வியாழன், 19 அக்டோபர், 2023

நானும் நானும் ..

இப்போதும் மார்க்கெட்டில் இந்த வண்டி கிடைக்கிறதா என்று தெரியவில்லை.  சைக்கிள் வைத்திருந்தவர்கள் இதன் சகாய விலை, சரசமான தோற்றத்தில் மயங்கினார்கள்.

மொபெட் என்கிற நாமகரணமே அப்போதுதான் வந்தது என்று நினைக்கிறேன்.  லூனா என்கிற ஒரு வண்டியும் அப்போது மார்க்கெட்டில் இருந்தது என்பதை பேஸ்புக்கில் நினைவுபடுத்தி இருந்தார்கள்.

லிட்டருக்கு மினிமம் 70 கிலோமீட்டர் ஓட்டம் தரும்;  பெட்ரோல் தீர்ந்தால் கூட நீங்கள் சைக்கிள் மாதிரி பெடல் பண்ணிக்க கொண்டு வந்து விடலாம் என்றார்கள்.  சைக்கிள் அளவு எளிதாக பெடல் செய்ய முடியாது, யாரும் செய்ததில்லை என்றாலும், சட்டென அருகில் இருக்கும் பெட்ரோல் பங்க் வரை மெல்ல பெடல் செய்து கொண்டு சென்று விடலாம் என்பது ஒரு மெல்லிய கவர்ச்சியைக் கொடுத்ததுதான்.

முதலில் ஒருவர் மட்டும் பயணம் செய்யும் வகையிலும், அப்புறம் இருவர் அமர்ந்து பயணம் செய்யும் வகையிலும் தயார் செய்து விற்றார்கள்!

அப்போது என்ன விலை விற்றார்கள் என்று சரியாய் நினைவில்லை.  சைக்கிளை விட சற்றே - சற்றுதான் - அதிகம்.

இந்த வண்டியின் விலை பற்றியும் ஒருவர்  பேஸ்புக்கில் குறிப்பிட்டிருந்தார்.  2498 ரூபாய்.

நாங்களும் அண்ணனுக்காக இப்படி ஒன்று வாங்கலாம் என்று சென்றபோது அப்போது மார்க்கெட்டுக்கு புதிதாய் வந்திருந்த அவந்தி (அகராட்டி) கரேலி என்கிற வண்டியை வாங்கி கொண்டு வந்தோம்.  சாதாரணமாகவே நாம் வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு செல்லும் கம்பெனி பொருளை விடுத்து வேறொன்று வாங்கி வருவது பெரும்பாலும் வழக்கம்.  விற்பனையாளர்கள் திறமை.  அவந்தி கரேலி பத்தாயிரமோ, பதின்மூன்றாயிரமோ என்று நினைவு.  அதுவும் இப்போது மார்க்கெட்டில் இருக்கிறதா என்று தெரியவில்லை.  நாங்கள் மதுரை டவுன்ஹால் ரோட்  AVRSPVP&V  கடையில் வாங்கினோம் என்று நினைவு.

பள்ளியில் படித்த காலங்களில் சைக்கிள் வைத்திருந்ததே ஒரு பெரிய மேல்தட்டு கெளரவம்.  ஏனெனில் அப்போது அலுமினியப்பெட்டியில் புத்தகங்களைக் கொண்டு வருவோர், பென்சில் பாக்ஸ் வைத்திருப்போர் கூட கொஞ்சம் மேலிடத்து மத்திய வர்க்கம்.  நானெல்லாம் காத்துவைத்த சற்று கெட்டியான துணிப்பையில்தான் புத்தகம் எடுத்துக் போவேன்.  யானைக்கலர் பை.   அதில் இரண்டு பக்கமும் பெரிய ரோஜா வரைந்து, வளைவாக 'மலர்ந்த முகமே' என்று ரோஜாவின் மேல்பகுதியிலும், 'வாழ்க்கையின் இன்பம்' என்று ரோஜாவின் கீழ் பகுதியிலும் எழுதி இருக்கும்!

ஸ்கூலுக்கு நடந்து செல்லும்போது சைக்கிளில் தாண்டிச் செல்வோரைக் கண்டால் நமக்கும் சைக்கிள் வாங்கும் ஆசை தோன்றும்.  அவ்வளவு வசதி எல்லாம் இல்லாத காலம்.  'சும்மாதானே போகிறான்..  நம்மை ஏற்றிக்கொண்டு போனால் என்ன' என்று தோன்றும்.  'நான் சைக்கிள் வாங்கினால் நடந்து செல்லும் நண்பனை ஏற்றிக்கொண்டு செல்வேன்' என்று மனதில் எண்ணிக் கொள்வேன்.

சைக்கிள் கற்றுக்கொண்ட அனுபவம் பற்றி பலமுறை எழுதியாச்சு!  ஆக, சைக்கிள்கடை குமாருக்கு நன்றியுடன் சைக்கிளும் ஒட்டக கற்றுக்கொண்டாச்சு!

அண்ணனின் நண்பர் தியாகராஜன் - ராஜு வின்  சைக்கிள் என் உபயோகத்துக்கு என்று கிடைத்தபோது (அவர் அப்பா நல்ல உயரம் என்பதால் இருக்கை சற்றே உயரத்தில் அமைக்கப்பட்டு, உயரமான சைக்கிள்) முதல் ஓரிரண்டு நாட்கள் அப்படி அழைத்துச் செல்லவும் முற்பட்டேன்.  அப்படி அழைத்துச் சென்றவர்கள் அனைவரும் என் சைக்கிளில் வர நிரந்தர உரிமை கொண்டாட முற்பட்டபோது நண்பர்க்ளோடு சுமுகமாக பழக சிரமப்பட்டு போனேன்.  ஒருவனை அழைத்தால் அடுத்தவனுக்கு கோபம்.  இன்னொருவன் இரண்டு நாள் பேசமாட்டான்.  மற்றொருவன் நிரந்தரப் பகையாவான்!

போகப்போக நானும் நடந்து செல்லும் நண்பர்களை சத்தமின்றி தாண்டிச் செல்லும் வழக்கம் வரப்பெற்றேன்!

அப்போது கியர் சைக்கிள் என்று ஒன்று கண்ணில் படத் தொடங்கியது.  நம் ராசி..  நாம் ஒரு வழியாக அப்போதைய நாகரீகத்தில் நுழையும்போது அது அடுத்த கட்டத்துக்கு சென்றிருக்க, நாம் எப்போதும் ஒரு படி பின் தங்கியவர்களாகவே இருப்போம்!

கியர் சைக்கிளில் செயின் அமைப்பில் மாற்றம் செய்திருப்பார்கள்.  கியர் மாற்றி இரண்டு மிதி மிதித்தால் இருபது மிதிகளுக்கு சமமான தூரத்தை எளிதில் கடக்கும் வண்டி!

அந்த வகையில் இந்த கியர் சைக்கிள் மனதை அரிக்கத்தொடங்க, கூடவே இன்னொன்றும் அறிமுகமானது.  சைக்கிளில் ஒரு சிறு மோட்டார் பொருத்தி பெட்ரோல் ஊற்றி,  கால்களால் சிரமபப்ட்டு மிதிக்கவே தேவை இல்லாமல் பயணம் செய்வது.

இப்படி மோட்டார் பொருத்திக் கொள்ள குறைந்த செலவே ஆகும் என்றும் சொல்லப்பட்டது.  சிறுசிறு மாற்றங்கள் வண்டியில் செய்ய வேண்டி இருக்கும் என்றார்கள்.  அதற்கு ஒரு தொகை தேவைப்பட்டது.

ஆனால் அந்தப் பக்கமெல்லாம் செல்லாமலேயே நான் சாதாரண சைக்கிளிலேயே வளைய வந்தேன்.  தஞ்சாவூரை விட்டு வரும்போது ராஜுவிடம் அவர் சைக்கிளை ஒப்படைத்து விட்டு, மதுரை வந்து கொஞ்ச நாட்களில் அப்பா ஒரு ராலி புது சைக்கிள் வாங்கித் தந்தார்.  ஆபீஸ் லோன்! குஞ்சம் வைத்த ஹேண்டில் பார்!  அந்த சைக்கிளில் அப்பா என்னை டிரைவராக வைத்து ஆபீஸ் முதல் பல வேலைகளுக்கு அழைத்துப் போக வைத்திருக்கிறார்.

வாராவாரம் அண்ணனுடன் (அண்ணன் சைக்கிள் ஓட்டமாட்டார்...  நான்தான் டிரைவர்) சந்தைக்குப் போய் காய்கறி வாங்கி வருவது, மளிகைக்கடை போய் மாதாந்திர மளிகை வாங்குவது, கரிக்கடை போய் அடுப்புக்கரி வாங்குவது  தங்கையை பள்ளியில் விடுவது..  இப்படி வேலைகள் விரிந்தன.

இதில் அண்ணனுடன் போன வேளைகளில் அண்ணனை கட் செய்தேன்.  எதற்கு எக்ஸ்டரா சுமை?  சந்தைக்கும், மளிகைக்கும், அடுப்புக்கரி வாங்கவும் நான் மட்டுமே போய்வரத் தொடங்கினேன்.  சுமை குறைந்தது.  கூடுதல் லாபம் கமிஷன்.

நண்பர்களுடன் ஊர் சுற்றவும், சினிமாக்கள் செல்லவும் சைக்கிள் என் சொந்தமானது.  மதுரையில் நுழையாத சந்ததில்லை.  போகாத தியேட்டர் இல்லை - ராம் தியேட்டர் தவிர!

அந்த சமயத்தில்தாங்க இந்த ஸுவேகா அறிமுகமானது.  பேப்பரில் விளம்பரங்கள் தூள் பறந்தன,   மோட்டார் பைக், ஸ்ப்ளெண்டர் என்றெல்லாம் கனரக இருசக்கர வாகனங்கள் விற்பனையாகிக் கொண்டிருந்த நேரத்தில், ஜெயராஜ் ஓவியம் போல்  ஒரு மெல்லிய எளிய தேவதையாக அறிமுகமானது ஸுவேகா.  பைக்குடன் ஒப்பிடுகையில் கொசுவை மைக்ராஸ்க்கோப்பில் பார்ப்பது போல தோற்றம்.  லிட்டருக்கு 70 கிலோமீட்டருக்கு மேல் மைலேஜ் கொடுக்கும் என்கிற கவர்ச்சி.  விலையோ மிக சகாயம்.

கொஞ்ச நாள் கழித்து அதிலேயே டபுள்ஸ் அடிக்கும் அளவும் கொஞ்சம் முன்னேறிய சைஸில் வெளிவந்தது ஸுவேகா ப்ளஸ்.

அண்ணன் வெளியூரில் கொஞ்சம் அலைச்சல் பிடித்த வேலை பார்த்துக் கொண்டிருந்ததால், அப்பா அண்ணனுக்கு இந்த வண்டி வாங்கி கொடுக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது..

நமக்குதான் ஒரு வழக்கம் உண்டே...  விளம்பரங்களை பார்த்து அலசி ஆராய்ந்து நாம் வாங்கப் போகும் ப்ராண்ட் ஒன்று, கடைக்குச் சென்றதும் விறபனையாளர்கள் போடும் வாய்ப்பந்தலில் நாம் வாங்கும் ப்ராண்ட் வேறொன்று.

அது போல நாங்கள் வாங்கியது ஈ சைஸில் இருந்த அவந்தி (அகராதி) கரேலி என்கிற வண்டி.  சற்றே பலமான வண்டி.  நீண்ட நாள் அண்ணன் கையிலும், கொஞ்ச நாள் என் கையிலும் இருந்தது அந்த வண்டி.  கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்ட போது பஸ்கள் ஓடாததால் மதுரையிலிருந்து வத்திராயிருப்பு வரை இந்த வண்டியிலேயே அலுவலகம் சென்று வந்திருக்கிறேன்.

சமீப காலங்களில் சாலையில் இந்த வண்டிகள் இரண்டும்  என் கண்ணில் பட்டதில்லை 

==================================================================================================

இரண்டு நாட்களுக்கு முன் வரும் வழியில் கடும் வெயிலில் (பனிமழையில் அல்ல!) கண்ணில் பட்ட லட்ச ரூபாய்க்கு மேல் பெறுமானமுள்ள பைக்!


=========================================================================================

ஏகாந்தமாய்.....


சாய்வாலா நஹி ஆயா .. அபி தக்?

ஆரம்பத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்ட டெபார்மெண்ட்டின் செக்‌ஷன் ஒன்றில், என்னோடு 15 பேர் இருந்தார்கள். நான் மற்றும் ஒரு மலையாளி நண்பன் இருவர் மட்டுமே சௌத் இண்டியன்ஸ்! (தெற்கின் எந்த மாநிலத்திலிருந்து யார் வந்திருந்தாலும், பொதுவாக அவர்களை மதராஸி என்று குறிப்பிடுவது வடக்கத்தி மந்தங்களின் வழக்கம்.)  மற்றவர்கள், இரண்டு மத்திம வயது பெண்கள் உட்பட- வடக்கத்திக்காரர்கள். உள்ளூரான டெல்லி, பக்கத்து மாநிலங்களான பஞ்சாப், உ.பி., ஹி.பி., ஹரியானா, பீஹார், ஒரிஸா மற்றும் வங்காளம் ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள்! பொதுவாக இவர்கள் டெல்லியில் பிறந்து வளர்ந்த டெல்லிவாசிகள்தான். இருந்தும், ஒரு விதமான மினி இந்தியா உணர்வு அங்கிருந்தது.


அலுவலகத்தின் காலைப் பொழுது பெரும்பாலும் அதிமும்முரமாகவே இருந்தது. மதியத்தில் வேலையின் அவசரத்தன்மை குறைந்து, மந்தமாய்ச் செல்லும். செக்‌ஷன்களில் இப்போது போன்ற கம்ப்யூட்டர்கள், ஃபோட்டோ காப்பியர்கள் இல்லாத கற்காலமது. காரிடோரில் திரும்பி, மேற்கொண்டு நடந்து ஆஃபீஸ் ரூமை நெருங்கும்போதே டைப்ரைட்டர்களின் சொட் சொட் சத்தம் வரவேற்கும். ஹால்டாக்கள், ரெமிங்க்டன்கள் அதிரடி காட்டிய காலம்.  பின்னர் ஃபாசிட் (Facit) என்றொரு டைப்ரைட்டரும் ஆஃபீஸுக்குள் நுழைந்திருந்தது. சீட்டில், டேபிளில் பாதியை டைப்ரைட்டரும், ஃபைல் ட்ரேயும் அடைத்துக்கொண்டிருக்கும்.

பக்கத்தில் சுவரை ஒட்டி ஆளுயரத்திற்கும் மேலே நின்றன கரும்பச்சை நிறத்தில் கோத்ரெஜ் அல்மைராக்கள். சற்றே குட்டையான, ஸ்லிம்மான ஒரு கோத்ரெஜ் ஃபைலிங் கேபினட். சில க்ளாசிஃபைட் ஃபைல்களை எடுத்து ரெஃபர் பண்ணிவிட்டு அதற்குள் வைத்து மூடிவிடுவோம். (சிலர் மட்டுமே இதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.)  காலைவேளையில் சுறுசுறுப்பு காட்டும் டைப்ரைட்டர்கள், மாலையில் சோர்ந்து போய் முணுமுணுத்து முடங்கிவிடும். கடுங்கோடைக் காலத்தில் (ஏப்ரல்- ஆகஸ்ட்) வியர்க்க விறுவிறுக்க ஆஃபீஸுக்கு வந்து, முகத்தைத் துடைத்துக்கொண்டு சீட்டில் உட்கார்ந்து, ஃபைல்கள், பேப்பர்களைப் பரப்பிக்கொண்டு வேலையை ஆரம்பிக்கவே பிரயத்தனம் தேவைப்படும். ஜன்னல்களில் வெளிப்புறமாகப் பொருத்தப்பட்டிருந்த பெரிய டெசர்ட் கூலர்கள் (Desert coolers) பெரும் இரைச்சலையும், போனால்போகிறதென ஏதோ கொஞ்சம் குளிந்த காற்றையும் உள்ளே விசிறி அடிக்கும். இவை பொருத்தப்படாவிட்டால் டெல்லியின் உலர்ந்த கோடையில் வெறும் சீலிங் ஃபேன்கள் தரும் சுடுகாற்றில் உள்ளே உட்கார்ந்து வேலை செய்ய இயலாது. 

என்ன இது? இத்தனை பெரிய அமைச்சகத்தில் ஏசி போன்ற வசதியெல்லாம் இல்லையா என்று அசடுமாதிரி கேள்வி எழுப்பக் கூடாது. இங்கே குறிப்பிடப்படுவது 80-களின் காலகட்டம். நம்ம நாடு அப்போது, நார்த் கொரியா, வியட்னாம், போலந்து போன்று, ஒரு கம்யூனிஸ்ட் தேசத்தின் தராதரத்தில்தான் இயங்கிவந்தது. அவ்வளவுதான் முடிந்தது அதாலே.  அதாவது அடிப்படைத் தேவைகளுக்கே மக்கள் இடிபட்ட காலகட்டம். 'பொருளாதார வசதியா.. அப்படீன்னா?'- என்ற கேள்வியை யாரும் அப்போது கேட்க முயன்றதில்லை. வாய்த்திருந்த வாழ்க்கைக்கேற்றபடி, வசதிக்கேற்றபடி ஏதோ இருந்தார்கள் - உடுத்தினார்கள். கிடைத்ததை சாப்பிட்டார்கள்.

டெல்லி போன்ற நகரங்களில் சர்க்கார் வேலை கிடைத்ததிலேயே பலருக்கு திருப்தி, ஆசுவாசம் இருந்தது. ஜாப் செக்யூரிட்டி பற்றி, படித்த ஜனங்கள் பேசிவந்த காலமது. சொற்ப காசு செலவில், அரசாங்க பஸ்களில், சாதாரண பாசஞ்சர் ட்ரெய்ன்களில் பயணித்து ஆஃபீஸ் வந்ததில், வேலை செய்து வீடு திரும்பியதில் திருப்திப்பட்டுக்கொண்டிருந்தார்கள். அத்தகைய சோஷலிச வாழ்வியலின் ஆதிக்கத்தில், பற்றாக்குறைப் பொருளாதாரத்தில்…  ஏசியாவது, கீசியாவது. சீனியர் ஆஃபீஸர்களின் ரூம்களுக்கு மட்டும்தான் ஏசி. மற்ற அலுவலகங்கள், செக்‌ஷன்களில் டெசர்ட் கூலர்கள், சீலிங், பெடஸ்ட்டல் ஃபேன்களே ஓவர்டைம் பார்த்து, நிலைமையை சமாளித்துக்கொண்டிருந்தன. குளிர்காலத்தில், அதிகுளிரை சமாளிக்க தரையில் அமர்த்தி வைக்கப்பட்டிருந்த ரூம் ஹீட்டர்கள் ரூமுக்குள்ளே கொஞ்சம் கதகதப்பைத் தரும். இவை எல்லா செக்‌ஷன்களிலும் காணப்பட்டன..


லஞ்ச்சிலிருந்து திரும்பி 2 மணிக்குத்தான் சீட்டில் உட்கார்ந்திருப்பார்கள்  கொஞ்சம் பேப்பர்களைப் புரட்டியிருப்பார்கள். 2 ¾-க்கே சாய் (டீ) ஞாபகம்
வந்துவிடும் நம்ம பிரஹஸ்பதிகளுக்கு. "சாய்வாலா அப் தக் நஹி ஆயா!" – (டீ-க்காரன் இன்னும் வரலியே) என்று கண்கள் வாசல் பக்கம் அடிக்கடி தாவும். சாய்வாலாவின் தாமதத்தினால்தான் வேலை மந்தமாகிவிட்டதாக காண்பிக்க எத்தனிப்பார்கள் சிலர்! மஞ்சள், மசாலா கறைபட்ட வெள்ளை சீருடையில் எங்கள் டெபார்ட்மெண்ட் கேண்ட்டீன்காரன் பஹதூர், இந்திய நேப்பாளி(!) இளைஞன் தலையில் ஒரு பெரிய அலுமினிய ட்ரே, கையில் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்ப்ரெஸ் ட்ரெய்ன்களில் கொண்டுவருவதுபோன்ற ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் சாய் (Chai) ட்ரம்முடன் 3 மணிக்கு செக்‌ஷனுக்குள் நுழைவான். அவனது அகல ட்ரேயில் கரம்..கரம் சமோஸா, வடா (வடை), மில்க் பர்ஃபிக்களோடு சில சமயங்களில் சின்னதாக குலோப்ஜாமுன்களும் கவனத்தைத் திருப்பும். டீ, ட்ரம்மில் சூடாக இருக்கும். கேட்டாலும், கேட்காவிட்டாலும் எல்லோர் சீட்டிலும் ஒரு பழுப்புநிற சாய் மக்கை நிரப்பி வைத்துவிடுவான் பஹதூர்.


சமோஸா, ஸ்வீட் சங்கதிகள் வேண்டுமா என்று கேட்டு, ஆசைப்பட்ட சிலரின் சீட்டில் வைப்பான். அதற்கான சில்லரைக்காசு வாங்கி தன் ஜாக்கெட் பையில் போட்டுக்கொள்வான். மேலும் யாருக்கும் எதுவும் தேவையா என்று கேட்டுக்கொண்டே செக்‌ஷனின் மூலைமுடுக்களிலும் ஒரு ரவுண்டு வருவான். டீயை குடித்துக்கொண்டே சிலர் ’பேகார் சாய்! (Bekaar chai)’ (டீ..படுமோசம்) என்று அவனுக்கு முன்னேயே உரக்கச் சொல்வார்கள்.

தெற்கே சி.என்.அண்ணாத்துரை சீனில் வருமுன்பிருந்தே, இங்கே வடக்குப் பிராந்தியத்தில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடே வாழ்வுநெறியென வாழ்ந்து வந்தவன் பஹதூர். கேலி, விமர்சனம் போன்றவைகளை அவன் காதுகள் கேட்டதே இல்லை! முகபாவத்தில் எந்த மாறுதலையும் வெளிப்படுத்தாது, காரியம் முடிந்ததும் ட்ரே, ட்ரம்முடன் அமைதியாக வெளியேறிவிடுவது அவனது வழக்கம்.

மாதக் கடைசி நாளன்று பொதுவாக சம்பள நாளாக அமையும். மதியம் 2-3 மணிவாக்கில் கைகளில் சம்பளக் கவரும் (உள்ளே ரூபாய் நோட்டுகளும்,
காசுகளும் துல்லியமாக), முகத்தில் பிரகாசமுமாக அலுவலக மனிதர்கள் புத்துயிர்பெற்று அங்குமிங்கும் உலவிக்கொண்டிருப்பார்கள்.  அப்போது செக்‌ஷனுக்குள் வரும் பஹதூருக்கு தனி வரவேற்பு இருக்கும். அவன் வழக்கம்போல் இதையெல்லாம் கவனித்ததாகக் காட்டிக் கொள்ளமாட்டான்.

ஆளுக்கொரு ஸ்வீட் அல்லது சமோஸா, வடை என்று கொஞ்சம் தாராளமாக உள்ளே தள்ளி சாய் அருந்துவார்கள்.

அந்த மாத இறுதியில் எங்கள் செக்‌ஷனிலிருந்து ஒரு சீனியர் மாற்றலில்
ரிலீவ் ஆகியிருந்தார். (ஸ்டாஃப், ஆஃபீஸர்கள் என்று அடிக்கடி மாற்றலாகும் ஒரே மினிஸ்ட்ரி வெளியுறவுத் துறைதான். இவ்வளவு ட்ரான்ஸ்ஃபர்களை வேறெந்த அமைச்சரவையிலும், டெபார்ட்மெண்ட்டிலும் பார்க்கமுடியாது) அன்று அவர் எங்களோடு சம்பளம் வாங்கியதோடு, செக்‌ஷனில் உட்கார்ந்து 'ஆராம்ஸே' அரட்டை அடித்துக்கொண்டிருக்கையில், கேண்டீன் சாய்வாலா வந்துசேர்ந்தான்.

மூலை சீட்டில் அமர்ந்திருந்த, கழுப்புணி கமல் ஜுனேஜா அவனைக் கூப்பிட்டு மெதுவாக “எல்லோரோட சீட்டிலும் ஒரு பர்ஃபி, சமோசா, சாய் வச்சிட்டு வா!” என்றான். எதையும் யோசிப்பது, அல்லது ஆச்சர்யத்தைக் காண்பிப்பது எல்லாம் நம்ம பஹதூரிடம் இல்லாத குணம். சொன்னவாறே செய்தான். ராகேஷ் குப்தாவிற்குப் பக்கத்தில் அமர்ந்து எதையோ சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்த, ட்ரான்ஸ்ஃபரில் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்த கே.எல்.மாலிக்கிற்கும் ஒரு பேப்பர் தட்டில் பர்ஃபி, சமோஸாவுடன், கப் 'சாயு'ம் கிடைத்தது. 


ஆனந்தமாக எடுத்துக்கொண்டு, கரம் சாயை உறிஞ்சிக்கொண்டிருந்தார் மாலிக்.  சற்று நேரத்தில் பஹதூர் ஜுனேஜாவிடம் சென்று ”எல்லாத்துக்கும் சேத்து பைசா தேதோ! நான் போகணும்!” என்றான். ஜுனேஜா அவனுக்குக் கைகாட்டிவிட்டு சத்தமாக, “இன்னிக்கு ஸ்வீட், நம்கீன், சாய் நம்ம மாலிக் சாஹிப்பிடமிருந்து! அதோ ஒக்காந்திருக்காரே அவர்ட்டபோய் பைசா வாங்கிக்க.. போ!” என்று திருப்பிவிட்டான். திடுக்கிட்ட மாலிக் “அர்ரே பாய்! எங்கிட்ட கேட்கக்கூட இல்ல.. நீங்களாவே… !” என்று அழாத குறையாக ஆரம்பிக்க, ராகேஷ் குப்தா சொன்னான்: ”இத்னா படா போஸ்ட்டிங் மிலா ஹை! லண்டனுக்கு ட்ரான்ஸ்ஃபர்ல போறீங்க மாலிக்ஜி.. இந்த கேண்ட்டீன் பில்லப் பத்தியெல்லாம் யோசிக்கலாமா.. இதெல்லாம் ஒரு விஷயமா !” என்றான். மற்றவர்களும் சேர்ந்து “குஷியா பஹதூர்ட்ட காசக் கொடுங்க மாலிக் சாஹிப்! லண்டன் போஸ்ட்டிங்கிற்கு வாழ்த்துக்கள்!” என்று சத்தமாக ஒத்து ஊதிவிட்டனர்!  வேறுவழியின்றி காசைக் கொடுத்துவிட்டு கொஞ்ச நேரம் பேசிவிட்டுப் போனார் மாலிக். காஸ்ட்லியான சம்பள நாளாப்போச்சு அது, அந்த மனுஷருக்கு…!

**
=================================================================================================

படித்ததில் பிடித்தது..  இவரும் மறைமுகமாக கணவர் தன்னுடன் அதிகம் பேசியதில்லை என்று சொல்கிறார் பாருங்கள்.  பிரபலங்கள், அவர்தம் மனைவிகள்....!

கவிஞர் மீராவின் மனைவி இரா.சுசீலா ஒரு நேர்காணலில் சொன்னது..
“எனக்கு கல்யாணம் செய்யும் போது 16-17வயசு. அபூர்வமான மனிதர் என் கணவர். சோர்வில்லாதவர். நகைச்சுவையாளர். யாரையும் கடிந்து பேசமாட்டார். எல்லாருக்கும் தன்னாலான நல்லதை செய்யப் பிரயாசைப்பட்டவர்.
ருசித்து சாப்பிடுவார். அசைவ பிரியாணியும், மீன் குழம்பும் ரொம்ப இஷ்டம். காபி ரொம்பப் பிரியம். கேட்கறப்போவெல்லாம் தரணும். ஆசிரியர் போராட்டத்துல கலந்து கிட்டப்ப சிறைக்குப் போய் வந்த பெறகு, ‘அங்க சாப்பாடெல்லாம் எப்படி'ன்னு கேட்டதுக்கு, ‘பிரமாதம், வீட்டைவிடக் காபி நல்லாவேயிருந்துச்சு'ன்னார். (சிரிப்பு)
கடைசியா உடம்பு முடியாமப் போனபோது கூட, ‘பத்தியமாச் சாப்பிட்டு 100 வயசு வாழறதை விட, விருப்பமானதைச் சாப்பிட்டு எந்த வயசிலயும் போகலாம்' அப்படீம்பார்.
இராத்திரி படுக்க ரெண்டு மணியானாலும் விடியக்காலையில 4-5 மணிக்குள்ள எழுந்திடுவார். பேராசிரியர் வேலையிலயிருந்து ஓய்வு பெற்ற பெறகும் கூட, பதிப்பிக்கிற நூல்களுக்கு அச்சுப் பிழை சரி செய்யறது, பேப்பர், இங்க் மத்த பொருட்கள் வாங்கிட்டு வரது, படிக்கிறது, எழுதுறது, தேடி வர்ற நண்பர்கள் கிட்ட பேசறதுன்னு நாள் பூரா ஏதாவது செய்துகிட்டேயிருப்பார்.
தினம் தினம் பயணத்துக்கும், புத்தகக் கட்டுகளை சுமந்து எவ்வளவு தூரமும் நடக்கவும் அசராதவர். வெளியே போனா கடைசி வண்டியாவது பிடிச்சு ஊருக்கு வந்து வீட்டில் படுத்தாத் தான் அவருக்கு நிம்மதியாயிருக்கும்.
இப்பவும் ஊருக்குப் போயிருக்கார்... வந்துடுவார்ன்னு தான் நெனைச்சு நெனைச்சு, ஒரேயடியாப் போயிட்ட துக்கத்தைக் கரைச்சுக்கறேன். சிவகங்கையில எங்க வீட்டுல 30 வருஷமா ஒரு அம்மா வேலை பாத்துச்சு. இப்பவும் நான் ஊருக்குப் போனா அப்படித்தான் சொல்லும்... “ஐயா ஊருக்குப் போயிருக்கார்ம்மா... வந்துடுவார், கவலைப் படாம இருங்க.”
கவிக்கோ விருது வாங்க சென்னை போன போது, என் தம்பி கார்த்திகேயன் வீட்டில் திருவான்மியூரில் ஒரு மாசமிருந்தோம். தினமும் சாயங்காலமானா அப்துல் ரஹ்மான், மேத்தா, இந்தியா டுடேயிலிருந்த விஸ்வநாதன் எல்லாரும் இவரைப் பார்க்க வந்துடுவாங்க. என் தம்பி, இவர், அவங்க மூணு பேர் எல்லாருமா பீச்சுக்கு வாக்கிங் போயிட்டு 8.30 மணிக்கு மேல வீடு திரும்புவாங்க. அந்த ஒரு மாசமும் என்னோடவே அதிக நேரமிருந்தார். ரொம்ப சந்தோஷமாயிருந்தேன் அப்ப.
இவ்வளவு வேலை செய்தவரை, இவ்வளவு பேரோடு பேசியவரை நம்மோட ஒரு மணி நேரமாவது பேச வைக்க முடியாமப் போனோமேங்கற ஏக்கம் எப்பவுமிருந்துச்சு. அதுவும், ஜெயலலிதா கண்ணகி சிலையை பீச்சுல இருந்து அப்புறப்படுத்தினப்போ தீர்ந்துச்சு. ‘அப்படியென்ன அந்த சிலை மேல பயப்படும் படி'ன்னு கேட்டேன் அவரை. அதிசயமா, ஒரு மணி நேரத்துல சிலப்பதிகாரம் காப்பியம் முழுக்க எனக்குப் புரியுற விதமா பாடம் மாதிரி சொன்னாரு. அந்த ஒரு மணி நேரப் பேச்சு இப்பவும் நினைவிருக்கு எனக்கு. மறக்கவே முடியாது.
இப்ப, அவர் இல்லாத ஒரு குறைதான்... எது இருந்தும் அவர் இல்லாதது பெரும் குறைதான் எனக்கு.”
இணையத்தில் படித்தது  - நன்றி R கந்தசாமி ஸார்.

==============================================================================================

நானும் நானும் 


என்னுடனேயேதான் 
நான் 
இருந்தேன் 
மனப்போக்கை மற்றவர்களுக்காக 
மாற்றாமல் 
நான் நினைத்தபடி 
வாழ்ந்த காலங்களில் 
என்னுடனேயேதான் 
நான் இருந்தேன்.
ஆனால் இப்போது 
என்னுடன் இருந்த நானை 
தேடுகிறேன்.
கொஞ்ச நாள் முன்னால் 
கூட 
எனக்கு முன்னால் 
நான் 
நடந்து கொண்டிருந்ததைப் 
பார்த்தேன்.

========================================================================================

நியூஸ் ரூம் 
பானுமதி வெங்கடேஸ்வரன் 

- இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து துவங்கியது. தமிழ் நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து, ஸ்ரீலங்காவின் காங்கேசன்துறைக்கு கப்பலில் பயணிக்கலாம். இதன் மூலம் இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம், சுற்றுலா போன்றவை பெருக  வாய்ப்புகள் அதிகம்.

- 2036 ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகளை இந்தியா ஏற்று நடத்தும் - பிரதமர் மோடி உறுதி.

- தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்து விட்டன. கட்டுமான பணிகள் இரண்டு வருடங்களில் முடிவடையும். இவ்விடம் சிறிய ரக ராக்கெட்டுகளை ஏவ உதவியாக இருக்கும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.

- அமெரிக்க விசா விதிகள் மாற்றம், இந்தியர்களுக்கு பலன் கிடைக்கும். அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை என்னும் 'க்ரீன் கார்ட்'டுக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் 18லட்சம் பேரில் இந்தியர்கள் 63 சதவிகிதமாம். அடுத்த இடத்தில் சீனா உள்ளது.

- 375 நாட்கள் விண்வெளியில் இருந்து விட்டு பூமிக்கு திரும்பியிருக்கும் விண்வெளி வீரர் கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக் திரும்பிக் கொண்டிருஙக்கிறார். 

- இஸ்ரேல், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கிடையே நிலவும் யுத்தத்தில் பிரான்ஸ் இஸ்ரேலை ஆதரிக்கிறது. இதையடுத்து அங்கிருக்கும் லூவ்ரே அருங்காட்சியகத்திற்கு ஆபத்து என்று எச்சரிக்கை அறிவிப்பு வந்ததால் பாரீஸில் இருக்கும் லூவ்ரே அருங்காட்சியகம் மூடப்பட்டது.

==================================================================================================

                                      பொ  க்  கி  ஷ  ம்  ..  ..  ..

குலுக்கலின் காரணம் வண்டியா, சாலையின் தரமா?

முன்னர் எங்களிடமும் இந்தப் பழக்கம் இருந்தது..


வயசான காலத்துல லொள்ள பாரு!


அட, அரை ஸ்பூன் சாப்பிடலாம் இல்லே?

ஜோதி தியேட்டர் தூண் பின்னால உட்கார வைக்கணும் இவரை!

75 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. மொபெட்கள் பலவும் காணாமல் போனாலும் TVS 50 XL மட்டும் தற்போதும் மார்க்கட்டில் உள்ளது. போட்டி M80 தற்போது இல்லை.

    அலுவலக ஊழியர்கள் மற்றும் அலுவலகம் வேலை செய்வது யாருக்காக என்பதே புரியாது. வேலை வேலை என்று மாய்வார்கள். அந்த வேலைகளால் என்ன பயன் ஏற்பட்டது என்று யாருக்கும் தெரியாது.

    பாட்டுக்கு பாட்டு.

    நானும் நானும் வேறாகியதோ
    என்னில் இருந்து
    நான் பிரிந்தால்
    எப்படி நான்
    நானாக முடியும்.
    நானும் நானும்
    ஒன்றாவோம்
    நன்றாவோம்.

    பொக்கிஷ ஜோக்குகள் அருமை. அதிலும் எலும்பு ஜோக் மிக அருமை.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  பதிவில் வெளியிட்டிருக்கும் ஜாவா பைக்கின் பின்னால் கூட நிற்கிறது பாருங்கள்.

      யாருக்கு என்று தெரியாமல் இருக்குமா?  அன்றாட நடைமுறை வேலைகள் நடக்க அரசு யந்திரத்தின் பற்கள்!

      பாட்டுக்குப் பாட்டு ஓகே.  ஆனால் சென்ற வாரம் அந்தப் அப்படத்துக்கு நீங்கள் ஏன் ஒரு கவிதை முயற்சிக்கக் கூடாது என்று கேட்டிருந்தேனே...!

      ஜோக்ஸ் இந்த வாரம் ரசிக்கும்படி இருப்பதில் மகிழ்ச்சி..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. தங்களது சைக்கிள் வாழ்க்கை இல்லை, தாங்கள் சைக்கிளுடன் வாழ்ந்த வாழ்க்கை கட்டுரை நன்றாக உள்ளது. நீங்கள் குறிப்பிட்ட அந்த சைக்கிள் விபரங்கள் எங்கள் அண்ணாவும் சொல்லி கேள்விபட்டுள்ளேன். அவரும் அலுவலகதிற்கு கொஞ்ச நாட்கள் சைக்கிள் ஓட்டிக் கொண்டு சென்றுள்ளார்.

    இப்போதும் சாலைகளில் சிலர் சைக்கிள் பிரயாணம் மேற்கொள்ளுகின்றனர். சற்றே குனிந்தபடி விருட்விருடென்று ஓடும் வாகனங்களுக்கு நடுவே அவர்களும் செல்வதை பார்க்க கொஞ்சம் பயம் வருகிறது. கிராமப்புறங்களில் தொடர்ந்து சைக்கிள் ஓட்டுபவர்கள் இன்னமும் இருப்பார்கள். மதுரையிலோ வேறு எங்கோ ஒரு பெருய பதவியில், இருப்பவரோ , அல்லது மருத்துவரோ தினமும் சைக்கிளை தவிர வேறு வாகனங்களை பயன்படுத்தாமல் இருப்பதாக முன்பு ஒரு செய்தியில் படித்தேன் . (அந்த விபரம் முழுமையாக நினைவில் இல்லை)

    /வரும் வழியில் கடும் வெயிலில் (பனிமழையில் அல்ல!) /

    பாடலை ரசித்தேன். மறக்க முடியுமா? இப்போது புது, புதிகாகநிறைய வண்டிகள் விற்பனைக்கு வந்து விட்டன. சாலையில் நடப்போர்க்கு நடக்கத்தான் எங்கேனும் சென்று பயிற்சி பெற வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றும் கூட சாலையில் சைக்கிள்களைக் காண்கிறேன்.  அந்தக் கால மாடலில் ஹேண்டில்பார் வைத்த சைக்கிள்கள் குறைவு.  ஆனால் புது மாதிரி இருக்கும் ஹேண்டில் பாகளுடன் சைக்கிள்கள் ஓட்டப்படுகின்றன.  சர்வசாதாரணமாக கையை வலப்பக்கம் நீட்டியபடி எங்கள் ஆட்டோ, மற்றும் பல்லவனை (பா.....ம்  என்று பெரிய எழுத்தில் அலறுவார் பல்லவ ஓட்டுநர்!)  க்ராஸ் செய்யும் சைக்கிள் வாலாக்கள் அவ்வப்போது கண்ணில் படுகிறார்கள்.  சில பள்ளிச் சிறார்கள் சைக்கிளில் இடது ஓரமாக வேகமாக பறக்கிறார்கள்!

      நீக்கு
  4. அப்பா ஆபீஸ் பியூன் நான் ஏழாம் வகுப்பில் படித்தபோது எங்களுக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொடுத்ததையும், மாமாவின் வீட்டிலிருந்து கிடைத்த அலுமினியப் பெட்டியில் சிலநாட்கள் பள்ளிக்கு புத்தகங்கள் எடுத்துச் சென்றதையும், கல்லூரியில் (மதுரை) பிஜி படிக்கும்போது ஆரப்பாளையம் பகுதியில் தைரியமாக ஓட்டிய டிவிஎஸ் 50 நாட்களும், சென்று தியேட்டர்களும் நினைவுக்கு வந்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு நானே சைக்கிள் ஒட்டக அகற்றுக் கொண்டேன்.  சைக்கிள் கடை வைத்திருந்த சசிகுமார் இந்த வகையில் என் நண்பரானார்.  என்னை விட நான்கு வயது மூத்தவன்.  அப்புறம் நாங்கள் சேர்ந்து சினிமா எல்லாம் செல்வோம்.  அதெல்லாம் தனி அனுபவம்.  அவனத்தியும், என் நண்பரின் TVS 50 வண்டியும் எனக்கு பல்வேறு சமயங்களில் உதவி இருக்கிறது - காதல் வாகனமாயும்!

      நீக்கு
    2. இப்போது அது TVS XL 100. விலையும் அதிகம் ரூ.53200 in Delhi for base model !

      நீக்கு
  5. உடற் பயிற்சிக்காக 30,000 பெறுமான சைக்கிள்களைபலர் வைத்திருக்கின்றனர். அவற்றில் ஓரிருநாள் ஓட்டிப் பார்த்தபோது கஷ்டமாக இருந்தது. நல்லா உட்கார மெத்மெத் என்று அரை அடி தடிமன் சீட் இருக்கப்படாதோ? இதற்கு என் மச்சின்ன், அதற்கென்றிருக்கும் உடை அணிந்துகொள்ளணும் என்கிறான். இந்த மாதிரி எண்ணமெல்லாம் எழாமல் ஐந்து கிமீ தள்ளி இருக்கும் பள்ளிக்கு நெல்லையில் சைக்கிளில் சென்ற நாட்கள் நினைவில் வந்து போயின

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  எங்கள் வீட்டிலும் இளையவன் வாங்கி வைத்திருக்கிறான்.  நடைப்பயிற்சி செய்வது போலிருந்தாள் நான் செய்திருப்பேன்.  இது கடினமாக உள்ளது.

      நீக்கு
    2. இல்லை. ஸ்போர்ட்ஸ் சைக்கிள், வெளியில் ரோடுகளில் ஓட்டும்படியானது. அதை வைத்து சிலர் 50 கிமீலாம் பயணிக்கிறாங்க விடுமுறை நாட்களில். நீங்க சொல்வது அப்படியே இருக்கும், அதுல ஓட்டி நம்ம எடையைக் குறைக்க உண்டான ஜிம் சைக்கிள்

      நீக்கு
  6. வெளியுறவுத்துறை என்ற வார்த்தைக்கு வந்த பிறகுதான் அது ஏகாந்தன் சார் பகுதி என புரிய ஆரம்பித்தது. நல்லா எழுதியிருக்கார்.

    ஏனோ...தொழிற்சாலை ஸ்டிரைக்கின் போது ஒன்றாக யூனியனோடு போராடிய தொழிலாளர்கள் (மேட்டூரில்), போனஸ் கிடைக்கும் காலங்களில் யூனியன் பணம் கலெக்ட் செய்ய வரும்போது மெதுவாக நழுவும் நினைவுகள் வந்துபோயின

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  ஏகாந்தன் ஸார் நினைவுகளை பகிர்கிறார்.  தொழிசாலை தொழிலாளர்கள் சுநலவாதிகள் போல...

      நீக்கு
  7. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  8. // கொஞ்ச நாள் முன்னால்
    கூட
    எனக்கு முன்னால்
    நான்
    நடந்து கொண்டிருந்ததைப்
    பார்த்தேன். //

    அருமை...

    மனதின் வேகம் அப்படி...

    இந்த ஆண்டு கணக்கியல் ஆரம்பித்தது முதல், நான் ஒன்று நினைக்க, மனமோ வேறொன்றை முடித்தே விடுகிறது - (கணக்கு) !

    பதிலளிநீக்கு

  9. லூனா, அவந்தி கரோலி பற்றிய நினைவுகள்..

    அருமை

    சிற்ப்பான பதிவு..

    பதிலளிநீக்கு
  10. லூனா ஓட்டியதில்லை..

    டிவியெஸ் 50 தான் முதலில் கைவசம்..

    பட்டுக் கோட்டையில் இருந்து தஞ்சாவூருக்கு முதலில் டிரிப் அடித்தது

    ஓ.. பசுமை நிறைந்த நினைவுகளே..

    பதிலளிநீக்கு
  11. கதம்பம் அருமை.
    அன்றைய சைக்கிள் காலத்துக்கு சென்று வந்தோம்.

    கவிதை ,நியூஸ் ரைம் நன்று.

    ஜோக்ஸ் ரசனை.

    பதிலளிநீக்கு
  12. இந்த வியாழனில் கொஞ்சம் கவிதையின் சாயல்...

    பதிலளிநீக்கு
  13. நானும் முதலில் மொபெட் ஓட்டிக் கொண்டிருந்தேன். டிவிஎஸ். லூனா ஓட்டியதில்லை. அதன் பின் டிவி எஸ் 50 அதன் பின் டிவிஎஸ் எக்ஸெல். நல்ல உழைப்பாளி இந்த வண்டி. ஸ்ரீராமிற்கு நான் ஓட்டிக் கொண்டிருந்த இந்த வண்டி தெரியும் இல்லையா!!!!! பார்த்திருக்கீங்க! இதனுடன் நான்கு சக்கரம் இருந்தது. நம்ம வீட்டு சாரதி நாந்தேன்! எல்லாருக்குமே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...   அந்த வண்டி எனக்குத் தெரியுமே...   அது இரண்டு பேர்களை இழுக்கும் என்பதே வியப்பு!

      நீக்கு
  14. நமது அந்தக் கால சாலைகளின் வாகனங்கள்பற்றி -பெரும்பாலும் பார்த்து ரசித்தவை, ஓட்டி அனுபவிக்காதவை- என்று நிறைய இருக்கிறது நினைவில். எழுதலாம். இப்போதும் வாகனங்களின் மீது ஒரு கண்ணை வைத்தவாறுதான் இருக்கிறேன். கிரிக்கெட்டைப்போன்று, வாகனக் காதலும் குறைந்தபாடில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிது புதிதாய் வாகனங்கள் தோன்றத்தொடங்கிய காலம் அது.  இப்போது பல்கிப் பெருகி விட்டது.  என் மகன் அப்பச்சி வைத்திருக்கிறான்.

      நீக்கு
    2. ஆம்.  லேட்டஸ்ட் மாடல்தான்.  சென்ற வருடம் வாங்கினான்.

      நீக்கு
  15. சைக்கிள் அளவு பெடல் எல்லாம் செய்ய முடியாது ஸ்ரீராம். என்னால் முடிந்ததில்லை ஆனால் நல்ல கிலோமீட்டர் கொடுத்தது. மகனை வைத்துக் கொண்டு செல்ல முடிந்தது ஆனால் மற்றபடி டபிள்ஸ் அடிக்க முடியாது மொபெட்டில்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். பெடல் செய்ய முடியாது என்று நானும் சொல்லி இருக்கிறேன். ஆனால் குறைந்த தூரம் பெட்ரோல் பங்க் வரை கஷ்டப்பட்டு செய்யலாம்!

      நீக்கு
  16. சைக்கிளை விட விலை சற்று கூடுதல் என்றாலும் அப்போது அதுவே பெரிய விலை.

    எனக்கு ஸ்கூட்டர் வடிவில் உள்ளவற்றை சமாளிக்க முடிந்ததில்லை தள்ளி பின்னால் எடுத்து ஸ்டான்ட் போட்டு என்று. என்னதான் சைட் ஸ்டான்ட் இருந்தாலும் அதன் எடையை என்னால் சமாளிக்க முடிந்ததில்லை எனவே வாங்கியதும் இல்லை...யாரேனும் ஓட்டு என்று கொடுத்தால் ஓட்டியய்தும் இல்லை.

    ஆனால் எக்ஸேல் வரை தள்ளுவது ஸ்டான்ட் போடுவது பிரச்சனையாக இருக்கவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லூனா சுவேகா போன்றவை கொசு மாதிரி.  ஸ்டான்ட் போடுவது கஷ்டமே இல்லையே கீதா...

      நீக்கு
  17. ஒருவனை அழைத்தால் அடுத்தவனுக்கு கோபம். இன்னொருவன் இரண்டு நாள் பேசமாட்டான். மற்றொருவன் நிரந்தரப் பகையாவான்!//

    ஹாஹாஹாஹா அந்த வயதிற்கே உரித்தானவை. இப்போது நினைச்சா நமக்கே சிரிப்பு வந்துவிடும்! ஆனா இனிய நினைவுகள்.

    நம் ராசி.. நாம் ஒரு வழியாக அப்போதைய நாகரீகத்தில் நுழையும்போது அது அடுத்த கட்டத்துக்கு சென்றிருக்க, நாம் எப்போதும் ஒரு படி பின் தங்கியவர்களாகவே இருப்போம்!//

    டிட்டோ +1

    கீதா

    பதிலளிநீக்கு
  18. கடைக்குச் சென்றதும் விறபனையாளர்கள் போடும் வாய்ப்பந்தலில் நாம் வாங்கும் ப்ராண்ட் வேறொன்று.//

    ஹையோ அதை ஏன் கேக்கறீங்க எல்லாப் பொருட்களுக்குமே அப்படித்தான்.

    இப்பல்லாம் இந்த வண்டிகள் இல்லை ஸ்ரீராம். ஆனால் இங்கு இதே போன்ற யுலூ என்று வாடகை வண்டி இருக்கு. சைக்கிளில் பாட்டரி போட்டது போல...இதுவும் பாட்டரியில் ஓடும் வண்டி. இதுக்குன்னு ஆப் இருக்கு. அதில் நாம் புக் செய்து, கடை எதுவும் இல்லை ஆங்காங்கே நிறுத்தி வைக்ச்சிருபபங்க நமக்கானதுக்குச் சொல்லி ஸ்கான் செய்ய கோட் அதைக் காட்டினால்தான் வண்டி ஸ்டார்ட் செய்ய முடியும். போய்ட்டு அதை நம் வீட்டருகில் ஒரு பொது இடம் அவங்க சொல்லுவாங்க இல்லை எடுத்த இடத்திலேயே நிறுத்திவிடலாம். எல்லாமே ஸ்கான் கோட் தான்.

    இப்படி இது மட்டும் இல்லாம நாமே ஒட்டிச் செல்லும் பைக், மற்ற வண்டிகள் என்று வாடகைக்கு இங்கு கிடைக்கின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
  19. லட்ச ரூபாய்க்கு மேலான பைக்தான் இப்ப லேட்டஸ்ட் மாடல். இங்கு இதை நிறைய பார்க்கலாம் விர் விர் என்று பறக்கும். பசங்கதான் பின்னாடி பெண்கள் இல்லைனா நண்பர்கள்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த விலைக்கும் மேலான விலையில் எல்லாம் பைக் இருக்கு கீதா...  பார்த்திருக்கிறேன்.  சாலைகளில் போக்குவரத்து நெரிசலில் படுத்த வாக்கில் வளைந்து வளைந்து பறக்கும் இளைஞர்களை பார்க்கும்போது வயிறு கலங்கும்.

      நீக்கு
  20. படத்துல இருக்கற பைக்ல எப்படி ரெண்டு பேர் நு யோசிச்சதுண்டு ஸ்‌ரீராம் ஆனா போறாங்க....நம்ம ஊர்லதால் ஒரு பைக்ல குடும்பமே போறதாச்சே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  21. ஆமாம் தெக்கத்தி என்றாலே மதராஸிதான் வடக்க இருக்கறவங்களுக்கு இப்பவும் கூட இருக்கு.

    ஆ! 87ல் நான் ஜாயின் செய்திருந்தால் இப்படித்தான் சொட் சொட்டென்று டைப்பிருப்பேன் என்று நினைக்கிறேன்!!

    ஜாப் செக்யூரிட்டி பற்றி, படித்த ஜனங்கள் பேசிவந்த காலமது. //

    அதே அதே. நானும் ரொம்ப சந்தோஷப் பட்டுக் கொண்டிருந்தேன். செலக்ட் ஆன லெட்டர் வந்ததும், ஆஹா தில்லி என்று. ஜாயினிங்க் ஆர்டர் வருவதற்குள் எல்லாம் டமால்!

    ஓ! சாய், சமோஸா ஸ்வீட்டே அதுவும ஆஃபீஸருக்கு அதுவே ஒரு பெரிய செலவு அப்போது, இப்ப நினைச்சுப் பார்க்கிறேன். சாதாரணமாகச் சம்பாதிக்கறவங்க கூட ஒவ்வொரு விழாவையும் மில்லினர் மாதிரி கொண்டாடறாங்க!

    ரொம்ப சுவாரஸியமாக இருக்கு ஏகாந்தன் அண்ணா. வாசிக்கும் போது ஏதோ நானும் அங்கு வேலை செய்து கொண்டிருந்தது போல மனதில் சீன்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன! எனக்குக் கிடைத்த அந்த வேலை பல கஷ்டங்களுக்கு இடையே, பல அசிங்கமான சொற்களுக்கு இடையே, ஏன்னா நான் தான் வீட்டிலேயே படு மட்டமான மதிப்பெண் பெறுபவள்...என் சிந்தனைகளையும், மூளையையும் யாரும் வகை வைத்ததில்லை....ஸோ எனக்கு வேலை கிடைக்காது என்றும் வேலை பார்க்கலைனா மட்டமாகப் பார்த்த உறவுகள்....ஆனா கடைசில ஜாய்ன் பண்ணவே இல்லை!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் டைப்ரைட்டிங் எல்லாம் பாஸ் செய்துவிட்டு காத்திருந்ததுண்டு.  ஏகாந்தன் ஸார் செலெக்ட் ஆகி இருப்பது க்ரூப் 1 என்று நினைக்கிறேன்.  க்ரூப் 4 என்னை காலை வாரி விட்டது ரெண்டு தரம்.  ஸ்டாஃப் செலெக்ஷன் கமிஷனிடமும் தோற்றிருக்கிறேன்!

      நீக்கு
  22. கவிதையை ரொம்ப ரசித்தேன் ஸ்ரீராம். நாம் நாமாக இருக்கும் தருணங்கள் குறைந்து அதை மீட்க வேண்டும் என்று பிரயத்தனப்பட்டாலும் பல சமயங்கள்ல எனக்கு முன்னால் நான் நடந்துகொண்டிருப்பதைத்தான் பார்க்கிறேன். உணர்கிறேன். யோசித்துப் பார்க்கிறேன்...முன்னர் ஒரு விதமான வாழ்க்கை நான் நானாக இருக்க முடியாத வாழ்க்கை...அதன் பின் வேறு....எப்ப நான் நானாக இருந்திருக்கிறேன் என்று யோசித்துப் பார்க்கிறேன்.!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானாக நானில்லை தாயே - இப்படி ஒரு பாட்டு உண்டு இல்லையா ஸ்ரீராம். ஆனால தஅது வேறு அர்த்தத்தில் எழுதப்பட்ட பாட்டு என்று நினைக்கிறேன். தெரியலை மற்ற வரிகள் எப்படின்னு இந்தப் பாட்டு நினைவுக்கு வந்தது கவிதை வரிகள் வாசித்ததும்

      கீதா

      நீக்கு
    2. நன்றி கீதா, எழுத வந்ததை சரியாக புரிந்து கொண்டதற்கு.  

      நானாக நானில்லை...   இந்தப் பாடலும் யாருக்கேனும் நினைவுக்கு வரும் என்றும் தோன்றியது, பாடல் தரும் பொருள் வேறாயினும்.

      நீக்கு
  23. ஆஹா இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கப்பல் போக்குவரத்து!!! பயணம் செய்யும் ஆசை வந்துவிட்டது. எவ்வளவு வருஷமாச்சு! அப்போது தலைமன்னாரிலிருந்து இராமேஸ்வரம் வரை கப்பல்.

    கீதா

    பதிலளிநீக்கு
  24. முதல் ஜோக் சிரித்துவிட்டேன்!!!!

    பக்கோடா நூல் - ஸ்ரீராம் நம்ம வீட்டிலும் இந்தப் பழக்கம் உண்டு. சேர்த்து நூல்கண்டு போல வைக்கும் பழக்கம்.

    ஹாஹாஹா லொள்ளுதான்... பாதிடிக்கெட்- லாஜிக்கல்??!!

    அரை டிக்கெட் மாதிரி அரை ஸ்பூன் மருந்து ஹிஹிஹிஹி

    சினிமாதியேட்டர் ஜோக்கும் எல்லாமே ரசித்தேன் ஸ்ரீராம்.

    அது சரி ஜோதி தியேட்டர்? தஞ்சாவூர் தியேட்டரா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னை.  பரங்கிமலை ஜோதி.  நாடோடித்தென்றல் நான் அப்படிதான் பார்த்தேன்!

      நீக்கு
  25. கதம்ப பகிர்வு அருமை. மிதி வண்டியின் கதை, உங்கள் மலரும் நினைவுகள் அருமை.

    // நம் ராசி.. நாம் ஒரு வழியாக அப்போதைய நாகரீகத்தில் நுழையும்போது அது அடுத்த கட்டத்துக்கு சென்றிருக்க, நாம் எப்போதும் ஒரு படி பின் தங்கியவர்களாகவே இருப்போம்!//

    ஆமாம், நாம் வாய்ப்பு வசதி பார்த்து கொண்டு இருப்போம், நமக்கு வாய்ப்பு கிடைக்கும் போது மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கும்.

    லேட்டஸ்ட் மாடல் பைக் எல்லாம் பின்னால் உடகார முடியாது போலவே!




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அக்கா..  நன்றி.  பின்னால் உட்கார முடிவது போலவும் பைக் இருக்கிறது.  இவர்கள் இப்படி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்!

      நீக்கு
  26. //வாய்த்திருந்த வாழ்க்கைக்கேற்றபடி, வசதிக்கேற்றபடி ஏதோ இருந்தார்கள் - உடுத்தினார்கள். கிடைத்ததை சாப்பிட்டார்கள்.//
    ஏகாந்தன் சார் சொன்னது சரியே அந்தக் காலத்தில் மிகவும் ஏதிர்பார்ப்புகள் வைத்துக் கொள்ளாமல் இப்படித்தான் வாழ்க்கை என்று அந்த வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு வாழ்ந்தார்கள் என்பது உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் காலத்தில் மனத்தைக் கெடுக்க தொலைக்காட்சிகள் இல்லை, பேசும் வசதியைத் தவிர நிறைய வசதிகள் கொடுத்துக் கெடுக்கும் 'தொல்லைபேசி'கள் இல்லை.

      நீக்கு
  27. //இவ்வளவு வேலை செய்தவரை, இவ்வளவு பேரோடு பேசியவரை நம்மோட ஒரு மணி நேரமாவது பேச வைக்க முடியாமப் போனோமேங்கற ஏக்கம் எப்பவுமிருந்துச்சு//

    அந்த ஏக்கத்தைப் போக்கி விட்டார்.


    //அந்த ஒரு மணி நேரப் பேச்சு இப்பவும் நினைவிருக்கு எனக்கு. மறக்கவே முடியாது.//

    எப்படியோ ஒரு மணி நேரம் சேர்ந்தார் போல பேசி நினைக்க வைத்து விட்டார். என்றும் நினைவுகளில் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் பாருங்கள், பிரபலங்களின் மனைவிகள் மனநிலை ஒரே மாதிரி தான் இருக்கிறது!

      நீக்கு
  28. பானுமதி வெங்கடேஸ்வரன் நியூஸ் ரூம் செய்திகள் வாசித்தேன்.
    இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கப்பல் போக்குவரத்து நன்றாக இருக்கும்.

    பொக்கிஷபகிர்வுகள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
  29. ..எனக்குக் கிடைத்த அந்த வேலை பல கஷ்டங்களுக்கு இடையே, பல அசிங்கமான சொற்களுக்கு இடையே, ஏன்னா நான் தான் வீட்டிலேயே படு மட்டமான மதிப்பெண் பெறுபவள்...என் சிந்தனைகளையும், மூளையையும் யாரும் வகை வைத்ததில்லை....ஸோ எனக்கு வேலை கிடைக்காது என்றும் வேலை பார்க்கலைனா மட்டமாகப் பார்த்த உறவுகள்....//

    கீதாஜியின் ஆதங்கம், தவிப்பு புரிகிறது. பள்ளியில், கல்லூரியில் மதிப்பெண்கள் நிறைய வாங்கினால்.. புத்திசாலி என்று நினைத்த காலமது. அந்தக் காலம் இன்னும் பலரிடம் எஞ்சியிருக்கிறது.

    Competitive Exam-ன் கதையே வேறு. மனப்பாடம் பண்ணி 100-க்கு 80, 90 வாங்கும் ’புத்திசாலி’களின் பருப்பு அங்கே ..UPSC-யில் வேகுவதில்லை! இதைப் பலரால் இங்கே ஜீரணிக்கமுடியவில்லை. சாதாரணமாகப் படித்து, சராசரியாகப் பள்ளியில், கல்லூரியில் மார்க் வாங்கிய மாணவ, மாணவர்கள் ( நானும் அதில் ஒருவன் தான்) ஆல் இந்தியா போட்டித் தேர்வுகளில் சர்வ சாதாரணமாகத் தேர்வாகிவிடுவதுண்டு. நடக்கிறது.

    பலர் மண்டை காய்கிறார்கள். அந்த அசடுகளால் இப்படிப்பட்டவர்களின் வெற்றியை நம்பமுடியவில்லை.. இல்லை.. இல்லை .. முடில....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரிவான பதில்.  ஆம்.  அப்போது பல்வேறு பரீட்சைகள் மீதும் படை எடுத்த காலம்.  பேங்கிங் சர்வீஸ் கமிஷன் உட்பட.  கடைசியில் ஒரு வழியாய் வேறு வகையில் வேறு வேலை கிடைத்தது!  அப்படி இப்படி கால ஓடி விட்டது!

      நீக்கு
  30. //நான் நினைத்தபடி
    வாழ்ந்த காலங்களில்
    என்னுடனேயேதான்
    நான் இருந்தேன்.

    ஆனால் இப்போது
    என்னுடன் இருந்த நானை
    தேடுகிறேன்.//

    ஆமாம், தேட வேண்டும் தான். நமக்கு என்ற விருப்பங்கள் இப்போது மாறுகிறது. நம்முடன் இருப்பவர்களின் விருப்பங்களுக்கு நம் நினைப்பை மாற்ற வேண்டி உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றாமல் இருந்தால் சுமுகமாக இருக்க முடியவில்லை.

      நீக்கு
  31. பிரபல எழுத்தாளர்களின் மனைவிகளைப் பேட்டி காண்பது சரிதான். அவர்களும் தங்கள் மனதில் உள்ளதைச் சொல்லியாகவேண்டுமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவெளியில் குறைகளை சொல்ல வேண்டாமோ என்று தோன்றுகிறதே....

      நீக்கு
  32. லக்‌ஷ ரூபாய் கொடுத்து வாங்கிட்டு இப்படியா ஒருத்தர் மட்டும் போவது? என்னவோ போங்க. எங்களீடம் முதல்லே அதாவ்து எழுபதுகளீன் கடைசி, எண்பதில் லூனா இருந்தது. ரொம்ப வருடங்கள் வைச்சிருந்தோம். பின்னர் வாங்கியது பஜாஜ் ஸ்கூட்டர். பதிவு பண்ணீனால் தான் கிடைக்கும். ஆனால் வசதியாக இருந்தது. பின்னர் பையர் காலேஜ் போகும்போது அவருக்கென வாங்கியது பஜாஜிலேயே பைக் ரகம். பெயர் மறந்துட்டேன். நம்ம ரங்க்ஸ் பையருக்கென வாங்கி வைச்சது டிவிஎஸ் 50. பையர் அதைத் தொடக் கூட இல்லை. பின்னால் அவர் அம்பேரிக்கா போகும்போது பைக்கையும் சென்னை அனுப்பிட்டார். வீட்டில் 3 வண்டிகள் இருந்தன. ஆகவே முதலில் பைக்கை வித்துட்டுப் பின்னர் ஸ்கூட்டரும் விற்கப்பட்டது. கடைசியில் டிவிஎஸ் ஹெவி ட்யூட்டி எக்சேல் வாங்கிட்டு டிவிஎஸ் 50 ஐயும் வித்தாச்சு. அந்த ஹெவி ட்யூட்டி வண்டி மட்டும் இன்னமும் இருக்கு.

    பதிலளிநீக்கு
  33. ஏகாந்தமாய் உட்கார்ந்து அனுபவித்து எழுதி இருக்கார். நியூஸ் ரூம் பெண் ஏன் கோபமாய் இருக்கார்? ஜோக்குகள், முக்கியமாய் எலும்பைத் தூக்கிக் கொண்டு வந்தது அபாரம். கவிதை/எசப்பாட்டு இரண்டும் அருமை. நவராத்திரி முடியும் நாட்கள் என்பதால் கொஞ்சம் கெடுபிடி.மெதுவாத் தான் வர முடியுது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!