ஞாயிறு, 8 அக்டோபர், 2023

நான் வியந்த ஓவியர் :: மாருதி :: பகுதி 3 :: நெல்லைத்தமிழன்

 

ஓவியர் மாருதி அவர்களைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்திருந்தால்  நான் கேட்க ஆசைப்பட்ட கேள்வி: "பெண்கள் முகத்திற்கு யாரேனும் pose கொடுக்கிறார்களா, இல்லை நீங்கள் பார்க்கும் பெண்களின் முகத்தைச் சிறிது வித்தியாசங்கள் கொடுத்து வரைகிறீர்களா, இல்லை அந்தப் பெண்ணின் புருவம், இந்தப் பெண்ணின் கண்கள், இன்னொரு பெண்ணின் உதடுகள் என்று பலவித combinationsஉடன் உங்களின் கற்பனைத் திறனும் சேர்ந்துகொண்டு வரைகிறீர்களா" என்று.

7 வயதிலேயே சிறு சிறு ஓவியங்கள் வரைய ஆரம்பித்தவர் மாருதி. அவர் அப்பா இதனை ஆதரிக்கவில்லை, எல்லா அப்பாக்களையும் போல. ஒரு நல்ல வேலையைப் பார்த்துக்கொண்டு, ஓவியம் வரைவதை side வேலையாக, பொழுதுபோக்காக வைத்துக்கொள்ளச் சொல்லி அவருக்கு இன்னொரு உறவினரை விட்டு ஆலோசனை சொல்லச்சொன்னாராம். பையனை என்ன சொல்லியிரும் திருத்த முடியாது, அவனுக்கு ஓவியர் ஆவதில்தான் ஆசை என்றதும், 20 வயதில் சென்னைக்குச் செல்ல அனுமதி கொடுத்திருக்கிறார்.  வந்தாரை வாழவைக்கும் சென்னை, ஓவியர் மாருதிக்கு கஷ்த்தைக் கொடுக்காமல் வெற்றி பெற வைக்குமா? சோறு தண்ணியில்லாமல் சென்னைத் தெருக்களில் சுற்றியிருக்கிறார். அவருக்கு முதல் வாய்ப்பு அளித்தவர் குமுதம் எஸ்..பி அவர்கள்.  எஸ்..பி அவர்களைப் பற்றி மாருதி கூறும்போது, ஒவ்வொரு ஓவியத்திலும் சின்னச் சின்னத் திருத்தங்கள் சொல்லுவாராம், அவைகள் எல்லாமே மிகச் சரியாகவும் கற்றுக்கொள்ளும்படியாகவும் இருக்குமாம். ஆரம்பத்தில் நாதன்என்ற பெயரில் அவரது ஓவியங்கள் வெளியாயினவாம். பிறகு ஒரு நாள் தன் புனைபெயராக மாருதிஎன்பதை வைத்துக்கொண்டாராம்.


(ஓவியர் லோகநாதன் அவர்கள் வரைந்த ஓவியர் மாருதி படம்..இணையத்திலிருந்து)

ஓவியருக்கு நிலையான வருமானம் என்பது அப்போது கிடையாது. அதனால் திருமணம் செய்துகொள்வது சரியல்ல என்று நினைத்தாராம். எப்படியோ அவரது அம்மா, அவரை வற்புறுத்தி, அரசு வேலையில் இருந்த விமலா என்ற பெண்ணை, மாருதியின் 41வயதில் திருமணம் முடித்தாராம். ஓவியர் மாருதிக்கு இரண்டு மகள்கள். அதன் பிறகுதான் வாழ்க்கை என்பது அனுபவித்து ரசிப்பதற்கு என்று அவருக்குப் புரிந்ததாம்.

ஓவியர் மாருதியின் வேலை, வீட்டிலிருந்துதான் என்பதால், அவர் மனைவிக்கு மிக்க மகிழ்ச்சியாம். இரண்டு பேரும் வேலைக்குச் சென்றால் குழந்தைகளை யார் பார்த்துக்கொள்வது என்ற பிரச்சனை வந்திருக்கும். மாருதியின் நல்ல குணத்தைப் பற்றி மிகப் பெருமிதம் கொள்கிறார் அவர் மனைவி. மாருதிக்கு கடவுள் நம்பிக்கை குறைவு. ஜாதகம் பார்க்காமல் (மாருதியின் ஜாதகம் இல்லை என்பதால்) நடந்த திருமணம். மனைவிக்கோ இராமர் மீது அளவற்ற பக்தி. அதற்கேற்றார்ப்போல், திருமணத்தின்போது கணவனின் தாய், விமலாவிற்கு இராம, லக்ஷ்மண, சீதா விக்ரஹங்களைக் கொடுத்தாராம்ஓவியர் மாருதி, கண்மணி என்ற பத்திரிகையின் அட்டைப் பத்தை 22 வருடங்களாக வரைந்து கொடுக்கிறாராம். அந்தப் பத்திரிகையின் முதலாளி, ராமசந்திர ஆதித்தன் அவர்கள். கணவனின் புனைபெயரோ மாருதி. இப்படி வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ராமர் சம்பந்தப்பட்டவர்கள் (பெயருடையவர்கள்) இருந்ததில் அவருக்கு மிக்க மகிழ்ச்சியாம்




























= = = = = = = = = = = = = =


44 கருத்துகள்:

  1. அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
    மாதர்கொல் மாலும்என் நெஞ்சு..

    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... ஓவியங்கள் உங்களை இவ்வளவு கவர்ந்துவிட்டதா?

      ஓவியர் மாருதிபோல இனி எங்கு காணப்போகிறோம்? நம் காலத்தைய கலைஞர்களே அதீத திறமை கொண்டவர்கள்.

      நீக்கு
  2. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. சாமுத்ரிகா லட்சணம் கூறும் நான்கு வகைளில் முதல் இரண்டில் இருந்து கோர்க்கப் பட்ட முத்துச் சரம்..

    பதிலளிநீக்கு
  4. சாமுத்ரிகா லட்சணம் உணர்ந்தவர்க்கே இல்லறம் இனிமையாகி வாழ்க்கை அதன் வழி - முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போல பயணிக்கும் என்பார்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சமீபத்தில் சென்றிருந்த கோவிலில் பெண்களின் சிற்பங்கள் நீங்கள் நினைத்ததை நினைவுபடுத்தியது.

      நீக்கு
  5. செந்தமிழ்த் தேன் மொழியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்..

    பதிலளிநீக்கு
  6. கிறுக்குப் பயலே..
    நெலா எப்படா சிரிச்சுச்சி..

    அதுக்கெல்லாம் ஞானக் கண்ணு வேணுமுங்கோ... வ்!..

    இல்லேண்ணா மாருதியோட சித்திரங்களப் பார்க்க வேணுமுங்கோ!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... பெண்களை மதி முகத்துக்கு மனம் ஒப்பிட ஆரம்பித்துவிட்டதா?

      நீக்கு
  7. கரி நாள் போல் இல்லாமல்
    களி நாள் போல
    கனி நாள் போல
    மலர்ந்திருக்கின்றது இன்றைய
    கதிர் நாள்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முல்லைச் சிரிப்பு, கதிர் போல் தோன்றியதில் வியப்பில்லை.

      நீக்கு
  8. பதில்கள்
    1. ஒரு தொகுப்பில் கண்மணி இதழ்களின் அட்டைப் படங்களைப் பார்த்தபோது, ஒவ்வொரு இதழுக்கும் வித்தியாசமான பெண் முகம் என்பது மனதில் பட்டு, அவற்றைத் தொகுத்து ஆரம்பித்த பகுதி இது. ரசித்ததற்கு மகிழ்ச்சி

      நீக்கு
  9. ஓவியங்கள் பிரமிக்க வைக்கிறது இதெல்லாம் தெய்வ அனுக்ரஹம் உள்ளவர்களால் மட்டுமே.... வரைய முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கில்லர்ஜி. ஒவ்வொரு கலைஞனும் தெய்வ அனுக்ரஹம் பெற்றவர்கள்தாம்.

      நீக்கு
  10. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.

    இன்றைய பதிவாக ஓவியர் மாருதி அவர்களின் ஓவிய தொகுப்பு அனைத்தும் நன்றாக உள்ளது. எனக்கும் அவரின் ஓவியங்கள் மிகவும் பிடித்தமானவை .

    பற்கள் தெரியாமல், புன்னகை புரியும் முகங்களின் அழகு மனதை மிகவும் கவர்கிறது. ஓவியர் மாருதியின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும். "தோன்றின் புகழோடு" என்ற சொல்லுக்குள் அடங்கிய மனிதர் அவர். அழகான ஓவிய பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகிய பெண்களின் பற்கள் தெரிந்தாலும் அழகுதான் கமலா ஹரிஹரன் மேடம்.

      இது இறுதிப் பகுதி. இதை ஆரம்பித்தபோது இடையில் ஓவியர் மாருதி மறைந்துவிடைவார் என்று எண்ணிப்பார்த்ததில்லை.

      நீக்கு
  12. நானும் இந்த மாதிரி தொகுப்பு ஒன்றினை உருவாக்கி நல மாதங்கள் ஆகின்றன..

    இன்னும் நேரம் அமைய வில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு எதனால் சட் என்று அனுப்பணும் எனத் தோன்றியது? பதிவுகளில் இரு பகுதிகள் வந்த பிறகு ஓவியரும் மறைந்தார். வாழும்போதே அவருக்கு மரியாதை செலுத்திய திருப்தி.

      நீக்கு
    2. https://mathysblog.blogspot.com/2018/08/blog-post_28.html
      மாருதி அவர்களின் பிறந்தநாள் அன்று பதிவு போட்டேன்.

      நீக்கு

  13. ஒவ்வொரு படத்தையும் முழுதாகவே வெளியிட்டிருக்கலாம்..

    ஆனாலும்,
    உற்சாகம் அளிக்கின்ற தொகுப்பு..

    ஓவியர் மாருதியின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட்டைப்பட முகப்பு என்பதால் அதில் முகம் மாத்திரமே உண்டு. மற்ற சில படங்களில் நான் கைவைக்க வில்லை.

      நீக்கு
  14. எனது கதை மாந்தர்கள் சிலர் மாருதி அவர்களது சித்திரங்களே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் கதைகளுக்கு ஓவியர் மாருதியை விட்டால் யார் இருக்குன்றனர்?

      நீக்கு
  15. @ நெல்லை..

    //// ஆமாம் கில்லர்ஜி.

    ஒவ்வொரு கலைஞனும் தெய்வ அனுக்ரஹம் பெற்றவர்கள்தாம்..///

    எல்லாருமே தெய்வ அருள் பெற்றவர்கள் தான்..


    இதைப் பற்றி ஏராளமாக எழுதலாம்..

    வலைப்பதிவில் எழுதுகின்ற நாமும் அப்படித் தான்..

    நானும் தெய்வ அருள் பெற்றவன்..

    ஆகா!..

    பதிலளிநீக்கு
  16. அவள்
    கவிஞன்
    ஆக்கினாள் என்னை!..
    - கவியரசர்

    பதிலளிநீக்கு
  17. பெண்களை நிலவு, மலர்கள், மயில் என்று உவமையாகக் கொண்டு கவிதைகள் எழுதுவாங்க. ஆனால் மாருதி அவர்கள் அத்தனையையும் ஒரு சேர படங்களாக வரைந்து தள்ளிவிட்டார்!!! ஆசீர்வதிக்கப்பட்ட ஓவியர்!

    ஒவ்வொன்றும் தனி ஸ்டைல். கண்கள் உதடுகள் புன்சிரிப்பு என்று....பிரசன்ன முகம்.

    ரசித்துப் பார்க்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா ரங்கன். அழகிய முகங்களில் இது நல்லா இருக்கு, அது நல்லா இல்லை என்று சொல்லமுடியாது.

      நீக்கு
  18. மாருதியின் ஓவியங்களில் புருவங்கள் திக்காக இருக்கும்.

    கடைசிப் படம் டக்கென்று நயன்தாரா அறிமுகக் காலகட்டத்து முகம் கொஞ்சம் தெரிகிறது. குறிப்பாக சந்திரமுகி படத்தில் வருவது போன்று இருக்கு. ஆனால் கூர்ந்து பார்த்தால் இன்னொரு நாயகி பெயர் வர மாட்டேங்குது அவர் தெரிகிறார். கீழிருந்து மேலே நான்காவது படம் ரொம்ப க்ளியரா ஒரு நடிகை . பெயர் டக்கென்று வர மாட்டேங்குதே....நிறய விஜயகுமார் வீட்டுப் பெண்கள்!!! கே ஆர் வி,
    என்று நிறைய ஃபெமிலியர்...ஆனால் ஓவியங்களில் அழகை அம்சமாகக் கொண்டுவந்திருக்கிறார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புருவங்கள் தடிமனாக இருக்கும். பொட்டு இருக்கும். கலாச்சாரத்திற்குரிய நகை, உடைகள் இருக்கும். கண் மை இருக்கும். ஆபாசம் இருக்காது என்பது என் எண்ணம்.

      நீக்கு
    2. உங்கள் மனதை நிறையவே நடிகைகள் ஆக்கிரமித்திருப்பது தெரிகிறது கீதா ரங்கன்.

      நீக்கு
  19. மாருதியின் ஓவியங்களில் பெண்கள் அழகாக இருப்பர். ஆனால் கவர்ச்சி இல்லை. பார்க்கலாம். வண்ணங்கள் பல ஜாலம் காட்டும்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார். 'கவர்ச்சி' என்பதற்கு ஆளாளுக்கு பொருள் மாறுபடும். தெரியுமில்லையா?

      நீக்கு
  20. ஓவியர் மாருதியின் ஓவியங்கள் அனைத்தும் அழகு.

    பதிலளிநீக்கு
  21. ஓவியர் மாருதி பற்றிய அருமையான பதிவு.
    நானும் ஓவியர் மாருதி அவர்களை பற்றிய பதிவு போட்டு இருக்கிறேன்.
    ஓவியர் மாருதி அவர்களின் வாழ்க்கை குறிப்பு அருமை.
    அவர் மனைவியின் பக்தி மெய்சிலிர்க்க வைக்கிறது.
    அவர் நம்பிக்கைக்கு ஏற்றார் போல அமைந்து இருக்கிறது.
    அன்பான மனைவியை பிரிந்து வெகு நாட்கள் அவரலும் இருக்க முடியவில்லை போலும்.

    மாருதி அவர்கள் வரைந்த பெண்கள் படம் எல்லாம் அழகு. வயதானவர்களையும் மிக அற்புதமாக வரைந்து இருப்பார்.
    தலைவர்கள், பிரபலமானவர்கள் என்று அவர் ஓவியம் மிக அருமையாக இருக்கும்.
    கண்மணி பத்திரிக்கை அட்டைப்படங்கள் காலத்தால் நிலைத்து இருக்கும் என்றும்.
    அவர் ஓவியங்களில் என்றும் வாழ்வார்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம். ஓவியர் மாருதி நம் எல்லோர் மனத்தையும் கவர்ந்தவர்

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!