ஞாயிறு, 7 மே, 2023

நான் பயணம் செய்த இடங்கள் :: குருவாயூர் யானை கொட்டாரம் :: நெல்லைத்தமிழன்

 

 

நியூஸ் ரூம்

ஆமாம்..  எங்கே போச்சாம்?


நல்ல செய்திங்க....

நல்ல செய்திக்கு ஆதாரம்...

================================================================================================================

நான் பயணம் செய்த இடங்கள்

நெல்லைத்தமிழன் 

(மார்ச்-2023) குருவாயூர் யானை கொட்டாரம் பகுதி 1 / 3 

சமீபத்தில் குருவாயூர் சென்றிருந்தேன். என் மனைவியின் உறவினர்களில் சிலர், குருவாயூர் கோவிலில் நாராயணீயம் முழுவதும் பாராயணம் செய்யப்போவதாகத் தெரிவித்திருந்தனர். அதனையொட்டி, மூன்று நாலு நாட்கள் குருவாயூரில் தங்கி, சுற்றியுள்ள கோவில்களையும் காணலாம் என்பது பயணத் திட்டம். குருவாயூர் கோவில் அருகிலேயே ஒரு லாட்ஜில், குளிர்சாதன வசதி இல்லாத அறைகள் 5, 4 நாட்களுக்கு book செய்தோம். கடைசி நேரத்தில் என் மனைவி வராததால், நான் மட்டும் அவர்களுடன் சென்றிருந்தேன். அந்தப் பயணம் பற்றிய பதிவல்ல இது.

அந்தச் சமயத்தில் ஒரு நாள் மதியம் சாப்பாட்டுக்குப் பிறகு, சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு, யானைக் கொட்டாரம் பார்க்கலாம் என்று திட்டமிட்டிருந்தோம்.  அதற்குப் பதிலாக மதியம் 2 ½ மணிக்குக் கிளம்பி, தன்வந்திரி கோவில், திருவித்துவக்கோடு மற்றும் திருநாவாய் திருத்தலங்களைச் சேவிக்கச் சென்றுவிட்டோம். மறுநாள் அதிகாலை 4 மணிக்குக் கிளம்பி, இராமர், பரதர், லக்ஷ்மணர் மற்றும் சத்ருக்னர் கோவில்களைத் தரிசிக்கச் சென்றோம். மறுநாள் ஏகாதசி. அன்று மாலை நாங்கள் குருவாயூரைவிட்டுக் கிளம்புவதால்,  நான்கு கோவில்களைத் தரிசித்துவிட்டு மதியச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு, 3 ½ மணி வாக்கில் யானைக்கொட்டாரத்திற்குச் சென்றோம். அதைப் பார்த்து முடிந்ததும், குருவாயூரில் இருக்கும் திருவேங்கடநாதன் கோவிலுக்கும் பிறகு பார்த்தசாரதி கோவிலுக்கும் சென்றுவிட்டுத் திரும்பினோம்.

அஹோபில யாத்திரை கொஞ்சம் நெடுந்தொடராக இருப்பதால், அயர்வைப் போக்கும் விதமாக, அந்தத் தொடரின் பாதியில் இரு வாரங்களுக்கு வேறு ஏதேனும் டாபிக்கில் படங்களுடன் கூடிய பதிவு அனுப்பலாம் என்று தோன்றியது. இதற்கு முன்பு பயணம் செய்த வெளிநாடுகளில் எடுத்த படங்களைப் பகிரலாமா என்று தோன்றியது. எதைப் பகிரலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த போது, தற்போது சென்ற குருவாயூர் பயணத்தில் கண்ட, யானைக் கொட்டாரத்தைப் பற்றியே பதிவாக எழுதிவிடலாம் என்று நினைத்து எழுதுகிறேன்.

குருவாயூர் கோவிலில் யானைகள் உண்டு. தினமும் சீவேலி எனப்படும், குருவாயூரப்பனை முதுகில் தாங்கி, கருவறையின் வெளிப்பகுதியில் (அதற்கும் வெளிப்பகுதி, அதாவது த்வஜஸ்தம்பம் இருக்கும் பகுதி) நான்கு யானைகள் ஊர்வலம் வரும் நிகழ்வு நடக்கும். குருவாயூரப்பனின் திருவுருவத்தை முதலில் வரும் ஒற்றை யானைதான் தூக்கிச் செல்லும்.  சில நாட்களில் சீவேலி நிகழ்வு ஒன்றுக்கு மேற்பட்ட முறை இது நடக்கும். பக்தர்களும் கோவிலுக்கு யானையை நேர்ந்துகொண்டு வாங்கிக்கொடுப்பதும் வழக்கம். அப்படிச் சேர்ந்த யானைகளைப் பாதுகாக்க, அங்கு முன்பிருந்த சிற்றரசரின் (புன்னத்தூர்) பத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில், யானைக் கொட்ட டி ஒன்றை அமைத்திருக்கிறார்கள். அதில்தான் 40-60 யானைகள் இருக்கின்றன. ஓரளவு காட்டுச் சூழலுடன் அமைந்திருக்கும் இடம் அது.  யானைகளைப் பாதுகாக்கும் பாகன்கள் தங்குவதற்கான இடங்களும், தினமும் யானையைப் பராமரிக்கும் சூழலையும் கொண்டுள்ளது அந்த கொட்டாரம் என்று அழைக்கப்படும் இடம்.

வருடத்திற்கு ஒரு முறை, குருவாயூர் கோவிலுக்கு முன்பான நெடும் பாதையில் (300 மீட்டர் இருக்கலாம்), யானைகளுக்கான ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற யானைக்கு அடுத்த ஒரு வருடம் குருவாயூரப்பனின் திருவுருவை விழாக்களிலும் கோயில் திருச்சுற்றிலும் சுமந்துகொண்டு செல்லும் கௌரவம் கொடுக்கப்படும். இது பற்றி பின்பு எழுதுகிறேன்.

(இந்தப் படம் இணையத்திலிருந்து. ஓட்டப்பந்தயத்திற்காக யானைகள் தயாராக தங்கள் தங்கள் மாவுத்தனுடன் இருக்கின்றன இதைத் தொடர்ந்த படங்கள் கடைசியில் வரும்)

 யானைக் கொட்டாரம் (யானைகள் பராமரிப்புக்கான தோட்டம்) குருவாயூர் கோவிலிலிருந்து சுமார் 3 கிமீ தூரத்தில் உள்ளது. பொதுவாக கேரளாவில் ஆட்டோ ஓட்டுநர்கள் அல்லது மற்ற உடலுழைப்புத் தொழில் செய்பவர்கள், கொஞ்சம் அதிகமாக charge செய்கின்றனர். ஆனால் இந்த மாதிரி கட்டணம் ஒரே மாதிரி இருக்கும். நம் ஊர்போல, பேரம் பேசுவது, ஏய்ப்பது, நடுவில் தகராறு செய்வது என்ற பேராசை அவர்களிடம் பொதுவாக இல்லை. நாங்கள் தங்கியிருந்த இடம், கோவிலிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள லாட்ஜில். அங்கிருந்த ஆட்டோ ஸ்டாண்டிலிருந்து யானைக் கொட்டாரத்திற்கு 80 ரூபாய் ஆட்டோ சார்ஜ்கொட்டாரத்திற்கு நுழைவுக்கட்டணம் 20 ரூபாய்உள்ளே 50-60 யானைகள் இருந்தாலும், பல பாதைகள் அடைக்கப்பட்டிருக்கும். இதன் காரணம் பல யானைகளை பார்வையாளர்கள் பார்க்கமுடியாதபடி இருக்கும். அதன் தற்போதைய நிலை-மஸ்த் எனப்படும் பருவம், உடல் நிலை, பாகன்கள் அதற்கான பயிற்சி கொடுத்துக்கொண்டிருப்பது என்று பல்வேறு காரணங்கள் உண்டு.
ஒவ்வொரு யானையும் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கின்றன. அங்கிருக்கும் இலை தழைகளை கஷ்டமில்லாமல் உண்ண முடியும். இருந்தாலும் பாதுகாப்புக்காக அவற்றைக் கட்டியிருக்கின்றனர்.

யானை லத்திக் குவியல். பல இடங்களில் இருந்ததுயானைதான், வனங்களில் மரங்கள் பெருகுவதற்கான அடிப்படைக் காரணம் என்று உங்களுக்குத் தெரியுமா? அதன் லத்தி மூலமாக செரிக்காத விதைகள் காட்டின் பல்வேறு இடங்களில் பரவுகின்றன.

பல யானைகளை பாகன்கள் உடலைச் சுத்தமாக்கி, அழுக்கைப் போக்கிக் குளித்துவிடுகிறார்கள். பார்க்க ரொம்பவே ஆச்சர்யம். தங்கள் சொந்தக் குழந்தைகளைப் போல பாகன்கள் யானைகளைப் பார்த்துக்கொள்வது மனதை நெகிழ்த்தியது.

எங்கு பார்த்தாலும் மரங்கள் அடர்ந்து இருப்பதால், காட்டுச் சூழ்நிலை இருக்கிறது. இருந்தாலும் ஒவ்வொரு யானையும் கட்டப்பட்டிருக்கின்றன.


ஒவ்வொரு யானையின் அருகிலும் தண்ணீர்த் தொட்டி. அதனால் தண்ணீர் மற்றும் உணவுப் பிரச்சனை இங்குள்ள யானைகளுக்கு இல்லைநுழைவாயிலைத் தாண்டியதும், யானைக்கு நாம் பணம் கட்டி பழம் போன்றவற்றை வாங்கிக்கொடுக்க நிலையம் போன்று ஒன்று வைத்திருந்தார்கள். நான் போன சமயத்தில் அங்கு எதுவும் இல்லை.

யானையின் பாதங்களில் விரல்கள் கிடையாது. யானையின் கால் நகங்களை(?) நல்ல ஒரு இரும்பு ஆயுதத்தால் சுத்தம் செய்தனர். எவ்வளவு கவனிப்பு, நாட்டில் வளர்க்கும் யானைக்குத் தேவையாக இருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.
ஒவ்வொரு யானைக்கும் பெயர் உண்டு. படங்களைப் பார்க்கும்போது நமக்கு ஆண் யானை, பெண் யானை என்று மட்டுமே அடையாளப்படுத்தத் தெரியும். ஆனால் அங்கிருக்கும் பாகன்கள், பார்த்த மாத்திரத்திலேயே இது தேவசேனா….. என்றெல்லாம் பெயர்களை அடுக்குகிறார்கள்.

நமக்கும் நல்ல உணவு வகைகளை அருகிலேயே வைத்து, சங்கிலியால் கட்டிப் போட்டிருந்தால், அந்த வாழ்வு ருசிக்குமா? யானையின் மனதில் அந்தத் துயரம் படிந்து கிடக்காதா? இதெல்லாம் மனதை அழுத்துவதால்தான், ஒரு சில நேரங்களில் யானை ருத்ரதாண்டவம் ஆடிவிடுகிறதோ?

நிறைய யானைகள், ஒவ்வொன்றும் குறிப்பிட்ட இடைவெளியில்குளிக்கும் யானையைத் தொட்டுப் பார்த்தேன். அதனுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டேன்யானைக்கு பாகனைத் தவிர பிறர் தன்னைத் தொடுவது பிடிக்காதாம்.

பாக்கு மரங்களின் இலைபோன்றதைத்தான் ஒவ்வொரு யானை முன்பும் ஏராளமாக வைத்திருந்தார்கள். அந்த இட த்தில் வாழை மரங்கள், பலா மரங்கள் போன்ற பலவும் இருந்தன. ஒருவேளை யானை, அவைகளைத் தங்களுக்கு எப்போது தருவார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்குமோ? கேழ்வரகால் செய்யப்பட்ட உணவும் பழங்களும் இவைகளுக்கு அளிக்கப்படுமாம்.

ஒரு சில யானைகளைத் தவிர பலவும் திறந்தவெளியில் மரங்களுக்கிடையேதான் நின்றுகொண்டிருந்தன. மழை பெய்தால் அவைகள் எங்கே தங்கும்? காட்டு யானைகள் போல, மரங்களுக்கிடையே மழைகளுக்கிடையில்தான் அவற்றின் வாழ்வா?

எல்லா யானைகளும் கிட்த்தட்ட ஒன்றுபோலத்தானே இருக்கின்றன என்று எனக்குத் தோன்றும். (பிலிப்பினோஸ், ஜப்பானீஸ் பெண்கள் எல்லோரும் ஒரே மாதிரி இருப்பது போல). இருந்தாலும் ஒவ்வொன்றையும் நாம் கண்காணிக்க ஆரம்பித்தால் அவற்றின் வித்தியாசம் தெரியும்.திகட்டுமளவு யானைகள் படங்கள் இந்த வாரத்தை ஆக்கிரமித்துவிட்டதோ? அடுத்த வாரம் சந்திப்போம்.

64 கருத்துகள்:

 1. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
  ஆகுல நீர பிற.  

  தமிழ் வாழ்க..

  பதிலளிநீக்கு
 2. காக்க காக்க
  கனக வேல் காக்க..
  நோக்க நோக்க
  நொடியில் நோக்க..

  இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
  பிரார்த்திப்போம்..

  எல்லாருக்கும் இறைவனை
  நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாக்க தாக்க தடையறத் தாக்க
   பார்க்க பார்க்க பாவம் பொடிபட

   நீக்கு
 3. சிறப்பான பதிவு..

  கஜ கேசரி மேளா பார்த்தது போல் இருக்கின்றது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னும் அந்தப் பகுதி வரவில்லை துரை செல்வராஜு சார்.

   நீக்கு
  2. அதுவும் வரும் இந்தப் பகுதியில்

   நீக்கு
 4. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். ஹரிஹரன் என்ற பெயரைப் படிக்கும்போது, பாலக்காட்டில் இந்தப் பெயருள்ள ஹோட்டலுக்கு நாங்கள் நடந்து சென்றதும், அமர்ந்து என்ன என்ன இருக்கிறது எனக் கவனிப்பதற்குள் எனக்குப் பிடித்த சேவை அப்போதுதான் தீர்ந்தது என்று சர்வர்்சொன்னதும் நினைவுக்கு வரும்.

   நீக்கு
  2. இன்று நெல்லையில் பதில்கள் ஒரே யாதோங்கி பாராத்தாக இருக்கின்றன!

   நீக்கு
 5. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 6. யானைத்தாவளம் போய் யானைகளை பார்த்து அருமையான விவரங்கள் மற்றும் அருமையான படங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.

  விழுதுகள் தாங்கும் ஆலமரம் படம் அழகு.

  யானையை பார்த்து கொண்டே இருக்கலாம்.ஓட்டப்பந்தயத்திற்காக யானைகள் தயாராக நிற்கும் படம் அழகு. அனைத்து யானை படங்களும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யானைகளை எவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டிருந்தாலும் நேரம் போவது தெரியாது. அவ்வளவு பெரிய யானைகள் அடங்கிக் கிடப்பதும் ஆச்சர்யம்தான்.

   நீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  இன்றைய நீயூஸ் ரூம் பகுதி நன்றாக உள்ளது. கோவிட் குறைந்து வருகிறது என்பது நல்ல செய்தி. நல்ல செய்தியினை தந்தமைக்கு நன்றி.

  யானை கொட்டரத்திலுள்ள அனைத்து யானைகளின் படங்களும் அழகாக இருக்கிறது. அதைப்பற்றிய விபரங்களும் அருமை. யானைகள் பெரும்பாலும் ஒரே மாதிரியிருப்பதால் சட்டென நிறைய வித்தியாசங்கள் தெரியாது. பதிவு நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அங்கே கவனித்துக்கொண்டிருந்தபோது வித்தியாசங்கள் புலப்பட்டன.

   முதன்முறை பையனை எல்கேஜிக்குச் சேர்க்கக் கூட்டிச்செல்லும்போது, யூனிஃபார்மில் அனைத்துப் பசங்களும் ஒரே மாதிரி இருப்பதைப் போலத்தான் அது.

   நீக்கு
 8. /// எல்லா யானைகளும் கிட்த்தட்ட ஒன்று போலத் தானே இருக்கின்றன என்று எனக்குத் தோன்றும். (பிலிப்பினோஸ், ஜப்பானீஸ் பெண்கள் எல்லோரும் ஒரே மாதிரி இருப்பது போல).///

  இங்குதான் நெல்லை நிற்கின்றார்..

  அருமை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிலிப்பினோஸ், தாய்லாந்து, தாய்வான் போன்ற வார்த்தைகளைக் கேட்கும்போது அங்கு நடந்த நிகழ்வுகளும், பார்த்த இடங்களும், சந்தித்தவர்களும் நினைவுக்கு வந்துவிடும். இங்கு பகிராமலா இருக்கப் போகிறேன்.

   நீக்கு
  2. ஆனால் பெண்கள் படங்களைப் பகிர்ந்தால், கேஜிஜி அவர்கள் வெளியிடுவாரா?

   நீக்கு
  3. அனுப்புங்கள். பார்க்கிறேன். (atleast நான் மட்டுமாவது!!)

   நீக்கு
  4. ஹா ஹா.. வெறும் படங்கள் அல்ல. அதனுடன் கூடிய விளக்கமும், எங்க பார்த்தேன் என்று. பல சம்பவங்களை எழுதுவதும் கடினம்.

   நீக்கு
  5. ஹிஹிஹி... பிளாக் டிராஃப்ட்டில்தானே இருக்கும்?

   நீக்கு
  6. ஆசை தோசை அப்பளம் வடை! draft ல போடமாட்டேன் !! வேண்டுமானால் தனியாக அனுப்பி வைக்கிறேன்!

   நீக்கு
 9. /// எல்லா யானைகளும் கிட்த்தட்ட ஒன்று போலத் தானே இருக்கின்றன என்று எனக்குத் தோன்றும். (பிலிப்பினோஸ், ஜப்பானீஸ் பெண்கள் எல்லோரும் ஒரே மாதிரி இருப்பது போல).///

  இங்குதான் நெல்லை நிற்கின்றார்..//

  இல்லை, இல்லை அங்கே நிற்கவில்லை. அவர் நிற்பது இங்கேதான் :
  பாருங்க :
  // ஒவ்வொரு யானைக்கும் பெயர் உண்டு. படங்களைப் பார்க்கும்போது நமக்கு ஆண் யானை, பெண் யானை என்று மட்டுமே அடையாளப்படுத்தத் தெரியும். ஆனால் அங்கிருக்கும் பாகன்கள், பார்த்த மாத்திரத்திலேயே இது தேவசேனா….. என்றெல்லாம் பெயர்களை அடுக்குகிறார்கள்.//
  புரிந்ததா?
  'தேவசேனா' என்பது பாகுபலி படத்தில் அனுஷ்கா நடித்த பாத்திரத்தின் பெயர்.
  நைசாக அனுஷ்காவை 'யானை' என்று குறிப்பிட்டிருக்கிறார் !!
  ஸ்ரீராம் கவனிக்கவும்.
  நாராயண, நாராயண!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா. நாரதர் கலகம் நன்மையில்தான் முடியும். ஏற்கனவே அவர் தனக்கு வெள்ளைகாரங்களை அவ்வளவாக பிடிக்கவில்லை என்ற செய்தியை பரப்பிக் கொண்டேயிருக்கிறார். இனி. சகோதரர் ஸ்ரீராம் ரசனையோடு ஒத்துப் போகலாமில்லையா? :))))

   நீக்கு
  2. கோர்ட் டவாலி : " ஸ்ரீராம் .. .. ஸ்ரீராம் .. .. ஸ்ரீராம் .. .."

   நீக்கு
  3. தேவசேனா என்பது எனக்கு பிரியமான உயிரின் பெயர்தானே! போனால் போகட்டும்!

   நீக்கு
  4. கௌதமன் சார்... நானே நினைக்காத்தை எழுதி இப்படிக் கோர்த்துவிடுகிறீர்களே.

   அனுஷ்கா முகமும் உடல்வாகும் அழகு. எந்த பாழாய்ப்போனவனோ அவரை ஆர்யாவுடனான படத்தில் நடிக்கவைத்து கேரியரையும் வாழ்வையும் பாழாக்கிவிட்டான், பாவிப்பயல்.

   நீக்கு
  5. தேவசேனா என்ற பெயர் நான் கணிணி சம்பந்தமாக சென்னையில் படித்த காலத்தை நினைவுபடுத்தும்.

   ப்ராஜக்டுக்காக அவர் வீட்டிற்கு நாங்கள் குழுவாய் போனதும், மேசையில் இட்லியு அதற்குரிய கரண்டியிலிருந்து எடுக்கும்போது பாத்திரத்தின் வெளியா (மேசையில்) விழுந்துவிட்டது என்பதற்காக அதனைத் தூக்கிப்கொட்டதும் நினைவுக்கு வரும். எனக்கு டிரெயினியாக அங்கேயே வேலை கிடைத்தபோது, தான் பார்த்துக்கொண்டிருக்கும் வங்கி கிளார்க் வேலையைவிட இது பெரிது என்று சொன்னதும் நினைவுக்கு வரும்.

   நீக்கு
  6. ரசனையான, தேவசேனா, தந்தை சுக்ராச்சாரியாரின் கதையும் நினைவுக்கு வரும். மகாபாரத்த்தின் ஆரம்பப் படலமல்லவா

   நீக்கு
  7. ஆஹா! இனிய மலரும் நினைவுகள்!

   நீக்கு
  8. //ஏற்கனவே அவர் தனக்கு வெள்ளைகாரங்களை அவ்வளவாக பிடிக்கவில்லை என்ற செய்தியை பரப்பிக் கொண்டேயிருக்கிறார்// இது புரியவில்லையே

   நீக்கு
  9. ஹா ஹா ஹா. தமன்னா வைத்தான் சொன்னேன்.

   நீங்கள்தான் எபியில் அடிக்கடி குறிப்பிட்டிருப்பதை படித்து உணர்ந்திருக்கிறேன். ஆனால். ஏதோ எனக்கு புரியாத இந்தப்போட்டியில் அநாவசியமாக நான் உள்ளே நுழைந்து விட்டேன் என்றுதான் நினைக்கிறேன். மன்னிக்கவும்.

   அழகு என்று பார்க்கும் போது ஒவ்வொருவரும் ஒரு அழகு என்பதுதான் என் எண்ணம். . தவிரவும் முக அழகை விட ஒவ்வொருரின் அக அழகுதான் சிறந்தது. அதுவே சமயங்களில், சிலருக்கு சூழ்நிலைகளினால் மாறி வருவது இயல்பு. ஆனால் இந்த அக அழகை ஒருவருக்கு அவர்கள் மிகவும் நெருஙுகிவர்களாக இருப்பினும், அவர்களால் அறிய முடியாது. அப்படியிருக்கையில், அறிமுகமில்லாத சினிமா நட்சத்திரங்கள் ஆகட்டும், அறியாத பிறிதொருவராகவும் இருக்கட்டும் நம்மால் எப்படி கண்டு கொள்ள முடியும்? போட்டிக்காக இப்படி அவர்களை பெயரை பயன்படுத்தி சொல்லிக்கொண்டேயிருக்க வேண்டும். அவ்வளவுதான்.

   நீக்கு
  10. "அக அழகு" - இது மிக மிக முக்கியம் கமலா ஹரிஹரன் மேடம். நாம திரையில் பார்ப்பது உருவங்கள்தானே. அவர்களுக்கும் நமக்கும் ஒருகாலும் சம்பந்தம் ஏற்படப்போவதில்லை. அதனால் அழகை மாத்திரம் ரசிக்கமுடியுது.

   'புற அழகு' இல்லாத சிலரைப் பற்றி பெரிய அபிப்ராயம் கொள்ளாமல், பிறகு அவர்களிடம் பேசி அவர்களது அக அழகு புரிந்து வியந்திருக்கிறேன். Personality நன்றாக இருப்பவர்கள், முதலில் அழகு இல்லாமல் இருந்தாலும், அவர்களுடன் பேசிப் பேசி, அவர்களது புற அழகின்மை நம் கண்களில் இருந்து மறைந்துவிடுவதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.

   நீக்கு
 10. நிறைய தகவல்கள் சொன்னீர்கள்.

  எவ்வளவுதான் சுகபோகமாக யானைகளை வைத்து இருந்தாலும்...

  அவைகளை கட்டி வைத்து இருப்பது சுதந்திரம் இல்லாத வாழ்வுதான்.

  இதனைக் குறித்து ஆராய்ந்தால் நாம் தெய்வத்தையே குறை சொல்வது போலாகும்.

  என்ன செய்வது அவைகளின் விதி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கில்லர்ஜி. நான் நினைப்பதை இன்று எழுதுகிறேன்.

   நீக்கு
  2. வளர்ப்புப் பிராணிகள், யானைகள், வளர்ப்புப் பறவைகள் - இவை எதிலுமே எனக்கு ஆர்வமோ விருப்பமோ இருந்தது கிடையாது. கோயிலுக்காக நேர்ந்துவிடப்பட்ட யானைகளையும் பார்த்துக்கொள்வது என்பது சுலபமானதல்ல. நம்மில் யாரையேனும் கயிறால் கட்டிப்போட்டுவிட்டு, மூன்று வேளையும் மூக்குப்பிடிக்க சாப்பாடு போட்டு, கடன்களைக் கழிக்க மாத்திரம் அழைத்துக்கொண்டு போனால், அந்த வாழ்க்கை எவ்வளவு துன்பம் தரும்?

   கோவிலுக்காக இருக்கும் ஓரிரண்டு யானைகளையும் நன்கு பராமரிக்கவேண்டும். அவைகள் கோவிலுக்கான பணிகளை மாத்திரம் செய்யவேண்டும். வீதி வீதியாக கூட்டிக்கொண்டு போய், பத்து ரூபாய் வாங்கி பாகனுக்குக் கொடுத்து தும்பிக்கையைத் தலையில் வைப்பது போன்ற வேலைகளைக் கண்டால் எனக்கு வேதனைதான். யானையைப் பராமரிக்கும் பாகனுக்கும் நல்ல சம்பளமோ மரியாதையோ இருப்பதில்லை.

   நீக்கு
  3. வளாகத்தில் நாய் வளர்ப்பவர்களைப் பற்றியும் வளர்க்கும் நாயைப் பற்றியும் இதே எண்ணம்தான் எனக்கு எழும். சொன்னால் ஹார்ஷாக இருக்கும். சொந்தப் பெற்றோர் உறவினர்களைப் பராமரிக்காமல், நாயைப் பிள்ளைபோல் வளர்க்கிறேன் என்பவர்களை என்னவென்று சொல்வது? உயிர்களிடத்தில் அன்பு வேண்டும், ஆனால் அதற்கு ஒரு எல்லை உண்டு. (என்பது என் எண்ணம்)

   நீக்கு
  4. // வளாகத்தில் நாய் வளர்ப்பவர்களைப் பற்றியும் வளர்க்கும் நாயைப் பற்றியும் இதே எண்ணம்தான் எனக்கு எழும். சொன்னால் ஹார்ஷாக இருக்கும். சொந்தப் பெற்றோர் உறவினர்களைப் பராமரிக்காமல், நாயைப் பிள்ளைபோல் வளர்க்கிறேன் என்பவர்களை என்னவென்று சொல்வது? உயிர்களிடத்தில் அன்பு வேண்டும், ஆனால் அதற்கு ஒரு எல்லை உண்டு. (என்பது என் எண்ணம்)//
   அதே, அதே, எனக்கும் அதே சிந்தனைதான் !! 100% right

   நீக்கு
  5. இங்க காலையில் வாக்கிங்குக்கு அப்போ அப்போ நாய்களை வாக்கிங் கூட்டிக்கொண்டு செல்வார்கள் (வளாகத்தில் நாய் காலைக்கடனுக்கு ஒரு பெரிய இடம் உண்டு. ஆனால் அந்த இடத்துக்குக் கூட்டிச் செல்வதற்குள் ஆங்காங்கு 1 போவதையும் பார்க்கிறேன்). இன்னொரு நாயைப் பார்த்தால் ஆர்வமாக பாய முயற்சிப்பதையும் நான் பல நேரங்களில் பார்க்கிறேன்.

   நாய் வளர்ப்பதற்கு மிகப் பெரும் காரணம், வீட்டில் உள்ளவர்களிடம் அன்பு கிடைக்காததுதானோ? தனக்கென்று ஒரு உயிர் என்று நாயிடம் அதனைக் காண்கிறார்களோ?

   வளாகத்தில் 20 நாய்களுக்கு மேல் உண்டு. அதில் ஒன்று இரண்டு தவிர மற்றவையெல்லாம் கண்டால் எனக்குப் பிடிப்பதில்லை. கயிறை அவர்கள் விட்டுவிட்டால் பாயும் டைப். பேசாமல் நாமும் ராஜ நாகம் அல்லது கரடி வளர்த்து வாக்கிங் கூட்டிக்கொண்டு செல்லலாமா என்று தோன்றும் ஹா ஹா ஹா

   நீக்கு
  6. ஹா ஹா ! அதே, அதே! same pinch.

   நீக்கு
  7. மதுரையில் ரேஸ்கோர்ஸ் காலனியில் நாய் வளர்ந்தபோது (மோதி) ரொம்பக் கஷ்டப்பட்டதில்லை.  என்னிடம் அனுமதி வாங்கி கொண்டு அதுவே வெளியில் சென்று ஓரமாக ஒன்று, இரண்டு போய்விட்டு சமர்த்தாக உள்ளே வந்து விடும்.  யாரிடமும் வம்புக்கு போகாது.  அப்படியே யாராவது பக்கத்து வீடு சிறுவர், அலலது வேறு நாய் வம்புக்கிழுத்து இதுவும் கீச் மூச்சென்று இயலாமையுடன் பதில் கொடுக்கலாமா என்று எண்ணெய் பார்க்கும். 'ப்ச' என்று உதட்டுச் சத்தத்தில் ஆட்சேபம் சொன்னாலே போதும் உள்ளே வந்து விடும்.

   நீக்கு
  8. இங்க ஓரிரண்டு நாய்கள் அப்படி இருக்கு. ஒன்று துறுதுறுன்னு. இன்னொன்று, நாயே கிடையாதுன்னு மகள் சொல்வாள் (எனக்கு அது என்ன ஜாதின்னு தெரியாது. அது முகத்தில் வாய் எங்க இருக்கு கண் எங்க இருக்குன்னே கண்டுபிடிக்க முடியாது).

   நீங்க வளர்த்தது பூனை போலத் தெரியுதே...ஹாஹாஹா

   நீக்கு
  9. பூனையா?  அதன் கோபம் காலனிப் பிரசித்தம்.  இரண்டு பேர் மீது பல் பதித்து விட்டது.  என்னையும் சேர்த்து நான்கு!

   நீக்கு
 11. @ கௌதம் (!)..


  /// இல்லை, இல்லை அங்கே நிற்கவில்லை. அவர் நிற்பது இங்கே தான்..///

  ஒருவர் இரண்டு இடங்களில் நிறபதற்கு இது என்ன அரசியலா?..

  அவர் எங்கெங்கு நின்றாரோ அவரே அறிவார்..

  எங்கே நின்றாலும் நெல்லை - நெல்லை தான்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கு எழுதமுடியாது. சில யானைகளின் நிலைகளைப் பார்க்கும்போது, அவைகளுக்கும் உணர்ச்சி உண்டே, அதற்கு வடிகால் என்ன? எப்போதும் கம்பத்தில் கட்டிப்போட்டு, தண்ணீர்த்தொட்டி, உணவு எல்லாம் அருகிலேயே இருந்தாலும், யானைகளின் இயல்பு, சாப்பிட்டுக்கொண்டிருப்பதில்லை, நடந்து நடந்து அவ்வப்போது கிடைக்கும் இலை/பழங்களைச் சாப்பிடுவதும், நீர் நிலையை நோக்கிச் சென்று நீர் அருந்துவதும்தான். நீர் நிலையை அடைந்தாலும் பத்து பதினைந்து நிமிடங்களுக்கு மேல் அங்கு தங்குவதில்லை. ஒரு நாளுக்கு குறைந்தது 50 மைல்கள் (80 கிமீ) நடக்கும் ஆப்பிரிக்க பாலைவன யானைகள். காட்டு யானைகள் 20-30 மைல்கள் நடக்கலாம்.

   யானைகள் ஒரு நாளைக்கு 2-3 மணி நேரமே நின்றுகொண்டு தூங்கும். காட்டு அல்லது பாலைவன யானைகள் தொடர்ந்து நடக்கும் இயல்புள்ளவை....எவ்வளவோ விஷயம் உள்ளது யானை பற்றிச் சொல்ல

   நீக்கு
  2. // அவைகளுக்கும் உணர்ச்சி உண்டே, அதற்கு வடிகால் என்ன? எப்போதும் கம்பத்தில் கட்டிப்போட்டு, //

   இது வீட்டில் வளர்க்கும் எல்லா உயிர்களுக்கும் பொருந்தும்.

   யானைகள் பற்றிய விவரங்கள் படிக்கப் படிக்க சுவாரஸ்யம்தான்.

   நீக்கு
 12. லக்ஷ்மணர், அதைவிட சத்ருக்னருக்கு கோவில் இருக்கிறது என்பது ஆச்சர்யம்.  வேறெங்கு இருக்கிறது?  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குருவாயூர் அருகில்தான் நான்கு சகோதரர்களுக்கும் தனித் தனிக் கோவில் உண்டு. ஒரே நாளில் தரிசனம் செய்வார்களாம் (ஓடிக்கொண்டே). வருடத்தில் திருவிழாவின்போது கூட்டம் சொல்லிமாளாதாம், அன்னதானம் விமர்சனையாக நடைபெறுமாம்.

   நீக்கு
  2. நின்று கன்னத்தில் போட்டுக் கொள்ளக்கூடாதா?

   நீக்கு
 13. நாம் யானைக் கொட்டாரம் என்றாலும் அவர்கள் அதை ஆனெ கொட்டாரம் என்பார்களோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "ஆனெ கொட்டாரம்" என்றால் "யானை அரண்மனை" என்று அர்த்தம் ஜி

   நெ.த.அவர்கள் தமிழையும், மலையாளத்தையும் குழைத்து நமக்கு நாமம் சாத்தி இருக்கிறார்.

   நீக்கு
  2. கொட்டாரம் என்பதற்கு அர்த்தம் அரண்மனைதான். திருநெல்வேலியில் கொட்டாரம் என்றொரு ஊர் இருக்கிறது (முற்காலத்தில் அங்கு அரண்மனை இருந்திருக்கலாம்). பத்மநாபபுரம் கொட்டாரம் என்றும் சொல்வது வழக்கம். இருந்தாலும் அது யானைகளின் கொட்டடிதான், என்ன..ஏக்கர் கணக்கில் விரிவடைந்திருக்கிறது.

   நீக்கு
 14. திகட்டும் அளவா? யானைகள் படம் எவ்வளவு பார்த்தாலும் அலுக்காது. நான் யு டியூபில் நிறைய பார்பபது யானைகள் விடீயோக்கள்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அலுக்காதுதான். அது நம்மைப் பார்க்கும்போது, நமக்கு அந்தப் பார்வையின் அர்த்தம் மாத்திரம் புரிந்தால்?

   நீக்கு
  2. National geography மற்றும் animal planet ல் நிறைய சீரியல்கள் இருக்கின்றன. எவ்வளவோ விவரங்கள்.

   டஸ்கர் எனப்படும், அளவுக்கு மீறிய தந்தங்கள் வளர்ந்த யானைகள் உலகிலேயே 20தான் உண்டாம். அதில் ஒன்றை நான் பார்த்திருக்கிறேன். OTTல் காண்பித்த டஸ்கரின் தந்தம், தரையைத் தாண்டி வளர்ந்திருப்பதால், யானை தலையைத் தூக்கியே நடக்கும் என்பதையும் காண்பித்தார்கள்.

   நீக்கு
  3. நாங்கள் அசோக் லேலண்டில் - Tusker பல்லாயிரக் கணக்கில் தயாரித்து விற்றிருக்கிறோம். ('Tusker' நாங்கள் உற்பத்தி செய்த டிரக் மாடல் ஒன்றின் பெயர்!)

   நீக்கு
 15. குருவாயூர் யாத்திரை கட்டுரையும் யானைப் படங்களும் சிறப்பாக உள்ளன. சார் தாம் யாத்திரை பற்றிய விவரங்களுக்கு காத்திருக்கிறேன். நான்கு கோயில்களில் ஒன்றுக்கு தமிழ் சம்பந்தம் உண்டு. நல்ல தமிழில் கூடல் மாணிக்கம் என்று கூறுவர். சாதாரணமாக கர்கிடக மாசம் எனப்படும் ஆடி மாதத்தில் இக்கோயில்களில் யாத்திரிகர் கூட்டம் அதிகம் இருக்கும்.


  கடைசியாக பாயம்மல் சத்ருக்கனன் கோயிலில் சுதர்சன சக்ரம் வாங்கினீர்களா?
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜெயக்குமார் சார்.. குருவாயூர் யாத்திரை பற்றி எழுதலாமா என்று யோசித்தேன். பிறகு எழுதிக்கொள்வோம், முதலில் யானைக் கொட்டாரத்தைப் பற்றி படங்களுடன் எழுதிவிடுவோம் என்று நினைத்தேன். யானையோட்டம் என்பது நான் முதன் முதலில் காண்பது.

   சார்தாம் எனக்குப் போகவேண்டும் என்ற ஆசை. மனைவிக்கு இந்த மாதிரி பயணங்களில் ஆர்வம் இல்லை (பத்ரிநாத் ஏற்கனவே சென்றுவந்துவிட்டதால்). அதனால் நான் மாத்திரம் போகணும். அடுத்த வருடம் சாளக்ராமம் திரும்பவும் செல்லலாம் என்று நினைத்திருக்கிறேன். பார்ப்போம்.

   பாயம்மல் சத்ருக்னன் கோவிலில் என்ன வாங்கலாம் என்ற விவரமெல்லாம் அப்போது தெரியாது.

   நீக்கு
  2. ஆனால் பிரசாதம் இருந்தால், உடனே வாங்கிவிடுவேன் ஹா ஹா

   நீக்கு
  3. நான் சார் தாம் என்று குறிப்பிட்டது கேரளத்து சார் தாம். திருப்பிரயார், கூடல் மாணிக்கம், மூழிக்குளம், பாயம்மல் ஆகிய ராமர், லக்ஷ்மணன், பரதன், சத்ருக்கனன் கோயில்கள்.

   Jayakumar

   நீக்கு
  4. ஓஹோ... அது எனக்கு சட்னு பிடிபடலை. அன்று நான்கு கோவில்களுக்கும் சென்றிருந்தோம். மிக அருமையான தரிசனம். மனைவியின் மாமாதான் இந்தப் பயணத்தை organize செய்திருந்தார். இல்லைனா, எனக்கு இந்த நான்கு கோவில்களும் (திருமூழிக்களத்தைத் தவிர) தெரியாது. ஒரு கோவிலில் அமர்ந்து (திருமூழிக்களம்) பிரபந்தம் சேவித்தோம். பிறிதொரு சந்தர்ப்பத்தில் படங்களைப் பகிர்கிறேன் (பயண விவரங்களுடன்). குருவாயூர் பயணத்தில் திருவித்துவக்கோடு (அஞ்சுமூர்த்தி கோவில்) மற்றும் திருநாவாய் கோவிலுக்கும் சென்றிருந்தோம். திருவித்துவக்கோடில் இவ்வளவு நிம்மதியாக தரிசனம் செய்ததில்லை. நிறைய படங்களும் எடுத்ததில்லை.

   நீக்கு
 16. இயற்கை காட்சிகள் அருமை... யானை குறித்த தகவல்கள் சிறப்பு...

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!