சிறுவயதில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி குடியிருப்பில்
இருந்தபோது பக்கத்து வீட்டில் வேதம் மாமி என்று ஒருவர் இருந்தார். விதவை. அவருக்கு ஒரே மகன். சுமார் முப்பது வயது. ராஜகோபால் என்று பெயர். அவர் TB யால் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தார். நாங்கள் அங்கு இருந்தபோதே இறந்தும் போனார். அப்போது அதற்கு சரியான மருத்துவம் இல்லையா, இல்லை இவர்கள் காலம் கடந்து பார்த்தார்களா, தெரியாது.அந்த வீட்டில் அவ்வப்போது பஜனைகள், பூஜை என்று அமர்க்களப்படும். விபூதிபாபா என்ற ஒருவர் வருவார். அவர் தலையிலிருந்து விபூதியாக கொட்டும்! அவ்வப்போது சாய்பஜன் செய்வார் மாமி. அதில் இந்தப் பாடலும் வரும்..
"சுப்ரமண்யம்.. சுப்ரமண்யம்.. ஷண்முகநாதா சுப்ரமண்யம்..." அப்போது அடிக்கடி கேட்டு மனதில் நின்ற பஜன். பெரிய வரிகள் எல்லாம் கிடையாது.
அந்தப் பாடலை சமீபத்தில் இந்த பாம்பே சாரதா குரலில் கேட்டபோது பழைய நினைவுகள் வந்து போயின.
இன்றைய தனிப்பாடலாய் சுப்ரமண்யம்.. சுப்ரமண்யம்...
சுப்ரமணியம் சுப்ரமணியம்
சண்முக நாத சுப்ரமணியம்
சுப்ரமணியம் சுப்ரமணியம்
சண்முக நாத சுப்ரமணியம்
சிவ சிவ சிவ சிவ சுப்ரமணியம்
ஹர ஹர ஹர ஹர சுப்ரமணியம்
சிவ சிவ ஹர ஹர சுப்பிரமணியம்
ஹர ஹர சிவ சிவ சிவ சுப்ரமணியம்
சிவ சரவணபவ சுப்பிரமணியம்
குரு சரவணபவ சுப்பிரமணியம்
சிவ சிவ ஹர ஹர சுப்பிரமணியம்
ஹர ஹர சிவ சிவ சுப்ரமணியம்
=================================================================================================
1992 ல் வெளியான படம் கோவைத்தம்பியின் 'உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்'. கோவைத்தம்பி படம் என்பதாலேயே இளையராஜாதான் இசை! கோவைத்தம்பி படங்களில் பெரும்பாலும் எல்லா பாடல்களும் ஹிட்டாகி விடும். இந்தப் படத்தில் இரண்டு மூன்று பாடல்கள் மட்டுமே தேறுகின்றன.
பார்த்திபன், சுமா ரெங்கநாத், மோகினி ஆகியோர் நடித்துள்ள படம்.
இன்றைய பாடல் நா காமராஜன் எழுதிய பாடல். S P பாலசுப்ரமணியம், மின்மினி குரலில் வரும் பாடல்.
இந்தப் பாடலில் ஒரு புதுமை பாடலின் பல்லவியை SPB பாடவே மாட்டார். தொகையறாவும் சரணங்களும் மட்டும்தான் பாடுவார். அதேபோல பெண் குரல் பல்லவி மட்டும்தான் பாடும்! சரணங்களில் SPB தன் குரல் மூலம் பாடலுக்கான உணர்வை மிக அருமையாய் தந்திருப்பார். எங்கிருந்த போதிலும் நீ வந்துவிடு தேவி என்பது பாடலின் ஸ்பெஷல் வரி..
பால் நிலவு சூரியன் போல் சுட்டதென்ன நியாயம்
பச்சக் கிளி தோளக் கொத்தி வந்ததிந்த காயம்
ஓடி வந்த வைகை நதி காஞ்சதென்ன மாயம்
கூட வழி இல்லை என்றே ஆனது பெண் பாவம்
ஒரு மாலைச் சந்திரன் மலரைத் தேடுது
மலையடிவாரத்திலே
இளமானைக் கண்டிட கானம் பாடுது
மன்மத ராகத்திலே
குளிர் வீசும் மாசியிலே ஒரு ஆசை மேகமடி
அது பேசும் பாஷையிலே ஒரு காதல் விரகமடி
ஒரு தேகம் வெந்தது மோகத் தீயினிலே ஆ..ஆ.. [
ஒரு மாலைச் சந்திரன்]
வெண்ணிலவில் தேடுகிறேன் கன்னி முகம் காணோம்
புன்னகையும் நான் இழந்தேன் என் மனதில் சோகம்
சித்திரத்தை பார்க்க வந்தேன் கற்குவியல் கண்டேன்
தென் மலையை போல் இருந்தேன் தென்னிலங்கை ஆனேன்
செல்லக் குயில் கூவ மெல்ல வரும் மேகம்
சொல்லில் வரும் சோகம் கங்கை நதி ஆகும்
எங்கிருந்த போதிலும் நீ வந்து விடு தேவி
[மாலைச் சந்திரன்]
நித்திரையில் பூவெடுத்தேன் நெஞ்சில் ஒரு காயம்
காயம் கொண்ட போதினிலும் பூவில் எந்தன் மோகம்
தெற்குக் கடல் ஆழத்திலே முத்தெடுக்கப் போனேன்
மூச்சடங்கிப் போனதடி முத்தை இன்னும் காணேன்
உந்தன் முகம் தேடி உள்ளம் அலைபாயும்
தென்றல் இன்றிப் போனால் தேகம் அனலாகும்
எங்கிருந்த போதிலும் நீ வந்து விடு தேவி [மாலைச் சந்திரன்]
காலை வணக்கம் அனைவருக்கும்.
பதிலளிநீக்குவணக்கம் நெல்லை.. வாங்க..
நீக்குகஷ்டப்பட்டு பாடல்கள் தேர்ந்தெடுக்கறீங்க. குறை சொல்ல கஷ்டமா இருக்கு.
பதிலளிநீக்குமுதலில் உள்ளது பாடல் என்ற வடிவில் வராது. இரண்டாவது பாடல் கேட்டதில்லை. சுமாருக்கும் சுமார்.
எனக்குப் பிடித்த, அவ்வப்போது ரேராய் கேட்கிற பாடல்களை பகிர்கிறேன். எனக்குப் பிடித்தவை உங்களுக்குப் பிடித்தவையாய் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அது போலவே உங்களுக்குப் பிடித்தவை எனக்குப் பிடித்திருக்க வேண்டும் என்றும் அவசியமில்லை. ரசனைகள் மாறலாம். சொல்வதில் என்ன தவறு!
நீக்குவிதவை என்று எழுதுவதற்கு பதில் கைம்பெண் என்று எழுதலாம்.
பதிலளிநீக்கு(இது தொடர்பாக சில
தெரிந்தவர்களுக்குத் தெரியும் எண்ணங்கள்)
வைதவ்யம் என்ற வார்த்தையே இப்படி மருவியது என்பர்..
நீக்குகாக்க காக்க
பதிலளிநீக்குகனக வேல் காக்க..
பார்க்க பார்க்க
பாவம் பொடிபட..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாழ்க... வாங்க துரை செல்வராஜூ அண்ணா.. வணக்கம்.
நீக்குமுருகப்பெருமானை சிவ ஸ்வரூபமாக வணங்குவதும் ஒரு மரபு..
பதிலளிநீக்குஅருணகிரிநாதரும் இதனை வலியுறுத்திச் சொல்கின்றார்..
பல வருடங்களாகவே -
ஹர ஹர சிவ சிவ சுப்ரமண்யம்
சிவ சிவ ஹர ஹர சுப்ரமண்யம்
என்று சொல்லி வணங்கி வருகின்றேன்..
சுப்ரமண்யம் என்பதை - சுப்ரஹ் மண்யோம்.. என்று வித்யாசமாக உச்சரிக்க வேண்டும் என்பார்கள்..
இது மந்திர உபதேசம்..
சுப்ரஹ் மண்யோம்
சுப்ரஹ் மண்யோம்!...
கிட்டத்தட்ட இப்படிதான் சாரதா பாடுகிறார்.
நீக்குசுப்ரமண்யம் என்பது சுப்பிரமணியம் என்றாகி இப்போது பிள்ளைகளுக்கு சூட்டப்படுவதும் குறைந்து விட்டது..
பதிலளிநீக்குஅப்படியா? எங்கள் ஆசிரியர்களிலேயே ஒரு சுப்பிரமணியம் இருக்கிறார். என் தந்தை பாலசுப்ரமணியம்.
நீக்குசுப்ரமண்யம் என்றால் ஆரியன்..
பதிலளிநீக்குஅது டம்ளர் வழிபாடு இல்லை என்றெல்லாம் இப்போது உருட்டிக் கொண்டிருக்கின்றார்கள்..
:((
நீக்குஇரண்டாவது பாடலில் 'பெண்குரல் பல்லவி மட்டும் தான் பாடும்' என்று குறிப்பிடப் பட்டிருக்கும் குரலுக்குச் சொந்தமான 'அதிர்ஷ்டசாலி' ஆருங்க?
பதிலளிநீக்குமின்மினி.
நீக்குசுப்ர மண்யம் என்ற வார்த்தை விஷ்ணு சஹஸ்ர நாமத்திலும் வருகின்றது..
பதிலளிநீக்குஹர ஹர
பதிலளிநீக்குசிவ சிவ
சுப்ர மண்யம்...
சீர்காழி அவர்களும் இந்த பஜனைப் பாடலைப் பாடியிருக்கின்றார்..
சுப்ரமண்யம்
சுப்ரமண்யம்..
கிட்டத்தட்ட எல்லா பாடகர்களும் பாடி இருக்கிறார்கள்.
நீக்குசாரதையின் பஜனை காணொளியை இப்போது தான் பார்த்தேன்...
பதிலளிநீக்குஅருமை.. அழகு..
ஐயப்ப விரத கூட்டு வழிபாட்டில் இந்த பஜனை தவறாது இடம் பெறும்..
ஆம். கிட்டத்தட்ட எல்லோருக்கும் அறிமுகமான பாட்டு / பஜன்.
நீக்குசிறப்பு
பதிலளிநீக்குஅதே.
நீக்குசிறிய அகவையில் பஜனை பாடல்கள் சுண்டல் வாங்குவதற்காக கேட்டதுண்டு.
பதிலளிநீக்குஇரண்டாவது பாடல் இதுவரை கேட்ட ஞாபகம் இல்லை ஜி
இரண்டாவது பாடல் கேட்காமல் மிஸ் ஆவதற்கு வாய்ப்பு உண்டு ஜி.
நீக்கு2 :- முதன்முதலில் கேட்கிறேன்..
பதிலளிநீக்குஅடடே...
நீக்குஎன் குழந்தைகளுக்கு முதல் முதல் சொல்லிக் கொடுத்த பஜனைப்பாடல்களில் இதுவும் உண்டு. இந்த சுப்ரமண்யம் பஜனைப்பாடலை இப்போதும் தினம் சொல்லுவேன். இதுவும் பாலும் தெளிதேனும், வாக்குண்டாம் இவை எல்லாம் தினசரி சொல்பவை.
பதிலளிநீக்குதினமும் சொல்கிறீர்களா? அட..
நீக்குஇந்த பாம்பே சாரதா பற்றி இன்னிக்குத் தான் கேட்கிறேன்/பார்க்கிறேன். அருமை. அடுத்த பாடலின் படமும் தெரியாது/பாடலும் தெரியாது வழக்கம் போல். இன்னிக்குத் தான் தெரியும்.
பதிலளிநீக்குபாம்பே சாரதா நிறைய பாடல்கள் கேட்டிருக்கிறேன்.
நீக்குமுதல் பஜனை பாடல் நிறைய கேட்டிருக்கிறேன். எல்லா பஜனைகளிலும் இடம் பெறும் பாடல். கேட்க இதமாய் இருக்கிறது, ஸ்ரீராம். நம்மையும் தொற்றிக் கொண்டுவிடும். அதுவும் உடல்மொழி அந்தத் தாளத்துக்கேற்ப தலை அசைப்பு கைத்தாளம் என்று ...முதலில் வேகம் குறைவாகத் தொடங்கி அடுத்து ஃப்ளைட் ஏறுவது போல ஏறி அப்புறம் நிதானமாக இறங்கி என்று அது ஒரு இதம்.
பதிலளிநீக்குபாம்பே ராதா கொஞ்சம் டக்குனு மகதி போலத் தெரிகிறார்!
கீதா
மகதி போல... ஆமாம், எனக்கும் தோன்றியது! பொம்மை, பதுமை போல இருப்பார்.
நீக்குஇரண்டாவது பாடல் கேட்டதில்லை, ஸ்ரீராம், இப்பதான் கேட்கிறேன். 1992 ல் வந்தது....நிச்சயமா சான்ஸே இல்லை, கேட்டிருக்க.
பதிலளிநீக்குகல்யாணி ராகம் பேஸ்! நல்லாதான் இருக்கு....சீன் பார்க்காமல் பாட்டு கேட்டேன் ஸ்ரீராம்,
//செல்லக் குயில் கூவ மெல்ல வரும் மேகம்
சொல்லில் வரும் சோகம் கங்கை நதி ஆகும்
எங்கிருந்த போதிலும் நீ வந்து விடு தேவி//
இதுல கல்யாணி தெரிகிறாள்! இந்த இடம் நிலாவின் கமகம் நல்லாருக்கு! அதுபோல அடுத்த சரணத்திலும் அந்த மூன்று வரிகள் தேவியில் முடியுதே...அது.
மின்மினி அவருக்கு உடல்நலப்பிரச்சனை வந்தது என்று நினைக்கிறேன்....இளையராஜா இசையில் நிறைய பாடியிருக்கிறார். அப்புறம் அதிகம் இல்லை என்று நினைக்கிறேன். .
கீதா
ஆம். நீங்கள் சொல்லி இருக்கும் இடத்தை SPB யும் அருமையாய் பாடி இருப்பார்.
நீக்குஇந்தப் பாட்டோட வா வெண்ணிலா உன்னைத்தானே அது நல்லா சிங்க் ஆகும் ....மெட்லி பண்ணலாம்
பதிலளிநீக்குகீதா
அப்படியா சொல்கிறீர்கள்? ஓஹோ....
நீக்குமுதல் பஜனை பாடலை முதலில் மெதுவாக ஆரம்பித்து , பிறகு வேகமாக பாடி, மீண்டும் மெதுவாக பாடுவோம், எங்கள் பஜனை வகுப்பில். இந்த பாடலை பாடி இருக்கிறோம் நாங்கள். பக்கத்து வீடுகளில் ஐயப்பா பூஜை நடக்கும் வீடுகளில் பாடுவார்கள்.
பதிலளிநீக்குஇந்த பெண் பாடுவதை இப்போதுதான் முதலில் கேட்கிறேன். நன்றாக பாடுகிறார்.
//பாம்பே ராதா கொஞ்சம் டக்குனு மகதி போலத் தெரிகிறார்!//
நானும் கீதா போல முதலில் இளவயது மகதி என்று நினைத்தேன்.
அடுத்த பாடல் முதல் தடவையாக கேட்கிறேன். இந்த படமும் பார்த்தது இல்லை.
முதலில் சோகமாக இருந்தாலும் அப்புறம் நன்றாக இருக்கிறது.
ஆம். சரணங்களிலும், அந்த சரணம் முடியும் இடத்திலும் மாலைச்சந்திரன் பாடல் நன்றாய் இருக்கும் SPB! முதல் பஜன் நீங்களும் பாடுவீர்கள் என்பது மகிழ்ச்சி.
நீக்குஇன்றைய பாடல்கள் ஏற்கனவே எனக்கு தெரிந்திருப்பதில் எனக்கே ஆச்சரியம் : )
பதிலளிநீக்குஅடடே.. அப்படியா சொல்கிறீர்கள் மாதேவி?!
நீக்கு