வியாழன், 26 செப்டம்பர், 2024

வாடினால் போகுமோ வாசம்...

 சென்ற ஞாயிறுக்கு முந்தைய ஞாயிறு என்று நினைவு.  அன்று ப்ரதோஷம்

என் தங்கையும் பாஸும் லட்சுமி நரசிம்மர் கோவில் சென்று வர திட்டமிட்டிருந்தார்கள்.  அதில் என்னைச் சேர்க்கும் ஐடியா இல்லை போலும்.  முதலில் சொல்லவில்லை.  அப்புறம் தெரிந்ததும் நானும் வருகிறேன் என்று சொல்லி அவர்கள் விருப்பத்தைக் கேட்காமல் என்னை இணைத்துக் கொண்டேன்.

ஒரு கோவில் அல்ல.  மூன்று கோவில்கள்.  ஒரே வரிசையில் அமைந்திருக்கும் மூன்று கோவில்கள்.


சென்னையிலிருந்து 196 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இடம் பரிக்கல்.  விழுப்புரம் கூவாகம் அருகே சென்ற உடன் வலது புறம் திரும்பி உள்ளே சென்றால் பரிக்கல் லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவில் வரும்.  காலையில் பரிக்கல்லிலும், நண்பகலில் பூவரசன்குப்பம் கோவிலும், மாலை அபிஷேகப்பாக்கத்தில் உள்ள சிங்கிரிக்குடி கோவிலும் தரிசிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

காலை நாலரைக்கு வீட்டிலிருந்து கிளம்பினோம்.  பெண்மணிகள் அரட்டை அடித்துக் கொண்டே வர, அமைதியாக வந்தேன் நான்.

கோவிலுக்கு சாப்பிடாமல் சென்றால் நல்லதுதான்.  ஆனால் தாங்காது என்பதாலும், திண்டிவனம் தாண்டினால் நல்ல  ஹோட்டலே இருக்காது என்பதாலும், திண்டிவனம்- விழுப்புரம் சாலையில் இருக்கும் சில ஹோட்டல்களில் ஐஸ்வர்யா ஹோட்டலில் டிபன் சாப்பிட்டோம்.


பெண்மணிகளுக்கு முன் அனுபவம் இருந்ததால் கிடைக்கும் முதல் ஹோட்டலை பிடிக்கச் சொன்னாலும், ஊர்வசி, சரவணபவன் உள்ளிட்ட ஹோட்டல்கள் காலை 7 மணி முதல் தான் டிஃபன் என்று சொல்லி விட்டார்கள்.  பாண்டிச்சேரி சாலை பிரியுமிடத்தில் இருந்த ஹோட்டல் குழுமத்தில் நாங்கள் ஐஸ்வர்யாவை தேர்ந்தெடுத்தோம்.    முன்னேற்பாடாக 'டிஃபன் ரெடியா?' என்று கேட்டுக்கொண்டுதான் உள்ளே நுழைந்தோம்.




இட்லி, பூரி, பொங்கல் வடை சாப்பிட்டோம்.  நன்றாக இருந்தது என்பது ஒரு ப்ளஸ்.  மேசையின் மேலே சாம்பாரை சூடு பண்ணும் மின் அடுப்பு வைத்திருந்தார்கள் என்பது இன்னொரு ப்ளஸ்.  எல்லா மேசையிலும் இது இணைக்கப்பட்டிருந்தது.



அங்கிருந்து கிளம்பி சென்னையிலிருந்து சுமார் 193 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பரிக்கல் நோக்கி சென்றோம்.  கூவாகம் சாலை வந்ததும் அப்படியே வலது புறம் திரும்பி உள்ளே சென்றோம்.  கோவில் செல்லும் வழி முவதும் இருபுறமும் சில கடைகள்.  அழகிய பொம்மைகள், மாலைகள் என்று கண்கவரும் கடைகள்.








ப்ரதோஷம் என்பதாலும், ஞாயிறு என்பதாலும் கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்த்தோம்.  ஆனால் ஐந்தாறு பேர்கள் இருந்தார்கள்.  உள்ளே நுழையும்போதே சட்டையையும், பனியனையும் கழட்டிடுங்க என்றார் ஒருவர்.  எங்களுக்கு முன்னால் இருந்த குடும்பம் சிபாரிசுக் குடும்பம் போல..  











அப்படி தனியாக விலைக்கு விற்கிற வகையில் இது என்ன செடி என்று தெரியவில்லை.


இது போல வீட்டில் ஏற்கெனவே வாங்கி வைத்திருக்கிறோம்.  ரொம்ப உபயோகம்.

நாங்களும் சிபாரிசுக்கு ஆள் வைத்திருந்தாலும் ஐந்தாறு பேர்கள் இருக்கும் நிலையில் எதற்கு என்று அந்த ஆப்ஷனை உபயோகப்படுத்தவில்லை.. நரசிம்மரை வெகு அருகில் பார்க்க முடிந்தது - அதுவும் நிறுத்தி நிதானமாக.

அங்கிருந்து கிளம்பி பிரதான சாலையை அடையும் முன்னர் ஒரு மண்டபம் போன்ற இடத்தில் நேரிய சிலை உருவம் ஒன்று சயன கோலத்தில் இருந்ததது.  ஒருவேளை அரவான் கோவிலாக இருக்கலாம் என்று தோன்றியது.  அங்கிருந்து அடுத்து நாங்கள் செல்ல வேண்டிய 37 கிலோமீட்டர் என்று காட்டியது.  அபிஷேகப்பாக்கம் 67 கிலோமீட்டர் என்று காட்டியது.


==============================================================================================





=========================================================================================================

நியூஸ் ரூம் 
பானுமதி வெங்கடேஸ்வரன் 

விண்வெளியில் தனது பிறந்தநாளைக்(19thSep.) கொண்டாடிய விண்வெளி வீராங்கனை சுனிதா விலியம்ஸ்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த மாதம் அவர்கள் திட்டமிட்டபடி 22-ந்தேதி பூமிக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் உருவானது. தொழில்நுட்பக்  கோளாறுகள் சரிசெய்து இவர்கள் பூமி திரும்ப அடுத்த ஆண்டு (2025) பிப்ரவரி ஆகிவிடும். எனவே இந்த அவரது பிறந்த நாளை விண்வெளியிலேயே கொண்டாடினார். இதற்கு முன்பு, கடந்த 2012ம் ஆண்டு ஜூலை முதல் நவம்பர் வரை அவர் விண்வெளியில் இருந்தபோது தன்னுடைய பிறந்தநாளை முதல்முறையாக அங்கு கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தர்கண்ட்,அல்மோரா: உத்தரகண்டின் சில கிராமங்களில் வெளி மாநிலத்தவர்கள் நிலங்கள் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 'உங்களுக்கு இங்கு நிலம் கிடையாது' என்னும் அறிவிப்பு பலகைகளை வைத்துள்ளனர். வெளி மாநிலத்தவர் தங்கள் ஊரில் நிலங்கள் வாங்கினால், தங்களுடைய கலாசாரமும், பாரம்பரியமும் பாதிப்புக்குள்ளாகும் என்று அஞ்சுகிறார்களாம். 

ஆசியாவின் சக்தி வாய்ந்த நாடுகள் பட்டியலில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்தது இந்தியா. 

மீரட்: ஆறு வயது பெண் குழந்தையை மிரட்டி தூக்கிச் சென்று வன்புணர்வு செய்ய முயன்றவனை தாக்கி அந்த குழந்தையை காப்பாற்றிய குரங்கு கூட்டம். - இதில் யார் மிருகம்?  



ஏர் இந்தியாவில் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு முதல் வகுப்பில் பயணித்த பிரயாணி ஒருவர் ஏர்-இந்தியாவில் தன்னுடைய மோசமான அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட, ஏர்-இந்தியா நிறுவனம் அவரை அழைத்து பேசி, அவர் செலுத்திய மொத்த டிக்கெட் பணத்தையும் திருப்பி தந்திருக்கிறது.

ஜலந்தர்: குருதேஜ்சிங் என்பவர் தன்னுடைய பாஸ்போர்ட்டை தொலைத்ததால் இந்தியாவிற்கு திரும்பி வர முடியாமல் லெபனானில் தங்க நேர்ந்தது. தாய் நாட்டிற்கு திரும்புவதற்காக அவர் எடுத்த முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை, இறுதியில் அவருடைய தொகுதி ராஜ்யசபை எம்.பி. பாபா பல்பீர் சிங் இந்த விஷயத்தை கையில் எடுத்து, குருதேஜ் சிங் நாடு திரும்ப வழி செய்துள்ளார். 23 வருடங்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு வந்த அவரை அவருடைய கிராமமே வரவேற்றதாம்.

================================================================================================


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



===============================================================================================

தினமணி நாளிதழிலிருந்து...   



நான் நான்கு வயதிலேயே மேடையேறி நாட்டியமாடினேன். அப்பொழுதெல்லாம் விடுமுறைக்குச் சென்னைக்கு வருவோம். சில நாட்டிய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்போம்.

“புகழ்மணி எழுதிய பாரிஜாத புஷ்பாபஹரணம் என்ற நாட்டிய நாடகத்தை சென்னை கோகலே ஹாலில் நிகழ்த்தினோம். அப்போது எனக்கு வயது ஏழு. நாரதர் வேஷம் எனக்கு. நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும் திருமதி மதுரமும் வந்திருந்தனர்.

“ஜெமினி ஸ்டியோவில் கல்பனா என்ற ஹிந்திப் படத்தை உதயசங்கர் எடுத்தார். நாட்டியத்தை மையமாகக் கொண்ட படம் அது. மிகவும் திட்டமிட்டு உயிரைக் கொடுத்து அந்தப் படத்தை உதயசங்கர் எடுத்தார். எங்களுக்கெல்லாம் ஓராண்டு பயிற்சியளித்தார். வசனங்கள் சொல்வது, நிற்பது, நடப்பது போன்றவை கற்றுக் கொடுக்கப்பட்டன. அன்று பெற்ற பயிற்சியால்தான் பிற்காலத்தில் வெற்றிகரமான நடிகையாக என்னால் திகழ முடிந்தது.

“கல்பனா படம் எடுத்து முடிந்ததும் நாட்டியம் பயில்வதில் தீவிரம் காட்டினோம். ஸ்ரீராமுலு வீட்டுக் கல்யாணத்தில் நாட்டியமாடினோம். அப்போது அங்கே வந்திருந்த ஏவிஎம், நாட்டியத்தைப் பார்த்தபின், ‘வேதாள உலக’த்தில் நடனமாட வாய்ப்புத் தந்தார். அதைத் தொடர்ந்து சுமார் 150 படங்களில் நாட்டியம் ஆடியிருக்கிறோம்.

“ஒரு நாள், வெள்ளிக்குடம், குத்துவிளக்கு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு வந்த கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், அவர் எடுக்கும் மணமகள் திரைப்படத்தில் நான்தான் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று சொன்னார். எனக்கு நடனமாடித்தான் பழக்கமே தவிர நடித்துப் பழக்கமில்லை என்று எவ்வளவோ முறை சொன்னாலும் கலைவாணர் கேட்கவில்லை. கடைசியில் வென்றவர் கலைவாணர்தான்.

“மணமகள் படத்தில் முதன்முதலில் நான் போட்டுக்கொண்ட நகைகள் எம்.எஸ். சுப்புலட்சுமியினுடையவை. கலைவாணர் கணித்தது போலவே மணமகள் படம் மிகவும் நன்றாக ஓடியது. அதனால் நான் சினிமாவில் தொடர்ந்து நடிப்பதும் உறுதியானது. சினிமாவில் நடித்தாலும் நாட்டிய நிகழ்ச்களில் பங்கேற்பதை நான் நிறுத்தவேயில்லை. சுமார் 10 ஆயிரம் நாட்டிய நிகழ்ச்சிகளை நான் நடத்தியிருக்கிறேன்.

“தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளப் படங்களிலும் நடித்திருக்கிறேன். என்னுடைய திரைப்படக் காலத்தில் ஒரு பொன்னான வாய்ப்பு இந்திய – சோவியத் கூட்டுறவில் தயாரிக்கப்பட்ட பர்தேசி படத்தில் நடித்ததுதான். இந்தப் படப்பிடிப்புக்காக ரஷியா சென்றபோது பல ருசிகரமான அனுபவங்கள் ஏற்பட்டன.

“ரஷியாவில் ஒரு படத்தில் நடிப்பதையும்கூட அலுவலகத்தில் வேலை செய்வதைப் போலத்தான் கருதுகிறார்கள். அங்கே எல்லா நடிகர்களும் ஒரே இடத்தில்தான் ஒப்பனை செய்துகொள்கிறார்கள். யாருக்கும் எவ்வித சலுகையும் கிடையாது. ஹீரோ, ஹீரோயின்களுக்குக்கூட தனி ஒப்பனையோ, அறைகளோ இல்லை. லைட்டிங் பணிகளைக்கூட பெண்கள் செய்கிறார்கள். ரஷியாவில் பெண்கள் செய்யாத வேலைகளே இல்லை எனச் சொல்ல்லாம். உயரமான இடங்களில் ஏறி பெயிண்ட் அடிக்கிறார்கள். மின் கம்பி போடுகிறார்கள்.

“ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிந்ததும் நடித்தவர்கள் அனைவரும் வரிசையில் நின்று அன்றைய சம்பளத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் ரஷிய மொழி தவிர்த்து வேறு எதுவுமே பேசுவதில்லை. நாங்களும் அதற்காகவே ரஷிய மொழியைக் கற்றுக் கொண்டோம். ரஷிய அனுபவம் எங்களுக்குப் பிற்காலத்தில் பல வகையிலும் உதவியது.

“நான் நடித்துக்கொண்டிருந்த காலத்தில் பல உயர்ந்த வாய்ப்புகள் கிட்டின. ஒவ்வொரு ஆண்டும் நேருவின் பிறந்த நாளுக்கு நாங்கள்தான் நாட்டியமாடுவோம். பல பொது சேவைகளுக்கு நாட்டிய நிகழ்ச்சிகள் மூலம் நிதி திரட்டிக் கொடுத்திருக்கிறோம்.

“எனக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்படும் வரை ஓயாமல் நடித்திருக்கிறேன். ஹிந்தியிலும் நடித்ததால் இந்தியா முழுவதும் புகழ் பெற முடிந்தது. திருமணத்துக்குப் பிறகுகூட, ஒப்புக்கொண்ட படங்களை முடித்துக்கொடுத்துவிட்டுதான் அமெரிக்கா சென்றேன்.

“என் கணவர் நடிக்க வேண்டாம் என்று சொன்னதால் நடிக்கவில்லை. அவர் இறந்த பிறகு மனதின் வேதனையைக் குறைக்க நடிக்க விரும்புகிறேன். சுநீல்தத் எடுத்த படத்தில் ஒரு சின்ன ரோல் செய்திருக்கிறேன்.

“நடிக்கும் வரை நடிப்பதைத் தவிர எங்களுக்கு எந்தக் கவலையும் கிடையாது. எல்லாவற்றையும் எங்கள் அம்மாதான் பார்த்துக்கொள்வார். ஒரு முறை நாட்டிய நிகழ்ச்சிக்குச் செல்லும்போது ஒரு மாந்தோட்டத்தைப் பார்த்தோம். ராகினி வண்டியை நிறுத்தச் சொல்லி, மாங்காயை ஆவலுடன் பறித்துச் சாப்பிடத் தொடங்கினாள். அப்போது அங்கே வந்த தோட்டக்காரர், உங்கள் அப்பன் வீட்டுச் சொத்தா, இப்படிப் பறிக்கிறாய் என சப்தம் போட்டார்.

“நாங்கள் நிகழ்ச்சியை முடித்துவிட்டுத் திரும்பும்போது, அந்தப் பணத்தை அட்வான்ஸாகக் கொடுத்து, அந்த 28 ஏக்கர் தோட்டத்தை வாங்கிவிட்டோம். அதுதான் பத்மினி கார்டன்ஸ் (சென்னை, நந்தம்பாக்கத்தில் இருந்தது).

“தெய்வ அருள், அன்னையின் முயற்சி. சகோதரிகளின் ஒத்துழைப்பு ஆகியவையே என்ன வெற்றிகரமான நடிகையாக்கின. பல மொழிகளிலும் பெரிய நடிகர்களுடன் நடிக்கக் கிடைத்த வாய்ப்பினால் புகழும் கிட்டியது. நிஜமாகவே என் வாழ்க்கையில் நான் நடித்த காலம் பொற்காலம்தான்”.

செப். 24 - நடிகை பத்மினி நினைவு நாள்

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

 

பொக்கிஷம்  :





95 கருத்துகள்:

  1. 'பக்தி உலா' நெல்லைக்கு போட்டியா? அவர் போலவே சாப்பாட்டையும் சேர்த்து, போட்டோக்களையும் சேர்த்து, டைரிக்குறிப்பாக எழுதி இருக்கிறீர்கள். போனது சொந்த ரதத்திலா? சாரதி யார்?

    இந்தவாரம் கந்தசாமியைக் காணவில்லை. அவருக்கு பதில் ஒரு மஹாதேவன் வந்திருக்கிறார்.

    நியூஸ் ரூமில் குரங்கு செய்தி வியப்பூட்டுகிறது.

    சூறாவளி பற்றி ஜீவி சார் சொல்லக்கூடும். சர்குலேஷனை உயர்த்த எப்படியெல்லாம் பாடு பட்டிருக்கிறார்கள். ஆமாம் அந்த பக்கத்தை எழுதியவர் யார் என்று சொல்லவில்லையே?

    கவிதை பற்றிய கமெண்டில் குருமூர்த்தி சொல்வது போல் முதியோர் இல்லங்களை குறித்து எழுதியதா?
    2014இல் உங்கள் கற்பனை நன்றாக இருந்தது!! இப்போ கொஞ்சம் வாடிவிட்டது.

    பப்பி சேச்சி முகாமுகம் (பேட்டி) பல செய்திகளையும் புதிதாக தருகிறது.

    அதிசயமாக இந்தவார ஜோக்குகள் எல்லாமே நன்றாக இருக்கின்றன. அதிலும் அந்த தலையெழுத்தை படிக்கும் ஜோக் தனி வகை, ஆமாம் எழுத்துக்கள் கண்ணாடியில் பிரதிபலிக்கும்போது இடம் வலம் மாறி படிக்க முடியாமல் இருக்கும் என்பதையும் அந்த பையனுக்கு சொல்லியிருக்கலாம்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க JKC ஸார்...   முதல் பத்திக்கு பதில்...  "நெல்லைக்கு போட்டியா?  அவர் பக்தி சாகரம்.  நான் சாப்பாட்டு ராமன்!  அதுவும் அரைகுறை!  அவர் புகைபபடங்கள் நுணுக்கமாக இருக்கின்றன.  நான் அவசரக்குடுக்கை. அவரோடு போட்டிபோட முடியாது.   சொந்தரதம்தான்.   ஓட்டுநர்..  அநியாய வாடகை.  சொல்கிறேன் பிறகு...

      நடுவில் ஜீவி ஸாருக்கு ஒரு கேள்வி..  அவசரக்குடுக்கை என்கிற பாதம் எங்கிருந்து வந்தது?  எப்படி நமக்கு பழக்கமானது?!

      கந்தசாமியோ மஹாதேவனோ...  நான் ரசித்ததை நீங்களும் ரசிப்பீர்கள் என்று பகிர்கிறேன்!  சுவாரஸ்யமாக இருந்தால் பகிர்ந்துவிட வேண்டியதுதான்.

      ஆம், குரங்கு செய்தி மிக வியப்பூட்டிய ஒன்று.

      அந்தப் பக்கத்தை எழுதியவர் யாரென்றால்....   இருங்கள்..  ஜீவி சாரே சொல்வார்.

      கற்பனைக்களுக்கு சொந்த அனுபவங்களும் காரணமாக இருந்திருக்கலாம்.  இப்போது அப்படி ஒன்றும் கிட்டுவதில்லை போல!

      பப்பி பற்றி இன்னும் இரண்டு பதிவுகள் வைத்திருக்கிறேன்.  ஒன்றை பிரசுரிப்பது அநாகரீகம்.  இன்னொன்றைப் பகிர விருப்பம் இல்லை.

      ஹா..  ஹா..  ஹா...  பையன் தானே?  ஒவ்வொன்றாகக் கற்றுக்கொள்வான்!

      நீக்கு
    2. // அவசரக்குடுக்கை என்கிற பாதம் எங்கிருந்து வந்தது? //

      Sorry, Read as அவசரக்குடுக்கை என்கிற பதம் எங்கிருந்து வந்தது?

      நீக்கு
    3. கேள்வியை அடுத்த புதன் கேள்வியாக ஜீவிக்கு அனுப்பிவிட்டேன்.

      நீக்கு
    4. // ஆமாம் அந்த பக்கத்தை எழுதியவர் யார் என்று சொல்லவில்லையே? //

      வல்லிக்கண்ணன்.

      நீக்கு
  2. பத்மினியின் திரையுலக உலா லேசில் மறக்க முடியாதது. சிவாஜி கணேசனுடன் அவருக்கான நாயகி பாத்திரங்களில் பலர் நடித்திருந்தாலும் பத்மினி தான் மிகவும் பொருத்தமாக அவருக்கு அமைந்த நாயகி என்பது என் எண்ணம். பத்மினி நடித்த பல படங்கள் மனசில் உலா வந்தன. இன்றைய பின் மாலை பொழுது இந்த பழைய நினைவுகளில் சுகமாக அமைந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழக்கம்போல பத்மினி சிவாஜியை மனதளவில் மனதார காதலித்தார் என்றும் சொல்லி இருந்தார்கள் அந்தக் காலத்தில்!

      நீக்கு
  3. கோவில் உலா நன்று. நான் பரிக்கல் கோவிலுக்கு இரு முறை சென்றிருக்கிறேன்.

    எலுமிச்சை ஊறுகாய் மனதில் தங்கிவிட்டதா? பரணிகளையெல்லாம் நிறைய படங்களாக எடுத்துத் தள்ளியிருக்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் முதல் முறை.  பாஸ் மூன்றாவது முறை!

      அங்கு கண்ணைக்கவரும் வகையில் கடைகளில் கண்ணில் பட்டதால் எடுத்துத் தள்ளி விட்டேன்!

      கடந்த மாதம் KGS வீட்டிலிருந்து நார்த்தை எடுத்து வந்திருந்தேன்.  அவற்றை ஒரு மாதம் கழித்து எடுத்து சுருள் நார்த்தையும், நார்த்தை ஊறுகாயும் போட்டேன். 

      உதவிய கீதா ரெங்கனுக்கு நன்றி!

      நீக்கு
    2. கடவுளே!
      ஆஆஆஆ! ஸ்ரீராம் நான் எங்க வந்தேன்!!! உங்களுக்கு என்ன உதவினேன்!! ஓன்னுமே சொல்லலை....நீங்க ஏற்கனவே போட்டதுதானே!

      கீதா

      நீக்கு
  4. பத்மினி நாட்டியப் பேரொளி என்ற பட்டத்துக்குத் தகுந்தபடி மறக்கமுடியா பாடல்களையும் திரைப்படங்களையும் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  தி.மோ, தெய்வப்பிறவி, வ.வா இருமலர்கள் பேசும் தெய்வம் சட்டென சொல்ல நிறைய படங்கள் உண்டு.

      நீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  6. பாஸ்கி பேட்டிகள் எப்போதுமே சுவாரசியம். கிரிக்கெட் மற்றும் பல்வேறு திறமைகள் கொண்டவர் அவர்.

    விஜய் அன்டோனி தன்மையான மனிதர். அவருடன் சென்னை ஏர்போர்டில் புகைப்படம் எடுத்துக்கொண்ட நினைவு வருகிறது.

    சமூக வலைதளத்தில் பத்து பேர் புகழ்ந்தால், அவரவர் மனநிலைக்குத் தகுந்தவாறு இகழ்பவர்களும் இருப்பார்கள்தானே. ஆனால் தமிழா பாண்டியன், காந்தராஜு போல தங்கள் மனவக்கிரங்களையெல்லாம் பொதுவெளியில் காட்டக்கூடியவர்களும் உண்டுதானே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவர்கள் மட்டுமா...   பயில்வான் ராஜேந்திரன் போல இன்னும் நிறைய பேர்கள் இருக்கிறார்களே...   நிறைய பேர்களின் சுயமுகங்கள் வெளிப்படும்!

      அதே சமயம் சித்ரா லக்ஷ்மணன், விகடன் பேட்டிகள் பிஹைண்ட் வுட் போன்ற தரமான தளங்களும் உண்டு.

      நீக்கு
    2. நெல்லை, ஸ்ரீராம், வக்ர புத்தி உள்ளதுங்க நிறைய இருக்கு.

      அதே சமயம் சித்ரா லக்ஷ்மணன், விகடன் பேட்டிகள் பிஹைண்ட் வுட் போன்ற தரமான தளங்களும் உண்டு.//

      ஆமாம் ஸ்ரீராம் அதே. இதில் நான் சிலது பார்ப்பதுண்டு.

      கீதா

      நீக்கு
  7. கோவில் உலா படங்கள் அருமை. பரிகலாபுரம் தல வரலாறு தெரிந்து கொண்டேன்.கோவில் கடைகள் படம் அருமை.

    ஓட்டலில் இந்த முறை நல்ல ருசியான உணவு அதுவும் சூடாய் கிடைத்தது மகிழ்ச்சி.

    மனிதர்களை விட விலங்குகள் மேலானவை என்பதை நியூஸ்ரூம் வானரங்கள் உணர்த்தி விட்டது.

    உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது.

    பத்மினி அவர்கள் சொல்வது போல அவருக்கு பொற்காலம் தான், அவர் நடித்த படங்கள் , அதில் உள்ள பாடல்கள் , அவர் நடனம் எல்லாம் சிறப்பாக இருக்கும்.

    பொக்கிஷபகிர்வுகள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா.   சாப்பிட்ட ஹோட்டலிலேயே சாப்பிடாமல் மாற்றி மாற்றி சாப்பிட்டால் நல்ல ஹோட்டலை தெரிவு செய்யலாம் என்று நினைப்பேன்.  வித்தியாசமான சுவைகளும் கிடைக்கும்.

      கவிதையையும் மற்றவற்றையும் ரசித்ததற்கு நன்றி.

      நீக்கு
  8. ஒரு ஏழை (பிராமண) ஆசிரியர், பணக்கார ஜமீந்தார் தன் பிள்ளையை அவரிடம் ட்யூஷன் படிக்க ஆசிரியர் வீட்டிற்கு தினமும் அனுப்பி வைப்பார். அந்தக் காலத்தில் ஆசிரியர் வீட்டிற்கு வந்து கல்வி கற்பது தான் வழ்க்கம். ஆசிரியர் தன் பிள்ளையையும் ஜமீந்தார் பையனுடன் உட்கார வைப்பது வழக்கம். ஜமீந்தார் பையனுக்கு படிப்பே வராது. ஆனால் ஆசிரியர் சூடிகையாகக் கல்வி கற்கிறான். ஜமீந்தார் பையனை அடிக்கவோ கண்டிக்கவோ முடியாதாகையால் ஆசிரியர் தினமும் தன் பையனை கண்டிப்பதையும் அவன் முதுகில் முட்டியில் அடிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்படியாவது பணக்கார வீட்டு பிள்ளை படிக்கட்டுமே என்று. ஒரு நாள் வாத்தியாரின் பையன், "அப்பா! என்னை ஏன் இப்படி தினமும்அடிக்கிறீர்கள்? முதுகில் அடிப்பதை விட்டு வயிற்றில் ஒரேடியாக அடித்து சாகடித்து விடுங்கள். இந்த வயிற்றுப் பாட்டிற்காகத் தானே அப்பா இப்படியெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது?" என்கிறான். வாத்தியாருக்கு கண்களில் நீர் முட்டுகிறது.

    எந்தக் கதை, யார் எழுதியது என்று நினைவுக்கு வரவில்லை. மாயூரம் வேத நாயகம் பிள்ளை எழுதிய 'பிரதாப முதலியார் சரித்திர'மோ என்று தேசலான நினைவும் கூடவே வருகிறது.

    பொக்கிஷம் பகுதியில் முதல் ஜோக்கைப் பார்த்ததும் இந்த சோகக் கதை நினைவுக்கு வந்ததால் பகிர்ந்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆசிரியர் பையன் சூடிகையாக ..... என்று திருத்தி வாசிக்கவும்.

      நீக்கு
    2. உங்களுக்கே படித்த நினைவு இல்லை என்றால், சின்னப்பையன் எனக்கு எப்படி தெரியும் ஜீவி ஸார்?  எனக்கும் எங்கும் படித்த நினைவு இல்லை.  ஆனால் நகைச்சுவை ஜோக்கிலிருந்து சோக கதை நினைவுக்கு வந்திருக்கிறது பாருங்கள்...!

      நீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. பாஸ்கி, விஜய் ஆண்டனி அவர்கள் துயரத்திலிருந்து வெளி வந்து நல்லதை சொல்லி வருவது நல்லது.

    பதிலளிநீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அச்சச்சோ... என்னவாக இருக்கும்?!

      நீக்கு
    2. ஒண்ணுமில்லை. அந்த ஆசிரியர் பையன் திருத்தத்தை
      போட்டு முடிப்பதற்குள் இரண்டு பின்னூட்டங்கள் முந்திக்கொண்டு நான் போட்டது பின்னுக்குத் தள்ளப்படவே, சரியான புரிதல் வேண்டி பின்னுக்குத் தள்ளப்பட்டதை நீக்கி விட்டு, அந்தப் பகுதி பதிலளியைக் க்ளுக்கி... இனிமேல் புரியும்..

      நீக்கு
  12. 'சூறாவளி' க. நா.சு. அவர்களின் பத்திரிகை.

    பதிலளிநீக்கு
  13. எல்லா பகுதிகளும் நன்று.

    பாஸ்கி ஒரு சிரிப்பு பொக்கிஷம். நிறைய பேசுவார் என்றாலும் ரசிக்கலாம். இழப்புகளை மறக்கக் கற்றுக்கொள்வதே நல்லது. ஆனால் ஒரு சிலர் இழந்த சில நிமிடங்களிலேயே மாறிவிடுவார்கள் - பார்த்திருக்கிறேன். அடுத்த வேலை என்ன என்று பார்க்க புறப்பட்டுவிடுவார்கள். அனைவருக்கும் சாத்தியமில்லை.

    பயண உலா நன்று. ஜாடி படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றல்லது அன்றே மறப்பது நன்று இலையா?

      நன்றி வெங்கட்.

      நீக்கு
  14. ஸ்ரீராம் இந்த மூன்று கோயில்களும் ஒரே நாளில் என்றும் தனித்தனியாகவும் போயிருக்கிறோம் அதெல்லாம் பாண்டிச்சேரியில் இருந்தப்ப. அதன் பின் சென்றதில்லை. உங்களுக்கும் நல்ல ட்ரிப்!!!

    பாவம் அவங்களுக்குள்ள என்ன ரகசியங்களோ தனியா கிளம்ப நினைச்சவங்களுக்கு இடையில் புகுந்திட்டீங்களே!!!! ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...   நானும் அப்படி நினைத்துதான் அமைதி காத்தேன்.  அதற்காக கிடைத்த வாய்ப்பை நழுவ விட முடியுமா என்ன!

      நீக்கு
    2. வெங்கட்ஜி சொல்றாப்ல ராஜா காது கழுதை காது எதுவும் இல்லை போல! வம்பு பாருங்க எனக்கு!

      கீதா

      நீக்கு
  15. ஸ்ரீராம், ஜாடிகள் மனதை ஈர்க்கின்றன. நம்ம வீட்டுப் பக்கத்திலும் மிக அருகில் வண்டியில் வைத்திருப்பாங்க. இந்த மாதிரி ஜாடிகளைப் பார்த்துட்டா நான் அப்படியே நின்னுடுவேன். வாங்க மனம் பரபரக்கும். நான் பீங்கான், கண்ணாடி பாத்திரங்கள் பைத்தியம். என்பதோடு கண்ணாடி பீங்கான் பாத்திரங்களில் தான்சாமான்கள் போட்டு வைத்திருப்பேன் நம் வீட்டில். எந்த பாட்டில் காலியானாலும் அதைக் கழுவி காய வைத்து வைத்துக் கொண்டுவிடுவேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்கவர் வண்ணங்கள், சைஸ்கள்.  எனவேதான் நானும் படம் எடுத்தேன்.  விலையைக் கேட்டு ஓடி வந்து விட்டேன்!

      நீக்கு
    2. ஆமாம் ஸ்ரீராம் விலை கூடுதல்தான் வண்டியில் இங்கு விற்பவர்களிடம். ஆனால் வேறு ஒரு கடை அங்கு சேல் போடுவாங்க அப்ப நல்ல விலையில் கிடைக்கும். டிமார்ட்டில் விலை குறைவாகக் கிடைக்கும். அல்லது ரிலையன்ஸில் சேல் போட்டால் நல்ல விலை குறைவாகக் கிடைக்கும் எல்லாம் நம் வீட்டருகில்.

      கீதா

      நீக்கு
  16. கோயில் கோபுரம் படங்கள் சூப்பர். ஒரு படத்தில் உங்க தங்கையோ? தங்கையின் நிழல் ஒரு கடையில் ஏதோ வாங்கறாங்களோ? சும்மா ஒரு கெஸ்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை, யாரோ ஒருவர் நிழல். தங்கை, பாஸ் பின்னால் வேறொரு அக்கடையில் இருந்தார்கள்.

      நீக்கு
  17. ஜாடி, பொம்மைகள், சட்டி பானைகள் - இந்தச் சட்டி பானைகள் மீதும் எனக்கு ஈர்ப்பு உண்டு. வீட்டில் உண்டு. அதே போல சின்ன கல்லுரல், அம்மி இதெல்லாமும் என்னை ஈர்ப்பவை. கொஞ்சம் பெரிய கிண்ணம் (bowl) வடிவில் இடிக்கும் கல் குழவி தேடிக் கொண்டிருக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மண்சட்டி வாங்கி திருமதி வெங்கட் அதில்தான் சமைப்பதாக எழுதி இருந்தார்.  இப்போதும் அப்படிதான் என்று நினைக்கிறேன்!  எங்கள் வீட்டில் இரண்டு சைஸ்களில் இடிக்கும் உரல் இருக்கின்றன.  

      நீக்கு
    2. நானும் மண் சட்டியில், கல்சட்டியில் சமைக்கிறேன் ஸ்ரீராம். இன்று கூட மண்சட்டியில்தான் வாழைத்தண்டு செய்தேன். கல்சட்டியில் கீரை!

      கீதா

      நீக்கு
    3. அடடே...  

      எங்கள் அம்மா கல்சட்டியில் வத்தக்குழம்பு வைப்பார்!  சுவை.  இன்னொரு விஷயம்.  எங்கள் வீட்டிலும் இன்று வாழைத்தண்டு.  பேஸ்புக்கில் கூட பகிர்ந்திருக்கிறேன்!

      நீக்கு
  18. கோவில் தரிசனம் கண்டோம்.அழகிய கோபுரம்.

    ஜார், மண்சட்டி நன்றாக உள்ளது.

    நியூஸ்ரைம் குழந்தையை காப்பாற்றிய மனித நேயம்மிக்க குரங்குகள் அதிசயிக்க வைத்தனர்.

    கவிதை நன்று.

    பொக்கிசம் நான்தான் எஜமானர் தலை எழுத்து இரண்டுமே படிக்கும் போது சிரித்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரிசையாக வழங்கி இருக்கும் பாராட்டுக் கருத்துகளுக்கு நன்றி மாதேவி.

      நீக்கு
  19. அடுத்து தொடரும்!!! இல்லையா?

    பாஸ்கி செம நல்ல உதாரண மனிதர். பாசிட்டிவாக எல்லாவற்றையும் கடப்பதும் எல்லாவற்றையும் சிரித்துக் கொண்டே கடப்பதும் என்று. அவர் ஷோஸ் எனக்குப் பிடிக்கும்,

    அது போல விஜய் ஆண்டனியும் பாசிட்டிவ் மனிதர். நல்ல பாசிட்டிவ் கருத்துகளைச் சொல்லி வருகிறார். அவரது சில பேட்டிகளும் பார்த்திருக்கிறேன்.

    ஊடகங்கள் இப்படினா அப்படிங்கும், அப்படினா இப்படிங்கும். யதார்த்தமாக இருக்கிறார்கள் இருவருமே. அதுக்காக மனசுக்குள்ள இழப்பு வருத்தம் இல்லாமலா இருக்கும். இப்படி டைவெர்ட் பண்ணாமல் இருந்தால் நம் மனம் கெட்டுவிடும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த கோவில் அடுத்த வாரம்.  ஆனால் அங்கெல்லாம் படங்கள் கிடையாது!! 

      ஊடகங்கள் பொறுத்தவரை பிரச்னையில்லாத விஷயங்களை ரசிக்கலாம்!

      நீக்கு
    2. ஆமாம் அதேதான். நல்ல ஊடகங்கள் நல்ல பேட்டிகள் இருக்கின்றன. கோபிநாத் தொழிலில் எப்படி வென்றார்கள் என்று தொழிலதிபர்கள் பலரை பேட்டி எடுத்துப் போடுவது மிக அருமையாக இருக்கும். இப்படிச் சில உண்டு அது போல பழைய டைரக்டர் ...காரைக்குடி..பெயர் மறந்து போச்சே அவரது அனுபவங்கள் சாய் வித் சித்ராவில் செம..

      கீதா

      நீக்கு
    3. ஆமாம். சமீபத்தில் அரவிந்தசாமி பேட்டி பேமஸ்.

      நீக்கு
  20. இப்ப சுனிதா வில்லியம்ஸை மீட்டு வர ரஷ்ய விஞ்ஞானி பறக்க இருக்கிறாரே! பெயர் ....பெயர்...ம்ம்ம் அலெக்சாண்டர் (நடுவில் உள்ளது டக்குன்னு பிடிகிட்டியில்லா) கார்புனொவ்

    இன்றைய செய்திகளில் என்னை மிகவும் கவர்ந்த செய்தி //மீரட்: ஆறு வயது பெண் குழந்தையை மிரட்டி தூக்கிச் சென்று வன்புணர்வு செய்ய முயன்றவனை தாக்கி அந்த குழந்தையை காப்பாற்றிய குரங்கு கூட்டம். - இதில் யார் மிருகம்? //
    அதே யார் மிருகம்?! பேசாம இதுங்களை வைச்சு ஒரு ஸ்க்வாட் தொடங்கிடலாம். செம பாதுகாப்பு கிடைக்கும். எங்கும் வன்புணர்வு இருக்காது இல்லையா!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // பேசாம இதுங்களை வைச்சு ஒரு ஸ்க்வாட் தொடங்கிடலாம். செம பாதுகாப்பு கிடைக்கும். //

      :))

      நீக்கு
  21. இலக்கியச் சர்ச்சைகள் சுவாரசியம். உருவாக்கப்படும் சர்ச்சைகள் கூட இயல்பாக உள்ளதாக உருவாக்கப்பட்டால் நல்லது.

    கீதா

    பதிலளிநீக்கு
  22. கவிதை ரொம்ப பிடித்தது, ஸ்ரீராம். அங்கு கருத்தில் முதியோர் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

    எனக்கு வேறொன்று மனரீதியாகப் பட்டது. ஒருவரின் திறமை (எந்தத் துறையாக இருந்தாலும்) திறமை என்றில்லை எப்படியாகவும் நசுக்கப்படும் போது வாடிப் போகும் அந்த மனதிற்கு,. அதே அனுபவம் உள்ள மனதுகள் அணைத்து தேற்றும். ஆனால் அப்படியே இருந்துட்டா ஆபத்து. கூடி எழ முயற்சித்தால் நல்லது.

    கீதா

    பதிலளிநீக்கு
  23. பத்மினியின் கண்கள் பேசும். நல்ல நாட்டிய நடிகை.

    அந்தக் குடும்பத்தில்தானே ஷோபனா! இன்னும் சிலர் உண்டு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் சிலர் தெரியாது. ஷோபனா தெரியும். உண்மையிலேயே கண்கள் பேசும் நடிகை.

      நீக்கு
  24. பொக்கிஷம் - நான் தான் - புன்னகைக்க வைத்தது..

    கடைசி தலையெழுத்தும்!! செம

    கீதா

    பதிலளிநீக்கு
  25. பத்திரிகை - இலக்கியச் சர்ச்சை கமென்டைக் காணலியே ஸோ அங்கு சேர்க்க முடியலை. இதெல்லாம் பத்திரிகை விற்பனைக்காகவோ என்றுதான் தோன்றுகிறது. இப்ப டி ஆர் பி ரேட் ஊடகங்களில், பத்திரிகைகளில் இப்பவும் இப்படி ஏதேனும் வருமாக இருக்கலாம் விற்பனையைக் கூட்ட!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருந்திருக்கலாம்.  ஆனால் சுவாரயமாக இருந்திருக்கும்.  சமயங்களில் விளையாட்டுச் சண்டை உண்மையாகி விடுவதும் உண்டு!

      நீக்கு
  26. கோயில் யாத்திரையைப் பற்றிய படங்களும் விவரணமும் அருமையாக இருக்கிறது. பீங்கான் ஜார் படங்கள் கலர்ஃபுல்லாக இருக்கின்றன. விலையும் கூடுதலாக இருக்கும் இல்லையா?

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் துளஸிஜி.  உள்ளூர்வாசிகளுக்கு சகாயமாக இருக்கலாம்.  வெளியூர் வாசிகளுக்கு அதிகமாக சொல்லலாம்!

      நீக்கு
  27. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. தங்களுக்கு தாங்களே எதிர்பாராமல் கிடைத்த கோவில்கள் தரிசன பகிர்வுகள் அருமையாக உள்ளது.

    கோவில் முகப்பில் உள்ள கைவினை பொருட்கள், கடவுளார் சிலைகள், மண்சட்டிகள், அதற்கேற்ற மரகரண்டிகள் பீங்கான் ஜாடிகள் என அனைத்தையும் படமெடுத்து விட்டீர்கள். ஒவ்வொன்றும் அழகழகாய் கண்களை கவர்கிறது.மீண்டும் மக்களை கவர பழைய காலங்கள் வண்ணமயமாக திரும்புகிறது என எண்ண வைக்கிறது.

    இரண்டு நரசிம்மரின் கோவில்களின் கோபுர தரிசனத்தைப் பெற்றுக் கொண்டேன். மற்றோர் கோவிலுக்கு வியாழன் வரை காத்திருக்கிறேன். இம் மூன்று கோவில்களையும் ஒரே நாளில் சென்று தரிசித்து வருவது பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இங்கு ஆதிரங்கத்திலிருந்து , ஸ்ரீ ரங்கம் வரை மூன்று ரங்கநாதரையும் ஒரே நாளில் சென்று தரிசிப்பது போல... இந்த கோவில் பகிர்வும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு கோவில்கள் இல்லை கமலா அக்கா.  இந்த வாரம் பரிக்கல் மட்டும்தான்.  ஓரொரு இடத்தில் ஒவ்வொரு வழக்கம் என்பது போல மூன்று கோவில்கள் தரிசனம்.  இதேபோல வடிவுடை அம்மன், இன்னும் இரண்டு உடை அம்மன் சொல்வார்கள், ஒரே நாளில் பார்க்கவேண்டும் என்று.

      நீக்கு
    2. ஓ.. இந்த வாரம் ஒரு கோவில் தானா.? கோபுரங்கள் வேறு வேறாக இருக்கக் கண்டு (இறுதி கோவில் கோபுரத்தில் முன்பு கொடிமரம் இருக்கிறது. ) இரு கோவில்கள் என நினைத்தேன்.

      வடிவுடையம்மன். திருவொற்றியூர்தானே....!சென்னையில் வசித்த போது, ஒரு தடவை அங்குள்ள (1985லோ என்னவோ) உறவை பார்க்கப் போன போது கோவில் தரிசனம் கிடைத்தது. கோவில் அமைப்பு அவ்வளவாக நினைவில்லை. இப்போது இந்த மூன்று கோவில்கள் ஒரே நாளில் பார்க்க வேண்டுமென்ற என்ற விஷயங்கள் ஆச்சரியப்படுத்துகிறது. அதே போல் வேறு எந்த இடத்திலிருக்கும் அம்மனோ..?

      நீக்கு
    3. வெளியிலிருந்து தெரியும் கோபுரத்துக்குள் நுழைந்ததும் உள்ளே தெரிந்த காட்சி அந்த அடுத்த படம்.  அதைத் தாண்டி உள்ளே சென்றால் நேராக நரசிம்மரைப் பார்க்கலாம்.

      நீக்கு
    4. சரி. சரி.. இப்போது பெரிதாக்கி நன்கு பார்த்துக் கொண்டேன். முன்னால் இருப்பது ராஜ கோபுரம்.. ஆனால், அந்த கொடிமரமிருக்கும் கோபுர படத்தை பெரிதாக்க வரவில்லை அதனால் இரு கோவில்கள் என நினைத்தேன்.

      கவிதை எழுதப்பட்ட வருடத்தையும் பார்த்தேன். எப்போதும் கவிதை வரிகள் தங்களிடம் சிக்கனமாகவும், அதே சமயம் வக்கணையாகவும் வந்து விழுந்து விடுகின்றன. உங்களைப் போல சின்னஞ்சிறு கவிதைகளை என்னால் உருவாக்க இயலவில்லை. தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

      நீக்கு
  28. பாஸ்கி பற்றியும் ஆண்டெனி பற்றியும் தகவல் மிகவும் பாசிட்டிவ் தகவல். ஆம் பாஸ்கியின் பேச்சே ஒரு உற்சாகம் அளிக்கும் பேச்சுதான். குன்னக்குடி பற்றி அவர் சொல்லும் இன்டெர்வியூ நானும் கேட்டேன். பார்ப்பவர்களின் மனதிலும் பாசிட்டிவ் எண்ணங்களை விதைக்க வல்லவர் என்றே தோன்றுகிறது. கூடுதல் இழப்புகளின் இடையில் இப்படி இருப்பது என்பது ஒரு நல்ல விஷயம்தான்.

    இருவருமே அப்படித்தான். மகளின் இழப்பிற்கிடையிலும் அவர் தன்னை அதிலிருந்து சட்டென்று மீட்டு வலம் வருவதும் பலருக்கும் மன ரீதியாகச் சொல்வதும் நல்ல விஷயம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...   குன்னக்குடி பேட்டி பார்த்திருக்கிறீர்களா துளஸிஜி?  நான் பார்த்ததில்லை.  தேடிப்பார்க்க வேண்டும்.  பாஸ்கி, விஜய் ஆண்டனி மனநிலை வர நிறைய திடம் வேண்டும்.

      நீக்கு
  29. கோபுர தரிசனம் கிடைத்தது நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் சகோதரரே.

    இன்றைய செய்தியறை பகிர்வுக்கு அருமை. விண்வெளி வீராங்கனை நலமுடன் தன் பிறந்த நாளை விண்வெளியிலேயே கொண்டாடி இருப்பது. மகிழ்ச்சி.

    தங்கள் மாநிலம் விட்டு பிற மாநிலத்தில் இருப்பவர்கள் தங்கள் மாநிலத்தில் இடம் வாங்க முடியாது என சொல்லியிருப்பது வியப்பு.

    விலங்கின் புத்தியை விட மனிதனின் புத்தி கீழ்தரமாகப் போவதை அந்த விலங்கே நிரூபித்திருப்பது வேதனைக்குரிய விஷயம். இன்னமும் மனிதன் திருந்த வில்லையென்றால், கலியுகம் முடிவுக்கு வரப்போவது உறுதி.

    தங்கள் கவிதை அருமை. வாசம் மிகுந்த மலருடன் வாழ்ந்த காலத்தை மறவாது, அதன் வாசம் போன பின்பு, அது வாசம் செய்ய தான் தேர்ந்தெடுத்த இடத்தை வந்தடைவதை பாசமுடன் வரவேற்கும் வாடிய இலைகளின் முதிர்ச்சி மனதை நெகிழ வைக்கிறது. அழகிய எண்ணங்களையுடைய நல்ல கவிதையை வடித்தமைக்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // தங்கள் மாநிலம் விட்டு பிற மாநிலத்தில் இருப்பவர்கள் தங்கள் மாநிலத்தில் இடம் வாங்க முடியாது என சொல்லியிருப்பது வியப்பு.
      //


      இதெல்லாம் பொதுமக்களுக்குதான்.  அரசியல்வாதிகளுக்கு அல்ல!!

      பாராட்டுகளுக்கு நன்றி கமலா அக்கா.  கவிதை எழுதப்பட்ட வருடத்தை  கவனித்திருப்பீர்கள்.

      நீக்கு
  31. பத்மினி அவர்களின் அனுபவங்கள் மாங்காயோடு சேர்த்து சுவையாக இருக்கின்றன. சில புதியவையாக அறிகிறேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துளஸிஜி.  எட்டு திக்கும் சென்று கலைச்செல்வங்களை  கொணர முடியா விட்டாலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து வந்து பகிர்கிறேன்!

      நீக்கு
  32. உங்கள் கவிதை மனதைத் தொட்டது. அருமை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  33. பொக்கிஷப் பகுதி ஜோக்ஸ் எல்லாமே சிரிக்க வைத்தன.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  34. வணக்கம் சகோதரரே

    நடிகை பத்மினி அவர்களின் பேட்டி சுவாரஸ்யமாக உள்ளது. அவர் நாலு வயதில் மேடையேறினார் என்றால் நாட்டியத்தில் எத்தனை பெரிய பிறவி கலைஞர். பத்மினி அவர்களின் நடிப்பும், அவரது நடனமும் எனக்கு மிகவும் பிடித்தமானது. பத்மினி கார்டன் வந்த விபரம் தெரிந்து கொண்டேன்.

    ஜோக்ஸ் அனைத்தும் நன்றாக உள்ளது. தன் பிள்ளை அடிவாங்காமல், புரிந்து கொள்ளும் விதத்தை மற்ற பிள்ளையிடமிருந்து கற்றுக் கொள்ள சொல்லும் அந்த தாய்க்குத்தான் எவ்வளவு நல்ல மனது.. :))

    ஐந்தில் வளையாததது ஐம்பதில் இப்படி வளைந்து விடுமா? மற்றும் அனைத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைத்தையும் படித்து, ரசித்து கமெண்ட் இட்டதற்கு நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  35. //கேள்வியை அடுத்த புதன் கேள்வியாக ஜீவிக்கு அனுப்பிவிட்டேன்//

    இந்த மாதிரி சோப்ளாங்கி கேள்வி தான் கிடைச்சதா? மளமளன்னு நல்லதா நாலு கேள்வி கேட்டாத்தானே பதில் சொல்வதற்கும் ஆர்வமா இருக்கும்? ஏதாவது புஸ்தகத்திலே காப்பி அடிச்சாவது நறுக்குனு நாலு கேள்வி கேப்பீங்கன்னு பார்த்தா...

    பதிலளிநீக்கு
  36. கேள்விகள் (சினிமா உட்பட) different subjects--களில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது எபி ஆசிரியர் குழுவின் பொறுப்பாக இருந்தால் ஒவ்வொரு புதனுக்கும் மேட்டர் கிடைப்பதில் தடையில்லாது இருக்கும். சுவாரஸ்யமாகவும் இருக்கும். இன்னும் 5 நாட்களே அடுத்த புதனுக்கு இருக்கும் நிலையில் ஆசிரியர் குழு இதையெல்லாம் கருத்தில் கொள்ள விரும்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  37. கோயில் பயண அனுபவம், தகவல் குறிப்பு மற்றும் படங்கள் அருமை.

    கவிதை உட்பட தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!