இன்று..
பதிமூன்றாவது வயதில் அடியெடுத்து வைக்கிறது..
உங்கள் ஆதரவு, அன்பு, ஆசிகளுடன்..
உங்கள் ஆதரவை தொடர்ந்து நாடும்
- எங்கள் ப்ளாக் குழு -
---------------------------------------------------------------------------------------------------------------------
பாகற்காய் என்றாலே கசப்பு என்று முகத்தைச் சுளிப்போம். ஆனால் அதன் மருத்துவ குணமோ சொல்லில் அடங்காது. இது டைப் 2 நீரிழிவுக்கு சிறந்தது. இதன் வேதிப்பொருள் இன்சுலின் போல செயல்பட்டு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். இதிலுள்ள விட்டமின் சி & ஆன்ட்டி ஆக்சிடென் கண்களை பாதுகாக்கும் அதிக நார்ச்சத்து உள்ளது.
பாகற்காயை உணவில் சேர்க்க பாகற்காய் பிட்லை மிகச் சிறந்தது. ஏனென்றால் மற்ற டிஷ் செய்யும்போது அதன் கசப்பு தன்மை அதிகம் வெளிப்படும். அதனால் நாம் அதை சாப்பிட கஷ்டப்படுவோம். ஆனால் பாகற்காய் பிட்லை அதை நிவர்த்தி செய்கிறது. இங்கு நான் சுலபமாக பிட்லை செய்யும் முறையை விளக்கியுள்ளேன். இதை வாரம் ஒரு முறை செய்து குடும்பத்துடன் சாப்பிட, உணவே மருந்தாக நம்மை பாதுகாக்கும் என்பது உறுதி. இதை சிறுவயது முதலே குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுத்துப் பழக வேண்டும்.
இதற்கு தேவையான பொருட்கள்
1. பாகற்காய்..1/4 கிலோ
2 கருவேப்பிலை..1 கொத்து
3 கொத்தமல்லி1 பிடி
4 கருப்பு கொண்டை கடலை (மூக்கு கடலை) 100 கிராம்
5 துவரம் பருப்பு 1/2 கப்பு
6 கடலைபருப்பு1 டேபிள் ஸ்பூன்
7 மல்லி 1 டேபிள் ஸ்பூன்
8 காய்ந்த மிளகாய் 2
9 சாம்பார் பொடி 1 டேபிள் ஸ்பூன்
10 புளி. ஒரு எலுமிச்சை அளவு
11 மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
12 கடுகு..1 டீஸ்பூன்
13 எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
14 உடைத்த உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன்
15 பெருங்காயம் 1/2 ஸ்பூன்
16 தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்
17 வெல்லம் 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
1 பாகற்காயை வட்டவடிவமாக நறுக்கிக்கொள்ளவும்
2 தண்ணீரில் போட்டு அதிலுள்ள விதைகளை நீக்கவும்
3 கொண்டைக்கடலையை முதல் நாளே ஊறவைத்து வேக வைக்கவும் அல்லது கடலை நன்கு சிவக்க வறுத்து வேக வைக்கவும்
4 துவரம்பருப்பை மஞ்சள் பொடி போட்டு குக்கரில் வேக வைக்கவும்
5 குழம்பு செய்யும் பாத்திரத்தில் பாகற்காயை போட்டு புளி கரைத்து காய்கள் மூழ்கும்வரை ஊற்றவும்
6 சாம்பார் பொடி பெருங்காயம் தேவையான உப்பு வேகவத்த கொண்டைக்கடலை போட்டு காய் வேகும் வரை கொதிக்கவடவும்
7 மிளகாய் மல்லி கடலைப்பருப்பு இவற்றை சிறிது எண்ணை விட்டு சிவக்க வறுத்து மிக்ஸியில் தேங்காயுடன் பொடி செய்யவும்
8 வெந்த துவரம்பருப்பை நன்கு மசித்து குழம்பில் கொட்டவும்
9 மிக்ஸியில் அரைத்த பொடியை அதனுடன் சேர்த்து கொதிக்கவிடவும்
10 எண்ணெயில் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொட்டவும்
11 வெல்லத்தை சேர்க்கவும்
12 தள.தளவென்று கொதித்ததும் கீழே இறக்கி வைத்து கொத்தமல்லித்தழையை தூவவும்
இப்பொழுது கமகம வாசனையுடன் பாகற்காய் பிட்லை ரெடி. இதை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இவை நமக்கு உணவே மருந்து; மருந்தே உணவு என்பதை உணர்த்தும். இதை வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிட்டு அனைவரும் ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன்.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்..என்றும்இறைவன் அருளுடன் நலமாக இருப்போம்.
பதிலளிநீக்குவாங்க வல்லிம்மா.. வணக்கம்.
நீக்குமிக அருமையான பாகற்காய் பிட்லை செய்முறை.. சற்றே வித்யாசத்துடன் ஒவ்வொரு குடும்பத்திலும். செய்கிறோம்.. இங்கிருக்கும். பாகற்காய் கசப்பு குறைவு. அப்படியே வேகவைத்து வதக்கி சாப்பிடலாம் நம்மூர் பாகல் கசப்பும். சகிக்கக் கூடியதுதான். சிறப்பான விளக்கங்களுடன் திருமதி சியாமளா வெங்கட்ராமன் விளக்கி இருப்பது நன்மை.
பதிலளிநீக்குவாழ்த்துகள் மா. மிக நன்றி.ஶ்ரீராம்.
எங்கள் பிளாக் பிறந்த நன்னாள் வாழ்த்துகள். என்றும் சிறப்புடன் மென்மேலும் சிறக்க அன்பு வாழ்த்துகள்.
நீக்குEntering teens! Great wishes.
நீக்கு__/\__
நீக்குஎன் பதிவைவெளியிட்டதற்கு வெளியிட்டதற்கு மிக்க நன்றி
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம் மேலோங்கப் பிரார்த்திக்கிறோம்.
பதிலளிநீக்குவணக்கம் கீதா அக்கா.. வாங்க...
நீக்குஇதே முறையில் தான் நேற்று எங்களுக்குச் சமைத்துக் கொடுக்கும் உஷா மாமி செய்திருந்தார். பாகற்காய்களைத் தேட வேண்டி இருந்தது. :) சாம்பார்/அரைத்து விட்ட சாம்பார். ஆனால் கூடவே சாம்பார்ப் பொடியும் போடுகிறார்கள்.
பதிலளிநீக்கு:)))))) பிட்லை கள் பலவிதம்.அதில் சாம்பாரும் ஒரு விதம்.கீதாம்மா.
நீக்குஉஷா மாமி கிட்ட எடுத்துச் சொல்லுங்க...
நீக்குஹாஹா, உஷா மாமி நன்றாகவே சமைக்கிறாங்க. உப்புக் குறைவாய்ப் போடறாங்க. மாமா எனக்கு உப்புக்காரம் வேண்டும்னு சொல்லி இருப்பார் போல! நேத்திக்குப் பாகற்காய் சாம்பார் காரம் தூக்கல்! தட்டை, மனோகரம் எல்லாம் நாங்கள் கேட்டதின் பேரில் பண்ணிக் கொடுத்திருக்காங்க. மனோகரம் நெல்லை பண்றாப்போல் இல்லையோனு தோணுது. ஆனால் வாய்க்கு நன்றாகவே இருக்கு. :)))))
நீக்கு//மனோகரம் நெல்லை பண்றாப்போல் இல்லையோனு தோணுது.//
நீக்கு//வாய்க்கு நன்றாகவே இருக்கு. //
நாராயணா... நாராயணா... என்ன இது?!
வெல்லப் பாகு வைத்துச் செய்யும் பண்டங்களில் பாகு மேலிட்டுக் கொண்டு தெரியணும் ஶ்ரீராம். அதோடு பானுமதி சொல்லி இருந்தாப்போல் பாகு இழுத்துக் கொண்டும் இருக்கணும். நெல்லை வாட்சப்பில் போட்டிருந்த மனோகரம் பார்க்க அப்படி இருந்தது. இது அப்படி இல்லை. ஆனால் சாப்பிட நன்றாய் இருக்கு. இஃகி,இஃகி,இஃகி! தெளிவாய்க் குழப்பிட்டேனா?
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம். எங்கள்ப்ளாகிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! மேலும் பல சிறப்புகளோடு வளற வாழ்த்துகள்! கீதா ரங்கன் கேக் அனுப்புவார் என்று நம்புகிறேன்!
பதிலளிநீக்குவாழ்த்துகளுக்கு நன்றி. வாங்க பானு அக்கா... வணக்கம்.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்...
வாங்க துரை செல்வராஜூ ஸார்.. வணக்கம்.
நீக்குஎங்கள் பிளாக்கிற்கு
பதிலளிநீக்குஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...
நன்றி.
நீக்குஎங்கள் பிளாக்குக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் - கில்லர்ஜி 🤺
பதிலளிநீக்குபாகற்காய் எனது ஒன்றரை வயதிலிருந்தே விரும்பி சாப்பிடுவேன். அதனாலோ என்னவோ வாழ்வு முழுவதும் கசப்பாகவே முடிந்து விட்டது.
கசப்பு என்று ஏன் பாற்கக்வ வேண்டும்? ஆரோக்கியம்! வாழ்த்துகளுக்கு நன்றி கில்லர்ஜி.
நீக்குஆல மரம் போல நீ வாழ்க..
பதிலளிநீக்குஇங்கு ஆயிரம் பறவைகள் இளைப்பாற...
ஆனந்தக் கவிதைகள் தினம் பாட
அந்த ஆழ்கடல் அமுதென நீ வாழ்க!..
தனியாய் ஒரு மரமிருந்தால் சுவாரஸ்யமில்லை. அங்கு இளைப்பாற வரும் பறவைகளால்தான் அந்த மரமும் உயிர் பெறுகிறது; மகிழ்கிறது. இணைந்து வளர்வோம்.
நீக்குபிறந்த நாள் அதுவுமாக
பதிலளிநீக்குபாகற்காய் பிட்லையா!?...
ஏதாவதொரு இனிப்பு வகையைப் பகிர்ந்து இருக்கலாம்...
இனிப்பு உடலுக்கு கேடு.. கசப்பு ஆரோக்யம். மேலும் இந்த சென்டிமென்ட்ஸ் தேவையா என்ன!
நீக்குஎங்கள் பிளாக்கிற்கு வாழ்த்துகள்...
பதிலளிநீக்குநன்றி மதுரை,,,
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா அக்கா... வாங்க...
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஎங்கள் பிளாக்கிற்கு மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். இன்று போல் என்றும் வளர்ந்து சிறப்புடன் பிரகாசிக்க இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குவாழ்த்துகள்...
பதிலளிநீக்குசுவையான பாகற்காய் பிட்லை செய்முறைக்கு நன்றி...
நன்றி DD
நீக்குசாதனை மேல் சாதனை. ஒரு பிளாக் 13 வருடங்கள் உயிர்ப்புடன் இருப்பதே சாதனை அதில் தினமும் ஒரு பதிவு என்பது மேல் அதிக சாதனை. பல்லாண்டு வாழ்க.
பதிலளிநீக்குJC சார்.. எங்கே கொஞ்ச நாளாய் ஆளைக் காணோம்? வாழ்த்துகளுக்கு நன்றி.
நீக்குபதிமூன்றாம் ஆண்டில் எங்கள் பிளாக் தளம் - மனம் நிறைந்த வாழ்த்துகள். பாராட்டுகளும்!
பதிலளிநீக்குபாகற்காய் பிட்லை - எனக்கும் பிடித்தது.
எனக்கும் பிடிக்கும். வாழ்த்துகளுக்கு நன்றி வெங்கட்.
நீக்குபதிமூன்றாம் ஆண்டு தொடக்கத்துக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குகசப்புடன் பிறந்த நாளை ஆரம்பித்திருக்கிறீர்கள் போலிருக்கிறதே
ஆரோக்யமாக ஆரம்பித்திருக்கிறோம்! வாங்க நெல்லை.. வணக்கம். வாழ்த்துகளுக்கு நன்றி.
நீக்குஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ இன்னிக்கு எங்கள் ப்ளாகிற்குப் பிறந்த நாள் என்னும் விஷயம் என் கண்களில் மட்டும் படாமல் போனது ஏனோ? எங்கள் ப்ளாக் தொடர்ந்து வெள்ளிவிழா, பொன்விழா என்று கொண்டாடி என்றென்றும் வாசகர்கள்/எழுத்தாளர்கள் ஆதரவுடன் வெற்றி நடை போட வாழ்த்துகள். முன்னேயே தெரிஞ்சிருந்தால் ஏதேனும் இனிப்புப் பற்றிய செய்முறை அனுப்பி இருப்பேன். :( பரவாயில்லை. எல்லாச் சுவைகளும் நிறைந்ததே எங்கள் ப்ளாக் என்பதற்கு இதை ஓர் அடையாளமாக வைச்சுப்போம்.
பதிலளிநீக்குஆமாம் அக்கா.. காலை நீங்கள் ரெசிபியை மட்டும் பார்த்துச் சென்று விட்டீர்கள் போல. வாழ்த்துகளுக்கு நன்றி.
நீக்கு//எல்லாச் சுவைகளும் நிறைந்ததே எங்கள் ப்ளாக் என்பதற்கு இதை ஓர் அடையாளமாக வைச்சுப்போம்.//
இது இன்னும் நல்லா இருக்கு...
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய திங்கள் ரெசிபி மிக அருமையாக உள்ளது. பாகற்காய் படங்களும், அதன் சுவை, மற்றும் பலன்களும், பிட்லை செய்முறையும் நன்றாக உள்ளது நானும் எங்கள் வீட்டில் அடிக்கடி இதை செய்வேன். குழந்தைகளும் எல்லா சமயத்திலும் இல்லாவிடினும், சமயத்தில் பாகற்காய் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த காலத்தில் பொதுவாக குழந்தைகளுக்கு இந்தக் காய் பிடிக்காதென்பதே வீட்டுக்கு வீடு பேச்சாக இருந்தது. ஒரளவு பக்குவம் வந்த பின்தான் அதாவது குழந்தைகள் பதின்ம வயதை நெருங்கிய பின்தான் இந்த காயை விரும்பி சாப்பிடுவார்கள் என்பது எல்லோரின் கருத்தாகவும் இருந்தது. இப்போது பழக்கினால் அவர்களுக்கு பிடித்துப் போகிறது.காலங்கள் மாறித்தான் போய் விட்டது.
இன்று அருமையான செய்முறையை தந்த சகோதரி சியாமளா வெங்கட்ராமன் அவர்களுக்கு பாராட்டுகளும், நன்றிகளும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
என் பெரியவனுக்கு பாகற்காய் பிடிக்காது. இளையவன் போட்டுக்கொள்வான். எனக்கு சிறுவயதிலிருந்தே இஷ்டம். அம்மாக்கள் பழகுவதில், வளர்ப்பில் இருக்கிறது என்று தோன்றுகிறது.
நீக்குஎங்கள் பிளாகிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
பதிலளிநீக்குநன்றி வானம்பாடி.
நீக்குஅனைவருக்கும் முகம் மலர அன்பான காலை வணக்கங்கள். தொற்று நீங்கி மக்கள் நலமாய் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
பதிலளிநீக்குஇந்த வகை குருவித் தலை பாகற்காய் அவ்வளவாய் கசக்காது. பாகற்காய் பிட்லை ரெசிப்பிக்கு நன்றிம்மா!
வாங்க... வணக்கம். குருவித்தலை பாகல்? புதுப்பெயராய் இருக்கிறதே!
நீக்குமிதி/மெது பாகல் என்பார்கள். எங்க வீடுகளில் ஸ்ராத்தம் எனில் நீளப் பாகல் தான்! இது கூடாது என்பார்கள். ஏனென்று கேட்கத் தோணலை. கேட்டுத் தெரிஞ்சுக்கணும்.
நீக்குஆம். நாங்களும் அப்படிச் சொல்லிதான் வழக்கம்.
நீக்குஎங்கள் ஊரில் குருவித்தலை பாகற்காய் என்று சொல்வார்கள். .பாகற்காய் பார்க்கவும் குருவி போலவே இருப்பதாலோ என்னவோ...
நீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் எங்கள் பிளாக்கிற்கு என்றும் நீடூழி வாழ்க அன்புடன்
பதிலளிநீக்குநன்றி அம்மா.. உங்கள் ஆசீர்வாதம்.
நீக்குதிங்களில் அறுசுவை விருந்து படைத்து,
பதிலளிநீக்குசெவ்வாயில் நல்ல கதைகள் பேசி,
புதனில் கதம்பமாக தகவல் களஞ்சியம் படித்து, சிரித்து,
குருவாரத்தில் சிந்தனை தூண்டும் கேள்விகள் - பதில்கள் அலசி,
வெள்ளியன்று மகிழ்ச்சியாய் பாடல்கள் கேட்டு
சனியன்று நேர்மறை எண்ணங்களுடன் ஆக்சிஜன் உள்வாங்கி,
ஞாயிறன்று மெ(மே )ன்மையான பூஞ்செடிகள் வளர்த்து
எங்களை பெருந்தொற்று காலத்தும்,
புலன்களுக்கு புத்துயிர் ஊட்டும்,
எங்கள் தளமே நீ வாழி பல்லாண்டு!
ஆஹா.. கவிபாடி விட்டீர்கள். என்றும் நன்றியுடன்...
நீக்குகவிதைப் பாடல் அருமை வானம்பாடி. ஒரே ஒரு சின்ன வேண்டுகோள், "புதனில் சிந்தனை தூண்டும் கேள்விகள்-பதில்கள் அலசி, குருவாரத்தில் கதம்பமாகத் தகவல் களஞ்சியம் படித்து, சிரித்து" என்று மாற்றி விடுங்கள். தப்பாய் நினைக்க வேண்டாம். பாக்கி எல்லாம் சரியா இருக்கு. வாழ்த்துகள் கவிதைக்கு.
நீக்குதிங்களில் அறுசுவை விருந்து படைத்து,
நீக்குசெவ்வாயில் நல்ல கதைகள் பேசி,
புதனில் சிந்தனை தூண்டும் கேள்வி - பதில்கள் அலசி,
குருவாரத்தில் கதம்பமாக தகவல் களஞ்சியம் படித்து, சிரித்து,
வெள்ளியன்று மகிழ்ச்சியாய் பாடல்கள் கேட்டு
சனியன்று நேர்மறை எண்ணங்களுடன் ஆக்சிஜன் உள்வாங்கி,
ஞாயிறன்று மெ(மே )ன்மையான பூஞ்செடிகள் வளர்த்து
எங்களை பெருந்தொற்று காலத்தும்,
புலன்களுக்கு புத்துயிர் ஊட்டும்,
எங்கள் தளமே நீ வாழி பல்லாண்டு!
மாற்றிவிட்டேன் கீதாம்மா.திருத்தம் சொன்னதற்கு நன்றிம்மா!
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் தொடர்ந்து இயங்கவும் வாழ்த்துகள்
பதிலளிநீக்குவாழ்த்துகளுக்கு நன்றி vic
நீக்குநம் தளம் பாதின்மூன்றாவது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இனியும் தொடர்ந்து ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கும்போது, இன்று நிறைந்திருக்கும் அனைத்து சுவாரஸ்யங்களும் என்றென்றும் தொடர்ந்து அனைவரும் மகிழ்வுடன் பங்கேற்க மனமார்ந்த இனிய வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவாழ்த்துகளுக்கு நன்றி.
நீக்குபாகற்காய் பிட்லை குறிப்பு அருமை!!
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஎனக்கு எபி அறிமுகமான நாட்களிலிருந்து இன்றைய காலம் வரை பார்த்தால் வளர்ச்சியின் வேகம் நிச்சயமாக கூடியிருக்கிறது என்றே சொல்வேன்.
பதிலளிநீக்குஆனால் அந்த வளர்ச்சி வாசகர் அளவில் போய்ச் சேர்ந்திருக்கிறதா என்பது எபியின் ஆசிரியர் குழுவின் ஆய்வுக்கான வினா.
வியாழன் போன்ற தினத்து பதிவுகளை உங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டால் நிதர்சனமாய்த் தெரியும்.
பதிமூன்றாவது அகவையில் அடியெடுத்து வைத்திருக்கும் எபிக்கு உங்கள் உழைப்பின் வெற்றியின் விளைச்சல் காண மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
நன்றி ஜீவி ஸார்... மூன்றாவது வார்த்தை அபுரி!
நீக்குவெற்றியின் விளைச்சல்? -- அதுவா அபுரி, ஸ்ரீராம்?
நீக்குSorry, மூன்றாவது வரி என்பதற்கு பதில் வார்த்தை என்று சொல்லி விட்டேன்.
நீக்குஎங்கள் ப்ளாக் பதின்மூன்றாவது பிறந்த நாள் வாழ்த்துகள். மேலும் சிறப்புக்கள் பெறட்டும்.
பதிலளிநீக்குபாகற்காய் பிட்லை அருமை.
நமக்கு காரக் குழம்புதான் பிடிக்கும்.
நன்றி மாதேவி.
நீக்குவாழ்த்துக்கள்
பதிலளிநீக்குபாகற்காய் பிட்லை அப்படியே ப்ரின்ட் பண்ணி சாப்பிடுறாப்ல ஏதாவது கிக்னாலஜி கீதா?
பதிலளிநீக்குபதிமூன்றாவது வயதில் அடியெடுத்து வைக்கிறது..//
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்.
பாகற்காய் பிட்லை நன்றாக இருக்கிறது. செய்முறையும் படங்களும் அருமை.
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்கு