வியாழன், 26 அக்டோபர், 2023

சுஜாதாவின் கோபமும் அதனால் சுஜாதாவின் வருத்தமும்

 திருமண நாள் என்றால் கோவில் செல்வது வழக்கமாகி விட்டது. 

இப்படி ஏதோ ஒரு காரணத்தை வைத்து கொண்டுதான் கோவிலுக்குப் போகிறோம் என்ற பொருளில் மயிலை பற்றி நான் எழுதி இருந்ததை ஜீவி ஸார் கூட விளக்கம் கேட்டார்.  அப்போது வேறு ஒரு காரணமாக மயிலை சென்று வந்தோம்.  கோவிலில் வைத்து பெண் பார்த்த அனுபவம்.

முதலில் லீவு கிடைக்குமா என்கிற கேள்வி.  பின்னர் எந்தக் கோவில் செல்லலாம் என்கிற கேள்வி.  சில கோவில்கள் பரிசீலனைக்குப்பின் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் என்று முடிவானது.ஆஸ்தான ஆட்டோவுக்கு சொல்லி ரிசர்வ் செய்து வைத்துக் கொண்டோம்.  "காலை ஆறு மணிக்கு வாங்க..."  கூகுளில் பார்த்தசாரதி கோவில் காலை ஐந்தரை முதல் மதியம் பனிரெண்டு வரை திறந்திருக்கும் என்று போட்டிருந்தது.  ஒரேயொரு கேள்வி மனதில் இருந்தது.  நாம் கோவிலை அடையும் நேரம் திருமஞ்சனம் என்று திரை போட்டு நிறுத்தி விடுவார்களோ என்று...

வியாழன் ஆறு டு ஏழரை நல்ல நேரமில்லையாம்.  எனவே ஆறு மணிக்கு முன்னாலேயே பையை வெளியே வைத்து (பரிகாரம்!) அப்புறம் படி இறங்கி ஆட்டோவுக்கு காத்திருந்து ஏறும்போது...

மனதில் புதிய கேள்வி.  பார்த்தசாரதி கோவில் ஏற்கெனவே பார்த்தாச்சு..  திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் கோவில்களும் பார்த்தாச்சு..  பார்க்காத கோவில் சென்றால் என்ன?

திருமழிசை என்று முடிவானது.  காலை போக்குவரத்து மிக மிகக் குறைவு என்பதால் ஏழு மணிக்குள் திருமழிசை அடைந்து விட்டோம்.  

முக்கிய சாலையிலேயே முதல் கோவில் அமைந்துள்ளது.  ஒத்தாண்டேஸ்வரர் கோவில்.  அழகான பெரிய திருக்குளத்துடன்.

என்ன என்றால், இவை திறக்கும் நேரம் பார்க்காது சென்று விட்டோம்.  இங்குள்ள ஒரு சிவன் கோவிலும் இரண்டு பெருமாள் கோவில்களும் ஏழரை, எட்டு மணிக்குதான் திறக்குமாம்.

அருள்மிகு ஒத்தாண்டேஸ்வரர் கோவில் பற்றி அறிய இங்கும்,

ஜெகந்நாதர் கோவில் பற்றிஅறிய இங்கும் 

க்ளிக் செய்யுங்கள்!







சன்னதி திறந்திருந்த ஒத்தாண்டேஸ்வர கோவிலை முதலில் அடைந்தோம்.  அப்போதுதான் அபிஷேகத்துக்கு தயார் செய்து கொண்டிருந்தார்கள் எனினும் ஸ்வாமியை ஏகாந்தமாய் தரிசிக்க முடிந்தது.  இங்கிருக்கும் சிவனுக்கு மூன்று பெயர்கள் ஒத்தாண்டேஸ்வரர்.  இரண்டாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டதாக கல்வெட்டு தெரிவிக்கிறது.  புராணக்கதைப்படி குலோத்துங்கன் லிங்கத்தின்மீது தன் வாள் பட்டு வெட்டுப்பட்டதால், பாவத்தைப் போக்கிக்கொள்ள வெட்டிக்கொண்ட கையை மறுபடி ஈஸ்வரர் வளரவைத்ததால் கை தந்த பிரான் என்றும், பக்தர்களின் மனக்குறைகளை தீர்த்துவைப்பதால் மனுவனுகுலீஸ்வரர் என்றும் அறியப்படுகிறார்.  அவர் சன்னதியின்முன் இந்த மூன்று பெயர்களும் காட்சி அளிக்கின்றன.  தாயார் சீதளவல்லி குளிர்ந்தநாயகி என்று அழைக்கப்படுகிறார். 

அழகிய, பெரிய குளம் கோவிலை ஒட்டியும், சாலையை ஒட்டியும் அமைந்துள்ளது.  நீர் இருந்தது.  வாத்துகள் நின்றிருந்தன.  செங்குந்தர் முதலியார் உறவின்முறையால் பராமரிக்கபப்டும் கோவில் இது.

இங்கு தரிசனம் முடித்து அடுத்து ஜெகந்நாத பெருமாள் கோவில் சென்றோம்.  
















அழகிய சூழலில் அழகிய பெரிய கோவில்.  அறநிலையத்துறை கைப்பற்றியுள்ள கோவில்களில் ஒன்று.  வைஷ்ணவர்கள் 108 அபிமான வைஷ்ணவ க்ஷேத்திரங்களில் ஒன்று. வட ஜெகந்நாதராக பூரி ஜெகந்நாதர் விளங்க, கீழ ஜெகந்நாதராக திருப்புல்லானி ஜெகந்நாதர் விளங்க, மத்திய ஜெகந்நாதரைப் பார்க்க விரும்பிய சப்தரிஷிகளுக்கு ஜெகந்நாதர் இங்கே காட்சி அளித்தாராம்.  திருமழிசை ஆழ்வாரின் அவதார ஸ்தலம் இது.  இதுவும் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்ட கோவிலாக இருக்கும்.  பதினோராம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பின்னர் விஜயநகர பேரரசர்கள் சற்று திருப்ப்பணி செய்திருக்கிறார்கள்.  ருக்மிணி சத்யபாமா   சகிதம் இடதுகால் மடக்கி, வலது கால் நீட்டி  அமர்ந்தநிலையில் பெருமாள்.  தென்கலை சம்ப்ரதாயம்.  இங்கும் ஏகாந்த தரிசனம்தான்.  

பட்டாச்சார்யர்கள் கோவிலின் உள்ளே செல்லில்  செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தது முதலில் ஆச்ச்ர்யமாக இருந்ததது.  அப்புறம் பார்த்தால் அது தினசரி கடமையாம்.  அட்டெண்டென்ஸ் ரெஜிஸ்தர் போல.  கோவிலின் உள்ளே வந்து பட்டர் கோலத்தில் செல்பி எடுத்து உயர் அதிகாரிகளுக்கு தினசரி அனுப்பவேண்டும்.  இதைத்தவிர அட்டெண்டென்ஸ் ரெஜிஸ்தரிலும் கையெழுத்திட வேண்டுமாம்.  அரசு ஊழியர்கள்! 

பெருமாளின் ஆசிபெற்று தாயாரை நாடியபோதுதான் இந்த விவரங்கள் எல்லாமும் தெரிந்தது.  தாயார் திருமங்கைவல்லி.  பட்டரிடம் "ஸ்வாமி..  எங்களுக்கு கல்யாண நாள்..  அர்ச்சனை செய்து ஆசீர்வாதம் செய்யுங்கள்" என்றதும் குட்டி அர்ச்சனை செய்தார்.  "பையனுக்கு பொண்ணே அமையல..  தாயார்தான் அனுக்கிரஹம் செய்யணும்" என்றேன்.  அவர் சொன்னதாவது :- "ஹுக்கும்..  எனக்கே ரெண்டு பசங்க இருக்காங்க..  அவங்களுக்கு பொண்ணே  கிடைக்காமல் நானும் அல்லாடிண்டு இருக்கேன்..  வேதம் படிச்சதுகள்...  இன்னும் பெண் அமையல.."

அவர் சிரமம் புரிகிறது என்றாலும் இறைவனுக்கு அருகில் இருப்பவரால் சட்டென 'உங்களுக்கு தாயார் அனுகிரஹத்தில் சீக்கிரம் மருமகள் வாய்க்க வேண்டுகிறேன்' என்று சொல்ல வாய் வரவில்லை பாருங்கள்.  வெள்ளத்தனையது மலர் நீட்டம். 'உங்களுக்கு நல்லபடியாய் அமையும் என்று கடைசிவரை அவர் வாயிலிருந்து வரவில்லை!  தவறுதான்.  எனினும் அதிகாலை ஆளில்லா நேரத்தில் சென்றதால் புகைப்படம் எடுத்துக்கொள்ள முடிந்தது!

அடுத்து நாங்கள் சென்ற கோவில் வீற்றிருந்த பெருமாள்.  நீண்ட நெடும் நாட்களாக புணருத்தாரணத்தில் இருக்கும் கோவில் போல.  பின்னர் ஒரு உறவினரிடம் போனில் பேசும்போது சாரங்கள் கட்டி இருப்பதைச் சொன்னபோது நெடுநாட்களுக்குமுன் அவர் வந்து சென்றதாகவும், அப்போதும் அப்படிதான் இருந்தது என்றும் சொன்னார்.

                         






கி மு 850 ல் பல்லவ மன்னன் நந்திவர்மனால் கட்டப்பட்டதாக ஒரு குறிப்பு.  தஞ்சை சரஸ்வதி மஹால் பனையோலைட் குறிப்புகளில் இருக்கிறதாம்.  சேதமடைந்த இந்தக் கோவிலை பின்னர் ராஜராஜ சோழனும், கிருஷ்ணதேவராயரும் புதுப்பித்தததாய் கல்வெட்டு.  தமிழகத்தின் மிகப் பழமையான கோவில்களில் ஒன்று இது.  சிறிய தெருவில் சாதாரணமாக காட்சி அளிக்கிறது.  

பிருகு முனிவரும் மார்கண்டேயரும் விஷ்ணு தரிசனத்துக்கு தவமிருந்தபோது பாதி உருவம் மட்டுமே விஷ்ணு காட்ட, இவர்கள் இருவரும் பிரம்மனிடம் முறையிட்டு விஷ்ணு எங்கு முழு உருவ தரிசனம் தருவார் என்று அறிந்து இத்தலம் வந்தததாக கதை.

பெருமாளை தரிசனம் செய்து தயிர் சாதம் பிரசாதம் தொன்னையில் பெற்று (ஏங்க..  ஸ்வாமிகளே..   என்னைப் பார்த்தா உங்களுக்கே பாவமா இல்லையா?  புளியோதரை எல்லாம் செய்ய மாட்டீர்களா?), தாயார் செம்பகவல்லி, ஆஞ்சு ஆகியோரை வழிபட்டு  கிளம்பினோம்.

வழிபாடு முடிந்த உடன் வயிற்றுப்பாடு இருக்கிறதே...  திருமழிசையில் சங்கீதா இருக்கிறது என்று தெரியும்.  பாஸ் முதலிலேயே "எக்காரணம் கொண்டும் பூந்தமல்லி துர்க்கா பவனுக்கு அழைச்சுட்டு போ மாட்டேன் என்று சத்தியம் பண்ணுங்கள்" என்று கறாராக சொல்லி விட்டார்!


சங்கீதாவின் ஆனியன் ரவா, பொங்கல் சாப்பிட்டு வீடு திரும்பினோம்.

=========================================================================================================

சென்ற வார கவிஞர் மீரா பேட்டி போல எழுத்தாளர் சுஜாதா ரங்கராஜனின் திருமதி சுஜாதா அவர்கள் பேட்டி...


60 களின் மத்தியில் எழுதத் துவங்கி, இறக்கும் காலம் வரை எழுத்தில் மழுங்கல் இன்றி வாசகர்களை தன் எழுத்தினால் கட்டிப்போட்டவர் எழுத்தாளர் சுஜாதா. எழுத்து என்றால் இலக்கியம் என்ற வரையறைக்குள் சிக்காமல், நவீனத்தை தன் எழுத்திலும் சிந்தனையிலும் ஏற்றி, இளைய தலைமுறையினரின் ஆதர்ஸ எழுத்தாளராக திகழ்ந்தவர்.
இந்நிலையில் எழுத்தாளர் என்று மட்டும் வெகுஜன உலகில் அறியப்பட்ட சுஜாதா என்கிற ரங்கராஜனின் தனிப்பட்ட குணங்களை பகிர்ந்து கொள்கிறார் அவரது மனைவி சுஜாதா.
சுஜாதாவிற்கு முன், அவருடன், அவருக்குப்பின் என உங்களைப் பற்றி மூன்று வார்த்தைகளில் சொல்லுங்களேன்.....
சுஜாதாவிற்கு முன்-களிமண் ... அவருடன் -முதலில் சாது, பின் கொஞ்சம் தைரியம் ,பின் அனுசரிப்பு  இப்போது- தனிமை, வெறுமை ..பின் முதுமை.
சுஜாதாவின் எழுத்துக்களில் உங்களுக்குப்பிடித்த கதை?
அவரது ஒரு குறுநாவல். பெயர் நினைவில்லை. அது என்னை ரொம்ப ஈர்த்த நாவல். ஆனால் அது அவருக்கு பிடித்திருக்குமா என்பது தெரியாது. அவரைப் பொறுத்தவரையில் தனக்குள்ளேயே வாழ்ந்தவர். உணர்ச்சிகளை பெரும்பாலும் வெளியே காட்டாதவர். அவர் எழுதிய கதைகளைப் பொறுத்தவரை ஒரு கர்த்தாவாக மட்டுமே பேசுவார். விருப்பு வெறுப்புகளை நம்மிடம் பகிரந்துகொள்ளமாட்டார்.
அவர் உங்களிடம் பேசிய முதல் வார்த்தை நினைவிருக்கிறதா?
அவர் என்னிடம் பேசிய முதல் வார்த்தையைவிட என்னிடம் அவர் அணுகிய விதம்தான் அதிர்ச்சி ரகம். 'டி' என்ற வார்த்தையுடன் ஒருமையில் பேசினார். எனக்கு 'டி' போட்டு பேசுவது பிடிக்காது. வீட்டிலும் அப்படி யாரும் என்னிடம் பேசிப் பழக்கமில்லை. அதனால் உடனே அவரிடம் அப்படி அழைப்பது பிடிக்கவில்லை என்று சொன்னேன். சரி என்றவர், அதற்குப் பிறகு ஒருநாளும் என்னை அப்படி அழைத்தில்லை .
பெரும் எழுத்தாளர்...   உங்களது பெயரையே புனைப்பெயராக சூட்டிக்கொண்டார். இது எப்போதாவது உங்களுக்கு பொறாமை ஏற்படுத்தியது உண்டா?
இல்லை! நான் அப்படிப்பட்டவளும் அல்ல. என் தங்கை என்னைவிட அழகு. அவளை எல்லாரும் சிலாகித்து சொல்வார்கள். எனக்கு உள்ளுர அதில் சந்தோஷமே தவிர, பொறாமை இருக்காது. அதேபோல் அவருக்கு கிடைத்த பெருமைகள், புகழ் எல்லாம் எனக்கு சந்தோஷம் தந்ததே தவிர, பொறாமை ஏற்படுத்தியது இல்லை.
ஒருவகையில் வீட்டில் இரண்டு எழுத்தாளர் இருந்தால் வீண் சண்டைதான் வந்திருக்கும். அவரும் கூட இம்மாதிரி விஷயங்களில் கிட்டத்தட்ட என்னைப்போலதான். எந்த உணர்ச்சியையும் வெளிகாட்டியதில்லை. எதற்காகவும், என்றும் யார்மீதும் பொறாமைப்பட்டிருக்கமாட்டார்.
There is a woman behind every successful man என்பார்கள். அவர் எழுத்துப் பணியில் உங்கள் பங்களிப்பு என்னவாக இருந்தது? அவருக்கு நீங்கள் உதவியதுண்டா?
அவர் வெற்றிக்கு நான் காரணம் என்று நினைததில்லை. அவர் நினைத்தாரா என்பதும் தெரியவில்லை. காரணம் அவர் ரொம்ப private person. எதையும், எப்போதும் வெளியே சொல்லமாட்டார். கதை பற்றிய விஷயமும் அது போல்தான். என்ன எழுதுகிறார், எதை படமாக எடுக்கிறார்கள், எதையும் பகிர்ந்து கொள்ளமாட்டார்.
எழுத்தாளரின் மனைவி என்ற முறையில் அவரது எந்த படைப்பும் உங்கள் பார்வைக்குதான் முதலில் வந்திருக்கும். படித்துவிட்டு அதுபற்றி அவரிடம் விமர்சனம் செய்திருக்கிறீர்களா?
உண்மையில் என் சிந்தனையும், அவர் கதை சித்தரிப்பும் ஒத்துப்போனதில்லை. காரணம் கதைகளில் புதுமையான சிந்தனை இருக்க வேண்டும் என விரும்புபவர் அவர். நான் அப்படி இல்லை. மிகவும் பழமையான சிந்தனை கொண்டவள்.

திருமணமான புதிதில் அவரது கதையை விமர்சனம் செய்ததுண்டு. பின்னாளில் அதைவிட்டுவிட்டேன். கரையெல்லாம் செண்பகப்பூ என்ற அவரது நாவலில், முதலில் அந்த கதையின் நாயகியான அந்த கிராமத்துப் பெண், நகரிலிருந்து வந்தவனுடன் ஓடிப் போவதாகத்தான் முடிவு வைத்தார்.
எனக்கு அது நெருடலாக இருந்தது. எந்த கிராமத்துப் பெண்ணும் அவ்வாறு செய்யமாட்டாள். முடிவு சரியில்லை என்றேன். அப்புறம் அந்த முடிவை மாற்றி எழுதினார். அது ஒன்றுதான் எனக்கு நினைவிருக்கிறது.
பெண் குழந்தை இல்லை என்று எப்போதாவது நீங்களோ, அவரோ எப்போதாவது ஏங்கியதுண்டா?
எனக்கு முதலில் பெண் குழந்தைதான் பிறந்தது. பிறந்து நாலு நாட்களில் இறந்துவிட்டது. இறந்த அந்தக் குழந்தையை எண்ணி வருந்தியதுண்டு. அவர் தனது சில கதைகளில் கற்பனையாக இதுபற்றி எழுதி தன் வருத்தத்தை போக்கிக்கொண்டார் என்றே நினைக்கிறேன்.
முதல் கோபம், முதல் சிரிப்பு, முதல் பிரிவு என அவருடனான உங்கள் மூன்று தருணங்கள் நினைவிருக்கிறதா?
அப்போது நாங்கள் டெல்லியில் வசித்து வந்தோம். இரண்டு குழந்தைகள் பிறந்து விட்டன. ரொம்ப நாட்களாக என் உறவினர் ஒருவர் வீட்டுக்கு போக வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். இவரும் இந்த வாரம், அடுத்த வாரம் என்று தள்ளி போட்டுக்கொண்டே வந்தவர், ஒருநாள் நல்ல மூடு போல, 'வா... போய் வரலாம்!' என்றார். கிளம்பும் போதே மணி ஐந்து. அவர்கள் வீட்டிலேயே குழந்தைகள் சாப்பிட்டு விட்டன. நாங்கள் வேண்டாம் என்று சொல்லி கிளம்பிவிட்டோம்.
அப்போதே மணி ஒன்பது. ஸ்கூட்டர் கிடையாது. பஸ் அதிக நேரத்திற்குப் பின் வந்தது. நிறுத்தத்தில் இறங்கி நடந்தோம். பசி எரிச்சல், கோபத்தில் விறு விறு என்று இவர் முன்னாடி போக, இரண்டு குழந்தைகளும் தூங்கிப்போய் விட்டன. தூக்கிக்கொண்டு பின்னால் நான். அப்போது அவர் என் மீது காட்டிய கோபம் இன்னமும் பதறச் செய்கிறது.
முதல் பிரிவு, முதல் சிரிப்பு இரண்டும் ஒரே சம்பவத்தில் நடந்தது. கல்யாணம் முடிந்த ஐந்தாம் நாளே டெல்லி சென்றுவிட்டார். இது முதல் பிரிவு.
மூன்று மாதத்திற்க்குப் பின் என் மாமனார் என்னை டெல்லி அழைத்துச் சென்றார். ஸ்டேஷன் வந்துவிட்டது. 'இவன் இருக்கானா பார்' என்றார். நானும் பார்த்தேன். பார்த்துவிட்டு, 'இல்லையேப்பா...' என்றேன். கடைசியில், இவர் என் கோச்சுக்கு எதிரேதான் அவ்வளவு நேரம் நின்றுகொண்டு இருந்திருக்கிறார். எனக்குத்தான் அடையாளம் தெரியவில்லை. பலமாக சிரித்தோம் எல்லோரும்.
பிரபலமான எழுத்தாளரின் மனைவி என்ற வகையில் உங்கள் சுயம் பறிபோனதாக என்றாவது நினைத்ததுண்டா?
நிறைய சந்தர்ப்பங்களில் பொது நிகழ்ச்சி, வீட்டு விசேஷம், அவர் வீட்டு ஃபங்ஷன்....எங்கே போனாலும் சுஜாதா... சுஜாதா... சுஜாதா...தான். எனக்கு இது கூட வருத்தமில்லை. ஆனால் சில சொந்தக்காரர்கள், என்னவோ எனக்கு தெரியக்கூடாத ரகசியம் போல், நானும் இவருடன் இருக்கும்போது, என்னை தனியே அமரவைத்து, இவரை மாடிக்கு அழைத்துச் சென்று பேசும்போது அப்போது வருவது கோபமா..சுய பச்சாதாபமா, எரிச்சலா...இல்லை இவை எல்லாவற்றிலும் ஆன ஒரு கலவையா எனத் தெரியவில்லை?
ஒரு முறை இப்படி நடக்கப்போக, நான் எழுந்து வீட்டுக்கு வந்துவிட்டேன். தன் தவறை உணர்ந்து அவர்களே அப்புறம் மன்னிப்பு கேட்டார்கள். ரகசியம் பேசட்டும். என்னை அழைக்க வேண்டாமே.
சுஜாதாவின் கதைகளில் அவருக்கு நிகழ்ந்த அனுபவம் அல்லது நீங்கள் அறிந்தவர் அல்லது அவருக்குத் தெரிந்தவர் இவர்களைப்பற்றி எழுதியது உண்டா?
நிறைய! ஆனால் அடையாளங்களை மாற்றி விடுவார். யாரைப்பற்றி எழுதுகிறார் என்று எனக்குத்தெரிந்து விடும். ஆனால் நான் கேட்க மாட்டேன். அவரது எழுத்தில் தலையீடு செய்வது எனக்கும் பிடிக்காது, அவருக்கும் பிடிக்காது.
உங்களை வைத்து ஏதாவது கதை எழுதியிருக்கிறாரா?
ம்…ஒரு சிறுகதை. 1964 அல்லது 65 என்று நினைக்கிறேன். புதிதாக கல்யாணமான பெண்; அவளை அழைத்துக்கொண்டு காவேரிக்கரைக்கு போவதாக ஆரம்பிக்கும் கதை. அதில் அந்தப்பெண் பாத்திரம் என்னை வைத்துத்தான் எழுதினார். கதையில் அது நடந்தது இங்கே பீச்சில்.
என்றாவது தனது எழுத்துப் பணியில் அவர் சலித்துக்கொண்டதுண்டா?
இல்லவே இல்லை! எழுத ஆரம்பித்துவிட்டால் அவருக்கு சாப்பாடு, தூக்கம் எதுவும் வேண்டாம். எழுதுவது , படிப்பது, இவை இருந்தால் போதும் அவருக்கு. சாகும் வரை எழுதிக்கொண்டிருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அது போலத்தான் நடந்தது.
உணவு விஷயங்களில் சுஜாதா எப்படி?
வெந்தயக்குழம்பு, கீரை மசியல், சுட்ட அப்பளம் அவருக்கு மிகவும் பிடித்தவை.
சுஜாதாவின் கண்ணாடி, அவரின் மேஜை, புத்தக அலமாரி, அவருடைய பரிசுப் பொருட்கள் ஆகியவற்றுடன் குறிப்புகளும், கவிதைகளுமாக நிரம்பிக்கிடக்கின்றன அவரது டைரி.
நன்றி: விகடன்

=====================================================================================  

ஏகாந்தமாய்...


ஜோதிஷ்ஜி த்ரிப்பாட்டி !

-Aekaanthan

நான் வேலையில் சேர்ந்து சில மாதங்களுக்குப் பின் உத்தரப்பிரதேசம் ஒன்று, அங்கே பணியில் சேர்ந்திருந்தது. திருநாமம்: த்ரிப்பாட்டி.  சங்கம் லால் த்ரிப்பாட்டி. Tripathi – த்ரிப்பாட்டி. இது சரியான உச்சரிப்பு. திரிபாதி, திரி பாதி, விளக்கு பாதி என்றெல்லாம் சொல்ல, கற்பனை செய்ய முயற்சிக்கக்கூடாது. 30+ வயதுக்காரன்போல் தோன்றினான் அப்போது. மீடியம் பில்டில் இருந்தவனின் தலை தாராளமாக நரைத்துவிட்டிருந்தது. எனக்கு நேர்மாறாக, நடையுடையில் கவனம் செலுத்துபவனில்லை.  கொஞ்சம் தொள தொள பேண்ட், ஷர்ட்டில் வருவான் த்ரிப்பாட்டி.

பகற்பொழுதில் பொதுவாக தத்தம் வேலைகளில் பிஸியாக இருந்தபடியால், மாலை லேட்-சிட்டிங் சமயத்தில் அரட்டையும், அதுசார்ந்த அடிப்படை சினேகமும் வளர்ந்தது. த்ரிபாட்டிக்குத் தன் படிப்புத் தகுதிபற்றிய பெருமையுண்டு. டபுள் எம்.ஏ. அவன்!  பொதுவாக பிறந்த மாநிலமான உ.பி.பற்றியும், தன் குடும்பப் பின்னணிபற்றியும் அந்தப் பெருமை நீண்டிருந்தது. அவனுடைய சர்நேம் குறிப்பிடுவதுபோல, உத்திரப்பிரதேச கன்சர்வேடிவ் பிராமண குடும்பத்திலிருந்து வந்தவன். பின்பக்கம் சின்னதாகக் குழந்தைக் குடுமி.. பொதுவாக வட இந்திய கன்சர்வேடிவ் பிராமணர்கள் வைத்துக்கொள்வார்கள். சிறுநாடா போன்று
தொங்கிக்கொண்டிருக்கும். ஆச்சரியமாக அத்தகைய பின்புலத்திலிருந்து வந்திருந்த த்ரிப்பாட்டியிடம் அது தென்படவில்ல.) ஹிந்து மதம், வேதம், தர்மம்பற்றி பேச வாய்ப்பு கிடைத்தால் தாராளமாக சம்ஸ்கிருதம் சேர்த்துப் பேசுவான்.

பொதுவாக சுமுகமாகப் பழகுபவன். சௌத் இந்தியர்களான என்னிடமும், மோஹனனிடமும் (மலையாளி நண்பன்) ஏனோ அவனுக்குக் கொஞ்சம் வாஞ்சை என அவனது பேச்சில் அவ்வப்போது தெரிந்தது. சௌத் இண்டியன்ஸ் - நல்ல பழக்கவழக்கமும், நேர்மையுமானவர்கள், வேலையில் திறமை காட்டுபவர்கள் என்கிற அவனுடைய அவதானிப்புதான் காரணம் என பின்னால் புரியவந்தது. அதனால் சராசரி நார்த் இண்டியனை அலட்சியப்படுத்துவதுபோல், இந்தத் த்ரிபாட்டியை படுத்துவதில்லை!  கொஞ்சம் மரியாதை தருவதுண்டு.

எங்கள் செக்‌ஷன் இரு ரூம்களாக அமைந்திருந்தது. ஒரு மாலையில் ஆஃபீஸ் நேரம் முடிந்து, மேற்கொண்டு உட்கார்ந்திருந்த வேளையில் - செக்‌ஷனில் சில இளைஞர்கள் மட்டுமே இருந்தோம்.  கொஞ்சம் வேலை, நிறைய அரட்டை. அடுத்த ரூமில் த்ரிப்பாட்டி,  மோகனன், பட்டாச்சார்ஜி ஆகியோரின் சீட்கள். அந்த ரூமிற்கு எதற்கோ போன நான். சீட்டுக்குத் திரும்பப் பார்க்கையில்..

”அரே! Baito Bhai ! (இப்படி) உட்கார் தம்பி) நம்மளோட ரெண்டு வார்த்தை பேசேன்.. எங்கே ஓடப்பாக்குறே!” - த்ரிப்பாட்டி.

”கொஞ்சம் வேலை பாக்கியிருக்கிறது. முடிச்சிட்டு வர்றேன்..  பேசலாம்!” - நான்.

”கோயி அர்ஜெண்ட் தோ நஹி ஹை..னா! ஃபிர் க்யா ஹை! கல் தேக்லேங்கே (kal dekh lenge).. (அவசரம் ஒன்னும் இல்லீல்ல.. பின்ன என்ன? நாளைக்குப் பாத்துக்குவோம்). பைட்டோ.. பைட்டோ ! ” என நிர்பந்திக்க காலியாயிருந்த அடுத்த சீட்டில் உட்கார்ந்தேன்.  ”குளிர்காலம்.. ஒரு (ச்)சாய் கிடைத்தால் நல்லாருக்கும்!” என்றேன்.

”கேண்ட்டீன் பந்த் ஹோ கயா! நோ சாய் நௌ !” என்றான். அவன் அடிக்கடி சாய் குடிப்பவனல்ல. சிக்ரெட் பிடிப்பவர்களை ஒருமாதிரியாகப் பார்ப்பான் !

பேச்சு வளர்ந்தது. மற்றவர்களும் இடையிடையே நுழைந்து ஏதோ சொன்னாலும், அவன் என்னோடு பிரதானமாகப் பேசிக் கொண்டிருந்தான். வழக்கம்போல் அவன் கிட்டத்தட்ட பூராவாக ஹிந்தியிலும், ஹிந்தி இன்னும் வசப்படாத காரணத்தால் நான்
ஆங்கிலத்திலுமாக உரையாடிக்கொண்டிருந்தோம்.

தெற்கே..மதராஸில் பள்ளி/கல்லூரிப் படிப்பில் ஆங்கிலத்தின் ஸ்டாண்டர்ட் நன்றாக இருக்கும் என்றிருக்கிறான் ஒரு முறை.  திடீரென்று ஏதோ நினைவு வந்தவன்போல்..

”நீ எந்த சப்ஜெக்ட்டில் போஸ்ட்-கிராஜுவேட்? ” கேட்டான் த்ரிப்பாட்டி.  அவனைப் பார்த்தேன். முகத்தில் சீரியஸ்னெஸ் தெரிந்தது.  அவனால் கணிக்கமுடியவில்லையோ..

அதற்கு பதில் சொல்லாமல் வேறு ஏதோ சொல்லமுயற்சிக்க, மீண்டும் அதற்கே திரும்பினான். கேட்டான். சரி .. சொல்வோம் என நினைத்தவாறு..
”ம்.. எந்த சப்ஜெக்ட்டிலுமில்லை!” என்றேன்.

”க்யா! சப்ஜெக்ட் bhathavo..! எந்தப்பாடத்தில், எந்த கோர்ஸ்.. சொல்லு” - என்றான் விடாமல்.

”PG யெல்லாம் படிக்காத ஏழை நான்!”

“டோண்ட் டெல் மீ! என்றான் நம்பாமல். ”ஜூட் மத் போல் ..லாலா!” (பொய் சொல்லாதேடா!- என்கிற தொனியில் )

சில சமயங்களில் Bhai என்பதன் இடத்தில் ‘லாலா!’ என்பான். அது சிரிப்பைத் தரும் எனக்கு. இவன் ஒருத்தனிடம்தான் இப்படி ஒரு ஹிந்தி எக்ஸ்ப்ரெஷனைப் பார்த்தேன் !

”நான் வெறும் கிராஜுவேட்தான்!” என்று, மேற்கொண்டு படிக்கவில்லை, முதுநிலைப் பட்டதாரியல்ல என்று ஒருவாறு அவனை நம்பவைத்தேன்.

”ஆனால் உன் இங்கிலீஷ் மிகவும் நன்றாக இருக்கிறதே..  தமிழ்நாட்டில் கிராஜுவேட்ஸ் எல்லாரும் இப்படியா இங்கிலீஷ் பேசுறாங்க !” கேள்வி மயமானான் த்ரிப்பாட்டி. அவனை அதிலிருந்து உடனே விடுவித்து, வேறு சப்ஜெக்ட்டிற்கு மாற்றி ஏதேதோ பேசிக்கொண்டிருக்கையில், சடாரென்று
”உன் கையைக் காட்டு !” என்றான்.

நான் கையசைப்பது வழக்கம். கையை யாருக்கும் காட்டத் தயங்குபவன். தயங்கினேன் அன்றும்.

”அரே Bhai ! ஹாத் திகாவ்! (dhikhaav) ” (காட்டுப்பா, கையை!) என்றான் த்ரிப்பாட்டி விடாமல்

காட்ட நேர்ந்தது. ஆராய்வதுபோல் பார்த்தான். ”த்ரிப்பாட்டிஜி கொஞ்சம் ஜோஸ்யம் எல்லாம் தெரிந்த பண்டிட்ஜி!” - என்று செக்‌ஷனில் வேறொருவன் எப்போதோ சொன்னது நினைவில் வந்தது.

”அச்சி ஹாத் ஹை (நல்ல கை) !” என்றான். உற்சாக மூட்டப் பார்க்கிறானா இவன்!

”சரி.. சரி.. விடு!” என்று கையைப் பின்னுக்கிழுக்க முயன்றேன்.  ”கொஞ்சம் இரு தம்பி..” என்றவன் மேற்கொண்டு ஆராய்வதுபோல் கூர்மையானான்.

”அச்சி பீவி.. தோ பச்சே!” (நல்ல மனைவி. இரண்டு குழந்தைகள்)
என்றுவிட்டு என்னை உற்றுப் பார்த்தான். நான் சந்தோஷப்படுவேன் என்று நினைத்திருப்பான்…

”கல்யாணம் பண்ணிக்கிற ஐடியால்லாம் எனக்கில்லை!” என்றேன்.

”அரே பாய்! தேரா ஹாத் மே ஏ ஹை-ன்னா!” ( அட, உன் கையில் இப்படி இருக்குல்ல !) – த்ரிப்பாட்டி.

கையை வாபஸ் வாங்க முயற்சிக்கையில் மேலும் சொன்னான்.

”ஏக் அச்சா மக்கான் பனாவோகே (banaavoge) ! (ஒரு நல்ல வீடும்
கட்டுவாய்!)” என்று அவன் சொன்னதில் நிஜமாகவே அதிர்ந்தேன்.
வாடகை வீடுதான் நம்ப தலையெழுத்தே என்கிற நல்ல முடிவுக்கு
வந்து நிம்மதியாயிருந்தவன் நான்..

”சம்பாதிக்கிறத தின்பதிலும், பயணத்திலும், புத்தகங்கள் வாங்கறதிலயும், புதுசு புதுசா வாங்கி உடுத்திக்களிப்பதுமாய்க் கழிக்கிற ஆளுப்பா நான். வீடு கட்றதா! வேறு எவனாவது பணம் கொடுப்பானோ, ஒருவேளை!” என்று அவனை சீண்டினேன்.

”ஜரூர் ஏக் மக்கான் ஹை ..!” (நிச்சயமா ஒரு வீடு இருக்கு (உனக்கு) என்று உறுதிப்படுத்துவதுபோல் கையை மீண்டும் பார்த்துவிட்டு, என்னை நோக்கினான்.

ஒருவழியாக அவனிடமிருந்தும் அவன் ஜோஸ்யத்திடமிருந்தும் விடுபட்டேன் அன்று.

இடையிடையே நேரம் கிடைக்கையில், குடும்ப ஏற்பாட்டுடன் செய்யப்பட்ட தன் கல்யாண வாழ்க்கை, அப்பாவியான மனைவிபற்றி, குடும்ப சுவாரஸ்ய நிகழ்வுகள் என்றெல்லாம் கொஞ்சம் சொல்வான். சில மாதங்களில் ஒரு சிக்கலான டெப்பார்ட்மெண்ட் பரீட்சை எழுதித் தேறிவிட்டேன். வேறொரு சென்சிட்டிவ் விங்கிற்கு மாற்றப்பட்டு, பயிற்சி வகுப்புகளுக்குப் போனேன். அதற்கப்புறம் அயல்நாட்டு போஸ்ட்டிங் என்றெல்லாம் வந்துகொண்டிருந்ததில், மற்ற சிலரைப்போலவே சங்கம் லால் த்ரிப்பாட்டியும் மனதிலிருந்து அகன்றிருந்தான். 2004-ல் ஒரு முறை, ஜப்பானிலிருந்து நான் திரும்பியிருந்தபோது அவனை பட்டியாலா ஹவுஸ் ஆஃபீஸில் பார்த்தேன். சிறிது அளவளாவிவிட்டுத் திரும்பினேன்.

எனது சர்வீஸின் கடைசி அசைன்மெண்ட்டில் காங்கோவில் கான்சுலர் ஆஃபீஸராகப் பணியேற்றிருந்தேன்.. 2012 மத்தியில் ஒரு நாள் இந்திய ஹைகமிஷன், நைரோபி –கென்யாவிலிருந்து ஃபோன் வந்தது. ஏதாவது சர்வீஸ் சம்பந்தப்பட்டது என நினைத்து எடுத்துப் பேசுகையில் அந்த செய்தி வந்தது. திடுக்கிட வைத்தது.

“பேர் என்ன சொன்னீர்கள், த்ரிப்பாட்டியா? முழுப்பெயர்? 

”சங்கம் லால் த்ரிப்பாட்டி! செகண்ட் செக்ரெட்டரி!” என்றது மறுமுனையில் ஒருவரின் குரல்.

”என்ன ஆச்சு!” என்றேன் தடுமாற்றமாக.

”நெஞ்சு வலி ! ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்தோம். ட்ரீட்மெண்ட் நடந்தது.. ஆனால் .. போய்விட்டார் இன்று..”

குழப்பமும், பதற்றமுமாய் –  ”குடும்பம் பக்கத்திலிருந்ததா? பிள்ளைகள் எல்லாம் செட்டில் ஆகிவிட்டனரா?” என்று வினவினேன்.

”அவர் மட்டும் தனியாகத்தான் நைரோபிக்கு வந்திருந்தார்.  பிள்ளைகள் அமெரிக்காவில். அம்மாவும் அவர்களுடன் இருக்கிறார்.  தகவல் போயிருக்கிறது..”

ஆ… த்ரிப்பாட்டி.. என் நண்பனே ! உன்னோடு நான் இன்னும் சம்பாஷித்திருக்கவேண்டும்…. எங்காவது ஒரு அமைதியான டெல்லி ரெஸ்ட்டாரண்ட்டில் நிதானமாக உட்கார்ந்து அரட்டை அடித்திருக்கவேண்டும்…உன்னைப்பற்றி மேலும் தெரிந்துகொண்டிருக்கவேண்டும்…  ஆ… நீ அன்னிக்குச் சொன்னபடியே.. எனக்கொரு நல்ல மனைவி, குழந்தைகள், வீடு எல்லாம், நம்பமுடியாதபடி
வாய்த்திருக்கிறதேப்பா…

**
===========================================================================================

நியூஸ் ரூம் 


பானுமதி வெங்கடேஸ்வரன் 

- இலங்கைக்கு அதிக அளவு சுற்றுலா பயணியை ஈர்க்கும் நோக்கத்தில் இந்தியா, சீனா, ரஷ்யா, மலேஷியா, ஜப்பான், இந்தோனேஷியா, தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த பயணியருக்கு 2024,மார்ச் 31 வரை கட்டணமின்றி விசா வழங்கப்படும் என்று அந்த நாடு அறிவித்துள்ளது.

- PAN NO. இல்லாதவர்களிடம் அவர்களின் விலாசம், மொபைல் எண், ஆதார் எண் போன்ற சுய விவர விண்ணப்பம் பெற்றபின் ரூ50,000 வரை ரொக்க பணம் செலுத்த அனுமதிக்கலாம் என்று வருமானவரித்துறை வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

- சாலை விபத்தில் மரணமடைகிறவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம். இந்தியாவில் பெருநகரங்களில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக சென்னை முதலிடம். சாலை விபத்தில் சிக்குகிறவர்களில் 20% பேர்களை முதலுதவி சிகிச்சையால் காப்பாற்ற முடியும். 

- பீஹாரில் துர்கா பூஜை பந்தலில் பிரசாதம் வழங்கியபொழுது வரிசையில் வந்தவர்கள் திடீரென முண்டியடித்ததால் நெரிசல் ஏற்பட்டது. அதில் ஐந்து வயது சிறுவன் கீழே விழுந்தான், அவனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்று இரண்டு பெண்கள் காப்பாற்ற முனைந்திருக்கிறார்கள். அப்போது பின்னாலிருந்தவர்கள் வேகமாக ஓடி வந்ததால் மூவரும் நெரிசலில் சிக்கி மரணமடைந்திருக்கின்றனர்.

- திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே 200 கோடி ரூபாய் மதிப்பில் அறிவுசார் நகரம் அமையவுள்ளது. அங்கு சிறந்த பல்கலைக்கழகங்கள், அறிவுசார் தொழிலகங்கள் முதலியவை உலக தரத்திற்கு இணையாக அமைய உள்ளன. மேலும் அங்கு வேளாண் தொழில் நுட்பம், கட்டட கலை மற்றும் வடிவமைப்பு, வானிலை ஆராய்ச்சிகளும் நடைபெற உள்ளன.

- குஜராத்தில் ரூ.17லட்சம் மதிப்பு போலி மருந்துகள் பறிமுதல்.

- அகமதாபாத்தில் கர்பா நடனமாடிய பத்து பேர் மாரடைப்பால் அடுத்தடுத்து பலி.

==================================================================================================================================

பொக்கிஷம்...








113 கருத்துகள்:

  1. காலை வணக்கம், ஸ்ரீராம் மற்றும் எல்லோருக்கும்.

    திருமழிசையா! ஆஹா அந்த ரூட்ல எவ்வளவு தடவை நான் சாரதியாக ஓட்டிச் சென்றிருக்கிறேன். அந்த ரூட்ல நிறைய கோயில்கள். நீங்கள் சொல்லியிருக்கும் இரு கோயில்களும் போயிருக்கிறேன்.

    வீட்டுல இருந்த பெரியவங்கள், சொந்தக்காரங்கன்னு அழைத்துக் கொண்டு பல முறை இந்த ரூட்டில். இந்தக் k கோயில்கள், திருவாலங்காடு கொஞ்சம் உள்ள போணும் தாண்டினா அடுத்தாப்ல திருவள்ளூர் கோயில், அடுத்தாப்ல திருப்பதி போற ரூட்ல பள்ளிகொண்டீஸ்வரர், அடுத்து வேதநாராயணர், அடுத்தாப்ல வாலீவரர், அப்புறம் புத்தூர் திருநாராயணவனம் கோயில் இந்தப்பக்கம் வந்தா திருத்தணி, திருவாலங்காடும் இப்படிக்கா வந்தா கவர் பண்ணலாம். இப்படி அனைத்தும் நான் சாரதியாக!!! பவனி வந்த காலம்.

    மீதிக்கு அப்பால வரேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா... வணக்கம்.

      இந்த ரூட்ல இருக்கும் எல்லா கோவில்களையும் அநேகமாக நீங்கள் பார்த்திருப்பீர்கள். அப்போ நீங்க ரூட் தல என்று சொல்லுங்கள்!

      நீக்கு
    2. ஹாஹாஹாஹாஹா ஸ்ரீராம்...இந்த ரூட் மட்டுமல்ல பல ரூட்கள். அது ஒரு காலம். பாண்டிச்சேரி, சிதம்பரம், திருநாகேஸ்வரம், அதெல்லாம் ஒரு புறம்...பெங்களூர் வரை, தெற்கு வரை...அப்புறம் ஆந்திரா குண்டூர் விஜயவாடா வட்லமுடி இப்படி இன்னும்....

      கீதா

      நீக்கு
    3. அப்போ எல்லா ரூட்டுக்கும் நீங்கதான் ரூட் தல...! :))

      நீக்கு
    4. ஹாஹாஹா அப்படி எல்லாம் இல்லை ஸ்ரீராம்....அது அப்படி சாரதியாக பவனி வந்த பொற்காலம். ஓட்டுவது எனக்கு ரொம்பப் பிடிக்கும்..

      கீதா

      நீக்கு
  2. ஏகாந்தன் ஸார் தொடர் வாசிக்கப் பிடித்திருந்தது.
    பிலாக்கர் எழுத்து இல்லாமல் பத்திரிகை எழுத்து இதன் சிறப்பு அம்சம். இயல்பான நகைச்சுவை அவர் எழுத்தில் இயல்பாகவே இழையோடுவது ரசனையைக் கூட்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். அதி தீவிர கிரிக்கெட் ரசிகர். அலுவலக தொடர் பற்றி எழுதக் கேட்டபோது சம்மதித்தார் என்பது சந்தோஷம்.

      நீக்கு
  3. திருமதி சுஜாதா பேட்டி பற்றி அதிகம் சொல்வதற்கில்லை. சிவசங்கரி, வாஸந்தி கதைகளைப் படித்திருக்கிறேனே இவர் எழுதுவதை அதிகம் படித்ததில்லை என்று சுஜாதா காலமான சமயத்தில் இவர் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. இது பற்றி தி.நகர் பகுதி புத்தக வெளியீட்டார் ஒருவர் என்னிடம் வருத்தப்பட்டுக் கொண்டதும் உண்டு. சுஜாதா எழுத்து பற்றி ஆத்மார்த்தமாக யாராவது எழுதியிருப்பதை வாசிக்க வேண்டும் என்ற வேட்கை இந்த நேரத்தில் மனசை ஆக்கிரமிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் முன்னர் படித்த தினகரன் பேட்டி இல்லை இது. இது கொஞ்சம் பெட்டர் பேட்டி!

      பொதுவாகவே புகழ்பெற்ற எழுத்தாளர்களின் எழுத்துகளை ரசிக்க வேண்டுமே தவிர, அருகில் நெருங்கி ஆராயக்கூடாது என்பது என் கருத்து.  அதையும் மீறி இது போன்ற சுவாரஸ்யங்கள் அவ்வப்போது கிடைக்கும்.  அதே போல எல்லா மனைவிமார்களும் தத்தம் கணவன் மீது சில அதிருப்திகள் இருக்கும்.  அதையெல்லாம் மீறியது அவர்கள் மீதான இவர்கள் அன்பு.  அன்பைப் பற்றி நிறைய பேசி இருப்பார்கள்.  குறைகளையும் சில இடங்களில் கொட்டினால்தானே அவர்களும் சமனப்படுவார்கள்!

      நீக்கு
    2. நான் குறிப்பிட்டிருப்பதே வேறே. அவர் எழுத்தும் அவர் துணைவியாரின் கருத்தும் பற்றியது.

      நீக்கு
    3. அந்தக் கருத்து 100% உண்மை என்று சொல்ல முடியவில்லை.

      நீக்கு
  4. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த நாள் இனிய நாளாக பிரார்த்திப்போம். வலம்புரி ஜான் நினைவுக்கு வருகிறார்!

      வாங்க துரை செல்வராஜூ அண்ணா... வணக்கம்.

      நீக்கு
  5. 'வாய் வரவில்லை பாருங்கள்' என்பது அந்த தருணத்தில் உங்களது நியாயமான ஆதங்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சட்டென தோன்றும்தானே.....  இதோ.... நேற்று இதே நேரம் திருநாகேஸ்வரத்தில் ஏகாந்தமாய் லிங்கேஸ்வரரை அருகே தரிசனம் செய்தபின் சிவன் சன்னதியில் இதே கோரிக்கை வைத்தபோது, உங்கள் மனமார்ந்த பிரார்த்தனைக்கு இறைவன் நிச்சயம் செவி சாய்ப்பார் என்றார் அந்த குருக்கள்.  நிறைவாய் இருந்தது.

      நீக்கு
    2. இதன் மனத்திருப்தி என்பது. அந்தப் பேற்றை அடைவதற்குத் தானே கோயிலுக்குப் போகிறோம்?

      நீக்கு
    3. ஒரு கால் விட்டுப்போய்விட்டது என்று நினைக்கிறேன்!

      நீக்கு

  6. @ ஸ்ரீராம்..

    /// சட்டென 'உங்களுக்கு தாயார் அனுகிரஹத்தில் சீக்கிரம் மருமகள் வாய்க்க வேண்டுகிறேன்' என்று சொல்ல வாய் வரவில்லை!.. ///

    இருக்கட்டும்..
    அதனால் என்ன?..

    கூடிய விரைவில் தங்களது மகனுக்குத் திருமணம் கூடி வரும்.. நல்ல மருமகள் வீட்டில் விளக்கேற்றுவாள்..

    கவலை வேண்டாம்..

    ஒரு குறிப்பு :-
    தங்கள் வீட்டில் நல்ல நெய் விளக்கு மட்டுமே ஏற்றப்படுதல் வேண்டும்..

    இது மிக மிக முக்கியம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அண்ணா..   ஆறுதலாய் இருக்கிறது.  நெய்தீபம் பற்றி பாஸிடம் சொல்கிறேன்.

      நீக்கு
  7. பஸ் பயணத்தில் பார்த்த அந்த குறள் பாணி வரிகள் அதை எழுதிய மாணவரின் சொந்த அனுபவத்தில் விளைந்தது போலும்.

    முக்கியமாக சொல்ல நினைத்தது என்னவென்றால் வழக்கம் போல வரிசையாக துணுக்குகளை பொக்கிஷம் பகுதியில் வரிசைபடுத்தாமல், இந்த மாதிரி குட்டி செய்தி போன்ற துணுக்குகளை இடையில் நுழைத்தது ஒரு மாற்றமாக வித்தியாசமாக இருந்தது.புதுமை முயற்சிகளை
    வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜீவி ஸார்...   இது போன்ற முயற்சி ரிலாண்டு வருடங்களுக்கு முன்னரும் செய்திருக்கிறேன்.  அப்படி பகிர, தெரிந்த பெயர், தெரியாத விவரம் என்று விகடனில் வந்த பகுதிகள் சிலவற்றை எடுத்து வைத்திருந்தேன்.  அவை எங்கு போனது என்றே தெரியவில்லை.  மறுபடி அந்தப் புத்தகம் கையில் கிடைக்கவேண்டும்!  மற்ற விவரங்கள் இதுபோல அவ்வப்போது தொடர்கிறேன்.

      நீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. கோயிலின் புகைப்படங்கள் அற்புதமாக இருக்கிறது நானும் தரிசித்து கொண்டேன் ஜி.

    செல்ஃபி எடுத்து உறுதி கொடுக்கும் செயல் சாக்கடையை நோண்டுபவர்களுக்கு இருக்கிறது.

    இப்போது பட்டாச்சார்யார்களுக்குமா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அரசின் அரும்பெரும் கோட்பாடு, செயல்பாடு!

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.

    முதலில் தங்கள் திருமண நாளுக்கு மனமார்ந்த தாமதமான வாழ்த்துகள்.

    நல்ல நாளில் கோவில் தரிசனங்கள் சிறப்பான முறையில் கிடைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி. கூறுவோம். கோவில் படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. நானும் இறைவனை மன நிறைவோடு தரிசித்துக் கொண்டேன்.

    தங்கள் மகனுக்கு விரைவில் நல்ல முறையில், திருமண யோகம் கிடைத்திடவும் பெருமாளை வேண்டிக் கொண்டேன்.

    எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி சுஜாதா அவர்களின் பேட்டி அருமை. இதை முன்பே படித்திருக்கிறேன். கணவர், மனைவியாக வாழ்க்கை தொடர்ந்தாலும், மனித மனங்களின் வேறுபாடுகளே ஒவ்வொன்றும் ஒரு விதம்தான். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அநேகமாக நீங்கள் படித்த திருமதி சுஜாதா பேட்டி தினகரன் பேட்டியாக இருக்கலாம்.  இது வேறு.  அல்லது ஒருவேளை நீங்கள் படித்துக் இருக்கலாம்!  நன்றி அக்கா.

      நீக்கு
  11. கோயில் படங்கள் செமையா இருக்கு ஸ்ரீராம். ரொம்ப நல்லா வந்திருக்கு. ரசித்துப் பார்த்தேன்...கொஞ்சம் வருஷமாச்சே!!

    செல்லம் பாக்குது இதாரு புச்சா இருக்குன்னு!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா.  செல்லம் என்னைக் கண்டு தூர விலகியது 'யாரோ துஷ்டன் வந்திருக்கிறான்'  என்பது போல...  விடுவோமா..  பின்னாலேயே சென்று படம் எடுத்து விட்டேன்!

      நீக்கு
  12. இந்தக் குளமும் வாத்துகளும் பார்க்க அவ்வளவு அழகா இருக்கும். உங்கள் படம் ரொம்ப அழகா இருக்கு ஸ்ரீராம்.

    எங்கிட்ட அப்ப காமெரா இல்லை. 1999 வருடத்தில். அப்புறம் படுத்தல் காமெரா அது கையில் வந்த பிறகு போனப்ப எடுத்த படங்கள் எங்க போச்சு தெரியவில்லை. வலைப்பக்கம் வரும் முன். அதன் பின் ஏனோ எடுக்காமல் விட்டேன் அதன் பின் எல்லாம் தலைகீழ்....எங்கும் பயணிக்கவில்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா.  எப்பவுமே இது போன்ற இடங்கள் அழகு.  நேற்று சேங்காலிபுரத்தில் ஒரு குளம் இருந்தது.  சில பூ கொடிகள் இருந்தன.  ஆனால் பொதுவான நிலையில் குளம் மோசமாக இருந்ததது.  என் அண்ணன் மகன் அதை புகைப்படம்    புகைப்படத்தில் பார்க்கும்போது சுமாராய் அழகாய் இருக்கிறது.

      நீக்கு
    2. ஓ சேங்காலிபுர்ம் போய் வந்தீங்களா..இப்ப அடிக்கடி கோயில் பயணம் போல!!!

      கீதா

      நீக்கு
  13. ஓ அரசு ஊழியர்களா!!!! அதான் செல்ஃபியா...ம்ம்ம்ம்ம்

    //"பையனுக்கு பொண்ணே அமையல.. தாயார்தான் அனுக்கிரஹம் செய்யணும்" என்றேன். அவர் சொன்னதாவது :- "ஹுக்கும்.. எனக்கே ரெண்டு பசங்க இருக்காங்க.. அவங்களுக்கு பொண்ணே கிடைக்காமல் நானும் அல்லாடிண்டு இருக்கேன்.. வேதம் படிச்சதுகள்... இன்னும் பெண் அமையல.."//

    ஆஆஆஆ!!!! பாருங்க அவருக்கு மனசுக்குள்ள எவ்வளவு ஆதங்கம். சரி போகட்டும் அதைத் துறந்து வாழ்த்தியிருக்கலாம் அதாவது தாயாரை வேண்டிக்கோங்க நல்லது நடக்கும்னு....இந்த இடத்தில் எனக்கு வேற சொல்ல வருது...ஆனால் தவிர்க்கிறேன். அதனால்தான் ஸ்ரீராம் நான் அந்த இறைவனைத் தவிர கோயிலில் யாரிடமும் சொல்லி ஆசி கேட்பதில்லை.

    அவர் அப்படிச் சொன்னால் சொல்லி விட்டுப் போகட்டும். இறைவன் இருக்கிறார். ஸ்ரீராம் எதெது எப்ப நடக்கணுமோ அப்ப நடக்கும் கண்டிப்பாக உங்களுக்கும் விரைவில் நல்ல மகள்/ராகுலுக்கு மனைவி வருவாள்! நான் மருமகள் என்று கூடச் சொல்லவில்லை பாருங்க...கண்டிப்பாக நலல்து நடக்கும் ஸ்ரீராம்....இறைவன் லேட்டா ஆசிகள் வழங்கினாலும் லேட்டஸ்டா வழங்குவார், ஸ்ரீராம். நிச்சயமாக. உறுதியாக. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அதனால்தான் ஸ்ரீராம் நான் அந்த இறைவனைத் தவிர கோயிலில் யாரிடமும் சொல்லி ஆசி கேட்பதில்லை. //

      நான் அங்கிருப்பவர்களிடம் பேசிக்கொண்டே இருப்பேன்.  அவர்களும் பதிலுக்கு பேசுவார்கள்.  அதனால் அப்படியே ஒரு ப்ளோவில் வந்தது! வாழ்த்துகளுக்கு நன்றி கீதா.

      நீக்கு
  14. அவர் சிரமம் புரிகிறது என்றாலும் இறைவனுக்கு அருகில் இருப்பவரால் சட்டென 'உங்களுக்கு தாயார் அனுகிரஹத்தில் சீக்கிரம் மருமகள் வாய்க்க வேண்டுகிறேன்' என்று சொல்ல வாய் வரவில்லை பாருங்கள். //

    ஓ! நான் சொல்லிட்டு வந்தா அடுத்த வரிகள் உங்களுடைய வரிகள். அதானே....என் அனுபவத்தில் சொல்கிறேன் ஸ்ரீராம், நான் சிறு வயதில் பார்த்த கோயில் மாமா தவிர அதன் பின் எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் அந்த அர்ச்சகர்கள் பெரும்பான்மையோர் கடனே என்று தான் செய்யறாங்க....தட்டில் விழும் காசைப் பார்க்கறாங்க...காசு போட்டப்புறம் வாழ்த்து சொல்பவர்களும் இருக்காங்க.....வேண்டாம்.....அதனால் என் தனிப்பட்ட கொள்கைகள் வேறு.

    கீதா

    பதிலளிநீக்கு
  15. தலை சுற்றுது. பின்னர் வருகிறேன்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  16. 'உங்களுக்கு நல்லபடியாய் அமையும் என்று கடைசிவரை அவர் வாயிலிருந்து வரவில்லை! //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது அவருக்கு. விடுங்க ஸ்ரீராம்..சில விஷ்யாங்களைத் தவிர்க்கிறேன். சொலலமல்.

    இறைவனை விடவா இவங்க எல்லாம்....நமக்கு நல்லது நடக்கும் பாருங்க. கண்டிப்பா நடக்கும். விரைவில்.

    அந்த ரூட்ல தான் நாராயணவனம்....அங்குதான் திருப்பதி பெருமாள் தாயாரைக் கைப்பிடித்த இடம் கல்யாணம் நடந்த இடம் என்று சொல்வாங்க. தாயாருக்கு மஞ்சள் அரைத்த பெரிய உரலும் இருக்கும் அங்கு தாயார் சன்னதியில்....ரொம்ப அழகான கோயில் கூட்டம் இல்லா கோயில். சுவாமியை நீங்கள் நன்றாகத் தரிசனம் செய்யலாம் திருப்பதில கூட முடியாது! முடிஞ்சா போய்வாங்க. அப்படியே கோயில் முன்ன கைத்தறி தெருக்கள் உண்டு உள்ள டவல் எல்லாம் நன்றாகக் கிடைக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்த ஊர்னு சரியாய்ச் சொல்லுங்க...   சென்று தரிசித்து வந்து விடுவோம்.

      நீக்கு
  17. பெருமாளை தரிசனம் செய்து தயிர் சாதம் பிரசாதம் தொன்னையில் பெற்று//

    பெருமாளே இது நியாயமா!!? எங்க ஸ்ரீராமுக்கு புளியோதரை கொடுத்திருக்கக் கூடாதா!!! எந்தப் பெருமாள் கோயில்லயும் அவருக்குப் புளியோதரை பிரசாதமா கொடுக்கவே மாட்டேன்றீங்க!!

    பெருமாள் சொல்கிறார் - ஸ்ரீராம்! உமக்குப் புளியோதரை அருள்கிறோம்! கீதா வீட்டுக்குப் போனால் தொன்னையில் புளியோதரை கிடைக்கும் என்று...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா..  இப்போல்லாம் புளியோதரை ஆசையே விட்டுப் போச் கீதா...!

      நீக்கு
  18. ஏன் ஸ்ரீராம்? பாஸுக்கு துர்கா பவன்மீது கடுப்பு!? நல்லாருக்காதா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி..   ஒருமுறை சென்று சோதித்துப் பாருங்களேன்....

      நீக்கு
    2. நோட்டட்!!! ஆனா இனி எப்ப போற வாய்ப்பு கிடைக்குமோ...இருந்தாலும் குறித்துக் கொண்டேன்....யாம் பெற்ற இன்பமா ....இல்லை சோகமா!! இப்படி சொல்லிருக்கீங்க...

      கீதா

      நீக்கு
    3. சோகந்தேன்...   கடுப்புதேன்....

      நீக்கு
  19. 'டி' என்ற வார்த்தையுடன் ஒருமையில் பேசினார். எனக்கு 'டி' போட்டு பேசுவது பிடிக்காது. வீட்டிலும் அப்படி யாரும் என்னிடம் பேசிப் பழக்கமில்லை. அதனால் உடனே அவரிடம் அப்படி அழைப்பது பிடிக்கவில்லை என்று சொன்னேன். சரி என்றவர், அதற்குப் பிறகு ஒருநாளும் என்னை அப்படி அழைத்தில்லை .//

    இதுவே பாராட்ட வேண்டிய ஒன்று. நிறைய ஆண்கள் இப்படிச் செய்வதில்லை. சுஜாதா பெரும்பாலும் பாட்டியிடம் வளர்ந்தவர். எனவே அந்தக் கிராமத்தில் அப்போதெல்லாம் அப்படித்தானே பேசுவது வழக்கம் இல்லையா? அது அவர் மனதில் பதிந்து போயிருக்கும். இப்பவும் கேரளத்தில் பல ஆண்கள் மனைவிகளை டி போட்டுப் பேசுவது வழக்கம் சர்வசகஜம். தெக்கத்திப் பழக்கமும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடனே மாற்றிக் கொண்டது நல்ல குணம் என்றே எனக்கும் தோன்றியது.  அதையே அவரும் சொல்லி இருக்கரியார்.  சில வீடுகளில் அம்மாவையே 'டி' போட்டு அழைப்பவர்கள் உண்டு!

      நீக்கு
    2. வணக்கம் சகோதரி

      உங்கள் திங்கள் புளிக்காய்ச்சல் பதிவுக்கு நீங்கள் கூறியபடி அது நன்றாக ஊறிய நிலையில் இன்று ஒரு கருத்து தந்துள்ளேன். (ஆனால் தாமதமாக... மன்னிக்கவும் )

      பொதுவாக தாமதங்கள் மனதிற்கு ஏற்புடையதாக இருப்பதில்லைதான். இதை நினைக்கும் போது இப்போதெல்லாம் தாமதமாக கருத்து தரும் என் மீதே எனக்கு கோபம் வருகிறது. ஆனால், என்னவோ என் சூழ் நிலைகள் அவ்வாறு அமைந்து விடுகின்றன. இன்றைய பதிவில் சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் திருமண நாளுக்கும் தாமதமான வாழ்த்துகளைத்தான் தந்துள்ளேன். மன்னிக்கவும் சகோதரரே.

      உங்கள் பதிவு நன்றாக சுவையாக இருக்கிறது. சகோதரி. மனம் நிறைந்த வாழ்த்துகள். . நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. /சில வீடுகளில் அம்மாவையே 'டி' போட்டு அழைப்பவர்கள் உண்டு!/

      உண்மை. அம்மாவை பெயர் சொல்லி அழைப்பவர்களையும், மரியாதையுடன்"நீங்கள், " வாருங்கள்" என அழைப்பவர்களையும் பார்த்தும் வியந்திருக்ககிறேன்.

      நீக்கு
    4. ஆம்.  நான் அம்மாவையும் அப்பாவையும் ஒருமையில்தான் அழைப்பேன்.  சிலபேர் ங்க போட்டு பேசுவதைப் பார்த்திருக்கிறேன்!

      நீக்கு
    5. இதான் நம் குடும்ப பழக்கமும் கூட. போலித்தன்மை இல்லாதது. இந்தக் காலத்தில் எல்லாம் தலைகீழாகியிருக்கிறது. பையனைக் கூட 'ர்' விகுதிப் போட்டு அழைக்கும் காலமிது.
      மரியாதை கொடுத்து அழைக்கிறார்களாம். சொந்த ரத்த பந்தம்.
      அம்மா -- பையன். என்ன மரியாதை வேண்டிக்கிடக்கிறது?
      புதுவையில் இருக்கும் என் ட்ராயர் சட்டை காலத்து நண்பன் ரகுராமனும் நானும் இந்த எண்பது வயதிலும் 'போடா- வாடா' தான்.

      பையனுக்கு கல்யாணம் ஆனதும் அவன் குடும்பத்தை
      வேற்றுக் குடும்பமாக பிரித்துப் பார்ப்பதும் எனக்குப் பிடிக்காது. குழந்தைகளுக்கு நம்மை விட்டால் யார் இருக்கிறார்கள், சொல்லுங்கள். கணவன் - மனைவி உறவை விஞ்சியது அம்மா -- அப்பா பாசம்.

      பாலச்சந்தரின் 'சர்வர் சுந்தர்' படத்தில் நாகேஷின் தாயார் இதயம் பேசும் வசனம் நினைவுக்கு வருகிறது.

      நீக்கு
    6. அது அவரவர் மனோபாவத்தைப் பொறுத்தது ஜீவி ஸார்.. டி ராஜேந்தர் தன் மகன் சிம்புவை அவர் இவர் என்றுதான் பொதுவெளியில் சொல்வார். எஸ் ஏ சந்திரசேகரும் மகன் நடிகர் விஜய்யை அப்படிதான் சொல்வார். ஏன், முதல்வரும் தன் மகனை அப்படிதான் சொல்கிறார். கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் பொதுவெளியிலேயே கபில், கவாஸ்கர் முதல் இன்றைய ஆட்டக்காரர்கள் வரை எல்லோரையும் தொலைக்காட்சியில் பேசும்போது அவன் இவன் என்றுதான் விளிக்கிறார்!

      நீக்கு
    7. நான் என் மனைவியைப் பற்றி எழுதும்போது அவள் இவள் என்று எழுதுவதில்லை. பாஸ், அவர், இவர் என்றுதான் எழுதுகிறேன். அது போலித்தனமில்லை. ஒருவகை நாகரீகம். அவ்வளவே!! எங்களுக்குள் நாங்கள் எப்படி வேண்டுமானாலும் பேசிக்கொள்வோம்.

      நீக்கு
    8. நான் பொது வெளியில் குடும்ப உறவுகளைக் குறிப்பிட்டு இது வரை எழுதியதே இல்லை. அவர்களை கதாபாத்திரங்களாக்குகிற செளகரியம் எனக்குண்டு!

      நீக்கு
    9. சுஜாதாவும் செய்திருக்கிறார் என்று அவர் மனைவி சொல்லி இருக்கிறார்.

      நீக்கு
    10. பொது வெளியில் அவர் இவர் என்று சொல்வதே சரி ஸ்ரீராம் நீங்கள் சொல்வதை டிட்டோ செய்கிறேன். வீட்டிற்குள் நான்கு சுவற்றுக்குள் நம் பந்தங்கள் வேறு. ஆனால் பொதுவெளியில் இப்படிப் பேசுவதுதான் நல்லது. அவர் இவர் என்பதால் அது போலி என்றல்ல.

      அது போல நானும் அம்மா அப்பாவை ஒருமையில்தான் விளிப்பேன்.
      ஆமாம் ஸ்ரீராம் அம்மாவை டி போட்டு பேசுபவர்களும் உண்டு. எங்கள் குடுமப்த்திலும் உண்டு ஆனால் அதனால் மரியாதையோ அன்போ குறைந்ததில்லை பார்க்கப் போனா தோழிகள் மாதிரி பேசிக்குவாங்க!!!

      சுஜாதா உடனே தன்னை மாற்றிக் கொண்டது பாருங்க் கான்ஷியஸா அவர் தன் மனைவிக்குக் கொடுத்த மறைமுகமான மரியாதை, ஆமாம், அதை மனைவி சுஜாதா அவரும் சொல்லியிருக்கிறார்!!

      கீதா

      நீக்கு
    11. கமலாக்கா ப்ளீஸ் தாமதமாக வருவதற்கு எந்தக் கோபமும் உங்கள் மீதே வர வேண்டாம். அதெல்லாம் ஒன்றுமில்லை. எல்லோருக்கும் உங்களைப் புரிந்து கொள்ள முடியும் உங்கள் நிலையை புரிந்து கொள்ள முடியும். வீட்டுக் கடமைகள்தானே முக்கியம். இங்கு இவை எப்போதும் இருக்கும். எப்போ வேண்டுமானாலும் வாசித்துக் கொள்ளலாம்.

      அதனால மன்னிப்பு என்பதெல்லாம் தேவையே இல்லை. விஜயகாந்த் சொல்ற அதே டயலாக்....இது வேறு அர்த்தத்தில்!!! சொல்கிறேன்...ஹாஹாஹாஹா மன்னிப்பு என்பது மிகப் பெரிய சொல் அதனால்தான்.

      போய் பார்க்கிறேன் கமலாக்கா...இதுக்கெல்லாம் வருத்தப்படாம ஜாலியா இருங்க ஜாலியா வாங்க!!!

      கீதா

      நீக்கு
  20. காரணம் அவர் ரொம்ப private person. எதையும், எப்போதும் வெளியே சொல்லமாட்டார். //

    சுஜாதாவின் சிறுபிராயத்துப் பிரதிபலிப்பு. சகோதரி இழப்பு பற்றியும் எங்கோ சொன்னது நினைவு இருக்கு. பாட்டியிட்ம் தான் வளர்ந்தார். அதன் பின் ஹாஸ்டல்...வாசிப்பு எழுத்தில் ஆர்வம் அதனால் அவர் உலகில் இருப்பதும் ப்ரைவெட் பெர்சனாக இருந்ததில் வியப்பில்லை என்று தோன்றும். எழுதுபவர்கள் பலருக்கும் நேர்வதுதான்.

    சுஜாதா (மனைவி) அவங்க அவங்களுடைய கருத்துகள். தவறே இல்லை. இந்தப் பேட்டி பரவாயில்லை என்றே தோன்றுகிறது.

    //உண்மையில் என் சிந்தனையும், அவர் கதை சித்தரிப்பும் ஒத்துப்போனதில்லை. காரணம் கதைகளில் புதுமையான சிந்தனை இருக்க வேண்டும் என விரும்புபவர் அவர். நான் அப்படி இல்லை. மிகவும் பழமையான சிந்தனை கொண்டவள்./

    இதுவும் வாசித்த நினைவு இருக்கு. இதில் குறை எதுவும் இல்லை. ஒவ்வொருவர் சிந்தனையும் ஒவ்வொரு மாதிரி. கணவர் மனைவிக்குள் ஒரே சிந்தனை இருக்க வேண்டும் என்று இல்லை.

    //திருமணமான புதிதில் அவரது கதையை விமர்சனம் செய்ததுண்டு. பின்னாளில் அதைவிட்டுவிட்டேன். கரையெல்லாம் செண்பகப்பூ என்ற அவரது நாவலில், முதலில் அந்த கதையின் நாயகியான அந்த கிராமத்துப் பெண், நகரிலிருந்து வந்தவனுடன் ஓடிப் போவதாகத்தான் முடிவு வைத்தார்.
    எனக்கு அது நெருடலாக இருந்தது. எந்த கிராமத்துப் பெண்ணும் அவ்வாறு செய்யமாட்டாள். முடிவு சரியில்லை என்றேன். அப்புறம் அந்த முடிவை மாற்றி எழுதினார். அது ஒன்றுதான் எனக்கு நினைவிருக்கிறது.//

    இதுவும் ஒரு பெரிய விஷயம்தான். மாற்றி எழுதியது.

    எழுத்தாளர் சுஜதாவும் ஒரு மனிதர்தான். எழுத்தாளர் என்பதற்காக அவரை நாம் கொண்டாடலாம் ஆனால் அவர் மனைவிக்கு அவர் கணவர் சாதாரண மனிதர். கோபதாபங்கள் எல்லாம் இருக்கலாம். எல்லார் வீட்டிலும் இருப்பவைதானே....அவர் மனைவி சுஜாதா அவரை அனுசரித்துச் சென்றதைப் பாராட்ட வேண்டுமே அல்லாமல் கணவன் மனைவிக்கான விஷயங்களை நாம் பேசி அவர்களை ஜட்ஜ்மென்ட் செய்வது சரியல்ல. நாம் எவரையும் தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடாமல், அவர்களின் திறமையை மட்டும் பார்த்து பாராட்டிவிட்டுக் கடந்து சென்றால் ஏமாற்றங்கள் இருக்காது என்பதோடு, அதை மட்டுமே பார்க்க வேண்டும். சமனிலையில் பாவித்தலே நல்லது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் பேசுவதில்லை, சரி..  இவர்?

      அவரைப் பற்றிச் சொல்லும் கருத்துகளின் மாற்றுக்கருத்தையும் அவரே பேட்டியில் சொல்லி விடுகிறார் திருமதி!

      நீக்கு
    2. உண்மைதான். வெளிப்படையான வெளிப்பாட்டை பாராட்ட வேண்டும்.

      நீக்கு
  21. பிரபலமான எழுத்தாளரின் மனைவி என்ற வகையில் உங்கள் சுயம் பறிபோனதாக என்றாவது நினைத்ததுண்டா?//

    இதற்கான பதிலில் அவரது ஆதங்கம் வருத்தம் நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அவர் எழுந்து சென்றது சூப்பர்!!!! பின்ன சுயமரியாதை, சுயம் உண்டுதானே! அவருக்கும்!

    உறவினர்கள் செய்ததுதான் மிக மிகத் தவறு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். வெளிப்படையான வெளிப்பாட்டை பாராட்ட வேண்டும்.

      நீக்கு
    2. ஆஅமாம் ஸ்ரீராம்.ஆனால் திரு சுஜாதா இருக்கும் போதும் திருமதி இதைச் சொல்லியிருந்தால் சுஜாதா அவர்களின் பதில் இதற்கு என்னவாக இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன்..

      கீதா

      நீக்கு
  22. @ ஸ்ரீராம்..
    /// பட்டாச்சார்யர்கள் 
    கோயிலின் உள்ளே   செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தது முதலில் ஆச்சர்யமாக 
    இருந்ததது.. ///

    நம்மை விரட்டவேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு.. நேற்று பெரிய கோயிலில் ஸ்ரீ வராஹி அம்மனை படமெடுக்க முயன்றவர்களை விரட்டினார்கள்.. ஆனால்,

    மூலவர் சந்நிதியில் வழக்கமான விரட்டல் இல்லை.. விசேஷம் முடிந்ததும் ஆரம்பிப்பார்கள்..

    நவராத்திரி சமயத்தில் அம்பாள் அலங்காரங்கள் காட்டப்பட்டன..

    செய்தி ஊடகங்களுக்கு மட்டும் எவ்வித தடையும் இல்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் கேமிராவுக்காக வெளிப்படுத்தும் ஒளி சிலைகளை, தொன்மையை பாதிக்கும்.  நியாயங்கள் ஈடுபடுவதில்லை!

      நீக்கு
  23. ஏகாந்தன் அண்ணா, அருமையான நண்பர் த்ரிப்பாட்டி. நான் கேட்க நினைத்தேன் உங்களுக்கு மணமாகி குழந்தைகள் என்றானபிறகு அவரிடம் சொன்னீர்கள் நீங்கள் சொன்னது போல் என்றுனு கேட்க நினைத்து வாசித்து வரும் போதே தெரிந்துவிட்டன மீதி விஷயங்கள்.

    சுவாரசியமான அனுபவங்கள் இப்பகுதி கடைசியில் மனதை கனக்க வைத்துவிட்டது. நீங்கள் கடைசியில் சொன்னவை கண்டிப்பாக உங்களுக்குத் தோன்றியிருகும் இன்னும் பேசியிருக்காலம் உன்னோடு என்று. சில விஷயங்கள் எல்லாம் கடந்து சென்ற பிறகுதான் நமக்குத் தோன்றும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  வல்லிம்மா அடிக்கடி சொல்வார்.  இருக்கும்போதே துணையுடன் நன்றாக பேசி விடுங்கள் என்று. 

      சுஜாதா பேட்டியோடு ஒத்து வருகிறது இல்லை?

      நீக்கு
    2. ஆமாம் ஸ்ரீராம் ரொம்பவே ஒத்து வருகிறது. அதைத்தான் மேலே சொல்லியிருக்கிறேன்

      கீதா

      நீக்கு
  24. முதியோர் கல்வி பள்ளிகூடம் - சிரித்துவிட்டேன்!!

    பேப்பர் ரோஸ்ட் கப்பல் சாம்பார்ல!!! நல்லாருக்கே! அப்படியே செர்வ் பண்ணினா வித்தியாசமா இருக்கும்!

    நிஜமாகவே நான் கிண்ணம் மாதிரி செய்திருக்கிறேன் ஆனா மிதக்காது!! ஹிஹிஹி நிக்கறாப்ல இருக்கும் ஆனா டக்குனு மூழ்கிடும்! என் பையன் சின்னவனா இருக்கறப்ப அவன் வித்தியாசமா செஞ்சா ரசிப்பான்னு....குட்டி இட்லிய தயிர்ல மிதக்க வைச்சு....நிறைய அவனோடு ரசித்திருக்கிறேன்.

    பக்தனின் வேண்டுகோள்!!! ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  25. புதுக்குறள் மிகவும் சுவாரசியம். எல்லாப்பகுதியுமே ரசித்து வாசித்தேன் ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் சகோதரரே

    இன்றைய செய்தி அறை பகுதியும் நன்றாக உள்ளது. படித்து செய்திகளை அறிந்து கொண்டேன்.

    எனக்கும் கோவில் விஷேடங்களில் தள்ளு முள்ளு, கூட்டம் என்றாலே கொஞ்சம் அலர்ஜி. அதுவும் இப்போது கால்கள் வலுவில்லாத நிலையில் நிலையாக நிற்க கூடவும், சமாளிக்கவும் இயலவில்லை.

    கர்பா நடனம் என்பது உயிர் கொல்லும் நடனமா? கொடுமைதான்.. .!

    செய்திகளுக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா.  எனக்கும் தள்ளுமுள்ளு ரொம்பவே அலர்ஜி.

      நீக்கு
  27. வணக்கம் சகோதரரே

    இன்றைய எல்லா பகுதிகளும் நன்றாக உள்ளது. கவிதை மிஸ்ஸிங்.

    பொக்கிஷம் ஜோக் அனைத்தும் அருமை. கல்லூரி மாணவரின் புதுக்குறள் அருமை. இங்குள்ள பேருந்துகளில், எல்லாமே தானியங்கி கதவுகள் இருப்பதால் படிக்கட்டு அபாயம் ஏதுமில்லை.

    சகோதரர் ஏகாந்தன் அவர்களது பதிவை படித்து விட்டு வருகிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ...  கவிதை எங்கே?  போட்ட கவிதை என்ன ஆச்சு?

      ஏகாந்தன் அவர்கள் பதிவைப் படித்து விட்டு சொல்லுங்கள்.  நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  28. கோவில் தரிசனங்கள் அருமை.
    உங்கள் எண்ணம் போல மருமகள் அமைய வேண்டுகிறோம்.

    பேட்டி ஜோக்ஸ் ,ஏகாந்தன் அவர்களின் பகுதி என இன்று நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  29. இப்போவா உங்களுக்குத் திருமண நாள்? அல்லது முன்னாடி போயிட்டு வந்ததா? உங்கள் இரு மகன்களுக்கும் விரைவில் நல்ல இடத்தில் பெண் அமையப் பிரார்த்தனைகள். பட்டாசாரியார் சொல்லாட்டி என்ன? நாங்கல்லாம் சொல்றோமுல்ல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னாடி என் திருமண நாள் அன்று போய்வந்தது! இப்போ இல்லே! நீங்கள் எல்லோரும் வாழ்த்துவதில் சந்தோஷம் ஏற்பட்டது.

      நீக்கு
  30. திருமதி சுஜாதா கொடுத்திருக்கும் இந்தப் பேட்டியும்/முந்தைய பேட்டியும் படிச்சிருக்கேன். நிச்சயமாய் அவரவருக்கென ஒரு தனிக் கருத்து இருக்கத்தான் செய்யும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக... கொஞ்சம் மாற்றி யோசித்துப் பாருங்கள்.. மனைவியின் தனித்தன்மைக்காக ரெங்கராஜன் என்ன செய்திருப்பார் / செய்திருக்கலாம்?

      நீக்கு
  31. கமலா ஹரிஹரன் சொல்லி இருப்பது போல் "பெண்"களூரில் பேருந்துகளில் பயணிப்பது முன்னர் எனக்கும் பிடித்த ஒன்று. இப்போக் கடைசியா "பெண்"களூருக்கு 2013 ஆம் ஆண்டோ என்னமோ போனோம். அப்புறமாப் போகலை. சென்னையில் நரகம். அதிலும் நான் அலுவலகம் சென்ற அந்த நாட்களிலேயே கடினமான ஒன்று. இப்போக் கேட்கவே வேண்டாம். சாலைகள் வேறே சென்னையில் குண்டும் குழியுமாக மேடு பள்ளம் தெரியாமல்! பாவம் அப்பாவி மக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னையில் இப்போதெல்லாம் பஸ்ஸில் போனாலே பம்ப்பர் குலுக்கள்தான். சாலைகள் மோசமோ மோசம், படு மோசம்.

      நீக்கு
  32. ஏகாந்தன் அருமையாகச் சொல்லுகிறார். தேர்ந்த நடை. சுருக்கமாக விஷயங்களை விவரிக்கும் பாங்கு. த்ரிபாட்டி தான் என்பதை நானும் அறிந்திருந்தாலும் பலரும் திரிபாதி என்றே சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மூர் பெயர்களை அவர்களும் இதேபோல் அறிந்து உணர்ந்து உச்சரித்தால் நன்றாயிருக்கும்தான். ஷோபனா ரவி வாஜ்பாயை வாஜ்பேயி என்றே உச்சரிப்பார். வடநாட்டு வழக்கபப்டி அதுதான் சரி என்று விசாரித்து அறிந்ததாக சொல்வார். நம் தமிழ்ப் பெயர்களை வடநாட்டவர் எத்தனைபேர் சரியாக உச்சரிப்பார்கள்?

      நீக்கு
  33. நியூஸ் ரூம் ஓகே. தெரிந்த செய்திகள். உங்கள் பொக்கிஷ நகைச்சுவைத் துணுக்குகளும் ஓகே ரகம். கவிதை எங்கே? கிடைக்கலை எனக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை உங்கள் கண்ணிலும் படவில்லையா? அட, ராமா... எங்கே போச்சு என் கவிதை?

      நீக்கு
  34. ஒரு தரம் நாங்களும் துர்கா பவன் பெயரைப் பார்த்துட்டு ஓட்டலுக்குப் போய் ஏமாந்திருக்கோம். ஆனால் நீங்க சொல்லும் சங்கீதாவில் எல்லாம் சாப்பிட்டதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் எல்லாவற்றையும் முயற்சித்து விடுவோம்! நேற்று உளுந்தூர்ர்ப்பேட்டையிலோ, விருத்தாசலத்திலோ மனோஜ் பவன் என்ற ஒரு ஹோட்டலில் சாப்பிட்டோம். க..வி!

      நீக்கு
  35. கர்பகிரஹத்தையே படம் எடுக்கு அனுமதி கிடைச்சது அதிர்ஷ்டம் தானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிர்ஷ்டமா? அனுமதியா? நல்லா கொடுப்பாங்களே... கோவில்ல நாங்க மட்டும்தான்! அவர் அந்தப் பக்கம் திரும்பி நிற்கிறார் பாருங்க... ரகசியமா மின்னல் வேகத்தில் செய்த அ...ய தனம்!

      நீக்கு
  36. பால் குடிக்கிற குழந்தையைக் கூட
    "அவருக்கு அதான் வேணுமாம்.. இதெல்லாம் வேணாமாம்" என்று சொல்கிற காலம் இது.
    குடும்ப உறவுகளுக்குள் மரியாதை கொடுக்கிறோம் என்கிற பெயரில் இடைவெளி அதிகமாகியிருக்கிறது என்பது உண்மை தான்.

    பதிலளிநீக்கு
  37. திருமண நாள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.
    இறைவன் அருளால் விரைவில் மருமகள் வீட்டுக்கு வருவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா...  திருமண நாள் முடிந்து ரொம்ப நாட்களாகி விட்டன!

      நீக்கு
  38. ஒத்தாண்டேஸ்வர கோவில் படங்கள் , ஜெகநாதர் பெருமாள் கோவில் படங்கள் எல்லாம் அருமை.

    அழகான பெரிய திருக்குளம், மிகவும் சுத்தமாக இருக்கிறது.
    வெள்ளை வாத்துகளும், பறவைகளும் மனம் கவர்ந்தன.

    பதிலளிநீக்கு
  39. பக்தர்களின் மனக்குறைகளை தீர்த்துவைப்பதால் மனுவனுகுலீஸ்வரர் என்றும் அறியப்படுகிறார். //

    கண்டிப்பாய் உங்கள் மனக்குறைகளை தீர்த்து வைப்பார்.

    //ஹுக்கும்.. எனக்கே ரெண்டு பசங்க இருக்காங்க.. அவங்களுக்கு பொண்ணே கிடைக்காமல் நானும் அல்லாடிண்டு இருக்கேன்.. வேதம் படிச்சதுகள்... இன்னும் பெண் அமையல.."//

    பட்டர் சொல்வதை கேட்க கஷ்டமாகத்தான் இருக்கிறது.
    தாயார் பட்டர் மகன் இருவருக்கும், உங்கள் மகனுக்கும் நல்லபடியாக பெண் அமைய வைப்பார். நம்பிக்கையோடு இருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பட்டர் மகன்களுக்கும் நல்வார்த்தை சொன்ன உங்கள் நல்ல உள்ளம் வாழ்க. நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  40. வருகை, கருத்துப் பகிர்வுகளுக்கு நன்றிகள் அனைவருக்கும்.

    பதிலளிநீக்கு
  41. திருமதி சுஜாதா அவர்கள் பேட்டி படித்து இருக்கிறேன், மீண்டும் படித்தேன். திரு ஏகாந்தன் அவர்கள் நண்பரை பற்றி சொன்னது நெகிழ்வு. அவர் நண்பர் சொன்னது பலித்து விட்டது.

    இன்று பதிவு பெரிதாகி விட்டதால் உங்கள் கவிதை விடுபட்டு விட்டதோ!

    நியூஸ் ரூம் சொன்ன போலி மருந்துகள் பறிமுதல் என்று படித்தவுடன் ஏன் தான் உயிருடன் விளையாடுகிறார்கள் என்ற எண்ணம் வந்தது.
    பொக்கிஷ பகிர்வுகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கே எனது கவிதை என்று பயாடிக் கொண்டிருக்கிறேன்.  

      //அவர் நண்பர் சொன்னது பலித்து விட்டது.//

      ஆம், சில சமயங்களில் நாம் சொல்வதை வாக்கு தேவதை அங்கீகரித்து விடுமாம், பலித்து விடுமாம்.  அப்படி நேர்ந்து விட்டது போலும். 

      நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  42. // வெள்ளத்தனையது மலர் நீட்டம் //

    ஆனால் அங்கு வரும் "உள்ளம்" உள்ளத்தை குறிக்காது...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன், உள்ளத்தனையது பொருத்தமாகத்தானே இருக்கிறது?  

      நீக்கு
  43. // வெள்ளத்தனையது மலர் நீட்டம் //

    ஆனால் அங்கு வரும் "உள்ளம்" உள்ளத்தை குறிக்காது...

    பதிலளிநீக்கு
  44. தாமதமாக, திருமணநாள் நல்வாழ்த்துகள்! பார்க்காத கோயில்களாகத் தேர்ந்தெடுத்துச் சென்றது சிறப்பு. எங்களுக்கும் தரிசிக்கும் வாய்ப்பு. “வெள்ளத்தனைய..” :))! திருமதி. சுஜாதாவின் தினகரன் பேட்டி வாசித்திருக்கிறேன். விகடன் பேட்டி இப்போதுதான் வாசிக்கிறேன். ந்யூஸ் ரூம் - செய்திகளுக்கு நன்றி. தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!