திங்கள், 29 மே, 2023

"திங்க"க்கிழமை  :   கதிர் பாயசம்  - துரை செல்வராஜூ ரெஸிப்பி 

 முற்றாத சோளக் கதிர்  - 2

பசும்பால் 500 ml
ரவா 2 tbsp
நாட்டுச் சர்க்கரை 50 gr
முந்திரிப் பருப்பு 10
பசு நெய் 1 tbsp


முற்றாத சோளக் கதிரை உதிர்த்து முத்துக்களை எடுத்து அலசி விட்டு  சோளத்தின் அளவு ஒரு கோப்பை எனில் இரண்டரை கோப்பை பசும் பால் சேர்த்து அரைக்கவும்..

ரவாவை நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

தனியாக 150 ml பசும் பாலை 100 ml  தண்ணீருடன் காய்ச்சவும். கொதித்து வரும் போது  வறுத்து வைத்திருக்கும் ரவாவை சேர்த்து கிளறி விடவும்..  

சற்றே வெந்ததும் அரைத்த சோளப் பாலைச் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும். அதனுடன் 10 முந்திரியையும் உடைத்துப் போட்டு 50 கிராம் நாட்டுச் சர்க்கரை, நெய் சேர்த்துக் கிளறி விடவும்.. 

இறுகி வந்தது என்றால் மேலும்  பால் தளர்த்திக் சேர்த்து கொள்ளவும்.. 

தணலைக் குறைத்து இறக்கி வைக்கவும். வேண்டுமெனில் சிறிது குங்குமப்பூ சேர்த்துக் கொள்ளலாம்..

பால் சர்க்கரை வேண்டாம் என்றால் அதே அளவு தண்ணீர் சேர்த்து கல் உப்பிட்டுக் காய்ச்சிக் கொள்ளலாம்..

மஞ்சள் சோளத்தில் உள்ள நிறமிச்சத்து, பார்வைத் திறனை அதிகரிப்பது மட்டுமன்றி, தேகத்திற்கு பொலிவையும் கொடுக்கிறது.  ஊட்டச் சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு அவசியமானது  சோளம்..

ரசாயனங்கள் கூடிய பாப் கார்னை தவிர்த்து விட்டு சோளத்தை மணலில் வறுத்துப் பொரியாக்கிக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.. 
 
மடல் நீக்கப்பட்ட சோளக் கதிரை சிறிது கல் உப்பு போட்டு - அவித்துத் தின்றதும் 

தணலில் கதிரை சுட்டுத் தின்றதும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டீர்கள்!..

***

59 கருத்துகள்:

 1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்.

  சோளக் கதிரில் பாயசம்...... ஆஹா..... சுவைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி வெங்கட்..

   முழுக்க முழுக்க இயற்கையானது..

   நலம் வாழ்க..

   நீக்கு
 2. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார்.

   மகிழ்ச்சி..
   நன்றி..

   நீக்கு
 3. பயனுள்ள நல்லதொரு பாயாசம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

   நலம் வாழ்க..

   நீக்கு
 4. பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..

   நலம் வாழ்க..

   நீக்கு
 5. காக்க காக்க
  கனக வேல் காக்க..
  நோக்க நோக்க
  நொடியில் நோக்க..

  இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
  பிரார்த்திப்போம்..

  எல்லாருக்கும் இறைவன்
  நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 6. சோளக்கதிர் பாயசம்... ஆஹா. இதுவரை சாப்பிட்டதில்லையே..

  கொதிக்கும்போது பச்சை வாசனை போயிடும் போலிருக்கு.

  இங்க, எப்போதும் சோளக்கதிர்கள் கிடைக்கும். 10-15 ரூபாய்தான் ஒன்றின் விலை. விரைவில் செய்துபார்த்துவிடுவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது சோளக் கதிர்கள் பால் பிடித்து விளையும் காலத்தில் மட்டுமே செய்வதற்கு இயலும்..

   கதிர், பால் பிடித்தல் என்பதெல்லாம் இன்றைய நவீன டமிளர்களுக்கு புதிய வார்த்தைகள்..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நலம் வாழ்க..

   நீக்கு
  2. ஏன் அப்படிச் சொல்றீங்க? இங்க இருக்கும் பெரிய சுவையான மணிகள் உள்ள சோளக் கதிரில் இதனைச் செய்யலாமே. நான் முயற்சி செய்து பார்த்துவிட்டு அடுத்த வாரம் எழுதுகிறேன்.

   நீக்கு
 7. கல் உப்பிட்டுக் காய்ச்சுவதென்றால் மிளகுப் பொடியும் சேர்த்துக்கொள்ளலாம். உடலுக்கு நல்லது.

  இருந்தாலும் பாயசம் போல வருமா?

  பதிலளிநீக்கு
 8. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 9. சோளக்கதிர் பாயசம் செய்முறை நன்றாக இருக்கிறது.
  சோளக்கதிர் வேகவைத்தும், சுட்டும் சாப்பிட்டு இருக்கிறேன். பாயசம் செய்து பார்க்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 10. அட! துரை அண்ணா சோளக் கதிர் அதான் குழந்தை சோளத்தில் பாயாசம்!!! நானும் செய்தேனே சில மாதங்கள் முன்பு! ஆனா பாருங்க அப்ப திடீர்னு செய்ய வேண்டியதானதால் புகைப்படங்கள் எடுக்க முடியவில்லை.

  உங்கள் பக்குவம் நன்றாக இருக்கிறது. துரை அண்ணா. அடுத்த கருத்தில் நான் செய்த விதத்தைச் சொல்கிறேன்,

  கீதா

  பதிலளிநீக்கு
 11. கல் உப்பு போட்டு மிளகுப் பொடி சேர்த்து சூப் செய்வதுண்டு. அடிக்கடி.....கூடவே வேறு காய்களும் போட்டும் செய்வதுண்டு.

  இந்தத் திடீர் பாயாசம் வீட்டிற்கு வந்தவருக்கு இனிப்பு ரொம்பப் பிடிக்கும், வித்தியாசமாக இதுவரை சாப்பிட்டிருக்காத ஒன்று என்று சொன்னார்கள். வீட்டில் சூப்பிற்காக முற்றாத சோளம் இருந்தது. அதில் பாயாசம் செய்தால் என்ன என்று தோன்றிட....டக்கென்று செய்வதும் எளிது என்பதால் செய்துவிட்டேம். அவர்களுக்கும் ரொம்பப் பிடித்தது. திடீரென்று செய்ததால், நான் ஏற்கனவே திட்டமிட்டுத் தயாராக இல்லாததால் புகைப்படம் எடுக்க முடியாமல் ஆனது...

  கீதா

  பதிலளிநீக்கு
 12. நான் செய்த முறை வேறு. அதில் ரவை எதுவும் சேர்க்கவில்லை. கொஞ்சம் சோளத்தை அரைத்துக் கொண்டு, மீதியை அப்படியே சிறிது நெய்யில் புரட்டி, பாலுடன் குக்கரில் போட்டு, மிகச் சிறிய தீயில் வைத்துவிட்டேன். வெயிட்டும் போட்டு மெதுவாக ஆனது. விசில் வந்து 4,5 வந்ததும் அணைத்து விட்டு சிறிது நேரம் கழித்து திறந்து சர்க்கரை (அதான் வெல்லப் பொடி/நாட்டுச் சர்க்கரை) சேர்த்து கொஞ்சம் நன்றாகத் திரட்டிக் கொண்டு கட்டியாக ஆகும் போது கூடக் கொஞ்சம் பால் சேர்த்து இறக்கிவிட்டு பருப்புகள் பிடிப்பவர்கள் தாளித்துக் கொள்ளலாம். நான் ஏலம் சேர்ப்பதில்லை பாலுடன் குக்கரில் நேரடியாக வைக்கும் போது condensed milk போன்ற மணமும் நிறமும் வரும் அந்தச் சுவையைச் சுவைக்க சேர்ப்பதில்லை.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெல்லம், ஏலக்காய், நெய்யில் பொரித்த முந்திரி, உலர் திராட்சை போட்டு, எதைச் சேர்த்துக்கொண்டு செய்தாலும் நன்றாக இருக்காதோ? இப்படித்தான் முதல் முறை உருளைக்கிழங்கு அல்வா, சப்போட்டா அல்வா என்பதெல்லாம் முதலில் கேட்கும்போது ஒரு மாதிரி இருந்தது. ஆனால் பஹ்ரைன் சங்கீதாவில் சாப்பிட்டபோது அவ்வளவு ருசி. அதனால் எதைப் போட்டாலும் அல்வா, பாயசம் ஆக்கிடலாம், மிளகாய் உட்பட. அதுக்காக கத்தரிக்காயைத் தூக்கிட்டு வராதீங்க.

   நீக்கு
  2. வெல்லம், ஏலக்காய், நெய்யில் பொரித்த முந்திரி, உலர் திராட்சை போட்டு, எதைச் சேர்த்துக்கொண்டு செய்தாலும் நன்றாக இருக்காதோ?//

   நல்லாருக்கும் நெல்லை. பருப்பு எல்லாம் நெய்யில் வறுத்துப் போட்டாலும், ஏலம்மட்டும் போடலை அன்று.

   உகி, சப்போட்டா, பைனாப்பிள், அல்வா எல்லாம் நல்லாருக்கும் கலந்துகட்டி செஞ்சாலும் நல்லாருக்கும்.

   ஹாஹாஹா கத்தரிக்காயை யாராச்சும் தொக்கு மாதிரி சர்க்கரை போட்டு செஞ்சாலும் செஞ்சு உருத்தெரியாம போடுவாங்க நீங்களும் சாப்பிட்டு விட்டு "கத்தரிக்காய்ன்னு தெரியவே இல்லை நான் அத்திப்பழ அல்வான்னு நினைச்சுட்டேன்னு சொல்லுவீங்க பாருங்க!!!!!!!!!!!!!!!!

   கீதா

   நீக்கு
  3. நல்ல நல்ல செய்முறைகள் கருத்துரையில் வந்திருக்கின்றன..

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 13. நெல்லை கேப்பார், "இதென்னா கீதாரெங்கன்(கா) இனிப்பே செய்யறதில்லைன்னு இனிப்பா செய்யறீங்க....உங்க வீட்டுக்குத் திடீர்னு வந்தா இந்தப் பாயஸம் தான்னு சொல்லுங்க....ஆனா ஒன்னு நான் இப்பலாம் ஸ்வீட் சாப்பிடறதில்லைனு......சும்மானாலும் சொல்லிக்கிறேன்"........ஹாஹாஹா

  சத்தியமா, அதிரா வைரவருக்கு வேண்டிக்கிட்டு செஞ்சு வைச்சுருக்கற வைர நெக்லஸ் - ஓ இப்ப அம்பாணியாகிட்டாங்க அப்ப நிறைய நெக்லஸ், ஒட்டியானம் மோதிரம் கம்மல் எல்லாம் செஞ்சிருப்பாங்க ப்ளாட்டினத்துலயும் - அதெல்லாம் மீதும் சத்தியமா சொல்றேன் ஸ்வீட்டு செய்வதில்லை இல்லை இல்லை இல்லை. நான் சாப்பிடவும் இல்லை இல்லை..வந்தவங்களுக்காகத்தான் .....

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்ம அதிரா பிள்ளை ஓடி வந்திருவாங்க வைர நெக்லஸ் பத்தி சொல்லிருக்கேனே பயந்து போய்...செக் கிட்ட பத்திரமா இருக்குதல்லோன்னு செக் பண்ணிட்டு....

   பிள்ளைன்னதும், நெல்லை, அதிரா எப்ப சின்னப் பிள்ளையானாங்கன்னு வியந்திராதீங்க. அவங்க இப்பவும் ராணியின் குட்டிப் பேரப் பிள்ளக்கும் அவங்க வீட்டு டெய்சிப் பிள்ளைக்கும் பாட்டிதான்!!

   கீதா

   நீக்கு
  2. /நான் சாப்பிடவும் இல்லை இல்லை// - இறைவா.... நான் சாப்பிடாத எதையும் நான் யாருக்குமே கொடுப்பதில்லையே... இந்த அக்கா இப்படிப் பண்றாங்களே... இது எதனால்? உன் உடம்பு எக்கேடு கெட்டுப்போனால் எனக்கென்ன என்று நினைக்கறாங்களோ?

   நீக்கு
  3. ஹாஹாஹாஹா....நெல்லை!!!

   ஆ அண்ணனுக்கு ஸ்வீட் பிடிக்கும் பிடிக்கும்னு எங்க போனாலும் - அந்த ஊர் ஸ்வீட் என்னனு பார்த்து வாங்கி சுவைச்சு......இங்க போளி நல்லாருக்கும்னு சொல்லி சந்தோஷப்படும் அண்ணனுக்கு தங்கச்சி ஆசையா பாயாஸம் செஞ்சு கொடுக்க மாட்டாங்களோ!!! இங்க பல சாட்சிகள் உண்டாக்கும்!!!

   வாங்க வாங்க பாயாசத்துல, ஸ்வீட்டுல எல்லாம் உப்பும் காரமும் போட்டுத் தரேன்!!!

   கீதா

   நீக்கு
  4. பாயசத்தில் உப்பு போட்டு தாளித்துக் கொட்டும்படி இல்லை..


   சர்க்கரை தவிர்த்து வேறு செய்முறையச்க சொல்லி இருக்கின்றேன்..

   நீக்கு
  5. ஹாஹாஹா துரை அண்ணா, அது நான் நெல்லையைக் கலாய்த்து எழுதியது. நீங்கள் சொல்லியிருப்பது சூப் போன்று அதை மேலெ கருத்தில் சொல்லியிருக்கிறேனே...

   இது நெல்லை எங்கள் வீட்டுக்கு வந்தா (அவர் வர மாட்டார் சும்மா ஒரு ஃபிக்ஷன்!!!) என்று அவரைக் கலாய்த்து அவர் பதிலுக்குச் சொன்னது

   கீதா

   நீக்கு
 14. கீதா சாம்பசிவம் மேடம் இப்போதெல்லாம் எங்கள் பிளாக்கில் காண முடியவில்லையே.... பூநூல் விசேஷத்திற்குச் சாப்பிடப் போன பிறகு, இணையத்துக்கு வருவது வெகுவாகக் குறைந்துவிட்டதா? நலமா இருக்காரா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நேத்திக்குக் கூட உங்க கோதண்டராமரைப் பார்த்தேன். தஞ்சையம்பதியில் பால்குடமும் பார்த்தேன். கில்லர்ஜியின் கும்பாபிஷேஹமும் பார்த்தேனே!

   சோளம் பிஞ்சுச் சோளம் கிடைச்சால் வெஜிடபுள் சாதத்தில் போடுவோம். குக்கரில் உப்பு, மிளகு பொடி, அல்லது மி.பொடி சேர்த்து வேகவைத்து/தணலில் சுட்டு மி.பொடி தடவிச் சாப்பிட்டிருக்கோம். சோள ரவையில் உப்புமாப் பண்ணி இருக்கேன். கிச்சடி பண்ணுவேன். ஆனால் நோ பாயசம். முற்றிலும் புதுசு. இதில் சாதாரண ரவைக்குப் பதில் சோள ரவையையே போட்டுடலாமோனு நினைக்கிறேன்.உடம்புக்கு நல்லது. எங்க பொண்ணு, எங்க மரும்கள் ஆகியோரெல்லாம் க்ளூடோன் ஃப்ரீ என்பதால் சோள ரொட்டி தான் சாப்பிடறாங்க.

   நீக்கு
  2. வலி கொஞ்சம் அதிகமாத் தான் இருக்கு. தும்ம முடியலை, இரும முடியலை. வலி அதிகம் ஆகிறது. படுப்பதும் கூடப் பிரச்னை தான். என்னவோ நாட்கள் ஓடுகின்றன. எண்ணெய் மசாஜ், ஆயின்ட்மென்ட் தடவிக்கிறேன். மாத்திரையும் சாப்பிடறேன்.

   நீக்கு
  3. கீதா அக்கா இந்த வலிக்குக் காரணம் கேட்டீங்களா? எப்படி இப்படி சாப்பாடு சாப்பிட்டதனால்.. இப்படி...

   மருத்துவரிடம் போனீங்களஆ? அவர் என்ன சொல்கிறார்?

   கீதா

   நீக்கு
  4. அவங்க அன்னைக்கு அங்க கால் தவறி விழுந்து அடிபட்டதைப் பற்றி எழுதியிருந்தாங்களே. நினைச்சாலே வருத்தமா இருக்கு. எதிர்பாராமல் புதுப் பிரச்சனை, ஏற்கனவே ஏதேனும் ஒரு பிரச்சனை அவரைப் படுத்திக்கொண்டிருக்கும்போது. எங்கள் ப்ரார்த்தனைகள் விரைவில் குணமடைய, திரும்பவும் திப்பிசம்லாம் செய்து பார்க்க.

   நீக்கு
  5. ஓ கீசாக்கா.. இப்போ உங்களுக்குத் தேவை ஓய்வுதான், நன்கு ரெஸ்ட் எடுங்கோ நலமாகிவிடுவீங்கள் விரைவில்.

   நீக்கு
  6. எங்கள் ப்ரார்த்தனைகள் விரைவில் கீதாக்கா நலமடைய வேண்டும்..

   நீக்கு
  7. நெல்லை அது தெரியும்...படி ஏறும் போதும் ...நெஞ்சில் கூட அடிபட்டதுன்னு சொல்லிருந்தாங்க.....ஆனால் அடி எப்படியானதுன்னு தெரிஞ்சுக்க வேண்டும் இல்லையா அதச் சொன்னேன் நெல்லை.

   கொஞ்ச நாள் எந்த திப்பிசமும் வேண்டாம்....முதல்ல நல்ல ஓய்வு தேவை.

   கீதா

   நீக்கு
  8. சாப்பாடு ஒத்துக்கலை வயிறும் பிரச்சனை அதையும் சொல்லியிருந்தாங்க இல்லையா...நெல்லை அதுவும் சேர்த்து கேட்டது அது....

   கீதா

   நீக்கு
 15. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

  இன்றைய திங்கப் பதிவில் தாங்கள் செய்திருக்கும் சோளகதிர் பாயாசம் புதுமையான ஒன்று. நான் இதுவரை செய்ததில்லை. செய்முறை விளக்கங்கள் நன்றாக உள்ளது. ஒரு முறை சோளக்கதிர் வாங்கி இது போல் செய்து பார்க்கிறேன்.

  பொதுவாக நாங்கள் இந்த சோளகதிர் சுட்டும் அவித்தும் இதுவரை சாப்பிட்டதை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவிற்கு எங்கள் வீட்டில் சோள பயன்பாடு இருந்தது. நீங்கள் இன்று அறிமுகப்படுத்தியிருக்கும் பாயாசம் நன்றாக இருக்குமென தோன்றுகிறது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் எனவும் நினைக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றாக இருக்கும் ஒருமுறை செய்து பாருங்கள்..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நலம் வாழ்க..

   நீக்கு
 16. கதிர் எனச் சொல்லிப்போட்டு, திருவாளன் சோளன் அவர்களை தரை இறக்கியிருக்கிறார் துரை அண்ணன், நெற் கதிரைத்தான், செல்லமாகக் கதிர் எனச் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன், சோளனையும் அப்படித்தான் சொல்வதோ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /சோளனையும்// அப்படியே இந்த பாண்டியனையும், சேரனையும்னு சேர்த்துக்க வேண்டியதுதானே... காசா பணமா?

   நீக்கு
  2. ஆஆஆஆஆஆஆ அது சோழனோ??? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதிரா எப்பவும் ஸ்ஸ்ஸ்ரெடியாவே நிற்பேன் ஆனா அப்பப்ப இந்த ழ/ள மட்டும் காலை வாரிவிட்டிடுதே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா...

   ஓ சோளன் என்றால் அவரோ? ஆஆஆ இனி சோ, சே, பாணியரையும் ஒரு அலசு அலசிட வேண்டியதுதான் விரைவில் ஹா ஹா ஹா

   நீக்கு
  3. கொத்துக் கொத்தாகக் காய்க்கின்ற தானியங்களை கதிர் என்பது வழக்கம்.

   நெற்கதிர், சோளக்கதிர்,
   கம்பங்கதிர்.

   பழவகைகள் - தென்னங்குலை,
   பனங்குலை,
   ஈச்சங்குலை..

   பூக்கள் கொத்துக் கொத்தாக இருந்தால் மஞ்சரி எனப்படும்..

   நீக்கு
  4. ஹயோ என்ன சொல்ல!!!!!!!!!!!!!!!! சோழன் . ழ, ள மாறிப் போனால் பொருளே மாறிப் போகுமே! பொ செ பார்க்கறதுக்குள்ள பொ செ புத்தகம் படிச்சுடுங்க!! இராஜராஜ சோழன் - சோளன் ன்னு சொல்லிட்டீங்கனா அப்புறம்....மணிரத்தினம் அப்படியே வாய் பிளந்து உட்கார்ந்திடப் போகிறார்! கம்பன் வாரிசா இருந்துகொண்டு அதிராப் பிள்ளை இப்படி ழ ள வில் ஸ்ரெடியா நிற்க வேண்டாமா !!!! ஹாஹாஹாஹா...

   கீதா

   நீக்கு
  5. ஹையோ ஆண்டவா என் செக்:) இடம் கேட்டுத்தான் தெளிவானேன் இப்போ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஒழுங்கா இருக்கும் அதிராவைக் கொயப்புவதே நெ தமிழனுக்கு வேலையாப்போச்ச்ச்ச்ச் கர்ர்ர்ர்ர்:))..

   கீதா கொஞ்சம் ஜெல்ப் மீஈஈஈஈ.. ஆராவது பிடிச்சுத்தாங்கோ.. தேம்ஸ்ல தண்ணி வத்தியிருந்தாலும் பறவாயில்லைத் தள்ளாமல் விடமாட்டேனாக்கும்ம்ம்ம்... நான் கரீட்டான ள// தானே போட்டிருக்கிறேன்.. சேரர் பாண்டியனை கூப்பிட்டமையால் அது ழ வரோணுமாக்கும் அதனாலதான் இப்படிச் சொல்றார் எனக் குழம்பிட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

   விடுங்கோ என்னை ஆரும் தடுக்க வாணாம்ம்ம் இப்பவே குதிக்கப்போறேன் தேம்ஸ்ல.. இல்ல இப்ப வெயில் ரொம்ம்ம்ப சூடாக இருக்குது கொஞ்சம் தணியட்டும்:))..

   இப்போதான் எங்கட வீட்டில ஒரு சம்பவம் நடந்துது, சின்னவரிடம் சொன்னேன் .. ஒரு வசனம்.. பின்பு கேட்டார் வட் இஸ் தட் "பணியம்" என.. இதென்ன கோதாரியாக்கிடக்கு நான் எப்போ பணியம் சொன்னேன்.. பணியாரமோ? அப்படி ஏதும் சொல்லலியே என ஓசிச்சுப் பின்புதான் கண்டு பிடிச்சேன்...

   புல்லு வெட்டுவது பற்றி கார்டினில்.. பேசும்போது வெயில் "தணியட்டும்" என்றேன்.. அதைப் பணியம் ஆக்கிட்டார் கர்ர்:)) வீட்டிலயும் புளொக்கிலயும் நான் படும் பாடிருக்கே.. நான் காசிக்கே போயிடுறேன்ன்ன்ன்ன்:))

   நீக்கு
  6. அது பிறகு அஞ்சுதான் சொன்னா, சோளன் எனச் சொல்ல மாட்டோம் சோளம் என்போம் என, எனக்கெப்படி அது தெரியும் நாங்கள் சோளன் எனத்தான் ஜெல்லமாச்ச்ச்ச்ச் சொல்லுவமாக்கும் ஹா ஹா ஹா:))

   நீக்கு
  7. துரை அண்ணன் நீங்க சொல்வது சரி, எனக்கது தெரியும் ஆனா நான் சொன்னது, அனைத்துக்கும் பெயர் சேர்த்தே சொல்லுவோம்.. சோளக்கதிர், கம்புக்கதிர் இப்படி, ஆனால் பொதுவா.. பெயர் இல்லாமல்,... கதிர் அறுத்தல், கதிர் .. எனச் சொன்னால் அது நெல்லை[[ஹையோ இது வேற நெல்லை:)].. தொட்டதுக்கெல்லாம் பதற வேண்டிக்கிடக்கே திருவண்ணாமலை வேலவா ஹா ஹா ஹா....:))]] மட்டும்தான் குறிக்கும் என நினைச்சிருந்தேன்ன்

   நீக்கு
 17. சூப்பர் பாயாசமாகத்தான் இருக்குமென நினைக்கிறேன், ஒருதடவை செய்து பார்க்கலாம். எனக்கு சோளன் ரொம்பப் பிடிக்கும், டெல்லியில் இருந்தபோது சோளன் சோளனாக வாங்கி அவித்தேன், அங்கு வெளியே போகும்போதெல்லாம் சாப்பிட்டுக் கொண்டே போவேன் காரில்:), இங்கு கிடைப்பது சுவீட் கோன், இது பிஞ்சுபோல இருக்கும், ஆனால் இலங்கை இந்தியாவிலதான் நிறைய மாச் சத்துடன் நல்ல ஒரேஞ் கலரில் இருக்கும்.. எனக்கும் ரப்பர் மாதிரி சப்புப்படும் சோளன் தான் பிடிக்கும்...:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சோளன் ஆஆஆ...நல்ல காலம் ழ போடலை!!!!

   கீதா

   நீக்கு
  2. ஹா ஹா ஹா கீதா, மேலே நெ.த பதில் போட்டிருக்கிறேன்:)).. நல்லவேளை மருவாதையாகத்தான் சொல்லியிருக்கிறேன் சோளன் அவர்கள் என அதனால தப்பில்லையாக்கும் ஹா ஹா ஹா எப்பூடியெல்லாம் எஸ்கேப் ஆக வேண்டிக்கிடக்கூஊஊஉ:))

   நீக்கு
  3. சோளன் ஆஆ...
   நல்ல காலம்..

   சோழன் தப்பித்தான்!..

   நீக்கு
  4. விடுங்கோ என்னை விடுங்கோ ஆரும் தடுக்காதீங்கோ.. நான் என் தேம்ஸ்கரை ஆச்சிரமத்தில தியானம் பண்ணப்போறேன்ன்ன்ன்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா..

   நீக்கு
 18. .. டெல்லியில் இருந்தபோது சோளன் சோளனாக வாங்கி அவித்தேன், அங்கு வெளியே போகும்போதெல்லாம் சாப்பிட்டுக் கொண்டே போவேன் ..//

  இதெல்லாம் எந்த நூற்றாண்டில் நடந்தது அல்லது எந்த ஜென்மத்தில்? டெல்லியில் அதிராவா.. கடினமாக இருக்கிறதே அம்மா.. நம்ப !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா ஏ அண்ணன் இந்த முசுப்பாத்தி உங்களுக்குத் தெரியாதோ.... போன சமர் முழுக்க.. அவிய அவிய:)) வேர்க்க வேர்க்க வட இந்தியா சுற்றினோம்... என் யூரியூப் ஷனல் உங்களுக்குத் தெரியாதென நினைக்கிறேன், அங்குதான் வீடியோப் போட்டேன் இது பற்றி.. கீழே லிங் போடுறேன் பாருங்கோ[ஊசிக்குறிப்பு:- இது விளம்பரமாகுமோ?:)) ஹா ஹா ஹா]

   ஹரிதுவார், பொற்கோயில், லோட்டஸ் ரெம்பிள், மோடி அங்கிள் வீடு:) எல்லாம் பார்த்தோம்... ஹா ஹா ஹா..

   https://youtu.be/WD_GoSGtLRo

   நீக்கு
 19. என் பின்னூட்டம் என்னாச்சு? காணவில்லையே!

  பதிலளிநீக்கு
 20. வணக்கம் பின்னூட்டம், அடுத்து பாயசம் பற்றிய கருத்து இரண்டும் வரவில்லை.

  பதிலளிநீக்கு
 21. சோளக் கதிர் பாயசம் செய்முறை நன்றாக இருக்கிறது.சோளக்கதிரை வேக வைத்து, சுட்டு சாப்பிட்டு இருக்கிறேன். இப்படி பாயசம் செய்து பார்க்க வேண்டும்.

  மீண்டும் கருத்து போட்டு இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சோளக்க்திர் சுட்டுத் தின்ற நாட்கள் எல்லாம் மறப்பதற்கு இல்லை ..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நலம் வாழ்க..

   நீக்கு
 22. எழுத்து சாப்பிட்ட உணர்வை தருகிறது.
  சோளக் கதிர் பாயாசம் சூப்பரோ சூப்பர்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!