ஞாயிறு, 15 அக்டோபர், 2023

நான் தரிசனம் செய்த கோவில்கள்: நெல்லைத்தமிழன் : வைரமுடி யாத்திரை 16

 

வைரமுடி யாத்திரை மேல்கோட்டை செலுவநாராயணர் ஆலயம் பகுதி 16


மதியம் 2 ½ மணி வாக்கில் ஹொசஹொலாலு கோவிலிலிருந்து புறப்பட்டு மேல்கோட்டை நோக்கிச் சென்றோம். கோவிலிலிருந்து மேல்கோட்டை சுமார் 25 கிமீ தூரத்தில் இருக்கிறது. மேல்கோட்டை என்று அழைக்கப்படும் திருநாராயணபுரம், மலைமீது அமைந்துள்ளது. அதனை 3 ¾ மணிக்கு அடைந்தோம்.

மேல்கோட்டையில் தங்கும் வசதி குறைவு. சில ஆஸ்ரமங்கள் இருந்தாலும், வைரமுடி யாத்திரை சமயத்திலும், சில உற்சவங்கள் நடைபெறும் சமயத்திலும் தங்குமிடம் கிடைப்பது கடினம். வைரமுடி யாத்திரை அன்று பொதுவாக பல லட்சம் பேர் அந்த கிராமத்துக்கு வருவார்களாம். வைரமுடியுடன் ஊர்வலம் வரும் செல்வநாராயணரைச் சேவித்துவிட்டு, உடனே அவரவர் ஊருக்குக் கிளம்பிவிடுவார்கள்.  அதாவது காலை 8 மணிக்கு ஊரில் கூட்டம் மிக மிகக் குறைவாக இருக்கும். மதியத்தில் ஆளரவமே இல்லாதது போல இருக்கும்.

திருநாராயணபுரம் கோவில் வரலாறு

நாராயணன், அர்ச்சா ரூபமாக எழுந்தருளி அருள் பாலிக்கும் நான்கு திருத்தலங்கள் தென்னிந்தியாவில் நாற்கோணமாக அமைந்துள்ளன அவையாவன:

தெற்கு திசை ஸ்ரீரங்கம் - கருணா நிவாசன் (தமிழ்நாடு) ஸ்ரீ ரங்கநாதன்.

கிழக்கு திசை - காஞ்சீபுரம், (தமிழ்நாடு) ஸ்ரீ வரதராஜன்.

வடதிசை - திருமலை / திருப்பதி (ஆந்திரா) திருவேங்கடவன்.

மேற்கு திசை - மேல் கோட்டை (கர்னாடகம்) யதுசைல ரூபம் - திருநாராயணபுரம்.

திருநாராயணபுரம் என்னும் இந்த ஊர் நான்கு யுகங்களிலும் பிரசித்தி பெற்றது. தமிழகத்தின் பெரும்பகுதியை குலோத்துங்கச் சோழன் ஆண்டுவந்தபோது, அவனது வைணவ மத துவேஷத்தினால், பல்வேறு வைணவர்களும் கர்நாடகாவில் இருந்த மேல்கோட்டையில் தஞ்சமடைந்தனர். இவர்கள் ஸ்ரீரங்கத்திலிருந்து வந்தவர்கள் என்று சொல்வர்.  சோழ அரசன் துவேஷத்தினால், இராமானுஜருக்குப் பல தொல்லைகளைக் கொடுத்தான்.  தன்னுடைய சீடரான கூரத்தாழ்வாரின் ஆலோசனைப்படி, இராமானுஜர், வெண்ணிற உடை உடுத்து, தமிழ்நாட்டை விட்டு,  கர்நாடக தேசத்துக்கு சத்தியமங்கலம் வழியாக தொண்டனூர் வந்தார். அப்போது ஜைன மதத்தை ஆதரித்து வந்த விட்டல தேவராயன் என்ற மன்னன் இந்த இடத்தை ஆண்டு வந்தான். (bபிட்ட தேவா). அவனது மகளுக்கு சித்தபிரம்மை பிடித்திருந்தது. அதனை நீக்க ஜைனத் துறவிகளால் முடியாமல் போக, ராமானுஜர் உதவியால் அது நீங்கியது. இதைக் கண்ட பிட்ட தேவன் ஜைன மதத்தைத் துறந்து, வைஷ்ணவ மதத்தைத் தழுவி விஷ்ணுவர்தனன்என்ற பெயர் கொண்டான். 

இராமானுஜர், பிறகு திருநாராயணபுரம் என்று அழைக்கப்பட்ட மேல்கோட்டைக்கு வந்தார். அப்போது கோவில் பாழ்பட்டு, மூலவர் மண்ணில் புதையுண்டு கிடந்தாராம். (இறைவன் அவர் கனவில் தோன்றி, தான் இருக்கும் இட த்தைக் காட்டித் தர, ஊர் மக்கள் உதவியோடு விக்ரஹத்தைக் கண்டுபிடித்த இராமானுஜர், அரசன்   அரசன் விஷ்ணு வர்தனன் உதவியோடு கோவிலை உண்டாக்கி, இறைவன் திருமேனியை பிரதிஷ்டை செய்தாராம்)  இந்த விஷ்ணு ஆலயத்தில் உற்சவங்கள் நடைபெறச் செய்ய நினைத்தவர், கோவிலில் உற்சவ விக்ரஹம் இல்லாததை உணர்ந்தார்.

உற்சவ விக்ரஹம் பற்றிய நம்பிக்கை

இராமர், தன்னுடைய பூஜா விக்ரஹமான ரங்கநாதரை, இலங்கை மன்ன ன் விபீஷணனுக்கு வழங்கினான்.  இராமருடைய பூஜைக்காக, பிரம்மா, ஒரு விக்ரஹத்தை வழங்க, இராமர் காலத்திற்குப் பிறகு, லவ குசர்களிடம் இந்த விக்ரஹம் போய்ச் சேர்ந்தது.  குசனின் மகள், யாதவ இளவரசன் ஒருவனை மணந்தபோது, இந்த விக்ரஹம், யாதவ அரசனிடம் போய்ச் சேர்ந்தது.  இவ்வாறு சந்திர குலத்திலிருந்து சூரிய குலத்துக்கு விக்ரஹம் வந்துசேர்ந்தது.  பல காலங்களுக்குப் பிறகு, பலராமர் இந்த இடத்திற்கு வந்தபோது, மூலவர், துவாரகையில் உள்ள விக்ரஹம் போலவே இருக்கக் கண்டு, கிருஷ்ணரும் பலராமரும், தங்களிடம் இருந்த விக்ரஹத்தை, இந்த ஊர் திருநாராயணன் கோவிலுக்கு உற்சவ விக்ரஹமாகக்  கொடுத்தனர். இராமர் பூஜை செய்த விக்ரஹம் என்பதால் உற்சவர், ‘ராமப்ரியன்என்று அழைக்கப்படுகிறார்.

காலப்போக்கில் இந்த விக்ரஹம், காணாமல்போய்விட்ட து.

நாராயணர் ஆலயத்தை அமைத்தபோது, இராமானுஜர் கனவில், கோவிலுக்கான உற்சவ விக்ரஹம் தில்லி சுல்தானிடம் இருக்கிறது என்று தோன்ற, இராமானுஜர் தில்லி சென்று சுல்தானிடம் விண்ணப்பம் செய்ய, அவன், தன்னிடம் ஏராளமான விக்ரஹங்கள் இருக்கின்றன, அதில் எது உங்கள் கோவிலுக்குரியது என்பதை நீங்களே கண்டுபிடித்து எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னான்.  இராமானுஜரும், இறைவன் துணையால், ‘வாரும் என் செல்லப் பிள்ளையேஎன்று அழைக்க, திருநாராயணபுரத்திற்குச் சொந்தமான விக்ரஹம் அவரை நோக்கி வந்ததாக குருபரம்பரை பிரபாவம் கூறுகிறது. சுல்தானும் இது கண்டு, விக்ரஹத்தை அவர் எடுத்துச் செல்ல அனுமதித்தார். அதுவரை ராமப்ரியன் என்றழைக்கப்பட்ட அந்த விக்ரஹம், செல்வப்பிள்ளை என்ற பெயரும் பெற்றது. (இந்த விக்ரஹம் இளவரசியின் அந்தப்புரத்தில் இருந்து என்றும், அங்கிருந்துதான் விக்ரஹம் வந்து இராமானுஜர் இருந்த இட த்துக்கு வந்து அவர் மடியில் அமர்ந்தது என்று குருபரம்பரை பிரபாவம் சொல்கிறது. விக்ரஹம் இராமானுஜருடன் செல்வதை அறிந்த அந்த இஸ்லாமிய இளவரசி, இராமானுஜரைத் தொடர்ந்து வந்த தாகவும், அவளுடைய மறைவுக்குப் பின், அந்த பக்தையினை நினைவுகூறும் விதமாக பீவி நாச்சியார் என்ற சந்நிதி அமைக்கப்பட்ட தாகவும் பிரபாவம் சொல்கிறது.  இதனை மெய்ப்பிக்கும் விதமாக மூலவரின் பாதங்கள் அருகில் வெள்ளிக்கவசம் சார்த்தப்பட்ட பீவி நாச்சியார் உள்ளதை இன்றும் காண முடியும்)

தில்லியிலிருந்து திருநாராயணபுரத்தை அடையும்போது, கள்வர்களிடமிருந்து விக்ரஹத்தைப் பாதுகாக்க உதவிய இந்தப் பகுதி தாழ்த்தப்பட்ட மக்களை, திருக்குலத்தார் என்று அழைத்து, அவர்களுக்கு நன்றி நவில, மூன்று நாட்கள் திருக்குலத்தார் உற்சவம்என்று கொண்டாடப்படும் வழக்கத்தை ஏற்படுத்தினார்.

மேல்கோட்டையில், இராமானுஜர் சுமார் பனிரெண்டு ஆண்டுகள் வாசம் செய்தார். அந்தக் கோவிலில் உற்சவங்கள் மற்றும் நடைமுறைகளை ஒழுங்குபடுத்தினார்.

கோவிலின் மூலவர் பெயர், ‘திருநாராயணன்’. உற்சவர், ‘ஸம்பத் குமாரர்’, ‘செல்வப் பிள்ளை’ ‘இராமப்ரியன்’. மூலவர், சங்கு சக்ரம் கதை இவைகளுடன் நின்ற திருக்கோலம்.

இராமானுஜர், பன்னிரண்டு ஆண்டுகள் இந்த ஊரில் இருந்த பிறகு, குலோத்துங்கச் சோழன் காலத்திற்குப் பிறகு திருவரங்கம் திரும்ப எண்ணினார். ஊர் மக்கள், தங்களுடனேயே இராமானுஜர் இருந்துவிடவேண்டும் என்று வற்புறுத்தினர். அவர்களது அன்பிற்காக, தன்னைப்போன்றே ஒரு விக்ரஹம் செய்யச் செய்து, அதனைத் தன் நினைவாக வைத்துக்கொள்ளச் சொன்னார். இது இராமானுஜர் காலத்தில் செய்யப்பட்ட மூன்று விக்ரஹங்களில் ஒன்று. (இவற்றைத் திருமேனி என்று சொல்கின்றனர். முதலில் பஞ்சலோகத்தால் செய்யப்பட்டது திருநாராயணபுரத்தில் இருக்கும் திருமேனி. இது இராமானுஜர் காலத்தில் செய்யப்பட்டு, அவர் உகந்து அளித்ததால், தமர் உகந்த திருமேனி என்று அழைக்கப்படுகிறது. இதனைப் பார்க்கும்போது, இராமானுஜரின் மத்திம இளமைத் தோற்றம் தெரியும். இராமானுஜர் இறப்பதற்குச் சில நாட்கள் முன்பு அவசர அவசரமாக இன்னொரு திருமேனி ஸ்ரீரங்கத்தில் செய்யப்பட்டு, இராமானுஜர் அந்தச் சிலையை அணைத்துக்கொண்டு தன் சக்தியை அதில் செலுத்தினார்.  அது தானுகந்த திருமேனி என்று அழைக்கப்பட்டு, அவரது பிறந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட து.  அந்தச் சிலையைப் பார்த்தால் இராமானுஜரின் வயதான தோற்றம் தெரியும்.-விலா எலும்பு, காது மடல் போன்றவை. ஒரு சில நாட்களிலேயே இராமானுஜர் பரமபதித்துவிட்டார். அவரது பூத உடல்-சரம திருமேனி என்று அழைக்கப்படுவது, ஸ்ரீரங்கம் கோவிலிலேயே பள்ளிப்படுத்தப்பட்டது. அது தானான திருமேனி என்று அழைக்கப்படுகிறது. இப்போதும் அதனை ஸ்ரீரங்கம் கோவிலில், இராமானுஜர் சந்நிதியில் தரிசிக்கலாம்)


இராமானுஜர் தமர் உகந்த திருமேனி  (மேல்கோட்டை)

இராமானுஜர் தானுகந்த திருமேனி (ஸ்ரீபெரும்புதூர்) மற்றும் தானான திருமேனி (ஸ்ரீரங்கம்

இங்கு எழுதியிருக்கும் நிகழ்ச்சிகள் எல்லாம் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவை. இவற்றை அவர் காலத்திற்குப் பிறகு எழுதி வைத்திருக்கிறார்கள். ‘குருபரம்பரை பிரபாவம்என்று சொல்லப்படுகிற அந்த வரலாற்றின்படி, அந்த அந்த இடங்களில் அதற்கான சான்றுகள் இருப்பதை இப்போதும் காணமுடியும்.

சரிநாம் வைரமுடி யாத்திரைக்கு வருவோம்.

ஊரின் உள்ளே நுழையும்போதே அழகிய சிறு குன்றும் அதன் மேல் ஒரு கோட்டை கோவிலும், குன்றின் அடிவாரத்தில் சகல பாவங்களை தீர்க்கும் கல்யாணி புஷ்கரணியும் காணப்படுகிறது.. அதையும் தாண்டி வந்தால், சிறிய நான்கு வீதிகளை உடைய கிராமத்தைக் காண முடிகிறது.

வைரமுடி என்பது பாற்கடலிலிருந்து வந்தது என்பது ஐதீகம். உற்சவருக்கு பொதுவாக ராஜமுடி என்ற ஒன்றையே கிரீடமாக அணிவித்திருப்பார்கள். இந்த வைரமுடி என்பது, கருடன் கொணர்ந்த து என்பதால் வைநதேயன் முடி என்று அழைக்கப்பட்டு பிறகு வைநமுடி   பிறகு மருவி, வைரமுடி என்றாகிவிட்டது என்பார்கள். இந்த வைரமுடியை உற்சவருக்கு வருடத்தில் ஒரு நாள் அணிவித்து நால் வீதிகளிலும் ஊர்வலம் வருவார்கள். இதுவே இந்த வைரமுடித் திருவிழா.

குறைந்தபட்சம் மூன்று லட்சம் பக்தர்களுக்கு மேல் கலந்துகொள்ளும் இத்திருவிழா, மாண்டியா மாவட்ட நிர்வாகத்தால் மிகுந்த ஏற்பாடுகளுடன் நடத்தப்படுகிறது. அன்றைய நாளில் கருடன் கொணர்ந்த வைரத்தாலான கிரீடம் செல்லப்பிள்ளைக்கு சாற்றப்பட்டு, தங்கத்தாலான கருடன் மீது மாடவீதிகளில் உபய நாச்சிமார்களுடன் எழுந்தருளச் செய்யப்படுகிறது. வைரமுடியை பகலில் காணக்கூடாது என்ற நம்பிக்கைக்கு ஏற்ப, இந்த வைரமுடி சேவை, இரவுப்பொழுதில் ஆரம்பித்து விடியும் முன்பு முடிந்துவிடுகிறதுஇந்த வைரமுடி சேவையைக் காண்பதுதான் யாத்திரையின் நோக்கம்.

மேல்கோட்டைக்கு வந்து சேர்ந்ததும் ஒவ்வொரு குழுவிற்கும் தங்கும் இடங்களை ஒதுக்கினார்கள். சௌகரியக் குறைவாகவே இருக்கும். பலருக்கு அங்கிருந்த பள்ளியில் வகுப்பறைகளில் தங்கச் சொன்னார்கள்அரை மணி நேரத்தில் சிரம பரிகாரம் செய்துகொண்தும், அனைவரையும் அங்கிருந்த மண்டபம் போன்றிருந்த shedக்கு காபிக்கு வரச்சொல்லியிருந்தார்கள்.

மேல்கோட்டை கோவில் அருகிலுள்ள வீதி வெறிச்சோடி – 31 மார்ச்.


மேல்கோட்டை செல்வநாராயணர் கோவிலைச் சுற்றியுள்ள சுற்றுச்சுவர் மண்டபம்

கோவில் அருகில் நான்கு மாடவீதிகள் இருக்கின்றன. சுமார் 300 மீட்டர் நீளம் கொண்ட வீதிகள். காபிக்காக நாங்கள் செல்லவேண்டிய ஷெட் அருகிலேயே கோவில் இருப்பதால், காபிக்கு முன்பு, முடிந்தவர்கள் கோவிலுக்கு தரிசனத்துக்காகச் சென்றோம். பொதுவாக வைரமுடி சமயத்தில் கோவில் தரிசனம் கிடைப்பது கடினம். அதனால் கூட்டம் வருவதற்கு முன்பே பெருமாளை தரிசனம் செய்துவிடலாம் என்று கோவிலுக்குச் சென்றோம்

சுற்றுச்சுவர் மண்டபத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள சுதைச் சிற்பங்கள். பல, இஸ்லாமிய படையெடுப்பின்போது உடைக்கப்பட்டிருப்பதைக் காண இயலும்.

கர்நாடக பிரதேசத்தில் தமிழ் சிதைந்து கன்னட வடிவம் பெற்றிருப்பதைப் பல இடங்களில் காண முடியும் (மொழியும் தமிழின் பல கூறுகளைக் கொண்டுள்ளது). செல்வ நாராயணர் என்பது செலுவநாராயணா என்று அழைக்கப்படுகிறது.

கோவிலின் உள்ளே இருக்கும் தூண்களில் உள்ள அழகிய சிற்பங்கள்.



பெண்கள்னா எப்போதும் தங்களை அழகுபடுத்திக்கொண்டேதான் இருக்கணுமா?

ஒரே தலையுடன் கூடிய இரு மனிதர்களோ?

நல்ல கருங்கல்லினால் ஆன தூண்களின் சிற்பங்கள் வியக்க வைக்கிறது (எப்படிப்பா இவ்வளவு பெரிய தூண்ல பல பகுதிகளாகப் பிரித்து செதுக்கியிருக்க? என்று ஆச்சர்யம் கொண்டேன்)

தூண்களில் இருந்த கன்னட எழுத்துகள் இவை கர்நாடக பிரதேசத்தைச் சார்ந்தவை என்று பறைசாற்றுகின்றன.


கோவிலிலேயே தூண்களின் அழகில் அவற்றையே படங்கள் எடுத்துக்கொண்டிருந்தேன். கொஞ்சம் கூட்டம் இருந்தாலும்  மூலவர் செலுவநாராயணரை தரிசனம் செய்ய முடிந்ததுபிறகு தாயார் சந்நிதிக்குச் சென்று வணங்கினோம்உற்சவரையும்இராமானுஜரின் திருமேனியையும் (உற்சவர்) தரிசனம் செய்ய இயலவில்லை. புறப்பாட்டுக்காக அலங்காரம் செய்துகொண்டிருக்கிறார்கள் என்றனர் (பிற்பாடு அன்று வீதியில் இருவரையும் தரிசனம் செய்தோம். அது பிற்பாடு வரும்). கோயில் உள் எடுத்த படங்களின் தொடர்ச்சி அடுத்த வாரமும் வரும்.

(தொடரும்) 

 = = = = = = =

59 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ஶ்ரீமந் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே ஶ்ரீமதே நாராயணாய நமஹ

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. சுவாரஸ்யமான (புராண) கதைகளுடன் இந்த வாரம் சென்றது. ஒவ்வொரு வாரமும் இப்படி இருக்கக் கூடாதா என்ற நப்பாசையையும் மனசில் விதைத்துச் சென்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி சார். இதுல பல பகுதிகள் 950 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவை. அதனை எழுதி வைத்திருக்கின்றனர். அனைவரும் ஒப்புக்கொள்ளும் சரித்திரம் என்று ஒன்று கிடையாது.

      இன்றைக்கு, நாடு பார்த்ததுண்டா எனப் போற்றப்படுகிற காமராஜர் வாழ்வில் நடந்தவைகளே பலருக்கு நம்ப முடியாமல் இருக்கிறது. இப்படி ஒருவர், தன்னலமற்று, தாய் சகோதரிகளுக்குக்கூட பொதுப் பணத்தில் நன்மைகளைப் பெற்றுத் தராமல் இருந்திருக்கமுடியுமா? சும்மா கப்சா விட்டிருக்காங்க என்று அடுத்த தலைமுறையினர் சொன்னால் ஆச்சர்யப்பட முடியாது.

      நீக்கு
    2. அநாவசியமாக இந்த இடத்தில் காமராஜரைப் ப,ற்றி எதற்கு நெல்லை?
      காமராஜர் மட்டுமில்லை ராஜாஜி, அண்ணா, என்று அந்தத் தலைமுறைத் தலைவர்கள் யாரும்
      பொது சொத்தில் கைவைத்து தன் குடும்பத்திற்காக
      சேர்த்துக் கொண்டதில்லை. சென்ற தலைமுறை தலைவர்களில் யாரைத் துதி பாடினால் தங்களுக்கு ஆதாயம் கிடைக்கும் என்று கணித்து இந்தத் தலைமுறை அரசியல்வாதிகள் செயல்படுகின்றனர்.. அந்த வகையில் பிஜேபிக்கு இன்று காமராஜர் கிடைத்திருக்கிறார்.
      தன் தலைமையில் தனியான ஒரு காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் கட்டியவர் காமராஜர்.
      அந்த வாக்குகளைக் குறி வைத்து பிஜேபி அரசியல் செய்வதால் காமராஜரை அப்பப்போ தூக்கிப் பிடிக்கின்றனர். காமராஜரின் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் சம்பந்தமேயில்லாத பிஜேபி அப்பப்போ காமராஜரை புகழ்ந்து தள்ளுகிறது.
      தேர்தல் காலங்களில் ஜாதிகளின் அடிப்படையில் தான் அப்பாவி மக்கள் காட்சியளிப்பார்கள் இன்றைய அரசியல்வாதிகளுக்கு. இந்த அவலங்கள் இல்லாத காலத்து அரசியல் அன்றைய அரசியல். இந்தப் புரிதல் நமக்கு வேண்டும்.

      நீக்கு
    3. யார் ஆட்சி காலத்திலும் பிராமண ஜாதிக்கு எந்த
      சலுகைகளும் அளிக்கப்பட்டதில்லை என்பதே எழுதப்படாத விதி.

      நீக்கு
    4. ஜீவி சார்... நம் கண் முன்னால் நடந்த சம்பவங்களே, இப்படியெல்லாம் நடந்திருக்குமா என இரண்டு தலைமுறைகள் கழித்து எண்ண வைக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்களில் பாடபேதமும், சந்தேகங்களும் எழுவதில் வியப்பில்லை என்பதற்காக எழுதினேன்.

      நம் நாட்டு அரசியல் ஐம்பது ஆண்டுகளில் மிகத் தரம் தாழ்ந்துவிட்டது வருத்தத்திற்கு உரியது.

      நீக்கு
  4. ஹோய்சாலால கோயிலுக்கும் திருநாராயணபுரம் கோவிலுக்கும் உள்ள வித்தியாசங்களை பார்த்தீர்களா?

    கட்டட அமைப்பு, சிற்பங்கள் இருக்குமிடம், தூண்கள், கோபுரங்கள் என்று எல்லாவற்றிலும் வித்தியாசம் காணலாம். மேலும் திருநாராயணபுர சிற்பங்களில் ஒரு உணர்ச்சிகரம், உயிரோட்டம் ஆகியவை உள்ளதையும் காணலாம்.

    இந்த வேறுபாடுகளை விவரமாக எழுதினால்குறைந்தது 2 பதிவுகள் எழுதலாம்.

    கட்டுரை சிறப்பாக உள்ளது. படங்களும் தெளிவாக உள்ளன.
    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருநாராயணபுரம் முஸ்லீம் படையெடுப்புக்கு உள்ளானது. அதனால் பிற்கால விஜயநகரப் பேர்ரசு மற்றும் மைசூர் ராஜாவால் புதுப்பிக்கப் பட்டது. அதனால் வித்தியாசங்கள் உண்டு. ஹொய்சாளர்களின் சிற்ப மேன்மை 13ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. திகட்டும் அளவு இன்னொரு தொடரில் இதுபற்றி எழுதுகிறேன்.

      ஹொய்சாளர் காலச் சிற்பங்கள் மாக்கல்லில் செதுக்கப்பட்டவை போன்று வெகு நுண்ணிய வேலைப்பாடுகளுடன் அமைந்தவை. அது தனி ரகம், மிக மேன்மையானது என்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது.

      நீக்கு
    2. முஸ்லீம் படையெடுப்பு என்று எழுதாமல் முகலாய மன்னர்களின் படையெடுப்பு என்று எழுதலாம். ஜாதி, இனம், மதம் தாண்டிய வார்த்த்தைக் கோர்வைகளுடன் பொதுப் பார்வையில் பொது விஷயங்கள் அலசப்படுவது எழுதுவதின் தரத்தை உயர்த்தும்.

      நீக்கு
    3. இதைக் கருத்தில் கொள்கிறேன் ஜீவி சார். நன்றி

      நீக்கு
  5. ஸ்ரீமத் இராமானுஜ பெருமானின் மூன்று காலத் திருமேனி உருவங்களை படமெடுத்து ஒருசேர தரிசிக்க காட்சிப்படுத்தியமைக்கு நன்றி நெல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜீவி சார். இதை மாத்திரம் இன்னும் விவரமாக, இன்னும் படங்களோடு எழுதியிருக்க வேண்டும். இன்னொரு தொடரில் எழுதுவேன்.

      நம் சிற்பிகளின் மேன்மை அப்படிப்பட்டது. ஶ்ரீபெரும்புதூர்்இராமானுஜர் திருமேனியை அருகிலிருந்து பார்க்கும்போது (பின்பக்கமும்) அவரது வயது தெரியும். மேல்கோட்டையில் மத்திம வயது.

      நீக்கு
  6. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    பதிவு அருமை. திருநாராயணபுரம் கோவில் வரலாறு தெரிந்து கொண்டேன். உற்சவர் பற்றிய வரலாறும் தெரிந்து கொண்டேன். செல்ல பிள்ளை கதையும், வரலாறும் நன்றாக உள்ளது. எத்தனை முறை படித்தாலும், படிக்கப் படிக்க திகட்டாத வரலாறுகளை படிக்கும் போது நம் மனதில் ஒரு புத்துணர்ச்சி வருகிறது .

    ஸ்ரீ இராமனுஜரின் வரலாறும், அவரின் விக்ரகங்களின் மகிமையையும் இப்போதுதான் படித்து தெரிந்து கொண்டேன். அவரின் மூன்று விதமான திருவுருவ வேறுபாடு படங்களை கண்டு தரிசனம் செய்து கொண்டேன் . அழகான விபரமான பதிவு.

    மற்ற படங்களும், அங்கிருந்த தூண்களில் சிற்பங்களும் மிகவும் அழகாக உள்ளது. கண்ணாடியில் முகம் பார்த்துக் கொள்ளும் சிற்பங்களை பார்க்கையில், அழகை மேம்படுத்திக் கொள்வதில் காட்டும் அக்கறை பெண்களுக்குத்தான் மிகவும் உள்ளது எனத் தோன்றுகிறது.

    அந்த ஒரு தலை இரு உடல்கள் சிற்ப படம் யாரோ ஒருவர் மற்றவரை அன்பின் மிகுதியில் குத்துக் காலிட்டு அணைத்துக் கொள்ளும் சிற்பமாக இருக்குமென நினைக்கிறேன். அவரின் முகம் அந்த அணைக்கப்படுபவரின் பின்புறமாக இருக்கிறது. ஸ்ரீ ராமபிரானும், அவரை பக்தியுடன் தழுவி அணைப்பவராக ஆஞ்சநேயரருமாகவும் இருக்குமோ..? அப்படிபட்ட நிலையில் அந்த சிற்பம் வடிக்கப்பட்டுள்ளதோ? எனக்கு அப்படி தோன்றுகிறது.

    செலுவநாராயணரை தரிசனம் செய்தமைக்கு மகிழ்ச்சி. நானும் உங்கள் பதிவின் மூலமாக தரிசனம் செய்து கொண்டேன். அடுத்த வார பகிர்வையும் காண ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிறகு வந்து எழுதுகிறேன் கமலா ஹரிஹரன் மேடம். கருத,துக்கு நன்றி

      நீக்கு
    2. ஶ்ரீராமனும் ஆஞ்சநேயரும் கட்டித் தழுவுவது.... இந்த வரி எனது அயோத்தி யாத்திரையை நினைவுபடுத்திவிட்டது. பரதன் இராம பாதுகைகளை வைத்து, அதன் கீழாக அமர்ந்து அயோத்தியை ஆண்ட பகுதியில் ஒரு கோவிலில் இந்தச் சிற்பத்தைப் பார்த்திருக்கிறேன். பகிர்கிறேன்.

      நீக்கு
    3. அன்றைக்கு கோவிலுக்குச் சென்றபோது தூண்களையும் சிற்பங்களையும் பார்க்க நேரம் இருந்தது. பிற்பாடு மேன்று தடவைகள் தரிசனத்திற்காகச் சென்றபோது நல்ல கூட்டம். சிற்பங்கள் இன்னும் அணிவகுக்கும் கமலா ஹரிஹரன் மேடம்.

      நீக்கு
  7. சென்ற யாத்திரையைப் பற்றி, இடங்களைப் பற்றி எழுதுவது, படங்களைக் கோர்ப்பது நேரம் பிடிக்கும் வேலை என்றாலும், கடைசி நேரத்தில் அனுப்பினாலும் அதனைக் கோர்த்து வெளியிடுவது மிகுந்த பொறுமையைச் சோதிக்கும் பணி. பதிப்பித்த கேஜிஜி அவர்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  8. ஸ்ரீ உடையரின் வரலாறும், அவரது திருமேனிகளின் மகத்துவமும் ஏற்கனவே தெரிந்து இருந்தாலும் மீண்டும் படிக்கையில் நெகிழ்ச்சி..

    காலைப் பொழுதில் மீண்டும் ஒரு அற்புதம்.. மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜு சார். நீங்க ஶ்ரீரங்கம் கோவிலில் உடையவர் சந்நிதிக்குச் சென்று தரிசித்திருப்பீர்கள். ஶ்ரீபெரும்புதூர் சென்றிருக்கிறீர்களா?

      நீக்கு
  9. ஸ்ரீமதி கமலா ஹரிஹரனின் கருத்துகளே -

    தனியானதொரு பதிவுக்கு சமம்..

    சிறப்பு..

    நவராத்திரி நாட்களின் முதல் நாளாகிய இன்று அனைத்துயிர்களும் இன்புற்று வாழ்வதற்கு
    அம்பிகையிடம் வேண்டிக் கொள்வோம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நவராத்திரி முதல் நாள்.... மனதை நெகிழ்விக்கும் ஒரு நிகழ்வு. நடக்கும்போது அதன் தனித்துவம் தெரிவதில்லை. பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் நினைவுகூருகிறேன்.

      நீக்கு
    2. /ஸ்ரீமதி கமலா ஹரிஹரனின் கருத்துகளே -

      தனியானதொரு பதிவுக்கு சமம்..

      சிறப்பு../

      ஹா ஹா ஹா. அவ்வளவு பெரிதாகவா உள்ளது.? அனைவரும் பதிவின் சாராம்சங்களை குட்டி, குட்டியாக பிரித்து நான்கைந்து முறை கருத்து தருவதை நான் மொத்தமாக ஒரே தடவையாக தந்து விடுகிறேன். கைப்பேசியில் பதில் தருவதால், வேலைகளுக்கு நடுவே அடிக்கடி அதை கையில் எடுக்க இயலவில்லை.

      ஆனாலும் அதையும் "சிறப்பு" என பாராட்டியிருப்பதற்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. நவராத்திரி முதல் நாளாகிய இன்று தங்கள் அன்பான வேண்டுதலுக்கும் மிக்க நன்றி சகோதரரே. அனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துகள். நானும் அன்னையை பணிந்து வேண்டிக் கொள்கிறேன். நன்றி.

      நீக்கு
  10. கோயில் தகவல்கள் சிறப்பு.
    படங்கள் வழக்கம் போல அழகு

    பதிலளிநீக்கு
  11. தளத்தில் சகஜமாக கருத்துகள் மறைகின்றன.

    பதிலளிநீக்கு
  12. புராணக் கதைகளூடன் வைரமுடி யாத்திரை கண்டோம்.

    கோவில் சிற்பங்கள் வியக்க வைக்கின்றன.

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
    இன்று நவராத்திரி விழா ஆரம்பம். நவராத்திரி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. திருநாராயணபுரம் கோவில் வரலாறு அருமை. உற்சவர் விக்ரஹம் பற்றிய நம்பிக்கை பற்றிய விவரங்களும் அருமை.

    இராமானுஜர் தானுகந்த திருமேனி (ஸ்ரீபெரும்புதூர்) மற்றும் தானான திருமேனி (ஸ்ரீரங்கம்)

    புரட்டாசி மாதம் இராமனுஜர் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி, நன்றி.

    செலுவநாராயணர் என்ற ஆங்கிலத்தில் பேர் தெரியும் கோவில் படங்கள் அருமை. எல்லா படங்களும் நன்றாக இருக்கிறது.
    தூணில் உள்ள சிற்பங்கள் படப்பகிர்வு அருமை.தூண்களில் இருந்த கன்னட எழுத்துகள் தெரியும் சிற்பத்தை படம் எடுத்து காட்டியது மேலும் சிறப்பு.
    கோயில் உள்ளே சிற்பங்களை காண தொடர்கிறேன்.



    பதிலளிநீக்கு
  15. ஒரே தலையுடன் கூடிய இரு மனிதர்களோ?//

    எனக்கு ஒரு மனிதர் போலதான் தெரிகிறது. இரண்டு கைகள், இரண்டு கால்கள் தானே இருக்கிறது. மற்றது மாலைகள் தொங்குவது தெரிகிறது. கீழ் பக்கம் ஒடுங்கி மேல் பகுதி விரிந்து இருப்பதால் (முதுகை வளைத்து அமர்ந்து இருக்கும் தோற்றம்) இப்படி இருவர் போல காட்சி அளிக்கிறது சிற்பம் என்று நினைக்கிறேன்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு இரண்டு மனிதர்கள் ஒரு தலை என கற்பனை விரிந்தது

      நீக்கு
  16. 2010 க்கு முன் (தஞ்சையில்
    இருந்த போது) ஶ்ரீரங்கம் கோயிலுக்குப் பலமுறை சென்றிருக்கின்றேன்.. (இப்போதும் தஞ்சையில் தான்) முழங்கால் வலி தளர்வு காரணமாக ஸ்ரீரங்கத்திற்கு செல்லும் வாய்ப்பு இன்னும் அமையவில்லை..
    ஶ்ரீபெரும்புதூர் சென்று தரிசிக்கும் வாய்ப்பு இன்னும் கிட்டவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீரங்கம் தரிசனம் நிச்சயமாக வாய்க்கும் துரை செல்வராஜு சார்

      நீக்கு
    2. தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    3. நீங்க செல்லவேண்டும் என்று நிச்சயத்துக்கொள்ளுங்கள். வழி பிறக்கும். நான் அடுத்த முறை கும்பகோணம் வரும்போது உங்களைச் சந்திக்க முயல்கிறேன்.

      நீக்கு
  17. மேல் கோட்டை கோயில் சிற்பங்கள் வாவ்! 33 வருஷங்கள் ஆகிவிட்டது.

    ஊர் வீதி படங்கள், கோயில் சிற்பங்கள் படங்கள் செம. நரசிம்மர் வெகு க்ளியர்.

    அந்த ஒரு தலை - அணைத்திருப்பவரின் தலை பின்பக்கம். அதனால் ஒருதலை போல இருக்கு அந்த அணைத்திருப்பவரின் பெரிய கைகள் உருவத்துக்குள் சின்ன குழந்தை கிருஷணர் போல இருக்கு. கொண்டை இருப்பதால்

    ஆனால் அணைத்திருக்கும் உருவம் பெரியதாக இருக்கு. ஆஞ்சு ராமர் என்றால் ராமர் கொண்டை இருக்காது ஆனா ரமர் என்றால் வடிவம் வேறு.

    கிருஷ்ணர் கதைகளில் எந்த அரக்கி பூதனை? அணைத்து பால் கொடுப்பது போல கதை வருமே...அதுவோ...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //33 வருஷங்கள் ஆகிவிட்டது.// வாங்க கீதா ரங்கன். பக்கத்தில் இருக்கும் மேல் கோட்டைக்குச் சென்று 33 வருடங்களா? அநியாயமில்லையோ?

      பூதகி, பூதனை எல்லோரும் ஒன்றுதான். கிருஷ்ணர் சரித்திரத்தில் வருவது.

      நீக்கு
  18. சிற்பங்கள் ரொம்ப அழகு. கோயில் சுற்றுச் சுவர் படங்கள் ஈர்க்கின்றன. எடுத்த கோணம் சூப்பர் நெல்லை.

    பெண்கள் உடைகளில் அந்தக் கோடுகள் எல்லாம் கூட எப்படி போட்டிருக்காங்க கம்மல், மாலை வடிவம் அதில் டிசைன் எல்லாம்.....செதுக்க எவ்வளவு நாட்கள் மாதங்கள் ஆச்சோ? யாரு பிரதான சிற்பியா இருந்திருப்பாங்களோ இல்ல அவங்கவங்களுக்குத் தோன்றியதை வடிவமைச்சிருக்க வாய்ப்பில்லை. ஒரு தலைவர் இருந்து இன்னென்ன செதுக்கணும்னு ஒரு ப்ளான் இருந்திருக்கும்.

    கட்டுக் கோப்பாக, இப்ப இன்டீரியர் டிசைன்னு பாடம் இருப்பது போல் அப்பவும் இப்படி சிற்ப வடிவத்திலும் இன்டீரியர் இருந்திருக்கும்! அதுக்கும் ஒரு கணக்கு சூத்திரம் இருந்திருக்கும்.

    முந்தைய சிற்பங்களுக்கும் இதற்கும் வித்தியாசம் இருக்கு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு,

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /கம்மல், மாலை வடிவம் அதில் டிசைன் எல்லாம்.....செதுக்க எவ்வளவு நாட்கள் மாதங்கள் ஆச்சோ?// - சமீபத்தில் சென்றிருந்த கோவிலில் இருந்த சிற்பங்கள் (13ம் நூற்றாண்டு) இவை எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் அளவு மிக மிக அழகானவை. அவை பற்றி பிறகு எழுதுகிறேன்.

      சிற்பங்கள், கோவில்கள் போன்றவற்றையும் உலோகச் சிற்பங்கள் செய்தவர்களும் (ஸ்தபதி போன்றவர்கள்) மிக மிகத் திறமையானவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

      நீக்கு
  19. பெண்கள்னா எப்போதும் தங்களை அழகுபடுத்திக்கொண்டேதான் இருக்கணுமா?//

    அந்த வரிசையில் முதல் படம் மிக வித்தியசமாக இருந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லா கவனிச்சிருக்கீங்க கோமதி அரசு மேடம். நான் இதைக் குறிப்பிட விட்டுப் போயிடுச்சு. பத்மாசனத்தில் தலைகீழாக ஒற்றைக் கையில் நிற்கும் கிருஷ்ணன்?

      நீக்கு
    2. மயில் பீலி இல்லா கிருஷ்ணர்

      நீக்கு
  20. தொடரும் அழகான கட்டுரை. அருமையான சிற்பங்களை அடிக்கோடிடும் படங்கள்.

    எனது கட்டுரையொன்று (மேலக்கோட்டை பயணம் - 2) ராமானுஜரின் டெல்லி விஜயம்பற்றி, உத்சவ விக்ரஹத்தை மீட்டுவந்ததுபற்றிக் கொஞ்சம் சொல்கிறது. விருப்பப்பட்டோர் வாசிக்கலாம். இங்கே லிங்க்:

    https://aekaanthan.wordpress.com/2017/02/01/மேலக்கோட்டை-பயணம்-2/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஏகாந்தன் சார். மேல்கோட்டையில் பீபீ நாச்சியாரின் விக்ரஹம் மூலவரின் பாதங்களில் இருக்கிறது. இது அடுத்த வாரம் வரும் என்று நினைக்கிறேன்

      நீக்கு
  21. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  22. மேலேயுள்ள லிங்க்கை கூகிளில் காப்பி/பேஸ்ட் செய்து போட்டு எண்ட்டரைத் தட்டவும். திறக்கும் கதவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த பீபீ நாச்சியாரும், ஸ்ரீரங்கத்து நாச்சியாரும் வேறு வேறு என்று நான் படித்த எண்ணம். இது பற்றிப் பிறகு எழுதுகிறேன்.

      நீக்கு


  23. @ நெல்லை அவர்களுக்கு

    /// அடுத்த முறை கும்பகோணம் வரும்போது உங்களைச் சந்திக்க முயல்கிறேன்.. ///

    எல்லாமே சங்கல்பம் தான்...

    கடந்த இரண்டு மாதமாக தொலைக்காட்சி வழியாக
    திருமலை திருப்பதி தேவஸ்தான ஒளிபரப்பினைத் தான் (95℅ + 5℅ பொதிகை) பார்த்துக் கொண்டிருக்கின்றோம்..

    மற்ற கண்றாவிகளைப் பார்ப்பதில்லை..

    முழங்கால் வலி தளர்வு இருந்தாலும் இப்போதெல்லாம் அருகில் இருக்கும் கோயில்களுக்குச் செல்கின்றேன்..

    தங்களது அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் கடந்து போகும் துரை செல்வராஜு சார்.அவனிருக்க பயமென்?

      நீக்கு
  24. மிக சிறப்பு சார் ..

    நாங்கள் அடுத்த நாள் காலை அங்கு இதே தூண்களை படம் எடுத்தோம் ..எத்தனை சிறப்பான வேலைப்பாடுகள் ..பார்க்க பார்க்க ஆச்சரியமே ..

    மேல்கோட்டை வைபவம் என்றும் படிக்க படிக்க திகட்டாதவையே..

    (முந்தைய பதிவுகளை படித்து முடித்து இங்கு வர வேண்டும் என எண்ணினேன், ஆனால் நேரம் அமையவில்லை இனி இங்கு தொடர்கிறேன் )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அனு ப்ராம்குமார். நீங்களும் குடும்பத்தோடு வந்திருந்தீர்களா? சந்தித்திருக்கலாமே.

      உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படிப்பேன். அதிலும் தொண்டனூர் நம்பி நாராயணர் கோவிலுக்குப் பொருத்தமாக திருக்குறுங்குடி நம்பி பாசுரங்களைச் சேர்த்திருந்ததை ரசித்தேன். நன்றி.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!