திங்கள், 8 மே, 2023

"திங்க"க்கிழமை  -  Chilli Sauce (Schezwan Sauce)  - துரை செல்வராஜூ ரெஸிப்பி 

                                                                          

                                                  நியூஸ் ரூம் 

அங்கே நடுநிலையாளர்கள் இலையோ...


ஹா...  ஹா...  ஹா...   ஸாரி கேட்டேளா..   அவங்க துன்பத்தைச் சொல்றாங்க..  சிரிச்சுப்புட்டேன்!


கேவல அரசியல்...


இல்லை..  பயம் வேண்டாம்..  ஒரேயடியா எச்சரிக்கையைத் துறந்து விடுவார்களே மக்கள்..  அதனால் சொல்றாங்க...

சைவமா?  அசைவமா?  இந்த அதிசயச் செய்தியை இங்கே படியுங்கள்.


==================================================================

==================================================================


இனி திங்கற கிழமையில் என்ன என்று பார்ப்போமா...

Chilli Sauce செய்முறை (Schezwan Sauce) (ரசாயன கலப்பு அதிகமில்லாமல்)

பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக வளைகுடா நாட்டில் Catering நிறுவனத்தில் Store in charge ஆக வேலை.. 

அதனால் அரபு சமையல் விஷயங்களில் பழக்கம்..

மாலை நேர உணவாக பத்து நாட்களுக்கு ஒரு தரம் Macaroni with Sauce..  Sauce - Kitchen  ல் செய்து  விடுவார்கள்..   

அந்த அனுபவத்துடன் இன்றைய குறிப்பு..

இது நமது முறைப்படியான குறிப்பு,

கட்டா மிட்டா என்று புளிப்புடன் இங்கே இருந்தது தான் இது.. 

மிளகாயின் காரத்திற்கு ஈடு கொடுக்க முடியாத மேலை நாடுகளில் ஜாம் வகைகளை வழித்துப் போட்டு ஆதியில் செய்திருக்கின்றனர்..

அதற்கு மாற்றாக வந்ததே Bell pepper / Sweet pepper ஆகியன.. 

தனி இல்லங்களுக்குள்  இருந்த இதனுள் அதிகார பலத்துடன் நிறுவனங்கள் நுழைந்த பிறகு எல்லாவற்றின் தலையெழுத்தும் வேறாகி விட்டன..

Indo-Chinese, Western - உணவுகளில் இதன் பங்கு முக்கியமானது..
இதுவே நம்ம ஊர் மிளகாய்ப் பழங்களைச் சேர்த்து செய்யப்படும் போது
Hot Chilli Sauce என்றாகி விடுகின்றது..

இது வறுத்த சோறு.. 

அடடா.. எதற்கு இந்த வேலை?.. அவுங்க பக்கமே போய்டுவோம்!..  Fried Rice, Noodles, Macaroni, Spaghetti, Cauliflower Manchurian, Potato Wedges ஆகிய எல்லாவற்றுக்கும் கூட்டாளி ஆகிவிடும்..

இருபத்தைந்தே நிமிடங்களில் செய்து விடலாம்..

 அட .. செய்முறையச் சொல்லுய்யா!..

Chilli Sauce: செய்முறை
இனிப்பு மிளகாய் 3
(Sweet pepper)
நல்லெண்ணெய் 60 ml
பெரிய வெங்காயம் 3 
நடுத்தர பூண்டு 4 பல்
இஞ்சி நுனி விரலளவு 
மிளகாய்த்தூள் 1/2 tsp 
சோளமாவு Cornflour 2 tbsp
நாட்டுச் சர்க்கரை 2 tbsp
எலுமிச்சை சாறு 2 tbsp  
உப்பு 1 tsp 

அளவீடுகள்:
1 cup: 237 ml (16 tbsp/240 ml)
1 cup: 136 gr
1 tbsp: 15 ml - 15 gr
1 tsp: 5 ml - 5 gr

சோள மாவினை 240 ml வெது வெதுப்பான நீரில் கட்டி பிடிக்காமல்(!)
நன்கு கரைத்துக் கொள்ளவும் .

மிளகாயை நறுக்கி உள்ளிருக்கும் விதைகளை நீக்கி விட்டு அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு லேசாக வதக்கி எடுத்து அரைத்துக் கொள்ளவும்

வெங்காயம் பூண்டு இஞ்சி  இவைகளை சுத்தம் செய்து  விழுதாக அரைத்துக் கொள்ளவும்..

எண்ணெயை மிதமாக சூடாக்கி  மிளகாய் விழுதைப் போட்டு நன்றாக வதக்கவும்..

அரைத்து வைத்திருக்கும் பூண்டு விழுதினையும் சேர்த்து மேலும் வதக்கி
சோளமாவுக் கரைசலை ஊற்றிக் கொதிக்க விடவும்..

மினுமினுப்பாக கொதித்து வரும்போது சர்க்கரை, எலுமிச்சை சாறு, மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து கிளறி விடவும்.. மேலும் அரை நிமிடம் கொதித்ததும் இறக்கி விடவும்..

இது இரண்டு பேருக்கானது..  ஒரு தடவைக்கு இரு தடவையாக செய்து பார்த்து சுவைகளை சரி செய்து கொள்ளலாம்..

நமது கைப்பக்குவத்தில் தயாரிக்கப்பட்ட இதனை இரண்டு நாட்களுக்கு வைத்திருக்கலாம்..

இதில் Vinegar, Soya sauce, Lemon juice (citric acid), மோனோ சோடியம் குளுட்டமேட்  (Ajinomoto) வகையறாக்கள் சேர்க்கப்படவில்லை.. 

அவை  சேர்க்கப்பட வேண்டிய அவசியமும் இல்லை..

வேற்றிடங்களில் இருந்து Chilli Sauce, Sweet sauce கோஷ்டிகள் வேட்டைக்குக் கிளம்பும்போது Taste, Clour, Long Shelf life - இவற்றுக்காக பல  விஷமிகளையும் சேர்த்துக் கொண்டு வருவதாகத் தெரிகின்றது..

எனவே கவனம்!..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்!..

***

 நன்றி.. வணக்கம்..

44 கருத்துகள்:

  1. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு..

    தமிழ் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. இன்று சமையற் கூடத்துக்கு வருகை தரவிருக்கும் அனைவருக்கும் நல்வரவு..
    நன்றி..

    பதிலளிநீக்கு
  3. இதெல்லாம் வீட்டில் செய்வதற்கான அவசியம் இல்லை..

    எனவே இதைக் குறித்த படங்கள் எதுவும் பதிவில் வைப்பதற்கு தோது படவில்லை!.

    பதிலளிநீக்கு
  4. செஷ்வான் சாஸ் செய்முறை நன்று. மகள் இதுபோல சாஸ் வகையறா அவ்வப்போது செய்வாள். நான் அந்தப் பக்கம் மறந்தும் தலை வைத்துப் படுக்க மாட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பினுக்கு நன்றி நெல்லை....

      இந்த செய்முறை முழுக்க முழுக்க இயற்கையானது....

      நீக்கு
  5. நான் சாப்பிடும் பொங்கல் உப்புமா சப்பாத்தி வகையறாக்களுக்கு, இதெல்லாம் எதற்கு?

    வாழ்க்கையில் இன்னமும் நூடுல்ஸ், பாஸ்தா பக்கமே போகாதவன் நான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாஸ் வகையறா நானும் அதிகம் உபயோகிப்பதில்லை.

      நீக்கு
    2. இருந்தாலும் அரேபிய சமையல் கூடத்துடன் வாழ்க்கை முறை சில காலம்..


      முட்டை புலால் என்று எதையும் சேர்க்காமல் நானே நூடுல்ஸ், பாஸ்தா இவைகளை அவ்வப்போது செய்து கொள்வேன்..

      நீக்கு
    3. நூடுல்ஸ் எப்படி நீங்களே தயார் செய்வீர்கள்?  மைதா வைத்தா?

      நீக்கு
    4. முழுக்க முழுக்க இயற்கையான செய்முறை என்பதால் மேலதிகக் கெடுதல்கள் எதுவும் இதில் இல்லை..

      நம்பி சாப்பிடலாம்..

      நீக்கு
    5. நூடுல்ஸ் தனித்துவமாக செய்வதற்கு வாய்ப்புகளே அங்கு இல்லை.. சிலவகை இந்தியத் தயாரிப்புகள் தான் எனக்கு இஷ்டமானவை..

      மேகியின் ஆபத்து தெரிந்த பின் அந்தப்பக்கம் தலை வைத்துக்கூட படுப்பதில்லை..

      நீக்கு
    6. பதஞ்சலி பொருட்கள் வாங்கினால் ஒரு பாக்கெட் கோதுமை நூடுல்ஸ் கொடுப்பாங்க இலவசமாக. அந்தச் சமயம் செய்து சாப்பிட்டது தான். அதுவும் நான் உப்புமாப் போலத் தக்காளி, வெங்காயம் சேர்த்தே கிளறிடுவேன். மாகி நூடுல்ஸ் எல்லாம் சாப்பிட்டதே இல்லை. முதல் முதலாக எனக்குத் தெரிந்து டாப் ரமன் என்றொரு நூடுல்ஸ் தான் இந்தியாவில் அறிமுகம் ஆச்சு.

      நீக்கு
  6. பசங்க ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் பண்ணினாலோ இல்லை அபூர்வமாக பிட்சா துண்டு சாப்பிட்டாலோ டொமட்டோ கெட்சப் தொட்டுக்கொள்வேன். உதுதான் அதிகபட்ச வேறுபட்ட உணவின் உபயோகம் எனக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் நூடுல்ஸ், பாஸ்தா அவ்வப்போது சாப்பிடுவேன்.  அதில் பெரும்பாலும் சாஸ் ஊற்றாமல்தான் சாப்பிடுவேன்!

      நீக்கு
  7. ஆமாம்... தயிர் சாத்த்துக்கு இதெல்லாம் தொட்டுப்பாங்களா துரை செல்வராஜு சார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தயிர் சாதத்துக்கு வெல்லம், மாம்பழம் எல்லாம் தொட்டுக்கும்போது இதைக் கூட தொட்டுக்க கொள்பவர்கள் இருப்பர்கள்!  நானில்லை!

      நீக்கு
    2. தயிர் சாதத்துக்கு மாம்பழம் ச ர்க்கரைப் பாகு போல இதுவும் களை கட்டுமே!..

      நீக்கு
  8. கைவிட்டுடாதீங்க...... ஜெடிஎஸ்ஸின் வாக்காளர்கள் ஜாதி மற்றும் முஸ்லீம் வாக்காளர்கள். முஸ்லீம் வாக்காளர்கள் இப்போ காங்கிரஸ் பக்கம். பாவம் தேவேகௌடா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை, இவர்கள் கொள்ளையடிக்க மக்கள் கைவிடாமல் வாக்களிக்க வேண்டுமாம்.  என்ன கேவலம்..  கடுமையான கட்டுப்படுகளை அரசியல்வாதிகளுக்கு விதித்தால் இப்படி எல்லாம் இவர்கள் 'சேவை செய்ய' வருவார்களா, கெஞ்சுவார்களா?

      நீக்கு
    2. சீனா தென் கொரியா நினைவுக்கு வருகின்றன..

      நீக்கு
    3. இதுவும் சாஸ் செய்முறையில் வந்திருக்கா என்ன? :P

      நீக்கு
    4. சீனா தென் கொரியா என்றால் ஊழல் பேர்வழிகளுக்குக் கிடைக்குதே - டுமீல் பரிசு.. அதைச் சொன்னேன்!..

      நீக்கு
  9. என் புக்ககத்தில் இதெல்லாம் ஜகஜம். அல்வா, மைசூர்ப்பாகில் இருந்து வாழைப்பழம், மாம்பழம், போன்ற எல்லாப் பழங்களையும் குழம்பு சாதம், மோர் சாதத்திற்குத் தொட்டுப்பாங்க. கல்யாணம் ஒரே வாரத்தில் ஒரு பெரிய கல்சட்டி நிறைய மாங்காய்ப் பச்சடி வைத்திருந்தார் மாமியார். எனக்கோ ஒரே ஆச்சரியம், இவ்வளவை வைச்சுண்டு என்ன பண்ணுவாங்கனு. கடைசியில் பார்த்தால் வத்தக்குழம்புக்குத் தொட்டுக்கவாம். அது தெரியாம நான் பாட்டுக்கு ஒரே ஒரு கரண்டி எல்லோருக்கும் ஊற்றிட்டுப் பேசாமல் இருக்கவும் ஒரே உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தான். அப்புறமா மாமியார் வந்து விம் போட்டு விளக்கினார்.இங்கே நம்மவரோ நேர்மாறாக மாங்காய்ப் பச்சடி செய்தாலே உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தான். குழம்பு/சாம்பார் சாதங்களுக்குத் தொட்டுக்கக் காய்கள் தான் வேணும். மோர் சாதத்துக்கோக் காரசாரமாய் ஆவக்காய், மாவடு, எலுமிச்சை ஊறுகாய் வகைகள். :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாரம்பரிய சமையலுக்கும் பந்தி விசாரணைக்கும் நிகர் வேறில்லை..

      மகிழ்ச்சி..
      நன்றியக்கா..

      நீக்கு
  10. வடக்கே தக்காளி விலை மலிவாக நிறையக் கிடைக்கும் என்பதால் தக்காளி சாஸ், ஜாம் வகைகள் அடிக்கடி பண்ணி இருக்கேன். வொயிட் சாஸ் சூப்புக்குத் தேவைப்படும் என்பதால் அதுவும் எப்போவும் செய்து வைச்சுப்பேன். இப்போல்லாம் இதெல்லாம் சாப்பிட்டோமா ஒரு காலத்தில் என்னும்படி தென்னிந்திய பிராமணர் உணவு மட்டும் தான். எப்போவானும் தக்காளி சாதம், வெஜிடபுள் சாதம்னு பண்ணுவேன். குழந்தைகள் வரச்சே அடிக்கடி பண்ணிக் கொடுப்பேன்.

    பதிலளிநீக்கு
  11. மிக நல்லதொரு வித்தியாசமான குறிப்பை பகிர்ந்திருக்கிறீர்கள்! கடையில் வாங்கும் சாஸ் வகைகள் கெமிக்கல்கள் கலந்தவை என்பதால் இதை வீட்டிலேயே சுகாதாரமாக செய்து வைத்துகொள்ளலாம். பாஸ்தா வகைகள், நூடுல்ஸ் செய்யும்போது இறுதியில் இந்த சாஸ் ஒரு ஸ்பூன், சிறிது வெண்ணெய் கலந்து உபயோகிப்பது சுவையை அதிகரிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. அரேபியன் ஐயிட்டம் நம்மூர் டாஸ்மாக் கோஷ்டிகளுக்கு பிடிக்காதே...

    செய்முறை விளக்கம் நன்று ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொன்னீர்கள்.. ஆனாலும், இங்கே அரேபிய முறையில் சுட்ட கறி (ஆடு/ மாடு/ நாய்/ பூனை ??..) ஏவாரம் பிய்த்துக் கொண்டு போகின்றதே!..

      தங்கள் கருத்துக்கு மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  13. வெள்ளிக்கிழமை இரவு பெரும்பாலும் பாஸ்தா அல்லது நூடுல்ஸ்தான், இந்த சில்லி சாஸ் செய்முறை எளிதாக இருக்கிறது. செய்து வைத்துக் கொள்ளலாம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  15. மிக எளிதாக Chilli Sauceசெய்யும் முறை சொல்லிவிட்டீர்கள். நன்றி.
    பிள்ளைகள் ஊருக்கு வரும் போது செய்து கொடுக்கலாம்.
    அவர்கள் தான் பாஸ்தா, நூடுல்ஸ் எல்லாம் விரும்பி சாப்பிடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  16. பிள்ளைகள் ஊருக்கு வரும் போது தாராளமாக
    செய்து கொடுக்கலாம்..

    அன்பின் கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    தங்களது திங்கள் பதிவு நன்றாக உள்ளது. இதெல்லாம் முன்பு நாங்கள் எப்போதுமே பயன்படுத்தியது இல்லை. இப்போது வீட்டில் மருமகள்கள் வந்த பின், நூடுல்ஸ், பீட்சா, பிரட் இவற்றிற்கு வாங்கி பயன்பாடு நடக்கிறது. அவர்களுக்கு பிடித்தமானதை சாப்பிடுகிறார்கள். என்னையும் சில சமயம் வறுப்புறுத்தி சாப்பிட வைப்பார்கள். நூடூல்ஸ் பிரட் பழகி விட்டது. ஆனாலும் இதை அவ்வளவாக விட்டுக் கொள்வதில்லை.

    தங்கள் செய்முறை ராசாயண கலப்பிடமில்லாமல் நன்றாக உள்ளது இப்படியே செய்ய முயற்சிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசாயனக் கலப்பு இல்லாத் செய்முறை.. நேரம் கிடைக்கும் போது செய்து பார்க்கவும்..

      தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!