திங்கள், 25 ஜனவரி, 2021

"திங்க"க்கிழமை :  பச்சை மிளகாய்த் தொக்கு - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி 

 

 பச்சை மிளகாய் தொக்கு


தேவையான பொருள்கள்:




பச்சை மிளகாய்(பஜ்ஜி மிளகாய்)  -  5
சாதாரண பச்சை மிளகாய்               -   10
புளி         - ஒரு சிறு எலுமிச்சங்காய் அளவு
வெல்லம்  - பெரிய நெல்லிக்காய் அளவு 
உப்பு           - தேவையான அளவு 

செய்முறை:





முதலில் மிளகாய்களை சுத்தமாக கழுவி சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி அவைகளை புளியோடு சேர்த்து வதக்கி ஆறியதும் மிக்சியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து, தாராளமாக எண்ணெய்  விட்டு கடுகு தாளித்து, அரைத்து விழுதை அதில் போட்டு வெல்லத்தையும் சேர்த்து கிளறி எடுத்தால் மிளகாய் தொக்கு தயார். ஈரமில்லாத, காற்று புகாத டப்பாவில் எடுத்து வைத்துக் கொண்டால் இரண்டு வாரங்கள் வரை கெட்டுப் போகாது.  

இட்லி, தோசைக்கு தோதான சைட் டிஷ் இது!

61 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவும், வாழ்த்துகளும். வரும் நாட்கள் எல்லோர் மனதிலும் மகிழ்ச்சியையும், அமைதியையும் பரப்பட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டும்...   டும்...    வாங்க கீதா அக்கா..  வணக்கமும், நன்றியும்.

      நீக்கு
  2. அட? இது மாதிரி நிறைய செய்முறை கொடுத்திருப்பேனே! மிளகாய்த் தொக்கு இப்போல்லாம் பண்ணுவதே இல்லை. பல வருடங்கள் ஆகி விட்டன. இத்தோடு பச்சைக்கொத்துமல்லியையும் சேர்த்து வதக்கி அரைத்தால் கோபு ஐயங்கார் கடை சிறப்புச் சட்னி மத்தியானம் வெள்ளை அப்பம், பஜ்ஜியோடு கொடுக்கும் சட்னியாக ஆகிவிடும். அன்றே அரைத்து அன்றே வார்க்கும் புளியா தோசைக்கும் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே...   கோபு அய்யங்கார் கடை சட்னி இப்படிதான் செய்வார்களா?  

      நீக்கு
    2. யெஸ்ஸ்ஸோ யெஸ்ஸ்ஸு! நம்மவருக்கு இது பற்றித் தெரிஞ்சதும் இப்போல்லாம் இந்த சட்னி தான் அடிக்கடி! :))))

      நீக்கு
    3. அடடா.... எனக்குத் தெரியாமல் போய்விட்டதே... இந்த மாதிரி பின்னூட்டம் நிறைய எழுதியிருப்பேனே...

      கீசா மேடம்... பெரிய நெல்லிக்காய் அளவு வெல்லம்னு போட்டிருக்காங்களே... சரிப்படுமா? இப்படித்தான் கோபு ஐயங்கார் கடை சட்னி இருக்குமா?

      நீக்கு
    4. மாமியார் வீட்டுக்குச் சரிப்படும். மிளகாய்த் தொக்கில் வெல்லம் சேர்ப்பாங்க. ஆனால் நான் அரைக்கும் பச்சைமிளகாய்+கொத்துமல்லி வதக்கிய சட்னிக்கு வெல்லம் எல்லாம் தேவை இல்லை. கிண்டலா பண்ணறீங்க? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ஒரு தரம் பண்ணிப் பார்த்துச் சாப்பிட்டுப் பார்த்துட்டுச் சொல்லுங்க!

      நீக்கு
    5. சீரியசா சொன்னா கிண்டல்ங்கறீங்க. கலாய்த்தால் சீரியசா எடுத்துக்கறீங்க.

      செய்முறைல கொத்தமல்லி சேர்த்தால் கோபு ஐயங்கார் சட்னி வரும்னீங்க. செய்முறைல வெல்லம் இருக்கே. அதனால கேட்டேன்

      நீக்கு
    6. என்னோட செய்முறையிலே (கோபு ஐயங்கார் கடைச் சட்னி) வெல்லம் எங்கே சொல்லி இருக்கேன்? பானுமதி தான் போட்டிருக்காங்க. அதோடு இந்தச் சட்னிக்கு நாங்க பஜ்ஜி மிளகாயெல்லாம் பயன்படுத்த மாட்டோம்.அதிலே செய்யும் சப்ஜியே தனீ ரகம். இந்த நாட்டு மிளகாய்னு கேள்விப் பட்டிருக்கீங்களா? அதிலே தான் இந்தச் சட்னி எல்லாம்.

      நீக்கு
    7. எனக்கு கோபு ஐயங்காரையும் தெரியாது, அவர் கடையும் தெரியாது, அங்கு பரிமாறப்படும் சட்னி பற்றியும் தெரியாது. இது என் சம்பந்தி(மகளின் மாமியார்) நன்றாக செய்வார். அவர் கூறிய முறையில் செய்தது.

      நீக்கு
    8. //இது மாதிரி நிறைய செய்முறை கொடுத்திருப்பேனே!// கொடுக்க வேண்டும் கீதா அக்கா. இந்த மாதிரி சமையல் குறிப்புகள் எல்லாம் முதல் பெஞ்ச் மாணவர்களுக்கு இல்லை, கடைசி பெஞ்ச் மாணவர்களுக்குத்தான்.

      நீக்கு
  3. இன்னைக்கு நான் தான் போணி பண்ணி இருக்கேன். பார்த்துக் கொடுங்க சாமியோவ்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த தொக்கை அப்படியே நீங்களே எடுத்துக்குங்க கீதா அக்கா...  ஹிஹிஹி...

      நீக்கு
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரோ க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
  4. பஜ்ஜி மிளகாயை எல்லாம் இந்தப் பச்சை மிளகாய்த் தொக்குச் சேர்த்து நான் பார்த்தது இல்லை. முழுக்க முழுக்க நாட்டுப் பச்சை மிளகாய்தான். கிடைக்கையில் பண்ணுவோம். நீளப் பச்சை மிளகாயில் அவ்வளவு ருசியாக இருக்காது என்பதோடு என்னதான் புளி, உப்பு, வெல்லம்னு சேர்த்தாலும் காரம் அடங்காமல் தனியாய்த் தெரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்களும் பஜ்ஜி மிளகாயில் செய்தது இல்லை.  நேற்று கேஜிஎஸ் பெண் பேசிக்கொண்டிருக்கும்போது யதேச்சையாக இதேபோல ஒரு பஜ்ஜி மிளகாய் ரெசிப்பியும், இன்னொரு வத்தக்குழம்பு ரெசிப்பியும் சொன்னார்!

      நீக்கு
    2. பஜ்ஜி மிளகாயில் பொட்டுக்கடலை மாவுடன் காரப்பொடி, உப்பு, மஞ்சள் பொடி, தேவையானால் கரம் மசாலா சேர்த்து அடைத்து அதை பஜ்ஜி மாவில் தோய்த்துப் போடுவார்கள். காரம் உச்சி மண்டைக்கு ஏறும். தெரியாத்தனமாய் ஒரு நாள் சாப்பிட்டுவிட்டுப் பாதி பஜ்ஜியில் அப்படியே வைத்து விட்டேன்.

      நீக்கு
    3. வத்தக்குழம்பு செய்முறையைப் பகிருங்க ஶ்ரீராம்.

      நீக்கு
    4. கேட்டுப் பகிர்கிறேன்.  போட்டோஸ் வைத்திருக்கிறாரா என்று தெரியவில்லை.  அவரும், கேஜிஎஸ் மருமகளும் சமையல் விற்பன்னிகள்.  விதம் விதமாக செய்து அசத்துவார்கள்.

      நீக்கு
    5. அட? திங்களில் பகிர்ந்திருக்கணுமே! விட்டுட்டீங்க!

      நீக்கு
    6. கீசா மேடம்... மிளகாய் பஜ்ஜி செய்முறை போடுங்க. உ பி வாலா கடைகள்ல, உள்ள புளிலாம் சேர்ந்த கலவை வச்சிருப்பாங்க... ஆனால் வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளாது. நம்ம ஊர்ல அழகா இருக்கும், உள்ள ஸ்டஃப் பண்ண மாட்டாங்க.

      நீக்கு
    7. புளியா அது? அம்சூர் பவுடர்னு நினைச்சேனே! பார்க்கணும்!

      நீக்கு
    8. அம்சூர்தான்... புளிப்பு என்பதால் புளின்னு எழுதிட்டேன்... மாப்பு கேட்டுடவேண்டியதுதான்...ஹாஹா

      நீக்கு
    9. //பஜ்ஜி மிளகாயை எல்லாம் இந்தப் பச்சை மிளகாய்த் தொக்குச் சேர்த்து நான் பார்த்தது இல்லை. முழுக்க முழுக்க நாட்டுப் பச்சை மிளகாய்தான்.// அது நீங்கள் செய்யும் முறை, இது வேரொரு முறை. முயன்று பாருங்கள்.
      எங்கள் வீட்டில் கூட நாட்டு மிளகாயில்தான் செய்வோம். அது சுள்ளென்று உரைக்கும். என் பெண் வீட்டில் சாப்பிட்ட பொழுது அதிக காரமில்லாமல் சுவையாக இருந்தது. அதனால் கேட்டு தெரிந்து கொண்டேன்.

      நீக்கு
  5. இனிய காலை வணக்கம் அன்பு கீதாமா, அன்பு ஸ்ரீராம்.
    எல்லோருக்கும் எல்லா நாட்களுக்கும்
    இறையருள் என்றும் தொடர வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டும்...    வாங்க வல்லிம்மா...   வணக்கமும் நன்றியும்.

      நீக்கு
  6. புது விதமாக இருக்கிறது.
    நம்மூர்ப் புளி மிளகாயில் பச்சை மிளகாய்
    அப்படியே இருக்குமே.
    இது தொக்கு முறை.
    இந்த முறையில் ப.மிளகாய் அரைபட்டு
    காரமும் குறைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

    ப.மிளகாய் நினைத்தாலே வயிறு வலின்னு சொல்லும் அளவு
    ஜீரணம் கெட்டிருக்கு.
    அன்பு பானுவுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் மாமியார் வீட்டில் அடிக்கடி செய்வாங்க வல்லி. அங்கே தோட்டத்திலிருந்து பறித்த மிளகாய்கள் வரும். சுமார் ஒரு கிலோ மிளகாய்களில் மாமியார் பண்ணுவார். இதைப் பார்த்துத் தான் நானாக மண்டையை உடைத்துக் கொண்டு தக்காளித் தொக்குச் சிவப்பு மிளகாயில் பண்ண ஆரம்பித்தேன். எல்லோரும் சிரிச்சாங்க. இப்போது தக்காளித்தொக்கு பலரும் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. பச்சை மிளகாயில் உள்ள ஏதோ ஒரு பொருள் வயிற்றுக்கு நல்லது என்று கேள்விப் பட்டிருக்கேன். மிளகாயை இரண்டாகப் பிளந்து உள்ளே உள்ள விதைகளை நீக்கிவிட்டுச் சமையலில் சேர்த்தால் ஒன்றும் பண்ணாது. நான் மி.வத்தல் தாளிச்சாலும் இரண்டாகக் கிள்ளி உள்ளே உள்ள விதைகளை எடுத்துடுவேன். புளிக்காய்ச்சலில் மிளகாய் தாளிச்சாலும் எண்ணெய் காய்ந்ததும் மிளகாய்களைக் கிள்ளிக் கொண்டு விதைகளைச் சுத்தமாக நீக்கிவிட்டு முதலில் எண்ணெயில் போட்டுக் கருப்பாக ஆக்கிக் கொண்டு பின்னர் தாளிக்கும் பொருட்களைச் சேர்ப்பேன். மிளகாய்க் காரம் இறங்காது. பச்சை மிளகாய்க்கும் அதே!

      நீக்கு
    2. ஆமாம்மா. கீதா. நல்ல பச்சையாகவே இருக்கும். நினைத்தாலே நாலு தோசை உள்ளே போய்விடும்.
      நீங்க சொல்கிற மாதிரி செய்து பார்ககிறேன். இங்கே பங்களூர் மிளகாய் வருகிறது. அசட்டுத் தனமா ருசியே இல்லாமல். நம்ம ஊர் மிளகாய் என்று அங்கே இருக்கிற பெண்ணிடம் சொல்லி இப்போ நல்ல மிளகாய் அனுப்புகிறார். One pound green chilly கேட்டதற்கு ஒரு மிளகாய் கொண்டு வந்தது அந்த பக்கத்துத் தேசத்துப் பையன்.,,!!!!!!

      நீக்கு
    3. //புது விதமாக இருக்கிறது.// நன்றி.

      நீக்கு
  7. அம்மா, பாட்டி செய்முறையில்
    வெந்தயம், பெருங்காயம் எல்லாம் சேரும்.
    வாசனை தூக்கல்.

    இது பஜ்ஜி மிளகாய் சேர்ப்பதால்
    அதெல்லாம் வேண்டாம் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் பெருங்காயம் சேர்த்தேன். குறிப்பிட மறந்து விட்டேன். வெந்தயம் சேர்க்கவில்லை.

      நீக்கு
    2. கடுகு, உ.பருப்பு,வெந்தயம் தாளிப்பில் சேர்ப்பார்கள்.

      நீக்கு
  8. இன்றைய ரெசிப்பி அருமை... செய்துபார்க்கிறேன். அடை, தோசை போன்றவற்றிர்க்கு தொட்டுக்க சிறப்பா இருக்கும்.

    இங்க, பெங்களூர்ல நிறைய தடவை பச்சை மிளகாய், ரொம்ப காரமா இருக்கு. அபூர்வமாத்தான் நம்மூர் மிளகாயைப் பார்க்கிறேன். காரம் நல்லதுன்னு பச்சை மிளகாய் நிறைய உபயோகித்து இரயில்வே சட்னி பண்ணி, பெண்ணோட கோபத்தைச் சம்பாதித்தேன். ஹாஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதென்ன ரயில்வே சட்னி? நம்ம தி.வா. ரயில் அடைனு ஒண்ணு அடிக்கடி சொல்லுவார். நானும் அது என்னனு கேட்டுப் பார்த்துட்டேன். சொல்லவே இல்லை. :(

      நீக்கு
    2. நன்றி நெல்லைத்தமிழன். தோசைக்கும், இட்லிக்கும் நன்றாக இருக்கும்.அடைக்கு..?காரமாக ஆகி விடாதா?

      நீக்கு
    3. அடைக்குக் காரசாரமாக மிளகாய்ப் பொடி, கொத்துமல்லிக் காரச் சட்னி, வத்தக்குழம்புனு தொட்டுக்கறதில்லையா? அது போல் மிளகாய்த் தொக்கும் என்கிறார் நெல்லை.

      நீக்கு
    4. நாங்கள் அடைக்கு, வெண்ணெய், வெல்லம், தேன், டேட் சிரப் தொட்டுக் கொள்பவர்கள்.

      நீக்கு
    5. என் பெரியப்பா வீட்டில் வெல்லப்பாகு பண்ணி வைத்துக் கொள்வார்கள். அதையும் தயிர், வெண்ணெயோடு அடைக்குத் தொட்டுப்பாங்க. எங்க வீட்டில் வத்தக்குழம்பு தான்.மாமியார் வீட்டிலும் வெல்லம், வெண்ணெய், வத்தக்குழம்பு, சாம்பார் எல்லாம் உண்டு. எங்க வீட்டில் எப்போவானும் அடை/அவியலும் இருக்கும். அவியல் பண்ணும் அன்று மாலை அடை பண்ணுவார் அம்மா.

      நீக்கு
  9. எளிமையான செய்முறை நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  10. புளியம் பிஞ்சு. பச்சைமிளகாய் தொக்கு அமேசானில் பார்த்தேன். M N Pickles Davnkare விற்போர. விலை 67+ 35 ஆர்டர்  செய்தேன் 1ந்தேதி வரும். 
    Jayakumar

    பதிலளிநீக்கு
  11. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

    நலம் வாழ்க எங்கெங்கும்...

    பதிலளிநீக்கு
  12. ஊசி மிளகாய் என்று ஒரு ரகம் ஒரு அன்குல அளவே இருக்கும்.. நடுவில் கீறி விட்டு புளிக் கரைசலில் கொதிக்க வைத்து எடுத்தால் -

    நகைச்சுவை மன்னர் K.A. தங்கவேல் அவர்கள் சொன்ன மாதிரி கேள்ரா.. கேள்ரா.. ன்னு இருக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சின்ன வயசுல (30கள் வரை) பயங்கரமா காரம் சாப்பிடுவேன். எப்போதும் கடைல பச்சை மிளகாய் வாங்கும்போது காரம் எப்படி இருக்குன்னு கொஞ்சம் கடித்துப்பார்ப்பேன். நாகர்கோவில் தொட்டிப்பாலத்தைவிட்டு இறங்கிய இடத்தில் ஊசிமிளகாய் செடிகள் நிறைய இருந்தன. பசங்க முன்னால ஒரு மிளகாயை வாயில் போட்ட உடனேயே வயிற்றுவலி. அந்த வீட்டம்மா (கடைலாம் போட்டிருந்தாங்க) உடனே மோர் கொடுத்தார்.

      பெங்களூர்ல கொஞ்சம் பெரிய சைஸில் வந்தாலும் எல்லாமே இந்த ஊசி மிளகாய் ரகம்தான். அதனால கூட்டு, சாம்பார்ல சமயத்துல கொஞ்சம் காரம் அதிகமாயிடும்.

      நீக்கு
    2. ஆமாம்.. ஊசி மிளகாயின் காரத்துக்கு உடனடி மாற்று உப்பு தயிர் அல்லது மோர்..

      நீக்கு
    3. நெல்லை, ஏன் தெரியாதவர்னு பெயரிலே எல்லாம் கருத்துச் சொல்றீங்க? ஊசி மிளகாய்னு சொல்லப்படும் மெலிதான நீள மிளகாயிலும் காரம் குறைவானதும் உண்டு.

      நீக்கு
    4. கூகிள் ப்ரௌசர்லேர்ந்து எக்ஸ்ப்ளோரர்ல வாசிச்சு கருத்துச் சொன்னா, 'போடா..உன்னைத் தெரியலை'னு சொல்லிடுச்சு. பின்னூட்டம் வந்தப்பறம்தான் தெரியுது. ஆனா படிக்கறவங்களுக்கு யார் எழுதுனதுன்னு தெரியாதா என்ன?

      நீக்கு
  13. மிளகாய்த் தொக்கு - படிக்கும்போதே காரம் தெரிந்த மாதிரி ஒரு உணர்வு :)

    சப்பாத்திக்கும் நன்றாக இருக்கும். செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சப்பாத்திக்கும் நன்றாக இருக்கும்.// இருக்கலாம். நன்றி!

      நீக்கு
    2. ஃபுல்காவுக்கும் நன்றாய் இருக்கும் வெங்கட். தேப்லாவுக்கும் மேதி பராத்தா, மேதி ரொட்டி போன்றவற்றிற்கும் நன்றாக இருக்கும்.

      நீக்கு
  14. அனைவருக்கும் கார(சார)மான காலை வணக்கங்கள். மிளகாய் தொக்கு போட்டு விட்டு இனிய காலை வணக்கம் என்றால் பொருத்தமாக இருக்காதே,அதனால்தான் காரமான வணக்கம் என்றேன்.
    பின்னூட்டங்களுக்கு பின்னால் வந்து பதில் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. என் சிறிய வயதில் எங்கள் வீட்டு வேலையாள்வெங்காயம்ப்ச்சை மிளகாய் சேர்த்துபழைய சாதம் சாப்பிடுவது ஏனோ நினைவுக்கு வந்தது

    பதிலளிநீக்கு
  16. ஆகா! ஸ்ஸ்ஸ்..காரமா இருக்குமே என்று நினைத்தேன். கீதாம்மா சொல்லியிருப்பது போல் விதை நீக்கிச் செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. வாழ்க வளமுடன்

    அருமையான தொக்கு.
    படங்கள் அழகு.
    செய்முறை எளிது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!