செவ்வாய், 9 மே, 2023

சிறுகதை : சத்தங்கள் 1/2 - துரை செல்வராஜூ


நியூஸ் ரூம்  

"புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், எளிமையான மனிதரை போல நாடகமாடுகிறார். அவரது பங்களாவை புதுப்பிபுதுப்பிக்க செலவிடப்பட்டது, 45 கோடி ரூபாய் அல்ல; 171 கோடி ரூபாய்' என, விபரங்களுடன் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது...."

யோவ்...  45 கோடியில் வீடு கட்டுபவர் எளிமையான மனிதரா?

ஓ..   இதுதான் பணம் வெள்ளமாகப் பாய்ந்தது என்பார்களே அதுவா?
==========================================================================================================


சத்தங்கள் 1/2

துரை செல்வராஜூ 

*** *** 

" தளக்.. " - என்ற சத்தத்துடன் மேசையின் மீது இலை விரிக்கப்பட்டது..

சாப்பிடுவதற்காக உட்கார்ந்திருந்த அழகப்பனுக்குப் புரிந்து விட்டது.. சாரதாவின் மீது கோபம்  - கடுங்கோபம் வந்து இறங்கி இருக்கின்றது..

அதற்குக் காரணம் வேறொன்றும் இல்லை.  வீட்டை வாடகைக்கு விட்ட பிரச்னை தான்..

தனித்தனி.. ஆனாலும் கூட்டுக் குடியிருப்பு..  இந்தப் பக்கம் நான்கு அந்தப் பக்கம் நான்கு என்று எதிர் எதிராக வீடுகள்.. இவற்றில் இந்தப் பக்கம் - முதல் இரண்டு வீடுகளும் ஒன்றாகி வீட்டுக்காரரின் வீடு - அதாவது அவர்களுடையது என்றாகி விட்டன.. 

மீதமுள்ள வீடுகளில் ஒன்றைத் தவிர மற்றவைகளில் குடித்தனக் காரர்கள்.. எல்லாரும் பத்து வருடங்களாக இருப்பவர்கள்.. வீடுகள் பழைமையானவை என்றாலும் வசதியானவை.. அந்த காலத்து உத்தரங்கள்.. காட்டு மூங்கில் சட்டங்கள்.. சதுர ஒட்டுக்கல்லும்  நாட்டு ஓடுகளும்.. ஒன்னே காலடி சுவர்.. சுண்ணாம்புக் காரை கட்டுமானம்.. கருங்கல் படிக்கட்டும் சிமெண்ட் தளமும்.. எந்நேரமும் வீடு ஜில் என்று இருக்கும்.. வீட்டுக்கு உள்ளேயே உள் முற்றம்.. பின்னால் இருபது சதுரத்துக்குப் புழக்கடை .. குளியலறையும் மற்றதும்.. தண்ணீர் தாராளம்.. எல்லா வீடுகளுக்கும் சேர்ந்த மாதிரி வெளியே பெரிய இரும்புக் கதவு.. பாதுகாப்பு..

பேருந்து நிலையத்திலிருந்து சற்று தூரம்.. என்றாலும் நகரப் பேருந்துகள் ஒன்றிரண்டு இந்த வழியாகப் போவதும் வருவதுமாக..

அருகிலேயே முருகன் கோயில், கடைத் தெரு, காய்கறி மார்க்கெட், சினிமா தியேட்டர்.. ரயிலடிக்கு மட்டும் டவுன் பஸ் ஏறிப் போகணும்..
நல்ல வசதி.. 

அதனால இங்கே குடி வந்த எவருக்கும் இதை விட்டு மாறிப் போவதற்குத் தோன்றாது..

அப்படியும் அந்தக் கடைசி வீடு  காலியாகி ஆறேழு மாசம் ஆகின்றது.. இன்னும் யாரும் வந்து எட்டிப் பார்க்கவில்லை..

அதிலிருந்து தான் பிரச்னை...  மாத வாடகை மூவாயிரம்.. நல்ல தண்ணிக்கு தனியா ஐநூறு.. அட்வான்ஸ் மூனு மாத வாடகையும் ஆயிரம் ரூபாயும்.. மொத்தமாக பத்தாயிரம்..

பழைய நடைமுறையை மாற்ற வேண்டும்.. அந்த வீட்டை வாடகைக்கு விடுவதில் இருந்து  எல்லா வீடுகளுக்கும் வாடகையை ஏற்றி கூடுதல்
முன்பணமும் வாங்க வேண்டும் என்பது சாரதாவின் திட்டம்.. 

அதெல்லாம் வேண்டாம்.. இருக்கறது போதும்.. சொந்த வீடு இல்லாதவங்க நல்லா இருந்துட்டுப் போகட்டும் - என்பது அழகப்பனின் ஆசை..

சாரதா இந்த வீடுகளோடு அழகப்பனுக்கு வாழ்க்கைப்பட்டு வந்தவள்  என்பதால் அழகப்பனின் குரல் சற்று இறக்கமாகத் தான் இருக்கும்..

அழகப்பனும் சும்மா இல்லை.. மார்க்கெட்டில் பெருந்தொகை ஒன்றை காலையில் தண்டலுக்கு விட்டு விட்டு சாயங்காலம் ஆதாயத்துடன் கொண்டு வரும் நியாயமான வசூல் ராஜா..  தண்டல் எனப்படுவது யாதெனின் காலையில் ஆயிரத்துக்கு நூறு குறைத்துக் கொடுத்து விட்டு சாயங்காலம் திரும்பப் பெறுவது ஆயிரம் ரூபாய்.. நேர்மையான மனுசங்களுக்கு - நோக்கம் போல..

விடிகாலை.. ல கை நீட்டி காசு வாங்கிக்கிட்டு கமிஷன் மண்டிக்கு ஓடி - தக்காளி, வெங்காயம், வெண்டைக் காய்,  சுண்டைக்காய், கத்தரிக்காய், வாழைப்பூ , கறிவேப்பிலை, கொத்தமல்லி - ன்னு பத்து வகையோட நடை பாதை ஓரமா கடைய விரித்துப் போட்டால் உச்சிப் பொழுதுக்குள் ஆதாயத்தோட கைக்காசு வந்து சேர்ந்து விடும்.. எல்லாவற்றுக்கும் காரணம் அழகப்பனின் நல்ல மனசும் கைராசியும் தான் என்பார்கள் நடைபாதை வியாபாரிகள்..

இருந்தாலும், காலமும் காட்சியும் மாறிப் போனது.. கொடுக்கல் வாங்கலில் அடாவடிப் பேர்வழிகள் அதிகமாகி விட்டார்கள்.. எல்லாரும் செய்யலாம்..
எல்லாவற்றையும் செய்யலாம் என்று ஆகி விட்டதால் தொழில் தர்மம் என்ற ஒன்று இல்லாமல் போய் விட்டது.. அதனால் இந்த மாதிரி கொடுத்து வாங்கும் வேலை எல்லாம் வேண்டாம் என்று அதை விட்டு விட்டார் அழகப்பன்..

இப்படியாக -  

ரொம்பவும் நல்ல மனசு என்பதால் நேற்று காலையில் வந்து பார்த்தவர்களுக்கு பழைய வாடகைக்கே வீட்டை  விட்டு விட்டார்.. வந்தவர்களும் முன் பணத்தை அப்போதே கொடுத்து விட்டு பால் காய்ச்சி விட்டார்கள்.. 

நேற்றைய தினம் தூரத்துச் சொந்தத்தில் கல்யாணம் என்று - வெளியூருக்குப் போய் விட்டு ராத்திரி எட்டு மணிக்குத் தான் சாரதா
வந்தாள்.. ஆனதால் இன்றைக்குப் பொழுது விடிந்ததும் அடுக்களையில் இருந்து பூதம் புறப்பட்டு விட்டது..

அழகப்பன் சொன்ன விவரங்களை வைத்து கூட்டிக் கழித்துப் பார்த்ததில் சாரதா மனதில் சில விஷயங்கள் பிடிபட்டன... வாடகைத் தொகையை ஏற்ற வில்லை.. போனால் போகட்டும்.. புருசன் பெண்டாட்டி ரெண்டு பேருமே மாநிறம்.. அவர் காய்கறி மண்டியில் கணக்கு எழுதுறவர்.. அப்படியானால்  கண்டிப்பாக முகம் தெரிந்திருக்கும்.. அவர்களுக்கு ரெண்டு பசங்கள்.. அளவான இல்லறம் போல் இருக்கிறது..

இப்படி நினைத்ததும் சாரதா முகத்தில் மெல்லிய சிரிப்பு..

பசங்கள் ரெண்டு பேருக்குமே அண்ணாச்சி மளிகை குடோனில் வேலை.. என்ன பெரிய வேலை?.. அதிக பட்சமாக மூட்டை தூக்கிப் போட்டுட்டு அதுகளுக்கு நம்பர் போடுவதாக இருக்கும்.. 

அண்ணாச்சி கடைகளில் அண்ணாச்சி ஆட்களுக்கே வேலை.. என்ன கொடுமை இது சாமிநாதா!?.. எங்கே போனாலும் இதே கதை தானா!.. அவனுக்கு அவன் விட்டுக் கொடுக்க மாட்டேன்.. என்கிறான்.. இது கிடக்கட்டும்.. 

இங்கே குடியிருப்பில் - வாத்தியார், பேங்க் கிளார்க், தாலுகா ஆபீஸ் பியூன்.. என்று இருக்கும் போது மளிகைக் கடை ஆட்கள் குடியிருக்க வந்தால் கவுரவம் என்ன ஆகிறது?..  ஒரே ஒரு ஆறுதல்  கடை வியாபாரம்.. என்பதால் நல்ல காய்கறி மளிகை சாமான்களுக்கு கொஞ்சம்  உத்தரவாதம்.. இருந்தாலும்!...

- என்று மனதிற்குள் ஓடிய எண்ணங்களில் இருந்து வெளியே வந்தாள் சாரதா..

" பேச்சு பேச்சோடு இருக்காம யாரைக் கேட்டுக்கிட்டு அட்வான்ஸ் வாங்கினீங்க?.. எதுக்கு இவ்ளோ அவசரம்?..  நாளைக்கு வந்து கொடுங்க.. ன்னு சொல்லி திருப்பி அனுப்ப வேண்டியது தானே..  நான் வந்து விவரமா பேசி வாங்கியிருப்பேனே!.. அவங்களும் இதாண்டா சான்ஸ்.. ன்னு பால் பழம்  காய்ச்சிட்டாங்க!.. "

" பால் மட்டும் தான் காய்ச்சினா..ங்க!.. பழம் இல்லை!.. "

" இதுல எல்லாம் நல்ல விவரம் தான்..  உங்களுக்குக் கொடுத்தாங்களா இல்லையா!.. "

" கொடுத்தாங்க.. பிள்ளையார் கொழுக்கட்டையும் சேர்த்துக் கொடுத்தாங்க!.. "

" இந்தக் காலனியோட ராசியோ என்னவோ!.. வீட்டுக்கு வீடு பிருந்தாவனம் மாதிரி பொம்பளைப் புள்ளைங்க.. அவங்கள விடுங்க.. நம்ம வீட்லயே வயசுக்கு வந்த ரெண்டு புள்ளைங்க.. இவனுங்களோ மளிகைக் கடைப் பசங்க.. அரை டிராயரும் குரங்கு மார்க் பனியனுமா வருவானுங்க.. போவானுங்க.. நல்லாவா இருக்கும்... ஐயா..  நாளைக்கே ஒரு பிரச்னை - அப்படி.. இப்படி.. ன்னு!.. யார் வந்து பதில் சொல்றது?.. நீங்க சொல்வீங்களா!.. சொல்லத் தான் தெரியுமா?.. "

" ம்.. ஹூம்!.. "  அந்தக் காலத்து பாலையா மாதிரி தலையை ஆட்டிய அழகப்பன் மெதுவாகச் சொன்னார்..

" அந்த அம்மா கார்ப்பரேஷன் ஸ்கூல்ல ஹெட் மாஸ்டராம்!.. " 

" என்னது?.. கத்தரிக்கா எடை போடறவர் பெண்டாட்டி கார்ப்பரேஷன் ஸ்கூல்..ல ஹெட் மாஸ்டரா?..  வெளியில யார் கிட்டயும் சொல்லிடாதீங்க.. கடவுளே.. எனக்கு.. ன்னு கொண்டு வந்து சேர்த்தியே!.. "

சாரதாவின் முகத்தில் சிரிப்பு..

" விவரமா கேட்டீங்களா!.. அவங்க  ஸ்கூல்..ல  ஹெட் மாஸ்டரா?.. ஆயா அம்மாவா!.. "

அழகப்பன் குழம்பி விட்டார்..  அப்படியும் இருக்குமோ?.. சந்தேகம் வந்து விட்டது..

" தெரியலை.. சரியா  தெரியலை!.. "

சந்தேகம் தீராத நிலையில் இலையில் நாலைந்து இட்லிகளை வைத்து விட்டுச் சொன்னாள்..

" இன்னிக்கு உங்களுக்கு வெங்காய சாம்பாரும் கிடையாது.. தேங்காய்ச் சட்னியும் கிடையாது.. காரச் சட்னி மட்டும் தான்.. அப்பத்தான் புத்தி வரும்!.."

அடுக்களைக்குள் நுழைந்தாள் சாரதா..

" இந்த காரச் சட்னியாவது கிடைத்ததே!.. " - என்று அழகப்பன் ஆனந்தம் அடைந்தபோது அடுக்களையில் இருந்து பல்வேறு சத்தங்கள்..

" டொண்.. டொண்.. டொடுண்!.. " என்று..

அப்போது அந்த சத்தத்தையும் மீறிய சத்தமாக இரண்டு வாகனங்கள் காலனிக்குள் நுழைந்தன..

[ தொடரும் ]

30 கருத்துகள்:

  1. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
    என்புதோல் போர்த்த உடம்பு..

    வாழ்க தமிழ்.. 

    பதிலளிநீக்கு
  2. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    நோக்க நோக்க
    நொடியில் நோக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரார்த்திப்போம். வாங்க துரை செல்வராஜூ அண்ணா.. வணக்கம்.

      நீக்கு
  3. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தந்திருக்கும் அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் அன்பின் நல்வரவு..

    பதிலளிநீக்கு
  4. இன்று எனது படைப்பினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும்
    அழகான சித்திரத்தால் அலங்கரித்த சித்திரச் செல்வர் திரு.கௌதமன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  5. //நீங்க சொல்வீங்களா ? சொல்லத்தான் தெரியுமா ?//

    அதானேங்கிறேன்...
    தொடர்கிறேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானேங்கிறேன்...
      தொடருங்கள் ஜி..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. இருவருமே நல்லவர்களாகத்தான் தெரிகிறார்கள். கதைக்களம் நன்று. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை அவர்களது வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. ஒருவரை பரவாயில்லாத வாடகைக்கு 30+ ரூ) வைத்திருந்தேன். காலிபண்ணுவான் என்று முன்பு என்னிடம் சொல்லியிருந்த மாத்த்துக்காக இன்னொருவர் வீடு பார்க்க வந்மு 43 தருகிறேன் என்றார். இருப்பவரோ இன்னும் சில மாதங்களாகும், இரண்டு மாத நோட்டீஸ் தருகிறேன் என்றார், வாடகைக்கு வர இருந்தவரைக் கலைத்துவிட்டார். ஏஜென்ட் என்னிடம் புலம்பினார். எனக்கு அவர் நியாயமில்லாமல் நடந்ததாகத் தோன்றியதால், ஏற்கனவே சொன்ன மாத்த்திற்கு அப்புறம் தங்குவதாயிருந்தால் புதிய ஆள் தருகிறேன் என்ற வாடகை தரவேண்டும் எனச் சொன்னேன். அவரும் சம்மதித்துவிட்டார், நான் சொன்னதில் இருந்த நியாயத்தைப் புரிந்துகொண்டு. நான் செய்தது சரியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரி என்றுதான் தோன்றுகிறது.

      நீக்கு
    2. இத்தனை வருட்மும் வாடகை அல்லது ஒத்திக்குத் தான் வீடு..

      ஆனாலும்
      இந்தக் கணக்கு புரியவில்லை..

      நீக்கு
  8. இன்னொரு வீட்டை மிக்க் குறைந்த வாடகைக்கு பலப்பல வருடங்களாக விட்டிருந்தான். சென்ற வருடம் 10 சதம் ஏற்றினேன். பெங்களூரில் வீடு வாடகை இரண்டு மடங்காயிற்று என்பதைப் படித்து, இந்த முறை 15 சதம் ஏற்றிவிட்டேன். புது வாடகை இந்த மாத்த்திலிருந்து. இரண்டு வாடகைதார்ர்களும் நல்ல பணமுடையவர்கள்.

    வாடகைக்கு சரியான ஆட்களும் கிடைப்பதில்லை.

    பஹ்ரைனில் இருந்தபோது சாதா வேலையிலிருந்த பெங்களூரைச் சேர்ந்தவன், தான் 8 வீடுகளோடு ஒரு பில்டிங் கட்டிவிட்டதாயும், வாடகை நல்லா வரும் என்பதால் பென்ஷன் இல்லாத தனக்குப் பிரச்சனையில்லை என்றான். இந்தக் கோணத்தில் நான் முன்பே யோசித்திருக்கலாம் என நினைத்துக்கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியான சாமார்த்தியம் நமக்கு வாய்க்கவில்லை...

      நீக்கு
  9. கதை ஆரம்பமே களை கட்டி விட்டது. சாரதாவும் அப்படி ஒண்ணும் பொல்லாதவளாகத் தெரியலை. அழகப்பனும் மீறிக்கொண்டு செய்பவர் இல்லை. ஆகவே சுமுகமான முடிவாகவே எதிர்பார்க்கிறேன். குறிப்பாய் அந்த இரு பையர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றியக்கா..

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    இன்றைய நீயூஸ் ரூம் பகுதி தேர்வுச் செய்திகள் அருமை. இப்படித்தான் சமீபத்தில் பணம் வானத்திலிருந்து கொட்டியது. ஓடும் பஸ்ஸிலிருந்து பறந்தது. பணத்திற்கும் ஒரே இடத்தில இருப்பது போரடித்து விட்டதோ.? நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்தியறை சிறப்பு..
      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதை நன்றாக உள்ளது. சகோதரர் துரை செல்வராஜ் அவர்களின் எழுத்து நடையல்லவா? அருமையாகத்தான் இருக்கும். பொதுவாக எல்லோருமே நல்லவர்கள்தான்.. மனிதர்களின் மனதின் சுயரூபங்கள் தலை தூக்கும் போது மற்றவர் கண்களில் சிறிது வேறுபாடுகள் வந்து விடுகின்றன.

    வாடகை இருந்த காலங்கள் நினைவுக்குள் வந்து செல்கிறது. இப்போது குழந்தைகள் புண்ணியத்தில் பத்து வருடங்களாக இந்த பிரச்சனைகள் இல்லை. கதையின் அடுத்த நகர்வை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. ///மனித மனதின் சுயரூபங்கள் தலை தூக்கும் போது மற்றவர் கண்களில் சிறிது வேறுபாடுகள் வந்து விடுகின்றன.///

    எல்லாமே இயல்பான வடிவங்கள் தான்..

    அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
    நன்றி..

    பதிலளிநீக்கு
  13. ///மனித மனதின் சுயரூபங்கள் தலை தூக்கும் போது மற்றவர் கண்களில் சிறிது வேறுபாடுகள் வந்து விடுகின்றன.///

    எல்லாம் இயல்பான வடிவங்களே..

    அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  14. அன்பின் கமலா ஹரிஹரன் அவர்களுக்குத் தெரிவித்த பதில் காணவில்லையே!..

    பதிலளிநீக்கு
  15. நல்ல கதை . வாடகை வீட்டு வாழ்க்கை. தொடர்கிறோம்....ஆவலுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி..

      நீக்கு
    2. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!