கத்தியை எடுத்தபோது கூட எப்படிக் கொலை செய்ய வேண்டும் என்கிற சரியான ஐடியா இல்லை.
பொறுப்பை என்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். நான் கொஞ்சம் சொதப்பாமல் செய்பவன் என்கிற பெயரெடுத்தவர் என்பதால்..
எப்பவுமே நான் அந்தப் பெயரை எடுத்திருக்கிறேன்.
முன்னரே எப்பவும் திட்டமிடும் வழக்கம் என்னிடம் கிடையாது. அப்போது எப்படித் தோன்றுகிறதோ அப்படிதான். இருப்பினும் காலையே ஒரு முன்னோட்டம் பார்த்துக்கொண்டேன்.
பாஸ் அலுத்துப் போயிருந்தார்.
எனவே சூழலை ஆராய்ந்தேன். மாலை இரவுக்கு வேண்டியதைத் தனியாய் எடுத்து வைத்துவிட்டால் மதியத்துக்கு முட்டைகோஸ் மட்டுமே இருந்தது.
முட்டைகோஸா? ஆம். முட்டைகோஸ்!
சாத்வீகமான முறையில் செய்யும் எதையும் சாப்பிடுவதில்லை. செலவாகாமல் அப்படியே இருந்தது. எனவே முட்டைகோசைக் கொலை செய்வது என்று தீர்மானித்தேன்.
கோஸை நீளவாக்கில் அரிந்து அதையும் பாதியாக்கிக் கொண்டேன். இன்னொரு பாத்திரத்தில் கடலைமாவு, அரிசிமாவு, கார்ன்மாவு, காரப்பொடி, மசாலாப்பொடி, சீயக்காய்ப்பொடி, பெருங்காயம், உப்பு என்று கைக்கு கிடைத்த மாவை எல்லாம் போட்டு சேர்த்து, தேங்காய் எண்ணெயில் கரைத்துக் கொண்டேன். ("நல்லவேளை... வாஷிங் பௌடர் பாத்ரூமில் வைத்திருக்கிறேன்" - பாஸ்) நறுக்கிய கோஸை அதில் போட்டுப் பிசறினேன். கொஞ்ச நேரம் கழித்து அதை எண்ணெயில் பொரித்து எடுத்து விட்டேன்.
சின்ன வெங்காயத்தில் பெரிய வெங்காயமும், பெரிய வெங்காயத்தில் சின்ன வெங்காயமும்!! சொல்லும்போதே குழப்புது இல்லை.. ரெண்டும் சேர்ந்து ஒரே இடத்தில் இருந்தால் என்னை மாதிரி அப்பாவிகள் என்ன செய்வார்கள்?
வெங்காயம் தோலுரித்து நாலாய் நறுக்கி, இதழ் இதழாய்ப் பிரித்து எடுத்து அதையும் பாதியாக பின்னர் நறுக்கிக் கொண்டு அப்படியே பச்சையாக அந்த கோஸ் வறுவலில் போட்டு விட்டேன்.
வழக்கம்போலதான். உனனைப்பிடி, என்னைப்பிடி என்று ஓடிவிட்டது. பாவம், சாத்வீகமாக கொஞ்சம் நீர் தெளித்து வேகவைத்து, தேங்காய்த்துருவலோ, வெங்காயமோ போட்டு இறக்க வேண்டியதை இப்படிக் கரடுமுரடாகச் செய்தால்தான் பிடிக்கிறது என்பது கலிகாலம்!
ரசனையாய் சாப்பிடத் தெரிந்தவர்களுக்குதான் நன்றாய்ச் சமைக்கத் தெரியும், அல்லது சமைக்க வரும் என்பது என் கருத்து! இல்லாவிட்டால், இன்றைய கடமை முடிந்தது என்று ஏனோதானோ என்று சமைத்து விட்டுப் போனால் சாப்பிடுவதில் சுவாரஸ்யம் வராது!
இரண்டு பேர் இருக்கும் வீட்டில் ஒத்துப்போவது கொஞ்சம் ஈஸி. கொஞ்சம்தான்! ஆறேழுபேர் இருக்கும் வீட்டில் ஒருவருக்குப் பிடிப்பது இன்னொருவருக்குப் பிடிக்க மாட்டேன் என்கிறது. அந்தக் காலத்தில் அம்மா என்ன காய் செய்தாலும் 'வாச்சது வாச்சது' என்று சாப்பிட்டு விடுவோம்! பெரும்பாலும் பச்சைக் காய்கறிகள்தான் அப்போது. கத்தரிக்காய்க்குப் பிரதான இடம். மலிவு!
இப்போது? கத்தரிக்காய் செய்தால் நான் மட்டும்தான் சாப்பிடவேண்டும். சின்னவன் போனால் போகிறது என்று கொஞ்சம் போட்டுக்கொள்வான். பாகற்காயும் அங்ஙனமே ! காலிப்ளவருக்குக் கூட அதே அதோகதிதான் மஷ்ரூமும் அவ்வண்ணமே!
பெரியவன் பெயரையே காணோம் என்று பார்க்கிறீர்களா? அவனுக்கு உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு என்று பொரிக்கும் ஐட்டம்தான் பிடிக்கும். பாஸும், மாமியாரும் வெங்காயம், பூண்டு போட்டால் சாப்பிட மாட்டார்கள், எனவே அவர்கள் பெரும்பாலும் கோவைக்காய், பீன்ஸ் என்றே சுற்றி வருவார்கள்.
எனக்கு இரண்டுமே பிடிக்காது. எனக்குப் பிடித்த முள்ளங்கி, வாழைத்தண்டு, வாழைப்பூ, யாருக்குமே பிடிக்காது!
அவரைக்காயை எல்லோருமே பகிஷ்காரம் செய்து கொண்டிருக்கிறோம்.
கீரை இரண்டு விதமாக மசியல் மட்டுமே செய்வோம். அதுவும் 99% முளைக்கீரைதான். மற்ற கீரைகள் வாங்கி வருடங்கள் ஆகிவிட்டன. கீரை சமைத்தால் அதையும் பகிஷ்கரிக்க மூன்று பேர்!
கொத்தவரை எனக்கும் என் இளையவனுக்கும் பிடிக்கும். மூன்று நாட்களுக்கு ஒருமுறை முருங்கைக்காய் வந்துவிடும்! ஒன்று வெந்தயக்குழம்பு, அல்லது சாம்பார்! பொரிச்ச குழம்பு வழக்கம்போல எனக்கு மட்டுமே பிடிக்கும் என்பதால் எப்போதாவதுதான். முருங்கைக்காய் அல்லது கத்தரிக்காய், அல்லது தக்காளி போட்டு பொரிச்ச குழம்பு செய்வோம். முருங்கைக்கும், தக்காளிக்கு முதலிடம். ஏனென்றால் இன்னும் இரண்டு மூன்றுபேர் கூட போட்டுக் கொள்வார்கள். கத்தரிக்காய்? பாவம் அது.. மநீம கட்சி மாதிரி என் ஆதரவு மட்டுமே அதற்கு!
பிட்லே செய்து செய்து பாகற்காய் போட்டு சாதாரண சாம்பார் சமீபத்தில் வைக்கவே இல்லை! பாகற்காயைத் தவிர வேறெதுவும் போட்டு பிட்லே வைப்பதும் இல்லை!
======================================================================================================
குமுதம்
(3)
- ஜீவி -
குமுதம் அலுவலகம் அளவில் எடிட்டர் என்றால் அது எஸ்.ஏ.பி-யைத் தான் குறிக்கும். சிறுகதைகள் ஏதும் அவர் பெயரில் பிரசுரமானதில்லை. நாவல் தான் அவர் தளம்.
ஏழோ எட்டோ எழுதியிருக்கிறார் என்றாலும் எண்ணிக்கை முக்கியமல்ல, ஒவ்வொரு நாவலுக்கும் ஒரு ஸ்கெட்ச் போட்ட மாதிரி அந்த சட்டத்தை விட்டு வெளியே வராமல் தீர்மானத்தோடு எழுதியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அவரது நான்கு நாவல்கள் தமிழ்வாணனின் மணிமேகலை பிரசுரம் மூலம் புத்தக ஆக்கம் கண்டிருக்கின்றன.. அதுவும் அச்சில் கிடைப்பது சந்தேகம் தான். அவரது மற்ற நாவல்கள் குமுதத்தில் பிரசுரமான நிலையில் கத்தரித்து பைண்டு பண்ணி வைத்திருக்கும் அதிர்ஷ்டசாலிகளிடம் தான் கிடைக்கும்.
அவரது முதல் நாவல் பிரம்மச்சாரி. வாசிக்க முடியாமலேயே போய்விட்டது. இரண்டாவது 'காதலெனும் தீவினிலே'. நாவலுக்கான தலைப்பு மட்டுமல்ல, கதா நாயகியான ராதையின் பெயரையும் பாரதியிடமிருந்தே பெற்றிருக்கிறார்.
ஏழோ எட்டோ எழுதியிருக்கிறார் என்றாலும் எண்ணிக்கை முக்கியமல்ல, ஒவ்வொரு நாவலுக்கும் ஒரு ஸ்கெட்ச் போட்ட மாதிரி அந்த சட்டத்தை விட்டு வெளியே வராமல் தீர்மானத்தோடு எழுதியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அவரது நான்கு நாவல்கள் தமிழ்வாணனின் மணிமேகலை பிரசுரம் மூலம் புத்தக ஆக்கம் கண்டிருக்கின்றன.. அதுவும் அச்சில் கிடைப்பது சந்தேகம் தான். அவரது மற்ற நாவல்கள் குமுதத்தில் பிரசுரமான நிலையில் கத்தரித்து பைண்டு பண்ணி வைத்திருக்கும் அதிர்ஷ்டசாலிகளிடம் தான் கிடைக்கும்.
அவரது முதல் நாவல் பிரம்மச்சாரி. வாசிக்க முடியாமலேயே போய்விட்டது. இரண்டாவது 'காதலெனும் தீவினிலே'. நாவலுக்கான தலைப்பு மட்டுமல்ல, கதா நாயகியான ராதையின் பெயரையும் பாரதியிடமிருந்தே பெற்றிருக்கிறார்.
மூத்த அக்கா குண்டு அகிலாண்டம், அடுத்தவள் அழகு ராதை, மூன்றாவது குறும்புக்கார யசோதா என்று சகோதரிகளின் நெருக்கத்தில் ஆரம்பிக்கும் கதை. கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் வித்தியாசமான களத்தில் ஆரம்பித்த ஜோரிலேயே விறுவிறுப்பு கூடும்.
அகிலாண்டத்திடம் அடங்கிப்போன அவள் கணவர் வெங்கு மாமா-- நேர்மைக்கு வடிவம் கொடுத்த நாயகன் வஸந்தன் -- உண்மையின் உறைவிடமாய் அவன் தமையனார் சத்தியம் -- மீனா, கோபி என்ற அவரின் இரண்டு குழந்தைகள் --
நட்புக்கு இலக்கணமாய் ஏழை வஸந்தனுக்கு வாய்த்த செல்வச் சீமான் செல்வம் -- நயவஞ்சக நடராஜ், அவன் அண்ணன் கருமி இரக்கமற்ற ஷைலாக் காசிலிங்கம், ஏழை கணக்குப்பிள்ளை -- கணக்குப்பிள்ளையின் மகள் பரிதாபத்திறகுரிய சீதா -- இன்னும் ஹபிபுல்லா, கோவிந்தன் என்று...
யோசித்துப் பார்த்தால் ஒவ்வொரு கதாபாத்திரமும் காரண காரியத்தோடு படைக்கப்பட்டு இவர்களைப் பின்னிப் பிணைத்த ஜனரஞ்சகமான நாவலாக 'காதலெனும் தீவினிலே' உருக்கொண்டிருப்பது வாசிக்க வாசிக்க மனதைக் கவரும்..
இந்தக் கதையில் வரும் பணக்கார செல்வம் மிக உயர்ந்த பாத்திரப்படைப்பு.
வஸந்தனின் வறுமையில் செம்மை, அந்த ஏழ்மையின் சுவடே உணர முடியாமல் தம்பியை ஆளாக்க வாழ்க்கையோடு மல்லாடும் சத்தியம் என்று மனதை கலங்கடிக்கும் நிகழ்வுகளைப் போலவே எஸ்.ஏ.பி.யின் சொந்த வாழ்க்கையோடு இந்தக் காதலெனும் தீவினிலே நாவல் குறுக்கிட்ட ஒரு நிகழ்வும் உண்டு. எப்படிப்பட்ட இளகிய அதே சமயத்தில் உறுதியான மனம் படைத்தவர் அவர் என்பதனை நமக்குத் தெரியப்படுத்தும் நிகழ்வு அது.
ஏ.வி.மெய்ப்ப செட்டியாருக்கு அறிமுகம் தேவையில்லை. அவர் எஸ்.ஏ.பி. அவர்களின் 'காதலெனும் தீவினிலே' நாவலை வாசித்து விட்டு
அதைத் திரைப்படமாக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டார்
(வளரும்)
=========================================================================================================
காதலர்களோ, தம்பதியரோ... ஊடல் கொண்டு பின்பு சேர்வது என்பது எப்போதும் எவர்க்ரீன் சப்ஜெக்ட். ரிஷிமூலம், நல்லதொரு குடும்பம், மௌனகீதங்கள் போன்ற படங்களின் வெற்றி கூட இந்த வகையில்தான். அந்த வகையில்தான் நீயும் நானும் சேர்த்தே செல்லும் நேரமே கதையும்... மேலும் தலைப்பைப் படிக்கும்போதே அந்த இனிமையான பாடல் வேறு வந்து மனதில் சுகமேடை அமைத்துக் கொடுத்து விடுகிறதா.. கதை அங்கேயே மனதில் நுழைந்து மேடையில் ஏறி அமர்ந்து விடுகிறது.
'எங்கள் பிளாக்'கில் வெளியான 'நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே' கதையை பானு அக்காவும், கீதா ரெங்கனும் கிண்டில் புத்தகமாக கொண்டு வந்திருக்கின்றனர். அருமையான, அழகான, உணர்வுபூர்வமான கதை அது. அதனுடன் இன்னும் சில கதைகளையும் தொகுத்துத் தந்திருக்கின்றனர். இந்தக் கதை 'எங்கள் ப்ளாக்'கில் வெளிவந்தது என்பது பெருமைக்குரியது. அதை வாங்க இந்தச் சுட்டியில் சென்று பார்க்கலாம். அது பற்றி நண்பர் அர்விந்த் செய்திருக்கும் விமர்சனம் வெங்கட் பிளாக்கில் இங்கு சென்று படிக்கலாம்.
தனியா வந்து பயந்து மத்தவங்களை அதட்டுபவருக்கும், மற்ற அனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குஇன்று சீக்கிரமா பதிவை வெளியிட்டிருக்கிறார் ஶ்ரீராம்.
வாங்க நெல்லை.. வணக்கம். நீங்க இன்றுதான் கவனிக்கிறீர்கள்! டேஷ்போர்டில் பதிவுகள் தெரிய நேரமாகிறது என்கிற பிரச்னை வந்த நாள் முதல் காலை ஐந்து மணிக்கு வெளியாகிவிடுகின்றன பதிவுகள்!
நீக்குஸ்ரீராம் நெல்லை எதுவுமே சரியா கவனிக்கறதில்லைன்னு நேத்திக்கு சீனியர் சொல்லிருந்தாங்களே!!!! நான் அதற்கு ஒத்து ஊதியிருந்தேனே நினைவு படுத்துகிறேன் ஹா ஹா ஹா
நீக்குகீதா
ஹிஹிஹி... நீங்க என்ன சொல்றீங்க நெல்லை?
நீக்குதிங்கக்கிழமையில் வரவேண்டியதை இங்கே வேறொரு கோணத்தில் அலசிவிட்டீர்கள். அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.
பதிலளிநீக்குகோஸ் வைத்து மிளகூட்டு செய்தால் அனேகமா நான் மட்டும் சாப்பிடவேண்டியிருக்கும்.அதிலும் வேலைச் சுலபத்திற்கு குக்கரில் வைத்துச் சிறிது குழைந்துவிட்டால் போணியே ஆகாது. ரொம்ப மாதங்கள் கழித்து அதில் கரேமது செய்யப்போகிறேன் எனச் சொல்லிக்கொண்டிருக்கிறாள். இனி இப்போதைக்கு கிலோ பத்து ரூபாய்க்குக் கொடுத்தாலும் வாங்கப்போவதில்லை.
வெறும் கோஸ் தேங்காய்க்கறி அவ்வளவு நன்றாயிருக்கும் - முன்னர் எல்லாம்.
நீக்குஏனோ இப்போது எதுவும் வாய்க்கும் மனதுக்கும் பிடிபப்தில்லை!
சின்ன வயதுல ஆப்ஷன்கள் மிகவும் குறைவு என்பதால், அரிசி உப்புமாவோ இல்லை அடையோ நம் கண்களை விரிக்க வைத்தன.
நீக்குஉணவின் ஆப்ஷன்கள் அதிகமாக அதிகமாக, பிடித்த ஐட்டங்களிலும் சலிப்பு வந்துவிடுகிறது.
பண்ணுபவர்கள் பாடுதான் திண்டாட்டம்.
எனக்கு, சமையல் செய்தது அனேகமாக மீதமாகவில்லை என்றால் திருப்தியாக இருக்கும். எனக்கு இல்லையென்றாலும்... நேற்று பண்ணின இட்லி உப்புமா போல
நான் செய்யும்போது மீதமாகாத வகையில் செய்து விடுவேன்! சரியாய் இருக்கும். உண்மையில் இரவுக்கு வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தாலோ, இரண்டாம் முறை போட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தாலோ கூட இருக்காது!
நீக்குகீரை வாரம் ஒருமுறையாவது வாங்குகிறேன் (உத்தரவு அப்படி). அரைக்கீரைல இலை எடுப்பது பெரிய வேலை. தண்டுக்கீரையில் சுலபம். மேத்தி ஆலு எனக்கு ரொம்பவும் பிடித்துவிட்டதால் அதையும் அடிக்கடி வாங்குகிறேன். இதற்கிடையில் பாலக் வேறு.
பதிலளிநீக்குநான்தான் கீரை காய்கறிகள் வாங்கிவருவதால், சுலபம் கருதி அரைக்கீரை அதிகம் வாங்குவதில்லை.
நாங்களும் கீரை வாரம் இருமுறை வாங்க எண்ணியிருந்தோம்.. அப்புறம் ஒருமுறையாவது வாங்கி விடுவது என்றும் நினைத்தோம். கிடைத்தால்தானே!
நீக்குவளாகத்தில் கொண்டுவருபவர் 30 ரூபாய் என்பார். வெளியில் நடந்தால் 15-20 ரூபாய்க்கும், சமயத்தில் இரண்டு கட்டு 20 ரூபாய்க்கும் வாங்கிடுவேன்.
நீக்குபெங்களூரில் காய்கறி பழங்கள் கீரைகள்.. எல்லாமே நன்றாக இருக்கின்றன. விமானத்தில் வந்த காய்கறிகளையே சாப்பிட்டவனுக்கு நம்ம ஊரில் புத்தம்புதிய காய்கறிகள் கிடைப்பது சந்தோஷம்தான்.
பழைய வீட்டில் இருந்த வரை நினைத்த நேரம் கீரை சொல்லலாம். உடனே கைக்கு வந்து விடும். இப்போதும் அவரிடமிருந்து கீரை வாங்க முடியும். வீடு வர தாமதமாகும்! இலையென்றால் நாம் போகும் நேரத்துக்கு இங்கு கடையில் கீரை கண்ணில் பட்டால்தான். அதுவும் நன்றாயிருக்க வேண்டும்.
நீக்குஇங்கும் கீரை வாரத்தில் 2 நாள் இருக்கும்.
நீக்கு10, 15 ரூபாய்க்குக் கிடைத்துக்கொண்டிருந்த கீரை இப்போது 25, 30 க்கு விற்கப்படுகிறது. சந்தை இல்லாததாலும் எங்களுக்கும் கொஞ்சம் மெயின் ரோட் வரை போக முடியாததாலும் வீட்டிலிருந்து திரும்பியவுடன் கிடைப்பதுதான்..
கீதா
சாதாரணமாக சென்னையில் விலை 10 அல்லது 15 தான். இப்போது எப்படி என்று தெரியவில்லை!
நீக்கு//பெங்களூரில் காய்கறி பழங்கள் கீரைகள்.. எல்லாமே நன்றாக இருக்கின்றன.//எனக்கென்னவோ நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்ள முடியவில்லை. திருச்சியில் கிடைக்கும் காய்கறிகளை ஒப்பிடும் பொழுது இங்கு சற்று வாடல்தான். நான் திருசிக்குச் செல்லும் பொழுதெல்லாம், பசுமை காய்கறிகளை வாங்கி வருவேன். பூவும் அப்படித்தான். இங்கு வெறும் சாமந்தியும், வாசமில்லா ரோஜாவும்தான்.
நீக்குஎன்ன இருந்தாலும் காவிரி மண்ணல்லவா!
நீக்குஒவ்வொருவருக்கும் சில பிடிக்காது என்பதால் ஓவரால் சமையல் மெனு கஷ்டமாகி விடுகிறது. பையனுக்கு கூட்டு பிடிக்காது. புளிக்கூட்டு எனக்குத்தான் பிடிக்கும், வெங்காயம் அவர்கள் விரும்புவதில்லை, பாகற்காய், சாம்பார் தவிர எனக்குப் பிடிக்காது, என்று மெனுவை வடிவமைப்பதில் ஏகப்பட்ட தடங்கல்கள்.
பதிலளிநீக்குவெளில போனாங்கன்னா அரக்கப்பரக்க சாப்பிடும்போது நிறைய கம்ப்ளெயின்ட் வராது. வீட்டிலேயே வாசம் என்பதால் மெனு, ருசியில் கூடுதல் கவனம்.
எல்லார் வீட்டிலும் இந்தப் பிரச்சனை இருப்பது, மனதுக்குத் திருப்திதான்.
//எல்லார் வீட்டிலும் இந்தப் பிரச்சனை இருப்பது, மனதுக்குத் திருப்திதான்.//
நீக்குஹா.. ஹா.. ஹா... எல்லார் வீட்டிலும் இருக்கும் என்பது எதிர்பார்க்கக் கூடியதுதானே!
எல்லார் வீட்டிலும் இந்தப் பிரச்சனை இருப்பது, மனதுக்குத் திருப்திதான்.//
நீக்குஹா ஹா ஹா ஹா அப்ப நான் கீழ போட்டிருக்கும் கருத்தை ஸ்ரீராம் மட்டும் பார்க்க விட்டு ஒளிச்சு வைச்சுருக்கணுமோ!!! ஹிஹிஹிஹிஹி
கீதா
:>))
நீக்குமின்னூல் வெளியீட்டுக்கு கீதா ரங்கன், பா.வெ மாடம் இருவருக்கும் பாராட்டுகள். இன்னும் நிறைய எழுதி மின்னூல்கள் வெளியிடவேண்டும்.
பதிலளிநீக்குஏற்கெனவே எழுதி இருப்பதை மின்னூலாக்கலாம்.
நீக்குநெல்லை மிக்க நன்றி...
நீக்குஸ்ரீராம், அக்கா போடுறாங்க...அப்பப்ப. ஆனால் அவங்களும் மெதுவாகத்தான் போடுறாங்க..இன்னும் தீவரமாக இறங்கலை.
நான் ஹிஹிஹிஹிஹி ஏனோ கை வரமாட்டேன் என்கிறது. மட்டுமல்ல ப்ளாகில் வந்தவை என்பதால் போடத் தயக்கம். அப்படியே போடுவதென்றாலும் நான் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். ஓரிரு கதைகளைத் தவிர...
நன்றி ஸ்ரீராம்
கீதா
கலக்குங்க...
நீக்குநன்றி நெல்லை.
நீக்குஅன்பின் அனைவருக்கும் வணக்கம்.
பதிலளிநீக்குஎல்லோரும் என்றும் சுகமாக இருக்க
இறைவன் அருளட்டும்.
வணக்கம் வல்லிம்மா.. வாங்க...
நீக்குஇன்றைக்கு எஸ் ஏ பியின் ஒரு நாவலை எடுத்துக்கொண்டு அதைப் படமாக்கினார்களா என்ற அளவில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கார் ஜீவி சார். தொடர்வோம்
பதிலளிநீக்குஆமாம்.
நீக்குஎஸ்.ஏ.பி.அவர்களின் கதை படமாக்கப்பட்டதா இல்லையா என்பதற்கு விடை தெரியும். ஆனால் சஸ்பென்ஸை உடைக்க விரும்பவில்லை.
நீக்குஎனக்கும் தெரியும். அப்புறம் ஒரு விஷயம். எஸ் ஏ பியின் ஒரு நாவல் படிக்க விரும்புகிறீர்களா? இங்கு சென்று இறக்கிப் படியுங்கள்!
நீக்குhttp://www.mediafire.com/file/b03hyzkzb83yg1c/S.A.P_Enakkendru_or_idhayam.pdf/file
அங்கே போனால் பாஸ்வேர்டெல்லாம் கேட்கிறது. :(
நீக்குகவிதையும், நகைச்சுவையும், பழைய தமன்னாவும் வியாழன் இடுகையில் மிஸ்ஸிங். சேர்த்தால் நீண்டுவிடும். சேர்க்காவிட்டால் ஏதோ குறைந்த மாதிரி இருக்கிறது... என்ன செய்வார்கள் பாவம்...
பதிலளிநீக்குஅனுஷ்காவை விட்டு விட்டீர்கள். அதனாலென்ன பரவாயில்லை!! நீங்கள் சொல்வது போல வியாழன் நீண்டு அலுக்க வைத்து விடும் என்பதாலும், ஜீவி சார் கட்டுரைக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் சுருக்கி இருக்கிறேன்!
நீக்குகத்தியும் கபடாவுமாக அசத்தி விட்டீர்கள்.
பதிலளிநீக்குகாபேஜ் இங்கே எல்லோருக்கும் பிடிக்கும்
புலாவ், கூட்டு, வெறும் கறி என்று நன்றாகச் செலவாகும்.
நீங்கள் செய்திருக்கும் விதமும் சின்ன, பெரிய வெங்காயக் குழப்பமும்
சூப்பர்.
நன்றிம்மா. கோஸையும் உருளைக் கிழங்கையும் போட்டு ஒரு கூட்டு செய்வார் பாஸ். அவர் அப்பா கற்றுக் கொடுத்தது. நன்றாய் இருக்கும்.
நீக்குவல்லும்மா... காபேஜ் புலாவ் எழுதுங்க.. அதையும் செய்துவிடலாம், போணியாகும்னு தோணுது
நீக்குஆமாம்... எழுதி எங்கள் பிளாக்குக்கு அனுப்புங்கள்!
நீக்குசெய்தால் போச்சு. ரொம்ப சுலபமான ரெசிப்பி.
நீக்குநன்றிம்மா.. செய்தால் போதாது.. அனுப்பணும்! :>))
நீக்குவல்லிம்மா கேபேஜ் புலாவ் ஆ இங்கு ரொம்பப் பிடிக்கும். வெறும் காபேஜ் சாதம் செய்தாலே ரொம்பப் பிடிக்கும்...மாமியார் அப்ப கூட இருந்ததால் வெங்காயம் வகையறாக்கள் இல்லாமல் கொஞ்சம் வேறு வேறு வகையில் கேபேஜ் சாதம் செய்வது...பொடி தூவி, தூவாமல் என்று
நீக்குநீங்கள் உங்கள் செய் முறையை அனுப்புங்கம்மா.
கீதா
அட! கோஸ் உருளைக் கிழங்கு போட்டு கூட்டு செய்வாங்களா பாஸ்! எங்க பிறந்த வீட்டில் செய்வதுண்டு. நானும். பாஸிடம் கேட்கணுமே அவங்க எப்படிச் செய்வாகன்ன்னு (திவேலி பக்கமாச்சே!!!)
நீக்குகீதா
முன்னாலேயே சொல்லி இருக்கேன்னு நினைக்கிறேன். இன்று கூட அதையே செய்து விட்டார் பாஸ். அவரிடம் கேட்டுக்கொண்டீர்களா?
நீக்குகோஸ் உருளைக் கிழங்கு போட்டு கூட்டு செய்வாங்களா பாஸ்!// நானும் செய்வதுண்டு கீதா.
நீக்குஉங்கள் செய்முறை எப்படி என்று சுருக்கமாகச் சொல்லலாமே....
நீக்குஅவரிடம் கேட்டுக்கொண்டீர்களா?//
நீக்குவாய்ஸ் விட்டிருக்கேன் ஸ்ரீராம்....நான் செய்யும் முறைகளைச் சொல்லி அவங்க மெத்தட் என்னன்னு..
கீதா
பானுக்கா உங்க முறை எப்படின்னு நாளை கேட்டுக் கொள்கிறேன்
நீக்குகீதா
பிடிக்கும் பிடிக்காது பட்டியல்சின்னவனுக்கு மட்டுமே. மற்ற எல்லோரும் எல்லாமும் சாப்பிடுவோம்.
பதிலளிநீக்குபாகற்காய், வெங்காயம்,கத்திரிக்காய்
தொடவே மாட்டான். அன்று அவனுக்குத் தனி கறி தான்.
எங்கள் வீட்டிலும் தம்பிக்குக் கத்திரிக்காய் பிடிக்காது.
எனக்கு மோர்க்குழம்பு பிடிக்காது.
இப்போது எல்லாம் மாறிவிட்டது.
எல்லாமே சுவையாக இருக்கிறது.
அடடே... எல்லோரும் எல்லாமும் சாப்பிடுவது நல்ல பழக்கம். அப்படி ஒரு வீட்டைக் கண்டுபிடித்து விருது கொடுக்கவேண்டும்! நெல்லை சொல்வது போல சமைப்பவர் பாடு வெகு திண்டாட்டம்!
நீக்குஸ்ரீராம் எதுக்குக் கண்டுபிடிக்கணும். இதோ இங்கேயே இருக்கேனாக்கும்.. எங்க வீட்டுக்குத்தான் அந்த விருது!!!! ஹெ ஹே ஹெ ஹெ!!!! கமான் விருது கொடுங்க சீக்கிரம்...!!! எல்லாரும் வாங்கப்பா மேடைக்கு...ஸ்ரீராம் எனக்கு விருது கொடுக்கப் போகிறார்!!
நீக்குகீதா
இதோ விருது... சபாஷு சாப்பாட்டு ஞானி!
நீக்கு//அப்படி ஒரு வீட்டைக் கண்டுபிடித்து விருது கொடுக்கவேண்டும்!// எங்கள் வீட்டில் பிடிக்காது என்று எதையும் ஒதுக்க மாட்டோம்.
நீக்குஉங்களுக்கும் விருது... பிடியுங்கள்!
நீக்குசபாஷு சாப்பாட்டு ஞானி!//
நீக்குஹாஹாஹாஹா...சிரித்துவிட்டேன் ஸ்ரீராம்...நன்னி நன்னி ஹை!! பானுக்காவுக்கும் சேர்த்து...அட! இன்று இருவரும் சேர்ந்து மேலே புத்தகம் இங்கே விருது அட அட!!! அடி பொளியானு கேட்டோ!!
கீதா
கத்தரிக்காய்? பாவம் அது.. மநீம கட்சி மாதிரி என் ஆதரவு மட்டுமே அதற்கு!
பதிலளிநீக்குhahahahaahahahahahahhahahaah
ஹா... ஹா... ஹா... ஹா... நல்ல உவமை. இங்கும் அதே கதைதான்!
நீக்குஸ்ரீராஆஆஆஆம். நீங்க சொன்னத்துக்குத் தான் சிரித்திருக்கேன்.!!!!!!!!
நீக்குசரியாப் போச்சு போ.
இங்கே க .காய் எல்லோருக்கும் பிடிக்கும்.
ஹிஹிஹி... கீதாக்கா பாஷையில் அவசி
நீக்குஅவரைக்காயை எல்லோருமே பகிஷ்காரம் செய்து கொண்டிருக்கிறோம். என்னப்பா இது. அவரைக்காய் மாதிரி ஒரு சுவை உண்டா?
பதிலளிநீக்குஅதுவும் மார்கழி அவரை அவ்வளவு சுவை.
பயத்தம்பருப்பு போட்டு அரைஹ்ச கூட்டு சப்பாத்திக்கு அவ்வளவு நன்றாக
இருக்கும்.!!
சப்பாத்திக்கா? கூட்டா? போங்கம்மா... எங்க வீட்டில் போணி ஆகாது. நான் உட்பட!
நீக்குஎன் மனைவிக்கு, எத்தனை விலையானாலும், பீன்ஸ், அவரை (அதுல இரண்டு வெரைட்டி இங்க கிடைக்குது) ரெகுலரா, பத்து நாளைக்கு ஒரு தடவையாவது வாங்கி வரணும். எனக்கு பீன்ஸில் பருப்புசிலியும், அவரையில் தேங்காய் போட்ட கரேமது மட்டும்தான் பிடிக்கும். அதனால அவளிஷ்டப்படி ஒரு நாளாவது (வாரத்துக்கு) பண்ணச் சொல்லிடுகிறேன். கொத்தவரையும் வாங்குவேன்.
நீக்குநேற்று வீட்டில் பீன்ஸ் பருப்புசிலி. எனக்கு ஏனோ பருப்புசிலிகள் பிடிபப்தில்லை! வாழைப்பூ மட்டும் பிடிக்கும். அதுவும் முன்னர் அதிகமாக, இப்போது குறைவாக!
நீக்குஎனக்கு ஏனோ பருப்புசிலிகள் பிடிபப்தில்லை!// ஆச்சரியமாக இருக்கிறது.
நீக்குஆம். எனக்கும்!
நீக்குகுமுதம் ,எஸ் ஏ பி, ஜீவி சார் கைவண்ணத்தில்
பதிலளிநீக்குமிளிர்கிறது.
எப்பொழுதோ படித்தது மறந்து கூடப் போய் விட்டது.
ஜீவி சாரின் நினைவு சக்தி பிரமாதம்.
நன்றியும் வாழ்த்துகளும்.
முதலில் இந்தப் படத்துக்கு ஒரு வாவ். பானுமா சின்ன கீதாவும் ஜொலிக்கிறார்கள்.
நீக்குஅன்பு வாழ்த்துகள்.
நன்றிம்மா...
நீக்குநன்றிம்மா... இந்தப்படம் அப்போது அந்தக் கதைக்கு அவர்கள் இருவரும் விளக்கம் சொன்னபோது எடுத்து அனுப்பி எபியில் வெளியான படம்தான்.
Okay!!! Ippavum they look Gorgeous.
நீக்குநன்றி வல்லி அக்கா!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் அன்பு கமலாமா. நல் வரவு. மீண்டும் இங்கே உங்களைக்
நீக்குகான்பதில் நெகிழ்வு. நலமுடன் இருங்கள்.
அன்பின் பானும்மா, சின்ன கீதா கதையை எபியில் படித்தேன். இன்று கதைகளுக்கான விமர்சனம் திரு அரவிந்த் எழுதியதையும்
நீக்குபடித்தேன்.
ஆழ்ந்த விமரிசனம். மேம்போக்காக எழுதவில்லை.
கதைகளுக்கும் மின்னூலுக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம். சிறிய இடைவெளிக்குப்பின் நீங்கள் மீண்டு(ம்) வந்து விட்டீர்கள் என்பது சந்தோஷம்.
நீக்குவாங்க..வாங்க.. ரவம்ப நாளைக்கு ஆளைக் காணோமே
நீக்குவணக்கம் என் அன்பான சகோதர, சகோதரிகள் அனைவருக்கும்.
நீக்குமனது இன்னமும் என் அன்பான அண்ணாவின் நினைவுகளில் ஊஞ்சலாடியபடிதான் உள்ளது. என்ன செய்வது? வலைத்தளம் வந்து அவ்வப்போது அனைவரின் பதிவுகளை படித்தாலும்,மனதின் வலி அடங்கவில்லை. இன்னமும் நல்ல மன மாற்றத்திற்கு அனைவரின் பதிவுகளையும் ஆழ்ந்து படித்தால், நன்றாக இருக்குமேயென இன்று கருத்துக்களையும் எடுத்துக் கொண்டு வலைத் தளம் வந்து விட்டேன். என்னை எதிர்பார்த்திருந்த உங்கள் அனைவரின் அன்பு உள்ளங்களை நினைத்து என் மனம் நெகிழ்ச்சியடைகிறது. இந்த அன்பான உறவை தந்த ஆண்டவனுக்கும், உங்கள் அனைவருக்கும் என் பணிவான நன்றிகள்.
கடந்த பத்து நாட்களாக அக்கம், பக்கம், எதிரும் புதிருமாக பன்னிரண்டு வீடுகளில் (எங்கள் அப்பார்ட்மெண்ட்டில்) தொற்று வேறு புகுந்து மன உளைச்சலை அதிகமாக்கி பயமுறுத்தி வருகிறது. நடப்பவை என்றும் அவன் செயலில்தான் உள்ளது. நல்லவனாக நடக்க பிராத்தனைகள் ஒன்றுதான் நம்மால் செய்ய இயலும். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஒவ்வொருவரும் அவரவர் நிறுத்தம் வரும்போது இறங்கி கொள்கிறார்கள். நாமும் நமது நிறுத்த வரும்போது இறங்க வேண்டியவர்களே. இறந்தவர்கள் சென்றுவிட, இருப்பவர்கள்தான் பிரிவால் வாடா வேண்டி இருக்கிறது. இதுவும் சீக்கிரமே கடந்து போகவேண்டும் அக்கா.... மனதைத் தெற்றிக் கொள்ளுங்கள்.
நீக்குகமலாக்கா மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள் புரிந்து கொள்ள முடிகிறது..
நீக்குஸ்ரீராம் வரிகளை ரசித்து டிட்டோ செய்கிறேன். நான் அடிக்கடி வீட்டில் சொல்லும் வசனம் நம் வாழ்க்கை ரயில் பயணம் என்று. வேறு வேறு இடத்தில் இருந்து வந்து ஒன்று சேர்ந்து சில காலம், அம்மா அப்பா, அடுத்து திருமணம் குழந்தைகள் ..தாத்தா பாட்டி அப்புறம் இறங்கும் போது மீண்டும் தனி தனியாக.
கீதா
வணக்கம் சகோதரரே
நீக்குநீங்கள் சொல்வது உண்மைதான். வாழ்க்கைப் பயணத்தில் அவரவர் நிறுத்தம் வரும் வரை நம்மோடு உடன் பயணித்தவர்களை, நடுவில் விதியின் கட்டளையால், இறங்கியவர்களை/இறக்கப்பட்டவர்களை நினைத்தபடி காத்திருக்கத்தான் வேண்டும். இது ஒன்றைதான் உலகில் இறைவன் தன் சூட்சுமங்களின் சக்தியாக பிரயோகித்து வருகிறான்.
இதை உணர்கிறோம். உணர்ந்தும், காயத்தின் ரணங்கள் தழும்பாக மாறும் வரை அடிக்கடி எழும் வலிகளின் தாக்கத்தில் மனதில் வேதனையும் அடைகிறோம்.
வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி
நீங்கள் கூறுவதும் உண்மைதான். வாழ்க்கை ஒரு ரயில் பயணந்தான்.. ரயில் சினேதிதமாக நினைத்து மனம் நெருங்கிய உறவுகள் மீது ஆழ்ந்த பற்று வைக்காமல், "நடப்பவை அனைத்தும் உன் செயல்" என "அவனிடம்" தஞ்சமடையும் பக்குவத்தை தர வேண்டுமென தினமும் பிரார்த்தனை செய்தபடி உள்ளேன். இப்படி பேசி ஆறுதல்கள் அடைவதும் "அவன்" வழி வகுப்பதுதான் எனவும் நம்புகிறேன். நன்றி.
உங்கள் இருவரின் ஆறுதல்கள் மனதுக்கு இதமளிக்கின்றன.உங்கள் ஆறுதலான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஓடும் ஆட்டோவில், ஆடும் பயணத்தில் கைபேசியில் டைப்பியதில் ஏகப்பட்ட எழுத்துப் பிழைகள்... (இல்லாவிட்டால் மட்டும் கொஞ்சமாவா இருக்கும் என்று அங்கு யார் கேட்பது?)
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஎழுந்தவுடன் முதல் பகுதி படித்ததும் இன்று திங்கள் கிழமையோ என்ற குழப்பம் ஒரு நிமிடம் வந்தது. கோஸை சத்தமின்றி கொலை செய்ததை திகிலான வகையில் நன்றாக சொல்லி உள்ளீர்கள். கடைசியில் என்னைப் போல் அரிசி மாவையும் எல்லா மாவுகளுடனும் கலந்து அதை மூழ்கடித்து அதன் பழைய நினைவுகளை துண்டித்து அதை பஜ்ஜியாக்கி விட்டீர்கள்.:)
பொறுமையாய் பிரித்தெடுத்த வெங்காய பிரிவு படங்கள் அருமையாக உள்ளது.செய்முறை நன்றாக உள்ளது. நானும் செய்து பார்க்கிறேன். எங்கள் வீட்டில் கோஸ் எந்த முறையில் செய்தாலும் செலவாகும். குறிப்பாக பா. பருப்பு போட்டு, தேங்காய், சீரகம், வத்தல் அரைத்து விட்டு கூட்டு பண்ணினால், மதியமே காலியாகி விடும். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி அக்கா... விரிப்பில் உங்கள் வர்ணனைகளும் சேர்ந்து விடுகின்றன பாருங்கள்!
நீக்குஆனால் அதை பஜ்ஜி என்று சொல்வதைவிட பகோடா என்று சொல்லலாமோ!
நீக்குகாலை வணக்கம் எல்லோருக்கும்!!
பதிலளிநீக்குஇன்று 10 மணிக்கு மேல் கணினி என்கேஜ்ட் ஸோ இப்ப எட்டிப் பார்த்துரலாம்னு
ஸ்ரீராம்!, ஆரம்பம் ஏதோ ஒரு த்ரில்லர் படம் அல்லது கதை பற்றினு இருக்குமோ என்று நினைத்து அடுத்த வரி வாசித்ததுமே ஓஹோ இது ஸ்ரீராம் அனுபவம் போல இருக்கே என்று தோன்றிவிட்டது அடுத்த லைன் - பாஸ் ஊர்ஜிதப்படுத்தியது. கோவிட் கு அப்புறமே பாஸ் ரொம்ப சோர்வாறாங்கன்னு தெரிஞ்சுச்சு பேசறப்ப...
சின்ன வெங்காயத்தில் பெரிய வெங்காயமும், பெரிய வெங்காயத்தில் சின்ன வெங்காயமும்!! //
பெரிய வெங்காயம்/பெல்லாரி வெங்காயம்னு சொல்றது...சி வெ / சாம்பார் வெங்காயம்..
அப்படித்தான் வாங்க வேண்டும் என்று ரேவதி ஷண்முகம் அவர்கள் சொல்லியிருக்காங்க டிப்ஸ்
கீதா
வாங்க கீதா... வணக்கம். ஒரு அளவுக்குமேல் விஷயம் வெளிப்பப்ட்டுதானே ஆகவேண்டும்! ஹா.. ஹா.. ஹா...
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குவணக்கம் பானு அக்கா... வாங்க...
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்...
வணக்கம் துரை செல்வராஜூ ஸார்... வாங்க...
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇப்போதுதான் நன்றாக கவனித்துப் படித்தேன். கடலை மாவு, அரிசிமாவு, சோளமாவு, சரி... சீயக்காய் பொடியையும் போட்டீர்களா? எதற்கு... கோஸ் எண்ணெய் பிசுக்கின்றி பளபளக்கவா? :) அடாடா.. இது தெரியாமல் நானும் இதைப் போல் செய்கிறேன் என சொல்லி விட்டேனே...:) நன்றி. பிற பகுதிகளையும் படித்து விட்டு வருகிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கமலாக்கா எப்படி இருக்கீங்க கொஞ்ச நாளா வரலையே நலமா?
நீக்குகீதா
அப்பாடி! அதை கவனித்த்து விட்டீர்களா? நான் அதை எல்லாம் போடவில்லை! சும்மா தமாசு!! பாஸ் சொன்னதாக நான் சொல்லி இருப்பதையும் கவனியுங்கள்!
நீக்குகமலா ஹரிஹரன் வந்து இருப்பது மகிழ்ச்சி தருகிறது.
நீக்குவணக்கம் கீதா ரெங்கன் சகோதரி
நீக்குநான் நலமாக உள்ளேன். இத்தனை நாளும் மன விசாரந்தான் வர இயலாமல் தடுத்து விட்டது. ஆனால், உங்கள் அனைவருடனும் இப்படி உரையாடினால், மன வருத்தங்கள் சற்று குறையுமே என இப்போது வந்துள்ளேன். என்னை அன்பாக நலம் விசாரித்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.நீங்கள் அனைவரும் இப்படி என் மீது அன்பு வைத்திருப்பதை கண்டு நான் மிகவும் பெருமையும் சந்தோஷமும் அடைகிறேன்.நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கோமதி சகோதரி
நீக்குநலமா? நான் இங்கு வந்து இருப்பது குறித்த உங்களின் மகிழ்ச்சியான வார்த்தைகள் எனக்கும் மிகவும் சந்தோஷமாக உள்ளது. நம் அன்பான உறவு பிணைப்புகள் இப்படி என்றுமே தொடர்ந்து வர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா! மனம்/உடல் இரண்டும் இப்போது கொஞ்சமானும் ஆறுதல் அடைந்ததா? எங்களுக்கும் இப்படியான சில இழப்புக்கள்! தொலைபேசி அழைப்பு என்றாலே கவலை/பயம் வருகிறது. விரைவில் இந்தத் தொற்றில் இருந்து அனைவரும் மீண்டு வர வேண்டும் என்று பிரார்த்திப்போம்.
நீக்குவணக்கம் சகோதரி
நீக்குதங்களின் அன்பான விசாரிப்பு கண்டு மனம் மகிழ்வடைந்தேன். உங்கள் அனைவரின் அன்பான உள்ளங்களிலிருந்து வரும் அன்பு ததும்பும் வார்த்தைகள் என் மனக்கவலையை சற்று (அதிலும் இன்று) மாற்றுகிறது.
உண்மைதான்... உறவினர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்தாலே மனம் முதலில் பதறுகிறது. அனைவரும் இந்த தொற்று அபாயத்திலிருந்து முற்றிலும் விடுபட வேண்டும். இதற்கு ஆண்டவனை பிரார்த்திப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை. மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஸ்ரீராம் மிக்க நன்றி எங்கள் புத்தகம் பற்றிக் குறிப்பிட்டமைக்கு.
பதிலளிநீக்குபானுக்காதான் அதை வெளியிட முயற்சி எடுத்துக் கொண்டு, என்னிடம் சொன்னார்கள். பானுக்கா எடுத்திருக்கவில்லை என்றால் கண்டிப்பாக வந்திருக்காது. அல்லது ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பத் தாமதமாக...
கூடவே, கொஞ்சம் ஓரளவு சில கருத்துகள் ஒத்துப் போகிற கருவை நம்ம ஏரியாவில் கௌ அண்ணா கொடுத்திருந்தார் ஒன்று பச்சை தாவணி வருமே அந்தக் கரு, அவர் எழுதி தொடங்கியிருந்தார் அதுவும் மற்றொன்று பெண் பார்ப்பதற்குப் பதில் பையன் பெண் வீட்டிற்கும் பெண் பையன் வீட்டிற்கும் சென்று ஒரு வாரம் தங்கி ஒத்துவருமா என்று பார்த்து கல்யாணம் முடிவு செய்வது...
இந்த இரு கருவுக்குமே நாங்கள் இருவரும் எழுதியிருந்தோம். இரண்டுமே சேர்த்தால் (4 கதைகள்) ரொம்ப அதிகமாகிவிடும் என்பதால் இடம் மாறும் கதைகளை அக்கா போடலாம் என்று சொல்லி எனது வெர்ஷனையும் கேட்டிருந்தார்.
அதில் நம்ம ஏரியாவில் வந்த கதையிலேயே நான் கொஞ்சம் சில மாற்றங்கள் செய்து வைத்திருந்ததை அக்காவுக்கு அனுப்பிட...அக்காவின் கதையும் என் கதையும் சேர்ந்தன.
முதல் கதை இங்கு தொடராக வந்தது....இருவரும் சேர்ந்து எழுதியது. நம்ம ஏரியாவில் வந்த கருவிற்கு நாங்கள் இருவரும் தனி தனியாக எழுதிய கதைகள் என்று
நீயும் நானும் சேர்ந்து செல்லும் நேரமே என்ற தலைப்பு இரண்டிற்கும் பொருத்தமாக இருப்பதாகவே பட்டது என் மனதிற்கு!
அக்காவின் முழு முயற்சியாலும் வெங்கட்ஜியின் உதவியாலும் வெளி வந்ததற்கு அவர்கள் இருவருக்கும் நன்றி.
எபி க்கு, கௌ அண்ணா, ஸ்ரீராம் மிக்க மிக்க நன்றி.
கீதா
விவரங்களுக்கு நன்றி கீதா. அந்த இருவர் இணைந்து எழுதியக்கதை டாப் உண்மையிலேயே. சில அனாவசிய இடங்களை மட்டும் நீக்கி சீர்செய்திருக்கலாம்.
நீக்குபுத்தக விமரிசனம் அருமை. இங்கே கொடுத்திருப்பதற்கும் வாழ்த்துகள். உங்கள் அனைவரின் கூட்டு முயற்சி வெற்றி பெற்றதுக்கும் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கும் வாழ்த்துகள்.
நீக்குஸ்ரீராம், கீதா அக்கா, வல்லி அக்கா எல்லோருக்கும் உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.
நீக்குஸ்ரீராம் அட்டகாசமா வந்திருக்கு கோஸ் பொரியல்!! ஆமாம் பொரித்ததால் பொரியல்தானே! அதான்...
பதிலளிநீக்குஉங்கள் கற்பனை செம....
நானும் இப்படித்தான் கையில் கிடைத்த பொடியெல்லாம் போட்டு ஏதோ ஒன்று மனதிற்குத் தோன்றியதைச் செய்வதுண்டு. அதனால் தான் திங்கவுக்குக் கூட எழுத முடியாமல் என்னா மீண்டும் செய்யறப்ப அளவு எடுக்கணுமே ஒரு குறிப்பா போடணும் என்றால் அது கஷ்டமானதாச்சே ஹா ஹா ஹா
இப்ப புரியுது ஏன் நீங்க செஞ்ச திங்க பதிவு போட மாட்டேன்றீங்கன்னு!!!!!!!!!!!!!!!!!
கோஸ் கறி தேங்காய் போட்டது சூப்பரா இருக்கும். ரொம்பப் பிடிக்கும் அப்படியே சாப்பிட
கீதா
அதை பொரியல்னு சொல்றீங்களா?!!! அந்த வகைக்கான இலக்கணங்கள் அதில் இருக்கா?
நீக்குபாராட்டுக்கு நன்றி கீதா.
கொஞ்ச நேரம் கழித்து அதை எண்ணெயில் பொரித்து எடுத்து விட்டேன். //
நீக்குஸ்ரீராம் பின்னே எண்ணையில் பொரிப்பதை சரியான அர்த்தம் பொரியல்தானே!!! தமிழ் தமிழ்!!! ஹிஹிஹிஹி (பொரியல் னா என்னன்னு தெரிந்தாலும் இப்படி சும்மா...)...ஆங்கிலத்தில் டீப் ஃப்ரைன்னு....ஆழ் பொரியல்?!!!! வறுவல் சரியோ?
சரி கோஸ் வெங்காயம் வறுவல் நு வைச்சுக்குவோம் என்ன சொல்றீங்க! இல்லை கோஸ் வெங்காயம் அறுபத்து ஐந்து!! இதெப்படி? கோஸ் சில்லி ஃப்ரை?!
சாஸ் விட்டிருந்தீங்கனா கோஸ் மஞ்சூரியன்!
பேர் சூட்டு விழாவுக்கு எல்லாரையும் கூப்பிட்டுருவோம்...
கீதா
ஓ... பொறித்து எடுத்ததால் பொரியலா?!!! சரி, ஓகே! கீதா அக்கா அதை பஜியா என்று சொல்லி இருக்கிறார் பாருங்க!
நீக்குவழக்கம்போலதான். உனனைப்பிடி, என்னைப்பிடி என்று ஓடிவிட்டது. பாவம், சாத்வீகமாக கொஞ்சம் நீர் தெளித்து வேகவைத்து, தேங்காய்த்துருவலோ, வெங்காயமோ போட்டு இறக்க வேண்டியதை இப்படிக் கரடுமுரடாகச் செய்தால்தான் பிடிக்கிறது என்பது கலிகாலம்! //
பதிலளிநீக்குஹா ஹா ஹா உண்மைய்தான் ஸ்ரீராம்...
கீதா
:>))
நீக்குரசனையாய் சாப்பிடத் தெரிந்தவர்களுக்குதான் நன்றாய்ச் சமைக்கத் தெரியும், அல்லது சமைக்க வரும் என்பது என் கருத்து! இல்லாவிட்டால், இன்றைய கடமை முடிந்தது என்று ஏனோதானோ என்று சமைத்து விட்டுப் போனால் சாப்பிடுவதில் சுவாரஸ்யம் வராது!//
பதிலளிநீக்குகன்னாபின்னான்னு இதை ஆதரிக்கிறேன் ஸ்ரீராம். 100% இல்லை என்றாலும் ஒரு பெர்சன்ட் குறைத்துக் கொண்டு...
ஏனென்றால் என் உறவினர் தான் சாப்பிட மாட்டார் சில உடல் உபாதைகளால் ஏதோ ஒன்று என்றுதான் ஆனால் அவர் சமைப்பது அட்டகாசமாக இருக்கும்..
கீதா
பாஸ் பசங்களுக்குப் பிடித்தது என்று பார்த்துப்பார்த்துச் சமைப்பார். ஆனாலும் அப்போதைக்கப்போது மூட் மாறி வேஸ்ட் ஆகும். என்னதான் செய்வார்!
நீக்குஅதுதான் அம்மா!!!! பிள்ளைக்கு எது பிடிக்குமோ அதுதான் அங்கு கணவர் கூட செகண்ட் தான்..அப்பா, அந்த வயதில் பக்குவம் ஏற்பட்டு அட்ஜஸ்ட் செய்துக்கலாமேன்னு ஹாஹாஹா
நீக்குஆனால் சில வீடுகளில் அதுவும் கஷ்டமாக இருக்கும்தான்.
பிள்ளைகளுக்கு மூட் மாறும் தான்..பாவம் பாஸ்/அம்மாக்கள். ஏனென்றால் பெரும்பாலும் இப்படி மீறுபவை அம்மாக்களின் வயிற்றுக்குள்தான்.
நம் வீட்டில் அப்படி மீந்தாலும் வேஸ்ட் செய்யக் கூடாது என்பது ரொம்பவும் பின்பற்றும் விஷயம் எனப்தால் அதற்கேற்ப அடுத்த வேளை சமைப்பது அல்லதை அதையே மூவரும் பகிர்ந்துகொண்டு விடுவது.
கீதா
ஆரோக்கியம் என்று தெரிந்தாலும், சொன்னாலும் அதைச் சாப்பிடுவதில்லை மக்கள். என்ன செய்ய...
நீக்குஇரண்டு பேர் இருக்கும் வீட்டில் ஒத்துப்போவது கொஞ்சம் ஈஸி. கொஞ்சம்தான்! //
பதிலளிநீக்குடிட்டோ டிட்டோ... கொஞ்சம் தான் என்பதை அழுத்திச் சொல்லலாம்!! பல வீடுகளில் பார்த்திருக்கிறேன். மனைவிக்குத் தான் விரும்பியதைச் செஞ்சு சாப்பிட முடியாது கணவருக்கு என்ன பிடிக்குமோ அதுதான்...
நல்ல காலம் எங்கள் வீட்டில் மூவருக்குமே எல்லாம் ஓகேதான்...அது போல புகுந்த வீட்டிலும் ரொம்ப பிடிக்காது என்பது அவ்வளவு இல்லை..ஆனால் அவர்கள் சமைக்கும் விதத்தில் சமைத்தால் ஏனென்றால் எங்கள் ஊர் வகைகள் அதுவும் கேரளத்து வகைகள் வட இந்திய வகைகள் புதுசு புதுசு என்பதெல்லாம் நான் வந்த பிறகுதான் பழக்கம்...ஆனால் பெரும்பாலும் அவர்கள் சமைக்கும் விதம் தான் சமைப்பது தேங்காய் சேர்க்காமல் செய்வது..
கீதா
ஹா... ஹா... ஹா... வீட்டுக்கு வீடு வாசப்படி... விஷயங்கள் ஆசைப்படி... எங்கெங்கும் போராட்டம்தான்... எல்லோரும் உன்னாட்டம்தான்!""
நீக்குநல்ல காலம் எங்கள் வீட்டில் மூவருக்குமே எல்லாம் ஓகேதான்...//
நீக்குஇது பாக்கலையா ஸ்ரீராம்....எல்லாமே பிடிக்கும் ஸ்ரீராம் புதுசா ட்ரை பண்ணினாலும்..
விருது விருது!!! மேலே போய் பாருங்க! வல்லிம்மா கருத்துல...நினைவு படுத்துகிறேன்...ஹிஹிஹி...
கீதா
நான் பாடினது பாட்டு... தெரியுமோ? மேலே பார்த்து பதிலும் கொடுத்து விட்டேன்!
நீக்குதெரியுமே ஸ்ரீராம்!!!
நீக்குகீதா
ஆ........ இத்தனை "பிடிக்கலை" இருந்தால் என்ன சமைப்பது? பொதுவான ஒன்று என்றாலும் அதையே திரும்ப திரும்ப சமைப்பது? தலை சுத்துது ஹா ஹாஹாஹாஹா
பதிலளிநீக்குகீதா
ஆமாம். ஆப்ஷன் கம்மி!
நீக்குசீயக்காய் கூடவே ஹா ஹா ஹா...சிரித்துவிட்டேன்..
பதிலளிநீக்குஎஸ் ஏபி பற்றிய தகவல்கள், அவர் எழுதிய நாவல் பற்றியக் கதைச் சுருக்கம் சுவாரசியம். திரைப்படமாக வந்ததா? அடுத்த பகுதியில்தான் தெரியும்.
கீதா
நன்றி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா வாங்க...
நீக்கு//இன்னொரு பாத்திரத்தில் கடலைமாவு, அரிசிமாவு, கார்ன்மாவு, காரப்பொடி, மசாலாப்பொடி, சீயக்காய்ப்பொடி, பெருங்காயம், உப்பு என்று கைக்கு கிடைத்த மாவை எல்லாம் போட்டு சேர்த்து, தேங்காய் எண்ணெயில் கரைத்துக் கொண்டேன்.//
பதிலளிநீக்குஇப்படியா பயமுறுத்துவது? சீயாக்காய்ப்பொடி எல்லாம் போட்டு என்று.
//கத்தியை எடுத்தபோது கூட எப்படிக் கொலை செய்ய வேண்டும் என்கிற சரியான ஐடியா இல்லை.//
இப்படி வேறு பயமுறுத்தல்.
வெங்காயத் தூள் பக்கோடா போல இருக்கிறது.
ரோஜா இதழல்கள் போல வெங்காயம்.
இந்த படம் முகநூலில் பார்த்தேன்.
ஹா... ஹா.. ஹா... சும்மா ஜாலிக்கு எழுதியது அக்கா. ஆமாம்.. செய்த அன்றே பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன்!
நீக்குஎஸ் ஏ பியின் காதலெனும் தீவினிலே விமர்சனம் நன்றாக செய்து இருக்கிறார் ஜீவி சார்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபானு, கீதா இருவரின் கதை மின்னூலுக்கு வாழ்த்துக்கள். வெங்கட் தளத்தில் அரவிந்த் செய்த நூல் விமர்சனம் படித்தேன். நன்றாக செய்து இருக்கிறார்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குநன்றி கோமதி அக்கா.
நீக்கு// ரசனையாய் சாப்பிடத் தெரிந்தவர்களுக்குதான் நன்றாய்ச் சமைக்கத் தெரியும் //
பதிலளிநீக்கு+ நன்றாக எழுதத் தெரியும்...
+ நன்றாக படம் எடுக்கத் தெரியும்...
மின்னூலுக்கு வாழ்த்துகள்...
:>))
நீக்குநன்றி DD.
நன்றி டி.டி.
நீக்குரசித்தேன்
பதிலளிநீக்குமின்னூலுக்கு வாழ்த்துகள்
நன்றி.
நீக்குநன்றி சார்.
நீக்குஎனக்கெல்லாம் அவ்வளவு ரசனையாய்ச் சாப்பிடத் தெரியாது. சாப்பிடவும் முடியாது. ஆனால் ரசனையாகச் சமைப்பேன். மற்றவர் சாப்பிடும்போது ரசிப்பேன். கோஸ்/கடலைமாவு பஜியா நன்றாக இருக்கிறது. இது கிட்டத்தட்ட மஞ்சூரியன் போலத் தான். கூடவே கிரேவியும் பண்ணி இந்தப் பொரித்து எடுத்ததை அதில் போட்டுச் சாப்பிட்டிருக்கலாம். வெங்காயம் இரண்டுமே பெரிய வெங்காய ரகம் தான். இப்போது சின்ன வெங்காயம்/சாம்பார் வெங்காயம் எனப்படும் நாட்டு வெங்காயம் அத்தனை கண்களில் படவில்லை. இந்தப் பெரிய வெங்காயத்தையே சின்னதாக வந்ததும் வெட்டிடுவாங்க போல! அதையே காய வைத்துச் சின்ன வெங்காயம் என்ற பெயருடன் கொடுக்கிறார்கள். அவ்வளவு மணம் இல்லை.
பதிலளிநீக்குஇல்லை, பெரிய வெங்காயத்தை சின்ன வெங்காயமாக கொடுக்க முடியாது என்றே நினைக்கிறேன். ஆனால் சின்ன வெங்காயத்தில் காரம், மணம் இல்லை என்பதும் உண்மை. மரபணு, கிரபணு மாற்றி விட்டார்களா, தெரியவில்லையே!
நீக்குகொடுக்கலாம்/கொடுப்பார்கள்/கொடுக்கிறார்கள். சின்ன வெங்காயம் திருச்சி/திண்டுக்கல்லில் விளைந்தது நன்றாக இருக்கும். ஆந்திராச் சின்ன வெங்காயம்/அதான் பெரிசில் சின்னது/ வாசனை இருக்காது.
நீக்குஎஸ் ஏ.பி.யின் காதலெனும் தீவினிலே படிச்சிருக்கேன். இந்தக் கதாநாயகன் வஸந்தன் ஒரு அத்தியாயத்திலே குடித்துவிட்டு வருவான். அது இன்னமும் நினைவில் இருக்கு. முடிவென்னவோ சுபம் தான்! அந்தக் குழந்தைகள் இரண்டும் திரைப்படமாக வந்திருந்தால் அருமையாகக் காட்சி தந்திருப்பார்கள்/நல்ல வாய்ப்பு நடிக்க. குமுதத்தில் எப்போ வந்ததுனு தெரியாது. நான் புத்தகமாகத் தான் படிச்சிருக்கேன். ஒரே நாளில் சொல்லப் போனால் மதியம்/காலை பதினோரு மணிக்கு ஆரம்பிச்சு மத்தியானம் மூன்று மணி வரை விடாமல் படிச்சு முடிச்ச புத்தகம் இது. அதுவும் என் சிநேகிதி வீட்டில். அங்கே போயிருந்தப்போ அவங்களுக்கு ஏதோ வேலை வந்துவிட என்னை உட்கார்த்தி வைத்து இந்தப் புத்தகத்தைக் கையில் கொடுத்துட்டுப் போய்விட்டார். சும்மாப் புரட்டினவள் படிக்க ஆரம்பிச்சு முடிச்சுட்டுத் தான் வீட்டுக்கே போனேன். பின்னே? நூலகத்தில் இருந்து எடுத்து வந்ததாச்சே அந்தப் புத்தகம்? :)))))
பதிலளிநீக்குஓ... ரொம்ப வருடங்களுக்கு முன்னர் நானும் இப்படி எடுத்த புத்தகத்தைக் கீழே வைக்காமல் படித்து முடித்ததுண்டு. அது ஒரு காலம்!
நீக்குஇதே முறையில் பாகற்காயையும் செய்யலாம். பாகற்காயை மெல்லிசாக ரவுண்ட் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். (பஜ்ஜிக்கு வாழைக்காய் சீவுவது போன்று). விதைகளை நீக்கி விடவும். கொஞ்சம் உப்பு பிசறி 10 நிமிடம் கழிந்து கையால் பிழிந்து சாறை ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும். இதை டயாபடீஸ் உள்ளவர்க்கு குடிக்க கொடுக்கலாம். மீதி உள்ள பாகற்காயில் கடலை மாவு அரிசி மாவு மிளகாய் பொடி பிசறி பகோடா போல ஆனால் உதிரி உதிரியாக பொரித்து எடுக்கவும். கொஞ்சம் வேர்க்கடலையும் பொரித்து சேர்த்தால் ன்னும் நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்குஎஸ் ஏ பி கதை விவரமுடன் ஆய்வுக்கட்டுரை போல் உள்ளது. நன்றாக செல்கிறது.
ஆமாம் கீதா மாமியை காணோம்?
Jayakumar
பாகற்காயும் செய்திருக்கிறேன் JC சார்... அதேபோல பிஞ்சு பாகற்காய் (குறிப்பாக மிதி பாகல்) கிடைத்தால் அதை சிறு துண்டங்களாக நறுக்கி அப்படியே வேகவைக்காமல் பச்சையாக அதில் எலுமிச்சம்பழம் பிழிந்து உப்பு பெருங்காயம் போட்டு ஒரு பச்சை மிளகாய் கீறிப்போட்டு சாப்பிட்டிருக்கிறேன்.
நீக்குஇது என் பெண்ணுக்கு ரொம்பப் பிடிக்கும். எங்கேர்ந்துதான் கத்துக்கறாங்களோ இந்த ரசனையை... எனக்கு பாகல் சாம்பார் தவிர வேறு எதுவும் பிடிக்காது
நீக்குபெண்ணுக்குப் பிடிச்சது வருவலா? , சாலடா நெல்லை?
நீக்குபாகல் ஊறுகாய்..ஹாஹா இதை மோர் சாதத்துக்குத் தொட்டுக்கொள்வாள்.
நீக்குஸ்ரீராம் ஹைஃபைவ் நான் பாகற்காய் சாலட் நானும் செய்து ருசித்து சாப்பிடுவேன்..
நீக்குஜேகே அண்ணா சொல்லிருக்கும் வறுவலும் தான் அதுவும் நன்றாக இருக்கும்
நெல்லை //பாகல்// ஹா ஹா ஹா ஹா ஹிந்தி ஹிந்தி!?!
கீதா
பாகற்காயை வறுத்தாலும் நன்றாக இருக்கும். நான் எப்போவுமே கொஞ்சம் மோர் சேர்த்துப் பாகற்காயை நறுக்கி உப்பு, மஞ்சள் பொடி போட்டு ஊற வைத்துப் பின்னர் அந்தப் பாகற்காயைப் பிழிந்து எடுத்துவிட்டுத் தான் சமைப்பேன். கடலைமாவுக் கலவையிலும் போட்டு எடுக்கலாம்.
நீக்குஏன் பின்னூட்டத்தில் கடைசி வரியை நீக்கி விடவும்.
பதிலளிநீக்குJayakumar
நீங்கள் சொல்லி இருப்பதால் கடைசி வரியை நான் படிக்கவில்லை.
நீக்குநன்றாகத்தான் கொலை பண்ணி இருக்கிறீர்கள் பாவம் கோஸ் :)
பதிலளிநீக்குஎங்கள் வீட்டில் பிடிக்காத உணவு என்பது குறைவு சிறுவயதிலிருந்தே பிள்ளைகளுக்கு பழக்கிவிட்டோம். ஒருநாள் விட்டு மறுநாள் ஒரு கீரை இருக்கும். பெரும்பாலும் வாங்குவதில்லை.தொட்டிகளில் பசளை,பொன்னாங்கண்ணி இனங்கள் ,கரிசலாம்கண்ணி,வளர்க்கிறேன். முருங்கை,அகத்தி, சண்டி,தூதுவளை, தவசிமுருங்கை,முசுமுசுக்கை,வல்லாரை,பிரண்டை,சிறுகீரை என்பன இருக்கின்றன.
//நன்றாகத்தான் கொலை பண்ணி இருக்கிறீர்கள் பாவம் கோஸ் :)//
நீக்கு:-))))))
அம்மாடி எத்தனை கீரைவகைகள்... நன்றி மாதேவி.
எஸ்ஏபி-யுடன், எபி-யின் எழுத்தாள இரட்டையர்கள்! வியாழனில் தொட்டுக்க முட்டைக்கோஸு, வெங்காயம்..
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஹா... நன்றி ஏகாந்தன் ஸார்.
நீக்குஎன்னதான் ஸ்ரீராம் பயமுறுத்த முயன்றாலும், நான் பயப்படவில்லை. பொக்கிஷம் பகுதியை தவிர்திருக்க வேண்டாம்.
பதிலளிநீக்கு//என்னதான் ஸ்ரீராம் பயமுறுத்த முயன்றாலும்//
நீக்குஅபுரி!
ஆனால் பொக்கிஷம், ஜோக் என்று நீண்டுகொண்டே போனால் பதிவு படிக்கும் பொறுமை போய்விடுமே...!
வொய் அபுரி? பானுக்கா சொல்லிருக்கறது நீங்க கத்தி படம் போட்டுப் பயமுறுத்தினாலும் (கத்தியைக் காட்டி) பயப்படவில்லை என்று!!!!! கத்தி படம் படு மொக்கை!! ஹிஹிஹிஹிஹி (இது எந்தக் கத்தின்னு புரிந்ததுதானே இல்லை அதுவும் அபுரியா!!!!!)
நீக்குகீதா
நீண்ட நாட்களுக்குப் பிறகு கமலா அவர்களின் வருகை மகிழ்ச்சிப் அளிக்கிறது.
பதிலளிநீக்குஆம். தொடர்ந்து வரவேண்டும் என்பது கோரிக்கை.
நீக்குவணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன் சகோதரி
நீக்குஇங்கு என் வருகை குறித்து தாங்கள் மகிழ்வுற்றதாக கூறியது எனக்கு மிகவும் சந்தோஷத்தை தருகிறது. மிக்க நன்றி சகோதரி. இப்படி இந்த வலைத்தளம் மூலமாக பல அன்பான சகோதர, சகோதரிகளை எனக்கு தந்த இறைவனுக்கு எப்போதும் என் நன்றிகள்.
சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் சொல்வது போல தொடர்ந்து வர விரும்புகிறேன். இப்போது எனக்கு இந்த வலை வருகைகள் மனக்கவலைகளை மாற்றித்தரும் ஒரு மருந்தாக இருக்குமெனவும் நம்புகிறேன். இறைவன் விருப்பமும் அவ்வாறேயிருக்க வேண்டிக் கொள்கிறேன்.
நீங்களும், சகோதரி கீதா ரெங்கனும் சேர்ந்து அருமையாக எழுதி எ.பியில் வாரந்தோறும் பிரசுரித்த நல்ல கதையை மின்னூலாக கொண்டு வந்தமைக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள். அருமையான கதையை தந்த உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ரா கி ரங்கராஜனின் புத்தகங்களை இறக்கிக்கொள்ள...
பதிலளிநீக்குhttps://tamil-desiyam.com/r-k-rangarajan-novels/
ஸ்ரீராம் இந்தத்தளத்திலிருந்து நான் பல புத்தகங்கள் இறக்கி வைத்துள்ளேன். ராகிர உட்பட...வேறு சில தளங்களிலிருந்தும்....சில புத்தகங்கள்
நீக்குகீதா
தமிழ் தேசியத்தில் ரா.கி.ர இருக்காரா?
நீக்குஸ்ரீமதி கமலா ஹரிஹரன் அவர்களுக்கு நல்வரவு..
பதிலளிநீக்குஎல்லாம் அவன் செயல் என்று மனதைத் தேற்றிக் கொள்ளவும்...
இறைவன் துணை..
வணக்கம் சகோதரரே
நீக்குஇங்கு என் வரவு குறித்து தாங்கள் நல்வரவு என அன்புடன் கூறியமைக்கு மிக்க நன்றிகள். எல்லாம் அவன் செயல் என்றுதான் நினைத்து மனம் தேறி வருகிறேன். இன்று இங்கு வந்து உங்கள் அனைவரிடமும் உரையாடியது மனதிற்கு மாறுதலாக இருந்தது. நீங்கள் அனைவரும் என்னிடம் அன்பாக நடந்து கொள்வது பூரிப்பாக இருக்கிறது. நல்ல பண்பான சகோதர சகோதரிகளை இவ்வாழ்வில் எனக்கு தந்த இறைவனுக்கு எப்போதும் என் நன்றிகள். நம் அனைவருக்குமே இறைவன் துணையாக இருக்க வேண்டும் என்று நானும் வேண்டிக் கொள்கிறேன்.
உங்கள் கருத்துக்கு அப்போதே உடனே பதில் கருத்து தந்தேன். நெட் பிரச்சனையால், உடனடியாக அது வெளி வரவில்லை. அதனால் இப்போது இந்த பதில் தருவதற்கு சற்று காலதாமதமாகி விட்டது. மன்னிக்கவும். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நேற்றைய பதிவின் கருத்துரைகளுக்குள் அன்பின் ஸ்ரீராம் அவர்கள் சொல்லியிருந்த மாதிரி -
பதிலளிநீக்குசிவானந்த விஜயலக்ஷ்மி அவர்களது கானாம்ருதத்தைக் கண்டெடுத்துப் பருகினேன்...
அடடா... 45 ஆண்டுகளுக்குப் பின் சென்று விட்டது மனம்...
ஆஹா... யாம் பெற்ற இன்பம்...
நீக்குஅசாம் மாநிலத்தவர்கள் கோஸை மிகவும் மெல்லியதாக நறுக்கி, பொரித்து எடுப்பார்கள் - வருவலாக! நல்ல சுவையில் இருக்கும்! அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி வீட்டில் செய்ததாகச் சொல்லி, எங்கள் வட கிழக்கு மாநிலப் பயணத்தின் போது கொடுத்தார். ஒரு பெரிய ப்ளேட்டில் தந்ததை காலி செய்தோம்! அந்த நினைவு வந்தது.
பதிலளிநீக்குமின்னூல் குறித்த தகவல் நன்று - என் தளத்தினையும் பதிவில் குறிப்பிட்டு இருப்பதற்கு நன்றி. மகிழ்ச்சியும்!
/அசாம் மாநிலத்தவர்கள் கோஸை மிகவும் மெல்லியதாக நறுக்கி, பொரித்து எடுப்பார்கள் - வருவலாக!//
நீக்குஅடடே... அவர்கள் இதுபோல செய்வார்களா?
நன்றி வெங்கட்.
புத்தகத்திற்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி
பதிலளிநீக்குகீதா
வணக்கம் சகோதரி
நீக்குஉங்கள், மற்றும் சகோதரி பானுமதி இருவரின் கூட்டு முயற்சியில் இங்கு வெளியான கதை படித்திருக்கிறேன். நல்ல அருமையான கதை மின்னூலாக வெளி வந்திருப்பது மிக்க மகிழ்ச்சி. உங்கள் இருவருக்கும் என் அன்பான வாழ்த்துகளும் பாராட்டுகளும். நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நல்ல கலை:). சுவைக்கத் தூண்டுகின்றன படங்கள். வெங்காய இதழ்களைப் பொறுமையாகப் பிரித்தெடுத்திருக்கிறீர்கள். விருப்பு வெறுப்புகளின் பட்டியல் சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குநீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே.. வாசித்து ரசித்தத் தொடர். அமேசானில் கதை உருவான விதத்தின் பகிர்வு சுவாரஸ்யம். நூலாசிரியர்கள் இருவருக்கும் நல்வாழ்த்துகள்.
நன்றி ராமலஷ்மி.
நீக்கு