வெள்ளி, 19 மே, 2023

வெள்ளி வீடியோ : கருவில் இருந்தே கவிஞனின் பிறப்பு ..காலத்தின் பரிசே கவிதையில் சிறப்பு...

'கிருஷ்ணகானம்' பாடல்களிலிருந்து எல்லா பாடல்களையும் நாம் ரசிப்போம்.  அதில் இதுவரை பகிராத இன்னொரு பாடல் இன்று..

கண்ணதாசன் பாடல்.  எம் எஸ் விஸ்வநாதன் இசை.  எஸ். ஜானகி குரல் 

கோகுலத்து பசுக்கள் எல்லாம்​ கோபாலன் குழலைக் கேட்டு
நாலுபடி பால் கறக்குது இராமாரி 
கோகுலத்து பசுக்கள் எல்லாம்​ கோபாலன் குழலைக் கேட்டு
நாலுபடி பால் கறக்குது இராமாரி​ 
 அந்த மோகனனின் பேரைச் சொல்லி மூடி வைத்த பாத்திரத்தில்
மூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரி
அந்த மோகனனின் பேரைச் சொல்லி​ மூடி வைத்த பாத்திரத்தில்
மூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரி
இராமாரி அரே கிருஷ்ணாரி – அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி....

கண்ணன் அவன் நடனமிட்டு​ காளிந்தியில் வென்ற பின்னால்
தண்ணிப் பாம்பில் நஞ்சு இல்லை இராமாரி......
கண்ணன் அவன் நடனமிட்டு​ காளிந்தியில் வென்ற பின்னால்
தண்ணிப் பாம்பில் நஞ்சு இல்லை இராமாரி
அவன் கனிஇதழில் பால் குடித்து​ பூதகியைக் கொன்ற பின்தான்
அவன் கனிஇதழில் பால் குடித்து​ பூதகியைக் கொன்ற பின்தான்
கன்னியர் பால் வஞ்சமில்லை கிருஷ்ணாரி
இராமாரி அரே கிருஷ்ணாரி – அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி

குளத்தில் முங்கிக் குளிக்கையிலே​ கோவிந்தன் பெயரைச் சொன்னால்
கழுத்திலுள்ள தாலி மின்னுது இராமாரி.......
குளத்தில் முங்கிக் குளிக்கையிலே​ கோவிந்தன் பெயரைச் சொன்னால்
கழுத்திலுள்ள தாலி மின்னுது இராமாரி
சேலைதிருத்தும் போது அவன்பெயரை​ ஸ்ரீரங்கா என்று சொன்னால்
சேலை திருத்தும் போது அவன்பெயரை​ ஸ்ரீரங்கா என்று சொன்னால்
அழுத்தமான சுகம் இருக்குது கிருஷ்ணாரி!
இராமாரி அரே கிருஷ்ணாரி – அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி

படிப்படியாய் மலையில் ஏறி​ பக்திசெய்தால் துன்பம் எல்லாம்
பொடிப் பொடியாய் நொறுங்குதடி இராமாரி.......
படிப்படியாய் மலையில் ஏறி​ பக்திசெய்தால் துன்பம் எல்லாம்
பொடிப் பொடியாய் நொறுங்குதடி இராமாரி
அடி படிப்பில்லாத ஆட்கள் கூட​ பாதத்திலே போய் விழுந்தால்
அடி படிப்பில்லாத ஆட்கள் கூட​ பாதத்திலே போய் விழுந்தால்
வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி!
வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி!


=======================================================================================

1970 ல் வெளி வந்த திரைப்படம்  'ஏன்?'.  சிலர் வாழ்வில் மட்டும் விதி ஏன் இப்படி விளையாடுகிறது என்பது படத்தின் கருவாம்.  லட்சுமி, ஏ வி எம் ராஜன், ரவிச்சந்திரன் நடித்துள்ள இந்தப் படத்தில் இருந்து இப்போது முதல் பாடல்...​

கண்ணதாசன் பாடலுக்கு டி ஆர் பாப்பா இசை.   S P பாலசுப்ரமணியம் குரலில் அற்புதமான பாடல்.  இலங்கை வானொலி அறிவிப்பாளர் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் கேட்டு மகிழுங்கள்.  எனது ஒரு கேசெட்டில் சென்ற வார பாடல், இந்த வார பாடல், அடுத்த வார பாடல் (!) இன்னும் சில பாடல்கள் எல்லாம் வரிசையாக இடம்பெற்றிருக்கும்.  போட்டுப் போட்டுத் தேய்ந்து கேசெட்.

இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்

இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்
அதில் அறிஞனும் மூடனும் உண்டு
ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று

இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்

கடவுளின் படைப்பிலே கவிதையும் உண்டு
காந்தியை போலவே காவியம் உண்டு
முடிவு விளங்காத தொடர்கதை உண்டு
முடிக்க வேண்டுமென்று முடிப்பதும் உண்டு

இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்

கண்களில் தொடங்கி கண்களில் முடித்தான்
பெண்ணிடம் பிறந்ததை பெண்ணிடம் கொடுத்தான்
கண்களில் தொடங்கி கண்களில் முடித்தான்
பெண்ணிடம் பிறந்ததை பெண்ணிடம் கொடுத்தான்
மண்ணிலே நடந்ததை மண்ணுக்கே அளித்தான்
மண்ணிலே நடந்ததை மண்ணுக்கே அளித்தான்
வானத்தில் இருந்தே கவிதை முடித்தான்

இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்

​​கருவில் இருந்தே கவிஞனின் பிறப்பு
காலத்தின் பரிசே கவிதையில் சிறப்பு
கற்பனை என்பது கடவுளின் படைப்பு
கடவுளை வென்றது கவிஞனின் நினைப்பு

இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்
அதில் அறிஞனும் மூடனும் உண்டு
ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று

இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்

39 கருத்துகள்:

  1. இரண்டு பாடல்களும் அருமையான தேர்வு. முதல் பாடலை எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  3. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    நோக்க நோக்க
    நொடியில் நோக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க.. வாங்க துரை அண்ணா... வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  4. அடி படிப்பில்லாத ஆட்கள் கூட​ பாதத்திலே போய் விழுந்தால்
    வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி!..

    இதற்கு மேல் என்ன சொல்வது?..

    பதிலளிநீக்கு
  5. கவியரசரின் முத்திரைப் பாடல்களில் இன்றைய இரண்டு பாடல்களும் சிறப்பு..

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாடல் பகிர்வில் முதல் பாடல் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். எஸ். ஜானகி அவர்களின் இனிமையான குரல் வளத்தில் அற்புதமான பாடல்.

    இரண்டாவது பாடலும் அடிக்கடி கேட்டுள்ளேன். இப்போது கேட்டதும் நினைவுக்கு வருகிறது. ஆனால், படம் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். ஏன் என்பது எல்லோரின் வாழ்விலும் தொக்கி நிற்கும் ஒரு கேள்வி.. ஏன் பாடலுடன் இதுவரை இந்தப் படத்தை கேள்விபட்டதில்லை என்பது எனக்கும் புரியவில்லை?:)

    இன்று இரண்டு பாடல்களும் நல்லதொரு தேர்வு. பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில சமயங்களில் பாடல் மட்டும் காதில் விழுந்து மனதில் பதிந்திருக்கும். மற்ற விவரங்கள் தெரியாமல் இருக்கும். அது போல..

      நீக்கு
  7. முதல் பாடல் மிகவும் பிடித்த பாடல்.

    இரண்டாவது பாடல் கேட்டு இருக்கிறேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இரண்டாவது பாடல் கேட்டு இருக்கிறேன் ஜி//

      ஆனால் கவரவில்லையோ?!  நன்றி ஜி.

      நீக்கு
  8. முதல் பாடலை நிறையக் கேட்டிருக்கேன். ராமா ஹரி, கிருஷ்ணா ஹரி என்பது கொச்சையாக ராமாரி, கிருஷ்ணாரி எனப் பேச்சு வழக்கில் வந்திருக்கு. அடுத்தது படமும் தெரியாது. பாடலும் கேட்டதில்லை. லக்ஷ்மி ரவிச்சந்திரனோடு நடிச்சிருப்பதே இன்னிக்குத் தான் தெரியும். அமாவாசை வேலைகள். வரேன் அப்புறமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராமா ஹரி கிருஷ்ணா ஹரி... நல்லது! இரண்டாவது பாடல் எப்படி இருந்தது?

      நீக்கு
  9. ..முடிவு விளங்காத தொடர்கதை உண்டு
    முடிக்க வேண்டுமென்று முடிப்பதும் உண்டு//

    பின்னே? பத்திரிக்கை ஆசிரியர் இப்படி விரட்டொ விரட்டுன்னு விரட்டினால், வேறென்ன செய்வது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா... இறைவனுக்கு யார் ஆசிரியர்? மேலதிகாரி?!!

      நீக்கு
  10. ..அவன் கனிஇதழில் பால் குடித்த​ பூதகியைக் கொன்ற பின்தான்
    //

    கனி இதழால் ... என்றிருக்கவேண்டும்தானே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கனி இதழில் பால் குடித்து என்றிருக்க வேண்டும்.  திருத்தி விட்டேன்.  காளிந்தியை என்று வருகிறது.  அது காளிங்கனை என்று வரவேண்டுமே என்று கேட்டால் அப்படி ஒலிக்கவில்லை!  அதே போல ஒரிஜினல் இசையோடு கூடிய பாடலாக இல்லாமல் ரீ மாஸ்டர்ட் ஆடியோவாக இருக்கிறது!  நல்லவேளை ஜானகி குரல் ஒரிஜினல்.  எனக்கு நான் கணினி ஸ்பீக்கர் இன்னும் வாங்காததால் வரும் வினை!

      நீக்கு
  11. பெண்ணிடம் பிறந்ததை பெண்ணிடம் கொடுத்தான்!..

    ஆக்குவதும் அழிப்பதும் உன் பொறுப்பு.. எனக்கொரு சம்பந்தமும் இல்லை.. - என்று கை கழுவி விட்டான்..

    கிருஷ்ண தத்துவமாகிய சாட்சி பூதம் இந்த இடத்தில் தான்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவியரசரின் வரிகளுக்கு சொல்லவும் வேண்டுமா?

      நீக்கு
  12. காளிந்தி தான்..

    இசையின் அளவுக்காக இப்படி அமைந்து விட்டது..

    உள்ளேபுகுந்து அலசினால் எங்காவது காளிந்திக்குத் தடயம் இருக்கும்!..

    டகர டப்பா பாடல்கள் இப்படி அமைவதில்லை..

    குறில் நெடில் குடிலடி நெறியடி (!) எல்லாம் குழப்பிக் கொண்டு வரும்..

    லயக் கோடுகளைத் தாண்டிக் குதிக்கும்..

    பதிலளிநீக்கு
  13. முதல் பாடல் நிறைய கேட்டதுண்டு. ஊர்க் கோயில் உபயம்! ரசித்த பாடல். இந்தப் பாடலுக்கு ஆடியதுண்டு கோலாட்டாமும் போட்டதுண்டு!! மீண்டும் இங்கு ரசித்தேன். காபி சுவை! (காபிதானே?!!)

    கீதா

    பதிலளிநீக்கு
  14. இரண்டாவது பாடல் வரிகள் பார்த்ததுமே மெட்டு நினைவுக்கு வந்துவிட்டது தொடக்க மெட்டு.....ரசித்த பாடல்

    அருமையான பாடல். இப்பவும் ரசித்தேன். எஸ்பி பி என்று தெரியும் ஆனால் இந்த காணொளியில் எஸ் பி பி என்பது டக்கென்று தெரியவே இல்லை...ஒரு வேளை பதிவு அப்படியோ? அதுவும் தொடங்கிய போது தெரியவே இல்லை. அதன் பின் இரண்டாவது சரணம் வந்த பின் தான் கொஞ்சம் தெரிந்தது...மேலே சென்று நீங்கள் சொல்லிருப்பதைப் பார்த்து உறுதி செய்து கொண்டேன்... ரொம்பவே அடக்கி பாடியிருக்கிறார். நோ கிமிக்ஸ். மிக இளம் வயது குரல்.... ஒரு வேளை இறைவன் என்று தொடங்கி வரிகள் அப்படியானதால் இறைவனிடம் ந்ம்ம கிமிக்ஸ் எல்லாம் காட்டக் கூடாதுன்னு மரியாதையான பிள்ளையாய் பாடியிருக்கார் போல!!! ஆனால் செம.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த பாணியில் தலைவர் சில பாடல்கள் பாடி இருக்கிறார்.  மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்...  புன்னகையின் நினைவாக போன்ற பாடல்கள்..

      நீக்கு
  15. இரண்டிலும் பாடல் வரிகள் சிறப்பு...

    பதிலளிநீக்கு
  16. இரண்டு பாடல்களுமே அழகான தேர்வு! இரண்டாவது பாடலில் எஸ்.பி.பி குரல் அத்தனை இனிமையாக, கம்பீரமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  17. இரண்டு பாடல்களும் பிடிக்கும் அடிக்கடி கேட்டு இருக்கிறேன்.
    இரண்டாவது பாடல் முன்பு பகிர்ந்து இருக்கிறீர்கள். நான் பாடல் கேட்டு விட்டு சினிமாவை தேடி பார்த்தேன்.

    முடிவு விளங்காத தொடர்கதை உண்டு//

    நமக்கு இறைவன் என்ன முடிவு வைத்து இருக்கிறான் என்று விளங்காது. முடிவு விளங்காத தொடர் கதைதான்.

    //ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
    இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி//

    கேள்வி மனதை குடைந்து கொண்டே தான் இருக்கிறது.


    ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
    இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை//
    எதும் நம் கையில் இல்லை என்பது உண்மைதான்.

    கண்ணதாசன் எழுதிய தத்துவ பாடல்கள் எல்லாம் அருமை.
    பகிர்ந்த பாடலும் இந்த பாடலும் கருத்து ஒன்றுதான் என்பதால் இந்த பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவியரசரின் தத்துவப் பாடல்கள் எல்லாமே சிறப்பாக இருக்கும்.  நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  18. ஏன் படத்தில் வருவாயா வேல்முருகா! என் மாளிகை வாசலிலே !
    என்ற பாடலும் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எனது ஒரு கேசெட்டில் சென்ற வார பாடல், இந்த வார பாடல், அடுத்த வார பாடல் (!) இன்னும் சில பாடல்கள் எல்லாம் வரிசையாக இடம்பெற்றிருக்கும். போட்டுப் போட்டுத் தேய்ந்து கேசெட்.//

      //ஏன் படத்தில் வருவாயா வேல்முருகா! என் மாளிகை வாசலிலே !
      என்ற பாடலும் நன்றாக இருக்கும்.//

      ஹிஹிஹி..  அடுத்த வாரம் அதுதான்!

      நீக்கு
  19. இரண்டு பாடல்களும் அருமை.

    முதலாவது நன்கு பிடிக்கும். கோவில்களில் அநேகமாக போடுவார்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!