சனி, 13 மே, 2023

விளையும் பயிர்... மற்றும் நான் படிச்ச கதை...

 

விளையும் பயிர்...வழக்கம்தான்.  ஆனாலும் பாராட்டுகள்.

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும்....

= = =  == = = = = =    = = = = = = = = = =
தகவல் : நெல்லைத்தமிழன் 

மின் தூக்கி - தொழில்நுட்பவியலாளர் ! 

இன்று எங்கள் தலைமை அஞ்சலகத்தில் மின்தூக்கி பழுதடைந்திருந்ததை service செய்து கொண்டிருந்தார்கள். Service technician யார் என கவனித்ததில் இரு இளவயதுப் பெண்கள். 

அசால்டாக பழுதடைந்த lift இன் மேல் ஏறி நின்று பழுதை சரி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் பேசியதில் அவர்கள் Johnson Lifts கம்பெனியில் பணி செய்யும் டெக்னீசியன்களாம்.

ITI Electrical படித்து இந்தப் பணிக்கு வந்துள்ளார்கள் இவர்கள். "இந்தியாவிலேயே நாங்கதான் மேடம் முதல் முறை பணியமர்த்தப்பட்ட   lift டெக்கனீசியன்கள்" என்று பெருமிதத்தோடு கூறினார்கள். 

ஓமந்தூரார் மருத்துவமனை, எம். எல்.ஏ ஆஸ்டல் மற்றும் சென்னை அண்ணா நகரில் பல கம்பெனிகளில் பழுதடைந்த மின்தூக்கிகளை சரிசெய்துள்ளதாகத் தெரிவித்தார்கள். 

உங்கள் புகைப்படத்தை பகிர்ந்து முகநூல் பதிவிடலாமா எனக் கேட்ட பொழுது மகிழ்ச்சியுடன் சம்மதித்தார்கள் சாதனையாளர்களான சுஸ்மிதா மற்றும் பூஜா.. .   அந்த ருத்ராட்சம் தனி அழகு🕉️🕉️🙏🏻

வாழ்த்துகள் பெண்களே. Hats off girls.

 -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நான் படிச்ச கதை (JKC)

ஏட்டில் இல்லாத மஹாபாரதக்  கதைகள்.

5&6

“மகாபாரதக் கதைகளை ஏட்டில் படித்தவர்கள் பலர் ஆகும். அக்கதையை ஏட்டில் படிக்காதவர்களிடையே பல வேறு பட்ட கதைகள் வழக்கில் உள்ளன. அவை ஏட்டில் இடம் பெறாத நாட்டுப்புறக் கதைகள். அவை செவி வழிக் கதைகளாக இருந்தாலும் நன்மை பயப்பனவே தவிர தீமை விளைவிப்பன அல்ல.

5

“துரோணரும் ஆடுகளும்”

கோவேந்தன் 

துரியோதனன் முதலிய நூற்றுவர்க்கும் தருமன் முதலிய ஐவருக்கும் வில்லாசிரியர் துரோணர். 

அவருக்கு ஒரே மகன். பெயர் அசுவத்தாமன். அவன் வயிற்றில் பிறக்காமல் இறையருளால் தானே தோன்றியவன். அவனுக்கு தாய்ப்பால் கிடைக்கவில்லை. 

பசும்பால் வாங்குவதற்கும் வசதி இல்லை. தன் நண்பனான பாஞ்சால நாட்டின் மன்னனான துருபதனிடம் சென்று தனக்கு ஒரு பாற்ப்பசு தரும்படி கேட்டார். 

பாஞ்சாலன் பாற்பசு தராமல் துரோணரை அவமதித்து அனுப்பினான். துரோணர் பிள்ளைக்கு பால் கிடைக்காமல் அவதிப்படுகிறார் என்று கேள்விப்பட்ட ஒரு வள்ளல் இரு பாலாடுகளை வழங்கினார். 

அந்த ஆடுகளைக் கண்ட கள்வன் ஒருவன் அவற்றைத் திருடத் தருணம் பார்த்துக் கொண்டிருந்தான். 

ஓர் அரக்கன் துரோணரைத் தனக்கு ஆகாரம் ஆக்கிக் கொள்ளக் கருதியிருந்தான்.

 

ஒரு நாள் கள்வன் ஆடுகளைத் திருட துரோணர் ஆசிரமத்தின் அருகே பதுங்கியிருந்தான். 

அந்நேரம் அரக்கனும் துரோணரைப் பிடித்து உண்பதற்காக அங்கே வந்தான். 

அரக்கனும் திருடனும் சந்தித்துக் கொண்டனர். ஆடு திருட வந்ததாக திருடன் சொன்னான். முனிவரைப் புசிக்க வந்ததாக அரக்கன் கூறினான். 

இருவரில் யார் முதலில் தம் தொழிலை முடிப்பது என்பதில் விவாதம் ஏற்பட்டது. அரக்கன் “நான் தான் முதலில் முனிவரைத் தின்பேன்” என்றான். திருடன் “நான் தான் முதலில் ஆடுகளைத் திருடுவேன்” என்றான். விவாதம் வலுத்தது.


துரோணர் நிலைமையை உணர்ந்து கொண்டார். தவ வலிமையால் அரக்கனை சாம்பலாக்கி விட்டார். திருடனைக் கல்லாகும்படி சபித்தார். குரு நிலத்தை அடுத்த காட்டில் இன்றும் அந்தக் கல் இருப்பதாக சொல்கின்றனர். 

6

“அர்ச்சுணன் அம்புக்கு அஞ்சிய தேவர்கள்”.

கோவேந்தன்

பாண்டவரும் கௌரவரும் துரோணரிடம் வித்தை பயின்றனர். பாண்டவர் புத்திசாலிகள். ஆகையால் வித்தையில் மிக மிக சிறப்புற்றனர். கௌரவர் எவ்வளவு  முயன்றும் பின் தங்கியே நின்றனர். 

ஐராவத பூசைப் பெருவிழா நடத்தினால் பாண்டவர் போல் புத்திசாலிகள் ஆகலாம் என்று கௌரவர் கருதினர். பெரும் பொருட் செலவு செய்து ஐராவத யானையின் உருவம் அமைத்து பூசை செய்து முடித்தனர் . தானம் தட்சிணைகள் தாரளமாக வழங்கினர். 

இதைக் கண்ட குந்தி தேவிக்கும் ஒரு ஆசை பிறந்தது. நம் மக்களும் இத்தகைய ஐராவத பூசை செய்தால் சிறப்படையலாம் என்று சிந்தித்தாள். ஆனாலும் நாம் கௌரவர் போல் பொருட் செலவு செய்ய இயலாதே என்று கவலையுற்றாள். 

அன்னையின் கவலை அறிந்த அர்ச்சுணன் அக்கவலையை தான் கண்டிப்பாக போக்குவதாக உறுதி அளித்தான். 

கௌரவர் செய்த பூசையை விடப் பலமடங்கு சிறப்பாக செய்து காட்ட வேண்டும் என்று கருதினான் அர்ச்சுணன். 

ஐராவதத்தின் உருவத்தைத் தானே அவர்கள் பூசித்தார்கள். நாம் ஐராவத யானையை நேரில் கொண்டு வந்து பூசிப்போம் என்பது அவன் திட்டம். 

ஐராவதத்தை வரவழைப்பது எப்படி? தேவர் தலைவனுக்கு ஓர் கடிதம் எழுதினான் அர்ச்சுணன். அதைத் தன அம்பில் பூட்டி விண்ணுலகுக்கு ஏவினான். தேவேந்திரன் சபையில் அவன் காலடியில் சென்று விழுந்தது அந்தக் கடிதம். 

“அன்புள்ள தந்தையே கௌரவர்கள் எங்களுக்கு இழைத்து வரும் தீமைகள் கொஞ்சமல்ல  என்பதை அறிவீர்கள். அண்மையில் ஐராவத பூசை விழா நடத்தி பெரும் புகழ் பெற்றமையால் இறுமாப்பு அதிகமாகி விட்டது. அந்த இறுமாப்பினால் எங்களுக்கு மேலும் பல தீமைகள் செய்ய திட்டங்கள்  தீட்டி வருகின்றனர். கௌரவர் எடுத்த விழாவை விட சிறப்பாக நாங்கள் விழா கொண்டாடினால் தான் அவர்கள் கர்வம் அடங்கும். எங்களுக்குத் தீமை செய்யாமல் இருப்பர், ஐயா, ஆதலால் தாங்கள் ஐராவதத்துடன் விழாவுக்கு வந்து விழாவை சிறப்பிக்க கோருகிறேன்” என்று அக்கடிதத்தில் எழுதப் பட்டிருந்தது. 

கடிதத்தைக் கண்ட இந்திரன் புறப்படத் தயாரானான். தேவலோகத்திலுள்ள தன பரிவாரங்களையும் உடன் வருமாறு கோரினான். 

மானிடர் அழைப்பை வானவர் ஏற்பது இழிவான செயல் என்று அவர்கள் வர மறுத்தனர். இந்திரன் மனைவி இந்திராணி கூட வர மறுத்தாள். 

தேவேந்திரன் என்ன செய்வான். அப்போது அங்கு வந்த நாரதரிடம் “நாரத பகவானே! அர்ச்சுணன் நடத்தும் பூசைக்கு வர தேவர்கள் யாரும் இசையவில்லை. நான் மட்டும் அவர்கள் விருப்பத்திற்கு மாறாக எப்படி செல்வது. இதற்கு ஒரு வழி நீவிர் தான் கூற வேண்டும்.” என்றான் இந்திரன். 

தேவர்கள் வர மறுத்த செய்தி நாரதர் மூலம் அறிந்த அர்ச்சுணனுக்கு சினம் மூண்டது. விண்ணுலகத்தை நோக்கி தன் காண்டீபத்தால் அம்புகளை செலுத்தினான். 

அம்பின் அடி  பொறுக்க முடியாத தேவர்கள் செய்வது அறியாது திகைத்தனர். தங்கள் குருவாகிய வியாழ பகவானை அணுகினர். “என்ன செய்யலாம் அர்ச்சுணன் சினத்தில் இருந்து எப்படி தப்பலாம்”  என்று யோசனை  கேட்டனர். 

வியாழ பகவான் கூறிய அறிவுரைப்படி தேவர்கள் அனைவரும் ஐராவத யானையுடன் பூசை நடக்கும் இடத்துக்கு வந்தனர். அர்ச்சுணன் அம்புகளால் ஆகாயம் வரை ஒரு ஏணி அமைத்தான். அதன் வழியாக மகளிரும் மைந்தரும் சுகமாக இறங்கி வந்தனர்.


பூசைக்குரிய செலவு முழுதும் விண்ணவர் ஏற்றனர். கௌரவரின் பூசையை விட பல மடங்கு சிறப்பாக பாண்டவர் பூசை அமைந்தது. 

நாட்டு மக்கள் மகிழ்ச்சியில் துள்ளினர். கௌரவர் மட்டும் பொறாமை தீயில் வெதும்பினர் என்று சொல்லவும் வேண்டுமோ?

19 கருத்துகள்:

 1. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
  ஊக்கம் உடையான் உழை. 

  தமிழ் வாழ்க..

  பதிலளிநீக்கு
 2. காக்க காக்க
  கனக வேல் காக்க..
  நோக்க நோக்க
  நொடியில் நோக்க..

  இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
  பிரார்த்திப்போம்..

  எல்லாருக்கும் இறைவன்
  நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு

 3. அந்த ருத்ராட்சம் தனி அழகு தான்..

  சுஸ்மிதா, பூஜா மேன்மேலும் உயர்ந்திட வாழ்த்துவோம்..

  நலம் வாழ்க!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உழைப்பாளி இல்லாத ஊருதான் ஏதுமில்லேய்யா..  ஆர் ஹோய்யா..

   நீக்கு
 4. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா... வணக்கம். நன்றி சொல்வோம் இறைவனுக்கு.

   நீக்கு
 5. சுஸ்மிதா, பூஜா..

  இருவரையும் பார்க்கும்போதே மகிழ்ச்சியாக இருக்கின்றது..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னும் அந்தசெய்தியை விட்டே வெளியில் வரவில்லையா நீங்கள்!!  ஹா..  ஹா..  ஹா...

   நீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. இன்றைய பகிர்வில் பெரும்பான்மையான விளையும் பயிர்களை பாராட்டுவோம். நீட் தேர்வு எழுத மாணவிக்கு உதவிய போலீஸ்காரர்களுக்கு நன்றி.

  இன்றைய கதை பகிர்வும் அருமை. இந்தக் கதைகளையும் நான் அந்த ஏட்டில் இல்லாத கதைகள் ஏட்டில் படித்த நினைவு உள்ளது.

  துரோணரால் சபிக்கப்பட்ட அந்த கல் இன்றும் அங்கிருக்கிறதா? ஆச்சரியம். அப்படியானால் அசுவத்தாமன் இன்னமும் உயிருடன் சீரஞ்சீவியாக இருப்பதாக பல செய்திகள் படிக்கிறேன். இதுவும் உண்மையாக இருக்குமோ? தெரியவில்லை.

  செய்தி அறையை காணவில்லையே? இன்றைய அனைத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 7. நல்லா படிச்சோம், டீச்சர், கிளெர்க் வேலை கிடைத்தவுடன் கல்யாணம் என்றில்லாமல், டெக்னிகல் வேலைகளுக்குப் பெண்கள் நுழைவதில் மகிழ்ச்சி. இதுவே பலருக்கு உத்வேகமாக இருக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 8. மகாபாரதக் கதைகள் நன்று.

  துரோணர் வரலாறும் ரொம்பவே ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். மகாபாரதம் எனக்கு மிக விருப்பமான ஒன்று. சுருக்கமாக எபியில் எழுதணும் என நினைத்துள்ளேன், ஆரம்பக் கதைகள் நம்மால் ஜீரணிக்கமுடியாத்தாக இருந்தபோதிலும்.

  பதிலளிநீக்கு
 9. //சுஸ்மிதா, பூஜா//

  மின் தூக்கி தனை அன்புக் கண் தூக்கி நலம் செய்யும்
  பொன் தூக்கிப் பூவினமே
  புகழ் தூக்கி வளம் தூக்கி
  இருள் நீக்கி இனிதென்றும்
  வாழிய வாழியவே!..

  பதிலளிநீக்கு
 10. தொழில் நுட்பவியலாளர்களுக்கு வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 11. இன்றைய பாசிட்டிவ் செய்திகள் சிறப்பு. மஹாபாரத கதைகளையும் படித்து ரசித்தேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 12. பொசிரிவ் செய்திகள் கதை பகிர்வு அருமை.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!