வெள்ளி, 16 செப்டம்பர், 2022

வெள்ளி வீடியோ : ஊருக்கு நான் யாரம்மா என் செல்வமே உறவுக்கு நீ யாரம்மா

 சிவானந்த விஜயலக்ஷ்மி.  1937 ல் பிறந்து 2011 ல் மறைந்தவர். 

அவர் குரலில் ரேடியோவில் நிறைய பாடல்கள் கேட்டிருக்கிறேன்.  இவர் குரலில் கனகதாரா ஸ்தோத்ரம், லலிதா சஹஸ்ரநாமம்  ஆகியவை பிரபலம்.  அதனுடன் இதைப் பாடல், 'அம்பா லலிதே மாம்பாலய' பாடல் ஆகியவையும் பிரபலம், கேட்டு மனதில் நிற்கும் பாடல்கள்.

சிவானந்த விஜயலக்ஷ்மி மதுரைக்காரர்.  அவர் மறைந்தததும் மதுரையில்தான்.

மேற்கண்ட கட்டுரையின் தமிழாக்கம் இது : 

பல்துறை இசைக்கலைஞரான சிவானந்த விஜயலட்சுமி, நவம்பர் 8, 2011 - செவ்வாய்க்கிழமை தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 74. லலிதா சஹஸ்ரநாமம், லலிதா ஸ்தோத்திரம், லலிதா பஞ்சரத்னம், அபிராமி அந்தாதி மற்றும் பல பக்தி கீர்த்தனைகளுக்காக உலகம் முழுவதும் அறியப்பட்டவர், சிவானந்த விஜயலட்சுமி தனது மொழியியல் புலமைக்காகவும் பிரபலமானவர்.

சிவானந்த விஜயலட்சுமியின் திறமையை மதுரையில் டிவைன் லைஃப் சொசைட்டியின் நிறுவனர் சுவாமி சிவானந்தா தனது 13வது வயதில் கண்டறிந்தார். சுவாமி சிவானந்தாவுடன் ரயில்வே சந்திப்பில் இருந்து தானப்ப முதலி தெரு வரை பஜனைகள் பாடி வந்த பரிவாரத்தில் அவர் இருந்தார். அவள் குரலில் கவரப்பட்ட அவர், ரிஷிகேஷுக்குச் செல்லும்படி அவரிடம் சொன்னார், விஜயலக்ஷ்மி அவ்வாறே  தன் தந்தையுடன் ரிஷிகேஷ் சென்றார். ஸ்வாமி சிவானந்தாதான் வேதம் மற்றும் இசை வாசிப்பில் அவருக்கு ஊக்கமாளித்தார். வால்மீகி ராமாயணத்தின் தொகுப்பை அவருக்கு வழங்கிய அவர், இன்னும் ஆறு மாதங்களில் வேதம் பற்றிய சொற்பொழிவுகளை நடத்துவாய் என்று விஜயலட்சுமியை ஆசீர்வதித்தார் என்று அவரது மகன் எஸ்.நடனகோபால் நினைவு கூர்ந்தார். அவர் தனது 15வது வயதில் பத்ரிநாத் மற்றும் கேதார்நாத்துக்கு விஜயம் செய்தார்.

விஜயலட்சுமியின் பெயருக்கு ‘சிவானந்தா’ என்ற முன்னொட்டைப் பயன்படுத்தி, ‘சிவானந்தா பிரதித்வனி’ என்று அழைக்க விஜயலட்சுமிக்கு அதிகாரம் அளித்தவர் சுவாமி சிவானந்தா.

சுவாமி சிவானந்தா வாழ்ந்த காலத்தில் இந்தச் சிறப்புரிமை மற்ற இருவருக்கு வழங்கப்பட்டது. பக்திப் பாடல்களைப் பாடுவதைத் தவிர, சிவானந்த விஜயலட்சுமி, இந்திய கலாச்சாரம், நெறிமுறைகள் மற்றும் தத்துவம் பற்றிய விரிவுரைகளை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வழங்குவதிலும் ஈடுபட்டார். காவியத்தின் 15 பதிப்புகளை ஒப்பிட்டு ராமாயணம் பற்றிய சொற்பொழிவுகளை அவர் வழங்குவார். சௌராஷ்டிர துறவி நடனகோபால நாயகியின் கீர்த்தனைகளை பிரபலப்படுத்துவதற்கு அவர் காரணமாக இருந்தார்.

அவர் சௌராஷ்டிராவைச் சேர்ந்தவர் அல்ல என்றாலும், சிவானந்த விஜயலட்சுமி நடனகோபால நாயகி மந்திரின் புதுப்பிப்பைத் தொடங்க தனது வளையல்களை நன்கொடையாக வழங்கினார் என்று திரு.நடனகோபால் கூறுகிறார்.

அவரால் தொடங்கப்பட்ட சம்விட்கலா அறக்கட்டளை, ஆண்டுதோறும் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் மொத்த வருவாயில் ஒரு சதவீதத்தை வைத்து பல தொண்டுப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறது.

அவரது பாடல்கள், சொற்பொழிவுகள் மற்றும் புத்தகங்களை டிஜிட்டல் மயமாக்க குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

லலிதா சஹஸ்ரநாமத்தின் 100 ஸ்லோகங்களை 100 விதமான ராகங்களில் பாடியிருப்பது இவரது படைப்பின் தனிச்சிறப்பு.


இந்தப் பாடல் பஜன் வகையைச் சேர்ந்தது.  ஒரு ஓடையைப் போல பாடல் முன்னேறிக் கொண்டே இருக்கும்.  பார்ப்போம், எத்தனை பேர் இந்தப் பாடலைக் கேட்டிருக்கிறீர்கள் என்று!

அங்கிருக்கும் வரிகள் அப்படியே எடுத்து போட்டிருக்கிறேன். 
 பாடல் வரிகளில் சில மாற்றங்கள் உண்டு. 

கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா
முரளீதரா நந்த சந்த்ரா - ஹரே
மதுசூதனா கோகுலேந்திரா
எங்கள் கோலாகலம் கண்ட ப்ருந்தாவனா
நந்த கோபிஜனா போதிசந்த்ரா (கோவிந்த)

காயத்தினை நொந்து கர்மம் கசிந்தபின்
கதியினை தேடத்தகாதே
அதைக் கருத்தினில் கொள்ளப் புகாதே
வெறும் காலத்தினைச் சொல்லி நேரத்தில்
பாதியை கனவென்றுவிட்டு விடாதே (கோவிந்த)

கண்ணால் அவன் உருநாடு - இரு
கண்ணால் அவன் உருநாடு - நல்ல
பண்ணால் அவன் புகழ்நாடு - இரு
கையாலே தாளங்கள் போடு - இரு
காலால் ஆடஒன்றி ஆடு - அந்த
காலன் வந்தால் என்ன நேரில் அவன்
கையில் தாளத்தைக் கொண்டு போய் போடு (கோவிந்த)

நித்யம் அநித்யம் பரத்வம் வசித்வம்
என்றென்றும் புரியாது போபோ
நேரம் எனக்கேது இப்போ
எங்கள் நீலநிறக் கண்ணன் நாமத்தைப்
பாடிடும் ஆனந்தத்திற்கீடில்லை இப்போ
நேரந்தரும் என்று சொல்லு இந்த
நெஞ்சில் அவன் உருகொள்ளு இன்னும்
கூட ஒரு தரம் சொல்லு பலகோடி பழவினை தள்ளு
கோடி கொடுத்தாலும்
பொன்பல கோடி கொடுத்தாலும் பாடும்
பிறவிகள் கூடக் கிடைக்குமோ சொல்லு (கோவிந்த)

பாடக் கிடைத்த நா ஒன்று தாளம்
போடக் கிடைத்த கை இரண்டு
இன்னும் கூடும் கிரணங்கள் மூன்று
வேதம் கோடி எனப்படும் நான்கு வேதம் நான்கு
இந்த குற்றமற்ற சுகம் மற்றவர்க்குச்
சொன்னால் கொள்ளை தான் போகாதே
ஐந்து புலன் ஐந்து (கோவிந்த)

கையில் கிடைத்திட்ட கன்னல்கனிச்
சாற்றை மெய்யே சுடைக்கப்படாதே
அதை கருத்தினில் கொள்ளப் புகாதே
வெறும் காலங்கள் கோளங்கள் அவை
இவை என்று சொல்லி
காலனின் வசப்படாதே - கொடும்
காலனின் வசப்படாதே (கோவிந்த)

பச்சை நிறம் பட்டமேனி தரங்கண்டு
பாடி கிடைந்திட்ட போதே
நம்மை பழவினை ஒன்றும் செய்யாதே
இங்கு பண்ணின புண்ணியம் திண்ணம்
பலித்திட பாடிட வரும் தப்பாதே (கோவிந்த)

காணக்கிடைக்காத தங்கம் - கண்ணன்
காணக் கிடைக்காத தங்கம் - இங்கு
கண்டு களிப்பது சத்தங்கம்
இங்கு வேண்டிய அருள் பொங்கும்
நிகரில்லை என்றெங்கும் தங்கும்
கோணக் கோணச் சொல்லி கோவிந்தா
என்றாலும் கூட அருள் தானே பொங்கும் (கோவிந்த)

பாடும் சுகம் ஒன்று போலே - இந்த
பாரில் இல்லை ஆதலாலே
நாடறியச் சொல்லு மேலே
நாமணக்க பாடும் போலே
கூட கலந்திட்ட ஹாசம் பறந்திடும்
கோலாகலத்துக் கப்பாலே (கோவிந்த)


=============================================================================================

இதோ எந்தன் தெய்வம். 1972 ல் வெளியான படம்.  A C திருலோக்சந்தர் இயக்கத்தில் மேஜர் சுந்தர்ராஜன், முத்துராமன், நாகேஷ், விஜயா நடித்திருக்கிறார்கள்.  கண்ணதாசன் பாடல்களுக்கு எம் எஸ் விஸ்வநாதன் இசை.

இந்தத் திரைப்படத்தில் SPB பாடல் ஒன்றும் உண்டு.  அதைப் பின்னர் ஒருநாள் பகிர்வேன்.

இன்று இதே படத்தில் அமைந்துள்ள TMS பாடிய அற்புதமான தத்துவ பாடல் ஒன்று. 

சிறையில் பழக்கமான நண்பனின் மனைவியை அவன் வேண்டுகோளின் பேரில் பார்க்கச் சென்ற இடத்தில், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவனே கணவனாக நடிக்க வேண்டிய நிலை.  சூழ்நிலைக் கைதியாய் பல கசப்பான அனுபவங்கள்..  குழந்தையின் கேள்விக்கு பதில் சொல்வதாய் பாடல் காட்சி.

திரைப்படக் காட்சி என்ன தெளிவாக இருக்கிறது, பாருங்கள்.  சில படங்களில்தான் இந்தத்தெளிவு காலம் கடந்தும் நிற்கும்.  உயர்தர பிலிம் உபயோகித்திருப்பார்கள் போல.. 

தானே முளைத்தமரம் தனியாக வளர்ந்த மரம் 
தானே முளைத்த மரம் தனியாக வளர்ந்த மரம்
ஏன் முளைத்த தென்றாயோ
என் செல்வமே எனக்கே தெரியாதம்மா
தானே முளைத்த மரம் தனியாக வளர்ந்த மரம்
ஏன் முளைத்த தென்றாயோ
என் செல்வமே எனக்கே தெரியாதம்மா

ஆசையென்னும் காட்டுக்குள்ளே பாதிவழி போனவர்கள்
ஆசையென்னும் காட்டுக்குள்ளே பாதிவழி போனவர்கள்
தான் செய்த பாவம் அம்மா என் செல்வமே
நான் செய்த பாவமில்லை
பால் குடித்த பாசமில்லை பள்ளி சென்ற பாடமில்லை
பால் குடித்த பாசமில்ல பள்ளி சென்ற பாடமில்லை
ஊருக்கு நான் யாரம்மா என் செல்வமே
உறவுக்கு நீ யாரம்மா

கல்லுக்கும் நெஞ்சம் உண்டு கண் உண்டு கண்ணீர் உண்டு
கல்லுக்கும் நெஞ்சம் உண்டு கண் உண்டு கண்ணீர் உண்டு
சொன்னவள் நீ தானம்மா
என் தெய்வத்தை உன்னிடம் கண்டேனம்மா
தொட்டிலில் வாழ்ந்த பிள்ளை தொட்டிலில் வாழ்ந்ததில்லை
தொட்டிலில் வாழ்ந்த பிள்ளை தொட்டிலில் வாழ்ந்ததில்லை
அப்பனென்ன்று அழைத்தாய் அம்மா
அதில் என் கற்பனை வளர்த்தாயம்மா

அன்பென்றும் ஆசையென்றும்
பண்பெண்றும் பாசமென்றும்
சொன்னதைக் கேட்டேனம்மா
அதை நான் சொர்க்கத்தில் காண்பேனம்மா
சொர்க்கத்தில் காண்பேனம்மா

தானே முளைத்த மரம் தனியாக வளர்ந்த மரம்
ஏன் முளைத்த தென்றாயோ என் செல்வமே
எனக்கே தெரியாதம்மா
ஆரி... ஆரரோ.., ஆரி ஆரி…ரோ
ஆரிஆரி…ரோ... ஆரிஆரி…ரோ

79 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமைய வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம்.
    ஆஹா.. வெள்ளி என்றால் சினிமா பாடல் தான் என்றில்லாமல் அவ்வப்போது மாற்று ரசனைகளைப் பகிர்வதற்கு நன்றி.
    சிவானந்த விஜயலஷ்மி அவர்கள் பற்றிய குறிப்பும் அவர் குரல் வளத்தைப் பகிர்ந்து கொண்டதும் பிரமாதம். அவரது கம்ப ராமாயண சொற்பொழிவுகளை ஆர்வத்துடன் கேட்டிருக்கிறேன். இந்தத் தலைமுறைக்கு அவரது ஆற்றல்களை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்ச காலமாகவே இந்த வழக்கம் தொடர்கிறது ஜீவி ஸார். பழைய வெள்ளி பதிவுகளை பாருங்கள்.

      நீக்கு
    2. அவ்வப்போது இப்படிப் பகிர்வதை அறிந்திருக்கிறேன்.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய இருபாடல்களும் அருமை. அதன் விளக்கங்களும் நன்றாக உள்ளது. இரு பாடல்களும் கேட்ட நினைவு உள்ளது. ஆனால் "அடிக்கடி" என்ற வார்த்தையை என்னால் சொல்ல இயலவில்லை

    இரண்டாவது பாடல் இடம் பெற்ற திரைப்படம் என்னவென்று தெரியவில்லை. பாடல் காட்சி நீங்கள் சொல்வது போல் தெளிவாகத்தான் உள்ளது. பிறகு இரண்டு பாடல்களையும் முழுமையாக கேட்டு விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது என்ன படம் என்பதும் சஸ்பென்ஸ் போல! :)

      நீக்கு
    2. இதோ எந்தன் தெய்வம். படத்தின் பெயரை பிறகு காலை ஏழரை மணிக்கு சேர்த்தேன்.

      நீக்கு
    3. நன்றி கமலா அக்கா ஏற்கனவே கோமதி அக்கா சொல்லி இருக்கும் வண்ணம் இந்த பாடல்கள் இரண்டும் அடிக்கடி கேட்டிருக்க வாய்ப்பில்லை இந்த முதல் பாடலை முன்பு பல நாட்கள் தேடி அலைந்திருக்கிறேன் இதுவும் கோமதி அக்கா சொல்லிருப்பது போல கோவிந்த பாடலையும் அம்ப லலிதே இரண்டு மட்டுமல்லாமல் வேறு சில பாடல்களும் கிடைத்திருக்கின்றன ஒவ்வொன்றாய் பகிர எண்ணம்

      நீக்கு
  4. மங்கல வெள்ளி..

    அன்பின்
    வணக்கங்களுடன்

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  5. வெள்ளியின் விடியல் என்றால் வேறு அர்த்தம் வந்து விடுமே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'விடியல்' என்கிற வார்த்தை காப்பிரைட் உடையது!

      நீக்கு
    2. அது தெரியாது! ஆனால் ‘விடியல்’ ஒரு சாராருக்கே சொந்தம்.. அவர்களுக்கே விடியும்!

      நீக்கு
    3. விடியல் என்கிற வார்த்தையே இப்போது கேலிக்கூத்தாகிவிட்டது!

      நீக்கு
  6. ஸ்ரீமதி சிவானந்த விஜயலக்ஷ்மி அவர்களைப் பற்றிய விவரங்கள் நன்று..

    கோவிந்த கோவிந்த - எனும் இந்தப் பாடலை பலமுறை கேட்டிருக்கின்றேன்...

    முதல் கண்ணி மட்டும் இன்னும் மனதில் உள்ளது...

    பதிலளிநீக்கு
  7. திருச்சி வானொலியில் 70 களில் காலையில் ஒலிபரப்பு செய்வார்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அந்த பழைய ஞாபகங்களால் தானே இப்போது இந்த தனி பாடல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்

      நீக்கு
  8. சிவானந்த விஜயலட்சுமி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். சிறப்பு.

    பதிலளிநீக்கு
  9. இரண்டாவது பாடலைக் கேட்ட நினைவு இல்லை..

    நன்றாகத் தான் இருக்கின்றது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் இந்தப் பாடலைக் கேட்டதில்லை என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது துரை செல்வராஜு சார்.

      நீக்கு
  10. இரண்டு பாடலையும் முதல் முறையாக இன்றுதான் கேட்டேன்.

    சிவானந்த விஜயலட்சுமி பாணியைத்தான் குரல் கொஞ்சம் ஒத்துப்போகிற பெங்களூர் ரமணியம்மா கைக்கொண்டாரோ?

    வித்தியாசமானவைகளைத் தேடி விவரங்களோடு வெளியிடுவதற்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லை தமிழன். முன்பு சிறுவயதில் ரேடியோவில் கேட்ட பக்தி கானங்கள் அவ்வப்போது நினைவுக்கு வருபவற்றை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்

      நீக்கு
  11. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  12. சிவானந்த விஜயலக்ஷ்மி பற்றிச் சொல்ல நிறைய இருக்கு. அம்மாவும் அவரும் ஒரே தெருத் தோழிகள் மற்றும் வகுப்பும் கூட. தானப்பமுதலித் தெருவில் இருந்த முனிசிபல் பள்ளியில் தான் இருவரும் ஒரே வருஷம் ஈஎஸ் எல் சி எழுதித் தேர்ச்சி பெற்றார்கள். அம்மாவுக்கு உடனே கல்யாணம் ஆகிவிட்டது/அதே பதின்மூன்று வயதில். சிவானந்த விஜயலக்ஷ்மியின் வாழ்க்கைப் பாதை மாறி விட்டது. அவரின் கச்சேரி/பஜனைகள்/ப்ரவசனங்கள் நிறையப் பார்த்துக் கேட்டு இருக்கோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் மனைவியின் பெரியம்மா (அம்மாவின் அக்கா ) மீனாக்ஷி என்று பெயர். அவர்களும் தானப்ப முதலித் தெருவில் வசித்தவர். அவரும் சிவானந்த விஜயலஷ்மியின் தோழி. சிவானந்த விஜயலக்ஷ்மி அந்த பதின்ம வயதிலேயே பூணூல் அணிந்திருந்தார் என்ற விவரம் அவர் சொல்லி, என் மாமியாரும் சொல்லியிருக்கிறார்.

      நீக்கு
    2. என் மாமியார் 1933 ல் பிறந்தவர்.

      நீக்கு
    3. ம்ம்ம்ம்ம், பூணூல் அணிந்திருந்ததாக நாங்களும் கேள்விப் பட்டிருக்கோம். கொஞ்சம் இல்லை நிறையவே ஆண்களைக் கேலி செய்வார் என்பதால் ஆண்களில் பலருக்கும்/பெண்களில் பலருக்கும் அவரைப் பிடிக்காது. சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் ஒரு ப்ரவசனத்தின்போது அவர் பேசிய பேச்சுக்களைக் கேட்டவர்கள் கூச்சலிட்டு அவரைப் பேசுவதிலிருந்து நிறுத்தியதாகவும் சொல்லுவார்கள். என் மாமாக்களுக்கு எல்லாம் சுத்தமாய்ப் பிடிக்காது. இத்தனைக்கும் ஒரே தெரு தான்.

      நீக்கு
    4. சிவானந்த விஜயலட்சுமி பற்றிய மேலதிக தகவல்கள் சுவாரஸ்யம் பிளஸ் ஆச்சரியம்! அவர் பூணூல் அணிந்திருப்பார் என்பது மேலும் ஆச்சரியம்.

      நீக்கு
  13. ஸ்ரீமதி சிவானந்த விஜயலக்ஷ்மி அவர்களைப் பற்றி கீதாக்கா அவர்கள் சொல்வார்கள் என்று எழுத நினைத்திருந்தேன்..

    அவர்கள் துறவு வாழ்க்கையில் இருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன்...

    உண்மையா அக்கா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துறவு வாழ்க்கை வாழ்ந்ததாகத் தெரியவில்லை. கட்டுரை தமிழாக்கம் காணவும்.

      நீக்கு
    2. அப்படி எல்லாம் துறவு வாழ்க்கை வாழ்ந்ததாகத் தெரியலை. எங்களுக்கு எண்பதுகளுக்குப் பின்னர் மதுரையை விட்டு எல்லோரும் வெளியே வந்து விட்டதால் தொடர்பும் இல்லை.

      நீக்கு
  14. முதல் பஜனைப் பாடல் இப்பொழுதுதான் கேட்கிறேன்.

    இரண்டாவது பாடல் கேட்டதுண்டு ஜி

    பதிலளிநீக்கு
  15. முதல் பஜனைப் பாடல் இப்பொழுதுதான் கேட்கிறேன்.

    இரண்டாவது பாடல் கேட்டதுண்டு ஜி

    பதிலளிநீக்கு
  16. பாசமென்றும் - நேசமென்றும் வீடு என்றும் - மனைவி என்றும் -
    நூறு சொந்தம்
    வந்த பின்பும் - தேடுகின்ற
    அமைதி எங்கே...?
    அமைதி எங்கே...?

    இங்கே எங்கே என்றால், இரண்டாவது பாடலில், சொர்க்கத்தில் காணலாம் என்கிறது...!

    முருகா என்ன இதெல்லாம்...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது வேறு பாத்திரங்களுக்காக வேறு படங்களில் எழுதப்பட்ட பாடல், இது வேறு இல்லையா டிடி?

      நீக்கு
  17. சிவானந்த விஜயலக்ஷ்மி! ஆஹா! எத்தனைக் காலங்கழிந்தபின் இன்று கேட்டது அவர் குரல். ஆனந்தமாகப் பாடியிருக்கிறார். ‘சிவானந்த’ என்கிற பெயர்க்காரணம் இப்போதுதான் அறிகிறேன்.
    அவரைப்பற்றிய கட்டுரையை மொழியாக்கம் செய்து தமிழிலே தந்திருக்கலாம். இன்னும் பலரைப் போய்ச் சேர்ந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மொழியாக்கம் செய்து, இணைத்துள்ளேன். யோசனைக்கு நன்றி.

      நீக்கு
    2. மொழியாக்கம் செய்து போட சற்றே சோம்பேறித்தனம் பட்டு இருந்தேன். அதை செய்ததற்கு நன்றி கே ஜி ஜி!

      நீக்கு
  18. இரு பாடல்களுமே இப்போதுதான் கேட்கிறேன் ஸ்ரீராம். சிவானந்த விஜயலக்ஷ்மி பற்றி இப்போதுதான் அறிகிறேன்.
    ஆனால் அந்த பஜனைப்பாடல் எங்கள் குடும்பத்தில் ஒரு பஜனைக் குழு இருக்கிறது அவர்கள் பாடுவார்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  19. பஜனைப் பாடல் ரொம்ப நல்லாருக்கு. குரல் அருமை. வேறு யாருடைய குரலையோ நினைவுபடுத்துகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  20. // கையில் கிடைத்திட்ட கன்னல் கனிச்
    சாற்றை மெய்யே சுடைக்கப்படாதே!..//

    சுடைக்கப்படாதே - என்பது

    சுவைக்கப்படாதே - ர்ன்று வரக்கூடுமோ!!..

    பதிலளிநீக்கு
  21. ..மெய்யாய் சுவைக்கப்படாதோ.. என்று வருகிறது பாட்டில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த இடம் மட்டுமல்ல வேறு பல இடங்களும் தவறாக எழுதப்பட்டிருப்பதோடு, இடம் மாறியும் எழுதப்பட்டுள்ளன. சாதாரணமாக எனக்கு நினைவில் இல்லாத பாடல்களை கேட்டு டைப் செய்து விடுவேன். இந்த பாடலை கேட்டு டைப் செய்ய எனக்கு நேரமில்லை. அங்கு இணையத்தில் கிடைத்ததை அப்படியே எடுத்து பகிர்ந்து விட்டேன். அதைத்தான் அதற்கு மேலே குறித்தும் இருக்கிறேன்.

      நீக்கு
  22. Sivananda pratidwani : சிவானந்த ப்ரதித்வனி (ப்ரதி த்வனி )

    பதிலளிநீக்கு
  23. முதல் பாடல் வெகு காலம் தேடி இருக்கிறேன். இப்போது யாரோ பதிவு ஏற்றி இருக்கிறார்கள்.
    என் பதின்ம வயது பதிவில் , மற்றொரு பதிவில் இந்த பாட்டை பற்றி சொல்லி இருக்கிறேன். என் அக்கா கல்யாணத்திற்கு இவர் பாடல்களை ஒலிக்க வைத்தார்கள் அப்பா என்று சொல்லி இருக்கிறேன்.
    அவர் தொடர் சொற்பொழிவுகள் செய்யும் போது இந்த பாடலை பாடி நம்மை பாட சொல்லுவார் என்று சொல்லி இருந்தேன்.
    நீங்களும் இந்த பாடலை தேடுவதாக சொல்லி இருந்தீர்கள்.
    இன்று பாடல் வரி பகிர்வுக்கும், பாடலுக்கும் நன்றி. நன்றி.

    இவரின் கனகதாரா ஸ்தோத்ரம், லலிதா சஹஸ்ரநாமம் கேஸட் எங்களுக்கு என் தம்பி எங்கள் திருமண நாளுக்கு பரிசு கொடுத்தான்.
    காலையில் வானொலியில் முன்பு அடிக்கடி வைக்கும் பாடல்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதி அக்கா! நானும் பல காலம் தேடி இருக்கிறேன். நீங்களும் அதை எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள். இதைப்போன்ற வேறு சில பாடல்களும் முன்பு தேடியவை, கிடைக்காமல் இருந்தவை இப்போது கிடைக்கின்றன. அவற்றில் சிலவற்றை வெளியிட்டும் இருக்கிறேன் பக்தி பாடல்கள் மட்டும் என்று இல்லை சினிமா பாடல்களும்தான்.

      நீக்கு
  24. அடுத்த படம் மேஜர் சுந்திர ராஜன் நாடகம் அவர் குமாரி பத்மினியுடன் நடித்து இருந்தார். (1970, அல்லது 71 ல் என்று நினைக்கிறேன்) தேனியில் இருக்கும் போது பார்த்து இருக்கிறேன்.
    அப்புறம்தான் படமாக்க பட்டது.
    பாடல் நல்ல பாடல்.
    TMS பாடிய அற்புதமான தத்துவ பாடல் இந்த பாடலை முன்பு பகிர்ந்த போதும் சொல்லி இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
    இந்த வாரம் பகிர்ந்த இரண்டு பாடல்களும் என் சிறு வயது நினைவுகளை கொண்டு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். நாடகத்திலிருந்து படமாக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. இதோ எந்தன் தெய்வம் என்கிற படம். சுந்தர்ராஜன் முத்துராமன் நடித்திருந்தாலும் சுந்தர்ராஜனுக்கு முக்கிய பாத்திரம்.

      நீக்கு
  25. சிவானந்த விஜயலட்சுமி அவர்கள் தன் சொற்பொழிவைத் தொடங்கும் முன் ஒரு பாட்டு பாடுவார்கள். ’கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா ’எனப் பாட்டு பாடுவார்கள் அதில் ”பாடக்கிடைத்த வாய் ஒன்று,தாளம் போடக்கிடைத்த கை ரெண்டு,”இரு கையாலே தாளங்கள் போடு;” என்று ஐந்து புலன்கள் செய்யும் வேலைகளைச் சொல்லிப் பாடுவார்கள். இந்தப் பிறவியில் பாட வாய் கிடைத்திருக்கும்போது, பாடாமல் இருக்கலாமா ? என அர்த்தம் தோன்றும் பாடலைப் பாடுவார்கள். அந்த பாட்டு முழுமையாய் தெரிந்தவர்கள் சொல்லுங்கள். நான் சிறுமியாய் இருக்கும் போது கேட்டது. அந்த பாடல் வலைத்தளத்தில் தேடியும் கிடைக்க வில்லை.//

    மார்கழி மாத நினைவுகள் பதிவில் இப்படி கேட்டு இருந்தேன்.

    ஸ்ரீராம்.23 டிசம்பர், 2014 அன்று பிற்பகல் 9:48
    மார்கழியில் குளிச்சுப்பாரு குளிரு பழகிப்போகும்' பாடல் கேட்டிருக்கிறீர்களா!

    சிவானந்த விஜயலக்ஷ்மியின் அந்தப் பாடல் நானும் ரொம்ப நாளாய்த் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைக்கவில்லை. இதுவும் 'அம்ப லலிதே... மாம்பாலய பரம் சிவம் லலிதே' பாடலும்!

    கோலம் போலத் தெரியாமல் படம் போலத் தெரிகிறது.

    கோலங்களும், புகைப்படங்களும் சிறப்பு.//

    நீங்கள் போட்ட பின்னூட்டம் ஸ்ரீராம். அடுத்து
    'அம்ப லலிதே... மாம்பாலய பரம் சிவம் லலிதே' பாடலையும் தேடி போடுங்கள்.


    https://mathysblog.blogspot.com/2014/12/blog-post_23.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்பல லலிதே பாடலும் எடுத்து வைத்திருக்கிறேன் அக்கா. அதை அடுத்த வாரம் பகிர்கிறேன். பழையவற்றை எடுத்து போட்டு இருப்பதற்கும் நன்றி.

      நீக்கு
  26. ஸ்ரீராம்.17 டிசம்பர், 2019 அன்று பிற்பகல் 2:00

    இன்று எங்கள் வீட்டில்பாஸ் வெண்பொங்கலும், சர்க்கரைப்பொங்கலும் செய்திருந்தார்.
    கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா பாடலை நானும் பல நாட்களாகத் தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்த பாடில்லை.

    பாடக் கிடைத்த நா ஒன்று
    தாளம்போடக் கிடைத்த கை இரண்டு
    இன்னும் கூடும் கிரணங்கள் மூன்று
    வேதம் கோடி எனப்படும் நான்கு
    வேதம் நான்கு
    இந்த குற்றமற்ற சுகம் மற்றவர்க்குச் சொன்னால்
    கொள்ளை தான் போகாதே ஐந்து புலன் ஐந்து (கோவிந்த)

    இதை இணையத்திலிருந்து எடுத்தேன்! //

    https://mathysblog.blogspot.com/2019/12/blog-post_17.html

    2019ல் மீண்டும் மார்கழி நிகழ்வுகள் பதிவில் கேட்ட போது கொஞ்சம் வரிகளை தேடி கொடுத்தீர்கள்.
    இப்போது முழு பாடலும் தேடி கொடுத்தற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா. ஆனாலும் கொடுத்திருக்கும் வரிகளில் நிறைய தவறுகள் இருக்கின்றன. பாடலைக் கேட்டு மறுபடியும் எழுதி கொண்டால் தான் உண்டு!

      நீக்கு
  27. 2011ல் போட்ட மார்கழி பதிவிலும் கேட்டி இருக்கிறேன் எல்லோரிடமும் கேட்டு சொல்கிறேன் என்று ஜீவி சார் கூட சொல்லி இருக்கிறார்.
    https://mathysblog.blogspot.com/2011/12/blog-post_17.html

    //ஜீவி21 டிசம்பர், 2011 அன்று பிற்பகல் 6:11
    தலைவாசல் கோலமாய் பதிவின் தொடக்கத்திலேயே பளபளக்கும் கோலம் மேலும் படிக்க மங்களகரமாய் உள்ளிழுத்தது. இசை நோய்க்கான மருந்தாகவும் செயல்படுகிறது என்பதைப் படித்த பொழுது சமீப காலங்களில் அது பற்றி நான் படித்துக் கொண்டிருக்கும் பல செய்திகள் நினைவுக்கு வந்தன.

    சிவானந்த விஜயலெஷ்மி அம்மை யாரின் பக்திச் சொற்பொழிவு களைக் கேட்டிருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வரிக்களுக்கான அவர்கள் பாடும் பாடல் சட்டென்று நினைவுக்கு வரவில்லை. நண்பர்களிடம் கேட்டோ, வேறு வகைகளில் முயற்சித்தோ தங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.//


    அழகாக, அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள். ஈடுபாட்டோடு எதையும் செய்யும் உங்கள் பதிவுகளைப் படிப்பது மனத்திற்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது. மிக்க நன்றி, கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பரபரப்பும், சந்தோஷமும் எங்களையும் தொற்றிக் கொள்கிறது கோமதி அக்கா.

      நீக்கு
    2. என் பழைய நானே மறந்து வுட்ட நினைவுகளை ஞாபகத்தோடு நினைவு கொண்டதற்கு நன்றி, கோமதிம்மா. அப்புறம்
      கேட்டுச் சொன்னேனா என்று நினைவில்லை. ஆனால் இசை நோய்க்கு மருந்தாகும் என்ற என் மட்ட ஆய்வு 'இரு ட்டுக்கு இடமில்லை' என்ற தலைப்பில் நாவல் ஒன்றை நான் எழுத தூண்டு கோலானது.
      தங்கள் நினைவுகளுக்கு நன்றி.

      நீக்கு
  28. அன்பின் அனைவருக்கும் வணக்கம்.

    வெள்ளியின் இரு பாடல்களும் மிகவும் இதமாகப்
    பதிகின்றன காதில்.
    பல காலங்களுக்குப் பிறகு திருமதி சிவானந்த விஜயலக்ஷ்மியைக்
    கேட்கிறேன்.

    மதுரையில் கூடலழகர் கோவிலில்
    அவருடைய மூன்று ராமாயண ஒப்பீட்டுக்
    காலாட்சேபத்தைக் கேட்டிருக்கிறேன்.
    மிக மிகக் கம்பீரமான குரலில் அவர் சொல்வது
    மனதில் அப்படியே பதியும்.
    இனிய நினைவலைகளுக்கும் அமிர்தமான பாடல் பதிவுக்கும்
    மனம் நிறை நன்றி ஸ்ரீராம்.
    மனம் ஒன்றிக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். எல்லா நாட்களும் இனிமையாகட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா... நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை இங்கு காண்பதில் மிகவும் மகிழ்ச்சி... பழைய உடல் நலத்தோடும் தெம்போடும் மறுபடியும் பதிவுகளில் வலம் வர பிரார்த்திக்கிறேன்.

      நீக்கு
  29. பதிவிட்ட ஸ்ரீ கௌதமன் ஜிக்கும், பல செய்திகள் சொன்ன அன்புத் தங்கை
    கோமதிக்கும், மதுரை நினைவுகளைக்
    கொடுக்கும் அன்பு கீதாமாவுக்கும் ஏகப்பட்ட நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவிட்டது ஸ்ரீராம் ! அதில் உள்ள ஆங்கிலத்தை தமிழில் மொழிபெயர்த்து உதவியது கே ஜி! மேலதிக தகவல்கள் தந்தது கீதா அக்கா! நன்றி அம்மா

      நீக்கு
  30. அடுத்த பாடலை இது வரை நான் கேட்டதில்லை. டி எம் எஸ் குரலும்
    மேஜரின் நடிப்பும் அதி அற்புதம்.
    பழைய கறுப்பு வெள்ளைப் படங்களில்
    நடிகர்களின் முக பாவம் துல்லியமாகத் தெரியும் என்று எனக்குத் தோன்றும்.
    மிக மிக நன்றி மா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் இந்தப் பாடலைக் கேட்டதில்லை என்பது ஆச்சரியம். மிகவும் உருக்கமான பாடல். கீதாரங்கள் அது என்ன ராகம் என்று சொல்லலாம் .

      நீக்கு
  31. வணக்கம் சகோதரரே

    ஆம் இந்த முதல் பாடல் நான் அவ்வளவாக கேட்டதில்லை. ஆனால் பாடல் வெகு அருமை. அப்போது கேட்டிருந்தாலும் விளங்காத அர்த்தங்கள் இப்போது மெய்சிலிர்க்க வைக்கின்றன. ஆனால் இவரின் லலிதா சகஸ்ரநாமம் ஆடியோ கேசட் நவராத்திரியில் எப்போதும் கேட்டிருக்கிறேன்.

    இரண்டாவதாக வரும் திரைப்படபாடல் ஒன்றிரண்டு முறை கேட்டுள்ளேன். படத்தின் பெயர் தந்ததற்கு நன்றி. இதில் "இதோ எந்தன் தெய்வம்" என்றொரு படத்தலைப்பிலேயே பாடல் வரும். அதுதான் எஸ். பி. பி பாடியதோ? அதையும் ஒரு நாள் பகிருங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லும் பாடல் பாபு திரைப்படத்தில் டி எம் எஸ் பாடியது.  இதோ எந்தன் தெய்வம் படத்தில் எஸ் பி பி பாடல் 'அம்பிகை நேரில் வந்தாள்;

      நீக்கு
    2. ஓ.. சரி. சரி இந்தப்பாடலும் கேட்டிருக்கிறேன். நன்றி.

      நீக்கு
  32. நல்லதோர் பகிர்வு மீண்டும் நினைவூட்ட. இரு பாடல்களுமே கேட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!