புதன், 31 மே, 2023

அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் கிடைத்தால் ..

 

சென்ற வாரம் எங்களை யாரும் கேள்வி எதுவும் கேட்கவில்லை. எனவே நாங்கள் சில சிம்பிள் கேள்விகள் கேட்கிறோம். 

1) இதில் எது உங்களுக்கு மிகவும் பிடித்த விஷயம் ? ஏன்? 

a ) வெயில் காலத்தில் நடுவே மழை 

b ) மழை காலத்தில் நடுவே வெயில். 

2) இவற்றிலும் உங்களுக்குப் பிடித்தது & ஏன் : - 

a) வெயில் காலத்தில், A/C போட்டுக்கொண்டு, மின்விசிறியையும் உச்ச வேகத்தில் சுழலவிட்டு, நிம்மதியாகத் தூங்குவது. 

b) குளிர் காலத்தில் ஸ்வெட்டர் + மஃப்ளர் எல்லாம் அணிந்து, கனமான கம்பளியையும், தலையோடு காலாகப் போர்த்திக்கொண்டு தூங்குவது. 

3) யாருமே இல்லாத ஒரு தீவில் ஒரு வார காலம் நீங்கள் மட்டும் சென்று தங்கவேண்டும் என்று ஒரு சுற்றுலா கம்பெனி ஒரு போட்டி வைக்கிறார்கள். சரியான நேரத்தில் உங்களுக்குத் தேவையான உணவு மட்டும் ஹெலிகாப்டரில் கொண்டு வந்து பரிமாறி பிறகு சென்றுவிடுவார்கள். தங்குவதற்கு பாதுகாப்பான அறை எல்லாம் உண்டு. ஆனால், இன்டர்நெட், டீ வி எல்லாம் கிடையாது. ( கிட்டத்தட்ட - 'அக்கம்பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்' - என்று திரிஷா கேட்ட 'வரம்' என்று வைத்துக்கொள்ளுங்கள் - ஆனால் இங்கே அஜீத் கூட இருக்கமாட்டார்! ) உங்களோடு நீங்கள் எடுத்துச் செல்ல, உடைகள் தவிர்த்து இரண்டு கிலோகிராம்  பொருட்கள் மட்டுமே அனுமதி. கேள்வி என்ன என்றால், நீங்க தேர்ந்தெடுக்கும் அந்த இரண்டு கிலோ பொருட்கள் என்னென்ன? 

= = = = = = = 

KGG பக்கம் : 

மூன்றாம் வகுப்பு படித்த சமயத்தில் நிகழ்ந்த சில விஷயங்கள் ஞாபகத்திற்கு வருகிறது. 

என் பக்கத்தில் உட்கார்ந்த பையனின் பெயர் கோவிந்தராஜு. வகுப்பில் யாராவது திருப்பதி / பழனி / அல்லது ஊர் மாரியம்மன் கோவில் வேண்டுதலுக்காக மொட்டை அடித்துக்கொண்டு வந்தார்கள் என்றால் இவனுக்கு ஏக குஷி வந்துவிடும். 

அப்போதெல்லாம் வகுப்புக்கு வருகின்ற பையன்கள் - தலை மொட்டையாக இருப்பதைக் காட்ட சங்கோஜப்பட்டுக்கொண்டு தலையில் தொப்பி அணிந்து வருவார்கள். 

கோவிந்தாராஜு மொட்டைப் பையனுக்கு அருகே சென்று சட்டென்று மொ. பை  தொப்பியை உருவி தன் தலையில் வைத்துக்கொண்டு, " இஸ் ஷிஷ் டிஷ் வாஷ் கிரேஷ் .. " என்று வாய்க்கு வந்தபடி பேத்தல் செய்வான். ( அந்தக் காலத்தில் ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கிலம் கிடையாது. ஆங்கிலம் alphabets கற்றுக்கொண்டது எல்லாம் ஐந்தாம் வகுப்பிலிருந்துதான் ) பிறகு, அந்தத் தொப்பியை மொ பை தலையில் திரும்ப அணிவிப்பான். இதிலே அவனுக்கு அலாதி சந்தோஷம். 

அப்பா ஆடிட்டராக வேலை பார்த்த ஜெ மு சாமி ஜவுளிக் கடையில் புடவை / வேட்டிகளுக்கு விலை எழுதி உள்ளே வைக்கப்படும் சிறு அட்டைகள் - அதில் ஒரு பக்கம் பிள்ளையார் படமும் அதற்குக் கீழே விலை விவரம் எழுத கொஞ்சம் இடமும் இருக்கும். மற்ற பக்கத்தில், கடை பெயர், விலாசம். அந்த அட்டைகள் சிலவற்றை, அப்பா மதுரைக்கு ஆடிட் சென்றபோது (சில புடவை / வேட்டிகளுக்கு விலை தவறாகக் குறிக்கப்பட்டிருந்ததால்) - அந்த batch விலை அட்டைகள் எல்லாவற்றையும் அங்கிருந்து கொண்டுவந்து வீட்டில் வைத்திருந்தார். 

நான் அந்த அட்டைகளில் ஒரு பத்து எண்ணிக்கை எடுத்து, என்னுடைய புத்தகப் பையில் வைத்திருந்தேன். 

பக்கத்துப் பையன்கள், " இது எதுக்குடா ?" என்று கேட்டதும் எனக்கு சூப்பர் யோசனை ஒன்று உதித்தது. 

" என்னை யாராவது அடித்தீர்கள் என்றால், அடிக்கும் பையனின் பேரை இந்த அட்டையில் எழுதி, அதைக் கொண்டுபோய் என் அப்பாவிடம் கொடுத்துவிடுவேன். அவர் வந்து ஹெட் மாஸ்டரிடம் சொல்லி, ஹெட் மாஸ்டர் வந்து, என்னை அடித்த பையனை பிரம்பால் விளாசிவிடுவார் " என்றேன்.

அன்றிலிருந்து எனக்கு தனி மரியாதை. வகுப்பில் யார், யாரோடு சண்டை போட்டாலும் என் பக்கம் யாரும் வரமாட்டார்கள். 

ஒரு சமயம் நான் பாடப் புத்தகத்தை பையிலிருந்து வெளியே எடுக்கும்போது, அந்த விலை அட்டை ஒன்று தரையில் விழுந்தது. அதைக் கையில் எடுத்துப் பார்த்த கோவிந்தாராஜு, " ச் சே - இவரைப் பார்த்தாலே எனக்குப் பிடிக்காது " என்றான் அதில் இருந்த பிள்ளையாரைப் பார்த்து. 

எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது.  " பிள்ளையாரைப் பிடிக்காதா! ஏன்? " என்று கேட்டேன். 

" என்னுடைய பாட்டி சொன்னாங்க - எனக்கு ஒரு அண்ணன் இருந்தான், அவன் ஒரு வருடம் பிள்ளையார் பூஜைக்கு மறுநாள் - பிள்ளையாரை கிணற்றில் போடும்போது, அதனுடன் சேர்ந்து அவனும் விழுந்து செத்துப் போயிட்டான். அப்போதிலிருந்து நாங்க பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடுவதில்லை அதனால் எங்களுக்கு பிள்ளையாரைப் பிடிக்காது " என்றான். 

வீட்டிற்கு வந்ததும் அம்மாவிடம் இந்த அரிய தகவலை சொன்னேன். அம்மா சொன்னார் : " அப்படி எதுவும் இருக்காது. அவர்கள் எல்லோரும் ஈ வெ ரா வின் கட்சியை சேர்ந்தவர்களாக  இருப்பார்கள். சின்னப் பையனுக்கு கடவுள் மறுப்புக் கொள்கையை பற்றிச் சொன்னால் ஒன்றும் புரியாது என்பதற்காக இப்படி கதை சொல்லியிருப்பார்கள்". அம்மா சொன்னது சரிதான் என்று வேறு ஒரு சந்தர்ப்பத்தில் தெரிந்துகொண்டேன். ஆறாம் வகுப்புப் படித்தபோது வேறு ஒரு பையனும் இதே கதையை (பிள்ளையார், அண்ணன், கிணறு,  கதை ) சொன்னதால்! 

தமிழ்ப் பாடப் புத்தகத்தில், அப்போது ஒவ்வொரு பாடத்தின் கடைசியிலும் கேள்விகள், அருஞ்சொற்பொருள், எதிர்ப்பதம் என்று சில பயிற்சிகள் கொடுத்திருப்பார்கள். கேள்விகளுக்கு பாடத்திலிருந்து பதிலை சுலபமாகக் கண்டுபிடித்துவிடுவேன். அருஞ்சொற்பொருள் - படித்து தெரிந்துகொள்வேன். ஆனால் - இந்த எதிர்ப்பதம் என்ற விஷயம் அப்போது எனக்கு பெரும் குழப்பம். கருப்பு என்பதற்கு எதிர்ப்பதம் சிவப்பா அல்லது வெளுப்பா, அப்பாவுக்கு எது (ஏது ?) எதிர்ப்பதம் - என்றெல்லாம் குழப்பமாக இருக்கும். 

இந்தக் குழப்பத்தைத் தீர்க்க என்னுடைய அக்கா ஒரு பிட் பேப்பரில், " பதம் X எதிர்ப்பதம்" என்று வரிசையாக இருபது எழுதி என்னிடம் கொடுத்திருந்தார். அது பரீட்சையில் காப்பி அடிப்பதற்கு அல்ல - நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவற்றைப் படித்து நெட்டுரு போட்டுக்கொள்ள வேண்டும் என்பதற்காக. 

இப்படி இருக்கையில் ஒருநாள் .. 

( தொடரும் ) 

= = = = =  

அப்பாதுரை பக்கம். அடுத்த வாரம். 

= = = = = = =

மின்நிலா இதழின் கடைசி பக்கம் : 

முன்னேற 365 என்னும் தலைப்பில் எங்கள் Blog ஆசிரியர் குழு  

ஏப்ரல் 19, 2023 முதல் ஒவ்வொரு நாளும் மின்நிலா புத்தகங்கள் வாட்ஸ்அப் குழு

மற்றும்

மின்நிலா facebook குழு இரண்டிலும் ஒவ்வொரு நாளும்

உங்கள் முன்னேற்றத்திற்கான எளிய யோசனைகள் சொல்லத் தொடங்கியுள்ளோம்.

இது ஒரு வருடத்திற்குத் தொடர்ந்து வரும்.

வாழ்க்கையில் முன்னேற ஆசை + ஆர்வம் உள்ளவர்கள் இந்தக் குழுக்களில் இணைந்து நாங்கள் சொல்லும் எளிய யோசனைகளை நடைமுறைப்படுத்துங்கள்.

WhatsApp group link : https://chat.whatsapp.com/BmH70yzWRzTEuXW0Xeh1wh

Facebook page link : (1) மின்நிலா | Facebook

இணையுங்கள்; பயன்பெறுங்கள் !

118 கருத்துகள்:

  1. காலை வணக்கம் அனைவருக்கும்.

    யாருமில்லாத் தீவில் அஜித்தை வைத்து என்ன உபயோகம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே. ( திரிஷா போதுமா?)

      நீக்கு
    2. என் வயசு என்ன ரொம்ப அதிகம் என்று நினைச்சுக்கிட்டிருக்கீங்களா? திரிஷா போதுமான்னு கேட்கறீங்க. அந்தம்மாவுக்கு 40க்கு மேல் இருக்காதோ?

      நீக்கு
    3. ஆசைய பாரு...யாரு என் அண்ணனா? மூக்குக் கண்ணாடி (note it, not power spectacles ) இல்லாம தீவுக்குப் போக முடியாதவர் ....திரிஷா வேண்டாமாம்!!!!சொல்றது!!!

      கீதா

      நீக்கு
  2. புத்தகம், கத்தி, ஸ்பெக்ஸ், ஒரு பாத்திரம் போதாதோ? நெருப்பு மூட்டும் டிவைஸ். இதன் மொத்த எடையும் 2 கிலோவைத் தாண்டாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணவு பற்றி கவலை வேண்டாம். வேளா வேளைக்கு அது வந்து சேர்ந்துவிடும்.

      நீக்கு
    2. தண்ணி சுடவைக்க பாத்திரம் வேண்டாமா? அதுவும் வரும் என்றால், ஸ்பெக்ஸ், விதவித நாவல்கள் போதாதோ? மனுசனுக்கு வேறு என்ன வேணும்?

      நீக்கு
  3. மழை எப்போது வந்தாலும் வரவேற்கக்கூடியதுதான். நேற்று செம மழை மாலையிலிருந்து.

    தூங்குவதுதான் கேஜிஜிக்குப் பிடித்தமானதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெங்களூருவுக்கு மஞ்சள் எச்சரிக்கையாமே...

      நீக்கு
    2. https://www.dinamani.com/india/2023/may/30/yellow-alert-for-bengaluru-first-test-of-new-government-4013746.html

      நீக்கு
    3. காலையில் மழை பெய்த அடையாளமே எங்கள் வளாகத்தில் இல்லை (ஒரு சில இடங்களில் தவிர). அதிகாலையிலேயே நடைப்பயிற்சிக்குச் சென்றுவிட்டேன். எங்க வளாகத்தில், ஒருவேளை பாதி நடைப்பயிற்சியின்போது மழை வலுத்தால் (நான் தூரலாக இருந்தால் நல்லா எஞ்சாய் பண்ணிக்கிட்டே நடப்பேன்), உடனே பேஸ்மண்ட் 1 க்குச் சென்றுவிடுவேன். அதற்கும் கீழே இருக்கும் பேஸ்மண்டுக்கும் செல்லலாம்,

      காலையிலேர்ந்து நல்லா வெயிலடிக்குது.

      நீக்கு
    4. கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    5. ஆமா மழை பெய்த அடையாளமே இல்லை....ஒரு வேளை மேம்பாலம், மெட்ரோ கட்டும் இடங்களில் தண்ணீர் தேங்கியிருக்கும். சம்பங்கி சாலையில் பேஸ்மென்டில் இருந்த நகைக்கடையில் தண்ணீர் புகுந்து நகை எல்லாம் வெளிய கொண்டுவந்திருச்சாமே.....மக்கள் எல்லாம் நகைகளைப் பொறுக்கிக்கொண்டாங்களாமே!!! உண்மையா?!!!

      கீதா

      நீக்கு
    6. அப்படியா!! நான் இருக்கும் பகுதியில் எல்லாம் நார்மலாக இருக்கு.

      நீக்கு
  4. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    நோக்க நோக்க
    நொடியில் நோக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. /// யாருமே இல்லாத ஒரு தீவில் ஒரு வார காலம் நீங்கள் மட்டும் சென்று தங்கவேண்டும் என்று ஒரு சுற்றுலா கம்பெனி ஒரு போட்டி வைக்கிறார்கள்.
    ///

    கம்பேனிக்காரனுக்கு மூளையே இல்லை..

    போட்டி என்று இன்னொருவர் வந்து விட்டால் எல்லாம் புஸ்... தானே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தீவு. வெவ்வேறு வாரங்கள்.

      நீக்கு
    2. பக்கத்து தீவு கூப்பிடு தொலைவில் இருக்குமா?

      நீக்கு
    3. ஸ்ரீராம் பக்கத்து தீவு இல்லைனா என்ன? நாம இருக்கற தீவு நகரத் தொடங்கிடுச்சுனா நல்லாருக்கும்ல!!!!

      கீதா

      நீக்கு
    4. நகரும் தீவு !! பயமா இருக்கு.

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. யாருமே இல்லாத ஒரு தீவில் ஒரு வார காலம் நீங்கள் மட்டும் சென்று தங்கவேண்டும் என்று.. ///

    அந்தப் பொண்ணும் கூட இருந்தா சரி!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட அந்த தீவில் அப்பளம், வடை கூட கிடைக்காது போல!  ஆசை தோசை மட்டும்தானா?

      நீக்கு
    2. துரை செல்வராஜு சார்.... வாழ்க்கைல ரொம்ப அனுபவம் உங்களுக்கு இருக்குன்னு நினைச்சுக்கிட்டிருக்கேன். நீங்க என்னடான்னா 'அந்தப் பொண்ணும்'னு கேட்கறீங்க? மனுசன் நிம்மதியா ஒரு சப்தம் இடையூறு இல்லாமல் ஒரு வாரம் தீவில் தங்கலாம் என்ற வரம் கிடைக்கும்போது, கூடவே பிள்ளைப்பூச்சி கூட இருக்கணும்னு வரத்துல மாற்றம் கேட்கறீங்களே. அவங்க பேச ஆரம்பிச்சாங்கன்னா, அப்புறம் நாம் வேற எந்த வேலையும் செய்யமுடியாது. உம் கொட்டிக்கிட்டே தூங்கி வழியவேண்டியதுதான். கொண்டுபோன புத்தகங்களைத் தூரப்போட்டுவிட வேண்டியதுதான்

      நீக்கு
    3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....என்னவோ இவங்க மட்டும் பேசவே பேசாத மாதிரி!!!!!

      வாய் ஓயாமப் பேசற ஆணுங்களும் இருக்காங்க!!!!!!! You know!!!?

      கீதா

      நீக்கு
  9. கொண்டு போகும் உடைகளை துவைப்பது எப்படி ? கையில்தானா ? வாஷிங்மெஷின் இருக்காது காரணம் மின்சாரம் இல்லை.

    நான் இரண்டு கிலோவில் சிறிய வாஷிங்மெஷின் இருக்கிறது அதை வாங்கி கொண்டு போவேன்.

    குடிநீர் மினரல் வாட்டரா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாருமில்லா இடத்தில் சலவைச் சட்டை எதுக்கு?..

      கில்லர் ஜி.. யே கொளம்பிட்டாரு!..

      நீக்கு
    2. :))) வேண்டிய வசதிகள் எல்லாமே உண்டு. உடை, உணவு, இருப்பிடம், பாதுகாப்பு.

      நீக்கு
    3. // நான் இரண்டு கிலோவில் சிறிய வாஷிங்மெஷின் இருக்கிறது
      //

      இரண்டு கிலோவுக்கு சீனாவின் AI பெண்ணை எடுத்துச் சென்று விட வேண்டியதுதான்..  பேசிக்கொண்டிருக்கலாமே...!

      நீக்கு
    4. எனக்குத்தான் புரியலையா? தண்ணீர் உண்டான்னு சொல்லலை. அதையும் ஒரு மினரல் பாட்டிலா உணவோடு தந்துவிட்டால், நமக்கென்ன, ஹாயா உட்கார்ந்து கண்ணாடி-ஸ்பெக்ஸ் கதைப் புத்தகம் என்று இருந்துவிடவேண்டியதுதான். போரடிச்சா பாடிக்கவேண்டியதுதான். தூங்க வேண்டியதுதான். அது சரி.. லைட் உண்டு, ஃபேன் உண்டு என்று ஒவ்வொண்ணா கேஜிஜி சேர்த்துக்கொண்டே செல்வதைப் பார்த்தால் இன்று இரவுக்குள் இரண்டு பெண்களையும் சேர்த்துவிடுவாரோ?

      நீக்கு
    5. //சீனாவின் AI பெண்ணை எடுத்துச் சென்று விட வேண்டியதுதான்..// சும்மா AI பொண்ணு கிடைக்காது. யார் சாயல், ஏதேனும் மனதில் நினைத்திருக்கும் பெண்ணா? ஒண்ணும் தீர்மானிக்காமல், கடையில் கிடைக்கும் பெண்ணை எடுத்து வந்துவிட்டால், நீங்கள் பேசும் மொழியும் அவள் பேசும் மொழியும் புரியலைனா?

      நீக்கு
    6. //உடைகளை துவைப்பது எப்படி ? கையில்தானா ?// - கில்லர்ஜி.. இதுவா பெரிய கவலை? ஏதோ தினமும் ஒரு கூட்டத்திற்கு துவைப்பதுபோலச் சொல்கிறீர்களே.. மூன்று டிரெஸ் தோய்ப்பது பெரிய வேலையா? வாஷிங் மெஷின், காயப்போட கயிறு, க்ளிப்ஸ் என்று தேவையை அதிகமாக்கிக்கிட்டே போகறிங்களே

      நீக்கு
    7. // ஒவ்வொண்ணா கேஜிஜி சேர்த்துக்கொண்டே செல்வதைப் பார்த்தால் இன்று இரவுக்குள் இரண்டு பெண்களையும் சேர்த்துவிடுவாரோ?//
      ஹை ! ஆசையைப் பாரு!

      நீக்கு
    8. // நீங்கள் பேசும் மொழியும் அவள் பேசும் மொழியும் புரியலைனா?// இருவரும் பத்மா சுப்பிரமணியம் ( அபிநய) பாஷையில் பேசிக் கொள்ள வேண்டியதுதான்.

      நீக்கு
    9. // மூன்று டிரெஸ் தோய்ப்பது பெரிய வேலையா?// ஒரு வாரத்திற்கு வேண்டிய உடைகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போனால் போகிறது! மேலும் அது தீவு என்பதால் எல்லா பக்கத்திலும் தண்ணீர் இருக்குமே! துவைத்துக் காயப்போடலாமே!

      நீக்கு
    10. பாருங்க...அடுத்த மாற்றம்.. அந்தத் தீவு கடலில் இல்லை (உப்புத் தண்ணீர்), ஏரியில் உள்ளதுன்னு இப்போ கேஜிஜி சொல்லப்போறார். யாரேனும் உப்புத் தண்ணீல உடையைத் தோய்த்துக் காயப்போட்டு உபயோகிக்கமுடியுமா?

      நீக்கு
    11. கேஜி அண்ணா எங்க சேர்த்தார் நெல்லை?

      ஹலோ கௌ அண்ணா அப்ப வெளில இறங்கலாமா? தோய்க்கனா வெளில வரணுமே....அப்ப தீவுல சுத்தலாமே ஹை ஜாலி!!!! நான் ரெடி...

      பான்ட் ஷர்ட் - ஜீன்ஸ் கொண்டு போனா ஈசி தோய்க்காம கொண்டு வந்துரலாமே!!! ஹிஹிஹிஹி ஆனா கௌ அண்ணா எல்லா வசதியும் உண்டுன்னு சொன்னதால எதுக்கு ட்ரெஸ் நிறைய சுமக்கணும்? ரெண்டு செட் கைல போதாதா?

      மிச்சத்த கொண்டு போக 2 கிலோக்குள்ள எடை அனுமதித்தால், கொஞ்சம் dry fruits, nuts, மொறு மொறு அவல் நிலக்கடலை கலவை காரமில்லாமல்!!! புத்தகம் படிக்கறப்ப கொஞ்சம் கொறிக்கதான்!!! ஹாஹாஹா

      கீதா

      நீக்கு
  10. பொண்ணு இல்லாத பூலோகம் எதுக்கு?..

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    கேள்விகள் அருமை. யாருமே இல்லாத தீவில் தனிமையாக பொழுதை கழிக்க இதுவரை படிக்காத/ அல்லது படித்துப் பிடித்தமான புத்தகங்களை மறுபடியும் படிக்க என சில கொண்டு போகலாம். தங்குமிடமான அறை வசதி, சாப்பாடு வசதி என ஒரு வார காலம் அதைப்பற்றி ஏதும் யோசிக்க வேண்டிய கவலைகள் இல்லாத பட்சத்தில் புத்தகங்களை படித்தாவது மகிழ்ச்சியாக இருக்கலாமே...! பகிர்வுக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  13. மழை பிடிக்கும். கோடை மழையும் பிடிக்கும்.
    யாரும் இல்லா தீவில் பகலில் ரசிக்க பறவைகள், இயற்கை காட்சி இருக்கும், வானத்தைப்பார்த்து கொண்டு இருக்கலாம், மேகம் நகருவதை பார்க்கலாம். இரவு ஏதாவது புத்தகம் படிக்கலாம் மின்சாரம் இல்லையென்றாலும் விளக்கு வைத்து இருப்பார்கள் இல்லையா? இறை நாமத்தை சொல்லி கொண்டு இருக்கலாம்.

    சமைக்கும் வேலை இல்லை அப்புறம் என்ன?

    பதிலளிநீக்கு
  14. " பதம் X எதிர்ப்பதம்" என்று வரிசையாக இருபது எழுதி என்னிடம் கொடுத்திருந்தார்.//

    நல்ல செயல். பயனுள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது என்ன ஆயிற்று என்று அடுத்த புதன் பார்ப்போம்.

      நீக்கு
  15. தீவில் சிங்கம் புலி போன்ற அன்பான ஜீவராசிகள் உண்டா?  நாய், பூனை போன்ற பயங்கர மிருகங்கள் இருக்குமா?

    பதிலளிநீக்கு

  16. இப்படி இருக்கையில் ஒருநாள் ..
    ( தொடரும் )
    = = = = =
    அப்பாதுரை பக்கம். அடுத்த வாரம். //

    வர வர இந்த புதன்கிழமை த்ரில் தாங்கமுடியவில்லை..

    பதிலளிநீக்கு
  17. ..ஏப்ரல் 19, 2023 முதல் ஒவ்வொரு நாளும்..//

    - செய்ய ஆரம்பித்த காரியத்திற்கு, மே 29-க்குப் பிறகுதான் விளம்பரம் வருகிறது..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன செய்வது! Facebook, whatsapp தளங்களில் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன்; பயனில்லை.

      நீக்கு
  18. /// யாருமே இல்லாத ஒரு தீவு.. ///

    அப்படியே இருந்து விட்டுப் போகட்டும்

    விட்டு விடுங்கள்..

    பதிலளிநீக்கு
  19. யாருமில்லாத தீவா? சிறு வயதில் இப்படி ஒரு விஷயத்திற்கு ஆசைப் பட்டிருக்கிறேன். இப்போது என்னால் அங்கு இருக்க முடியும் என்று தோன்றவில்லை. வீட்டில் தனியாக இருக்கும் நேரங்களில் யூ டியூபில் யாராவது பேசிக் கொண்டிருப்பார்கள், அல்லது பாடிக் கொண்டிருப்பார்கள். ஏதோ ஒரு சத்தம் தேவையாக இருக்கிறது.
    கனடாவில் படித்துக்கொண்டிருக்கும் என் அக்கா பேத்தி, "பானு சித்தி தினமும் மூன்று பேர்களோடு போனில் பேசுவார்கள்" என்று என் அக்கா பெண்ணிடம் கூறினாளாம். எத்தனை கூர்மையாகவும், சரியாகவும் கவனித்திருக்கிறாள்? என்று வியந்தேன். செல்போன் இல்லாமல் இருப்பது கடினம். கொஞ்ச நேரம் படிக்கலாம், கொஞ்ச நேரம் உடற்பயிற்சி செய்யலாம், கொஞ்ச நேரம் ஜபிக்கலாம், கொஞ்ச நேரம் புத்தகம் படிக்கலாம். இப்படி இரண்டு நாட்கள் வேண்டுமானால் ஓட்டலாம், ஒரு வாரம் .. ரொம்ப கஷ்டம்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கமான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. ஆனால் - கேள்வி என்ன என்றால், ' அப்படி இருக்க முடியுமா? ' என்பது அல்ல; 'அப்படி இருக்கவேண்டும் என்றால், என்னென்ன எடுத்துச் செல்வீர்கள்?' என்பதுதான்!

      நீக்கு
    3. ஷூ, செருப்புல்லாம் எடுத்துச் செல்லணுமா இல்லை அங்கேயே கிடைக்குமா?

      நீக்கு
    4. ஷூ , செருப்பெல்லாம் எதுக்கு எடுத்துகிட்டுப் போகணும்? போட்டுக்கொண்டு போனால் போதுமே!

      நீக்கு
  20. என்னால் ஒரு வாரம் என்ன, மாதம். வருடம் கூட அப்படி தனியாக இருக்க முடியும். எல்லாமே அந்தத் தீவில் உண்டு என்று ஒவ்வொண்ணா நீங்க சேர்த்துக்கிட்டே போகிறீங்க. அதனால், புத்தகங்கள் (வித வித ஜோனர்..), இல்லைனா, pdf புத்தகங்களைப் படிக்கக்கூடிய டிவைஸ், சார்ஜர் போதாதோ?

    எனக்கு அத்தகைய வாழ்க்கை கனஜோராகப் போகும். அதனால் தூங்கி வழிவேன்னு நினைக்காதீங்க. அதிகாலை எழுந்து இரண்டு மணி நேரங்கள் நடை, யோகா, .... என்று பலவித ரொட்டீன்களினால் நேரமே போதாமலிருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் - ப்ளஸ் 1..

      நெல்லை கௌ அண்ணா வெளில போகலாம்னு எதுவும் சொல்லலியா அதனால இதை சேர்க்கலை....

      கீதா

      நீக்கு
    2. தீவுல எங்கே வேண்டுமானாலும் சுற்றலாம். தடை கிடையாது.

      நீக்கு
  21. மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் இப்படி ஒருவரை ஒரு வாரம் ஒரு தனி அறையில் தங்க வைத்து, சாப்பாடு, புத்தகங்கள் எல்லாம் கொடுப்பார்களாம், நோ, டி.வி., நோ தொலைபேசி, இரவா, பகலா என்றும் தெரியாதாம், அவருடைய நடவடிக்கைகளை சர்க்யூட் காமிரா மூலம் கண்காணிப்பார்களாம். இப்படி தனிமையில் இருக்கும் மனிதர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள், வெளியே வந்ததும் அவர்கள் நடவடிக்கையில் என்ன மாறுதல்கள்? என்று ஆராய இந்த நடவடிக்கை. 80களில் நடந்தது இது. இதைப்பற்றி, ஆ.வி.யில் கூட கட்டுரை வந்திருந்தது. இந்த சோதனைக்கு தன்னை ஆட்படுத்திக் கொள்ள விரும்புகிறவர்கள் விண்ணப்பிக்கலாமென்று அறிவிப்பு வந்தது. எனக்கு கூட அப்போது ஆசை இருந்தது. இப்போது நோ!

    பதிலளிநீக்கு
  22. பிடித்தது குளிர்காலம். மழையும் தான். நேற்று செம மழை ஹையோ...அடி பின்னி வெளுத்து வாங்கியது. நல்ல தட்பவெப்ப நிலை!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  23. ஆஹா! இதென்ன நேற்று எங்கள் தளத்தில் நானும் தீவு பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்...தீவில் நாம் வசிக்கும் பகுதி நகரத் தொடங்கினால் என்று என் கற்பனையை...சும்மா குறிப்பிட்டுவிட்டு அது விரிவாக வரத் தாமதமாகும்....என்றும்...

    இங்கும் தீவு என்றதும்....கடைசியில் கேள்வி சப் என்று ஆகிவிட்டது...தீவில் என்ன செய்வீங்கன்னு கேட்காம...ஹாஹாஹா

    ஆஹா இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால்...வெளியில் செல்லக் கூடாதா? ..வெளியில் செல்ல அனுமதி உண்டென்றால் ஆஹா!

    சரி பரவாயில்லை. ஓகேதான் எனக்கு யாருமில்லாமல் அமைதியாக இப்படிச் செலவிடப் பிடிக்கும் இடையில்.... A break! (எப்போதுமல்ல)

    கொண்டு செல்வது புத்தகங்கள், மருந்துகள், துணிகள் - போட்டுக் கொள்வது தவிர ரெண்டு செட். அதுவும் Pant shirt. Personal things பல்லு தேய்க்க குளிக்க....மூக்குக் கண்ணாடி, மூன்றாவது காது, கண்டிப்பா மூன்றாவது விழி - ஜன்னல் இருக்கும்தானே? வெளியே பார்க்கலாம்தானே!!! (கடல் பார்க்க வேண்டாமா ஏதாச்சும் கப்பல் போகும் ஏதாச்சும் விலங்குகள் வரலாம்...கடல் அலைகள்....சூரியன்....அதெல்லாம் படம் புடிச்சு உங்களுக்கெல்லம காட்ட வேண்டாமா?) இத்தனையுமே 2 கிலோ ஆகிடுமே!!!

    அவங்க கொடுக்கற சாப்பாடு ஓகெ காபி கொடுப்பாங்களா?!!!!! என் கவலை எனக்கு!!!! ஹாஹாஹாஹா பின்ன கொடுக்க மாட்டாங்கனா நான் Instant coffee, milk powder, சூடு தண்ணி போட ஒரு இண்டக்ஷன்- கரன்ட் இருக்குமா?!!!!!!!!!!!!!!! ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  24. கௌ அண்ணா, அந்த பிட் வகுப்புல கீழ விழுந்து ஆசிரியரிடம் மாட்டிக்கிட்டீங்களா அல்லது கோவிந்தராஜு அதை பிட் அடிக்க எடுத்து வைச்சிட்டானா?

    பசங்ககிட்ட அடி வாங்காம இருக்க நல்ல தெக்கினிக்கி!!! அது சரி அப்பா வைத்திருந்த அந்த அட்டைகளை அப்பா தேடவில்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிட் அடுத்த புதன் தெரியும். அப்பா கொண்டு வந்த அந்த விலை அட்டைகள் பயன்படாதவை. நூற்றுக் கணக்கில் இருந்த அட்டைகளை வீணாக கிழித்துப் போட மனமின்றி வைத்திருந்தார். நாங்கள் எல்லோரும் அவைகளை வைத்துக்கொண்டு விளையாடினோம்.

      நீக்கு
  25. அதுக்குள்ளே 90 கருத்துரைகள் வந்து எல்லோரும் எல்லாமும் எழுதிட்டாங்க. ஆகவே நான் ஒண்ணும் சொல்லலை. ஆனால் பிடித்தது கொஞ்சம் குளிரோடு கூடிய சீதோஷ்ணம் தான். வெயில் காலத்தில் நடுவே மழை பெய்தாலும் அதன் பின்னர் சூடு அதிகம் ஆகிவிடும். மழைக்காலத்தின் நடுவே வெயில் தனியாகப் பளிச்சென்று தெரியும். அதுவும் தொடர் மழைக்குப் பின் வெயில்! அற்புதம்.

    வெயில் காலமோ, அல்லாத காலமோ எங்க வீட்டில் ஏசியைப் போட்டுக் கொண்டு மின் விசிறியையும் போட்டுக்கொண்டெல்லாம் தூங்க முடியாது. கண்டிப்பாக மதிய நேரங்களில் ஏசி போடுவதே இல்லை. இரவிலும் எட்டரை மணிக்குப் போடுவோம். 24 டிகிரியில் வைச்சுட்டு மின் விசிறியை 3 அல்லது நான்கில் வைப்போம். இரவு இரண்டு இரண்டரைக்கு ஏசி அணைக்கப்பட்டு விடும். பின்னர் மின் விசிறி மட்டுமே. அது அக்னி நக்ஷத்திர காலமானாலும் சரி.

    குளிர் எனில் இங்கெ எல்லாம் குளிரே கிடையாது. சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா! உள உளாக்கட்டிக்குத் தான் குளிர். ஆனால் நாங்க நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஏசியோ, மின் விசிறியோ பயன்படுத்துவது இல்லை. கொசுத்தொல்லை இல்லாமல் இருக்கப் படுக்கை அறைக்கதவை மாலை ஐந்து மணிக்கெல்லாம் சார்த்தி வைச்சுடுவோம். இரவு கொசு வர்த்தி மட்டும் போட்டுக் கொள்வோம். நோ ஏசி, நோ மின் விசிறி.

    பதிலளிநீக்கு
  26. யாருமே இல்லாத தீவுக்குப் போனால் கையில் நல்ல புத்தகங்கள் மட்டுமே எடுத்துப் போவேன்.தீவைச் சுற்றிப் பார்க்கலாம் இல்லையா?

    பதிலளிநீக்கு
  27. என்னோட மூன்றாம் வகுப்பு அனுப்வங்களை நானும் மதுரைமாநகரம் வலைப்பக்கம் எழுதி இருக்கேன். எனக்கு ரொம்பவே கஷ்டத்தைக் கொடுத்த வருடம் அது.

    பதிலளிநீக்கு
  28. வெயில் காலமே எனக்கு அவ்வளவாப் பிடிக்காதது/ஒத்துக்காதது. கோடைக் கட்டிகள், உடல் சிவந்து தடித்துப் போதல், எரிச்சல், எவ்வளவு தண்ணீர் குடிச்சாலும் தாகம் தீராமைனு ஒரே பிரச்னைகள். முக்கியமாய் அதீதமாய் வியர்த்தல். ராத்திரி இரண்டு மணிக்கு ஏசியை அணைச்சுட்டு என்னதான் மின் விசிறி ஓடினாலும் எனக்கு வியர்க்க ஆரம்பிச்சுடும். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பெங்களூரில் கடந்த ஐந்து வருடங்களாக ஏ சி இல்லாமல்தான் இருந்துவருகிறேன். மின் விசிறி உபயோகம் கூட மார்ச் 15 முதல் ஜூலை / ஆகஸ்ட் 15 வரை மட்டுமே.

      நீக்கு
  29. துரைத் தம்பியின் வலைப்பக்கத்தில் இடுகைகள் எதுவும் இல்லை எனச் செய்தி வருகிறதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெயில் என்றொரு பதிவு இன்று வெளியாகி இருக்கின்றதே அக்கா..

      நீக்கு
  30. பில்லையார் சதுர்த்தி அன்று அண்ணன் கிணற்றில் விழுந்து இறந்து விட்டதால் பிள்ளையாரைப் பிடிக்காது என்னும் கதையை கேட்ட பொழுது ஆச்சரியமாக இருக்கிறது. ஏனென்றால் என்னோடு பள்ளியில் படித்த வளர்மதி என்னும் பெண் செட்டியார் வகுப்பை சேர்ந்தவள். அவர்கள் பெரியாரிஸ்டுகள்.(ஒரு காலத்தில் திருச்சி டி.கே.கோட்டை) அவர்கள் வீட்டில் தீபாவளி போன்ற பண்டிகைகளை கொண்டாட மாட்டார்கள். அதற்கு அவள் கூறிய காரணம்,"எனக்கு ஒரு அத்தை இருந்தார். மூன்று சகோதரர்களுக்குப் பிறகு பிறந்த அவரை எங்கள் பெரியப்பா, அப்பா, சித்தப்பா எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். ஒரு தீபாவளியன்று எங்கள் அத்தை இறந்து விட்டார், அதனால் எங்கள் வீட்டில் தீபாவளி கொண்டாட மாட்டோம். இதை நான் இன்றுவரை நம்பிக் கொண்டிருந்தேன்.:)))
    கல்லூரியில் பத்மபிரியா என்று ஒரு பெண் படித்தாள். அவள் கம்யூனிஸ்ட் லீடர் உமாநாத்துக்கு சொந்தம். (ஒரு காலத்தில் திருச்சி கம்யூனிஸ்ட் கோட்டையாகவும் இருந்தது). அவள் இப்படி எந்தக் கதையும் சொல்லாமல்,"நாங்கள் தீபாவளி கொண்டாட மாட்டோம், பொங்கல்தான் கொண்டாடுவோம்" என்பாள். அனால் அவர்கள் எல்லோருமே தீபாவளிக்கு புது ட்ரெஸ் வாங்கிக் கொள்வார்கள்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொருவர் வீட்டிலும் பெரியவர்கள் ஒவ்வொரு கதை சொல்லி வளர்த்திருக்கிறார்கள்!

      நீக்கு
  31. வெய்யில் காலத்தில் நடுவே பெய்யும் மழையை விட, மழை காலத்தில் தலை காட்டும் சூரியனைத்தான் பிடிக்கும். கோடைகாலத்தில் என்னதான் மழை பெய்தாலும், அடுத்த நாள் வெய்யில் கொளுத்ததான் போகிறது. சில சமயம் கோடை மழை புழுக்கத்தை அதிகரித்து விடும்.
    மழைக்கு நடுவே வெய்யில் உணக்கையாக இருக்கும். துணிகளை ஈர வாடை போக காயப்போடலாம். வாணவில் காணக் கிடைக்கலாம்.

    பதிலளிநீக்கு
  32. கோடை காலத்தில் என்னதான் ஏ.ஸி. போட்டுக்கொண்டு தூங்கினாலும் அறையை விட்டு வெளியே வந்தால் சூடு முகத்தில் அறையும். குளிர் காலத்தில் ஸ்வெட்டர், சாக்ஸ் எல்லாம் அணிந்து கொன்டு, மெத்தையில் புதைந்து, ரஜாயை போர்த்திக் கொண்டு தூங்குவது ..ஆஹா!

    பதிலளிநீக்கு
  33. இன்னும் இரண்டு கேள்விகளை கேட்டிருக்கலாம்..1. கோடையில் குளிர் பானங்கள் அருந்துவது, குளிர் காலத்தில் சூடான காபி, டீ? எதை விரும்புவீர்கள்?
    2. கோடையில் ஜில்லென்ற தண்ணீரில் குளிப்பது, குளிர் காலத்தில் இதமான சுடு நீர் ஸ்நானம், எதை ரசிப்பீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த புதன் கிழமை கேள்வியாக பதில் அளிப்போம்!

      நீக்கு
  34. யாரும் இல்லாத தீவில் ஒரு வாரம்...... அட இது நல்லா இருக்கே..... பெரும்பாலான வார இறுதிகள் எனக்கு இப்படித்தான் அமைகின்றன. வெள்ளி மாலை வீட்டுக்குள் நுழைந்தால் திங்கள் காலை வரை வெளியே செல்வதில்லை. சில வாரங்கள் ஒருவரைக் கூட சந்திக்காமல் இருந்ததுண்டு. இணையம் இல்லாமலும் இருந்தது உண்டு.

    பதிலளிநீக்கு
  35. இரண்டு கிலோ புத்தகம் (படிக்காத திருக்குறள் உரைகள்)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!