செவ்வாய், 23 மே, 2023

சிறுகதை - பெரியதம்பி - துரை செல்வராஜூ

 பெரியதம்பி

***************


" வாங்க பஞ்சநதம்... "

வாஞ்சை குறையாத வரவேற்பு.. 

பெரிய வீடு என்பதால் சொல்ல வேண்டுவதில்லை..

காவிரிப் பாசனத்தில் ஐம்பது ஏக்கர்.. தொன்று தொட்டு வரும் சாகுபடி. ஒவ்வொரு போகத்துக்கும் சும்மா ரெண்டு தடவை போய் பார்த்து விட்டு வந்தால் போதும்.. மூட்டை மூட்டையாய் நெல்லை வீட்டுக்கு அனுப்பி விடுவாள் தாய் எனும் காவேரி..

ரொம்ப காலமாகவே இதுதான் வழக்கம்.  என்ன ஒரு வித்தியாசம் என்றால்,

அன்றைக்கு உழவு மாடுகளோடு சரிக்கு சரியாக மனிதர்கள்..

இன்றைக்கு விவசாயத்தில் ஆள் பண்ணையம் என்பதே இல்லை..  

எல்லாருக்கும் சுதந்திரம்.. சுதந்திரத்தால் வந்தது எல்லாம் எந்திரம்.. எந்திரத்திற்கு நாலு ஆள் என்பதே அதிகம்.. 

ஏன்..  சனத்தொகை குறைந்து விட்டதா என்றால் சாகுபடி வேலைக்கு மட்டுமே ஆள் வருவதில்லை..

தினசரி ரெண்டு ரயில் பெங்களூருக்கு வழிய வழிய  போகுதே..  திருப்பூருக்கு போற பஸ்ல எல்லாம் கூட்டமான கூட்டம் தானே!..

இங்கே நம்ம பூமிக்கு மட்டும்  முகம் காட்டுறதுன்னா கஷ்டமா இருக்கு.. முன்பெல்லாம்  வெளையாத மண்ணைப் பார்த்து - வானம் பார்த்த பூமின்னு சொல்லுவாங்க.. இப்போ வானம் முகங் காட்டுனாலும் மனுசன் முகங்காட்டுறது இல்லை.. 

ஆத்துல தண்ணி ஓடுனாலும் பாதிக்கு மேல விளைச்சல் இல்லாத பூமின்னு ஆகிட்டது..

ஆதாயம் இல்லாத வேலைன்னு யாரும் மெனக்கெடறது இல்லை.. அதனால  திடலாக்கிப் போட்டு வந்த விலைக்கு வித்து தின்னுட்டுப் போயிடறாங்க
 
மனிதன் காலத்தை மாற்றுகின்ற காலம் இப்போது.. 

இன்றைய சூழலில் இப்படியும் சிலர்..

" வர்றேன்.. பெரியதம்பி!.. " வாசலில் சைக்கிளை நிறுத்தி  அங்கேயே செருப்பையும் கழற்றிப் போட்டு விட்டு கையில் ஒரு பையுடன் வந்த பஞ்சநதம்  திண்ணையில் அமர்ந்தார்..

சுற்றிலும் முப்பது கிலோ மீட்டருக்கு இவர் தான் சமையல் சக்கரவர்த்தி..
பஞ்சநதம் மாதிரி  யாரும் கிடையாது.. சொல்லி அடிக்கிற மாதிரி சாம்பார் ரசம் வத்தக்குழம்பு.. உட்கார்ந்து சாப்பிடுகிற யாருக்கும் எழுந்திருக்க மனம் வராது..

பொண்ணு பார்த்து நிச்சயம் பண்ற போதே இவர் கிட்ட தேதி கேட்டு வாங்கிக் கொள்வது என்றொரு பேச்சும் உண்டு ஊருக்குள்.. அந்த அளவுக்கு பிரசித்தம்..

" நியாயமா நாந்தான் தேடி வந்திருக்கணும்.. உள்ள வந்து உட்காருங்க.. " - என்று அழைத்து முன் கூடத்தில் நாற்காலியில் அமர வைத்தார் பெரிய தம்பி எனப்பட்ட சுவாமிநாதன்..

முகத்தில் மாறாத புன்னகை..

" அதென்ன அப்படி சொல்லிட்டிங்க!..  உங்க குரல கேட்டு ஓடி வர மாட்டேனா.. "

" ஏதோ ஒரு அன்புல பேர் சொல்லிக் கூப்பிடுறேனே தவிர உங்களுக்கு எங்க அப்பா வயசு!.. "

" சிவ சிவா.. அவங்கள்ளாம் தெய்வம் மாதிரி.. மூணு தலைமுறைக்கு மேலா திருவையாத்து பல்லாக்கு பாக்க வர்ற ஜனங்களுக்கு அன்னதான விருந்து பண்ணி வெச்சவங்களாச்சே.. "

பஞ்சநதத்தின் மனத் திரையில் கடந்த காலக் காட்சிகள் விரிந்தன..

நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்தே - பெரிய வீட்டு வாசல்ல தெருவடைச்ச பந்தல் போட்டு,  வாழை மரம் கட்டி பனையும் பாக்கும் தென்னங்குலையுமா மாவிலைத் தோரணம் ஆடிட்டு இருக்கும்.. 

ஆரவாரத்தோட வர்ற பல்லாக்குகள் கடைக்கால் போட்டு பந்தல்ல நிக்கும்... அரை மணி நேரத்துக்கு மேளக் கச்சேரி.. மண்டகப்படி தீப ஆராதனை முடிஞ்சதும் வீட்டுல உள்ள எல்லாரும் விழுந்து கும்பிடுவாங்க..

ஐயருங்களுக்கும் நாதஸ்வர கோஷ்டியாருக்கும் சம்பாவனை... பல்லக்கு தூக்கும் ஆட்களுக்கும் பாதந் தாங்கிகளுக்கும் வேட்டி துண்டு.. 

அவ்வளவு ஏன்?.. 

பட்டறை  வண்டியை இழுத்துக்கிட்டு வர்ற மாடுகளுக்கும் கொம்புல பரிவட்டம் கட்டி பருத்திக் கொட்டை புண்ணாக்கும் பச்சரிசி தவிடும் வெச்சி கொண்டாடும் குடும்பம் இது.. 

பரம்பரை பாரம்பர்யம் இவங்களை விட்டுட்டு வேற எங்கே போகும்!..

" அது இருக்கட்டும்... இப்போ எதுக்குக் கூப்பிட்டிருக்கேன் தெரியுமா?.. "

நிகழ் காலத்துக்கு மீண்டு வந்தார் பஞ்சநதம்..

" சொல்லுங்க கேட்டுக்கறேன்.. பெரிய குழந்தைக்கு கலியாணம் குறிச்சாச்சா?.. அப்படின்னா நளபாகம் உக்ராணம் பண்றதுக்கு என்னய கூப்பிட்டிருப்பீங்களே!.."

சிரித்தார் பஞ்சநதம்..

" வைகாசிக்கு மேலதான் அந்தப் பேச்சயே எடுக்கணுமாம்.. இது பல்லாக்கு விஷயம்.. திருவையாறு கோயில்ல கொடியேத்த நாள் குறிச்சாச்சு.. இன்னைக்கி சரியா முப்பதாம் நாள் நம்ம ஊருக்கு பல்லாக்கு வருது!.. "

" அடடே... மறந்தே போய்ட்டேன்..  கோட்டை அடுப்பு புகையில நிக்கிறதுல கண்ணு எரிச்சல்.. பேப்பர் பார்க்கறதும் இல்லை.. படிக்கறதும் இல்லை..
அப்போ உத்தேசமா ஆயிரத்து ஐநூறு பேருக்கு சாப்பாடு?.. " - நேராக விஷயத்துக்கு வந்தார் பஞ்சநதம்..

" அந்தக் கணக்கு எல்லாம் யாருக்குத் தெரியும்?..  பல்லாக்கு வந்து இருந்து மறுபடியும் புறப்படற வரைக்கும் வழக்கம் போல தான்.. "

" சரி!.." 

"  மீனாட்சியக்கா வீட்ல வெளியூர்ல இருந்து வர்ற முன்னூறு அடியார்களுக்கு மகேஸ்வர பூஜை..  காலை சாப்பாடு.. இட்லி, பொங்கல், கேசரி காஃபி.. அது தனி..  "

" சரி!.. "

" நம்ம வீட்டுப் பந்தல்ல மத்தியானம் வரைக்கும் நீர் மோர் பானகம்.. பதினோரு மணிக்கு மேல சாப்பாடு. இந்த வருசம் மேஜை போட்டு.. " 

"அப்படியா!.. "

" தஞ்சாவூர்ல இருந்து அவங்களே கொண்டு வந்து போட்டு நிர்வாகம் பண்ணிக்கிறாங்க.."

" நமக்கு ஏத்து கூலி எறக்கு கூலி மிச்சம்!.. " மெல்லிய சிரிப்பு..

" அதுவுமில்லாம குனிஞ்சு நிமிர்ந்து  பரிமாற யாருக்கும் இடுப்புல தெம்பு இல்லே..  தரையில உட்கார்ந்து எழுந்திரிக்க மூட்டுலயும் சத்து இல்லே!... " 

" அதுவும் சரிதான்!.. "

" அது பத்திப் பேசறதுக்குத் தான் உங்கள வரச் சொன்னேன்!.. "

" அப்போ பெரிய பட்டியலா இருக்குமே!.." - பஞ்சநதம் வியந்தார்..

பெரியதம்பி முகத்தில் மலர்ச்சி.. 

" இருக்கட்டும்.. இப்ப கை வசம் பதினைஞ்சு மூட்டை பொன்னி..  நூறு கிலோ துவரம் பருப்பு, அஞ்சு டின் கடலெண்ணெய் இருக்கு.. தேங்காய்க்கு பிரச்சினை இல்லை..  இன்னும் வேணுங்கறதை ஒரு வாரத்துக்கு முன்னால எடுத்துக்கலாம்.. "

" கடலெண்ணெய் தேவைக்கு அதிகம்.. " மெல்லிய குரலில் பஞ்சநதம் சொன்னார்..

" வடை, அப்பளத்துக்கு வேணாமா?.. "

"  பாமாயில் இருக்கே!.. "

" பாமாயில் திருப்தி இல்லை.. பலதரப்பட்டவங்களும் வர்றாங்க. இப்போதான் சின்ன வயசு பசங்களுக்குக் கூட  புதுசு புதுசா பிரச்சனைங்க வந்துக்கிட்டு இருக்கே.. "

"  எல்லாம் கெரகம்.. "

" நாலு காய் போட்டு சாம்பார், வற்றல் குழம்பு, ரசம் மோர்,  கோஸ் பொரியல்,  புடலங்காய் கூட்டு, பட்டாணி உருளைக் கிழங்கு மசாலா , தயிர்ப் பச்சடி, ஊறுகாய், அப்பளம் வடை பாயசம்!.. " - விவரித்தார் பெரியதம்பி..

"தாராளம்.. தாராளம்!.. "

" முக்கியமா ஒரு விஷயம்.. உங்களுக்கு தெரியாதது இல்லை.. உப்பு புளி காரம் மூணும் ஒரு கை கம்மியாவே இருக்கட்டும்.."

" நீங்க சொன்னா சரி..  இதுக்கு மேல வேற என்ன வேணும்.. பகவான் அனுக்ரகம் தான்!.. "

பஞ்சநதம் வானத்தை நோக்கிக் கை கூப்பினார்..

" ஆனா.. அதுல பாருங்க தம்பி!.. " -  ஒரு நிமிடம் பஞ்சநதம் தயங்கினார்..

" சொல்லுங்க.. "

" தோராயமா ஆயிரத்து ஐநூறுன்னு வெச்சுக்குவோம்..  நாலு தடவையா  வடை போட்டு எடுத்துக்கலாம்.. அதுக்கு மேல தேவைன்னா உளுந்தம் பருப்பு ஊற வெச்சு கழுவி எடுத்து அரைக்கணும்.."

" சரி.. " - பெரியதம்பியின் முகத்தில் யோசனை..

" அதுக்கு மேல ஜனங்க கூட்டம் ஜாஸ்தி ஆகிடுச்சின்னா உளுந்து ஊற வெச்சு அரச்சு எடுக்கறது கதைக்கு ஆகாது.. அதனால.. "

" அதனால?.. "

" கைக்கு அவசரமா பஜ்ஜி போட்டுடலாம்.. நாலு சீப்பு மொந்தன் காய் மட்டும் தனியா இருக்கட்டும்.. "

" இருக்கட்டுமே!.. அதெல்லாம் உங்க இஷ்டம்.. நீங்க தீர்மானம் பண்ணிக்குங்க..  கைக்கு எத்தன ஆள் வேணுமோ வச்சிக்குங்க!.. "

" எங்கிட்ட முப்பது பேர் இருக்காங்க.. இன்னும் இருபது பேர சேர்த்துக்குவோம்!.. " - பஞ்சநதம் கணக்கிட்டார்..

" வேலையாளுக்குப் பிரச்னை இல்லை.. தெருக்காரங்களும் ஒத்தாசைக்கு வருவாங்க..  எல்லாம் நல்லபடியா இருக்கணும்.. அவ்வளவு தான்!.. "

" இருக்கும்.. இருக்கும்..  உங்க மனசு போல எல்லாம் நல்லா இருக்கும்.. "

" இன்னைக்கு நாள் நல்லா இருக்கு.. உங்க கையால பிள்ளையார் சுழி போட்டுட்டீங்கன்னா சந்தோஷம்!.. "

" போட்டுடுவோம்!.. " பஞ்சநதத்தின் வார்த்தைகளில் உற்சாகம்..

" செல்வி!.. "

 " என்னப்பா?.. "


மின்னல் என ஓடி வந்து நின்றாள் இளைய மகள்..

" உள்ளேயிருந்து ரெண்டு வெள்ளைத்தாள், பேனா.. எடுத்துக்கிட்டு வாம்மா.. "

" தம்பி.. நான் இந்த வருசம் அறை சாமானுங்களுக்குன்னு  தனி நோட்டு போட்டுட்டேன்.. அரிசி பருப்புல இருந்து அத்தனை மளிகைச் சாமான்களும் இதுல இருக்கு..  மனைப் பலகையில இருந்து  தண்ணி டிரம் ஜமக்காளம் வரைக்கும் சேர்த்து அச்சடிச்சாச்சு.. ஒன்னொண்ணுக்கும் தேவை எழுதிட்டா போதும்!.. "  - என்று சிரித்தபடி கைப் பையைத் திறந்தார் பஞ்சநதம்..

" அப்படியா.. சரி... தாம்பூலத் தட்டு எடுத்துக்கிட்டு  அம்மாவ வரச் சொல்லுமா செல்வி!. "

" ம்.. " என்றபடி அந்தப் பெண் வீட்டுக்குள் ஓடினாள்..

சில விநாடிகளில் பெரிய தம்பியின் இல்லத்தரசி கையில் வெற்றிலை பாக்கு தட்டுடன் வெளிப்பட்டாள்..

அந்தத் தட்டில் மஞ்சள் தடவப்பட்ட தேங்காயுடன்   புத்தம் புதிதாய் ஐம்பது ரூபாய் கட்டுகள் இரண்டு இருந்தன..

"  வாங்கிக்கங்க பஞ்சநதம்!.. "

" ஐயாறா.. ஐயாறா!.. " - என்றபடி தாம்பூலத்தை வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்ட  பஞ்சநதம் கையில் இருந்த நோட்டுப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் பிள்ளையார் சுழியுடன் எழுத ஆரம்பித்தார்..

அறம் வளர்த்த நாயகி துணை

அன்னதானப் பிரியை நமோ நமஹ..

***
பிற்சேர்க்கை : (24-05-2023) 

இந்தப் படம் சரியாக இருக்கிறதா? 
99 கருத்துகள்:

 1. காலை வணக்கம் அனைவருக்கும்.

  இந்த கேஜிஜிக்கு வாய்ப்பு வந்துவிட்டால்..... ஹாஹாஹா படத்தைச் சொன்னேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பஞ்சந்தம் படம் போட்டிருக்கலாம். இல்லை இருவரும் பேசிக்கொள்ளும் படம் போட்டிருக்கலாம். பல்லாக்கு, வாழைப் பந்தல் தோரணம், இல்லை தாட்டை இலையில் சாப்பாடு என்றெல்லாம் வாய்ப்பு இருந்தும், மங்களகரமா இருக்கணும் என்பதற்காக செல்வி படம் போட்டிருக்கிறார் போலிருக்கு

   நீக்கு
  2. ஹாஹாஹா நெல்லை நானும் கிட்டத்தட்ட இதே தான் நினைத்தேன் ஆனா அம்மா படம் இல்லை பெண்ணின் படம்னு சொல்லிருக்கிறேன். அம்மா தாம்பூலத்தோடு வருவதும் மங்களகரம்தானே!!!

   கீதா

   நீக்கு
  3. நெல்லை அவர்களின்
   அன்பு வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நலம் வாழ்க..

   நீக்கு
  4. பெரியவீட்டு பெரியதம்பியின் பாரியாளைப் படம் வரைந்து பார்ப்பதில் என்ன புண்ணியம்?..

   பெரிய பொண்ணுக்கு திருமணப் பேச்சு எடுத்தாச்சு..

   சின்னப் பெண்ணை படம் வரைந்து மனதைக் கவர்ந்தது விட்டால் காவேரிக் கரையில் சம்பந்தம்..

   ஆகா!..

   விடலை மனங்களில் வாண வேடிக்கை தான்!..

   நீக்கு
 2. சிறுகதையை மிகவும் ரசித்தேன். அந்த கால தனவான்களின் மனசும் தவசுப்பிள்ளைகளின் நேர்மையும் ஈடுபாடும் கண்ணில் வந்து போனது. ஆயிரத்தைநூறு பேர்களுக்கும் இலைக்கென்ன குறைச்சல். ஐயாறப்பனை ஒரு எட்டு பார்த்துவிட்டு பந்திக்கு முந்திக்க வேண்டியதுதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அந்த கால தன வான்களின் மனசும் தவசுப்பிள்ளைகளின் நேர்மையும் ஈடுபாடும் கண்ணில் வந்து போனது.//

   இன்றைக்கும் நிறைவாக இருக்கின்றன..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
  2. // அந்த கால தன வான்களின் மனசும் தவசுப்பிள்ளைகளின் நேர்மையும் ஈடுபாடும் கண்ணில் வந்து போனது.//

   இந்தக் காலத்திலும் தழைத்து இருக்கின்றது..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. பல்க்குத் தூக்கிகளும் ஶ்ரீபாதம் தாங்கிகளும் ஒன்றே அல்லவா?

  தின்னுட்டுப் போயிடறாங்க. தட்டச்சுப் பிழை

  நரையில் உட்கார்ந்து சாப்பிடும் ஆட்களும் குறைவு, அதைவிட பரிமாறுவதற்கும் ஆட்கள் அருகிக்கிட்டு வராங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. தட்டச்சுப் பிழை..

   ஸ்ரீராம் அவர்கள் தான் சரி செய்ய வேண்டும்..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

  2. @ நெல்லை
   // பல்லக்குத் தூக்கிகளும் ஶ்ரீபாதம் தாங்கிகளும் ஒன்றே அல்லவா?..//

   இங்கே பல்லக்கை
   ஆட்கள் தூக்கி வரும்போது பல்லக்கை - வேறு சிலர் கடைக்கால் தூக்கி வந்து
   வைத்து அதில் நிறுத்துகின்றார்கள்..

   நான் சற்று குழம்பி விட்டேன்..

   அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. மிரர் ரிஃப்ளெக்ஸன் உட்படுத்தி படம் வரைவது கஷ்டம் எங்கேயாவது தடுமாறி விடும். . கே ஜி ஜி சாருக்கு பாராட்டுக்கள்.


  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆனாலும் மிர்ரரில் முகம் தெரிய வேண்டும் என்றால் மிர்ரரைப் பார்க்க வேண்டும் அல்லவா? அங்கே சறுக்கி விட்டீர்கள். இரண்டு படமும் ஒரே நேர் பார்வையாக இருக்கிறது.

   Jayakumar

   நீக்கு
  2. கண்ணாடியில் பிம்பத்தையும், செல்வியையும் ஒருங்கே பார்ப்பது, பார்வையாளராகிய நாம்தான்.
   செல்வி கண்ணாடியைப் பார்க்கவில்லை. தன்னுடைய அப்பாவைத் தான் பார்க்கிறாள்.

   நீக்கு
  3. தவறு. செல்வி கண்ணாடியைப் பார்த்தால் தான் செல்லியின் முகம் கண்ணாடியில் தெரியும். நேரே பார்க்கும்போது பின்தலையும் சடையும் தான் தெரியும். அந்தக்கால போட்டோக்கள் அவ்வாறு எடுக்கப்பட்டன.
   Jayakumar

   நீக்கு
  4. தவறு என்றால், படத்தை நீக்கிவிடட்டுமா?

   நீக்கு
  5. தவறு என்று சொன்னது என் தவறு. என்ன செய்வது. குறைகள் தான் என் கண்ணில் முதலில் தென்படும்.

   படத்தை நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தோன்றுகிறது. மற்றவர்கள் படம் சரி என்று ஒப்புக்கொண்டுள்ளனர்.

   Jayakumar

   நீக்கு
  6. கண்ணாடி செல்விக்குப் பின்னாடி இல்லை; இதை முன்னாடி எப்படி படத்தில் கொண்டு வருவது என்று அரைமணி நேரம் குழம்பினேன். செல்விக்குப் பக்கவாட்டில் - 90 degree கோணத்தில் அது உள்ளது என்பதை படத்தில் கொண்டுவர சுலபமாக முடியவில்லை. ஜெ ச சொல்லியிருப்பது இதைத்தான் என்று நினைக்கிறேன். இதே போன்ற படம் இனிமேல் வரையும்போது அதைக் கொண்டுவர முயற்சி செய்கிறேன். நன்றி.

   நீக்கு
  7. அழகான படத்திற்கு நன்றி.. நன்றி..

   நீக்கு
  8. சித்திரம் அழகாக இருக்கின்றது.. நன்றி.. நன்றி..

   நீக்கு
  9. சித்திரம் அழகாக இருக்கின்றது..

   நன்றி.. நன்றி..

   நீக்கு
 5. கதை மிக நன்று, துரை அண்ணா.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

   நீக்கு
  2. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

   நீக்கு
  3. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

   நீக்கு
  4. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

   நீக்கு
  5. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ

   நீக்கு
 6. கௌ அண்ணா படம் ரொம்ப நல்லாருக்கு.

  ஆனா பாருங்க செல்வியோட அம்மா தாம்பூலத்தோடு வர படம் வரையாம செல்வியோட படம் மட்டும் வரைஞ்சிருக்கீங்களே! வர வர அண்ணா டீன் ஏஜ்!!!! நெல்லை, என்னை மாதிரி சின்ன பசங்களுக்காகவா!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இளவட்டங்களாகிய எங்கள் ரசனைக்குப் படம் போட்டிருக்கிறார். நீங்கன்னா (கீர), காலம் கெட்டுப்போன காலத்துல கிட்டத்தட்ட ஸ்லீவ்லெஸ்ஸா, ஏதோ பரவாயில்லை தாவணியை ஒழுங்கா போட்டிருக்கா, பொட்டு கொஞ்சம் பெருசா வச்சிருந்தாத்தான் என்ன என்றெல்லாம் விமர்சிப்பீங்க.

   நீக்கு
  2. // இளவட்டங்களாகிய எங்கள் ரசனைக்குப் படம் போட்டிருக்கிறார்.//

   ஆகா.. ஆகா..
   அருமை..

   நீக்கு
  3. // இள வட்டங்களாகிய எங்கள் ரசனைக்குப் படம் போட்டிருக்கிறார் //

   ஆகா.. ஆகா..
   அருமை..

   நீக்கு
 7. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்களுக்கு அன்பின் நல்வரவு..

  இன்று எனது கதையினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

  பதிலளிநீக்கு
 8. நெடு நாட்களுக்குப் பிறகு கை வண்ணம் காட்டியிருக்கும் சித்திரச்செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

  பதிலளிநீக்கு
 9. காக்க காக்க
  கனக வேல் காக்க..
  நோக்க நோக்க
  நொடியில் நோக்க..

  இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
  பிரார்த்திப்போம்..

  எல்லாருக்கும் இறைவன்
  நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 10. அம்புவிடுகிற மூடில் ஓவியர்..
  கதையப் படிக்க நேரமில்லன்னு, படத்தப் பாத்துட்டு ஓடிடப்போறாங்க !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா. தனுசு ராசிக்காரர். ஏழரையிலிருந்து அம்பு போல விடுபட்ட சந்தோஷம்.

   நீக்கு
  2. ஏழரை இன்னும் முடியலையே. வருடக் கடைசீன்றாங்க.

   நீக்கு
  3. விடமாட்டேன் என்கிறார் மிஸ்டர் சனீஸ்

   நீக்கு
  4. சனிப்ரீதி செய்யுங்கள்..

   நலமாகும்..

   நீக்கு
  5. சனிப்ரீதி செய்யவும்..
   நலமாகும்..

   நீக்கு
 11. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே.

  கதை அருமையாக உள்ளது. அவ்வூரின் மனச்செழுமை நிறைந்த மனிதர், சமையலை தம் ஜீவனமாக எண்ணாது, பொறுப்புடன் கூடிய கலையாக நினைக்கும் சமையல் செய்பவர் இருவருமிடையே நடக்கும் உரையாடல்கள் மனதை கவர்ந்தன. மிகவும் ரசித்துப் படித்தேன்.

  நேரடியாகவே அவர்கள் அருகில் இருந்து அவர்களின் உரையாடல்களை கேட்டு ரசிப்பது போன்ற இந்த உணர்வை தங்களால் மட்டுமே தர முடியும். அருமையான கதையை தந்தமைக்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றியும்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // உரையாடல்களை கேட்டு ரசிப்பது போன்ற இந்த உணர்வை.. //

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 13. தஞ்சாவூர் வட்டார வழக்கு சொற்கள் கலந்த கிராமத்துக்காரர்களின் வெள்ளந்தியான பேச்சையும் மரியாதை காட்டும் பாங்கையும் தேங்காய், பாக்கு வெற்றிலையுடன் முன் பணம் கொடுக்கும் நேர்த்தியையும் மிக அழகாய் எழுதியிருக்கிறீர்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 14. வணக்கம் கௌதமன் சகோதரரே

  கதைக்கேற்ற காரிகை படமும் அமர்க்களமாக வந்துள்ளது. அந்த இளைய பெண் முகத்தில், அவளது அப்பாவின் தயாள குணம், பல்லக்கு ஊருக்குள் வரும் அன்று வயிறு குளிர அனைவருக்கும் அன்னதானம் செய்வித்து வரும் உறவு, பக்த கூட்டங்களை திருப்தியடைய வைக்கும் நிறைவான அந்த நல்ல குணம் அப்படியே குடி கொண்டுள்ளது. பாராட்டுக்கள். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாராட்டுக்கு நன்றி.

   நீக்கு
  2. கதைக்கேற்ற காரிகை..

   அருமை.. அருமை..

   நீக்கு
  3. அந்த இளைய பெண் முகத்தில், அவளது அப்பாவின் தயாள குணம் தெரிகின்றது..

   உண்மை.. உண்மை..

   நீக்கு
 15. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 16. கதை மிக அருமையாக இருக்கிறது.படமும் நன்றாக வரைந்து இருக்கிறார் சார்.

  மின்னல் என ஓடி வந்து நின்றாள் இளைய மகள்..//
  இளைய மகள் படம் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 17. கதையில் உரையாடல் மிக நன்றாக இருக்கிறது.

  //ஐயாறா.. ஐயாறா!.. " - என்றபடி தாம்பூலத்தை வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்ட பஞ்சநதம் கையில் இருந்த நோட்டுப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் பிள்ளையார் சுழியுடன் எழுத ஆரம்பித்தார்..

  அறம் வளர்த்த நாயகி துணை

  அன்னதானப் பிரியை நமோ நமஹ..//

  அறம் வளர்த்த நாயகி பஞ்சநதம் அவர்கள் நளபாகத்தை சுவைக்க வருவாள். அன்னதானத்தை ஏற்க வரும் பக்தர்கள்அனைவரின் வயிறும், மனமும் குளிரும்.
  பெரியதம்பியும் ஆண்டு தோறும் அன்னதானத்தை தொடருவார், அவர் குடும்பத்திற்கு அறம்வளர்த்த நாயகி நன்மைகளை அருள்வாள்.  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // அறம் வளர்த்த நாயகி பஞ்சநதம் அவர்கள் நளபாகத்தை சுவைக்க வருவாள்.//

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 18. அருமையான உரையாடல்களுடன் கதை மனதைத் தொட்டது.

  இக்காலத்தில் இவர்களைப் போல் யார் இருப்பார்கள் ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இக்காலத்திலும் இவர்களைப் போல் இருக்கின்றார்ர்கள்..

   சென்ற மாதம் நடந்த திருவையாறு பல்லாக்கு விழாவே சாட்சி!..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 19. எக்காலத்திலும் இப்படியான ஆட்கள் இருப்பார்கள். அருமையான கதை. உரையாடல்கள் அவரவர் குரலில் காதிலேயே விழுகின்றாப்போல் ஓர் பிரமை. நல்ல சாப்பாடு போட வேண்டும் என்னும் எண்ணம் கை தேர்ந்த சிறந்த சமையல்காரரால் நிறைவடையப் போகிறது.

  கதையைப் படிக்காமல் படத்தைப் பார்த்தால் ஏதோ காதல் கதை எனத் தோன்றும் திரு ஜேகே நினைச்சாப்போல் நானும் நினைச்சேன். கண்ணாடியில் எப்படி முகம் தெரியும்? பின்னால் உள்ள பின்னல், முதுகுனு இல்லையோ தெரியணும்னு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // உரையாடல்கள் அவரவர் குரலில் காதிலேயே விழுகின்றாப்போல் ஓர் பிரமை. //

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 20. பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..

   நீக்கு
 21. கதை நன்றாக இருக்கு. நாதம்.. நதம் ஆகிவிட்டதுபோல பெயர் புதுசா இருக்கு.

  அதுசரி இடையில, சந்தடி சாக்கில் செல்விக்கு அம்பு விடுவது ஆரூஊஊஊ?:)..
  ஊ.கு:
  இது வேற இடையாக்கும் ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // அதுசரி இடையில, சந்தடி சாக்கில் செல்விக்கு அம்பு விடுவது.. //

   எல்லாம் வாலிபப் பசங்க தான்..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி அதிரா..

   நீக்கு
  2. ஒரு வருடத்திற்குப் பிறகு எங்கள் பதிவுக்கு வந்த அதிரடி அதிரா, வந்ததும் என்னை கேலி செய்வது முறையா! :))

   நீக்கு
  3. //எல்லாம் வாலிபப் பசங்க தான்../// நீங்க கெள அண்ணனைச் சொல்லலியே துரை அண்ணன்:).

   ///வந்ததும் என்னை கேலி செய்வது முறையா! :))/// ஹையோ ஆண்டவா நான் எங்கின கேலி செய்தேன்:)) நான் இடையைப் பற்றித்தானே கதைச்சேன்.. இப்பவும் சொல்றேன் இது வேற இடையாக்கும் ஹையோ ஹையோ மீ ரொம்ப நல்ல பொண்ணு சின்ஸ் 6 இயேர்ஸ்:)))

   நீக்கு
 22. @ நெல்லை

  // இந்த கேஜிஜிக்கு வாய்ப்பு வந்து விட்டால்... ஹாஹாஹா படத்தைச் சொன்னேன்...//

  கண் திருஷ்டியாகி விடப் போகின்றது.. சுற்றிப் போட்டு விடவும்..

  பதிலளிநீக்கு
 23. உரையாடல் சுவாரசியம். " நாலு காய் போட்டு சாம்பார், வற்றல் குழம்பு, ..." விருந்து விவரம் அட்டகாசம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஐயா..

   நீக்கு
 24. @ அதிரா அவர்களுக்கு..

  நாதம் - ஒலி, இசை
  நதம் - நதி..
  பஞ்ச நாதம் அல்ல..
  பஞ்சநதம் என்பதே சரி....

  பஞ்சநதீசுவரர் என்பது இறைவனின் பெயர்..
  ஐந்து ஆறுகளை உடையவர் என்பது அர்த்தம்..

  பஞ்சநதம் என்பது தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் பழக்கமான பழைய காலத்துப் பெயர்..
  நன்றி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ///நதம் - நதி..
   பஞ்ச நாதம் அல்ல..
   பஞ்சநதம் என்பதே சரி...//

   ஓ உண்மையாவோ எனக்கு இது தெரியாது, மிக்க நன்றி துரை அண்ணன், ஆனாலும் மீக்கு டமில்ல டி ஆக்கும்:)..

   நீக்கு
 25. சிறப்பான சிறுகதை. படிக்கும்போதே மனதில் காட்சிகள் கண்முன் விரிந்தன. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..

   தங்கள் வருகையும் கருத்தும் பாராட்டும் வாழ்த்துகளும்.
   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 26. வீட்டில் நடக்கும் விசேஷத்திற்கு தயாராவது போல் கோவில் திருவிழாவுக்காக தயாராகும் மாண்பு மெச்சத்தகுந்தது. இன்று காலைதான் நினைத்துக் கொண்டேன் முன்பெல்லாம் அறுவடை நடந்து அதற்குப் பின்னரும் நிறைய வேலை இருக்கும், இப்போதெல்லாம் மிஷன்கள் வந்த பிறகு வேலைகள் ஒரே நாளில் முடிந்து விடுகின்றன. அதனால் இந்தக் கால குழந்தைகளுக்கு சாலடித்தல், தூத்துதல் போன்ற பெயர்கள் கூட தெரியாது. 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அதனால் இந்தக் கால குழந்தைகளுக்கு சாலடித்தல், தூத்துதல் போன்ற பெயர்கள் கூட தெரியாது. //

   உண்மை தான்..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி

   நீக்கு
 27. படம், அழகான பொருந்தாத பிழை.

  பதிலளிநீக்கு
 28. அதுவும் சரி..
  இதுவும் சரி..

  மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!