ஞாயிறு, 29 அக்டோபர், 2023

நான் தரிசனம் செய்த கோவில்கள்: நெல்லைத்தமிழன் : வைரமுடி யாத்திரை 18

 

 வைரமுடி யாத்திரை மேல்கோட்டை யோகநரசிம்மர் ஆலயம் பகுதி 18

மாலை காபிக்குப் பிறகு, ஒரு ஆட்டோவில் 10 பேர் வீதம் (ஷேர் ஆட்டோ போன்றது) எங்கள் அனைவரையும் யோக நரசிம்மர் கோவிலுக்குச் சென்றுவிட்டு வரச் சொன்னார்கள். நரசிம்மர் கோவில் குன்றின் மீது இருக்கிறது. கீழே கல்யாணி புஷ்கரணி இருக்கிறது. அங்கிருந்து கோவிலுக்குச் செல்ல 400 படிகளுக்கு மேல் உண்டு. அதற்குப் பதிலாக ஆட்டோ, பாதி வழி வரை செல்கிறது. அங்கிருந்து 150-200 படிகள்தான் ஏறவேண்டும். ஒவ்வொரு படியும் கொஞ்சம் அதிக உயரமாக இருக்கிறது. ஆட்டோவில் ஒருவருக்கு 50 ரூபாய் (போக வர). அவங்களுக்கும் இதுதான் சீசன்.

ஆட்டோவில் சென்று பாதி வழியில் இறங்கிக்கொண்டோம். அங்கிருந்து சமவெளியில் 50 அடிகள் நடந்தபிறகு, படிகள் பாதை வருகிறது. அதில் மெதுவாக ஏறி கோவிலை அடைந்தோம். வழியில் நிறைய வானரங்கள். கொஞ்சம் ஜாக்கிரதையாகவே ஏறிச் சென்றோம்.

யோகநரசிம்மர் ஆலயத்திலிருந்து 150-200 படிகள் கீழே மலையில் அமைந்துள்ள நீர்நிலை. இதிலிருந்துதான் யோகநரசிம்மர் ஆலயத்துக்கு திருமஞ்சனம் போன்றவற்றிர்க்கு நீர் எடுத்துச் செல்கின்றனர்.

யோக நரசிம்மர் ஆலயம் கடல் மட்ட த்திலிருந்து 1800 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. ஹொய்சாள அரசர்கள் காலத்தில் எழுப்பப்பட்ட கோவில்.  

நாங்கள் ஏற ஆரம்பித்த இடத்திலிருந்து கீழ் நோக்கிய படம். ரொம்ப கீழே கல்யாணி புஷ்கரணி

படிகளில் ஏறவேண்டியதுதான். அதோ தெரிகிறது ஆலயத்தின் கோபுரம்.

நாங்க ஒரு குடும்பமாக்கும். இங்க என்ன பார்வைகோயிலுக்குப் போகும் வழியைப் பாரு.

பெரிய படிகள். ஏறித்தான் ஆகணும். நாங்கள் ஏறுவது மலையில் என்பதைக் காண்பிக்கும் மரம்.


மலையில் (கோவில் அருகில் பாறையில்) இருந்த சிற்பங்கள்

கோவில் கோபுர நுழைவாயில். உள்ளும் படிகளில் ஏறி உள்சுற்றை அடையவேண்டும்
வாங்க வாங்ககோவிலுக்குள் நுழையுங்க

கருவறைக்குச் செல்லும் வழியில் யோக நரசிம்மர் சிற்பம், சுவற்றில்

மேல்கோட்டை யோக நரசிம்மர் (இணையம்)

மேல்கோட்டை யோக நரசிம்ஹர்


தரிசனம் முடித்துவிட்டு, மலை மீதிருந்து கீழே சமவெளியின் காட்சி

மலை மீதிருந்து கீழே ஊர் பக்கக் காட்சிகீழே தெரிவது கல்யாணி புஷ்கரணி

வந்த வழியே மெதுவாக இறங்கவேண்டியதுதான்

சுனையை அடைந்துவிட்டோம். மற்றவர்களுக்கும் காத்திருந்து எங்கள் ஆட்டோவின் 10 பேரும் வந்தபிறகு கிளம்பிகீழே நாங்கள் தங்கியிருந்த இடத்தை 6 ½ க்கு அடைந்தோம்.

அப்போது, செல்வப்பிள்ளை உற்சவரும் இராமானுஜர் உற்சவரும் வீதி உலாவில் எதிரெதிரே பல்லக்கில் வந்தனர்நாங்கள் செலுவநாராயணர் கோவிலுக்குச் சென்றிருந்தபோது இராமானுஜர் மூலவரைத்தான் சேவித்தோம். உற்சவர் புறப்பாட்டுக்காகத் தயாராகிக்கொண்டிருந்தார்வீதியில் சம்பத்குமாரரையும் இராமானுஜரையும் தரிசனம் செய்தது மகிழ்ச்சியைத் தந்தது



அன்றிரவு வீதிகளில் ஊர்வலமாக வந்த செல்வப்பிள்ளை, அவர் எதிரே இராமானுஜர்இந்த விக்ரஹம், அவர் மேல்கோட்டையை விட்டு நீங்கும்போது செய்யப்பட்டு அவரால் அளிக்கப்பட்டது.

இரவு 8 ½ மணிக்கு கோஸ் கரேமது, கத்தரி கூட்டு, குடமிளகாய் சாம்பார், ரசம், அப்பளாம் மற்றும் கடைலமா பாயசம்இரவு கோவில் செல்வதானால் சென்றுவிட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு காபிக்குப் பிறகு தொண்டனூர் சென்று அங்குதான் குளிக்கப்போகிறோம் என்று சொன்னார்கள். அதற்கான மாற்று உடை எடுத்துக்கொள்ளும்படியும், திரும்ப 12 மணிக்கு வந்துதான் உணவு என்று சொன்னார்கள்சாப்பிட்டு முடிக்கும்போதே 9 ¼ ஆகிவிட்டது. அதனால் நேரே தங்குமிடத்துக்கு வந்துவிட்டோம்மறுநாள் எடுத்துக்கொள்ள வேண்டியவைகளை ஒரு பையில் எடுத்துவைத்துப் பிறகு தூங்கிவிட்டேன்.


( தொடரும்) 

 

56 கருத்துகள்:

  1. அருமையான மலைக்கோவில்.  அருமையான காட்சிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஶ்ரீராம். இந்த இடங்களுக்கு நீங்கள் சென்று பார்க்க வேண்டும், அதிலும் உத்ஸவங்கள் இல்லாதபோது

      நீக்கு
  2. யோக நரசிம்மர் தரிசனம்
    சொல்லிய வாகில் திருப்தியாக இருந்தது.
    படத்தில் படிகளைப் பார்த்த பொழுது அவ்வளவு உயரமில்லாதது போலத் தோன்றியது. ஹி..ஹி.


    அதுசரி, கிட்டத்தட்ட 200 படிகள் உயரத்திற்கு பாதை வழியில் கூட்டிச்
    செல்லவும் திரும்பி ஏறிய இடத்தில் இறங்கவும் ஆட்டோ சார்ஜ் வெறும் 50 ரூபாய் தானா? பாவங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஷேர் ஆட்டோ என்பதால் ஒரு பயணத்துக்கு அவருக்கு 400 ரூபாய் கிடைக்கும். போதாதா? (ஆனால் இதெல்லாம் கூட்டம் இருக்கும் நாட்களில்தான். மற்றபடி அந்த ஊர் அமைதியான கிராம்ம்)

      நீக்கு
    2. நல்ல உயரம். எல்லோருக்கும் ஏறுவது சுலபமல்ல. சோளிங்கள், அஹோபிலம் போன்று கஷ்டமல்ல

      நீக்கு
  3. நான்கு நாட்கள் பயணம் முடிந்து இப்போதுதான் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். அதனால் சில பல பதிவுகளுக்கு வர இயலவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துலா காவிரி ஸ்நானம், மற்றும் அருகிலுள்ள கோவில்கள் தரிசனத்திற்காக சென்று வந்தீர்களா ? உங்களை சில நாட்களாக பதிவுகளில் காணோமே என நினைத்தேன். நீங்கள் சகோதரர் துரைசெல்வராஜ் அவர்களின் பதிவில் காவிரி ஸ்நானத்திற்கு செல்ல வேண்டுமென சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது.

      நீக்கு
    2. @ அன்பின் நெல்லை..

      /// நான்கு நாட்கள் பயணம் முடிந்து இப்போதுதான் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்.. ///

      ஊருக்குத் திரும்புகின்ற நாளில் எளியேனுடன்..

      ஆஹா!..

      நீக்கு
    3. திருஆதனூர் என்ற திவ்யதேசத்திற்குச் சென்றிருந்தேன், பவித்ரோத்ஸவத்திற்காக. மூன்று நாட்கள் அங்கிருந்தேன். நான் தங்கியிருந்த ஊர் காவிரிக் கரையில்தான் இருக்கிறது. ஆனால் காவிரியில் தண்ணீரைத்தான் காணோம். அதனால் அங்கு துலா ஸ்நாநம் செய்யவில்லை. ஸ்ரீரங்கபட்டினம் சென்று துலா ஸ்நானம் செய்யவேண்டும் இன்னும் ஓரிரு வாரங்களில்.

      நீக்கு
    4. வாங்க துரை செல்வராஜு சார்... சந்திக்கவேண்டும் என்ற ப்ராப்தம் இருந்தால்தான் ஒருவருடனான சந்திப்பு நிகழும்.

      நீக்கு
    5. துலா ஸ்நானம் சிற்ப்பாக அமைவதற்கு பிரார்த்தனைகள்..

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன். இந்த 'நன்றி', நலமுடன் வாழத் துணையிருப்பதால் இறைவனுக்கா? இல்லை உங்கள் கருத்தைப் படித்து 'ஆம் இறைவன் துணையிருப்பார்' என்று எண்ணுபவர்களுக்கா?

      நீக்கு
    2. ஹா ஹா ஹா. எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம். "கடைலமா", "கடலைமா" மாதிரி...:)))

      நீக்கு
  5. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    இன்றைய மலைக்கோவில் பதிவு அருமை. தாங்கள் பகிர்ந்த படங்களின் வாயிலாக ஸ்ரீ யோக நரசிம்ம மூர்த்தியையும், வீதியில் உலா வந்த உற்சவர் செல்லப் பிள்ளையையும், ஸ்ரீ இராமனுஜரையையும் தரிசிக்கும் பேறு பெற்றேன். மலை படிகள் உயரமாக தெரிவதால் ஏற கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்திருக்கும் என நினைக்கிறேன்.. (கூடவே நிறைய வானரங்களும் வந்து படுத்தியிருக்கும்.)

    கோவில் சிற்பங்கள் படங்கள் அனைத்தும் வழக்கம் போல அழகாக உள்ளன. மலைப்பகுதி படங்களும் கண்களுக்கு விருந்து.

    இரவு சாப்பாட்டில் அது என்ன பாயாசம்.? (கடைலமா) ஏதோ ஜப்பானிய மொழி மாதிரி கேள்விப்படாத புது பெயராக உள்ளதே..! பருப்புகளை கொண்டு தயாரித்ததா?

    அடுத்து தாங்கள் சென்ற இடத்தைப் பற்றி அறிய ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வானரங்களைக் கண்டுகொள்ளாமல் நடந்துவிடலாம் (தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பொருட்களைக் கையில் கொண்டு சென்றால் பயந்துகொண்டுதான் போகணும்).

      கடலைமா பாயசம்....ஹாஹா. இது ரொம்பச் சுலபமாகச் செய்கிறார்கள் என்பதாலோ இல்லை அதன் வாசனை எனக்குப் பிடிக்காததாலோ, நான் இந்தப் பாயசத்தை விரும்புவதில்லை.

      நீக்கு
    2. கடைலமா - கடையில் கிடைக்கும் மாவு.... கடலை மாவு. ஹா ஹா

      நீக்கு
    3. யாரேனும் முக்கியஸ்தர்கள் திடீரென வந்தால் என் அம்மா உடனே செய்யும் பாயசம் இதான். ரொம்பவே சீக்கிரமாப் பண்ணிடலாம் கமலா ஹரிஹரன். நான்கு பேருக்கு எனில் ஒரு கரண்டி கடலை மாவு, ஒன்றரைக் கரண்டி ஜீனி, ஒரு கரண்டி நெய் எடுத்துக்கவும். பாயசம் பண்ணப் போகும் பாத்திர்த்தில் நெய்யை விட்டுக் காய வைத்துக் கொண்டு கடலைமாவைப் போட்டு வறுக்கவும். கூடவே சர்க்கரையையும் போட்டுடலாம். பின்னர் இரண்டு கிண்ணம் நீரை விட்டுக் கடலைமாவுக் கரைசலைக் கைவிடாமல் கிளறணும். நன்கு கெட்டிப்பட்டு வரும்போது நல்ல பாலாக ஒரு கிண்ணம் சேர்த்துக் கொதிக்கவிட்டுக் கொண்டு பின்னர் ஏலக்காய், மு.ப. சேர்க்கலாம். இப்போல்லாம் நான் பால் சேர்க்கையில் பாதம், முந்திரி ஒன்றிரண்டைப் பொடித்தோ அல்லது நைஸாக அரைத்தோப் பாலில் கலந்து சேர்க்கிறேன். இது தனிச் சுவை.

      நீக்கு
    4. பாயாசம் கெட்டியாக இருக்கணுமா/ஒரே மாதிரி இருக்கணுமா என்பது உங்கள் விருப்பம். கொஞ்சம் நிதானமாக தோசை மாவு பதத்துக்கு இருக்கலாம்.

      நீக்கு
    5. நன்றி கீதா சாம்பசிவம் மேடம். நீங்க எப்போதுமே பல்வேறு செய்முறைகளை விவரமா எழுதுவீங்க. அந்த ஆர்வத்துக்கு நன்னி ஹை.

      எனக்கு கடலைமா பாயசம் பிடிப்பதில்லை. ஜீனி போட்ட ரவா பாயசமும்.

      நீக்கு
    6. ரவா பாயசம் எங்க மோதிக்குப் பிடிச்ச பாயசம். அதனால் அதன் மறைவுக்குப் பின்னர் பண்ணுவதே இல்லை. அவல் பாயசமும் எப்போதாவது தான்.

      நீக்கு
  6. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த நாள் எல்லோருக்கும் நல்ல நாளாக அமையட்டும் துரை செல்வராஜு சார்

      நீக்கு
  7. வழக்கம் போல் கட்டுரையும் படங்களும் நன்றாக உள்ளன.

    பதிலளிநீக்கு
  8. மலைக்கோவிலும் காட்சிகளும் அருமை.
    நரசிம்மரும் சிற்பங்களும் அழகு.

    பதிலளிநீக்கு
  9. // பெரிய படிகள். ஏறித் தான் ஆகணும்.. //

    ஏன் இப்படி பெரியதாக அமைத்திருக்கின்றார்கள்?..

    கால இடைவெளியில் நாம் குள்ளமாகி விட்டோமோ!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அல்லது சொகுசு வாழ்க்கைக்குப் பழகியதால் உடலுழைப்பு குறைந்துவிட்டதா? அல்லது எளிதாக எல்லோரும் ஏறிவந்துவிடக் கூடாது என்று எண்ணினார்களா? இல்லை படிகள் அமைத்தவர்கள், கணக்கில் தவறு செய்தார்களா? நிறைய கேள்விகள். விடை யார் தருவார்கள்?

      நீக்கு
  10. யோக நரசிம்மர் மலைக் கோயிலும் படிக்கட்டுகளும் இதர காட்சிகளும் அருமை..

    வழக்கம் போலவே படங்கள் அனைத்தும் நன்றாக வந்துள்ளன..

    பதிலளிநீக்கு
  11. நெல்லை என்னதான் ஷேர் ஆட்டோ என்றாலும் ஒரு ஆட்டோவில் 10 பேரா? வேன் போல இருக்குமோ?

    35 வருஷங்களுக்கு முன்ன போன நிழலான நினைவுகள்...அப்ப எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேண். புஷ்கரணி நம்ம அனு போட்டிருந்தாங்க அதில் பார்த்தேன். நினைவை மீட்டெடுக்க...

    இந்தச் சுனை...ம்ம்ம் நினைவில்லை.

    படங்கள் அருமை...நெல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 8 பேர்கள் என்று நினைவு கீதா ரங்கன்.

      சுனை, பாதி வழியில் இருக்கிறது. மிகப் பெரிதாக இருக்கிறது. அங்கிருந்துதான் அபிஷேக தீர்த்தம் கொண்டு செல்வதுபோல் தெரிகிறது.

      நீக்கு
  12. சிற்பங்கள் அழகு.

    வாங்கன்னு சொல்ற சிற்பங்கள் கூடவே சொல்வது உள்ள நரசிம்மர் ...ஜாக்கிரதை மனசு!!!

    காட்சிகள் எல்லாமே அருமை, நெல்லை. அழகான ஊர் போனா குளிர்காலத்துலதான் போணும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகான ஊர் போனா குளிர்காலத்தில் போகணுமா? எந்த ஊருக்குச் சென்றாலும் வெயில் காலத்தில் போனால் (நம்ம சென்னை மாதிரியான வெயில்) ஒரே கச கச...எதையும் அனுபவிக்க முடியாது. பிரயாணமே தலைவலியாகப் போய்விடும்.

      நீக்கு
  13. 12 மணிக்கு வந்துதான் உணவா ஆ ஆ மயக்கம் எனக்கு. ஹாஹாஹாஹா

    கடலைமா பாயாஸம் ஆஹா! சிம்பிள் ஆனா நல்லாருக்கும். உங்களுக்குப் பிடிச்சிருக்காதே!!! அது செய்வதைப் பொருத்து.

    பாதாம் கீர் என்று பருப்பு அதிகம் போட முடியாதவங்க இப்படிச் செய்வதுண்டு. கொஞ்சம் பருப்புகளை சிறிய துண்டுகளாக நெய்யில் வறுத்துப் போட்டு கடலைமாவை நெய்யில் வறுத்து (கொஞ்சம் தாராளமாகவே நெய் வேண்டும்) கரைத்து செய்யவதுண்டு. அதில் குங்குமப்பூ இருந்தால் போட்டால் நல்லாருக்கும். சர்க்கரை பால் கலந்து அல்லது கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்த்தால் நல்ல சுவையா இருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலையில் சிறிது சாப்பிட்டால், அடுத்த அரை மணி நேரத்தில் குளிக்கச் செல்லவேண்டும். மதியம் சாப்பிடுவது கடினம். அதனால தேவைப்படுபவர்கள் பிஸ்கட் பாக்கெட் எடுத்துக்கோங்க என்று சொல்லிவிட்டார்கள்.

      'குங்குமப் பூ' போட்டால் நல்லா இருக்கும் - கிழவிக்கு எதுக்கு பட்டுக்குஞ்சலம் என்று மனதில் தோன்றியது. கடலைமா பாயசமே (ஜீனி போட்ட ரவா பாயசம் போன்று) பாயச வகையில் கிடையாது, பானக வகை அல்லது கஞ்சி என்பது என் கட்சி.

      நல்ல பாயசம் என்றால், அரிசி கடலைப்பருப்பு போட்ட வெல்லப் பாயசம், அக்கார அடிசல், நெய்யில் வறுத்து முறையாகச் செய்யப்படும் சேமியா + ஜவ்வரிசி பாயசம்தான்.

      நீக்கு
  14. வானரங்களை ரசித்தேன். அப்படியே கண்டுக்காம போய்விட வேண்டும் குறிப்பாக அவர்களின் கண்ணைப் பார்க்கக் கூடாது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதனால் அப்படி? கண்களைப் பார்த்தால் நம்மைத் தொடர்ந்து வந்துவிடுமோ (பூர்வ ஜென்ம வாசனை அறிந்து?). அல்லத் கண்ணைப் பார்த்தால் அதற்குக் கோபம் வருமா?

      நீக்கு
  15. வழக்கம் போல் படங்கள் அழகு. நம் முன்னோர்களில் சிற்பக் கலைத் திறமையை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இங்கெல்லாம் பரவாயில்லை. இதே தமிழ்நாடாக இருந்திருந்தால் சிற்பங்கள் கை,கால் உடைஞ்சு, மலையில் எழுதி அல்லது ஏதேனும் வரைந்து இது எங்கள் புராதனமான மலைனு சொல்லி உரிமைக்குரல் கொடுத்துக் கொண்டு வருவாங்க. நாமும் ஈ என இளித்துக் கொண்டு நடுநிலை வகிக்கிறேன் பேர்வழினு மலையைத் தூக்கிக் கொடுப்போம் அச்சரபாக்கம் மாதிரி. இப்போச் சென்னி மலை. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கும் மாற்றங்கள் மெதுவாக வர நினைக்கின்றன. இது பற்றி விளக்கமாக எழுத முடியவில்லை. இருந்தாலும் அரசு மற்றும் தொல்லியல் துறை, பாதுகாக்கிறது. அரசியல் தலையீடுகள்தாம் பாரம்பர்யமும் கலாச்சாரமும் சீரழிவதற்குக் காரணம்.

      அஹோபில மலையில் உள்ள கோயில்கள் எல்லாம் அஹோபில மடத்திற்குச் சொந்தம் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்தபிறகு, ஆந்திர அரசு உண்டியல் பணத்தை தங்களின் உபயோகத்திற்கு எடுத்துக்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டிருக்கிறது. திருப்பதியிலும் ஏகப்பட்ட தலையீடுகள்.

      நீக்கு
  16. நாளைக்கு தி/கீதாவின் புளிக்காய்ச்சல் தொடர்கிறதோ?

    பதிலளிநீக்கு
  17. மேல்கோட்டை யோக நரசிம்மர் தரிசனம் கிடைத்தது. படங்கள் எல்லாம் மிக துல்லியம். அழகான கல்யாணி புஷ்கரணி.

    மலையில் அமைந்து இருக்கும் நீர் நிலை அருமை, யோகநரசிம்மர் ஆலயத்துக்கு திருமஞ்சனம் நீர் எடுத்து போகும் இடம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம். கல்யாணி புஷ்கரணி ரொம்பவே நன்றாக இருக்கிறது. (ஆனாலும் நீர் நிலைகளில் பழைய துணிகளைப் போடுவது நின்ற மாதிரி தெரியவில்லை)

      நீக்கு
  18. படிகளில் ஏறும் போது தெரியும் கோபுர படம், குரங்கார் படங்கள், கோவிலுகுள் போகும் முன் வரவேற்கும் ஆடல் மகளிர் சிலைகள், மலை மேல் இருந்து எடுத்த அழகான சமவெளி காட்சிகள் ,மற்றும் செல்வப்பிள்ளை உற்சவர் வீதி உலா காட்சிகளும் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அரசு மேடம். ரொம்பவே மனதை ஈர்க்கும் இயற்கை மற்றும் கோவில் சூழல்.

      நீக்கு
    2. குறைகளையும் எழுதணும். திருவிழா காலம் என்பதால் பக்தர்களிடம் பணம் எதிர்பார்ப்பதும், பக்தர்களும் தாராளமாகத் தருவதும் நிகழ்கிறது. இதில் சிறிது ஒழுங்குமுறை இருக்கவேண்டும் என்பது என் எண்ணம். இல்லாவிடில் எதிர்காலத்தில் பணம் படைத்தவர்களுக்குக் கோவில் என்றாகிவிடும்.

      நீக்கு
  19. படங்கள் துல்லியம். என் பயண அனுபவங்கள் மனதில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் எத்தனை முறை மேல்கோட்டை சென்றிருக்கிறீர்கள்? நான் சாதாரண நாட்களில் ஒரு முறை செல்ல நினைத்திருக்கிறேன்.

      நீக்கு
  20. 14 வருடங்களுக்கு முன் சென்ற பொழுதும் தற்பொழுது செல்லும் பொழுதும் இந்த படிகளில் எந்த வேறுபாடும் இல்லை.

    அப்பொழுது எப்படி இருந்ததோ அப்படியே இருக்கின்றன.

    ஆனால் பல கோவில்களில் நிறைய மாற்றங்கள் உண்டு இங்கு எந்த மாற்றமும் இல்லை.
    இருப்பினும் இப்படிகள் எங்களுக்கு பெரியதாக தெரிவது இல்லை இதுவரை ஐந்து முறைக்கு மேல் சென்று இருப்பினும் இன்னும் செல்ல வேண்டும் என்ற ஆசையே வருகிறது..


    அருமையான படங்களுடன் சிறப்பான பதிவு சார் ..மிக ரசித்தேன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!