திங்கள், 22 மே, 2023

திங்கக்கிழமை  :  பெஸ்டோ பாஸ்தா(Pesto Pastha) - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி 

 

பெஸ்டோ  பாஸ்தா(Pesto Pastha)


தேவையான பொருள்கள்:பாஸ்தா    -  400 கிராம் 

பாலக் கீரை  - 1/2 கட்டு 

கொத்துமல்லி  - 1/4 கட்டு 

பூண்டு  - 7 பல் 

பாதாம்  - 8

முந்திரி பருப்பு - 7

ஆலிவ் ஆயில்  - 2 டேபிள் ஸ்பூன் 

உப்பு  - 2 டீ ஸ்பூன் 

கரம் மசாலா தூள்  - 1 டீ ஸ்பூன் 

சர்க்கரை  - ஒரு சிட்டிகை 

செய்முறை:

ஒரு அகலமான வாணலியில் தண்ணீர் வைத்து, அதில் ஒன்றரை ஸ்பூன் உப்பு சேர்த்து கொதிக்க விடவும், தண்ணீர் கொதித்ததும் அதில் பாஸ்தாவை போட்டு வேகவைக்கவும்.

பாஸ்தா வெந்ததும், அதை வடிய வைத்து, குளிர்ந்த நீரில் அலம்பி, சிறிதளவு எண்ணெய் ஊற்றி பிசிறி வைக்கவும். 


சுத்தம் செய்யப்பட்ட பாலக்கீரை,  கொத்துமல்லி, பூண்டு, பாதாம், முந்திரி இவைகளோடு ஆலிவ் எண்ணையையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதில் அரை ஸ்பூன் உப்பை சேர்த்துக் கொள்ளவும். 

பாஸ்தா வேகவைத்த வாணலியிலேயே கொஞ்சம் எண்ணெய்  விட்டு, *சீரகம் சேர்த்து வெடித்ததும், பாஸ்தாவை போட்டு, அதோடு அரைத்து வைத்த கீரை, பூண்டு, பருப்புகள் விழுதையும் சேர்த்து கிளறிவிடவும். அந்த கலவையில் கரம் மசாலா மற்றும் சர்க்கரை ஒரு சிட்டிகையும் சேர்த்து நன்கு கலந்து இரண்டு  அல்லது மூன்று நிமிடங்கள் சின்ன தீயில் வைத்திருந்து இறக்கி விடலாம். 

ஜெயா டி.வி.யில் பார்த்ததை நேற்று முதல் முறையாக செய்தேன். என் மகனுக்கும், மருமகளுக்கும் மிகவும் பிடித்திருந்தது. Quality of pudding is in eating என்பது நிரூபிக்கப்பட்டது. செய்து பாருங்கள் உங்கள் வீட்டிலும் எல்லோருக்கும் பிடிக்கும். டொமேட்டோ கெச்சப்புடன் நன்றாக இருந்தது. 

பெஸ்டோ பாஸ்தா -   பெஸ்டோ என்றால் கீரை, ஆலிவ் ஆயில், மற்றும் பருப்புகள் சேர்த்து செய்யும் சாஸ். இதில் வறுத்த வால்நட் கூட சேர்க்கலாம். அப்போது முந்திரியின் அளவை குறைக்க வேண்டும். பாதம் பருப்பை ஊற வைத்து தோல் உரித்துக் கொள்ளலாம் என்று தோன்றியது. 

* அவர்கள் செய்து காட்டியதில் கரம் மசாலா, சர்க்கரை போன்றவை சேர்க்கவில்லை. சப்பென்று இருக்கப் போகிறதே என்று நான் சேர்த்தேன். அதே போல சீரகம் தாளித்ததும் என் விருப்பம். 


47 கருத்துகள்:

 1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். செய்முறை குறிப்பு நன்று. எனக்கு பாஸ்தா சுவை பிடிப்பதில்லை. அதனால் செய்து பார்க்கும் வாய்ப்பு குறைவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா! முதல் கமெண்டே நெகடிவாக இருகிறதே? உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை, வேறு ஒருவரிடமிருந்து எதிர் பார்த்தேன். இந்த முறையில் செய்து பாருங்கள், பிடிக்கும்.:)) எனிவே நன்றி.

   நீக்கு
 2. பாஸ்தா நான் சாப்பிட்டதில்லை. பிடிக்கும்னு தோன்றவில்லை

  பதிலளிநீக்கு
 3. பெஸ்டோ பாஸ்தா Best ஆகத்தான் இருக்கிறது...

  பதிலளிநீக்கு
 4. காக்க காக்க
  கனக வேல் காக்க..
  நோக்க நோக்க
  நொடியில் நோக்க..

  இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
  பிரார்த்திப்போம்..

  எல்லாருக்கும் இறைவன்
  நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 5. பாஸ்தா..

  செய்முறை சிறப்பு..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 6. பாஸ்தா செய்முறை விளக்கம் நன்று. நீங்கள் பாலக் பாஸ்தா செய்தீர்கள் என்பதுவே இன்றைய நியூஸ் அப்படித்தானே?

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா! யானை விழுந்தால்தான் செய்தி, நடந்தால் அல்ல என்பது ஜர்னலிசத்தின் அரிச்சுவடி என்பார்கள். தினமும் சமைத்துக் கொண்டிருக்கும் நாங்கள் சமைப்பது எப்படி செய்தியாகும்? நன்றி.

   நீக்கு
 7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 8. பெஸ்டோ பாஸ்தா செய்முறை விளக்கமும், படங்களும் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 9. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் பானுமதி வெங்கடேஸ்வரன் சகோதரி

  இன்றைய திங்கள் பதிவில், படங்களுடன், செய்முறை விளக்கமாக பெஸ்டோ பாஸ்தா நன்றாக உள்ளது. நாங்கள் இந்த மாதிரி செய்து சாப்பிட்டதில்லை. செய்து பார்க்கிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பாக செய்து சாப்பிட்டு விட்டு எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.

   நீக்கு
 11. பானுக்க நல்ல ரெசிப்பி! பாஸ்தா எல்லாம் செய்து கொண்டிருந்த காலங்களில் இப்படிச் செய்ததில்லை ஆனால் இந்தியன் வகையில் வேறு தினுசு எல்லாம் பரீட்சித்து பார்த்ததுண்டு. இது தெரியாம போச்சேன்னு இருக்கு! இது வரை இந்த மாதிரி செய்ததில்லை. இப்போது டயட்டோ டயட்டு. இருந்தாலும் என்றேனும் ஒரு நாள் செய்து பார்க்கிறேன். கீரை பருப்புகள் தானே!! செய்யும் அன்று மற்ற வேளை உணவில் கவனமாக இருந்துவிட்டால் போச்சு!!!

  நல்லா வந்திருக்கு பானுக்கா

  கீதா

  பதிலளிநீக்கு
 12. அக்கா எனக்கு ஒன்றே ஒன்று தோன்றியது. பாலக் கீரை அப்படியே அரைக்கப்படுகிறது இல்லையா? அதன் பின் பாஸ்தாவுடன் கலந்து ஒரு மூன்று நிமிடம்...அடுப்பில்

  எனக்கு ஒன்று தோன்றியது - பாலக் கீரையை ஒரு வதக்கு வதக்கிக்கொண்டு அரைத்தாலோ? அல்லது கீரை கொத்தமல்லி பருப்புகள் பூண்டு எல்லாம் அரைத்து அடுப்பில் தாளித்த பிறகு ஒரு பிரட்டு பிரட்டி கொஞ்சம் கீரை வெந்ததும் பாஸ்தா போட்டு கலக்கலாமோ என்று தோன்றியது.

  வெங்காயமும் சேர்த்தால் சுவை கூடுமோ? முதலில் வெ சேர்க்காமல் நீங்கள் செய்ததை செய்து பார்க்கிறேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செய்யலாம் கீதா. சமையலில் ஹார்ட் கோர் ரூல்ஸ் எதுவும் கிடையாது. பெஸ்டோ பாஸ்தாவில் சேர்க்காத கரம் மசாலா, சர்க்கரை எல்லாம் நான் சேர்த்திருக்கிறேன். வெங்காயம் இதன் ருசியை மாற்றி விடும் என்று தோன்றுகிறது. நன்றி.

   நீக்கு
  2. சமையலில் நோ ஹார்ட் கோர் ரூல்ஸ். கரம் மசாலா, சர்க்கரை எல்லாம் நானாக சேர்த்ததுதான். வெங்காயம் ருசியை மாற்றி விடுமோ என்று தோன்றுகிறது.

   நீக்கு
 13. பாஸ்ரா நன்றாக வந்துள்ளது.

  எனக்கும் அவ்வளவாக பிடிப்பதில்லை . செய்து பார்க்கிறேன்.  பதிலளிநீக்கு
 14. நியூஸ் ரூம் - செய்திகள் வாசிப்பவர் லீவா!!!!!!!!!!!!!!!!!!!! அல்லது சுவாரசியமான செய்திகள் இல்லையா?...ரெண்டு மூன்று நாட்கள் ஆகிடுச்சோ?

  ஓ சாப்பிடும் போது மௌனமாகச் சாப்பாட்டில் கவனமாகச் சாப்பிட வேண்டும் என்பதாலா!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செய்தி அறைக்கு என்னுடய பங்களிப்பு வியாழனன்று மட்டுமே.

   நீக்கு
 15. மிக நீஈஈஈஈண்ட காலத்துக்குப் பின் எல்லோரையும் பார்க்கையில் மனதுக்கு இதமாக இருக்குது... இன்று முகூர்த்த நாளாமே.. அதனால நாள் பார்த்து வந்தேன்... இனி வரப்போகும் நாட்களெல்லாம் நல்லதாக நடக்கட்டும் என:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்க வருகையே திருவிழாப் போலத் தானே கொண்டாட்டமாக இருக்கும்!

   நீக்கு
  2. கீசாக்கா நலம்தானே.. வருகையுடன் நின்றிடாமல் இம்முறை தொடரோணும் எனப் பிரார்த்திக்கிறேன் நீங்களும் எனக்காகக் கொஞ்சம் நேர்த்தி வையுங்கோ:)..

   நீக்கு
  3. வாங்க அம்பானி அதிரா!! இந்தியாக்கு வந்தீங்கனா அம்பானியோட போட்டி போட வேண்டிவந்துரும்!! நீங்க அம்பானி ஆன அந்த தெக்கினிக்க எல்லாருக்கும் சொல்லிக் கொடுத்தீங்கனா நல்லாருக்கும்!!!!

   கீதா

   நீக்கு
  4. இங்கே திடீரென்று பலத்த மழை. இப்போதுதான் காரணம் புரிகிறது. அதிராவின் அதிசய விஜயம்! செய்தி அறையில் இன்று இதுதான் முக்கியச் செய்தி :)) வர வேண்டும் பெண்ணே வர வேண்டும், உன் வலது கால் வைத்து வர வேண்டும், வெல்கம்! வெல்கம்! என்னும் பாடல் பின்ணணியில் ஒலிக்கிறது. ஸ்ரீராம் இந்தப் பாடலை வெள்ளியன்று பகிர வேண்டுகோள் விடுக்கிறேன்.

   நீக்கு
 16. பெஸ்ரோ நானும் அடிக்கடி செய்வேன், ஆனால் இங்கு பெஸ்ரோ பேஸ்ட்,ரெடிமேட் ஆக பொட்டிலில் கிடைக்குது, அதனால அதை வாங்கிப் பாவிப்பேன், அது கிறீமியாக இனிப்பாக இருக்கும்.

  அருமையான பாஸ்தா.

  ரெசிப்பி வந்திருக்குது ஆனா பானு அக்காவைக் காணமே... இன்னும் கனடாவால வரேல்லையோ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் கனடாவிலிருந்து வந்து ரொம்ப நாட்கள் ஆச்சே?! பெஸ்டோ பாஸ்தா என்பது துளசி இலைகள்(Basil leaves) போட்டுதான் செய்ய வேண்டுமாம். அப்படி இல்லாமல் கீரைகள் போட்டு செய்வதை ஸ்பினச் பெஸ்டொ பாஸ்தா என்பார்களாம்.

   நீக்கு
  2. https://engalblog.blogspot.com/2023/05/blog-post_20.html

   நீக்கு
  3. https://engalblog.blogspot.com/2023/05/blog-post_20.html

   நீக்கு
 17. பாஸ்தாவெல்லாம் இங்கே போணி ஆகாது. ஒரே ஒரு முறை சூப்பர் மார்க்கெட்டில் இலவசமாகக் கொடுத்த பாஸ்தாவை சேமியா பண்ணுவது போலப் பண்ணித் தீர்த்தேன். நூடுல்ஸ் எல்லாம் வேலை செய்யும் பெண்ணிடம் கொடுத்தாச்சு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த குறிப்பை அனுப்பி விட்டு ஸ்ரீராமிடம், "சம்திங் நியூ, புதுசு என்று நான் சொல்கிறேன், கீதா அக்காவும், கீதா ரெங்கனும் இதை நாங்கள் அடிக்கடி செய்வோம் என்று சொல்லாமல் இருக்க வேண்டும்" என்றேன். :))

   நீக்கு
  2. இந்த சமையல் குறிப்பை அனுப்பும் பொழுது ஸ்ரீராமிடம்,"ஸம்திங் நியூ. புதுசு என்று நான் சொல்கிறேன், கீதா அக்காவும், கீதா ரெங்கனும் நாங்கள் அடிக்கடி செய்வோம் என்று சொல்லாமல் இருக்க வேண்டும்" என்றேன். :))

   நீக்கு
  3. மருமகள் அடிக்கடி பாஸ்தா பண்ணுவாள். குழந்தைக்குப் பிடிக்கும். சமயங்களில் இம்மாதிரிக் காரம் போட்டுச் செய்தால் அவங்க இரண்டு பேரும் அதையே சாப்பிடுவாங்க. நாங்க வேறே ஏதாவது பண்ணிப்போம். ஒரு விதமான சூப் தயாரித்து (பெரிய பாத்திரத்தில் தயார் பண்ணுவாள்) கார்லிக் ப்ரெடோடு இரவு உணவுக்குச் சாப்பிடுவாங்க. அப்போவும் நாங்க வேறே ஏதானும் சாப்பிட்டுப்போம்.

   நீக்கு
 18. பாஸ்தாவெல்லாம் தினசரி போட்டுத் தள்ளாமல் வாரத்தில் மூன்று நாட்களுக்கு என்றால் நல்லது..

  பதிலளிநீக்கு
 19. பிள்ளைகள் சிறுவராக இருந்த காலத்தில் அடிக்கடி சமைத்த பாஸ்தா.
  அதிகம் வேக வைக்காமல் (குழையடிக்காமல்) செய்தால் நன்றாக இருக்கும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!