புதன், 10 மே, 2023

சுய சரிதம் - படிப்பதில் எது உங்கள் வரிசை?

 

நியூஸ் ரூம் 

ஒப்புதல் வாக்குமூலம்?!

அட, வெளில வாங்கப்பு.. 

இந்த...  ஒரு வருஷத்துல 32,000 கோடி..  அது மாதிரி நல்ல ஸ்கீம் ஏதும் இல்லீங்களா?


======================================================================================================



நெல்லைத்தமிழன் : 

ஒரு சென்சிடிவ் கேள்வி. ஆனால் நான் நிறைய நாள் யாரிடமாவது கேட்கணும் என்று நினைத்திருந்தேன். வைணவத்தில், ஆழ்வார் பதின்மரும், ஆண்டாள், மதுரகவியாழ்வாரும், அவர்கள் செய்த திவ்யப்ரபந்தங்களை சேவிப்பது (சொல்வது) உண்டு. ஆனால் இதேபோல, திருமுறைகளையும் எல்லா பிராமணர்களும் சேவிப்பதில்லை என்பதைக் காணுகிறேன். அவர்களது பூஜை அறையில், நாயன்மார்களோ இல்லை திருமுறைகளை உண்டாக்கியவர்களையோ வணங்குவதில்லை என்பதைப் பார்க்கிறேன். இதன் காரணம் என்ன?  கீதா சாம்பசிவம் போன்று இவற்றின் பாரம்பர்யத்தைத் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

# மதம் குறித்த நுணுக்கங்கள் எனக்கு அதிகம் தெரியாது.  ஆழ்வார்கள் பன்னிருவர் என்றும், பதின்மர்  என்றும் ஏன் சொல்கிறார்கள் என்பது ஒரு எடுத்துக் காட்டு. 

அடியார்களை வணங்குவது பிற்காலத்தில் அறிமுகம் ஆன வழிமுறையாக  இருக்கலாம் . பகவானைக்காட்டிலும் பாகவதர் ஆன்ம விடுதலைக்கு உதவி என்பது பக்தி இயக்கம்  வலுப்பெற்ற பின்  வந்த கருத்தாக இருப்பின், காலப் போக்கில்  அடியார் வழிபாடு முக்கியத்துவம் பெற்றது புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றுதான்.

& கீதா சாம்பசிவம் அவர்களின் பதில் : இங்கே சென்று படிக்கவும். 

பாட்டு எழுதறவன், நடிப்பவன் பாடறவனுக்கெல்லாம் பத்மவிபூஷன் கொடுப்பதைவிட சமூகச் சிந்தனையாளர்களுக்கு மட்டுமே பத்ம விருதுகள் கொடுக்கணும்னு நினைக்கிறேன். உங்க அபிப்ராயம் என்ன?

# எல்லாத் துறைகளிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருபவர்களுக்கு ஒரு அங்கீகாரமாக , ஊக்குவிப்பாக தேசிய விருதுகள் கொடுப்பது சரிதான். ஆனால் இவை அரசியல் விருப்பு வெறுப்பு அடிப்படையில் தரப்படுவதும் உண்மைதான்.

சில இப்படி சில அப்படி என்றுதான் இருக்கும்.

$ ஏதேனும் ஒரு சமூக சிந்தனையாளரை அடையாளம் காட்டுங்களேன். 

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

உங்கள் முன் ஒரு நடிகரின் சுய சரிதம், ஒரு அரசியல்வாதியின் சுய சரிதம், ஒரு விளையாட்டு வீரரின் சுய சரிதம், ஒரு தொழிலதிபரின் சுய சரிதம், ஒரு விஞ்ஞானியின் சுய சரிதம் எல்லாம் இருந்தால் எந்த வரிசையில் படிக்க விரும்புவீர்கள்?

# தொழிலதிபர்,  விஞ்ஞானி,   விளையாட்டு வீரர், நடிகர், அரசியல் வாதி என்ற வரிசை சரியாக இருக்கலாம்.

முக்கியமாக அறிய வேண்டியது நம் மதிப்பிற்குரிய எல்லாரது சுய சரிதமும் சுவாரஸ்யமாக இருக்காது. சுய சரிதங்கள் பெரும்பாலும் அவரவரது  ஞாபக மறதி, அதீத மிகை இரண்டை  மட்டுமே நமக்கு உணர்த்துகின்றன என்று ஒரு ஆங்கிலப் பொன் மொழி உண்டு. An autobiography reveals nothing deficient about the author except his memory (and capacity for factual reporting).

ஒருவர் வாழ்க்கையில் ஒரு சில பகுதிகள் மட்டுமே " சுவாரசியம்" உள்ளதாக இருக்கும். ஆனால் சுய சரிதைகள் லாக்டோஜென்-ல் தொடங்கி வாக்கிங் ஸ்டிக் வரை போகும்.

& அரசியல்வாதியின் சுயசரிதம் படிக்கமாட்டேன். அதுதான் எல்லாப் புத்தகங்களையும்விட கனமாக, அதிக பக்கங்கள் (வள வள என்று பேசுபவர், எழுதும்போதும் அப்படித்தானே எழுதுவார்!) கொண்டதாக இருக்கும். அதை எடைக்கு விற்றுவிட்டு, அந்தக் காசில் பட்டாணி வாங்கி வைத்துக்கொண்டு, அதைக் கொறித்தபடியே, விஞ்ஞானி, தொழிலதிபர், விளையாட்டு வீரர் ஆகியோரது புத்தகங்களை அதே வரிசையில் படிப்பேன். நடிகரின் சுயசரிதம்? அதை ரொம்ப போர் அடிக்கும்போது கொஞ்சம் புரட்டிப் பார்ப்பேன். முழுவதும் படிக்கமாட்டேன்! 

வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, தரையில் புரளும் துண்டு இப்படி இருக்கும் அமைச்சர்களுக்கு நடுவில் ஜீன்ஸ் பேண்ட், வெள்ளை சட்டை அணிந்த அமைச்சரை பார்க்கும் பொழுது எப்படி இருக்கிறது?

# நன்றாகத்தான் இருக்கிறது.

& யார் அந்த அமைச்சர்? 

அண்ணாயிசம், திராவிட மாடல் இரண்டையும் விளக்க முடியுமா?

# ஆட்சிக்கு முன் எப்படியோ, பதவிக்கு வந்த அண்ணா மிக நன்றாக ஆட்சி நடத்தினார்.

திராவிட மாடல் என்பது சொல்லால்  மயக்கும் சாமர்த்தியம்.

& என் பார்வையில், அண்ணாயிசம், தி மா - இரண்டுக்குமே அவற்றை முதலில் கூறியவர்கள் யாருமே இதுவரை சரியான முழுமையான விளக்கம் கொடுத்ததில்லை. (அவர்களுக்கே தெரிந்திருக்காது!) அப்படி இருக்கையில் நான் எப்படி விளக்கம் அளிக்க முடியும். 

சுருக்கமாகச் சொன்னால், இரண்டுக்குமே ஒரே விளக்கம்தான் : " ஏமாறாதே, ஏமாற்று !" 

*  உங்களுக்கு அப்பாயிஸம் நினைவிருக்கிறதோ?

= = = = = 

KGG பக்கம் : 

நான்காம் வகுப்புப் படித்த சமயத்தில், என் வகுப்பில் பிச்சைக்கண்ணு என்று ஒரு பையன் படித்தான். எப்போதும் பச்சை சட்டை அணிந்து வருவான். இடதுகையால் எழுதும்  பழக்கம் கொண்டவன். 

அந்தக் காலத்தில் நான் அவனைப் பற்றி எழுதிய கவிதை (!) 

பிச்சைக்கண்ணு 

பீச்சாங்கை 

போடுவது 

பச்சை சட்டை! 

தேர் முட்டி பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்தது பற்றி எழுதியிருந்தேன் அல்லவா. 

மதியம் பன்னிரெண்டு மணி முதல், ஒன்றேகால் மணி வரை மதிய உணவு வேளை. காமராஜர் புண்ணியத்தில் பெரும்பாலான ஏழை மாணவர்களுக்கு பள்ளியிலேயே மதிய உணவு தயார் செய்யப்பட்டு பெயர் கொடுத்துள்ளவர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்குவார்கள். என்னைப் போன்ற சிலர் - வீட்டுக்கு ஓடிச் சென்று, உணவு சாப்பிட்டு விட்டு அரை மணி நேரத்துக்குள் திரும்ப வந்து விடுவோம். 

மதிய உணவு தயார் செய்யும் வேலை மத்தியானம் பதினொரு மணிக்கே தொடங்கிவிடும். அதற்கான வேலையில், வயதான பெண்மணி ஒருவரும்,  நடுத்தர வயது ஆண் ஒருவரும் மட்டுமே. அதனால், பதினொன்றரை மணி சுமாருக்கு ஐந்தாம் வகுப்புகளில் படி(இரு)க்கின்ற பெரிய சைஸ் பையன்களை (ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு பேராவது அப்படி இருப்பார்கள்!) மதிய உணவு தயார் செய்யும் வேலைக்கு - உதவ (அழைத்துச்) சென்றுவிடுவார்கள். பன்னிரெண்டு மணிக்கு மதிய உணவு தயாராக இருக்கும். 

மதிய உணவு சாப்பிடும் மாணவர்கள் எல்லோரும் ஆளுக்கு ஒரு அலுமினியத் தட்டு எடுத்து, அதைக் கழுவி சுத்தம் செய்துகொண்டு அரை மணிக்குள் சாப்பிட்டு முடித்து, தட்டைத் திரும்பக்  கழுவி எடுத்து வைத்துவிடுவார்கள். 

இப்படி எல்லோரும் பன்னிரெண்டு மணியிலிருந்து பன்னிரெண்டரை மணிக்குள் லஞ்ச் முடித்து விட்டு அப்புறம் ஒன்றேகால் மணி வரை என்ன செய்வோம்? அங்கேதான் இருக்கு சுவாரஸ்யம். 

நடராஜன் போன்ற நான்கைந்து  மாணவர்களும் மற்றும் நான்கைந்து மாணவிகளும், நடுநாயகமாக ஒரு முற்றத்தில் நின்றிருக்க, சுற்றிலும் எங்களைப் போன்ற மாணவ, மாணவிகள், ஆசிரியைகள் (ஆசிரியர்கள் யாரும் இந்த விளையாட்டிற்கு வந்ததில்லை) அமர்ந்திருப்போம். 

வழக்கமான நடராஜன் பக்திப் பாடலோடு நிகழ்ச்சி தொடங்கும். பிறகு என்ன? 

அந்தக் காலத்தில் வெளிவந்த எல்லா சினிமா பாடல்களும் ஒவ்வொன்றாக பாடப்படும். ஆசிரியைகள் நடராஜனிடம் சில பாடல்களை (வா கலாப மயிலே!) ஒன்ஸ் மோர் வேறு கேட்டு பாடச் சொல்வார்கள்! 

பாடகிகளில் இரண்டு பேரை மட்டும் இப்போதும் எனக்கு நினைவு இருக்கிறது. ஏன் இவர்கள் நினைவில் நிற்கிறார்கள் என்று சொல்கிறேன். பெயர்கள் நிர்மலா, நீலாயதாக்ஷி - இருவரும் சேர்ந்து பாடும் பாடல், ஒருத்தி மகனாய் பிறந்தவனாம், உருவில் அழகாய் வளர்ந்தவனாம், ( இருவரும் மாறி மாறி - ஓஹோ, ஆஹா என்ற வார்த்தைகளை பாடுவார்கள். ) 


அநேகமாக நிகழ்ச்சியில் இதுதான் கடைசி பாடலாக இருக்கும் - ஏன் என்றால், இந்தப் பாடல் பாடும் நேரத்தில் சாப்பிடப் போன தலைமை ஆசிரியர் திரும்ப வந்துவிடுவார்! 

அரைப் பரிட்சை முடிந்து, மார்க்குகள் வந்தன. ஒவ்வொருவருக்கும் ப்ராக்ரஸ் ரிப்போர்ட் வழங்கப்படும் நாள். 

நிர்மலா, நீலாயதாக்ஷி இருவரும் பாட்டுப் பாடுவதில் நூறு, பாடங்களில் முட்டை. தலைமை ஆசிரியர் இருவரின் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டையும் கொடுத்துவிட்டு, அவர்களின் இருவரது சடையையும் சேர்த்துப் பிடித்து ஊஞ்சல் ஆட்டியபடியே " ஊம் .. பாடுங்க .. ஒருத்தி மகனாய் பிறந்தவனாம் .. " என்று சொன்னது இன்றும் ஞாபகம் இருப்பதால், நிர்மலா, நீலாயதாக்ஷி இருவரும் இன்றும் என் நினைவில் நிற்கிறார்கள்! 

= = = = = 

$ பக்கம் : 

சாப்பிட்ட தட்டுகளை நாங்கள் வாத்துக் குளத்துக்கு எடுத்துப் போய்க் கழுவி வருவோம். அப்போதிலிருந்து அந்த நல்ல பழக்கம், இன்று வரை தொடர்கிறது. எங்கள் தட்டுகள் எல்லாமே வெள்ளையாக இருக்கும்.  ஆம், இரும்பில் செய்து வெள்ளைப் பீங்கான் கோட்டிங், நீல அல்லது கருப்பு விளிம்பு. வீட்டில் இருந்த பெரியவர்கள்  வெள்ளித்தட்டு, வாழை இலை, வாழைப் பட்டை, பாக்குப்பட்டை, வாழைச்சருகு, இவற்றுடன் தையல் இலை இவைகளை உபயோகிப்பர்.

எங்கள் தட்டுகள் சுவரில் 2 ஆணி அடித்து மாட்டப் பட்டிருக்கும். ஒரு நாள் வாத்துக்குளத்திலிருந்து திரும்பும்போது ஒரு ஓலைப் பாம்பு, (காலியான்குட்டி என்றும் சொல்வார்கள்) மாமரங்களின் அடியில் ஒற்றையடிப் பாதையில் குறுக்கே ஓடியது 

KGY அவரது தட்டை சக்ராயுதமாக உபயோகித்தார்  அது அவருக்கு நினைவிருக்கிறதா என்று கேட்க வேண்டும். 

அப்போது உபயோகத்தில் இருந்த அலுமினிய பாத்திரங்கள் கனமாக இருந்தன. 20..22 gauge வகைகள் வரும் முன் 3 அல்லது 4 மி மீ கனத்தில் தட்டு வாணலி எல்லாம் இருந்தன. காரணம் நெடுநாள் கழிந்த பின் தான் தெரிய வந்தது

= = = = = 

# பக்கம் : 

எனக்கு விபரம் தெரிந்து முதல் முதலில் பழைய நினைவுகள் நிகழ்ந்த ஊர் அறந்தாங்கி அப்போதைய தஞ்சை மாவட்டம்.  நாங்கள் குடி இருந்தது வாடகை  வீடு. அந்த வீட்டின் உரிமையாளர் காமாட்சி பாட்டி என்று நாங்கள் சொல்லிய ஒரு இளம் வயது விதவை. அந்த வீட்டுக்கார மாமியை பார்த்ததும் அவர்கள் எனக்கு தின்பண்டங்கள் எடுத்து கொடுத்ததும் லேசாக எனக்கு நினைவில் இருக்கிறது. அவர் மொட்டை தலையும் வெள்ளை புடவையும் ஆக இருந்த அந்தக் கால கைம்பெண்.  சோகம் என்ன என்றால் , மிக இளம் வயதில் திருமணம் பற்றிய எந்த ஒரு அனுபவமும் தொடங்கும் முன்பே கணவரை இழந்தவர் அவர். 

ஆச்சரியம் ஒன்றும் சோகத்தோடு இணையாக.  அவருடைய காலஞ்சென்ற கணவரின் தம்பி சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு மாமனார் ஆகிறார் ! இப்போது நினைத்துப் பார்த்தாலும்  இது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது என்று சொல்லவும் வேண்டுமா ?

சிறிய வயது என்பதால் அறந்தாங்கி வாழ்க்கை பற்றிய  நினைவுகள் ரொம்ப லேசான மங்கலான சித்திரங்களாக மட்டுமே என் நினைவில் இருக்கின்றன. ரொம்ப தெளிவு கிடையாது. அவற்றில் சிலவற்றை சும்மா இங்கே ஒரு பதிவாக செய்து வைக்க ஆசை. அதாவது அந்த கால வாழ்க்கை முறை  பற்றிய நினைவுகள்  நம் குடும்ப சரித்திரத்தை அறிந்து கொள்வதற்கு ஒரு உதவியாக இருக்கும் என்கிற பொது நோக்கில் இந்த குடும்பத்தில் இருக்கிற ஒவ்வொருவரும் தம்முடைய மிக இளவயது நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எங்களில் சிலர் நினைத்தோம்.  அதன் விளைவு தான் இந்தப் பதிவுகள். 

இந்த முன்னுரையோடு அறந்தாங்கி பற்றிய என் மனச் சித்திரங்களை மேலெழுந்த வாரியாக பார்ப்போம் . இது காலக்கிரமப்படி அடுக்கப்பட்டது அல்ல.  என் நினைவில் இருப்பதை சும்மா ஏதோ ஒரு  வரிசையில் சொல்லிக் கொண்டு வருகிறேன். அவ்வளவுதான்.

அந்தக் காலத்தில் எல்லா ஊரிலும் அக்ரஹாரம் என்று ஒன்று இருக்கும். அதாவது பிராமணர்கள் குடியிருக்கும் வீதி.  இதெல்லாம்  இருந்தது அந்தக் காலம். 

இப்போது  எல்லோரும் எல்லா இடத்திலும் ஒன்றாக  இருக்கிறோம்.  இதுதான் விரும்பத்தக்கது. ஆனால் அக்ரஹாரம் இருந்த காலத்தை பற்றித்தான் இப்போது நான் பேசுகிறேன். நாங்கள் இருந்தது அறந்தாங்கி அக்ரஹாரம். எங்கள் வீட்டுக்கு எதிரில் சற்றுத் தள்ளி வக்கீல் லட்சுமண ஐயர் என்பவரது வீடு இருந்தது. வாசலிலே பெரிய மரத்தினால் செய்யப்பட்ட ஒரு ஈசி சேர். அதில் அவர்  உட்கார்ந்து இருப்பார்.  கிட்டத்தட்ட 60 வயதான நபர். தெருவாசிகள் பற்றி  இதைத் தவிர என் நினைவில் வேறு எதுவும் இல்லை.

நினைவில் நிழலாடும் அடுத்த நபர் ஆயுர்வேத வைத்தியர் வேதாரண்யம் பிள்ளை. வேஷ்டி சட்டை கோட் அணிந்து காணப்படுவார். அன்றாடம் ஒரு குறிப்பிட்ட வேளையில் ஒவ்வொரு தெருவையும்  மெதுவாக நடந்து கடப்பார். அவரிடம் வைத்தியம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் அந்த நேரத்தில் வாசலைப் பார்த்து இருந்து, அவரைக் கூப்பிட்டு வைத்தியம் செய்து கொள்ள வேண்டும். சில வீடுகளுக்கு தினம் வந்து மருந்து கொடுப்பார்.  அப்போதே எனக்கு இருமல் உபத்திரவம் ஆகிவிட்டதா, தினசரி எங்கள் வீட்டுக்கு வந்து எனக்கு மருந்து கொடுத்து செல்வார். பெண்களை நாடி பிடித்து வைத்தியம் பார்க்க, கையில் ஒரு பட்டுத் துணியும் வைத்திருப்பார். நாலு நாட்கள் மருந்துக்கு இரண்டு அணா (ஒரு ரூபாய் = 16 அணா ) என்கிற ரீதியில் அவருடைய மருந்துகள் மிகவும் விலை சகாயமாக இருக்கும். இருமலுக்கு ஆயுர் வேதத்தில் கூறப்பட்ட எல்லா மருந்துகளும் எனக்குக் கொடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.  (முதலை உப்புக் கண்டம் உட்பட  என்று கூடச் சொல்வதுண்டு)

= = = = 

அப்பாதுரை பக்கம் : 

துயில். 

கொஞ்சம் அதிரலாம் வாங்களேன்.

பொம்மைக் கடை. நாலு வயது பெண் தன் மூன்று வயது தம்பிப் பாப்பாவுடன் விளையாடிக் கொண்டிருக்கிறாள். எனக்கு இந்தப் பொம்மையைக் கொடு.. முடியாது.. நீ இதை வைத்துக்கொள்.. அந்த பலூனை எங்கிட்ட கொடு.. அம்மா இவனைப் பாருமா.. மழலைக் கோபத்தின் இன்பத்தில் பெற்றவர்களும் சேர்ந்து விளையாட, படாரென்று வெடிக்கிறது. பலூனல்ல. துப்பாகி.  நாலு வயது பெண் குழந்தை மிக அடிபட்டுக் குற்றுயிராய்ச் சரிகிறது. அம்மா அப்பா தம்பி மூவரும் உயிரிழந்து சரிகின்றனர்.

ஆலன், டெக்சஸில் நடந்த இந்தக் கொடுமையைப் பலர் டிவி மற்றும் இணைய வழி அறிந்திருக்கலாம்.  பொறுப்பற்ற வெட்டிப்பயல் ஒருவன் ஆட்டோமேடிக் துப்பாக்கி இருக்கிறது, தனக்குச் சுடத்தெரியும் என்ற காரணங்களால் கடைக்குள் புகுந்து கண்டவரை சுட்டதில் பத்து பேரைக் காயப்படுத்தி எட்டு பேரைக் கொன்று, தானும் சுடப்பட்டுச் செத்தான்.

உலகம் முழுதும் தினம் நடக்கிற இத்தகைய சம்பவம் இந்த வாரம் சட்டென்று முக்கியத்துவம் பெற இரண்டு காரணங்கள். முதல்: இறந்தவர்களில் ஐந்து பேர் எட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள். 

மற்றது: இறந்தவர்களில் ஒருவர் இருபத்தாறு வயதான இந்திய யுவதி. 

அமெரிக்கத் தெலுங்கு சங்கம் இறந்தவரின் பெற்றோருடன் தொடர்பு கொண்டு உடலை இந்தியா அனுப்பக் கொடுத்திருக்கும் உதவிக்கரம் பாராட்டுக்குரியது.  

இந்திய செய்தித்துறை இந்தச் சம்பவத்தை எப்படிக் கையாண்டிருக்கிறது என்பது தெரியாது, ஆனால் உள்ளுர் சமூகக் குழும செய்திகளில் அடிபடும் அவலம் வேறே விஷயம். அமெரிக்காவில் மட்டுமே இப்படி மனிதாபிமானமற்ற அக்கிரமம் நடக்கும் அப்படி இப்படி என்று ஆளுக்கு ஆள் அபிப்பிராயம், ஆணி. 

சரி, இங்கே சுலபமாக துப்பாக்கி கிடைக்கும் அவலத்தைச் சாடுகிறார்களோ என்று பார்த்தால்.. இல்லை.. இறந்த பெண்ணை விட்டு விட்டார்கள்... அவருடன் கூட இருந்த இன்னொருவரும் சுடப்பட்டு காயத்துடன் மருத்துவமனையில் இருக்கிறார் என்ற செய்தியைப் பார்த்து ஒரே கோபம், ஆத்திரம்.  பெண்ணுக்குக் களங்கம் என்ற ரீதியில் புகார் மயம். விவரம் தெரியாமல் இந்தியப் பண்பாடு தெரியாமல் எப்படி எழுதலாம்? அந்தப் பெண்ணுடன் இருந்தார் என்று எப்படித் தெரியும்? கலவரத்தில் இறந்தவருடன் அடிபட்டவரும் ஓடி வந்திருக்கலாமே?  அப்படி இப்படியென்று மான நஷ்ட பாணியில் ஒரே சர்ச்சை. வக்கீல் வைத்து வழக்காடப் போகிறார்களாம். 

இந்தியப் பெண் பற்றிய மரண அறிவிப்பு சர்ச்சையில் ஒருவர் கூட இறந்த தென் கொரியக் குழந்தைகள் பற்றி ஒரு கருத்து கூடச் சொல்லவில்லை!! அட, இறந்த இந்தியப் பெண் சுடப்பட்ட குரூரத்தில் கூட அதிர்ச்சியடையவில்லை.  கன்னிப்பெண்ணைப் பற்றிக் களங்கம் சொல்லலாமா என்பதே இவர்களின் அக்கறையாகத் தெரிகிறது. தேவுடா. பெண்ணுடன் இன்னொருவர் இருந்திருந்தால் என்ன இப்போது? 26 வயதுப் பெண்ணுக்கு அந்தச் சுதந்திரம் கூடவா இல்லை?

எத்தனை சோகம்! எத்தனை அநியாயம்! இருபத்தாறு வயது ஒரு வயதா? நாலு வயது மூன்று வயது எல்லாம் நேற்றுப் பிறந்த கிள்ளைகள்! அறிவில்லாத எவனாலோ முரட்டுத்தனமாக வெட்டப்பட்ட வண்ண நறுமணப் பூச்செடிகள்!  

May 7 செய்தி: At least 9 dead, including gunman, in Texas mall shooting

வால்: 

இந்த கனத்தில் இரண்டு நாள் ஓட்டிக்கொண்டிருந்தால் திங்கட்கிழமை மரண வேண்டுதல் பற்றிய கில்லர்ஜியின் பதிவும் GSன் Iphone wallpaperம் கொஞ்சம் சுட்டன.  >>>> 

இப்படி வாழ வேண்டும் என்று திட்டம் போடவும் கடவுள் அருள் பெறவும் முயற்சி செய்யும் நாம், இப்படி மரணமடைய வேண்டும் என்று தினம் வேண்டுகிறோமா என்று கருத்து பரிமாறல். (எபி வாட்சப்பில் விவரம் பார்க்கவும்).

மரணத்தைப் பற்றி எண்ணும் பொழுது ஏன் இப்படி மாறுபடுகிறோம்? மரண சிந்தனை ஏற்புடையதாக இல்லையா? நானறிந்த பன்மொழி இலக்கியங்கள் ஆன்மிக நூல்கள் பலவற்றில் மரணத் தறுவாய் அவா மிகத் தெளிவாகச் சொல்லப் பட்டிருக்கின்றன.  (ஆன்மிக இலக்கியம் என்று ஏதாவது உண்டா - அடுத்த புதன் கேள்வி).

சட்டென்று நினைவுக்கு வரும் நம்மூர் ஆன்மிக சிந்தனைகள் சில:

1. அனாஸாயேன மரணம் வினாதைன்யேன ஜீவனம் என வரும் சிவத்துதி. "வலியற்ற எளிய மரணத்தைக் கொடு சம்போ" என வரும் இத்துதியில் இரண்டு வித வேண்டுதல்களை பரிந்துரைக்கிறார்கள். "சிவனே, உன் மேல் ஐயமற்ற நம்பிக்கையைக் கொடு (உயிருள்ளவரை). உயிர் பிரியும் நேரத்திலோ உன் நினைவை மட்டும் கொடு".  சிறுவயதில் அறிமுகமான சுலோகம். அறிவு வளர வளர  (எங்கே?) எத்தனை கருத்தாழம் இத்துதியின் எளிய சொற்களில் என்று வியந்திருக்கிறேன். 

2. வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது;

வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்தமண்ணில் நமக்கு இடமேது? 

கவிஞர் பரிந்துரைப்பது: "நமக்கும் மேலே ஒருவனடா அவன் நாலும் தெரியும் தெரிந்த தலைவனடா

தினம் நாடகம் ஆடும் கலைஞனடா போனால் போகட்டும் போடா".

3. 'க்ருஷ்ணா.. சாவுறப்ப சத்தியமா உன் நினைப்பு இருக்காது.. அதனால இப்பவே சொல்லி வச்சுக்கிறேன் கண்டுக்க' என்று என் போன்ற ஆசாமிகளுக்கு பெரியாழ்வார் அருளிய அட்டகாசம் இது:

"எய்ப்பு எனைவந்து நலியும்போது 

அங்கேதும் நானுன்னை நினைக்கமாட்டேன்.

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்".

4. இன்னொரு பார்வை. எப்படிப் போனா என்னா? நாக்கு இழுத்துக்கு முன்னால நாலு நல்லது செய்யுன்றாரு நம்மாளு: 

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப்படும்.

கொசுறு:

இந்த புதனுக்கான பக்கத்தை பக்கத்து புதனுக்கு மறுபடி பார்சல். சென்ற வார இறுதி நிகழ்வுகளின் கனம் மிகவும் அழுத்துவதால். இறக்கி வைக்க இந்த புதன். எழுதியதும் கனமிறங்கிய உணர்வு. படித்தமைக்கு நன்றி.

= = = = = =

107 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறைவனுக்கு நன்றி சொல்வோம்.  வாங்க கமலா அக்கா..  வணக்கம்.

      உங்கள் தளத்தில் மூன்று கமெண்ட்ஸ் போட்டேன்.  மூன்றுமே அஸ்த்ராய பட்!  ஸ்பாமில் தேடிப்பார்க்கவும்.  நீங்கள் மெயிலில் பார்த்திருக்கலாம்.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே.

      அப்படியா? தேடிப்பார்க்கிறேன். இந்த கைப்பேசியில் வேறு நான் நிறைய படங்களை வைத்திருப்பதால், எச்சரிக்கை விடுத்து தொந்தரவு செய்கிறது. நானும் பழையதை கழித்துக் கொண்டேயிருக்கிறேன். அதனாலும் வரும் கமெண்ட்ஸ் காணாமல் போய் இருக்குமோ..? பார்க்கிறேன். பதிவுக்கு வந்து தந்த உங்கள் கருத்துக்கும் இங்கேயே நன்றி கூறிக் கொள்கிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  2. சுவாரசியமான புதன்கிழமைப் பதிவு. 3 சகோதரர்களின் நினைவலைகளுமே நன்றாக இருக்கின்றன. நெல்லையின் கேள்விக்கு நான் சொன்ன பதிலை எத்தனை பேர் படிப்பாங்க? சந்தேகமே. எழுதி ஒரு வாரம் ஆச்சு. ஆனாலும் அதிகம் பேர் படிக்கலை. போனால் போகட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
    2. நான் படித்தேன், கருத்து கூறினால் உங்கள் மனது புண்படுமோ என்று தோன்றியதால் கூறவில்லை. ஏனென்றால் நான் பொட்டென்று போட்டு உடைக்கும் ரகம். பரவாயில்லையா?

      நீக்கு
    3. கீ சா : பதில் சொல்லவும்.

      நீக்கு
    4. சொல்லுங்க பானுமதி. சிதம்பர ரகசியம் எழுதும்போதும், ராமாயணம் எழுதும்போதும், பின்னர் கண்ணன் வந்தான் எழுதினப்போவும் நான் சந்திக்காத எதிர்மறைக்கருத்துக்களா? எல்லாவற்றையும் தாண்டித்தான் இணையத்திற்கு வந்து இந்தப் பதினெட்டாவது ஆண்டில் நுழைஞ்சிருக்கேன்.

      நீக்கு
    5. அதிலேயே மாற்றுக் கருத்துச் சொல்பவர்கள் சொல்லலாம்னு சொல்லி இருந்தேன். எல்லாவற்றிற்கும் ஒரே கருத்தாக எப்படி இருக்க முடியும்?

      நீக்கு
    6. எனக்கு வயதாகி விட்டதா? அல்லது முதிர்ச்சி அடைந்து விட்டேனா? தெரியவில்லை, ஏனோ இப்போதெல்லாம் விவாதங்களில் விருப்பம் இல்லை. விவாதம் செய்வதன் மூலம் யாரையும் கன்வின்ஸ் பண்ண முடியாது. இங்கேயே பாருங்கள், நெ.த.வின் நோக்கம் நீங்கள் ஐயர்களை விட, நாங்கள் ஐயங்கார்கள் உஸத்தி என்று நிறுவுவது. அவருக்கு சாதகமான கருத்தை கூறுபவரையே தாக்கும் இவரைப் போன்றவர்களோடு வாதிட்டு என்ன சாதிக்கப் போகிறோம்?
      எனிவே, உங்கள் விஷயத்திற்கு வரலாம். அவர் கேள்வி, ஐயங்கார்கள் ஆழ்வார் பாசுரங்களை அறிந்திருக்கும் அளவிற்கு ஐயர்களுக்கு திருமுறைகள் தெரிவதில்லையே ஏன்? என்பதுதான். இதற்கு நேரிடையாக சிம்பிளாக பதில் சொன்னால் போதும். நீங்கள் உங்களுக்கு தெரிந்த அத்தனையையும் கொட்டியிருக்கிறீர்கள். ரெண்டு மார்க் கேள்விக்கு இரண்டு பக்கங்களுக்கு ஏன் பதில் எழுத வேண்டும்? உங்கள் பதிலை படித்ததால் உங்களுக்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கிறது என்பது புரிந்ததே தவிர என்ன சொல்லியிருக்கிறீர்கள் என்பது எபொவ் ஆவரேஜ் வாசகியான எனக்கே புரியவில்லை

      நீக்கு
    7. உங்களுக்கு விவாதங்களில் விருப்பம் இல்லை என்பது குறித்து மகிழ்ச்சி. ஆனால் இது ஒரு ஆரோக்கியமான வாதம். நெல்லை சொல்வதற்குத் தான் நானும் பல்வேறு விதங்களில் அப்படி இல்லைனு சொல்ல முயன்றிருக்கிறேன். நீங்க ஏத்துக்கணும்னு கட்டாயமே இல்லை. ஏனெனில் அவர் கோஷ்டியாகக் கோயில்களில் சொல்லுவதில்லை என்பதற்கான காரணங்களை ஆதாரபூர்வமாகச் சொல்லவே முயற்சி செய்தேன். வைணவக் கோயில்கள் மாதிரி சிவன் கோயில்களில் கோஷ்டியாகச் சேர்ந்து தேவார/திருவாசகங்கள் சொல்லுவது முற்றோதலின் போது தான். மற்றபடி தேவாரப் பள்ளிகள் நடந்து வருகின்றன. கோயில்களில் ஓதுவார்கள் ஓதிக் கொண்டும் இருக்கின்றனர். மன்னியுங்கள். பதில் பெரிதாகி விட்டது! :(

      நீக்கு
  3. ஒவ்வொரு முறை அம்பேரிக்காவில் எங்கே இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்தாலும் மனம் பதைக்கிறது. நம்முடைய நெருங்கிய உறவினர்கள் நினைவு, அவங்களைப் பத்திரமாய்க் காப்பாற்று ஆண்டவனே எனப் பிரார்த்தனைகள் வருகின்றன. ஒட்டு மொத்த அம்பேரிக்காவுமே இத்தகைய பீதி இல்லாமல் அமைதியாய் இருக்கக் கூடாதா என்றும் தோன்றுகிறது! ஏன் அங்கே மட்டும் இப்படி? அதிலும் பள்ளிக்குள் நுழைந்து பச்சைக்குழந்தைகளைக் கொல்லும் அரக்கர்கள்! :( ஆண்டவன் தான் இவங்க மனதை எல்லாம் மாற்ற வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் வருந்தத் தக்க நிலை. அமெரிக்காவில் சீரியல்கள் பார்த்துக் கெட்டுப்போனவர்கள் அதிகம் போலிருக்கு. பலர் பைத்தியங்களாக அலைகிறார்கள்! பின் விளைவுகளைப் பற்றி யோசிக்க அறிவில்லாதவர்கள்.

      நீக்கு
  4. யாரோட சுயசரிதம் படிச்சாலும் கொஞ்சம் மிகையாகவே இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோருடைய வாழ்விலும் இறைவனின் கரங்கள் (விதியின் கரங்கள்) இருக்கும். தன் முயற்சியால் தான் வெற்றி பெற்றேன் என்று சொல்வதே எனக்குப் பெரும் நகைச்சுவையாகத் தோன்றும். இதற்கு சாட்சி, அவரவர் வாழ்க்கைச் சம்பவங்களே

      நீக்கு
  5. // இந்த... ஒரு வருஷத்துல 32,000 கோடி.. அது மாதிரி நல்ல ஸ்கிம் ஏதும் இல்லீங்களா?// ஹா ஹா !!

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    இன்றைய (நீயூஸ் ரூம் என்பதை செய்தி அறை என்று நேற்று தமிழாக்கம் செய்து தந்த சகோதரர் துரைசெல்வராஜ் அவர்களுக்கு நன்றி.) செய்தி அறை பகுதியில் பல தகவல்களை தந்தமைக்கு நன்றி.

    கேள்விகளும், பதில்களுமான புதன் தொகுப்பு எப்போதும் போல் அருமை. எ. பி ஆசிரியர்களின் மலரும் நினைவுகள் சுவாரஸ்யமாக இருந்தது. நிர்மலா, நீலாயதாக்ஷி பெயர்கள் நினைவில் இருப்பதின் காரணத்தை புரிந்து கொண்டேன்.

    அந்த கனமான தட்டுகள் எங்கள் அம்மா வீட்டிலும் கொஞ்ச நாட்கள் அனைவருக்கும் எச்சில் தட்டுக்களாக பயன்படுத்தியிருக்கிறோம் . அதை மங்கு தட்டு என்போம். இங்கு குறிப்பிட்டிருப்பது அதுதானா எனவும் தெரியவில்லை.

    எங்கள் பாட்டிக்கு எப்போதும் வாழை இலை, அது கிடைக்காத பட்சத்தில் வாழை இலைச்சருகு என அதில்தான் உணவு உண்பார்கள். . இவையும் கிடைக்காத பட்சத்தில் ஒரு பொழுது உணவை கூட தவிர்த்து விடுவார்கள். அவ்வளவு மடி, ஆச்சாரம். பார்ப்பார்கள். அவர்களுக்கென தனித்தட்டு இருந்து நான் பார்த்ததில்லை. உங்கள் மலரும் நினைவுகள் என் நினைவுகளையும் மலரச் செய்தது. பகிர்வுக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அந்த கனமான தட்டுகள் எங்கள் அம்மா வீட்டிலும் கொஞ்ச நாட்கள் அனைவருக்கும் எச்சில் தட்டுக்களாக பயன்படுத்தியிருக்கிறோம் . அதை மங்கு தட்டு என்போம். இங்கு குறிப்பிட்டிருப்பது அதுதானா எனவும் தெரியவில்லை.//
      $ reply : " மங்குப் பாத்திரம் என்பது சரிதான்.
      இந்தப் பெயர் மதுரை இராமநாதபுரம் மாவட்ட அல்லது செட்டிநாடு பக்கம் மட்டுமே
      தஞ்சாவூரில் பீங்கான் பாத்திரங்கள் என்று மட்டுமே கேட்டிருக்கிறேன்."

      நீக்கு
    2. // அந்த கனமான தட்டுகள் எங்கள் அம்மா வீட்டிலும் கொஞ்ச நாட்கள் அனைவருக்கும் எச்சில் தட்டுக்களாக பயன்படுத்தியிருக்கிறோம் . அதை மங்கு தட்டு என்போம். இங்கு குறிப்பிட்டிருப்பது அதுதானா எனவும் தெரியவில்லை.//
      $ reply : " மங்குப் பாத்திரம் என்பது சரிதான்.
      இந்தப் பெயர் மதுரை இராமநாதபுரம் மாவட்ட அல்லது செட்டிநாடு பக்கம் மட்டுமே
      தஞ்சாவூரில் பீங்கான் பாத்திரங்கள் என்று மட்டுமே கேட்டிருக்கிறேன்."

      நீக்கு
    3. எங்கள் வீட்டிலும் இருந்தது. ஒன்று வெள்ளை நிறம், மற்றொன்று ஊதா நிறம். பீங்கான் தட்டுகள் என்றுதான் நாங்களும் சொல்வோம்.

      நீக்கு
    4. அம்மா/அப்பா அதிலே தான் காஃபி, தேநீர் போடுவார்கள். குமுட்டியில் தான் வைப்பாங்க அதை. எரியும் அடுப்பிலோ, ஸ்டவிலோ வைக்க மாட்டாங்க. சில சமயங்கள் பெரிதான பாத்திரமானால் ஊறுகாய்களும் வைப்பது உண்டு. பெரும்பாலும் கல்சட்டியில் தான் ஊறுகாய், மாவடு மட்டும் அதற்கென இருக்கும் ஜாடி.

      நீக்கு
    5. மங்குக்கிண்ணம் என்று சொல்வார்கள்.

      நீக்கு
  7. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    நோக்க நோக்க
    நொடியில் நோக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  8. ..அறிவில்லாத எவனாலோ முரட்டுத்தனமாக வெட்டப்பட்ட வண்ண நறுமணப் பூச்செடிகள்!//

    அறிவில்லாதவனும் வண்ண, நறுமணப் பூச்செடிகளாய்த் தேடித் தேடித்தான் கொல்கிறான் அமெரிக்காவில். என்ன ஒரு அறிவு! ஒருவேளை... அறிவுள்ளவன் என்பவன் இப்படித்தானோ என்னவோ அந்த நாட்டில். ஏன் இப்படி நினைக்கத் தோன்றுகிறது? எந்த ஒரு கீழ்த்தர அரசியல்வாதியோ, கற்பழிப்பு, கொலை, என இஷ்டத்துக்கும் வேட்டையாடித் திரிகின்ற எந்த மிருகமுமோ இப்படிக் கேஷுவலாக அங்கே கொல்லப்பட்டதாகத் தெரியவில்லையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கருத்திற்குத் தலை வணங்குகின்றேன்!..

      நீக்கு
    2. பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ..

      பாரதியார் காலத்திலேயே இப்படித்தான்!..

      நீக்கு
    3. நல்லா கேட்டீங்க. யாருடைய துரதிர்ஷ்டம்.. ஹ்ம்!

      நீக்கு
  9. கனமான விஷயங்களுடன் இன்றைய பதிவு சிறப்பாக இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
  10. கிறித்தவப் பாதிரிகளின் பாடத்திட்ட நடைமுறைகளினால் கந்தல் துணியாகிப் போனது நமது கலாச்சாரம்.. குடும்ப முறை..

    நாமும் நம்மை ஒழுங்கு செய்து கொள்ளத் தவறி விட்டோம்..

    பதிலளிநீக்கு
  11. துப்புடையாரை அடைவதெல்லாம் என்று தொடங்கும் பெரியார்வார் பாசுரங்களில்,

    எய்ப்புவந்து என்னை நலியும்போது அங்கேதும் நானுன்னை நினைக்கமாட்டேன்
    அப்போதைக் கிப்போதே சொல்லிவைத்தேன்

    என்று வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் எனும் தோணி பற்றி மதி எனும் கோலை ஊன்றிச்
      சினம் எனும் சரக்கை ஏற்றிச் செறிகடல் ஓடும் போது
      மனன் எனும் பாறை தாக்கி மறியும்போது அறிய ஒண்ணாது
      உனை உனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே..
      அப்பர் ஸ்வாமிகள்..
      (4/46/2)

      ஒற்றியூர் உடைய கோவே!..
      உன்னை அறியாத நிலையில்
      எதையெதையோ ஏற்றிக் கொண்டு - மனம் எனும் தோணியைப் பாசம் எனும் கடலில் செலுத்துகையில் மன்மதன் என்ற பாறையில் தோணி இடிபட்டு கவிழும் போது உன்னையே தியானிக்கும் படியான உணர்வினை அடியேனுக்கு அருள்வாயாக..

      நீக்கு
    2. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
    3. துரை செல்வராஜு சார்... பக்தி இலக்கியங்களில் எல்லாமே ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல.

      மனம் என்ற தோணியில், மதி என்ற துடுப்பைக் கொண்டு, சினம் என்ற சரக்கை ஏற்றி இந்த வாழ்க்கை எனும் கடலில் ஓடும்போது, ஆசைகள்/பற்றுகள் எனும் பாறையில் மோதி, நினைவிழக்கும் பொழுது உன்னை நினைக்கும் உணர்வைத் தருவாய்... ஒற்றியூர் பெருமானே என்பது பாடலின் கருத்து. ஏன் பற்றுகள்/ஆசைகளைப் பாறை என்று சொல்கிறார்? பாறையில் தோணி மோதினால் சேதம் தோணிக்குத்தான்.

      பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
      பற்றுக பற்று விடற்கு என்ற குறளும் இதனைக் குறிப்பிடுகிறது.

      இந்த மாதிரி திருமுறை பதிகங்களும் மிக மிக இனிமையானவை. எவ்வளவு ஆழ்ந்த பக்தி இருந்தால், இத்தகைய பதிகங்கள் வெளிப்பட்டிருக்கும்?

      நீக்கு
  12. பதிவில் பல விஷயங்கள் நன்றாக இருக்கின்றன. பிறகு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  13. " பிரித்தாளும் சூழ்ச்சியில் கை தேர்ந்தவன் சகுனி.. "

    - கர்ணன் படத்தின் சொல்லாடல் இப்போது நினைவுக்கு வருகின்றது..

    மாற்றானுக்கு இடம் கொடேல்.. - சும்மாவா சொல்லி வைத்தார் ஔவையார்!..

    இப்போது கிடந்து அல்லாடுகின்றோம்..

    பதிலளிநீக்கு
  14. நீலாயதாக்ஷினு பேர் வச்சுக்கிட்டு எங்க கிளாஸ்ல யார்னா இருந்தாங்கனா ரொம்ப கஷ்டப்பட்டிருப்பாங்க :-)
    மேக்சிமம் போனா துர்கா, சுப்பலட்சுமி. மிச்ச எல்லாரும் சுதா, ரமா, லீலா, பவானி, கலா, மாலா தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாகை திருத்தலத்தில், மூலவர் பெயர் காயாரோகணம்; அம்மன் பெயர் நீலாயதாக்ஷி - நாகையில் நீலா என்று கூப்பிட்டால் பலர் திரும்பிப் பார்ப்பார்கள். ஆரம்பப் பள்ளியில் என்னுடைய வகுப்பில் இரண்டு காயாரோகணம் எப்போதும்!

      நீக்கு
  15. //யார் அந்த அமைச்சர்?// இந்த குறும்புதானே வேண்டாம் என்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வளவு பெரிய பெயரா! வினோதமான பெயர்!

      நீக்கு
    2. உங்களுக்கு விளையாட்டாக இருக்கிறது, அந்த துறை அமைச்சர் காதில் விழப்போகிறது.

      நீக்கு
  16. //உங்களுக்கு அப்பாயிஸம் நினைவிருக்கிறதோ?// தங்கப் பதக்கம் காமெடியை எப்படி மறக்க முடியும்? சோ நியாயமான போலீஸ் அண்ணன், ஃப்ராடு அரசியல்வாதி தம்பி என்று இரண்டு வேடங்களில் வருவார். அந்த அரசியல்வாதி தம்பியின் கொள்கைதான் அப்பாயிஸம்.:)). எனக்குத் தெரிந்த அப்பாயிஸம் இதுதான்.

    பதிலளிநீக்கு
  17. நெல்லத் தமிழன் நேரிடையாக ஐயங்கார்கள் பாசுரங்களை போற்ரும் அளவிற்கு, ஐயர்கள் திருமுறைகளை ஓதுவதில்லையே? என்று கேட்பதற்கு பதிலாக, வைணவர்கள், சைவர்கள் என்று சுற்றி வளைத்திருக்கிறார். வைணவர்கள், சைவர்கள் என்பது ப்ராட் ஸ்பெக்றம். ஓதுவார்கள் சைவர்கள்தானே? ஐயர்கள் திருமுறைகளை அத்தனை கருத்தாக ஓதுவதில்லை என்பது உண்மைதான். கோளறு பதிகம், இடர் நீக்கும் பதிகம் போன்றவை தவிர. திருப்பாவை கொண்டாடப்ப்டும் அளவிற்கு திருவெம்பாவை கொண்டாடப்படுவதில்லை என்னும் வருத்தம் எனக்குண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓதுவார் குலம் தனி. மன்னர்கள் காலத்தில் இருந்தே அவங்களுக்கென நிவந்தங்கள் ஏற்படுத்தி ஆறுகால வழிபாடுகளிலும் தேவார/திருமுறைகள் ஓதுவதற்கு என நியமித்திருந்தார்கள். கிட்டத்தட்ட அறுபதுகள் வரை ஓரளவுக்குப் பரவாயில்லை என்னும்படி அவங்க சேவை கிடைத்து வந்தது. பின்னர் வந்த அரசுகளின் கவனிப்பின்மையாலும் ஓதுவார்களிலேயே இளைஞர்கள் இந்த வேலையைத் தொடர மனமில்லாமல் அலுவலக வேலைகளுக்குப் போய்விட்டதாலும் இப்போது விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே இருப்பதாகப் படிச்சிருக்கேன். ஆகவே இவர்கள் சைவர்கள் எனலாம். இவர்களைத் தவிர்த்துத் திருநெல்வேலி சைவ வெள்ளாளர்கள் தீவிர சைவர்கள். இவர்களில் தேசிகர் எனப்படுபவர் இந்த சைவ வெள்ளாளர்கள் குடும்பத்தின் புரோகிதர்கள் போன்றவர்கள். இவர்களில் ஒருத்தர் தான் எம்.எம். தண்டபாணி தேசிகர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஆகியோர். இவர்களும் சைவர்களே.

      நீக்கு
    2. ஆனால் நான் புரிந்து கொண்ட வகையில் நெல்லை கேட்டிருப்பது இந்தச் சைவர்கள் அல்ல என்றே நினைக்கிறேன். ஸ்மார்த்தர்கள் எனப்படும் அத்வைதிகளைக் கேட்கிறார் என்றே புரிந்து கொண்டேன். ஸ்மார்த்தர்களுக்கு எந்தக் கடவுளும் வேண்டாதவர்கள் அல்ல. அவர்களில் சிவ பூஜை மட்டும் செய்பவர்கள், தேவி உபாசகர்கள், முருக பக்தர்கள், எனப் பலரும் உண்டு என்றாலும் யாரையும் ஒதுக்க மாட்டார்கள். தினம் விஷ்ணு சஹஸ்ர நாமமும் சொல்லுவார்கள். விசேஷ நாட்களில் லக்ஷ்மி சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமமும் சொல்வார்கள். தேவி பூஜையும் பண்ணுவார்கள். எல்லாக் கோயில்களுக்கும் பேதமின்றிப் போய் வருவார்கள். ஸ்மார்த்தர்களுடைய ஸ்ராத்தம் போன்ற பித்ரு பூஜையில் ஸ்ரீகோவிந்த, கோவிந்த, கோவிந்த என்றோ, ஸ்ரீநாராயண, நாராயண, நாராயண என்றோ ஸ்ரீகிருஷ்ண, கிருஷ்ண, கிருஷ்ண என்றோ வந்தே தீரும். அங்கே அப்படித்தான் சொல்லுவார்கள். வேத வியாசரை ஆதிகுருவாகக் கொண்டு அவர் வழி வந்த சங்கராசாரியார்களின் மடங்களைச் சார்ந்து இருப்பார்கள். சிலர் சிருங்கேரி, சிலர் காஞ்சி, பெரும்பாலோர் இருவரும். துவாரகை, பூரி , ஜோஷிமட் ஞானானந்த கிரி ஆகியோரும் உண்டு. இந்த ஜோஷி மட்டைச் சேர்ந்தவர்களே, ஞானானந்த குருகுலம் அமைச்சிருக்கும் ஸ்வாமிகளும் அவருடைய பரம சீடர் ஸ்ரீ ஹரிதாஸ்கிரி அவர்களும்.

      நீக்கு
  18. //அவர்களது பூஜை அறையில், நாயன்மார்களோ இல்லை திருமுறைகளை உண்டாக்கியவர்களையோ வணங்குவதில்லை என்பதைப் பார்க்கிறேன்.// உங்களுக்கு ஒன்ரு தெரியுமா? நம் தாத்தா காலம்வரை ஸ்வாமி படங்களே பூஜை அறையில் இருக்காது. சாளகிராமம் இருக்கும். ராமர் பட்டாபிஷேக படம் இருக்கும். அவ்வளவுதான். படங்களால் பூஜை அறையை நிறைக்கும் பழக்கம் 1970களில்தான் தொடங்கியிருக்கும். நீங்களும்(அய்யங்கார்களும்) ஆழ்வார்களின் படங்களை வீட்டில் வைத்துக் கொண்டிருந்தீர்களா என்ன? ஆண்டாளின் படத்தை வைத்துக் கொண்டதற்கு அவள் பூமி பிராட்டியின் அவதாரமாக கருதப் பட்டதே காரணம்.
    சிவன் கோவில்களில் நாயன்மார்களுக்கு தனி இடம் உண்டு. ஏன் அறுபத்து மூவர் உற்சவம் என்று ஒரு உற்சவமே இருக்கிறதே? அப்படி ஆழ்வார்களுக்கென்று உற்சவம் இருக்கிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை பதில் கூறவும்!

      நீக்கு
    2. எனக்குத் தெரிந்து நினைவு ஆரம்பித்த வயதில் இருந்தே (சுமார் 5 வயது) எங்கள் வீடுகளில் கடவுளர் படங்கள் இருந்தும் அவற்றிற்குப் பூ சார்த்தி அலங்காரங்கள் செய்வதையும் சமாராதனைகளின் போது எந்த ஸ்வாமிக்கு சமாராதனையோ அந்த ஸ்வாமிக்கு மாலைகள் பூக்கள் போட்டு அலங்கரித்து அர்ச்சனைகள் செய்வதையும் பார்த்து வந்திருக்கிறேன். எழுபதுகளில் படங்கள் கூடி இருக்கலாம். என் தாத்தா (அம்மாவின் அப்பா) ராமகிருஷ்ண பரமஹம்சர், அவர் மனைவி அன்னை சாரதா தேவி, ஷிர்டி பாபா, வள்ளிமலை சுவாமிகள் ஆகியோரின் படங்களை வைத்திருந்தார். தினமும் வேலுக்கு அபிஷேஹ ஆராதனைகள் செய்து (குலதெய்வம் முருகன்) பூஜை வழிபாடுகள் முடிச்சு அவர் சாப்பிடும்போது ஒரு மணி ஆகிவிடும்.

      நீக்கு
    3. மாமியார் வீட்டிலும் நிறையப் படங்கள் இருந்ததாகவும் பாகப்பிரிவினையின்போது பங்கி ட்டதில் குறைந்து விட்டது என்றும் சொல்லுவார்கள். பாகப்பிரிவினையில் என் மாமனாருக்குக் கிடைத்தது தான் இப்போது எங்களிடம் இருக்கும் ஸ்ரீராமர் பட்டாபிஷேஹ ஒரிஜினல் தஞ்சை ஓவியம். சரபோஜி காலத்து வண்ண ஓவியம். பெரிய மாமனாருக்கு பஞ்சாயதன பூஜை விக்ரஹங்கள், பிள்ளையார், ரிஷ்ப வாஹனத்தில் ஈசன்/அம்பிகை, நவநீத கிருஷ்ணன், ஸ்ரீதேவி, பூதேவி சமேதரான பெருமாள் ஆகியோர் கிடைத்தனர். சேர்ந்திருக்கையில் ஸ்ரீராமர் மேலேயும் விக்ரஹங்கள் வழிபடத் தோதாகக் கீழேயும் இருந்திருக்கிறது. என் மாமியார் அதைச் சொல்லிக் கொண்டே இருப்பார். கடைசியில் பிள்ளை இல்லாமல் பெரிய மாமனார் குடும்பம் அவங்க பெண் வீட்டில் இவற்றை வைச்சுக்கச் சம்மதிக்காத காரணத்தால் எங்களிடமே கொடுத்துவிட்டார்கள். 2010 ஆம் ஆண்டில் இவங்க எல்லாம் அம்பத்தூர் வீட்டுக்கு வந்தாங்க. ரிஷ்ப வாஹனத்து ஈசனும்/அம்பிகையும் தான் காணவில்லை. இவற்றிற்கு வேறே வாங்கி வைக்க முயற்சி செய்கிறோம். கிடைக்கவில்லை.

      நீக்கு
    4. சாளக்ராம பூஜை மற்றும் சிறிய விக்ரஹங்களும் உண்டு. இராமானுஜர் ஆராதனை செய்த விக்ரஹங்கள், ஆச்சார்யர்கள் பலர் ஆராதனை செய்த விக்ரஹங்கள் என்று உண்டு. எளியவர்களுக்கு ஆராதனை செய்ய சாளக்ராமங்கள். படம் எல்லாம் ஓரிரு நூற்றாண்டுகளுக்குள்தானே

      நீக்கு
    5. ஆன்மீக தகவல் பரிமாற்றங்களுக்கு நன்றி.

      நீக்கு
    6. இதிலே ஆன்மிகமே இல்லை. பக்தி பற்றிய அலசல் மட்டும் தான். ஆன்மிகம் எனக்குப் புரியாது. சொல்லவும்/எழுதவும் வராது.

      நீக்கு
    7. ஆழ்வார்களுக்கென்று தனி உற்சவங்கள் இல்லைதான். ஆனால் மார்கழி மாதத் திருவத்யயன சேவை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டுப் பகல் பத்து, ராப்பத்து உற்சவமாக நடைபெறும். ஆழ்வார் பாசுரங்களை முன்னிட்டே நடைபெறும் எல்லா ஆழ்வார்கள் அர்ச்சா ரூபத்தில் வந்து பெருமாளை வலம் வந்து அவரவர்க்குரியவற்றைப் பெருமாளிடமிருந்து பெற்றுச் செல்வார்கள். வைகுண்ட ஏகாதசிக்கப்புறமாக் கடைசி நாள் நம்மாZவார் மோக்ஷம். கண்ணீர் விடாதவங்க இருக்க மாட்டாங்க அது சைவமானாலும் சரி, வைணவமானாலும் சரி.

      நீக்கு
  19. நெல்லையின் சைவர்கள், வைணவர்கள், கேள்வி சுதா சேஷய்யன் சொற்பொழிவு ஒன்றை நினைவு படுத்துகிறது. ஒரு முறை பரம சைவர் ஒருவரும், பரம வைஷ்ணவர் ஒருவரும் பேசிக் கொண்டார்களாம். வைணவர் சைவரிடம்," நீங்கள் நாயன்மார்களை கொண்டாடும் அளவிற்கு நாங்கள் ஆழ்வார்களை கொண்டாடுவதில்லை என்று எனக்கு வருத்தம் உண்டு" என்றாராம். அதற்கு சைவர்,"நாங்கள் நாயன்மார்களை கொண்டாடலாம், ஆனால் அவர்களின் திருமுறைகளை நீங்கள் பாசுரங்களை போற்றும் அளவிற்கு போற்றுவதில்லை. உங்கள் ஆச்சாரியர்கள் ஒவ்வொருவரும் பாசுரங்களுக்கு எப்படி உரை எழுதியிருகிறார்கள்! அவற்றை 360 டிகிரியில் அனுபவித்து விளக்கமும் கொடுத்திருக்கிறார்களே?" என்றாராம். உங்கள் ஆச்சாரியர்களே பாசுரங்களை போற்றி அனுபவித்திருப்பதால் அது உங்களுக்கும் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  20. பொதுவாக வைணவர்கள் சிவன் கோயில் பக்கம் தலை வைச்சுக் கூடப் படுக்க மாட்டார்கள். இப்போதெல்லாம் மாறி இருந்தாலும் இன்னமும் சிலர் மாறாமலும் இருக்காங்க. சிதம்பரத்தில் கோவிந்தராஜர் சந்நிதிக்கு வரும் வைணவர்கள் ஒருபக்கக் கண்களைத் துண்டால்/புத்தகத்தால் மறைத்த வண்ணம் வருவார்கள். ஏனெனில் நேர் எதிரே நடராஜர். அதனால் கூட வைணவர்கள் பலருக்கும் சிவன் கோயில்களில் தேவார/திருமுறைகள் ஓதப்படுவது தெரியாமல் இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மாதிரி கதையெல்லாம் விடாதீங்க.

      பெரும்பாலான வைணவர்கள் வீட்டில் ப்ரபந்தம் அல்லது குறைந்தபட்சம் நித்ய அநுசந்தானப் பாசுரங்கள் (திருப்பாவை உட்பட) தெரிந்திருக்கும். பாராயணம் பண்ணுவாங்க. ஆழ்வார் பாசுரங்களை குருபரம்பரை வடிவில் மிகவும் விளக்கமாகக் காலக்ஷேபம்-உபந்யாசம் பண்ணுவாங்க. அதில் க்ரந்த காலக்ஷேபம் உண்டு (அப்படீன்னாக்க, 10-11ம் நூற்றாண்டில் ஆச்சார்யர்கள் சொல்லி பாசுரங்களுக்கு சுருக்க அர்த்தம் எழுதினதை-அது மணிப்ரவாளம், விளக்கமாக பலவித scripts கொண்டு-அதாவது இராமாயணம், வேதம், உபநிஷத்துகள் போன்ற பலவற்றையும் கொண்டு சொல்வார்கள்).

      நான் உங்க வீட்டுக்கோ பா.வெ வீட்டுக்கோ (ஜி.எம்.பி சாரை இதிலெல்லாம் சேர்க்க மாட்டேன்) வந்து, கொண்டாங்க உங்க திருமுறை புத்தகங்களை, பத்து பாசுரங்கள் சொல்லுங்க என்றால், அதெல்லாம் கிடையாது, பஞ்சாயத பூசை உண்டு என்று பம்முவீர்கள். இதைத்தான் சுற்றிச் சுற்றிக் கேட்டேன்

      நீக்கு
    2. வைணவத்தில், சில கடமைகள் என்று இராமானுஜர் ஏற்படுத்தி இருக்கிறார், சில கட்டளைகளாக. அதில் அந்நிய தேவதா அபிமானம் கூடாது, நாராயணனே அனைத்தும் என்று அவனை மாத்திரமே வழிபடவேண்டும் என்பது முக்கியமானது. தினமும் பண்ணும் சந்த்யாவந்தனத்தில், காலையில் காயத்ரியாகவும் மதியம் ருத்ரனாகவும் மாலையில் விஷ்ணுவாகவும் தியானித்து மந்திரங்கள் சொன்னாலும், முடிக்கும்போது அனைத்தும் அந்த கேசவனை நினைத்துத்தான் என்று சொல்கிறோம். அதாவது அனைத்துக்கும் அந்தர்யாமியாக-உள்ளுறைபவனான அந்த நாராயணனையே தியானிக்கிறோம். அதனால்தான் வைணவத்தைப் பின்பற்றுவர்கள் அந்நிய தேவதை கோவில்களுக்குச் செல்வதில்லை (அந்தக் கோவில்களில் பிரதான தெய்வம் நாராயணன் இல்லை என்பதால்). (ஆனை துரத்தினாலும் ஆனைக்கா புகேன் என்ற திருவரங்க பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்). இது துவேஷம் இல்லை, ஆனால் தீவிரமாகப் பின்பற்றுபவர்கள் செய்வது. (இதைப்பற்றி நிறைய எழுதினால் போரடிக்கும்)

      ஓதுவார்கள் பற்றி பிறகு எழுதுகிறேன்.

      நீக்கு
    3. //கொண்டாங்க உங்க திருமுறை புத்தகங்களை, பத்து பாசுரங்கள் சொல்லுங்க என்றால், அதெல்லாம் கிடையாது, பஞ்சாயத பூசை உண்டு என்று பம்முவீர்கள்.// இதில் என்னை ஏன் சேர்க்கிறீர்கள்? நான்தான் ஒப்புக் கொள்கிறேனே? மேலும் பட்தே பட்து என்றால் சொல்லி விடுவேன் :)) என்னுடைய பதிலை படிக்கவில்லை என்று தெரிகிறது. நன்றி

      நீக்கு
    4. //இந்த மாதிரி கதையெல்லாம் விடாதீங்க.//ரொம்பவே அநியாயமா இருக்கே! எந்தச் சிவன் கோயிலிலே கால பூஜை சமயம் போயிருந்தீங்க? தேவாரம்/திருவாசகம் சொல்லலை? ஒரு முறையாவது சிதம்பரம், வைத்தீஸ்வரன் கோயில், மீனாக்ஷி கோயில் எனக் கால பூஜை சமயம் போய்ப் பாருங்க. மீனாக்ஷி கோயில் பற்றிய இப்போதைய நிலவரம் சரிவர இல்லை எனத் தெரிவதால் உறுதியாச் சொல்ல முடியலை. ஆனால் சர்வ நிச்சயமாகச் சிதம்பரம், வைத்தீஸ்வரன் கோயில், திருநெல்வேலி நவகைலாயக் கோயில்கள் ஆகியவற்றில் உண்டு. மதுரையில் ஆடி வீதியில் தேவார/திருவாசகப் பள்ளியும் திருப்புகழ்க் குழுவினரின் பள்ளியும் உள்ளது. சிதம்பரத்திலும் தருமபுரம் ஆதீனத்தால் நடைபெறும் தேவாரப் பள்ளிகளைப் பார்க்கலாம். அதே போல் அம்பத்தூருக்கு அருகே திருமுல்லை வாயிலிலும். இவற்றை எல்லாம் பலமுறை நேரில் கண்டிருக்கேன். நிச்சயம் என்னிடம் தேவாரப் புத்தகங்கள் கிடையாது தான். அதுக்காகச் சொல்லுவதே இல்லைனு சொல்ல முடியாது. கோளறு பதிகம் தெரியாத பிராமணர் இருக்க மாட்டார்கள்.

      நீக்கு
    5. எங்க வீட்டிலே முன்னால் இருந்த சாளக்கிராமத்தைக் கோயிலுக்குக் கொடுத்துட்டாங்க. ஆசார, அநுஷ்டானங்களைக் கடைப்பிடிக்க முடியலைனு. ஆகவே சாளக்கிராமப் பூஜையோ, பஞ்சாயதன பூஜையோ இப்போ யாரும் பண்ணுவதில்லை. எங்க தாயாதிகளில் சிலர் இன்னமும் சிவபூஜை செய்கின்றனர். அதேபோல் கடலூர் மருத்துவர் (அனஸ்தடிஸ்ட்) தி.வாசுதேவன் அவர்கள் தினம் தினம் அக்னி ஹோத்ரம்/பஞ்சாயதன பூஜை ஆகியவற்றைச் செய்து வருகிறார். அவருடைய ஒரே மகனை வைதிகத்தில் தான் விட்டிருக்கார். நெரூர் காஞ்சி மடம் சார்பில் நடைபெறும் வேத பாடசாலையை வாசுதேவன் அவர்களின் மகன் ஸ்ரீரமணன் தான் பார்த்துக்கறார். காஞ்சி மடத்தின் ஜோதிட வல்லுநராகவும் செயல்படுகிறார். அவர் எத்தனை டாக்டரேட் வாங்கி இருப்பார்னே தெரியாது. ஆனால் பார்க்க எளிமையாக இருப்பார். வாசுதேவனும் அப்படியே அவர் மனைவியும் கூட அப்படியே! மனைவியும் மகளிர் மருத்துவர்.

      நீக்கு
    6. //பத்து பாசுரங்கள் சொல்லுங்க என்றால், அதெல்லாம் கிடையாது, பஞ்சாயத பூசை உண்டு என்று பம்முவீர்கள். // பம்மி ஆகவேண்டியது எனக்கு ஒன்றும் இல்லை. நீங்கள் என்னைச் சோதனை செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. என்னிடம் திருவாசகம் முழுமையாகப்பொழிப்புரையோடு இருக்கிறது. முன்னெல்லாம் ரயில் பயணத்தின்போது அதைத் தான் வாசித்துக் கொண்டு போவேன். ஆகவே நீங்க பதிகங்கள் பற்றிக் கேட்டால் (பாசுரங்கள் இல்லை. பதிகங்கள்) ஓரளவுக்குச் சொல்ல முடியும். என்ன ஒரு பிரச்னை எனில் இலங்கையில் தேவாரம்/திருவாசகம் பள்ளிப்படிப்பிலேயே வந்து விடுகிறது. இங்கே திராவிட மாடல் விடியா அரசுகளே மாறி மாறி ஆட்சி புரிவதால் ராமாயணம், பாரதம் கூடப் பள்ளிப் பாடத்தில் இருந்து எடுத்துட்டாங்க. நீதி போதனை, நாலடியார், திரிகடுகம், ஏலாதி, போன்றவை பற்றி எல்லாம் இப்போதைய மாணவ மணிகள் பெயர்களையே அறிய மாட்டார்கள்.

      நீக்கு
    7. சிதம்பரத்தை விடுங்க. உங்களால் நம்ப முடியலை. உங்க மனைவியே சிவன் கோயில்களுக்கு வருவதில் ஈடுபாடு காட்டுவதில்லை என நீங்களே சொன்ன நினைவு.

      நீக்கு
    8. //சிதம்பரத்தை விடுங்க. உங்களால் நம்ப முடியலை. உங்க மனைவியே சிவன் கோயில்களுக்கு வருவதில் ஈடுபாடு காட்டுவதில்லை// - இதுக்குத்தான் காரணம் சொல்லியிருக்கேனே. எனக்கு அதில் அவ்வளவு நம்பிக்கை இல்லை. அவ்ளோதான். நான் எல்லாக் கோவில்களுக்கும் செல்வேன், சஹஸ்ரநாமம்தான் சொல்லுவேன்.

      நான் தவறா ஒருத்தரைக் குற்றம் சொல்லி எழுதலை. தேவாரம் கோவில்களில் தினமும் கோஷ்டி மாதிரி சேர்ந்து சொல்வது, அதைக் கற்றுக்கொள்வது அனைவரிடமும் இல்லையே என்பதுதான் கேள்வி. மற்றபடி சிவ விஷ்ணு பேதத்திற்கு உள் செல்ல விரும்பவில்லை.

      ஆஹாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம்
      சர்வதேவ நமஸ்காரஹ கேசவம் பிரதிகச்சதி

      ஆகாயத்திலிருந்து விழும் நீர் எப்படி கடைசியில் கடலைச் சென்று அடைகிறதோ அதுபோல, எந்தத் தேவதையை வணங்கினாலும் கடைசியில் அந்த பக்தி கேசவனைச் சென்றடைகிறது என்பது பொருள்.

      இது சந்த்யாவந்தனம் முடியும் போது உள்ள மந்திரம். அனைவருக்கும் பொது.

      நீக்கு
    9. தேவாரம் கோயில்களில் கால பூஜையின் போது ஓதுவார்களால் மட்டுமே சொல்லப்படும். அப்போ அவங்க மட்டும் தான் பண்ணிசைத்துப் பாடுவாங்க. மற்றவர்கள் தெரிந்தாலும் மனதுக்குள் தான் சொல்லிக்கணும். கோஷ்டியாகச் சேர்ந்து சொல்லுவது எல்லாம் திருமுறை முற்றோதலில் தான் நடைபெறும். இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொண்டால் குழப்பம் வராது. மன்னர் காலத்திலிருந்தே சிவன் கோயில்களில் ஓதுவார்கள் பதிகங்களைப் பாடும் நடைமுறை வந்து விட்டது.

      நீக்கு
    10. நீங்க கவனிச்சுப் பார்க்காமல் கற்றுக்கொள்வது இல்லைனு எல்லாம் சொல்லவும் கூடாது.

      நீக்கு
    11. எல்லா கருத்துகளையும் ஊன்றிப் படித்தேன். ஆழமான அலசல்கள். நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி.

      நீக்கு
  21. ஆழ்வார்கள் பன்னிருவர், பதின்மர் என்று எழுதியிருந்ததைப் படித்தேன். ப்ரபந்தங்களை எழுதியவர்கள் ஆழ்வார்கள். அதில், ஆண்டாள், பெரியாழ்வாரின் புதல்வி என்பதாலும் அரங்கனையே அடைந்தவள் என்பதாலும் ஆழ்வாரில் ஒருவராக சேர்த்துக்கொள்ளப் படுவதில்லை. மதுரகவியாழ்வார், பத்துப் பாசுரங்களே இயற்றினார், அது அவரது ஆச்சார்யார் நம்மாழ்வாரைப் பற்றியதுதான். அந்த 'கண்ணிநுண் சிறுத்தாம்பு'' என்று தொடங்கும் பாசுரங்கள் ப்ரபந்தத்தில் உண்டு என்றாலும் மதுரகவியாழ்வாரை ஆழ்வார்களில் ஒருவராக பெரியோர்கள் சொல்வதில்லை. இதுவே ஆழ்வார்கள் பதின்மர், பன்னிருவர் என்ற குழப்பத்திற்குக் காரணம்.

    பதிலளிநீக்கு
  22. நிறைந்த செய்திகளுடன் பலவித கருத்துக்களுடன் பகிர்வு .

    பதிலளிநீக்கு
  23. சுயசரிதை என்பதே நினைவில் உள்ள நல்லவற்றையும், பிறரைக் குறை சொல்வதற்காக அல்லனவற்றையும் கொண்டது. இதில் தொழிலதிபர், விஞ்ஞானி, விளையாட்டு வீரர் போன்றவர்களின் சுயசரிதைகள் கொஞ்சத்துக்குக் கொஞ்சம் உண்மை இருக்கும். அரசியல்வாதி, நடிகர் இருவரின் சுயசரிதைகளும் வெறும் புளுகுதான். அதில் உண்மையின் சதவிகிதம் தேடித் தேடிக் கண்டுபிடித்தால்தான் உண்டு.

    பதிலளிநீக்கு
  24. இப்படியான வைஷ்ணவர்கள் - ஸ்ரீ சங்கர நாராயணர் திருக்கோலம் பற்றிச் சொல்வதென்ன?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதில் பேதத்தைக் கொண்டு வருவது சரியல்ல துரை செல்வராஜு சார். அறு மதங்களும் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொன்றில் கலந்துகட்டி இருக்கிறது over a period of time. எல்லாவற்றிலும் உள்ள தத்துவத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும். புரிந்துகொள்ளாதவர்கள், பேதம் பார்த்து கட்சி கட்டுவார்கள் என்பது என் அபிப்ராயம். வழிபடுவதிலும் ஒரே ஒரு இஷ்ட தெய்வத்தை வைத்துக்கொண்டு வழிபடுவது என்பதே சிறந்தது என்பது என் அபிப்ராயம் (ரூபம் இல்லாமல் ப்ரஹ்மத்தை வழிபடுவது சிறந்தது. ஆனால் அந்த லெவலுக்கு ரீச் ஆகாம நம்மைப் போன்ற சாதாரணர்களுக்கு ஒரு இஷ்ட தெய்வத்தைக் கொள்வது நன்று. அதற்காம பிற தெய்வங்கள் பற்றி எதுவும் சொல்லவேண்டியதில்லை)

      நீக்கு
    2. நான் பேதம் சொல்லி எதுவும் எழுத வில்லையே!..

      நீக்கு
  25. பாண்டுரங்கனின் சிரசில் சிவலிங்கமாம்!..

    பதிலளிநீக்கு
  26. திருக்கோஷ்டியூரில் சிவன் சந்நிதியில் வழிபாடுகள் செய்வது ஓர் வைணவச் சிறுவனே. இப்போப் பெரியவராக ஆகி இருக்கலாம். ஆனால் பிரமசாரிகள் இத்தகைய வழிபாடுகளைச் செய்வது சில கோயில்களில் வழக்கம் இல்லை. முக்கியமாய்ச் சிதம்பரத்தில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மாதிரி விவாதங்களுக்காக நான் எழுதவில்லை. திருச்சானூர் பத்மாவதி ஆலயத்தில் தினமும் வேத கோஷ்டியில் ஸ்மார்த்தர்கள்தாம்-சைவர்கள்தாம் உண்டு. In fact, வேதம் சொல்பவர்களில் பெரும்பாலும் ஸ்மார்த்தர்கள்தாம் அதிகம், பாடசாலையில் அவர்கள்தாம் அதிகமாகச் சேர்கின்றனர்.

      நீக்கு
    2. திருப்பதி, மற்றும் பெரும்பாலான வைணவக் கோயில்களில் கற்பிப்பதே ஸ்மார்த்த பிராமணர் தான். எங்க வீட்டுக்கு நிறையத் தரம் வைணவ சாமவேதப் பெரியவர் வருவார். அதே போல் எங்க வீட்டுக்கு வைதிகம் பண்ணி வைப்பவர் தான் வடக்கு கோபுரத்துக்கு எதிரே இருக்கும் பாடசாலையில் சாமவேதம் கற்பிப்பவர்.

      நீக்கு
  27. இங்கே கோவிந்தபுரம்
    ஸ்ரீ விட்டல் சமஸ்தானத்தில் ஸ்வாமிக்குக் கைங்கர்யம் செய்பவர்கள் அனைவரும் விபூதியுடன் இருந்தனர்..

    அது பற்றிக் கேட்டபோது அவர்கள் சொன்னார்கள் இங்கே ஹரிஹர பேதம் கிடையாது.. - என்று!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேதம் என்பது கூடாது. உண்மை. இவர் பெரியவர், அவர் இவரைவிடச் சின்னவர் என்று ஆச்சார்யர்களைப் பற்றிக்கூட சொல்லக்கூடாது. நாம சின்னப்பசங்க, நமக்கு என்ன தெரியும் இதைப்பற்றி எடைபோட?

      நீக்கு
  28. மண்ணும் ஓர் பாகம் உடையார் மாலும் ஓர் பாகம் உடையார்..
    (2/67/1)
    திருஞான சம்பந்தர்

    மறிகடல் வண்ணன் பாகா
    மாமறை அங்கம் ஆறும்
    அறிவனே ஆல வாயில்
    அப்பனே அருள் செயாயே.. (4/62/8)

    மாலை இடப் பாகத்தே மருவக் கொண்டார்.. (6/96/3)
    - திருநாவுக்கரசர்..

    பிறைதங்கு சடையானை வலத்தே வைத்து.. (1186)
    - திருமங்கை ஆழ்வார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விம் போட்டு விளக்கவும்

      நீக்கு
    2. சங்கரநாராயணர் குறித்த ஆழ்வார் பாசுரங்களும் நாயன்மாரின் பதிகமும். தில்லை கோவிந்தராஜனைக் குறித்துத் திருமங்கை ஆழ்வார் நிறையப் பாசுரங்கள் சொல்லி இருக்கிறார்.

      நீக்கு
  29. @ கீதாக்கா..

    /// இப்போதைய மாணவ மணிகள் பெயர்களையே அறிய மாட்டார்கள்///

    இப்போதைய மாணவ பிணிகள்..

    சாலையில் வைத்து சரக்கு அடிக்கத் தெரியும்..
    தாலி கட்டத் தெரியும்..

    பதிலளிநீக்கு
  30. யாரங்கே! ஆழ்வார்கடியானை இங்கே கூட்டி வாருங்கள். வாதம் முற்றுகிறது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  31. பதில்கள்
    1. ஆ! வள்ளுவர் தான் நம்மாளு.

      அதாவது இன்னாத்துக்கு சாவுறத பத்தி பயந்து சாவுற நைனா? உன் சாவுல நாலு பேரு உனக்காக வேண்டிக்கட்டுமே, நீ இன்னாத்துக்கு வேண்டிக்கணும்? அதுனால நாக்கு இஸ்துக்குமுன்னால நாலு பேருக்கு நல்லது செய்யுன்னாரு. நம்மாளாச்சே நறுக்குன்னு சொல்வாரு.

      நீக்கு
  32. சைவம், வைணவம், அது, இதுவென்று ஆளுக்காள் விளையாடியிருக்கிறீர்கள் நேற்று. செரிவான பின்னூட்டங்கள்.
    புதன் பொழுதினில் கொஞ்சம் அப்பர், நாவுக்கரசர், ஆழ்வார், ஆச்சார்யர் என மனம் சற்றே ஆனந்தமாக ஓடிப்பார்த்துக்கொண்டது.

    பதிலளிநீக்கு
  33. வணக்கம் சகோதரரே

    சுவையான விவாதங்கள். பல விஷயங்களைப் பற்றி நானும் அறிந்து கொண்டேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  34. என் கருத்தும் ஒன்று பதிந்திருந்தேனே...! காணவில்லை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!