வியாழன், 25 மே, 2023

மனமொத்த..

 சமீபத்தில் நண்பனின் அம்மா காலமாகி விட்டதாக தகவல் வந்தது.  அவன் அப்பா மூன்று வருடங்களுக்கு முன்னர்தான் மறைந்திருந்தார். நண்பனின் அப்பா அம்மா இருவரையும் சிறுவயது முதலே அறிவேன். மனமொத்த தம்பதிகள் - என் அப்பா அம்மா போல.

எல்லோருக்கும் சிறுவயதில் தங்கள் அப்பா அம்மா பற்றி அப்படிதானே தோன்றும்?  விளையாடக் கூப்பிட அழைக்கும் நேரங்களில் அல்லது அவர்கள் வீட்டிலேயே விளையாடும் நேரங்களில் அவர்கள் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன்.  என்னை 'சீராமா' என்று கூப்பிடுவார் நண்பனின் அம்மா.  சிறு வயதிலிருந்தே பழகியவர்கள்.

அப்பாவுக்கு டிரான்ஸ்பர் ஆகி வெவ்வேறு இடங்களில் இருந்து, கடைசியில் எனக்கும் வேலை கிடைத்து சென்னையில் செட்டிலாகி என்று காலங்கள் கடந்த பின் மறுபடி நண்பனை பார்த்தேன்.  அவ்வப்போது போனில் பேசிக் கொள்வோம்.  சமீபத்தில் அவன் மகன் திருமணம் நடந்ததற்கு சென்று வந்தேன்.  அப்போதே அவன் அப்பா மறைந்து விட்டிருந்தார்.  அவரும் என்னை நன்கு அறிந்தவர்தான்.  ராமப்பா என்று அழைப்பார் என்னை.

திருமணத்தில் நண்பனின் அம்மா என்னை அடையாளம் கண்டு கொள்ளவில்லை.  அதோடு கூட என்னை நீங்கள் வாங்க போங்க என்று பேசி எனக்கு ஒரு மாதிரியாகி விட்டது.  அவர்களுக்கு நான் பத்தோடு பதினொன்றுதானா என்கிற எண்ணம் மனதில் வந்தது. இது நடந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன.

அந்த அம்மா மறைந்து விட்டார் என்றதும் மனதுக்குள் ஒரு சொந்தத்தை இழந்த உணர்வு.  நண்பனை அழைத்துப் பேசிக்கொண்டிருந்தேன். 

"அப்பா மறைந்தது அவருக்கு பெரிய இழப்பாக தோன்றி இருக்குமோ..  அப்பா போன அப்புறம் அம்மா எப்படி Feel செய்தார்கள்?  கஷ்டப்பட்டார்களோ?" என்று கேட்டேன்.

வந்த பதில்தான் ஹைலைட்.  

"சேச்சே.  அப்படியெல்லாம் இல்லை.  ஒரு மாதிரி அம்மாவுக்கு அது விடுதலைதான்.  அப்பா ரொம்ப அம்மாவை படுத்திக் கொண்டிருந்தார்..."

மகனுக்குமே அந்த எண்ணம் இருந்திருக்கிறது என்று தெரிந்தது.  நானும் கூட அப்படி நினைத்ததுண்டு.  ஆனால் நாம் நினைப்பது வேறு, ஒரு கணவன் மனைவிக்குள் இருக்கும் பந்தம் வேறு என்றும் தோன்றும்.

ஆனால் ஏனோ எனக்கு இது பெரிய வியப்பாக இல்லை.  என் அப்பா போய் என் அம்மா இருந்திருந்தாலும் அம்மா இப்படிதான் நினைத்திருப்பாரோ என்று தோன்றும்.  வேறு சில உதாரணங்களும் உண்டு.  இதில் கோமதி அக்காவையோ, வல்லிம்மாவையோ நான் சேர்க்க மாட்டேன்.  அவர்களும், சரி, சிங்கம் மற்றும் சாரும் எக்ஸெப்ஷன்ஸ்.  அவர்கள் இன்றும் தங்கள் துணையின் நினைவில் படும் அவஸ்தையை நான் அறிவேன்.  இவர்கள் போல இன்னும் சிலரும் இருப்பார்கள் என்றும் அறிவேன்.

எந்த இடத்தில இந்த அபிப்ராயங்கள் மாறுகின்றன, ஏன், யாரால் மாறுகின்றன என்பது புதிர்.  என் நெருங்கிய வட்டத்தில் இருக்கும் ஒருவர் பற்றி அறிவேன்.  இப்போது அவர் மிகுந்த விடுதலை உணர்வுடன் இருக்கிறார்.  ஆரம்பத்திலிருந்தே அவர்கள் அப்படிதான் இருந்ததால், அவர் மறைந்தததும் இவரின் ரீயாக்ஷன் புதிய விஷயமாகத் தோன்றவில்லை!அதற்காக மறைந்த அவர் துணை எல்லோருக்கும் மோசமானவர் இல்லை.  சொல்லப்போனால் மற்றவர்களுக்கு அவர் மிகவும் ப்ரியமானவர்!  

கூடவே நான் போனால் என் துணை என்ன Feel செய்யும் என்கிற எண்ணம் வருவதையும் தவிர்க்க முடிவதில்லை.  மாற்றியும் யோசித்திருக்கிறேன்.  யார்தான் யோசித்திருக்க மாட்டார்கள்?  அவரவர் மனம் அவரவருக்குத் தெரியும்.  மேலே சொன்ன அந்த இன்னும் சிலரில் நாங்கள் இருக்க ஆசை.  அது நம் கையில்தான் இருக்கிறது, இல்லையா?  எங்கள் மகன்கள் எங்களை பற்றி என்ன எண்ணம் வைத்திருக்கிறார்களோ...  வைத்திருப்பார்களோ..  

சில நேரங்களில் பணிவிடை செய்து கொண்டே இருப்பவர்களுக்கு அலுத்து விடும் என்பதும் புரிகிறது.  சில வார்த்தைகளின் காயம் உள்ளே பச்சையாய் ஆறாமல் இருக்கும் என்பதும் புரிகிறது.  என்ன செய்ய முடியும் என்கிறீர்கள்?  இயல்பு குணம் மாறுமா என்ன!

========================================================================================================

தாலாட்டால், குழந்தைகளுக்கு கிடைக்கும் நன்மை குறித்து கூறும், குழந்தைகள் மனநல மருத்துவர் ஜெயந்தினி:
"அம்மாவின் தாலாட்டை கேட்ட படியே துாங்கும் குழந்தைக்கு கிடைக்கும் முதல் நன்மை, 'நான் தனியாக இல்லை' என்ற பாதுகாப்பு உணர்வு.
குழந்தைகளுக்கு பேச்சை விட, பாட்டு ரொம்ப பிடிக்கும். அதுவும், அதிக சத்தமில்லாமல், அம்மாவின் மென்மையான குரலில் பாடப்படும் தாலாட்டை, குழந்தைகள் ரசிப்பர்.அதனால் தான், அழுகிற குழந்தைகளை, தாலாட்டு சமாதானப்படுத்துகிறது; அவர்களின் பிடிவாதத்தை குறைக்கிறது; சந்தோஷப்படுத்துகிறது; துாங்கவும் வைக்கிறது.
இன்று, 50- குழந்தைகளில், ஒரு குழந்தை, தாமதமாக பேசுகிறது. அந்தக் காலத்தில், தாமதமாக பேசும் குழந்தைகளின் எண்ணிக்கை, மிக மிகக் குறைவு. அதற்கு காரணம், பிறந்தது முதல், அம்மா, பாட்டி, அத்தை, சித்தி என்று, பலரின் தாலாட்டையும் கேட்டு வளர்ந்தது தான்.
தாலாட்டு தான், குழந்தைகள் கேட்கும் முதல் மொழி. அந்த மொழியை கேட்டு வளரும் குழந்தைகள், சரியான வயதில் பேச ஆரம்பித்து விடுவர். தாய்மொழியை குழந்தைகளிடம் சேர்க்கும் முதல் கருவி, தாலாட்டு தான்.
இன்றைய அம்மாக்கள், ஆங்கில பாடல்களை போட்டு, குழந்தைகளை துாங்க விடுகின்றனர். அதில் ஒலிப்பது, அம்மாக்களின் குரல் கிடையாது என்பதால், குழந்தைகளுக்கு பாதுகாப்பு உணர்வு கிடைக்காது.அடுத்து, அம்மா பேசுவது தாய் மொழி; ஆங்கில பாடலில் ஒலிப்பது, வேறு மொழியாக இருக்கும்.
குழந்தை, தாய்மொழியை சரளமாக பேச வேண்டுமென்றால், அம்மாக்கள், தாலாட்டு பாட வேண்டும்.
சில தாலாட்டு பாடல்கள், குழந்தைக்கும், உறவினர்களுக்கும் இடையே ஒட்டுதலை, பாசத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும்.
உதாரணத்துக்கு, 'யாரடிச்சு நீ அழுதே...' என்ற தாலாட்டில், ஒவ்வோர் உறவின் பெயரையும் குறிப்பிட்டு, 'மாமன் அடிச்சாரோ மல்லிகைப்பூ செண்டாலே, தாத்தா அடிச்சாரோ தாமரைப்பூ தண்டாலே, பாட்டி அடிச்சாரோ பாலுாட்டும் கையாலே' என்ற வரிகள், குழந்தைகளின் பிஞ்சு மனதில் விதைக்கப்படுகிறது.
அதாவது, உறவினர்கள் கோபத்தை கூட, தன்னிடம் வலிக்காமல் தான் காட்டுவர் என்ற நம்பிக்கையை, குழந்தைகளிடம் ஏற்படுத்துகிறது.'குழந்தைகளின் மனதுக்குள் மட்டுமல்ல, மூளைக்குள்ளும் இதமான சூழ்நிலையை, தாலாட்டு ஏற்படுத்தும்' என்கின்றன, ஆய்வுகள்.
மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, தாலாட்டு கேட்டு வளரும் குழந்தைகளின் மனதில், வன்முறை எண்ணம் குறைவாக இருக்கும்.
2019 தினமலரிலிருந்து...
======================================================================================

லா.ச.ரா.வின் சிந்தாநதியிலிருந்து:
ந. பிச்சமூர்த்தியின் அழகுடன் சேர்ந்த அவருடைய தனித்த அம்சம் அவருடைய விழிகள். ஊடுருவிய தீக்ஷண்யமான பார்வை. அதன் அற்புதக்ரணத் தன்மை அவருக்குக் கடைசிவரை இருந்தது. உயரத்தில் சேர்த்தி அல்ல. அவரிடம் மற்றவர்கள் காட்டின மரியாதையும், அவர் பேச்சுக்குச் செவி சாய்த்த தனிக் கவனமும், என்றும் சபாநாயகர் அவர்தான் என்பதை நிதர்சனமாக்கியது.
எத்தனைக்கெத்தனை பிச்சமூர்த்தி ஒரு பர்ஸனாலிட்டியாகப் பிதுங்கினாரோ அத்தனைக்கத்தனை அவர் எதிரே உட்கார்ந்திருந்த கு.ப.ரா. தான் இருக்குமிடம் தெரியாமலிருப்பதே கவனமாயிருந்தார் எனத் தோன்றிற்று. பிச்சமூர்த்தியைக் காட்டிலும் குட்டை. அவருடைய கனத்த மூக்குக் கண்ணாடி இல்லாவிட்டால் அவர் பாடு திண்டாட்டம்தான். பேசும்போது அவர் குரல் அவருக்குக் கேட்டதா என்பது என் சந்தேகம்.
பிச்சமூர்த்தியும், கு.ப.ரா.வும் எழுத்தில் கையாள எடுத்துக்கொண்ட விஷயம், பாணி தனித்தனி, ஆனால் ஏன் இவர்களைச் சிறுகதை இரட்டையர்கள் என்று குறிப்பிட்டார்கள்? எனக்குப் புரியவில்லை.
புதுமைப்பித்தனை மனதில் கூட்டுகையில், பளிச்சென்று நினைவில் படுவது அவருடைய உயர்ந்த dome like நெற்றியும் வெடிப்பான உரத்த சிரிப்பும்தான். அடிக்கடி சிரிப்பார்.
எனக்கு நினைவு தெரிந்தவரை, பி.எஸ். ராமையா எப்பவுமே உற்சாகமான பேர்வழி, நிமிர்ந்த முதுகும் வரித்த கழி போன்ற உடலுக்கு உறையிட்டாற் போல், ஜிப்பாவும், தரையில் புரளும் வேட்டியும் அவரை உயரமாகக் காட்டின. கைகளை உற்சாகமாக ஆட்டி உரக்கப் பேசுவார்.
இந்தக் கூட்டத்தை நான் உங்களுக்குப் பரிச்சயம் பண்ணும் சமயத்தில் கலைமகளில் சக்ரவாகம் என்கிற அவர் கதை வெளியாகி அதன் வெற்றிப்ரபை சிதம்பர சுப்ரமணியனைச் சூழ்ந்து ஒளி வீசிக்கொண்டிருந்தது. அவரிடம் விஷயம் நிறைய இருந்தது. ஆனால் சங்கோஜி. அப்படியே அபிப்ராயமாக ஏதேனும் அவர் சொல்ல ஆரம்பித்தாலும் சரியாக முடிக்காமல், சிரிப்பில், பலமான தலையாட்டலில் மழுப்பிவிடுவார். நுண்ணிய முக அங்கங்கள். அலைபாயும் க்ராப்.
தி.ஜ.ர. முழங்கால்களைக் கட்டியபடி குந்திட்டபடி உட்கார்ந்திருக்கிறார். அவருக்கு செளகர்யமான போஸ்ட்சர். தலையை அழுத்த வாரி, உடனேயே மெனக்கெட்டுத் தானே கையை உள்ளே விட்டுக் கலைத்துக் கொண்டாற்போல் குட்டையாக வெட்டிய க்ராப் விரைத்துக் கொண்டிருக்கும். அவர் தோற்றத்தில் கவனம் இன்னும் கொஞ்சம் செலுத்தியிருந்தால் அழகான மனிதனாகவே வெளிப்படுவார் என்பது என் கருத்து. செதுக்கினாற் போன்ற மூக்கு, வாய், வரிசையான முத்துப் பற்கள். சிரிக்கும்போது அவர் முகத்தில் ஐந்தாறு வயதுகள் உதிரும்.
சிட்டி, சி.சு. செல்லப்பா, க.நா.சு. இவர்களின் படங்களைச் சமீபமாகப் பத்திரிகைகளில் பார்க்கிறீர்கள். அன்றைக்கு இன்று வருடங்கள் இவர் தோற்றங்களை அதிகம் பாதித்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
ஒருவர், இருவர் அல்லது இருவர் மூவர். கூட்டத்தில் சேரலாம். குறையலாம். ஆனால் மாலை, இந்த வேளைக்கு மெரீனாவில் இந்த ஏழு பேர் நிச்சயம்.
அத்தனை பேரும் கதராடை.
இவர்களை விழுங்கும் விழிகளால் பார்த்துக்கொண்டு இவர்கள் பேச்சைச் செவியால் உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருப்பதில் எனக்கு அலுப்பே இல்லை.
இலக்கிய ஆர்வம் மிக்க என் நண்பன் குஞ்சப்பாவும் நானும், எங்கள் மரியாதையில், இயற்கையான வயதின் அச்சத்தில் இவர்களுக்கு நாலு அடி எட்ட உட்கார்ந்திருப்போம்.
நான் அப்போத்தான் மொக்கு கட்டியிருந்த எழுத்தாளன். எஸ்.எஸ்.எல்.சி. குட்டெழுத்து தட்டெழுத்துப் பரீட்சைகள் தேறிவிட்டு வேலைக்கு அலைந்து கொண்டிருந்தேன். தேடினால் கிடைத்துவிடுகிறதா? பறித்து எடுத்துக்கொள் என்கிற மாதிரி அப்பவே, வேலை ஒண்ணும் காய்த்துத் தொங்கவில்லை. அந்த ரோசம், அதனால் படும் கவலை சமயங்களில் தவிர, சிந்தனைக்கும் இலக்கியச் சிந்தனைக்கும் வயது காரணமாகப் பற்றிக் கொண்டிருக்கும் ஆக்கக் கனல் வெளிப்பட வழி காணாது, உள் புழுங்கவும் வேண்டிய நேரம் இருந்த அந்தப் பருவத்தில் என்னை என்னிலிருந்து மீட்டு எனக்குத் தருவதற்கு இந்தக் கடற்கரைக் குழுவின் பாதிப்பு தன் பங்கைச் செய்தது என்றால் மிகையில்லை.
நன்றி: சிலிகான் ஷெல்ப்
===========================================================================================================================


கீழே வெவ்வேறு காலகட்டத்தில் தமிழ் எழுத்துகள் உள்ளன. 1889 முதல் 1900, 1930 என்று... படிக்க முடிகிறதா?












=======================================================================================

வியட்நாம் போரின்போது இருந்த நிலைமை பற்றி அவ்வப்போது இணையத்திலிருந்து பகிர்ந்து கொண்டிருந்தேன்... போர்க்களத்தில் மருத்துவ நிலை எப்படி இருந்தது பாருங்கள்...


முன்பு எஸ் எம் எஸ் காலத்தில் வந்த ஒரு சின்னஞ்சிறு கதை பற்றி பகிர்ந்து கொண்டிருக்கிறேன். போர்க்களத்தில் காயம்பட்டு உயிருக்குப் போராடும் நண்பனைப் பார்க்க நண்பன் புறப்படுகிறான். மேஜர், "இனி நீ சென்று பயனில்லை. அவன் உயிர் பிரிந்திருக்கும்" என்கிறான். நீண்ட நேரம் கழித்து நண்பனின் உயிரற்ற உடலைச் சுமந்து கொண்டு கீழே வந்த இவனிடம் மேஜர் சொன்னனான் "நான்தான் சொன்னேன் இல்லை?"

இவன் சொன்னானாம். நான் போனபோது என் நண்பன் உயிரோடு இருந்தான். என் கைகளில்தான் உயிரை விட்டான். அவன் கடைசியாகச் சொன்னது "நீ வருவாய் என்று எனக்குத் தெரியும்...."

அது நினைவுக்கு வந்ததது இந்த வியட்நாம் போர்க்காட்சியைப் பார்க்கும்போது...


இதெல்லாம் பார்க்கும்போது இவர் தொப்பியில் எழுதி இருப்பது மிகச்சரி. ஆட்சியாளர்களின் பேராசைக்கு அப்பாவி மக்கள் பலி.

==============================================================================

விண்ணோடும் முகிலொடும் என்று பாடவேண்டாம்...! புதையல் பற்றிய சில விவரங்கள்..



================================================================================

பொக்கிஷம் :- 


============================================================================

124 கருத்துகள்:

  1. கடைசி மூன்று படங்களைப் பார்த்தால், அவரவர் வாழ்க்கைப் பயணங்கள் மனதில் வந்துபோகிறது.

    பதிலளிநீக்கு
  2. புதையலைப் பற்றிய பகுதி ஏற்கனவே இங்கேயே வெளியாகியிருக்கிறதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் சந்தேகம் வந்ததது.  ஆனால் அது வேறு செய்தி என்று நினைத்தேன்.  எடுத்து விடவா?

      நீக்கு
  3. மூன்றாவதில் புள்ளியே வைக்கவில்லை. ஓலைச் சுவடிகளிலும் ஆரம்பத்தில் அப்படித்தான். இரண்டாவது, 50களுக்கு முன்னால் இருந்த தமிழ்நடை. முதல் பகுதி, பிரதிவாதி பயங்கரம் வெளியிட்ட திவ்யார்த்த தீபிகையின் பகுதி. அவர், தெலுங்கு எழுத்துகளையும் கிரந்த எழுத்துகளையும் பல வடமொழிச்்சொற்களுக்கு புத்தகத்தில் எழுதுவார். அது தவிரவும் வடமொழிச் சொற்கள் கடந்த மணிப்பிரவாள நடை அவருடையது. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வைணவ காலக்‌ஷேபம் நிறைய வடமொழிச் சொற்களுடன் கூடியது. ஏடுபடுத்தியவற்றை நம்மால் உடனே அர்த்தம் புரிந்துகொள்ள முடியாது. கிரந்த காலக்‌ஷேபம் (உபந்நியாசம்) நடக்கும்போது ஒவ்வொரு வரியாகப் படித்து, ஒவ்வொன்றுக்கும் 5-50 நிமிடங்கள் வரையிலும் விளக்கிச் சொல்லுவார்கள். சில வருடங்களாக இதனை அவ்வப்போது கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனந்தரங்கம் பிள்ளை டைரியையே சற்று நேரம் கழித்துதான் புரிந்து கொள்ள முடியும்.  அதே போலதான் ஆரம்ப கால புகழ்பெற்ற தமிழ்க கதைகளையும்...

      நீக்கு
  4. நண்பர்களின் பெற்றோர்களுக்கு அவர்கள் பசங்கதான் முக்கியம் அவங்களுன் நண்பர்கள் என்பதால்தான் நண்பர்கள் மீதான அன்பு. காலமாற்றம் அனைத்தையும் மாற்றக்கூடியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் நண்பர்களுக்கிடையேயான உணர்வு, மறைந்தாலும் மாறாதது

      நீக்கு
    2. மறந்து விடும் என்பது உன்மடிஹான்.  என் மகன்களின் நண்பர்களை என் மனைவி நன்றாய் நினைவு வைத்துள்ளார்.  எல் கே ஜி யில் படித்த நண்பர்கள் உட்பட..  நாங்கள் எல்லாம் அருகாமை வீட்டுக்காரர்கள் என்பதால் சற்று எதிர்பார்த்தேன்.

      நீக்கு
    3. // ஆனால் நண்பர்களுக்கிடையேயான உணர்வு, மறைந்தாலும் மாறாதது //

      அப்படியும் சொல்ல முடியாது!!!

      நீக்கு
  5. ஒவ்வொருவருக்கும் ஒரு நேச்சர், ஆசை எல்லாம் இருக்கும். திருமண பந்தம் அவற்றை மங்கச் செய்கிறது, கடமைகளினால், வேறு வழியில்லாமல் என நிறைய காரணங்கள் உண்டு. Personal space கிடைக்காதவர்களும், கடமைகள் முடித்தபின் துணைக்குச் செய்யும் கடமைகளினால் அலுப்படைந்தவர்களுக்கும் துணைப் பறவை போனபின் சுதந்திர உணர்வு வரும். இருந்தாலும் அவ்வப்போது துணையின் நினைவும் வரும். தனி மனித சுதந்திரம்தான் மிக முக்கியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை, இப்படி, என்று அறுதியிடுவது சிரமம் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மனநிலை, ஒவ்வொரு அனுபவம்...

      நீக்கு
  6. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    நோக்க நோக்க
    நொடியில் நோக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  7. இதில் கோமதி அக்காவையோ, வல்லிம்மாவையோ நான் சேர்க்க மாட்டேன். அவர்களும், சரி, சிங்கம் மற்றும் சாரும் எக்ஸெப்ஷன்ஸ். அவர்கள் இன்றும் தங்கள் துணையின் நினைவில் படும் அவஸ்தையை நான் அறிவேன். இவர்கள் போல இன்னும் சிலரும் இருப்பார்கள் என்றும் அறிவேன்.//

    இவர்கள், நீங்கள் சொல்லியது போல் எக்ஸெப்ஷன்ஸ்.

    ஆனால் எல்லோரும் அப்படி இல்லை. என் பெற்றோரும் ஒருமனமொத்தவர்கள் என்று சொல்ல முடியாது.

    சிலர் அதுவும் மனைவியின் அருகாமை என்பதைவிட மனைவியால் சாப்பாட்டுக்குப் பிரச்சனை இல்லை, எல்லாம் கையில் கிடைத்த அந்த comfort போவது அவர்களைப் படுத்தும். இருக்கும் போது மனைவியை கவனித்து இருக்கமாட்டாங்க ஆனால் போனப்புறம் அவ இருந்திருந்தா என்று சொல்லுவாங்க...

    அது போல சில பெண்கள் கணவன் மறைந்தால் வருத்தப்படுவது முக்கியமாக நம் சமூகக் கட்டுப்பாடுகள் பழக்கவழக்கங்கள் பின்பற்ற முடியாது என்பதைத்தான் என்பது எனக்குத் தோன்றும்..

    அதாவது நல்ல விஷயங்கள் நடக்கும் போது முன்னிற்க முடியாமல், முன்பு போல் பூ வைத்துக் கொள்ள முடியாமல் என்பதான சில ...அல்லாமல் கணவரை நினைத்து அவரது நல்ல குணங்களை நினைத்து தன்னைப் பார்த்துக் கொண்டதை நினைத்து, அவர் இருந்திருந்தால் மகிழ்ந்திருப்பார் என்றெல்லாம் வருத்தப்படுவது என்பதெல்லாம் அபூர்வம் என்று எனக்குத் தோன்றும்.....எல்லாம் நம்மைச் சுற்றி பேசுவதுதான்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது சரி கீதா..  ...  சமயங்களில் ஒரு வித சார்புத்தகன்மை.   முன் காலத்தில் அது மிகவும் தவிர்க்க முடியாதது.  சமீப காலங்களில் அது மாறி வருகிறது.  ஒரு நண்பர் மனைவிக்கு பத்து பைசா கையில் தரமாட்டார்.  ஏகமாக காசு வைத்திருந்தார்.  அவர் மேலே போய்விட்டார்.  அவர் கட்டிக்காத்து வந்த பணம் முழுவதும் இப்போது அந்தப் பெண்மணியின் கையில்!  ஒரு வகையில் பார்த்தால் தேவைப்படும்போது கிடைக்கவில்லை!  ஒரு வகையில் பார்த்தால் இப்போதாவது கிடைத்ததே...!
      நீங்கள் சொல்லி இருக்கும் சமூக அந்தஸ்து.. அதை சொந்த அனுபவத்தில் ஒரு இடத்தில் நான் நேரிலேயே கண்டேன், அனுபவித்தேன்..

      நீக்கு
    2. Money, when we require it, if it comes, it will lead to our enjoyment. அப்படி இல்லாத காலத்தில் கிடைக்கும் பணத்துக்கு we will simply be custodians or spend unreasonably

      நீக்கு
  8. வெளியூர் பயணம்..
    உள்ளடங்கிய கிராமம்..

    நலமே வாழ்க..

    பதிலளிநீக்கு
  9. ஆன் பிள்ளைகளுக்கு அம்மாவும், பெண் பிள்ளைகளுக்கு அப்பாவும் தான் ரோல் மாடல்கள் என்பது தத்துவம். அந்த விதத்தில் நண்பர் அம்மா மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தார் என்பது புரிகிறது.

    பணிவிடை என்பது கடமை என்ற கண்ணோட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதால் தவறு என்று சொல்வதிற்கில்லை. மனைவிக்கு முடியாத போது கவனித்துக் கொள்ளும் ஆண்களும் உண்டு என்று நீங்களே ஒத்துக்கொள்கிறீர்கள்.

    என்னுடைய சிறுவயதில் என்னுடைய அம்மா "நீல வண்ணக் கண்ணா வாடா" "மண்ணுக்கு மரம் பாரமா" போன்ற பாடல்களைத் தான் பாடி தூங்க வைப்பார்கள். கள்ளத் தூக்கம் தூங்கி பாட்டு நின்றவுடன் முழித்துப் பார்த்த தருணங்களும் உண்டு.

    லா சா ரா காலத்து எழுத்தாளர்களை பற்றி எழுதியிருப்பது அருமை. சிட்டி மற்றும் சிதம்பர சுப்பிரமணியன் பற்றி தற்போதுதான் அறிந்தேன். அவர்களுடைய கதை ஏதாவது படித்துப் பார்க்கவேண்டும்.

    தமிழ் எழுத்துக்கள் போட்டோ தெளிவில்லை. படிக்க முடியவில்லை.

    விஈட்நாம் போரை தற்போது நினைவுறுத்துகிறீர்கள். போர் தேவையா என்பது சிந்திக்க வேண்டிய விஷயம்.

    சிதம்பரம் ஜெயலலிதாவின் காலில் விழுந்தார் என்பது நம்ப முடியவில்லை. விழ வேண்டிய அவசியமும் இல்லை. பக்கத்தில் இருப்பது ஓ பி எஸ்.. ஏன் விழுந்தார் என்று தெரியுமா?

    முதல் படம் நம்பக்கூடியதாக இல்லை. போட்டோஷாப் போன்று தோன்றுகிறது. நேரு படம் பல தடவைகள் பார்த்தது தான்.


    ஜோக்ஸ் இல்லை, கவிதை இல்லை. வியாழன் வியாழனாக இல்லாமல் ஏனோ தாறு மாறாக இருப்பது போல் தோன்றுகிறது.


    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு நாட்களுக்கு முன்பு என் இன்னொரு நண்பரிடம் கேட்டபோதும் அவர் அம்மாவையே குறிப்பிட்டார்.  காரணம் அப்பாவிடம் உரிமையாய் பேச முடியாது.  எது வேண்டுமானாலும் அம்மா மூலம்தான்!

      கடமைகள் சில சமயம் அலுத்து விடுகின்றன என்று சொல்லலாம்.  கடமை முடிவுக்காய் ரகசியமாய் ஏங்கும் மனம்!!

      பொக்கிஷத்தில் ஜோக்ஸ் இடம்பெறவில்லை.  தயார் செய்து கொள்ளவில்லை.  எழுதி வைத்திருந்த கவிதை (மாதிரி!) சற்றே நீளமாக இருந்ததால் வெளியிடவில்லை.  போட்டோக்கள் போட்டோஷாப் என்றும் சொல்ல முடியாது.  ஏதோ ரசிக்க முடிந்தால் சரி..   ஒரே மாதிரி இல்லாமல் சிலவற்றைத் தவிர்த்து,சிலவற்றை போட்டு...

      இந்த பதிவு வெளியாகும்வரை நியூஸ் ரூம் பகுதிக்கான கன்டென்ட் வந்து சேரவில்லை.  எனவே இணைக்க முடியவில்லை!!

      நீக்கு
    2. //இந்த பதிவு வெளியாகும்வரை நியூஸ் ரூம் பகுதிக்கான கன்டென்ட் வந்து சேரவில்லை. எனவே இணைக்க முடியவில்லை!!// ஒரு வாரமாக துணை தேவதை வரவில்லை. அதனால் வேலை அதிகம். மேலும் நேற்று என் மருமகளின் பாட்டி இறந்து விட்டதால் மகனும், மருமகளும் சென்னை பயணம். அதனால் நல்ல செய்திகள் இருந்தாலும் அனுப்ப முடியவில்லை. இதை எழுதும் பொழுது பாட்டி இறந்து விட்டார் என்று லீவு எடுக்கும் ஜோக்குகள் நினைவுக்கு வந்தன.:))
      *துணை தேவதை - வீட்டு வேலை செய்வதில் உதவியாளர் என்பதை மத்யமரில் துணை தேவதை என்பார்கள். நல்ல பெயர் இல்லை?

      நீக்கு
  10. பற்றவைத்த நேரு, பாட்டில் துணை ராஜீவ், போதைப்பொருள் ராஹுல்... நாட்டின் முதல் குடும்பம், முன்மாதிரிக் குடும்பம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்று ராஹுல் லாரியில் பயணம் செய்தாராம்.  செய்தி.

      நீக்கு
    2. நம்ப ஆளு ரோட்டோர டீக்கடையில ஒக்காந்து டீ குடிச்சு சமூகநீதிக்கு அப்போதே விதை விதைக்கலயா? அட, கேஜ்ரிவால் கூடத்தான் பஞ்சாப்ல ஒரு ஆட்டோ ட்ரைவர் கூப்பிட்டாருன்னு அவரு வீட்டுக்குப் போய் தரையில ஒக்காந்து ரொட்டி-சப்ஜின்னு சாப்பிட்டு, அலுமினிய லோட்டால தண்ணி வாங்கி குடிச்சுட்ட்டு வந்தாரு.. அதாவது அங்க எலெக்‌ஷன் டயத்தில...

      அதைவிடவா இதெல்லாம் ஒரு விஷயம்...

      நீக்கு
    3. சில வருடங்களுக்கு முன்னால் குடிசைகளுக்குள் நுழைந்து அவர்கள் வைத்திருந்த கூழையெல்லாம் காலி செய்தது நினைவிருக்கிறதா?

      நீக்கு
    4. சில வருடங்களுக்கு முன்னால், வீட்டில் செய்தவைகளை டிபன் கேரியரில் கொண்டுபோய், ஹோட்டலில், குடிசை வீட்டில் சாப்பிட்டவர்களும்தான் நினைவுக்கு வர்றாங்க.

      நீக்கு
    5. தட்டையும், டம்ளரையும் விட்டுட்டீங்க!

      நீக்கு
  11. என் பாட்டி 24 வயதில் கணவனை இழந்தவர். 4 குழந்தைகள். என் அம்மா கைக்குழந்தை. ஆனால் பாட்டி தாத்தா போய்விட்டாரேன்னு வருத்தப்பட்டதே இல்லை. ஆளுமையான பெண்மணி. தாத்தாவும் அப்படி ஒன்றும் அன்பானவர் இல்லையாம். படுத்தி எடுப்பாராம். அதனால் பாட்டி ரொம்ப தைரியமாக வாழ்க்கையைக் கடந்தவர்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 24 வயதிலேயே...   அம்மாடி...  அந்தக் காலத்தில்தான் கணவர் படுத்தல் அதிகம்தான்!

      நீக்கு
    2. ஏதோ அந்தக் காலத்தில்தான் அப்படி... இப்போல்லாம் உத்தம புத்திரன்கள்தாம் கணவர்களாகிறார்கள் என்ற கீதா ரங்கனின் பாசிடிவ் செய்தி அருமை

      நீக்கு
    3. அப்படி இல்லை. அதிக அளவில் சொந்தக் காலில் நிற்கும், சுய சார்புடைய பெண்கள் அதிகமாகி விட்ட இந்தக் காலத்தில் அது சிரமம்.

      நீக்கு
    4. நெல்லை ....ஹாஹாஹாஹா அதென்னவோ சரிதான்...

      ஆனால் சீராமா சொல்லுவதுதான் என் எண்ணமும்

      கீதா

      நீக்கு
  12. என் அத்தை 38 வயதில் கணவரை இழந்தவர். ரொம்ப ஃபீல் செய்தவர். நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயம். அதுவரை பூ வைத்துக் கொண்டு எல்லாவற்றிற்கும் சிரித்துக் கொண்டே முன்னில் நின்றவர் அதன் பின் தன்னை ஒதுக்கிக் கொண்டது என்னை நொறுக்கியது. என் அத்தை எனக்கு ரொம்பப் பிரியமானவர் அவரும் என்னிடம். எல்லாவற்றிற்கும் அவர் என்னோடு இருக்க வேண்டும் நான் அவரை இழுத்து முன்னில் நிற்க வைப்பேன். குங்குமம் எனக்குக் கையால் தரமாட்டார் அங்க வைச்சிருக்கேன் எடுத்துக்கோன்னு சொல்வாங்க. நீதான் எனக்குக் குங்குமம் வைத்துவிட வேண்டும், வேற யார்கிட்ட வேணாலும் நீ செஞ்சுக்க ஆனா எங்கிட்ட கூடாது.....இல்லைனா எனக்குத் தேவை இல்லைன்னு அடம் பிடித்து வைக்கச் சொல்வேன்....

    உன் அத்திம்பேர் இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும் என்று ஒவ்வொரு சமயமும் சொல்லிக்கொண்டிருப்பார். இதை ஒரு பதிவாகவும் எழுதியிருக்கிறேன். சம்பிரதாயங்கள் நான் பின் பற்றுவதில்லை என்பதும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சம்பிரதாயங்கள் நான் பின் பற்றுவதில்லை என்பதும்// It is not easy Geetha Rangan(க்கா). நான் சின்ன வயதில் வளர்ந்த சூழல் என் மனதில் முற்றிலுமாகத் தங்கிவிட்டது. அதனால் என்னால் யார் வீட்டிலும் சட்னு உட்கார்ந்து சாப்பிடமுடியாது. (அதாவது அவங்க வீட்டு உணவைச் சாப்பிடமுடியாது. தவறு செய்கிறேன் என்று மனசு சொல்லும்). இன்னும் 'சுத்தம்' பற்றிய பல என் மனதில் பதிந்திருப்பதால், பசங்க சொல்லியும் அதிலெல்லாம் என்னால் மாறமுடிவதில்லை (தவறு செய்துவிட்டோம் என்ற உணர்வு வருது). Sentimentsஐ நாம் தொடர்ந்தால், நம்மால் அதைவிட்டு விலக முடியாது.

      நீக்கு
    2. மனதில் நிறைய விஷயங்களை போட்டு வைத்து விட்டீர்கள் போல...!

      நீக்கு
    3. நீங்க வேற ஸ்ரீராம்... எனக்கு கர்நாடக உணவு பிடிக்கவில்லை (மதிய உணவு. அவங்க டிஃபனை ஓரளவு ஏற்றுக்கொள்ள முடிகிறது, போய்த்தொலையுது..சாம்பார் கிடையாது என்று. இருந்தாலும் டிஃபன் சாப்பிடுவதும் வெகு அபூர்வம். ஒருவேளை தமிழகத்தில் இருந்திருந்தால் மாதம் 4 முறை டிஃபன் சாப்பிட்டால், இங்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை). நான் செல்லும் விசேஷங்களில் எல்லாம், உணவில் ஆரம்பத்தில் போடும் பழக்கலவை, ஒரே ஒரு ஸ்பூன் சாதம், அதற்கு குழம்பு, பாயசம்/இனிப்பு, மாங்காய் ஊறுகாய் போட்டால் அதில் சிறிது. இவ்ளோதான் சாப்பிடுவேன். வேற எதையும் தொடக்கூட மாட்டேன். இந்த mental block எப்போவும் போகும்னு எனக்குத் தோணலை.

      நீக்கு
    4. எல்லா இடத்திலும் எல்லா விஷயமும் பிடித்து விடுவதில்லை!.கஷ்டம்தான்.

      நீக்கு
    5. நெல்லை நீங்கள் சொல்வது சரிதான்....நாம் சின்ன வயதில் மனதில் பதிந்ததை மாற்றிக் கொள்ள இயலாதுதான்.
      அது போலத்தான் எனக்கும் அந்த வயதிலேயே இப்படியான பல விஷயங்களுக்கு கேள்வி கேட்டு, மனதில் பதிந்து அப்பலருந்தே பின்பற்றுவது இல்லை.. அதாவது நான் தனியாக எங்க குடும்பம்னு இருக்கறப்ப. பெரியவங்க இருந்தா நான் முகமூடி அணிய வேண்டி உள்ளது ஆனால் அவர்களிடம் என் மனம் ஒப்புவதில்லை உங்களுக்காகச் செய்கிறேன் என்று சொல்லிவிடுவேன். என் மாமியார் உட்பட சொல்லியிருக்கிறேன்.

      கீதா

      நீக்கு
    6. மாமியார் மட்டுமில்லை என் தங்கையிடமும். அவளும் சம்பிரதாயங்கள் கூடியவரை பின்பற்றுபவள். அவளிடமும் சொல்லிவிடுவதுண்டு. என் மனம் ஒப்புவதில்லைன்னு....அவள் என்னை ஏற்றுக் கொள்வதால் நலல்தாகிவிடுகிறது.

      கீதா

      நீக்கு
    7. சம்பிரதாயத்தை ஒப்புக்கொள்ளாமல் நான் செய்த விஷயங்களை இங்கு சொல்லுவதற்கு தயக்கமாக இருக்கிறது!

      நீக்கு
  13. எந்த இடத்தில இந்த அபிப்ராயங்கள் மாறுகின்றன, ஏன், யாரால் மாறுகின்றன என்பது புதிர்//

    இந்த அபிப்ராயங்கள் ஆரம்பத்திலிருந்தே கூட இருந்திருக்கலாம். சமூகத்திற்கு, உற்றார் உறவினருக்குப் பயந்து அல்லது சில கட்டுப்பாடுகளுக்காக வெளியில் தெரியாமல் போயிருந்திருக்கும்....ஆனால் வயதாகும் போது ஏற்படும் சலிப்பில் வெளி வரலாம், வெளி வராமலும் போகலாம். யாரேனும் ஒருவர் இறந்த பிறகு "ஹப்பா" என்ற ஒரு ரிலீஃப்.

    நமக்குத்தான் தெரிவதில்லையே தவிர அவர்களுக்குள் இருந்திருக்கலாம்

    சிலரைப் பார்த்திருக்கிறேன்....கணவனையோ மனைவியையோ எப்பவும் குற்றம் சொல்லிக் கொண்டே இருப்பாங்க. ஆனால் இறந்ததும் பேசும் பேச்சு வித்தியாசமாக இருக்கும்....நேர் எதிர்மாறாக....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க உணவு பண்ணித்தந்தால், அதில் இது சரியில்லை அது சரியில்லை என்று சொல்லத் தோன்றும். ஒன்றுமே உண்பதற்குக் கிடைக்காமல் வயிறு காயும்போது, அடடா அன்று உணவு எவ்வளவு சூப்பராக இருந்தது, என்ன ஒண்ணு, கூட்டில் போட வேண்டிய உப்பை, குழம்பில் போட்டிருந்தார்கள். இது பெரிய தவறா? இரண்டையும் சாதத்தில் கலந்து சாப்பிட்டபோது சூப்பராகத்தானே இருந்தது? என்று தோன்றும். இது இயல்புதான்.

      நீக்கு
    2. குற்றம் சொல்லிக் கொண்டே இருகாலும் இருவருக்குள்ளும் ஒரு அண்டர்ஸ்டேண்டிங் இருந்தால் ஓகே.  அதை வேலையாட்களால் உணர முடியாமல் போகலாம்.  அது இல்லாதபோதுதான் பிரச்னை.

      நீக்கு
    3. அதேதான் சீராமா!!! புரிதல் முக்கியமாக்கும்!!!

      கீதா

      நீக்கு
    4. மறுபடியும் ஹாஹாஹா   அப்புறம் என் கமெண்ட்டில் ஒரு திருத்த்த்தம்...   வேலையாட்கள் இல்லையாகும் வெளியாட்கள்!

      நீக்கு
    5. படுத்த படுக்கையாக இருக்கும் போது பார்த்து கொள்பவரிடம் சிலர் மிகவும் கோபமாக நடந்து கொண்டு இருக்கலாம். அவர்களை சொல்லியும் தப்பில்லை அவர்களின் வேதனை, அப்படி பேச வைக்கும். பார்ப்பவர்களுக்கு இவ்வளவு பார்த்தும் நமக்கு கெட்டபேருதான் என்ற அலுப்பும், சலிப்பும் ஏற்பட்டு இறந்த பின் அப்பாடா என்று நிம்மதி ஏற்படும்.

      என் உறவினர் ஒருவர் வயதானவர் அப்படித்தான் மனைவி, குழந்தைகளை படுத்த படுக்கையாக இருக்கும் போது பேசினார்கள்.

      எல்லோரும் அவர் இறப்புக்கு பின் நிம்மதி அடைந்தார்கள்.

      பிறகு அவர்களின் பெருமையை பேசி கொண்டும் முகநூலில் எழுதி கொண்டும் இருந்தார்கள். முன்பு இருந்த நல்ல அப்பாவை, நல்ல கணவரைபற்றி பேசாமல் இருக்கமுடியுமா?

      நீக்கு
    6. இது என் அம்மா அப்பா விஷயத்துக்கே பொருந்தும் கோமதி அக்கா... உண்மை.

      நீக்கு
  14. கூடவே நான் போனால் என் துணை என்ன Feel செய்யும் என்கிற எண்ணம் வருவதையும் தவிர்க்க முடிவதில்லை. மாற்றியும் யோசித்திருக்கிறேன். //

    இந்த மாதிரி எதுக்கு யோசிக்கணும்? நமக்கு கண்ணை மூடிய பிறகு தெரியவா போகிறது? ஜாலியா இருப்பதை விட்டு!!! இப்ப இருக்கறப்ப ஜாலியா இருக்கணும் அம்புட்டுத்தான்.

    மேலே சொன்ன அந்த இன்னும் சிலரில் நாங்கள் இருக்க ஆசை. அது நம் கையில்தான் இருக்கிறது, இல்லையா?//

    கண்டிப்பாக. நம் இருப்பையும் இல்லாமையையும் நம்முடன் இருப்பவர்கள் உணரச் செய்வது நம் கையில்தான். அதுக்குத்தான் சொல்றது ஜாலியா இருங்க கூட இருக்கறவங்களை சந்தோஷமா வைச்சுக்கங்க....

    கடைசி பத்தி டிட்டோ

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஜாலியா இருங்க கூட இருக்கறவங்களை சந்தோஷமா வைச்சுக்கங்க....// எல்லாருக்கும் (எனக்கும்) இது சாத்தியமற்றது. அவங்க அவங்க வாங்கிவந்த வரம் அப்படி

      நீக்கு
    2. நெல்லை சொல்வது போலதான் எனக்கும் தோன்றுகிறது!

      நீக்கு
    3. //இந்த மாதிரி எதுக்கு யோசிக்கணும்? நமக்கு கண்ணை மூடிய பிறகு தெரியவா போகிறது? ஜாலியா இருப்பதை விட்டு!!! இப்ப இருக்கறப்ப ஜாலியா இருக்கணும் அம்புட்டுத்தான்.//

      கீதா நீங்கள் சொல்வது சரிதான்.
      ஆனால்

      //கூடவே நான் போனால் என் துணை என்ன Feel செய்யும் என்கிற எண்ணம் வருவதையும் தவிர்க்க முடிவதில்லை.//

      இந்த எண்ணம் கடமைகளிய முடித்து கணவனும், மனைவியும் தனிமையில் இருக்கும் போது ஏற்படும் அலுப்பு சலிப்பான சமயம் வரவேண்டியது.இப்போது ஏன் வருகிறது ஸ்ரீராமுக்கு?

      எங்களுக்கும் அப்படி எண்ணங்கள் வந்து இருக்கிறது, "நீங்கள் போனால் உடனே நானும் போய் விடுவேன் நீங்கள் இல்லாமல் என்னால் வாழ் முடியாது" அதை யோசித்துப்பார்க்க கூட முடியவில்லை என்று பேசிய நான் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.

      "நீங்கள் இருக்கிறீர்கள் என்பதே எங்களுக்கு ஆறுதல் "என்று பிள்ளைகள் பேசுகிறார்கள். அவர்களுக்காக அவர்களின் நினைவுகளுடன் இறைவன் அழைக்கும் வரை வாழ வேண்டும்.

      நீக்கு
    4. ஒரு விஷயத்தைப் பற்றி யோசிக்கும்போது மனம் பல்வேறு வழிகளிலும் யோசிக்கிறது...   அதுவும் இது போன்ற சம்பவங்களில் ஒப்பீடுகளைத் தவிர்க்க முடிவதில்லை.  அவ்வளவுதான் கோமதி அக்கா.

      நீக்கு
  15. தாலாட்டு - உண்மை உண்மை.....என் மகனுக்கு நிறைய பாடியிருக்கிறேன். அவன் உள்ளிருக்கும் போதும் வெளிய வந்தப்புறமும்.

    ஆய்வின் முடிவு தெரியவில்லை ஆனால் மகன் வன்முறைக்கு நேர் எதிர்!

    புதையல் பற்றி முன்னரே போட்டிருக்கிங்களோ?!!!! நினைவு...

    அப்பப்ப வந்து கருத்து ....இனி மாலையில்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆனால் மகன் வன்முறைக்கு நேர் எதிர்!// - நினைச்சேன். இந்த அம்மா, நமக்கு இவ்வளவு தொந்தரவைத் தந்தாரே... நாம யார்மீதும் எந்த வன்முறையும் பிரயோகிக்கக்கூடாதுன்னு நினைச்சிருப்பார் போலிருக்கு. பிறக்கும்போதே பேச முடிந்திருந்தால், 'நான் கேட்டேனா உன்னைப் பாடச் சொல்லி? நிம்மதியா தூங்கும்போது எழுப்பற மாதிரி பாட்டு, தூக்கம் வரும் நேரத்தில் பாத்திரங்கள் அலம்பும் ஓசை..வன்முறைக்கு அளவில்லையா' என்று கேட்டிருக்கலாம்.

      நீக்கு
    2. ஹாஹாஹாஹாஹாஹா ஹயோ சிரிச்சு முடிலைப்பா....நெல்லை....

      கீதா

      நீக்கு
    3. குழந்தைகளுக்கு தூக்க நேரம் வந்து விட்டால் தாலாட்டே தேவை இல்லை!

      நீக்கு
    4. ஆனால் அம்மாக்கள் தங்கள் திறமையை எப்படி, எங்கேதான் காண்பிப்பது! விடமாட்டார்கள் லேசில்..

      நீக்கு
    5. நான் தான் வளர்த்தேன், நான் தான் வளர்த்தேன் என்று பின்னர் சொல்லவா?

      நீக்கு
  16. ராஜீவும் சோனியாவும் உள்ள படம் உண்மை என்றே தோன்றுகிறது. ராஜீவ் படிக்கையில் சோனியா ஓட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போ சந்திப்பின் போது இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கலாம். மற்றபடங்கள் எல்லாம் ஓகே, ஓகே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். அதில் போய் என்ன போட்டோஷாப் செய்ய போகிறார்கள்!

      நீக்கு
  17. சாஸ்திர சம்பிரதாயங்களை எல்லாவற்றிலும் எந்நேரமும் கடைப்பிடிக்க முடிவதில்லை. பழங்காலத் தமிழில் கடைசி இரண்டும், அகத்தியரும், அதற்கு அடுத்ததும் படிக்க முடிந்தது. முதல் இரண்டும் படிக்க முடியலை. எழுத்தும் சின்னது. பெரிசு பண்ணினாலும் படிக்க முடியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்பப் பெரிதாக இருந்ததது என்று எல்லை மீறியதை எல்லைக்குள் அடக்கினேன்.

      நீக்கு
  18. தாலாட்டின் முக்கியத்துவம் தெரியாதோரும் உண்டோ? ஆனால் இப்போல்லாம், ஆங்கில வீடியோ காசெட்டுகள் அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ளன. ரவுன்ட், ரவுன்ட், ரவுன்ட் எனப் பேருந்தைக் குறித்த பாடல் வருகையில் குழந்தையும் உடலை நெளித்துக் கொண்டு குதிக்கிறதே! அதோடு இல்லாமல் பெற்றோர் வேறே பிறந்த நாள் கேக்காக இம்மாதிரி ரவுன்டாகப் பண்ணி அதன் மேல் பஸ் ஓடுகிறாப்போல் அலங்காரமும் செய்து வைக்கிறாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். செல்போனை கையில் கொடுத்து விடுகிறார்கள். ஒடிசல் பாட்டெல்லாம் போட்டு விடுகிறார்கள்!

      நீக்கு
  19. 13ஆம் நூற்றாண்டிலோ என்னமோ முகமதியர்கள் கலாசாரம் இந்தியாவில் புகுந்தது. எனினும் இந்தியக் கலாசாரத்தை முற்றிலும் அழிக்க முடியவில்லை. அதே போல் 16/17/18 ஆம் நூற்றாண்டுகளில் ஆங்கில, ஃப்ரெஞ்ச் கலாசாரம் புகுந்தது. இதில் ஆங்கிலக் கலாசாரம் மெல்ல மெல்ல மக்கள் மனதை மாற்றிக் குருகுலக் கல்வியில் இருந்து ஆங்கிலக் கல்வி முறைக்குக் கொண்டு வந்து சரித்திரத்தையே மறைத்தது. என்றாலும் இந்தியக் கலாசாரம் விவேகாநந்தர், பரமஹம்சர் ஆகியோரால் ஓரளவுக்குக் காப்பாற்றப் பட்டது. ஆனால் இப்போதோ! எந்த ஆக்கிரமிப்பும் இல்லை. சுதந்திர நாடு, சுதந்திரமான எண்ணங்கள்! சுதந்திரமான கலாசாரம் என்னும் பெயரில் எல்லாவற்றிலும் மேற்கத்தியக் கலாசாரம் ஊடுருவிக் கொண்டு மக்களை அடியோடு மாற்றி வருகிறது. இதைப் பற்றி அறியாமலேயே நாம் அனைவரும் பெருமையுடன் இதை எல்லாம் பார்த்துக் குதூகலப்பட்டுக்கொண்டிருக்கோம். மெல்ல மெல்லப் பரவும் விஷம் போல இது கிராமங்கள் வரை ஊடுருவி உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றுகிறார்களா, மாறுகிறதா என்று சொல்ல முடியாமல் இரண்டும் நிகழ்கிறது!

      நீக்கு
    2. கீதா அக்காவின் கருத்தோடு 100% ஒத்துப் போகிறேன்.

      நீக்கு
  20. உங்கள் நண்பனின் தாய்ப் பல வருடங்கள் கழித்து உங்களைப் பார்க்கையில் மரியாதையுடன் அழைத்தது போன்ற நிகழ்வுகள் எனக்கும் நடைபெற்றிருக்கிறது. என்னைத் தூக்கி வளர்த்த சிலர் அப்படி என்னை மிகவும் மரியாதையுடன் அழைத்திருக்கின்றனர். வேதனையாக இருக்கும். என்ன செய்ய முடியும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு உரிமை உணர்வுடன் போன எனக்கு லேசான ஏமாற்றம்!

      நீக்கு
  21. லா ச ரா - செம சுவாரசியமான விஷயங்கள். அதுவும் கடற்கரைக்கூட்டம். அருமையான காலங்கள் எழுத்தாளர்கள் இப்படி நட்புரீதியாக ஒன்று கூடி சந்திப்பது என்பது எத்தனை அருமையான விஷயம்.

    ஒவ்வொரு காலகட்ட எழுத்துகளும் கொஞ்சம் கூர்ந்து பார்த்தால் தெரிகிறது. தமிழ் வித்தியாசமாக இருக்கிறது முதலில் இருப்பதில். போகப் போக எழுத்துகளில் எவ்வளவு மாற்றம்? யார் அதை இப்படி மாற்றி முன்மொழிந்து இருப்பாங்க? இப்போது நாம் எழுதுவதில் கூட, முன்பு னை என்பதெல்லம் கொம்பு போட்டு எழுதிக் கொண்டிருந்தோம் அதன் பின் ஈவேரா எழுத்து என்று கொம்பு இல்லாமல் னை என்று ....இப்ப தட்டச்சும் போது இப்படி வருகிறாது ஆனால் நான் கையால் எழுதும் போது பண்டு போட்ட கொம்பு னைதான் எழுதுவேன்.

    கணினிக்காக இப்படி மாற்றியிருப்பாங்களோ?

    கீதா

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
  22. மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை...

    சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை...

    பதிலளிநீக்கு
  23. வியட்நாம்போர் பட்ங்கள் வேதனை அதில் கதை போன்று வரும் சிறிய செய்தி....சொல்லும் விஷயம் பல...

    பொக்கிஷத்தில் முதல் படம் சோனியா ராஜீவ் தெரிகிறது

    இரண்டாவது படம் நேரு ...கூட இருப்பது யாரோ?

    ஜெஜெ காலில் விழாதவர் உண்டோ?!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரு கூட இருப்பது யாரோ தெரியாத பிரபலம்! ஆனால் பெண்!

      நீக்கு
    2. ஆமாம் அதனால்தான் கேட்டேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! அதுவும் இப்படியான படம்!!!!

      கீதா

      நீக்கு
  24. ..ஆனால் பெண்!//

    பின்னே? ஆணுக்கா பற்றவைத்திருப்பார் நம்ப ஆளு !

    பதிலளிநீக்கு
  25. இந்த ஆளுமை கடற்கரைக்குப்போய்ப் பார்த்த அவர்காலத்து இலக்கியப் பெரிசுகள். பெரிய ஆசாமிகள் எதைப்பற்றி, என்ன பேசுகின்றன என்பதைக் கவனிக்காமல், அவரோட முகம் இப்படி, இவருக்கு க்ராப் அப்படி, கழிக்கு துணியச் சுத்தினமாதிரி ஒடம்பு இன்னொருவருக்கு.. என்றெல்லாம் கண்ணால நல்லா அளந்துகொண்டு வந்திருக்காரு இந்த லாசரா !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாத்தி யோசித்திருக்கார்!

      நீக்கு
    2. @ஏகாந்தன்: யூ ட்யூபில்"என்னை பாடாய்ப் படுத்திய கமல்" என்று தலைப்பு கொடுப்பார்கள், க்ளிக் செய்து கேட்டால் "அந்த காட்சி சிறப்பாக வருவதற்காக கமல் மிகவும் மெனக்கெட்டார், அவர் எதிபார்ப்பின்படி வரும்வரை என்னை விடவில்லை" என்று கமலை புகழ்ந்து பேசியிருப்பார்கள். அது போல் லா.ச.ரா. எழுதியிருக்கும் மணிக்கொடி சதஸ் என்னும் கட்டுரையிலிருந்து கொஞ்சூண்டு பிய்த்து ஸ்ரீராம் பகிர்ந்திருக்கிறார்.

      'இலக்கிய விழாக்கள் இந்நாளில் கொண்டாடப்படுகின்றன.
      டி.வி.,வானொலி வழி வேறு பேட்டிகள்,சந்திப்புகள்,மோஷியாரா, ஸம்மேளம்,...எந்த சாக்கிலேனும் மேடை. ஆனால் கடற்கரையில் மாலை அந்த இரண்டு,இரண்டரை மணி நேரம் ஏழெட்டுப் பேர் கூடி பேசிக் கொண்டிருந்தார்களே, அதுதான் உண்மையில் இலக்கியப் பட்டறை' என்று எழுதிய லா.ச.ரா அந்த இலக்கியப் பட்டரையை முழுமையாக எழுதினால் நாம் தாங்குவோமா?

      'என்ன பேசினார்கள்? இலக்கியம். இங்கே மார்தட்டல் கிடையாது, வகுப்பு நடத்தவில்லை, உபதேசம் செய்யவில்லை. இலக்கியத்திலேயே யாருக்கேனும் வாரிசு எடுத்துக்கொண்டு கட்சிப் பிரசாரம் கிடையாது. உலக இலக்கியகர்த்தாக்களின் சிருஷ்டிகள் நடமாடின. அவர்களின் பெயர்களை சொல்லி சுவைக்க எனக்கு ஆசைதான். ஆனால் ஏதோ வெறும் பெயர்களை உதிர்த்து அதில் பெருமை அடைய பார்க்கிறேன் என்னும் சந்தேகத்துக்கூட நான் ஆளாக விரும்பவில்லை.அந்த மாதிரி பெருமையால் எனக்கு இனி ஆக வேண்டியது ஏதுமில்லை. தவிர அப்போதேனும் மாப்பஸான், மாம் செக்கோவ் என்று எழுத்தாளர்கள் முனகினார்கள். Chase,Robbins,Maclean என்று இடத்தைப் பிடித்துக் கொண்டுஎழுத்து ஒரு ஃபாக்டரியாக மாறியிருக்கும் இந்நாளில் நாங்கள் பழகிய பெயர்களும் அந்த எழுத்துக்களின் சத்தியங்கள் எடுபடா' என்று எழுதியிருக்கிறார்.

      நீக்கு
  26. ..சில நேரங்களில் பணிவிடை செய்து கொண்டே இருப்பவர்களுக்கு அலுத்து விடும் என்பதும் புரிகிறது. //

    எவ்வளவு காரியங்கள், கடமை என நினைத்தவாறே விடாமல் செய்திருக்கிறாள், செய்துகொண்டிருக்கிறாள் மனைவி. இதன் நற்பலனை கேஷுவலாக அனுபவித்துவருகிறோமே.. இதற்கான யோக்யதை உண்மையில் நமக்கு இருக்கிறதா என்று சில சமயங்களில் எண்ணம் எழும். சற்றே சிந்தனை வசப்படும் மனது. அப்புறம் வழக்கம்போல் அதன் வழி அது செல்லும். காலமும் நிற்காது ஓடும்.

    .. சில வார்த்தைகளின் காயம் உள்ளே பச்சையாய் ஆறாமல் இருக்கும் என்பதும் புரிகிறது. என்ன செய்ய முடியும் என்கிறீர்கள்? இயல்பு குணம் மாறுமா என்ன!//

    வார்த்தையை விட்டபிறகுதான் புத்தியில் படும்: இதைச் சொல்லாதிருந்திருக்கலாம்.. அல்லது வேறு மாதிரி சொல்லியிருக்கலாம். அல்லது கத்தாமல், கொஞ்சம் தணிந்த குரலிலாவது சொல்லியிருக்கலாமோ என்றெல்லாம் திடீர் ஞானம் அவ்வப்போது வருவதுண்டு. ஆனால்... வெளியே வந்து விழுந்துவிட்ட வார்த்தையை undo செய்து, மாற்றித் தொலைக்க இந்தக் கடவுள் வழி செய்யவில்லையே. Tech-savvy யாக இல்லாத, தண்டக் கடவுளைத் தண்டிக்க என்ன வழி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது மாதிரி அக்கேஷனலாய் வரும் எண்ணங்களை நம் மனா பலவீனம் அடித்து விடுகிறது.  நிரந்தர குணம் தலைதூக்கி விடுகிறது!

      நீக்கு
  27. அடுத்த புதனுக்கான சித்ரவதை ! இதோ:

    "Gambhir has been a legend for India, he has huge respect ... .... As a mentor, as a coach, as a legend of cricket, I respect him a lot and have learnt so many things from him. How I should go about my cricket inside the field and the same thing outside...."

    முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீரைப்பற்றி இப்படிச் சொன்னது யார்?

    (ஐபிஎல் மேலா முடியுமுன்னே இப்படி ஒன்றை இங்கே வீசிவைப்போம்...)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோலியுடன் சண்டையிட்ட நவீன் உல் ஹக்!

      நீக்கு
    2. ஆம். இனிமேல் நவீனுக்கு கோலிதான் அடையாளமோ..!

      நீக்கு
    3. எல்லாம் ஒரு விளம்பரம்தான்!

      நீக்கு
  28. //ஒரு கணவன் மனைவிக்குள் இருக்கும் பந்தம் வேறு என்றும் தோன்றும்.//

    வெளியில் சண்டை போட்டது மட்டுமே தெரியும். உங்கள் நண்பரின் அப்பா ஒவ்வொன்றுக்கும் தன் மனைவியை சார்ந்தே வாழ்ந்து இருப்பார், எல்லாம் தன் மனைவியே செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்த்து இருப்பார். அது மகனின் பார்வையில் படுத்தலாக இருக்கிறது போலும்.

    நண்பரின் அம்மாவும் என் கணவருக்கு எல்லாம் நான் தான் செய்ய வேண்டும், வேறு யார் செய்தாலும் பிடிக்காது என்று எல்லாம் செய்து இருப்பார். வயது ஆக ஆக மனைவி கணவனை குழந்தையை போலதான் பார்த்து கொள்வார். குழந்தை கொஞ்சம் படுத்தும் தான்.

    நம் வலைத்தள நண்பர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் மகன் சிறு வயது இறைவன் அவரை எடுத்து கொண்டார். அவர் மனைவி சிறு வயதாக இருக்கும் அவர் நிலை எப்படி இருக்கும்?

    குழந்தைகளை வளர்ப்பதில் கவனத்தை செலுத்துவார் , செலுத்தவேண்டும்.

    சாரும் புத்திர சோகத்தை தாங்கி கொண்டு பேரக்குழந்தைகளை வளர்க்க பாடு பட வேண்டும்.

    செய்தி கேட்டதிலிருந்து மனம் வேதனை படுகிறது.

    சிறு வயதில் துணையை இழந்து என் அம்மா குழந்தைகளை ஆளாக்கினார்கள். கடமைகள் அவர்களை மன உறுதியுடன் செயல்பட வைத்தது. சிறு வயதில் துணையை பிரிவது இருபாலர்களுக்கும் கொடுமைதான். மனைவியின் இழப்பை தாங்கி கொண்டு தன் குழந்தைகளை வளர்த்த பெற்றோர்களும் இருக்கிறார்கள், கணவனை பிரிந்து தன் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கும் மனைவியும் இருக்கிறார்கள்.

    நீங்கள் வாழும் நாளில் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவாக நன்றாக வாழுங்கள். ஏன் பிரிவை நினைக்கிறீர்கள்? கடமைகள் இருக்கிறது.
    இறைவனை வேண்டி நம் கடமைகளை செய்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனைவியின் இழப்பை தாங்கி கொண்டு தன் குழந்தைகளை வளர்த்த கணவர்களும் இருக்கிறார்கள். நம் சகோ தெவகோட்டை ஜி போல ! ஆதியின் அப்பா போல!

      நீக்கு
    2. நீங்கள் சொல்லி இருக்கும் அந்தப் புரிதலை நானும் சொல்லி இருக்கிறேன் கோமதி அக்கா.  நானும் அப்படி நினைப்பதுண்டு.  அவ்வளவு எளிதாக வீட்டுக் கொடுத்து விடும் உறவல்ல அது என்று நினைப்பேன்.  அதனால்தான் இப்படி வார்த்தை வந்த உடன் கொஞ்சம் ஆடி விட்டேன்.   இப்போதும்...   அந்த மகனுக்கு புரியாமல் இருக்கலாம்.

      நீக்கு
    3. வைகோ ஸாரின் சோகத்தை காலம்தான் ஆற்றவேண்டும்.  மாறுதல்கள் இந்நேரத்தில் மதிப்பிழக்கும்.  ஆதி வெங்கட் அப்பா, தேவகோட்டைஜி உதாரணங்கள் சிறப்பு.  எங்கள் குடும்பத்திலும் உதாரணங்கள் இருக்கிறார்கள்.

      நீக்கு
  29. இந்த மாத ஆரம்பத்தில் என் தங்கையும் கணவரை இழந்தாள். கடமைகள் முடித்து பேரன் பேத்திகளுடன் மகிழ்ந்து இருக்க வேண்டிய வேளையில் 69 வயது இறைனடி சேர்ந்தார். வயது ஆக ஆக தான் கணவன் ,மனைவி உறவு ஒருத்தருக்கு ஒருத்தர் எவ்வளவு அவசியம் என்று தெரியவரும். இளமைகாலத்தில் தன் பெற்றோர்களை பாதுகாத்தல், , குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு, கடமை என்று வாழ்ந்து முதுமை காலத்தில் தான் தங்களுக்கு என்று வாழ்க்கை இருக்கிறது என்று வாழ ஆரம்பிக்கும் போது இறைவன் தட்டி பறித்தால் என்ன செய்வது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு இழப்புக்களாஈஊ ஆறியும்போது மனம் கனக்கிறது கோமதி அக்கா, ஆனா என்ன பண்ணுவது கால ஓட்டத்தில் அவற்றை அடிமனதில் புதைத்து விட்டு ஓடிக்கொண்டிருக்கிறோம்.. எழுதப்பட்ட விதியை ஒண்ணும் பண்ண முடியாதே..

      நீக்கு
    2. இளவயதில் வரிசையாக ஜனனங்களை சந்திக்கிறோம்.  குறிப்பிட்ட வயதுக்குப்பின் காலம்போய் இழப்புகளை வரிசையாக கேள்விப்படுகிறோம்.  அடுத்த வரியை தவிர்க்கிறேன்!

      நீக்கு
    3. உண்மைதான் அதிரா,நிறைய சோகங்களை அடிமனதில் புதைத்து கொண்டு ஓடி கொண்டு இருக்கிறோம்.

      //குறிப்பிட்ட வயதுக்குப்பின் காலம்போய் இழப்புகளை வரிசையாக கேள்விப்படுகிறோம்.//
      ஸ்ரீராம் சொல்வதும் சரியே . நிறைய கேள்விபட வேண்டி இருக்கிறது.
      திருமணம் ஆனவர்கள் புரிதல் இல்லாமல் பிரிவதையும் கேள்வி பட வேண்டி இருக்கிறது.
      எல்லாம் இறைவன் விருப்பபடி நடக்கிறது.

      நீக்கு
    4. உண்மை..  எல்லாம் ஏற்கெனவே எழுதி வைக்கப் பட்டிருக்கிறது..

      நீக்கு
  30. நமக்கு நன்கு தெரிந்த ஒருவர், நம்மை அடையாளம் காணமுடியாமல் இருக்கும் போது மனதுக்கு மிகவும் கஸ்டமாக இருக்கும். நானும் அடிக்கடி நினைப்பதுண்டு, உயிருடன் இருந்தால் மூளை நன்கு வேலை செய்யோணும், இல்லை மூளை மாறிவிட்டதெனில் உயிருடன் இருக்கக்கூடாது, ஆனா அதற்கு இப்பவே வில் எழுதி வைக்கோணும்:)..

    யாரும் இருக்கும்வரை அவர்களைப்பற்றி சரி பிழை சொல்ல மாட்டினம், இல்லாமல் போனபின்புதான் தெரியவரும், நாமும் இல்லாமல் போனபின்புதான் நம்மைப் பற்றி, அவரவர் மனதில் இருப்பதைச் சொல்லுவார்கள் என நினைக்கிறேன்.. இல்லையா சீராமா?:)) ஹா ஹா ஹா ஹை... இது நல்லா இருக்கு:)).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதெல்லாம் யார் கையில் இருக்கிறது அதிரா? யாருக்கு என்ன என்று காலம்தான் அறியும். நினைப்பதெல்லாம் எல்லோருக்கும் நடந்து விடுவதில்லை.

      நீக்கு
  31. இந்தக் காலத்தில் எல்லாக் குழந்தைகளுமே, ஆங்கிலக் கார்டூன் பார்த்தே வளர்கிறார்கள், தாலாட்டை விட கார்ட்டூனைப் போட்டால் அழுகையை நிறுத்திவிடுகிறது குழந்தை:)) அப்போ அம்மாக்களைக் குறை சொல்லவும் முடியாது.. கால ஓட்டத்துக்கேற்ப நாமும் மாற வேண்டியுள்ளது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.   எங்கள் வீட்டுக் குழந்தைகளும் தப்பாமல் அப்படியே வளர்கிறார்கள்.

      நீக்கு
  32. நண்பன் போர்க்களம், நீங்கள் முன்பு சொன்னது நினைவுக்கு வந்துவிட்டது எனக்கு.
    உலகம் அழிவதற்கு ஏதாவது வழி வேணுமெல்லோ, அதனாலதான் கோவிட், யுத்தம்.. இப்படி பல கோணத்திலும் பலிகள் நடக்கிறது போலும்...

    ஸ்ரீராம் நீங்கள் முன்பு சொன்னனீங்க, எங்கோ ஒரு வெப்சைட்டிலோ எங்கோ போய் இலவசமாக கதைப்புத்தகம் டவுன்லோட் பண்ணிப் படிக்கலாம் என, நானும் அப்படி கிண்டிலில் இறக்கிப் படிச்சது நினைவு வருது, ஆனா இப்போ நினைத்தால் அது எதுவெனத் தெரியவில்லை, கொஞ்சம் சொல்றீங்களோ அதை????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் படிக்க விரும்பும் புத்தகத்தை கூகுளிட்டு தட்டினால் கிடைக்கும் அதிரா.  நிறைய தளங்கள் இருக்கின்றன.

      நீக்கு
  33. ஆவ்வ்வ்வ்வ் பூசோ கொக்கோ... டமிழில் சொற்பிழை வந்துவிட்டது சீராமா.. சொற்பிழை:)) எனக்கு டமில்ல டி எல்லோ அதனால கண்டு பொஇடிச்சிட்டேன்ன்ன்..

    ///விண்ணோடும் முகிலொடும்//// ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகிலொடும் ஓகே...   சீராமா...  பதிவை படிக்கவில்லையா நீங்கள்?!

      நீக்கு
    2. சீராமா எனும் தலைப்பிலோ? தேடிப்பார்க்கிறேன்..

      நீக்கு
    3. ///ஸ்ரீராம்.25 மே, 2023 அன்று பிற்பகல் 8:34
      முகிலொடும் ஓகே... சீராமா... பதிவை படிக்கவில்லையா நீங்கள்?!///
      ஸ்ரீராம் மேடைக்கு வாங்கோ:).. ஹையோ ஆண்டவா வந்ததும் வராததுமாக இப்பூடியா நடக்கோணும், நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை, நான் சொல்வது உங்களுக்குப் புரியவில்லை, இதில டமிழ் வேறு:).. திருப்பரங்குன்றத்து வைர்வா இதை எல்லாம் பார்க்கவோ என்னை மீண்டும் புளொக்குக்குள் அனுப்பினாயப்பா ஹ்கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      சீராமா என போஸ்ட் இருக்கோ எனத் தேடிப்போட்டு விட்டு விட்டேன், பின்பு என் செக்:) ஐ உதவிக்கு அழைச்ச இடத்திலதான், அவதான் விளங்கப் படுத்தினா.. நான் என்ன சொல்லியிருக்கிறேன், நீங்கள் என்ன பதில் சொல்லியிருக்கிறீங்கள் என..

      அதாவது வந்து, எழுத்துப் பிழை எனச் சொன்னது முகிலொடும்/// என்பதற்கு, சீராமா எனப் போட்டது.. அது அந்த ஆன்ரி.. நண்பரின் அம்மா அழைச்சதைப்போல உங்களை அழைச்சேனாக்கும் ஹையோ ஹையோ.. இதுக்குத்தான் என் செக்:) ஐ இங்கின வரச்சொன்னேன் ஒயுங்கா வாறாவில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
    4. செக் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார் அதிரா...   

      முகிலொடு என்பது தவறு, முகிலோடு என்று வரவேண்டும்.  

      சீராமா என்பது என் நண்பனின் அம்மா என்னை அழைக்கும் முறை.  அதைப் பின்பற்றி கீதாவும் சொல்லி இருந்தார்.  அதுதான் பதிவைப் படிக்கவில்லையா நீங்கள் எனக் கேட்டிருந்தேன்!

      இருங்கள்.. மேடையிலிருந்து இறங்குகிறேன்..  அம்மாடி..  இத்தனை படிகளா?  பொறுமை இல்லை..  அபப்டியே குதித்து விடுகிறேன்!!

      ஆமாம்..  முன்னாடி எல்லாம் திருச்செந்தூர் வைரவவா என்றுதானே கூப்பிடுவீர்கள்?  இன்றென்ன புதுசாய் ஊர் மா(ற்)றி விட்டீர்கள்?!

      நீக்கு
    5. அந்த aunty கூப்பிடற மாதிரியா !!!!
      அப்போ ஸ்ரீராம் நீங்க அதிராவை அம்பானி ஆன்ட்டி அப்டினே கூப்ட்டுகோங்க இனிமே :))))))))))))))

      நீக்கு
    6. ஹா ஹா ஹா  ஆனால் கூப்பிட பெயர் சுருக்கமாக இருக்க வேண்டும் ஏஞ்சல்..  அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன் என்று நீட்டி முழக்கி கூப்பிட முடியுமா?  நிர்மலா என்னும் நான்கெழுத்து பெயரையே நிம்மி என்று சுருக்குபவர்கள் நாம்!  சுஜாதா என்பதை சுஜா என்று சொல்லி அதையும் சு என்கிற ஒற்றை எழுத்தில் அழைப்பவர்கள் நாம்!  பாஸ்கர் பாஸ் ஆவார்.  கணேஷ் கன் ஆவார்!

      நீக்கு
    7. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் வச்சிட்டார்யாஆஆஆஆஅ ஆப்பூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ ஹா ஹா ஹா என் செக் எந்த மூலையில ஒளிச்சிருந்தாலும் விடமாட்டேன்ன் இதைப் பிரிண்ட் போட்டுக்கொண்டுபோயாவது கையில குடுக்கப் போகிறேன்ன் ஹா ஹா ஹா ஆரைப் பார்த்து ஆன்ரி கூப்பிடட்டாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
  34. அந்த நாகபாம்பைப் பிடிச்சுத்தான் சைனீஸ்காரர் சாப்பிடுகிறார்களாக்கும் , அதனாலதான் சைனாவில அதிகம் பேர் 100 வயசுக்கு மேல வாழ்கிறார்களாம் ஹா ஹா ஹா.. எனக்கும் ஒன்று பிடிச்சுத் தாறீங்களோ?:))..

    பொக்கிஷம் நன்று, டெல்கியில் இந்திராகாந்தி வீடு பார்த்தபோது இப்படிப் பல பொக்கிஷங்கள் இருந்தது நினைவுக்கு வருது, உங்களுடையதைப் பார்க்கும்போது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சைனீஸ்காரர்கள் அதை மட்டுமா சாப்பிடுகிறார்கள்?  எதெதையோ சாப்பிடுகிறார்கள்!

      நீக்கு
  35. நண்பரிடம் பேசும் போது அவர் அம்மாவுடன் பேசி இருக்கலாம் நீங்கள்,
    சீராமாவை மறந்து இருக்க மாட்டார்.
    பழைய படி அந்த அம்மாவின் சீராமா அழைப்பை கேட்க ஆவலுடன் இருந்து இருப்பீர்கள் ! ஏமாற்றம் வருத்தமாக வந்து இருக்கிறது கட்டுரையில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரிடம் கேட்டேனே..  தலையாட்டி விட்டு வேறு பக்கம் பார்க்கத் தொடங்கி விட்டார்.

      நீக்கு
    2. மறதி நோயில் இருந்து இருப்பார்களோ!

      நீக்கு
    3. இருந்திருக்கலாம்.  பேத்தி கல்யாண பரபரப்பில் இது காதில் விழுமா? இதற்கு முக்கியத்துவம் கொடுக்காமலும் இருந்திருக்கலாம்.

      நீக்கு
  36. மனம் ஒத்த தம்பதிகளில் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்வது என்பது சோகமே . காலஓட்டமும் மனத்திடமும் வேண்டும்.

    நட்புக்களின் அம்மா கண்டு கொள்ளாதது மனதுக்கு கஷ்டமாக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!