திங்கள், 15 மே, 2023

"திங்க"க்கிழமை  :  தக்காளி Sauce   - துரை செல்வராஜூ ரெஸிப்பி

 தக்காளி Sauce 

தக்காளிப் பழம் 250 கிராம்
நாட்டுச் சர்க்கரை - 2 tbsp
மிளகாய்த்தூள் -  1 tbsp
சின்ன வெங்காயம் 100 கிராம்
பூண்டு - 3 பல்
இஞ்சி - சிறு துண்டு
பட்டைத்தூள் - 1/4 tsp
கிராம்புத்தூள் - 1/4 tsp
எலுமிச்சைச் சாறு - 2 tbsp
உப்பு - 1/2 tbsp

நல்ல தக்காளியாக வாங்கிக் கொள்ளவும். பழுத்தது தான் ஆனால் கனிந்திருக்கக் கூடாது..

அப்போதுதான் சாஸ்  நன்றாக இருக்கும். 

வீட்டில் அரைத்த மிளகாய்த் தூள் எனில் சாலச் சிறந்தது..

பட்டை கிராம்பு இவற்றை உலர்த்தி நாமே அரைத்து வீட்டில் வைத்திருப்பதும் நல்லது..

இனி செய்முறை:

ஒரு பாத்திரத்தில் நீரைக் கொதிக்க வைக்கவும்.. தண்ணீர் கொதித்ததும் அதில்  தக்காளிகளை இட்டு மூடி அடுப்பையும் நிறுத்தி விடவும்..

வெங்காயம், பூண்டு, இஞ்சியைக் கழுவி தோல் நீக்கி  மெலிதாக நறுக்கிக் கொள்ளவும். 

கொதி நீரில் இருந்து தக்காளிகளைத் தனியே எடுத்து தோலை உரித்து விடவும். 

தக்காளியுடன் மிளகாய்த் தூள், உப்பு, சர்க்கரை, இஞ்சி, பூண்டு,  பட்டை, கிராம்பு தூள் எல்லாவற்றையும் சேர்த்து  மிக்ஸியில் இட்டு நன்றாக அரைத்து வடிகட்டியில்  வடித்து எடுத்துக் கொள்ளவும். 

வடிகட்டிய தக்காளி விழுதுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து கலக்கி -
வேறொரு பாத்திரத்தில் ஊற்றி  அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து நன்றாகக் கிளறவும். இந்த விழுது நீர்க்க இருக்கக் கூடாது. 

பதமாக வந்தவுடன்  அடுப்பிலிருந்து இறக்கி  ஆறியதும் சுத்தமான கண்ணாடி பாட்டிலில் ஊற்றி மூடி வைத்துக் கொள்ளவும். 

Fried Rice, Noodles, Macaroni,
Spaghetti, Cauliflower Manchurian,
Potato Wedges ஆகிய எல்லாவற்றுக்கும் இது கூட்டாளி ஆகிவிடும்..

ரசாயனக் கலப்பற்ற இது இருவருக்கானது.. இரண்டு நாட்கள் அறை வெப்ப நிலையில் வைத்துக் கொள்ளலாம்..

நம்முடைய நலம் நம்முடைய கையில்!..
***

33 கருத்துகள்:

 1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்..... வீட்டிலேயே தக்காளி சாஸ் செய்யும் முறை நன்று. பொதுவாக நான் சாஸ் அதிகம் விரும்புவதில்லை. தவிர்க்க முடியாத சமயத்தில் மட்டுமே பயன்படுத்துவேன் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி வெங்கட்..

   நலம் வாழ்க..

   நீக்கு
 2. காக்க காக்க
  கனக வேல் காக்க..
  நோக்க நோக்க
  நொடியில் நோக்க..

  இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
  பிரார்த்திப்போம்..

  எல்லாருக்கும் இறைவன்
  நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்க.. வாங்க துரை செல்வராஜூ அண்ணா.. வணக்கம்.

   நீக்கு
 3. இன்று சமையல் கூடம் காண்பதற்கு வருகை தரும் அனைவருக்கும் அன்பின் நல்வரவு..

  இன்று எனது குறிப்பினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

  பதிலளிநீக்கு
 4. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

  இன்றைய திங்கள் பதிவாகிய தங்களது தக்காளி சாஸ், அதுவும் வீட்டிலேயே சுவையாக செய்யும் செய்முறை நன்றாக உள்ளது. இதுவரை தக்காளியை பயன்படுத்தி இந்த மாதிரி மட்டும் செய்ததில்லை. செய்முறையும் சுருக்கமாகவும், சுவையாகவும் உள்ளது. ஒரு தடவை செய்து பார்க்கிறேன். இங்கு இன்று நல்லதொரு பதிவை வெளியிட்ட தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 6. இதில் முழுக்க முழுக்க இயற்கையான பொருட்கள் மட்டுமே!..

  ஒருமுறை வீட்டில் செய்து பாருங்கள்..

  அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 7. எனக்கு கெச்சப் மாத்திரம், பிட்சா அல்லது ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸுக்குத் தொட்டுக்கொள்ளப் பிடிக்கும். மற்றபடி தக்காளி சாஸ் எனக்கு உபயோகமில்லை.

  ஏன் சாஸில் வெங்காயம் சேர்க்கிறீர்கள்? அது இல்லாமலும் நன்றாக இருக்குமே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சின்ன வெங்காயம் சற்று மருத்துவ குணம் கொண்டது..

   தங்களுக்கு விருப்பம் இல்லையேல் விட்டு விடலாம்!..

   நெல்லை அவர்களின்
   வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நலம் வாழ்க..

   நீக்கு
 8. இங்கு ஏதோ ஒரு மாத்த்தில் 60 ரூபாய் போகும் தக்காளி, பெரும்பாலும் கிலோ 20 ரூபாய்தான். அதிலும் இரு மாதங்கள் 10-12 ரூபாக்கு வந்துவிடும்.

  தக்காளித் தொக்கு (வெங் இல்லாமல்) பசங்களுக்குப் பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தக்காளியின் விலை நிலை இல்லாதது..

   அப்படியும் இப்படியும் தான்..

   நீக்கு
 9. செய்முறை நன்று. புதிய ரெசிப்பி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நலம் வாழ்க..

   நீக்கு
 10. பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..

   நலம் வாழ்க..

   நீக்கு
 11. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்வரவு..

   அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

   வாழ்க நலம்..

   நீக்கு
  2. வணக்கம் சகோதரி

   நலமா? தங்களை இன்று இங்கு கண்டதும் மனதிற்கு மகிழ்வாக உள்ளது. பதிவுலகத்திற்கு பழையபடி வருகை தந்தமைக்கு நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  3. வரவேற்போம்..

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
  4. வணக்கம் கமலா ஹரிஹரன், நலமாக இருக்கிறேன்.
   உங்களை எல்லாம் பார்த்தவுடன் எனக்கும் ஆறுதல்.
   முடிந்த போது எல்லாம் வருவேன்.

   நீக்கு
  5. வணக்கம் சகோதரி

   மகிழ்ச்சி. வாருங்கள். தங்கள் வரவை அன்புடன் வரவேற்கிறேன். உடன் பதிலளித்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 12. செய்முறை விளக்கம் படிக்கும் போது மிக எளிதாக செய்து விட முடியும் எனத் தெரிகிறது. செய்து பார்க்க வேண்டும்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. செய்து பார்க்கவும்..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

   நலம் வாழ்க..

   நீக்கு
  2. செய்முறை எளிது தான்..

   அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி... கருத்துரைக்கு நன்றி..

   வாழ்க நலம்

   நீக்கு
 13. சுலபமான செய்முறை. வீட்டிலேயே தயாரித்து ஆரோக்கியமாக சாப்பிடலாம். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   வாழ்க நலம்..

   நீக்கு
 14. நான் நிறையப் பண்ணி இருக்கேன். ஆனால் மசாலா சாமான்களை எல்லாம் ஒன்றிரண்டாகப் பொடித்துக்கொண்டு ஒரு வெள்ளைத்துணியில் மூட்டையாகக் கட்டிக் கொதிக்கும் தக்காளிச் சாறுக் கலவையில் போட்டு விடுவோம்.பூண்டும் சேர்ப்பது உண்டு. இப்போல்லாம் பண்ணுவதே இல்லை. பூண்டு ஒத்துக்கறதும் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் மேலதிக செய்திகளும் கருத்துரையும் மகிழ்ச்சி..
   நன்றியக்கா..

   வாழ்க நலம்..

   நீக்கு
 15. வீட்டு தயாரிப்பான தக்காளி சோஸ் அருமை.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!