வியாழன், 11 மே, 2023

ஐயோ... நான் திருடனில்லை!

நியூஸ் ரூம் 

"எங்கப்பா குதிருக்குள்ள இல்லை!"

நல்லா வூட்டுக்குள்ள தேடிப்பாரும்மா...  இதையெல்லாமா நியூஸா தருவாங்க...




😂 சென்ற நிதியாண்டை விட இந்த நிதியாண்டில் அதிகம் வரி வசூலாகியிருக்கிறது, அதை வசூல் செய்வதற்கான செலவு குறைந்திருக்கிறது. டிஜிட்டல் பரிவர்த்தனையால் கிடைத்த அனுகூலம் -  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு. 

👳 இங்கிலாந்து மன்னராக சார்லஸ் முடி சூட்டிக் கொண்டார்.

😆 அமெரிக்காவில் ஒரு ஷு கடைக்குள் நுழைந்து வலது கால் ஷுக்களை மட்டும் திருடிய திருடர்கள்😀- சிரிப்புத் திருடர்கள். 

👩 ஏர்-இந்தியா விமானத்தில் நடு வானில் பெண் பயணியை கொட்டிய தேள். - ஏன் ஏர் இந்தியா பற்றி எதிர்மறை செய்திகள் அடிக்கடி வருகின்றன?

💁 வைட்டமின் A, மற்றும் D செறிவூட்டப்பட்ட புதிய பாலை அறிமுகம் செய்கிறது ஆவின். ஊதா நிற இந்த பாக்கெட்ட் ஒன்றின் விலை ரூ 22/-

💤💔கர்நாடகாவில் காலையில் சீக்கிரம் எழுந்து கொள்ள சொன்னதால் இரண்டு குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட பெண்.

---  பானுமதி வெங்கடேஸ்வரன் ---

===================================================================================================


 சிறுவாபுரி சென்று ஒரு கோரிக்கை மனு வைத்து வந்தோம்.

சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் புழல், ரெட்ஹில்ஸ் எல்லாம் தாண்டி 33 கிலோமீட்டர் சென்று, சட்டென  இடது புறம் திரும்பி பசுமையான வயல்ககளைக் கடந்து 'எங்கே கோவில், எங்கே கோவில் என்று தேடிக்கொண்டு மூன்று கிலோமீட்டர் சென்றால், மறுபடியும் ஒரு இடது புறம் திருப்பம்.  அப்புறம் ஒரு திருப்பத்தில் திரும்பியதும் கண்ணில் படுகிறது இந்த 500 ஆண்டு பழமையான கோவில்.


அழகிய பாலசுப்பிரமணியர் நான்கரை அடி உயரத்தில் நின்று அருள் பாலிக்கிறார்.  முன்னால் வள்ளியுடன் வள்ளிமணாளராக உற்சவர்.  அவர் காலடியில் கோரிக்கையை வைத்து எடுத்து வந்தோம்.


வீடு கட்டத்தான் ஸ்பெஷலிஸ்ட்டாம் இந்த முருகன்.  ஆனால் பக்தர்கள் கோரிக்கை யாவையும் நிறைவேற்றுவார் என்று, வேண்டுதல் நிறைவேறும் சமயம் அங்கு சென்று வந்த பக்தர்கள் சொல்ல, அது எங்கள் வரை பரவி, நாங்களும் சென்று வந்தோம்.

ஆறு செவ்வாய் சென்று பார்த்து வந்தால்தான் பாலசுப்ரமணியம் நம் பக்கம் பார்த்து அருள் பாலிப்பாராம்.  கோரிக்கையைப் பரிசீலித்து சாங்ஷன் செய்வாராம்.  .  நாங்கள் ஒற்றை விசிட்டில் வேண்டுதல் வைத்திருக்கிறோம்.  நிறைவேற்ற வேண்டும் வள்ளிமணாளன்.  உள்ளே அர்ச்சனை சீட்டு வாங்கச் சொல்லி அறநிலையத்துறை அராஜகச் சீட்டு விற்றுக் கொண்டிருந்தது. வழக்கம்போல கம்பித்தடுப்புகள் போட்டு வசூல் வேட்டையும் நடக்கிறது என்பது உள்ளே நுழைந்ததும் தெரிந்தது.   கோவில் பற்றிய விவரங்களை இங்கேயும் இங்கேயும் காணலாம்.  சமீபத்தில்தான் பக்தர்களின் பணத்தை எடுத்து அறநிலையத்துறை மூலமாக கும்பாபிஷேகம் நடந்திருக்கிறது.


கோவிலின் வெளியே அருமையான, பசுமையான காய்கறிகள் விற்றுக் கொண்டிருந்தார்கள்.  பெரிய பெரிய பருப்புகளுடன் பச்சைக் கடலை பெரிய படியால் ஒன்றரைப் படி 50 ரூபாய்க்கு கிடைத்தது.

கோவிலுக்கு அடுத்தபடி நாம் அல்லது நான் முக்கியத்துவம் தருவது ஹோட்டல்!  கோவிலுக்கு காலையில் சென்றாலும் சரி, மாலையில் சென்றாலும் சரி, ஒரு வேளை சிற்றுண்டி ஹோட்டலில் முடிக்க வேண்டியதாய் இருக்கும்.

சமீப காலங்களில் நான் A2B, சங்கீதா, வசந்த பவன், சரவணபவன்  போன்ற எங்கே போனாலும் கண்ணில் படுகிற ஹோட்டல்களை விடுத்து மற்ற ஹோட்டல்களில் சாப்பிட முயற்சிக்கிறேன்.  கண்ணில் படவேண்டுமே..


சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் கோவில் நோக்கி, அதாவது கொல்கத்தா நோக்கி போகும்போது அந்தப் பக்கம் சில ஹோட்டல்கள் கண்ணில் படுகின்றன.  ஆனால் கோவில் சென்று சென்னை திரும்பும் வழியில் இடது பக்கம் ஹோட்டல் எதுவுமே இல்லை.  இடதுபுறம் ஏதாவது ஊருக்குள் ரொம்ப உள்ளே செல்ல வேண்டும் அல்லது சென்னை எல்லை வந்துவிட வேண்டும்! வலதுபுறம் இருக்கும் ஓரிரண்டு ஹோட்டலை நீங்கள் அடைய, நேஷனல் ஹைவே என்பதால் பெருந்தூரம் சுற்றி வரவேண்டும்.  அதிலும் அப்படி யு டர்ன் எடுப்பபவர்கள் கொஞ்சம் விவரம் இருந்தால்தான் சர்விஸ் ரோடில் திரும்பி செல்ல வேண்டும் என்பது தெரியும்.  இல்லா விட்டால் ஹைவேயிலேயே ஓரமாக வண்டியை நிறுத்தி ஹோட்டல் சென்று திரும்பி, மறுபடி வண்டியை எடுத்து நீண்ட தூரம் சென்று யு டர்ன் எடுத்து மறுபடி சென்னைப் பாதையைப் பிடிக்க வேண்டும்.  ஹோட்டல்காரர்களாவது தங்கள் வியாபாரத்துக்காகவாவது அருகிலேயே ஒரு யு டர்னுக்கு ஏற்பாடு  செய்து வைத்துக் கொள்ளவேண்டும்.  ஹைவேயில் வண்டியை நிறுத்தி விட்டு போலீஸ்காரர்களுக்கு பச்சா கட்ட வேண்டியிருக்குமோ என்று பக்பக்க்குடனே சாப்பிட வேண்டும்.

சமீபத்தில் பீச் சென்றபோது வாலாஜா ரோட் திருப்பத்தில் ஒன்றை ஒன்று ஒட்டியபடி இரண்டு பஸ் வலதுபுறமாக எங்களைத் தாண்ட,  கொஞ்சம் ஸ்லோ செய்து வலது புறம் திரும்புவதற்குள் ரோடைக் கிராஸ் செய்யக் காத்திருந்த நான்கு பேர் வேகமாக க்ராஸ் செய்ய, அந்த சமயம் அங்கே ரெட் விழ, நிற்க வேண்டியதாயிற்று.   இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த, நிலைமை புரிந்த அங்கு நின்ற போலீஸ் உடனே பொறுப்பாக முன்னால் வந்து எங்களை (எங்கள் கார் நம்பரை) ஒரு ஃபோட்டோ எடுத்துக்கொண்டு அகன்றார்.  இரண்டு மணி நேரத்தில் ஐநூறு ரூபாய் அபராதம் கட்டக் சொல்லி குறுந்தகவல் வந்து விட்டது.  அராஜகமாகத் தாண்டிச் சென்ற பஸ்ஸுக்கு அபராதம் இல்லை.  சிக்னல் விழுமுன் பறக்கப் பறக்க சாலையைக் கடந்த அந்த நாலு பேருக்கு அபராதம் இல்லை.  எக்குத்தப்பாக இடையில் மாட்டிக்கொண்டு கோட்டை சற்றே கடந்த நிலையில் சிகப்பு விளக்குக்கு மதிப்பு கொடுத்து நின்ற எங்களுக்கு அபராதம்.  

ஆனால் ஒன்று சொல்ல வேண்டும்.   அங்கிருந்த அடையார் ஆனந்த பவன் A2B என்கிற சின்னம் இல்லாமல் தனியாக இருந்தது.  உள்ளே எல்லாமே சுவையாக இருந்தது.  உள்ளே இடம்பிடிக்க கொஞ்ச நேரம் காத்திருக்க வேண்டியதாய் இருந்தது.  Self Service என்று பயமுறுத்தி இருந்தாலும் டேபிளுக்கு வந்து சேர் செய்து வயிற்றில் பால் வார்த்தார்.  

பின் குறிப்பு :  அங்கு டேபிள் க்ளீன் செய்த ஒரு பெண் மிக அழகாக இருந்தார்.  யாராவது டைரக்டர் பார்த்தால் சீரியலுக்கோ, சினிமாவுக்கோ கொத்திக்கொண்டு போய்விடும் வாய்ப்புஇருக்கிறது!

==================================================================================================

படித்ததை பகிர்வது...

இங்கிலீஷ்ல சார் எஸ் ஐ ஆர் என்கிற சொல் சையர் எஸ் ஐ ஆர் இ என்கிற சொல்லில் இருந்து தான் வந்தது.  டிக்ஷனரி எடுத்து பாருங்கள். செயர் என்றால் இனவிருத்தி செய்யும் ஒரு ஆண் அல்லது ஒரு ஆண் விலங்கு ஒரு மகன் தனது தந்தையை சையர் என்று கூப்பிடலாமே தவிர போவோரை எல்லாம் சயர் என்று எப்படி கூப்பிட முடியும்?  நீங்கள் இந்தியர்களுக்கு சயர் என்கிற சொல்லின் பொருளை சொல்லித் தராமல் அவர்கள் உங்களை சார் என்று அழைக்க சொல்லி அழைக்க வைத்து கேவலப்படுத்தி வருகிறீர்கள்!

நமது நாட்டில் எல்லா ஆண்களையும் சார் என்று சொல்லி அழைக்கிறோம். இல்லத்தின் மொழியில் மட்டும் தான் அதற்கு உத்தம மனிதன் என்கிற பொருள் வருகிறது.  லண்டன் நண்பர் ஒருவர் ஆங்கிலத்தில் எஸ் ஐ ஆர் இ என்னும் சொல் 'என்னை உருவாக்கியவர்' என்கிற பொருளில்தான் டியூட்டர் மற்றும் ஷேக்ஸ்பியர் காலத்தில் பிரயோகப்படுத்தப்பட்டது என்று கூறினார்.  இன விருத்தி செய்யும் குதிரையை எஸ் ஐ ஆர் இ என்று அழைத்தனர். அண்ட் எஸ் ஐ ஆர் ஏ டி 2 சாங்ஸ் என்று சொன்னால் அவன் அவளை மணந்து கொண்டு இரண்டு மகன்களை பெற்றுக் கொண்டான் என்று தான் பொருள்.  ஒரு தந்தையை அவர் மகன் எஸ் ஐ ஆர் இ என்று அழைத்தால் மட்டுமே பொருத்தமாக இருக்கும் என்றார்.  'எஸ் ஐ ஆர் ஏ என்றால் ஸ்லேவ் ரிமைண்ட் எவர் என்று கூறுகிறார்களே' என்ற போது,  இந்தியாவில் அந்தப் பொருளை ஆங்கிலேயர்கள் பரப்பி விட்டிருக்கலாம்.  ஆனால் இங்கிலாந்தில் ஒருவரை ஒருவர் எஸ்ஐஆர்இ என்று அழைப்பதில்லை.  'தாமஸ் சார்' என்று அழைக்க மாட்டார்கள்.  'மிஸ்டர் தாமஸ்' என்றுதான் அழைப்பார்கள். இந்தியாவில் ஏன் சார் என்று அழைக்கிறார்கள் என்பது தெரியவில்லை' என்று கூறினார்.


கரிச்சான் குஞ்சுகள் இனவிருத்தி செய்கிற இடத்தில், முள் உள்ள வாழை மரத்து அடியில், ஒரே தண்டுல ரெண்டு தாமரை பூக்கள் பூத்திருக்கிற குத்தில் எல்லாம் பொக்கிஷங்கள் இருக்கும்.

நாம் பொக்கிஷங்களை விலை மதிப்பில்லா செல்வங்கள் என்று மட்டுமே நினைக்கிறோம். ஆனால் மனிதர்களாகிய நம்மை விட பொக்கிஷங்கள் நீண்ட காலம் வாழ்வதால் அவற்றுக்கு நம்மை விட அனுபவங்கள் அதிகம்.  நாம் அரியணை ஏறிவிட்டோம் என்று மன்னர்கள் நினைக்கிறார்கள்.  ஆனால் உண்மையில் அரியணை தான் தனக்கு ஏற்ற ஒருவரை தேர்ந்தெடுக்கிறது. அதே போன்றுதான் பொக்கிஷங்களும் . தங்களது எதிர்காலத்தை தாங்களே நிர்ணயம் செய்கின்றன. எப்போது பதுங்கி இருக்க வேண்டும், எப்போது வெளிவர வேண்டும், யார் தன்னை அனுபவிக்க வேண்டும், யார் தங்களை வசப்படுத்தினால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை எல்லாம் நிர்ணயிப்பது பொக்கிஷங்கள்தான்.

புதையல்கள் பேசும் வல்லமை பெற்றவை. தகுதி இல்லாதவர்கள் அதனை வைத்துக் கொண்டால் அவர்களை அழித்துவிட்டு தான் மறுவேலை பார்க்கும். பொக்கிஷங்களை ஆள நினைக்கும் மனிதன் 100 வருடங்கள் மட்டுமே வாழ்ந்து நிலத்தின் அடியில் மறைபவன். பொக்கிஷங்களோ ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிலத்தில் புதைந்த கிடந்து பிறகு ஒருநாள் பூமியை ஆள்வதற்கு வெளியே வரும். பொக்கிஷங்களை மனிதர்கள் வேட்டையாடுவது போன்று பொக்கிஷங்களும் நல்ல மனிதர்களை நாடும். தகாதவர்கள் வசம் சிக்கினால் அவர்களை அழித்துவிடும்.

இந்த லோகத்தில் பல்வேறு ஆத்மாக்கள் மனிதர்களாக பிறந்து அவரவர் கர்ம பலனுக்கு ஏற்ப மன்னராகவோ ஆண்டியாகவோ புலவனாகவோ போர் வீரனாகவோ திகழ்வது போல, உயர்ரக கற்கள் தங்களது  பஞ்சபூத பலன்களால் திருவாபரணங்களாக ஒருங்கிணைகின்றன. மயில் வங்கி பொக்கிஷம் விலை மதிப்பில்லாதது மட்டுமல்ல, மிகவும் சக்தி வாய்ந்தது. நாம் ஆபரணங்களை வெறும் அழகு பொருளாகவும், விலைமதிப்புள்ள பொக்கிஷமாகவும் பார்க்கின்றோம். உண்மையில் பொக்கிஷங்கள் பேசும் ஆற்றல் உடையவை. அவை யாரிடம் சேரவேண்டுமோ அவர்களைத்தான் சேரும். அவற்றை அனுபவிக்க தகுதி இல்லாதவர்கள் அபகரிக்க நினைத்தால் அந்த பொக்கிஷங்கள் அழிவை உண்டாக்கும். இதை பலர் அறிவதில்லை. உன்னிடம் இருந்த மயிலங்கி பொக்கிஷங்களை அபகரிக்க நினைப்பவர்களை அந்த பொக்கிஷங்கள் அழித்து விடும்.

பெண்கள் ஆபரணங்களை அணிவது அழகுக்கு என்று பலரும் நினைக்கிறார்கள். தவறு. அவை அழகுக்காக மட்டுமல்ல, அரணுக்காக.  மக்களுக்கு அரண்மனை பெண்களுக்கு அரண் ஆபரணங்கள். எனவே தான் பெரியவர்கள் அவற்றை ஆபத்து காலத்தில் அரண்கள் என்று அழைத்திருக்க வேண்டும். பெண்களின் ஆபரணங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு விளக்கம் உள்ளது. தலைநிமிராமல் நடப்பதற்கு தலையின் உச்சியில் நிமிராக கொடி என்று அணிவார்கள். 'பெண்கள் ஏன் தலைநிமிரக்கூடாது?' என்று கேட்பாய்.  பெண்களின் சாதாரண பார்வையை கூட அழைப்பாக ஏற்ற பின் தொடரும் ஆண்களை தவிர்த்து, எல்லையில் நிறுத்தி வைக்கவே நிலத்தை பார்த்து நடக்கச் சொன்னார்கள். பெண்களின் நெற்றியில் உச்சியில் சூடாமணி அணிகிறார்கள், ஏன் தெரியுமா? ஆண்கள் மூளை உறுதியான கபாலத்தில் இருப்பதால் எவ்வளவு சிந்தித்தாலும் அவர்களின் மூளை சூடு அடையாது. ஆனால் பெண்களின் மூளை சகதியைப் போன்றது ,மென்மையாக உள்ளதால் அவர்களின் மூளை வேகமாக சூடு அடைந்து விடும். எனவே அவர்களுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும் கற்களை கொண்டு சூடாமணி அறிவித்த அணிவித்தார்கள். பெரிய வைர கற்களால் செவியில் தோடு செய்து அணிகிறார்கள் பெண்கள்....

- காலச்சக்கரம் நரசிம்மா, மயிலங்கி மரகதப் பெட்டி நாவலில் -
=================================================================================================

சில சமயங்களில் 

பழி வாங்கவும் முடிவதில்லை, 
புறக்கணிக்கவும் முடிவதில்லை!  
புன்னகையுடன் கடக்கவும் 
முடியாமல் 
புழுங்கத்தான் முடிகிறது

============================================================================================

பாருங்க..    2016 ல் காஃபி பற்றி இப்படி ரிப்போர்ட்...





இப்போது இப்படி ஒரு தகவல்..  என்னதாங்க பிரச்னை இவங்களுக்கு...!!!


==============================================================================================

இணையத்தில் ரசித்த படம்..


======================================================================================================

பொக்கிஷம்  :-


இதைக்கூட வாங்கிக்கலைன்னா எப்படி பிரதர்...!


என்ன நம்பிக்கை!


அதைச் சொல்லுங்க....


என்னங்க..  இது தெரியாம....



83 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா. வணக்கம். இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

      நீக்கு
  2. நல்ல பொழுது போக்கு. கோயில், ஹோட்டல், சைட் அடித்தல் என்று மூன்றையும் ஒரே நாளில் அனுபவிக்கிறீர்கள். சரி என்பதா, தவறு என்பதா?

    வாசகர்களின் பங்கு எ பியில் ஒவ்வொரு நாளும் என்றாகி விட்டது. வியாழன், வெள்ளி இரு தினங்கள் மட்டும் வாசகர்களின் பங்கு இல்லாமல் இருந்தது. தற்போது அது வெள்ளி மட்டும் என்றாகி விட்டது. (வியாழன்-பா வே நியூஸ் ரூம்.) எங்கள் பிளாக் உங்கள் பிளாக் என்று மாறி வருகிறது. நன்று.

    சரி இனிமேல் சார் வேண்டாம். ஐயா அல்லது ஜீ என்று விளிக்கலாம்.

    கவிதை : சமீபத்தில் கர்நாடகாவில் நடந்த பிரதமரின் பேரூர்வலத்தில் மாட்டிக்கொண்ட ஒருவர் எழுதியது போல் உள்ளது..

    ஜோக்குகள் சிரிக்க வைக்கின்றன. நன்று.

    மருத்துவர்கள் பலதும் சொல்வார்கள். காபி விஷயத்தில் முதல் காபி ஒரு போதை தான். விடலாம், ஆனால் முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரி என்பதும் தவறு என்பதும் அவரவர் விருப்பம்!  தாவீதும் செய்யவில்லை கோமகனே!

      எங்கள் பிளாக் என்று நீங்கள் உச்சரிக்கும்போது அது உங்கள் பிளாக்தானே!

      ஐயா செயற்கையாக இருக்கும் ஸார்.  ஜீ வடநாட்டு வாசனை அடிக்கும் ஸார்!

      பேரூர்வலமா, கர்நாடக பாஜகவின் இலவச அறிவிப்புகளா?!!

      எப்படியும் காஃபியை நான் விடுவதாயில்லை!  இன்றும் என் முதல் காபி காலை நாலே முக்கால் மணிக்கு!

      நீக்கு
    2. பிழை திருத்தம் : தாவீதும் இல்லை, தவறேதும்! திருத்திப் படிக்கவும்!

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. முதல் பகுதியில் முருகன் கோவில் கோபுர தரிசனம் கிடைத்தது. படங்கள் நன்றாக உள்ளன. முருகனை நானும் மனம் நிறைவோடு வணங்கி கொண்டேன்.

    தாங்கள் கோவிலுக்கு சென்று முருகனிடம் வைத்த கோரிக்கை விரைவில் நிறைவேற நானும் அந்த முருகனிடம் வேண்டிக் கொள்கிறேன். தங்கள் வீட்டிலும் சீக்கிரம் தங்கள் எண்ணம் போல் சுபவேளைகள் வர வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.

    வழியில் அடையார் ஆனந்தபவன் பற்றி சொல்லியிருப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது. அங்கு செல்ல எத்தனை சிரமங்களை அபராதங்களுடன் கடக்க வேண்டியுள்ளது. நல்ல விவரிப்பு.

    இப்படி ரோடை அவசரமாக குறுக்கே கடப்பவர்கள் தாங்கள் வெளியிட்ட உணவக படத்தைப்போல உருமாறி விடுவோம் என்பதை கொஞ்சமேனும் உணர மாட்டார்கள் போல.... (அ. ஆ. பவன் படத்தைதான் சொல்கிறேன். பார்க்கும் போதே "திக்" கென இருக்கிறது. ஹா ஹா ஹா.)

    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா.  இப்போது பாஸ் வேறொரு முருகனின் அருளை நாடி ஏழு வார அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருக்கிறார்!  சில வருடங்களுக்கு முன் இளையவனுக்கு வேலை கிடைத்த சமயம் இந்த முருகனிடத்தில் அந்த ஏழு வார  வேண்டுதல் பூர்த்தி ஆகி இருந்தது.

      அந்த அடையாறு ஆனந்த பவன் சென்னையிலிருக்கும் கிளைகளுடன் சம்பந்தப்பட்டது அல்ல போலும்.  தனி கிச்சனாயிருக்க வேண்டும்!

      //இப்படி ரோடை அவசரமாக குறுக்கே கடப்பவர்கள் தாங்கள் வெளியிட்ட உணவக படத்தைப்போல உருமாறி விடுவோம் என்பதை கொஞ்சமேனும் உணர மாட்டார்கள் போல.... //

      ஹா..  ஹா..  ஹா...

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    இன்றைய செய்தி அறை பகுதிகள் மூலமாக பல செய்திகளை அறிந்து கொண்டேன். பல செய்திகளை தந்த சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கும் நன்றி. முதலில் இதை குறிப்பிட்டு கருத்து தந்திருக்க வேண்டும். முருகனை பார்த்த சந்தோஷத்தில் அவர் அவசரமாக முந்தி கொண்டு விட்டார்.

    பாவம்.. அந்த மதுரை பள்ளி மாணவி.

    ஒரு கால் ஷூவை மட்டும் வைத்து அவர்கள் என்ன செய்வார்கள்?

    செய்திகளுக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    நோக்க நோக்க
    நொடியில் நோக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழி நலம். பிரார்த்திப்போம். வாங்க துரை செல்வராஜூ அண்ணா.. வணக்கம்.

      நீக்கு
  6. இன்றைய கதம்பம் மிகவும் அடர்த்தி.. கைத்தொலைபேசி யில் வாசிக்கும் எனக்கு மிகுந்த சிரமம் ஆகி விட்டது..
    இப்படியும் அப்படியும் உருட்டி உருட்டி படங்களைப் பெரிதாக்கிப் பார்த்து....

    அடடா..
    சோர்வுக்குள் சோர்வாகி விட்டது..

    பதிலளிநீக்கு
  7. பொதுவாக - வாங்க.. வாங்க.. என்று பேசிப் பழகும் போது எவரையும் சார் என்று அழைக்க வேண்டிய அவசியம் இல்லை..

    பதிலளிநீக்கு
  8. காலசக்கரம் நரசிம்மா யாருனு தெரியாது.. விவரமறிந்தவராக இருக்கவேண்டும்..

    நான் அறிந்தது இது. தவறாக எண்ணவேண்டாம்.

    சார் என்பது சின்யோர் என்ற சொல்லிலிருந்து வந்தது. இங்கலீஸாரால் சட்டென்று சொல்ல முடியாமல் போன லட்சம் சொற்களில் ஒன்று - சுளுவாக சார் என்றாக்கினர். சார் என்பது (SIR) பட்டத்துக்கும் பொது. ஸைர் (SIRE - உருவாக்கு, விருத்தி செய்) என்ற பொருளில் பயன்படுவது உண்மையே (ஷேக்ஸ்பியர் கால வாக்கில் உருவானது என்று நம்புகிறார்கள்). அதற்காக ஸைர் என்று ஒரு (ஆகு)பெயர்ச் சொல்லாகக் கண்டவரை அழைக்கலாமா என்பது ....தனமான கேள்வி. நம்முரில் சார் என்று அழைப்பது மரியாதை விகுதியே தவிர அதில் விரசம் சேர்ப்பது ....த்தனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியான எழுத்துக் கிரிப்டோக்களும் கருத்துக் கிரிப்டோக்களும் புற்றீசல் போலப் பெருகி விட்டனர்.. இதைத்தான் உள்ளடி வேலை என்பர்..
      ( எவரையும் அவர் போக்கிலேயே சென்று குழப்பி விடுவது.. )

      நீக்கு
    2. எனவே சார் என்றழைப்பது நாட்டுக்கு நாடு அவரவர் சௌகர்யம் என்கிறீர்கள்.  காலச்சக்கரம் நரசிம்மா பிரபல நாவலாசிரியர்.  சித்ராலயா கௌ- மற்றும் எழுத்தாளர் கமலா சடகோபன் அவர்களின் புதல்வர்.  ஹிந்துவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

      /தவிர அதில் விரசம் சேர்ப்பது ....த்தனம்.//

      புரிகிறது.  கரும்பின் அடிபாகம்தானே?

      நீக்கு
    3. அவர் யாராக இருந்தாலும் எனக்கொன்றும் ஆகப் போவதில்லை!..

      நீக்கு
    4. நம்ம ஊரில் இங்கலீஸ்காரன் தன் கீழ் வேலை செய்த நம் முன்னோர்களை அப்படி அழைக்க வைத்தான். பிடித்துக் கொண்டோம். அவ்ளோ தான். மத்தபடி இப்போ அதுக்கு அர்த்தம் உண்டா என்கிற கேள்வியிலேயே அர்த்தம் இல்லை.

      நீக்கு
  9. உணர்வு பூர்வமாகப் பேசும் போதுதான் உறவு முறை களின் அர்த்தம் பொதியும்..

    நீர் மேல் குமிழி போலப் பேசும் போது வார்த்தைகளில் வரும் உறவு முறைகளுக்கு அர்த்தம் தேடிக் கொண்டிருப்பது அர்த்தமற்றது..

    பதிலளிநீக்கு
  10. சில மேற்கத்தி நாடுகளில் அநேக தந்தைமார் பிள்ளைகள் தன்னை சார் என்று அழைப்பதையே விரும்புகிறார்கள். தெற்கு USA மாகாணங்களில் இதை இன்றைக்கும் காணலாம் (கருப்பு வெள்ளை பொது கலாசாரம்). கொஞ்சம் முற்போக்கான தந்தைகள் dad/daddy ஐ ஏற்றுக்கொண்டுள்ளனர் (!).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த செய்தி எமக்கு வியப்பைத் தருகிறது!

      நீக்கு
    2. ..மேற்கத்தி நாடுகளில் அநேக தந்தைமார் பிள்ளைகள் தன்னை சார் என்று அழைப்பதையே விரும்புகிறார்கள்//

      அழைக்கப்படுகிறார்களே.. அதற்கே அவர்கள் சந்தோஷப்பட்டுக்கொள்ளவேண்டும்.

      நீக்கு
  11. நிகழ்வுகளும் தகவல்களும் சுவாரசியமானவை...

    பதிலளிநீக்கு
  12. நம்முயூர்ல அப்பா அம்மா எல்லாம் போயி டாடி மம்மி வந்து நிரந்தரமாயிடுச்சு.

    பதிலளிநீக்கு
  13. முருகன் வேறு..
    முத்துக் குமரன் வேறு..
    கந்தன் வேறு..
    கார்த்திகேயன் வேறு.. - என்பதெல்லாம் இதிலே அட்ங்கும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சண்முகன் வேறு, சரவணன் வேறு, அறுமுகன் வேறு, வேலவன் வேறு, என்று லிஸ்ட் போடவேண்டியதுதான். வெள்ளிக்கிழமை,

      செல்வ முத்துக் குமரன் அவன், தமிழ் தெய்வமாகிய முருகன் அவன்
      என்ற பாடலைப் பகிருங்கள்.

      நீக்கு
    2. இது நல்ல பாடல். பகிர நானும் கோறுகிறேன் .

      நீக்கு
    3. // கோ"று"கிறேன் . //

      ரொம்ப அழுத்தம் திருத்தமாகக் கேட்டிருப்பதால் மறுக்க முடியாது என்று நினைக்கிறேன்.  பார்ப்போம்!

      நீக்கு
  14. ///மேற்கத்தி நாடுகளில் அநேக தந்தைமார் பிள்ளைகள் தன்னை சார் என்று அழைப்பதையே...///

    There is no conformation!..

    அவர்களது நாகரிகம் அப்படி..

    பதிலளிநீக்கு
  15. வேலைக்கு போய் வந்து இரவு பத்து மணி சுமாருக்கு சாப்பிட்டு அதிகாலை ஆறு மணிக்குள்ளாக ஒரு காபி ரெண்டு இட்லியை உள்ளே தள்ளி விட்டு மறுபடி வேலைக்கு ஓடும் இன்றைய சூழலில் முன்னிரவில் சாப்பிட்டதும் 8-9 மணி நேரம் வயிறு காலியாக இருக்கும் என்பதெல்லாம் நடக்கிற கதையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரவு 6 1/2 மணிக்குப் பிறகு சாப்பிடும் சாப்பாட்டினால் பிரயோசனம் இல்லை

      நீக்கு
    2. //என்பதெல்லாம் நடக்கிற கதையா?/

      இல்லை என்பதால்தான் இதையெல்லாம் நம்பாமல் காபி குடிக்கிறேன்!

      //இரவு 6 1/2 மணிக்குப் பிறகு சாப்பிடும் சாப்பாட்டினால் பிரயோசனம் இல்லை//

      அச்சச்சோ..  என்ன இப்படி சொல்லி விட்டீர்கள்!  நான் 7 மணிக்குதானே சாப்பிடுகிறேன்!

      நீக்கு
  16. கருத்துகள் விரிவாகப் போய்க் கொண்டிருக்கின்றன..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் நமது உறவு முறைக் கலாசாரத்தில் அந்நிய இறக்குமதி களை அனுமதித்ததன் விளைவு இது!..

      நீக்கு
    2. அந்நிய இறக்குமதிகள்?

      நீக்கு
  17. என்னுடைய பிள்ளைகளும்
    உன்னுடைய பிள்ளைகளும்
    நம்முடைய பிள்ளைகளுடன் விளையாடுகின்றன..

    இது மேலை நாகரிகம்..

    எள்ளும் நீரும் இங்குண்டு..

    இதனால் தான் - என் மனை, என் பிள்ளை என்றெல்லாம் இங்கே நாகரிகம்..

    காரணம்,
    சமீபம், சாந்நித்யம், சாயுஜ்யம்..
    நிம்மதி, சாந்தி, முக்தி..

    இங்கேதான் தாய் தன் குழந்தைக்குத் தகப்பனைக் காட்டுகின்றாள்..தகப்பன் குருவைக் காட்டுகின்றான்.. குரு ஞானத்தைக் காட்டுகின்றார்..

    ஞானம் தெயவத்தைக் காட்டுகின்றது..

    இதெல்லாம்
    ஆப்பிரிக்க, அரேபிய, ஆங்கிலேய வட்டாரங்களில்
    கிடையாது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உன்னுடைய பெண்ணைக்கூப்பிடு..  இன்று அவளுடன் துயில்கிறேன் என்று சொல்லும் கலாச்சாரமும் வந்து விட்டது!

      நீக்கு
  18. //ஆண்கள் மூளை உறுதியான கபாலத்தில் இருப்பதால் எவ்வளவு சிந்தித்தாலும் அவர்களின் மூளை சூடு அடையாது. ஆனால் பெண்களின் மூளை சகதியைப் போன்றது ,மென்மையாக உள்ளதால் அவர்களின் மூளை வேகமாக சூடு அடைந்து விடும். எனவே அவர்களுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும்// - என்ன அருமையான கண்டுபிடிப்பு. இதுக்கெல்லாம் அறிவியல் ஆதாரம் இருக்கிறதா இல்லை போகிற போக்கில் அடிச்சுவிடுவதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படிக்கறதுதான்...  பகிர்றதுதான்..  ரொம்பல்லாம் ஆராயறதில்லை!

      நீக்கு
  19. காபி என்பது போதைப் பொருள்தான். எதை நம்மால் விடமுடியவில்லையோ, அதையொட்டி காம்ப்ரமைஸ் செய்துகொள்கிறோமோ அது போதையைச் சார்ந்ததுதான். இன்னும் ஓரிரு டிகேடில், காபியின் இடத்தை சரக்கு பிடித்துக்கொண்டாலும் ஆச்சர்யம் இல்லை (சரக்குன்னு சொல்லப்படாது. சோஷியல் டிரிங்கிங்)

    ஏன் சித்த மற்ற மருத்துவங்களில் மருந்து எடுத்துக்கொள்ளும்போது காபி டீ சாப்பிடக்கூடாதுன்னு சொல்றாங்க?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காபியின் இடத்தை ஒருநாளும் சரக்கு பிடித்துக் கொளளது.  அதுவும் இருக்கும்.  காஃபியும் இருக்கும்!

      சித்த மருந்துகள் கஃபைனோடு ஒத்துப் போகாது என்பதால்!

      நீக்கு
  20. பொதுவா கோவிலுக்கு ஒரு நேர்ச்சைக்காகச் சென்றால், வேறு எங்கும் செல்லாமல், தங்கள் வீட்டுக்கு வந்துவிடணும் என்பார்கள். இதை நீங்கள் check செய்துகொள்ளுங்கள். நான் சிங்கப்பெருமாள் கோவிலுக்கு 7 வாரங்கள் சென்றபோது, வேறு எங்கும் செல்லாமல் திரும்ப வீட்டுக்கு வந்துவிடவேண்டும் என்று ஜோசியர் சொல்லியிருந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி எல்லாம் எங்கும் போகாமல் நேராக வீட்டுக்கு வர முடியறதில்லை!  கலிகாலத்துல இதை எல்லாம் அனுமதிச்சிருக்காங்கன்னு சொன்னாங்களே...

      நீக்கு
  21. //அங்கு டேபிள் க்ளீன் செய்த ஒரு பெண் மிக அழகாக இருந்தார். // புகைப்படம் எடுத்திருக்கலாம்.... அதான் மனதில் பதிந்துவிட்டதே..எதற்கு புகைப்படம் என்று கேட்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புகைப்படம் எடுத்திருந்தால் என்னை புகைப் படமாக்கி இருப்பார்கள்!

      நீக்கு
    2. உடனே நேரே அவரைப் பார்த்தா புகைப்படமெடுப்பது? சும்மா உங்க ஃபேமிலியை எடுப்பதுபோல அவங்களையும் ஃப்ரேமில் வரவைத்தால் போகிறது. இதெல்லாம் ஒரு நினைவுக்குத்தானே. ஒன்று தெரியுமா.. சில நேரங்களில் நாம் மிக அழகி என்று நினைக்கும் பெண்ணின் புகைப்படம், சில வருடங்களில் அப்படி இல்லை என்று தோன்றவைக்கும் (புகைப்படத்தைப் பார்க்கும்போது)

      நீக்கு
  22. உங்கள் வீட்டில் விரைவில் நல்லது நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  23. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  24. முதலில்
    சோஷியல் டிரிங்க்..

    அப்புறம் தான்
    சோஷியல் டிரிங்கிங்!..

    எல்லாருக்குமான
    குடி நீர்!..

    சமூகம்
    சமூகக் குடி
    என்பன திராவிடம் அல்ல சமக்கிருதம்!..

    பதிலளிநீக்கு
  25. ///சண்முகன் வேறு, சரவணன் வேறு..///

    புதிதாய் இங்கே முளைத்திருக்கும் புல்லுருவிப் பேச்சுகள் இவை என்பதற்காகச் சொன்னேன்...

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் சகோதரரே

    படித்ததை பகிர்ந்தது படிக்க ஸ்வாரஸ்யமாக இருக்கிறது. பதிவை படித்து ரசித்தேன்.

    பொக்கிஷங்கள் என்று மட்டுமல்ல.. நாம் அனுபவிக்க வேண்டுமென்றிருந்தால்தான் எதுவுமே அது ஒரு சின்ன பொருளாக இருந்தாலும் சரி, அது நம்மை மதித்து நம்முடன் தங்கும். இல்லையெனில் நம்முடன் இருப்பது போன்ற பாவனை செய்து விட்டு பிறரிடம் சென்று மகிழ்வு கொள்ளும். எல்லாம் விதிப்பயன்தான்.

    கவிதை அருமை. மேலுள்ள இந்த உரைக்கு தொடர்புடைய தாய் அமைந்திருக்கும் இந்தக் கவிதையை ரசித்தேன். பாராட்டுக்கள்.

    என்ன சொன்னாலும் காலை காஃபியை விட இயலாது. மாலையில் கூட ஒரிரு நாட்கள் விட்டு விடலாம்.

    ஜோக்ஸ் அனைத்தும் நன்றாக உள்ளது. சாப்பிட்ட பில்லை தலையில் கட்ட பார்க்கும் அந்த நண்பரிடம் அப்படி என்னதான் இருக்கிறது பேச.. என யோசிக்க வைக்கிறார்.

    பேச்சை கேட்காத மனைவி. அந்த காலத்திலும் இப்படித்தானா?

    இன்றைய கதம்பத்தில் அத்தனைப் பகிர்வும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  27. //என்ன சொன்னாலும் காலை காஃபியை விட இயலாது. //

    ஒரு வருடம் ஆகின்றது காஃபி தேநீரை விட்டு!..

    பதிலளிநீக்கு
  28. அன்பின்
    கோமதிஅரசு அவர்கள் வெளியூர் சென்றிருக்கின்றார்களோ!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள்  உறவில் ஒரு சோகம்.  கொஞ்சநாள் பொறுத்து வருவார்கள்.

      நீக்கு
    2. அதான் சகோதரி கோமதி அரசு அவர்களை இரண்டொரு நாட்களாக பதிவுலகில் எங்கும் காணவில்லையே என நானும் கேட்கலாம் என்று வந்தேன். விபரம் தெரிந்து கொண்டேன். அவர்கள் மனம் அமைதியடையட்டும்.

      நீக்கு
    3. அவர்கள் மனம்
      அமைதியடையட்டும்.

      நீக்கு
    4. என்ன ஆச்சு கோமதி அரசுக்கு? நலம் தானே? யாருக்கு என்ன?

      நீக்கு
  29. .. என்கின்றனர் மருத்துவர்கள்.//

    மருத்துவரிடம் அவசியம் செல்லுங்கள். ஃபீஸ் கொடுங்கள். நிறையக் கேளுங்கள். அவரும் சொல்லுவார். எதை சாப்பிடவேண்டும், குடிக்க வேண்டும் அல்லது வேண்டாம் என்று அவர் கூறுவதை மட்டும் கேட்கவேண்டாம் - உங்கள் ஆரோக்யம் உங்களுக்கு அவசியம் என்றால் !

    பதிலளிநீக்கு
  30. ..அங்கு டேபிள் க்ளீன் செய்த ஒரு பெண் மிக அழகாக இருந்தார்.//

    அந்த 500ரூ அபராதம் அப்படியே மறந்துபோயிருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை, அபராதம் எல்லாம் விழவில்லை.  விழுவதற்கு வாய்ப்பு உண்டு என்றுதான் சொன்னேன்!

      நீக்கு
  31. உடலுக்கு நன்மை செய்யும் காபி பால் சேர்க்காத பிளாக் காஃபி என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  32. விருத்தாசலம் கொளஞ்சியப்பருக்கும் பிராது எழுதி வைச்சால் நினைச்சது நடக்கும் என்பார்கள். நம்ம வீட்டிலே மருமகள் எழுதி வைத்தாள். கு.கு. பிறந்ததும் போய் நினைத்த காரியம் நடந்து விட்டதால் பிராது முடிந்து விட்டது என எழுதித் தந்துவிட்டு ஆராதனைகள் பண்ணிட்டு வந்தோம்.

    பதிலளிநீக்கு
  33. எங்க வீட்டில் காஃபி குடிப்பவர்கள் எல்லோருமே அதைச் சிலாகித்துச் சொல்லுவார்கள். சில நாட்கள் காலையில் கூடக் காஃபி வேண்டாம்னு மனதிலே பட்டுடும். அப்போ குடிக்க மாட்டேன். மாலைக் காஃபி எப்போதுமே ஆப்ஷனல் தான்.

    பதிலளிநீக்கு
  34. சிறுவாபுரி சென்று ஒரு கோரிக்கை மனு வைத்து வந்தோம்.//

    கோரிக்கையை நிறைவேற்றுவார் சிறுவாபுரி முருகன்.

    பதிலளிநீக்கு
  35. என்னை விசாரித்த அனைவருக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு

  36. உங்கள் கவிதையை போல மனம் சில நேரம் புழுங்கத்தான் செய்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!