ஞாயிறு, 21 மே, 2023

நான் பயணம் செய்த இடங்கள் :: குருவாயூர் யானை கொட்டாரம் :: நெல்லைத்தமிழன்

 

நான் பயணம் செய்த இடங்கள்

நெல்லைத்தமிழன் 

(மார்ச்-2023) குருவாயூர் யானை கொட்டாரம் – பகுதி 3 / 3 

வருடத்திற்கு ஒரு முறை குருவாயூர் கோவில் முன்பு (கிழக்கு வீதியில்) யானையோட்டம் என்று ஒன்று நடைபெறுகிறது. அது எப்படி இருக்கும் என்று என்னால் ஊகிக்க முடியவில்லை. என் பெண் இந்த யானையோட்டத்தைப் பார்க்கணும் என்று நினைத்தாள். அதற்காகவே இரயில் டிக்கெட் புக் பண்ணியிருந்தாள். ஆனால் அவள் வரும் சந்தர்ப்பம் அமையவில்லை.

நானும், தட தடவென யானைகள் எப்படி ஓடிக்கொண்டு வரும், அதை எப்படி ஒழுங்குபடுத்துவார்கள் என்று யோசித்தேன்.

14ம் நூற்றாண்டில் சமோரின்கள் (கிறித்துவ மதத்தைத் தழுவிய நாயர்கள்) கோழிக்கோடை ஆண்டனர். அப்போது குருவாயூர் கோவிலுக்கு என்று யானைகள் கிடையாது. அதனால் அரசனின் கொட்டடியிலிருந்து யானையை அனுப்பும் வழக்கம் இருந்ததாம். ஒரு சமயம் அரசன், யானைகளை அனுப்பவில்லையாம். வருடாந்திர உற்சவம் குருவாயூர் கோவிலில் நடக்கும் அன்று, தாமாகவே ஆண் யானைகள் சமோரின் அரசனின் கொட்ட டியிலிருந்து குருவாயூர் கோவிலை நோக்கி ஓட ஆரம்பித்ததாம். இதனை நினைவுகூறும் விதமாக இந்த யானையோட்ட த்தை வருடத்தில் ஒரு நாள் கொடியேற்றத்தின்போது நடத்துகிறார்கள். அந்த பத்து நாட்கள் உற்சவத்தில், ஓட்டத்தில் வெற்றிபெற்ற யானை, குருவாயூரப்பனின் திருவுருவைச் சுமந்துகொண்டு சீவேலி எனப்படும் நிகழ்வில் பங்கேற்கும்.







கோவிலிலிருந்து மணிகளை எடுத்துக்கொண்டு யானைகள் அணிவகுத்திருக்கும் இடத்தை நோக்கிப் பலர் ஓடுகின்றனர் (யானைக்குக் கட்டுவதற்கா என்று தெரியவில்லை). சிறிது நேரத்தில் முன்னே ஒரு வாகனம் பாதுகாப்புக்காக வர ஆரம்பிக்க பின்னே யானைகளின் ஓட்டம் ஆரம்பிக்கிறது.







அதனைத் தொடர்ந்து கோவில் நோக்கிச் செல்லும் மக்கள் வெள்ளம். ஓட்டப் பந்தயத்தில் முதலாவதாக வந்த யானைக்கு கோப்பை பரிசாகக் கொடுத்திருப்பார்கள். ஒருவேளை கீழே நின்றுகொண்டிருந்தால் கோவிலில் நடந்தது என்ன என்று பார்த்திருக்கலாம்




மார்ச் 1ம் தேதி, திருவித்துவக்கோட்டிலிருந்து திருநாவாய் என்ற ஸ்தலத்திற்கு டெம்போ வண்டியில் சென்றுகொண்டிருந்தோம். வழியில் 2 கிமீ தூரத்திற்கு கிட்ட த்தட்ட பத்து யானைகளின் ஊர்வலம். திரையிசைப் பாடல்கள் செண்டை மேளம் என நெருக்கமான மக்கள் கூட்த்துடன் கூடிய ஊர்வலம். இது அந்தப் பகுதி பள்ளிவாசலுக்காக நடத்தப்படுவது என்று சொன்னார்கள்யானை ஊர்வலம் என்பது கேரளத்தவர்களிடையே ஒன்றிவிட்ட நிகழ்வாம். அந்தச் சப்தம் மிக மிக அதீதமாக இருந்தது. (ஒரு கிமீ தூரத்திற்குஒவ்வொரு யானைக்கும் வெவ்வேறு பேண்ட் வாத்தியக்காரர்கள்எனக்கெல்லாம் கொஞ்சம் சப்தம் ஜாஸ்தி இருந்தாலே ப்ரெஷர் ஏறிடும். யானைகள்லாம் என்ன பாடுபட்டதோ?

நவம்பர் 2022ல் ஒரே நாளில் மூன்று ரங்கநாதர்களைச் சேவிக்க நினைத்து முதல் நாள் இரவு ஸ்ரீரங்கபட்டினம் சென்று தங்கினோம். மறுநாள் காலை காவேரி துலா ஸ்நானம் முடித்துவிட்டுஸ்ரீரங்கபட்டினம் ரங்கநாதர், மத்தியரங்கம் ரங்கநாதர் சேவித்துவிட்டு, சாம்ராஜ்நகர், தாளவாடி வழியாக சத்தியமங்கலம் நோக்கி காட்டுப்பகுதியில் காரில் சென்றோம். அப்போது வழியில் காட்டில் பார்த்த ஒற்றை ஆண் யானை. அது தானே தன் உணவைத் தேடிக்கொள்ளவேண்டும், காத்துக்கொள்ளவேண்டும், உயிர்வாழ வேண்டும், இனப்பெருக்கம் செய்யவேண்டும். இதுதானே இயற்கையின் நியதி.

என்னுடன் இருந்தவர்கள் ரொம்பவே பயந்தார்கள். கண்ணாடியைக் கீழிறக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்கள். ஆனால், நான், பயமொன்றுமில்லை என்று சொல்லிச் சில படங்களை எடுத்தேன். இந்த மாதிரி வாய்ப்பு இனிக் கிடைக்குமா? என்ன சொல்றீங்க?

இந்த இயற்கை நியதியை மீறி, கோவில்களில் யானைகளை வளர்ப்பதும் பராமரிப்பதும், வீடுகளில் யானை வளர்ப்பதும் சரியான செயலாக இருக்குமா? யோசிக்க வைக்கும் கேள்வி.


 


 

 = = = = = = = = =

65 கருத்துகள்:

  1. //இந்த இயற்கை நியதியை மீறி, கோவில்களில் யானைகளை வளர்ப்பதும் பராமரிப்பதும், வீடுகளில் யானை வளர்ப்பதும் சரியான செயலாக இருக்குமா? யோசிக்க வைக்கும் கேள்வி.//

    ​​
    மாற்றம் என்பதே இயற்கையின் நியதி தானே. மாற்றம் இல்லையேல் இத்தனை உயிர்கள் இல்லை. ஆங்கிலேய வரவுக்கு முன் யானைப்படை தானே அரசர்களின் tank ப்டையாக இருந்தது.


    யானைகள் காணொளியில் காட்டுவதை காட்டிலும் வேகமாக ஓடக்கூடியவை. சங்கிலி கட்டுப்பாட்டினால் வேகமாக ஓடவில்லை.

    ஒற்றை யானைகள் ஆபத்தானவை.தாக்குவது எப்போது என்று ஊகிக்க முடியாது.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார்.

      சோழர் பரம்பரையை மீட்டுக்கொண்டுவந்த விஜயாலயச் சோழன், யானை மீது துஞ்சிய தேவர் என அழைக்கப்பட்டார் அல்லவா. யானை மீதேறிப் போரிடும்போது களத்தில் மடிந்தவர்.

      ஒற்றை யானை ஆபத்தானது என்றே படித்திருக்கிறேன். திம்பம் காட்டில் ஒற்றை யானையை காரிலிருந்து படமெடுத்தபோது மற்றவர்கள் பயந்தார்கள்.

      அன்றைய யானையோட்டத்தில் ஓடின மாதிரி எனக்குத் தெரியவில்லை. வேக நடை.

      நீக்கு
    2. ராஜாதித்தன்தான் யானை மேல் துஞ்சிய தேவர்

      நீக்கு
  2. யானைகளுக்கு காதுகள் பெரிது அதனால் சப்தமாக இசையை கொடுக்கிறார்கள் போலும்...

    படங்கள் வழக்கம் போல அழகு

    பதிலளிநீக்கு
  3. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    நோக்க நோக்க
    நொடியில் நோக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த நாள் இனிய நாளாக எல்லோருக்கும் அமையட்டும்.

      நீக்கு
  4. யானைமேல் துஞ்சிய தேவன் என்று போற்றப்பட்டவர் "இராஜாதித்த சோழன்"..

    தக்கோலப் போரில் வீர மரணமடைந்தவர்..

    முதலாம் பராந்தக சோழனின் மகன்.. கண்டராதித்த சோழனின் அண்ணன்..

    இவரே இன்றைய
    “வீராணம்” ஏரியை வெட்டுவித்தவர்.. ஏரிக்கு தந்தை பராந்தகரின் இயற் பெயரை “வீர நாராயண ஏரி” என்று சூட்டினார்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜாதித்தர்தான். காலையில் எழுதும்போது தவறு நேர்ந்துவிட்டது. அவர்தான் சோழப் பரம்பரை மேலே வர வித்திட்டவர்.

      நவ திருப்பதியில், பெருங்குளத்தில், மிகப் பெரிய கடல் போல் விரிந்த பெரிய குளம் ஒன்று உண்டு. அதையும்விட மிகப் பெரியது வீர நாராயண ஏரி

      நீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  6. பள்ளிவாசல் திருவிழாவில் யானைகள்!..

    என்ன ஒரு பிரியம் கலாச்சாரத்தின் மீது?..

    இந்தப்பக்கம்
    #₹%& #₹%& என்பது..

    அந்தப் பக்கம்
    ஆனைகளும்
    இஷ்டம்..
    அழகான
    ₹%&₹%&₹%& களும் இஷ்டம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேரள கலாச்சாரமாக அனைவரும் ஒத்திசைவோடு இருப்பது (இருந்தது) பார்க்கப்படுகிறது.

      கடந்த முப்பது ஆண்டுகளில் பல்வேறு விரும்பத்தகாத மாற்றங்கள்.

      நீக்கு
    2. நெற்கதிரில் பால் பிடிக்காமல் தீய்ந்து போனவை கருக்காய் என்பது..

      முற்றிய நெல் நீரில் ஆழ்ந்து விடும்.. கருக்காய் மிதக்கும்..

      நெல்லை அரிசிக்காக ஊறப் போடும் போது இது தெரியும்..

      கருக்காய் தான் இன்றைய கலாச்சாரம்..

      நீக்கு
    3. பதரைத்தான் நீங்க கருக்காய் என்று சொல்கிறீர்களோ துரை செல்வராஜு சார்? ISIS போன்றவை வந்த பிறகு கேரள கலாச்சாரம் ரொம்பவே மாறிவிட்டது.

      நீக்கு
  7. யானையோட்ட விவரம் அறிந்தேன். படங்கள், காணொளிகள் அருமை.
    மாடியிலிருந்து எடுத்த படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    குட்டியுடன் சின்ன குட்டையில் தாயும் நீர் விளையாட்டு விளையாடி கொண்டு இருக்கும் போது சத்தம் கொடுத்தபோது பதறி விட்டேன். எதிரியை விரட்டி விட்டு மகிழ்ச்சியாக கரையேறியவுடன் மகிழ்ச்சி அடைந்தேன். தாயின் பதற்றம் உணர முடிந்தது.

    ஒரே நாளில் மூன்று ரங்கநாதர்களைச் சேவித்து இருப்பீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எதிர்பார்த்ததுபோல யானையோட்டம் இல்லை. ஃபார்மாலிட்டியாக ஆகிவிட்டது.

      பெரிய யானை அருகிலிருக்கும்போது பெரும்பாலும் குட்டிகள் தப்பிவிடும். இருந்தாலும், முதலை காலைக் கவ்விக்கொண்டால் கஷ்டம்தான்.

      ஆம். ஒரே நாளில் மூன்று ரங்கநாதர்கள் தரிசம் கிடைத்தது.

      நீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறைவன் துணையாக இருப்பார் என்று நம்பிக்கையா நீங்க சொல்லும்போது, அவன் துணையாக இருப்பதற்கு என்ன தடை?

      நீக்கு
  9. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    இன்றைய பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. குருவாயூரப்பனை தரிசித்து கொண்டேன்.

    யானைகளின் ஓட்டப் பந்தய படங்களை அழகாக எடுத்துள்ளீர்கள். அதன் விபரமும் தொகுப்பும் நன்றாக உள்ளது.

    காணொளிகள் நன்றாக உள்ளது. முதல் காணொளி கஜேந்திர மோட்சத்தை நினைவு படுத்தியது. இது தனது குட்டியுடன் வேறு அந்த சின்ன ஓடையில் நீர் அருந்துவதற்காக வந்துள்ளது. காட்டில்தான் ஒவ்வொரு விலங்கிற்கும் எத்தனை எதிரிகள்..! அந்த சின்ன குட்டையில் எதிர்பாராத அந்த நிகழ்வை அது சமாளிக்கும் அறிவை பார்த்து வியந்து போனேன். தனது குட்டியின் மேல் வைத்த பாசம், அதற்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாதே என அது பரிதவித்த பாசம் பார்க்கும் போது மனதை கலக்கி விட்டது. இது தாங்கள் நேரிடையாக பார்த்து எடுத்த காணொளியா?

    இரண்டாவது யானைகளின் ஓட்டப்பந்தய காணொளியும் நன்றாக உள்ளது. யானைகளின் அணிவகுப்பும், அது ஒவ்வொன்றாக வந்து தனது வெற்றியை கூறும் இடங்களும் பார்க்க நன்றாக உள்ளது.

    அங்குதான் எவ்வளவு மக்கள் கூட்டம்.. . கூட்டத்தை கண்டு அது மிரளாதபடிக்கு அதற்கு பயிற்சி தந்துள்ளார்கள். ஆனால்
    தாங்கள் காட்டில் பார்த்த ஒற்றை யானையே நமக்கு மிரட்சியை தருகிறது. காடு பகுதிகளில் வரும் ஒற்றை யானைகள் செய்யும் அமளிகளை இணையத்தில் பார்த்துள்ளேன். கதிகலங்கச் செய்யும்.

    இன்றைய அத்தனைப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் காணொளி வாட்சப்பில் வந்தது. அவ்வளவு பெரிய முதலை அந்தக் குட்டைக்குள். ஆச்சர்யம்தான்.

      யானைகளின் ஓட்டப்பந்தய காணொளி நான் அனுப்பி கேஜிஜி சார் வெளியிட விட்டுப்போய்விட்டதா இல்லை நான் அனுப்ப மறந்துவிட்டேனா தெரியவில்லை.

      காட்டில் (ரோட்டில்) பார்த்த ஒற்றை யானை எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. இதுபற்றி இன்று எழுதுகிறேன்.

      நீக்கு
  10. பட்ங்கள் எல்லாம் அசத்தல், நெல்லை! ஆனைகளைப் பார்ப்பதே சுகம் தான்.

    நீங்கள் தாளவாடி (நீங்க முன்ன இருந்த ஊர் இல்லையோ!!) வழியாக சத்தியமங்கலம் காட்டு வழியில் பார்த்த யானைப் படம் தான் கவர்கிறது.

    மற்ற கோயில் ஆனைகள் பார்க்க அழகுதான் ஆனால் பாவம். எனக்கு இப்படிக் கோயில்களில் ஆனைகளை வைத்து இருப்பது அது போல முன்பு போரில் பயன்படுத்தியதை எல்லாம் ஏற்க முடிவதில்லை. அவங்க பாட்டுக்குக் காட்டுல திரிஞ்சமா ஜாலியா வாழ்ந்தமான்னு இல்லாம...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது சரி கீதா ரங்கன். பசு, எருமைகள்லாம் மனுசப்பயலுகளுக்காகவே படைக்கப்பட்டனவா? காட்டிலிருந்து வரவில்லையா? பெங்களூர் ரோடுகள்ல நான் பார்க்கும் பல்வேறு பசுக்கள் (மடி மிகப் பெரிது. அதாவது கலப்பினப் பசுக்கள்), பரிதாபமாக ரோடில் மேய்வதைப் பார்த்தால் வருத்தமாத்தான் இருக்கு

      நீக்கு
    2. அந்த ஊரில், நான் படித்த பள்ளிக்குச் சென்றிருந்தேன். (மனைவியோடு). பல இடங்களில் புகைப்படங்கள் எடுத்தேன். கோவிட் நேரம் என்பதால் யாருமே இல்லை. அந்த ஊரில் இவ்வளவு பெரிய பள்ளிக்கூடமா என்று வியந்தார்கள்.

      நீக்கு
  11. இந்த இயற்கை நியதியை மீறி, கோவில்களில் யானைகளை வளர்ப்பதும் பராமரிப்பதும், வீடுகளில் யானை வளர்ப்பதும் சரியான செயலாக இருக்குமா? யோசிக்க வைக்கும் கேள்வி.//

    அதே அதே....

    அது போல இந்த ஜண்டைக்கொட்டு போட்டு யானைகளைத் துன்புறுத்துவதும் எனக்கு உடன்பாடில்லை. என்னதான் கேரளத்தின் அடையாளமாக யானை எல்லா மதத்தினருக்கும் இருந்தாலும், இப்படியான ஊர்வலங்கள் அதில் போடும் சப்தங்கள், திருச்சூர் பூரத்தில் ஜண்டைக் கொட்டு வெடி வெடித்தல் இவை எல்லாமே யானைகளுக்கு வெற்றுப்பு ஏற்படச் செய்பவை. அதனால்தான் அவை பொறுத்துப் பொறுத்துப் பார்த்து ஏதேனும் ஒரு சமயத்தில் மதம் பிடித்து பாவம் யானையைக் குற்றம் சொல்கிறோம் மனிதர்கள் நாம்..

    யானைகளைத் துன்புறுத்தும் இப்படியான நிகழ்வுகளில் எனக்கு உடன்பாடில்லை, நெல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யானைகளுக்கு இவை மிகப்பெரும் துன்பம்தான். நம் காலைக் கட்டிவைத்து மூணு வேளையும், நம் முன்னால் கஞ்சித் தொட்டியோ அல்லது சாம்பார் சாத அண்டாவையோ வைத்து பத்து நாட்கள் தண்டனை கொடுத்தால் ஒருவேளை விலங்குகளின் கஷ்டம் நமக்குப் புரியுமோ?

      நீக்கு
  12. காணொளி ஆஹா நீங்க எடுத்ததா நெல்லை? எந்த இடத்தில்?

    சின்ன குட்டையில் முதலையா? ஆஆஆ...ஆபத்துதான் இல்லையா? ஏன்னா சின்ன குட்டைதானே இதில் என்ன இருக்கும்னு நாம கூட சும்மா வேடிக்கை பார்க்க முடியாதுன்னு தோணுது. அதுவும் தண்ணிக்கு அடில இருந்தா?

    கஜேந்த்ர மோக்ஷமோன்னு நினைச்சேன்!!! விஷ்ணு கருடா ஃப்ளைட்ல ஏறும் முன்....நல்ல காலம் கஜேந்திரனி தைரியமாகத் துரத்திவிட்டது முதலையை!!!

    தாயும் குழந்தையும் என்ன ஜாலி நடை! குட்டி தண்ணியில் புரள்வது அழகாக இருக்க திடீர்னு வில்லன்! ஹப்பா தாய் ஹீரோயின் விரட்டிவிட்டாள்!!! முதலை நினைச்சிருக்கும் நம்ம வாயை கட்டிப் போட்டுடுச்சே நம்ம மேல காலை வைச்சா அவ்ளவுதான் நாம காலினு தப்பிச்சோம் பொழைச்சோம்னு ஓடிருச்சு!! ஒரு நொடி கொஞ்சம் பதற்றம்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது வாட்சப்பில் வந்த காணொளி. இன்னும் சில பல காணொளிகள் அனுப்பிய நினைவு. பாவம் முதலை.. ஏதேனும் மான் வந்தால் சாப்பாட்டிற்கு ஆகியிருக்கும் (உங்களுக்குத் தெரியுமா? ஒரு உணவை உண்ட பிறகு ஆறு மாதங்களுக்கு மேல் பட்டினியாக முதலையால் வாழ முடியும்). அதற்குப் பதில் பெரிய யானை வந்து, காலால் த்வம்சம் வேறு செய்ய ஆரம்பித்ததால் ஓடிவிட்டது.

      நீக்கு
  13. @ நெல்லை

    // பதரைத் தான் நீங்க கருக்காய் என்று சொல்கிறீர்களோ. //

    பதர் வேறு..
    கருக்காய் வேறு..

    பதர் என்பது உமிகளுக்குள் ஒன்றுமே இல்லாதது.. களத்தில் தூற்றும் போது காற்றோடு போய் விழும்.

    உமிகளுக்குள் அரிசி சூம்பிப் போய் இருக்கும்.. இது கருக்காய்..

    முன்பெல்லாம் அரிசியுடன் கலந்திருக்கும்..

    இப்போது பாக்கெட்டில் வரும் அரிசியில் கருக்காய் அரிசி இருப்பதில்லை..

    பதிலளிநீக்கு
  14. காணொளிகள் அருமை..

    சட்னி துவையல் ஆகாம முதலை தப்பிச்சதே!..

    முழிச்ச முகம் சரியில்லை..
    தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்!.. எந்தப் புத்துக்குள் என்ன பாம்பு இருக்குமோ!..

    இதெல்லாம் பொருந்தும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலையை, jaguar கொல்லும் காணொளிகள் பார்த்திருக்கிறேன். முதலையின் மிகப்பெரிய எதிரி நீர் யானை. (மனிதன் இயற்கைக்கு மிகப் பெரிய எதிரி என்பது எல்லோருக்கும் தெரியும்).

      நீக்கு
  15. சின்ன மான் குட்டி எனில் ஒரே வேளையில் கபளீகரம்..

    சற்று பெரிதான ஜீவன்கள் எனில் அதனை நீர் கிடங்குக்குள் ( வளை ) பொதிந்து வைத்து அவ்வப்போது தின்று கொள்ளுமாம் முதலை!..

    அதற்கு அது ருசி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலை அப்போதே சாப்பிட்டுவிடும். அதற்கு கடிக்க முடியாது. அதனால் பிய்த்து விழுங்கும். அது செரிமானம் ஆக பலப் பல நாட்கள் ஆகும். இது தவிர, இறந்து தண்ணீரில் கிடப்பதையும் (பழைய சவம்) முதலை உண்ணும். நீங்கள் ஆப்பிரிக்காவில், விலங்குகள் migrate ஆகும்போது - 20 லட்சம் விலங்குகள் (between Tanzania and Kenya) ஆற்றைக் கடக்கும்போது சில ஆயிரம் உயிரை விடும், முதலை மற்றும் தள்ளுமுள்ளில். அதைப் பார்க்கவே ரொம்ப வியப்பா இருக்கும். அந்த migration நடக்கும்போது - வருடத்துக்கு இரண்டு முறை என்று நினைவு, அதனை ஆப்பிரிக்க சேனல்கள் லைவ் ரிலே செய்யும்

      நீக்கு
    2. நான் ஒரு தடவை பார்த்திருக்கின்றேன்..
      தகவலுக்கு நன்றி..

      நீக்கு

  16. @ நெல்லை..
    /// கேரள கலாச்சாரமாக அனைவரும் ஒத்திசைவோடு///

    @#₹%&&%₹#@
    யானை கிடைத்தால் கத்திக் கொண்டு ஓடுவது..

    பசு காளை கிடைத்தால்
    கத்தியை எடுத்துக் கொண்டு ஓடுவது!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதெல்லாம் கடந்த 30 ஆண்டுகால மாற்றங்கள். அதற்கு முன்பு கம்யூனிஸ்டுகள் கேரளாவைக் கெடுத்தார்கள் (மிரட்டி வேலை வாங்குவது, அடாவடியாக நடப்பது என்று).

      நீக்கு
  17. கஜேந்திர மோக்ஷம் அருமை. யானை ஓட்டமும் ஒரே சத்தம். யானைகள் ஓடியதாகத் தெரியலை. வேக நடை. யானைகள் பற்றிய வீடியோக்கள் எனக்கு வந்து கொண்டே இருக்கும். யார் அனுப்புவாங்கனே தெரியாது. இங்கேயும் உங்கள் தொகுப்பு யானைகள் குறித்து விபரமாகத் தெரிந்து கொள்ள உதவுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா சாம்பசிவம் மேடம். இன்னைக்கு உங்களை அழைக்கணும்னு நினைத்தேன். நீங்களும் ரங்க்ஸும் நலமா இருக்கீங்களா? பல நாட்கள் உங்களை இங்கு பார்க்க முடிவதில்லை.

      யானைகள் வேக நடைதான். ரொம்பவும் ரசிக்க முடியவில்லை. ஆனால் யானைத் தாவளம் ரொம்ப நல்லா இருந்தது. எனக்கும் நிறைய யானை காணொளிகள் வரும்.

      நீக்கு
    2. உங்களுடைய பதிவுகள் எல்லாமே படித்துக் கருத்துச் சொல்லுகிறேன். அஹோபிலம் பற்றிய பதிவுகளில் கட்டாயமாய்ப் பார்த்திருக்கலாம்.

      நீக்கு
    3. நீங்க முன்னெல்லாம் தினமும் வருவீங்க. இரண்டு கருத்துக்களுக்குக் குறைவா எழுதமாட்டீங்க. இப்போல்லாம் ரொம்ப நேரம் கணிணில உட்காருவதில்லை போலிருக்கிறது.

      நீக்கு
    4. காலை வேளையில் உட்காருவேன். இப்போல்லாம் உட்காருவதில்லை. மத்தியானங்களிலும் இரண்டு மணி நேரம் தான் அதிக பட்சமாக. என்னவோ மனம் ஒன்றவில்லை. இருந்தாலும் உட்கார்ந்து ஏதேனும் படிப்பதை இன்னமும் விடலை.

      நீக்கு

  18. @ நெல்லை..

    //மனிதன் இயற்கைக்கு மிகப் பெரிய எதிரி//

    இயற்கை ஓரளவுக்கு அழிந்த பிறகு மனித இனம் மிச்சம் மீதி இருந்தால் -

    காதலன் அல்லது காதலி போல அன்பு கொண்டு எங்கே
    எங்கே, என்று மனிதன் தேட ஆரம்பிக்க நட்பு முளைத்து விடக்கூடும்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை செல்வராஜு சார்... நான் சில காணொளிகளைப் பார்த்தேன். ராஜ ராஜ சோழன் கல்வெட்டுகளில் ஏன் வடமொழியையும் உபயோகித்தான் என்றெல்லாம். இணையத்தில் பல பேர், கூசாமல், ஏதோ இவங்க சோழர் காலத்துல கூடவே பயணித்த மாதிரி, இவரை யார் கொன்னது, இவன் எப்படி இறந்தான் என்றெல்லாம் அளந்துவிடறாங்க. வெறும் வாயை மெல்பவர்களுக்கு அவல் கிடைத்த மாதிரி பொ.செ.2 - மணிரத்னம் படத்தையும் கோர்த்து, இவங்க கொன்னாங்க, அவங்க கொன்னாங்க என்றெல்லாம் அடிச்சு விடறாங்க. இதுல ஒருத்தர், காசு கொடுப்பவர்களுக்கு ஏற்றவாறு நான் பேசுவேன் என்று பெருமை வேறு பீற்றிக்கொள்கிறார். இன்னொருத்தர், குந்தவை இஸ்லாமைத் தழுவினாள் என்று ஏதோ புத்தகத்தை அரபியில் பார்த்தேன் என்று சொல்கிறார். நம்ம வாழும் சமயத்திலேயே இத்தகைய புரூடாக்கள் முளைத்திருந்தால், வரலாற்றில் எவ்வளவு புரூடாக்களைக் கோர்த்திருப்பாங்க? நல்லவேளை கல்வெட்டுகளும், கோவில்களும் இருந்ததோ, ஓரளவு சரித்திரத்தை மாற்ற முடியவில்லை இவர்களால்.

      நீக்கு
    2. @ நெல்லை..

      பொய்யும் புறம் பேசுதலும் தடுக்கப்பட்டிருந்தும் அதுவே கதி என்று சில இஸ்லாமியர்கள்..

      மீனாட்சி என்ற பாண்டிய இளவரசி சுக்கூர் என்பவரை காதலித்தாள்.. அவரே சொக்கர் என்று - பேயன் ஒருவன் சமீபத்தில் காணொளி போட்டிருந்தான்..

      இவனுக்கு எல்லாம் என்ன கதி கிடைக்குமோ.. தெரியவில்லை..

      உண்மையில் சில விஷயங்களைத் தவிர்த்து அராபியர்கள் நல்லவர்கள்..

      நீக்கு
    3. அராபியர்கள் நல்லவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அவங்க ஓரளவு அவங்களோட மதத்தை அர்த்தத்தோடு பின்பற்றுவதால் நல்லவங்களாக இருக்க முடியுது. நம்மூர் வியாபாரிகள் போல அவர்கள் இல்லை.

      நீக்கு
  19. தகவல்கள் அனைத்தும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  20. கேரளா யானைகளின் ஓட்டப் போடட்டி அருமை.

    எமது நாட்டிலும் (சிங்கள மக்களின்) பெரகரா என்பார்கள் யானை ஊர்வலம் மிகுந்த அழகாக இருக்கும். இரவில் யானைகளுக்கு வர்ணஉடுப்பு போட்டு லைட் பூட்டி ஊர்வலமாக வரும். யானைமேல் கோவில் தெய்வங்கள் அமர்ந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி. இலங்கையிலும் யானை ஊர்வலம் உண்டா? அங்கு யானைகள் இந்தியாவைக் காட்டிலும் சிறிதாக இருக்கும்னு நினைக்கிறேன்.

      நீக்கு
    2. இந்த பெரஹராத் திருவிழா பற்றிய வர்ணனைகள் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் மிக அருமையாகக் கல்கி விவரித்து எழுதி இருப்பார். எல்லாக் கடவுளருக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள்.

      நீக்கு
    3. இந்த கீசா மேடம், எக்ஸாமுக்குக்கூட இவ்வளவு படித்திருப்பாங்களான்னு தெரியலையே. இவ்வளவு நினைவு வைத்திருக்கிறாரே ஒரு நாவலை

      நீக்கு
    4. எத்தனையோ நாவல்கள் அதுவும் பைன்டிங்கில் படிச்சவை அத்தியாயங்களோடு அவற்றின் படங்களோடு நினைவில் இருக்கின்றன. இந்தத் திருவிழா ஊர்வலத்தை அருண்மொழி வர்மன், வந்தியத்தேவனோடும், ஆழ்வார்க்கடியானோடும் அரச மாளிகையின் மேன்மாடத்தில் உட்கார்ந்து பார்ப்பான். இதற்குப் பின்னர் தான் மந்தாகினி வந்து எச்சரிக்கை பண்ணும் நிகழ்வு வரும்.

      நீக்கு
  21. எல்லோருக்கும் புளொக் இருக்கு, அங்கங்கு போய் விசாரிக்கலாம், ஆனால் நெ தமிழனுக்கு இல்லையே எங்கு போய் நலம் விசாரிப்பது என யோசித்தேன், ஆஹா இப்படி ஒரு தொடர் போகுதூ.. அது குண்டு ஆனைகள் பற்றி ஹா ஹா ஹா... நலம்தானே? அம்பாணியை சே சே டங்கு ஸ்லிப்பாகுதே:), அதிராவை நினைவிருக்கோ?:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரடியும் ஏஞ்சலினும் மறக்கக்கூடியவர்கள் அல்லர் (நாங்க தமிழ் நல்லா எழுதுவோம்). எப்போதுமே பிளாக்கில்தான் நண்பர்களுடன் interact செய்வது இயலும். வாட்சப் பகிர்வுகள் மற்றும் யூடியூப் கமெண்ட்ஸுகள் மறந்துபோகும். இதையாவது நினைவில் வச்சுக்கோங்க

      நீக்கு
    2. வட்சப்பில் எந்த நட்பும் இல்லை நெ தமிழன்.. அதில் எல்லாம் நான் போவதில்லை, ஒரு குரூப்கூடக் கிடையாது, சொந்த பந்தம்.. அதுவும் ஒரு குட்டி வட்டம் மட்டுமே. வெளிப்பொழுதுபோக்கு மற்றும் யூரியூப் தான் அதிக நேரத்தை எடுக்கிறது.

      ///நாங்க தமிழ் நல்லா எழுதுவோம்)///

      இதென்ன இது பன்மையில சொல்லியிருக்கிறீங்கள்.. தமனாக்காவையும் சேர்த்தோ:) ஹா ஹா ஹா எனக்கெதுக்கு ஊர்வம்பு வந்ததும் வராததுமாக:))

      நீக்கு
  22. அது கொட்டாரமோ? கொட்டகையோ??... நல்ல சேவ் ஆக மாடிக்கு போயிட்டீங்கள் யானை பார்க்க:), நானும் ரோட்டோரம் இருந்து பார்க்க மாட்டேன் இப்படியானவற்றை, அவை எப்போ மனம் மாறி மதம் கொள்ளும் எனச் சொல்லவே முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெருவோரம் நின்றிருந்தால் படம் தெளிவாக எடுக்க முடியாது. அதனால்தான் மாடி. யானை மதம் கொள்ளலாம் என்றாலும் நிறைய பாதுகாப்பு இருந்தது.

      நீக்கு
  23. வீடியோவாக எடுத்திருக்கலாம். யானைகள் ஓடினவையோ இல்ல அசைஞ்சு அசைஞ்சு நடந்தவையோ? எல்லாமே பெரிய யானைகளாகவே இருக்கே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீடியோ எடுத்திருந்தேன். ஆனால் அதனை வாட்சப் மூலம் அனுப்ப நினைத்தால் பெரிதாக இருந்தது. இருந்தாலும் அனுப்பியிருக்கலாம். (அல்லது அனுப்பி கேஜிஜி சார் மறந்துவிட்டாரோ நினைவில்லை)

      நீக்கு
  24. தமிழ்நாடு வரும்போது குருவாரூர் பார்க்கோணும்... அந்தப் பாட்டுத்தான் நினைவுக்கு வருகிறது எஸ் பி பி இன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் குருவாயூர் போய்வாருங்கள், அப்படியே அருகில் உள்ள யானை அரண்மனைக்கும் (கொட்டாரம் என்றால் அரண்மனை) நிச்சயம் போய்வாருங்கள், நீங்க ரொம்பவே சந்தோஷப்படுவீங்க.

      நீக்கு
    2. ///(கொட்டாரம் என்றால் அரண்மனை)///

      ஓ நிறையப் புதுச்சொற்கள் இம்முறை அறிகிறேன்..

      ///நிச்சயம் போய்வாருங்கள், நீங்க ரொம்பவே சந்தோஷப்படுவீங்க.///

      ஓ முதலில் சமயபுரத்து மாரியம்மனிடம் போகவேணும் எனும் ஆசை இருக்கு.. பார்ப்போம் எல்லாம் தானாக அமையுமே தவிர, நாம் நினைச்சு எதுவும் நடக்காது...

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!