ஞாயிறு, 28 மே, 2023

நான் தரிசனம் செய்த கோவில்கள்:: அஹோபில நவ நரசிம்ஹர் யாத்திரை:: நெல்லைத்தமிழன்

 

அஹோபில நவ நரசிம்ஹர் யாத்திரைபகுதி 14

ஒண்டிமிட்டா என்ற இடம், கடப்பாவிலிருந்து (ஆந்திரா) 25 கிமீ தூரத்தில் இருக்கிறது. இங்கிருக்கும் கோதண்டராமர் கோவில் மிகவும் புகழ்பெற்றது.  தாளப்பாக்க அன்னமாச்சார்யா என்ற புகழ் பெற்ற கவிஞர், இந்த ராமரைப் பற்றி பல கீர்த்தனங்கள் பாடியிருக்கிறார். (திருப்பதி கோவிலில் தாளப்பாக்கம் அன்னமாச்சார்யா கீர்த்தனைகள்தாம் ஒலிக்கின்றன, எம்.எஸ். பாடிய கேசட்டுகளின் வடிவில். தெலுங்கு தேச மக்களுக்கு தாளப்பாக்கம் அன்னமாச்சார்யா, நம் பஞ்சரத்ன கீர்த்தனைகள் இயற்றிய தியாகராஜர் போன்றவர்.)

இந்தக் கோவிலை, முதலில் கொள்ளையர்களாக இருந்த வொண்டுடு மற்றும் மிட்டுடு என்ற இருவர், மனம் திருந்தி, இராம பக்தி கொண்டு, கட்டினார்களாம். இந்தக் கோவில் அமைந்திருக்கும் (அதாவது முழு வட்டாரமுமே) முந்தைய காலத்தில் கிஷ்கிந்தா எனப்பட்ட இடமாக இருந்த தாம். அதாவது, கிஷ்கிந்தா காண்டம் முழுவதுமே இந்த regionல்தான் நடைபெற்றதாம்.  இந்தக் கோவிலின் மூலவர், இராமர், சீதை, லக்ஷ்மணன், ஒரே கல்லினால் செய்த விக்ரஹங்கள். 16ம் நூற்றாண்டில் விஜயநகர கட்டிடக் கலையின் வடிவமாக சீர்படுத்தப்பட்டது இந்தக் கோவில்.

எங்களை ஆஞ்சநேயரைச் சேவித்துவிட்டு பிறகு கோதண்டராமர் கோவிலுக்குச் சென்றுவிட்டு அரை மணி நேரத்தில் சாப்பிட வரச் சொன்னார்கள். எல்லோரும் கோதண்டராமர் கோவிலை நோக்கிச் சென்றோம்.

நுழைவாயிலுக்குச் செல்வதற்கே 20 படிகளுக்கு மேல் ஏறிச் செல்லவேண்டும். பிரம்மாண்டமான அமைப்பு. மிகப்பெரும் நுழைவாயில் (20 அடிகளுக்கு மேல் உயரம்) நுழைவாயிலைக் கடந்து, த்வஜஸ்தம்பம் உள்ளது. அதைத் தாண்டி ரங்கமண்டபம் இருக்கிறது. 32 கற்றூண்களைக் கொண்ட இந்த மண்டபத்தில் அழகிய சிற்பங்கள் பல உள்ளன. இதில் அவ்வப்போது ராமகாதையை தெலுங்கில் பாடுவது, ப்ரவசனம் செய்வது போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன. இந்த மண்டபத்தைத் தாண்டி, கர்பக்ரஹத்துக்கு முன்பு இன்னொரு மண்டபம் உள்ளது (அர்த்த மண்டபம் அல்லது அந்தராலயம்). அதிலும் சிற்பங்கள் இருப்பதாகச் சொல்கின்றனர். அவற்றை முழுவதுமாகக் கவனிக்கும் அவகாசம் இல்லை, ஏனென்றால் மூலவர் தரிசனத்துக்காக இந்த இடத்தில் பக்தர்களின் வரிசை நெருக்கமாக இருந்தது.  திருப்பதி தேவஸ்தானம் 2021ல் நிர்வாகத்தை கவனிக்க ஆரம்பித்ததிலிருந்து, நிறைய மின்சார விளக்குகளை பிரகாரத்தில் ஏற்றி, கோவிலையும் மிகவும் சுத்தமாக வைத்திருக்கிறார்கள்.

எல்லா இடங்களிலும் இருப்பதுபோல, கோதண்ட ராமர் சன்னிதியைப் பார்த்தவாறு, கோவிலுக்கு எதிர்புறத்தில் சஞ்சீவராயர் கோவில் என்று ஆஞ்சநேயர் கோவில் உள்ளது (எந்த ஊரில் நீங்கள் ஆஞ்சநேயர் கோவிலோ இல்லை இராமர் கோவிலோ பார்த்தால், அதன் எதிரில் இராமர் சன்னிதியோ இல்லை ஆஞ்சநேயர் சன்னிதியோ இருக்கும்)

கர்பக்ரஹத்தின் அருகில் மூலவரைச் சேவிக்க 25 ரூபாய் வாங்குகின்றனர். அதன் காரணம், கோவில் சம்பந்தப்பட்ட பணிகளுக்குத் தேவையான பணம் சிறிது கிடைக்கும் என்பதுதான்.




















விஜயநகரப் பேரரசின் காலத்தில் நிறைய கட்டுமானங்கள் நடைபெற்றிருக்கின்றன. சிற்பக்கலை உச்சத்தில் இருந்தது என்று நிச்சயம் சொல்லலாம். நிறைய சிற்பங்களைப் பார்த்துவிட்டோம். அடுத்த வாரம் யாத்திரைத் தொடரின் இறுதிப்பகுதி

= = = = = =


103 கருத்துகள்:

  1. சிற்பங்கள் செமையா இருக்கு, நெல்லை எடுத்த விதமும் அருமை. கோயில் கோபுரம் வெளிச்சத்தில் பளிச்.

    ஆனால் பாருங்க சிற்பங்கள் பழசாகி வருவது தெரிகிறது. பராமரிப்பது கடினம்தான்.

    ஆஞ்சு and ராமர் inseparable!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன். சிற்பங்களின் மேல் எண்ணெய், மெழுகுப் பூச்சு பூசலாம். அது பளிச் என்றிருக்க, நீண்டகாலம் நிலைத்து நிற்க உதவும்.

      நீக்கு
  2. ஆமாம் விஜயநகரப் பேரரசு காலத்தில் சிற்பக்கலை உச்சத்தில் இருந்தது என்று தெரிகிறது. பல கோயில்களிலும் அரசர்களின் சிற்பங்கள் அல்லது உருவச் சிலைகள் இருக்கும். திருப்பதி கோயிலில் கூட நுழையும் போது இடப்பக்கம் (என்று நினைவு) இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் குறிப்பிட்டிருப்பது, தனியாக (தூண்களில் இராமல்) தேவியருடன் கூடிய வெண்கலச் சிற்பங்கள். ஒன்று துலாபாரத்திற்குப் பின்புறமும் இன்னொரு செட், நுழைவாயிலின் வலதோ இல்லை இடது புறமோ பார்த்த நினைவு.

      நீக்கு
  3. இங்கு கிஷ்கிந்தா ......லேபக்ஷி யில் கூட சீதையின் பாதம், ஜடாயு என்று அனு சொல்லியிருந்த நினைவு.....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராமாயண காலங்களின் இடங்கள் இந்தியா முழுவதும் விரவியிருப்பதில் ஆச்சர்யம் என்ன?

      நீக்கு
    2. வட இந்தியா முழுவதும் பாரத யுத்தம் நடந்த இடங்கள்.. கொஞ்சம் பார்க்க முடிந்தது, துரோணருக்கு விரலைக்கொடுத்த ஏகலைவன் கோயிலும் டெல்கியில்தான் இருக்கு. எனக்கும் என்னமோ தெரியவில்லை, பாரத யுத்தமும், கப்பராமாயணமும் உடம்பில் ஒவ்வொரு நரம்பிலும் ஊறிப்போச்ச்ச்ச்:)).. அதனால அப்படியான இடங்களைப் பார்த்தால் புல்லரிக்கிறது:))

      நீக்கு
    3. //விரலைக்கொடுத்த// - அது கைவிரலா இல்லை கால் விரலா, சுண்டுவிரலா இல்லை நடுவிரலா என்றெல்லாம் எங்கள் அதிராவுக்குச் சந்தேகம் வந்திருக்கும். எதுக்கு வம்பு என்று 'விரலைக் கொடுத்து' என்று பொதுவாக எழுதியிருக்கிறார்.

      பாரத யுத்தம் - ஓகே... கப்ப ராமாயணம் - கேள்விப்பட்டதே இல்லையே. ஒவ்வொரு நரம்பிலும் ஊறிப்போன 'கப்ப' ராமாயணம் யாருடையது?

      நீக்கு
    4. ஹா ஹா ஹா வெயிட் அண்ட் சீ:))

      நீக்கு
  4. எங்கள் ஊர்ப் பகுதியிலும் ஜடாயு சம்பவங்கள் நடந்ததாகச் சொல்வதுண்டு. நான் இது போன்ற விஷயங்களில் நுழைவதில்லை. கேட்டுக் கொண்டு பார்த்தோமா ரசித்தோமா என்பதோடு சரி!!! Ramayana Trail என்று நம்மூரில் பயணம் கூட இருக்கு. இலங்கையிலும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை கீதா ரங்கன். முதலை மேல் சீறி வந்தது, கபித்தலம், அத்தாழநல்லூர் (திருநெவேலி) என்று பல இடங்களைக் குறிப்பிடுகின்றனர். திருப்புட்குழியும் இருக்கிறதே.. இதனால்தானோ என்னவோ, வட இந்தியாவில் அந்த அந்த மண்ணை மிதித்தாலே போதும், க்‌ஷேத்ரம் சென்ற பலன் என்பார்கள். கோகுலம் மண் மிதித்தாலே போதும், கிருஷ்ணர் வளர்ந்ததாக்க் கூறப்படும் கோவில்தான் அந்த இடம் என எண்ணவேண்டியதில்லை என்பார்கள்.

      நீக்கு
    2. ///Ramayana Trail என்று நம்மூரில் பயணம் கூட இருக்கு. இலங்கையிலும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது///

      அப்படியா கீதா, முன்பு நான் அறிந்ததில்லை, இனிமேல் தேட வேண்டும்...

      நீக்கு
  5. படங்கள் எல்லாம் ரொம்ப ரசித்துப் பார்த்தேன், நெல்லை. நல்லா எடுத்திருக்கீங்க!! வளைச்சு வளைச்சு!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் சிலபல வாரங்களில் இன்னொரு கோயிலின் சிற்பங்கள் வரவிருக்கிறது. அதற்கு வளைச்சு வளைச்சு... இன்னும் பொருத்தமாக இருக்கும்.

      நீக்கு
  6. ஆஞ்சு சன்னதி வாசலில் நம்ம செல்லம்! அழகு!!!! இதுங்களை பார்க்கற போது வரும் விவரிக்க முடியாத உணர்வு, மகிழ்ச்சி!! அதற்கு வார்த்தைகள் இல்லை. இயற்கையின் வரப்பிரசாதம்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க அந்த பசுவைப் பற்றிச் சொல்லறீங்கன்னு நினைக்கறேன். அங்கு நிறைய பசுக்கள் நடந்துகொண்டிருந்தன. எல்லாம் நல்லா பெரிய பெரிய பசுக்கள். ஆனால் கொஞ்சம்கூட முட்டுவது அந்த மாதிரி aggressive behavior கிடையாது. எல்லாம் இயற்கையின் விநோதம்.

      நீக்கு
    2. ஆமா பசு, மாடுகளும் செல்லங்கள்தானே!!!

      அவை முட்ட மாட்டா...எல்லா விலங்குகளுமே புலி சிங்கம் உட்பட நாம் ஏதேனும் அதுங்களுக்குக் கோபம் வரும்படி செய்தால்தான் அவை நம்மைத் தாக்கும் தங்களைக்காப்பாற்றிக் கொள்ள. அது இயற்கைதானே! அதுங்க தனிப்பட்ட விஷயங்களில், ஏரியால நாம நுழைஞ்சா!!!

      கீதா

      நீக்கு
    3. //புலி சிங்கம் உட்பட நாம் ஏதேனும் அதுங்களுக்குக் கோபம் வரும்படி செய்தால்தான் அவை நம்மைத் தாக்கும்// - இதோ வந்துவிட்டார் வீராங்கனை. பன்னர்கட்டா காடுகளில் தனியாகவே செல்வார். கரடி, புலி, சிங்கங்கள் (சிங்கம் அங்கு இருக்கா?) பயப்படாதீர்கள்.

      நீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    நோக்க நோக்க
    நொடியில் நோக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைக்கு உங்கள் கருத்தைப் படித்தபின், எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன், நான் வாழ யார் பாடுவார், என்ற பாடல் மனதில் வந்துபோகிறது.

      நீக்கு
  9. விவரங்கள் அருமை. படங்கள் நன்றாக இருக்கிறது.
    அனுமன் சன்னதி முன் பசுங்கன்றுபடுத்து இருக்கே!
    சிற்பங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.பாற்கடல் கடையும் காட்சி தெரிகிறது.
    கோவில் கோபுரம் விளக்கு ஒளியில் நன்றாக இருக்கிறது.
    கோவில் சுத்தமாக நன்றாக பராமரிக்கப்படுகிறது என்று தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிற்பங்களில் நிறைய புராணக் காட்சிகள் இருந்தன. கோவிலும் மிகவும் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது. (மாதத்தில் கடைசி சனிக்கிழமையோ இல்லை முதல் சனிக்கிழமையோ லட்டு பிரசாதம் திருப்பதியிலிருந்து வருகிறது, சென்னை வெங்கட்நாராயணா ரோடில் உள்ள வெங்கடேஸ்வரர் கோவில் போன்று)

      நீக்கு
  10. கோவில் தூணில் தசாவதாரம் சிற்பம் செதுக்கப்பட்டு இருக்கிறது.
    கையில் கிளி ஏந்திய சிற்பம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதி அரசு மேடம். தசாவதாரம் மற்றும் மற்றைய சிற்பங்கள் மிக அழகு.

      நீக்கு
  11. கோவில் சிற்பங்களில் கொஞ்சுகிறது அழகு. விஜயநகர அரசர்கள் சிற்பிகளை நன்றாக பாதுகாத்து, வாழவைத்து, அந்தக் கலையை சிறப்பாக வளர்த்திருக்கின்றனர் என்பது தெளிவாகிறது.

    சிற்பங்கள் சிந்தனையை மயக்க, சொற்பகாலமாவது அங்கே சுகமாக சுற்றியிருந்துவிட்டு வரலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏகாந்தன் சார். சமீப காலம் என்பதால் சிற்பங்கள் பளிச் என இருக்கோ? ஹொய்சாளர் காலச் சிற்பங்கள் கர்நாடகத்தில் மிக அழகு.

      நீக்கு
    2. மதுரை சுந்தரேஸ்வர்ர் சந்நிதி முன் மண்டபச் சிற்பங்கள் கொள்ளையழகு. அவ்வளவு நுணுக்கம். பார்த்து ரசிக்க வேண்டிய கோவில் (கேமராவைக் கொண்டுபோக்க் கூடாதுன்னு கண்டிப்பா இருக்காங்க)

      நீக்கு
  12. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். இன்று ஞாயிறு. வீட்டில் ஏதேனும் ஸ்பெஷலா?

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      ஞாயிறு என்றாலே சற்று தாமதமாக எழுந்து ஓய்வெடுக்கும் நாள் என ஆகி விட்டது. ஆனால் பசி அந்த நேரத்தில் ஓய்வைப்பற்றி ஏதும் கவலையுறாது தலை காட்டி விடும்

      ப. மி. கறிவேப்பிலை, இஞ்சி, வெங்காயம் எல்லாம் அரைத்து விட்டு (மிக்ஸியில் பலதடவை சுற்ற வைத்து) செய்த ரவை உப்புமாதான் காலை உணவு. இதை நறுக்கிச் சேர்த்தால் அதை எடுத்து தட்டுக்கு வெளியே போடுவதிலேயே சின்னக் குழந்தைகள் சாப்பிடாமல் அடம். அதனால் இந்த முறை. மதியம் யோசிக்க வேண்டும். தங்களின் உணவைப்பற்றிய விசாரிப்புக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. இது அருமையான மெதட் (இஞ்சி பமி கருவேப்பிலையை அரைத்துவிடுவது). இப்போவரை சாப்பிடலை. பசிக்குது. சும்மா நிறைய சாப்பிட்டுவிடுகிறேன் என்று இதுவரை சாப்பிடாமல் இருக்கேன்.

      எப்போதுமே இன்னொருவர் செய்துதந்தால் சாப்பிடவே சுகம். ஆனா உங்க மாதிரி ஆட்களுக்கு பண்ணினதை மத்தவங்க சாப்பிட்டாலே சந்தோஷமா இருக்கும்னு நினைக்கிறேன்.

      நீக்கு
  13. வொண்டுடு , மிட்டுடு இவர்களின் வரலாறு தமிழகத்தில் வாலியின் வாழ்க்கை போலவே இருக்கிறதே...

    படங்கள் வழக்கம் போல் மிகவும் அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா... கில்லர்ஜி உங்க கருத்து வித்தியாசம்தான்.

      நீக்கு
  14. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.

    ஒண்டிமிட்டா கோதண்ட ராமர் கோவிலின் படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. அங்குள்ள சிற்பங்கள் ஒவ்வொன்றும் அழகு. ரசித்தேன். நீங்களும் ஒவ்வொன்றையும் ரசித்து படமெடுத்திருக்கிறீர்கள். ஆலயமும் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருவது படங்களில் தெரிகிறது. ஆஞ்சநேயர் கோவில் வாசலில் படுத்து இளைப்பாறும் பசுங்கன்று படம் அழகு. இன்று தங்கள் பகிர்வால் ராமரையும், ஆஞ்சநேயரையும் தரிசித்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே. தொடர்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். ராமாஞ்சநேய தரிசனம் கிடைத்தது சந்தோஷம். அந்தச் சிற்பங்களில் குறிப்பாக நுழைவாயில் சிற்பங்களில் மனசைப் பறிகொடுத்தது நிஜம்.

      நீக்கு
  15. படங்கள் மற்றும் தகவல்கள் அனைத்தும் நன்று. சிற்பங்கள் அனைத்துமே பார்க்கப் பார்க்க ஆனந்தம். எத்தனை திறமைசாலிகள் நம் நாட்டில் என்று சிந்தனை ஓடிக்கொண்டிருக்கிறது மனதில். சிற்பங்களை நேரில் பார்க்கவும் ஆசை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட் நாகராஜன். நம் நாட்டில் எத்தனையோ பேசப்படாத சிற்பிகள். நாம அரசர்களை மாத்திரமே நினைவில் வைத்திருக்கிறோம். அது சரி...அவங்க புரவலராக இல்லைனா இதெல்லாம் கிடைத்திருக்குமா?

      நீக்கு
  16. ஆஆஆஆ இதென்ன இது நரசிம்ஹரின் பெயரே வாயில நுழையுதில்லை, நீங்கள் பார்த்துப் பார்த்துத்தானே ரைப் பண்ணியிருப்பீங்கள் நெ த?? எதுக்கு இப்பூடிப் பெயர்களெல்லாம் வைக்கினம், இப்போ மக்டொனால்ஸ், கே எவ் சி ல புதுசு புதுசா உணவுக்குப் பெயர் வைக்கிறார்களே அப்படி...
    இங்கு நான் ட்றைவ் பண்ணும்போது ட்றை துறூல ஏதும் வாங்குவம் எனப் போனால், பிள்ளைகள் ஈசியாச் சொல்லுவினம், அந்தப் பெயரை ஓடர் குடுங்கோ என, எனக்கது வாயில நுழையாது, கஸ்டப்பட்டுச் மைக்கூடாகச் சொன்னால் இங்கிருக்கும் வெள்ளைகளுக்கது புரியாது ஹையோ நான் படும்பாடிருக்கே ஹா ஹா ஹா அந்த நினைப்புத்தான் வந்தது இங்கு நரசிம்ஹரின் பெயர் பார்க்க... சரி இருக்கட்டும் வாறேன்ன்ன் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா. இன்னும் புது பதிவு எழுத ஆரம்பிக்கவில்லையா? ஏஞ்சலின் எழுத்துக்கூட்டி தமிழ் படிக்க ஆரம்பித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். கோபு சாருக்கு மெசேஜ் அனுப்பிட்டீங்களா?

      Drive, Drive through, Order - நல்லாவே தமிழ்ல எழுதியிருக்கீங்க. மைக்கூடாகச் சொன்னால் - ஒரு மாதிரி சொன்னால் என்று அர்த்தமா? ஒரு குன்ஸா... என்று சென்னைல சொல்லுவாங்க. (ஏஞ்சலினிடம் கேட்டால் தெரியும்)

      நீக்கு
    2. ///இன்னும் புது பதிவு எழுத ஆரம்பிக்கவில்லையா?///

      விட்டிடுவேனோ லேசில எல்லோரையும் ஹா ஹா ஹா மின்னல் முழக்கத்தோடு வருது :))

      /// ஏஞ்சலின் எழுத்துக்கூட்டி தமிழ் படிக்க ஆரம்பித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டேன்///
      ஹையோ அவ டமிலை மறந்தால்தான் எனக்கு நல்லது:)), இல்லை எனில் நானெல்லோ ஓடி ஒளிக்கவேண்டிவருது அப்பப்போ:))

      நீக்கு
    3. ///கோபு சாருக்கு மெசேஜ் அனுப்பிட்டீங்களா?
      ///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... இப்படியான மெசேஜ் ஐ, ஆருமே எங்குமே சொல்லமாட்டேன் என்கிறீங்க, எதுவுமே நடக்காததுபோல உலகம் வழமைபோல இயங்கிக்கொண்டிருந்ததால் எங்களுக்கு உடனே எதுவும் தெரியாமல் போச்சு, பின்புதான் அறிஞ்சோம்ம்ம்... மனமே கனத்துவிட்டது, 2 நாட்களின் பின்புதான் மெயில் போட்டோம்ம்...

      இனிமேலாவது ஏதும் செய்தி அறிஞ்சால், கொமெண்ட்டிலாவது தெரியப்படுத்துங்கோ பிளீஸ்ஸ், ஏனெனில் எதுவும் தெரியாததால், கும்மி அடித்துவிடுகிறோம் கொமெண்ட்டில்.. அது தப்பெல்லோ.. ஆனா இனிவரும் செய்திகள் எல்லாம் நல்லதாகவே வரட்டும்... ஆஆ அதோ மேலே தேவதை பறந்தபடி .. அபஸ்து சொல்கிறா.. நல்லதே நடக்குமாம்.

      நீக்கு
    4. ///Drive, Drive through, Order - நல்லாவே தமிழ்ல எழுதியிருக்கீங்க. ///

      ஆவ்வ்வ்வ் இந்த நேரம் பார்த்து என் செக் இங்கின இல்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), என் காலை வாரிவிட மட்டும் ஓடி வந்திடுவா எங்காவது ஒளிச்சிருந்து:))... நேக்கு வெய்க்கம் வெய்க்கமா வருது.. ரொம்பப் பாராட்டுறீங்க:).. ஹா ஹா ஹா ஹையோ அஞ்சூஊஊஊஉ வெயா ஆஆஆஆ யூஊஊஊஊஊ??:).. [ அவ இப்போ அதிராவுக்காக:) சேர்ஜ்ஜில் வேண்டிக்கொண்டிருப்பா இறைவனிடம்].

      //மைக்கூடாகச் சொன்னால் - ஒரு மாதிரி சொன்னால் என்று அர்த்தமா?///

      இல்லை காரை விட்டு இறங்காமல், அப்படியே காருடன் ஒரு ரவுண்ட் சுற்றி வரும்போது, Mick இருக்கும் அதனூடாக ஓடர் குடுக்கோணும், அது சரியாக ட்றைவரின் ஜன்னலைத்திறந்து சொல்லும் இடத்தில தான் இருக்கும் அதனால அருகிலிருப்பவர் சத்தமாகச் சொன்னாலும் கேட்காது, ச்சோஓஒ கஸ்டப்பட்டு பல்லுடைஞ்செண்டாலும் நானேதான் சொல்லியாகோணும், ஓடர் கொடுத்துவிட்டு அடுத்த ஜன்னலுக்கு வந்தால் பணம் எடுப்பார்கள், அப்படியே அடுத்த விண்டோவுக்கு வரும்போது சாப்பாடு ரெடியாகி கையில தருவினம்...

      இது வட இந்தியாவிலும் சில மக்டொனால்ட்ஸ்களில் மட்டும் இருந்தது பார்த்தேன், நீங்கள் அங்கெல்லாம் போக மாட்டீங்கள் என்பதால் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனா இப்போ நிறைய சைவ உணவுகளும் அங்கு வந்துவிட்டன, இங்கு பெரும்பாலான இப்படி பாஸ்பூட் கடைகள் ட்றைவ் த்றூ தான், நேரம் மிச்சம், கார் பார்க்கிங் தேடத் தேவையில்லை, அவசரத்துக்கு நல்ல உடுப்புப் போடாமல் போயிட்டாலும் இது வசதி ஹா ஹா ஹா...

      நீக்கு
    5. அஞ்சூஊஊஊஊஊஊஉ உங்களுக்குக் குன்ஸா தெரியுமோ?? ஓடிக் கமோன்ன்ன்ன்:))

      நீக்கு
    6. //வெயா ஆஆஆஆ யூஊஊஊஊஊ??:)// //சேர்ஜ்ஜில்// ஹையோ ஹையோ...

      இப்போ புரிந்துவிட்டது. நாங்களும் Drive throughவில் Mike மூலமாக ஆர்டர் செய்திருக்கிறோம் (இந்தியாவில் அல்ல). மிடில் ஈஸ்டில் இது நிறைய இடங்களில் உண்டு. பஹ்ரைனில் எங்கள் கடைகளில் (அதாவது நான் வேலை செய்த கம்பெனியில்) நிறைய உண்டு. இது சும்மா வெட்டிவேலை என்று எனக்குத் தோன்றும். பஹ்ரைன், மிடில் ஈஸ்டிலெல்லாம் இடத்திற்குப் பஞ்சமில்லை. லண்டனில், இட வசதி குறைவு. அங்கெல்லாம் இந்த facility ரொம்பவே உபயோகம்.

      நீக்கு
    7. /இப்படியான மெசேஜ் ஐ, ஆருமே எங்குமே சொல்லமாட்டேன் என்கிறீங்க,// எங்கள் பிளாக் வாட்சப் குழுமத்தில் பகிர்ந்திருந்தேன். பதிவில் பகிரக்கூடாதோ என்று நினைத்தேன். கோபு சாரும் தன் தளத்தில் தொடர்ந்து பதிவுகள் போட்டுக்கொண்டிருந்தால் எல்லோருக்கும் அவரே சொன்ன மாதிரி ஆகியிருக்கும். அவர் வீட்டிற்கு சில வருடங்கள் முன்பு போயிருப்பதால் எனக்கு அவர்(வீட்டார்) அறிமுகம் அதிகம்.

      நீக்கு
    8. இங்கிருப்போரில், உங்களுக்குத்தான் கோபு அண்ணனோடு அதிகம் நேரடிப் பழக்கமென்பதால் உங்களுக்குத்தான் முதலில் தெரிஞ்சிருக்கும் என நினைச்சு, உங்கள் மேல்தான் .. லைட்டா:) கோபம் வந்துது, எங்களில் யாருக்காவது கொமெண்ட் மூலமாவது சொல்லியிருக்கலாமே என...

      நீக்கு
    9. எனக்கு முன்னால், வேறொருவர் மூலமாக ஸ்ரீராமுக்கு தகவல் போய்விட்டதாம். எனக்கு செய்தியை வாட்சப்பில் படித்ததும் ரொம்பவே வருத்தமாகிவிட்டது. பையன் இருந்து அப்பாவை அனுப்பி வைக்கவேண்டியிருக்க, பையனை அப்பா அனுப்பி வைப்பது மிகக் கொடுமை. உலக நிகழ்வுகளில் மிக அனுபவம் பெற்ற கோபு சார், இந்தத் துக்கத்திலிருந்து மெதுவாக வெளிவந்துவிடுவார், அவர் மனைவிக்குத்தான் இன்னமுமே தாங்கமுடியாத வருத்தம் இருக்கும்.

      நீக்கு
    10. இதில ஒன்று சொல்லோணும், கோபு அண்ணன் மெயில் அனுப்பும்போது, தன் உடல் நிலை பற்றியும் வெயிட் பற்றியும் சொல்லுவார், அத்தோடு என் மெயிலைக் காணாதுவிட்டால் என்வட்சப் நம்பருக்கு தொடர்புகொண்டு வீட்டாக்களிடம் கேழுங்கோ எனவும் சொல்லியிருந்தார், இதனால மனதில ஒரே பயமாக இருக்கும்,
      அதனால நினைக்கும்போதெல்லாம் அஞ்சுவும் சரி நானும் சரி அவருக்காகக் கும்பிடுவோம், ஆனால் பாருங்கோ இப்படி ஒரு துயரம் வருமென ஆரால நினைக்க முடியும்... விதியைத்தான் நோகவும் வேண்டும், விதி என நம்பினால்தான் மனமும் ஆறும்..

      நீக்கு
    11. கோபு சாரை நான் அவ்வப்போது நினைத்துக்கொள்வேன். சமீப காலமாக (ஓரிரு மாதங்களாக) வாட்சப் மெசேஜ் குறைந்துகொண்டு வருகிறது. இந்த வாரம் மீண்டும் அவரிடம் பேசணும். அவர் நல்ல மனிதர், ஜாலியாகப் பேசுபவர். சில உடல் வாகுள்ள ஆட்களுக்கு தொடர்ந்து வேலை இருந்துகொண்டே இருக்கவேண்டும். இல்லாவிட்டால் உடல் தளர்ந்துவிடும்.

      நீக்கு
  17. கிந்தா..கிந்தா... கிஸ்கிந்தாஆ... ஹா ஹா ஹா இது ஓரளவு சின்ன வயசிலிருந்தே, நான் வீட்டில அடிக்கடி உபயோகிக்கும் ஒரு வார்த்தை.. ச்சும்மா ச்சும்மா சொல்லிக்கொண்டிருப்பேன், ஆனா இது ஒரு இடத்தின் பெயர் என்பது இப்போதான் தெரியுது, ஹையோ மேல்வருவத்தூர் பழனியாண்டவா.. இந்தச் சொல் எப்படி என் வாயில அடிக்கடி வருது என நினைப்பேன், யோக் போல எப்பவும் இப்படிச் சொல்லுவேன் வீட்டில, நான் நினைச்சிருந்தேன் ஏதோ கிந்திச் சொல்லாக்கும் சின்ன வயசில, எங்கோ பொறுக்கி எடுத்திருக்கிறேன் போல அது அப்படியே வருது என...

    இப்போதான் யோசிக்கிறேன், அப்போ சின்ன வயசில சமயம் படிப்பிச்ச ரீச்சர் சொல்லித் தந்திருக்கலாம்.. சிமியோன் ரீச்சர் இல்லையாக்கும் அது:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராமாயணத்தில் வரும் இடம் அதுவல்லவா? சிறு வயதிலிருந்தே இலங்கை, அசோக வனம், சீதை என்றெல்லாம் எங்களுக்கு மிகவும் பரிச்சயமானது உங்கள் நாடு.

      யோக் போல - புரியலை. ஓ... ஜோக் என்பதைச் சொல்கிறீர்களோ?

      நீக்கு
    2. ஜ வுக்கு ய உபயோகிப்பது, டீ என்பதற்கு ரீ என்று உபயோகிப்பது... இலங்கைத் தமிழே இனிமையானது.

      நீக்கு
    3. ///யோக் போல - புரியலை. ஓ... ஜோக் என்பதைச் சொல்கிறீர்களோ?///

      ஹா ஹா ஹா இல்லை சத்தியமாக எழுதும்போது எனக்கும் புரிந்தது.. இன்ரியூஸன்... ஏதோ தப்பாக இருக்கே என ஆனா நீண்டகாலம் தமிழ் ரைப்பிங் இல்லாததால் மறந்தே போயிட்டேன்ன்.. அது ஜோக் என வந்திருக்கோணும் ஹா ஹா ஹா..

      நீக்கு
  18. ///ஆஞ்சநேயரைச் ....சேவித்துவிட்டு....///
    நெல்லைத்தமிழன் நீங்கள் சாதாரணமாகப் பேசும்போதும் இப்படித்தான் பேசுவீங்களோ? இல்லை எழுதுவதற்காக எழுதினனீங்களோ?... ஏனெனில் கோயிலில் சில குருக்கள்மார் மட்டுமே இப்படிச் சொல்லுவார்கள் கேட்டிருக்கிறுக்கிறேன், சாமியைச் சேவித்துவிட்டு வாங்கோ அர்ச்சனை பண்ணலாம் , அவசரமில்லை என்பார்கள்..

    ///// பிறகு கோதண்டராமர் கோவிலுக்குச் சென்றுவிட்டு அரை மணி நேரத்தில் சாப்பிட வரச் சொன்னார்கள்///
    அதானே பார்த்தேன்ன்ன் ஹா ஹா ஹா விடிஞ்சு இவ்ளோ நேரமாச்சே எங்கே பேச்சைக் காணல்லியே என ஹா ஹா ஹா சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:).. வந்த வேலையைக் கவனிப்போம்ம்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் பேச்சுத் தமிழும் இதுதான். கும்பிட்டுவிட்டு என்பதை நாங்கள் உபயோகப்படுத்துவதில்லை. 'கும்பிடுவது' என்பதை ஒருவன் போலியாகச் செய்யும் செயலைக் குறிப்பிட உபயோகிப்போம். (இதெல்லாம் ஒவ்வொரு சமூகத்தின் பேச்சுத் தமிழ்)

      எங்க போனாலும், அந்த அந்த நேரம் ஆகிவிட்டால், பிறகு சாப்பாட்டைப் பற்றிய பேச்சுத்தானே எழும்? உங்க ஊரில் (மான்செஸ்டரில் இல்லை, லண்டனில்) சரவணபவனைத் தேடிச் சென்றது நினைவுக்கு வருகிறது. எவ்வளவு நாள்தான் ப்ரெட் (பாண் ஹாஹா), ஜாம், பழம், Straberry flavored milk என்று காலத்தை ஓட்டுவது?)

      நீக்கு
    2. சைவமாக இருப்பது வெளிநாடுகளில் கஸ்டம்தான், முன்பு ஒருதடவை திருவெம்பாக் காலத்தில்[நான் மட்டும் பிடிப்பேன்], என் கணவருக்கு ஒரு மீற்றிங்குக்காக 5 ஸ்டார் ஹோட்டேல் தந்திருந்தார்கள், அப்போ விட மனமில்லாமல் எல்லோரும் போயிட்டோம், அங்கு சைவ உணவேதும் கிடைக்காமல், லஞ் க்கு சலாட் மட்டுமே சாப்பிட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஆனா இப்போ நிறைய மாறிவிட்டது, பலபேர் வீகன் டயேட் க்கு மாறிவிட்டமையால்.

      நீக்கு
    3. //திருவெம்பாக் காலத்தில்// - மார்கழி மாதம் என்பதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். நீங்க என்னவோ 'சைவ உணவேதும் கிடைக்காமல்' என்று எழுதியிருக்கீங்க. நான் லண்டனில் மிகப் புகழ்பெற்ற ரெஸ்டாரண்டில் (படங்கள் உள்ளது, சட்னு பெயர் நினைவுக்கு வரலை. இது லண்டனில் அகழ்வாய்வு செய்துகொண்டிருந்த இடத்தில், லண்டன் டவர் போன்ற இடங்களிலிருந்து நடக்கும் தூரத்தில் இருந்தது) பிஸினெஸ் டின்னர் சாப்பிட்டபோது - அந்தக் கூட்டத்தில் நான் எங்கள் கம்பெனியின் IT division தலைவன், மத்தவங்க பிஸினெஸ் divisionsன் பொது மேலாளர்கள், எனக்கு மாத்திரம் சாதம், பருப்பு செய்து டின்னர் மேசையில் சர்வ் செய்தார்கள். நான் அசந்துவிட்டேன். அதுபோல லண்டன் அருகில் ஒரு பெரிய ரெஸ்டாரண்ட் செயினுக்கு, அந்த ரெஸ்டாரண்ட் மிடில் ஈஸ்டில் நாங்கள் ஆரம்பிக்கப்போவதால், IT சம்பந்தமாக நான் சென்றிருந்தேன். முற்றிலும் அசைவம் பாஸ்தாக்கள் உடைய ரெஸ்டாரண்ட் அது. என்னை டின்னருக்கு வரச் சொன்னார்கள். நான், இங்க எனக்குள்ள உணவு ஒன்றுமே கிடையாது, ஃப்ரெஷ் ஆரஞ்ச் ஜூஸ் தவிர, அதனால் நான் வந்தாலும் பிரயோசனமில்லை என்று சொல்லி மறுத்துவிட்டேன். அவங்க ரெஸ்டாரண்ட் ப்ரெஸ்டீஜியஸ். அவங்களுக்கு ரொம்ப கோபம். என் bossஇடம் complaint செய்துட்டாங்க. நான் வேலை பார்த்த சமயங்களில் இது மாதிரி எவ்வளவோ சம்பவங்கள்

      நீக்கு
    4. நீங்கள் உங்கள் வேலை காரணமாகச் சென்ற இடங்கள் மற்றும் அங்கு சந்தித்த/கஸ்டப்பட்ட/மகிழ்ந்த.. இவற்றையும் ஒரு தொடராக எழுதலாமே..

      நீக்கு
    5. அதுக்கு ஒரு நேரம் வரும் அதிரா.... ஆனால் பெரும்பாலும் எல்லாவற்றையும் நான் புகைப்படம் எடுத்துவைத்துக்கொள்வேன். (அப்படி மறந்த முக்கியத் தருணங்கள் உண்டு. ஒரு நேரத்தின் என் பாஸ் GM, Finance head-இன்னொரு சமயத்தில் என் பாஸ், மற்றும் நான், மூவரும் ஹீத்ரூ விமானநிலையத்தில் லவுஞ்சில் இரவு விமானத்திற்குக் காத்திருந்தபோது, GM கொஞ்சம் கண் அசந்துகொண்டிருந்ததால் புகைப்படம் எடுத்துக்கொள்ளவில்லை. இன்னொன்று தாய்வானில், எனக்கு பிஸினஸ் லஞ்ச் ஆர்கனைஸ் பண்ணவேண்டாம், நான் வெளி உணவு நான் சாப்பிடுவதில்லை என்று சொன்னதால் எனக்காக பழங்கள் என் டேபிளில் வைத்தாங்க. எவ்வளவு? 5 அடிக்கு 4 அடி முழுவதும் பழங்கள். ஹா ஹா. அதையும் புகைப்படம் எடுக்க விட்டுப்போய்விட்டது). என் புகைப்படத் தொகுப்பைப் பார்த்தால் (லட்சத்திற்கு மேல் இருக்கும்.. ) நான் எந்த நேரத்தில் எங்கே இருந்தேன், யாருடன் என்பதெல்லாம் தெரியும். கஷ்டப்பட்ட - அது மாதிரி எனக்கு நினைவில் இல்லை.

      நீக்கு
  19. ///நுழைவாயிலுக்குச் செல்வதற்கே 20 படிகளுக்கு மேல் ஏறிச் செல்லவேண்டும். பிரம்மாண்டமான அமைப்பு. மிகப்பெரும் நுழைவாயில் (20 அடிகளுக்கு மேல் உயரம்)///

    ஆஆ யாழ்ப்பாணத்திலும் எங்களூரில் இப்படி ஒரு ஆஞ்சனேயர் இருக்கிறார், நாங்கள் இங்கு வரும்போது கட்டத்தொடங்கினார்கள், படிக்கட்டுக்களில் நின்று படமெடுத்து வந்தோம், பெரீய ஆஞ்சனேயர், இப்போ கட்டிப் பெரிய அழகிய கோயிலாக இருக்கிறது, நான் ஒரு ஆஞ்சநேயர் பக்தை தெரியுமோ.. இவ்வருடம் ஊருக்குப் போகும் ஐடியா உண்டு, போனால் படமெடுத்து வரோணும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் ஊருக்கு நானே செல்லவேண்டும் என்று ஒரு ஆசை உண்டு (உங்கள் ஊர்னா, யாழ்ப்பாணம் மட்டக்களப்பு போன்றவை) உங்கள் ஊர் தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும். இனிமையான, கலப்பில்லாத தமிழ். 85 வரை உங்கள் ஊரின்மீது புலி ஆட்களின்மீது ரொம்பவே அன்பு உண்டு. சரி இது கிடக்கட்டும்.

      ஊருக்குப் போனால் (கண்ட நேரத்துல போகாதீங்க. நல்ல சீசன் நேரத்தில் போங்கள். உதாரணமா ஏப்ரல்/மேயில் போனால் பனை நுங்கு சீசன். கொஞ்சம் தள்ளிப் போனால் பனங்கிழங்கு (ஒடியல் கூழ் எனக்கு நினைவுக்கு வருது). நல்ல இயற்கைக் காட்சிகளைப் படமெடுத்து வாருங்கள் (கூடவே பிரபாகரன் bunkerஐயும்)

      நீக்கு
    2. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் பலபல ஆண்டுகளுக்குப் பின்பு ஊருக்குப் போகும் ஆவல் வந்திருக்கு, இப்பவே பங்கரைப் படமெடுக்கச் சொன்னால் லெக்ஸ்ஸு, காண்ட்டு எல்லாம் ரைப் அடிக்குதே ஹா ஹா ஹா, உண்மைதான் இலங்கையில கலப்பில்லாத தமிழ் பேசுவோம், ஆனா இப்போ வெளிநாட்டுக்கு வந்து எல்லோருடனும் கலந்து பேசுவதால், எங்கள் தமிழும் கலப்படமாகவே வருது... யூலை ஓகஸ்ட்டில்தான் போகும் ஐடியா... ஓகஸ்ட்டில் மூத்தவர் டொக்டராக வேலை ஆரம்பிக்கிறார் ஹொஸ்பிட்டலில்... அதற்கு முன் போய் வர ஆசை.. பாருங்கோ காலம் எப்படி ஓடிவிட்டது...

      மாமா சொன்னார் செவ்வாழைக்குலை போட்டிருக்காம், நீங்கள் வரும்வரை தாக்குப் பிடிக்குமோ தெரியாது, பார்க்கலாம் என..

      நிட்சயம் இலங்கைச் சுற்றுலா ஒன்று பண்ணுங்கோ.. நன்றாக இருக்கும், இப்போ எந்தப் பயமுமில்லை.

      நீக்கு
    3. காலம் வேகமாகப் போகிறதைப் பார்த்தால், நீங்கள் என்னைவிட மூன்று நான்கு வயது பெரியவராக ஆகிவிட்டீர்களே என்று நான் கவலைப்படுகிறேன்.

      பிரிட்டனில் இருந்துவிட்டு, ஒரு மாதம் (அல்லது இரு வாரங்கள்) உங்கள் ஊரில் எப்படி இருப்பீர்கள், அல்லது கொஞ்ச நேரத்திற்கு ஒரு முறை, எவ்வளவு வெயில் என்றெல்லாம் அலுத்துக்கொள்வீர்களோ என்று யோசிக்கிறேன். உங்கள் சைக்கிள் இன்னும் அங்கு இருக்கிறதா? அந்த அண்ணனும் அங்கே இருப்பாரா?

      நீக்கு
    4. வட இந்தியா போனமையால், கொஞ்சம் பழகியாச்சு, ஆனா இலங்கையைப் பொறுத்தவரை பெரிய வெக்கை இருக்காதென நினைக்கிறேன், எங்கள் வீடுகள் எல்லாம் சோலையாக மரங்களோடுதான் இருக்கு...
      இதில பெரிய பிரச்சனை என்னவெனில், உண்மையில் நம் உடம்பு இப்போ குளிருக்கேற்றபடி மாறிவிட்டது, அதுபோல ரொயிலட், தண்ணி வசதி எல்லாமே இப்போ ஈசியாக இருந்துபோட்டு அங்குபோய்ச் சமாளிப்பது கஸ்டமே..

      இந்தியாவிலும் ஹோட்டேல்கள் தவிர, சில பொது இடங்களிலெல்லாம் நம்மூர் ரொயிலெட்டுகளே இருந்தது, பல வருடங்களின் பின் அதைப் பார்க்க, எனக்கு ஒரு மாதிரி, விழுந்திடுவனோ எனப் பயமாக இருந்தது, ரெயினில் ஒரு தடவை நேரடியாக ஓட்டை போய் நிலம் தெரியவும் திரும்ப ஓடி வந்திட்டேன், பின்பு பார்த்தால் மறுபக்கம் கொமேட் இருந்தது, ஹா ஹா ஹா, சின்ன வயசில எல்லாம் பழகியிருந்தாலும், இடைவெளி அதிகமாகிவிட்டமையால், வெளிநாட்டு வாழ்க்கைக்குப் பழகிவிட்டோம், ஆனா நம் மக்களுக்கு இது புரியாது, அங்குபோய் நின்று வேர்க்குது வேர்க்குது எனச் சொன்னால், கண்டறியாத வெளிநாட்டால வந்திருக்கினம், அங்கயோ பிறந்து வளர்ந்தவை எனக் கேட்டாலும் எனவும் பயமாக இருக்குது ஹா ஹா ஹா...

      நீக்கு
    5. என் லுமாலாச் சைக்கிள்தான் இடம்பெயர்ந்தபோதே களவெடுத்துப் போயிட்டினமென புளொக் போஸ்ட் முன்பு போட்டிருக்கிறேன்ன்... எந்த அண்ணனைக் கேட்கிறீங்க? லைபிரரி அண்ணனோ? ஹா ஹா ஹா அவரைப் பற்றி அறிய வாய்ப்பில்லை...

      நீக்கு
    6. //இடைவெளி அதிகமாகிவிட்டமையால், வெளிநாட்டு வாழ்க்கைக்குப் பழகிவிட்டோம்// - உண்மைதான். பழக்கம் மாறிவிட்டால், பழைய நிலைக்குத் திரும்புவது மிகக் கடினம். எனக்கு முதல் சில வருடங்கள் மிகக் கடினமாக இருந்தது.

      உங்களுக்குச் சொன்னால் சிரிப்பீர்கள். நான் 93ம் ஆண்டு துபாய் சென்றபோது, எங்கள் கம்பெனி இருந்த பில்டிங்கில் ரெஸ்ட்ரூம் வசதியைப் பார்த்து அசந்துபோய்விட்டேன். (ஒவ்வொரு floorக்கும் இரண்டு உண்டு. அதாவது எங்கள் ஆபீஸ் இருந்த அளவு பெரிய் பெரிய இடமாக). அதையும் ஒரு படம் எடுத்துக்கொண்டேன். பிறகு அத்தகைய வசதிகள் காலப்போக்கில் பல இடங்களிலும் வந்துவிட்டன. இந்தியாவின் மால்களிலும் இப்போது இருக்கிறது.

      நீக்கு
  20. ///(எந்த ஊரில் நீங்கள் ஆஞ்சநேயர் கோவிலோ இல்லை இராமர் கோவிலோ பார்த்தால், அதன் எதிரில் இராமர் சன்னிதியோ இல்லை ஆஞ்சநேயர் சன்னிதியோ இருக்கும்)//

    ஓ நோட்டட்... இனிக் கவனிக்கிறேன், சன்னிதி என்றால் மடமோ??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவில் என்றால் ஒரு தெய்வத்துக்கான கோவில். அங்கேயே சிறு சிறு, தனிக்கோயிலாக இல்லாமல் சந்நிதிகள் இருந்தால் அது சன்னிதி. உதாரணமா சிவன் கோவிலுக்குச் சென்று, அங்கே பிள்ளையார், முருகன் போன்றவர்களுக்கும் சந்நிதிகள் இருக்கும். அம்பாளுக்கு தனிக் கோயிலும் அருகில் இருக்கலாம்.

      நீக்கு
    2. ஓ அப்போ ஒரு பிள்ளையார் கோயில் எனில், சுற்றி வரும்போது குட்டிக் குட்டியாக சண்டேஸ்வரர், வைரவர் எல்லாம் இருப்பினம்.. அதுதான் சந்நிதியோ.. நான் சன்னிதி[இப்படித்தான் பேசுவோம்:)] எனில் கோயிலில் ஒத்த கருத்தென நினைச்சிருந்தேன்..
      //கண்ணனின் சந்நிதியில்
      இனிமேல் காலங்கள் உள்ளவரை
      எந்தன் கண்மணிக்கென்ன குறை...//
      பாடல் நினைவுக்கு வருது..

      நீக்கு
    3. //கண்ணனின் சந்நிதியில்
      இனிமேல் காலங்கள் உள்ளவரை
      எந்தன் கண்மணிக்கென்ன குறை// நிச்சயம் மருத்துவராகப் பணிபுரியப்போகும் உங்கள் பையனுக்கு குறை ஒன்றும் இருக்காது. மக்களுக்கான(நோயாளிகளுக்கான) சேவையே கடவுளுக்கான சேவை அதிரா.

      நீக்கு
  21. அதெப்படி கோயிலுக்குள்ளே பசுப்பிள்ளை படுத்திருக்கிறா... அவ்ளோ சுகந்திரமாக....

    சிற்பங்கள் சூப்பராக இருக்குது, ஆனால் படங்கள் தெளிவாக இல்லாமல் இருக்குது. நாங்கள் கஜூராவோ போனோம், அங்கிருக்கும் சிற்பங்களின் அழகைப் பார்த்தபின் எனக்கு வேறு எங்கும் அப்படி அழகாக இருக்குமா எனத் தெரியவில்லை, அவ்ளோ அழகாக செதுக்கியிருக்கிறார்கள்.. யானை அணிவகுப்பு, ஊர்வலம் இப்படி எல்லாம் இருந்தது, நேரில் பார்ப்பதைப்போல இருந்துது அதெல்லாம்...

    தூண்கள் எல்லாம் சிற்ப வேலைப்பாடுகள் அழகோ அழகு... இதுவரை எனக்கு ராமர் கோயிலுக்குப் போகும் வாய்ப்புக் கிடைக்கவில்லை..

    ஆனா டெல்கியில் ச்சும்மா வோக் போனபோது குட்டியாக ஒரு வீட்டின் முன்பகுதியில் இரு சிலைகள் வைத்து வணங்கினார்கள், குட்டிக் கோயிலாக, எனக்கு இப்படியான கோயிலைக் கண்டால் டமாலென உள்ளே போயிடுவேன், அப்படிப் போன பின்புதான் தெரிந்தது, அங்கிருந்தவர் ஆரென.. கைகால் நடுங்க, வணங்கலாமா கூடாதா எனக்கூடத்தெரியாமல் வணங்கிவிட்டு ஓடிவந்திட்டேன்ன்.. அவர் ஆரென இப்போ ஜொள்ள மாட்டேன்ன்... ஹா ஹா ஹா ஹையோ சிரிக்கவும் பயம்மாக்க்கிடக்கெனக்கு.. மீ ஓடிடுறேன்ன்ன்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பசுப் பிள்ளையா? ஓ... அதன் அம்மாவுக்கு அது பிள்ளைதானே.. எத்தனை வயதானால் என்ன?

      காலங்கள் ஆகிவிட்டதால் சிற்பங்கள் பளிச் என்று இல்லை. இன்னும் சில வாரங்களில் மிக அழகான சிற்பத் தொகுப்பு இங்கு வரும். கஜுரஹோ படங்களையெல்லாம் தைரியமாகப் போட்டு ஒரு பதிவு எழுதுவீர்கள்தானே.

      ஐயனார் சிலைகளா? இல்லை கையில் வாளுடன் பெரிய மீசையுடன் கூடிய மதுரைவீரன் சிலைகளா?

      நீக்கு
    2. அது ச்செல்லமாகப் பசுப்பிள்ளை என்றேன்ன்... செல்லமாகச் சொல்லும்போது அதுவிலங்கானாலும் பறவையானாலும் மனிதரானாலும்.. பிள்ளை சேர்த்துப் பேசுவோம் ஹா ஹா ஹா..

      அஞ்சுப்பிள்ளை, கீதாப்பிள்ளை , அதிராப்பிள்ளை இப்படி ஹா ஹா ஹா

      நீக்கு
    3. //ஐயனார் சிலைகளா? இல்லை கையில் வாளுடன் பெரிய மீசையுடன் கூடிய மதுரைவீரன் சிலைகளா?///

      ஹையோ ஆண்டவா இதுக்கெல்லாம் பயமில்லை... அவர் எருமைகடா வாகனத்துடன் இருந்தார்.. ஆவ்வ்வ் இப்பவும் நினைக்க நடுங்குதெனக்கு.. அப்படி ஒரு இடம் இலங்கையில் வெளிநாட்டில் எங்கும் நான் பார்த்ததில்லை, முதன் முதலாக உள்ளே போயிட்டேன் பார்த்ததும் ஆடிப்போயிட்டேன்ன்.. அது குட்டியாக ஒரு சின்ன வீட்டின் அறைபோல ரோட்டோரம் இருந்தது.. அப்படியே தொடராக வீடுகளும் இருந்தன, கிராமப்புறம்..

      நீக்கு
    4. ///கஜுரஹோ படங்களையெல்லாம் தைரியமாகப் போட்டு ஒரு பதிவு எழுதுவீர்கள்தானே.//

      ஹா ஹா ஹா இம்முறை முழுக்க முழுக்க யூரியூப் நினைப்பென்பதால் வீடியோவாகத்தான் எடுத்தேன், ஆனா கஸ்டப்பட்டு நல்லதாகவே எடுத்திருக்கிறேன் ஏனெனில் போஸ்ட் போடும் எண்ணத்தோடு எடுத்திருந்ததால் ஹா ஹா ஹா, ஆனால் நாம் கேள்விப்பட்டு நாணிக் கோணும் அழவில் இப்போ கஜூராவோ இல்லை என்பதுதான் என் கருத்து, முன்பு ஒருகாலத்தில் நெட் இல்லை வீடியோ இல்லை படங்கள் இல்லை அதனால பெரிதாக அந்தச் சிற்பங்கள் தெரிஞ்சிருக்கும், இப்போ பெரிய அளவில் எதுவும் தெரியவில்லை, அனைத்தும் அழகாக இருந்தது என்னைப்பொறுத்து, குஞ்சு குருமான்களோடுதான்[சிறியவர்கள், குழந்தைகளைச் சொன்னேன்:))] அங்கு எல்லோரும் வந்திருந்தனர்... எங்கள் ஹைட்.. கையில டோச் லைட்டுடன் வந்திருந்தார்.. ரெட் ஸ்பொட் லைட்.. அதனைக் கோபுரங்களில் அடிச்சு அடிச்சு விளங்கப்படுத்தினார் கூச்சப்படாமல் ஹா ஹா ஹா..

      நீக்கு
    5. ஓஹோ... எல்லோரும் இவரைப் பார்த்ததும், உடனே அவருடனே சென்றுவிடுவார்கள். ஓ...அவரோட போய்ட்டாரா என்று அப்புறம்தான் உறவினர்களுக்குத் தெரியும். உனக்கென்ன இங்க வேலை என்று அவரே நினைத்து உங்களை வெருட்டிவிட்டார் போலிருக்கிறது. இல்லை இது கனவோ?

      நீக்கு
    6. கர்ர்ர்ர்ர்ர்ர்... நானே காலை எட்டி வச்சு வெளியே ஓடி வந்திட்டேன் ஹா ஹா ஹா

      நீக்கு
    7. யூ டியூபில் கஜூரஹோ பதிவுகள் வரப்போகிறதா? எல்லோருக்கும் வணக்கம் என்று சொல்லி ஆரம்பிக்கப்போகிறீர்களா? பார்ப்போம்.

      நீக்கு
    8. ///யூ டியூபில் கஜூரஹோ பதிவுகள் வரப்போகிறதா? எல்லோருக்கும் வணக்கம் என்று சொல்லி ஆரம்பிக்கப்போகிறீர்களா? பார்ப்போம்.//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), போய் வந்தே ஒரு வருடமாகப்போகுது, இன்னும் எடிட் பண்ணாமல் வச்சிருக்கிறேன், அதுக்குள் இப்பூடி மிரட்டினால்.. ஹா ஹா ஹா.. பூஸோ கொக்கோ.. எப்பூடியாவது போட்டுவிடுவேன்..

      நீக்கு
  22. அதிராவின் தமிழ் அதிருது சும்மா.. ரொம்ப நாளைக்கு அப்புறம் எபி ஞாயிறு ஜாலியா இருக்கு !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ ஏ அண்ணன்.. நலம்தானே... நீங்களும் இப்போ எப்படி இருக்கிறீங்கள், அதிராவை எல்லாம் மறந்திருப்பீங்களோ என நினைப்பேன் அப்பப்ப.. மறக்கவில்லை ஆவ்வ்வ்வ்வ்... உங்கள் பக்கம் வருவதற்கு, அது வேறுவித லொக்கின் பண்ணோனும் அதன் பாஸ்வேர்ட் மறந்துபோச்ச்ச்.. அதனால முயற்சி பண்ணி விட்டிருந்தேன் வர முடியாமல் இப்போ இல்லை இது ஒருவருடத்துக்கு முந்தின கதை, இப்போ உங்கள் புதுப்போஸ்ட் எதுவும் வந்ததாக தெரியவில்லை...

      இங்கும் இப்போ நல்ல வெயில், வோக் போவது கார்டின் பண்ணுவது என மனமும் ஜாலியாக இருப்பதால் எழுதுவதற்கும் உற்சாகமாக இருக்குது...

      நீக்கு
    2. முன்பே ப்ளாகில் கொஞ்சமாகத்தான் எழுதியிருக்கிறேன். இடையிலே கிரிக்கெட் பதிவுகள் சில போட்டுவிட்டு ஐபிஎல் மேட்ச்சுகளில் (இன்று இறுதிப்போட்டி சென்னைக்கும் குஜராத்துக்குமிடையே) பிஸியாகிவிட்டேன். கொஞ்சம் வாசிக்கிறேன், ஏதேதோ சிந்திக்கிறேன். எழுதுவதைத் தற்காலிகமாக நிறுத்தியிருக்கிறேன். திடீரென திரும்பவும் ஆரம்பிக்கவும் கூடும் என எச்சரிக்கிறேன்!

      உங்கள் பசங்களுக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் உண்டா! ஸாக்கர் பார்ப்பதுதான் வழக்கமா? பிள்ளைகளின் படிப்பு எப்படிப்போகிறது?

      அடிக்கடி தலைகாட்டுங்கள். இஷ்டத்துக்கும் எழுதிப்போடுங்கள் இங்கே!

      நீக்கு
    3. ஆ இப்போ நினைவுக்கு வருது ஏ அண்ணன், நீங்கள் கிரிக்கெட் போட்டாலும் நான் வருவதில்லை, அதில் எனக்கு ஆர்வமே இல்லை...

      இங்குள்ளோருக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் குறைவு.. புட்போல் மச் தான் 24 * 7 போய்க் கொண்டே இருக்கும் சிலசமயம் வீட்டில்... கிரிக்கெட் எனில் ஏதும் வேல்ட்கப் அப்படி வரும்போது எல்லோரும் பார்ப்போம்...

      எழுதத்தொடங்குங்கோ, அது மனதுக்கும் உடலுக்கும் உற்சாகம் கொடுக்கும்.

      மூத்தவர், இந்த மே மாசத்தோடு அனைத்தும் எக்ஸாம் முடிச்சு பாஸ் ஆகிட்டார், இனி வேர்க்தான், சின்னவர் யுனியில் படிச்சுக்கொண்டு இருக்கிறார்...

      ஹா ஹா ஹா அடிக்கடி தலையை வாலை எல்லாம் காட்டத்தான் ஆசை ஆனா அப்பப்ப எழுதும் மூட் ஓவ் ஆகிடும்:)), நன்றி ஏ அண்ணன்.

      நீக்கு
  23. ஹையோ ஆண்டவா என் பல கொமெண்ட்கள் இங்கு வெளிவரவில்லை, சீராமா:) சே..சே... பழக்கதோசம் ஸ்ரீராம்.. பிளீஸ்ஸ்ஸ் ஸ்பாம் ஐச் செக்கு:) பண்ணுங்கோ இது வேற செக்க்:))..

    நல்லவேளை கொமெண்ட்ட் போட்டுவிட்டு ஓடிவிடுவேன், இன்று செக் பண்ணிப்பார்க்கலாம் எனப் பார்த்தால் காணமே கர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தளத்துக்கே, இது யார்றா புதுசா? என்று தோன்றியிருக்குமோ? இப்போதெல்லாம் AI ஆட்கள் பெருகிட்டனமே.

      நீக்கு
    2. அது என்ன ஏ1? ஹா ஹா ஹா அம்பாணிக்கும் இனிஷல் ஏ தான்:)) ஏ அண்ணனுக்கும் இனிஷல் ஏ தான்:))..

      அது கடகடவெனக் கொமெண்ட்ஸ் அனுப்புவதால், ஒரு கொமெண்ட்டை மட்டும் ஒரு பதிலிருக்கும் இடத்துக்கு வெளியிட்டுப்போட்டு மிகுதியை ஸ்பாம் க்கு அனுப்பிடுது போலும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. சீராமைக் காணல்லியே இன்னும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) முற்றத்து முருங்கி மர நிழலில படுத்து நித்திரையாகிட்டாரோ.. ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:))

      நீக்கு
    3. Artificial Intelligence... தன்னை மாதிரியே ஒருத்தியை உருவாக்கி, அதனுடனேயே பேச, ஒரு நிமிடத்துக்கு 1 டாலர் வாங்கி ஒருத்தி அமெரிக்காவில் பெரிய பணக்காரியாகிக்கொண்டிருக்கிறாள் என்ற செய்தியெல்லாம் அடிபடுது. இதையெல்லாம் படிக்காமல், தெரிந்துகொள்ளாமல் க்வில்டுக்குள்ளேயே இருக்கிறீர்கள் போலிருக்கு..

      ஸ்ரீராம் ரொம்பவே பிஸி... நான் பேச தொலைபேசினால், நான் ரொம்ப பிஸி, வீட்டுக்கு நிறைய விருந்தினர்கள் என்று கட் பண்ணிட்டார்.

      நீக்கு
    4. ///ஒருத்தி அமெரிக்காவில் பெரிய பணக்காரியாகிக்கொண்டிருக்கிறாள்///
      ஆஆ நல்லவேளை ஊக்கேயில என இருக்கவில்லை ஹா ஹா ஹா.. இப்போ குல்ட்டுக்குள் இருப்பதில்லையாக்கும்.. கார்டினுக்குள் ஹா ஹா ஹா..

      சீராம் அப்பூடியா சொன்னார்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. என் கொமெண்ட்ஸ் வெளிவரட்டும்.. ஏ அண்ணனுக்கும் பெரிய பதில் போட்டேன் அதையும் காணம்...

      நீக்கு
    5. உள்ளே ஒளிந்திருந்த கமெண்ட்டுகளை தூக்கிக் கொண்டு வந்து இங்கு போட்டு விட்டேன்.

      ஸாரி நெல்லை... அடுத்தடுத்து விருந்தினர்கள்...

      நீக்கு
    6. ஆஆ நெ தமிழன் கொமெண்ட்ஸ் எல்லாம் வெளியே வந்துடுத்து:).. திரும்படியும் முதல்லேருந்து படிங்கோ ஹா ஹா ஹா ..

      நன்றி ஸ்ரீராம், நீங்கள் விருந்தினரைக் கவனியுங்கோ..

      நீக்கு
  24. @ நெல்லை..

    //எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன், நான் வாழ யார் பாடுவார்//

    நான் வாழ யார்....

    இன்றைய எனது பதிவில் விடை
    இருக்கிறது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்தேன் ரசித்தேன்... உங்களுக்கான பெரிய வாய்ப்பு அது. இறையருள் இருந்தால்தான் இதெல்லாம் சித்திக்கும். வாழ்த்துகள்

      நீக்கு
  25. தூண்கள்,சிற்பங்கள் மிகவும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  26. அழகான படங்கள்..

    நல்ல விவரங்கள்..
    பதிவு சிறப்பு..

    பதிலளிநீக்கு
  27. ஆவ்வ்வ்வ்வ் இது 100 ஊஊஊஊஉ..

    https://www.google.com/url?sa=i&url=https%3A%2F%2Fwww.dailypaws.com%2Fcats-kittens%2Fcat-names%2Fcute-cat-names&psig=AOvVaw2XofIfns82Ns2tRkXLF38I&ust=1685432456427000&source=images&cd=vfe&ved=0CBAQjRxqFwoTCNDX6KiDmv8CFQAAAAAdAAAAABAJ

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!