வியாழன், 10 மார்ச், 2022

ஊபர் ஓலா அண்ணாச்சி.. நியாயம் தர்மம் என்னாச்சு?

 சில தவறுகளை சிலர் செய்தால் எல்லோரும் கொதித்தெழுவார்கள்.  சிலர் செய்தால் அதைப் பற்றியே பேசாமல் இருப்பார்கள்.  இது உலக நடைமுறை!

பொதுவாக அரசாங்க நிறுவனங்களும், அலுவலகங்களும் ஊழல் செய்தால்தான் அது வெளியில் அதிகம் பேசப்படும். தனியார் நிறுவனத்தின் களவாணித்தனங்களை பெரும்பாலும் பெரிய அளவில் யாரும் மதிப்பதில்லை என்பது என் அபிப்ராயம். 

ஊபர், ஓலா அதிகமாக உபயோகிப்பவன் நான்.  அந்த வகையில் நான் அறிந்த சிலவற்றைப் பகிர விருப்பம்.

ஆட்டோவோ, காரோ இரு சக்கர வாகனமோ எல்லோரும் ஊபர், ஓலா, ரேப்பிடோ என்று எல்லாவற்றையுமே வைத்திருப்பார்கள்.

நீங்கள் தேடும்போது ஒரு வண்டி புக் ஆகும்.  இப்போதெல்லாம் நிறைய கேன்சல் ஆகிறது.  அந்த கேன்சலை  உடனே செய்து தொலைத்தாலும் பரவாயில்லை.  பணியில் இருக்கவேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கும்.  வருகிறேன் என்று வந்து கொண்டிருக்கும் வண்டியின் நேரம் 10...9....8....7.. என்று நிமிடங்கள் சுருங்கி கொண்டிருக்க, நான்கு நிமிடங்கள் என்றிருக்கும்போது சட்டென கேன்சல் ஆகிவிடும்.  அடுத்த வண்டி உடனே அமையாது.  அமையும்போது மறுபடி இந்த கண்ணாமூச்சி விளையாட்டு தொடரும்.  எவ்வளவு  விளையாட்டு?  அலுவலகத்துக்கு நேரமாவது பதபதைப்பை உண்டாக்கும்.

சிலர் உடனே கால் செய்வார்கள்.  'கார்டா கேஷா' என்பார்கள்.  'கேஷ்தான்' என்றால் அவர்களுக்கு ஓகே.  அடுத்து 'டிராப் எங்கே' என்பார்கள்.  சொன்னால், 'இதோ வருகிறேன்' என்பார்கள்.  நீங்கள் போனை வைத்ததும் பார்த்தால் கேன்சல் செய்திருப்பார்கள்.  சிலர் இருபது முதல் ஐம்பது ரூபாய் வரை அதிகம் போட்டு தருகிறாயா என்று பேரம் பேசுவார்கள்.  

இதைவிட மோசம் அடுத்த வகை. அழைப்பை அக்செப்ட் செய்திருப்பார்கள்.  App ல் பார்த்தீர்கள் என்றால் வண்டி நகரவே நகராது.  போன் செய்தாலும் எடுக்க மாட்டார்கள்.  மனதில் என்ன நினைப்பார்களோ..  என்ன மாதிரி ஆட்களோ..   மூன்று அல்லது ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீங்கள் அதை கேன்சல் செய்தீர்கள் என்றால் உங்கள் அடுத்த சவாரியில் ஊபர், ஒலாக்காரர்கள்  20 ரூபாய் முதல் நாற்பது ரூபாய் வரை அபராதம் போட்டிருப்பார்கள்.  நேரம்தானே இதெல்லாம்!  இதையே டிரைவர் கேன்சல் செய்தால் நமக்கு அபராதம் விழாது.  சில சமயங்களில் கேன்சல் செய்த உடன் ஏன் கேன்ஸல் செய்தீர்கள் என்று ஒரு கேள்வி பட்டியல் வரும்.  அதை நிரப்பினாலும் பயன் என்னவோ பூஜ்யம்தான்.

ஒருமுறை ஒரு வண்டி புக் ஆகி, காத்திருக்கிறோம், இரண்டு நிமிடங்கள் என்று காட்டியது, திடீரென மூன்று நான்கு ஐந்து என ஏறியது.  என்னவென்று போன் செய்து விசாரித்தால் (நல்லவேளை அட்டென்ட் செய்தார்) அவர் ஒரே நேரத்தில் ஓலா, ஊபர் இரண்டிலும் ஓகே கொடுத்திருக்கிறார்.  எங்கள் கெட்ட நேரம் ஓலா காரர் முன்னால் இருக்க அவரை ஏற்றிக் கொண்டு பறந்திருக்கிறார்.  நாங்கள் ஊபர்.  நல்லவேளை, அந்தஸ் சந்தர்ப்பத்தில் பெரிய மனது செய்து அந்த டிரைவர் அந்த அழைப்பை கேன்சல் செய்து எங்களை அபராதத்திலிருந்து ரட்சித்தார்!   நாங்கள் முன்னால் இருந்திருந்தால் ஓலா காரருக்கு இதே நிலை ஏற்பட்டிருக்கும்!

ஏற்பட்டும் இருக்கிறது.  நான் ஊபர் போட்டு வந்துகொண்டிருந்தபோது நான் வந்துகொண்டிருந்த அந்த வண்டிக்காரரால் வஞ்சிக்கப்பட்ட (!!) ஒலாக்காரர் போன் செய்து  பேச,இவர் கொடுத்த பதிலிலிருந்து தெரிந்தது.  நியாயமா இதெல்லாம்?

அட, நேற்று பாருங்கள் உலாவில் பைக் புக் செய்து வந்திருக்கிறேன்.  புக் செய்யும்போது எனக்கு காட்டியதைவிட ட்ரிப் முடிக்கும்போது 13 ரூபாய் அதிகம் காட்டுகிறது.  இத்தனைக்கும் சென்ற முறைக்கான அபராதத்தொகை எதுவும் இல்லை.  இதை இதில் சேர்க்க?

சென்னையைப் பொறுத்து என் அனுபவத்தில் ரேப்பிடோ புக் செய்தால் கட்டணம் கம்மி.  அடுத்து ஊபர்.  அப்புறம் ஓலா.  ஓலாவுக்கு ஓடிபி எண் கட்டாயம் உண்டு.  ஊபரில் எப்போதாவது கேட்பார்கள்.  ஒலாக்காரர் என்றால் அவர் வருவதற்கு 90% வாய்ப்பு உள்ளது.  அவர்கள் டிரைவர்களுக்கு கொடுக்கும் கமிஷன் ஒப்பீட்டளவில் அதிகம்.  ஊபரில் புக் செய்தால் கேன்சல் ஆவதே அதிகம்.

அடுத்து, நீங்களும் அனுபவித்திருப்பீர்கள்.  ஊபர் போட்டால் அதில் ஒரு வண்டி எண் வந்திருக்கும்.  உங்கள் அருகில் வந்து 'நான்தான் அது' என்று நிற்கும் வண்டியின் எண் வேறாய் இருக்கும்.  என்னவென்று கேட்டிருக்கிறீர்களா?  கேட்டாலும் ஆல்டர்நேட் எண் என்பார்கள்.  அலலது அது ரிப்பேர், சர்வீஸுக்கு விட்டிருக்கிறேன், என்பார்கள் அல்லது பழைய வண்டி என்பார்கள்.

இதில் என்ன நடக்கிறது என்பது என் ஆட்டோக்காரருக்கு ஏற்பட்ட அனுபவத்தில் தெரிய வந்தது.  

ஒருநாள்   ----------------------------------------------------------------------------                   [அடுத்த வாரம்]

============================================================================================================


தடுக்க முடியாது; தள்ளி போடலாம்!



'அல்சீமர்' என்னும் மறதி நோய் குறித்து கூறும், நியூராலஜிஸ்ட் டாக்டர் மாணிக்கவாசகம்:
"எல்லா மறதியும், அல்சீமர் என்று சொல்ல முடியாது. ஞாபக மறதி பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். வைட்டமின், 'பி12' குறைபாடு, முக்கிய காரணம்.
எனவே, இந்த வைட்டமின் குறைபாட்டால் ஞாபக மறதி ஏற்படலாம். தொடர்ந்து இந்தக் குறைபாடு இருக்கும்போது, 30, 40 வயதிலேயே ஞாபக மறதி வந்துவிடும். வைட்டமின், 'பி12' டெஸ்ட் எடுத்துப் பார்த்துக் கொள்ளலாம்.
அடுத்தது, தைராய்டு பிரச்னை காரணமாக ஒருவருக்கு ஞாபக மறதி ஏற்படலாம். அதனால், தைராய்டு பரிசோதனையும் நல்லது. அல்சீமர்ஸ் என்பது பரம்பரை நோய். அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி யாருக்கேனும் அல்சீமர்ஸ் இருந்தால், அவர்களுக்கு அல்சீமர் வரலாம்.
அல்சீமர் நோய் உள்ளோர், அன்றாட வேலைகளை செய்து முடிக்க சிரமப்படுவர், கடினமாக உணர்வர்.
அதாவது, பழக்கப்பட்ட இடத்திற்கு வாகனம் ஓட்டிச் செல்வதில் சிரமம்; நிதி நிலைகளை சமாளிப்பதில் சிரமம்; விருப்பமான விளையாட்டின் விதிமுறைகளை நினைவுபடுத்திக் கொள்ள இயலாமை போன்றவை.
தேதி மற்றும் பருவ காலங்கள் குறித்த நினைவுகளை இழந்துவிடலாம். சில சமயங்களில் எங்கே இருக்கிறோம் அல்லது எவ்வாறு சென்றோம் என்பதையும் மறந்து போகலாம்.
அதேபோல், உரையாடலின் போது அவர்கள், இடையில் நிறுத்திவிடுவர் மற்றும் மேற்கொண்டு எவ்வாறு தொடர்வது என்று அறியாமல் இருப்பர் அல்லது சொன்னதையே திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பர். சரியான வார்த்தையைக் கண்டறிய சிரமப்படுவதுடன், பொருட்களை தவறான பெயர் சொல்லி அழைப்பர்.
ஆரம்ப அறிகுறியால் அல்சீமரை கண்டறிந்தாலும், மருந்து, மாத்திரையால் தள்ளிப் போடலாமே தவிர, முழுமையாகக் குணப்படுத்த முடியாது. எனவே, திட்டமிட்டே சில விஷயங்களை பின்பற்றினால், அல்சீமர்ஸ் வராமல் தடுக்க முடியும்.
புதிய மொழிகளை கற்றால், மூளையின் செயல்திறன் மேம்படும். எப்போதும் வலது கையால் செய்வதை, இடது கையால் செய்ய முயற்சிக்கலாம். உதாரணமாக, வலது கையில் எழுதினால், இடது கையால் எழுத முயற்சி செய்யலாம். தினமும் ஒரே பாதையில் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்பவராக இருந்தால், மாற்றுப் பாதையில் சென்று வரலாம்.
சுடோகு, குறுக்கெழுத்துப் போட்டிகளில் கவனத்தை செலுத்தலாம். அதிகமான புத்தகங்கள் வாசிப்பதால், மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கலாம். இதனால், ஞாபக மறதி வருவது தடுக்கப்படும்.
மேலும், அதிகமாக பழங்கள் மற்றும் வால்நட்ஸ் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்ளலாம். இப்படி தொடர்ந்து மூளைக்கு வேலை கொடுப்பதால், மூளையின் செயல்திறனை மேம்படுத்தி, ஞாபக மறதியை தள்ளிப் போடலாம்.
தினமலரிலிருந்து... 2017-ம் வருடம்

=======================================================================

சாவியின் பாராட்டத்தக்க குணம்...



=======================================================================================

டிசம்பரில் முயற்சித்த கவிதை ஒன்று...!


மழையும் இப்போதெல்லாம் 
மாறித்தான் போய் விட்டது.
சீராகப் பெய்த காலங்கள் போய்
சீற்றமாய்ப் பொழியும் காலமிது.
மூன்றுநாள் ஒன்பது பொழுது
உணவை
ஒருவேளையில் போட்டுச்
சாப்பிடச் சொல்லும் 
கொடுமைக்காரனைப்போல
மூன்று வார மழையை
மூன்று மணிநேரத்தில்
பொழிந்து 
சேமிக்கவில்லையா?
நான் 
தரவேண்டிய பங்கைத்
தந்துவிட்டேன்
என்கிறது.

======================================================================================

பொறுமையாக, தெளிவாக படிக்க முடிகிறதா என்று பாருங்கள்...!






101 கருத்துகள்:

  1. தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
    வேளாண்மை செய்தற் பொருட்டு..

    குறள் நெறி வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க நலம்.  வாங்க துரை செல்வராஜூ ஸார்..  வணக்கம்.

      நீக்கு
  3. நல்லவேளை... இந்த ஊப்பர்களுக்கும் சீப்பர்களுக்கும் நாம் சம்பந்தப்பட வேண்டிய அவசியம் இல்லாமல் போயிற்று..

    இவன் யார் நமக்கு அபராதம் விதிக்க!..

    எனக்கு அவனுங்களுடைய சாதக பாதகங்கள் தெரியாது..

    எனவே மனம் பொறுத்துக் கொள்ளவும்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன செய்ய, அவர்கள் தேவையாக இருக்கிறார்களே...

      நீக்கு
  4. // பொறுமையாக, தெளிவாக படிக்க முடிகிறதா என்று பாருங்கள்!.. //

    இதை ஏற்கனவே படித்த நினைவு..

    இதனால இப்போது ஆதாயம் ஏதும் உண்டா?..

    உண்டா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கட்டாயம் படித்ததாகத்தான் இருக்கும்.  விகடனில் வந்ததல்லவா?  

      //இதனால இப்போது ஆதாயம் ஏதும் உண்டா?..//

      அப்படி எல்லாம் ஒன்றுமில்லை.  சும்மா சுவாரசியம்தான்.

      நீக்கு
  5. ஊபர் ஓலா போன்றவற்றில் குறைகள் உண்டு. இருந்தாலும் அவற்றின் பயன் மிக அதிகம்.

    மீட்டருக்கு மேல் கேட்பது சென்னையில்தான். பெங்களூர் நினைவில் மீட்டரைப் போடு என்று கேட்டதற்கு, நீங்க எங்கேயிருந்து வர்றீங்க என்று சென்னையில் கேட்டான். பெங்களூரில் சில மாதங்களாகத்தான் அடிப்படை மீட்டர் 30ரூ. சென்னையில் இவனுஙளுக்கு மீட்டர் கட்டுப்படியாகவில்லையாம்.. கொள்ளையர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயன் அதிகம்தான். அதைத்தானே  அவர்கள் உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள்.

      நீக்கு
  6. பாராட்டைத் தாமதிக்காத்து பாலசந்தரின் குணம் கூட.

    பதிலளிநீக்கு
  7. ஆரம்பத்தில் ஓலா, ஊபர். ஆட்டோக்களை வசப்படுத்த அளவுக்குமீறி போனஸ் கொடுத்ததும் இவனுவளுக்கு வேலை செய்யாமல் காசு பார்க்கும் ஆசை வந்துவிட்டது. இப்போது அப்படிப் கொடுப்பதில்லை என்பதால் கடுப்பாகிறார்கள்.

    நேரடியான ஆட்டோ சவாரியில் சென்னைக்கார்ர்கள் (ஆட்டோ ஓட்டுபவர்) கொள்ளையடிப்பதற்கு அளவே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதும் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  நாம் எப்பவுமே 'அதற்கும் மேலே' ஆசைப்படுபவர்களாயிற்றே!

      //நேரடியான ஆட்டோ சவாரியில் சென்னைக்கார்ர்கள் (ஆட்டோ ஓட்டுபவர்) கொள்ளையடிப்பதற்கு அளவே இல்லை.//

      ஆம்.  இதில் பழகிய ஆட்டோ, தெரிந்தவர் பாகுபாடெல்லாம் இல்லை.  (என் தற்போதைய ஆஸ்தான ஆட்டோக்காரர் விதிவிலக்கு)

      நீக்கு
  8. கருணாநிதியின் சில நல்ல பக்கங்களால் கிடைத்த நன்மைகளைவிட அவரின் மோசமான பக்கங்களால் அமைந்த கேடுகள் மிக அதிகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  என்னென்ன சொல்கிறார் என்கிற சுவாரஸ்யம்தான்.  இதில் என்ன நல்ல பக்கம்?!

      நீக்கு
  9. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    நலம் நம்முடன் இருக்க இறைவன் துணை.

    பதிலளிநீக்கு
  10. டிசம்பரில் முயற்சித்த கவிதை

    மிக அருமை ஸ்ரீராம்.
    கண் முன்னே மழை பெய்த உணர்வு.
    அன்பு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. கருணா நிதி பேட்டி என்று கடைசியில் தான்
    பார்த்தேன்.
    தமிழ் எழுத்தாண்மை சிறப்பு தான்.
    அவரே தான் சொன்னாரா. இல்லை அவர் பின் எப்பொழுதுமே ஒருவர்
    நிற்பாரே அவர் மொழியா என்று ஒரு நிமிடம் தோன்றியது.

    சென்னை பற்றி சொல்வது உண்மை.
    ஊரென்ன செய்யும்.
    மக்கள் தரம் தாழ்ந்தால் தாழ்ந்தது தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரின் செயலாளர் சண்முகநாதனைச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.  அவரும் சமீபத்தில் காலமாகி விட்டார்.

      நீக்கு
  12. சாவி என்ற அற்புத மனிதர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம்
    என்பதே பெரிய மகிழ்ச்சி.
    சாதனை மனிதர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னையின் பல பயங்கரங்களில் இந்த ஓலா, ஊபர் அட்டகாசங்கள்.
      சகிக்க முடியவில்லையே.
      தினமும் இதில் பயணம் செய்து அல்சர் வரவழைத்துக் கொள்ளணும்
      போல இருக்கே.
      வெறும் ஆட்டோ எல்லாம் இப்ப இல்லியா.

      எங்களுக்கு என்று ஒரு நல்ல டிராவல்ஸ் இருந்தது,
      30 வருட பந்தம் விட்டுப் போனது,.
      அவர்களால் டிரைவர்களை வைத்து நடத்த முடியவில்லை.

      அதன் உரிமையாளர் '' ஃபோனை எடுத்து . ஸ்ரீராம் என்று சொல்வதே
      அருமையாக இருக்கும்.ஸ்ரீராம் டிராவல்ஸ் இப்போது
      இருக்கிறதா என்று தெரியவில்லை.

      ஸ்ரீராம் இன்று டிராவல்ஸ் பற்றி எழுதினதைப் பார்த்தால்
      சங்கடமான சென்னை என்று நினைக்கத் தோன்றுகிறது:(

      நீக்கு
    2. தினசரி இவர்களை எதிர்பார்த்து நிற்க வேண்டி இருக்கிறது.  என் ஆஸ்தான ஆட்டோ பல சமயங்களில் காலை வாரி விட்டு விடுகிறார்.  போக்குவரத்து நெரிசலும் பயங்கரம்.  அதுவே இவர்கள் கேன்சல் செய்யவும் காரணம்.  ஆனால் சென்னையில் எங்குதான் நெரிசல் இல்லை?.

      நீக்கு
  13. சுடோகு, குறுக்கெழுத்துப் போட்டிகளில் கவனத்தை செலுத்தலாம். அதிகமான புத்தகங்கள் வாசிப்பதால், மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கலாம். இதனால், ஞாபக மறதி வருவது தடுக்கப்படும்.''

    குறுக்கெழுத்து, வேர்டில் எல்லாம் நன்றாகச் சிந்திக்க வைக்கின்றன.

    டாக்டர் மாணிக்க வாசகம் அவர்களின் அறிவுரை
    சிறப்பு. அலெர்ட்டாக இருப்போம். நன்றி மா ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அம்மா.  தினசரி வர்டில் போட்டு விடுகிறேன்.  புத்தகங்கள் சற்று கம்மியாகத்தான் படிக்கிறேன்.

      நீக்கு
  14. பெங்களூரைப் பொருத்தவரை தற்சமயம் ஓலா ஆட்டோ நியாயமாக செயல்படுகிறார்கள். யூபர் இங்கேயும் தகிடுதத்தங்கள் நிறைய செய்கிறார்கள். ஓலா ஆட்டோ cash payment என்றால் சொன்ன நேரத்துக்கு சரியாக வந்துவிடுகிறார்கள். சிலர் மட்டும் சில நாட்களில் குறிப்பிடப்பட்ட தொகைக்கு மேல் சிறிது கேட்டு வாங்கிவிடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னையிலும் ஊபருக்கு ஓலா தேவலாம்தான்.  ஆனால் பெங்களூரு அளவுக்கு நல்லவர்கள் இல்லை!

      நீக்கு
  15. ஊபர் உபயோகித்ததில்லை. ஓலா இங்கு பரவாயில்லை. தமிழ்நாட்டில் தான் ஆட்டோ டாக்ஸி கொஞ்சம் அடாவடித்தனம் செய்கின்றனர். நான் திருச்சி, மதுரை, கோவை போன்ற ஊர்களுக்கு செல்லும்போது fastrack, reddit, போன்ற மீட்டர் டாக்ஸியை பயன் படுத்துகிறேன். 

    அல்சிமீர் உண்டா  தெரியாது. வயது கூடும் தோறும் எனக்கு சின்ன சின்ன மறதிகள் கூடிவிட்டது. 

    பாட்டுக்கு பாட்டு

    எங்கும் துரிதம், எதிலும் துரிதம்
    துரித உணவு துரித பயணம் 
    என்பது போன்று 
    மழையும் துரிதம்.
    நிதானம், நிம்மதி என்பது 
    மழைக்கும் இல்லை. 
    மனிதனுக்கும் இல்லை. 

       

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் நீங்கள் சொல்லும் மறதி  உண்டு.  இங்கும் எழுதி இருக்கிறேன்.  பாட்டுக்கு பாட்டு சூப்பர்.  பாஸ்ட் டிராக் போன்ற மீட்டர் டேக்சிகள் வேறு ரகம்!

      நீக்கு
    2. 2015 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்துக்கு வந்திருந்தப்போ உதவினு யாருமே செய்யலை. இன்னும் சொல்லப் போனால் ரயில்வே ரிடையரிங் ரூம் எங்கே எனக் கேட்டதுக்குக் கூடப் பதில் சொல்வார் இல்லை. எப்படியோ கண்டுபிடிச்சுண்டு போனோம். அங்கே இரவு தங்கிட்டுக் காலையில் கொட்டாரத்தில் நடந்த சஷ்டிஅப்த பூர்த்திக்குச் செல்ல ஆட்டோ பிடித்தால் ஒருத்தருமே வரலை, இத்தனைக்கும் என் தம்பி எல்லாம் சொன்ன மாதிரித் தான் ஆட்டோ கேட்டிருந்தோம். கோயிலின் தெற்கேயோ என்னமோ கொண்டுவிடச் சொல்லிக் கேட்கச் சொல்லி இருந்தார்கள். அப்படியே கேட்டோம். அவங்க சொன்னது 50 ரூபாயிலிருந்து 60 வரை ஆனால் ஆட்டோக்காரங்க கேட்டது 150 ரூபாய். போனால் போகிறதுனு 120க்கு வரேன்னு ஒருத்தர் சொன்னார். ரொம்ப பேரம் பேசிப் பின்னர் 120க்கே போனோம். மேலும் அவங்களுக்கெல்லாம் தமிழர்கள் என்றாலே ஒரு வித அலட்சியம்! ஏதோ நாங்க கூலி வேலைக்கு வந்தவங்க போல் நடத்தினாங்க. கொட்டாரத்தில் இருந்து பழவங்காடி பிள்ளையாரைப் பார்க்க வேண்டி ஆட்டோ கூப்பிட்டப்போ 150க்குக் குறைந்து யாருமே வரலை. ரொம்ப நேரம் காத்திருந்து ஒருத்தர் 75 ரூபாய்க்கு வந்தார். அவரிடம் போக வர 150 பேசிக்கொண்டு போய்விட்டு வந்தோம். கோயிலில் மட்டும் ராஜா வரதுக்குள்ளே பார்த்துட்டு வெளியேறிடணும் என்பதால் எங்களைக் குறுக்கு வழியில் பக்கவாட்டில் சந்நிதிக்கு அருகே உள்ள படிக்கட்டுகளில் ஏறி சந்நிதிக்கு வரச் சொல்லி அவங்களே சொன்னாங்க. நாங்க எப்போவும் போல் சுற்றிக்கொண்டு போயிருந்தோமெனில் அதற்குள்ளாக ராஜா தரிசனத்துக்கு வந்திருப்பார். ஒரு மணி நேரத்துக்கும் மேலே காத்துண்டு இருந்திருக்கணும்.

      நீக்கு
    3. அதே போல் "பெண்"களூரிலும் ஆட்டோக்காரங்களுடனான அனுபவங்கள் உண்டு. உ.பியில் ரொம்பவே ஏமாற்றுவார்கள். ராஜஸ்தான், குஜராத் பரவாயில்லை. தில்லியும் மோசமில்லை.

      நீக்கு
    4. திருவனந்தபுரத்தைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கையில் இங்கே "ஜோதி" என்னும் சானலில் திருவனந்தபுரம் பத்மநாப ஸ்வாமி கோயில் பற்றிய வரலாறைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த சானலை இன்று தான் பார்க்கிறேன்.

      நீக்கு
  16. ஊபர், ஓலா அனுபவங்கள் எனக்கு தெரியாது, கிடையாது. தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  17. கலைஞரின் பேட்டி நேரடி வாய் மொழி பேட்டியாகத் தோன்றவில்லை. கேள்விகளை எழுதிக்கொடுத்து பதில்கள் வாங்கியது போன்று உள்ளது. அதனால் தான் உப கேள்விகள் இல்லை. 

    சாவியின் படைப்புகளில் எதை மறந்தாலும் "கேரக்டர்" ஐ மறக்க முடியாது. வர்ணனையும் படங்களும் கட்சிதமாக இருக்கும். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அதனால் தான் உப கேள்விகள் இல்லை. //

      நல்ல அவதானிப்பு.  ஆனால் அப்போது விகடனில் ஒருவரி கேள்விகள் பகுதி போல வந்து கொண்டிருந்த நினைவு.

      நீக்கு
  18. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  19. ஓலா ஆட்டோவில் புக் செய்யும் போதே எவ்வளவு பணம் காட்டுது ? என்ற கேள்விதான் முதலில் கேட்கிறார் டிரைவர். நாம் சொன்னவுடன் மேலே 30, 20 சேர்த்து கொடுத்து விடுங்கள் என்று சொல்லி விட்டுத்தான் வருகிறார்கள்.

    பெட்ரோல் விலை ஏறி விட்டது, அவர்கள் பழைய ரேட்டை போடுகிறார்கள், பாதையும் பழைய மேப் இப்போது பாலம் கட்டியபின் வேறு மாதிரி என்கிறார். நமக்கு மற்ற ஆட்டோவை விட இவை பரவாயில்லை என்பதால், ஓலா, ஆட்டோ, டாக்ஸி புக் செய்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெட்ரோல் விலை, கேஸ் விலை ஏறுவதற்குத் தக்கவாறு அவர்களும் ஏற்றுகிறார்கள்.  ஆனாலும் இவர்கள் இப்படிதான் சொல்வார்கள்.  டிரைவர்கள் தரப்பில் நியாயமே இல்லை என்று சொல்ல முடியாது.  அவர்கள் பக்கமும் சில நியாயமான வாதங்கள் உண்டு.

      நீக்கு


  20. டாகடர் மாணிக்கவாசகம் அவர்கள் அல்சீமர் நோய் குறித்து சொன்னது பயனுள்ளது.

    மற்றும் சாவி குறித்து அவர் மகள் சொன்னது,கலைஞரின் பேட்டி , உங்கள் மழை கவிதை எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
  21. //மூன்று வார மழையை
    மூன்று மணிநேரத்தில்
    பொழிந்து
    சேமிக்கவில்லையா?
    நான்
    தரவேண்டிய பங்கைத்
    தந்துவிட்டேன்
    என்கிறது.//

    ஜெயக்குமார் சார் சொன்னது போல எல்லாம் துரிதகதியில் இயங்குவதுதால், நம் சேமிப்பும் துரிதமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறது போல மழையும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா.. மனிதர்கள் போல மாறி விட்டது இலக்கையும்!

      நீக்கு
    2. ஒவ்வொரு வருஷமும் அது பெய்ய வேண்டிய அளவில் தான் பெய்து கொண்டிருக்கிறது. நாம் தான் கோட்டை விட்டுவிட்டுப் பின்னர் தவிக்கிறோம். இதோ! ஆச்சு! இன்னும் ஒரே மாதம்! சென்னை தண்ணீர்ப் பஞ்சத்தில் தவிக்கும்! :(

      நீக்கு
  22. அல்சீமராவது வெங்காயமாவது?

    தினம் தினம் ரொட்டீனாகச் செய்யும் காரியங்கள் மறப்பதில்லை. ஒன்றைச் செய்யும் பொழுது வேறொரு விஷயத்தின் மீது நினைப்பு இருந்தால் தான் செய்கிற வேலையில் லேசான தடுமாற்றம் இருக்க வாய்ப்புண்டு.

    நம் நினைவிற்கும் அது பற்றிய நம் ஈடுபாட்டிற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. ஈடுபாடுகள் அதிகரிக்க அதிகரிக்க சில ஈடுபாடுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு அவற்றை நாம் நினைவுகள் மங்கலாம். அவ்வளது தான். இது இவர்கள் சொல்லும் அல்ஸைமர் அல்ல.

    எதிலும் ஈடுபாடே இல்லாத ஜடங்களுக்கு எல்லாமே அல்ஸைமர் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது சரி என்றாலும் ஸ்ட்ராங் வார்த்தைகள் உபயோகித்திருக்கிறீர்கள்!!  முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி உட்பட சில பிரபலங்களுக்கு கூட இந்த வியாதி இருந்திருக்கிறது.  அவர்களும் ஜடம்தானா?!!

      நீக்கு
    2. //ஒன்றைச் செய்யும் பொழுது வேறொரு விஷயத்தின் மீது நினைப்பு இருந்தால் தான் செய்கிற வேலையில்// - அப்படி அல்ல ஜீவி சார்... நான் என் மாமியாரின் 'நினைவு மங்கலை' அவதானித்துக்கொண்டிருக்கிறேன். நாங்கள் அடுத்த அடுக்ககத்தில் இருந்தாலும், அவருக்கு நாங்கள் எங்கேயோ தொலைவில் இருக்கிறோம் என்ற நினைப்பே உள்ளது. நிறைய மறதி. கொஞ்சம் மனக் கஷ்டமாக இருக்கும். என் பெண் அவரிடம் ரொம்பவே பேசிக்கொண்டிருப்பாள்.

      எனக்கு ரொம்ப வருஷமாகவே 'முகங்களை' நினைவில் வைத்திருக்க முடியாது. உங்களை ஒரு முறை பார்த்துப் பேசினாலும், அடுத்த முறை, உங்களை எங்கேயோ பார்த்த நினைவுதான் இருக்கும். இதற்கு விதிவிலக்கு நிறைய தடவை மனதில் கொண்டுவரும் முகங்கள், நினைவுகள். இதன் காரணம் எனக்குத் தெரிவதில்லை, ஆனால் என்னைச் சந்திப்பவர்களிடம் இந்தக் குறையை நான் சொல்லிவிடுவேன்.

      நீக்கு
  23. * அவற்றைப் பற்றிய நம் நினைவுகள்
    மங்கலாம்.

    பதிலளிநீக்கு
  24. ஏறத்தாழ 45 வருடங்களுக்கு முன்பு
    காஞ்சீபுரம் ராமாஸ் கேஃப் மாடி அரங்கில் 60-க்கும் மேற்பட்ட பத்திரிகை ஏஜண்டுகள் மத்தியில்
    என்னை அவர் பக்கத்தில் அழைத்து
    பத்து நிமிஷங்களுக்கு மேல் புகழ்ந்து மகிழ்தவர் சாவி அவர்கள்.

    பதிலளிநீக்கு
  25. வழக்கமான கலைஞரை ஹண்டே -- சண்டேவில் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பகுதியைப் படித்து விடுங்கள். உங்கள் பதில் உந்தளுக்கே புன்னகையை வரவழைக்கும்.

      நீக்கு
    2. சரியாப் போச்சு.. பொறுமையா படிச்சிடுங்கன்னு மத்தவங்களைக் கேட்டுண்டு, நீங்களே இன்னும் பிடிக்கலையா?

      நீக்கு
    3. பிடிக்கலையா -- படிக்கலையா

      நீக்கு
  26. கார் வைத்திருந்து பராமரிக்கும் செலவுகளைப் பார்த்தால் இதெல்லாம் ஒன்றுமேயில்லை. கொரானா நேரத்தில் தான் ஓரிரண்டு ஓலா ஓட்டுனர்கள் இந்த மாதிரி நடந்து கொண்டனர். அதற்கு நடுவில் சரியான தொகையை வாங்கிக் கொண்ட ஓட்டுனர்கள் மீது தனிப்பட்ட அபிமானம் பொங்கி நானே பத்து - இருபது சேர்த்துக் கொடுத்தது உண்டு.
    என்னைப் பொருத்த மட்டில் ஓலா, ஊபர், ஃபாஸ்ட் டிராக் எல்லாமே கிடைத்த வரப்பிரசாதங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போதாவதுதான்  உபயோகிக்கிறோம் என்றால் வரப்ரசாதம்தான்!

      நீக்கு
    2. எப்போதும் உபயோகித்தாலும் வரப்பிரசாதம்தான் என்பது என் அனுமானம். நாம் கார் வைத்திருந்தால், அதன் பராமரிப்புச் செலவு, மற்ற செலவுகள் மிக மிக அதிகம். என்ன..கொஞ்சம் பந்தாவாக இருக்கும். அதிலும் மற்றவர்கள் நம்மைவிட பெரிய ஜாதி கார்கள் வைத்திருந்தால், அதுவும் புஸ்...

      யாரோ எழுதியிருந்தார்கள் (மிக நீளமாக). சொந்தக் கார் வைத்திருப்பது என்பது, ஒரு நாளைக்கு 600 ரூபாய்க்கு மேல் செலவுபிடிக்கும் விஷயம் (கார் வாங்கிய செலவு, வருட இன்ஷ்யூரன்ஸ்..... என்று பலவித செலவுகளைக் குறிப்பிட்டிருந்தார்கள்).

      நான் வெளிநாட்டில் நல்ல கார் வைத்திருந்ததன் காரணம், அதன் மூலம் எனக்கு மாதம் நிறைய பணம் வந்தது (அதாவது, கம்பெனி கார் அலவன்ஸ் என்று கொடுத்த பணம், காருக்கான செலவு/கடைசியில் விற்கும்போது ஏற்படும் இழப்பு போன்றவை போக எனக்கு மாதா மாதம் பணம் அதிகம் மிச்சமாகும்)

      நீக்கு
    3. சொந்தக் கார் வைச்சிருந்தால் வேலை அதிகம். வாரம் ஒரு முறையாவது அதை எடுக்கணும். எங்காவது போயிட்டு வரணும். நண்பர்கள் கேட்டால்/உறவினர்கள் கேட்டால் அவங்க உபயோகத்துக்குக் கொடுக்கணும். திரும்பி வரும்போது எப்படி இருக்கும்னு எல்லாம் சொல்ல முடியாது. இந்த விஷயத்தில் எங்க உறவினர் ஒருவர் நெருங்கிய சொந்தத்துக்குக் கல்யாண வேலைகளுக்குத் தன் காரைக் கொடுத்துவிட்டுப் பின்னர் அதைச் சரி பண்ண சுமார் 10000/- ரூபாய் செலவு ஆனது. ஊரிலிருந்து உறவினர் வந்தால் அவங்க ஊர் சுற்றக் கடை, கண்ணிகளுக்குப் போகவெனக் கொடுக்கணும்.இன்னும் எத்தனையோ!

      நீக்கு
  27. சில கவிதைகளை நான் வாசிக்கும் போதே எனக்கேற்றவாறு திருத்தி வாசிப்பதுண்டு.

    மூன்றே வார மழையை
    மூன்றே மணி நேரத்தில்

    என்று இன்றைய கவிதையை இயல்பாக வாசித்து அடுத்த மேட்டருக்குப் போனேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரவர் சௌகர்யம், அவரவர் ரசனை...!  கர்நாடகா தேவை இலலாத சமயங்களில் காவிரி நீரைத் திறந்து விட்டு விட்டு நான் தரவேண்டிய பாங்காக் கொடுத்து விட்டேனே என்று கணக்கு காட்டும்.  அது நினைவுக்கு வரவில்லையா?

      நீக்கு
  28. என்னவென்று போன் செய்து விசாரித்தால் (நல்லவேளை அட்டென்ட் செய்தார்) அவர் ஒரே நேரத்தில் ஓலா, ஊபர் இரண்டிலும் ஓகே கொடுத்திருக்கிறார். //

    இதிலிருந்து அந்தப் பகுதி மட்டும் புரியவில்லை ஸ்ரீராம். இரண்டும் எப்படி ஒரே நேரத்தில் என்ற குழப்பத்தினால்..

    சரி விடுங்க இங்க நீங்க நீளமா புராணம் சொல்ல வேண்டியிருந்தால் ஹிஹிஹி வேண்டாம், சுருக்கமாகப் பதில் கொடுக்கும் போது எனக்குப் புரியவில்லை என்றால் உங்களைக் கூப்பிட்டுப் புராணம் பாட வைப்பேன்!!!!!! தயாராக இருக்கவும்!! ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆட்டோக்காரர் ஊபர் ஆப், ஓலா ஆப் இரண்டும் வைத்திருக்கிறார்.  இரண்டுமே தனித்தனியாகத்தான் இருக்கும்.  உபயோகிப்பாளர்களான நீங்களும் அதே போல தனித்தனியாக அவற்றை வைத்துக் கொள்ள முடியும்.   அதில் இரண்டிலும் அழைப்பு வர, அவர் இரண்டுக்குமே ஓகே சொல்லி அமுக்கி விட்டார்.  ஒன்றை காணக்கில் எடுத்து ஒன்றை த்ராட்டில் விட்டார்.  இதில் பாதிக்கபப்ட்டவன் அந்த முறை நான்.

      புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    2. நாங்க அதெல்லாம் கூப்பிடுவதே இல்லை. என்னோட மொபைல் வாங்கும்போதே அதெல்லாம் ஆப்ஸ் சேர்க்கப்பட்டே வந்தது. ஒரே ஒரு முறை தம்பி பையருக்காக ஊபர் வண்டி புக் செய்துவிட்டு அதை அவங்களே கான்சல் செய்துட்டாங்க. ஏனெனில் பத்து மணிக்குப் பின்னர் ரேட் வேறேயாம். நாங்க ஒன்பதரைக்குப் பண்ணி இருந்தோம். அவர் பத்துமணிக்குப் பின்னர் வரேன்னு சொன்னார். அதுக்குப் பின்னரும்/முன்னரும் அனுபவங்கள் இல்லை.

      நீக்கு
    3. அம்பத்தூரில் இருந்தப்போவெல்லாம் குடும்ப ஆட்டோ/குடும்ப ட்ராவல்ஸ் உண்டு. ஆகவே பிரச்னைனு வந்தது இல்லை. இங்கே வந்து பழக்கம் ஆன ட்ராவல்ஸ்காரர் இப்போது எக்கச் சக்கமாகப் பணம் கேட்கிறார். கிலோ மீட்டருக்குப் பதின்மூன்று ரூபாயாக இருந்ததிலிருந்து பதினைந்து வரை போகிறது. ட்ரைவருக்கு இரட்டை பாட்டா! ஆகவே இப்போல்லாம் கூப்பிடுவது ரெட் டாக்சி தான். பாகேஜ் உண்டு. திருச்சிக்கு உள்ளேயும் வருவாங்க. வெளியே போவதெனில் ரெட் டாக்சி தான். கும்பகோணம் போனதெல்லாம் அதில் தான். மற்ற தொலைதூர நகரங்களுக்குச் செல்ல ட்ராப் டாக்சி. ஆகவே இப்போக் குடும்ப ஆட்டோ/குடும்ப வண்டி எல்லாம் இல்லை.

      நீக்கு
  29. அதிகம் ஊபர் ஓலா பயன்படுத்தியது இல்லை என்றாலும் கொரோனா சமயத்தில் ஒரிரு சமயத்தில் பயன்படுத்த வேண்டியதான போது, //ஊபர் போட்டால் அதில் ஒரு வண்டி எண் வந்திருக்கும். உங்கள் அருகில் வந்து 'நான்தான் அது' என்று நிற்கும் வண்டியின் எண் வேறாய் இருக்கும். என்னவென்று கேட்டிருக்கிறீர்களா? கேட்டாலும் ஆல்டர்நேட் எண் என்பார்கள். //

    இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறது, ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கான விளக்கம் அடுத்த வாரம் வெள்ளித்திரையில்!!

      நீக்கு
  30. மறதி - அல்சீமர் பற்றி டாக்டர் சொல்லியிருப்பது சரிதான் என்றாலும் சில, யோசிக்க வைக்கிறதே. இந்த மறதி என்பது சில சமயம் நாம் ஒன்றைச் செய்துகொண்டிருக்கும் போது கவனம் சிதறினால் அதாவது மனம் வேறு எதையோ யோசித்துக் கொண்டிருந்தால் செய்வதில் சின்னத் தடுமாற்றம் வரும்தான். அலல்து மனம் ஏதேனும் பலத்த சிந்தனையில் குழப்பத்தில் இருந்தால் தடுமாற்றம், தவறுகள் மறதி வருமே.

    டாக்டர் சொல்லியிருக்கும் பயிற்சிகள் நல்ல விஷயம்.

    சுடோக்கு, புதிர் எல்லாம் பிடித்த விஷயம் செய்வதுண்டு அது போல வாசித்தலும்....ஆனாலும் கவனச் சிதறல் சமீபகாலத்தில் நிறைய அதனால்தான் எழுதவும் முடிவதில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லும் கவனத்தவறுகள் எல்லோருக்கும் ஏற்படும்.  இது ஸ்பெஷல்!

      நீக்கு
  31. ஸ்ரீராம் நீங்களும் நானும் விட்டமின் டி டெஸ்ட் செய்யணுமோ!! ஹாஹாஹாஹாஹா

    சும்மா ஒரு கலாய்ப்புத்தான்....

    என்ன பயிற்சிகள் செய்தாலும் கவனச் சிதறல்கள்...இதோ இப்பக் கூட துளசி அனுப்பிய கருத்தை நேற்றைய பதிவுக்குப் போட்டு விட்டு இன்றைய பதிவுக்கான கருத்தை அங்கே போட்டு ஹிஹிஹிஹிஹி.....
    இந்தப் பதிவு டேபிற்கு வந்து பார்த்தால் கருத்தைக் காணவில்லை என்னடா இது என்று பார்த்தால் நல்லகாலம் கவனித்துவிட்டேன் புரிந்தது. அங்கிருந்து இங்கு எடுத்துப் போட்டாச்சு!!

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதிய வெயிலில் அரைமணி நேரம் முழு உடம்பும் வெயிலில் படும்படி நிற்கலாம்!!!

      நீக்கு
    2. கூடவே, பாயில் இலை வடாம் போட்டுப் பார்த்துக்கொண்டால், வடாமுக்கு வடாமும் ஆச்சு, நமக்கு பி 12ம் ஆச்சு

      நீக்கு
    3. இலை வடாமுக்கு நிழல் உலர்த்தல் போதும். அதிகம் வெயிலில் காய வேண்டாம்.

      நீக்கு
  32. கவிதையின் கருத்து சூப்பர் ஸ்ரீராம். ஒப்பீடு....
    ஆனால் கவிதை என்னவோ மிஸ்ஸிங்க்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...  என்ன செய்ய?  எல்லாமே எப்பவுமே சிறப்பாக அமைந்து விட்டால் போரடித்து விடும்!

      நீக்கு
  33. மழை மாறியதற்குக் காரணம், அது நினைச்சிருக்கும், எல்லாருமே பர பரன்னு ஓடிட்டே இருக்காங்களே, ரொம்ப ஃபாஸ்டா போயிடுச்சே நாமளும் பபன்னீர் தெளிப்பது போலச் சாரல் போல பெஞ்சா மனுஷன் நம்மளை த் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டாங்க. அடிச்சு தீருத்துருவோம் நாமளும் ஃபாஸ்ட் தான்னு ந்னு கொட்டிருக்கும்...எல்லா இடத்துலயும் கொட்டித் தீர்த்ததே!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் அதன் அந்த மாறுபாடு கூட மனிதன் இயற்கையை மீறி இயற்கைக்கு செய்யும் துரோகங்கள்தான் காரணம்!

      நீக்கு
  34. சாவி அவர்களின் மனம் பரந்த மனம். பாராட்டி ஊக்கப்படுத்தல் என்பது எல்லாருக்கும் எளிதாக வராது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாவி என்றாலே எனக்கு நினைவில் வருவது எழுபத்தி ஆறாம் வருஷம் நடந்த அந்த விமான விபத்தும் தலை தீபாவளிக்கு வந்த அவர் மாப்பிள்ளை விபத்தில் இறந்ததும். பின்னர் அந்தப் பெண்ணிற்கு மறுமணமும் செய்வித்தார் சாவி. அதே விமான விபத்தில் மனைவியை இழந்த ஒருவருக்கு. அவர் பெயர் அர்த்தநாரி என்பது. இறந்த மனைவி பெயரோ சாவியின் மகள் பெயரோ நினைவில் வரலை, அந்தப் பெண் பெயர் ஜெயா என நினைக்கிறேன். அவர் திருமணத்தின் போது (முதல்) தலையில் முத்துப் பின்னல் பின்னி இருந்ததைப் படம் எடுத்துச் சாவி அட்டையில் போட்டிருந்தனர்.

      நீக்கு
  35. கலைஞரின் பதில்கள் வெகு சுவாரசியம். நன்றாக வாசிக்க முடிந்தது ஸ்ரீராம்.

    எப்போதாவது எதற்காவது பயந்திருக்கிறீர்களா என்ற கேள்விக்கு அவர் பதிலில்...

    சர்வ வல்லமை!! பொருந்திய பேச்சாற்றல் மிக்கவர் என்பது தெள்ளத் தெளிவாக உறுதியாகிறது!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையைச் சொல்லட்டுமா?  பார்த்த உன் எடுத்து பகிர்ந்து விட்டேன்.  நான் இன்னமும் படிக்கவில்லை!!!!!

      நீக்கு
  36. உங்கள் அனுபவம் போன்று சிலர் சொல்லக்கேட்டிருக்கிறேன். கஷ்டம்தான்.

    எனக்கு ஊபர் ஓலா பழக்கமே இல்லை. பழக்கம் இல்லாததால் என் அனுபவம் என்று சொல்லத் தெரியவில்லை ஸ்ரீராம்ஜி.

    அதை எப்படி நிறுவி பயன்படுத்த வேண்டும் என்பதும் ஒரு முறை நான் தனியாகச் சென்ற ஒரு அவசர பிரயாணத்தில் உணர்ந்தேன். அதன் பின்னும் கூட அந்த ஆப் இறக்கிக் கொள்ளவில்லை. பெரும்பாலும் கார், பைக் என்று செல்வதால் இருக்கலாம். பேருந்து சில சமயங்களில். அதுவும் தவிர எங்கள் பகுதிகளில் ஆட்டோக்கள் அடாவடி கிடையாது. மீட்டர் சார்ஜ்தான்.

    துளசிதரன்



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் நானும் நிறுவிக்கொள்ளவில்லை துளஸிஜி.  பாஸோ, மகனோதான் போடுவார்கள்.

      நீக்கு
  37. கவிதையின் ஒப்பீடு அசாத்தியமான கற்பனை. உங்கள் கற்பனை வியப்பு, ஸ்ரீராம்ஜி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  38. கேள்விகளுக்கான கலைஞரின் பதில்கள் வெகு சுவாரசியமாக இருக்கின்றன.

    திரு சாவி அவர்களுக்குப் பரந்த மனம். நல்ல மனம். பாராட்டுவது என்பது அபூர்வமான குணம். நான் இப்போதைய சோ சுவீட் போன்ற உதட்டளவு பாராட்டுகளைச் சொல்லவில்லை!

    அல்சீமர் பற்றிய தகவல்கள் பயனுள்ளவை. வாசிக்கும் போது சிறிய அச்சம் வந்தாலும், இறைவனிடம் பிரார்த்தனைதான். வராமல் இருப்பது என்பது மிகவும் நல்லது. அல்லது அது வரும் ஆபத்து இருந்தால் உயிர் பிரிந்துவிட வேண்டும். நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்குச் சிரமம் இல்லாமல்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  39. என்னமோ மற்றவர்களெல்லாம் தர்மம் நியாயம் பற்றியே சிந்தித்து அதன்வழி தொழில் செய்துவருவதுபோலவும், உபர், ஓலா மட்டுந்தான் வழி தவறிச் செல்வதுபோலவும் நினைத்துக்கொண்டிருந்தால் இப்படியான தலைப்புதான் வரும்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிட்டத்தட்ட இதற்கான பதிலைத்தான் கட்டுரையின் முதல் வரி சொல்கிறது.

      நீக்கு
  40. ஊபர் பிரச்சினை இங்கும் இருக்கிறது. மீற்றருக்கு மேல் கேட்டதாக தெரியவில்லை.
    சாவியின் பாராட்டும் குணம் சிறந்தது.

    பதிலளிநீக்கு
  41. ஓலா ஊபர் தொல்லைகள் தமிழகத்தில் கொஞ்சம் அதிகம் தான். பல முறை இதனை அனுபவித்து இருக்கிறேன். தலைநகரில் இப்படியான தொல்லைகள் இல்லை.

    பதிவின் மற்ற பகுதிகள் நன்று.

    பதிலளிநீக்கு
  42. வெளியூர் வரும் போது ஊபர் ஓலாவிடம் இதே போன்ற அனுபவங்கள் கிட்டியதுண்டு.

    அனைத்துப் பகிர்வுகளும் நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!