியில் தொண்ணூறு சதவிகிதப் பங்கு எஸ் பி பிக்கு!

   நீக்கு
 3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!

  பதிலளிநீக்கு
 4. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 5. படத்தோட பெயரே தனுஷ் நடிச்ச படம்னு சொல்லுதே! ஆனால் இம்மாதிரிப் படங்கள் வந்ததெல்லாம் தெரியவே தெரியாது என்பதே உண்மை! பாட்டின் ராகம் நன்றாக இருக்கிறது. கீழே உள்ள படமும் நளினி நடிச்சதும் புதுப் பெயராவே இருக்கு! 85 ஆம் ஆண்டு என்பதால் குடும்ப சாகரத்தில் மூழ்கித்தத்தளித்துச் சுற்றுப்புறமே நினைவில் இல்லாத கால கட்டம். ஆகவே தெரிஞ்சிருக்கலைனு நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டாவது படத்தில் நான் முன்பு பகிர்ந்த பாடல் இதைவிட புகழ் பெற்றது.

   நீக்கு
  2. சில சமயங்களில் பாடலைக் கேட்டிருப்போம். படம் எதுனோ நடிகர்கள் யாருனோ தெரிந்திருக்காது. நீங்கள் முன்னர் பகிர்ந்த பாடல் அந்த ரகமோ?

   நீக்கு
  3. ஓடயின்னா நல்லாடை ஒளிஞ்சிருக்கப் பூஞ்சோலை தங்கப் பசுங்கிளிக்கு சாந்துப்பொட்டு வைக்கவேண்டும் தன்னன்னா என்கிற பாடல்.  யேசுதாஸ் குரலில்.

   நீக்கு
 6. இரண்டாம் பாடலைப் போனால் போகிறதுனு எஸ்பிபிக்காகக் கேட்கலாம். காட்சி அபத்தச் சிகரம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காட்சி எல்லாம் பார்க்கவே கூடாது கீதாக்கா..பாட்டு மட்டுமே கேட்கணும்!!

   கீதா

   நீக்கு
  2. நளினியை விஸ்வரூபம்னு போட்டதாலே பார்த்தேன். பயந்துட்டேன்! :)))))

   நீக்கு
  3. பாட்டு இனிமை தான் கீதா சகோதரி... விஜய் தொல்லைக்காட்சியில் இருவருமே வருகிறார்கள்... ஒருவருக்கு முடியே இல்லை(சுரேஷ்)... இன்னொருவருக்கு முடிவே இல்லை(நளினி)... இப்போதுள்ள இருவரின் நிலையை நினைத்துப் பார்த்தேன்... முருகா...! இதை விட சந்துக்குள் நுழைந்து ஆடு மாடு மேய்க்க வந்த ஆரியர்கள், முருகனைப் பற்றிப் பதிவு எல்லாம் போட்டு விளக்கம் கொடுப்பதெல்லாம் "கொடுஞ்செயல்" அதிகம் என்றே தோன்றுகிறது...!

   // மனிதமில்லாதவரை வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே! //

   நன்றி கீதா சகோதரி...

   நீக்கு
  4. காட்சி இரண்டாம் பட்சம்.  பாடலே முதல் பட்சம்.  கீதா சொல்லியிருப்பது போல...   நன்றி கீதா அக்கா.

   நீக்கு
  5. //இதை விட சந்துக்குள் நுழைந்து ஆடு மாடு மேய்க்க வந்த ஆரியர்கள்,//

   //மனிதமில்லாதவரை வம்பிழுப்பதுவே//


   இதுல என்ன சந்தோஷமோ...!

   நீக்கு
  6. கயிறு திரிக்கவந்தவர்களை வேற என்ன சொல்வது? தமிழன் என்று சொன்னால் இங்கு ஆதித் தமிழன் மட்டுமே இருக்கவேண்டும். பிற மதத்தவர்கள் (சமணம், புத்தம்) தெலுங்கர்கள், , செளராஷ்டரர்கள், கன்னடியர்கள் - எல்லாருமே இங்கு புகலிடம் தேடி வேற்று இடங்களிலிருந்து வந்தவர்கள்தாம். அவர்களுக்கும் இந்த மண்ணுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறதோ அது, தமிழ் நன்றாகத் தெரிந்த அனைவருக்கும் உண்டு.

   நீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  இன்றைய வெள்ளி படபாடல்கள் இனிமை.. ஆனால் இந்த இரு பாடல்களையும் நான் இது வரை கேட்டதில்லை. முதல் பாடல் படமாவது (மரியான்) கேள்விபட்டுள்ளேன். இரண்டாவது படம் தெரியவில்லை. ஆனால், எஸ்.பி.பி குரலில் பாடல் இனிமை. நளினியின் பிரமாண்ட உருவமும் அழகாகத்தான் உள்ளது. நான் இதுவரை அறிந்திராத இரு பாடல் பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 8. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
  நலம் வாழ்க என்றென்றும்...

  பதிலளிநீக்கு
 9. இன்றைய பதிவான பாடல்கள்
  இரண்டையும் கேட்டதில்லை...

  பதிலளிநீக்கு
 10. இரண்டாவது பாடலை மிகவும் ரசித்தேன்.

  மிஸஸ் ராமராஜனை இக்காட்சியில் இப்போது எடுத்தால் ???

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது எல்லா நடிக, நடிகையர்களுக்குமே பொருந்தும்.  நன்றி ஜி.

   நீக்கு
 11. mமுதல் பாடல் இனிமை முதல் முறையாககேட்கிறேன்இரண்டாம் பாடல் ஸோ ஸோ ரகம்

  பதிலளிநீக்கு
 12. என்னுடைய விருப்பப் பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி! நம்முடைய குழுவில் பலர் எழுபதுகளோடு நின்று விட்டோம். அவர்களுக்கு சமீப காலத்திலும் இனிய, கிராமீய  பாடல்கள்  வருவதை சொல்லலாம் என்று ஒரு ஆசை! 
  பாடகர் விஜய் பிரகாஷிற்கு ஒரு பிரேக் கொடுத்த பாடலாம் இது. ஒன்பது வருடங்கள் டிராக் பாடிக்கொண்டிருந்தாராம். எத்தனை  பொறுமை! ஸ்வேதா மோகனின் குரல் எவ்வளவு இனிமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கிராமியப் பாடல்? !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

   நீக்கு
  2. பானுக்கா மாடேர்ன் கிராமியப் பாடல்னு சொல்லலாமா?!!!!!இப்பத்தான் கிராமங்களும் நிறைய மாறிவிட்டனவே!!

   பாடகர் விஜய் பிரகாஷிற்கு ஒரு பிரேக் கொடுத்த பாடலாம் இது. // என்னாது?!!!! அவர் தான் ஏற்கனவே நிறைய பாடல்கள் பாடிவிட்டாரே. அதுவும் நான் கடவுள் படத்துல பாடியிருக்கிறாரே. அதுக்கும் முன்ன பூ வாசம் புறப்படும் முன்னே - அன்பே சிவம் - பாட்டும் இவர்தான் பாடியிருக்கிறார். ராவண் படம், எந்திரன் படம், எல்லாத்துலயும் தொடர்ந்து நிறைய பாடியிருக்கிறாரே ..பானுக்கா...

   எனக்கு மிகவும் பிடிக்கும் அவர் குரல். ரொம்ப அழகா பாடுவார். இவரும் ஃபீல் கொடுத்துப் பாடுவார். ஸ்வேதா மோஹன் கேட்கவே வேண்டாம் என்ன ஒரு வாய்ஸ்....வாய்ஸ் ப்ளஸ் அவங்க மனசும் அதைக் காட்டும் அந்தச் சிரிப்பும்...எனக்கு மிகவும் பிடிக்கும்.

   மோஹன் அவர்களூம் பாடுறார். கல்யாணங்களில். அவரும் சுஜாதாவின் கசினும் சேர்ந்து....ரொம்ப சிம்பிள். என் தோழியின் பெண் கல்யாணத்தில் பாடினார். ஹிந்திப்பாடல்கள் மலையாளப் பாடல்களும் பாடினார். கூட்டம் ஹிந்திப் பாடல்களை விரும்பியதால். மாப்பிள்ளைப் பையன் கேரளத்தவர்.

   கீதா

   நீக்கு
  3. எனக்கு இவங்க பெயர்களே புதிது. கேட்டதே இல்லை. ஜி.வி. பிரகாஷ் பற்றிக் கொஞ்சம் தெரியும். ஏனெனில் சைந்தவி எங்கள் உறவுப் பெண்ணுக்குப் புக்கக வழியில் சொந்தம். அதையும் நம்ம ரங்க்ஸ் தான் கண்டு பிடித்துக் காட்டிச் சொன்னார். அதனால் அவங்களைத் தெரியும். மற்றபடி இப்போதுள்ள புதிய பாடகர்கள், பாடகிகளைத் தெரியலை.

   நீக்கு
  4. //முன்ன பூ வாசம் புறப்படும் முன்னே - அன்பே சிவம் - பாட்டும் இவர்தான் - இந்தப் பாடலை பாடியிருப்பது ஸ்ரீராம் பார்த்தசாரதி. 
   நிறைய பாடல்கள் பாடியிருந்தாலும், சில பாடல்கள்தான் ஒரு அடையாளம் தரும். சின்மயி நிறைய பாடல்கள் பாடியிருக்கிறார், இருந்தாலும் சிவாஜியில் சஹானா சாரல் பூத்ததோ பாடளுக்குப் பிறகுதான் அவருக்கு மவுஸு அதிகரித்ததாம். கன்னத்தில் முத்தமிட்டால் படத்திலும் 'நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ..' பாடலும் 'குரு'வில் 'மையா மையா ..' பாடலும் அவருக்கு ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிய பாடல்கள் என்று அவரே சொல்லியிருக்கிறார். முதல் பாடலே புரட்சித் தலைவருக்கும் , சூப்பர் ஸ்டாருக்கும் பாடி ஸ்டார் அந்தஸ்தை அடைய எல்லோரும் எஸ்.பி.பி, யா? கார்த்தி கா? 

   நீக்கு
  5. //பானுக்கா மாடேர்ன் கிராமியப் பாடல்னு சொல்லலாமா?!!!!!//நீங்கள் மட்டுமல்லா, கீதா அக்காவும் கிராமீய பாடலா என்று வியந்திருக்கிறார். கிராமீய பாடல் என்றால் தாரை,தப்பட்டை எல்லாம் அதிர வேண்டுமா?  

   நீக்கு
  6. நன்றி பானு அக்கா, கீதா, கீதா அக்கா.

   நீக்கு
  7. கிராமியப் பாடல் எனில் கிராமிய மணம் கொஞ்சமானும் இருக்கணும் பானுமதி! இங்கே சகஜமான நகர வாழ்க்கையில் பயன்படுத்தும் அன்றாட வழக்குச் சொற்கள். இதைக் கிராமியம்னு சொல்வது எனக்கு என்னமோ புரியலை. இதை விட அந்தக் "காதோரம் லோலாக்கு" பாட்டில் கொஞ்சமானும் கிராமிய மணம் கமழும்.

   நீக்கு
  8. எனக்கும் அதை கிராமியப்பாடல் என்று சொல்வது சரி என்று தோன்றவில்லை!

   நீக்கு
 13. ராஜாத்தி ரோஜாக்கிளி என்று ஒரு படமா? இந்த பாடலையும்  கேட்டதில்லை. அதிகம் ஸ்கோப் இல்லாத இந்தப் பாடலிலும்  எஸ்.பி.பி. கடைசியில் ஒரு அழகான சங்கதி  போட்டிருக்கிறார். வடை அதிகம் பிடித்த தன்  தகப்பனாரைப் பற்றி என் தோழி ஒருமுறை,"பேப்பரில் வடை என்று எழுதிக் கொடுத்தால் கூட போதும், என் அப்பா அதையும் சாப்பிட்டு விடுவார்" என்றாள். அதைப் போல் எஸ்.பி.பி. என்று பெயர் இருந்தால் போதும், உடனே ஸ்ரீராம் அந்தப்  பாடலை சேமித்து விடுவார் போலிருக்கிறது.  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா...   ஹா...  ஹா...   பாடல் அவ்வ்வளவு மோசமாய் இருக்கா என்ன!  எனக்குப் பிடித்திருந்தது.

   நீக்கு
 14. முதல் பாடல் பல தடவை கேட்டிருக்கிறேன். இரண்டாவது பாடல் இப்பொழுது தான் கேட்கிறேன்.

  பதிலளிநீக்கு
 15. இரண்டு பாட்டுமே இப்பத்தான் கேட்கிறேன் ஸ்ரீராம்.

  முதல் பாட்டு இசை நல்லாருக்கு நல்ல மெலடி. சின்ன சின்ன கண்ணனுக்கு என்னதான் என்னதான் புன்னகையோ பாடலை நினைவுபடுத்துது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டு என்னதான் வந்துருச்சு தெரியாம....

   கீதா

   நீக்கு
  2. எனக்கு தாழையாம் பூ முடிச்சு.. பாடல் நினைவுக்கு வந்தது. அந்தப் பாட்டோடு இந்தப் பாட்டை எப்படி ஓப்பிடலாம் என்று யாரவது சண்டைக்கு வந்துவிடப் போகிறார்கள்? பயமாக இருக்கிறது. 

   நீக்கு
  3. தாழையாம் பூ முடிச்சு பாடலோடு இதை ஒப்பிட முடியுமா? அது க்ளாசிக்! இது அப்படி அல்ல! அந்த அளவுக்குத் தாழையாம் பூ முடிச்சுப் பாடலை இறக்கலாமா? :((((( (ஹாஹாஹா, சண்டைக்கு வந்துட்டேனே)

   நீக்கு
 16. ஹரிகாம்போஜி போல இருக்கு...முதல்பாடல்

  கீதா

  பதிலளிநீக்கு
 17. இந்த வாரப் பாடல்கள் இரண்டையும் கேட்டேன்... அவற்றில் மனம் லயிக்க வில்லை..

  ரா ரோ கி பப் பாடல்
  (ராஜாத்தி ரோஜாக்கிளி படப்பாடல்)
  இதற்கு ஆன பணத்தை வேறு வழியில் செலவு செய்திருக்கலாம்...

  விதி யாரையும் விட்டு வைத்ததில்லை!..

  பதிலளிநீக்கு
 18. இரண்டு நாட்களாக கில்லர்ஜி அவர்களது பதிவு தடை செய்யப்பட்டதாக வருகிறது...

  தலைத் துணி படத்துடன் Fb ல் இணைப்பு வந்த்து... ஆனால் தளம் கிடைக்கவில்லை என்று செய்தி வருகிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவ்வாறே எனக்கும்... ஆனால், முகநூலையும் "வாங்க" ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது என்பதே ஒரு காரணம்...

   நீக்கு
  2. எனக்கு கில்லர்ஜியின் பக்கம் திறக்கிறதே...

   நீக்கு
  3. எனக்கும் கில்லர்ஜியின் பக்கத்தில் பிரச்னை ஏதும் இல்லை.

   நீக்கு
 19. இரண்டாவது பாடல் எஸ்பிபி கலக்கல்...ஆரம்ப இசை சூப்பர்...இதுவும் வேறொரு பாட்டை நினைவுபடுத்துது ஆனால் இப்ப டக்குனு வரிகள் கிடைக்கலை...

  சந்திரகௌன்ஸ்/மதுகௌன்ஸ் தெரியுது என் மிக மிகச் சிறிய சிற்றறிவுக்கு எட்டியவரை....ஆனால் இடையில் கொஞ்சம் வேறு போகுது...

  கீதா  பதிலளிநீக்கு
 20. யாரோ மன்மதன் பாடல் மிளிர்வது எஸ்பிபி வாய்ஸ் அண்ட் கிமிக்ஸ் நாலதான்..

  கீதா

  பதிலளிநீக்கு
 21. // அந்த விஸ்வரூப உருவத்தின் மேல் நின்று சுரேஷ் // ஐயோ இதற்கு கமலின் "வானம் கீழ் வந்தாலென்ன...?" பாடலை பார்த்தது கற்று இருந்திருக்க வேண்டும்...

  பதிலளிநீக்கு
 22. பானுமதி அம்மா கேட்டிருக்கிற முதல் பாடல்...


  // இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன...?
  ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே...? //

  "இந்தக்கால பாடல்கள் உங்கள் ஞாபகத்திற்கு வராதா...?" என்பது போல் ஒரு கருத்துரை இட்டு இருந்தார்கள் - எப்போதாவது எட்டிப் பார்த்து உய்க்கும்; அதாவது கருத்துரை சொல்லும் ஒரு பதிவில் :

  "நான் என் செய்வேன்…? 2.0" என்று பதிவு எழுதினால், அப்போது இதை கேட்பொலியாக இணைப்போம் என்று நினைத்த பாடல்...! நன்றி... இந்த கருத்துரையை சொடுக்கி விடாதீர்கள்... எனது தள இணைப்பிற்கு சென்று விடுவீர்கள்...! இந்த நுட்பம் சொடுக்கினால் நாட்டை கெடுக்கும் காட்சியில் சேருவது போல், எனது தள இணைப்பிற்கு சென்று விடுவீர்கள்; நீங்கள் அறிந்தது தான்...! ஆனால், கற்றுக் கொண்டு நல்லதொரு வலைநுட்பத்திற்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்... அதற்கு நன்றி... அனைத்தும் நல்லதிற்கே என நினைக்கும் அனைவரின் புரிதலுக்கும் நன்றி... புரியாதது போல் செயல்பாடமைக்கு மிக்க நன்றி...

  பதிலளிநீக்கு
 23. உய்க்கும் என்றல் கருத்துரை சொல்லும் என்று அர்த்தமா?  ஓ....

  பதிலளிநீக்கு
 24. இரண்டு பாடல்களும் கேட்டு நாளாகி விட்டது.
  காணொளியாக இன்று தான் பார்க்கிறேன்.
  பாடல்கள் கேட்டு இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!