வியாழன், 19 ஆகஸ்ட், 2021

காஃபி சாப்பிடுவோமா? ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் மார்லின் மன்றோவும்

 நீங்கள் என்ன காபிப்பொடி உபயோகிக்கிறீர்களா?  காபியே சாப்பிடுவதில்லை என்று சொல்பவர்களை பசிக்காத புலி பயமுறுத்தட்டும்!!

காஃபி குடிப்பது உடல்நலத்துக்குத் தீங்கானது என்கிற கருத்து உண்டு.  இல்லை, காஃபி சாப்பிட்டால் மூளை புத்துணச்சி பெறுகிறது, கேன்சர் அண்டாது என்று ஆராய்ச்சி செய்தும் சொல்லி இருக்கும் குறிப்பும் உண்டு.

எப்படி இருந்தாலும் இரண்டு நாட்களுக்கு மேல் காஃபி சாப்பிடாமல் இருக்க முடிவதில்லை.  தூங்காதே தம்பி தூங்காதே கமலஹாசன் மாதிரி கைகள் நடுங்கத் தொடங்கிவிடும்!!

எல்லோருமே ஒரு குறிப்பிட்ட காபிப்பொடி ப்ராண்ட் சொல்லி எப்போதும் தாங்கள் அதுதான் வாங்குவதாகச் சொல்வார்கள்.  அதுமாதிரி வராது என்பார்கள்.  ஹோசூரில் இருக்கும் உறவினர்கள் சொல்வது வாசன் பிராண்ட்.  நங்கநல்லூர் மடிப்பாக்கம் பக்கமெல்லாம் இருப்பவர்கள் நாங்கள் எப்ப்பவுமே ஈஸ்வரன் காபிப்பொடிதான்  என்பார்கள்!  சுகுமார் இன்றும் லியோ காபிப்பொடிதான் வாங்குகிறாராம்.  அதற்கு இரண்டு காரணம்.  அவர் சிக்கரி சேர்க்க மாட்டார்.  அவர் பையனுக்கு லியோதான் பிடித்திருக்கிறது என்பதோடு கடையிலிருந்து வாங்கி வரும் பொறுப்பு மகனுக்குதான்!

எனக்கு என்னவோ சிக்கரி சேர்க்காமல் காபி குடிக்கப் பிடிக்கவில்லை.  அதைச் சேர்க்காமல் நிறமும் வராது.     சிக்கரி சேர்த்தால் அது சுத்தமான காபி இல்லை என்பது சுகுமார் போன்றவர்கள் கருத்து.  

காபிக்கொட்டை என்னவோ எல்லோரும் குறிப்பிட்ட சில இடங்களில்தான் வாங்குகிறார்கள் என்று நினைக்கிறேன்.  பின் எப்படி அதை தனித்துவமாக ப்ராண்ட் செய்கிறார்கள் என்று வியப்பு தோன்றும்.  கொஞ்சம் யோசித்துப் பார்க்கும்போது நரசுஸ், கும்பகோணம், கோத்தாஸ், லியோ, சுந்தரம், என்று நாம் அலைவது "எல்லாம் மாயைதானா?  பேதை எண்ணம் யாவும் வீணா?" என்று தோன்றும்.  ஆனாலும் பழக்கத்தை விட முடியலீங்களே...

தஞ்சை, மதுரை என்று முதலில் நரசுஸ்தான் வாங்கி கொண்டிருந்தோம்.  நீண்ட நாட்களுக்கு அதுதான்.  அப்புறம் மதுரையில் இருந்தபோது நரசுஸ் மேல் ஏதோ அதிருப்தி, அல்லது அலுத்து விட்டது.  அல்லது யாரோ சிபாரிசு செய்தார்கள் என்று மாறினோம்.  அதனால் இந்தியா காபி என்று ஞாபகம்.  அது ஒருமுறை வாங்கத் தொடங்கி கொஞ்ச நாட்கள் அது வாங்கினோம்.   சென்ட்ரல் தியேட்டரைத் தாண்டிப்போய் இடதுபுறம் திரும்பினால் அங்கு கடை இருக்கும்.

கொஞ்சநாள் கும்பகோணம் காபிப்பொடி ஒன்று.  இப்போது விற்கிறதே, கும்பகோணம் டிகிரி காபிப்பொடி அதுவல்ல.   இது அதற்கும் முந்தையது!  நாங்கள் சென்னை வந்தபின் நரசுஸ்  வாங்க வேண்டும் என்றால் தி நகர் செல்ல வேண்டும்.  'கீதா கேப்' பக்கத்தில் கடை இருக்கும்.  அங்கு செல்லும்போது வாங்குவோம்.  லியோ காபி கடை அருகில் இருக்கும்.  கஷ்டம் என்ன என்றால் லியோவில் சிக்கரி தரமாட்டார்கள்!    அவர்கள் சேர்க்க மாட்டாரக்ள்.  அதை ஏதாவது லோக்கல் கடையில் வாங்கிக்கொண்டு லியோ பொடியில் சேர்த்திருக்கிறோம்.  

லியோவில் ஏதோ எரிப்பு வாடை இருப்பது போல எங்களுக்குத் தோன்றியதால் ஓரிருமுறைக்கு மேல் அதை வாங்கியதில்லை.

அப்புறம் கொஞ்சநாள் காஃபி டே க்கு மாறினோம்.  அது என்னவோ நன்றாயிருப்பதாய் மனதுக்குள் பட்டது.  எப்போதுமே அரைக்கிலோவுக்கு 50 கிராம் சிக்கரி சேர்த்து அரைப்போம்.  அவசரத்துக்கு எப்போதாவது மாம்பலம் பக்கம் போகும்போது, அல்லது அங்கிருந்து யாராவது வரும்போது லிங்கம் காபிப்பொடி வாங்கி உபயோகித்திருக்கிறோம்.

அதே பொடிதான்,  சில சமயங்களில் வாசனையே இல்லாது இருப்பது போல இருக்கும்.  சில சமயங்களில் வாசனை தூக்கும்.  பால் வாகா, என்ன என்று தெரியாது.

இந்த இடத்தில் நீண்ட நாட்களாக என் மனதில்  இருக்கும் சந்தேகம் ஒன்றையும் கேட்டு விடுகிறேன்.  எக்ஸ்பர்ட்ஸ் பதிலளிக்கவும்!

அம்மாவுக்கு உதவியாக இருந்த எனது பள்ளி, கல்லூரிக் காலங்களில் அம்மா சொற்படி பால் காய்ச்சும்போது பொங்குமளவு விடுவதில்லை.  ஆடைகட்டி வரும்போதே இறக்கி (அப்போதெல்லாம் கரி அடுப்பு, மண்ணெண்ணெய் ஸ்டவ் என்பதால்) காபி கலந்து விடுவது வழக்கம்.  ஆனால் திருமணத்துக்குப் பின் எப்போது ஆரம்பித்தது என்று தெரியவில்லை, பால் பொங்கிய உடன்தான் அடுப்பை நிறுத்தி காபி கலக்கிறோம்.  எது சரி?  வெங்கடேஷ் பட் பாலைப் பொங்க விட்டுதான் காப்பி கலந்தார்.  பொங்க வைத்த பாலை நன்றாய் கலக்கிக் கொண்டார்.

ஃபில்டரில் பொடி போட்டு முதல் டவுன் டிகாக்ஷனில் காபி, இரண்டாவது டவுன் டிகாக்ஷனில் காபி எல்லாம் தனித் தனியாகக் கலந்து ஆனந்தித்த நாட்களும் உண்டு!   பாக்கி இருக்கும் டிகாக்ஷனில் அப்புறம் சாப்பிடுபவர்களுக்கு காபியின் சுவை குறைந்துவிடும்!  காபிமேக்கரில் டிகாக்ஷன் போட்டால் வசதிதான், ஆனால் அவ்வளவு திருப்தி இருக்காது!  மனசூன்யமோ!

அப்புறம் இப்போது சில வருடங்களாக சுந்தரம் காஃபிப்பொடி தான் வாங்குகிறோம்.  இப்போது இதில் செட்டில் ஆகிவிட்டோம்.  வாசனையாய், நன்றாய் இருக்கிறது.   இது தி நகர் பஸ் ஸ்டாண்டிலிருந்து ரெங்கநாதன் தெரு போகும் வழியில் சிவா விஷ்ணு கோவில் தாண்டிய உடன், ராமநாதன் தெரு அருகில் இடது புறமாகவே இருக்கிறது.

காபி சாப்பிடுவது ஒரு போதையாகவே மாறிவிட்டது.  காபியைக் குடிக்கத்தானே வேண்டும்?  ஏன் சாப்பிடுவது என்று சொல்கிறோம்?  பழகிவிட்டது!  நான் இரண்டு மாதிரியும் சொல்லிப் பழக்கம்!  நீங்கள்?

டிகாக்ஷன் அலலது பில்டர் காஃபி கிடைக்கும் கடைகள் மிகவும் சொற்பம்.  கடைகளில் தரமான காஃபி கிடைப்பது துர்லபம்.  எனக்கு இன்ஸ்டன்ட் காஃபிகள் பிடிக்காது.  வீட்டுக் காப்பிதான் சௌக்கியம்.

போதையாகவே மாறி விட்ட காபிப்பொடி சென்ற லாக்டவுனில் வாங்க முடியுமோ முடியாதோ என்கிற பயத்தில் வழக்கமாக வாங்கும் சுந்தரம் காபி தவிர கிடைத்த காபிப்பொடி எல்லாமும் கொஞ்சம் வாங்கி சேமிப்பில் வைத்தேன்.  கோத்தாஸ், கும்பகோணம், இன்னும் ஏதோ...   நரசுஸ் 50 கிராம் பாக்கெட்டாக வாங்கி மளிகைக் கடையில் வைத்திருப்பார்கள்.  பழசாகி இருக்கும்.  அதுகூட வாங்கினேன்!

எல்லாமே தீர்ந்துகொண்டே வரும் நிலையில் எப்போதடா கடை திறப்பார்கள் என்று காத்திருந்து, சில கடைகள் திறக்கப்பட்ட பிறகு சுந்தரம் காபிக்காரருக்கு போன் செய்து கேட்டால் அவர் இப்போது திறக்கவில்லை என்று சொன்னது ஒரு ஏமாற்றம்.  அது அவருக்கும் மகா சோகம்தான்.  வியாபாரம் போகிறதே என்று.  அப்படியே திறந்து விட்டாலும் எப்படிச் சென்று வாங்குவது என்று ஒரு கவலை.  ஆட்டோவில் செல்ல அலுவலக பாஸ் எனக்கு அலுவலகம் டு வீடு மட்டுமே தந்திருந்தார்கள்.  அவ்வப்போது நிறுத்தி சோதிக்கும் போலீஸ்காரர்கள் பேப்பரை வாங்கிப் பார்த்தால் ஆட்சேபிக்கக் கூடும்.  ஆட்டோக்காரருக்குத் தொல்லை.

எனவே அனலிடை மெழுகு போல தவித்துக் கொண்டிருந்தோம்!  காபிப்பொடி இல்லாத, காபி இல்லாத வாழ்க்கையை நினைத்தே பார்க்க முடியவில்லை!!!  கொரோனா மேல் அதிக கோபம் வந்தது.  தாடி இதற்கெல்லாம் வளர்க்கலாமா என்று யோசித்தேன்!  ஒன்று இருக்கும்போது அருமை தெரிவதில்லை.  இல்லாதபோதுதான் தெரியும்.  தினமும் காஃபி குடித்துக் கொண்டிருந்தால் சாதாரணமாக இருக்கும்.  அது கிடைக்கப் போவதில்லை, தீரப்போகிறது என்றெல்லாம் தெரிந்தால் மண்டை வெடிக்கும் தொல்லை!  ஒருமுறை காபி போர் அடிக்கிறது என்று இரண்டு நாள் நிறுத்திப் பார்த்தேன்.  மூன்றாம் நாள் காய்ந்த மாடு கம்பில் புகுவது போல காபி மேல் பாய்ந்தேன்..  ஆமாம், இந்தப் பழமொழிக்கு என்ன (உண்மையான) அர்த்தம்?

ஊரடங்கு மெல்ல தளர்வு செய்யப்பட்டு கடைகள் திறந்ததும் முதலில் வாங்கியது (சுந்தரம்) காபி பௌடர்தான்.  

அதற்கு எனக்கு ஓரிரு நண்பர்கள் வாய்த்தார்கள்.  வாங்கி வந்து உதவி செய்வதற்கு.  காபிப்பொடி தீரும் சமயம் இவர்களில் யார் அந்தப் பக்கம் போகிறார்களோ அவர்களிடம் சொல்லி வாங்கிவிடுவேன்.  என்னுடைய ஆஸ்தான மற்றும் முன்னாள் ஆஸ்தான ஆட்டோக்காரர்கள், அவர்கள் ஊபர், ஓலா என்று சவாரி போகும்போது வாங்கி வந்து தந்து விடுவார்கள்.  என்னுடைய ஆஸ்தான கம்ப்யூட்டர் மருத்துவர், தொழில் முறையில் என் நண்பர் ஒருவர்..   

அப்புறம் மருத்துவப் பிரதிநிதியாக வேலை பார்த்த ஸ்ரீ...  அந்த ஸ்ரீ யைப் பற்றி சொல்லத்தான் வந்தேன்.... 

=========================================================================================================

நாடிசாஸ்திரம் என்கிற புத்தகம்.  1951 ல் பதிப்பிக்கப்பட்டது.   இதில் இருக்கும் தமிழைப் படிக்கக் கஷ்டமாயிருப்பபது போல தோன்றினாலும் வார்த்தைகளுக்கு நடுவில் இடைவெளியே விடாமல் எழுதி இருக்கிறார்கள் போல...  உதாரணங்கள் கீழே...

நாடிபார்க்கிற் பலித்திடாகாலமறிதல் 

எண்ணெயின்தலையின்போதும்ஈரமாய்நின்றபோதும் 
உண்ணும்நல்லுணவின்போதும்உண்டாக்குவெம்பசியின்போதும் 
திண்ணமாய்நடக்கும்போதுஞ்சிற்றின்பமூட்டும்போதும் 
பண்ணியநாடிபார்க்கிற்பலித்திடாதென்றுசெப்பே 

நோய்நாடிபார்க்கும்விபரமறிதல் 

மருவிடுநோயிநாடிமதித்திடில்வலக்கைமைந்தர்க்
கரிவையர்க்கிடக்கைதன்னிலழுத்தியேசுட்டிக்காட்டும் 
விரலதில்வாதமாகும்மிகுநடுவிரலிற்பித்தந்
தருமணிவிரலில்ஐயந்தானியல்பறிந்துபாரே 

வாதமும்பித்தம்ஐயம்மருவியகுணபாடத்தை  
 தீதறமுனிவர்நூலைத்தேர்ந்தபின்திரட்டதாக கொள்ள
ஓதியசுருக்கநூலையொழுங்கொடுவுணர்ந்து 
வாதுதிர்வைத்தியர்க்குவல்லிருள்விளக்கமாமே 

நடுவில் இதுவும் கண்ணில் பட்டது!

மரணக்குறிப்பு 

உரைத்திடவோதமதுபித்தத்தைநோக்கியோடவேபித்தமந்தஐயத்தேறில் 
நிறைத்திடுமேஐயமதுகண்டததேறில் நின்றுமேயுண்ணாக்கின்வழியைமூடி 
விரைத்திடுமேவாசலைந்துமடைந்துகொள்ளுமேலானசீவகளைமெலிந்துபோகு
மறைத்திடவேகடிகைஐந்தில்மரணணாவார்மழுவெடுத்தானுமைக்குரைத்தவசனந்தானே 

என்று தொடங்கி இன்னும் நான்கு கண்ணி செல்கிறது!

][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][[]

கவிதை...  (சில விஷயங்களை சொல்லித்தான் தெரிய வேண்டியிருக்கிறது!)



உதிர்த்து விட்ட சுடுசொல்லுக்காக 
உடனே வருந்துகிறீர்களா?

கண்ணீரில் நிறையும் 
எதிர்விழிகளைக் கண்டு 
எதற்கு 
இந்த என் அவசரம் என்று 
உங்களுக்குளேயே 
சோர்ந்து போகிறீர்களா 

வருந்தாதீர்கள்...
நானும் முன்னர் அப்படிதான் இருந்தேன் 

உங்களுக்கும் பழகிவிடும்!

()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()


எவ்வளவு சுலபம்....அதுவும் அந்தக் காலத்திலேயே...!  அணுகுண்டை வீசிவிட்டு ராஜசிம்மன் மட்டும் தப்பிவிடமுடியுமா?!!



ஹா..  ஹா..  ஹா... 



====================================================================================================

மறுபடியும் ஒன்று....



85 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் எல்லாக் காலமும்
    ஆரோக்கியத்துடன் இருக்க இறைவன்
    அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. ஐன்ஸ்டீன் தான் தெரிகிறார்.
    சே .ஏமாந்து போய் விட்டேன்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லா பாருங்க.. மன்றோவும் தெரிவார். கொஞ்சம் பின்னால் தள்ளி நின்று பாருங்க...

      நீக்கு
  3. நம் சாரங்கபாணி சார், மாமனாரா, ஹீரோவா:))

    பதிலளிநீக்கு
  4. டி ஆர் மஹாலிங்கம் ராஜசிம்மனா!!
    அணுகுண்டு ஜப்பான் ல போட்ட பிறகு
    செய்தி இங்கே வந்து விட்டது போல:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜீவி... வேதாளம்... சாப்பாடு...!

      நீக்கு
    2. மஹாலிங்கத்தின் குரலில் 'ராஜீவி' சொல்லிப் பார்த்தேன். நிறைய பெண்
      ராஜீவிகள் பிறந்தார்கள்:)))

      நீக்கு
  5. நாடி பார்க்கும் நேரம் பிரமாதமாகச் சொல்லப் பட்டிருக்கிறது.
    அதாவது பார்க்கக் கூடாத நேரம்.
    நம் அலோபதி மருத்துவர்கள்,
    இதற்கு எதிர்... ட்ரெட் மில். ஓடி விட்டுப்
    பார்க்கச் சொல்கிறார்கள்:(

    மரணம் படிக்கையிலேயே பயமுறுத்துகிறது. எதிர் கொண்டுதானே
    ஆக வேண்டும்:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிச்சம் இருக்கும் நாலு கண்ணிகளை டைப்பும் பொறுமை இல்லாமல் போனது அம்மா... இலைல விட்டால் அதையும் சேர்த்திருப்பேன்.

      நீக்கு
  6. காப்பிப்பொடி புராணம் எல்லா வீட்டிலும்
    நடப்பதே.
    நல்ல வேளை நாங்கள் வந்த போது லாக் டௌன் இல்லை.

    சுந்தரம் காப்பிதான் கடைசியாக வாங்கினது. மாட வீதி
    லியோவில் வாங்கிக் கொண்டிருந்தோம்.
    ஒரு கடை பாக்கியில்லை.

    தி நகர் பாண்டியன் காப்பிக் கடையில்
    வாங்கி இருக்கிறோம். அங்கேயே உட்கார்ந்து அரைத்துக் கொண்டு வருவேன்.
    தி, நகர் பஸ் டெர்மினஸ் பக்கத்தில் இந்தியா காஃபி ஹௌஸ் காப்பியும் நிறைய நாட்கள்
    வாங்கி இருக்கிறோம்.

    எல்லாம் அந்தக் காலை வேளை முதல் காப்பிக்காகத் தான் எத்தனை பாடு!!
    எத்தனை ஃபில்ட்டர், எத்தனை காஃபி மெஷின்... காப்பிக்கொட்டை வாங்கி வறுத்து
    மெஷினில் பொடித்து சாமி.....
    ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு கதை.
    உங்கள் கதை சோகமாகி இப்போது தெளிந்து விட்டது மகிழ்ச்சி ஸ்ரீராம்.
    காஃபி குடிக்காமல் இருப்பவர்கள் உலகை அனுபவிக்காதவர்கள்:)))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ...   நீங்களும் சுந்தரம் காபி வாங்கி இருக்கிறீர்களா?  அங்கேயே பக்கத்தில் விவேகானந்தா காபியும் உண்டு.  ஆனால் ஏனோ எனக்கு அது பிடிப்பதில்லை!  பாண்டியன் காப்பிக்கடை பார்த்ததில்லை.  என் பாட்டி காபிக்கொட்டை அரைக்கும் மெஷின் வைத்திருந்தார்.  என்ன ஆச்சு என்று தெரியவில்லை.  பல வருடங்களுக்கு முன் ஒருமுறை காபிக்கொட்டை வறுத்து மிக்சியில் அரைத்துப் பார்த்தேன்.

      நீக்கு
    2. ஆம் அம்மா..   நரசுஸ் உதயமும் அப்படிதான்.

      நீக்கு
    3. //காஃபி குடிக்காமல் இருப்பவர்கள் உலகை அனுபவிக்காதவர்கள்//

      சந்தடி சாக்கில் வல்லிம்மா என்ன இப்படி எழுதிவிட்டார்கள்? ஹா ஹா.

      சிங்கம் ஒருவேளை காலை 4 மணிக்கு முன்பு எழுந்திருக்கும் வழக்கத்துடன், உடனே, மனைவி கையால் சுடச்சுட காபி தரவேண்டும் என்ற முறையை வைத்திருந்தால், வல்லிம்மா இப்படி எழுதியிருப்பாரா என்று யோசிக்கிறேன். ஹாஹா

      நீக்கு
    4. சமயங்களில் சொந்த கைப்பக்குவம்தான் சரிவரும். நம் நாக்கின் ருசி நமக்குதானே தெரியும்!

      நீக்கு
    5. What i meant was, early morning தூக்கத்தை விட்டு எழுந்து தினம் காபி போடணும்னு இருந்தால், அந்த காபி மேல வெறுப்பு வராதோ என்ற எண்ணத்தில்...

      நீக்கு
    6. அன்பு முரளிமா,
      சிங்கம் சீக்கிரம் எழூந்திருக்கும். 5 மணி வாக்கில். ஆனாலும் காப்பி போடாது.
      அது பல் தேய்க்கும் சத்தத்தில் நானே எழுந்து விடுவேன்.

      அவருக்குப் பசி தாங்காது.
      அதனால் போட்டுக் கொடுத்து விடுவேன்.

      நீக்கு
  7. மூன்றாம் நாள் காய்ந்த மாடு கம்பில் புகுவது போல காபி மேல் பாய்ந்தேன்.. ஆமாம், இந்தப் பழமொழிக்கு என்ன (உண்மையான) அர்த்தம்?////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////அந்த காஞ்ச மாடு கம்பே சாப்பிட்டிருக்காதா இருக்கும்.

    பட்டினி போட்டதும் கம்புப் பயிரை மேய்ந்திருக்கும்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல பழமொழிகளுக்கு உண்மையான அர்த்தத்தை விட்டு வேறு பொருளைதான் சொல்லிக் கொண்டிருக்கிறோம்...

      நீக்கு
    2. ஶ்ரீராம்.... இந்தப் பழமொழியை... "டேய்... காஞ்ச மாடு கம்பங் கொல்லைல பாயறதுமாதிரி பாயாதே... பார்த்து ஹேண்டில் பண்ணு...." என்று அறையை நோக்கிச் செல்பவனிடம் கூறுவதைப்போன்ற சந்தர்ப்பத்தில்...

      நீக்கு
  8. கோபக் கவிதை வருத்தம் சிந்துகிறது.
    சொன்ன சொல்லை எடுக்க முடியாதுதான்.

    அதற்கப்புறம் வருந்துவது இருக்கிறதே அது கொடுமை.

    காயப்பட்டவர்களுக்கு மறக்காது.
    எல்லோருமே இதைக் கடந்திருப்போம்.
    கவிதை அருமை. இனி சுடு சொற்கள் யார் நாவிலும் பிறக்க வேண்டாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.  புரிகிறது.  சில பல சமயங்களில் நம்மை மீறி விடுகிறதே...

      நீக்கு
  9. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

    இறையருள் சூழ்க எங்கெங்கும்..
    வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  10. அம்பானியின் மனைவி குடிக்கும் டீயின் விலை மூன்று லட்ச ரூபாயாம்.
    ஜப்பானிலிருந்து வருகிறதாம். நம்பவதற்கே கஷ்டமாகத்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மாடி... அவ்வளவு ரூபாய்க்கு அதில் என்ன இருக்கும்? மேலும் இதுபோன்ற செய்திகளில் எந்த அளவு உண்மையிருக்கும்?!!

      நீக்கு
    2. ஜப்பானின் ஒரு குறிப்பிட்ட வகை மாம்பழம், டஜன் 3 லட்ச ரூபாயோ அல்லது அதைவிட அதிகமோ என்று படித்தேன். அதனை எப்படியோ லவட்டிக்கொண்டு வந்து இந்தியாவில் ஒருவர் பயிரிட்டிருந்தாராம். மாம்பழங்கள் திருடு போனது என காவல் போட்டிருக்கிறாராம் (20 அல்லது அதற்குக் குறைவாகத்தான் பழம் விளைந்ததாம்).

      ஒருவகைப் பூனை சாப்பிட்டுவிட்டுப் போட்ட காபிக்கொட்டையிலிருந்து தயாரிக்கும் காபி விலை மிக அதிகம். இந்தோநேஷியாவில் அந்த இடத்திற்கும் சென்றிருந்தேன், எப்போதும்போல, விலையைப் பார்த்துவிட்டு வந்தேன்.

      பணம் மிக மிக அதிகமாக இருப்பவர்கள், எப்படித்தான் வாழ்க்கையை ரசிப்பார்கள் (அல்லது ரசிப்பதாக தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்வார்கள்)? எனக்கு இப்போது, சதாம் ஹுசேன் தன் மாளிகையில் தங்க டாய்லெட் வைத்திருந்தது நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

      நீக்கு
    3. மாம்பழத் தகவல், பூனைத்தகவல் கேள்விப்பட்டிருக்கிறேன். தங்க டாய்லெட்டா? ஆ...

      நீக்கு
    4. தாய்வானில் நான் தங்கியிருந்த ஹோட்டலில், தங்க ப்ளேட்டிங், வாஷ் பேசின் போன்றவைகளுக்கு... அதில் பல் தேய்த்துத் துப்பவே எனக்குக் கூச்சமாக இருந்தது.

      நீக்கு
    5. ஆ... எனக்கு வெள்ளித்தட்டில் சாப்பிடவே வேண்டாம் என்று சொன்னேன்.

      நீக்கு
    6. பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இருக்கலாம், ஒரு furniture fair சென்றோம். அங்கு க்ளாஸெட்டுகள் விற்கும் ஒரு பிரிவில் ஒரு வெஸ்டர்ன் க்ளாஸெட் வைத்திருந்தார்கள். விலை 100000/- ஒன்லி.  

      நீக்கு
  11. காபி சாப்பிடுபவர்கள் (பழக்கப்பட்டவர்கள்), ஆசாரத்தை (அதாவது சுத்த பத்த முறைகளை மீறி... காலையில் ஹோமம் அல்லது பிற சமாச்சாரங்கள் இருக்கும் சமயம் வெறும் வயிற்றுடன் எதையும் சாப்பிடாமல் ஹோமம் இன்ன பிற சாங்கியங்கள் செய்யவேணும்.) விட, காபி சாப்பிடுவதற்கு எக்ஸெப்ஷன் கண்டுபிடிக்கிறவர்கள் என்னை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்கள்.

    எனக்கு காபி பழக்கமே கிடையாது. மிக அதிசயமாக, காபி சாப்பிடாவிட்டால் யாருக்கும் வேலை ஓடாது என்று இருக்கும் வீட்டிலிருந்து வந்த மனைவிக்கு மாத்திரம் காப்பி சாப்பிடும் வழக்கமே இல்லை.

    அதனால் இன்றைய காபி பகுதி என்னை ஆச்சர்யப்படுத்துகிறது. (காஃபியில் என்ன அப்படி இருக்கிறது... அதுவும் சூப்பர் என்று பிறர் சொல்லிக்கொள்ளும் காஃபி கசந்து வழிந்தது)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காபி பழக்கம் இல்லையா? ஆச்சர்யம். காபி பழக்கம் இருப்பவர்கள் குரல் கொடுக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்!!!

      நீக்கு
  12. //உதிர்த்து விட்ட சுடுசொல்லுக்காக உடனே வருந்துகிறீர்களா?//

    உடனேயோ இல்லை பின்போ... வருந்திப் பிரயோசனமில்லை. விட்ட அம்பு விட்டதுதான். அதன் விளைவை அனுபவித்துத்தான் தீரணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. பேசியவர்கள் வருந்தவேண்டுமே... சரிதான் என்றிருந்து விட்டால்...?!!

      நீக்கு
    2. வருந்தி என்ன பிரயோசனம் ஸ்ரீராம்? நான் பல விஷயங்களுக்கு, 'நீங்க அப்போ அப்படிப் பண்ணினீங்களே' என்று சொன்னால், 'என்னை மன்னித்துவிடு, அது தவறுதான்' என்று சொல்லிடுவேன். ஆனா அதுக்கு ரியாக்‌ஷன், 'சும்மா மன்னித்துவிடு என்று சொன்னால் ஆச்சா? போனது போனதுதானே' என்பார்கள்

      நீக்கு
  13. ஸ்ரீராம் நல்லவேளை முழுப்படமும் போடவில்லை.

    அப்பாவியான நான் லேப்டாப்பின் முன்பு அமர்ந்து ஐன்ஸ்டீன் படத்தைப் பார்த்து, அவரைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருப்பேன்.

    தூரத்திலிருந்து பார்க்கும் மனைவி, 'காலம் போன காலத்துல இந்த ஆள் காலைல பொம்பளைப் படத்தை உத்துப் பார்த்துக்கிட்டிருக்கிறாரே.... பசங்க பார்த்தா என்ன நினைப்பாங்க' என்று நினைத்துக்கொள்வாள், இந்த அப்பாவியைப் பார்த்து.


    இது ஸ்ரீராமின் திட்டமாக இருந்திருக்கக்கூடுமோ? கேஜிஜி என்றால் நிச்சயம் முழுப் படத்தையும் வெளியிட்டு சிக்கலை உண்டாக்கியிருப்பார். ஹாஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா.. ஆனால் மண்டையில் கொட்டுவதற்கு அருகே வருகையில் மன்றோ ஐன்ஸ்டீனாகி அருள்புரிந்து விடுவார்.

      நீக்கு
    2. பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பது இதுதான் போலிருக்கிறது நான் பாட்டுக்கு தேமேன்னு இருக்கேன் என்னை ஏன் வம்புக்கு இழுக்கறீங்க!

      நீக்கு
    3. எனக்கு இப்போ இன்னொரு சந்தேகம் வருது.

      "எந்தப் பெண்ணையும் பார்க்கணும்னா, கொஞ்சம் தூரத்துல இருந்து பார்த்தா அழகா இருப்பாங்க. ரொம்ப நெருங்கிப் பார்த்தால், பெண்ணா இல்லை ஆணா என்று சந்தேகம் வந்துடும்"

      என்ற புலாலியூர் பூசானந்தாவின் தத்துவத்தைச் சொல்கிறதோ இந்தப் படம்?

      நீக்கு
  14. இப்போதெல்லாம் காலையில் கீதா சாம்பசிவம் மேடம் வராதது கவலையையும் வருத்தத்தையும் தருகிறது.

    அவர் மீண்டும் கால் பிரச்சனை இல்லாமல், சுறுசுறுப்பாக காலை 7-8 மணிக்கு எபிக்கு வந்து, 'என்ன எல்லாரும் தூங்கிவிட்டீர்களா.. காலையிலேயே நான் சுறுசுறுப்பாக வந்திருக்கிறேன்.. யாரையும் காணோமே' என்று நம்மைக் கலாய்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவலையை கிளப்பிட்டீங்க

      நீக்கு
    2. ஆம். சரியாகிக்கொண்டு வருவதாகச் சொன்னார். சீக்கிரம் முற்றிலும் குணமாக பிரார்த்திப்போம்.

      நீக்கு
    3. நினைவு வைத்திருப்பதற்கு நன்றி! :)

      நீக்கு
  15. பருத்தியூர் கிராமத்தில் என் அத்தைப்பாட்டி வீட்டில் கையால் சுற்றி அரைக்கும் ஒரு கிரைண்டர் வைத்திருந்தார்.. வீட்டில் வறுத்து கொஞ்சம் கொஞ்சமாக அரைத்து பில்டரில் காப்பி போட்டு ஒரு நாளைக்கு பத்து வேளையோ என்னவோ காபி குடிப்பார். எனக்குத் தெரிந்து அவர் சாப்பாடு சாப்பிட்ட நினைவே இல்லை. விடுமுறைக்கு சென்றிருந்த போது சில முறை காலையில் அவர் கையால் கலந்த காபி தருவார். இன்று வரை அந்த சுவை வேறே எங்கும் எனக்குக் கிடைக்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் வீட்னிலும் இருந்தது. அவ்வப்போது வாசனையாக அரைத்து, டிகாக்‌ஷன் போட்டுக் குடிப்பதற்கு ஈடு கிடையாது்

      நீக்கு
    2. எங்கள் ஊரில் தாத்தா வீட்டில் காபி கொட்டை அரைக்கும் மிஷின் உண்டு. தினமும் இரவில் வேலைகளை முடித்து விட்டு மாமிகளில் ஒருவர் காபி பொடி அரைத்து வைப்பார்கள். விடுமுறைக்கு போகும் பொழுதெல்லாம் அந்த மிஷினில் காபி போடி அரைப்பது மிகவும் பிடிக்கும். அரைத்து கொடுத்திருக்கிறேன். 

      நீக்கு
    3. பாட்டி அதிகாலையில் அந்த வேலையைச் செய்வார்!

      நீக்கு
  16. என்னுடைய காபி புராணம்.

    நினைவு தெரிந்த சிறு பிராயத்தில் திருச்சியில் இருந்தோம். அப்போது காந்தி மார்க்கெட் கமான் வளைவு அருகில் வின்சென்ட் காபி பவுடர் கடை  இருக்கும். அங்கு நியான் விளக்குகளால் செய்யப்பட்ட ஒரு விளம்பர போர்ட் இருக்கும். ஒருவர் அழும் முகம் தோன்றும். உடனே ஒரு கப் ஆவி பறக்கும் காபி அங்கு காணும். அதைக் கண்டு அந்த ஆள் சிரிப்பான். இதை சலிக்காமல் பார்ப்பேன். ஆனால் வாங்குவது என்னவோ அடுத்த கடையில் நரசுஸ் காபி தான். 
    பின்னர் கடலூருக்கு சென்றவுடன் காபி பவுடர் வாங்குவது குறைந்தது. புதுப்பாளையம் கோவாப்பரேட்டிவ் ஸ்டோரில் கிடைக்கும் காபிக்கொட்டை வாங்கி வறுத்து வைத்துக்கொண்டு தினம் காலையில் கொஞ்சம் எடுத்து அரைத்து உபயோகிப்போம். அப்போது peaberry, plantation A, plantation B, robusta  என்று பல வித காபிக்கொட்டைகள் கிடைக்கும். வாங்குவது plantation A என்ற அரைக்கொட்டை தான். 
    வேலை கிடைத்து திருவனந்தபுரம் வந்தவுடன் கல்யாணம் ஆகும் வரை ஹோட்டல் காபி தான். இங்கே நாயர் கடைகளில் காபி கிடைக்காது. அதனால் காபி குடிக்க IRR (IRCTC) canteenக்கு போவோம். கல்யாணம் ஆனபின்பு Indian coffee board இல் கிடைக்கும் காபி பொடி வாங்க ஆரம்பித்தோம். ரோபஸ்டா காபி தான். காபி போர்ட் இடம் பெயர்ந்தது. காபி பொடி கிடைக்காததால் ப்ரு வுக்கு மாறினோம். இது கொஞ்ச நாள் தொடர்ந்தது. 
    பின்னர் சாலையில் (இடப்பெயர்) ராயல் காபி சிக்கரி கலந்தது வாங்க ஆரம்பித்தோம். இதில் என்ன  விசேஷம் என்றால் காபி பொடி வாய் அகன்ற pet பாட்டில்களில் கிடைக்கும். இந்த காலி பாட்டில்கள் மற்ற மளிகை சாமான்கள் இடுவதற்கு பயன் படும். இதற்காகவே பாஸ் வாங்குவார். ஆனாலும் சிக்கரி கூடி வந்ததால் (60:40) இதை விட்டு விட்டு அம்பாள் காபி வாங்க ஆரம்பித்தோம். கடையில் அவ்வப்போது அரைத்து சிக்கரி  வேண்டுமானால் கலந்து தருவார்கள். நாங்கள் வாங்கியது 80:20. ஆயிற்று கொரோனா வந்து எல்லாம் போனது.  
    ஒன்லைனில் பிராண்டட் காபி பொடிகள் கிடக்கின்றன. இன்ஸ்டன்ட் ப்ரு nescafe,

    //காபிக்கொட்டை என்னவோ எல்லோரும் குறிப்பிட்ட சில இடங்களில்தான் வாங்குகிறார்கள் என்று நினைக்கிறேன்.  பின் எப்படி அதை தனித்துவமாக ப்ராண்ட் செய்கிறார்கள்//

    நான் மேலே கூறிய பல வித காபி கொட்டைகள் பின்னர் காபிக்கொட்டைகள் விகிதாசார கலப்பு, வறுப்பது, பொடிப்பது என்று பலவும் மாறுபடும். இட்லி என்னவோ ஒன்று தான். ஆனால்  சுவை வேறுபட இல்லையா?

    அணுகுண்டு வசனம் 1945க்கு பிறகு வந்த திரைப்படத்தில் தான் வருகிறது. ஆகவே அணுகுண்டு கற்பனை இல்லை.

    ஐன்ஸ்ட்டின் மர்லின் படம் வியப்பு. 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் காபி புராணம் சுவாரஸ்யம். ஆரம்ப காலங்களில் நிறைய பேர்கள் நரசுஸ்தான் வாங்கி இருப்பார்கள் என்று தோன்றுகிறது. இன்ஸ்டண்ட் காபி பிடிப்பதில்லை. ஆனால் போன லாக்டவுனில் பேர், சன்ரைஸும் கொஞ்சம் வாங்கி அவசரத்துக்கு வைத்திருந்தோம். நாங்கள் பீபரியும் ப்ளான்டேஷன் A யும் கலந்து அரைக்கச் சொல்வோம். அரைக்கிலோவுக்கு ஐம்பது கிராம் சிக்கரி.

      டி ஆர் மகாலிங்கம் தோன்றும் இந்தக் காட்சி இடம்பெற்ற படம் வேதாள உலகம்.

      நீக்கு
  17. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  18. // காபியே சாப்பிடுவதில்லை என்று சொல்பவர்களை பசிக்காத புலி பயமுறுத்தட்டும்!!//

    நல்லவேளை பசித்த புலி பயமுறுத்தினால் அவ்வளவுதான்.

    நான் காப்பியை விட்டு 30 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது.
    மாயவரத்தில் "பாலன்ஸ் காபி" வீட்டுக்கு அருகில் இருக்கிறது கடை காப்பிக்கொட்டையை வறுத்து அரைத்து தருவார்கள். நன்றாக இருக்கும்.
    மதுரை வந்த பின் நரசுஸ் காபிபொடி.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 30 வருடங்களாக காபி குடிப்பதில்லையா? ஆ....ச்சர்யமாக இருக்கிறது.

      நீக்கு
    2. //நல்லவேளை பசித்த புலி பயமுறுத்தினால் அவ்வளவுதான்.//

      சுஜாதா இது மாதிரி இடங்களில்  "அவர்களை பசித்த புலி தின்னட்டும்" என்பார்.  அவரது வரியை உல்ட்டா செய்தேன்!

      நீக்கு
  19. மாயவரத்தில் பத்மா காபி பொடி(திருச்சியிலிருந்து வரும்) மாயவரம் மணிகூண்டு அருகே ரிலைன்ஸ் காப்பித்தூள் கடை அவர்களும் நம் கண் முன் உயர்ரக காப்பிக் கொட்டையை வறுத்து அரைத்து தருவார்கள். திருவெண்காட்டில் இருக்கும் போது ரிலைன்ஸ் காப்பித்தூள் வாங்கி வருவார்கள் மாயவரத்திலிருந்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பத்மா காபி பெயர் கேள்விப்பட்ட மாதிரி இருக்கிறது.

      நீக்கு
  20. // போங்க வைத்த, கோபம் வந்ததது, ஊரடந்கு, துர்லபம் // பிழைகள் சரி பார்க்க படவில்லையா...? சூடான டீ கண்டுபிடிக்க வைக்குமாம்... ஹிஹி...

    //கண்ணீரில் நிறையும் எதிர்விழிகள் // அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துர்லபம் என்றொரு வார்த்தை உண்டு. அதில் தவறில்லை. மற்ற மூன்று பிழைகளையும் திருத்தி விட்டேன். நன்றி DD.

      நீக்கு
  21. காபி
    உடலுக்கு நன்மையோ? இல்லையோ?
    புத்துணர்வு தருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது என்னவோ உண்மை...   அதுவும் தஞ்சாவூர்க் காஃபி என்றால் இன்னும் சுகம்...

      நீக்கு
  22. மாமன்னர் - மாமனார்! ஹாஹா...

    ஐன்ஸ்டீன் தான் தெரிகிறார்! பின்னால் நின்று, பக்கவாட்டில் பார்த்துக் கொண்டிருந்தால் பார்க்கும் நண்பர்கள் சிரிக்கலாம்! :) அதனால் பிறகு பார்க்கிறேன்.

    காஃபி - குடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் எப்போதும் எனக்கில்லை. ஊரிலிருந்து வரும்போது ஒரு கிலோ வரை பத்மா காஃபி பொடி வாங்கி வருவேன். அது தீர்ந்து விட்டால் இங்கேயே கொரியர் மூலம் அனுப்பித் தருவார்கள் என்றாலும் நான் அப்படி வாங்கிக் கொண்டதில்லை. அடுத்த முறை ஊருக்குச் செல்லும் சமயத்தில் தான் மீண்டும் காஃபி. இந்த சமயத்தில் தேநீர் மட்டுமே! அதுவும் தேவை எனில் மட்டுமே! தினம் தினம் அருந்துவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லை.  காஃபிக்கு அவ்வளவாக அடிமையாகாதவர்கள் நிறைய ஏப்ர இருக்கிறார்கள் போல...   நான் மட்டும்தான் இப்படி இருக்கிறேன் போல!  

      :-))

      நன்றி வெங்கட்.

      நீக்கு
    2. நானும் தி.நகர் பாண்டியன் காபியில் காபி பொடி வாங்கியிருக்கிறேன். லியோ, நரசுஸ், சரவணா காபி,திருச்சி பத்மா காபி என்று வாங்காத பிராண்ட் இல்லை. சென்னையில் வசித்த வரை கே.கே.நகர் அருணா காபி. பெங்களூர் வந்த பிறகு சென்னை செல்லும் பொழுதெல்லாம் அருணா காபி சென்று காபி போடி வாங்கி வந்து கொண்டிருந்தேன். ஒரு முறை அவர்," என்ன ரொம்ப நாளாக உங்களை காணவில்லை?" என்று கேட்டார். "இப்போது பெங்களூர் சென்று விட்டோம்" என்றதும்,"பெங்களூரா? அங்கிருந்துதான் எங்களுக்கு காபி கொட்டை வரும்" என்றார்.   இப்போது இங்கு மால்குடி காபி அல்லது கோத்தாஸ்காபி , அல்லது காபி டே காபி  என்று வண்டி ஓடுகிறது. திப்பசந்திராவில் சுமா காபி என்று ஒன்று கிடைக்கும், மிகவும் நன்றாக இருக்கும்.   

      நீக்கு
    3. ஆமாம்.  ரெகுலராக வாங்கும்போது பழகி விடுகிறார்கள்.

      நீக்கு
  23. மஸ்கெட்டில் இருந்தவரை காபிக்கென்று கிடைக்கும் ஸ்பெஷல் சிறு மிக்சியில் காபி கொட்டை அரைத்து காபி போட்டிருக்கிறேன். இந்தியாவிற்கு வந்துவிட்டு திரும்பிச் செல்லும் பொழுது காபி கொட்டை அல்லது, பொடி வாங்கிச் செல்வோம். அது தீர்ந்த பிறகு இன்ஸ்டன்ட் காப்பிதான். பெரும்பாலும் நெஸ்கபே. மேக்ஸ்வெல்(இது வரும் கண்ணாடி ஜாடி அழகாக இருக்கும். இப்போதும் என்னிடம் இருக்கிறது). அப்போதெல்லாம் அங்கு ப்ரெஷ் மில்க் கிடைக்காது. பால் பவுடர்+இன்ஸ்டன்ட் காபி பொடியில் பில்டர் காபி போல் போடுகிறீர்கள்.. என்று பாராட்டியிருக்கிறார்கள் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரவர் சுவை, விருப்பம்.  நம்மூர் மாதிரி நினைத்த இரத்தில் புதுப்பால் கிடைக்காத இடத்திலும் காபி போட்டது சிறப்பு.

      நீக்கு
    2. :)) ஏன் இன்று நிறைய தட்டச்சு பிழைகள். மேற்படி கமெண்டில் நினைத்த நேரத்தில் என்று வந்திருக்க வேண்டுமோ?

      நீக்கு
    3. ஆமாம். நிறைய பிழைகள் வருகின்றனதான். நேரத்தில் என்றுதான் இருக்கவேண்டும்.

      நீக்கு
  24. கண்ணாடி போட்டுகொண்டு பார்த்தால் ஐன்ஸ்டைனும், கண்ணாடி போட்டுக் கொள்ளாமல் பார்த்தால் சற்று மங்கலாக மார்லின் மன்றோவும் தெரிகிறார்கள். 
    கவிதை சிறப்பு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மர்லின் மங்கலாகத்தான் தெரிகிறார்.  நிறையபேர் கண்ணுக்கு அவர் தெரியவில்லை போல!!

      நீக்கு
  25. ஸ்டார்பக்ஸ் காபி வழக்கம் அறவே நின்றதன் காரணம் கோவிட் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம். ஸ்டார்பக்ஸ் என்றால் என்ன?

      நீக்கு
    2. ஸ்டார் பக்ஸ் தெரியாதா? காஃபி டே போல அதுவும் ஒரு ஹை எண்ட் காபி க்ளப். காஃபி டேக்கு ஆங்கிள்ஸ், ஆண்டீஸ் வர ஆரம்பித்து விட்டதால் இளைஞர்கள் அதை புறக்கணித்து ஸ்டார் பக்ஸிர்க்கு மாறி விட்டார்கள். இங்கெல்லாம் செல்வது காபி குடிக்க அல்ல, கடலை போட.

      நீக்கு
    3. இப்போது தெரிந்துகொண்டேன்.

      நீக்கு
  26. திருச்சி ரெயில்வேஸ்டேஷனில் இருந்து வெளியே[வரும்போது காபி விற்கிறர்கள் நல்ல சுவை

    பதிலளிநீக்கு
  27. கவைதை அருமை.
    வேதாள உலகம் வசனம் யார் என்று பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1948 ல் வெளிவந்திருக்கிறது. மூலம் பம்மல் சம்பந்த முதலியார். திரைக்கதை வசனம் ப நீலகண்டன்.

      நீக்கு
  28. எனக்கு காலையில் ஒருதடவை காப்பி அல்லது ரீ குடித்தால் போதும்.
    எலக்ரிக் காப்பி மில் இருக்கிறது பெரும்பாலும் அரைப்பதில்லை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!